Total Pageviews

Friday, August 28, 2009

கொழும்பில் ஒரு உலா-1

கொழும்பு - பெந்தோட 2 மணி நேரப்பயணம்.
வழியில் வெள்ளவத்தை சண்முகாஸில் மதிய
உணவு. முடிந்ததும்
அயித்தானும்,பாலகிருஷ்ணாவும்
மட்டும் ஹோட்டலுக்கு போய் சாமான்களை
வைத்துவிட்டார்கள்.

வேன் வாடகை அதிகமாக இருக்கும் என்பதால்
அவருக்கு நன்றி சொல்லி பணத்தைக்கொடுத்து
அனுப்பி விட்டோம்.

நாங்கள் ஷாப்பிங்க் செல்வதாகவும்,
அயித்தான் மீட்டிங்கிற்கு(அவுக ஹெட் ஓபிஸ் அங்கதான்
இருக்கு)செல்வதாகவும் திட்டம்.

”வண்டி இல்லாமல் எப்படி? நான் மீட்டிங்கிற்கு
போனா எப்படி மேனேஜ் செய்வ? ”என்றார் அயித்தான்.

”ஹலோ! இது என்னோட இடம். இங்க இருந்த போது
நீங்க ஆபிஸ் போனா நான் எப்படி கடைக்கு போவேனோ
அது மாதிரிதான். கவலைப்படாம போங்கப்பு,
ரவி அண்ணா இருக்காரு” என்று சொன்னதும் சிரித்துக்கொண்டே
எஞ்சாய்! என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

வருவதை பற்றி முன்னாடியே ரவி அண்ணாவுக்கு
போன் செய்து சொல்லியிருநெதேன். அவருக்கு
போன் செய்து இரண்டு ஆட்டோ எடுத்துக்கொண்டு
5 மணி வாக்கில் House of Fasion வந்து விடும்படி
சொன்னேன்.

House of Fasion இது துணிக்கடை. இலங்கையில் தயாரிக்கப்படும்
ஆயத்த உடைகள் ஏற்றுமதி தரம் வாய்ந்தவை.
ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 4 வருடங்களூக்கு முன்
வாங்கின உடை இப்போதும் அப்படியே இருக்கிறது.
கொடுக்கும் விலைக்கு தரமான துணிகள்.
Duplication Roadல் இருக்கிறது House of Fasion.

எப்போதும் கூட்டம்தான். இப்பொழுதெல்லாம்
நம்மூர் கம்பெனிகள் பல இலங்கையில்தான்
மீட்டிங் வைக்கிறார்கள். சென்னையிலிருந்து
மும்பை செல்லும் பணம் தான் சென்னை-கொழும்பு.
வருபவர்கள் எல்லாம் இந்தக்கடைக்கு ஒரு விசிட்
அடித்து மூட்டை மூட்டையாக வாங்காமல் போக
மாட்டார்கள்.

நாங்கள் அங்கே இருந்த நேரம் 25 பேர்கொண்ட
இந்தியர்கள் ஒரு பஸ்ஸில் வந்து பர்சேஸ் செய்து
சென்றார்கள்.


பில்லிங் முடித்து வெளியில் சந்திக்கலாம் என்று
அண்ணபூர்ணாவிடம் சொல்லிவிட்டு
ஒவ்வொரு தளமாக போனோம். வேண்டியதை எடுத்தார்கள்
பிள்ளைகள். எனக்கு அங்கே செட் ஆகாது. எனக்கு
என் கடை இருக்கு. அதுதான் சரிப்பட்டு வரும். பிள்ளைகளுக்கு
அவர்கள் விரும்பியது எடுத்தேன். பிள்ளைகளூக்கு
ஸ்விம்மிங் கிளாஸ், என பலதும் அங்கே கிடைக்கும்.


வெளியே வந்து ரவி அண்ணாவுக்கு போன் செய்ததும்
சுனில் எனும் ஆட்டோ டிரைவருடன் வந்துவிட்டார்.
எங்களைக்கண்டதும் ஒரே குஷி. பிள்ளைகள் போய்
பக்கத்தில் நின்று ரவி அண்ணா கைபிடித்து பேசினர்.
சுனிலுக்கு சிங்களம் மட்டும்தான் தெரியும். கொஞ்சம்
ஆங்கிலமும் கதைப்பார் என்பதால் முகம் முழுக்க
சிரிப்புடன் பேசினார்.

10 நிமிட இடைவெளியில் அண்ணபூர்ணாவும் வந்துவிட்டார்.
நமக்கு கிடைக்கலையே என்றார். என் கடைக்கு போகலாம்
இரு்ங்க!! என்றேன்.

அடுத்த பயணம் வெள்ளவத்தை ரோமா Batik கடைக்கு.
மலேசியாவில் பத்திக் புகழ் பெற்றது. அதுபோல் இலங்கையிலும்
பத்திக் அருமையாக இருக்கும். பல கடைகள் இருந்தாலும்
ரோமா Batik எங்களுக்கு(மீ & அண்ணபூர்ணா) பிடித்த இடம்.
பிள்ளைகளூக்கு, எனக்கு எடுத்தோம். அயித்தானுக்கு
பத்திக் டிசைன் பிடிக்காது.

அங்கிருந்து நேராக என் கடை. THIANGARA இது இருப்பது
திம்பிரிகஸ்ஸ்யாய(Thimbirigasaya). நாங்கள் முன்பிருந்த
வீட்டிலிருந்து 2 நிமிட நடை தூரம். நான் விரும்பும்
பேண்ட்கள், ஷார்ட் குர்த்தீஸ், ஸ்கர்ட் எல்லாம் கிடைக்கும்.
பசங்க பர்சேசிங் ஆகிடுச்சு. எனக்கும் அண்ணபூர்ணாவுக்கும்தான்
வேலை. பசங்களை அழைத்துக்கொண்டு பாலகிருஷ்ணா
பக்கத்திலே இருக்கும் SENSAL பேக்கரிக்கு போனார்.
பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த இடம் அது.

