Total Pageviews

Saturday, January 30, 2010

ஸ்கந்தகிரி முருகன் கோவில்

தை மாதம் தைக்கிருத்திகை, தைப்பூசம் கந்தனுக்கு
உகந்த நாட்கள். இன்று தைப்பூசம். ஹைதராபாத்தில்,
(செகந்திராபாத்) பத்மாராவ்நகரில் முருகன் அருள்பாலிக்கும்
திருத்தலம் ஸ்கந்தகிரி.



நான் சென்ற நேரம் அய்யனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் முருகனுக்கு அரோகரா!! குரலுடன் பால் குடங்கள்,
காவடிகள் கோவிலிலிருந்து புறப்பட்டு கோவிலைச் சுற்றி
வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தி பரவசத்துடன் கூட்டம், அரோகரா போட்ட படி.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் என்பது போல்,
கோவில் சின்ன குன்றின் மேல்தான் அமைந்திருக்கிறது.

கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன், பிள்ளையார்,
திருமால், நவக்கிரகங்கள்,லிங்க வடிவல் சிவன், அம்பாள் கோவில்களுடன்
துர்கை மிக அழகாக வீற்றிருக்கிறாள். துர்க்கை கோவிலின் வாயிலேயே
சரஸ்வதிக்கும், லட்சுமிக்கும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

நவராத்திரியில் தேவிக்கு ஒவ்வொரு விதமாக அலங்காரம்.
அதுவும் பின்னல் ஜடை முன் விழ அலங்காரம் பிரமாதமாக
இருக்கும்.
வெள்ளி, செவ்வாய் ராகுகால நேரங்களில் அம்மன் முன்
எலுமிச்சை விளக்கேற்றி ராகு கால பூஜை நடக்கும்.

கோவில் படி ஏறுவதற்கு முன் வலது பக்கம் பெரிய ஆஞ்சநேயர்
சந்நிதி. இந்த இடம் காஞ்சி மடத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது.
காஞ்சி மகா பெரியவரின் பாதுகை இருக்கும் இடத்தில் தினமும்
லலிதா, விஷ்ணு சஹஸர்நாமங்கள், ஹனுமான் சாலிசா
பாடப்படும். நவராத்திரியின் போது ப்ரம்மாண்ட கொலு, பாட்டுக்
கச்சேரி நடக்கும்.

கிரி ட்ரேடிங் ஏஜென்சியின் ஹைதைக்கிளை ஸ்கந்தகிரி
கோவிலில் தான் இருக்கிறது. பூஜை சாமான்கள், சீடிக்கள்,
ஸ்லோக புத்தகங்கள் வாங்கலாம்.


மொத்தத்தில் ஸ்கந்தகிரி போய் வந்தால் முருகனை தரிசித்த
திருப்தியுடன் தமிழ்நாட்டுக்கு ஒரு விசிட் அடித்து வந்தது போலிருக்கும்.
அர்ச்சகர்களிலிருந்து அனைவரும் தமிழர்கள் தான். லோக்கல் மனிதர்களும்
விரும்பும் தெய்வம்.

அனைவருக்கும் அருள் பாலிக்கிறான் ஸ்கந்தகிரி முருகன்

Friday, January 29, 2010

hotel gravy வீட்டிலே - ரெசிப்பிக்களுடன்

என்ன பேசிக் க்ரேவி செஞ்சு வெச்சுக்கிட்டீங்களா?
இந்த க்ரேவியை நாம ஒரு வாரத்துக்குத் தேவையான அளவு
செஞ்சு ஃப்ரிட்ஜல் வெச்சுக்கிடலாம். அப்புறம் கலக்கலா
ரெசிப்பிக்கள் செய்ய வேண்டியத் தான்.

என்னென்ன ரெசிப்பிக்கள் செய்யலாம்னு பாப்போம்.


பனீர் பட்டர் மசாலா:
தேவையான சாமான்கள்:

தாளிக்க: பொடிசாக நறுக்கிய குடைமிளகாய்- 1 ஸ்பூன்
கசூரி மேத்தி கொஞ்சம், ஜீரகம் கொஞ்சம், தக்காளி அரிந்தது
1

பனீர் துண்டுகள் 200 கிராம்.

செய்முறை:
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் வைத்து ஜீரகம், கசூரி மேத்தி,
குடமிளகாய் சேர்த்து தாளிக்கவும் பிறகு தக்காளி சேர்த்து
வதக்கவும்.

நறுக்கி வைத்திருக்கும் பனீர் துண்டுகளை சேர்த்து வதக்கி
தேவையான அளவு பேசிக் க்ரேவியை சேர்க்கவும்.

இப்பொழுது மிளகாய்த்தூள், தனியா தூள், கொஞ்சம் கரம் மசாலா
(எல்லாம் பேசிக் க்ரேவிலியே இருக்கு, ஆனாலும் ருசிக்காக
கொஞ்சம் தனியாக சேர்க்க வேண்டும்)
சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டால் ரெடி.
கம கம பனீர் பட்டர் மசாலாவை க்ரீம் அல்லது பட்டர்
மேலே விட்டு பரிமாறவும்.




இந்த பேசிக் க்ரேவி சேத்து செஞ்சா அது ஹரியாலை பனீர்
இல்லாட்டி வெறும் பாலக், வெங்காயம் சீரகம் கொதிக்க வைத்து
அரைத்து செஞ்சா அது பாலக் பனீர். (பனீருக்கு பதில் ஆலு சேர்த்தால்
ஆலூ பாலக்) பனீரை துறுவி அலங்கரிக்கலாம்.

அடுத்து பஞ்சாபி டிஷ்:

இதுக்கு பேசிக் க்ரேவி RED & YELLO GRAVY மட்டும்
உபயோகிக்கணும். நோ வொயிட் க்ரேவி.


இதுக்கு பேசிக் க்ரேவி தயாரிப்பது இப்படித்தான்.

தாளிக்கும் பொழுது பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை,
இஞ்சி பூண்டு விழுது, ஜீரகம் எல்லாம் சேர்த்து தாளித்து
அதில் தக்காளி விழுதை போட்டு கொதித்ததும், வெங்காயப்
பேஸ்டுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உப்பு, தனியா தூள்
மிளகாய்தூள், சீரகத்தூள், மஞ்சள் பொடி சேர்த்து வதக்கினால்
பஞ்சாபி பேசிக் க்ரேவி ரெடி.

சன்னாவை ஊற வைத்து வேகவைத்துக்கொள்ளவும்.

செய்முறை:
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஜீரகம், கசூரி மேத்தி,
குடமிளகாய், இஞ்சி துண்டுகள் (பொடிதாக அரிந்தது)
பூண்டு(பொடிதாக அரிந்தது) சேர்த்து தாளிக்கவும்.

இதில் பேசிக் க்ரேவியைச் சேர்த்து கொஞ்சம் கரம் மசாலா,
தனியா தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அத்துடன்
வேக வைத்திருக்கும் சன்னாவையும் சேர்த்து கொதிக்க
விட்டால் சன்னா மசாலா ரெடி.




(க்ரேவி கொஞ்சம் கெட்டியாக வேண்டும் என்று விரும்பினால்
அரைக்கும் விழுதுடன் கொஞ்சம்(2 ஸ்பூன் அளவு) சன்னாவை
சேர்த்து அரைத்து சேர்க்கவும்)

கொத்துமல்லித் தூவி வட்ட வட்ட வெங்காயத்துடன்
பரிமாறலாம்.


இதே முறையில் ராஜ்மா, தால்மக்கனி செய்யலாம்.
தால்மக்கனிக்கு அதிகம் பட்டர் சேர்க்க வேண்டும்.
இஞ்சி போடாமல் பூண்டு மட்டும் சேர்க்க வேண்டும்.

வீக் எண்ட்ல செஞ்சு அசத்துங்க.

HAPPY WEEKEND

Thursday, January 28, 2010

HOTEL GRAVY - வீட்டிலேயே செய்யலாம்.

நாம என்னதான் பனீர் பட்டர் மசாலா, தால் மக்கனி,
சன்னா மசாலா வீட்டுல செஞ்சாலும் ,”நல்லாயிருக்குன்னு!”
பசங்களும், கணவரும் சொல்வாங்க தான். உண்மையில்
ஹோட்டல் க்ரேவி மாதிரி வரமாட்டீங்குதேன்னு நமக்கேத்
தோணும். ருசி சரியா இருந்தாலும் அந்த க்ரேவி டேஸ்ட்
வித்யாசமா இருக்கும்.

தக்காளி வெங்காயம் அரைச்சு மசாலா சேத்து, ஊற வெச்சிருக்கும்
சன்னாவையும் போட்டு குக்கரில் 5 விசில் அடிச்சா சன்னா
மசாலா ரெடின்னு நானும் தாங்க நினைச்சிருந்தேன். ஆனா
இப்ப நாம செய்யற சன்னா செம டேஸ்டா இருக்குன்னு
பசங்க பாராட்டு மழை தான். அந்த ரகசியத்தை உங்களுக்கும்
சொல்றேன்.

ஹோட்டலில் சமையல் கலரை கொட்டித்தான் சமைக்கிறாங்க.
அதனால கலர் அந்த மாதிரி கிடைக்காது. கலர் போடுவதில்
எனக்கு உடன் பாடில்லை. அதனால் இயற்கையான நிறம்
அருமையான ஹோட்டல் சுவை க்ரேவி செய்வோமா!!!

முதல்ல BASIC GRAVY செஞ்சு வெச்சுக்கணும்.
அதை எப்படி செய்வதுன்னு பாப்போம்.

BASIC GRAVYல 3 க்ரேவி வேணும்.

WHITE PASTE, YELLOW PASTE, RED PASTE

WHITE PASTE:
க்ரேவி முந்திரி அல்லது சமைக்கும் முந்திரி - 50 கிராம்
தர்பூஸ் பழ விதைகள் - 1 ஸ்பூன்.

(இவை பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்)
இரண்டையும் நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும்
மைய அரைத்துக்கொண்டால் வொயிட் பேஸ்ட் ரெடி.

YELLOW PASTE:
பெரிய வெங்காயம் வெட்டியது - 4
இதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து
வேகவைத்து வடிகட்டி அரைத்தால் மஞ்சள் பேஸ்ட்.
(வெங்காயத்தை வேக வைப்பதால் பச்சை வாசனை
போய் திக் க்ரேவி கிடைக்கும்)

RED PASTE:
5 தக்காளியை மிக்ஸியில் அடித்து வைத்து கொண்டால்
ரெட் பேஸ்ட் ரெடி.

இதை வெச்சுகிட்டு பேசிக் க்ரேவி எப்படி செய்வதுன்னு
பாப்போம். மேலே சொல்லியிருக்கும் க்ரேவியும் சம அளவுல
வர்ற மாதிரி பாத்துக்கணும்.
1 கப் WHITE PASTE + 1 கப்YELLOW PASTE + கப் RED PASTE


BASIC GRAVY செய்முறை:

கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை,
1 துண்டு லவங்கப்பட்டை, 2 ஏலம், 1 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
சேத்து நல்லா வதக்கணும்.

அடுத்து தக்காளி பேஸ்டை ஊத்தி நல்லா கொதிக்க விடணும்.
அடுத்ததா மஞ்சள் பேஸ்ட், கடைசியா வெள்ளை பேஸ்ட்
சேர்த்து கொஞ்சமா தண்ணீ சேர்த்து நல்லா கொதிக்க விடணும்.

தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், தனியா தூள், ஜீரகப்பவுடர்,
கரம் மசாலா தலா ஒரு ஸ்பூன் சேர்த்து நல்லா வதக்கினா
பேசிக் க்ரேவி ரெடி

இதை வெச்சு ஹோட்டல் க்ரேவி டேஸ்ட்ல எப்படி சமைப்பது?
இந்தோ மதியம் போஸ்ட் வந்திடப் போகுது. :))

ஏணிப்படியில் ஏறும் வயது

பதின்ம வயது பிள்ளைகள் அந்தந்த வயதிற்கே உரிய வளர்ச்சியுடன்
காணப்படுவார்கள். பெண் பிள்ளை பூப்பெய்வதும் அப்போதுதான்.
வெளியே சொல்ல முடியாமல், சொன்னால் தவறாக நினைப்பார்களோ!!
என்று குழம்பி தவிப்பான் ஆண்பிள்ளை.

(13 வயது தான் டீன் ஏஜின் துவக்கம் என்றாலும் பல பிள்ளைகள்
11 வயது அடைந்த உடனே மாற்றங்கள் மெல்ல நிகழும்)


தனக்குள் நடக்கும் மாற்றங்கள் சரியா? தவறா? எல்லோருக்கும்
இப்படித்தான் இருக்குமா? போன்ற அனாவசிய குழப்பங்கள்
பிள்ளைக்கு ஏற்படும். யாருக்கும் நேராத ஒன்று தனக்கு மட்டும்
ஏற்பட்டிருப்பதாக உள்ளுக்குள் புழுங்கிப்போவார்கள். தெளிய
வைக்க வேண்டியது நம் பொறுப்பு.

அந்தரங்க உறுப்புக்களில் முடிவளர்தல் சாதாரணமான ஒரு
நிகழ்ச்சி என்று புரிய வைக்க வேண்டும். பெண்களுக்கு
ஏற்படும் உடல் மாற்றத்தையும் சாதரண நிகழ்வு என
புரிய வைத்து மனதை லேசாக்கி வைப்பது அவசியம்.


என் மகனுடன் பேச முதலில் எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது.
இதுவே பெண்குழந்தையாக இருந்தால் இந்தத் தயக்கம் இருந்திருக்காது
என நினைக்கிறேன். கணவரோ அடிக்கடி டூர் போகிறவர். பக்கத்தில்
இருந்து மாற்றங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஆண்டவன்
பெண்களுக்குத்தான் கொடுத்திருக்கிறான்.

