ஹைதராபாத் - என்று நினனத்தவுடன் பிர்லா மந்திர், சார்மினார் ஆகியவைகளுடன் நினனவுக்கு வருவது ஹைதராபாதி பிரியாணி.
இதைத் தவிறவும் நான் மிகவும் விரும்பும் இடம் ஒன்று இங்கே உண்டு.
ராணிகன்ஞ் ஏரியாவில் இருக்கும் குஜராத்தி ஜெயின் கோவில் அருகில், இருக்கிறது ஸ்ரீ ஷ்யாம் நிவாஸ். இது ஒரு மார்வாடி, குஜராத்தி, மற்றும் மராத்தி உணவகம்.
பார்க்க சிறிய கடையாக இருக்கும் இதில் விசேஷம் என்ன வென்றால் இது
குடும்பத்துடன் போக ஏற்ற இடம். மெனு கார்ட் எல்லாம் கிடையாது.
ஆனால் அதிர்ச்சி காத்திருக்கும்.
ஆம் இங்கு சப்பாத்திக்கள், கறிவகைகள், சாதம் ஆகியவை "UNLIMITED".
வீட்டுச்சாப்பாடு போன்ற வகையில் நீங்கள் எவ்வளவு கேட்டாலும் முகம் சுளிக்காமல் இன்முகத்தோடு பரிமாறுவார்கள். சுடச்சுட சப்பாத்திகளை கையில் வைத்துக்கொண்டு ஒரு பையன் டேபிள்கள் அருகில் வந்து கேட்க கேட்க பரிமாறுவான்.
கோதுமை,ஜோவ்ரா,பாஜ்ரா, பேசன் ஆகிய வகை 4 வகை ரோட்டிகள் இங்கு கிடைக்கும். அன்லிமிடெடாக சாப்பிட்டாலும் வயிற்றுக்கு எந்த உபத்திரமும் செய்யாத உணவு. குழந்தைகளுக்கு காரமில்லாமல் தனியாக பருப்பு, மற்றும் கறிவகைகள் பரிமாறப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில் குஜராத்தி கிச்சடி & கடி (இம்சை கடிக்கு ஒரு பதிவு போட்டிருந்தார்), ஞாயிற்றுக்கிழமைகளில் பூரியும் இங்கு ஷ்பெஷல். (ஞாயிறு மாலை விடுமுறை)
பாஜ்ரா ரோட்டிகளுக்கு வெல்லம் கொடுப்பார்கள். தயிர்- 10 ரூபாய். ஆம்ரஸ்(Mango juice)um கிடைக்கும். (need to pay extra).
நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மேலாக சுவையாலும், உபசரிப்பாலும் உங்கள் வயிறு நிறையும் என்பதற்கு நான் உத்திரவாதம். ஹைதராபாத்தில் இந்த இடத்தை தவிர வேறு எங்கும் குறைந்த பணத்தில் நிறைவான உணவு கிடைக்காது. ஒரு பிளேட் 50 ரூபாய்.
ஹைதராபாத் போனால் ஷ்யாம் நிவாஸ் போய் சாப்பிட்டு, எதிரில் இருக்கும் பான் கடையில் மீட்டா பான் சாப்பிட மறக்காதீர்கள்.
ADDRESS:
SHREE SHYAM NIVAS (MARWADI, GUJARATI & MARATHI FOODS)
2-2-57/4, PAN BAZAR, M.G.ROAD,
NEAR GUJARATI JAIN TEMPLE,
SECUNDERABAD - 500 003