Total Pageviews

Wednesday, April 29, 2009

என் தம்பியும் சினிமாவுல.......

மனசெல்லாம் ஒரே சந்தோஷம்.

சொல்ல முடியாத ஆனந்தம்.

என் அன்புத் தம்பிக்கு பூங்கொத்துக்களுடன்
வாழ்த்துக்கள்.




புதுகைக்காரவுக சினிமாவுல கலக்குவது புதுசு இல்லன்னு
எல்லா பதிவுலையும் சொல்லிகிட்டே இருக்கேன்.

இப்போ கலையுலகத்துகு எங்க ஊரிலிருந்து என் அன்புத் தம்பி
அப்துல்லாவும் தன் பங்களிப்பை தரப்போகிறார்.

யேசுதாஸ், பாலு அவர்களின் வரிசையில் நம் அப்துல்லாவும்
பாடகராக அறிமுகமாகிறார்.

நாளை ஃபி்லிம் சேம்பரில் திரு ராமநாராயணன் அவர்கள்
கேசட் வெளியிடுகி்றார், அதை பெற்றுக்கொள்வது
பன்மொழிக்கலைஞன் திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள்.

செம சூப்பராக இருக்கிறது அப்துல்லாவின் குரல்.
விவேகாவின் பாடல்வரிகளாம்.

நான் கேட்க ,”அக்கா, நான் பாடிய பாட்டு கேளுங்கன்னு”
அப்துல்லா மொபைலில் அந்த பாடலை ஒலிக்கவிட்டபோது
நான் ஸ்பீக்கர் போனை போட்டுவிட ஆஷிஷ் ஒரு
டான்ஸ் ப்ரொக்ராமே நடத்திமுடித்துவிட்டான்!!!

”அப்துல்லா மாமா பாடினதாம்மா!! சூப்பரா
இருக்கு வாய்ஸ்” என்று ஒரே குஷி இருவருக்கும்.

(நான் பாட்ட 3 மாசம் முன்னாடியே கேட்டுட்டேனே!!)




இதுல மிக முக்கியமான விசயம், பெருமைக்குரிய
விஷயம் இசையமைப்பாளர் திரு.பரத்வாஜ் அறிமுகப்
படுத்தும் முதல் ஆண்பாடகர் என்ற பெருமையும்
என் தம்பிக்கே.


படத்தின் பெயர்: சொல்ல சொல்ல இனிக்கும்.

பாட்டு கேட்க கேட்க இனிக்குமாக இருக்கு.

மனமார்ந்த பாராட்டுக்கள் அப்துல்லா.





இனிமையான இந்தத் துவக்கம் இனிதாய் எப்போதும்
தொடர வாழ்த்துக்கள்

Tuesday, April 28, 2009

தென்றல் அப்டேட்ஸ்

இன்னைக்கு Friday, நாளைக்கு saturday
sunday அன்னைக்கு சர்ப்ரைஸ்னு பிள்ளைகள
மண்டை காய வெச்சு புலம்ப விட்டாச்சு.

”ஞாயிற்றுக்கிழமை காலையில ரயில்வே ஷ்டேஷன்
போறோம்”!
எதுக்கு?

”அப்பாவோட ப்ரெண்ட் வர்றாங்க!!” இப்படி நிறைய்ய
குழப்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் சார்மினாரில்
வந்திறங்கிய அம்மம்மா, தாத்தா பார்த்து ஒரேகுஷி.

“நான் அப்பவேநினைச்சேன்!! தாத்தா தான் வர்றாங்கன்னு”

அம்மா தாத்தா மாதிரி டயலாக் சொல்லும்பொழுதே
லேசா டவுட் வந்துச்சு!!!

என டயலாக் பேசி ஒரே சந்தோஷமான வரவேற்பு
தாத்தா, அம்மம்மாவுக்கு.

********************************************

அம்மம்மா, தாத்தா வந்ததிலிருந்து இரண்டு
நாளாக நம்மளை யாரும் கண்டுக்கவேயில்லை!!!
:((

இருங்கடீ!! எங்க அம்மம்மாவும் அடுத்த வாரம்
வருவாங்கள்ல!! அப்ப பாத்துக்கலாம்னு
சொன்னாலும்

பாம்பே அவ்வா எங்களுக்கும் அவ்வா,
நாங்க அப்பவும் எஞ்சாய் செய்வோம்!!”னு
என் கூட போட்டியாக அதிரடியாய் பதில் வருது.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

*****************************************

இந்த அப்பா அம்மாக்களே சுத்த மோசம்!!!

நாங்க சின்ன புள்ளைங்களா இருந்தப்ப நின்னா
குத்தம், உக்காந்தா குத்தம், சினிமா பாட்டு
பாடினா குத்தம்னு சட்டம் போட்டவங்க

இப்ப பேரன், பேத்தி செய்யறதெல்லாம் பாத்து
முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுது.

கேட்டாக்க” பாலைவிட பாலாடைதான் ருசின்னு!!”
டயலாக் வருது.

******************************************

அம்மா, அப்பா வந்திருப்பதாலும், விருந்தினர்கள்
வரப்போவதாலும் லீவு சொல்லிக்கறேன்.

1 வாரம்தான் லீவு அப்புறம் வந்திடுவேன். :)))

Friday, April 24, 2009

தயிர் எனும் அருமருந்து.

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது.
நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று
பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும்
இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர்
என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு)

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.





குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது
தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து
32%பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி
நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.


பாலில் LACTO இருக்கிறது.
தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு
மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.

பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியை
குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர்
அப்படி அல்ல.

அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது
வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று
பொருமல் அடங்கும்.

பாலைதிரித்து உருவாக்கபடுவதுதான் பனீர்.
(பனீரைதனியாக எடுத்த பிறகு இருக்கும்
whey புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை
நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது.






பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை
சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல்
இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான
அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை
உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.

1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.

2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
(அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)

3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

5. ஷ்ரிகண்ட், சீஸ் போன்றவகளை பிள்ளைகளுக்கு
கொடுக்கலாம்.


நான் சிறுபிள்ளையாக இருந்த பொழுது வியாழன் தோறும்
உடையார்தாத்தா கொண்டு வரும் தயிருக்காக காத்திருப்பேன்.
அம்மா வீட்டில் தயிர் செய்வார்கள். ஆனாலும் உடையார்
தாத்தா கொண்டுவரும் தயிர் கத்தி போட்டு வெட்டுவது போல்
கெட்டியாகவும் மணமாகவும் இருக்கும்.

கொட்டாங்குச்சி கரண்டியால் தாத்தா நோகாமல் தயிர்
எடுத்து கொடுக்கும் அழகே அழகு.

Thursday, April 23, 2009

ஜாலி ஜாலி ஜிம்கானா!!!!

எப்பவும் பசங்களுக்கு லீவு விட்டா அம்மாக்கள்
லீவுல பசங்களை எப்படி மேய்ப்பது?!!! லீவ்
ஏந்தான் விடறாங்களோன்னு அங்கலாய்ப்பாங்க.

ஆரம்பத்துல எனக்கும் அப்படி நினைப்பு இருந்துச்சுதான்.
அப்புறம் மாறிப்போச்சு. பசங்களுக்கு லீவு விட்டா
நமக்கு கிடைக்கற ப்ளஸ்களை நினைச்சு பாத்து
மாத்திகிட்டேன்.

1. அலாரம் வெச்சு அடிச்சு பிடிச்சு எந்திரிக்க வேண்டியதில்லை.
2. காலை 6.15 மணிக்குள் சமையல், காலை உணவு,
கையில் எடுத்துச் செல்ல(ஷார்ட் ப்ரேகில் சாப்பிட)
ஒரு டிபன் என்று செய்ய தேவையில்லை.

3. அழகா பொறுமையா தூங்கி எந்திருச்சு சமைக்கலாம்.

4. படி படின்னு சொல்லிகிட்டே இருக்காம கொஞ்சம்
ஓய்வா இருக்கலாம்.(ஓய்வு நமக்குத்தான்:))

5. நேரம் கிடைக்கும்பொழுது டூர் அடிக்கலாம்.
(கொளுத்தும் வெயில் என்பதால் இந்த விடுமுறையில்
மட்டும் டூர் போக மாட்டோம்.)

இப்படி நிறைய்ய்ய்ய்......ய + தான்.

இன்றையிலிருந்து பிள்ளைகளுக்கு விடுமுறை.
ஜூன் 10 தான் பள்ளி திறப்பு. அதுவரைக்கும்
ஜாலி ஜாலி ஜிம்க்கானானு ஆட்டம் தான்.

சம்மர் கேம்ப் எல்லாம் சேர்க்கலை. வீட்டிலேயே
நாங்க கொண்டாடறதா முடிவெடுத்திருக்கோம்.

முன்னாடியே சொன்ன மாதிரி ஆஷிஷ் அம்ருதாவுக்கு
வீட்டிலேயே குக்கரி கிளாஸ்,

அவங்களுக்கு விருப்பமான டான்ஸ் கிளாஸில்
சேர்த்தாச்சு.


