Total Pageviews

Friday, January 23, 2009

என் உலகில் ஆண்கள்....

நம் வீட்டில் தோட்டம் போட செடியை கொண்டு
வருகிறோம். அந்தச் செடியை முறையாக பராமரித்தால்
தான் அழகாக தளைத்து வளரும். இல்லையேல்
வாடி, வதங்கிப் போய்விடும்.

செடி சிறிதாக வளர்ந்த பொழுது இருந்த
மண்ணோடு மேலும் புது மண் சேர்த்தல் அவசியம்.
புதுமண்ணில் வளர முடியாமல் போய்விடும்.

ஒரு செடிக்கே இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள
வேண்டி இருக்கும்பொழுது, 22/25 வருடங்கள்
தான் வளர்ந்த வீட்டை விட்டு வரும் பெண்ணின்
நிலை? அப்பா, அம்மா பாசத்தோடு, அம்மம்மாவின்
செல்ல பேத்தி், மகளாக வளர்த்த மாமா,
பாசமிகு அத்தை இந்த உறவுகளை நான் பிரிந்து
வாழவேண்டியதுதான் வாழ்க்கை.
(திருமணம் நிச்சயமானதும் மும்பையைவிட்டு
கிளம்பிய போது தான் மிக மிக அழுதேன்)

”கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்”
என்பார்களே! அப்படித்தான் இருந்தது.
புது இடம், தூரத்துச் சொந்தம் தான் என்றாலும்
அதிகம் பழகி பார்த்தே இராத குடும்பம்.
உடல்நிலை சரியில்லாத மாமியார்.
அயித்தானின் அண்ணன் குடும்பத்தினர்
அப்பொழுது சென்னையில் இருந்தார்கள்.
திருமணம் முடிந்து நாங்கள் முதலில்
சென்றது அவர்கள் வீட்டிற்குத்தான்.


பயந்து பயந்து இருந்த என்னிடம் வந்தார்
அயித்தானின் அண்ணன்.”அம்மா!
இது உன் வீடென நினைத்துக்கொள்.
நாங்களும் உன் உறவுதான்.” என்ற
அந்த வார்த்தை தந்த ஊக்கத்தை
வார்த்தையால் சொல்லிவிட முடியாது.

சொன்னது போல் மட்டுமில்லாமல்
இன்றளவும் “அம்மா” என்றழைப்பதைத்
தவிர என்னைஎதுவும் சொல்லியது கிடையாது.

ஆஷிஷை உண்டாகி இருந்த பொழுது
அடிக்கடி போனில் பேசுவார் மாமா.
(நான் அப்படித்தான் அயித்தானின்
அண்ணனை அழைப்பேன். பிறந்த 11ஆம்
நாள் முதல் தன் தம்பியை மகன் போல்
வளர்த்தவர். இருவருக்கு 25 வருட வயது
வித்தியாசம். அண்ணன் என்றால் அவர்
தந்தைக்கு சமமானவர் தானே!!)

”குழந்தை 3 கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும்”
அப்பொழுதுதான் ஆரோக்கியமான குழ்ந்தையாக
இருக்கும். நிறைய பாலக்கீரை சாப்பிடு!!”
இப்படி பல அறிவுரைகள் சொன்னார்.
(பேறுகாலத்திற்கு அம்மாவீட்டிற்குச்
செல்லும் வரை தனியாகத்தான் இருந்தேன்.)
ஆஷிஷ் 3.25 எடையுடன் பிறந்த பொழ்து
”நான் சொன்னதை கேட்டதற்குச் சந்தோஷமம்மா!!”
என மகிழ்ந்தார்.

தம்பிமேல் இருக்கும் அதே பாசம் என்மீது
வைத்து கவனித்துக்கொள்ளவேண்டும் என
நினைத்த அந்த பெரிய மனது மாமாவுக்கு இருந்தது.


அப்பா அலுவலகத்தில் பிசியாக இருப்பதால்
அம்மாதானே எல்லாம் செய்கிறார். அம்மாவை
மதித்து அம்மா சொல்வதைக் கேள்! இது
என் குழந்தைகளுக்கு மாமா அடிக்கடி
சொல்லும் வார்த்தைகள். மருமகளை
வேற்றுக்கிரக வாசி போல் நினைத்து
குழந்தைகளை தாயுடன் ஒட்டாமல்
செய்யும் பெரிய்வர்களைப் பார்த்திருந்த
எனக்கு இது ஆச்சரியமான விடயம்!!

ஆஷிஷும் அவனது பெரியப்பாவும் சந்தித்துக்கொள்ளும்
காட்சி திரைப்படக்காட்சி போலிருக்கும். :)))))))))))
“பெத்தா!” என்று இவன் இரு கைகளையும்
நீட்டிக்கொண்டு ஓட, அவரோ”கண்ணா!”என
அழைத்தப்படி கையில் சாக்லேட்டுடன் வந்து
இருவரும் கட்டிக்கொள்வார்கள். :)
(அம்ருதா பெரியம்மா செல்லம்)

எனக்குள் எப்போது ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருக்கும்.
திருமணமான புதிதில் ஹைதையில் இருந்தோம் சரி.
சென்னைக்கு மாற்றலாகிப்போன பிறகும் தனிக்குடித்தனம்
தான்? இது ஏன்? எனக்குப் புரியாமலேயே இருந்தது.

இலங்கைக்கு மாற்றலாகி கிளம்புவதற்கு முன்
மாமா, நான், குழந்தைகள் மட்டும் மெரினா
பீச் சென்றிருந்தோம்.(அயித்தான் அப்போ
இலங்கையில் இருந்தார்) பிள்ளைகளுடன்
அளவளாவிக்கொண்டு நல்ல பிள்ளைகளாக
இருக்கவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தவர்,
“அம்மா, ஏன் உங்களைத்தனிக்குடித்தனம்
வைத்தேன் என்று தெரியுமா?” என்றார்.
”தெரியவில்லை” என்றேன்.

”நானும் தம்பியும் சேர்ந்து இருக்கலாம்
தவறில்லை. சேர்ந்து இருக்கும்பொழ்து
குடும்பத்தலைவனாக நானே எல்லாவற்றையும்
கவனித்து உங்களை நன்றாக பார்த்துக்கொண்டிருக்கலாம்.
ஆனால், நான் அப்படிச் செய்திருந்தால் நீங்கள்
வாழ்க்கையை கற்பது எப்போது? வருவாய்க்குள்
செலவு, சேமிப்பு, குடும்பப் பொறுப்பு போன்றவைகளை
கற்காமல் போயிருப்பீர்கள்!” என்ன ஒரு நற்சிந்தனை!

“கட்டி கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தையும்
வாழ்க்கைக்கு உதவாது, அனுபவம் தான் சிறந்த
ஆசான்” என் யோசித்து அதை செயற்படுத்தி
எங்களை நல்வழிகாட்டி அழைத்துச் சென்ற
இவர் வயதால் மட்டுமல்ல குணத்தாலும்
பெரியவர் தான்.

இவரைப் பற்றி சொல்லாவிட்டால் “என் உலகில்
ஆண்கள்” பகுதி முழுமை பெறாது... என சென்ற
பதிவில் நான் சொல்லியிருந்தேன். இப்படி பட்ட
உறவு எனக்குக் கிடைக்கச் செய்த ஆண்டவனுக்கு
நன்றி.

**************************************

எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.
சில நல்லவர்களும் இருக்கிறார்கள். இதை நான்
உணர்ந்தேன். அதாவது நல்லவர்களாக
நினைத்துப் பார்க்கும் பொழுதுதான்
அவர்களின் நல்ல குணங்கள் நமக்குத் தெரியும்.
என் பார்வை, கண்ணோட்டம் கற்றுத் தந்தது
இதைத்தான். அடுத்த பதிவு இந்தத் தொடரின்
கடைசி பதிவு.

இதில் யாரெல்லாம் இருக்காங்க?

வெயிட் அண்ட் சீ :)))

Thursday, January 22, 2009

நிஜமா நல்லவனை வாழ்த்துவோம் வாருங்கள்.

இன்று நம் நிஜமா நல்லவனின் பிறந்தநாள்.



பர்த்டே கேண்டில்ஸ் எம்புட்டு இருக்குன்னு பாருங்க.
இதுதான் பாரதி வயசா? அல்லாங்காட்டி...



இதுவா? (யாருப்பா அது 20 + 20 40ன்னு கூவுறது)

அங்க 20 தான் இருக்கு.


சிங்கை வரும்பொழுதே புது சொக்கா, பேண்ட் எல்லாம்
எடுத்துக்கொண்டு வந்து கொடுத்திருக்கும் நிஜமா நல்லவனின் தங்கமணிக்கு மன்மார்ந்த பாராட்டுக்கள்.

( தங்கமணி சென்ற முறை சிங்கை வந்திருந்த பொழ்து
நிஜமா நல்லவன் இட்ட பதிவுகளை யாரும் மறக்க வேண்டாம்)

அதிகமாக அடி வாங்காமல் ஏதோ மிதமாக
”வாங்கிகட்டிக்கொள்ள” அருள் புரியுமாறு சிங்கை
முருகனை வேண்டிக்கொள்கிறேன்.

ஹேப்பி பர்த்டே நிஜமா நல்லவன்

நான் வியக்கும் இளைஞர்!!!

அதிக முறை பயணம் செய்ய ஏதுவாய் இருக்கும்
என்பதால் லோக்கல் ட்ரையினில் சீசன் டிக்க்கெட்
எடுக்கும் வசதி உண்டு.

மற்ற ஊர்களுக்கும் அடிக்கடி பயணிக்கற
இந்த இளைஞருக்காக
சீசன் டிக்கெட் கொடுக்கச் சொல்லி தர்ணா
செய்யலாமான்னு இருக்கோம்.

மும்பை, சென்னை, பெங்களூர்ன்னு
தாத்தா சுத்திகிட்டே இருப்பாரு. ஒவ்வொரு மாதமும்
இந்த இடங்களை கட்டாயம் விசிட் செய்வாரு்.
சில சமயம் இந்த லிஸ்டில் ஹைதையும்
சேர்ந்து கொள்ளும்.


ஓய்வே இல்லாமல் எறும்புபோல் அப்படி ஒரு ஓட்டம்.

இவர் அந்தேரி தாத்தா என எங்களால்(பேரன்/பேத்திகளால்)
அழைக்கப்படும் இவர்தான் அந்த இளைஞர்.
வயது அதிகமில்லை 85 தான்.


(அந்தேரி மும்பையில் ஒரு இடம். பலவருடங்களாக
தாத்தா(என் அம்மாவின் தாய்மாமா)
அங்கே வசித்ததால் தாத்தாவின் பெயரோடு
அந்தேரி ஒட்டிக்கொண்டுவிட்டது. தாத்தா இப்பொழுது
அந்தேரியில் வசிப்பதில்லை. ஆனாலும் அந்தேரி
தாத்தா தான்!!! )

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மும்பையில்
INCOME TAX DEPARTMENTல் OFFICERஆக பணிபுரிந்தவர்.
அந்த மிடுக்கும், கம்பீரமும் தாத்தாவிடம் மிகவும்
பிடித்தமானது. பார்க்கத்தான் கரடு முரடாக
தெரிவார். உண்மையில் மிருதுவான மனிதர்.

தனக்கு வாரிசு இல்லாவிட்டாலும் தன் அக்கா மற்றும்
தங்கையின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக
பார்க்கும் நல்ல மனது. 12 வருடங்களுக்கு முன்
தன் துணையை இழந்த பிறகு முற்றிலும்
தன்னை பணியோடு(அலுவலக வேலையில்லை,
தன்னை ஒரு அமைப்போடு சம்பந்தப் படுத்திக்கொண்டு
எந்த ஒரு ஆதாயமும் பெறாமல் சேவை
செய்கிறார்) பி.எல் படித்திருப்பதால் சில
சமயம் கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசகராக
இருக்கிறார். (எம்.எஸ். அம்மாவிற்கு தாத்தா
சட்ட ஆலோசகராக அவ்வப்போது வேலை
பார்த்ததுண்டு)


எல்லாவற்றிலும் மிதமாக இருக்கும் தாத்தா
எடுத்துக்கொண்ட வேலையில் மட்டும் பம்பரமாகவே
சுற்றுவார். ”இந்த வயதில் இப்படி சுற்றி ஆகவேண்டுமா?”
என்று நாங்கள் கேட்டால்,”என்னால் 4 பேருக்கு
நல்லது நடக்குது. என் உடம்பை பத்தி கவலைப்பட
கூடாது. நன்றாகத்தான் இருக்கிறேன்”, என்பார்.
உழைக்க வயது ஒரு தடையல்ல என்பது தாத்தாவின்
எண்ணம்.


அளவானச் சாப்பாடுதான் தாத்தாவிடம் எனக்கு
மிகவும் பிடித்த விஷயம்.

