Monday, September 01, 2008

ஏன் இப்படி?????

இதைப் பற்றி பதிவு எழுதலாமா வேண்டாமான்னு யோசிச்சேன்.
இல்லை யாராவது இதைப் பத்தி சொல்லியே ஆகணும்னு
நினைச்சேன் எழுதிட்டேன்.

அதுக்கு முன்னாடி நீங்க எல்லோரும் ஒரு முறை
படிக்க வேண்டிய பதிவு இங்கே இருக்கு
இந்தப் பதிவுக்காக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சஞ்சய்.

சரி நான் சொல்ல நினைச்ச பதிவுக்கு முன்னாடி
என்னுடைய சுயபுராணம் கொஞ்சம்.

திருமணத்திற்கு முன்பு வரை வீட்டில் பாவாடை,சட்டைதான்
அணிவேன். சில தினங்கள் தாவணி. தாவணி அணிந்திருந்தால்
மட்டுமே வீட்டு வாசல்படி தாண்டலாம்.

வீட்டிற்கு விருந்தினர் (அப்பாவைப் பார்க்க தினமும் யாரேனும்
வருவார்கள்) வந்தால் உடன் பாவாடை, சட்டையை மாற்றி
கொள்ள வேண்டும்.

மும்பையில் மாமாவீட்டிலும் இதேதான் நிலை.
அங்கேயும் பாவாடை சட்டைதான் வீட்டில்.
நைட்டி அணிந்தால் அதன் மேல் இன்னொரு சட்டை
அணிவேன். இந்த உடையுடன் வாசல்படி தாண்டினால்
மாமா கொன்றே விடுவார்.


திருமணத்திற்கு பிறகும் இந்தப் பழக்கம் தான் தொடர்கிறது.
தவிர வீட்டில் வேறு உடை அணிந்திருந்தால்
வெளியில் போகும் போது மாற்ற
வேண்டும் என்ற பிரச்சனையிலிருந்து தப்பிக்க
சுடிதார் மாத்திரமே அணிவேன்.


இதனாலேயே நைட்டி அணிவது அதிகம் பழக்கம்
இல்லாமலேயே போய்விட்டது.
என் புராணம் இத்தோடு முடிந்தது.

பெண்களிடம் ஒரு கேள்வி?


நைட்டி: இதன் பெயரே சொல்கிறது இது இரவு உடை
என்று. பிறகு இதை நாளெல்லாம் எப்படி போட்டுக்கொள்கிறார்கள்??!!!






மற்றவர்கள் பேசுவது இருக்கட்டும். நமக்கு நம் உடை கண்ணியமாக
இருக்க வேண்டாமா? வீட்டில் அண்ணனோ, கணவரோ
யாரேனும் ஒரு ஆண்மகன் இருக்கத்தானே செய்கிறார்கள்.
அவர்கள் எதிரில் நாளெல்லாம் இப்படி நைட்டியில் சுற்றுவது
நியாயமா?


இன்னும் சிலர் இந்த உடையுடன் வீதி வரை வருவார்கள்.
மேலே துப்பட்டா போட்டுக்கொண்டால் போதுமா???????

நம் வீட்டு வேலைக்காரர்கள், பிளம்பர், பேப்பர்காரர்
(கொரியர் பாய்) என யாரேனும் வீட்டிற்கு வந்து செல்வார்கள்.
இவர்கள் எதிரில் நைட்டியுடன் செல்வது நம்
மதிப்பை நாமே குறைத்துக்கொள்வது போல்.

(இரவின் தனிமையில் உங்கள் அறைக்குள்
ஸ்லீவ்லெஸ் கூட போட்டுக்கொள்ளுங்கள்) வெளியில்
நைட்டி வேண்டாமே!!


மிக உயர்ந்த உடையில் உலாவ வேண்டாம்.
குளித்து முடித்து, கொஞ்சம் நல்ல சுடிதாராக
(இப்போ எல்லோரும் போட்டுக்கொள்கிறார்கள்
என்பதால் சொல்கிறேன்) போட்டுக்கொண்டு
தலை வாரி, கொஞ்சம் பவுடர் போட்டு
ஃபரஷாக வளைய வாருங்கள். உங்களுக்கே
வித்தியாசம் தெரியும்.
(மேட்சிங் இல்லாமல் அணியவேண்டாம்.
சாயம் போனதையும் தவிருங்கள்)

வீட்டிற்கு வெளியே மட்டுமல்ல வீட்டிற்குள்ளும்
மனிதர்கள் இருக்கிறார்கள்.

**************************************************

இந்தக் கேள்வி ஆண்களிடம்?

ஏன் நண்பர்களே இப்படி மாறிட்டீங்க?!!!
ஸ்லிம்ரன் ரசிகர் ஒருவர் யாராவதுதான்
இதைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்.

உடை உடுப்பது அவரவர் விருப்பம்.
இதில் நாம் தலையிட முடியாது.
ஆனாலும் இந்த ஸ்டைல் கண்ணியமாக இல்லை. :(


பெண்கள் இவ்வாறு உடை உடுத்தியபோது
எழுந்த கண்டணங்கள் (ஆனாலும்
சிலம் மாறவேயில்லை ) எத்தனை.

இப்போ ஆண்கள் செய்வதால் யாரும்
எதுவும் கேட்பதே இல்லை.

எதைச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?

DANGEROUS LOW HIP PANTS .
இதைத்தான் சொல்கிறேன். சுத்தமா நல்லா இல்லை.

சிறியவர், பெரியவர் என்று வயது
வித்தியாசமே இல்லாமல் இந்த வியாதி தொற்றிக்கொண்டு
ஆட்டுவிக்கிறது. கணுக்கால்களில் கேதரிங்
ஆக சேர்ந்து கொள்ளும் அளவிற்கு
வெரி வெரி லோ ஹிப்பாக போடுகிறீர்களே
இது நியாயாமா?


பல சமயங்களில் பேண்ட் கழன்று விழுந்து விடுமோ
என்று பயமாக இருக்கிறது. ஹிப் சைஸ்
எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பது ரொம்ப
டேஞ்சரான விடயம்.

உள்ளாடை தெரியும் அளவிற்கு உடை
அணிவது அழகல்ல.

இது ஆண்/பெண் இருவருக்கும் பொருந்தும்.

ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள். நாம்
உடுக்கும் ஆடையில், உடுக்கும் வகையில்
தான் நம் கண்ணியம், நம் மரியாதை
இருக்கிறது.

தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும்
தவறு தவறுதான்..




*********************************************************
எனது இரட்டைச் சத பதிவு இது.

எனது 200ஆவது பதிவிற்கு வந்திருந்த உங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
புதுகைத் தென்றல்