மே மாதம் என் மாமாக்கள் இருவரும் தங்கள்
குடும்பத்தினருடன் வரப்போறாங்க.

அவங்க கூட அம்மம்மா தாத்தாவும் வர்றாங்க.
அம்மம்மாவை பாத்து 1 வருஷம் ஆச்சு.

சோ, ஜாலி ஜாலிதான்.

பசங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.
யாரும் அவங்கிட்ட சொல்லிடாதீங்க ப்ளீஸ். :)))
(அடுத்த வாரம் சர்ப்ரைஸ் பத்தின பதிவு வரும்)



*****************************



“அக்கா நீங்க இந்த வருஷம் எப்படியும் 1000 போஸ்ட்
போட்டுடுவீங்க” அப்படின்னு அடிக்கடி நிஜமா நல்லவன்
போன்ல சொல்வது நடந்திடும்
போல இருக்கு :)) இது என்னோட 400ஆவது போஸ்டாச்சே!!!

என்னால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. ஏன்??? எதற்கு???

இணையத்தில் என் முதல் உறவு மைஃபிரண்ட். அதன்பிறகு
அறிமுகம் மங்களூர் சிவா. இப்போது பலரும் என் நட்புலகில்,
உறவாகி இருக்கிறார்கள்.

எல்லோரிடமும் குறைந்த பட்சம் ஒருமுறையாவது
இந்தக் கேள்வியை கேட்கத் தவறியதில்லை.

அது என்ன கேள்வி?

“சாப்டாச்சா?” என்பதுதான். உடன் கிடைக்கும் பதில்
”இல்லை” என்பதுதான். கேட்கும் பொழுது மனதுக்கு
மிகவும் கஷ்டமாக இருக்கும். சில சமயம் மணி மதியம்
3 தாண்டியிருக்கும் அப்போதும் சாப்பிடவில்லை,
வேலை அதிகம் என பதில் வரும்!! :(



இந்தக் கேள்வியை நான் கேட்க அவசியம் என்ன?

”முக நக நட்பது நட்பது நட்பன்று
நெஞ்சத்தக நக நட்பது நட்பு” இந்த குறளின்
அர்த்தம் மனதில் பசு மரத்தாணிபோல் பதிந்துவிட்டது.

அக்கா என்றோ, தோழியாகவோ என்னை பார்க்கும்
உறவில், நட்பில் உண்மையாக இருப்பது என் பழக்கம்.
அந்த உரிமையில் தான் இந்தக் கேள்வியை
கேட்பது அவசியம் என நினைக்கிறேன்.

இப்படி கேட்காவது ஒருவர் இருக்கிறாரே! என
நினைத்தாவது நேரத்துக்கு சாப்பிடச் செல்லவைக்க
ஒரு முயற்சி.

மும்பையில் நான் வேலை பார்த்த பொழுது என்
டப்பா என் உடன் வேலை பார்த்த தமிழக பையன்கள்,
கையில் தான் இருக்கும். நான் அவர்கள் கடையில்
வாங்கிச் சாப்பிடும் உணவை சாப்பிடுவேன்.

வீட்டு சாப்பாட்டுக்கு அப்படி ஒரு ஏக்கம்!!!

“முன்னாடி எல்லாம் ஹோட்டலில் சாம்பார் அதிகம்
கொடுத்தாக்க திட்டுவோம். இப்போ ஊருக்கு போய்
இரண்டு இட்லிக்கு 1/4 பக்கெட் சாம்பார் ஊத்தி சாப்பிட
மாட்டோமான்னு இருக்கு” என்ற அவர்களின் ஏக்கங்கள்.



இவைகள் உங்களுக்கும் இருக்கும் என்பது தெரியும்.
பலர் கடல் கடந்து, சிலர் குடும்பத்தை பிரிந்து
வெளி மாநிலங்களில்,(தமிழ் நாட்டுக்குள்ளேயே தன்
குடும்பத்தை பிரிந்து வாழ்பவர்களும் உண்டு).

வேலை தரும் பளுவில் உணவு இரண்டாம்பட்சமாகிறது.
பல நிறுவனங்களில் உணவு இடைவேளை என்பதே
கிடையாது. ஆனாலும் எப்படியாவது நேரத்தை நாம்
ஏற்படுத்திக்கொண்டு நேரத்துக்கு உண்ணவேண்டும்.




அஷ்ட கஷ்டப்பட்டு சம்பாதி்ப்பது அளவாக உண்டு,
ஆனந்தமாக வாழத்தானே!!!
சரியாக உணவளிக்காமல் இருப்பது மிகத் தவறு.
சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும்.
அப்படி இருக்க வேளை தவறி உண்வது ஏன்?

இதனால் வரும் விளைவுகள் உங்களுக்குத் தெரியாமல்
இல்லை. ஆனாலும் வேலை பளு அது இது என்று
காரணம் சொல்வது நல்லாயில்லை சொல்லிட்டேன்!!!


இம்புட்டு சொல்கிறேனே!! நான் எப்படி?

”ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்!!”
அப்படின்னு சாப்பிட ஆரம்பிச்சிருவேன். :)))

(பல நேரங்கள் கணிணிமுன் அமர்ந்து சாட்டிக்கொண்டே
தான் ஈட்டிங்க் :)) ))

ஆன்லைனில்தான் அடிக்கடி சாப்டாச்சான்னு கேட்டு
ஆளைக் கொல்லுறீங்க. இப்ப எதுக்கு இந்த்ப் பதிவு??

படிப்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளும் சக்தி
நம் மூளைக்கு உண்டு.

”ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்!!”
அப்படின்னு ஒரு பாட்டை வேற எடுத்து விட்டிருக்கேனா
1 மணி அடிச்சதும் என் பதிவு ஞாபகம் வரும், உடன்
சாப்பிட போகணும்னு தோணும். (பசிங்கற உணர்வை
அடக்கி வைக்க முடியாமா சாப்பிட ஓடூவீங்கள்ல!!)

இந்தப் பதிவை படிக்கும் அனைவருக்கும் என்
அன்பு வேண்டுகோள்...
என்னன்னு சொல்லத் தேவையில்லை, புரிஞ்சிருக்கும்.

அதே தான்....

சரி மணி 12.30 ஆகம்போவுது. நான் போய்
உணவு மேசையை ரெடி செய்யறேன். குட்டீஸ்
வந்ததும் சாப்பிடணும்.

இன்றைய மெனு என்னன்னு சொல்லி வைத்தெரிச்சலை
கொஞ்சம் கொட்டிக்க வேணாமா?? :)))

ஆந்திரா பருப்புப்பொடி, நெய், முட்டைகோஸ் பொரியல்,
கமகம தக்காளி ரசம், தாளிச்சு கொட்டிய தயிர் சாதம்,
தொட்டுக்க வெங்காயம்..ஸ்ஸ்ஸ் அம்புட்டுதான்.

டாடா!!

Wednesday, April 22, 2009

புதுக்கோட்டை பசங்க

புதுகைக்கும் கலையுலகத்திற்கும் நிறையவே தொடர்பு
இருக்கிறது. இது என்னுடைய பதிவில் சொல்லியிருக்கிறேன்.

இப்ப லேட்டஸ்டா எங்க புதுக்கோட்டை பசங்க
நடிச்ச படத்தை சுப்ரமணியபுரம் புகழ் சுசிகுமார்
தயாரிக்கிறார். எங்க ஊரு சுத்துப்பட்டு வாண்டுகளை
பிடிச்சு கலக்கியிருக்காங்க. இசை ஜேம்ஸ் வசந்தன்.



தமிழ்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியா எல்லா சேனல்களிலும்
பசங்க ராஜ்யம் தான்!!!




இயக்குனர் பாண்டிராஜ்(சேரனின் அசிஸ்டெண்ட்)
புதுகையின் வட்டார மொழிக்காகவே
பசங்களை எங்க ஊர்ல தேடிக்கண்டுபிடிச்சதா சொன்னாரு.

ஆமாம். மத்த ஊர்களை பார்க்கும்பொழுது எங்க ஊரின் வட்டார
மொழி கொஞ்சம் வித்தியாசமா, மரியாதை கலந்ததா,பாசமா
இருக்கும்.

இப்படி மரியாதையா பேசினதை கேட்டிருக்கற எனக்கு
சென்னை, திருச்சி, மதுரை தமிழ் கேட்கும்போது
கொஞ்சம் நெருடலாவே இருக்கும்.

நேற்றுவரைக்கும் கூட ஆடிக்கொண்டிருந்த ஆண்நண்பன்
தன் தோழி வயதுக்கு வந்துவிட்டதும் அக்கா என
அழைக்கும் பண்பு எங்க ஊரின் பண்பு.

(அதுக்காக ஈவ் டீசிங் எல்லாம் இல்லன்னு சொல்ல
மாட்டேன். :)) )

பாரதிராஜாவின் என் உயிர்தோழன் பட ஹீரோயின்,
அவங்க அக்கா லதா,
இப்படி நிறைய்ய பேர் எங்க ஊர்லேர்ந்து வந்து
கலக்கியிருக்காங்க.


