Total Pageviews

Thursday, March 26, 2009

பழமொழிகள்..

அம்மா யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமென்றால்
எடுப்பது இண்டல்ண்ட் லெட்டர் அல்ல. பரிட்சைக்கு
எழுதுவோமே அது போல ஒரு பெரிய தாள்.
சில சமயம் 4 பக்கம் கூட வரும். :))
”ரத்னாகிட்டேயிருந்து ராமாயணம் வந்திருச்சுன்னு”
சொல்லிகிட்டேதான் எல்லோரும் லெட்டர் படிப்பாங்க.
அம்மாவோட இந்தப் பழக்கம் தான் என்னிய பதிவெழுத
வெச்சிருக்குன்னுநினைக்கிறேன்.
அப்பாவுக்கு ரதன்ச்சுருக்கமா லெட்டர் எழுதினாத்தான்
பிடிக்கும்.

வீட்டில் பழமொழிகள் சர்வசாதரணமாக உபயோகிப்பாங்க.

அதைக் கேட்டு கேட்டு நானும் இப்போ சொல்ல
ஆரம்பிச்சிட்டேன்.

எனக்குத் தெரிந்த பழமொழிகளை இங்கே கொடுக்கிறேன்.

மாட்டிவிட்ட தூயாவுக்காக இதோ பதிவு.(தெலுங்கு
ஹீரோயின்ல கொஞ்சம் ஓவரு!!!)


டெஸ்டுக்கு படிச்சுகிட்டிருந்த தம்பியை அவனது
ஃப்ரெண்டு வந்து கூப்பிட ரெண்டு பேரும் சேர்ந்து
வெளியில போனாங்க. போனவுங்க ஆளையே காணோம்!!
2 மணி நேரம் கழிச்சு திரும்ப வந்தாங்க.
அம்மா செமையா திட்டினாங்க. ”இல்லம்மா! டீ.எல்.ஸி
ஸ்கூல் க்ரவுண்ட்ல சினிமா ஷூட்டிங் நடக்குதுன்னு
சொன்னாங்க பாக்கப்போனோம். ஒருத்தரையும் காணோம்!”
அப்படின்னு சொல்ல அம்மா சொன்னது
“கேப்பையில நெய் ஒழுகுதுன்னா கேப்பாருக்கு
மதி எங்க போச்சு!!”


(நந்தா படத்துல வரும் பல காட்சிகள் எங்க ஊருதான்.
காலேஜ், புதுகை அரண்மனை(இப்ப கலெக்டரேட்டு),
லொடுக்கு பாண்டி திருடுவது ராஜகோபாலபுரம் ஹவுசிங்
போர்டு. நிறைய்ய படங்களில் எங்க ஊரு வரும்.
இப்போ லேட்டஸ்டா சுசிகுமாரோட ஒரு படத்துல
எங்க ஊரு வாண்டுகள் நடிக்கறாங்களாம்.)

**********************************************

அதிகமாக பிடிவாதம் பிடிப்பவர்களை பாத்து
சொல்லப்படும் பழமொழி “மனுஷன் பிடிச்ச முயலுக்கு
மூணேகால்னு சொல்றவராச்சே
”.

***************************************

முனுக்கென்றால் அழுபவர்களைப் பாத்து
சொல்வது “நீலிக்கு கண் நெத்தியிலே!”

****************************************
எங்க பாட்டி சரியான கறார் பேர்வழி.
வீட்டுல வேலை செய்யற மாரி எப்பவும்
ஒரு பித்தளை தூக்குச்சட்டியை தூக்கிகிட்டு
வந்துபாட்டிகிட்ட அடகு வைப்பாங்க. 50 ரூபாய்தான்.
அதுக்கு வட்டி எல்லாம் கணக்கு சரியா வெச்சிருப்பாங்க.
அவங்க சம்பள கணக்குத் தனி இது தனின்னு சொன்னாலும்
அடிச்சு பேசி மாசாமாசம் கரெக்டா வட்டி(2 ரூபாய்தான்)
வாங்கிகிட்டு சீக்கிரமே தூக்குச் சட்டியை மூட்டுக்கச்
சொல்வாங்க. என்ன பாட்டி இவ்வளவு கறாரா
இருக்க?ன்னு கேட்டா பாட்டி சொல்வது
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா
இருக்கணும்
” ம்ம்ம் இதெல்லாம் நமக்கெங்க தெரியப்போகுது!!

**************************************************

அம்மா கூட பிறந்தவங்க 2 பேர் ஒரு சித்தி, ஒரு மாமா
(சின்ன மாமா ரொம்ப வருஷம் கழிச்சு பொறந்தாங்க)
அம்மம்மா எந்தப் பலகாரம் செஞ்சாலும் அதை 3 பேருக்கும்
சமமா கொடுப்பாங்களாம். எங்கம்மாவுக்கு அம்புட்டா
வெவரம் பத்தாது. தன் பங்கை பத்திரமா டப்பாவுல
போட்டு வெச்சிருவாங்களாம். சித்தியும் மாமாவும்
சேர்ந்து அம்மாவோட பங்கை சுட்டுடுவாங்களாம்.
இது எப்பவும் வாடிக்கை. அம்மம்மா சொல்வாங்களாம்.
“கொடுத்தப்பையே சாப்பிட்டிருக்க வேண்டியதுதானே!
இப்ப உள்ளதும் போச்சுடா லொள்ளக் கண்ணா”ன்னு
உக்காந்திரு
! :)

*****************************************
தம்பிகிட்ட ஒரு வேலை செய்யச் சொன்னா போதும்
அந்த வேலை கண்டிப்பா நடக்காது.
இதோ செய்யுறேன், அதோ செய்யறேன்னு
போட்டு வெச்சிட்டு ஐயா மேட்ச் பாப்பாரு.
அம்மா அடிக்கடி சொல்லும் பழமொழி.
உதடு தேயுறதற்கு உள்ளங்கால் தேயலாம்”
இவன் கிட்ட சொல்லுவதற்கு பதில்
நானே போய் செஞ்சிடலாம். :))
சூதனமான புள்ள.

தெரிஞ்சதை எழுதிட்டேன் தூய்ஸ்

பழமொழிகளை மறக்காமல் பதிவாக்க விரும்புறவங்க
யார் வேணாம் பதிவு போடுங்கப்பா. எனக்கு
ஒரு லிங்க் மட்டும் கொடு்ங்க.
(யாரையும் மாட்டிவிட்டு திட்டு வாங்க
நான் ரெடியில்லை. :))))))

பட்டென்று போன பட்டு...

+2 பரிட்சைக்கு 2 மாதம் இருக்கையிலேயே என் வகுப்புத் தோழி
நிர்மலாவுக்கு திருமணமாகிவிட்டது. நான், நிர்மலா, மங்கை
மூவரும் நெருங்கிய தோழிகள். நிர்மலாவின் திருமணத்திற்கு
போகமுடியாவிட்டாலும் அவளை வீட்டில் சென்று பார்த்தோம்.


ஹாலில் அவளது கணவருடன்சேர்ந்து எடுத்துக்கொண்ட
போட்டோ இருந்தது. மிளகாய்ச் சிவப்பு கலர் பட்டுப்புடவையில்
டார்க் நீல பார்டர் போட்ட புடவை கட்டியிருந்தாள். அவரது
கணவர் நீல நிற கோட் அணிந்திருந்தார். நாங்கள் மூவரும்
நிக் நேம் S ல் ஆரம்பித்தது போல் வைத்தல் என பல விடயங்கள்
ஒரு சேர இருக்கும். பிற்காலத்தில் நிம்மியின் போட்டோ போல்
எங்கள் திருமணத்திற்கு பிறகும் சேம் கலர் புடவையுடன் போட்டோ
எடுத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம்.

வெந்தயக் கலரில் அரக்கு கலர் பார்டர் காம்பினேஷனும்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

சத்யாமாமா ஒரு முறை புதுகை வந்த போது
அம்மமாவுடன் நான் இந்தக் காம்பினேஷன் குறித்து
பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டார்.

”இந்தப் பட்டுப்புடவைகளை எப்படித் தயாரிக்கிறார்கள்
தெரியுமா? அதைத் தெரிந்து கொண்டதனால்தான்
என் திருமணத்தில் உன் வருங்கால அத்தை பட்டு
கட்டக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறேன்!!”
என்றார் மாமா.

“உங்களுக்கு பிடிக்கவில்லை! ஆனால் எனக்கு
பிடித்திருக்கிறது” என்றேன்.

மாமா சிரித்துக்கொண்டே போய்விட்டார். நானும்
அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.






ஒரு நாள் டீவியில் பட்டுப்பூச்சி வளர்ப்பு, அதிலிருந்து
பட்டுநூல் எப்படி தயாரிப்பது? எல்லாம் காட்டினார்கள்.
கொதிக்கும் வெந்நீரில் புழுக்களை போட்டு....
நூல் தயாரிப்பதை பார்த்த நொடியில் மாமா சொன்னது
ஞாபகம் வந்தது. பார்க்கவே முடியவில்லை.


மாமாவுக்கு நான் கண்ட நிகழ்ச்சியைப் பற்றி
கடிதம் எழுதினேன்.

“இப்படி நெய்யப்படும் புடவையை அணிவது நல்லதா”?
என யோசி!!” என்று மாமா பதில் எழுதியிருந்தார்.


அதன் பிறகு நிறைய யோசித்தேன்.

இப்படி உயிரைக் கொன்று உருவாக்கப்படும்
பட்டுபுடவையை உடுத்தி மங்களமான திருமணமா?

கோவிலுக்கு உயிர்வதை செய்யப்பட்ட புடவையா?

எங்கள் தெலுங்கு சம்பிரதாயத்தில் ஒரு பழக்கம்.
மணப்பெண்ணிற்கு தாலிகட்டும் நேரத்தில் அணியும்
புடவையை “வெல்லம்ப்பூ சீர” என்போம்.

அது வெள்ளை பருத்தித் துணியால் ஆன புடவை.
அதை மஞ்சளில் முக்கி(கிருமி நாசினி) காயவைத்து
அதைத்தான் உடுத்த வேண்டும்.

இப்போது அப்படியாரும் செய்யவில்லை என்றாலும்,
மஞ்சள் கலர் காட்டன் புடவை அல்லது
கேரளா காட்டன் புடவைதான் அணிவது வழக்கமாக
இருக்கிறது.

வாழ்வில் மிக முக்கியமாண தருணமாகிய
திருமணத்தின் தாலிமுடியும் நேரத்தில் கூட
மதிக்கப்படாத அந்த பட்டுப்புடவையை நான்
கட்டித்தான் ஆக வேண்டுமா என யோசித்தேன்.

மாமாவுக்கு என் எண்ணங்களை கடிதமாக எழுதி
நானும் மாமாவின் வழியில் ”பட்டுப்புடவைக்கு
நோ” சொல்ல விரும்புவதாக சொன்னேன்.

மாமா சந்தோஷம் என்று பதில் அனுப்பினார்.
ஆனால் வீட்டில் பயங்கர எதிர்ப்பு.
“உன் மாமா ஆண்பிள்ளை. அவர் கண்டீஷன்
போடலாம். நீ கண்டீஷன் போட்டால் உன்னை
யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள்”
அப்படி, இப்படி என்று அப்பா, அம்மா
என அனைவரும் எதிர்ப்பு.