8 மணி அடித்தால் ஏகாக்‌ஷரம் +4 மாரி பிஸ்கட் வேண்டும்.
(வேறு ஒன்னுமில்லை! ஏகாக்‌ஷ்ரம் என்றால்
ஒற்றை எழுத்து. அதாங்க டீ. :))

11 மணி அளவில் சோறு குறைவு, காய்கறி கொஞ்சம்
அதிகம் எனும் சாப்பாடு.

சாயந்திரம் 4 மணி வாக்கில் ஏகாக்‌ஷ்ரம் அல்லது
ஹார்லிக்ஸ்.

இரவு 8 மணி வாக்கில் இட்லி,தோசை, சப்பாத்தி
ஏதாவதுஒரு வகையில் 3 மட்டும் தான்.

ஃபேன் கூட இல்லாமல் தூங்கிவிடுவார்.

பட்டுப்புடவை, வரதட்சனைக்கு நோ போன்ற
எங்களின் கொள்கைகளுக்கு ஆரம்ப கர்த்தா
அந்தேரி தாத்தாதான்.( இந்த கொள்கைக்காக
2000ஆம் வருடம் என் சின்னமாமாவின்
திருமணத்தின் போது மங்கையர் மலரிலிருந்து
வந்து பேட்டி எடுத்து எங்கள் மொத்த
குடும்பத்தினரையும் போட்டோ எடுத்து
போட்டிருந்தார்கள். )


85 வயதில் தன் நலத்தையும் பாராமல்
பொது நலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த
இளைஞருக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியத்தை
வழங்க வேண்டுமென்பதே என் பிரார்த்தனை.

****************************************

அடுத்தது யாருன்னு அடுத்த பதிவுல தெரிஞ்சிக்கலாம்.

இவரைப் பற்றி சொல்லாவிட்டால் “என் உலகில்
ஆண்கள்” பகுதி முழுமை பெறாது. யாரு?????

வெயிட்டுங்கோ.....

Wednesday, January 21, 2009

என் உலகில் இவர்கள்.....

என் வாழ்வில் இந்த ஆண்மகனுக்கும் பெரும்பங்கு
இருக்கிறது.

பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தில் ஒரு
காட்சி. வங்கி அதிகாரியான மொளலி தன்
வீட்டு வேலையைச் செய்வார். ”வீட்டில் நான்
என் மனைவிக்கு கணவன்” என்பார்.

இது என் பெரிய மாமா திரு.சத்தியநாராயணன்
அவர்களுக்கும் பொருந்தும். புதுகையில்
பீ.காம் படித்துவிட்டு மும்பைக்குச் சென்றவர்
B.L, A.C.S என படித்து கம்பெனி செக்ரட்டரியாக
இருந்தார்.

ஆனால் வீட்டில் மிக சிம்பிளாக இருபபார்.
வார இறுதி நாட்களில் நானும் மாமாவும்
சேர்ந்து மொத்த வீட்டையும் கழுவி சுத்தமாக்குவோம்.

முதன் முதலில் டாய்லட்டை மாமாவே
கழுவும் காட்சியைப் பார்த்து,”என்ன? மாமா
இது?” என்றதற்கு,” இதுவும் நம் வீட்டுக்குள்தான்
இருக்கிறது. நாமே கழுவினால் கவுரக் குறைச்சல்
ஆகிவிடாது” என்றார். இன்றும் நான் எங்கள்
வீட்டு டாய்லட்டை சுத்தமாக வைத்திருக்க கற்றது
இவரிடம்.

இது மட்டுமா?
சட்டியிலிருந்து தணலுக்கு!! என்பார்களே அதுமாதிரி
ஆகிவிட்டது என் நிலை. (மும்பையில் நான்
மாமாவீட்டில்தான் இருந்தேன்.)

”மளிகை சாமான் லிஸ்ட் எழுது” என்பதோடல்லாமல்
உடனழைத்துச் சென்று சாமான் வாங்கக் கற்ற்றுக்கொடுத்தார்.

“ஆங்கில நாளிதழ்கள் கட்டாயம் படிக்க வேண்டும்”
(அப்படி படிச்சு அதனால் வந்த வினைதான் இது:))

வீடு சுத்தமாக இருக்க வேண்டும். தூசி இல்லாமல்
துடைக்கவேண்டும். இல்லாவிட்டால்
“டேக் இட் ஈசி பாலிசின்னு “டான்ஸ்
ஆடத்தெரியுது. அந்த டேப்ரிக்கார்டரில்
தூசி இருக்கு. அதைத் துடைக்கத் தெரியலை!!”
என்பது போல நிறைய்யா........

புதுகையில் இருந்த வரை அப்பாவைத் தேடி
யார் வந்தாலும் விவரங்கள் கேட்டுகொண்டு
உள்ளே போய்விட வேண்டும். அதனால் அதிகம்
யாரிடமும் பேசியதில்லை.

அப்படி இருந்த என்னை தனது நண்பர்கள்
வீட்டிற்கு கட்டாயமாக அழைத்துச் செல்வார்.
வரவில்லை என்று சொன்னால் கண்டபடித்
திட்டி அழைத்துச் செல்வார்.” அனைவரிடமும்
பேசிப் பழகினால்தான் நிறைய தெரிந்துக்கொள்ளலாம்”
என்பார். (அது இப்போது அயித்தானின்
அலுவலக நண்பர்களுடன் பேச, அவர்கள்
குடும்பத்தாருடன் அளவளாவ வசதியாய் இருக்கிறது)

அப்பாவைவிட்டு முதன் முதலாக 19 வயதில்
நான் பிரிந்து மும்பை சென்றேன். அடிக்கடி
அப்பா ஞாபகம் வரும். அம்மம்மா மடியி்ல்
தஞ்சமடைந்த பொழுதெல்லாம்,” ஏன்? இங்க
இருக்கறவங்க எல்லாம் மனிஷங்களாத் தெரியலையா?”
என்பார். மாமா அடிக்கடி இப்படித் திட்டும்போதெல்லாம்
அதிகம் வருத்தப் படுவேன்.

அம்மாம்மாவிடம் ஒரு முறை அழுத பொழ்து
அம்மாம்மா சொன்ன வார்த்தை மாமாவைப்
பற்றி புரிய வைத்தது. “மாமா சொல்லும்பொழ்து
அவனை உன் தகப்பனாக நினைத்துப் பார்!!
பாசம் புரியும்! அழமாட்டாய்!” ஆமாம்.
புரிந்தது.

”நீ திருமணமாகி புகுந்த வீட்டில் நல்ல பெயர்
எடுக்க வேண்டும். சத்யா மருமகள் தவறு
செய்துவிட்டாள், அவளால் எங்கள் குடும்பத்தில்
பிரச்சனை என்று பெயர் வரக்கூடாது. அதற்காகத்தான்
உனக்கு இங்கு நல்ல பயிற்சி கொடுக்கிறேன்”
என்றார். (ஆமாம். எனது கருப்பு ரசத்திற்கு
என மற்ற சமையற்கூட சோதனைகளுக்கு
எலிகள் பெரிய மாமா மற்றும் சின்ன
மாமா தானே!!! )

புதுகையிலேயே இருந்திருந்தால் கிணற்றுத்
தவளையாகி இருப்பேன்.
”தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையுமில்லை” எனும்
பாடல் வரிகளுக்கேற்ப
என்னை புடம் போட்டு , மாற்றிய பெருமை
சத்யா மாமாவிற்குத்தான்.


அக்கா மகள் தானே நமக்கென்ன என
இருந்துவிடாமல் என்னையும் தன் மூத்தமகளாய்
(மாமாவிற்கு 2 பெண் குழந்தைகள்) நினைத்து
பாசம் காட்டியதை என்னவென்று சொல்வது.

காட்பரீஸ் சாக்லேட் விளம்பரம் ஒன்று
வரும். அது வந்தால் உடனே.”...

இங்க பாரு உன்னோட ஃப்வரிட்” என்பதிலாகட்டும்,
நான் அல்சர் வந்து அவதி பட்ட பொழுது
தான் கண்ணீர் சிந்தியதிலாகட்டும் இவர் மாமாவா?
அப்பாவா? என குழம்பியிருக்கிறேன்.



இப்போது ஒவ்வொரு தந்தையர்
தினத்திற்கும் நான் மறக்காமல் போன் செய்து
வாழ்த்துச் சொல்லும் இன்னொரு தந்தை
என் பெரிய மாமா.

தனது திருமணத்தின் போது மாமா
ரொம்ப கண்டீஷன் போட்டார்.
1. மாப்பிள்ளை அழைப்பு ஊர்கோலம்
கிடையாது.
2. பெண்ணிற்கு தங்கள் விருப்பம் போல்
சீர் செய்யலாம். நாங்கள் ஏதும் கேட்க
மாட்டோம்.வரதட்சணை கிடையாது.

3. எனக்காக ஒரு தியாகம் மட்டும்
மணமகள் செய்யவேண்டும். அது
திருமணத்தின் போதும், அதற்குப்பிறகும்
பட்டுப்புடவை உடுத்தக் கூடாது.

மாமாவின் இதே கண்டீஷன்களில்
2,3 மட்டும் நானும் என் திருமணத்தின்
போது போட்டேன். அப்பா திட்ட,
மாமாதான் சப்போர்ட் செய்தார்.

அயித்தானும் வரதட்சினை வேண்டாம்
எனும் கொள்கையோடு இருக்க,
நான் பட்டுப்புடவை கட்ட மாட்டேன்
என்றதற்கு ஒத்துக்கொண்டார்.

எனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை
பார்க்கும் பொழ்து இந்த இரு பாசக்கார தகப்பன்களுக்குள்
பெரிய சண்டையே வந்தது!!!! (அதைப் பற்றி
அப்புறமா சொல்கிறேன்)

அடுத்த பதிவு ஒரு 85 வயது இளைஞரைப்
பற்றியது

Tuesday, January 20, 2009

என் உலகத்தில் இவர்கள்....

பிரபல பெண்கள் இதழில் அடிக்கடி படிக்கும் பகுதி
“என் வாழ்வில் பெண்கள்”. பிரபல மான ஆண்கள்
தங்களின் வாழ்வில் மிகவும் மதிக்கும், நேசிக்கும்
பெண்களைப் பற்றி கூறியிருப்பார்கள்.
பெருமையாக இருக்கும்.

யோசித்து பார்த்தால் பெண்களின் வாழ்விலும்
ஆண்களின் பங்கும் அவசியாமன ஒன்று.

தந்தை, அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா,
பெரியப்பா என மிகவும் பிடித்த ஆண்கள்
இரு்ப்பார்கள். தாலிக்கொடி தந்த உறவும்,
தொப்புள் கொடி தந்த உறவும் மறக்க முடியாத
உறவுகள்.

ரீஜண்டா என் தங்கை சொன்ன கமெண்ட்
இங்கு பொருந்தும்.

“ஜீன்ஸ் போட்டவங்க எல்லாம் கெட்டவங்க
இல்லை! சுடிதார் போட்டவங்க எல்லாம்
நல்லவங்களும் இல்லை”!! :)))

பெண்கள் மட்டும்தான் நல்லவர்கள்,
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள்னு
சொல்லிட முடியாது. ரோல்மாடலாக,
மிகவும் நேசித்த, ஆண்கள் நம்மைச்சுற்றியும்
உண்டு.

என் உலகில் ஆண்கள், இந்த வரிசையில்
சிலரை அடுத்த பதிவுகளில்
நான் அறிமுகப்படுத்த போகிறேன்.

முதல் அறிமுகமாக என் உலகத்தின்
முதல் ஆண்மகன்.
ஆம் என் அப்பா திரு. ரமணி அவர்கள்.

அப்பா கற்றுத் தந்தவை தான் இன்று என்னை
வழி நடத்திச் செல்கின்றன.

புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கியில்
எழுத்தராக தன் வாழ்க்கையை துவங்கி
மேனேஜராக ஓய்வு பெற்றவர்.

கண்டிப்புக்கு பேர் போனவர். ராசி சிம்மமானதால்
இவர் ஒரு நடமாடும் சிம்மம்.

அப்பா பத்திய என் கொசுவத்திக்கு இங்கே.

கண்டிப்புன்னா சும்மா உங்க கண்டிப்பு எங்க
கண்டிப்பு இல்லை.

இந்தப் பதிவு அப்பாவால் நான் கற்றுக்கொண்டதெப்படி?
என்பதை சொல்லும்.

இதுவே 4 பதிவா வந்துச்சுன்னா பாருங்க.