இப்போது பட்டைய கிளப்ப கிளம்பியிருக்கும் “பசங்களுக்கு”
என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இயக்குனர் பாண்டிராஜ்,
தயாரிப்பாளர் சுசிகுமாருக்கும் கூட வாழ்த்துக்கள்.

வாங்க பசங்களா!!! நம்ம ஊரு பேரு இனி எட்டு திக்கும்
கேக்கணும்.



அன்பாலே அழகாகும் வீடு...
(பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில்)


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பசங்களின் அட்டகாசம்:


Get Your Own Hindi Songs Player at Music Plugin

Tuesday, April 21, 2009

SPEED-WEDNESDAY!!!!

ஒரு புதன்கிழமை மும்பை போலிஸ் கமிஷினர் ப்ரகாஷ் ராதோடுக்கு
வரும் தொலைபேசியில் சீட்டின் நுனிக்கு வர ஆரம்பித்தால்
படம் முடியும் வரை நம் நிலை அதுதான்.

தனது பர்ஸ் தொலைந்ததாக கம்ப்ளையண்ட் செய்யவந்த
நச்ருதின் ஷா, அந்த போலிஸ் ஸ்டேஷன் டாய்லட்டில்
ஒரு பையை வைத்துவிட்டுச் சென்று, அருகே இருக்கும்
கமிஷன்ர் அலுவலகத்திற்கு போன் போட்டு தான் குண்டு
வைத்திருப்பதாகச் சொல்கிறார்.

போலிஸ் கமிஷனர் பிராகாஷ் ராத்தோடாக அனுபம் கெர்.
வில்லனாகவும் பாசமிகு தந்தையாகவும் இவரது
நடிப்பை பார்த்திருக்கிறோம். மிடுக்கான போலிஸ்
கமிஷனராக பின்னியிருக்கிறார்.

நஸ்ருதின்ஷாவின் போன் காலை ஏதோ பைத்தியக்கார
வேலையாக நினைக்கிறார், தனது ஆட்கள் அந்த
ஆர்டி எக்ஸை போலிஸ் ஷ்டேஷனில் கண்டுபிடித்தபொழுது
தனது எண்ணத்தை மாற்றிக்கொள்கிறார்.

எங்கே? என்ன செய்தி கிடைக்கும் என காத்திருக்கும்
செய்தி சேனல்காரர்களில் ஒருவரை பிடித்து
அவரையும் அந்த இடத்திற்கு அனுப்பி வைத்து
நிலமையை டீவியில் பார்க்கிறார் நஸ்ருதின் ஷா.



அதன் பிறகு முதலமைச்சர் தலையிட்டு பிரகாஷ்ராத்தோடை
தீவிரமான இந்த நிலமையை கையாளச் சொல்கிறார்.


ராத்தோட் தனது படையில் இருக்கும் மிகச் சிறந்த
போலிஸ்காரர்களான Arif (Jimmy Shergill) and Jai (Aamir Bashir)
துணையுடன் எப்படி நிலமையை கையாள்கிறார்?
அங்கே ஏற்படும் எதிர் பாராத திருப்பங்கள் என்னன்னென்ன?
போன்ற மர்மமுடிச்சுகள் நாம் சற்றும் எதிர் பாராதவை.






அந்த போலிஸ் ஷ்டேஷன் தவிர மேலும் 5 இடங்களில்
தான் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அந்த இடங்களைச்
சொல்ல வேண்டுமெனில் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதிகள்
4 பேரை தான் சொல்லும் இடத்திற்கு கொண்டு வரவேண்டும்
என நிர்பந்திக்கிறார் நஸ்ருதின்ஷா.

மிக ப்ரயத்தனப்பட்டு கைது செய்த அந்த கொடூர தீவிரவாதிகளை
இவரிடம் ஒப்படைக்கத்தான் வேண்டுமா? என யோசிக்கும்
பொழுது அதைத் தவிர வேறு வழியில்லாமல் அந்த நால்வரையும்
ராத்தோடின் சிறப்பு போலிஸ் இருவர் அழைத்துச் செல்கின்றனர்.

அதில் ஒருவர் முஸ்லிம். தீவிரவாதிகள் நால்வரும் முஸ்லிம்தான்.
அவர்களில் ஒருவன் ஆரிப் இடம்(போலிஸ்காரர்)கூட இருக்கும்
ஜெய்(போலிஸ்) போட்டுதாக்கிவிட்டு தங்களை தப்பிக்க
வைக்கச் சொல்கிறார். எங்கே அப்படி நடந்துவிடுமோ என
மனம் பதைக்கிறது.

அவர்களை அழைத்துச்
செல்ல யாரும் வரவில்லை. மாறாக அங்கே இருக்கும் பெஞ்சில்
அவர்களை அமர வைக்கச் சொல்கிறார் கான்ஃப்ரன்ச் காலில்
அவர்களுடனும், கமிஷனருடனும் தொடர்பில் இருக்கும்
நஸ்ருதின் ஷா!!!!

நஸ்ருதின் ஷா குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களை
அழைத்துச் சென்றுவிட்டு 3வரை மட்டும் அங்கே விட்டுவிட்டு
1வரை தன்னுடன் பிடித்துக்கொள்கிறார் ஆரிஃப்.(அப்போதுதான்
மற்ற குண்டு வைப்பு இடங்களை தவறாமல் தெரிந்து
கொள்ள வேண்டும் என்பதற்காக.)

இங்கே நடப்பதும், அதன் பிறகு காட்சிகளும்
நாம் முற்றிலும் எதிர் பாராதவை.

தன்னை common stupid manஆக அறிமுகம்
செய்து கொண்டு நஸ்ருதின்ஷா கிளைமேக்சில்
பேசும் வசனங்கள் ஒரு சாமான்யனின் பேச்சாகவே
இருக்கிறது.




SPEED ஆங்கில படத்தைப் போல சஸ்பென்ஸ்களால்
நிறைந்த படம் இந்த WEDNESDAY.

அதனால்தான் இந்தப் படத்தை தமிழில் தாயாரிக்கிறார்கள் போல.
கமலஹாசனும், மோகன்லாலும் நடித்து தயாராகப்போகிற
படத்தில் தெலுங்கு ஹீரோ விக்டரி வெங்கடேஷும்
நடிக்கப்போகிறாராம்.

தரம் குறையாமல் தமிழில் வருகிறதா என பொருத்திருந்து
பார்ப்போம்!!!

Wednesday, April 15, 2009

குசும்பனின் குதூகலம் தொடர வாழ்த்துக்கள்...

தனியே தன்னந்தனியே என்று பாடிக்கொண்டிருந்த குசும்பனின்
வாழ்வினுள் நுழைந்தார் மஞ்சு.



காதலின் குதூகலத்துடன்...


மணமகனாக....


”காற்றே என் வாசல் வந்தாய்” என காதல் டூயட் பாடி
தம்பி சரவணனும், மஞ்சுவும் வாழ்வில் இணைந்த
பொன்னாள் இந்நாள்.




தனது முதல் திருமண நாளைக் கொண்டாடும்
மஞ்சு, சரவணன் தம்பதிகளுக்கு மனமார்ந்த
வாழ்த்துக்கள்!!!

வாழ்த்துவோம் வாருங்கள்!!!

15.04.09 தேதியிட்ட ஆனந்தவிகடனை புரட்டிக்கொண்டிருந்தேன்.

ஒரு கவிதை!!! அட நம்ம உடன்பிறப்புக்களைப்
பத்தில்ல எழுதியிருக்காக?!!! அப்படின்னு
படிச்சு முடிச்சு எழுதினது யாருன்னு பார்த்தா
நமக்குத் தெரிஞ்ச பேரா இருந்துச்சு.

எதுக்கும் ஒரு முறை கன்ஃபர்ம் செஞ்சுக்கலாம்னு
ஆன்லைனில் இருந்தவரிடம் கேட்டதும்
கன்ஃபர்ம் ஆகிடுச்சு. கவிதைக்குச் சொந்தக்காரர்
நாம் அறிந்த நண்பர் செல்வேந்திரன்.

கற்றதனால் ஆய பயன் - இந்தக் கவிதை மேலே
சொல்லியிருக்கும் இதழில் 34ஆம் பக்கம் வந்திருக்கு.

எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று..
வாழ்க்கை முறை கண்டு
வயிறு எரிந்தீர்கள்.....





இப்படி போகிறது கவிதை.
முழுதும் படிக்க ஆனந்தவிகடன்
வாங்கிக்கொள்ளவும்.

மனமார்ந்த பாராட்டுக்கள் செல்வேந்திரன்.

நீயே நீயே!!!




குறும்பு கொப்பளிக்கும், பக்கத்து வீட்டுப் பெண்ணின்
முகம் இது இவரின் ஷ்பெஷல். பானுப்ரியாவுக்கு அடுத்து
எனக்கு மிகவும் பிடித்தது இவர்தான்.

இவர் எனக்கு ஒரு ரோல்மாடல் என்று கூடச் சொல்வேன்.

நதியா- இந்தப் பெயரைக்கேட்டாலே போதும்
உள்ளுக்குள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

என் பள்ளிக்காலத்தில் நதியாவின் பெயரில்
காதணி, மாலை, தோடு, ஹேர்கிளிப் ஏன்
நதியா பாவாடை தாவணி செட் என எல்லாம்
நதியாவின் பெயரில் வந்து மார்க்கெட்டில்
குவிந்து கிடக்கும்.