குழ்ந்தை பிறக்கும் பொழுதுதான் தாய், தந்தையர் எனும் பதவி
வருகிறது. அதன் பிறகுதான் கற்றலும் நடக்கிறது. ஆம் தாயாக,
தந்தையாக நாம் செய்ய வேண்டியதை கற்கிறோம். இப்போது
பதின்ம வயது மகனை ஹேண்டில் செய்யும் திறனை நான்
வளர்த்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்து தனியறையில்
நானும் மகனும் மட்டும் உரையாடினேன்.

”கண்ணா, உன் உடலில் சில மாற்றங்கள் நேரும்
இதற்காக கலங்கக்கூடாது. மற்ற பிள்ளைகளிடம் இது குறித்து
ஆலோசனை செய்ய வேண்டாம். இது தவறல்ல! இயற்கை உன்னை சின்ன
குழந்தையிலிருந்து பெரிய மனிதனாக்க செய்யும் வேலை இது.
இது சாதாராண நிகழ்வு,” என்று சொன்னேன்.


”ஆமாம்மா, சின்ன சின்ன மாற்றம் பயமாயிருக்கு! என்ன செய்வதுன்னு
புரியலை!!” என்றான் கண்களில் நீருடன். தக்க சமயத்தில் பிள்ளையிடம்
பேசும் புத்தியை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லி கண்ணீரை
துடைத்து மடியில் இருத்திக்கொண்டேன்.


“நம் வாழ்க்கையில் டீன் ஏஜ் பருவம் ரொம்ப முக்கியம். ஏன் தெரியுமா?
inner PERSONALITY DEVELOPMENT அப்போதுதான் ஏற்படும். இதுவரை
சின்னக்குழந்தையாக தெரிந்த உன் உடல் இனி சில மாற்றங்கள் கொண்டு
தன்னை தயாராக்கிக்கொள்ளும். 13-19 வயது வரை நீ ரொம்பவே
கவனமாக இருக்க வேண்டும். பயப்பட ஏதும் இல்லை. ஆனந்தமாக
கொண்டாடலாம். இப்போது நீ குழந்தையுமில்லை, பெரிய மனிதனும்
இல்லை. அதனால் உனக்கு எப்போதாவது எதற்காவது சந்தேகம்
வந்தால் நானோ, அப்பாவோ உடன் இருக்கிறோம். கடினமான
இந்தக் கட்டத்தை நீ ஆனந்தமாக கடக்க நாங்கள் இருக்கிறோம்.

நீ செய்ய வேண்டியதெல்லாம், எங்களை நம்பு. 13-19 வயது
என்பதை ஏணிப்படி போல் கற்பனை செய்து கொள். ஒவ்வொரு
அடி எடுத்துவைக்கும்பொழுதும் உனக்குள் ஒவ்வொரு மாற்றம்,
ஒரு முதிர்ச்சி ஏற்படும். படியில் ஏறும்பொழுது கொஞ்சம் பயமாக
இருந்தால் என் கைகளைப்பிடித்துக்கொள்!!! அப்பாவைக் கேள்!நாங்கள் நீ ஏற
உதவி செய்கிறோம். நானும் உன்னைப்போல அந்த வயதைத்
தாண்டித்தானே வந்திருக்கிறேன், என்றதும் முகத்தில் நம்பிக்கை
வந்தது மகனுக்கு.

அவரிடமும் பேசி நீங்களும் மகனிடம் பேச வேண்டும்
என்று சொல்ல ,”நானும் அது பற்றி தான்
யோசித்து கொண்டிருக்கிறேன்!” உற்ற நண்பனாய் இருப்பேன்!! என்றார்.
சொன்னபடி செய்தும் வருகிறார்.


நாங்கள் அப்போது இருந்தது வெளிநாட்டில்! அங்கே கேர்ள்/ பாய்ஃப்ரெண்ட்
சகஜம். அது இல்லாவிட்டால் ஏதோ பெரும் குத்தம் என்பது
போல் பேசும் ஜென்மங்களும் உண்டு. அவர்களது கலாச்சாரம் அது.
6ஆம் வகுப்பு மகனிடம் கேர்ள் ஃப்ரெண்ட் பற்றி பேச தைரியம்
கொடுத்தது குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி. அப்போதுதான்
அவர் இது பற்றி சிநேகிதியில் எழுதியிருந்த தலையங்கம் படித்திருந்தேன்.
அவர் சொன்ன உதாரணத்தை என் மகனிடம் சொன்னேன்.

“பதினம வயதில் தான் ஆண்/பெண் கிளர்ச்சி ஏற்படும். வயதுக்கோளாறு
அது. ஆனால் அது உன் வாழ்வை நாசமாக்கி விடக்கூடாது. உன்
விருப்பப்படி நீ படித்து செட்டிலாகிவிட்டு அதைப் பற்றி யோசிக்கலாம்.
சில உதாரணங்கள் சொல்லி,” அம்மா இதை ஏன் உன்னிடம் சொல்கிறேன்
தெரியுமா? வானத்தில் ஆனந்தமாக பறக்கும் குருவி தன் காலில்
ஒரு சிறு கல்லைக் கட்டிக்கொண்டு பறந்தால் என்னவாகும்!?” எனக்கேட்டேன்.

“பறக்கவே கஷ்டமாக இருக்கும் அம்மா, ஃப்ரியா பறக்க முடியாது”
என்றான்.

“ஆமாம். படிக்கும் வயதில் காதல் கூட அப்படித்தான். ஒரு பாரமாகி
உன்னை திசை திருப்பும். பெண் நண்பர்கள் இருப்பது தவறில்லை.
உன் தோழி AQUILA இல்லையா. ஆனால் நட்பு வேறு காதல் வேறு!”
என்றதும் மகன் சொன்னது, ரொம்ப தேங்க்ஸ்மா, புரிய வெச்சதுக்கு!”
என்றான்.

என் மகனிடம் பேசியதை ஏன் இங்கே கொடுத்தேன் தெரியுமா??
நம் பிள்ளைகளிடம் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
நான் பேசுவது அட்வைஸாக இருந்தால் பிள்ளைகளுக்கு
போரடித்து விடும். அதுவே நட்பிடம் பகிர்வது போல் பக்குவமாக
பேசினால் நல்ல பலன் இருக்கும்.

தன்னைக் குழந்தையாக நடத்தாமல் பெரிய பிள்ளை போல்
நடத்துவதாக பிள்ளை புரிந்து நம்மிடம் மனம் விட்டு பேச வரும்.
“என்ன ஆனாலும், நானிருக்கிறேன்!” என்ற நம்பிக்கையை
நாம் கொடுத்து விட்டால், என்னை காக்க என் பெற்றோர்
இருக்கிறார்கள் என்ற எண்ணமே தன்னம்பிக்கை மிளிர வைக்கும்.


நாமே நம் பிள்ளையிடம் பேசாவிட்டால் அந்தக் குழந்தை
தன்னை பாதுகாப்பற்றவனாக/ளாக ஆக நினைத்து வருந்தும்.
சில விடயங்கள் நண்பர்கள் மூலம் தெரிவதால் அவர்கள்தான்
தெய்வம் போலவும், தவறான நட்புக்கள் மூலம் பாதை மாறுதலும்
நடக்கும். வீட்டில் போதிய சப்போர்ட் இல்லாத குழந்தைகள் தான்
வழி மாறிச் செல்கின்றன.

போதை, குடி, சிகரெடி போன்ற பழக்க வழக்கங்கள் ஏற்படுவது
இதனால் தான். தமிழ்த்துளி தேவா அவர்களின் இந்தப் பதிவை
பாருங்கள்.
போதை பழக்கத்துக்கு ஆளானல் மீட்பது கஷ்டம்.


குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படி நாகரீகம்


இதுவும் படிச்சி பாருங்க

வரும் திங்களன்று அடுத்த பதிவு வரும்
அதுவரை
தொடரும்....

Wednesday, January 27, 2010

PERSONALITY DEVELOPMENT - அசத்தலான ஆரம்பம்

நானும் எல்லார் கிட்டயும் இதைப்பத்தி பதிவு போடுங்கன்னு
கேட்டுகிட்டே இருந்தேன். போடறேன்னு சொன்னவங்க எல்லோரும்
மறந்துட்டாங்களா?? என்னன்னு புரியலை.

wifeologyக்கு எதிரா யாராவது எழுதுவாங்கன்னு காத்திருந்து
அது நடக்காம போக ஆரம்பிக்கப்பட்டதுதான் என்
husbandoloy வகுப்புக்கள். :))

இப்பவும் நானே எழுதலாம்னு முடிவு செஞ்சிட்டேன். திரும்ப
ஹஸ்பண்டலாஜி இல்லீங்க. எதைப்பத்தி???? வாங்க பேசலாம்.

பதின்ம வயதுக்குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு
சுலபமான வேலையில்லை. குழந்தையும் அல்லாத,
பெரியவரும் அல்லாத இரண்டும்கெட்டான் மன நிலையில்
இருக்கும் அந்தக் வளரும் குழந்தைகளை மென்மையாக
கையாளவது மிக அவசியம்.



பெண் குழந்தைக்கு தரப்படும் அறிவுரையைப் போல ஆண்குழந்தைகளுக்குத்
தரப்படுவதில்லை. அதை இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

இனி வரும் வாரங்களில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில்
வரப்போகும் இந்த பதின்மவயதுக்குழந்தைகள் தொடரில்
இருபாலருக்கும்
பொதுவான சில பிரச்சனைகள், வளர்ப்பு முறை பற்றி பேசுவோம்.

என் தோழி ஒருத்தரை பத்தி முன்னமே சொல்லியிருக்கேன். இலங்கையில்
ஒரு கல்லூரியில் DIPLOMA IN PERSONALITY DEVELOPMENT அப்படின்னு
ஒரு பட்டயப்படிப்பு. பதின்ம வயது பிள்ளைகள் இந்த பயிற்சியில
கலந்துகிட்டு தன்னை நல்லா உருவாக்கிக்க முடியும். இந்த வகுப்பில்
சைக்காலஜி ஆசிரியை மேலே சொல்லியிருக்கும் என் தோழிதான்.

அவங்க தயாரிச்ச புத்தகத்தை அச்சில் ஏத்திக்கொடுக்கும் பொழுது
நிறைய்ய டிஸ்கஸ் செய்வோம். நாளை உனக்கும் உதவும் என்று
அந்த புத்தகத்தை எனக்கு ஒரு காபி தந்திருக்காங்க.

எனக்கும் பதின்மவயதில் அடி எடுத்துவைத்திருக்கும் மகன் இருக்கிறான்.
அவனுக்கும் அதை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன். என் பிள்ளைகள்
போல மற்ற பிள்ளைகளுக்கும் உதவவேண்டும் எனும் எண்ணத்தில்
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. நான் பாடம் எடுக்கப்போவதில்லை.
அதில் எனக்குத் தேர்ச்சியும் இல்லை. ஒரு ஆசிரியையாகவும், தாயாகவும்
என் பார்வை எப்போதும் இருக்கும். நானும் கற்றுக்கொண்டு கற்றதை
உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

இந்த பதிவுகள் பேரண்ட்ஸ் கிளப்பிலும் என் வலைப்பூவிலும் திங்கள்
மற்றும் வியாழக்கிழமைகளில் வரும்.


மெல்லச் சிறகு விரிக்கும் அந்த பட்டாம்பூச்சிகளுக்கு
வசந்தமான வாழ்வை அளிப்போம். நல்லதொரு
தலைமுறையை உருவாக்குவோம்.

Monday, January 25, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 25-1-10

தெலங்கானா பந்த், போராட்டம் இதனால அதிகமா பாதிப்பு
ஏற்பட்டிருப்பது மாணவர்களுக்குத்தான். முடிக்கப்படாத
பாடங்கள், நெருங்கிவரும் தேர்வு அப்படி இப்படின்னு
டென்ஷனா இருக்கும். 2 மாசத்துல 30க்கும் மேற்பட்ட
பந்த் நடந்திருக்கு. வர்ற 28ஆம் தேதி கூட திரும்ப பந்தாம்.

பாவம் மாணவர்கள். அதிக விடுமுறையை ஈடுகட்ட
சனி, ஞாயிறுகளில் கூட பள்ளி செல்ல வேண்டியிருக்கும்.

*************************************************

சென்ற வாரம் நடந்த பந்தில் அடிதடி, கண்ணீர் புகை குண்டுகளுடன்,
ரப்பர் புல்லட்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு மாணவன்
மரத்தின் மீது ஏறி நின்றுக்கொண்டு தற்கொலை செய்து
கொள்வதாக கூறி போராட்டம் நடத்தினார். எப்படியோ கீழே
இறக்கினார்கள். 40,000 மாணவர்கள் ஒரு வருட படிப்பை
இழக்கப்போகிறார்கள். அந்தோ பரிதாபம்!!!

***********************************************

மருத்துர்கள் தெய்வத்திற்கு சமம் என கொண்டாடப்படும்
வர்க்கம். இங்கே அரசு பொது மருத்துவமனை ஒன்றில்
சிசேரியனின் போது குழ்ந்தையின் கைகளை தவறுதலாக
வெட்டி விட்டார்கள் மருத்துவர்கள். அதற்கு பிறகும்
முறையான சிகிச்சை இல்லததால் குழந்தை இறந்து
விட்டது. :((

******************************************************

மகளின் பிறந்தநாளன்று காலை 4 மணிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வாழ்த்து,
அனுப்பியது கொழும்பில் எங்கள் வீட்டில் வேலை செய்த மேரி.
அவருக்கும் அன்றுதான் பிறந்தநாள் என்பதால் அழைத்து வாழ்த்து சொன்னேன்.

