Monday, December 01, 2008

GOOD BYE!!!

”கபி அல்விதா ந கஹனா!” என்று ஒரு
பழய ஹிந்திப் பாடல் உண்டு. ஆனால்

ஆட்டம் முடிஞ்சு போச்சு!
டாடா பைபை சொல்லவேண்டிய நேரமும் வந்தாச்சு!
மனசுக்கு கஷ்டமா இருந்தாலும் உண்மை அதுதான்.

என்ன நான் டாடா சொல்லப்போறேன்னு நினைச்சீங்களா?!!
அந்த சந்தோஷம் உங்களுக்கு கிடைக்காது. :)

எம்புட்டு அழகா வாழ்க்கைக்கு குட் பை சொல்லமுடியும்னு
ஒரு படம் பார்த்தேன். அதைச் சொல்லத்தான் இந்தப் பதிவு.


Dasvidanya இந்த
ஹிந்தி்ப் படம் “சிம்பிளி சூப்பர்ப்”.





To-do-list எழுதுவதைத் தவிர வேறு எந்த
எண்டடயர்மெண்டும் இல்லாத ஒரு அக்கவுண்டடிற்கு
வயிற்றில் கேன்சர் இருப்பது தெரிய வருகிறது.

37 வயதான அவருக்கு திருமணம் கூட
ஆகியிருக்கவில்லை. அலுவலகத்தில் அமரின்(அதான்
ஹீரோ பெயர்) பாஸ் Noukri.com விளம்பரத்தில் வரும்
”ஹரி சாடு” டைப். மொத்தத்தில் ஒரு சராசரி மனிதனின்
வெறுப்பும், வேதனையும் நிறைந்த ஒரு வாழ்க்கை.

வாழ்க்கை இன்னும் 3 மாதம் தான் என்று
புரிந்த பொழுது தான் இதுவரை எதுவுமே
செய்ததில்லையே? என்று புலம்புகிறார் ஹீரோ.

அவரது மனசாட்சி வந்து பேசும்பொழுது
தான் விழித்துக்கொண்டு சாவதற்கு முன்பு
செய்யவேண்டிய 10 To-do-list எழுதுகிறார்.
என்ன எழுதினார்?
எழுதியவற்றை அவர் இறப்பதற்குள் செய்து முடித்தாரா?
இதை வெள்ளித் திரையில் காணுங்கள்.


படாடோபமான மாளிகைகள் இல்லை, மரத்தைச்
சுற்றிப் பாடும் டூயட்டுக்கள் இல்லை.
நட்பு, காதல், பாசம், காமெடி,
சோகம் எல்லாம் கலந்த
படு யதார்த்தமான காட்சிகள்,
அருமையான கதை, அதை உணர்ந்து நடித்திருக்கும்
நடிகர்கள் இதுதான் இந்தப் படத்தின் பலம்.

அலுவலகத்தில் அமர் படும் பாடுகள் பலர்
தன் வாழ்வில் சந்தித்திருக்க்கூடிய சம்பவங்களே!





சாவதற்கு முன் செய்யவேண்டிய லிஸ்டில் ஒன்றாக
தான் கிடார் கற்று தன் அம்மாவிற்கு பாடும் இந்தப்
பாடல் நம் அம்மாவிற்கு நாம் பாடுவது போல்
இருக்கும்.(ஓடிப்போய் அம்மாவை கட்டிக்கொள்ள
வேண்டும், அவர் மடியில் தலை சாய்க்க வேண்டும்
என்றும் தோன்றும் அளவுக்கு சூப்பர் பாடல்)




தியேட்டரில் இருந்து வெளியே வந்த பிறகு கூட
சில படங்கள் நம்மை அசைப் போட வைக்கும்.
தாஸ்விதானியா(குட் பை- ரஷ்ய மொழியில்)
அந்த வகைப் படம்.

ஹீரோ வினய் பாதக்கின் அற்புதமான நடிப்பு,
அழகான கதையமைப்பு, காட்சிகள்
எல்லாம் சில சமயம் கண்ணில் கண்ணீரை
வரவழைக்கும்.




இந்தப் படத்தை
பார்க்கும் நேரமும், அதற்கு செல்வழித்த
காசும் வீணாகப் போகாது.

கசப்பும் இனிப்பும் நிறைந்த நினைவுகளை
நமக்குத் தரும் இந்தப் படம் கண்டிப்பாக
பார்க்கவேண்டியஒன்று.

அமர் தன் குட்பையை அழகாகச் சொல்லியிருக்கிறார்.
அவருக்கு தன் வாழ்வின் கடைசி தெரிந்ததால்
விழித்துக்கொண்டார்.

நமக்கு அது தெரியாது என்பதாலேயே நாம்
வி்ழித்துக்கொள்ளாமல் இருக்கக்கூடாது.
மனதுக்குள் ஆசைகளை புதைத்து
வைத்துக்கொண்டு, கால்போன போக்கில்
வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்
கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது.




இருக்கும் வரை ஆனந்தமாக இருந்துவிட்டு
அழகாக “தாஸ்விதானியா” சொல்வோமே!

நினைவே ஒரு சங்கீதம்!!






”நீங்க தூக்கிகிட்டு வராட்டி
மணமேடைக்கே வரமாட்டேன்”
என்று நான் மாமாக்களை மிரட்டியது!

”கல்யாணத்துக்கு முதல் நாள் பந்தாமே!
மாப்பிள்ளை தாலிகட்ட வந்திடுவாரா!!??!!”
என அப்பா பயந்தது!


பந்த் தந்த டென்ஷனில் கிடைத்த
டிரையினில் ஏறி கதவருகே அமர்ந்து
பயணித்து 1 நாள் முன்னதாகவே
அனைவரும் சத்திரத்திற்கு வந்தது!

எப்படியும் வந்துவிடவேண்டும் என்று
உங்கள் அலுவலக நண்பர்களும், மற்ற
உறவினர்களும் வேன், லாரி என பயணித்து
நள்ளிரவுக்குள் மண்டபம் வந்து சேர்ந்தது!

திரைவிலக்கி கண்கள் கலக்க
காத்திருந்தது!

நம் திருமண வீடியோ பார்க்கும்பொழுது
இவைகளும் எனக்கு நினைவுக்கு
வருகிறது.



இன்று நம் திருமணநாள்.
நினைவுகள் ஒரு சங்கீதமாய் இனிக்க
அந்த நந்நாளை நினைத்து பார்க்கிறேன்.

அயித்தானுக்கு மணமார்ந்த
திருமணநாள் வாழ்த்துக்கள்!