எங்கள் புதுகை சிலோன் வலையல் செண்டர்
போனால் எப்போதும் பெண்களின் கூட்டம் அலைமோதும்
இந்த வகை சாமான்கள் வாங்கத்தான்.



”உனக்கு பிடித்த நடிகை என்கிறாய், நதியா
கிளிப்கூட வாங்கி குத்திக்கொள்ளமாட்டாய்!!”
என்று தோழிகள் கேட்பார்கள். அது மட்டும்
எனக்கு பிடிக்காது. நானும் எல்லோரைப்போல்
செய்தால் என் தனித்துவம் இல்லமல் போய்விடுமே!!!

அறிமுகப் படமான பூவே பூச்சடவா பாடல்.
மறக்க முடியுமா??



பன்னீரில் குளித்த பூக்கள் மெல்லச் சிரிக்க....



என் மாமன் கிட்ட மோதாதே... என மிரட்டும் நதியா.




இன்றும் அதே இளமையுடன், துள்ளலாய் நதியா.
(இவ்வளவு சீக்கிரம் அம்மா நடிகை ஆக்கியிருக்கவேண்டாம்!!!)




பூவே பூச்சடாவாவை ஞாபகப் படுத்தும் பட்டாளம்.


பூக்களைப் பறிக்காதீர்கள்(T.Rajendar இசை) , பாடும்நிலாவே என
எத்தனை படங்கள். சின்னத்தம்பி பெரியதம்பியில்
கலக்கியிருப்பார் நதியா.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பிரியமனமில்லாமல் ஒரு பிரியாவிடை!!!

உன்னை இனி காணக்கிடைக்காதாமே!!
இந்த நிலை வரும் எனத் தெரிந்திருந்தால்
உன்னை “அனுப்பி”வைத்திருக்க மாட்டேன்!!!

உன்னைக் காணும் போதெல்லாம்
என் மனசுக்குள் ஒரு மத்தாப்பூ!!
பாந்தாமாக பூந்து பூந்து செல்லும்
உன் அழகே தனி!!


உன்னை வெளிநாட்டில் பார்த்தபோது
“ஆஹா! உன்னை இங்கேயும் விரும்புகிறார்களே!!”
என அகமகிழ்ந்தேன்.
அத்தனை சிறப்பு மிக்க நீ எங்களை
விட்டு பிரியப்போகிறாய் எனக்
கேள்வி பட்டது முதல்
மனதுக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது!!!!



வாகனம் யோகம் இருக்கிறது என்று ஜாதகத்தில்
இருந்ததா? என்று தெரியாது. ஆனால் மார்ச் 8 2001
மகளிர் தினத்தன்று எங்கள் வீட்டிற்கு வந்தது
மாருதி 800 கார்.மஹாராஷ்டிரா ரெஜிஸ்ட்ரேஷன்
எண்களுடன் (செகண்ட் ஹேண்ட் தான்) எங்கள் முதல் கார்.

அதன்பிறகு மாருது ஜுஜுகி வாங்கினோம்.



ஏதோ திரைப்படத்தில் கவுண்டமணி சொல்வார்
“மாருதி மாருதின்னு ஒரு கார் வந்திருக்காம்!!
அதை ஒரு முறையேனும் ஓட்டி பாத்திடணும்”
என்று சினிமாவில் புகழ் பாடும் அளவிற்கு
மாருதி கார் சிறப்பு பெற்றது.


நடுத்தர வர்க்க மக்களின் வாகன யோகத்தை
பூர்த்தி செய்தது மாருதிதான்.

அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகின்ற நிலையில்

11 பெரிய நகரங்களில் மாருதியை எடுக்கப்போகிறார்கள்.
மெல்ல மெல்ல இந்த கார்களின் உற்பத்தியைக் குறைத்து
2016ல் மொத்தமாக முடக்கிவிடுவார்களாம்.
நம் நாட்டின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய புது சட்டத்தால்
இந்த மாற்றமாம். மாருதி ஓம்னியும் இனி சாலையில்
காணக்கிடைக்காது!!!

இதுவரை 2.5 மில்லியன் மாருதி 800 வகை கார்கள்
விற்கப்பட்டிருக்கின்றன. மாருதியைப் பற்றி
பலருக்கும் பலவித நினைவுகள் இருக்கின்றன.
எனக்கும் மாருதியைப் பற்றி கொசுவத்தி இருக்கும்.

உங்களுடைய நினைவுகளையும் பத்திரமா, பதிவா
போட்டு வெச்சுக்கோங்க.

பெரிய பெரிய கார்கள் ஓடும் இடங்களில்
ஜுகுஜுகுன்னு கொசுமாதிரி மாருதி பார்க்கவே
அம்புட்டு அழகா இருக்கும். பார்க்கிங்கிற்கு
வசதி, சாலையிலும் வசதின்னு மாருதியின்
எத்தனையோ நினைவுகள்!!!!


மாருதி இனி நம் நினைவுகளில் மட்டுமே!! :((




Monday, April 13, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிறக்கப்போகிறது விரோதி வருடம். பெயரில் மட்டுமே
விரோதியாக அனைவருக்கும் உபயோகியாக ஆனந்தத்தை
தரும் வருடமாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்.




கேரள சகோதர சகோதரிகளும் நாளை விஷு கொண்டாடுகிறார்கள்.
விஷுக்கனி பார்த்துதான் நாளை துவங்க வேண்டும் என்பது
அவர்களின் கொள்கை.

எங்களின் யுகாதியின் போதும் அம்மா விஷுக்கனி போல்
பணம்,நகை, பழங்கள்,பூ, ஆடைகள் எல்லாம் இறைவனிடம்
வைத்து முதலில் அதைத்தான் பார்க்க வேண்டும் என்று
சொல்வார்.


நல்லதை எவரிடமிருந்தாலும் கற்றுக்கொள்வது
நல்லதாச்சே!!

இதோ உங்களுக்காக விஷுக்கனி.
உங்கள்அனைவரின் வாழ்வும், வளமாக உற்றாரும்,
உறவினரும் மகிழ்வுடன் வாழ பிறக்கும்
புத்தாண்டு எல்லா வளத்தையும் தரவேண்டும்
என எங்கள் குடும்பத்தினர் அனைவரும்
வாழ்த்துகிறோம்.



புத்தாண்டு அன்று பஞ்சாங்கம் படிக்கப்படவேண்டும்
என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

எனக்கு மடலில் வந்த லிங்கை இங்கே உங்களுடன்
பகிர்ந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சி.( நன்றி
4tamilmedia.com)

விரோதி வருட இராசிபலன்

தென்றல் அப்டேட்ஸ்

எப்போதும் காலை பார்க்கில் வாக்கிங் போவேன்.
சில சமயம் வார இறுதியில் மாலை வேலைகளில்
பிள்ளைகளுடன் போவேன். அவர்கள் இருவரும்
கொஞ்ச நேரம் பூப்பந்து ஆட விட்டு நான் வாக்கிங்
போவேன். 4 ரவுண்ட் நடந்துவிட்டு பிள்ளைகளுடன்
ஓடிப்பிடித்து விளையாடுவேன். இருவருக்கும்
ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

இந்த முறை என் தங்கை, அத்தையின் பேத்தி
அனைவரும் அணியில் சேர செம ஆட்டம்தான்.

ஒரு அம்மா பிள்ளைகளுடன் வந்தார். பார்க்கினுள்
வந்த நொடியிலிருந்து போனை காதிலிருந்து
எடுக்கவேயில்லை....
புடவையை எடுத்துச் சொருகிக்கொண்டு
ஒரு கையில் செல்போன் வைத்து பேசிக்கொண்டெ
உடன் வந்தவருடன் பூப்பந்தாடினார்.
செம ஆட்டம்!! (அவரின் பிள்ளைகள் விளையாட
சான்ஸ் கேட்டபோதும் கொடுக்காமல் தான் மட்டுமே
விளையாடியது தான் எரிச்சலூட்டியது)

***********************************************

பூப்பந்தாட்டம் என்றால் எப்போதும் நினைவுக்கு
வருவது ஜானகிராம் மாமாதன். இவர்
அம்மா வேலை பார்த்த புதுகை ஸ்ரீ சுப்பராமய்யர்
பள்ளியி்ல் ப்யூனாக வேலை பார்த்தார்.

ப்யூன் வேலை பார்த்துக்கொண்டே மாமா
பூப்பந்தாட்டத்தில் பல டோர்னமெண்டுகள்
விளையாடி ஜெயித்திருந்தார். பள்ளி
வேலைகளுக்கு இடையே ப்ரேக் கிடைத்தால்
பூப்பந்து மட்டை பின்னிக்கொண்டிருப்பார்.
மாமாவின் கைகளால் பின்னப்பட்ட
மட்டைகள் புதுகையில் பலரின் கைகளில்
தவழ்ந்திருக்கிறது.