”இப்ப நிலமை நல்லாயிருக்கு மேடம், 26 போலிங்(தேர்தல்) அதுக்கப்புறம்
எப்படியிருக்குன்னு பாத்து கிளம்பிவந்திடுங்க!!! பாசம் ஜாஸ்தியாகிடுச்சு.

2 நாள் முன்னாடி அயித்தானுக்கு ஒரு கனவு. அயித்தானுக்கு கொழும்பில்
வேலை கிடைத்து நாங்கள் முன்பிருந்த வீட்டிற்கே
நாங்கள் திரும்பிப்போய்விடுவதாகவும் கனவாம். மேரி அழைத்தது
பத்தி அயித்தானுக்கு சொல்லவேயில்லை.

ஆஹா, சாமி ரங்கா, இந்த கனவு நனவாச்சுன்னா காலத்துக்கும்
எங்கப்பன் கதிர்காமனை கண்ணார பாத்துகிட்டு சொச்ச ஜீவனத்தை
கழிச்சிடலாம். :))

***************************************************

தேசிய பெண் குழந்தை தினத்தை ஒட்டி விளம்பரம்
ஒன்றை அரசு வெளியிட்டிருக்கிறது.
WHERE WOULD YOU BE IF YOUR MOTHER WAS NOT ALLOWED TO BE BORN??
என்ற ஸ்லோகனுடன் கபில்தேவ், சித்தார் இசைக்கலைஞர் படங்களுடன்
பாக்கிஸ்தான் அதிகாரி தன்வீர் மக்மூத் அஹ்மத் அவர்களின்
படத்தையும் போட்டுவிட்டார்கள். அவசர அவசரமாக
பிரதம மந்திரியின் அலுவலகம் மன்னிப்பு கேட்டிருக்கிறது!!

யோசிச்சு பொறுமையா செய்யுங்க சாமிகளா!
ஏற்கனவே பக்கத்து நாட்டுக்காரங்க இனியும் 26/11
இந்தியாவில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் அளிக்க
முடியாதுன்னு அறிக்கை விட்டிருக்காங்க.

*****************************************************
2012 படம் பாத்துட்டேன். இதுக்குத் தனியா விமர்சனம்
எழுதணும்னுதான் நினைச்சேன். எதுக்குன்னு எழுதுவேன்.
படைப்பு, கேமிரா, நடிப்பு என எல்லாமே சரியான கலவையில்
இருக்கு. இந்தப் படம் பாக்கும் போது மனசுல ஓடின
ஒரே விஷயம் “ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினவங்க
இப்ப மண்ணுக்குள்ள”.

இப்படி ஒரு ப்ரளயம் வந்தால் பெரியவங்க,சின்னவங்க,
பணக்காரர், ஏழைன்னு எந்தப் பாகுபாடும் இல்லாம
”கூண்டோட கைலாசம்” தான்!! ஆஹ இயற்கையைத்தான்
பாதுகாக்காம ப்ளாஸ்டிக், புகைன்னு மாசுபடுத்தி
இப்ப வெப்பம் அதிகமாகி பனிமலைகள் உருகிகிட்டு வருது.

இனி இதை தடுத்து நிறுத்த ஆவன செய்யப்போற
மாதிரி 2012 படத்தில், வேறொரு பெண்ணை திருமணம்
செய்து கொண்டு வாழும் மகனிடம் மனது மாறி பேச
நினைத்த தந்தை போனில் அழைத்து பேசத்துவங்கும்போது
சுனாமி ஏற்பட்டு அந்த இடமே காலியாகிவிடும்.
என்ன பேசிட்டியா என்று கேட்ட நண்பரிடம்,
“I could have called early, was late"ன்னு சொல்வார்.
நச் மெசெஜ் இது.

வாழும் வரை போராட வேண்டாம், வாழும் வரை
சந்தோஷமா யார் கூடயும் பகைமை இல்லாம,
அன்பா வாழ்ந்திட்டு போயிடனும். இல்லாட்டி அந்த
பெரியவர் மாதிரி மனசு வருத்தப்படணும்.

உலகம் அழியற வரைக்கும் காத்திருப்பானேன்.

TRAILOR


***************************************************
காலம் காலமாக குடியரசு தினம், சுதந்திர தினம்
இரண்டிற்கும் தூர்தர்ஷனில் வரும் “நன்னே முன்னே பச்சே
தேரி முட்டி மே க்யா ஹை” பாட்டு.



அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

Friday, January 22, 2010

எம்புட்டு சாப்பிடணும்??!!!

ஆந்திரா மிளகுக் குழம்புன்னு முந்தைய பதிவு போட்டுட்டு
எம்புட்டு சாப்பிடணும்னு பதிவா?? என்ன ஒரு வில்லத்தனம்!!
அப்படின்னு கேட்கப்போற நட்புக்களுக்கு மேட்டர் இருக்கு
அதான் இந்தப் பதிவு. :)))

ஆங்கிலத்துல ஒரு சொலவடை இருக்கு.
YOU WHAT U ARE EATING.நாம நல்ல சாப்பாடு அதாவது
பேலன்ஸ்டா சாப்பிட்டா நல்லா இருப்போம். அளவுக்கு அதிகமாக
சாப்பிட்டா எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்தான் இருப்போம்.

டயட்டுன்னா இன்னான்னு ஒருபதிவு போட்டிருந்தேன்.
அதைப் படிச்சா டயட் பத்தி ஒருஐடியா கிடைக்கும்.

டயட்டுன்னா சாப்பிடாம இருக்கறது இல்லைன்னு தெரிஞ்சுச்சா!!
அதுலயும் முக்கியம் நம்ம உடம்புக்கு தேவையான அளவு
உணவு நாம சாப்பிடணும். இது தெரியாம ஃபுல் கட்டு கட்டினா
பிரச்சனைதான்.



நம்ம உயரத்துக்கு தகுந்த எடை இருந்தா நாம சரியான அளவுள
இருக்கோம்னு அர்த்தம்.

உயரம் அதிகம் எடை குறைவு, எடை அதிகம் உயரம் குறைவுன்னு
சிலருக்கு பிரச்சனை இருக்கும்.

நாம எம்புட்டு சாப்பிடணும்னு தெரிஞ்சிக்கறதுக்கு முன்னாடி
உங்க உயரம், எடை, வயது எல்லாம் ஒரு பேப்பர்ல குறிச்சு
வெச்சுக்கோங்க.

இப்ப கீழ நான் கொடுத்திருக்கும் லிங்க்ல போனா நம்ம உயரம்,
எடைக்கு நாம ஒரு நாளைக்கு எம்புட்டு கலோரி சாப்பிடணும்னு
கணிச்சு கொடுப்பாங்க. இலவசம் தான்.

அதை வெச்சு நம்ம டயட் ப்ளானை போட்டுகிட்டா ஆரோக்கியமான
உடம்பு ரெடி.


calorie counter your daily protein and calorie needs இருக்கற
இடத்துல உயரம், எடை கொடுத்தீங்கன்னா கணக்கு போட்டு
சொல்லிடும்.

உடல் இளைக்கணும்னா எம்புட்டு கலோரி சாப்பிடணும்,
உடல் பருமனை மெயிண்டென் செய்யணும்னா எம்புட்டு கலோரி
உணவுன்னு எல்லாம் தெரிஞ்சிக்கலாம்.

நமக்கு எடை கிலோவிலதான் தெரியும். பவுண்ட்ஸில் தெரிய இங்கே
போங்க.kilogram to pounds converter



calorie counterக்கு மேலே Burned Calories Calculator இருக்கு. அதில
நாம் செய்யும் வேலையில் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்படுதுன்னு
தெரிஞ்சிக்கலாம்.

BMI CALCULATOR நம்ம எடையின் அளவு தெரிஞ்சிக்கலாம்.

இங்கேயும்


நம் உடம்புக்குத் தேவையான அளவு சாப்பிட்டு ஆரோக்கியமா
வாழ்வோம்.

HAPPY WEEKEND

மிளகு குழம்பு- ஆந்திரா ஸ்டைல்

இந்த குழம்புக்கு தெலுங்கில் பிண்டி மிரியம் என்று
பெயர். மிரியம்- மிளகு.

வாழக்காயை வெச்சு பொடிமாஸ், பொடி, காய், இல்லாட்டி
அவியலில் போடுவதுன்னு நடக்கும். மனசிருந்தா
சிப்ஸ் செய்வோம். இதைத் தவிரவும் வேறெப்பெடி சமைக்கலாம்??

வாழக்காய் பொதுவா வாயு சம்பந்த பட்டதுன்னு பலர் ஒதுக்கிடுவாங்க.
அந்த ஒதுக்கீடெல்லாம் வேண்டாம். வாழக்காயும் சாப்பிடலாம்,
அதே சமயம் வாய்வு தொந்திரவும் வராது. அது இந்த பிண்டி மிரியத்தால்
சாத்தியம்.

தேவையான சாமான்கள் பாப்போமா!!

2 வாழக்காய், 1 கைப்பிடி அளவு (அல்லது குறைச்சலா) பச்சை வேர்க்கடலை,
புளி எலுமிச்சம் அளவு, உப்பு, மஞ்சள் தேவையான அளவு.
வேக வைத்த துவரம்பருப்பு - 1 கப்

வறுக்க கடலைப்பருப்பு,தனியா தலா 2 ஸ்பூன், மிளகு 3 ஸ்பூன்
போட்டு எண்ணெய் விடாம வறுத்து வெச்சுக்கவும். ஆறியதும்
தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன் சேர்த்து நைசா அரைச்சு வெச்சுக்கணும்.



செய்வது இப்படித்தான்.

ஒரு அடிகணமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி,
தோல்சீவி துண்டங்களாக நறுக்கிய வாழக்காய், கைப்பிடி வேர்க்கடலை
போட்டு வேக விடவும்.

பாதி வெந்த பொழுது கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர், மஞ்சள்,
உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

புளி வாசனை போனதும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை
சேர்த்து நன்கு கொதிக்க விடவும், பிறகு பருப்பை மசித்து
சேர்த்து கொதிக்கவிட்டு கறிவேப்பிலை சேர்த்தால்



கம கம ஆந்திரா ஸ்டைல் மிளகு குழம்பு ரெடி.

தோசை, இட்லி, சோறு எல்லாத்துக்கும் நல்ல காம்பினேஷன்

Thursday, January 21, 2010

ஆஷிஷ் டான்ஸ் போட்டோஸ்

இந்த வருடம் துவக்கமே என் பையனின் கெட்ட ஆட்டத்தோடுதான்:))

அப்பார்ட்மெண்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஐயாதான்
பிரபுதேவா.. சும்மாவா 3 பாட்டுக்கு தானே கொரியோ க்ராப் செஞ்சிருக்காரு.
ஒரு பாட்டு ஸோலோவா ஆட்டம் வேறு.


நடனம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ஆனா பெண்ணா பிறந்த
காரணத்தால் சில ஆசைகள் நிறைவேறாமப்போகும். என் பிள்ளை
அதை செய்யணும்னு வற்புறுத்தல, ஆனா இயல்பாவே வந்திருச்சுன்னு
நினைக்கிறேன்.

ஆஷிஷ் ஆட்டம், ட்ராயிங்க் எல்லாவற்றிலும் கலக்கும் ஆள்.

ROCKET SING ஹிந்தி பாட்டுக்கு ஆஷிஷ் போட்ட ஆட்டதுக்கு
செம விசில் தான்.:)) ரன்பீர் சிங்கை விடவும் சூப்பரா
ஆடினதா எல்லோரும் சொன்னாங்க.

பாட்டு இங்கேயிருக்கு.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆஷிஷ் ஆடும் போட்டோ:


3 idiots படத்தின் ஆல் இஸ் வெல் பாட்டுக்கு டான்ஸ்:




எந்துகே ரவணம்மா எனும் தெலுங்கு குத்து பாட்டுக்கு
கூட்டமாக சேர்ந்து குத்தும் ஆஷிஷ் :))
இந்தப் பாட்டைபத்தி பதிவு இங்கேயிருக்கு.




பேப்பர் கப்பில் ஆஷிஷ் செய்த பூ:


ஆஷிஷின் படிக்கும் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்களின்
send off party யில் ஆஷிஷ் 3 பாட்டுக்கு நடனம் அமைக்க
போறார். அவங்க க்ளாஸ் டீச்சரே இவன் பெயரை கொடுத்திருக்காங்கன்னு
ஐயாவுக்கு ஒரே பெருமை. எனக்கும் தான்.

அம்ருதாவும் அவங்க ஃப்ரெண்ட் இதியும் கூட இரண்டு
பாட்டுக்கு செம டான்ஸ். பொண்ணுங்க போட்டோ வேணாமேன்னுதான்
போடலை.

இது நான் செஞ்ச சாக்லேட். எல்லோருக்காகவும் :))




டான்ஸ் போட்டோ பாத்து களைச்சிருப்பீங்க. எங்க ஊர் பன்னீர் சோடா
குடிங்க. சூப்பரா இருக்கும்.

Wednesday, January 20, 2010

பெற்றோர்கள் செய்யக்கூடாதவை

பல பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது கலை அல்ல.
எஸ் வீ சேகர் ஒரு ட்ராமல சொல்வது போல,” நீ வளர்க்காட்டியும்
நானே வளர்ந்திருப்பேன்” என்ற நிலைதான். மாரல் ஸ்டடி வகுப்புக்களும்
இல்லை, வீட்டிலும் சொல்லிக்கொடுக்க ஆள் இல்லை எனும்
நிலையில் ஒரு தலைமுறையே முறையாக வளர்க்கப்படாமல்
போய்விட்டது.