இரண்டு

மூன்று,

நான்கு

ஒவ்வொரு பெண்ணிற்கு தன் தந்தைதான்
ரோல் மாடல். தன் அப்பா போன்ற கணவர்தான்
வேண்டுமென்று கூட நினைப்பார்கள்.
நானும் அப்படித்தான்.(அப்பாவை விட அதிகமாக
டூர் போகிறவராக வருவார்னு கனவுல
கூட நினைச்சுப் பாக்கலை :( :))) )

பெண் பிள்ளைகளுக்கே அப்பா மேல்தான்
பாசம் என்பதால் மட்டும் சொல்லவில்லை
அப்பாவின் வளர்ப்பு கற்றுத்தந்தவை ஏராளம்.
ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஒவ்வொரு வருடமும் இந்திய அரசாங்கத்தால்
பட்ஜட் தாக்கல் செய்யப்படும். அன்று
அப்பா டீவி முன் ஆஜர். நானும் அங்கே
இருக்க வேண்டும்!!!(அப்போது எனக்கு வயது
13 அல்லது 14 இருக்கலாம்) இதெல்லாம் எனக்கெதுக்குப்பா”!!
என்றால், ”இது எதுக்கா? அது சரி!!
நாட்டோட பட்ஜாட்டால நம்ம வாழ்க்கை
பட்ஜட்டுக்கும் எம்புட்டு பாதிப்பு வரும்னு
தெரிஞ்சிக்கலாம். அங்க ரயில்வே பட்ஜட்டில்
டிக்கெட் வெல ஏத்தினாங்கன்னு வைய்யி
நம்மளுக்கு பாதிக்கும்ல???” என் கேட்பார்.

இப்போது நான் வீட்டு பட்ஜட் போடுவதில்
எக்ஸ்பர்டாகி இருக்கிறேன் என்றால் அது
அப்பா அன்று கற்று கொடுத்தால்தானே!

10 வயதாக இருக்கும்பொழுது, தினமும்
காக்க! காக்க! என்று ஏதோ ஸ்லோகம்
தினமும் சொல்கிறாரே ”!என்று அவரை
ஆச்சரியப்படுத்தவேண்டுமென்று அப்பாவுக்கு
தெரியாமல் நானே படித்து மனப்பாடம் செய்து
அப்பாவிடம் சொல்லிக்காட்ட சந்தோஷமாகி
கவசத்தின் அருமை பெருமையைச் சொன்னார்.
அப்படியே மனதில் ஏற்று இன்றளவும் கந்தனின்
காலைப் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்தவனுக்கு
வேதனை இல்லை என்பார்கள். மகள் வாழ்வு
வேதனை இல்லாமல் இருக்க அழகாக
(தானே ஒரு உதாரணமாக இருந்து)
பக்தியை போதித்த நல்ல தந்தை
எனக்குக் கிடைத்தது ஆண்டவனருள்.

அப்பாவைப் பத்தி சொல்லிகிட்டே போகலாம்.
முடிவே இல்லை. சூரியவம்சம் படத்தில்
சரத்குமார் ஒரு வசனம் சொல்வார்.
அது சத்தியமான உண்மை.
“அப்பா திட்டுகிறார் என்று மனது
வருத்தப்படாமல் தன் நல்லதிற்குத்தான்
சொல்கிறார்” என்று உணர்ந்தால் பிள்ளைகள்
வாழ்வு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.

அடுத்து யாரு? சஸ்பென்ஸ்!!???

(எனி கெஸ்??? :)))) )

சர்ச்கேட், ஃப்ளோரா ஃபவுண்டைன், ஸ்டாக் எக்சேச்ஞ் கட்டிடம்...

எனது ஞாபக அடுக்குகளில் மும்பைக்கு ப்ரத்யேக
இடமுண்டு.

மும்பை பற்றிய என் முந்தை பதிவு:
அம்ச்சி மும்பை:

அன்றாடம் வசாய் டு சர்ச் கேட் வரை என் பயணம்.

வசாய் டு சர்ச்கேட்/ சர்ச்கேட் டு வசாய் லோக்க்கல்
டிரையின் பயணம் எத்தனை இனிமையானதோ
அதே இனிமை சர்ச்கேட்டு - மும்பை சாமாச்சார்
மார்க் வரை.



நான் வேலை பார்த்த அலுவலகம் இருந்தது
மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டிடத்திற்கு எதிரில்.


சர்ச்கேட்டிலிருந்து ஃப்ளோரா பவுண்டன் வந்து
அங்கிருந்து நேராக (டாடா ஹவு்ஸா?
இந்தியா ஹவுஸா? ஞாபகம் இல்லை)
அதைத் தாண்டி வலது பக்கம் திரும்பினால்
அந்த ப்ராம்மாண்ட கட்டிடம்.



1993 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு
சம்பவத்தின் நிழல் கூட இல்லாமல்
புது வடிவத்தோடு இருக்கும் அந்தக்
கட்டிடத்தை பார்க்கும்போதெல்லாம்
பெருமையாக இருக்கும்.



மாலை 6 மணிக்கு அலுவலகம் முடிந்ததும்
அதே பாதையில் நடந்து சர்ச்கேட் சென்று லோக்கல்
ட்ரையின் பிடிக்க வேண்டும். 6.38 டிரையின்
பிடித்தால் வீடு சேர 8 மணி ஆகிவிடும்.

அப்போதெல்லாம் பசி தாங்க மாட்டேன்.
ஃப்ளோரா பவுண்டனுக்கு எதிரில் ஒரு கடையில்
வடா பாவ் நன்றாக இருக்கும். அது அல்லது
சர்ச் கேட் ஸ்டேஷனுக்கு வெளிப்புறம்
(மரைன் டிரைவ் செல்லும் பக்கம்) கையேந்தி
பவனில் நம் தமிழ் நாட்டுக்காரர்கள் தோசைக்
கடை வைத்திருப்பார்கள். உடன் தோழிகள்
யாரும் இருந்தால் அங்கே சென்று பட்டர்
தோசை சாப்பிட பிடிக்கும்.

தோழிகள் உடனில்லை என்றால்
சர்ச்கேட் ஷ்டேஷன் சப்வேக்கு முன்னால்
ஒருவர் மிக சுத்தமாக பேல்பூரி, தஹிபூரி,
எல்லாம் விற்பார். ஒரு ப்ளேட் 5 ரூபாய்.

இப்படி ஏதாவது ஒன்று சாப்பிட்டால்தான்
வீடு செல்லும் வரை தாங்கும்.

சில நேரம் எனக்காக என் ட்ரையின்
தோழிகள் பார்சலுடன் காத்திருப்பார்கள்!!!

சர்ச்கேட்டிலிருந்து ஆட்டம் பாட்டம்
கொண்டாட்டமாக பயணம். தாதரில்
சில தோழிகள் ஏறுவார்கள். “இதோ
உனக்காக கொண்டுவந்தேன்” என்று
ஏதாவது கொண்டுவருவார்கள்.

வசாய் ஷ்டேஷனிலிருந்து வீட்டுக்கு
செல்ல 15 நிமிடம் ஆகும். வீட்டிலிருந்து
ஷ்டேஷன் வர 2 ரூபாய் தான். அதுவே
ஷ்டேஷனிலிருந்து வீட்டுக்கு போக
7 ரூபாய்!!! கட்டுப்படியாகுமா???
நடராஜ சர்வீஸ்தான். வழியில்
அடுத்தநாளைக்குத் தேவையான காய்கறிகளை
வாங்கிக்கொண்டு போய் அம்மம்மாவிடம்
கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு
சின்ன மாமாவிடம்” வாங்கிகட்டிக்கொள்வேன்!” :)

காலையில் முதலில் கிளம்புவது சின்னமாமா,
அடுத்து நான், கடைசியாக பெரியமாமா கிளம்புவார்.

இரவு வீடு திரும்பும் போதும் சின்ன மாமாதான்
முதலில் வருவார். (புதன் கிழமைகளில் மட்டும்
கராத்தே வகுப்பெடுக்க அந்தேரி( ஒரு இடம்)
தாத்தாவீட்டிற்கு செல்வார்) எனக்கப்புறம் பெரிய
மாமா வருவார். 3வரும் அதே வழியில்தான்
வருவோம். ஆனால் நான் மட்டும் காய்கறி
வாங்கி வருவேன் என்று அம்மம்மா பாராட்டுவார்.
(பெரிய மாமா கம்பெனி செக்ரட்டரி ஆதலால்
தாமதமாக வரும் வாய்ப்பு இருப்பதால்
அவருக்கு எக்ஸம்ப்ஷன். இந்த மாமாவைப்
பற்றி இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் பதிவு
வரப்போகுது)

புயலோ, மழையோ வேற எந்த
நிகழ்வோ மும்பையின் வாழ்வை
முழுவதுமாக ஸ்தம்பிக்கச் செய்யாது.

அந்த நகரத்தைப் பார்த்துதான் எழுந்து
நிற்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்.

மும்பையைவிட்டு வந்து 14 வருடங்கள்
ஆகிவிட்டன. ஆனாலும் மும்பை என்றால்
மனதுக்குள் சந்தோஷ கொசுவத்திதான்,
ஊ லல்லா பாட்டுதான்!!!

மும்பைக்கடுத்து என்னை மிகவும்
கவர்ந்த, பாதித்த இடங்கள் ஹைதையும்
கொழும்புவும்தான்.

Monday, January 19, 2009

பூ பூத்த திருநாள்......

தெனாலி கமலஹாசனே பரவாயில்லை என்று சொல்லும்
அளவுக்கு எதற்கெடுத்தாலும் பயம்!!!!

ரோடில் போகும்போது கைகளை இறுக்க பிடித்துக்
கொள்வாள்.

தூங்கும்போது கூட அப்பா கைகளை பிடித்துக்கொள்ள
வேண்டும்.
விமான பயணங்களின் போது தந்தையும் மகளும்தான்
அருகில் அமர்ந்து கொள்வார்கள்.டேக் ஆஃப், லேண்டிங்
இரண்டின் போதும் ஒரே டயலாக் தான்.
Nana please hold my hands!!!!

இப்படி எல்லாம் பயப்படக்கூடாதம்மா என்று மெல்ல
எடுத்துச் சொல்வோம்.

ஆனான் கடந்த 6 மாதங்களாக எனக்கு பயங்கர
ஆச்சரியம்.

தானே தனியாக கீழே இறங்கிச் செல்கிறாள்.

மெல்ல ரோட்டை க்ராஸ் செய்து கடைக்கு
போய் தனக்கு தேவையானதை வாங்கி
வருகிறாள்.

4 தெரு தள்ளி இருக்கும் டைலர் கடைக்கு
தான் தான் தனியே போவேன் என்று
அடம்பிடிக்கிறாள்(!!!)

10 நாள் முன்பு வீட்டுக்கு அருகில் இருக்கும்
ஷ்டேஷனரி ஷாபில் மேப் இல்லையென்று
மெயின் ரோடை க்ராஸ் செய்து போய்
வாங்கிவந்திருக்கிறாள்!!!!!

எங்கே போயிற்று அந்த பயம்??


நான் வளர்கிறேனே மம்மி என்று
சொல்லாமல் சொல்கின்றன அவளது
செயல்கள்!!

அண்ணனுடன் தனக்கும் தனி ரூம்
வேண்டுமென்று போட்டி போடுகிறாள்!!

நானே செய்து கொள்வேன்! என்று
சொல்லி செய்கிறாள்.

ஓ!! என் அம்மா வளர்ந்துவிட்டாள்.

இன்று எங்கள் அம்ருதம்மாவிற்கு
பிறந்தநாள்.

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு
வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.


Sunday, January 18, 2009

விரதம் ஏன் அவசியமாகிறது?

பொழுது விடிஞ்சு பொழுது போயின்னு
ஓடி ஓடி வேலை செய்யற நாம வார
இறுதிக்காக காத்திருப்போம். எதுக்கு?
ஓய்வெடுப்பதற்காகத்தானே!

ஓய்வு நமக்கு களைப்பை நீக்கி,
புது தெம்பைத் தருகிறது. நம்ம
வயிற்றுக்கு ஒரு நாள் ஓய்வு அவசியம்.


நம்ம முன்னோர்கள் எதையும் அவசியமில்லாம
சொல்லிடவில்லை. கடவுள் பக்தி என்று
வைத்தால் பயந்து கொண்டு செய்வோம் என்றே
விரத தினங்களை வைத்தார்கள்.

விரதம் மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்
என்ன?

விரதம் உண்ணாவிரதம், மொளன விரதம்
அப்படின்னு சில வகைகள் பெரியவங்க
சொல்லியிருக்காங்க.

விரதம் மேற்கொள்வதால் நமக்கு வைராக்யம்
(மன கட்டுப்பாடு) ஏற்படுகிறது.

உண்ணா நோன்பால் வயிறு சுத்தமாகிறது.

நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும்
டாக்‌ஷின்களை வெளியேற்ற விரதம்
உதவுகிறது.