நானும் என் தோழியும் எங்களுக்கு தேவையானவற்றை
பார்த்து எடுத்துக்கொண்டிருந்தோம். “அக்கா நல்லா
இருக்கீங்களா?பாத்து எம்புட்டு நாளாச்சு!!” என்ற
குரல் கேட்டு நிமிரிந்து பார்த்தால் அந்தக் கடையில்
வேலை பார்க்கும் பாபு நின்று கொண்டிருந்தார்.
அடிக்கடி செல்லும் இடம் என்பதால் நல்ல பழக்கம்.

என்னை மறந்திருப்பார் என்றே நினைத்திருந்தேன்.
மறக்காமலிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
இந்தக் கடையில் தமிழ் பேசுபவர்கள் இருப்பார்கள்.
நமக்குத் தேவையானவற்றை பக்கதிலிருந்து
எடுத்துக்கொடுப்பார்கள்.

அயித்தான் தன் மீட்டிங் முடிந்து விட்டதாகவும்
தானும் தியங்கரா வருவதாகவும் சொன்னார்.
(அவுக ஆபிஸும் 5 நிமிஷ தூரம் தான்) அவரும்
வந்து ஹேண்ட்லூம் ஷ்ர்ட்கள் எடுத்துக்கொண்டார்.

பர்சேசிங் முடித்து ஆட்டோவில் ஹோட்டலுக்குச் சென்றோம்.
துணிகளை ரூமில் வைத்துவிட்டு ஃப்ரெஷாகி
நடை தூரத்தில் இருக்கும் CRESCAT FOOD COURTல் சாப்பாடு.

இங்கேயும் சண்முகாஸ் இருக்கிறது, பிட்சாஹட், ஸ்ரீலங்கன் சாப்பாடு,
சைனீஸ் எல்லாம் இருக்கும். தேஜூ பெத்தம்மா முகத்தை
தூக்கி வைத்துக்கொண்டு இருந்தாள். ”என்னாச்சு?
என்று விசாரித்தால்,”எனக்கு இங்கே சாப்பிட வேண்டாம்
ஆண்ட்டி, உங்க வீட்டுக்கு போவோம். பிட்சா தோசைசெஞ்சு
கொடுங்க” என்றாள்.

நாங்கள் இன்னமும் கொழும்புவில் இருப்பதாக நினைத்துக்
கொண்டிருக்கிறால் போலும்.

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பற்றி நிறைய்ய
செய்திகள் இருக்கு. அதைப்பற்றிய அடுத்த பதிவோடு
சந்திக்கிறேன்.

Thursday, August 27, 2009

அலைகடலின் ஓரத்தில் ஆனந்தமாய் ஒரு இரவு...

பாஸ்மதி அரிசியில் சோறு சமைத்து(சின்ன ரைஸ் குக்கர்
கொண்டு போயிருந்தோம்ல :) ) டப்பாவில் போட்டு எடுத்துக்
கொண்டோம். வழியில் சாப்பாடு சரியில்லாமல் இருக்கும்.

கதிர்காமம் - பெந்தோட (Bentota) அடுத்த பயணம்.
ஆனந்தமான தரிசனத்துக்கு பிறகு அலைகடலின் ஓரத்தில்
தங்கி ரெஃப்ரெஷ் செய்து கொள்ளத் திட்டம்.

Tangale எனும் இடத்திலிருந்து இடது பக்கம் அலைகடல்,
வலது பக்கம் பசுமை படர்ந்த மரங்கள். இதற்கு இடையேயான
பயணத்தின் போது எப்போதும் என் மனம் பாடும்
பாட்டு,”பட்டம் தரத் தேடுகிறேன்! எங்கே அந்த நாயகன்!!”


என் மொபைலில் எடுத்த போட்டோ இது.



ஹிக்கடுவ எனும் இடத்தில் மீன்பிடிக்க இப்படி
குச்சி கட்டி அதன் மேல் அமர்ந்து மீன் பிடிப்பார்கள்.
(பார்த்திபன் கனவு படத்தில் ஒரு காட்சியில் வரும்)



திஸ்ஸமஹாரம- இங்கு கிடைக்கும் தயிருக்கு ஈடு இணையே
இல்லை. இலங்கை சூப்பர் மார்க்கட்டுகளிலும் சட்டியில் தயிர்
கிடைக்கும். ஆனால் திஸ்ஸா தயிர்... ம்ம்ம்ம்.

அத்துடன் கீத்துல் பானி சேர்த்து சாப்பிட்டால்.... :)))
வழியெங்கும் தயிர் கடை. மீ கிரி என்பார்கள்.
நாங்களும் இரண்டு சட்டி வாங்கி கொண்டோம்.
பாஸ்மதி அரிசியில் சமைத்த சோற்றில் தயிர்
சோறு பிசைந்து, காக்ரா சப்பாத்தி, ஊறுகாயுடன்
வழியிலேயே கடலலைகளை பார்த்துக்கொண்டு
எங்கள் மதிய உணவு அமர்க்களமாக நடந்தது.




நாங்கள் கொண்டு சென்றிருந்த சீடி முடிந்து போக
டிரைவர் அண்ணா தா.நா.4777 படம் பார்த்தோம்.
ஹிந்தியில் நானாபடேகர் கலக்கியிருந்த படம்.
தமிழிலும் முதன் முறையாக அதே எப்கட்டுடன்(ஓரிஜினல் மாதிரி)
படம் அருமையாக இருந்தது. கிளைமாக்ஸ் வருவதற்குள்
ஹோட்டல் வந்துவிட்டது.

ஹோட்டலின் பெயர் LIHINIYA SURF -BENTOTA.


எம்புட்டு அழகா இருக்குல்ல...