எந்த சூழ்நிலையிலும் என் கொள்கையை விட்டுக்
கொடுக்க நான் தயாராக இல்லை. அப்பா காட்டிய
எதிர்ப்பு மேலும் என்னுள் தாகக்த்தை ஏற்படுத்தி
மாமா சொல்லியிருப்பது போல்,” என் திருமணத்தில்
நோ பட்டுப்புடவை. அதற்கு பிறகும் வாழ்நாளில்
பட்டு கட்ட வற்புறுத்துக்கூடாது. வரதட்சணை
கேட்க கூடாது” இவைகளை யார் ஏற்கிறாராரோ
அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று
சொன்னதும் அப்பா உனக்கு திருமணமே ஆகாமல்
போய்விடப்போகிறது என பயந்தார்.


ஆனால் சத்யாமாமா பயங்கர சப்போர்ட். என்னை
மட்டுமே விரும்பும் ஒருவர் கண்டிப்பாய் வருவார்
என அப்பாவுக்கு தைரியம் சொன்னேன். :))

நம் நல்ல எண்ணங்களுக்கு ஆண்டவன் எப்போதும்
துணையிருப்பான். அப்பாவுக்கு அதிகம் டென்ஷன்
கொடுக்காமல் ஸ்ரீராம் வந்தார். எனது கொள்கையைப்
போலவே அவருக்கும் வரதட்சணை வாங்கக் கூடாது
என்ற கொள்கை(இன்றுவரை அதுவேண்டும்,இது
வேண்டும் என கேட்டதுகிடையாது.)எனது கொள்கைகளுக்கு
ஒத்துக்கொண்டு எங்கள் திருமணம் இனிதாக
நடந்து இப்போதும் நான் பட்டு கட்டுவதில்லை.


எந்த திருமணம், நிகழ்வு எதற்கும் காட்டன்
புடவையில் தான் செல்வேன். பாலியஷ்டர்
சில்க் போன்றவை கட்டுவேன். பட்டுப்புடவை
கட்டினால்தான் என் ஸ்டேட்டஸ் தெரியும்,
எனக்கு மரியாதை கிடைக்கும் என்றால்
அப்படி ஒரு மரியாதை எனக்குத் தேவையே
இல்லை.

என் மகளுக்கு பட்டுப் பாவடை வாங்கித்
தருகிறேன். என் மாமா என்னை வற்புறுத்தவில்லை.
நானாகவேதான் பட்டு வேண்டாமென்று
சொன்னேன். அயித்தானும் என் உணர்ச்சிகளுக்கு
மதிப்பு கொடுத்திருக்கிறார். நாளை என் மகள்
வளர்ந்து தன் மனது போல் முடிவெடுக்கட்டும்.
”உனக்கு விருப்பமில்லை அம்மா! என் ஆசையை
ஏன் கெடுத்தான்/கெடுக்கிறாய்” என்று கேட்டு
விடக்கூடாது.


மனதைரியம் இருப்பவர்கள் மட்டும் இந்தப் பதிவை
படிக்கவும்-இது என் அன்பு வேண்டுகோள்.



ஹேண்ட்பேக் பற்றிய
இந்தப் பதிவை நேற்று தமிழ்மணத்தில் கண்டேன்.
பின்னூட்டம் கூட மனது வராமல் வந்துவிட்டேன்.


நல்லவேளை நான் தோல் கைப்பைக்களை உபயோகிப்பதில்லை.

Wednesday, March 25, 2009

நண்பர்களின் ஞாபகம்- நிறைவுப் பகுதி

முந்தைய பதிவிற்கு:

என்ன மெனுவா இருக்கும்னு மெர்சலாகிக் கிடந்த
என்னை என்னப்பன் கந்தப்பன் காப்பாத்திட்டான்.
எனக்கு அப்ப ரொம்ப நல்லா சமைக்கத்(அது மட்டும்தான்)
தெரிஞ்ச மெனு அது.

இந்த மெனுவை எனக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க
காரணம்,
1. அம்மா கை பக்குவமாக அனைவரும் நினைப்பது.
2. ஃப்ரைடு ரைஸ், பிரியாணி இதெல்லாம் ஹோட்டலில்
கிடைக்கும். இந்த மெனு வீட்டில் மட்டுமே கிடைக்கும்.
3. இதை சரியா செஞ்சிட்டா மத்த சமையலும்
நல்லா தெரியும்/தெரிஞ்சுக்கலாம் என்பது நண்பர்களின்
அபிப்ராயம்.

நீங்க திட்டறதுக்கு முன்னாடி மெனுவைச் சொல்லிடறேன்.

வெந்தயம்/வத்தல்குழம்பு, ஜீரகம் மிளகு ரசம், உருளைக்கறி/
கீரை மசியல். அப்பளம் பொறிச்சா கோச்சுக்கமாட்டோம்னு
சொல்லியிருந்தாங்க. :))

1 கிலோ உருளை வாங்கி வெங்காயக் காரக்கறி செய்தேன்.
எதுக்கும் இருக்கட்டுமென்று கீரை,பருப்பை தேங்காய் அரைத்து
மசியல், கம கமவென மணக்கும் ஜீரகமிளகு ரசம், தயிர்,
அப்பளத்துடன் சமையல் ரெடி. (ஸ்வீட் எதுவும் இந்த
காம்பினேஷன் சமையலில் செட்டாகாது என்பதால்
”பெருமனதுடன்” வேண்டாம் என்று சொல்லியிருந்தார்கள்)

சோறு வைப்பதில் தான் சிறு பிரச்சனை! என்னிடமிருந்ததோ
மிக மிகச் சின்ன சைஸ் குக்கர். 500கிராம் அரிசிதான்
சமைக்க முடியும்.



எதுக்கும் இருக்கட்டும் என்று 2 தடவை சோறு சமைத்து
வேறு பாத்திரத்தில் போட்டு வைத்தேன். ஆண்கள்
சாப்பிடும் அளவு கூட என்பதால் யோசனையுடனே
இன்னொரு குக்கர் சோறு ஏற்றி சமைத்து முடித்த
நேரம் வந்தார்கள் நண்பர்கள்.

”வேறு எதுவும் வேணாம். ஸ்ரைட்டா சாப்பாடுதான்!!”
என்றனர். “சரி! நீங்க உக்காருங்க, நான் பரிமாறுறேன்”
அப்படின்னு அயித்தான் சொல்ல எல்லோரும்
அமர்ந்தனர். நான் எடுத்துக்கொடுக்க அயித்தான்
பரிமாறினார்.

கொஞ்ச நேரத்தில் குழம்பு சட்டியை ஒருவர்
பக்கத்திலே எடுத்து வைத்துக்கொண்டு
மொத்தமும் தனக்குத்தான் என்று சொன்னார்.:))

சாப்பிடும் வேகத்தை பார்த்து எனக்கு கொஞ்சம்
டென்ஷனாகி இருந்தது. வேற ஒண்றும் இல்லை.
ரசம் கூட வரவில்லை அதற்குள் ஒரு குக்கர்
சோறுதான் இருந்தது!!! இன்னும் ரசம்
தயிர் இருக்கே என்று அவசர அவசரமாக
குக்கர் ஏற்றினேன். அதுவும் காலியாகி
அடுத்த குக்கர், அப்போது அனைவரும்
சாப்பிட்டு முடிக்க சந்தருக்கு மட்டும்
மோர் சோற்றுக்கு சோறில்லை.

அதற்குள் நான் குக்கர் ஏற்றிருந்தேன்.
குக்கர் விசில் வந்து, ஸ்டீம் போய்
சோறு ரெடியாகும் வரை பொறுமையாக
உட்கார்ந்திருந்தார் சந்தர். போதும்டா!
வா! என்ற நண்பர்களிடம் சந்தர்
“இருங்கடா, நீங்க நல்லா சாப்பிட்டாச்சு.
மோர் சோறோடு உருளைக் கறி
சாப்பிடாட்டி ராத்திரி தூக்கம் வராது”ன்னு
சொல்லி பேசிச் சிரிச்சுகிட்டிருந்தாங்க.


அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள்.
நானும் அயித்தானும் பாக்கி. அப்போதுதான்
சட்டியை பார்த்தேன். குழம்பு, ரசம் ஏதும்
மிச்சமில்லை!! கறி மட்டும் கொஞ்சமாக இருந்தது.
தயிர் 2 கரண்டிதான் மிச்சம். ஆனால்
மனது நிறைவாக இருந்தது.

பல ஆண்கள் உணவின் ருசியை பாராட்ட மாட்டார்கள்.
அவர்கள் அதிகமாக உண்ணும்பொழுது ருசிப்பதை
கண்டுபிடிக்கலாம் என அம்மம்மா சொல்வார்.
ஆனால் அன்று அத்தனை நண்பர்களும்
“சாப்பாடு நல்லா இருந்துச்சுன்னு நாங்க
சொல்ல வேணாம். சாப்பிட்ட மாதிரியை
பாத்தே தெரிஞ்சிருப்பீங்க. ஆனாலும்
மனமாரச் சொல்றோம் இந்த டெஸ்டிலும்
நீங்க பாஸ்!! வயிறு ஃபுல்லுங்க” என்று
சொல்லி பைக் ஓட்ட முடியாமல் ஒட்டப்போவதுயாருன்னு!
சண்டை போட்டுகிட்டு கிளம்பிப்போனார்கள்.

வெறும் தயிர் சோறோடு எங்கள் இரவுச்
சாப்பாடு நடந்தது.

இன்றும் பல நண்பர்கள் உணவருந்த வருகிறார்கள்.
சமைக்க பெரிய குக்கர், ரைஸ் குக்கர்,
ஒவன், போட்டு வைக்க பெரிய பெரிய பாத்திரங்கள்
எல்லாம் இருந்தும் கொஞ்சமே கொஞ்சம் பாத்திரத்துடன்
நடந்த அந்த விருந்து என்றும் நினைவில் நிற்கிறது.


30 நிமிஷத்தில் கிளம்பிவாங்க! என்று சொல்லி
நாங்கள் சென்றபோது சினிமா டிக்கட் ரிசர்வ்
செஞ்சு வெச்சு எல்லோரும் சினிமா பாத்தது.
(முத்து தெலுங்கு டப்பிங் :)) )

எங்க ஏரியாவில் கரண்ட் இல்ல.
மேட்ச் பாக்க வந்தா கோச்சுக்க மாட்டிங்கன்னு
தெரியும்!!:)) என்று சொல்லி வருவது.

நாங்கள் அங்கே செல்லும்பொழுது
அருமையாக கவனித்தது என பல நினைவுகள்.

அயித்தான் ஊரில் இல்லாத ஒரு சமயம்
கேஸ் தீர்ந்து போய்விட்டது. புக் செய்தாலும்
வர 1 வாரம் ஆகும். யோசனையுடன்
அமர்ந்திருந்த பொழுது அந்தப் பக்கமாக
வந்த நண்பர் ஒருவர் இவர் ஊரில் இல்லாத
காரணத்தால் உதவி ஏதும் தேவையோ என
பார்க்க வந்து விடயம் அறிந்து உடன்
தங்கள் அறையின் சிலிண்டரை கொண்டுவந்து
வைத்துவிட்டார்.” நாங்க ஹோட்டலில்
சாப்பிட்டுக்குவோம்” என்ற அன்பு.