என் அம்மம்மா அடிக்கடி
சொல்லும் வாக்கியம் “லங்கனம் பரம ஒளஷதம்”

உண்ணும் உணவு மருந்தாவது போல்
சில சமயங்களில் உண்ணாமல் இருப்பதும்
மருந்தாகிறது.

அஜீரணத்திற்கு மருந்து எடுத்துக்கொள்வதற்கு
பதில் வயிற்றை காயப்போட்டால் போதும்.

எப்படி விரதம் மேற்கொள்ளலாம்?

3 வேளை உணவை தவிர்ப்பது,
2 வேளை உணவை தவிர்ப்பது,
1 வேளை உணவை தவிர்ப்பது இப்படி
தங்களால் இயன்ற முறையில் செய்யலாம்.

சிலருக்கு வயிற்றைக் காயப் போடவே
கூடாது.(அதிகம் விரதம் இருந்தாலும்
வயிற்றுப்புண் வரும்)

ஒரு நாள் முழுவதும் திரவ ஆகாரமாக
எடுத்துக்கொள்ளலாம். காபி/டீ
குறைவாக எடுத்துக்கொண்டு
பழ ஜூஸ்கள்,கஞ்சி, சூப் வகைகள் குடிக்கலாம்.

வெறும் பழங்களை மட்டுமே உட்கொண்டும்
விரதம் இருக்கலாம்.

GENERAL MOTORS கம்பெனி நிர்வாகம்
தனது ஊழியர்களுக்காக தயாரித்த
டயட் சார்ட் மிகப் பிரபலம். இதுவும்
டிடாக்‌சின் செய்ய உதவுவதாக
கேள்விப்பட்டிருக்கிறேன்.


General Motors: Weight Loss Diet Program

வெஜிடேரியன்களுக்கான ஜீ.எம் டயட்
சார்ட்.

Thursday, January 15, 2009

எந்தரோ மஹானு பாவுலு.......

எந்த ஒரு விசேடத்திற்கு கூட பர்மிஷன் போடாமல்
அலுவலகம் சென்றுவிடும் அப்பா இந்த நாளன்று
மட்டும் பர்மிஷன் போட்டு விட்டு டீவி முன்
அமர்ந்திருப்பார்.

அது புஷ்ய பகுள பஞ்சமி தினம். இந்த
தினத்தில் தான் திருவையாற்றில் தியாகராஜ
ஆராதனை நடக்கும். பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்
இசைப்பதை மனம் லயித்து கேட்பது அப்பாவின்
வழக்கம்.

“இதெல்லாம் பாக்கணும்! அனுபவிக்கணும்!
சும்மா சினிமா பாட்டு மட்டும் பார்க்க கூடாது”
என்று சொல்லி என்னையையும் பார்க்க
வைத்துவிடுவார்.

இலங்கையில் இருந்த பொழுது கூட இந்த
நாளில் எஸ்.எம்.எஸ் அடித்து ப்ரொக்ராம்
ஆரம்பமாகிவிட்டது என்று ஞாபகப்படுத்துவார்
அப்பா. இன்றும் காலையில் போன் செய்து
நேஷனல் டீடி சேனலில் வருது. பாரு!
என்றார். பார்த்துக்கொண்டிருக்கிறேன் அப்பா
என்றதும் பெருமையாக சந்தோஷமாக
“அதானே பார்த்தேன்! என் பெண் ஆச்சே!”
என்றார்.

பஞ்சரத்ன கீர்த்தனைகள் ஒவ்வொன்றும்
அருமையாக அனைத்து கலைஞர்களும்
ஒரே சுருதியில், லயத்தில் இணைந்து
இசைத்த பிறகு இறுதியில் தியாகய்யருக்கு
கற்பூராத்தி காட்டுவார்கள்.

புஷ்ய பகுளபஞ்சமி தியாகய்யரின் நினைவுநாள்.




(குரல் வளம் நன்றாகவே இருக்கு. எல்லோரும்
பாடினால் ரசிக்க ஆள் வேண்டாமா? அதனால்
ரசித்து மகிழலாம் என பாட்டு வகுப்புக்கு
போவதை நிறுத்திவிட்டேன். :) )

நான் சங்கீதம் கற்றுக் கொண்ட போது
சீனு சார் என் சங்கீத குரு. தனது
வீட்டில் தியாகய்யருக்காக திதி கொடுப்பார்.
அதன் பிறகு சாயந்திரம் பஞ்ச ரத்ன
கீர்த்தனை இசைக்கப்படும். அம்மாவும்
அவரது சிஷ்யை என்பதால் இருவரும்
செல்வோம்.

பஞ்ச ரத்னம்- ஐந்து ரத்னங்களின்.
தியாகய்யரின் எத்தனையோ பாடல்கள்
பிரசித்தி பெற்றாலும் இந்த 5 கீர்த்தனைகள்
பரமானந்தம். கடைசி பாட்டாகிய
எந்தரோ மஹானுபாவுலுவின் முதல்
வரி பலருக்கும் தெரிந்திருக்கும்.

எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி
வந்தனமுலு.

(எத்தனையோ மஹான்கள். அனைவருக்கும்
என் வணக்கங்கள் இது தான் அர்த்தம்)

பெரிய பொட்டுடன் குன்னக்குடி அவர்கள்
இல்லாமல் இந்த முறை ஆராதனை
நடந்தது. (நேரிடையாக் சொர்க்கத்தில்
தியாகய்யருக்கு ஆராதனை செய்திருக்கலாம்)



யார் இந்த தியாகராஜர்?

சங்கீத உலகில் 3 பிரம்மாக்களில் தியாக்ய்யரும் ஒருவர்.
தெலுகு ப்ராம்மண பிரிவில் முலகநாட்டு உபபிரிவைச்
சார்ந்தவர் தியாகய்யர். ஆந்திர மாநிலத்தின் விஜயநகர
சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட பகுதியிலிருந்து வந்து
தஞ்சாவூர் மாவட்டதிலிருக்கு திருவாரூரில்
வாழ்ந்து வந்த காகர்ல ராமப்ரம்மம்- சீதம்மாவின்
மகனாக பிறந்தவர்.

தனது ஒவ்வொரு பாடலிலும் “தியாகராஜ”
என தனது பெயர் வரும்படி அமைத்திருப்பார்.

”துளசி தல முலச்சே”
“நீ தய ராதா?”
“நிதி சால சுகமா?” இந்த 3 பாடல்கள்
எனக்கு மிகவும் பிடிததது.

ஜகதானந்த காரக
Get this widget | Track details | eSnips Social DNA



கனகனருசிரா:

Get this widget | Track details | eSnips Social DNA


எந்தரோ மஹானுபாவுலு பாடல்:

Get this widget | Track details | eSnips Social DNA


பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் அனைத்தும்
இங்கேயும் இருக்கிறது.


பக்தி செய்வதில் பலவகை இருக்கிறது.
இசையால் பக்தி செய்வது அதில் ஒரு வகை.

ராமபக்திக்கு தியாகய்யர் மிகச்சிறந்த
உதாரணம். அதனால் தான் இறைவன்
அவருக்கு தரிசனம் தந்ததாக சொல்வார்கள்.

ராமனை மனதில் வைத்து சங்கீதம்
எனும் மலரால் துதித்திருக்கிறார்.

அந்த ராம பக்தனுக்கு மனமார்ந்த
அஞ்சலிகள்.

Tuesday, January 13, 2009

டயடுன்னா இன்னா?

என்ன டயடுல இருக்கீங்களா? அப்படின்னு குறைவா
சாப்பிடறவங்களைப்பார்த்து பலர் எகத்தாளமா
கேப்பாங்க.
இப்படி அவங்க கேக்கறதை கேட்டா எனக்குச் சிரிப்பா
வரும். :) டயடுன்னா இன்னான்னு தெரியாமா
டயட்டான்னு? கேட்டா என்ன அர்த்தம்??

(குடும்பம் ஒரு கதம்பம் விசு மாதிரி
குழப்பறேன்னு சொல்றீங்களா?)


நாம் உண்ணும் உணவிற்கு பெயர் டயட்.
இன்னும் சொல்லப்போனால் சரிவிகித
உணவு.

உணவு பழக்கத்திற்கு பெயர் டயடரி ஹேபிட்ஸ்.

இது நம் கலாசாரத்தாலும், நம் உணவு முறையாலும்
ஏற்படும் பழக்கம்.

நமது உணவுப் பழகக்த்தை ஒரு தாளில்
குறித்துக்கொண்டு அதை கீழே இருக்கும்
பிரமிட்டோடு ஒப்பிட்டு பார்த்துக்கொண்டால்
நம் உணவுப் பழக்கம் சரியானதா? என்பதை
அறிந்துக் கொள்ளலாம்.





நம் உணவு பழக்கத்தில் இருக்கும் சில தவறான
பழக்கங்கள்.

அரிசி, கோதுமை போன்றவைகளை கார்ப்போஹைரேட்
சத்து என்போம். அதை அதிகமாக எடுத்துக்கொண்டால்
உடலில் கொழுப்பாக தங்கி விடக் கூடும்.

அரிசி( அரிசியால் செய்யப்பட்ட உணவுகள்)
கோதுமை (கோதுமையால் செய்யப்பட்ட
உணவு்வகைகள்)அளவைக் கு்றைத்து,
அதிகம் காய்கறி, பழங்கள் எடுத்துக்கொள்ள
வேண்டும். பருப்பு, தானிய வகைகள்
இருக்க வேண்டும்.

பலருக்கும் சோறு சாப்பிடாவிட்டால் சாப்பிட்ட
மாதிரியே இருக்காது. ருசியால் அதிக அளவில்
சோறு சாப்பிட்டு விடுவோம். ஆனால்
அதற்குத் தகுந்த உடல் உழைப்பு இல்லாததால்
உடல் பருமன் ஏற்படுகிறது. மருந்தாகும்
உணவு பதிவில் நண்பர் ஒருவர்
சொல்லியிருந்தது போல் சோற்றின்
அளவைப் படிப்படியாக குறைத்து
வந்தாலே வித்தியாசம் தெரியும்.

அதிகமாக காபி/டீ குடிப்பதாலும்
உடல் பருமன் ஏற்படும். (சர்க்கரை)

சிலருக்கு ரவா உப்புமாவுடன் சர்க்கரை
மிக மிக பிடித்த காம்பினேஷன்.

வெள்ளைச் சர்க்கரை நம் உடல் பருமனை
கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ரஜினி சொன்னது போல் வெள்ளை பண்டங்கள்
சிலவற்றை குறைவாக எடுத்துக்கொள்ள
வேண்டும். (அரிசி, சர்க்கரை,மைதா,
உப்பு, வெண்ணெய், நெய்...)

தயிர், மோர் உடலுக்கு மிகவ்ம் நல்லது.

இப்படி முறையான உணவு பழக்கம்
ஏற்படுத்திக் கொள்வது தான்
டயட் கண்ட்ரோல்.(நாம்
என்ன சாப்பிடுகிறோ? அது நம்
உடலுக்கு நல்லதா? என அறிந்து
நல்லதை மட்டுமே உண்பது)

டயட் கண்ட்ரோல்+ முறையான
உடற்பயிற்சி= ஆரோக்கியமான வாழ்க்கை.

எத்தனை நாளைக்குத்தான் இப்படி
சாப்பிடுவது என்பவர்களுக்கு.
வாரத்தில் 5 நாள் முறையான
உணவுப்பழக்கத்தில் உணவு
எடுத்துக்கொண்டு ஒரு நாள்
நம் மனதும், வாயும் விரும்பும்
உணவை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு நாள் விரதம். அது எதுக்கு?
அடுத்த பதிவில் சொல்லட்டுமா????

பிறந்த நாளுக்கு வீட்டில் இல்லாமல் ......

எனது திருமணத்திற்கு முன்பு வரை அப்பாவின்
பிறந்த நாளின் போது அவர் எங்களுடன் இருந்ததே இல்லை!!

”கொஞ்சம் முன்னாடியே அங்கே போனால் என்ன?”
என்றால் கோபப்படுவார்.

அப்பாவின் பிறந்த நாளுக்கு அது செய்யணும்?
இது செய்யணும்னு நாங்க நினைச்சாலும்
விட மாட்டார். வீட்டில் இருந்தால் தானே
பிரச்சனை என்று கிளம்பிப் போய்விடுவார்.

பிறந்தநாளுக்கு புத்தாடை உடுத்த மாட்டார். 2 வயதில்
தகப்பனை இழந்து இளமையில் வறுமையை அனுபவித்தவன்!
இப்பொழுதென்ன புத்தாடை என்பார். (தீபாவளிக்கும்
இதே நிலைதான். சாவகாசமாக எழுந்து குளிப்பார்.
ஒரு நாள் கூட கங்காஸ்னானம் கிடையாது.
புத்தாடை கிடையாது அப்பாவிற்கு!!! )

அப்படி எங்கேதான் செல்வார்?