நாம் செய்யக்கூடாதவை என்னென்ன என்று தெரிந்து விட்டால்
செய்யக்கூடியவை புரிந்துவிடும். பெற்றோர்கள் நல்ல பிள்ளைகளை
வளர்க்க இது உதவும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.


1.குழந்தை ஆசையா சொல்லணும்னோ, பேசனும்னோ
வந்தா ”நான் பிசியா இருக்கேன் அப்புறம் பேசலாம்”!,
மேல விழுந்து கொஞ்சனமாக்கும் தள்ளி நின்னு அப்படின்னுல்லாம்
பேசக்கூடாது. அம்மா, அப்பா, தன்னை தவிர்க்கிறார்கள்,
உதாசினப்படுத்துகிறார்கள் எனும் எண்ணம் விதைக்கப்படுகிறது.


2. பெல்டால அடி, குட்டு, கிள்ளுவது, கைல கிடைச்சதால அடி
இவை physica abuse வகை. இவை தரும் நேர்மறை விளைவுகள்.


3. அடிப்பது குத்தம். வாய்க்கு வந்தபடி திட்டுவது மஹா கொடுமை.
நம் நாட்டில் பிள்ளைகளை அடிப்பது, திட்டுவது இன்னமும் குற்றமாக
இல்லை. மேலை நாடுகளில் எங்கப்பா அடிச்சார், அம்மா திட்டினாங்கன்னு
போலிஸ்ல கேஸ் போட முடியும். நம்ம நாட்டுல அந்த வசதி
இல்லை என்பதற்காக வரைமுறை இல்லாமல் திட்டுவது
“தீயினாற் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே நாவினால் சுட்டவடு”ஆகிப்போகும்னு
வள்ளுவர் சொல்லி வெச்சிருக்கார்.

4.” நான் பெத்தது சரியில்லீங்க!!!” ”இதெல்லாம் நாளைக்கு
எனக்கு சோறா போடப்போகுது!!” இதெல்லாம் தன் மனக்குறையை
அடுத்தவங்க கிட்ட சொல்லிக்கிறா மாதிரி பெத்தவங்க பேசுவது.
ஆனா இது தவறு. நம்ம பிள்ளையை பத்தி நாமே குறையா
அடுத்தவங்க கிட்ட சொல்லக்கூடாது. அதே சமயம் ரொம்பவும்
புகழ்ந்தும் சொல்லக்கூடாது.

“தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும் புகழுரைகள்”
என்பதையும் மறக்கக்கூடாது.



5. இந்த உலகத்துல ஒண்ணு கூட சரியில்லை, “உங்கம்மா
ஒரு உதவாக்கரை!!” உங்கப்பனுக்கு மூளையே வேலை செய்யாது”
”நீ பைசா ப்ரோயஜன்ம் இல்லாதவன்” இப்படி அடுத்தவர்
பற்றியோ பிள்ளைகள் பற்றி பிள்ளைகளிடமோ குறை சொல்வதும்
ஆகாது.

6. அடுத்தவங்களைப் பத்தி பேச வாய்ப்பு கிடைச்சா போதும் மக்களுக்கு.
இதுல எதுத்து பேச முடியாத பிள்ளைகளை பத்தி விமர்சனம்
செய்ய தயங்கவும் மாட்டாங்க. அந்த விமர்சனங்கள் அவர்களின்
வளர்ச்சியை ரொம்பவே பாதிக்கும்.

7. நம் கனவுகளை சுமக்க பிறந்தவங்க இல்லை பிள்ளைகள்.
அவர்கள் விரும்பும் படிப்பு,வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நாம் சொல்லுவதை கேட்க வேண்டுமென அடம் பிடிக்கக்கூடாது.

8. அம்மா, அப்பா சண்டை போட்டுக்கொள்ளும் சூழ்நிலையில் வளரும்
குழந்தை பாதுக்காப்பின்மையாக உணர்ந்து கூனிக்குறுகி முன்னேர
முடியாமல் போகும் வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் முரட்டுத்தனமாக
மாறிவிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.



9. பசங்க சின்னவங்க என்பதால் அவங்க செய்வது எல்லாமே
தவறா இருக்கணும்னு சட்டமில்லை. அவர்களின் செயல்கள்,
பேச்சுக்கள், நடவடிக்கைகள், எல்லாவற்றையும் தவறாகவே
புரிந்துக்கொள்ளக் கூடாது.

10. ”என் பையன் எதிர்காலம் என்னாகுமோ!!”
“நாளைக்கு அவங்க என்ன ஆவாங்களோ!!”
“எஞ்சினியரிங், டாக்டர் படிகாட்டி கை நிறைய்ய
சம்பாதிக்க முடியாதே” போன்ற தேவையில்லாத வருத்தங்கள்
பட வேண்டாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.

11. பிள்ளைகள் விரும்பியதை அவர்கள் அடைந்தே தீர்வார்கள்
எனும் நம்பிக்கை நமக்கு முதலில் இருக்க வேண்டும்.

12. பிள்ளையின் கனவை நனவாக்க நமது தூண்டுகோல்(சுடர்
விளைக்கைத் தூண்டும் தூண்டுகோல் போல)இருக்க வேண்டும்.
அவர்கள் சோர்வுறும் தருணத்தில் ஆதரித்து, பேசி
முன்னேற்றப்பாதையில் நடக்க வைக்க வேண்டும்.

13. ”வயசாகிடுச்சு இன்னும் என்ன அம்மாவை கட்டிகிட்டு”
”வயசு வந்த பொண்ணு அப்பனை கட்டிக்கிறது எல்லாம்
எங்க காலத்துல இல்லை” எனும் பேச்சுக்களை கேட்டிருப்போம்.
நம் பிள்ளைகளை நாம் கட்டியணைத்து, பேசினால் அவர்களின்
தன்னம்பிக்கை வளரும். வசூல் ராஜா எம்பீபீ எஸ் பரிந்துரைத்த
”கட்டிப்பிடி வைத்தியம்” ரொம்ப முக்கியம். நம் குழ்ந்தைகளிடம்
மட்டும்.

14. அன்றாட வாழ்க்கையில் பசங்களின் நடவடிக்கை, பேச்சு,
ஆகியவைகளை கண்காணிப்பது அவசியம். ஏதும் மாறுதல் இருந்தால்
அட்வைஸ் மழை பொழியாமல் நட்புடன் பேசுவது போல பேசி
கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

15. ”உபகாரம் செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாம இருந்தா
போதும்னு!!” பெரியவங்க சொல்லியிருக்காங்க. பசங்களின்
வளர்ச்சிக்கு உதவும் வார்த்தைகள் சொல்லாட்டியும் அவர்களை
Demotivate செய்யும் வார்த்தைகளை பேசாமல் இருப்பது உசிதம்.


16. பெரிய தவறுகள் செய்தால் தண்டனை அவசியம்.
சின்ன சின்ன தவறுகளுக்கும் பெரிய பெரிய தண்டனை கொடுத்தால்
தண்டனையில் தன் தவறை புரிந்து கொள்வது போய் பிள்ளை
முரடாக தயாராக வாய்ப்பிருக்கிறது. தண்டனை தவறாக புரிந்து
கொள்ளப்படும்.

நாம் தவறு செய்திருக்கிறோம், அதை மறுமுறை
செய்யக்கூடாது என அறிவுறுத்தத்தான் தண்டனை.
அந்த பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டால் நமக்கு
பிரச்சினையே இல்லை.

செய்யக்கூடாதது தெரிந்து கொண்டதால், நாம் செய்ய வேண்டியது
தெளிவாக புரிந்து கொள்ள வசதி. நல்ல பெற்றோராக
பிள்ளையின் வளர்ச்சிக்கு உதவுவோம்.


சிவகாசிராம்குமார் எனும் இந்த நண்பரின் தளத்தில்
பல விடயங்கள் இருக்கின்றன. பாருங்களேன்.





Tuesday, January 19, 2010

எங்கள் செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரே அட்டகாசமாக போய்விட்டது. அம்ருதம்மாவின்
கொட்டம் ரொம்பவே ஜாஸ்தியாகிடுச்சு. :)))

லீவுக்கு ஊருக்கு போன போது “இந்தத் தடவை
லேப்டாப் இல்லாமல் வர்றேன். ஜாலியா எஞ்சாய் செய்யலாம்னு”
அயித்தான் சொல்லி வாய் மூடலை,” ஹை! உங்களுக்கு
லேப்டாபே தேவையில்லை. கைல இருக்கற மொபைல் போதுமேன்னு”
மடக்கல் நடக்குது.


ஜனவரி பிறந்ததுலேர்ந்து கவுண்ட் டவுன் நடக்குது.
இன்னும் 18 நாள் தான் இருக்குன்னு சொல்லிகிட்டே வந்தாங்க.

ஒண்ணும் தெரியாத மாதிரி,”எதுக்குன்னு??” நான் கேட்டதுக்கு
on 19th I am becoming a decade(அவுங்க பிறந்த 10 வருஷம்
ஆகப்போகுதாம்!!) we need to celebrateனு ஆர்டர்.



பொங்கல் அன்னைக்கு வந்து மெல்லமா என் கிட்ட
அம்மா சொல்றாங்க,”இன்னைக்கு ஃபுல்லும் அண்ணாகூட
ரொம்ப ஆர்க்யூ செய்யக்கூடாதுன்னு”!!

“ஏம்மான்னு” கேட்டதுக்கு, “ஆர்க்யூ செஞ்சா கலெக்‌ஷன்
கட்டாகிடும்!!! பொங்கல், பர்த்டேக்கு அண்ணாகிட்டேயிருந்து
வாங்கிக்க வேண்டியிருக்குல்ல!!!”” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அண்ணனுக்கு காதுல விழுகாம கமுக்கமா கமெண்ட்
அடிக்கறாங்க...



2 மாசம் முன்னாடியே தனக்கு லாங்க் கவுன் வேணும்னு
மேடம் சொல்லிட்டாங்க. ஹைதை, சென்னை கடைகளில்
தேடி கிடைக்கலை. புதுகை ட்ரிப் முடிஞ்சு திரும்பி வரும்போது
ஆர்.எம்.கே.வி கடை விளம்பரம் பாத்து இந்த மாதிரிதான்
கேட்டேன்னு சொல்ல அடிச்சு பிடிச்சு தாம்பரம் - மாம்பலம்
வந்து வாங்கிகிட்டு ஓடினதை என்னன்னு சொல்ல!!!!

எங்கள் செல்லம் அம்ருதாவுக்கு இன்றைக்கு பிறந்த நாள்.
அம்மா, அப்பா, அண்ணாவின் மனமார்ந்த பிறந்த நாள்
வாழ்த்துக்கள் செல்லம்.







தன் பிறந்த நாளுக்கு என்ன மெனுன்னு ஆர்டர் போட்டிருக்காங்க.
குலாப்ஜாமுன், பிசிபேளாபாத், உருளை வருவல், சாயந்திரம்
டொமினோஸ் பிட்சா. பார்டிக்கு எல்லோரும் வந்திடுங்க.

Monday, January 18, 2010

பா - 3 இடியட்ஸ் பார்த்துவிட்டேன்

எனக்கு பிடித்த நடிகர் அமிதாப்பின் பா படத்தை பார்க்கும்
வாய்ப்பிற்காக காத்திருந்தேன். ஜனவரி 1 அயித்தான் இந்தப் படத்துக்கு
அழைத்துச் சென்றார். அமிதாப் ப்ரொஜோரியா சிறுவனாக
வேடம் தரித்து நடித்திருக்கிறார் என்று முன்பே தெரிந்திராவிட்டால்
இது அமிதாப்பின் படம் என்று சொல்லவே முடியாது. அமிதாப்பாக
நடிக்காமல் ப்ரொஜோரியா சிறுவனாக வாழ்ந்திருக்கிறார்.
அமிதாப்பை அறிமுகப் படுத்துவதாக டயிட்டிலில் போட்டது சரியே.


நேர்மையான அரசியல்வாதி, குழந்தையின் நோய் தெரிந்து
நொறுங்கினாலும் ஏற்றுக்கொண்டு வளர்க்கும் தாய், அமிதாப்பின்
நடிப்பை என்னவென்று சொல்வது.. வார்த்தைகள் இல்லை.

அடுத்ததாக பார்க்கத் திட்டமிட்டிருந்த படம் 3 இடியட்ஸ்.
விமர்சனங்கள் எதையும் படிக்காமல் தவிர்த்து படம் பார்க்கச்
சென்றேன்.

என்னவென்று சொல்வது!!!! வலைப்பூக்களில் நாம் ஒருவர்
கொசுவத்தி சுத்தினால் அது அடுத்தவருக்கும் கண்டிப்பாய் சுத்தும்.
அது போல் தான் இந்தப் படமும். படத்தை பார்ப்பவர்கள் தன்
வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாக ஏதேனும் ஒரு காட்சியை நினைக்கச்
செய்யும் உருவாக்கம்.





பெற்றோர்களுக்கான மெசெஜ், பிள்ளை விரும்புவதை செய்ய
விடுங்கள். பணம் குறைவாக சம்பாரித்தாலும் சரி அவர்கள்
விரும்பும் வேலை பார்க்க படிக்க வைப்பதே சரி.
இஞ்சினியரிங் படித்தே ஆகவேண்டும் என கட்டாயப்படுத்தும்
மாதவனின் தகப்பன் பாத்திரம் போல் பல பெற்றோர்கள்
நிஜத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.