வெவ்வேறு ஊர்களில் இருந்தாலும்
இன்றும் தொடர்கிறது இவர்களின் நட்பு.

நாங்கள் குடியிருந்த அந்த கார் ஷெட்டின்
மேல் வீட்டை பிள்ளைகளை அழைத்துச்
சென்று காட்டினோம். எப்படி இங்கே இருந்தீர்கள்??
என ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்கள்.

சின்ன இடமாக இருந்தால் என்ன?
அந்த வீட்டின் பல இனிமையான நினைவுகள்
என்றென்றும் இனிக்கின்றன.

ஆர்.டீ.சி கிராஸ் ரோட் பக்கம் போகும்போது
இங்கேதான் முத்து படம் பார்த்துவிட்டு
வந்து சாப்பிட்டோம் என பிள்ளைகளுக்கு
சொல்லிக்கொண்டே எங்களின் இனிமையான
நினைவுகளுக்குள் அடிக்கடி போய் வருவோம்.

நண்பர்களின் ஞாபகம்....

நட்பு என்பது உறவுக்கும் மேலானது. என் மாண்டிசோரி ஆசிரியை
சொன்னது போல் உறவு நாம் பிறக்கும்பொழுதிலிருந்தே நம்முடன்
இருப்பது. நட்பு என்பதுநாம் அறிந்து தெளிந்து உருவாக்கிக்கொள்வது.

“உடுக்கை இழந்தவன் கைபோல” வருவது நட்பு மட்டும்தான்.
இதனால் எனக்கு நட்பு எப்போதும் ஒரு படி மேலே தான்.

என்னைப்போலவே அயித்தானுக்கு நண்பர்கள் அதிகம்.

டிசம்பர் 16 1995 திருமணம் முடிந்து முதன் முதலாக
ஹைதையில் கால் வைத்த நாள். இவ்வளவு தெளிவாக
அந்த நாள் ஞாபகம் இருக்க காரணம் அயித்தானின் நண்பர்கள். :))


மாதத்தில் 20 நாள் டூர் போகும் வேலை இவருக்கு.
தனது சாமான்களை வைக்க மட்டும் இடம் போதும்
என்பதால் நல்லகுண்டா ஏரியாவில் ஒரு வீட்டின்
கார் ஷெட்டின் மேல் ஒரு ரூம் தான் இவரின் வீடு.
அந்த சின்ன ரூமில் போர்டபிள் டீவி, வாஷிங் மெஷின்,
டேப்ரிக்கார்டர், காபி போட கேஸ் அடுப்பு இவைகள் இருக்கும்.

இவர் சில நாள் நண்பர்களுடன் போய் தங்குவார்.
அவர்கள் சில நாள் இவருடன் வந்து தங்குவார்கள்.
கரண்கட் சமயங்களில் ஏரியா மாற்றி போய்
மிஸ்ஸாகமல் மேட்ச் பார்ப்பார்கள்.

சரி டிசம்பர்16 என்ன நடந்தது?

காலை 8மணிக்கு வந்திறங்கினோம்.
உள்ளே நுழைந்த என் பார்வையில் படவேண்டும்
என்பதற்காக மிகப் பெரிய சார்ட் பேப்பர் ஒன்று
காத்திருந்தது!!

அயித்தானின் நண்பர்கள் ஒவ்வொருவரும்
ஒரு டிப்பார்ட்மெண்டின்
(தம்மாலஜி, மிக்‌சிங்காலஜி, கட்டிங்....
என உலகத்தில் இருக்கும் அத்தனை கெட்ட
பழக்கங்களிலும்)ப்ரொபசர்களாகவும்,
அயித்தான் ஒவ்வொரு துறையிலும் முதல்
மாணவன் எனும் ரீதியில் பாராட்டு பத்திரம்
வைத்திருந்தார்கள்!!!!

சிரித்துக்கொண்டே அதை நான் படித்துக்கொண்டிருக்கும்
நேரத்தில் எதிர் வீட்டிலிருந்து போன் வந்திருக்கு
என அழைக்க அயித்தான் போனார்.

அவரது நண்பர்கள் தான்!! அந்த சார்ட்
பேப்பரை பார்த்து அயித்தானின் நிலை என்ன!!??
என்று தெரிந்து கொள்ள அழைத்திருந்தார்கள்.
:))))))

”அடி வாங்கி மயங்கி கிடப்பயோன்னு நினைச்சோம்!
ஒண்ணும் ஆகலைன்னு நினைக்கும்போது வருத்தமா
இருக்கு!! அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வர்றோம்.
சிஸடருக்கு நல்லா காபிப் போடத் தெரியுமான்னு
டெஸ்ட் வைப்போம்,” என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள்.

:(((

ஹைதைக்கு வந்திறங்கிய 2 மணி நேரத்திலேயே
டெஸ்டான்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்.
அயித்தான் கடைக்கு போய் தேவையான சாமான்களை
வாங்கி வந்தார். கன் போட்ட மாதிரி அரை மணி
நேரத்தில் அத்தனை பேரும் ஆஜர்.

பிரகாஷ், காங்கேயம் கார்த்தி, சந்தர், பாஷா,
ராஜூ, சத்தியம், ஸ்ரீகாந்த் என அவரின்
நண்பர்கள். இதில் இருவர் தவிர மற்றவர்கள்
நம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். 4 பேர்
இவருடன் ஹிந்துஸ்தான் லீவரில் வேறு
டிவிஷனில் வேலை. வார இறுதிகள் எப்போதும் இவர்களுடன்
தான்.

அறிமுகப் படலம் முடிந்ததும்,”அந்த சர்டிபிகேட்டை
பார்த்து நீங்க ஸ்ரீராமை கும்மிருப்பீங்கன்னுநினைச்சோம்,
சப்புன்னு ஆகிடுச்சு!!!” என்றனர்.
” சரி! சரி காபி கொண்டாங்க. போடத் தெரியுதான்னு
பாப்போம்!!!!!” என்றதும் காபி கொடுத்தேன்.

காபி குடித்து விட்டு,” காபி டெஸ்ட்ல பாஸ் செஞ்சிட்டீங்க!
மசாலா டீ நல்லா போடுவீங்கன்னு ஏற்கனவே மெசெஜ்
வந்திருச்சு!!!! சமையல் எப்படின்னு டெஸ்ட் வெச்சு
பாத்திருவோம், அதுக்கொரு நாளை ஃபிக்ஸ் செஞ்சிட்டு
ஸ்ரீராம் கிட்ட சொல்லி அனுப்பறோம்!!!!!” என்று
சொல்லிவிட்டு சென்றனர்.

இவர்கள் அனைவரும் திருமணமாகாதவர்கள்.
இவர்களின் குருப்பில் சில திருமணமாணவர்களும் உண்டு.
வார இறுதியில் திருமணமாணவர்களின் வீட்டுக்குச்
சென்று வேண்டியதைச் செய்யச் சொல்லி
சாப்பிடுவது வழக்கம் என்றார் அயித்தான்.(இவரும்
போனதுண்டு)

ஸ்ரீதர் என்றொரு நண்பர். அவரும் லீவரில்தான்
வேலை. திருமணமாகி ஒரு பெண் குழந்தை.
”நான் இந்த வாரம் ஊரில் இல்லை. டூர் போறேன்!”
என்று முன்னறிவிப்பு கொடுத்தாலும்,
“நீங்க இல்லாட்டி என்ன? அக்காதானே சமைக்க
போறாங்க!! நாங்க வீட்டுக்கு போயி வேணுங்கறதை
வாங்கிக் கொடுத்து பாத்துக்கறோம்!!!!” என்று
சொல்வார்களாம்.

இதையெல்லாம் கேள்வி பட்டதும் கதி கலங்கவில்லை.
அம்மம்மா வீட்டிலும் யார் வந்தாலும் மினிமம்
டிபன்/காபியாவது கொடுத்துத்தான் அனுப்புவது
பழக்கம். இவர்கள் என்ன மெனு கொடுக்கப்
போகிறார்கள் என்பது தான் குழப்பம்.


இவருக்கு மாற்றலாகக்கூடிய வாய்ப்புக்கள் இருந்ததால்
எந்த சாமானும் கொண்டு வரவில்லை. ஒரு சின்ன
குக்கர், 1 வாணலி, 4 தட்டு, 6 டம்ப்ளர், 2 பாத்திரம்
இவைகளுடன் என்ன விருந்து செய்ய முடியும்??

என்ன மெனு கொடுத்தார்கள்? விருந்து எப்படி
நடந்தது? டெஸ்டில் பாஸா? ஃபெயிலா?

எல்லாம் அடுத்த பதிவில். அதுவரை
ஆனந்தமாக இந்த பாட்டை ரசியுங்கள்.
அயித்தானின் ஆல் டைம் ஃபேவரைட். தனது
நண்பர்களுடனான நாட்களை நினைவு படுத்துவதாக
சொல்வார்.

Tuesday, March 24, 2009

கதைகேளு கதை கேளு....

ஒரு புத்தகத்தில் இந்தியாவுக்கு வாக்கபப்ட்டு வந்து
சந்தோஷமாக இருக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள்
பற்றிய ஒரு கட்டுரையில் இவரைப் பற்றி பார்த்தேன்.
அப்போது இவரைப்பற்றி வெகுவாக தெரியாது.

மார்ச் 27 தேதியிட்ட அவள்விகடனில்
இவரின் புகைப்படத்தைப் பார்த்து ஆச்சிரியப்பட்டு
கட்டுரையைப் படித்தேன். மிக மிக வியந்தேன்.

சென்னையில் இவர் உலககதை சொல்லும்
நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நம்மூர் ஆயாக்களை வெப்கேம் மூலம் கதை
சொல்ல வைத்து குழந்தைகளை மகிழ்விக்கிறார்.

கதை கேட்பது எல்லோருக்கும் பிடிக்கும்.
இதைப் பத்திய வெப்சைட் எங்கே? என்றுதேடுவோம்
என்று தேடினால் அவரின் வலைப்பூ கிடைத்தது.
அதன் லிங்க் இங்கே:

Professional Storyteller


World Storytelling Institute

தலைவலிக்கு மருந்து....

தலைவலிக்கு என் மாமா தரும் மருந்து
வித்தியாசமானது.:)))

மும்பையில் வேலை பார்த்த பொழுது கணிணியில்
அதிக நேரம் வேலை பார்த்தது, ஏற்கனவே இருக்கும்
கண்பார்வை குறைபாடு(ஒரே ஒரு கண்மட்டும்
-9 பவர் :))))))) ), என பல காரணங்களினால்
தலைவலி அதிகமாக வரும்.

தலைவலிக்கு மாத்திரை சாப்பிடாமல்
அம்மம்மா மிளகு பாலில் கொதிக்க வைத்து
நெற்றியில் பத்து போடுவார்கள்!! அந்த பத்து
யாருக்கு போடப்பட்டிருக்கோ அவர்களுக்கு
அன்று தலைவலின்னு வீட்டுல இருக்கற
குட்டி பாப்பாவுக்கும் தெரியும்!!!!

உடனே சத்யாமாமா கடைக்கு போய் ”அதை”
வாங்கிகிட்டு வந்து வெச்சிடுவார்.