அப்பா போகும் இடத்தில் கூட ஒரு பிறந்த நாள்
கொண்டாட்டம் இருக்கும்! லட்சக் கணக்கான
பேர்கள் கூடி இருப்பார்கள் அங்கே!!!!

ஜனவரி 14 அப்பாவின் பிறந்த நாள்!
அன்றுதான் ஐயப்பனுக்கும் பிறந்த நாள்.
ஐயப்பனுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாட
சபரி மலைக்குச் சென்று விடுவார் அப்பா.

அப்பாவிற்கு மிகவும் பி்டித்த பாடல்
1975 ஆம் ஆண்டு வெளிவந்த
சுவாமி ஐயப்பன் படப் பாடல்.
தமிழில் டீ.எம்.எஸ் அவர்களின்
குரலில் சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம்”

தமிழில் கிடைக்காததல் மலையாளத்தில்
அந்தப் பாடல்.



அச்சாணி படத்தில் ஜானகி அம்மா பாடிய
“மாதா உன் கோவிலில் மணி தீபம்
ஏற்றினேன்” பாடலை “சாஸ்தா உன் கோவிலில்
நெய் தீபம் ஏற்றினேன்” என்று அப்பா பாடுவார்.
மிக பிடிக்கும்.

அப்பா- என் உலகத்தின் முதல் ஆண்மகன்.
என்னை தன்னம்பிக்கையுடன் வளர்த்தவர்.
பொத்தி பொத்தி பெண்னை வளர்ககாமல்
கடைக்கு போவது, வங்கி விவகாரம்
என பலதும் பழக்கினார்.

நானும் ஒரு எம்டன் மகள்!!
அதைப்பத்தி படிக்க இங்கே: :)


ஜனவரி 1 அப்பா, அம்மாவுடன் இருந்தோம்.
கோவிலுக்குச் சென்று வரும் வழியில்
சீடி கடைக்குச் சென்று வேண்டிய சீடிகளை
வாங்கும் பொழுது அந்த சீடிக்கள் கண்ணில்
பட்டது. வாங்கிக் கொண்டு வந்து வண்டியில்
அமர்ந்திருந்த அப்பாவிடம் கொடுத்தேன்.

“ஹை! தேங்க்யூ! தேங்க்யூ!!” என்று
குழந்தையாக குதூகலித்தார். அது
அப்பா மிகவும் விரும்பும் “தில்லானா
மோகனாம்பாள், மணல்கயிறு, கல்யாணப்
பரிசு” பட சீடிகள்.

நான் வாங்கிக் கொடுத்த புடவையை
அம்மா புத்தண்டன்றே கட்டிக்கொள்ள,

அப்பா,” இந்த டீஷர்டை பர்த்டேக்கு
போட்டுக் கொள்கிறேன்ம்மா. அதுக்குள்ள
பேண்டும் தெச்சிக்கரேன்” என்றதும்
சந்தோஷமாக இருந்தது.
(கடந்த 3 வருடங்களாக நானும் தம்பியும்
அதிகம் வற்புறுத்துவதால் புத்தாடை
அணிகிறார் அப்பா)

அப்பாவுக்கும், ஐயப்பனுக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்

Friday, January 09, 2009

மருந்தாகும் உணவு!

டாக்டர் பாக்கச் சொன்னபடி ந்யூட்ரீஷயனைப் பார்த்தோம்.
ரொம்ப சின்ன பொண்ணாக தெரிந்தார்!!
(உன்னைவிட எனக்கு 4 வயது அதிகம்னு அவர்
சொன்ன போது மயக்கம் வராத குறை எனக்கு!
சும்மா சிக்னு இருந்தார்.)

“எது உன்னை என்னிடம் வரவழைத்ததுன்னு”,
அழகா கேட்டார். மிக நட்புடன் பேசிய அவரது
பேச்சும் பி்டித்திருந்தது.

விவரங்கள் சொன்னேன். அவரும் என் உடலில்
நடக்கும் நிகழ்வுகளைச் சொன்னார். இந்த
நேரத்தில் உணவு, உடற்பயிற்சி மிக அவசியம்.
அப்படின்னு சொல்லிட்டு என் உணவுப் பழக்க
வழக்கங்கள், உடற்பயிற்சி ஏதும் செய்கிறேனா?
எல்லாம் கேட்டார்.

“ம்ம்! நல்ல அவேர்ன்ஸுடன் தான் இருக்கீங்க”ன்னு
பாராட்டுதல் வேற கிடைச்சது. ( வெக்கம் வெக்கமா
இருக்கு!!) ஆனால் சில மாற்றம் செய்யணும்னு
சொல்லிட்டு டயடில் சிறு மாற்றம், காலையில்
வாக்கிங்கிற்கு பதில் யோகா, மாலையில் வாக்கிங்
என்று மாற்றினார்.

உணவில் கார்போஹைட்ரேட் குறைவு,
காய்கறி, பழங்கள் அதிகம், தயிர்
3 வேளையும் கட்டாயம் எடுத்தல் என
சின்ன மாற்றம் தான். ( இரவு நான் சாப்பிடுவதே
3 ரொட்டி. அதையும் 1 ரொட்டியா மாத்தினது
மட்டும்தான் குறை.:( )

எனக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை கண்டிப்பா
செய்யணும்னு சொன்னார். இரவு தூங்குமுன்
சூடா பால் கொஞ்சம் குடிக்கணும் என்பது தான்.
அது தான் எனக்கு தூக்கத்தைக் கொடுக்கும்னு
சொன்னார். ஆனா அந்த நேரத்தில் பாலா!
நம்மால அவாதே! (இதுக்கு மட்டும் தினமும்
அயித்தான் திட்டிகிட்டே இருக்காரு :( )

( சொல்ற எல்லாத்தையும் கேட்டுப்புட்டாலும்
தப்பாயிடும்ல! :)))) )

ஹோம் மேக்கர்களைத் தான் இந்த நோய்
அதிகம் தாக்குதுன்னு சொன்ன்வர் எனக்கு
சில டிப்ஸ்களைச் சொன்னார். அதை
உங்களுக்கும் சொல்றேன். வருமுன் காப்பது
நல்லதாச்சே!

1. வீட்டு வேலைகளை முடித்தோ, முடிக்குமுன்னரோ
வாக்கிங் செல்ல வேண்டாம். ( டயர்டாகி விடுவோம்)
ஸ்டெமினாவை பேலன்ஸ் செய்ய யோகா போன்றவைகளை
காலையில் செய்ய வேண்டும்.

2. காலை உணவு அவசியம் சாப்பிடணும்
(2 இட்லி போதும். தேங்காய்ச் சட்னி நோ சொல்லிடுங்க.
காபி டீக்கு பதில் திக் மோர் 1 டம்பளர் வரை
சாப்பிடணும்.


3)வேலை வேலைன்னே எப்போதும் ஓடாமல்
வேலைகளை முடித்துவிட்டு அதிகம் அவைப்
பற்றி நினைக்காமல் இருக்கணுமாம்.
(உதாரணத்திற்கு: ஒரு அறையை சுத்தம்
செய்வதானால் சுத்தம் செய்து விட்டு அதை
பூட்டி வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டே
நகர்ந்து போய் விட வேண்டும். மறுபடி
மறுபடி அந்த அறையேயே பார்த்துக்கொண்டிருந்தால்
மனமும் க்ளீனிங்க் செய்வதைப் பத்தியே
ஓடுமாம்)

3அ. திட்டமிட்டு வேலைகளை முடித்து விட்டு
கண்டிப்பாக புத்தகம் படித்தல், பாடல் கேட்டல்
போன்றவைகளைச் செய்ய வேண்டும்.
(காலை 10- 11 சரியான நேரம் இதற்கு)
கொறிக்க பழங்களை பக்கத்துல வெச்சுக்கணும்
:), வாழைப்பழம் சாப்பிட்டா வெயிட்
அதிகமாகிடும்.


4. 3 வேளையும் தயிர் கண்டிப்பாக உணவில்
சேர்க்கபடணும். உடலில் ஏற்படும் மாற்றங்களை
மட்டுப்படு்த்த உதவும்.

5. சிறு அளவில் நாளைக்கு 5 முறை உண்ண வேண்டும்.
அதில் 2 முறை வெறும் பழங்கள் மட்டுமே!

6. காபி/ டீ குடிக்காமல் இருந்தால் நல்லதாம்.
(அதிலும் பீ.எம்.எஸ் இருக்கிறவங்க காபியை
தவிர்த்தல் நலம்.) சோயாமில்க் சாப்பிடலாம்.

7. தினம் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாக்காய்,
பப்பாளி போன்ற பழங்களைச் சாப்பிடலாம்.

8. உணவில் பருப்பு, காய்கறி, தானிய வகைகள்
இருத்தல் அவசியம்.

மொத்தத்துல உடம்புக்கு நல்லதில்லைன்ன
அதை வாயில போடாம இருக்கறது நல்லதாம்!

அதைவிடவும் அவசியம் உடற்பயிற்சி.

இங்கே எனக்கொரு விஷயம் பேசணும்?

எத்தனை பேரு விட்டில் பெண்கள் உடற்பயிற்சி
செய்யறாங்க?

இதுல நிறையபாயின்ட்ஸ் இருக்கு!!

1. நேரமில்லை.
2. அவசியமென்று சிலருக்கு தோணாது.
3. அப்படியே செய்ய நினைத்தாலும்
“காலங்கார்த்தால் வேலை செய்யறதை
விட்டுட்டு எக்சஸைஸ் என்ன வேண்டியிருக்கு”!
என பேச்சுக் கேட்க நேருமே என்கிற பயம்.
4 வீட்டு வேலை செஞ்சாலே பெரிய எக்சஸைஸ்
தான்” எனும் தவறான நினைப்பு.
5. மாலையில் பள்ளியிலிருந்து திரும்பும்
பி்ள்ளைகளை கவனிக்க, கணவனுக்கு காபி
போட என போய் விடும்.

ஆனால் இதற்கிடையிலும் அவர்கெளுக்கென
ஒரு நேரத்தை ஒதுக்கி (வீட்டுல இருக்கற
மத்தவங்க ஒதுக்கி கொடுத்தாத்தான் உண்டு!!:( )
உடற்பயிற்சி செய்வதை அவசியாமாக்கிகணும்.

30 நிமிட நடை போதும். முடிந்தால் தெரிந்தால்
யோகா செய்வது மனதை அமைதிப் படுத்தும்.

பெரிய நோயா இல்லாட்டி போனாலும்
முறையா கவனிக்கப் படாவிட்டால்
மனநோயாக மாறும் அபாயம் இருக்கு.
அதனால் உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க!

(நான் என்னைய நல்லா கவனிச்சிக்க
ஆரம்பிச்சாச்சு! :) )

Thursday, January 08, 2009

கண்டேன்! கண்டேன்! மருத்துவரை

சஸ்பென்ஸ் தாளாமல் எல்லோரும் நகத்தைக் கடிச்சிகிட்டு
உக்காந்திருக்கீங்களா?

முந்தைய பதிவுக்கு இங்கே:
மருத்துவர் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம்.

பெண்களின் ப்ரச்சனைக்கு மகப்பேறு மருத்துவர்தான்
வைத்தியம் பார்க்க முடியும். வெறும் ப்ரசவம்
மட்டும் பார்ப்பது மகப்பேறு மருத்துவரின் வேலை இல்லை.

ஆனாலும் எனக்கு இந்த ப்ரஃபொஷனல்ஸ் மேல்
கொஞ்சம் வருத்தம் தான். ஏதோ அவர்களால் மட்டுமே
இந்தப் படிப்பை படிக்க முடிந்து என்ற நினைப்பில் சற்று
கர்வமாகவே இருப்பார்கள். அதிலும் மருத்துவர்கள்
கேக்கவே வேண்டாம். பொறுமையாக பேசி, நிலையை
புரியவைப்பது போன்றது நான் மிக மதிக்கும்
டாக்டர். வந்தனா பன்சால் போன்றோருக்குத்தான்
சாத்தியம். (பேஷண்டுகளிடம் பேசினால் தனது
நிலை குறைந்துவிடும் என்று நினைப்பார்கள்.
உயிர் காக்கும் மருத்துவரை தெய்வமாக
நினைக்கிறோம். தெய்வம் கூட மனித உருவி்ல்
வரும் என்பார்கள். ஆனால் மருத்துவர்கள்???!
ம்ம்ம்)

என்ன பிரச்சனை என்று?" கேட்ட மருத்துவருக்கு
நான் என் நிலையை எடுத்துச் சொன்னேன்.
அமைதியாக கேட்டுக்கொண்டார்.

அதே அமைதியுடன் பேசினார்.
"பல பெண்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது
என்பதே தெரியவில்லை. I am talking to so many ladies
and trying create an awarenes about this.

