Total Pageviews

Thursday, February 25, 2010

திடுக் திருப்பதி

”திருப்பதிக்கு போனா சாமி தரிசனம் முடிச்சு
உடனே கீழ இறங்கிடுவோம். மேல் திருப்பதியில
தங்க மாட்டோம்னு”!!! தோழி சொன்னாங்க.

ஏம்ப்பான்னு கேட்டேன்,”அங்க எம்புட்டு பேரு
தற்கொலை செஞ்சுக்கராங்க தெரியுமா?” அப்படிங்கவும்
அதிர்ச்சிதான். நாம எப்பவோ போறது. இரண்டுவருஷம்
முன்னாடி போயிட்டு அதுவும் எம்பி யோட லெட்டரோட
போயிக்கூட இடத்துக்கும், கல்யாண உற்சவ டிக்கெட்டுக்கும்
3 மணிநேரம் காத்திருந்த கொடுமைக்கு அப்புறம் கணவர்
“இனிமேல் திருப்பதிக்கே வரக்கூடாதுடா சாமின்னு”
கத்தினதுக்கப்புறம் எல்லா ஏற்பாடும் தடபுடலா நடந்துச்சு.

மிகப்பிரபலமான கோவில்களுக்கு போவதுன்னா எனக்கும்
கொஞ்சம் அலர்ஜி. அதனால வீட்டுலேர்ந்து கோவிந்தான்னு
கூப்பிட்டுக்குவேன். முடிஞ்சப்போ பிர்லாமந்திரி போய்
தரிசனம் செஞ்சுக்குவேன்.

ஆனா அங்க இம்புட்டு கோரம் நடக்குதுன்னு தெரியாது.

திருப்பதி புண்ணியஸ்தலம். ஏழுமலை வெங்கடேசன்
அருளாட்சி நடக்குமிடம்.



இங்கே உயிரை விட்டால் நேரே சொர்க்கம் தான் என யாரோ
கிளப்பிவிட குரூப் குருப்பா கிளம்பி வந்து தற்கொலை
செஞ்சுக்கராங்கலாம்.

புண்ணிய பூமியை மரண பூமியாக்குகிறார்கள். போனமாதம்
கர்நாடக மாநிலத்திலிருந்து தாயும், மகனும் காரில் புறப்பட்டு
வந்திருக்கிறார்கள். அடுத்த நாள் இருவரும் இறந்து கிடக்கிறார்கள்.
துண்டு காகிதத்தில்,”தன் கணவரின் மரணத்துக்குப் பிறகு
வாழ முடியவில்லை வயது வந்த மகனும் தந்தையின்
பிரிவால் வாடுகிறான், அதனால் தற்கொலை செய்துகொள்கிறோம்,
நாங்க வந்த கார் இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தம்” !!
என எழுதி வைத்து விட்டு இறந்திருக்கின்றனர்.

இப்படி எத்தனையோ தெரிந்தும் தெரியாமலும் நிறைய்ய
மரணங்கள் திருப்பதியில். சென்னையிலிருந்து வந்திருந்த
ஒரு குடும்பத்தினர் தற்கொலை பற்றி இங்கே.


நேற்று நடந்த இன்னொரு தற்கொலை பரிதாபம்.
நெல்லூரிலிருந்து வந்திருந்தனர் கணவன், மனைவி,
மற்றும் இரண்டு உறவினர், இரண்டு குழந்தைகள்.
(அதில் பையன் புட்டிபால் குடிக்கும் வயசு)
10 லட்சம் கடன் இருப்பதால் அதிலிருந்து
விடுபட வழித்தெரியாமல் பரலோகம்போக
திருப்பதிக்கு டிக்கெட் எடுத்திருக்கிறார்கள்.