அது சாப்பிட்ட உடன் நிம்மதியா தூக்கம்
வரும்!!!!

அதனால தலைவலி போயிடும். :))


பல நேரம் ”அதை” சாப்பிடணும்
என்பதற்காகவே தலைவலின்னு சொல்லிடுவோம்.

நல்லவர்காக பெய்யும் மழை அனைவருக்கும்
பயன்படுவது போல, யாரேனும் ஒருத்தருக்கு
தலைவலி என்றால் மத்தவர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

மாமா ஃபேமலி பேக்தான் வாங்குவார். :))))

மருந்து வாங்கிகிட்டு வந்துக் கொடுக்கற
மாமாவுக்கே தலைவலின்னா நான் போய்
வாங்கிகிட்டு வருவேன்!!!

இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி.

”இத சாப்பிட்டாத்தான் தலைவலி வரும்னு
சொல்வாங்க. உங்க வீட்டுல வித்தியாசமா
இருக்கேன்னு” அயித்தான் அடிக்கடி கிண்டல்
செஞ்சு அந்தப் பழக்கத்தையே விட்டுட்டேன்.

நேற்று பயங்கர தலைவலி..
பசங்களுக்கு ரொம்ப நாளாச்சேன்னு பிட்சா
ஆர்டர் செஞ்சாரு. அதோட ”அதையும்”
ஆர்டர் செஞ்சிட்டாரு. தலைவலி இருக்கறப்ப
”அதை” சாப்பிட்டு எத்தனை நாளாச்சுன்னு!!!
நினைச்சுகிட்டே சும்மா இருக்க முடியமா,
சத்யாமாமாவுக்கு ஒரு மெசெஜை தட்டினேன்.

“எனக்கு இப்போ தலைவலி. நீங்க எப்பவும்
கொடுக்கும் மருந்தை சாப்பிட்டேன். :) “

அம்புட்டுதான். அடுத்த செகண்ட் போன் வந்திருச்சு
மாமாகிட்டேயிருந்து. :)))

“அதை” சாப்பிட்டியா???

”சும்மா கிடந்த என்னையும் கிளப்பிவிட்டாச்சு!!
இப்ப வீட்டுக்கு போகும்போது நான் “அதை”
வாங்கிகிட்டுத்தான் போகணும். இப்ப திருப்தியா??!!!”
அப்படின்னு கேட்டாரு மாமா.

“ஏதோ நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”னு
நினைச்சேன்னு சொல்ல மாமா பல்லை
நற நறன்னு கடிக்கற சத்தம். :)))

என்ன அது அந்த “அதை”?

நீங்க ஏதும் கன்னாபின்னான்னு கற்பனை செஞ்சு,
“கழுவேறிக் குடும்பமா இருக்கும்போல”ன்னு
முடிவு செஞ்சிடாதீங்க. :)))))))))))

மாமா தலைவலிக்கு தரும் மருந்து
இதுதான்.!!!!




அதென்னவோ ஐஸ்கிரீம் சாப்பிட்டால்
தலைவலி” போயே போயிந்தே! இடஸ்கான்!”

மாமாவின் பர்சை கொஞ்சமாக இளைக்க
வைத்த சந்தோஷத்தில் :))))

Monday, March 23, 2009

கண்ணீர் துடைத்த கைகளுக்கு......

அழுவது எனக்கு பிடிக்கது. பெண்கள் அழுதே காரியத்தை
சாதித்துக்கொள்வார்கள் என்று எங்கே என்னையும்
அந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்வார்களோ என்று
அழமால் யோசித்து செயல்படுவேன்.

அழுகைக்கு பதில் கோபம் பல சமயங்களில்
வரும். ஆனால் என்னால் மிகவும் தாங்க முடியாத
தருணங்களில் மட்டுமே என் அழுகை.

மாமாவின் பிரிவு தந்த வலி, துயர் என்னை
மிக அழவைத்தது. ஷ்ரத்தாஞ்சலி என தலைப்பு
வைக்க நினைத்து மாமாவின் பதிவு
கண்ணீர் அஞ்சலி என தலைப்பாயிற்று.

எனக்கு யாருக்கும் நன்றி சொல்லித்தான் பழக்கம்.
நன்றி சொல்லாமல் இருக்கத் தெரியாது.
(இது என்னை அறிந்தவர்கள் மிக நன்றாக
அறிந்திருப்பர்)நன்றி சொல்வது நல்லது என்பது
என் அபிப்ராயம். சின்ன விஷ்யங்களுக்கு கூட
நன்றி சொல்வேன்.

என்னை பத்திரமாக வீடு சேர்த்த ஆட்டோ டிரைவர்,
என எல்லோருக்கும் சொல்வேன். நிறைய முறை
அயித்தானுக்கும் நன்றி சொல்லியிருக்கிறேன்.


சின்னச் சின்ன விஷய்ங்களுக்கே நன்றி
சொ்ல்பவள், பெரிய விடயங்களுக்கு
நன்றி சொல்லாவிட்டால் எப்படி???


பிரார்த்திக்க வேண்டுகிறேன் என பதிவிட்ட
நேரத்தில் அனைவரும் வந்து என்னுடன்
சேர்ந்து மாமாவுக்காக பிராத்தித்தனர்.

அப்துல்லா மறுபடியும் பதிவிட்ட நேரத்திலும்
பலர் வந்து பிரார்த்தனை செய்தனர்.

அடிக்கடி போன் செய்து நிலமை அறிந்து
கொண்ட அப்துல்லா, ஜமால்,நிஜமாநல்லவன்
ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.


ஆன்லைனில் பார்த்தபோது,”மாமா
எப்படி இருக்காங்க?” என்று கேட்ட
அன்பு நெஞ்சங்கள்...

எஸ்.எம்.எஸ்ஸில் எனக்குத் தைரியம்
சொன்ன அன்பு நெஞ்சங்கள்.

அனைவருக்கும் நன்றி

கண்ணீர் அஞ்சலி பதிவிட்ட 10 நிமிடத்தில்
அபி அப்பா போன் செய்தார்.
பேசி கொஞ்ச நேரத்தில் போன் செய்து
”பிள்ளைகளுக்கு முதலில் வயிற்றுக்குக்
கொடுங்கள்” என சொன்னார்.(அப்படியே
செய்தேன் அபி அப்பா).

ஜமால், ஜீவ்ஸ், நர்சிம், தாமிரா
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மாமாவுக்காக பிராத்தித்த, நான் துயரத்தில்
அழுத நேரத்தில் என் கண்ணீர்
துடைக்க நீண்ட கரங்களுக்கு என் மனமார்ந்த
நன்றிகள்.


Friday, March 20, 2009

கண்ணீர் அஞ்சலி

இந்தப் பதிவு எழுத நேரும் என்று சற்றுமுன் வரை நினைத்திருக்கவில்லை.
ஆனால்............



திரு.சுப்பிரமணியம்
தோற்றம் : 08.07.1942
மறைவு : 20.03.2009
உடல்நிலை சரியில்லாமல் இருந்த என் மாமா
இறைவனடி சேர்ந்தார்.

நம் பிரார்த்தனையின் பலனாக சற்று முன்னேற்றமாக
இருந்தது அவரது உடல்நிலை.

மாமாவைப்போன்ற நல்லவர் துணை தனக்கும்
தேவையெனும் நிலை இறைவனுக்கு ஏற்பட்டிருக்கும்
போல மாமாவை தன்னிடம் அழைத்துச் சென்றார்.

அந்த நல்ல மனிதரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

மாமா! என்றும் தங்களின் சொற்படியே நடப்பேன்.
என்றும் தெய்வமாக இருந்து எனக்கு
நல்வழி காட்டுங்கள்.

அழும் ஆஷிஷையும் அம்ருதாவையும் தான்
சமாதனம் செய்ய முடியவில்லை. என் விழிகளிலும்
நீர்!!!!!!!!

அன்னவரத்தில் நாங்கள்

வைசாக்கிலிருந்து வரும்பொழுது வலப்பக்கத்தில்
இரவில் மின்விளக்குகளுடன் கோவில் ஜொலிப்பது
தெரிந்தது.
அன்னவரத்தை அடைந்ததும் அங்கேயே ஒரு
அறைஎடுத்து தங்கினோம்.

அந்தேரிதாத்தாவிற்கு தெரிந்த பண்டிதர் அங்கே
இருந்ததால் தாத்தா அவர்களிடம் எங்களுக்குத் தேவையான
உதவிகள் செய்யச் சொல்லியிருந்தார்.

அடுத்த நாள் காலை 7.30மணிக்கு கோவிலுக்கு வந்துவிடும்படி
சொன்னார் அந்தப் பண்டிதர்.


கோவிலின் விசேடம் என்ன வென்று பார்த்துவிடலாம்.

இங்கே உறையும் இறைவன் ஸ்ரீ வீரவேங்கட சத்யநாராயண
சுவாமி. இது சிவகேசவ ஷேத்திரம்.(சிவனும், விஷ்ணுவும்
இணைந்து காட்சித்தரும் இடம்)



இரவில் மின்னும் பின்புறக் கோபுரம்



ஸ்தலபுராணம் என்ன எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

மலையின் மீதமர்ந்து மேனகை தவம் புரிந்து விஷ்ணுவி்டம் பெற்ற
வரத்தால் இரண்டு ஆண்மக்களை பெறுகிறாள்.
பத்ரா, ரத்னாகர் என்று பெயரிட்டு வளர்க்கிறாள்.
பத்ரா தவம் புரிந்து விஷ்ணுவின் வரம்பெற்று
பத்ராசல மலையாகிறான். அங்கே ராமர் கோவில் கொண்டுள்ளார்.

தனது உடன்பிறப்புடன் போட்டியிட்டு ரத்னாகர்
தானும் தவம் புரிந்து விஷ்ணுவை மகிழ்வித்து
வீரவேங்கட சத்யநாராயணனாக அமர்ந்து அருள்
பாலிக்க வேண்டுகிறார்ன். ரத்னாகர் ரத்னகிரி மலையாகிறான்.


அந்த ரத்னகிரி மலையில் மேல் அமர்ந்து
பக்தர்களுக்கு அனின வரம்( வேண்டிய வரம்)
கொடுத்து அருள் பாலிப்பதால் அந்த இடம்
அன்னவரம் ஆயிற்று. சத்ய்நாராயணர் மீசையுடன்
இருக்கிறார்.

இந்தக் கோவிலின் அமைப்பு ஒரு ரதத்தைப்போல இருக்கிறது.




இந்தக் கோவிலில் என்ன சிறப்பு??

அடுத்த பதிவில்........