மாணவர்களுக்கு மெசெஜ்: புரியாமல் மனப்பாடம் செய்யாமல்
புரிந்து படிப்பது அவசியம். எப்போது புரிந்து படிப்பீர்கள்? உங்களுக்கு
அதன் மேல் விருப்பம் இருப்பின் மட்டுமே. ஆக விரும்பிய
துறையை எடுத்து மட்டும் படியுங்கள். (சொல்லின் பொருள்
புரியாமல் சத்துர் எனும் மாணவன் ஆற்றும் உரையில் தவறு
உண்டாகி வயிறு புண்ணாகிநாம் சிரித்தாலும் நச்சென மண்டையில்
உறைப்பது,” இப்படித்தானே பல மாணவர்கள் வரிக்கு வரி மனப்பாடம்
செய்து பரிட்சை எழுதி அதிக மார்க் பெருகிறார்கள்””)



ஆசிரியர்களுக்கு மெசெஜ்: புரிந்து கொள்ளும்படி பாடம் நடத்துங்கள்.
கற்றலில் இனிமை வேண்டும் அதை கற்பித்தலில் காட்டுங்கள்.

(prerajulation, farhanism இரண்டு வார்த்தைக்கும் அர்த்தம் தேடும்
மாணவர் + பிரின்சிபாலுக்கு அமீர் தரும் ஷாக்சிம்பிளி சூப்பர்ப்)

பாடத்திட்ட வல்லுனர்களுக்கு: தேய்ந்து போன் டேப்ரிக்கார்டாக இருக்கும்
நம் மெக்காலே முறை கல்வித் திட்டத்தை மாற்றுங்கள். அந்தத்
திட்டத்தால் எந்த பயனுமில்லை!!!!

இந்த க்ரேடிங் சிஸ்டம் தரும் மன அழுத்தத்தை அலட்டிக்கொள்ளாமல்
அமீர் சொல்லும் காட்சி சூப்பர்.


நான் படிக்க நினைத்து ஒன்று படித்தது வேறு என கொசுவத்தி
சுத்தினாலும் கண்ணில் நீர் வரவழைத்த காட்சி கரீனா கபூர்
அக்காவின் பிரசவம். அந்த காட்சி பார்க்கும் பொழுது ஆஷிஷின்
பிரசவ வேதனை, வலி அதே போல் தலைவெளியில் வராமல்
என் நெஞ்சில் ஒரு பெண் அமர்ந்து கொள்ள,
இதற்கு மேல் சொல்ல மனது வரவில்லை....... :((



எதிர் பார்த்தது போல் சதுர் தேடும் வான்கடு எனும் விஞ்ஞானி
அமீர்கான் தான். படம் முழ்தும் நல்லதொரு எண்டயர்மெண்ட் +
மெசெஜ்கள். போரடிக்காமல் கொடுத்திருப்பது சாமர்த்தியம்.
கேமிரா அழகு. அதுவும் ஆரம்ப பாட்டில் கேமிரா மலை உச்சியிலிருந்து
செல்லும் பொழ்து தலை சுற்றுவது போல இருக்கிறது. பச்சை
பசேல் அருமை.




வாழ்க்கை முழுதும் செத்து செத்து பிழைக்கிறோம்

Give me some sunshine
give me rain
give me another chance
i want to grow up once again.

பலரின் மனதைச் சொல்லும் பாடல்.

தொலைத்த குழந்தைப்பருவத்தை திரும்ப
வாழ ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என ஏக்கம்
யாருக்குத்தான் இல்லை!!!!!!!



Get Your Own Hindi Songs Player at Music Plugin

ALL IZZ WELL!
இந்த தாரக மந்திரத்தை நீங்களும் சொல்லிப்பாருங்கள்.
அதிசயம் நிகழலாம்.

லைஃப் ஹோ அவுட் ஆஃப் கண்ட்ரோல்
ஹோட்டோ கோ கர்கே கோல்
சீட்டி பஜாகே போல்
ALL IZZ WELL!

சீட்டி பஜாகே போல் பய்யா
ALL IZZ WELL!!!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin


தமிழ்ல இந்த படத்தை ரீமெக்கினா யாரெல்லாம் நடிச்சா
நல்லாயிருக்கும்????

Friday, January 15, 2010

சாதனை செய்திருக்கும் பெண்

ஜனவரி 10 ஆம் தேதி 2010 அன்று ஒரு சாதனையை செய்திருக்கிறார்
ஹைதையைச் சேர்ந்த பெண்.

எரோபிக்ஸ் கற்றுத்தரும் தினாஜ் தொடர்ந்து 26 மணிநேரம்
எரோபிக்ஸ் நடனம் செய்து புதிய உலக கின்னஸ் சாதனையில்
இடம்பெற்றிருக்கிறார்.

உடல்நலம் பற்றி மக்களிடம் ஒரு அறிவை உருவாக்க வேண்டும்
என்பதற்காகவே தான் இந்தச் சாதனையை செய்ய நினைத்ததாகச்
சொல்லியிருக்கும் தினாஜ் இதற்கு முன்பு விசாகபட்டிணத்தில்
20 மணிநேரம் தொடர்ந்து நடனமாடி இருக்கிறார்.




இந்த சாதனைகளுக்கு முன்பு வெள்ளோட்டமாக
12 மணிநேரம், 16 மணிநேரம் நடனமாடியிருக்கிறார்.
இது லிம்கா உலக சாதனையில் ஏற்கபட்டிருக்கிறது.
அதற்கு பின் விசாகப்பட்டிணத்தில் நடத்தப்பட்ட 20 மணிநேர
சாதனை ஆசியாவிலேயே சாதனை.

இப்போது உலக சாதனையாக தொடர்ந்து 26 மணிநேர
நடனம். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்திருக்கிறது.
இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது ஒரு இந்தியர் அதுவும்
ஒரு பெண் என்பதில் பெருமை கொள்வோம்.
வாழ்த்துக்கள் தினாஜ்.

உலக சாதனைக்காக ஒரு பயணம் எனும் அவரது இந்த
வலைதளத்தில் புகைப்படங்கள், காணொளிக்கள் இருக்கின்றன.

Wednesday, January 13, 2010

சந்தோஷமான செய்தி

மறைந்த மாமாவின ஆசிர்வாதம்,
ஆண்டவனின் பரிபூரண அருள் எங்கள் வீட்டில்
புது வரவு. ஆமாம். நான் பாட்டி ஆகிவிட்டேன். :))

அயித்தானின் அண்ணன் மகனுக்கு இன்று பெண்குழந்தை
பிறந்துள்ளது. எங்களுக்கு பேத்தி.

சந்தோஷமான இந்த விடயத்தை அனைவரிடமும்
பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

மாமாவின் ஸ்தானத்தில் இருந்து எங்கள் கடமைகளைச்
செய்ய மாமாவின் ஆசிகள் எப்போதும் கிடைக்க வேண்டும்.

குழந்தைக்கு ஆண்டவன் அருள் புரிந்து எல்லா வளமும் பெற
பெரியவர்கள் உங்கள் ஆசியும் வேண்டும்.

Tuesday, January 12, 2010

ஹைதை-ஆவக்காய பிரியாணி 12.1.09

பொங்கல் நேரத்துல என்ன ஆவக்காய் பிரியாணின்னு
பாக்கறீங்களா?? :) அட்வான்ஸா பொங்கல் வாழ்த்து
எல்லோருக்கும் இங்க சொல்லியிருக்கேன். மறுக்கா
பொங்கல்வாழ்த்தை எல்லோருக்கும் சொல்லிக்கறேன்.

*************************************************

பொங்கல் இனிப்பு அதிகமா இருக்கும். அதனால் ரொம்ப
சாப்பிட முடியாது. திகட்டும். எங்க அவ்வா பொங்கலுக்கு
தொட்டுக்க சட்னி ஒண்ணு செய்வாங்க சூப்பரா இருக்கும்.
சக்கரை பொங்கலுக்கும் செம காம்பினேஷன் அது.

வண்டிக்காரன் துவையல்னு பேரு.அவசர துவையல்னு
பேரு.

ப.மி-4, சிவப்பு மிளகாய்,10 புளி எலுமிச்சம் பழம் அளவு,
கொத்துமல்லி- 1 மிகச்சின்ன கட்டு,2 ஈர்க்கு கறிவேப்பிலை,
பெருங்காயம் - 1 ஸ்பூன்,உப்பு-தேவையான அளவு
எல்லாவற்றையும் அரைத்து ந.எண்ணெயில் கடுகு
தாளித்து அதில் அரைத்து வைத்திருக்கும்
விழுதை சேர்த்து பிரட்டி எடுத்தால் சுவையான துவையல் ரெடி.

இனி தடையே இல்லாம சக்கரை பொங்கலை ஒரு கை பார்க்கலாம்.
:)))
****************************************************

தை பிறந்தால் வழி பிறக்கும்னு சொல்வாங்க. தை பிறக்கும்
முன்னரே நல்ல செய்தி வந்திருச்சு. மஹாராஷ்டிராவிலிருந்து
புது விளைச்சல்ல பருப்புக்கள் வந்திட்டதனால, பருப்புக்களின்
விலை குறைஞ்சிடுமாம்.கிலோ 100 ரூபாய் வரை விற்கப்பட்டும்
பருப்புக்கள் இரண்டு நாள்ல 70 ரூபாய்க்கு விக்கப்படுமாம்(ஹோல்சேல்
மார்கெட் ரேட்டு சொல்றேன்). இன்னும் இரண்டு வாரங்களில்
இந்த விலை இன்னமும் குறைய வாய்ப்பிருக்காம்.

:)
***************************************************

தேவை ஒரு சென்சார் போர்டு அல்லது சட்டம்னு பதிவு போட்டிருந்தேன்.
தனியார் சேனல்களின் ஆட்டத்தை கொஞ்சம் குறைக்கும் விதத்தில்
சட்டம் ஒன்று இயற்றப்படணும்னு ஆந்திர அரசு மத்திய அரசை
வலியுறுத்தப்போகுதாம்.

அமைச்சர் கீதாரெட்டி,” முதலமைச்சர் இந்தத் தகவலை
மத்திய அரசுக்கு கொண்டு சென்று தீர்மானம் இயற்ற வைக்கபோகிறார்.
மீடியாக்களின் சுதந்திரத்தில் கைவக்கப்போவதில்லை, அதே சமயம்
மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை தருவதையும்
அனுமதிக்கப்போவதில்லைன்னு”! சொல்லியிருக்காங்க.

என் ப்ளாக்கை இவங்க படிக்கறாங்களோ!!

******************************************
TV5 இந்த சேனல்தான் ரிலயன்ஸ் கடைகள் அடித்து நாசமாகும்
விதமாக தவறான செய்திகளை பரப்பியது.அந்த சேனல் மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ் மூலம் தொண்டர்களை
தூண்டிவிட்ட வம்சிசந்த் ரெட்டியை போலிஸ் சிறையில் அடைச்சிருக்காங்க.

கர்ணூலைச் சேர்ந்த மாரெப்பன் என்பவரும் காரணம் என்று
போலிஸ் துப்புத் துலக்க அவர் நேற்று முன் ஜாக்கிரதையாக
NIMS வந்து அட்மிட் ஆகிட்டாராம்.

இவ்வளவு சீக்கிரமா வேலைகள் நடந்தால் எப்பூபூடி!!!!!

************************************************

அம்ருதா ரொம்ப சோகமா இருந்தா? என்னம்மா ஆச்சுன்னு
கேட்டேன். ”அப்பா ஊருக்கு போயிருக்காங்க, எனக்கு ஸ்கூல்ல
பட்டம் செய்யற போட்டி வேற இருக்கு. எனக்கு செய்யத் தெரியாது!
யாரு சொல்லித் தருவாங்கன்னு” சோகம்.

”பட்டம் தானே செய்யணும் இதுக்கு போய் அலட்டிக்கலாமான்னு!”
சொல்லிட்டு தேவையான சாமான் வாங்கிட்டு வந்து வீட்டுலயே
செய்ய சொல்லிக்கொடுத்தேன். “உனக்கு பட்டம் செய்யத் தெரியுமாம்மா!!”ன்னு
செம ஆச்சரியம். பட்டம், கில்லி, கோலிகுண்டுன்னு மாமாகூட போட்டி
போட்டிருக்கேன். மாஞ்சா கயிறு செய்ய கண்ணாடி தூள் நுணுக்கறது,
அது கைல பட்டு காயம்னு நான் அடிக்காத கூத்துக்களா!!!

பொங்கல்னா இங்கே பட்டம் விடுவது வழக்கம்.


நானும் உன்னை மாதிரி பட்டம் செய்வேன்ம்மான்னு ஒரே சந்தோஷத்தோட
கிளம்பினா அம்ருதம்மா. உனக்கு பட்டம் செய்யம் தெரியும்னு எனக்கு கூடத்
தெரியாதுன்னு ஆஷிஷ் அண்ணாவும் சொல்லிட்டு இன்னைக்கு 2 பட்டம்
செஞ்சு வைக்கச் சொல்லிட்டு போயிருக்காங்க. :))

நான் போய் பட்டம் செய்யற வேலையை பார்க்கிறேன்.

Monday, January 11, 2010

வருக தைமகளே வருக....

தைத்திங்கள் முதல்நாள் உழவுக்கு உதவி செய்யும் சூரியன்,
உழவு மாடுகளுக்கு நன்றி சொல்லும் நந்நாளாக கொண்டாடப்படுகிறது.

ஆந்திராவில் பசுஞ்சாணத்தில் பூவைத்து ”கொப்பில்லு” வைத்து
பெண்கள் கும்மியடித்து போகி கொண்டாடுவர்.


பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக
போகிப்பண்டிகை.

தை முதல்நாள் பொங்கல்

காணும் பொங்கல், மாட்டுபொங்கல் என தீபாவளி போல 3 நாட்களுக்கு
கொண்டாடப்படும் இன்னொரு பண்டிகை பொங்கல் மட்டும் தான்.