பிள்ளைகள் நீச்சல் குளத்திற்கு செல்லவேண்டும்
என்று ஒரே அடம். :))


நானும் அண்ணபூர்ணாவும் சொல்லிவைத்தாற் போல்
நீச்சலுடை எடுத்து செல்ல மறந்துவிட்டதால் தீர்க்கரை பாவி
போல் நிற்பதை விட மணலில் கால் புதைய நடந்தோம்.
அயித்தானும், பாலகிருஷ்ணாவும் பிள்ளைகல் நீச்சல்
குளத்தில் விளையாட பார்த்துக்கொண்டார்கள்.

பிள்ளைகள் water polo விளையாண்டார்கள்.
நான்குபேரும் இரு குருப்பூகளாக பிரிந்து சரி
விளையாட்டு.




அங்கே தயாரிக்கப்படும் பிட்சா மிக அருமையாக இருக்கும்
என்று கேள்விப்பட்டு இரவு உணவு அங்கேயே சாப்பிட்டோம்.
மிக அருமையான, அதிகம் சீஸ் இல்லாத பிட்சா.
அவர்கள் தயாரித்த விதம் மிக அருமை. அப்புறமாக அதை
யூ ட்யுபில் ஏற்றி பதிவு போடுகிறேன்.

மணல் திட்டில் அலையின் ஓசையுடன் ஆனந்தமாக
அளவளாவிக்கொண்டிருந்த பொழுது, இசைக்கலைஞர்கள்
வந்து பாட சுராங்கனி பாடல் பாடச்சொல்லி கேட்டோம்.

பயணக்களைப்பு, தூக்கம் கண்களை சுழற்ற
போய் படுத்தோம். விடிந்ததே தெரியவில்லை.
7.30 மணி வாக்கில் எழுந்து ரூமிலே இருந்த
கெட்டிலில் காபி போட்டுகுடித்து பிச் வாக்
செய்ய போனோம்.

கடலலை காலை முத்தமிட நின்று பிறகு
மணல்வீடு கட்டினோம்.




அம்ருதா கட்டிய வீடு.


தேஜு கட்டிய வீடு. ஏதோ தன் சொந்த வீட்டை
கட்டுவது போல்,” நானும் அம்ருதாவும் பக்கத்திலேயே
இருப்போம். அடிக்கடி போய் பார்த்துக்கொள்வோம்,
என்று பேசிக்கொண்டே கட்டினார்கள். பிள்ளைகளின்
மனதில் தான் எத்தனை கள்ளம்கபடமற்ற அன்பு
கொட்டிக்கிடக்கிறது!!!!



ஆஷிஷும்,பானுவும் சேர்ந்து
வீடு கட்டினார்கள். கட்டி முடித்துவிட்டு இரண்டு
நட்புக்களும் மறுபடியும் போய் கடலலையில்
போய் நின்று கொண்டார்கள்.




இழுத்து செல்லாத குறையாக அறைக்கு அழைத்துச்
சென்றோம். காலை உணவு முடித்து 11 மணி வாக்கில்
கொழும்புக்கு பயணமானோம்.

மற்றவை அடுத்த பதிவில்.

Friday, August 21, 2009

தம்பிக்கு உதவிய அண்ணனை தரிசித்தோம்..

இங்கே வழக்கில் இருக்கும் கதை படி கதிர்காமம்
வள்ளி பிறந்து வளர்ந்து கந்தனை மணந்த இடம்.

கந்தன் வள்ளி திருமணம் விநாயகர் இல்லாமலா...

கந்தனை மணக்க மறுத்த வள்ளியை விநாயகர் யானையாய்
வந்து பயமு்றுத்த தானே திருமணம் நடந்ததது!!!

கதிர்காமத்தில் கந்தன் வள்ளி திருமணம் புரிந்து
வாழ்ந்த மலை இன்றும் இருக்கிறது. மலை ஏறிச்சென்று
பார்க்கலாம். ஒருமுறை செய்து பார்க்க ஆசைபட்டு
முழங்கால் அளவு உயர படிக்கட்டைப் பார்த்து
பயந்து திரும்பிவிட்டோம்.



இந்த முறை வாகன வசதி இருக்கிறது என்றார்கள்.
நேரமின்மையால் போகமுடியவில்லை.


சரி கதைக்கு வருவோம். கதிர்காமத்திலிருந்து 3 அல்லது
5 கிமீ தொலைவில் இருக்கிறது செல்லக் கதிர்காமம்.

இங்கே தான் வள்ளியை யானை உருவில் வந்து
பயமுறுத்தியிருக்கிறார் விநாயகர். அதனால் அங்கே
ஒரு விநாயகர் கோவில் கட்டி பூஜை நடக்கிறது.
இங்கே இந்து முறைப்படி பூஜை.

இறைவனை வழிபட பூ..



மாணிக்க கங்கை முன்பெல்லாம் சுழித்து ஓடும்.
கடை வீதி வரையில் தண்ணீர் இருக்கும். இந்த
முறை தண்ணீரே இல்லை. 4 மாதங்களாக
மழை இல்லாமல் காய்ந்து போயிருக்கிறது.



விநாயகர் கோவிலின் பின்புறம் கட்டப்பட்டிருக்கும்
நாகர் சிலை.



23.8.09 விநாயக சதுர்த்தி. எதேச்சையாக தம்பிக்கு
உதவிய அண்ணனைப் பற்றிய பதிவும் வந்திருக்கு.



விநாயக சதுர்த்தி பற்றிய முந்தைய பதிவு.

விக்ன நாசன விநாயகனை தொழுது, கொழுக்கட்டை எல்லாம்
சாப்பிட்டு திங்கள் கிழமை வாங்க.

அடுத்த பயணம் எங்கே என்று சொல்கிறேன்.

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்திரம் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
சிந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே..