Thursday, March 19, 2009

சர்ப்ரைஸாக ஒரு லன்ச்!!! :))

கைலாஷ்ஹில்ஸ், நீர்மூழ்கிக்கப்பல் பாத்து அடுத்தது
கடலில் போட்டிங். துறைமுகத்துக்குள் நுழைய பர்மிஷன்
வாங்கவேண்டும், தவிர சனி,ஞாயிறாக இருந்ததால்
கொஞ்சம் கஷ்டம். ஆனால் APSRTC வழங்கும் போட்டிங்
மீன்பிடித்துறையில் VUDA(VISHAKAPATNAM
URBAN DEVELEMPMENT ASSOCIATION)வழங்கும் சேவை
போர்ட் ட்ரெஸ்டில். அதற்குள் நுழைய வாய்ப்பை
விடலாமா என யோசித்து அங்கேயே சென்றோம்.
இவர்கள் ஆர்,கே பீச்சிலிருந்து பஸ்ஸில் போட்டிங்
ஏரியாவுக்கு அழைத்து வந்து, படகு பயணம் முடிந்ததும்
இலவசமாகவே திரும்ப ஆர்.கே பீச்சில் கொண்டுவந்து
விடுகிறார்கள்.(இதற்காக ஒரு பஸ் எப்போதும் அங்கே
இருக்கிறது)




கடலில் ஒரு 30 நிமிட பயணம்.. ஆஹா அருமை.
வெளிர் நீறக்கலரில் இருந்த கடல் சட்டென அடர்நீலத்திற்கு
மாறும் அழகே அழகு.(அடர்நீலம் கடலின் ஆழத்தை
குறிக்குமாம்) மாலத்தீவுகளில் தன் பயண அனுபவத்தை
பிள்ளைகளுக்கு சொல்லியபடியே வந்தார் ஸ்ரீராம்.

சட்டென் பார்த்தால் பிள்ளைகள் இருவரும் மாலுமிகளாக
படகை செலுத்திக்கொண்டிருந்தார்கள். படகுக்காரர்களுக்கு
ஃப்ரெண்டாகி அவர்கள் சொல்ல இவர்கள் செலுத்தினார்கள்.
முகமெல்லாம் சந்தோஷத்துடன் இருவரும் இருந்தனர்.

அருமையான பயணத்துக்கு பிறகு ஹோட்டலுக்கு சென்று
கொஞ்சம் ரெஃப்ரெஷ் செய்து கொண்டே பிள்ளைகள்
“லஞ்சுக்கு போகலாம்பா!!” என்றனர்.

நமட்டு சிரிப்புடன்,”எல்லாம் ரெடி. டேபிள் புக் செஞ்சிட்டேன்!
போகலாம்!!!”என்றதும், எங்கே? என்ற கேள்வி எல்லோர்
முகத்திலும். :))

எனக்கு மட்டும் உள்ளுக்குள் அந்த இடமாக இருக்குமோ!!’
என்று ஒரு எண்ணம். அடிக்கடி நாங்கள் இருவரும் ஒன்று
போல நினைப்போம். அன்றும் என் அனுமானம் சரியாக
இருந்தது.

11 வருடங்களுக்கு முன் ஆஷிஷ் குட்டியாக இருந்தபோது
நாங்கள் வைசாக் சென்றிருந்தோம். அப்போது அங்கேதான்
தங்கியது.

ஆஷிஷ் முதன் முதலில் பாத் டப்பில் ஆட்டம் போட்டது!
இண்டர்காமை எடுத்து ஏதோ டயல் செய்ய அது ஜீ.எம்
(ஸ்ரீராமின் ஃப்ரெண்டாக இருந்ததால் பரவாயில்லை)
ரூமுக்கு போனது.. என நிறைய ஞாபகங்கள் அந்த
இடத்திற்கு உண்டு.

எங்கப்பா போகப்போறோம்?” என்று பிள்ளைகள்
கேட்டுக்கொண்டே நடந்து வந்தார்கள்.

“நீ முதன் முதலில் தர்பூஸ் ஜூஸ் குடித்த
இடமாக இருக்கும்!!” என்றேன்.

“எப்படி சரியா சொன்ன?”என்று ஸ்ரீராம் முகத்தில்
சந்தோஷம். :))

அவர் அழைத்துச் சென்றது நாங்கள் முன்பு தங்கியிருந்த
டால்பின் ஹோட்டலுக்கு. ரூஃப் டாப்பில் இருக்கும்
ரெஸ்டாரண்டில் தான் ஆஷிஷ் முதன் முதல் ஸ்ட்ராபோட்டு
தானகவே குடித்தது.




ரொம்ப சந்தோஷமாக உள்ளே சென்றமர்ந்தனர் பிள்ளைகள்.

அன்று மகளிர் தினம் + சக்தி 2009 என் படைப்பு வந்தது
என்பதால் எனக்கு ட்ரீட்டாக அங்கே அழைத்துச் சென்றதாக
சொன்னார்.

புஃபே முறை சாப்பாடு. அருமையாக இருந்தது.

முன்பு ஆஷிஷ் அமர்ந்து ஜூஸ் குடித்த இடத்தைக் காட்டினேன்.

”எப்படி அம்மா இத்தனை வருடம் கழித்தும் ஞாபகம் இருக்கிறது!!”
என வியந்தான். பிள்ளையின் ஒவ்வொரு முதல் சாதனையும்
தாயின் நினைவேட்டில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்டிருக்குமே!!

அங்கே ஒருவர் அழகாக இன்ஸ்ட்ருமெண்ட் வாசித்துக்கொண்டிருந்தார்.

ஆஷிஷை அனுப்பி எனக்காக இந்தப் பாடலை வாசிக்குமாறு
கேட்டேன். அடுத்துவாசிப்பதாக சொன்னார்.

பீஜிங் ஸ்டார் செய்ததுமே அருமையாக இருந்தது.
பாடலை வாசிக்க ஆரம்பித்ததுமே மனிதர்
பாட்டுக்குள் போய்விட்டார்.

“என்னக்கா? உருகி உருகி வாசிக்கிறார்?” என்றாள்
தங்கை. ”பாட்டு அப்படிம்மா!!” என்றேன்.
வாசித்து முடித்ததும் அனைவரும் கைதட்டினர்.
பெருமையாக இருந்தது அவருக்கு்.






சாப்பிட்டு கிளம்பும்பொழுது பாடலுக்காக நன்றி
சொன்னேன். முகமுழுதும் புன்னகையுடன் அதை
ஏற்றார்.

திரும்ப ஹோட்டலுக்கு வந்து 1 மணிநேரம் ரெஸ்ட்
எடுத்து 5.15 கோதாவரியை பிடித்து அன்னவரம் சென்றோம்.

Wednesday, March 18, 2009

அம்பாசிடரும் ஆஷிஷும்

இந்தியா வரும்பொழுது அப்பா கார் எடுத்துக்கொண்டு
ஏர்போர்ட் வந்துவிடுவார். ஆஷிஷ் மட்டும்
டென்ஷனாகவே இருப்பான். தாத்தா என்ன
கார் கொண்டு வருவாரோ!!! என்பதுதான்
டென்ஷனுக்குகாரணம்.


அப்பா எப்போதும் அம்பாசிடர் கார்தான் கொண்டுவருவார்.
பலவிதத்தில் அது சொளகரியமான வண்டி.
ஆஷிஷுக்கு இந்தக் கார் சுத்தமாக பிடிக்காது.
இதையும் காண்டசாவையும் கார் வகையாகவே
சேர்க்கமாட்டான். :(( யானை மாதிர் இருக்குப்பா!
என்பான். அவனுக்கு பிடித்தது ஃபெராரி தான்.

ஒரு சுமோ கொண்டுவந்தால் என்ன தாத்தா?
என்று அப்பாவிடம் செல்ல சண்டை நடக்கும்.





அம்பாசிடரில் ஏறும்போதெல்லாம் முகத்தை சோகமாகவே
வைத்துக்கொண்டுதான் ஏறுவான்.

கொழும்புவில் சடனாக அம்பாசிடர் கார் பார்த்தபொழுது
ஆச்சரியாமாக இருந்தது. அங்கே ஒரு அமைச்சர்
அம்பாசிடரை மிக விரும்பி வாங்கி வைத்துக்கொண்டார்.
அதிவிரைவில் அம்பாசிடருக்கு ஒரு ஷோரும் வேறு
வந்துவிட்டது.

R.A.DEMEL MAVATHAI எனும் ரோட்டில்
H.S.B.Cக்கு எதிரில் அந்த ஷோரூம்.
அந்தப் பக்கம் போகும்போதெல்லாம்
கண்ணை மூடிக்கொண்டுவிடுவான். :))




1948ஆம் ஆண்டு துவங்கி ஓடிக்கொண்டிருக்கிறது
அம்பாசிடர். இதுதான் நம் இந்தியாவின் முதல்
கார் எனும் பெருமை இருக்கிறது.Amby என்று
முதலில் அழைக்கப்பட்டு அம்பாசிடர் என
பிறகு மாற்றப்பட்டது.

ower steering, multi point fuel injection, company fitted CNG, enough space for leg room, comfortable arrangement of seating, sturdy and tough structure, 5 speed gear box
, easy repair ability etc. என ப்ளஸ்கள்
அம்பாசிடருக்கு. இதெல்லாம் அயித்தான்
எடுத்துச் சொல்லி நம் இந்தியத் தயாரிப்பு
என பெருமை கொள்ளடா மகனேன்னு சொன்னதற்கப்புறம்

இப்போது முகத்தை மூடிக்கொள்வதில்லை.


ஆஷிஷின் முந்தைய கார் பதிவில்
அவனுக்கு ஹைபிரீட் கார் பற்றி எப்படித்
தெரியும்? என்று கேட்டு பதிவு போடச் சொல்லியிருந்த
பரிசலாருக்காக இதோ:

ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் கார் & பைக் ஷோ
பார்த்து தெரிந்து கொண்டானாம்.

இது என் 375ஆவது பதிவு

மறக்கமுடியாத அருங்காட்சியகம்.

Museum போனதுக்கா இம்புட்டு பில்டப்புன்னு கேக்கறீங்களா?
நான் போனது ஆசியா கண்டத்திலேயே முதலாவது!!
இந்த வகை அருங்காட்சியகம் உலகத்திலேயே 5 தான்
இருக்கு தெரியுமா!!!

விசாகப்பட்டிணத்தின் ஆர்.கே பீச்சில் ஓங்குதாங்காக
இருக்கும் குர்சரா எனும் நீர்மூழ்கிக்கப்பல்தான் நான்
சென்ற அருங்காட்சியகம்.






INS-KURUSURA - 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான்
யுத்தத்தில் முக்கியபங்கு வகித்திருக்கிறது.
1969ஆம் ஆண்டு ரஷ்யாவில் செய்யப்பட்ட இந்தக்கப்பல்
1971ஆம் ஆண்டு தனது கன்னிப்பயணத்தை துவங்கி
31 வருடங்கள் வெற்றி வாகை சூடி தற்போது
பீச்சில் அருங்காட்சியகமாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது.

நல்லிணக்க கொடியை பலநாடுகளுக்குத் தாங்கிச்
சென்றதில் இந்தநீர்மூழ்கிக்கப்பல் முதலிடம் வகிக்கிறது.

ஆயுதங்களை ஏந்திய கப்பல் எவ்வறெல்லாம்
கடலில் பயணிக்கிறது? அதனுள் வாழ்க்கை
எப்படி? எதிரிகள் தாக்கினால் எப்படி ஆக்சிஜன்
பெற மேலே வருகிறார்கள் என எல்லாம்
அருமையாக விளக்கிச் சொல்கிறார்கள்.
(தெலுகு பேச், ஹிந்தி பேச், ஆங்கில பேச்
என கேட்டு அந்தந்த மொழிகளில் தெளிவாக
விளக்கிக்கூறுகிறார்கள்)


இப்படி ஒரு அருங்காட்சியகம் அமைக்க நாட்டுக்கு
6 கோடி செலவாகி்ற்றாம்!!