அருமையான இந்தப் பாடலை பாருங்கள்.


வீரம் சொல்லும் மஞ்சுவிரட்டு:




உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த பொங்கல்
திருநாள் வாழ்த்துக்கள்.

Friday, January 08, 2010

தேவை ஒரு சென்சார்போர்ட் அல்லது சட்டம்

வெள்ளையர்களிடமிருந்து கஷ்டபட்டு வாங்கிய
சுதந்திரம் இப்போது கட்டுப்பாடட்டு கிடக்கிறது.
கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது.
பேசும் உரிமை/சுதந்திரம் அனைவருக்கும் பொது.
அதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம்,’
கருத்து கந்தசாமியாகி கருத்து சொல்லலாம் என்று
ஏதும் இல்லை.

பா ஹிந்தி படத்தில் ஒரு காட்சி. சேனல்காரர்கள்
எப்படி எல்லாம் பேசி சூடேற்றி நிகழ்ச்சி வழங்கி
டீ ஆர் பீ ரேட்டிங் எகிற வைக்கிறார்கள் என்று.
அவர்களுக்கு பதிலடி கொடுப்பார் அபிஷேக் பச்சன்
தூர்தர்ஷன் மூலம். நாட்டின் நிலை இதுதான்.

இதோ தெலுங்கானாவிற்காக ஏற்கனவே கொழுந்து
விட்டு எரிந்து கொண்டிருக்கும் ஆந்திராவில் மற்றுமொரு
கலவரம். உபயம் இங்கே உள்ள ஒரு செய்தி சேனல்.
மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு
ரிலயன்ஸ் நிறுவனத்தினர் காரணம் என கொளூத்திப்போட
நேற்று ரிலயன்ஸ் கடைகள் அத்தனையையும் அடித்து
துவம்சமாக்கியிருக்கிறார்கள்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த Mark Ames எனும் செய்தியாளர்
இணையதளத்தில் எங்கோ

‘Enemy of Larry Summers Ex-Boss Dies in Mysterious Helicopter Crash.’ Summers is currently director of the White House’s National Economic Council for President Barack Obama. According to Ames, Summers worked for Mukesh Ambani, head of Reliance Industries Limited, right until he took the White House job.
என எழுதியிருக்கிறார்.

இதை ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டது அந்தச்
சேனல். அவ்வளவு தான் ஆத்திரம் கொண்டு காங்கிரஸ்
தொண்டர்கள் ரிலயன்ஸ் கடைகளைத் துவம்சம் செய்தனர்.

இப்போது அந்த சேனலின் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது
அரசு. அம்பானிகளும் சும்மா விடப்போவதில்லை என சொல்லி
இருக்கிறார்கள்.

சுதந்திரத்தை கட்டுப்பாடற்றதாக செய்கிறது தற்போதைய்ய
சேனல்கள். அதிலும் பல சேனல்கள் ஆளுங்கட்சி,எதிர்கட்சி
இல்லாவிட்டால் ஏதாவதொரு கட்சியின் சார்பு உள்ளது.
இதனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
தங்களுக்குள் கட்டுப்பாடு இல்லாமல் எல்லாவற்றையும்
படம்பிடித்து போட்டு டீ ஆர் பீ ரேட்டிங் ஏத்தி காசாக்கப்
பாக்கிறது சேனல்கள்.

மனிதாபிமானம் என்பது மருந்துக்கும் இல்லை.
மக்களை உசுப்பேத்திவிட்டு கலவர பூமியாக்குவதில்
சேனல்களின் பங்கு அதிகம்.

முன்பு தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி நிலையங்களில்
நிகழ்ச்சிகள், செய்திகள் வழங்க சென்சார் செய்துதான்
தருவார்கள். தெரிவிக்கும் வார்த்தையில் கூட
கவனமாக இருப்பார்கள். இதைப்பற்றி என்
முந்தைய பதிவு


அரசு உடனடியாக ஒரு சட்டம் கொண்டு வந்து
இந்தத் தனியார் சேனல்களுக்கு சென்சார் போர்டு அமைக்க
வேண்டியது அத்தியாவசியமாகிவிட்டது.

கருத்துச் சுதந்திரம் பற்றி பேசும் பொழுது நம் வலையுலகிலும்
அது கட்டவிழ்ந்துதான் இருக்கிறது. இனியாகிலும் யார்
மனதையும் புண்படுத்தாமல் நம் விமர்சனமோ, கருத்தோ
இருக்க வேண்டும்.

இல்லையென்றால் வலைப்பதிவர்களுக்கும் சென்சார்போர்ட்
வைக்கவேண்டுமென அரசு நினைக்கும் நிலை வந்துவிடும்.

Thursday, January 07, 2010

அவருக்கு தூர்தர்ஷன்னா எனக்கு ரூபவாஹிணி :)

ஆண்டனா திருப்பி இவரு தூர்தர்ஷன் பார்த்த காலத்துல
ரூபவாஹிணி பாக்கவே இன்னொரு ஆண்டெனா ஃபிக்ஸ்
செஞ்சு ரூபவாஹிணி பாத்திருக்கோம்ல. கொசுவத்தி
சுத்தாட்டி தப்பாயிடும்.




அது என்ன கொடுமையோ தெரியாது!!! சென்னை தூர்தர்ஷன்
சரியா வந்ததே இல்லை. ஒரே க்ரெயின்ஸா கொட்டும்.
ஆனா கிளியரா தெரிவது ரூபவாஹிணி தான். அதிகம்
சிங்கள நிகழ்ச்சிதான் வரும்னாலும் சில சமயம் தமிழ்
பாடல்கள் வரும். சில சமயம் சனிகிழமைகளில் தமிழ் திரைப்படம்
வரும். பழைய படங்கள் தான் என்றாலும் ரூபவாஹிணில
பாத்தோம்..


லாட்டோன்னு ஒரு சீட்டிழுப்பு நிகழ்ச்சி. அதாவது நம்ம
லாட்டிரி மாதிரி. அந்த bollகள் உருண்டு வந்து விழும்
அழகே அழகு.(இப்பவும் இந்த நிகழ்ச்சி இருக்கு)




இலங்கைக்கு போனதும் சூப்பர் மார்கெட்டில் தேடியது
இந்த ANCHOR பால் பவுடரைத்தான். :))

இன்றளவும் என் பிள்ளைகளுக்கு பால்னா அதுஆங்கர் தான். அங்கேயிருந்து
யார் வந்தாலும் 4 பாக்கெட் கொண்டு வரச்சொல்லி விடுவார்கள்
பிள்ளைகள்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத் ஸ்தாபனம்- இலங்கை வானொலி
இப்படி சொன்னதும் ஞாபகத்துல ஓடுறது அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது,
கே.எஸ் ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சதானந்தா...
வானொலி பிரியையான எனக்கு இவர்கள் குரல்கள் ரொம்ப
பிடிக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு வரும் லலிதாவின்
பாட்டுக்குப்பாட்டை மறக்க முடியுமா???

அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது



இதுதான் எனது அபிமான கே. எஸ். ராஜா. இவரை எப்படியாவது
பார்த்துவிட வேண்டுமென நினைத்ததுண்டு. அவர் இறந்த துயரச்
செய்திதான் இலங்கையில் எனக்கு கிடைத்தது.




இப்பவும் உங்களால் கே. எஸ். ராஜா அவர்களின் குரலைக்
கேட்க முடியும். ஒரு வலைப்பூவையே அவருக்காக உருவாக்கி
வைத்திருக்கிறார்கள்.


ராஜேஸ்வரி சண்முகம் இவங்க தான்.


இந்தக் குரல்களுக்கு நானடிமை.

அசைபோட்டு பார்க்கும் அனுபவங்களை, நிகழ்ச்சிகளை தந்தவங்க
இவங்க. இலங்கையில் இருந்த பொழுது தற்செயலாம் என் வீடு
ரூபவாஹிணிக்கு மிக அருகில். அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம்
ஒரு பிரமிப்பு, பெருமை, கர்வம். இந்த இடத்திலிருந்து வந்த
நிகழ்ச்சிகளை நான் புதுக்கோட்டையில் உட்கார்ந்து கொண்டு
அனுபவித்து ஆனந்தப்பட்டிருக்கிறேன் என்ற சந்தோஷம்.

கிச்சடி செய்யலாமா???

எப்பவும் ஒரே மாதிரி சமையல் போரடிக்கும்.
கொஞ்சம் வித்யாசமா செய்யலாம்னு நினைக்கறவங்க
இதை செஞ்சு பாக்கலாம்.

உடம்பு சரியில்லாம, வயிறு சரியில்லாம இருக்கறப்ப
கூட இந்த கிச்சடியை சாப்பிடலாம்.

நம்ம வெண்பொங்கலுக்கு தங்கச்சி மாதிரி:)
அதே அரிசி, அதே பாசிப்பருப்பு , கூட கொஞ்சம்
காய்கறிகள் :))

தேவையான சாமான்கள்:

1 கப் அரிசி
1 கப் பாசிப் பருப்பு
1 கப் காய்கறிகள் (காரட், பீன்ஸ், பட்டாணி எல்லாம் கலவையாக)

1 பெரிய வெங்காயம் நீள் வாக்கில் அறிந்தது

2 சின்ன தக்காளி நீள வாக்கில் அறிந்தது.

தாளிக்க சீரகம் கறிவேப்பிலை

நெய் 1 ஸ்பூன்

கரம் மசாலா, சீரகத்தூள், தனியா தூள், - தலா 1 ஸ்பூன்

உப்பு, மஞ்சள் தேவையான அளவு.


செய்முறை:

குக்கரை அடுப்பில் வைத்து நெய் போடவும்
நெய் உருகியதும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து
வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி
சேர்க்கவும்.

காய்கறிகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கியதும்
மசாலா, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி
வைத்திருக்கும் அரிசி, பருப்பையும் சேர்த்து
தேவையான அளவுத் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில்
விட்டு இறக்கி வைக்கவும்.

ஸ்டீம் போனதும் குக்கரைத் திறந்தால் கம கம கிச்சடி ரெடி.





கொத்துமல்லித் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

தொட்டுக்கொள்ள எதுவும் தேவையிராது. விரும்பினால்
தயிர் தொட்டுக்கொள்ளலாம். இல்லையேல் ஊறுகாய் நல்ல
காம்பினேஷன். சுட்ட அப்பளம் மேலும் சுவை சேர்க்கும்.

இது வயதானவர்கள், சின்னக்குழந்தை அனைவருக்கும்
இதமான உணவு.

பிள்ளைகளுக்கு லஞ்சுக்கும் அனுப்பலாம். காய்கறிகள்,
பருப்பு, அரிசி என தேவையான அனைத்துச் சத்துக்களும்
கிடைக்கிறது.


மசாலா விரும்பாதவர்கள் சாம்பார் பொடி போட்டும் செய்யலாம்.
அதுவும் வேண்டாம்னு மாறுதலா வேணும்னா
தாளிக்கும்போது பச்சைமிளகாய் சேர்த்துக்கலாம்.

(கிட்டுமணிகளும், forced bachelorsகளும்
செய்து ஆனந்தமடையக்கூடிய உணவு)

:))

Wednesday, January 06, 2010

ஹஸ்பண்டாலஜி - முதுகலை இல்லறவியல் பாடங்களின் தொகுப்பு...

என்ன ஒரு அநியாயம்!! இப்படி ஒரு வகுப்பு நடந்ததா
நிறைய்ய பேருக்குத் தெரியவில்லை.
புதுசா வந்திருக்கறவங்க நிறைய்ய பேரு தங்கமணிகளை
தாக்கி பதிவு போட்டுகிட்டு வர்றாங்க.

இப்படி பாடம் வந்துச்சுன்னு அவங்களுக்கெல்லாம்
சொல்லத்தான் ஹஸ்பண்டாலஜி பாடங்களின் தொகுப்புக்களை
இங்கே கொடுக்கப்போறேன்.


வேடிக்கை பார்க்க வந்த என்னை பதிவெழுத வைத்து,
ப்ரொபசரா ப்ரோமஷன் கொடுத்தது ஹஸ்பண்டாலஜி.
அப்பல்லாம் தம்பி மங்களூர் சிவா கிட்டுமணி. தெகிர்யமா
பின்னூட்டம் போட்டுத்தாக்குவார். இப்ப அவரும் ரங்கம்ணி
ஆகிவிட்டதால் ம்மூச்... செம சூடான இடுகைகள், பின்னூட்டம்னு
கலை கட்டிய அந்த பதிவுகளின் சுட்டிகள் இனி.( மீள் பதிவா
போடலாம், ஆனா அந்த பழைய பின்னூட்டங்கள் வராதுல்ல. அதான்
சுட்டி)


தாரைத்தப்படையுடன் ஆரம்ப அறிவிப்பு.

HUSBANDOLOGY பாடம் 1

பினாத்தாலாரின் பின்னூட்டத்திற்கு பதில் பதிவாக.

HUSBANDOLOGY பாடம் 2

HUSBANDOLOGY பாடம் 3


HUSBANDOLOGY பாடம் 4

HUSBANDOLOGY பாடம் 5


HUSBANDOLOGY பாடம் 6

HUSBANDOLOGY பாடம் 7

HUSBANDOLOGY பாடம் 8

HUSBANDOLOGY பாடம் 9


2008ல் இதையே மீள்பதிவா போடலாம்னு திட்டம் போட்டேன்.
நம்ம ஃப்ரெண்ட் ஆதி(தாமிரா) வந்து மீள்பதிவுக்கான அத்தனை
தகுதியும் இருக்கு. ஆனாலும் புதுசா ஆரம்பிங்களேன்னு சொல்ல
அட, இந்த முறையும் பட்டயை கிளப்பலாம்னு ஆரம்பிச்சேன். :))

HUSBANDOLOGY 2008 LESSON :1


HUSBANDOLOGY 2008 LESSON :2


HUSBANDOLOGY 2008 LESSON :3


HUSBANDOLOGY 2008 LESSON :4


HUSBANDOLOGY 2008 LESSON :5


ரங்கமணிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் இந்த பாடங்களை
புதுசா வந்திருக்கும் தங்கமணிகள் நல்லா படிச்சு பயன்படுங்க.