Thursday, August 20, 2009

கண்டேன்!!! கண்டேன்!!! கதிர்காமனை

இந்தியப்பெருங்கடலில் கண்ணீர்த் துளி போல் இருக்கும்
இந்தத் தேசத்தின் மேல் காதல் வரம் காரணம்



அங்கே சென்ற பிறகு அதிகமான இணக்கத்துக்கு காரணம்

2001ல் 1மாதப் பயணமாக கொழும்பு சென்றிருந்தேன்.
கதிர்காமம் செல்ல வேண்டும் என்று அதற்கான
ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த பொழுது
கோவிலில் உருவ வழிபாடு இல்லை. திரைச்சீலையில்
இறைவனின் படம் வரைந்து அதற்குத்தான்
வழிபாடு என்று கேள்விபட்டதும்,”இதற்காக
6 மணிநேரம் பயணம் செய்து போகவேண்டுமா??!!”
என்று ஒரு எண்ணம்.

அப்போது அயித்தான் தங்கியிருந்த வீட்டின்
உரிமையாளர் பலவருடங்களாக அங்கே
இருப்பவர். மல்லு தேசத்துக்காரர்.
“அப்படி நினைக்காதே! திரைச்சீலைக்கு இருக்கும்
மகத்துவம் விசேஷமானது. மன்னர்கள்
தனது குறையை இறைவனுக்குச் சொல்ல
கனவில் அதற்கு விடை கூறுவான் இறைவன்.

இன்றளவும் வருடத்திற்கு ஒரு முறையாவது
கதிர்காமம் சென்று தரிசித்து வந்தவர்கள் தன்
வாழ்வில் முன்னேறுவது கண்கூடான ஒன்று”
என்று சொல்லவும் சரி என்று புறப்பட்டு போய்
தரிசித்து மகிழ்ந்து வந்தேன்.

அதன்பிறகு 2002 டிசம்பரில் மாற்றலாகி
கொழும்பு சென்ற பிறகு அடுத்த வருடத்திலிருந்து
தொடர்ச்சியாக கதிர்காமப் பயணம் உண்டு.

இந்தியாவுக்கு திரும்பும் நேரம் கதிர்காமம்
ஏரியாவில் பாதுகாப்பு பிரச்சனை இருந்ததால்
தரிசிக்காமலேயே வர நேர்ந்தது. அது
மனதில் மிகப் பெரிய குறையாக இருந்தது.

இந்த முறை இலங்கைக்கு போய்வரலாமா என்று என்
தோழி அண்ணபூர்ணா கேட்ட பொழுது
கதிர்காமம் செல்வதானால் வருகிறேன் என்று
பிடிவாதம் பிடித்தேன்.

முந்தைய பதிவு


கதிர்காமத்தில் இந்து முறைப்படி வழிபாடு இல்லை.
சிங்கள வழிபாடுதான்.

பழத்தட்டுக்கள் வாங்கி செல்வார்கள். அதை சாமிக்கு
படைத்து எடுத்து வருவார்கள். பழத்தட்டு வாங்கினால்
பெரிய க்யூவில் செல்ல வேண்டும். பழத்தட்டு வாங்கதவர்கள்
கோவிலின் நுழைவுவாயிலின் வலது பக்கமாக சென்று
தரிசித்து விட்டு வரலாம்.


காலை 4.30 மணிக்கு, மாலை 6.30க்கு பூஜை நடைபெறும்.
எப்போதும் 6.30 மணி பூஜைக்கு இருப்பது போல் பார்த்து
கோவிலுக்குச் செல்வோம்.

பூஜை நேரத்தில் சந்நிதிக்குள் நின்று உள்ளே நடப்பதை
பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த
முறை நாங்கள் வர கொஞ்சம் தாமதமாக அங்கிருந்தவரிடம்
”நான் உள்ளே செல்ல வேண்டும்”என்றதும் போங்கள்
என்று சொல்லிவிட சந்தோஷமாக உள்ளே நுழைந்து
நின்று கொண்டோம்.

யானை வந்து மலர்ச்செண்டு வைத்து கதிர்காமனுக்கும்,
பக்கத்தில் இருக்கும் விநாயகருக்கும் வழிபாடு செய்ததும்
பூஜை துவங்கும்.


இதோ கதிர்காமனின் சந்நிதி.


வேடவர்க்குல பெண்கள் இருவர் வந்து விளக்கேற்றி
சிறிய நடனம் செய்து வழிபாடு செய்வர் அதன் பிறகு
கொட்டு முழங்க, கோவில் சந்நிதியில் கட்டப்பட்டிருக்கும்
மணிகள் இசைக்கப்பட பூஜை நடக்கும்.

அந்த நேரத்தில் மணியோசை, கொட்டு சத்தம் தவிர
வேறெதும் கேட்காத அமைதி.

சந்நிதியில் நுழைந்து இறைவனை பார்த்ததும்
கண்களிலிருந்து பெருகும் நீரைக் கட்டுப்படுத்த
முடியவில்லை.
தாயாய் தந்தையாய் இருக்கும் தயாபரன்
குமரனிடம் ” உன்னைப் பார்க்காமல் தேசத்தை
விட்டு போகவைத்தாயே!என்று கோபப்பட்டேன்.

மணியோசை முழங்க முழங்க இன்னும் கண்ணீர்.
பக்கத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள், என்ன
நினைப்பார்கள் என்ற நினைப்பு வந்தாலும்
அடக்கமுடியாத அழுகை.

பார்த்ததே போதும் என்ற நிலையில்” என்ன
வேண்ட!!!” நான் வேண்டித்தான் அவன்
கொடுக்கப்போகிறானா. எனக்கு என்ன?எப்போது?
தேவை என்பதை உணர்ந்தவனாச்சே!!

எனக்காக ப்ரத்யேக கோரிக்கைகள் இல்லை.
அனைவரின் நலனுக்காக பிரார்த்தித்தேன்.

1 1/2 வருடங்கள் கழித்து தன்னைப் பார்க்க
என்னை வரவழைத்தற்கு நன்றி சொன்னேன்.

கோவிலில் பூஜை முடிந்ததும் விழுந்து
வணங்க பொதுவாக அனுமதிக்க மாட்டார்கள்.
பெரிய அதிகாரிகள், தலைவர்களுக்குத்தான்
அந்த பாக்கியம். இந்த முறை நானும்
என் தோழியும் கோவில் நிர்வாகிகளிடம்
வணங்க அனுமதி கேட்க எங்கள் இருவருக்கும்
மட்டும் அவன் சந்ந்தியில் தலை சாய்த்து
வணங்க அனுமதி கிடைத்தது மிகப் பெரிய
பாக்கியம்.