மாமாவைப் பற்றி எழுதப் போகிறேன் என்று
அம்மாவிடம் சொன்னதும் அம்மா சொன்னது,
“ஜானகிராம் அண்ணா ப்யூனாக இருந்தாலும்
அலுவலகத்தில் ஒரு கிளார்க்காக வேலை பார்க்கத்
தகுதியுடைய்வராக இருந்தார். அனைத்தும்
கச்சிதமாக செய்யவேண்டும் என்ற எண்ணம்
கொண்டவர்” என்று பாராட்டினார்.

*********************************************
Dr. PRANATHI REDDY இவர்தான் தற்போது
என்னுடைய மருத்துவர். ஹைதையில் மிகச்
சிறந்த மகளீர் மருத்துவ நிபுணர்.
இவரின் கணிவான பேச்சுக்கு நான் அடிமை. ரெயின்போ
மருத்துவமனையில் இவரை சனிக்கிழமை
தொடர் மருத்துவத்திற்காக சந்தித்தேன்.

(டாக்டரை சந்திக்கும் முன் அவரது
அசிஸ்டென்டை சந்திக்க வேண்டும்
அவரை சந்திக்கச் சென்றது அயித்தானுக்கு
டென்ஷன். டாக்டர்.பிரணதி அவர்கள்
என் நிலையை மிகச் சரியாக புரிந்து
கொண்டுள்ளார். வேறு மருத்துவரை
மாற்ற வேண்டாமே என்று டென்ஷன்
பட்டுவிட்டதாக்ச் சொன்னார்.:)) )


இவரைப்பற்றி என் முந்தைய பதிவு இங்கே. மனதை மயிலிறகால்
வருடுவதுபோல் பேசும்பொழுது மருத்துவர்களின்
மேல் நம்பிக்கை வருகிறது. இன்னும் 6 மாதத்திற்கு
தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டு பிறகு
வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

*************************************
பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு காட்சி
தனது மகளுக்கு சளி உபாதைக்கு என்னென்ன
மருந்து கொடுத்தார் எனச் சொல்லும் இளவரசுக்கு
“அதெல்லாம் மருந்து கொடுக்கத்தான் நாங்க
படிச்சு மருத்துவரா இருக்கோம்னு” ஜெயராம்
சொல்வார். தானே மருத்துவம் பாத்துக்குவது
தவறுதான்னாலும் இப்போ இருக்கும் மருத்துவர்களை
பார்க்கும்பொழுது ஒரு பாட்டுதாங்க ஞாபகதுக்கு வருது
“யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!!
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்”

ரமணாபட மருத்துவர்கள் தான் அதிகம்.
மருத்துவ காப்பீடு செய்திருக்கிறோம் என்று
தெரிந்தால் போதும் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்
என கூட்டி விடுவார்கள்.
சின்னச் சின்ன உபாதைகளுக்கும் பெரிய லிஸ்ட்
மருத்துவம், பெரி........ய்ய்ய்ய்ய்ய்ய லிஸ்ட்
டெஸ்ட்கள்.

என்னதான் செய்வது புரியலை!!! இதுதான் பலரின்
நிலை.

********************************

Wednesday, April 08, 2009

மிஷின் படும் பாடு!!!! :)))

பசங்களுக்கு புக் வாங்க கடைக்கு போயி்ருந்தேன்.
செல்போன் சிணுங்கிச்சு. அயித்தான் தான்.

“எங்கப்பா இருக்க?” :)) (அடிக்கடி அது வாங்க,
இதுவாங்கன்னு கிளம்பிடுவோம்ல)

”ஹிமாலயா புக் ஷாப்லதான் இருக்கேன்.
பசங்களுக்கு புக்ஸ் வாங்க வந்தேன்பா”

”ஹிமாலயாவா சரி. போனதடவை அங்க
ஒரு வெயிட் மிஷின் பாத்தேன். வரும்போது
அதையும் வாங்கிகிட்டு வந்திடு!!!”

ரொம்ப நாளா வெயிங் ஸ்கேல் வாங்கணும்னு
ப்ளான். சரி வாங்கிகிட்டு போனேன்.





அப்ப பிடிச்சு அந்த மிஷினுக்கு பிடிச்சது
ஏழரை, தலைவலி எல்லாம். :)))

ஞாயிற்றுக்கிழமை ”வெயிட் செக்கிங் டே”வாக
அறிவிக்கப்பட்டது. அம்ருதா ஒரு நோட் புக்,
பேனா எடுத்துக்கொண்டு “எல்லோரும் வெயிட்
செக் பண்ண வாங்கன்னு” அறிவிப்பு கொடுத்ததும்
எல்லோரும் வெயிங் மிஷின் இருக்கற ரூம்ல ஆஜர்.

ஸ்டிரிக் டீச்சர் போல அம்ருதா, ”குனியாதீங்க, நேரா
பாருங்க, உங்க வெயிட்டை நான் பாத்து நோட்
செஞ்சுக்கறேன்னு” சொல்லிகிட்டே இருப்பா.

இந்த ரெக்கார்ட் மெயிண்டன் செய்வதால் நாம்
எடை அதிகரித்திருக்கிறோமா இல்லை குறைஞ்சிருக்கோமா!!!
அப்படின்னு தெரிஞ்சுக்கத்தான்னாலும் அடுத்தவங்க
முன்னாடி நம்ம வெயிட் தெரிஞ்சிடுமே(!!!)ன்னு
”என்னோட ட்ரெஸ் இப்ப வேற போட்டிருக்கேன்!!”
அதனாலதான் வெயிட் கூட காட்டுது” போன்ற
டயலாக்குகள் கேட்கும்.


ஞாயிற்றுக்கிழமை எடை பார்க்கும்பொழுது அதே
எடை இருக்கவேண்டும் என்பதால் அடிக்கடி
மிஷின் மேல் ஏறி வெயிட் செக்க ஆரம்பமானது.

சாப்பிட்டபின், சாப்பிடும் முன், வாக்கிங்கிற்குமுன்
வாக்கிங்கிற்கு பின் என ஒரே செக்கிங்தான்.

இப்படி அடிக்கடி ஏற ஆரம்பித்ததில் வெயிட்மிஷின்
பாவம் இளைத்திருக்கும். :))) வாயிருந்தால்
“என்னை விடுங்க!!” ப்ளீஸ்”னு வாய் விட்டு
கதறியிருக்கும்.


எடை பத்தி நினைக்கும்பொழுது இந்தப் பாடல்
எப்போதும் எனக்கு நினைவில் வரும்.
டூயட் படத்தில் பிரபுவை ””வர்ணித்து””
பாடல்.



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Tuesday, April 07, 2009

என்னால் மறக்கமுடியாத ஒரு நாள்!!!

அன்று ஆஷிஷ்ற்கு எல்.கே.ஜி அட்மிஷனுக்காக
மாம்பலம் பீ.எஸ்.மூத்தா பள்ளிக்கு செல்லவேண்டிய நாள்.
பெற்றோர் இருவரும் உடன் வரவேண்டும் என்று
கட்டாயம் போட்டிருந்தார்கள். ஆனால் சென்றது
ஆஷிஷும் ஸ்ரீராமும் மட்டுமே!!!!

ஆஷிஷின் முறை வந்ததும் தந்தையும், மகனும்
மட்டும் உள்ளே சென்றார்கள். குறிப்பிட்டு
சொன்ன பிறகு தாய் வரவில்லையே என்ற
யோசனையில் பிரின்சிபல் அவர்கள்
“அம்மா எங்கே? ஏன் வரவில்லை?”
என்று கேட்க, ஸ்ரீராம் வாய் திறக்குமுன்னரே
ஆஷிஷ்,” அம்மாவுக்கு இன்னைக்கு ஆபரேஷன்!
ஆஸ்பிடலில் இருக்காங்க. நீங்க சீக்கிரம்
இண்டர்வியூ முடிச்சிட்டீங்கன்னா, நான்
போய் அம்மாவிடம் இருப்பேன்னு” சொல்ல
ஆசிரியர் அதிர்ச்சி ஆகிவிட்டார்.

வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல்
”அட்மிட்டட்” என்று சொல்லி விட்டார்.
அப்படி என்ன ஒரு ஆப்பரேஷன்?

1.15 நாளாக அவதியுற்ற டைபாய்டு
வயிற்றில் ஒரு கட்டியாக உருமாறிவிட்டிருந்தது.

2. சிஸ்டோசில் என்று சொல்லப்படும்
சிறுநீர்ப்பை இறக்கம்(ஆஷிஷை உண்டாகியிருக்கும்பொழுது
அதிக கணமான் என் மாமியாரை தூக்கி சேவை
செய்ததனால் வந்தது)

3. அப்பண்டிசைட்ஸ் வெடித்து உடல் முழுதும்
பரவி விட்டது.


ஏப்ரல் 19 2000ஆம், வருடம் அன்றுதான்
ஆஷிஷின் இண்டர்வியூ + எனக்கு ஆப்பரேஷன்
நடந்தது. தாம்பரத்தில் இருக்கும் வீ.என்.ஹாஸ்பிடல்
அங்குதான் அட்மிட் ஆகி நடந்தது. இது என்
மாமாவுக்குச் சொந்தமானது.(அம்மாவுக்கு தூரத்து
உறவு)

வயிறு பெரிதாக ஊதி, அதி பயங்கர வாந்தி
ஏதும் உண்ணமுடியாத நிலையில் அனுமதிக்கப்பட்டேன்.
மூக்கில் ட்யூப் போட்டு ”பைல்” கலெக்ட்
செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

ஆப்பரேஷன் சக்ஸஸ். ஆனால் என்ன காரணமோ
என்னால் கண்ணைத் திறக்கமுடியாமல் மயக்கமாகவே
கிடந்தேன்.