பெரியவர்கள் நால்வரும் விஷமருந்தி காட்டேஜில்
இறந்து கிடக்க பக்கத்திலேயே அந்த இரண்டு குழந்தைகளும்
விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.(அவர்களுக்கும்
விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது)

இப்போது அநாதைகளாக அந்தக் குழந்தைகள் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார்கள். உறவினர்களும்
அதே நிலையில் இருப்பதால் வேறு யாரேனும்
அந்த பிள்ளைகளை பராமரிக்க முன் வந்தால் தான் உண்டு.

கோடி கோடியாக பணம் குவிகிறது அந்த கோவிந்தனுக்கு.
அவனைக் கண்ணாரக் கண்டால் போதும் என கூட்டம்
குவிகிறது. அவனது திருமலையில் இப்போது இரு
பச்சிளம் குழந்தைகள் அநாதைகளாகி நிற்கின்றனர்.


காரணம் யார்?? இது இனி தொடருமா? ஏழுமலையில்
வாசம் செய்வதாகக் கூறப்படும் அந்த
திருப்பதி ஏழுமலை வெங்கடேசனுக்கே வெளிச்சம்.


இறைவனின் மேல் சந்தேகம் வரவழைக்கும்
தருணங்கள் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள
வேண்டியதும் அவன் வேலைதான்.
:(((((


நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம்

நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம் இதை
யாரும் மறுக்க முடியாது. இதை அனுபவத்தில்
உணர்ந்தவர்கள் பலர். இப்படி ஒரு நல்ல குடும்பம்
தனக்கு அமையவில்லையே என மறுகும்
உள்ளங்கள் இல்லாமல் இல்லை.

மனித இனத்துக்கு முக்கியமான சந்தோஷம்
நல்ல குடும்பச் சூழல்தான். கைநிறைய்ய சம்பாதிக்கும்
பலரும் ஏங்குவது அன்புக்குத்தானே!! கொடுக்க
கொடுக்க ஆனந்தம் தருவது அன்பு. இனிமையான
கதகதப்பான குடும்பச் சூழல் இந்த ஏக்கத்தை நிவர்த்தி
செய்துவிடும். நம்பிக்கை, புரிதல்,கருணை ஆகியவற்றை
அள்ளித் தரும். சொர்க்கத்தை இறந்த பின் தான் அடைய
வேண்டும் எனும் ஏக்கம் இல்லாமல் வாழும் வீடே
சொர்க்கமாகி பிரச்சனைகள் எதுவந்தாலும் சுமுகமாக
தீர்க்க வழி கொடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் வளரும்
குழந்தைகள் வளர்ச்சி அளவிட முடியாமல் அதீதமாகவே
இருக்கும்.

பெற்றோரின் பங்கு:

பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு வசனம்,
“உலக அழகியும், உலக அழகனுமே திருமணம்
செய்து கொண்டாலும், ஒருவர் முகத்தை ஒருவர்
எத்தனை நாள் பார்த்துக்கொண்டிருப்பார்கள், போரடிக்கும்”
கணவன் - மனைவி வாழும் வாழ்க்கையின் பூரணம்
அவர்கள் அன்பால் பிறந்த குழந்தை.

குழந்தையை பெற்றால் மட்டும் போதாது. குமுதமோ,
குங்குமமோ நினைவில்லை பிள்ளை வளர்ப்புத் தொடர்
வருகிறது. அதில் குறிப்பிட்டிருப்பதுபோல் பிள்ளையை
முறையாக வளர்க்க மனம் இருந்தால் மட்டுமே குழந்தை
பெற்றுக்கொள்வது நலம். தன் காலில் நின்று முன்னேறும்
விதமாகவும், பொறுப்புள்ள குடிமகனாகவும் குழந்தையை
வளர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.


சொத்து கொடுக்கிறோமோ இல்லையோ அன்பையும்,
கல்வியையும் கொடுத்தால் போதும். அதீத அன்பு ஆளையே
அழித்துவிடும். கவனம் தேவை. அன்பு என்றால் தன்னலமற்ற
அம்மாவின் அன்பைத்தானே அனைவரும் சொல்வோம்.