இதோ கோவில் பிரசதாம் உங்களுக்காக.




வெளியே வந்து நுழை வாயிலின் முன் நின்று
நானும் அண்ணபூர்ணாவும் சஷ்டிகவசம்
சொன்னோம்.





அருமையான அனுபவம், தரிசனம் கிடைத்த
மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் தெரிய
புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.


மாணிக்க கங்கை இறைவன் கந்தன் தனது
அம்பால் வரவழைத்த நீர். அதன் மேல்
கட்டப்பட்டிருக்கும் சிறு பாலம் தாண்டிதான்
கோவிலுக்கு வரும் பாதை. பாலத்தைத் தாண்டி
வரும்பொழுது காவடி ஆடி வரும் பக்தர்களைக்
கண்டோம்.




கதிர்காமம் வெப்சைட்

விக்கிப்பீடியாவுக்கு

கடைவீதிகள் தாண்டி வாகனம் நிறுத்தியிருந்த
இடத்திற்கு வந்தோம். மெயின் ரோடில் இருந்த
சைவக்கடை ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் டிரைவர்
அண்ணா. வண்டியை நிறுத்திவிட்டு அவரையும்
சாப்பிட வரச் சொன்னோம்.

பிள்ளைகள் மிகவும் விரும்பிய இடியாப்பம், தேங்காய்ப்பால்
சொதி, ஸ்ரீலங்கன் தால் எல்லாம் சாப்பிட்டோம்.

ஹோட்டலுக்கு சென்று அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு
உணவு முடித்து பயணத்தை துவங்க வேண்டுமென
முடிவு செய்து கொண்டோம்.

அடுத்த பயணம்??? அடுத்த் பதிவில்...

Wednesday, August 19, 2009

போனோமே!!! கதிர்காமம்..

12.08.09 அண்ணபூர்ணா, பாலகிருஷ்ணா திருமணநாள்.


வாழ்த்து சொல்லி அவர்களுக்கு வாங்கியிருந்த பரிசைக்
கொடுத்தோம்.

ஹோட்டலில் காலை உணவு முடித்து செக் அவுட் செய்து
கொண்டு வந்ததும் ரெடியாக காத்திருந்தது எங்கள் வேன்.

முதலில் சென்றது வெள்ளவத்தை கதிரேசன் கோவில்.
இது அண்ணபூர்ணா தம்பதிகளின் விருப்பமான கோவில்.
தங்கள் திருமண நாளை முன்னிட்டு அங்கே தரிசனம்
செய்ய வேண்டுமென சொல்ல போனோம்.

அதற்கு பக்கத்திலேயே இருக்கும் மாணிக்க விநாயகர்
கோவில் என் விருப்பக் கோவில். அங்கே தான்
முருகனுக்கு தனி சந்நிதி அழகாக இருப்பார் சாமி.
(சஹானா தொடரில் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி
அமர்ந்து தியானம் செய்வது போல் வருமே அந்தக்
கோவில்)

அங்கே இருக்கும் குருக்கள் முருகனுக்கு மட்டுமே
பூஜை செய்பவர். கதிரேசன் கோவில் முடித்து
மாணிக்க விநாயகர் கோவிலுக்கு வந்தோம்.

விநாயகசதுர்த்தி வர விருப்பதால் ப்ரத்யேக
பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.

பிராகரம் சுற்றி வரும்பொழுது முருகன் கோவில்
பூஜாரி அடையாளம் கண்டு கொண்டு,
அயித்தானின் கைகளைப் பற்றிக்கொண்டு
நலம் விசாரித்து முருகனுக்கு நான் வாங்கியிருந்த
மாலை சாற்றி அர்ச்சனை செய்து கொடுத்தார்.

கதிர்காமம் செல்லப்போகிறோம் என்றதும் சந்தோஷப்பட்டார்.

கொழும்பு, கண்டியைத் தவிர வேறெங்கும்
நம் இந்திய ஹோட்டல்கள் கிடையாது. கதிர்காமம்
செல்லும் வழியில் ஹோட்டல்கள் பெரிதாக கிடையாது.
அங்கே சோறு சம்பா அரிசியில் சமைக்கப்படும்.
கொஞ்சம் வாசனையாக இருக்கும்.

புதிதாக அதை சாப்பிட்டு வயிற்றுக்கு பிரச்சனை
ஆகிவிடுமோ என்று பயந்து சண்முகாஸில்
எலுமிச்சை சோறு, தயிர் சோறு, அப்பளம்
ரெடி செய்து கொடுக்கம்படி சொல்லியிருந்தோம்.
அதை வாங்கிக்கொண்டு ஆரம்பமானது பயணம்.


கதிர்காமத்திற்கு இரண்டு வழிகளில் செல்வது
எனக்கு மிகவும் பிடிக்கும். கொழும்பிலிருந்து
கிட்டத்தட்ட 300 கிமீ தொலைவில் இருக்கிறது
கதிர்காமம்.

அவிசாவெள்ளை, ரத்னபுரி, எம்பிலிபிட்டிய,
உடவளவே, கதிர்காமம் இது ஒரு வழி.
இதில் சாப்பிட நிறுத்தி
சென்றாலும் 5 1/2 மணி நேரத்தில் செல்லலாம்.

வலது பக்கம் கடற்கரை, இடதுபக்கம் எழில் கொஞ்சும்
பசுமை என வரும் BENTOTA, HIKKADUVA, GALLE, MATARA,
TANGALLE, TISSAMAHARAMA, KATHIRGAMAM இது அடுத்த
வழி. இந்த வழியில் செல்ல 6 1/2 - 7 மணி நேரம்
பிடிக்கும்.