எல்லாம் சரியாக நடக்க இது என்ன சோதனை?
உடம்பிலிருந்து ஏதோ வெள்ளை வெள்ளையாக
பஞ்சுபோல் வெளியாகிக்கொண்டிருந்தது!!!

நிலமை தீவிரமாகிவிட்டதை உணர்ந்து
மேலும்சிறப்பு மருத்துவர்களை வரவ்ழைத்தார்
மாமா.(அப்போது மாமா ராமசந்திராவிலும்
வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.மாமா
குழந்தைகள் மருத்துவ நிபுணர்)

ஆப்பரேஷன் ஃபார்மாலிட்டியாக உறவினர்களிடம்
”கையெழுத்து” வாங்குவார்கள். ஆப்பரேஷ்ன்
முடிந்த பிறகும் இருக்கும் என் உடல்நிலையால்
“முடிந்தால் காப்பாற்றுவோம்” என மறுமுறை
அயித்தானிடம் கையெழுத்து வாங்க வேண்டிய
நிலை.

எல்லோரும் ஒருநாள் சாகவேண்டியதுதான்
ஆனாலும் நான் இறந்தால் 3 மாதக் கைக்குழந்தையான
அம்ருதாவையும், 31/2 வயது ஆஷி்ஷையும்
வைத்துக்கொண்டு அயித்தான் என்ன கஷ்டப்படப்
போகிறாரோ??!! என்பதுதான் என் கவலையாக
இருந்தது. அந்தக் கஷ்டம் அவர் படக்கூடாது
என போராட ஆரம்பித்தேன். நான் இறக்க
மாட்டேன்! பிழைத்து வருவேன்! என
திடமாக நம்பினேன்.


பேச முடியாது, மூக்கில் ட்யூப்! பசி எடுக்கும்
ஆனால் சாப்பிட முடியாது.(டாக்டர்.நாகராஜ்
மாமா வந்து என்னை பார்க்கும்போதெல்லாம்
”பசிக்குதுமாமா!” என்பேன். மாமாவின் வீடு
ஆஸ்பிடலுக்கு மேலே தான். பாட்டியிடம்
போய்”எனக்கு சாப்பாடு வேண்டாம். கீழே
பசிக்கு சாப்பிடமுடியாமல் கலா அவஸ்தை
படுகிறாள்” என் அழுவாராம். :( )

அத்தை மகளீர் மருத்துவ நிபுணர். அம்ருதாவின்
பிரசவம் பார்த்ததும் அத்தைதான். பல மருத்துவர்கள்
வந்து பார்ப்பார்கள். பல ஸ்பெஷலிஸ்டுகள்!!
”முடிந்தவரை பார்ப்போம்!!” என்று சொல்லி
கொஞ்சம் கொஞ்சம் கை விரிக்க ஆரம்பித்தார்கள்.


3 மாதக் குழந்தை அம்ருதா என் நாத்தனார் வீட்டில்.
யாரிடமும் போகமாட்டேன் என்று ஆஷிஷ் அப்பாவுடன்
அலுவலகம், சில நாள் தான் மட்டும் அப்பா வரும்வரை
வீட்டில் தனியாக இருப்பது என இருந்த நிலை கேட்டு
கண்ணீராக வரும். ”குழந்தைகளைப் பார்த்தே
ஒரு வாரமாகிவிட்டது”! அத்தையிடம் கண்ணீர் விட
அறைக்கு வெளியே அம்ருதாவின் முகத்தைக் காட்டினார்கள்.
ஆஷிஷ் வந்து பார்த்துவிட்டு,” நான் அப்பா கூட இருக்கேன்.
சீக்கிரம் வாம்மா!!” என்றான்.


யேசுநாதர் உயிர்த்தெழுந்த
நந்நாள் அன்றுதான் பைல் வருவது நின்று மூக்கிலிருந்து
ட்யூபை அகற்றினார்கள். அதுவரை 110 பாட்டில்கள்
சலைன் மட்டுமே என் உணவாக இருந்தது. அன்றுதான்
முதன் முதலாக செரல் சாப்பிட்டேன். படுத்த
படுக்கையாக இருந்த நான் நடக்க ஆரம்பித்தேன்.
என் நம்பிக்கை வீணாகவில்லை. ஆம்
நானும் உயிர்த்தெழுந்தேன். ”பிழைப்பது கடினம்”
என்று மருத்துவர்கள் கூறிய பிறகும் பிழைத்தது
புனர்ஜென்மம் தான். அந்த மருத்துவமனையில்
வேலை பார்க்கும் ஜான் அண்ணாவும் அவரது
மனைவியும் எனக்காக தினமும் பிரார்த்தித்தார்களாம்.
ஈஸ்டர் அன்று நான் எழுந்ததில் அவர்களுக்கு
பெருமகிழ்ச்சி.


ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வுகளை என் மனம்
அசைபோடாமல் இரு்க்காது.

நான் உயிர்த்தெழுந்தது என் தன்னம்பிக்கையால்தான்
என டாக்டர் மாமா எப்போதும் சொல்வார்.

மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாளன்று
மாமா என்னையும் அயித்தானையும் அழைத்து
தனியாகச் சொன்னது இப்போதும் என் காதில்
ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

“நீ தன்னம்பிக்கை பெண்தான். அதில் எந்த
மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் ஒரு குழந்தை
மருத்துவ நிபுணணாக நான் வியப்பது ஆஷிஷைப்
பார்த்துதான். தன் தாயை இவ்வளவு மோச
மான உடல்நிலையைப் பார்த்த பிறகும்
தைரியமாக உலாவருகிறான். இதுவே
மற்ற குழந்தையாக இருந்திருந்தால் அந்தக்
குழந்தையை அட்மிட் செய்யும் அளவுக்கு நிலமை
மோசமாக இருக்கும். ஐ அம் ரியலி ப்ரவுட்
ஆஃப் ஆஷிஷ் அண்ட் யூ” என்றார்.

தாயைப்போல பிள்ளை என்பார்கள். என்னைப் போல்
ஆஷிஷும் இருப்பதில் ஆண்டவனுக்கு நன்றி.

இது நடந்து 6 மாதத்தில் அயித்தானுகு இலங்கைக்கு
மாற்றலாகிவிட்டது. வேறு வேலைக்கு போகவும்
முடியாது(ஆஸ்பிடல் செலவு வேறு கன்னாபின்னாவென்று
ஆகிவிட்டிருந்தது) நானும் பிள்ளைகளும் மட்டும்
சென்னையில் தனியாக.


”எந்த தைரியத்தில் என்னை இப்படி தனியாக
விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்!!” என்று கேட்டபோது
அயித்தான் சொன்னது “உன் தன்னம்பிக்கை மேல்
எனக்கு பரிபூர்ண நம்பிக்கை” என்று. :))))

பங்குனி உத்திரமும் பல ஞாபகங்களும்

முருகன் மீது பக்தி அப்பாவால் வந்தது.
அப்பா சஷ்டி கவசம் சொல்லக் கேட்டு
அவரோடு போட்டி போட்டு 10 வயதில்அப்பாவுக்குத்
தெரியாமல் மனப்பாடம் செய்து அப்பாவிடம்
பாராட்டு வாங்கினேன்.

இலங்கையின் மீது ஈர்ப்பு வரக்காரணம்
அப்பாவும், கந்தனும் தான்.
அப்பாவிடம் ஒரு வாழ்த்து(அவர்களின் திருமணத்தி்ற்கு
அப்பாவின் நண்பர்கள் கொடுத்தது)இருக்கும். அதில்
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தன் என போட்டிருக்கும்.
என் ஃப்வேரிட் போட்டோ அது. வீட்டை விட்டுக்
கிளம்பும்போது கண்ணில் படுவது போல் மாட்டிவைத்து
அன்றாடம் பார்த்துவிட்டுத்தான் செல்வேன், வீட்டில்
நுழைந்ததும் அந்தப் படம் தான் கண்ணில் முதலில்
படும்.

இந்தக் கோவிலுக்கு போகவேண்டும் என்று ஆசைப்பட்ட
பொழுது அப்பா இலங்கைக்கு பயணம் போய் வந்து
கதிர்காமம் பற்றிச் சொன்னார். அன்று ஆரம்பித்தது
எனக்கு இலங்கை மீதான காதல். வாழ்வில் ஒருமுறையாவது
கதிர்காமத்தை தரிசித்திடவேண்டும் என்று நினைப்புக்கு
ஆண்டவன் 7 வருடங்கள் அவனை விடாமல் தரிசிக்க
வைத்தான்.

நல்லூர் கந்தனை மட்டும் பார்க்கமுடியவில்லை.
அதற்காகவேனும் ஒருமுறை இலங்கை செல்வேன்.
இறைவனைக் கண்ணாரக் காண்பேன் எனும்
நம்பிக்கை இருக்கிறது.