அன்னைதான் குழந்தையின் முதல் ஆசிரியை. இதில் எந்த
மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பிள்ளை மேல் இருக்கும்
அதீத பாசத்தினால் சில அம்மாக்கள் கண்டிப்பு இல்லாமல்,
தகப்பனிடமும் சொல்லாமல் பொத்தி பொத்தி வளர்த்து
கெடுத்துவிடுவார்கள். கணவனும் மனைவியும் நன்கு புரிந்து
பேசி குழந்தை வளர்ப்பில் ஈடு பட வேண்டும்.

அன்னையின் அன்பு, தந்தை கற்றுக்கொடுக்கும் உலக அறிவு
இரண்டும் முறையாக சரியாக குழந்தைக்கு கிடைத்தால் அதன்
வளர்ச்சி மேல் சந்தேகமே வேண்டாம்.

அன்னை, தந்தை இருவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
நல்லது கெட்டது சொல்லிக்கொடுப்பது, ஒழுங்கு நடவடிக்கைகளின்
வரைமுறைகள், அன்பு என கலந்தே வளர்க்க வேண்டும்.

பெற்றோர்-குழந்தை உறவு முறை:

தனக்கு கிடைக்காததும் தன் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள் தான் பெற்றோர்கள். சிறு குழந்தையிலிருந்து
வளர்த்து வருபவர்கள். அதுவரை தன் பெற்றோர்கள் தான் உலகம்
என நினைத்து, மகிழ்ந்து, பிரமித்து பார்த்து வந்த பிள்ளை
பதின்ம வயதில் மாறிப்போவதேன்?????

காரணம் வேறொன்றும் பெரிதாக இல்லை. தனக்கான அடையாளத்தை
எதிர்பார்க்கும் வயது இது. பெற்றோரை விட்டு ஓடிப்போய் தன்
அடையாளத்தை காட்ட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால்
அவர்களை சார்ந்திருப்பது இதற்கு தடையாக இருப்பதாக நினைப்பார்கள்.
தனது நண்பர்களையே அதிகம் சார்ந்து இருப்பார்கள்.


அப்பாவைவிட அம்மாக்கள்தான் பதின்மவயது பிள்ளைகளுக்கு
வில்லிகளாகத் தெரிவார்கள். தகப்பன் வேலைப்பளு, பிள்ளைகளின்
எதிர்காலம் என ஓடிக்கொண்டிருப்பவர். தாயோ பக்கத்திலேயே
இருந்து அனுஅனுவாக வளர்ச்சியை பார்ப்பவள். சின்ன அசைவும்
சந்தேகத்தை தந்து தாயையை அலர்ட்டாக்கிவிடும்.

சில சமயம் பிள்ளைகள் தவறு செய்யும் பொழுது,”இதை அப்பாவிடம்
சொல்லவேண்டாம் என்பார்கள்”, சொல்லவும் முடியாமல் மெல்லவும்
முடியாமல் இருதலை கொள்ளி எறும்பாகி கடைசியில்
கணவனிடம் சொல்லிவிடுவாள். பிள்ளை கடுப்பாகி விலக ஆரம்பிக்கும்.
சொல்லாமல் போனால் கணவன் மனைவி உறவுக்குள் விரிசல்
வந்துவிடும் என அந்தக் குழந்தைக்கு தெரியாது!!


தவிர அம்மாவிடம் அதிகம் பிரச்சனையாக காரணம் நண்பர்கள்,
பாடங்கள், ஹோம் வொர்க்குகள்,டிவி அதிகம் பார்த்தல்,
அறையை,வீட்டையை சுத்தமாக வைக்கச் சொல்லுதல்
போன்ற சின்ன சின்ன விஷயங்களும் பிரச்சனையை
தரும். அரசியல் போல பெரிய்ய பிரச்சனை இல்லை. அருகில்
அமர்த்தி பேசி புரிய வைக்க வேண்டும்.

(peer pressure என சென்ற பதிவுகளில் படித்தோமே,
அது எப்படி பாதிக்கிறது என்று என் அனுபவத்தில் உணர்ந்ததை
உங்களிடம் பகிர்கிறேன்.)