கேப்டன்(கப்பலின் கேப்டனுங்கோ, விஜயகாந்த் இல்லை) அறை:


உணவருந்தும் அறை:




கப்பலின் கட்டுப்பாட்டறை. இங்கிருந்துதான்
செய்தி பரிமாற்றம் நடை பெறும்.


நீரில் குதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால்
அணிய வேண்டிய உடை:



சமையலறை(சுடச்சுட இட்லி ரெடி)



பதப்படுத்தப்பட்ட சாப்பாடுகள் கொண்டு செல்கிறார்கள்.
அதை உள்ளே சூடுபடுத்திக்கொள்வார்களாம்.


போர்க்காலத்தில் நீர்முழ்கிக் கப்பலின் பங்கு மிகப் பெரிதாம்.
அதை அவர்கள் விரிவாக சொல்லும்பொழுது ப்ரமிப்பாக
இருக்கிறது!!!!

நம்மிடம் 18 நீர்மூழ்கிக்கப்பல்கள் இருக்கின்றனவாம்.
ஒன்றே ஒன்று மட்டும் யுத்தத்தில் பாகிஸ்தானால்
நாசமாக்கப்பட்டதாம். அதுவும் இன்னமும் கடலில்
தான் இருப்பதாகச் சொன்னார்கள்.

விசாகப்பட்டிணம் சென்றால் இந்த அருங்காட்சியகத்தை
பார்க்கத் தவறாதீர்கள்.

இங்க சுத்தி பாத்ததே டயர்டாகிடுச்சு. மதிய உணவுக்கு
சஸ்பென்சா ஒரு இடத்துக்கு அயித்தான் கூட்டிகிட்டு
போனாரு! அது எங்கே அதுக்கு முன்னாடி போனது
எல்லாம் அடுத்த பதிவுல.

நீர்மூழ்கிக்கப்பலின்வீடியோ

INS-KURUSURA

கைலாஷ் ஹில்சில் கொண்டாட்டம்...

மி்தமான வெய்யிலுடன் கூடிய முன் காலைப்பொழுதில்
சென்றது கைலாஷ் ஹில்சிற்கு.
இங்கிருந்து ரிஷிகொண்டா மற்றும் ராமகிருஷ்ணா பீச்
(ஆர் கே) பார்ப்பது கொள்ளை அழகு.

மலை ஏறுவதற்கு ரோப்கார் வசதியும் இருக்கிறது.
நேரத்தை மிச்சம் பிடிக்க காரிலியே மலைக்குச் சென்றோம்.





போகும் வழியில் கைலாசநாதர் கோவில்.


கைலாஷகிரியில் இருக்கும் சிவபார்வதி சிலை.


மலையை சுற்றிவர அங்கே ரயில்சவாரி இருக்கிறது.



அழகான கடற்கரை.



கடலும் நகரத்தின் முகதுவாரமும் கைலாஷ் ஹில்சிலிருந்து
பார்க்க நன்றாக இருக்கும்.



அங்கேயிருந்து நகரத்தை தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம்.
2 நிமிடத்திற்கு 2 ரூபாய் என வாடகைக்கு கிடைக்கிறது.

“நீ சொன்னது நிஜம்தாம்மா. இந்த அழகை பகலில்தான்
ரசிக்க முடியும்” என்று பிள்ளைகள் சந்தோஷப்பட்டார்கள்.

அடுத்து சென்ற இடம் என் வாழ்நாளில் முதல்முறையாக
என்று சொல்லலாம்.(எல்லோருக்கும் தான்)

பார்த்து பார்த்து வியந்தோம். பல அறிய புகைப்படங்கள்
மற்றும் தகவல்களுடன் அடுத்த பதிவு வரும்.

ஆண்டவா அனைவரையும் காப்பாத்து!!!!

சித்தார்த் நடிச்ச படம் என்பதால் ஆஷிஷ் போக
ஆசைப்பட்டான்.” நான் வேண்டாம், எனக்குத் தெரிஞ்ச
வரைக்கும் கதை நார்மல் கதைதான்ன்னு” சொன்னேன்.
அயித்தான் ”,பிராகாஷ் ராஜ் இருக்காருப்பா போவோம்னு”
சொல்ல ”சரி, போய்தான் பாப்போம்னு” போனோம்

படத்தின் பெயர் கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்.
KONCHAM ISHTAM KONCHAM KASHTAM.

இரவு 9.30க்குத்தான் நைட்ஷோ. தியேட்டரில்
டிக்கெட் வாங்கும்பொழுது மணி 8.15. பக்கத்துல
தானே ஹோட்டல் போய் கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துட்டு வந்தோம்.



வழமையான காதல் கதை. சித்தார்த் தன் ஸ்டைலை
கொஞ்சம் மாத்திக்கணும்னு யாரோ சொல்லியிருக்காங்க
போல, அதனால் ஹேர் ஸ்டைல மட்டும் மாத்திகிட்டாரு.

கதையில் பெண்கள் பின்னாடி சுத்துவது, கொஞ்சம் பொறுப்பில்லாத
பையன் என அவரின் பழைய படங்களின் நெடி அதிகம்.

பிராகாஷ் ராஜும், சித்தார்த்தும்(தகப்பன்,மகன்)
வரும் காட்சிகள் ”பொம்மரில்லு”வை ஞாபகப்படுத்துகின்றன
என்றால் ரம்யா கிருஷ்ணனும்,சித்தார்தும் வரும்
காட்சிகள் எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமியை
ஞாபகப்படுத்த தவறவில்லை.



படத்தின் கதைக்கு இந்த விக்கிபீடியாவை பாருங்கள்.

பல இடங்களில் அலுப்புத் தட்ட ஆரம்பித்துவிடுகிறது.
இண்டர்வெல் வரைக்குமே தாங்கமுடியவில்லை.

தன் தந்தையையும் தாயையும் இணைக்க சித்தார்த்
எடுக்கப்போகும் நடவடிக்கைகளாவது நன்றாக இருக்கும்
என்று பார்த்தால் செம சொதப்பல். இன்னும் சிறப்பாக
காட்சிகள் கொடுத்திருந்தால் அவர்கள் சொல்ல வந்த
மெசெஜ் நன்றாக மனதில் பதிந்திருக்கும்.

படத்தில் பிரம்மானந்தம் வரும் காட்சிகள்
அப்ளாஸ் அள்ளிச் செல்கிறது.

GACHIBOWLI DIWAKARஆக கலக்குயிருக்கிறார்
பிரம்மானந்தம். அவருக்கு என் மனமார்ந்த
பாராட்டுக்கள்.


”பேசாம ஹோட்டலில் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்”,அப்படின்னு
அம்ருதா சொல்ல நாங்கள் ஆஷிஷை ஜாலியாக முறைத்தோம்.
என் தங்கையோ கிளைமாக்ஸ் என்ன வென்று்? என்னைக் கேட்க
”நீ படம் பாக்கலியா?” என்றதற்கு,” போரடிக்கவே தூங்கிட்டேன்க்கா!!!”
என்றாள். இதைக்கேட்டு சிரித்துக்கொண்டே வெளியே வந்தோம்.

டெக்கான் க்ரோனிகல் இதழ் இணையத்தில்
இந்தப் படத்தைப் பற்றி கொடுத்திருக்கும்
விமர்சனம் இது:
The story is just another predictable Tollywood saga where you inevitably know what the next scene will be. The father-son scenes between Sidharth and Prakash Raj reminds one of their previous film Bommarillu and lacks complete originality. Music by Shanker-Ehsaan-Loy is mediocre. Only Bramhanandam and Venu Madhav manage to tickle the funny bone of viewers.
The only thing impressive is the cinematography. It is a visual treat to watch the pretty song sequences. Overall, the movie is a blend of many stereotypical Tollywood love stories, making it a forgettable, light-hearted weekend watch.


சரி இதுக்கு ஆண்டவன் ஏன் எங்களை காப்பாத்தணும்னு?
கேக்கறீங்களா?? வர்றேன். அந்த மேட்டருக்கு வர்றேன்.

இப்ப நம்ம கோலிவுட்டில் தெலுங்குபடத்தை ரிமேக்குவதான்
ட்ரெண்ட். அந்த வரிசையில் இந்தப் படமும் தமிழில் வர
விருக்குதாம்!!!

தெலுங்கில் சூப்பர்ஹிட் படமான”சந்தமாமா”
தமிழில்”அ,ஆ,இ,ஈ” எனும் பெயரில் வந்தது.
(இந்தப்படத்துக்கு ஏன்ப்பா யாரும் விமர்சனமே
எழுதலை???!!)

பாடல் காட்சிகளை பார்க்கும்பொழுதே “சந்தமாமா
பாடல்கள் எங்கே? இந்தப் பாடல்கள் எங்கேன்னு?”
வருத்தப்பட்டேன். நல்ல கதையம்சம் உள்ள
படத்துக்கே இந்தக் கதின்னா ”கொஞ்சம் இஷ்டம்”
படமெல்லாம் சொல்லவே வேணாம்.

அதனால்தான் உங்கள் அனைவரையும்
ஆண்டவன் காப்பாத்த வேண்டிக்கொண்டேன்.

மொத்தத்தில் KONCHAM ISHTAM KONCHAM KASHTAM.
படம் பார்த்த எங்களின் கமெண்ட் ”கொஞ்சம் இஷ்டம்
எக்குவ கஷ்டம்”
:)))) (எக்குவ- நிறைய)

Tuesday, March 17, 2009

கடற்கரையில் ஒரு மாலைப்பொழுது...

என்னை நான் மீட்டெடுக்க வேண்டிய நிலை.
மனதை மாற்ற பதிவெழுத வந்துவிட்டேன்.




அடுத்து நேராக சென்றது விசாகப்பட்டிணத்தின்
சிறப்பான ஆர்.கே பீச்.

பவதாரிணி கோவில்






இது கொழும்பு கால் பேஸை நினைவூட்டும்.
வலது புறம் கடல், இடது புறம் கட்டிடங்கள்.
பாண்டிச்சேரியையும், சென்னையையும் கொஞ்சம்
கலந்தமாதிரியான ஒரு பீச்.

மச்யதர்ஷிணி எனும் aquarioum.



அங்கே சென்று நான் வந்துவிட்டேன் என்று
போன் செஞ்சா? நான் ட்ராபிக்ல மாட்டிகிட்டேன்,
வர 30 நிமிஷம் ஆகும்னு”சொன்னாரு அயித்தான்.
சரிதான்னு பிள்ளைகள் கூட்டிகிட்டு கடற்கரைக்கு
போனேன். கடற்கரைக்கு போய் கடலலையில்
கால் வைக்காட்டி சாமிகுத்தமாகிடும்ல...




பிள்ளைகள் தண்ணீரில் அளவளாவினர்.
நானும்தான். உடனிருந்த தங்கைக்கும்
கொண்டாட்டம்தான். கொஞ்சமாக இருட்ட
ஆரம்பித்த நேரத்தில் அயித்தான் போன்
செய்தார். பீச்சில் 10 நிமிடம் இருந்தோம்.