எப்படி போகலாம்ங்க என்று கேட்டார் வேன் டிரைவர்.
போகும்போது
அவிசாவெள்ளை, ரத்னபுரி, எம்பிலிபிட்டிய,
உடவளவே, கதிர்காமம்.

வரும்போது கதிர்காமம்
TISSAMAHARAMA,TANGALLE, MATARA,GALLE,HIKKADUVA,BENTOTA,
என்றதும் இன்னமும் ரூட் மறக்காம இருக்கீங்களே! என்று
புகழ்ந்துவிட்டு பசுமை கொஞ்சும் பாதையில் வண்டியை
செலுத்தினார்.

இந்த வேனில் உள்ளே டீவி இருக்கும். நாங்கள்
கொண்டு சென்றிருந்த டீவிடி போட்டு விட்டதும்
அனைவரும் ஆனந்தமாய் படத்தை பார்த்துக்
கொண்டு வர நான் மட்டும் பசுமையை
என் கண்களால் படம் பிடித்துக்கொண்டே
வந்தேன்.

(2 நாளில் குறைஞ்சது 4 படமாவது பாத்திருப்பாங்க)

ரத்னபுரி பேரே சொல்கிறது இலங்கையின் பிரசித்தி
பெற்ற தரம் வாய்ந்த ரத்னங்கள் கிடைக்குமிடம்.

உடவளவு -
இங்கே யானை சவாரி நன்றாக இருக்கும்.


காசைக்கொட்டி யானையை பார்க்க தேசிய பூங்காவிற்கு
வரும் விருந்தினர்களுக்கு டாடா காட்டிவிட்டு
யானைகள் உடவளவு-கதிர்காமம் சாலை ஓரத்தில்
வந்து நிற்கும். யானைகள் தாண்டி வந்துவிடாத படி
மின் கம்பி வேலி போட்டிருப்பார்கள். 1 அல்லது 3
யானைகள் பார்க்க கிடைக்கும்.

உடவளவு நீர்த்தேக்கம் வரண்டு போய் கிடக்கிறது.
காடும் காய்ந்து போயிருப்பதால் உணவுக்காக
மின் கம்பிகளுக்கு அருகில் வந்து நிற்கின்றன
யானைகள்.



இந்த முறை நாங்கள் கண்டது 13 யானைகள்!!!!



குழந்தைகள் நால்வருக்கும் ஒரே குஷி.

விதம் விதமாய்,
போட்டோக்கள் எடுத்துக்கொண்டோம்.




அங்கேயே ஒரு இடத்தில் உட்கார வசதியாக
கட்டையால் செய்து வைத்திருந்தார்கள்.
எங்கள் சாப்பாட்டுக்கடையை அங்கே திறந்து
ஆனந்தமாக சாப்பிட்டோம்.

அங்கிருந்து ஒரு மணிநேரத்தில் திஸ்ஸமஹாரமாவை
அடைந்தோம். அங்கே சிலோன் ஹோட்டல் கார்ப்பரேஷனுக்கு
சொந்தமான ஹோட்டலில் தங்கினோம்.

அங்கிருந்து 20 கிமீ தொலைவில் கதிர்காமம் இருக்கிறது.

30 நிமிடம் ஓய்வெடுத்துக்கொண்டு 5.45 மணி வாக்கில்
கதிர்காமத்திற்கு கிளம்பினோம். 30 நிமிடத்தில்
கதிர்காமத்தை அடைந்தோம்.

Tuesday, August 18, 2009

வந்துட்டோம்ல...

ஹாய் ஹாய்...

எல்லோரும் நலம்னு நினைக்கிறேன்.

நான் நல்ல படியா பயணம் முடிச்சு வந்திட்டேன்.

சென்ற பதிவில் எங்க போறேன்னு சொல்லிட்டுத்தான்
போனேன். ஆனா சரியா யாரும் கண்டு பிடிக்கலை.

பாட்டுக்கான க்ளூ பார்த்திபன் கனவு படத்தில்
வரும் கடைசி பிட்டில் இருக்கு. அந்த இடம்
கொழும்பு.




ஆமாம் இலங்கைக்குத்தான் சென்றிருந்தேன்.


என்ன திடும்னு???

”நாம எல்லோரும் அங்கே போயிட்டு வந்தா
எப்படி இருக்கும்?” என கேட்டது என் தோழி
அன்னபூ்ரணி.

ஆஹா!!! அப்படின்னு கிளம்பிட்டோம்.
சென்னையிலிருந்து இரு குடும்பமும் ஒன்றாக
கிளம்பினோம்.

ஒரே குடும்பமா!!! என்று விமான நிலையத்தில்
அனைவரும் கேட்கும் வகையில் பிள்ளைகள்
ஒரே குஷி மழையில்.


”ஆமாங்க! எங்க குடும்பம் ரொம்ப பெரிசு!!”
என்று சொல்லிக்கொண்டோம்.


கொழும்பு விமான நிலையத்தை அடைந்ததும்
ரெடியாக காத்திருந்தார் எங்கள் ஆஸ்தான
வேன் டிரைவர். “உங்க எல்லோரையும்
பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு”
என்று அவரும் எங்கள் சந்தோஷத்தில்
கலந்து கொண்டார்.

ஹோட்டலில் செக்கின் செய்து லக்கேஜ்களை
போட்டுவிட்டு பசி வயிற்றைக்கிள்ள
“வண்டியை நேரா சண்முகாஸுக்கு
விடுங்கண்ணே” என்று சொல்ல
அங்கே போய் என்ன ஆர்டர் செய்யலாம்
பிள்ளைகள் யோசிக்கத் தொடங்கினர்.

சண்முகாஸ் கொழும்பு வெள்ளவத்தை
ராமகிருஷ்ணா ரோடில் இருக்கும்
தென்னிந்திய சைவ உணவகம்.

அங்கே வேலை செய்யும் மேனேஜர்
சுரேஷ் அவர்கள் எங்களை கண்டதும்
“எப்படிங்க இருக்கீங்க? எப்ப வந்தீங்க”
என்று கேட்டது செம ஷாக். 1 1/2 வருடத்திற்கு
பிறகும் எங்களை மறக்கவில்லையே..