6 மாதங்கள் முன்பு ஆஷிஷின் கிராப் கொஞ்சம் குறைய்ய
ஆரம்பித்தது. மதிப்பெண் குறைந்தால் அடித்து திட்டுவதை
விட பிள்ளைகளுடன் உட்கார்ந்து எங்கே தவறு நடக்கிறது?
என ஆராய்ந்து அதை முன்னேற்ற வழி சொல்வது என் பாணி.

காரணம் கேட்ட பொழுது அவன் சொன்னது,”என் நண்பர்கள்
கீழே விளையாடுகிறார்கள், நானும் விளையாட வேண்டும்.
அப்பொழுதுதான் படிப்பேன்” என்றார்.
வெள்ளிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை வெளியே விளையாட
அனுப்புவேன். மற்ற நாட்களில் யோகா, தியானம்,ஸ்லோகம்
என நானே சொல்லிக்கொடுப்பது பழக்கம். இரண்டு நாள் அம்ருதா
ஆஷிஷ் இருவர் மட்டும் பார்க்குக்கு சென்று
ஷட்டில் விளையாடுவார்கள். விளையாட்டு,
பிறருடன் கலத்தல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்
மற்ற விஷயங்களும். அனுப்ப மாட்டேன் என்றால் பிடிவாதம்
ஜாஸ்தியாகும். குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட
வேண்டும் எனும் கண்டீஷனுடன் தினமும் விளையாட அனுப்பினேன்.


யோகா,தியானம், ஸ்லோக வகுப்புக்கள் நடக்கவில்லை. பரிட்சைகள்
முடிந்து மதிப்பெண்கள் பார்த்தால் இன்னும் குறைந்து விட்டது.
“அனுப்பினால் படித்து நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்றாயே!
இப்போது என்னாச்சு? ஏன் குறைந்தது?” எனக் கேட்டேன்.
பதிலே இல்லை.” இப்பொழுது என் சொல்படி கேட்டே ஆக வேண்டும்!
உன் வழியில் சென்றதில் பலனில்லை. என் வழியில் வந்தால்
விளையாட்டு, படிப்பு மற்றும் மற்ற கலைகளுக்கும் நேரம்
இருக்கிறது.” என்றதும் யோசித்து ஒத்துக்கொண்டான். மதிப்பெண்
நல்ல படியாக வந்தது. இப்போது நானும், பிள்ளையும்
சந்தோஷம்.

விட்டு பிடிப்பது எனும் டெக்னிக் தான். இது அதிகம் விட்டு
விடாமல் கொஞ்சம் கயிறை என்னிடமும் வைத்துக்கொண்டு
விட்டேன். பலன் கிடைத்தது. இந்த டெக்னிக் தான் பதின்மவயதுக்கு
ஒத்துவரும். அவர்கள் வழியிலேயே போய் அவர்களை
மாற்றுவது.


மதிப்பெண் பற்றி பேசும்பொழுது வகுப்பில் முதல் மதிப்பெண்,
எல்லாவற்றிலும் 90 க்கு மேல்தான் வரவேண்டும் என அடம்
பிடிக்க மாட்டேன். மனனம் செய்து 100 வாங்குவதை விட
புரிந்து 75 வாங்கினாலும் சந்தோஷம்.


ஆஷிஷிடம் நான் சொல்வது இதுதான்,”நல்லதோர்
வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோன்னு
பாரதியார் பாடியிருக்கிறார். உனக்கு படிப்பு ஏறாத
முட்டாள் என்றால் என் பிள்ளைக்கு இருக்கும் திறன்
அவ்வளவுதான் என விட்டுவிடுவேன். வேறு வகையில்
உன் வாழ்க்கை அமைய என்ன செய்யவேண்டுமோ
அதற்கான முயற்சி செய்வேன். அபாரமான
உன் திறமையை நீயே வீணாக்கி கொள்ளும் பொழுது
மனம் பாரமாகிறது”. (இருவரும் இப்போதும் நல்ல
மதிப்பெண்கள், நான் வற்புறுத்தாமலேயே கிளாஸ் செகண்ட்
டாப்பர் மதிப்பெண்கள் பெறுகிறார்கள்)