என்ன தான் நடக்கிறது இந்த சமயத்தில்? என்பதை
நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

மாதவிடாய்க்கு முன்பு உடலில் ப்ரோஷ்ட்ரோஜோன்
சுரக்கும். அது சிலருக்கு ஒவ்வாத்தன்மையை
கொடுக்கிறது. மூளைக்கு இடப்படும் கட்டளை
மாறி அதன் விளைவுகள் தான் நீ பட்டுக்கொண்டிருக்கும்
அடையாள உபாதைகள். எப்படி காற்றில் மாசு இருந்தாலும்
சிலருக்கு மட்டுமே ஒவ்வாத்தனமை ஏற்பட்டு
ஜலதோஷம், சளி தும்மல் வருகிறதோ அது போல்
இது" என்றார்

நடிக்கிறாய் என்று கூறிய மருத்துவரைப் பார்த்திருந்த
எனக்கு என் பிரச்சினையை உடனே நூல் பிடித்துவிட்ட
இந்த மருத்துவர் மேல் நம்பிக்கை மெல்ல வந்தது.

அவர் மேலும் சொன்னது இது," நான் U.Kவில்
P.M.Sற்கு என்று இருக்கும் ஷ்பெஷல் கீளினிக்கில்
பயிற்சி பெற்றிருக்கிறேன். பல பேஷண்டுகளைப்
பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் மனநிலை
பாதிக்கப்பட்டவர்கள் போல் கூட நடந்து கொள்பவர்கள்
இருக்கிறார்கள். நான் அதிகமாக கூறுவதாக நினைக்காமல்
இருந்தால் சொல்கிறேன். இந்த நேரத்தில் பல
பெண்கள் தான் அனாதை, தனக்கு யாருமே இல்லை
போன்ற எண்ணங்கள் தலை தூக்கும் என்று கூறினார்.

பக்கத்திலிருந்த அயித்தானும்," படும் அவஸ்தைகளை
காண முடியவில்லை" நடிக்கிறாள் என்று அந்த
டாக்டர் சொன்னார்" என்று சொல்ல

சிரித்துக்கொண்டே அவர்," அந்த சமயத்தில் தற்கொலைக்கு
கூட முயற்சிப்பார்கள்!!!" மேலை நாடுகளில் அதிகம்
காணப்படும் இந்த நிலை இன்று நம் நாட்டிலும்
வந்து விட்டது என்றார்.

கருப்பை சரியாக இருக்கிறதா என்று ஸ்கேன்
செய்து பார்த்தார். ஹார்மோன்கள் சரியாக
இருக்கிறதா என்று ரத்த பரிசோதனை செய்தார்.
எல்லாம் நார்மலாக இருந்தது.

நீ எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள்
விட்டமின் மாத்திரைகள் தான். அவற்றால்
பெரும் மாற்றம் ஏதும் வராது. இதற்கென
சில ட்ரீட்மெண்டுகள் இருக்கிறது.
(சில கேஸ்களில் மனதை அமைதிப்படுத்த
மனநோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மாத்திரை
தரும் அளவுக்கு இருக்குமாம். மனநோயாக
சிலர் நினைத்து அந்த மருந்து எடுத்துக்கொள்ள
மாட்டார்கள் என்று வருத்தப்பட்டார்.)

மாதவிடாயின் சுழற்சியை தற்காலிகமாக
நிறுத்தி(மாத்திரையின் உதவியால்)
செய்யக்கூடிய வகை மருத்துவத்தை
எனக்கு ஆரம்பிப்பதாகச் சொல்லி மருந்து
கொடுத்தார். 3 மாதங்கள் தொடர்ச்சியாக
அந்த மருந்து எடுத்துக்கொண்டு பிறகு
வந்து பார்க்குமாறு சொன்னார்.

நிறைந்த கண்களுடன் நன்றி கூறினேன்.
"நியூட்ரிஷியனை" சந்திப்பது மிக
அவசியம். இங்கேயே இருக்கிறார்.
அவரையும் பார்த்துவிட்டு செல்லுங்கள்"
என்றார்.

இதுக்கும் சாப்பாட்டிற்கு என்ன சம்பந்தம்?
வெறும் மருந்து மட்டும் போதாதாமா?
அடுத்த பதிவுல சொல்லட்டுமா????

:)))))))))))))))

Wednesday, January 07, 2009

மருத்துவர் பல விதம் ஒவ்வொருவரும் ஒரு விதம்.

முன்பு ஒரு கதை எழுதியிருந்தேன்.
ஞாபகப்படுத்திக்க பாகம்:1
பாகம்:2 .

அந்தக் கதையில் குறிப்பிட்டிருந்த P.M.Sஆல் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
பலரில் நானும் ஒருத்தி. டாக்டர் வந்தனா பன்சால் (அப்போலோ-கொழும்பு)
எனக்கு என்ன நேர்கின்றது என்பதை ஓரளவுக்கு புரியவைத்தார்.
அயித்தானிடமும் பேசியதால் அவருக்கும் என் நிலை
புரிந்து எனக்கு தேவையான உதவிகளைச் செய்தார்.

என் போறாத காலம் அந்த டாக்டர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
வேறு டாக்டரிடம் போக ஏனோ மனதில்லை!

அவர் கொடுத்திருந்த மல்டி விட்டமின்களை மட்டும்
சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

மாதாமாதம் நான் படும் அவஸ்தை சொல்லில்
அடங்காது!

15 நாள் சக்கரமாக சுழலும் நான் 10 நாள் படிப்படியாக
ஓய்ந்து விடுவேன். சில நாட்கள் பேசக்கூட முடியாமல்
லோ பீபீ ஆகி்விடும். (எஸ் எம் எஸ் அடித்துதான்
நான் சொல்ல நினைப்பதை சொல்ல முடியும்!)

ஆஷிஷை உண்டாகி இருந்த பொழுது எனக்கு
(ஹைதையில்) மருத்துவம் பார்த்த
கைனகாலஜீஸ்டை அணுகி
என் பழைய ரிப்போர்ட்களைக் காட்டி என்
நிலையைச் சொன்னேன். (அந்த நேரத்தில்
உபாதையுடன் தான் சென்றேன்!!)

ரிப்போர்டை எல்லாம் பார்த்துவிட்டு அவர்.
பயப்பட ஒன்றும் இல்லை. என்று
சொல்லிவிட்டு சொன்னது இதுதான்.
"உனக்கு ஒன்றும் இல்லை.உனக்கு
மனதில் ஏதோ வருத்தம் இருக்கிறது!
உன் கணவருடன் சண்டையா?
குடும்பத்தில் ப்ரச்சனையா? என
கேள்விக் கணையைத் தொடுத்தார்.

இல்லாத ஒன்றை இருப்பதாக எப்படிச்
சொல்ல முடியும்!

அப்படி ஏதும் இல்லை என்றால் நீ நடிக்கிறாய்!
U are acting to divert u r husband's mind!!
என்றார். அயித்தான் போகலாம் எழுந்துவா
என்று கூட்டி வந்துவிட்டார்.

2 மாதம் பழைய மருந்தையே எடுத்துக்கொண்டேன்.
அவதி தாளமுடியாமல் இன்னொரு மருத்துவரைப்
பார்த்தேன். அவர் ப்ளட் டெஸ்ட், தைராய்டு
டெஸ்ட் எல்லாம் செய்து பார்த்துவிட்டு
ப்ரச்சனை ஏதும் இல்லை. நாங்கள் இதை
P.M.S என்று சொல்வோம், என கூறி
சில விட்டமின் மாத்திரைகள், கால்சியம்
கொடுத்தார். அவைகளை எடுத்துக்கொண்டும்
எந்தப் பலனும் இல்லை.

பாடப்பாட ராகம், முனக முனக ரோகம்
என பாட்டி சொல்வார். எனக்கு இருப்பது
வியாதி அல்ல. அதைப் பற்றி நான் நினைக்கவே
கூடாது என முடிவு செய்து பிளாக்கில் எழுதுவது,
படிப்பது, யோகா, பாட்டு, என என்னை ரிலாக்ஸாக
வைத்துக்கொண்டாலும் அந்த 10 நாள் கொடுமை
அதிகமாகவே இருந்தது.

சமீபகாலமாக மாதவிடாய்க்கு முன்னர் படுத்த
படுக்கையாகி அவதி ஜாஸ்தி ஆகி விட்டது.
இருந்த இடத்தில் சாப்பாடு கொடுத்தால் தான்
உண்டு. எழும்பவே முடியாத நிலை!
பள்ளி செல்லும் பிள்ளைகள்! புது இடத்தில்
அலுவலகம் அமைத்துக்கொண்டிருக்கும் அயித்தானின்
வேலை இவைகளுக்கு என்னால் இப்படி இடைஞ்சல்
ஏற்படுகிறதே என்று மிக வருத்தமாக இருந்தது.

அந்தக் கதையில் கூறியிருந்த சிம்ப்டம்ஸ்
மிக அதிக அளவில் இருந்தது. 1 நாள் முழுதும்
சாப்பிடக்கூட முடியாது!

என்னை எப்படியும் ஒரு நல்ல டாக்டரிடம்
காட்ட வேண்டும் என அயித்தான் பலரிடம்
விசாரித்துக்கொண்டே இருந்தார். தெரிந்தவர்
ஒருவரின் மருமகள் இங்கே RAINBOW HOSPITALS
(CHILDREN'S HOSPITAL AND PERINATAL CENTRE)ல்
(மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவம்)
மகப்பேறு மருத்துவராக இருக்கிறார் என
அவரின் நம்பர் கொடுக்க அயித்தான்
அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி என்னை
அழைத்துச் சென்றார்.

பல மருத்துவரை சந்திப்பு என்னை
நம்பிக்கையற்றவளாக ஆக்கியிருந்தது.
நம்பிக்கையே இல்லாமல்
அவரை சந்தித்தேன். அவர் என்
ஃபைலை பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்.
அவர் பேசப் பேச எதற்கும் கண்ணீர்
விடாத என் கண்களிலிருந்து நீர்!!

என்ன பேசினார்?
அடுத்த பதிவில் அதுதான்.

(இந்தப் பதிவு ரொம்ப பெருசாயிடுச்சுன்னு
திட்டாதீங்க! என்னைப் போல பாதிக்கப்பட்ட
பலருக்கு இது உபயோகமா இருக்கும்னே
இவ்வளவு பெரிய புலம்பல்

மைசூர் பயணம்

முதலில் பார்த்தது பழ்ம்பெரும் வாய்ந்த
பிலோமினா சர்ச். பிள்ளைகள் மிகவும்
விரும்பினர்.



அதிலும் சுரங்கப்பாதை போன்ற
அமைப்பில் வெளியே வரும் பாதை இருவருக்கும்
மிகவும் பிடித்திருந்தது. தனியாக ஒருமுறை
அண்ணனும் தங்கையும் மட்டும் சென்று
ப்ரார்த்தித்துவிட்டு அந்தப் பாதை வழியாக
வெளியே வந்தனர்.

அதன்பிறகு அம்ருதாவின் பிறந்த நாள்
வரவிறுப்பதால் மைசூர் சில்க்கில்
பாவாடை வாங்கச் சொன்னார் அயித்தான்.
வெள்ளையில் மெரூன் பார்டர் போட்ட
பாவாடையை செல்க்ட் செய்து கொண்டாள்
அம்ருதா. அண்ணனுக்கு அங்கே ஏதும்
சரியாக அமையவில்லை. எனவே
தனக்கு பிறகு வாங்கித் தரும்படி சொல்லிவிட்டார்
ஆஷிஷ் அண்ணன்.

அதற்கடுத்து சாமுண்டிகோவில் சென்றோம்,
வரும் வழியில் நந்திதேவரைப் பார்த்துவிட்டு
லலிதமஹால் அரண்மணைக்கு சென்றோம்.

நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறது இந்த
அரண்மனை. (குரு சிஷ்யன், ஒரு ஊரில்
ஒரு ராஜகுமாரி... என் பெரிய லிஸ்ட் போடலாம்)

அங்கே புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
(அங்கே சாப்பிட்டால் நம் சொத்தை எழுதிக்க்
கொடுக்க நேரும் என்பதால்(!!) சாப்பிடவில்லை.)

மைசூர் அரண்மனைக்கு சென்று உள்ளே எல்லாம்
பார்த்துவிட்டு பாலமுரி நீர்வீழ்ச்சி பார்க்கச் சென்றோம்.



நீர்வீழ்ச்சி என்று சொன்னாலும் அந்த இடத்தில் நாம்
நிற்கலாம் என்பது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
மனதார காலார நடந்தோம். தண்ணீரில்
வேகம் அதிகம் இருந்ததால் கால்கள்
மிக சுத்தமானது. ஆஷிஷ்,"இதுதான் நேச்சுரல்
பெடிக்யூர்" என்று கமெண்ட் அடித்தான்.
அங்கிருந்து கிளம்ப பிள்ளைகளுக்கு
மனமே இல்லை.