அயித்தானின் பெயரும் சரியாக ஞாபகம் வைத்திருந்தார்.

அடுத்த நாள் காலை 12.08.09 பயணம்.
எங்கே???

எல்லாம் வல்ல கதிர்காம கந்தனைக் காணத்தான்.

பயண பதிவுகள் தொடரும்ல....

Monday, August 10, 2009

பழைய பாக்கி இருக்குதா.... என் மனசு துடிக்குதா!!!!

ஞாபகமா வருதே!!! பொட்டி கட்டி கிளம்பியாச்சுல்ல




அல்லோரும் சொளக்கியமா??ன்னு கேட்டுகிட்டு போகப்போற இடம்.




:))))))




மீ த கோயிங். ஜாலி ஜாலி ஜிம்கானா....

Thursday, August 06, 2009

நன்றி! நன்றி

அமுதா இந்த விருதை முன்பே கொடுத்திருந்தாங்க.
உடனடியா பதிவு போட முடியலை.

இப்ப அருணாவும் அன்புடன் பூங்கொத்தோடு
விருது கொடுத்திட்டாங்க.

இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.




நான் விருதை வழங்க நினைப்பவர்கள் லிஸ்ட் இதோ:

சென்ஷி



வகுப்பறை

பொலம்பல்கள்



மிஸஸ்.டவுட்

தம்பி கார்க்கி


டிஸ்கி: கைவலி கொஞ்சம் குறைஞ்சிருப்பதாலும்,
போர்டு மாட்டாட்டி வேற யாரும் கொடுத்திடுவாங்க
என்பதாலும் இந்தப் பதிவு போட்டேன். திட்டாதீங்க.

:)))

Tuesday, August 04, 2009

சகோதரர்களுக்கு வாழ்த்து

ராக்கி கட்ட சாமான்கள் ரெடி


இதோ கையில் எடுத்து


ராக்கி கட்டிட்டேன்


ரக்‌ஷா பந்தன் - உறவை பாதுகாத்தல் என்று பொருள்.
அண்ணன் தம்பிகளின் நலனுக்காக ஆண்டவனை
ப்ரார்த்திக்கறேன்.


மனமார்ந்த ரக்‌ஷாபந்தன் வாழ்த்துக்கள்.

Monday, August 03, 2009

தன்னம்பிக்கையே டானிக்காக....

எனக்கு 11 வயது இருக்கும்பொழுது ஏற்பட்ட மூளைகாய்ச்சலின்
போது 6 கிலோ ஐஸ் வைத்து ஜுரத்தை குறைத்து என்னைக்
காப்பாற்றினார்கள்.அதன் பாதிப்போ அதற்கு முந்தைய அம்மை
வார்ப்புக்களின் பாதிப்போ புரியவில்லை. ஆனால் என்
வலது கண் பாதிக்கப்பட்டது. பார்வைக்குறைபாடு.
ஆரம்பமே -3.( எப்படி ஒரு கண்ணில் மட்டும் இப்படி
என்பது அதிசயம். அதைவிட அதிசயம் 4 வருடங்களுக்கு
முன் லேசர் ஆப்பரேஷன் செய்த பொழுது -9.)

சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்து பட்ட வேதனை
தாளாமல் அம்மா லென்ஸ் வாங்கிக்கொடுத்தார்.
லென்ஸ் வைத்துக்கொள்வதை போன்ற கொடுமை
அப்பாப்...

கண்ணைக்கசக்க முடியாது, சினிமா பார்க்க முடியாது(
உத்துப்பார்பப்தால் லென்ஸ் மேலே மாட்டிக்கொள்ளும்,
லென்சோடு பயணம்,தூக்கம் கஷ்டம்)

கண்வலி, தலைவலி அதிகமாகும்பொழுது
அம்மாவிடம் அழுவேன்.
எனக்கு மட்டும் ஏனிந்த நிலை!!! என்று புலம்புவேன்.

அம்மா சொன்னது,”உன்னை விட கஷ்டப்படுபவர்கள்
இந்த உலகில் இருக்கிறார்கள்!”
அதெல்லாம் இருக்காது என்று அந்த அறியாத
வயதில் சொல்லியிருக்கிறேன். அந்த திரைப்படம்
பார்க்கும்வரை என் எண்ணம் அதுவாகத்தான் இருந்தது.

அன்று அம்மா அழைத்துச் சென்ற திரைப்படம்
என்னை மாற்றியது. விபத்தொன்றில் தன்
கால்களை இழந்த நாட்டிய மங்கை மீண்டும்
நாட்டியமாட படும் பாடு...

கட்டைக்கால்கள் கொண்டு நடனமாடியதில்
வலி ஏற்பட காலை எடுக்கும்பொழுது ரத்தம்
பீய்ச்சும்...

அந்த வலிகளைத் தாங்கி தன்னம்பிக்கையுடன்
போராடி தன் லட்சியமாகிய அரங்கேற்றம்
செய்யும் அற்புதமங்கையாக சுதா சந்திரன்
நடித்த மயூரி படமது.




நிஜ வாழ்விலும் அவர் காலை இழந்தவர்
என்பது தெரிந்த பொழுது எனக்கான செய்தி
கிடைத்து போல் உணர்ந்தேன்.

அன்று முதல் அங்கலாய்ப்புக்கள் இல்லை.
ஒரு கதவை மூடிய இறைவன் எனக்கான
மறுகதவை கட்டாயம் திறப்பான்.

பார்வைக்குறைபாட்டிற்காக சோர்ந்து
போய்விடக்கூடாது என்று நிச்சயம் செய்து
உறுதிமொழி எனக்கு நானே எடுத்துக்கொண்டேன்.

”பாடப்பாட ராகம், முனக முனக ரோகம்”
எனும் பழமொழிக்கேற்ப எனக்கு வந்த
வியாதிகள் தடைகள் எல்லாவற்றையும்
தாண்டி மேலே எழும் வரத்தை தன்னம்பிக்கையை
இறைவன் தந்தான்.