அடுத்து செல்வதாக இருந்த இடம் வெளிச்சத்தில்
சென்றால்தான் நன்றாக இருக்கும் என்பதால்
ஹோட்டலுக்கு சென்று ரெஃப்ரெஷ் செய்துகொண்டோம்.
இரவு உணவு பக்கத்திலேயே இருந்த கையேந்தி
பவனில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது
ஆஷிஷ்,”அப்பா தியேட்டர் பக்கத்துலதான்
இருக்கு!! சினிமா போகலாம்பா,” என்றான்.

விதி வலியது!!

.

புத்தகங்களின் ஞாபகம்...

வெகுநேரமாக நானும் மாமாவும் தாத்தாவின்
வருகைக்கு காத்திருந்து காத்திருந்து தூங்கிபோயிருப்போம்!!

காலையில் எப்போது கண்விழிப்போம் என்று சித்தி ரெடியாக
காத்துக்கொண்டு பக்கத்திலேயே அமர்ந்திருப்பார்.
கண்விழித்ததும் முதலில் அந்த வருடத்து புதுபுத்தகங்களுடன்
தான் குட்மார்னிங் சொல்வார் சித்தி.

புது பேக்(ஜோல்னா துணிப்பைதான். அதில் ஜிப் இருந்தால்
அது போன வருடத்தில் ஏதோ புண்ணியம் செய்திருப்போம்!!)
கைவிரல்கள்போன்ற மூடிவைத்த பெரிய பென்சில்,
எல்லாம் இருக்கும்.

மீனாட்சி பதிப்பகத்தில் சொல்லிவைத்து தாத்தா
வாங்கிவருவார்.





புது புத்தகங்களின் வாசனையை நுகர்வதற்காக
முதலில் ஓடி பல்துலக்கி வருவோம்..

புது புத்தகங்களுடன் ஒவ்வொரு முறையும்
அம்மம்மாவீட்டிலிருந்துதான் புதுவகுப்புக்கு செல்வேன்.
(நான் படித்த பள்ளியில் ஒவ்வொரு பெயராக
வாசித்து அந்த மாணாக்கரை தூக்கி அடுத்த கிளாச்
வாத்தியாரிடம் கொடுப்பார்கள். தமாஷாக இருக்கும்)

புது புத்தகம் ஒரு நாள் கூட என்னிடம் இருக்காது!!
எம்ஜிஆர் சார்( பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன்
என்பது மட்டுமல்லாமல் பார்க்கவும் கொஞ்சம்
அவரைப்போலவே இருப்பார் என்பதால் நான்
வைத்த பெயர். என் பள்ளி ஆசிரியர்)வந்து
புத்தகங்களை பைண்ட் செய்ய வாங்கிப்போய்விடுவார்.


என்ன கலர் பைண்டிங் செய்வாரோன்னு காத்திருப்பேன்.
சில சமயம் மேலே ஒட்டும் பேப்பரை கொண்டுவந்து
”என்ன கலர் வேணும்னு சொல்லு!!” என்று
கேட்டு செய்து கொடுப்பார்.

பைண்டிங் புக் வைத்திருப்பது ரொம்ப சந்தோஷமகவும்
கவுரமாகவும் இருக்கும். பைண்டிங் நூலால்
இரண்டு பக்கமும் சமமாக வைக்க கஷ்டம்,
பேக்கில் கணம் அதிகம்னு கஷ்டம் இருந்தாலும்
பைண்டிங் செய்வதால் ரொம்ப நாளைக்கு கிழியாமல்
வருமே!!

6ஆம் வகுப்பு முதல் ஆங்கில மீடியம்.
அப்போது முதல் நிலை மாறிவிட்டது.!!ஆங்கில
மீடியம் புக் எல்லாம் மீனாட்சி பதிப்பகத்தில்
கிடைக்காது. திருச்சியில்தான் முழுதும் கிடைக்கும்.
அப்பா திருச்சிக்கு செல்லும்பொழுது, நேரம் இருந்தால்
வாங்கி வருவார். சில சமயம் புத்தகம் கிடைக்க
தாமதமாகும். வகுப்பிலோ ஆசிரியை திட்டுவார்!!!

ப்ரவுன் ஷீட் போடுவது பெரியவேலை.
அதை பாதுகாக்க அதன் மேல் நியூஸ் பேப்பர்
வேறு போட்டுத்தருவார் அம்மா.(இன்ஸ்பெக்‌ஷன்
போது நியூஸ் பேப்பரை எடுத்துவிட்டால்
அட்டை புதுசா இருக்குமே!)

கம்மோடு இருக்கும் லேபில்கள் விலை ஜாஸ்தி,
கம்மில்லாத லேபில்கள் 2 ரூபாய்க்கு 12 கிடைக்கும்.
அம்மா 1 ரூபாய்க்கு வாங்கி கட்டுரை நோட்
போன்றவற்றிற்கு மட்டும் அதை ஒட்டித்தருவார்.
மீதி புத்தகங்களுக்கு பேப்பரில் வெட்டி ஸ்கெட்ச்
பேனாவால் பார்டர் போட்டு, பெயர் எழுதித் தருவார்
அம்மா.


6ஆம் வகுப்பிலிருந்து மட்டும் புத்தகங்கள்
தலையணை சைஸுக்கு போனது ஏனோ தெரியவில்லை!!
கங்கா கைடு, கோனார் நோட்ஸாவது கிடைக்குமா
என்று அல்லாடியது, 7ஆம்வகுப்பில் கொஞ்சம் தெளிவாகி
அக்காக்களிடம் பழைய புக்குக்கு சொல்லிவைத்தது
என பல ஞாபகங்கள்...







இப்போது பள்ளிகளிலேயே புத்தகங்கள் கொடுத்துவிடுகிறார்கள்.
பணத்தைக்கட்டி உடன் மொத்த புத்தகங்கள், நோட்புக்குகள்
கொடுத்துவிடுகிறார்கள்.

என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இதோ அடுத்த
கல்வியாண்டு துவங்குகிறது.

புத்தகம் வாங்கியாகிவிட்டது. நோட்புக், புத்தகம்,
லேபிள், நோட்புக்கிற்கு ப்ளாஸ்டிக் கவர்,
கலர் பென்சில், ப்ளாஸ்டிக் ப்ரவுன் ஷீட் எல்லாம்
செட்டாக கொடுத்துவிடுவார்கள். (இவை எல்லாம்
ஃபீஸிலேயே அடக்கம்)

இதோ என் அம்மாவைப்போல நானும்
பிள்ளைகளின் புத்தகங்களுக்கு அட்டை போடுகிறேன்.
கம் வைத்த லேபில் ஒட்டும்போதெல்லாம்
எனக்கு என் லேபில் ஞாபகம் வரும்.

இப்படி ரெடி மேடாக கிடைக்கும்பொழுது எனக்கு
பழைய ஞாபகங்கள் ஓடும்.

காத்திருத்தலின் சுகத்தை இப்போதைய
பிள்ளைகள் இழக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
இதுவும் ஒரு வித அனுபவம்தான்.

ஆனால் ஒன்று மட்டும் மாறவில்லை.
புதுபுத்தகம் வந்ததும் மட்டும் எல்லோரும்
அதிகமாக படிப்பது. :))



Friday, March 13, 2009

பிரார்த்திக்க வேண்டுகிறேன்..

என் மாமா (என் கணவரின் அண்ணன்)விற்கு உடல்நிலை சரியில்லை.

மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

சமீபகாலமாகவே உடல்நிலைக்குறைவு இருந்த
நிலையில் மேலும் உடல்நிலை குறைவான
காரணத்தால் நெல்லூர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னைக்கு அழைத்துச் செல்லுமாறு
கூறியுள்ளார்கள்.


பிரார்த்தனைக்கு மிஞ்சிய சக்தி ஏதும் இல்லை.

மனிதருள் மாணிக்கமாக நான் நினைக்கும்
என் மாமா பூர்ணகுணமடைய பிரார்த்திக்க
வேண்டுகிறேன்.

என் உலகின் ஆண்கள் எனும் என் பதிவில்
இந்த மாமனிதரைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

அன்புக்கு நன்றி.

Thursday, March 12, 2009

காட்டுல மழை...

எஸ்.வீ.சேகரின் டைமிங்கான காமெடி
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

என்னுடை ஆல் டைம் ஃபேவரிட்
“காட்லமழை” நாடகம்.

பலடயலாக்குகள்.

”அவனவன் வீட்டுல அரிசியைதான்
மூட்டைல வாங்குவாங்க,

இது என்னடா? பல்பு விஷயம்!!!”


”இந்த ராஜாளி சாதாரணமா போர்வையை போத்தமாட்டான்!
அப்படி போத்தினா அதுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்கும்”


ஆச்சுடா பட்டாபி”
என்ண்ணன்னா?
12 வருஷம் ஆச்சு,
எண்ணண்ணா மெட்ராஸ் வந்தா?
சனியனே, கச்சேரி பண்ணியே 12 வருஷம் ஆச்சே



அப்பல்லாம் என் முதுகுக்கு பின்னாடி
எதையோ நீள...மா நிக்க வெச்சு
மீட்டுவையே!!!!

“ஐயோ! அது தம்புராண்ணா!!”

மறந்தே போச்சுடா பட்டாபி”






மவுண்ட் ரோடுல ஒசரமா அடுக்கடுக்கா
இருக்குமே அது பேரு என்ன?

கீதா காபி மைசூர்பாக்கு..
ரஜினி காந்த் பேனர்!!!

என்ன இப்படி இந்தாளு படுத்தறாரு?

எங்க அந்த ஸ்கேல்!! ஏறு பெஞ்ச்மேல


எல் ஐ சிக்கு எத்தனை மாடி?

20 மாடிண்ணா!!




ஐயோ அடிக்காதிங்கண்ணா!!
மாத்திகேக்கறேன்.

13க்கு 15க்கும் எத்தனை மாடி

14 1/2 மாடிண்ணா

அது என்ன 1/2 மாடி?

மொட்டை மாடி!

மொட்டை மாடி உனக்கா? இல்ல
எல் ஐ சிக்கா.
சரி மாத்தி கேக்கறேன்.
13 க்கும் 14 1/2க்கும் இடையே
எத்தனை மாடி?

14 மாடி

முழுசா சொல்லு.

எல் ஐ சிக்கு 14 மாடிண்ணா.

இறங்கட்டுமா!

இறங்கறியா அடுத்த வரியை யார் சொல்வா?

ஆரஞ்சு பழத்தை உரிச்சுத்தான் சாப்பிடணும். சொல்லு

ஐயோ அப்படித்தாண்ணா சாப்பிட்டுகிட்டு இருக்கேன்.

சொல்லு..

ஆரஞ்சு பழத்தை உரிச்சுத்தான் சாப்பிடணும்


பலாபழத்தை சுளைசுளையா சாப்பிடணும்

எலுமிச்சம்பழத்தை அமுக்கி அமுக்கிசாப்பிடணும்


திராட்சையை கொட்டையோட சாப்பிடணும்...



ஹையா இந்தக் கட்டிடம் என்னுது!
இந்தக் கட்டிடம் என்னுது.


கலக்கல் நகைச்சுவை நாடகம்.

எதைவிடுப்பது எதை தொடுப்பதுன்னு தெரியவில்லை.

நீங்களே கேட்டு ரசியுங்கள்.

தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.