அங்கே இருந்த வரை வருடம் தவறாமல் கதிர்காமம்
சென்று வந்தோம். கொழும்புவில் பல இந்து கோவில்கள்
இருந்தாலும் எனக்கு கொம்பனித் தெரு முருகன்
கோவில்தான். (ஸ்லேவ் ஐலேண்ட் முருகன்)


பிரதி செவ்வாய்கிழமை மாலை வேளையில் கோவிலில்
சஷ்டி கவசம் படிப்பார்கள்.

பங்குனி உத்திரம் என்றால் உண்ணா நோன்புதான்.
விரதமிருந்து வீட்டில் பூஜை செய்வேன். இலங்கை
போயிருந்த புதிதில் பங்குனி உத்திரத்தன்று
நாள் முழுதும் பட்டினி இருந்து பூஜை செய்து
கொம்பனித்தெரு கோவிலுக்குச் சென்றோம்.

அர்ச்சனைக்கு சீட்டு வாங்கிக்கொண்டு
சன்னதிக்கு அருகில் வந்த நேரம்
கோவில் பூசாரி அருகில் வந்து ,”இன்று
உங்கள் பெயரில் சாமி பூஜை செய்து,
சாமி புறப்பாடு செய்யலாமா?” என்று
கேட்டது அதிசயம் + ஆச்சரியம்.

அந்த பூசாரிக்கு எங்களை முன்னம் தெரியாது.
ஆண்டவனாக எங்களை பூஜை செய்ய வைத்திருக்கிறான்
என சந்தோஷப்பட்டு உடன் ஒத்துக்கொண்டோம்.
என் விரதத்தை ஆண்டவன் மனமார ஏற்றுக்
கொண்டுள்ளான் என சந்தோஷப்பட்டேன்.
ஒவ்வொரு ஞாயிறும் தவறாமல் கோவில்
செல்வோம். நான் அங்கே இருந்த பொழுதுதான்
கொம்பனித் தெரு கோவிலுக்கு கும்பாபிஷேகம்
நடை பெற்றது.

கானா பிரபாவின் இந்தப் பதிவு
எனக்கு பழைய ஞாபகங்களை கிளறிவிட்டது.

சிட்னி முருகனின் தேரோட்டம்

மாமாவின் மறைவால் இந்த வருடம் பங்குனி
உத்திரத்திற்கு கோவில் செல்ல முடியாதே என்று
நினைத்துக்கொண்டிருந்தேன். பிரபா கொடுத்த
லிங்கால் மனமார கந்தனை தரிசித்தேன்.
கு்றை தீர்ந்தது. நன்றி பிரபா.





Friday, April 03, 2009

கலக்கிய லெட்டர்......

என் கல்லூரி வாழ்க்கை அல்பாயுசில் (ஒரே வருடத்தில்)
முடிந்தாலும் நான் அந்த ஒரு வருடத்தில் நான் அடித்திருக்கும்
கொட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல..

ஆங்கில இலக்கியத்தில் பல சுவாரசியங்கள் இருந்தாலும்
நான் மிக ரசித்தது PHONETICS.

பேச்சுவழக்காக நாம் செய்து கொண்டிருக்கும் பல
தவறுகளைத் தெரிந்து திருத்துக்கொண்டிருக்கிறேன்.

டூர் தவறு டுவர்(our அவர் என்று சொல்கிறோமே)
டைரக்டர் தவறு டிரைக்டர் சரி
பைனான்ஸ் தவறு பினான்ஸ் சரி

இப்படி நிறைய்ய சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆங்கில இலக்கியத்தில் PHONETICS உச்சரிப்புக்களுக்கு
ஒவ்வொரு symbol உண்டு. உதாரணமாக GOAT SOUND WORDS என்போம்.
may,hay,way,say போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும்
பொழுது மே, ஹே, வே, சே என ஆட்டின் குரல்
போல் உச்சரிப்பது தான் சரி. அதை நாம் உணர
ப்ரத்யேகமான symbol இருக்கும். அந்தந்த இடத்தில்
அந்தந்த symbol பார்த்து உச்சரிப்போம். வேடிக்கையாக
இருந்தது.


இந்தப் பாடம் முடிந்ததும் கல்லூரி விடுமுறை
விட்டார்கள். நான் படித்தது பள்ளத்தூர் கல்லூரியில்.
என் தோழிகள் அனைவரும் காரைக்குடியிலிருந்து
வந்து படித்தார்கள். புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு
அனைவருக்கும் வாழ்த்து அனுப்ப நினைத்தேன்.
அதுவும் கொஞ்சம் வித்தியாசமாக!!!!!

போஸ்ட் கார்ட் வாங்கி வந்து அழகாக ஸ்கெட்ச்
பேனாவால் வரைந்து மல்ட்டி கலரில் பொனடிக்
சிம்பல்களுடன் வார்த்தை ஜாலம் செய்து
கார்ட் அனுப்பி வைத்துவிட்டு ஆனந்தமாக இருந்தேன்.

கல்லூரி திறந்து முதல்நாள். காலை 9 மணிக்கு
பஸ்ஸை விட்டு நான் இறங்கியதும் கல்லூரி
வாசலிலேயே காத்திருந்த என் தோழி விசாலாட்சி
“அடியேய், அடுத்த பஸ்ஸை பிடிச்சு அப்படியே
ஊருக்கு போயிடு!!!எல்லோரும் கொலை வெறியோடு
உனக்காக காத்திருக்காங்க”ன்னு சொல்ல அப்படி
என்ன செஞ்சிட்டோம்னு!!! யோசிச்சுகிட்டே
கிளாஸுக்கு போனேன்.

நான் பொனடிக்ச் சிம்பல்களுடன் அனுப்பியிருந்த
வாழ்த்தை பார்த்து பலரின் பெற்றோர்கள்
“என்னவோ ஏதோ! யாரோ அனுப்பியிருக்காங்க”
எனும் ரீதியில் திட்டி தீர்த்துவிட்டார்களாம்.
அவர்களுக்கெல்லாம் புரிய வைக்க எங்கள்
பாட நோட்டை காட்டி பொனடிக்ச் பாடங்கள்
எடுத்து புரிய வைத்தார்களாம்.

எல்லோரும் சேர்ந்து செம கும்மு கும்மிவிட்டார்கள்!!:(((

ஆனால் வித்தியாசமாக வாழ்த்தனுப்பி பொனடிக்ஸ்
புகழ் பரப்பியதற்காக கல்யாணி மேடம் மட்டும்
என்னை பாராட்டினார்கள். அதற்கப்புறம் தான்
அவர்களின் கும்மி நின்றது. :)))

****************************************

சங்கட்டி.. சங்கடங்கள்...சந்தோஷங்கள்

பள்ளி விடுமுறைக்கு ஒரு முறை என் அத்தை
வீட்டுக்கு சென்றிருந்தேன். சித்தூருக்கு பக்கத்தில்
ஒரு சின்ன ஊர் அது. மாமா தெலுகு பண்டிடாக
அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் அத்தை வித்தியாசமான உணவை
சமைத்துக்கொடுத்தார். கொதிக்கும் வெந்நீரில்
போட்டு எடுத்த அந்த உருண்டைக்கு தொட்டுக்கொள்ள
புளியஇலை குழம்பு. செம் ருசியாக இருந்தது.

அந்த உணவுக்கு பெயர் சங்கட்டி.
கேப்பை மாவில் செய்யப்படும் உணவு.
ஆந்திரா ஷ்பெஷல். அதன் பிறகு சங்கட்டியை
அடிக்கடி நினைத்துக்கொள்வேன். அத்தையை
தவிர வேறு யாருக்கும் அதைச் செய்யவும்
தெரியாது. அதன் பிறகு நான் அத்தையின்
ஊருக்கு செல்லவும் இல்லை. :((

சென்ற டிசம்பரில் ஹைதை பேகம்பேட் ஏரியாவில் இருக்கும்
லைஃப் ஸ்டைல் கட்டிடத்தில் இருக்கும்
மால்குடி உணவகத்துக்கு அயித்தான் அழைத்துச் சென்றார்.

தென்னிந்திய உணவுவகள் கிடைக்கும் இடம் அது.
சவேரா ஹோட்டலின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும்
அமைப்பு. பழங்கால கிராம வாழ்க்கையை சித்தரிக்கும்
ஓவியங்கள் அழகாக இருக்கும். மெனு கார்டில்
ஒவ்வொரு மாநிலசிறப்பு உணவுவகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு
கொடுத்திருந்தார்கள். பார்த்துக்கொண்டே வந்த எனக்கு
அந்த மெனு கார்டில் சங்கட்டி இருக்க கண்டு ஆச்சரியம்!!!!

சங்கட்டியும், பூண்டு குழம்பு ஆர்டர் செய்தேன்.
“சும்மா டேஸ்ட் பாருங்க”! என அயித்தானுக்கும்
பிள்ளைகளுக்கும் ஒரு ஸ்பூன் கொடுத்தேன்.
அவர்களுக்கும் அந்த ருசி பிடிக்க இன்னொரு ப்ளேட்
ஆர்டர் செய்தோம்.