நெருப்பிலிருந்து மீண்டு எழும் ஃபினிக்ஸ் பறவையாக
நான் என்னை நினைத்து மீண்டெழுந்த எத்தனையோ
சந்தர்ப்பங்கள்...

இந்தக் கதைகள் இப்போதெதற்கு????

இப்போதும் இவைகளை நினைத்துப் பார்க்க
வைக்கும் சம்பவம்.

10 வருடங்களுக்கு முன் விழுந்து
வலது கை மணிக்கட்டில்
ஏர்லைன் க்ரேக் ஆகி இருந்தது
தெரியாமல் சரியான வைத்தியம்
பார்த்துக்கொள்ளவில்லை.
அதிக வேலை செய்தால்
என் வலது கை வலிக்கும். க்ரேப் பேண்டேஜ்
போட்டு 2 நாள் ரெஸ்ட் கொடுத்தால் சரியாகும்.
இப்படியே ஓட்டிக்கொண்டிருந்தேன்.

2 மாதம் முன்பு வேலைக்காரம்மா 10 நாள்
விடுப்பெடுக்க பயங்கர வேலை கைகளுக்கு.
அதிக வலி எடுத்து உணவை எடுத்து
உண்ணக்கூட முடியாமல் ஆகிவிட
மூட்டுவலி நிபுணரை பார்த்தோம்.

ஸ்பாண்டிலைடிஸ் என்று உறுதி படுத்தினார்.
கை விரல்களின் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ரெஸ்ட் + பிசியோதெரபி தான் மருந்து
என்று சொல்லிவிட்டார்.

பிசியோதெரபி எடுத்துக்கொள்ளலாம்.
ரெஸ்ட் என்பது இல்லத்தரசிகளுக்கு
சாத்தியமில்லாத ஒன்று. தினமும்
பிசியோதெரபி செய்து கொண்டேன்.
ட்ராக்‌ஷன் வைக்கப்படும். அப்புறம்
கைகளுக்கு கொஞ்சம் பயிற்சி.

ஆனால் வீட்டில் வேலை செய்ய முடியவில்லை.
தோசை ஊற்றக்கூட கைவரவில்லை.
வலது கையால் தண்ணீர் எடுத்துக்குடிக்க
முடியவில்லை. என்னை மட்டுமே சார்ந்து
பழக்கப்பட்ட எனக்கு அடுத்தவர்களை சார்ந்து
கஷ்டப்படுத்த வேண்டிய நிலை. :(((

இந்த நிலையில் அயித்தான் மிகவும் கவனமாக்
பார்த்துக்கொண்டார். 15 நாள் நான் பக்கத்தில்
இருந்து சொல்ல அவரே உணவு தயாரித்து
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினார்.
பிள்ளைகள் இருவரும் மிக்க உதவி
செஞ்சாங்க.
ஒருமுறை தவிர்க்க முடியாத காரணமாக
அலுவல் நிமித்தம் வெளியூர் செல்ல ஏர்போர்ட்
வரை சென்றவர் பயணத்தை ரத்து செய்துவிட்டு
வீட்டிற்கு வந்து என்னை பார்த்துக்கொண்டார்.

கைகளுக்கு கொஞ்சம் முன்னேற்றம் வந்தது.
உப்புமா, சப்பாத்தி, செய்வது சவலாகத்தான்
இருந்தது. இப்போதும் சப்பாத்தி கஷ்டம்.
ஆனால் டீ, உப்புமா கொஞ்சமாக செய்ய முடியும்.


இத்தனைக் கஷ்டங்களுடன் பதிவெழுதித்தான்
ஆக வேண்டுமா? போய் ஓய்வெடுங்கள் என
என்னை அன்பாக ஆன்லைனில் கண்டித்து
நட்புக்களும், உடன் பிறப்புக்களும் என்னை
திக்குமுக்காடச் செய்துவிட்டார்கள்.

கணிணியில் தட்டச்சுவதையும் பயிற்சி
போல் கொஞ்ச நேரம் செய்து பதிவெழுதினேன்.
அதனால் தான் கடந்த 2 மாதங்களாக
1 நாளைக்கு 4 பதிவெல்லாம் போடவில்லை.
ஆனாலும் நான் தொலைந்துவிடாமல்
என் தன்னம்பிக்கைக்கு உறமிட்டது பதிவுக்கள்தான்.


சென்றவாரம் மேற்கொண்ட ரயில்பயணத்தால்
தற்போது கொஞ்சம் பிரச்சனை ஆகியிருக்கிறது.
(மருத்துவரின் அனுமதியின் பேரில்தான்
பயண்ம் செய்தேன்.) முதுகு வலி அதிகரித்துவிட்டது.
அதனால்தான் ஆன்லைனில் கூட யாருடனும்
பேசமால் அன்அவலைபிளாக இருந்து பதிவிட்டேன்.

இந்த நிலையில் விருந்தினர் வந்து சென்ற
பயணாக கைவலி மிக மிக அதிகமாகி
தற்போது கைக்கு 1 வாரம் ரேடியேஷன்
கொடுக்கும் நிலை.

ஆக கொஞ்சம் ரெஸ்ட் தேவை என்பதை
நானே உணர்ந்து மீ த டேக்கிங் ரெஸ்ட்.

:)))

அதுக்காக இந்தக் கடையை பூட்டிட்டேன்னு
நினைக்காதீங்க. என்னால எந்த வேலையையும்
செய்யாம சும்மா உட்கார முடியாது. ஒரு நாளைக்கு
15 நிமிடம் கணிணியில் உட்கார அயித்தான்
பர்மிஷன் கொடுத்திருக்காரு.(ரொம்ப டைப் அடிச்ச
பாத்துக்கன்னு மிரட்டலெல்லாம் ஓவரா இருக்கு. :)) )

இந்தக் கைவலித் தடையையும் தாண்டி வருவோம்ல..

:))))))))))))))