அப்புறம் சின்ன சின்ன பாராட்டுக்கள் மிக முக்கியம்.
ஊக்கம்தரும் அந்த வார்த்தைகள் செடிக்கு உரம் போல.
பசங்க படத்தில் ஒரு காட்சி. சைக்கிள் ரேஸ் போட்டியில்
தன் பெற்றோர் தன் கூட கைதட்டி வரவேண்டும் என
அன்பரசு கேட்பான். ”சரிப்பா!!” என்று மொத்தக் குடும்பமும்
கைதட்டி உடன் வரும்.

எதிர்வீட்டு ஆசிரியர்,”பையனை ரேஸ் ஆடச்சொன்னா
மொத்த குடும்பமும் கூட ஓடுது” என கமெண்டினாலும்
ஜெயித்தது பெற்றோரின் ஊக்கத்தோடு பங்குபெற்ற
அன்பரசு தான்.

”தூக்கமருந்தினை போன்றவை பெற்றவர் கூறும்
புகழுறைகள்” அப்படின்னு பாடியிருக்காங்க.அதனால்
ஓவர்டோஸாகிப்போகாமல் நிஜமாகவே அவர்களுக்கு ஊக்கம்
தரும் விதத்தில் பாராட்டுக்கள் அவசியம். சின்ன ட்ரீட்
கொடுக்கலாம்.

உடன்பிறப்புக்களுடனான உறவுமுறை:

நண்பர்களுடன் தினம் விளையாண்டாலும் ஆஷிஷ் அம்ருதா
இருவர் மட்டும் சில சமயம் தனியாக விளையாடவேண்டும்
என சொல்லியிருக்கிறேன். காரணம் அண்ணன் தங்கையின்
உறவு பலப்படும். வயது ஏற ஏற உடன் பிறந்தவர்களுடன்
உறவில் கொஞ்சம் விரிசல் விழும். அதிலும் அதிக வயது
வித்தியாசம் இருந்தால் ரொம்ப கஷ்டம்.

ஒருவருக்கு மட்டும் அதிக அன்பு கிடைப்பதாக மற்ற பிள்ளை
நினைப்பது, அவர்களுக்குள் அடிக்கடி நடக்கும் சண்டைகள்,
பொறாமை ஆகியவை இடைவெளியை கொடுக்கிறது.
பெற்றோர்கள் இருவரிடம் எப்படி நடக்கிறார்கள் என்பதை
பொறுத்தும் இது அமையும். ஆண் குழந்தைதான் பெரிது
என கொஞ்சம் இழிவாக நடத்தப்படும் பெண்குழந்தை, அல்லது
அடுத்தவர் வீட்டுக்கு போய்விடுவாள் என்பதற்காக அன்பை
அள்ளிக்கொட்டி வளர்க்கப்படும் பெண்குழந்தை இருக்கும்
வீட்டில் அன்புக்கு ஏங்கும் ஆண்மகன் இவர்கள் மனதில்
இருக்கும் வடுக்கள் அவர்களின் முதுமை காலத்திலும்
கூட ஆறாத வடுக்கள்.

இது குழந்தைக்கு தன் மீதே வெறுப்பு வர வைக்கும்.
இதனாலேயே தன் உடன் பிறந்தவரைவிட தன்
நட்புடன் காலத்தை கழிக்க விரும்புவார்கள்.

நல்லதொரு குடும்பத்தை பிள்ளைக்கு அளித்து
நல்லவிதமாக வாழ வழி செய்வோம்.


நீதிக்குத் தலைவணங்கு படத்தின்
இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில்
பாட்டு பல கருத்துக்கள் சொல்லும்.
இதோ உங்களுக்காக.