முன்னாடி பாடம் படிச்சவங்களும் ஒரு முறை ரெஃப்ரெஷ் செஞ்சுகிட்டு
களத்துல இறங்கலாம்.

எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

Tuesday, January 05, 2010

பிரிவு தரும் நெருக்கம்....

தங்கமணிகள் ஊருக்குப்போனா எஞ்சாய் செய்வது பற்றி
பதிவு போடுவார்கள் ரங்கமணிகள். ரங்கமணி ஊருக்குப்போனா
தங்கமணி மட்டும் சோக கீதம் வாசிச்சுகிட்டு இருக்கமாட்டாங்கன்னு
புரிய வைக்கத்தான் என் முந்தைய பதிவு!!


ஊடலில் காதல் அதிகமாகும். அதே போலத்தான்
பிரிவும். சின்ன சின்ன பிரிவுகள் போதிக்கும் பாடங்கள் எவ்வளவோ!!!
இந்தச் சின்னச்சின்ன பிரிவுகள் நிரந்தர பிரிவை நிரந்தரமாக
எட்டத்தில் வைக்கும் காரணிகளாகும்.

நீர் ஊறும் கிணற்றை அவ்வப்போது தூர்வாரினால் தான்
ஊற்று அதிகமாக சுரக்கும். அப்படித்தான் கணவன்/மனைவிக்குள்
இருக்கும் உறவும். அன்பெனும் ஊற்றை அவ்வப்போது
தூர் வாரினால் வற்றாத சுனையாக அன்பு பெருக்கெடுத்து
அன்பால் இயந்த வாழ்க்கையை இருவரும் வாழ முடியும்.


எப்போதும் அருகருகே இருப்பதால் ஒருவரின் அருமை மற்றவருக்கு
புரியாமலேயே போய்விடும். அவ்வப்போது நிகழும் சண்டைகள்,
வாத விவாதங்கள், எரிச்சல்கள் கசடாக மனதில் தங்கி வெறுப்பு பெருகவும்
வாய்ப்பிருப்பதாக உளவியாலர்கள் சொல்கிறார்கள்.


வாலிப வயதில் துணையின் அவசியம் பெரிதாகத் தெரியாது.
ஆனால் வயதான காலத்தில் ஒருவரின் துணை ஒருவருக்கு
பெரிய ஆறுதல். அப்பா எனும் என் இந்தப் படைப்பை
படித்திருக்கிறீர்களா!!! இது சத்தியமான நிஜம்.

பிரிந்திருக்கிரும் போதுதான் துணையின் மீது அன்பு
அதிகமாகும். என் பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டா
என துள்ளிக் குதிப்பவர்கள் கூட 4 நாள் கழித்து
வெறிச்சோடிக்கிடக்கும் வீட்டிற்குள் நுழையப் பிடிக்காமல்
தவிப்பார்கள்.


சேர்ந்து டீ/காபி அருந்திவிட்டு தனியாக டீ குடிக்கக்கூட
பிடிக்காது. நாளெல்லாம் அலுவலகம் சென்றிருக்கிறார்
என நினைத்தாலும் மாலையில் வீடு திரும்பாதது
வெறுமையா தோன்றும்.


அயித்தான் ஊருக்குப்போனால் நான் செய்வது என்னத்
தெரியுமா? சுய அலசல்.

ஆம் இது மிக முக்கியமானது. நான் செய்துதான் சரி
என பல நேரங்களில் வாதிட்டிருப்போம். ஆனால்
உண்மையை மனது ஏற்காது. இப்படி தனித்திருக்கும்
தருணங்களில் இனிமையான நிகழ்வுகளை அசைபோடுவது
போல, சண்டையிட்ட, கோபப்பட்ட தருணங்களையும்
அசை போடுவேன். வாக்குவாதங்களை தவிர்த்திருக்கலாம்
எனும் தோணும் பட்சத்தில் மன்னிப்பு கேட்டு மெயில்
எழுதிடுவேன். அவரும் தன் பக்கம் தவறிருந்தால் மன்னிப்பு
கேட்டு விடுவார். நேரிலும் மன்னிப்பு கேட்டிருப்போம்
என்றாலும் இது இன்னமும் நெருக்கத்தைத் தரும்.


இப்படி அலசிப் பார்க்கும் பொழுது நம் தவறை திருத்திக்
கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த சுய அலசல் கணவன்/
மனைவி இருவரும் செய்து பார்த்தால் புரியும்.

மன்னிப்பை வாய்விட்டுச் சொல்வது போல் அன்பையும்
வெளிப்படுத்த வேண்டும். ஆண்கள் இயற்கையிலேயெ
அன்பை வெளிப்படுத்த தெரியாதவர்கள். அந்த பூட்டை
உடைத்து அன்பை வெளிப்படுத்தினால் மனைவி ஏன்
சண்டை போடப்போகிறாள். தன் செயலால், பரிவான
வார்த்தையால், ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு
நடப்பதால் அன்பை இருவரும் வெளிக்காட்டலாம்.

தனக்கென சாய்ந்து கொள்ள தோளிருக்கிறது என்ற
எண்ணமே வலிமை தருமே!!

எட்டி நிற்கும்போது அருகில் துணையில்லாமல் தனிமையில்
இருக்கும்போது,”என்ன செய்கிறாளோ! சாப்பிட்டாரோ!
என துணையின் மீது அக்கறை பிறக்கிறது.

“சாப்பிட்டியாப்பா” எனும் அந்த ஒரு வார்த்தையில் உள்ளம்
உருகிவிடுமே!!

தான் ஊரில் இல்லாமல் சாப்பாட்டுக்கு கணவர் கஷ்டப்படுகிறார்
என்பதை உணர்ந்த பெண் கணவனை விட்டுச் செல்லவே
மாட்டார்.

தூர இருந்தும் அருகில் வாழும் தன்மை தானாக வந்துவிடும்.
நேசிக்கும், நேசிக்கப்படும் மனதில் குற்றங்குறைகள் பெரிதாகத்
தெரியாது.


இப்படி தனிமையாக இருக்கும்பொழுது நம் தனித்துவத்திற்கு
இடம் இருக்கிறது. சேர்ந்து இருக்கும்பொழுது தனித்துவம்
மறைந்து ஒருவருக்காக ஒருவர் அதிகமாகவே விட்டுக்கொடுக்கிறோம்.


நான் நானாக இருக்க வேண்டும், சுயமாக இருக்க வேண்டும்
என்பது ஆணுக்கும்/பெண்ணுக்கும் பொதுவல்லவா??


ஊரிலிருந்து வந்ததும், “ நீ போடும் மசாலா டீ போல
வேறெந்த டீயும் வராதுப்பா! உன் கையால எப்ப டீ
சாப்பிடுவோம்னு ஓடி வந்தேன்” எனும் பாராட்டு,

“நீங்க இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சுப்பா!”
தனியா தூங்கக்கூட முடியலை!” என்பதில் இருக்கும்
நெருக்கம் தரும் சந்தோஷம் வேறெதில் கிடைக்கும்!!!!

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே பாட்டு
மன நிம்மதிக்கும் பொருந்தும். கணவன்/மனைவி
உறவு விரிசல் விழாமல் காக்கும் அதிசயம்
நம் கையில்தான் இருக்கிறது.

இனிமையான இல்லம் அமைய கணவன் மனைவி உறவில்
தேவையான நெருக்கத்தை பற்றி சகோதரி ஃபைசாகாதர்
எழுதியிருக்கும் பதிவை படிக்கத் தவறாதீர்கள்.


இருமணம் இணைந்தால் தான் திருமணம்.
திருமணம் நிகழ்வதால் வருவதுதான் இனிய இல்லறம்.
இதில் ஆண்/பெண் பாகுபாடின்றி இருவரும்
அன்பால் கட்டப்பட்டால் ஆனந்தத்துக்கு அளவேது???

ஜாலிலோ ஜிம்கானா.. :))))

என் ஃப்ரெண்ட் அண்ணபூர்ணாகிட்டயும் என் கிட்டயும் எங்க
தோழிகள் கேட்கும் முதல் கேள்வி,”வூட்டுக்காரர் ஊர்ல இருக்காரா”?
இருவரின் கணவர்களுக்கும் காலில் சக்கரம் வைத்ததுபோல
சுத்திக்கினே இருப்பாங்க.

அதனால பல சமயம் “எங்க வீட்டுக்காரர் ஊருக்கு போயிட்டாருன்னு”
ஜாலிலோ ஜிம்கானா தான்.(அக்னி நட்சத்திர ஜனகராஜ் மாதிரி எம்புட்டு நண்பர்கள் சந்தோஷப்படறாங்க!!எங்களுக்கும் காலம் வரும்ல:) )

எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போயிட்டாரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்................


ஊர்ல இருந்தா பெருசா டார்ச்சர் ஏதும் கொடுக்கும் ரகமில்லை.
ஆனாலும் இது ஒரு தனி சுகம். அன்னபூர்ணா வீட்டுல அவுக அயித்தான்
இல்லாட்டி பிள்ளைகளை கூட்டிகிட்டு ஹோட்டல் போவாங்க.
(அவர் இருந்தா வீட்டுச் சாப்பாடுதான் விரும்புவார். மாதத்துல
20 நாள் டூர் போறவராச்சே) ”நான் எப்படா ஊருக்கு கிளம்புவேன்னு
காத்துகிட்டு இருக்கீங்க போலன்னு!!” சிரிச்சுகிட்டே சொல்வார்.


நம்ம வீட்டுலயும் அயித்தான் ஹோட்டல்ல சாப்பிடுவாரேன்னு
சனிக்கிழமை இரவு தவிர எல்லா நேரமும் வீட்டுச் சாப்பாடுதான்.

இங்க நம்ம வீட்டுல அயித்தான் ஊருக்கு கிளம்பப்போறேன்னு
சொன்னா,”பக்காவா!! கன்பார்மா போறீங்களான்னு!!” விசாரிக்கறது.:)
வேற எதுக்குமில்லை. அவருக்கு பிடிக்காத காய்கறிகள், பிடிக்காத
சமையலை சமைச்சு நானும் பிள்ளைகளும் சாப்பிடுவோம். அதுக்காகத்தான்.
(சேமியா பஹாளாபாத் + தேங்காய்ச் சட்னி பிள்ளைகளின் விருப்பமான
உணவு. அவருக்கு பிடிக்காது. அதனால அவர் ஊர்ல இல்லாதப்பத்தான்
இது செய்யப்படும்)

பல சமயம் பசங்க சோறே சமைக்க வேணாம்னு சொல்லிடுவாங்க.
(அயித்தானுக்கு லன்ச் பேக் செய்யும் வேலை இல்லையே) அதனால
தோசை, இட்லி, சப்பாத்தி, பாஸ்தான்னு ஷார்ட் கட்
சமையல் செஞ்சு சாப்பிடுக்குவோம்.


அதுவும் ஒரு நாள் கண்டிப்பா பசங்களுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் கொடுத்திட்டு
நான் ஓட்ஸ் கஞ்சி குடிச்சிடுவேன். காலை ப்ரேக் பாஸ்ட் அம்புட்டுதான்.
என்ன ஒரு சுகம். :)))


வெள்ளிக்கிழமை இரவுகளில் டீவிக்கு முன்னாடி ரஜாய் போட்டு
தலகாணி எல்லாம் வெச்சுகிட்டு, நானும் பசங்களும் கெட்டி ரஜாயை
போத்திக்கினே படம் பாத்துட்டு அப்படியே தூங்குவோம்.

சில சமயம் சனிக்கிழமை இரவுதான் வருவார். சனிக்கிழமை பிள்ளைகளுக்கு
பள்ளி விடுமுறை. இழுத்து போத்திக்கினு 8 மணி வரைக்கும் தூங்கும் சுகம்..
(அவுக இருந்தா ஆபீஸுக்கு கிளம்புவாக. டிபன் செய்யணும்னு 7 மணிக்கு
எந்திரிப்போம்ல :))

சென்னையில இருந்தப்ப எங்க பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட் ஹஸ்பண்டும்
ஊருக்கு போய், அயித்தானும் ஊருக்கு போயிருந்தா எங்க ரெண்டு
பேருக்கும் ஜாலி. நான் சோறு, கறி செய்வேன், அவங்க காரக்குழம்பு,
ரசம், அப்பளம் செஞ்சிடுவாங்க. சாப்பாட்டைக் கொண்டுவந்து
வெளியில வெச்சுகிட்டு( பின் கேட்) இரண்டு குடும்பமும் சேர்ந்து
சாப்பிடுவோம்.


ஊர்லேர்ந்து அயித்தான் வரும் அன்னைக்கு ரொம்பவும்
மெனக்கெட்டு வீட்டயே மாத்திப்போட்டு சும்மா பளிச்சுன்னு
ஆக்கிடுவேன். வந்ததும் ஒரே பாராட்டு மழைதான். :))))

யெஸ்ஸு. இப்பவும் அயித்தான் ஊருக்கு போயிருக்காக.
ஆமாம். ஜாலிலோ ஜிம்கானா தான்.