அப்பொழுது முதல் மாதம் ஒருமுறை மால்குடி
சென்று சங்கட்டி+ பூண்டுகுழம்பு/வடைகறி சாப்பிடுவது
வழக்கம். நாம சந்தோஷமா இருந்தா அது
பொறுக்குமா???

ஆரம்பத்தில் இருந்தது போல இல்லாமல் அவர்களின்
சேவை தரம் குறைய ஆரம்பித்தது. சுடச்சுட சாப்பிட்டால்
தான் ருசியாக இருக்கும். சூடு ஆறி வரண்டு போன
நிலையில் உணவை பரிமாறினார்கள். காலம் தாழ்த்தி
உணவு வர ஆரம்பித்தது. ”அறவருத்த சாப்பாட்டுக்கு
விருவிறுத்த பட்டினி பரவாயில்லை” என அப்பா
அடிக்கடி சொல்வார். காசு கொடுத்து சாப்பிடும் பொழுது
ருசி,தரம் குறைவானால் அங்கே செல்லவே
வேண்டாம் என முடிவெடுத்தோம். என் சங்கட்டி
ஆசை அதோ கதியாகிப் போனது. லைஃப்ஸ்டைல்
பக்கம் செல்லும் போதெல்லாம் “வீ மிஸ் யூ சங்கட்டி”
என பிள்ளைகள் சொல்வார்கள்.


என் அம்மம்மாவுக்கு ஒரு பழக்கம். எந்த ஒரு
உணவுவகையையும் ஹோட்டலில் சமைப்பது போல
வீட்டிலும் சமைத்து அசத்துவார். அவரின் அபிமான
பேத்தியாகிய நானும் அசத்த வேண்டும் என்று
பிள்ளைகளுக்காக சங்கட்டி செய்யக் கற்க வேண்டுமென
யோசித்தேன். அத்தையின் செய்முறையை விட
ஈசியாக சங்கட்டி தயாரிக்கலாம் என அறிந்தேன்(நன்றி
மா டீவியின் “ மா ஊரி வண்ட”( எங்க ஊரு சமையல்)

சர்ப்ரைஸாக பூண்டு குழம்பு, சங்கட்டி செய்து
டின்னருக்கு கொடுத்தேன். என் முதல் சங்கட்டி
மிகச் சரியாக வந்து மால்குடி சங்கட்டியையும்
ருசியில் தோற்கடித்துவிட்டதாக அயித்தான்
பாராட்டினார். பிள்ளைகள் ,”மால்குடி போகாவிட்டாலும்
இனி சங்கட்டி கிடைக்கும்” என சந்தோஷ பட்டனர்.


சங்கட்டி செய்முறை இங்கே:

Thursday, April 02, 2009

அப்டேட்ஸ்...

ரயிலில் பயணிக்கும் பலருக்கு சமீபகாலமாக நிறைய
பிரச்சனைகள்!!! நாம் பயணச்சீட்டை பதிந்த பொழுது
கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணில் வேறொருவர் அமர்ந்து
கொண்டு “இந்த இடம் என்னிது”ன்னு குதிப்பார்.
நமக்கும் பயங்கர டென்ஷனாகும். பயணச்சீட்டு பரிசோதகர்
வந்து ”தீர்ப்பு” சொல்லும் வரை நிம்மதியாக உட்காரக்
கூட முடியாது.

எல்லாம் லல்லுவின் உபயமான ”சைட் பர்த்களிலும்
மிடில் பர்த்” திட்டத்தினால் வந்த குழப்பங்கள்.
அந்த மிடில் பர்த் கிடைத்தவர்கள் நிஜமாகவே
பாவப்பட்டவர்கள்தான். காற்றும்வராது. அந்த பர்த்தில்
ஏறி படுக்க தனித்திறன்!!! வேண்டும்.

நேற்று நெல்லூரிலிருந்து வந்த பொழுது அந்த
மிடில் பர்த்கள் மாயமாகிப் போயிருந்தது!!!!
அவை எடுக்கப்பட்டு விட்டனவாம்.
யார் செய்த புண்ணியமோ!! மக்களுக்கு
துயர் தந்த அந்த மிடில் பர்த்களை எடுக்கவைத்த
புண்ணியவன்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

****************************************


சென்றமுறை அவசரமாக நெல்லூர் செல்ல நேர்ந்த பொழுது
ரயிலில் டிக்கெட் இல்லாமல் காரில் செல்ல நேர்ந்தது.
முதன் முறையாக ஆந்திராவிற்குள் காரில் என் பயணம்.
மிக ரசித்தேன். சாலைகளின் இரு புறமும்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென்று
பயிர் விளைந்த பூமியாக இருந்தது.
ஹைதை-மிரியால்குடா, அத்தன்கி,
ஓங்கோல், காவாலி, நெல்லூர், சென்னை என சாலை
நீள்கிறது.

அத்தன்கி,எனும் இடம் தாண்டிய பிறகு வருகிறது

National Highway 5 (NH 5) .

அந்த தேசிய நெடுஞ்சாலையை கண்ட பொழுது என் கண்களையே
என்னால் நம்ப முடியவில்லை!!!!
வழுக்கும் சாலை. மீடியேட்டர்களில் பூத்துக்குலுங்கும் பூக்கள்,
குறைவான வாகனங்கள்.(லாரிகள்தான் அதிகம்)

ஆங்காங்கே பஞ்சாபி தாபாக்கள். நிஜ்மாகவே இவை
பஞ்சாபி தாபாதானா என்ற சந்தேகத்துடன் நாங்கள்
சென்ற இடத்தில் பஞ்சாபிக்காரர் அருமையாக
பாலக், தால், சுடச்சுட சாப்பிட கொடுத்தார்.
(என்னுடைய சுத்த ஹிந்தியைக் கேட்டு
சொந்த கதை, சோகக்கதை எல்லாம் சொல்ல
ஆரம்பித்தார். :)) அம்மாக்கு இங்கேயும் ஃப்ரெண்ட்
கிடைச்சிட்டாங்கன்னு!! பசங்க கிண்டல்தான்.)



இந்த அருமையான சாலைகள் நான் ஏதோ வேற்று நாட்டில்
பயணித்ததைப் போலிருந்தன. மலேசியா நகரத்திலிருந்து
விமான நிலையத்திற்கு செல்லும் பயண அனுபவம் போல்
மிக அருமையாக இருந்தது.

***********************************************

மாமாவி்ன் காரியங்கள் நல்லமுறையில் நடந்து முடிந்தது.
காரியம் நடைபெறும் நாளில் பலவித தானங்கள் கொடுப்பது
பழக்கம். இவைகளை விட மாமாவின் கண்களை தானமாக
கொடுத்திருப்பதுதான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது.


மாமா சென்னை ட்ரஷரி டிபார்ட்மெண்டில்
கெஜடட் ஆபீசராக இருந்து ஓய்வு பெற்றவர்.
மாமா ரிடையர்ட் ஆவதற்கு 3 வருடங்கள்
முன்பு அவருக்கு உதவியாளராக வேலைக்குச்
சேர்ந்த திரு.விஜயகுமார் அவர்கள் மாமாவின்
செய்தி கேட்டு உடன் ஓடி வந்திருந்தார். 10 ஆம்
நாள் காரியங்களுக்கும் வந்திருந்து “சுப்ரமண்யம்
அவர்கள் எனக்கு தெய்வம் போல. என அவர்
வேலைக்குச் சேர்ந்திருந்த நாளான்று மாமா
அணிந்திருந்த உடையின் நிறங்கள் வரை
தனக்கு நினைவிருப்பதாகச் சொல்லி மாமாவின்
ஞாபகமாக அந்த உடைகளை வாங்கிச் சென்றார்.


நீத்தார் பெருமை கூறும் நாளில் உறவினர் ஒருவர்
“திரு.சுப்ரமண்யம் ஒரு நிறைவான வாழ்வை
வாழ்ந்திருக்கிறார். ச்ராவணக்குமாரன் போல் பெற்றோருக்கு
தன் கடமையை விடாது செய்திருக்கிறார், ராமன்
தன் தம்பிகளை தன் கண்களாக பார்த்துக்கொண்டதுபோல்
தனது தம்பியை வளர்த்திருக்கிறார். தந்தையாக,
கணவராக, நண்பராக, உறவினராக, தாத்தாவாக
தனது வேலையை நிறைவாகச் செய்து ஒரு பூர்ணமான
வாழ்வை வாழ்ந்திருக்கிறார். அவர் காட்டியிருக்கும்
வழியில் நாம் சென்று அவரைப்போல இருக்க முயல்வதாலேயே
அவரின் ஆத்மா சாந்தி அடையும் ” என்று சொன்னார்.
சத்தியமான வார்த்தைகள் என ஒவ்வொருவர்ம்
மனமார ஏற்றுக்கொண்டனர்.
*************************************
ஒரு வாரம் விடுமுறை முடிந்து விட்டது
வந்துவிட்டேன் என்று சொல்லவே இந்த அப்டேட்ஸ்.
வந்திட்டேன். வந்திட்டேன் வந்திட்டேன். :)))