இங்கேயே இருந்தால் எப்படி? இதற்கடுத்து
போகப்போர இடம் ஒரு அணைக்கட்டு.
அங்கேயும் ஃபொண்டைன்ஸ் இருக்கு"
என்றதும் தான் வந்தார்கள்.






கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கட்டிற்குச்
சென்றோம். பிருந்தாவன் கார்டன்ஸ்
அழகை பார்த்து வியந்தார்கள்.
ஃபொண்டைன்ஸ், பசுமை மிகு
தோட்டம் என அழகாக இருந்தது.


அணைக்கட்டில் அனுமதி மறுக்கப்பட்டது தெரியாமல்
அங்கே வரைச் சென்று மேலே ஏறி பார்க்கமுடியாமல்
திரும ம்யூசிகல் ஃபொண்டைன் ஷோ இருக்கும்
இடம் வரை நடந்தோம். "பெரிய வாக்கிங்
செஞ்சிருக்கோம்" என்றபடி பிள்ளைகள்
வந்தார்கள். அங்கே என்ன ஷோ என்பதைச்
பிள்ளைகளுக்குச் சொல்லவில்லை. :)

ஆரம்பித்ததும் "வாவ்!!" என இருவரும்
கத்திவிட்டார்கள். அதன்பிறகு மிக மிக
ரசித்தனர்.

"ரியலி சூப்பர் நாநா," என்று மகிழ்ந்தனர்.

6.30 ஷோ முடித்து நாங்கள் வெளியே
வந்துவிட்டோம். 7.25 ஷோக்கு போன
கூட்டத்தை பார்த்து,"நல்லவேளை!
தப்பித்தோம். இல்லாவிட்டால் நின்று
பார்க்கக்கூட இடம் இருந்திருக்காது என்று"
நினைத்துக்கொண்டோம்.

அங்கிருந்து பெங்களூ்ருக்கு பயணம்.
வழியில் எம்.டீ.ஆர் ரெஸ்டாரண்டில்
சாப்பிட்டோம். (அனில் கும்ப்ளே
இங்கே அடிக்கடி வருவார் என்று
டிரைவர் மேலதிக தகவல் தந்தார்).

பெங்களூரில் அயித்தானின் அண்ணன்
வீட்டிற்குச் சென்ற பொழுது இரவு மணி
11.

அடுத்தநாள் இரவு ட்ரையினில் திருச்சிக்கு
கிளம்பி, அங்கிருந்து புதுகைப் பயணம்.

புதுகை போகிறேன் என்றதும் ஆயில்யன்
சில இடங்களுக்குச் சென்று புகைப்படம்
போட வேண்டுமென்று அன்பு கட்டளை
இட்டு இருந்தார்.

"தம்பியண்ணன் + பாஸ்" கேட்டதற்கப்புறம்
இல்லையென்று சொல்ல முடியுமா?
அவர் கேட்ட இடம் + கேட்காத சில
இடங்களின் புகைப்படங்களுடன் அடுத்த
பதிவில் சந்திக்கிறேன்

Tuesday, January 06, 2009

உள்நாட்டில் ஒரு வெளிநாடு!!!!

"அடுத்து எங்கம்மா போகப்போறோம்" அப்படின்னு
ஆவலோட பசங்க கேட்டாங்க.

சஸ்பென்ஸுன்னு நான் சொல்லிக்கிட்டே
இருக்கும்போது அந்த இடம் வந்தது!!



"இது திபெத்தியன் கோவில் இருக்கற இடம்,
Zangdogpalri of Namdroling Monastery,", கோல்டன்
டெம்பிள்னு சொல்வாங்கன்னு" அயித்தான் சொல்ல
"இந்தக் கோவில்ல என்ன சாமி இருக்கும்னு?"
கேட்டான் ஆஷிஷ்.




"புத்தர்னு" சொன்னதற்குத்தான் இருவரும்
"அவரா! பாத்து ரொம்ப நாளாச்சே!" என்று துள்ளிக்
குதித்தனர். கொழும்புவில் இருந்த பொழுது
கங்கார்மய்யா கோவில் அடிக்கடி செல்வதுண்டு.




உள்ளே நுழைந்ததும் பிள்ளைகளுக்கு பயங்கர ஷாக்!!!
முகம் முழுவதும் மலர்ச்சியுடன் சிலைக்கு அருகே
போய் நின்று கொன்றனர்.

புத்த பிக்குகளுக்கு பயிற்சியும் கல்வியும் அங்கே
அளிக்கப்படுகிறது. அந்த இடமே ஒரு மினி திபெத்
போல இருந்தது. இந்தியாவில் இருக்கிறோம்
எனும் நினைப்பு அந்த ஏரியாவை விட்டு வெளியே
வந்த பிறகுதான் வந்தது.



பக்கத்திலேயே புத்த விஹார(சிலை/கோவில்) இருந்தது.
அங்கும் சென்றோம். மனதிற்கு மிக அமைதியாக இருந்தது.
இந்தக் கோவிலை தரிசிப்பதால் ஒருவரின் நம்பிக்கை
அதிகரித்து அன்பும், அனுசரிப்பும் ஏற்படுகிறது என
நம்பப்படுகிறது. நமது அறிவித்திறனும் அதிகமாவதாக
சொல்கிறார்கள். (அங்கே வைத்திருந்த அறிவிப்பு
பலகையில் படித்தேன்)


பிள்ளைகளுக்கும் படித்துச் சொன்னோம்.
அப்போது அம்ருதா அடித்த ஹலைட்டான
கமெண்ட் இது.( கிசுகிசுக்கும் குரலில் நடந்த
உரையாடல் இது)" கங்கார்மய்யா கோவிலில்
எவ்வளவு அமைதியாக இருக்கும். இந்தக்
கோவிலில் ஏன் அம்மா இவ்வளவு
சத்தம் போடுகிறார்கள்?
என்ன பதில் சொல்ல முடியும் நான்!!! :((

எந்த மதக்கோவிலாக இருந்தால் என்ன?
கோவிலுனுள் அமைதி காக்க வேண்டும்
எனும் சாதாரண அடிப்படை விஷயம் கூடத்
தெரியாமல் கோவிலைப் பார்க்க வந்தவர்கள்
அதை ஒரு பிக்னிக்ஸ்பாட் மாதிரி ஆக்கி
சல சலவென பேசிக்கொண்டிருந்தார்கள்.

"இவ்வளவு பெரிய ஹால் கொடுத்திருக்காங்கள்ல!
கல்யாண மண்டபம் மாதிரி ஹாயா உக்காந்து
பேசறாங்க!" என்று ஆஷிஷ் வருத்தப்பட்டான்.

கோவிலி அமர்ந்திருக்கோம் என்று கூட
இல்லாமல் கால் நீட்டி, முழங்கால் நீட்டி
என ரிலாக்ஸ்டாக அமர்ந்திருந்ததைப் பார்க்க
நிஜமாக கோபம் வந்தது.

"அவங்க பேசினா பேசட்டும்! நாம்
ப்ரார்த்தனை செய்வோம்" என்றான் மகன்.

"எப்படி செய்வது?" என்று மகள் கேட்க,
"கங்கார்மய்யாவில் மெடிடேஷன் செய்வோமே!
அதை இங்கே செய்யலாமா? என்றதும்
இருவரும் கீழே அமர்ந்தனர். நானும்
அயித்தானும் கூட அமர்ந்து கண்மூடி
தியானித்தோம்.

"உலகமெங்கும் அமைதியைத் தா" என்று ப்ரார்த்தித்தேன்.

அந்த 5 நிமிட தியானம் மனதை அமைதிப்படுத்தியது
தியானமு முடித்து கண் திறந்து பார்க்க எதிரில்
இருந்த புத்தர் சிலையின் முகத்தில் புன்னகை
அதிகமானது போல் ஒரு ஃபீலீங்க்.

இந்தக் கோவிலை தரிசித்ததன் பலன் எங்களுக்கு
முழுமையாக கிடைத்தது போலிருந்தது.

"மாங்ஸ் போட்டிருக்கற ட்ரெஸ் தான் வேறயா
இருக்கே தவிர ஃப்ளைட் பிடிக்காம ஸ்ரீலங்கா
போயிட்டு வந்தாமாதிரி இருக்கு" என்றார்கள்
பிள்ளைகள்.

அங்கிருந்து மைசூருக்கு புறப்பட்டோம்.


சனி,ஞாயிரு மட்டும் தான்க்கா இந்த
சான்ஸ் கிடைக்கும். மிஸ் செஞ்சிடாதீங்கன்னு!
ஜீவ்ஸ் படிச்சு படிச்சு சொல்லியிருந்தாரு.

அதனால வண்டியை நேரா விட்டது
மைசூர் பேலஸுக்கு!!

ஜொலிக்குதே! ஜொலி! ஜொலிக்குதேன்னு
அரண்மனை மொத்தமும் மின் விளக்குகளால்
அலங்கரிக்கப்பட்டு தக தகன்னு மின்னிக்கிட்டிருந்துச்சு.



பார்க்கிங் இல்லன்னு ஒரு போலீஸ்காரர் சொல்ல
கொஞ்சம் முன்னாடி போனா பார்க்கிங் இருந்துச்சு.
இறங்கி உள்ளே போய் லைட்டிங்ஸை மட்டும்
பாத்து, போட்டோ எடுத்தோம்.

அரண்மனை உள்ளே நாளைக்குப் போய்
பார்க்கலாம்னு அயித்தான் சொன்னாரு.
மத்தியானமே சாப்பிடவில்லை (ராப்டிங்
முடிச்சிடு வர்றதுக்குள்ள சாப்பாடு தீர்ந்து
போய் பேல் பூரி 2 ப்ளேட் தான் கிடைச்சது!)

பசி, பயணத்தால் களைப்பு இரண்டும் சேர
ஹோட்டலில் செக்கினாகி நல்லக் குளியல்
போட்டு பிசி பேளா பாத், பகளா பாத்
சாப்பிட்டு விட்டு தூங்கப்போனோம்.

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு
போனா அங்கே 4 கொடுமை ஜி்ங்கு ஜிங்குன்னு
ஆடிக்கிட்டு எதிர்ல வந்துச்சுன்னு சொல்வாங்க!
அது மாதிரி ஆகிப்போச்சு!

நாங்க இருந்தது முதல் தளம். இரண்டாவது
தளம் மொத்தமும் ஒரு பள்ளிக்காக புக்
செய்திருந்தாங்க. கரீக்டா எங்களுக்கு மேலே
இருந்த ரூம்ல டட் டப்னு சத்தம்.

போனைப்போட்டு ஹோட்டல் மேனேஜரைப்
பாக்கச்சொல்லியும் சத்தம் ஓயலை!
பசங்க தூங்கிட்டாங்க! அயித்தான் நேரே
போயி மேனேஜர் கிட்ட பேசி ரெண்டு பேரும்
போயி அந்த ரூம்ல பாத்தா ஆணும் பெண்ணுமா
25 பேரு சேர்ந்து அந்த ரூம்ல டான்ஸாம்!

அவங்க பிரின்ஸிபல், டீச்சர்ஸ் எல்லோரையும்
கூப்பிட்டு ஹோட்டல்காரங்க காட்டி
"வெளியே தள்ளிடுவோம்னு" மிரட்ட
மன்னிப்பு கேட்டுட்டு அவங்க அந்த பசங்களுக்கு
பரேட் நடத்தினாங்க!

அதுக்கப்புறம் தூங்கப்போனோம்.
அடுத்த நாள் மைசூர் ட்ரிப்.
அந்தப் பதிவு நாளைக்கு.....

குடகு மலைக்காற்றும்.. தென்றலும் - 2

மடிக்கேரியில் இருக்கும் ஓம்காரேஷ்வரர் கோவிலுக்குச் சென்றோம்.
அருமையான தரிசனம் முடித்துக்கொண்டு
தலைக்காவேரிக்கு பயணமானோம்.



பச்சை பசேலென்ற காபித்தோட்டங்களுக்கிடையேயான
பயணம் மிக அருமையாக இருந்தது.

அது வரை தேயிலை தோட்டங்களுக்கு இடையே
மட்டுமே பயணித்திருந்தோம். ஆஷிஷும் அம்ருதாவும்
இந்த மலைப்பகுதி எவ்வளவு உயரம்? இது நம்ம(!!??)
நுவரேலியா மாதிரியா இல்ல கண்டி மாதிரியா?
என்று கேட்டுக்கொண்டும் அதைப் பற்றி பேசிக்கொண்டும்
வந்தார்கள்.