:))))))))))))))))))))))

வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

டிஸ்கி: கணவர்கள் ஊருக்கு போயிட்டா இப்படித்தான் பெண்கள்
சந்தோஷப்படறாங்க அப்படி இப்படின்னு தாக்க காத்திருக்கும்
நபர்களுக்கு !!அடுத்த பதிவை படிச்சிட்டு அப்புறமா சொல்லுங்க.

(ஹஸ்பண்டாலஜி ப்ரொபசர் கிட்டயேவா)

Monday, January 04, 2010

எங்கள் ஊர் காவல் தெய்வங்கள்

எங்க ஊரில் ஒரு பழக்கம். பிரசவம் முடிந்து தன் கணவன்
வீட்டிற்கு புறப்படும் முன் பிறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு
ஊர் காவல் தெய்வங்களின் கோவிலுக்கு சென்று
வழிபாடு செய்த பிறகு தான் ஊருக்கு கிளம்புவார்கள். உள்ளூர்
காரங்களா இருந்தாலும் காவல் தெய்வங்கள் கோவிலுக்கு
போய்விட்டுத்தான் வேறு ஊருக்கு குழந்தையை தூக்கிகிட்டு
போவாங்க.

எங்கள் ஊரில் காவல்தெய்வங்கள் அதிகம். கடிதம் எழுதி
கோரிக்கையை, மனக்குறையை வைக்கும் மக்களுக்கு
அருள்புரியும் பெரம்பூர் வீரமாகாளி, ஊர்க்காவல் செய்யும்
பொற்பனை முனீஸ்வரர்,அடப்பன்குளம், நார்த்தாமலை மாரியம்மன்,
திருவப்பூர் மாரியம்மன். இதில் அவரவர் வீட்டுக்கு அருகில்
இருக்கும் காவல் தெய்வ கோவிலுக்கு முதலில் செல்வார்கள்.

புதுகையிலிருந்து அண்டக்குளம் சென்று அங்கேயிருந்து
பெரம்பூர்.பெரம்பூர் வீரமாகாளி. கடும் தெய்வம். தன்னை ஒருவர்
துன்புறுத்துவதாக கடிதம் எழுதி பிரார்த்தனை செய்தால்
தண்டித்து விடுவாள். தவறாக எழுதி வைத்தால் எழுதியவரையே
தண்டிப்பாள். குறை தீர்க்கும் காளி.
அன்னையாக அருள் புரிபவள். சக்தி வாய்ந்தவள்.
அவளை தரிசித்து வந்தேன்.

போட்டோல்லாம் பிடிக்க கூடாது. சுயம்புவாக நிற்கும் தெய்வம்
அவள்.

அங்கிருந்து நேராக சென்றது பொற்பனைக்கோட்டை.
இது காவல்தெய்வம் முனீஸ்வரர் கோவில்.
ஆஜானுபாவன் தோற்றம். பச்ச கச்சம் கட்டி
இவர் ஊரில் உலாவருவதாக பலரும் நம்புகிறார்கள்.
மணியோசை, தூப வாசனை கட்டியம் சொல்லும் இவரது
வருகையை. அந்நேரத்தில் எதிரே வரும் எலியும் நசுங்கிப்போய்விடும்.

பெரியவருக்கு 4 முழ வேட்டி, 8 முழ வேட்டியெல்லாம் பத்தாது.
10* 6 சைஸ் வேட்டிதான் சரியா வரும். அம்புட்டு பெரிய
உருவம். மாலையா வாங்குவதை விட 2 பந்து கதம்பம்
வாங்கினாத்தான் போட முடியும். பன்னீர், இளநீர், எண்ணெய்,
பால் குளியல் செய்வது ரொம்ப பிடிக்கும். ஜவ்வாது மணக்க,
சாம்புராணி புகையில சூப்பரா நிப்பாரு பொற்பனையான்.


நம்புவர்களுக்கு நான் அருள் புரிகிறேன் என காக்கும் தெய்வம்
இவர். பொற்பனைக்காளியும் உண்டு.

சிம்பிளாக அலங்காரத்தில் பெரியவர் முனீஸ்வரர்.


சூப்பர் அலங்காரத்தில் பொற்பனையான்.



அப்புறம் ஊருக்கு வந்துட்டு சாந்தாரம்மன் கோவில் போகாட்டி
எப்படி? சாந்தாரம்மன் கோவில்ல பைரவருக்கு விளக்கேத்திகிட்டு
இருக்கேன். யாரோ என்னிய கூப்பிடறா மாதிரி இருந்துச்சு.
அதுவும் என் பள்ளிநாட்களில் இருந்த பெயர். நான் அப்படியே
ஷாக்காகிட்டேன். என் தோழிகள் யாரும் ஊர்ல இல்ல.

அதுவும் இப்ப 15 வருஷமா கலா ஸ்ரீராம்ங்கற பேர்லதான்
பலருக்கும் அறிமுகம். இம்புட்டு வருஷம் கழிச்சு என்னை
ஞாபகம் வெச்சு பழைய பேர்ல யாரு கூப்பிடறாங்கன்னு
பார்த்தா என்னோட ராணி ஸ்கூல்ல படிச்ச சுதாவோட
அம்மா அங்க இருந்தாங்க. அவங்கதான் கூப்பிட்டு
கையை பிடிச்சு பேசிகிட்டு இருந்தாங்க.

கூட வந்த பசங்களுக்கு செம ஆச்சரியம்.
பகக்த்துலேயே இருக்கும் அரியவளைப்பாக்காட்டி
எப்படி? எனக்கும் அரியவளுக்கும் ரொம்ப நாளா
ஃப்ரெண்ட்ஷிப்.

சாந்தாரம்மன் கோவிலைச்சுத்தி கடைகள். பாத்திரக்கடை,
பூக்கடை, காய்கறிக்கடைன்னு இருக்கும். அம்மன் சந்நிதிக்கு
நேராக காய்கறிக்கடை பக்கம் ஒரு ஆயா உக்காந்து
எலுமிச்சம் பழம் விப்பாங்க. பெரிய பொட்டோட கொஞ்சம்
கரடுமுரடா தெரியற அவங்ககிட்டதான் அம்மா எப்பவும்
எலுமிச்சம் பழம் வாங்குவாங்க.

அவங்ககிட்ட பழம் வாங்கிகிட்டு போய் அரியநாச்சியம்மன்
கோவில் சூலத்துல குத்தணும் என்பது அம்மாவோட
கட்டளை. அப்படித்தான் எப்பவும் செய்வேன்.
அந்தம்மா 4 வருஷத்துக்கு முன்னாடி செத்துட்டாங்க.
கோவில் சந்நிதிக்கு எதிரா பிறமுதுகு காட்டி தெகிரியமா
கடை போட்டவங்க. அவங்க இல்லாத இடம் வெரிச்சோடி
கிடக்கு. வேறகடையில எலுமிச்சம்பழம் வாங்கிக்கிட்டு
அரியவளைப்பாக்க போனேன்.

சபரிமலைக்கு சில பேர் இருமுடிகட்டிகிட்டு இருந்தாங்க.
அம்மனுக்கு சந்தனக்காப்பு. ஜொலிச்சுகிட்டு இருந்த
அம்மாவை தரிசனம் செஞ்சுட்டு வந்தோம்.

பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா...

நமக்கு தம்பின்னா அயித்தானுக்கு அண்ணன்.
அட இஷ்ட தெய்வத்தைச் சொன்னேனுங்க. :))
இவரை அயித்தானுக்கு அறிமுகப்படுத்தினதே
நான் தான். திருமணத்துக்கப்புறம் ஒருமுறை
இந்தக் கோவிலுக்கு கூட்டிகிட்டு போனேன். ரொம்ப
பிடிச்சுப்போயி வருஷா வருஷம் ஒருவாட்டியாவது
இங்க போயிட்டு வந்திடுவோம்.

கற்பக விநாயகர் அருள் புரியும் பிள்ளையார் பட்டி
கோவில் தான் அது. கோவிலில் அபிஷேகத்துக்கு
பணம் கட்டி அப்பா ஏற்பாடு செஞ்சு வெச்சிருந்தாரு.
உச்சிகாலம் 11.30 மணிக்குத்தான் அபிஷேகம் அதுக்குள்ள
இன்னொரு இடத்துக்கு கண்டிப்பா போகணும்னு அப்பா
சொன்னாரு. சரிப்பா போகலாம்னு சொன்னேன்.

அப்பா கூட்டிகிட்டு போன இடம் திருப்பத்தூரிலிருந்து
13 கிமீ தொலைவில் இருக்கும் பட்டமங்கலம்.

இங்க அப்படி என்னப்பா விஷேஷம்னு கேட்டேன்.
”சும்மா இல்லமா, அஷ்டமா சித்தி அருளிய குரு
ஸ்தலம் இதுன்னு!” சொன்னார். நாங்க போயிருந்தது
செவ்வாய்க்கிழமை. இதுவே வியாழக்கிழமைன்னா
குறைஞ்சது 5000 பேர் இருப்பாங்களாம்.



கோவிலில் நுழைஞ்சதுமே குரு பகவான் அருள் புரிகிறார்.
கார்த்திகை பெண்கள் 6 பேருக்கும் அஷ்டமா சித்திகளை
அருளிய தக்‌ஷிணாமூர்த்திக்கடவுள் இங்கேயே கோவில் கொண்டு
வரும் அன்பர்களுக்கு அருள் புரிகிறார் என தலபுராணம்
கோவில் சுவற்றில் எழுதியிருக்கு. படிச்சுகிட்டே உள்ளே
போனால் சொக்கநாதரும், மீனாட்சி அம்மையும் அருள்
பாலிக்கறாங்க. தரிசனம் முடிஞ்சு நேராக கிளம்பியது
பிள்ளையார் பட்டிக்கு. திருப்பத்தூரிலிருந்து 30 நிமிஷத்துல
பிள்ளையார்பட்டி.

அப்பாவும் அயித்தானும் போய் பணம் அனுப்பியிருந்த
ஜெராக்ஸை காட்ட பேர் எழுதி கார்டு ஒண்ணு
கொடுத்தாங்க. அபிஷேகத்துக்கு பணம் கட்டினால்
4 பேர் சாமி சந்நிதிக்கு முன்னாடி உட்கார்ந்து அபிஷேகம்
பார்க்கலாம்.


கோவிலில் கூட்டம் அதிகம் இருந்தது. என்னன்னு பார்த்தால்
60 சாந்தி, 70 சாந்தி கல்யாணம் நடந்துகிட்டு இருந்துச்சு.
ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகமா இருந்துச்சு. அதனால்
11.30க்கு துவங்க வேண்டிய அபிஷேகம் 12.30 மணிக்கு
ஆரம்பமாச்சு. சாமி தரிசனத்துக்கு வந்த இடத்துல
60/70 சாந்தி கல்யாணம் செஞ்சுகிட்ட பெரியவங்களையும்
தரிசிக்கும் வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமா இருந்துச்சு.


12.15 மணி வாக்கில் பணம் கட்டின ஒவ்வொருத்தரையா
கூப்பிட்டு சங்கல்பம் செஞ்சாங்க. எங்களுக்கு முன்னாடி
சங்கல்பம் செஞ்சுகிட்டவரை அப்பா பாத்துகிட்டே இருந்தாரு.
யாருன்னு நமக்குத் தெரியாது அதனால பேசாம இருந்துட்டேன்.
(அவருதான் யதார்த்த ஜோதிடர் ஷெல்வின்னு அப்பா
சொன்னார்)

சங்கல்பம் முடிஞ்சதும் சந்நிதிக்கு முன்னாடி உட்கார்ந்து
கிட்டோம். தங்க காப்பு அலங்காரத்திலிருந்த பகவானை
அபிஷேகத்துக்கு ரெடி செஞ்சாங்க. தேன், பால், கந்தம்,
வீபூதின்னு அபிஷேகம். ஒவ்வொரு அபிஷேகம் முடிஞ்சதும்
கற்பூரம் காட்டினாங்க. ஸ்லோகங்கள் சொல்லிகிட்டே
இருந்தோம். கடைசியா தங்க காப்பு அலங்காரமா? இல்லை
ப்ளையினா விட்டுடுவாங்களான்னு ஒரு சின்ன டென்ஷன்.




(எனக்கு பிள்ளையாரை தங்க காப்பு அலங்காரத்தில் பார்ப்பது
ரொம்ப பிடிக்கும். எப்பவும் தங்க காப்பில் தான் தரிசனம்
தரணும்னு சண்டை போட்டுகிட்டே கோவிலுக்கு போவேன்)



இந்த பிள்ளையார்பட்டி ஹீரோவைப்பத்தி கவியரசர் கண்ணதாசன்
எழுதிய பாடல் சொல்லும் இவரது புகழை.

அற்புத கீர்த்தி வேண்டின்,
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சியத்
திருக்கைச் சென்று பொற்பதம்
பணிந்து பாரீர் பொய்யிலை கண்ட உண்மை.



அலங்காரம் முடிந்து திரைவிலக்கியதும் தங்க காப்பில்
ஜொலி ஜொலித்தார் பெரியவர். அடுக்கு தீபாரதனையில்
இன்னகும் பிரகாசமாக தெரிந்தார். மனதார தரிசித்து
பிரஹாரம் சுத்தி வந்து பிரசாதமாக அப்பமும், கொழுக்கட்டையும்
வாங்கிக்கொண்டோம்.

5 கிமீ தொலைவில் தான் குன்னக்குடி முருகன் கோவில்.
பிள்ளையார்பட்டியிலேயே 1.30 மணிஆகிவிட்டதால்
குன்னக்குடி கோவில் சாத்தியிருக்கும் என்பதால்
நேரே புதுகைக்கே போய்விட்டோம்.

அடுத்த ரவுண்ட் அப் புதுகை.