குறிக்கோளற்ற வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.
அதைப்பற்றிய பதிவோடு திங்கள் கிழமை
சந்திக்கிறேன்.

Wednesday, February 24, 2010

புதிதாய்ப் பிறந்தேன்!!!!!

ரெய்கி கற்ற பிறகு தெளிவாக இருந்தேன். தினமும் அதிகாலையில் தியானம்,
கேட்பவர்களுக்கு ரெய்கி செய்து அவர்கள் பிரச்சனை தீர்ந்ததில் சந்தோஷம்
என போய்க்கொண்டிருந்தது. ரெய்கி பிறருக்காக நாம் செய்தாலும் நம்
பிரச்சனையும் தீர்ந்து போகும். ரெய்கி சக்தியை நாம் பெற்று பிறருக்கு
அனுப்பும்பொழுது நம் பிரச்சனையும் தீர்ந்துவிடும். அதனால் புத்துணர்ச்சியுடனேயே
இருந்தேன்.

தியானம் அதுவும் சக்கரா தியானம் செய்வது அதிக சக்தியைக்
கொடுக்கும். தியானம் செய்ய செய்ய சக்தி அதிகமாகி அதுவே
அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல் என்னைப் படுக்கப் போட்டது.
இதனால் பயந்து போய் தியானம் செய்வதையே நிறுத்திவிட்டேன்.

என் ரெய்கி குரு உடலை வலிமையாக்க யோகா
கற்றுக்கொள்ள வற்புறுத்தினார்.
அதோடு தியானம் செய்யச் சொன்னார்.
என் நல்ல நேரம் கொழும்பு art of living செண்டரில் ஸ்ரீஸ்ரீயோகா
கற்றுக்கொடுப்பதாக அறிவிப்பு வர அதில் சேர்ந்து பயிற்சி பெற்று
யோகா கற்றுக்கொண்டு தினமும் செய்ய ஆரம்பித்தேன்.
அதிமான உடல் எடை கட்டுக்குள் வந்தது. ஆனாலும் அதன் பிறகு
தியானம் செய்ய மனம் வரவில்லை. எங்கே திரும்ப படுத்துவிடுவோமோ
என்ற பயம் தான்.



அதன் பிறகு இலங்கையிலிருந்து புறப்பட்டு ஹைதைக்கு வந்தாச்சு.
இடைப்பட்ட காலங்களில் P.M.S அவஸ்தை கொன்று கொண்டிருந்தது.
உடல் எடை கூட ஆரம்பித்தது. புது இடம் செட்டிலாக நேரம் பிடித்தது.
பிள்ளைகள் படிப்பு, அயித்தானின் புது அலுவலகம் என பல வித
டென்ஷன்கள். இத்தனை நாள் படித்த சிலபஸ் வேறு, ஹிந்தி தெரியாது
என பிள்ளைகளை அதிகம் கவனிக்க வேண்டிய பொறுப்பு.


புது இடத்தில் செட்டிலாக நேரம் பிடிக்கும் தானே! எல்லா டென்ஷன்களும்
சேர நானே வரவழைத்துக்கொண்ட பிரச்சனை ஒன்று வீட்டிலேயே
இருந்து என்னைக் குடைந்தது என ஏகப்பட்ட மன அழுத்தம். அடுத்தவர்கள்
பிரச்சனைக்கு அவர்கள் கேட்டால் ரெய்கி செய்வேன். எனக்கு நானே
செய்து கொள்ளலாம் என்றாலும், ஏனோ மனதை ஒருநிலைப்படுத்த
முடியாத நிலை.அடிமேல் அடியாக நான் மிகவும் மதித்த நேசித்த
என் தகப்பனுக்கு இணையான மாமா(அயித்தானின் அண்ணன்) மரணம்
நிலைகுலைந்து போக வைத்துவிட்டது. மீள வழித்தெரியாமல்
பதிவுகளாலேயே மீண்டு வந்தேன். எப்போதும்
சிரித்துக்கொண்டே வாழவேண்டும் என
நினைக்கும் என்னால் சிரிக்க முடியாமலேயே போனது.