"அழகாத்தான் இருக்கு. ஆனா அங்கே இன்னமும்
பசுமையா இருக்கும்ல அம்மா"? என்றான் ஆஷிஷ்.
ம்ம்ம். பெருமூச்சுவிட்டுக்கொண்டேன்.

பிள்ளைகள் முதலில் பார்த்த மலைப்பகுதி
இலங்கையின் நுவரேலியா மற்றும் கண்டிதான்.

தலைக்காவேரி இங்குதான் காவேரி ஆறு
உற்பத்தி ஆகிறது. மடிக்கேரியிலிருந்து
48 கி.மீ தொலைவில் இருக்கிறது.
இதுதான் காவேரி உற்பத்தி ஆகும் இடம்.
இங்கு அமர்ந்து காவேரித் தாய்க்கு பூஜை
செய்கிறார்கள்.

இங்கு இருக்கும் கோவில் அகஸ்திய முனிவருக்கானது.





அங்கிருந்து பாகமண்டலா சென்றோம்.
தலைக்காவேரியிலிருந்து 8 கிமீட்டர்
தொலைவில் இருக்கிறது.
பாகமண்டலா காவேரி, கன்னிகே,
மற்றும் ஒரு நதி் இவை மூன்றும் கலக்கும்
திரிவேணி சங்கம நதிக்கரையில் அமைந்திருக்கிறது.




இங்கே உறையும் இறைவன் பாகநந்தேஸ்வரர்.
நாங்கள் சென்ற பொழுது இறைவனுக்கு
தீபாரதனை நடந்துகொண்டிருந்தது.
கேரள் பாணியில் இருக்கும் கோவிலில்
கேரளத்து கொட்டுடன் தீபாராதனை
நடந்தது. அங்கிருந்து துபரே காட்டிற்குச்
சென்றோம்.



அருமையான இடம். பசுமையுடன் காவேரி நதிக்
கைகோர்த்து மிக ரம்மியமாக இருந்தது.
யானைகளின் பயிற்சி இடம் ஒன்று கரைக்கு அந்தப்
பக்கம் இருந்தது. யானைகள் அதிகம் பார்த்துவிட்டோம்,
ராஃப்டிங் போகலாம் என்று பிள்ளைகள் சொன்னார்கள்.



அம்ருதாவும் ஆமாம் போட்டது ஆச்சரியமாக இருந்தது!

ஹிக்கடுவவில் கோரல்ஸ் பார்க்கச் சென்றபொழுது
அம்ருதாவின் அழுகையால பாதியிலேயே வந்துவிட்டோம்.
அழுகாமல் பயணித்தது சிங்கப்பூர் நதியில் மட்டும்தான்.
கோதாவ்ரியில் பயணித்த பொழுதுகூட "போட் க்ளோஸ்டாதானே
இருக்கும்?" என்று ஆயிரம் முறை கேள்வி கேட்டாள்.

பயந்து கொண்டே டிக்கெட் வாங்கினோம். லைஃப்
ஜாக்கெட்டெல்லாம் போட்டு ரெடியானோம்.
நாங்கள் நால்வர் + பள்ளிச்சிறுமி இருவர்
எங்களுடன் பயணித்தனர். ஆளுக்கொரு
துடுப்புக் கொடுத்து அதை எப்படி உபயோகிப்பது
என கைடு சொல்லிக்கொடுத்தார்.
அம்ருதா சிறியவள் என்பதால் நடுவில்
உட்காரவைத்து நாங்கள் ஓரத்தில்
உட்கார்ந்தோம்.

ஆரம்பமானது பயணம்.




ஏலேலோ ஐலசா! என துடுப்பு போட்டுக்கொண்டே
போனோம். அந்த பள்ளி சிறுமிகள் இருவரும்
கன்னடத்தில் பேசிக்கொண்டே வந்தார்கள்.
ஒரு இடத்தில் தண்ணீரின் நடுவில் மரக்கிளை
வர அதை கொஞ்சம் பிடித்துக்கொள்ளுமாரு
அந்தப் பெண்களிடம் கைடு சொல்ல, அவர்களும்
பிடித்துக்கொண்டு தொங்கினார்கள். அவர்களை
அப்படியே விட்டுவிட்டு கொஞ்சம் தள்ளி வந்துவிட்டார்
கைடு!!

நாங்கள் டாடா காட்டினோம். வேகமாக துடுப்பு
போட்டு ஒரு ரவுண்ட் அடித்தார் பாருங்கள்.
திரும்பச் சென்று அந்தப் பிள்ளைகளையும்
ஏற்றிக்கொண்டு அவர்களுக்காக மீண்டும் 4
தடவை வட்டம் அடித்தார்.

கரைக்குத் திரும்ப துவங்கினோம். இந்த முறை
தானும் துடுப்பு போட விரும்புவதாகச் சொல்லி
அம்ருதா கேட்க, அவளை என் அருகில் இறுத்தி
என் துடுப்பை அவளிடம்
கொடுத்தேன். முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.

இந்தப் பயணம் மிகவும் பிடித்திருந்ததாக
பிள்ளைகள் சொன்னார்கள்.

அங்கிருந்து சென்றது ஒரு அருமையான
இடத்திற்கு. அங்கே இருக்கும் கடவுளின்
பெயர் சொன்னதில் பிள்ளைகள் "அவரா!
பாத்து ரொம்ப நாளாச்சே!" என்று துள்ளிக்
குதித்தனர்.

போன பிறகு அம்ருதா அடித்த கமெண்தான்
ஹைலைட்டே!

எந்த இடம்?
அடுத்த பதிவுல தெரிஞ்சுக்கலாம்.

**********************************

நாங்கள் எடுத்த படங்களை ப்ளாக்கர் ஏனோ
ஏற்றுக்கொள்ளவில்லை! :(

இங்கே இருக்கும் படங்கள் நெட்டில் சுட்டாது.

Monday, January 05, 2009

குடகு மலைகாற்றும்.. தென்றலும்

எல்லோரும் நலமா? புத்தாண்டு கொண்டாட்டமெல்லாம் முடிஞ்சிருச்சா?
குடகுமலைக்கு ஒரு விசிட் அடிச்சேன்.
அந்த அனுபவங்கள்தான் இந்தப் பதிவு.

பெங்களூருக்கு போய் சேர்ந்த பொழுது காலை 10.30.
அங்கிருந்து அயித்தானின் நண்பர் வீட்டிற்குச் சென்று
ஃப்ரெஷ்ஷாகி, சாப்பிட்டுவிட்டு தம்பி ஜீவ்ஸ்
வீட்டிற்கு சென்றோம். சாப்பாட்டிற்கு வரவேண்டுமென்று
ஜீவ்ஸ் தம்பி சொல்லிகீட்டு இருந்தாக. ஆனா
அயித்தான் அவங்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு வர்றதா
சொல்லிட்டாங்க அதனால ஃப்ளையிங் விசிட் மாதிரி
தான் இந்தப் பதிவர் சந்திப்பு நடந்துச்சு.

ஜீவ்ஸின் மனைவியோடு பேசினேன்.
மிக அன்போடு உபசரித்தார்கள்.
பிள்ளைகள் ஜீவ்ஸின் மகளோடு விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
தம்பி ஜீவ்ஸ் கேமிராக் கலைஞர் ஆச்சே!!

புகைப்படங்களாக எடுத்து தள்ளிவிட்டார்.
பரஸ்பரம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
குடகு மலைக்கு(அதாங்க கூர்க்) செல்ல
பெங்களூரிலிருந்து பயண நேரம் அதிகம்
என்பதால் 30 நிமிடத்தில் அங்கிருந்து புறப்பட்டு
விட்டோம். ஜீவ்ஸ் தம்பியின் உதவிகளுக்கு
மனமார்ந்த நன்றிகள்.(ஜீவ்ஸ் இதற்காக என்னை
போன் போட்டு திட்டுவார் :) )

குடகுமலையில் என்னென்ன பார்க்கவேண்டும்
என்ற விவரங்களை ஜீவ்ஸ் சொன்னார்.
சில புகைப்படங்களையும் காட்டினார்.
எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு
கிளம்பினேன்.

தோழி ராமலக்ஷ்மி ஊரில் இல்லாததால்
அவரை சந்திக்க இயலவில்லை. :(
போனில் பேசினேன். மிக நட்புடன்
பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டு மைசூரில்
இருக்கும் ஸ்ரீரங்கபட்டணா சென்றோம்.
நிமிஷாம்பா அம்மன் கோவிலுக்குச்
சென்றோம்.

அடுத்து ரங்கநாதர் சாமி கோவில்.
திப்பு சுல்தானின் கோட்டை இது.
("ஒருவன் ஒருவன் முதலாளி!!!"
அப்படின்னு முத்து படத்தில் ரஜினி
பாடிக்கிட்டு வருவாரே அது இங்கதான்)



அந்தக் கோட்டைக்குள் சென்றால் ரங்கநாதர் பள்ளிக்
கொண்டிருக்கும் கோவில். காவேரி நதிக்கரையில்
அமைந்திருக்கும் பஞ்சரங்க கோவில்களில் இதுவும்
ஒன்று. உள்ளே சென்று இறைவனை தரிசித்தோம்.
ஆதிசேஷன் மேல் பெருமாள் படுத்திருக்கும் கோலம்,
காலடியில் லக்ஷ்மி தேவி அமர்ந்திருக்கிறாள்.

.




அங்கிருந்து கூர்கிற்கு புறப்பட்டோம்.
சனிக்கிழமை, விடுமுறை காலம் ஆதலால் கிருஷ்ணராஜசாகர்
அணைக்கட்டைப்பார்க்க பெருமளவில்
மக்கள் கூடியிருந்ததால் சாலையில்
ட்ராபிக் ஜாம் ஆகிவிட்டிருந்தது.
(அன்று அங்கே 4000 கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக
மற்றொரு டிரைவர் சொன்னார்)
நாங்கள் மடிக்கேரி சென்றடைந்தபொழுது
இரவு 10மணி. குஷால் நகர் வரை
சாலை மிக அழகாக இருந்தது.

வெகு நாட்களுக்கு பிறகு (அதான்
இலங்கையை விட்டு வந்தாச்சே :( )
கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமை
இடங்களுக்கு நடுவில் பயணித்தது
பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது


ஜீவ்ஸ் பலமுறை என்னிடம் கூறியது இதுதான்.
"எதைப்பார்க்க மறந்தாலும் 5.45 மணியளவில்
ராஜாஸ்சீட் எனும் இடத்தைப் பார்க்க மறக்காதீர்கள்!
மேகம் அழகாக இருக்கும். பனியுடன் சேர்ந்து
திட்டு திட்டாக இருக்கும் என்றார்". அவர் காட்டியிருந்த
புகைபப்டத்தை பார்த்து ஆவலுடன் நானும் அடுத்த
நாள் அதிகாலைக்காக காத்திருந்தேன்.

சாப்பிட்டுவிட்டு படுக்க 11 மணி ஆகியிருந்தாலும்
அலாரம் வைத்து எழுந்திருந்து அந்தக் குளிரில்
பிள்ளைகளுடன் நானும் அயித்தானும்
ராஜாஸ்சீட் எனும் இடத்திற்கு சென்றோம்.

சில்.......லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது.
அந்த குளிரிலும் அந்த பூங்காவில் சிலர்
நடந்துக்கொண்டிருந்தனர். ஒரு முறை
வண்டியைவிட்டு இறங்கி குளிருக்கு
பயந்து திரும்ப வண்டிக்குள் போய் ஹீட்டர்
போட்டு அமர்ந்தோம்.
ஜீவ்ஸ் காட்டியிருந்த புகைப்படக்காட்சியை
தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்காக
நான் இறங்கி வாக்கிங் போகிறேன் என்று
நடந்து கொண்டிருந்தேன்.

அந்தக் காட்சி இப்பவருமா?!! எப்பவருமோ!!ன்னு
காத்துகிடக்க குட் மார்னிங் சொல்ல வந்தது
சூரியன் தான். :(





சூரியன் வர ஆரம்பிச்சிட்டா பனி எங்க? அந்த மேக
மூட்டம் எங்க வரப்போகுதுன்னு யோசனையோட
நடந்துக்கிட்டு இருந்தேன். பசங்களும், அயித்தானும்
குளிர் தாங்கலை வா போகலாம்னா மனசு கேக்கல!

6.30 மணி வரை பார்த்துட்டு கிளம்பிட்டோம்.
நேரேபோய் சூடா காபி குடிச்சிட்டு படுத்ததுதான்
தெரியும். கண்முழிச்சு பார்த்தா மணி 8.

அதற்கப்புரம் குளிச்சு ரெடியாகி, டிபன்
சாப்பிட்டு கிளம்பினோம்.
எங்க போனோம்?
அடுத்த பதிவுல சொல்றேன்.

*************************************

இது என்னுடைய 301ஆவது பதிவு.