Get this widget | Track details | eSnips Social DNA

மீனவ நண்பர்களுடன் ஒரு மாலைப்பொழுது...


வண்டியை அனுப்பிவைக்கிறேன் 5 மணிக்கு மீன் பிடிக்கும்
பக்கம் பிள்ளைகளுடன் வந்துவிடு, அங்கே கடலில் போட்டிங்
போகலாம்னு அயித்தான் போன் செஞ்சார். சரின்னு கிளம்பி
நாங்க விசாகப்பட்டிணத்தின் மீன் பிடிபடகுகள் இருக்கும்
இடத்திற்கு சென்றோம்.


5 மணியோடு படகுப்பயணம் முடிவடைந்துவிட்டதுன்னு
சொன்னாங்க. ஆஹா, சரின்னு இவருக்கு போனைப்போட்டு
மேட்டரைச் சொன்னேன். “சரி! அங்கையே இருங்க
நான் வந்திடறேன்னு” சொன்னார்.

சும்மா நிப்பதுக்கு ஒரு ரவுண்டு அடிச்சு மேட்டர் ஏதும்
தேறுதான்னு பார்க்கலாம்னு கிளம்பினேன். பல
சுவாரசியமான தகவல்கள் கிடைச்சது.

வலைகளை சரி செஞ்சு ரெடியாக வெச்சுக்கிறாங்க.
52 கிலோ எடை வரை இந்த வலைகளில் தாங்குமாம்!!!




பிடித்த மீன்களை கரை சேரும் வரை காக்க ஐஸ்
கட்டிகளை படகில் ஏற்றுகிறார்கள்.



அவர்களிடம் கேட்டு ஆஷிஷும் அம்ருதாவும்
ஆளுக்கு ஒரு கூடை ஐஸ் நிரப்பிக்கொடுத்தார்கள்.
“அம்மா! எப்படிம்மா ஃபாஸ்டா செய்யறாங்க!
ஒரு கூடை ரொப்பினதுக்கே கை வலிக்குதுன்னு”
சொன்னாங்க பசங்க.



1 மாதத்திற்குத் தேவையான உணவு ஆகியவைகளுடன்
படகுகள் தயாராகி கடலுக்குச் செல்கின்றன.

இதோ படகுகள் தயார்நிலையில்.




தன்னை நம்பிவரும் மக்களை கடலன்னை ஏமாற்றுவதில்லையாம்.
3 நாளிலேயே அதிக லாபத்தோடு திரும்ப வருவார்களாம்.

குறைந்த பட்ச லாபம் அல்லது லட்ச கணக்கில் லாபம்
கிடைக்கும் அளவுக்கு மீன்களோடுதான்
கறைக்குத் திரும்புவார்களாம்.


அப்போதுதான் கறைக்கு வந்து சேர்ந்த
படகிலிருந்து சுறாக்கள் எடை போட
பட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொன்றும் 50 கிலோவுக்கு மேற்பட்ட
எடை!!!!





மீன்களின் எடையை பார்த்து பிள்ளைகள் வியந்தார்கள்.
54கிலோ எடையுள்ள சுறாவை வண்டியில் ஏற்றுகிறார்கள்.



சின்னதும் பெரிதுமாக பல வகை மீன்கள் அங்கே!
”அக்கா உங்களையும் மீன் கூடையும் சேர்த்து போட்டோ
எடுக்கட்டுமா” அப்படின்னு கேட்டதும் சந்தோஷமா
போஸ் கொடுத்தாங்க.





”என்ன? பொம்பளைங்களை மட்டும்தான் போட்டோ
எடுப்பீங்களா”ன்னு கேட்ட அண்ணாச்சியிடம்
“ஹா, நீங்க மூட்டை தூக்குங்க நான் போட்டோ
எடுக்கறேன்னு,” சொன்னதும், டக்குன்னு இந்த
மூட்டையத் தூக்க, நான் பட்டுன்னு போட்டோ
எடுத்ததும் அண்ணாச்சிக்கு சிரிப்புத் தாங்கலை!!!



கப்பல் கட்டுற விசாகப்பட்டிணம் இது விசாகப்பட்டிணத்தின் சிறப்பு.
இயற்கையாகவே அமைந்திருக்கும் துறைமுகம் இது.

கப்பல் கட்டுற இடத்தைப்பார்க்க முடியவில்லை. அதற்கு
சிறப்பு பர்மிஷன் வேணுமாம்.

கப்பல் கட்டுற விசாகப்பட்டிணத்துல படகு கட்டுறதை
பாத்தேன். அதை உங்களுக்காக கிளிக்கி கொண்டாந்திட்டேன்.







மொத்தத்தில் மீனவநண்பர்களுடனான அந்த மாலைப்பொழுது
ரம்மியமாக இருந்தது.

இவ்வளவு போட்டோ எடுத்து, அவங்ககிட்ட பேசி எல்லாம்
முடிச்சும் அயித்தான் வந்து சேரலை!!!

அவரே போன் செஞ்சு.”ட்ராபிக் ஜாஸ்தியா இருக்கு!
நீ நேரா ...... வந்திடு!!!” அப்படின்னு சொல்லிட்டாரு.

எங்க வரச்சொன்னாரு?
................

யெஸ் அதேதான்!!! அடுத்த பதிவுல
சொல்றேன்.

Wednesday, March 11, 2009

சிம்ஹாசலம்...

தனது பக்தன் பிரஹலாதனுக்காக தூணி்லிருந்து

வெளிப்பட்ட விஷ்ணு அவதாரம் தான் நரசிம்ம அவதாரம்.

அரக்கன் ஹிரண்யகசிபு சாகாவரம் பெறுவதற்காக
பஞ்ச பூதங்களினாலோ, மனிதர்களலோ, மிருகத்தாலோ,
பூமியிலோ, ஆகாயத்திலோ,காலை,மாலை,இரவு வேலைகளிலோ
தனது உயிர் போகக்கூடாது
என கேட்டு வரம் பெற்றான்.


ஆனால் அவனது அட்டாகாசம் தாங்காமல்
”தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
தூயவன் ஜோதி நாரயாணன்” என பக்தியொழுக
பாடிய பிரஹலாதனுக்காக தூணைப்பிளந்து
வந்து வாயிற்படியில்,மதியமும்,அந்தியும்
கலக்கும் நேரத்தில் தனது கூர்மையான நகங்களால்
ஹிரண்யகசிபுவைக்கிழித்து் வதம் செய்கிறார்.



அந்த உக்கிர நரசிம்மரின் கோபத்தை தணிக்க
பிரஹாலதன் பாடிய பாடல்கள் பிரசித்தமானவை.

பிரஹாலத்னைக்காக்க நரசிம்மர் எழுந்தருளிய
இடத்தில்தான் சிம்ஹாசலம் கோவில் எழுப்பப்பட்டுள்ளாதாக
கூறப்படுகிறது.

இதுதான் சிம்ஹாசலம் கோவிலின் கோபுரம்.



அந்தாரலய தரிசனம்(சன்னிதிக்கு அருகில்)மற்றும் அர்ச்சனை
சீட்டு வாங்கிக்கொண்டு நாங்கள் கோவிலுனுள் நுழைந்த பொழுது
கல்யாணமண்டபத்தில் லட்சுமி, நரசிம்ம திருக்கல்யாணத்தில்
மாங்கல்யதாரணம் நடந்து கொண்டிருந்தது.. வரிசையை விட்டு
நேராக அங்கே ஓடினேன். காணக்கிடைக்கா காட்சியாயிற்றே!!

மாங்கல்யதாரணம் முடிந்து ”தலம்ப்ராலு”
தெலுங்கு சம்ப்ரதாயத்தில் ஒரு நிகழ்வு
தரிசித்து பிறகுதான் ஆலயத்தினுள் நுழைந்தேன்.

சிம்ஹாசலத்துள் அருள்பாலிக்கும் நரசிம்மரின்
மூலரூபம் இதுதான்.

இந்தியாவில் இருக்கும் 18 நரசிம்ம சேத்திரங்களில்
இதுவும் ஒன்று. திருப்பதிக்கு அடுத்து அதிகமாக
வருமானம் ஈட்டும் கோவி்ல்கள் வரிசையில்
இந்தியாவிலேயே இந்தக்கோவிலுக்குத்தான்
இரண்டாவது இடம்.





சந்தனக்காப்பு அலங்காரத்திலேயெ எப்போதும் இருக்கும்
இறைவன். அவரின் நிஜரூப தரிசனம் காண மக்கள்
அக்‌ஷ்ய திருதியை அன்று கூட்டம் கூட்டமாக செல்வார்கள்.
12 மணிநேரம் மட்டும் தான் நிஜரூப தரிசனம், அதாவது
சந்தனம் பூசபப்டாமல்.

சரி அக்‌ஷயதிருதியைக்கு என்ன விசேடம்??

அன்றுதானே ஹரியின் ஹிருதயகமலவாசினி
மஹாலட்சுமி பாற்கடலில் இருந்து அவதரித்த நாள்!!

தமிழகத்தின் வில்லிபுத்தூரிலிருந்து ப்ரத்யேகமாக
கொண்டுவரப்பட்ட சந்தனத்தை அரைத்துத்த்தான்
சாத்துவார்கள். 120கிலோ சந்தனம் தேவைப்படுமாம்
இவரை அலங்கரிக்க.




விஷ்ணுவின் ஹிருதயகமலத்தில் லட்சுமி என்றென்றும்
இருக்கிறாள். எனக்கு லட்சுமி நரசிம்மாவதாரம் மிக
பிடிக்கும்.

நரசிம்மர் லட்சுமி தேவியை தனது மடியில்
இருத்தி காட்சி தருவார். இங்கே ஹைதையிலிருந்து
1 மணிநேர பயணத்தில் இருக்கும் யாத்கிரிகுட்டாவும்
நரசிம்ம சேத்திரம் தான். குகைக்குள் ஸ்ரீ லக்‌ஷ்மி ந்ரசிம்மராக
அருள் பாலிக்கிறார்.

உந்தன் மடிதானே உலகின் நாற்காலி
ஒருநாள் அமர்ந்தாலும் உலகில் நான் ராணி-என்று
லட்சுமிதேவி்யும் பாடியிருப்பாளோ!! ஒருநாள்
என்ன? எப்போதும் என்னுடனேயே இரு! என
மடியில் இருத்திக்கொண்டு “எங்களைப்போல்
இருங்கள் தம்பதிகளே” என்று மெசெஜ் தருகிறானோ
என நினைப்பேன்.


சரி சரி.... விசாகப்பட்டிணத்திலிருந்து மிக
அருகில் 12 கிமீட்டர் தூரத்தில் இருக்கிறது
சிம்ஹாசலம். மலைமேல் எழுந்தருளியிருக்கிறார்
இறைவன்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே.

அருமையான தரிசனம் முடிந்து நாங்கள்
ஹோட்டலுக்கு திரும்ப அயித்தான் அலுவலக
வேலையைப் பார்க்க போய்விட்டார்.

ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டுவிட்டு
நன்றாக தூங்கினோம்(அதான் முதல் நாள் தூங்கலையே!!)
”வண்டி அனுப்பிவைக்கிறேன் வந்திடுங்க”ன்னு
சொல்லியிருந்தார் அயித்தான்.

போன இடம் எங்கேப்பா??

நாளைக்குச் சொல்றேன்..