P.M.S க்கு சரியான மருத்துவர் கிடைத்து கொஞ்சம் முன்னேற
ஆரம்பித்தேன். அடுத்ததாக வந்தது கைவலி. கைகள் மட்டுமல்ல
உடல் முழுதுமே வலிதான். இனி வலியோடுதான் வாழ்க்கை என
நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாய் மருத்துவர்
ஒருவர் கிடைத்து விட்டமின் டி குறைவு என 4 மாதமாய் மருந்து
சாப்பிடுகிறேன். கொஞ்சம் முன்னேற்றம்.


பக்கத்து வீட்டில் ஒரு தோழியிருக்கிறார். Art of livingல் volunteer.
அடிக்கடி போன் செய்து கோர்ஸ் ஆரம்பமாகிறது வந்து சேர்ந்துகொள்
என்பார். அயித்தான் ஊரில் இருக்க மாட்டார், பிள்ளைகள் வருவதற்குள்
நான் வீட்டிற்கு வர முடியாத தொலைவில் பயிற்சி என கடந்த 1 வருடமாக
நோ சொல்லிக்கொண்டே வந்தேன். அவர் வீட்டில் நடந்த யோகா
வகுப்புக்கு மட்டும் சென்று கற்றுக்கொண்டிருந்தேன்.

அவர் என்னை விடுவதாக இல்லை.அலுக்காமல்
சலுக்காமல் போன் செய்து அழைத்தார். ஆள் பிடிக்க நினைக்கிறார்
என்று கூட சில சமயம் நினைத்திருக்கிறேன். இந்த மாதத் துவக்கத்திலும்
அவரிடமிருந்து போன். நாளை முதல் என் வீட்டிலேயே நடக்கிறது
வருகிறாயா என கேட்டபோது எப்போதும் மறுக்கும் நான்
“கட்டாயம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டேன். BASIC COURSE
பயிற்சி வகுப்பு 5 நாள் நடந்தது. முதல் நாள் மூச்சுப்பயிற்சியின்
போதே வைப்ரேஷன் அதிகமாகி ஜுரம் வருவது போல் ஆகிவிட்டது.
” சிலருக்கு ஜுரம் வரும் வந்தாலும் கண்டிப்பாய்
வகுப்புக்கு வரவேண்டும்!” என்று பயிற்சியாளர் சொன்னார்.
உடலில் நல்ல பாஸிட்டிவ் வைப்ரேஷன்ஸ்.

5 நாளும் ஒவ்வொரு அனுபவம். அதை வார்த்தைகளில் அனுபவிக்க
முடியாத ஒரு சுகானுபவம்......
அடுத்த அடுத்த நாட்களில் என் வலிகள் இல்லாமல்
என் உடல் லேசாகி காற்றில் மிதப்பது போல் உணர்ந்தேன்.
வீட்டிலும் புத்துணர்ச்சியாக என் வேலைகளை செய்து கொண்டேன்.
தினமும் யோகாவுடன் இங்கே கற்றதையும் செய்கிறேன். எனக்குள்
என்னென்னவோ மாற்றம் 15 வருடங்களுக்கு முன்பு அடிக்கும் காற்றுக்கு
நன்றி சொல்லி அதை அனுபவித்து மகிழ்ந்த பழைய கலாவாகிப்போனேன்.




என் வயது மறந்து எப்போதும் குதூகலாமாக இருப்பேன். அந்த
நிலை இப்போது மீண்டும். :)))) இதோ இப்போது கூட
நான்பாடும் பாடல் படத்தின் பாடலை அனுபவித்துக்குகொண்டு
அதோடு ஹம் செய்து கொண்டு பதிவு போட்டுக்கொண்டிருக்கிறேன்.

இந்த பயிற்சி முடிந்த பிறகு என் கைகளில் வலி தெரியாமலேயே
இருக்கிறது. வலியா எனக்கா? எங்கே? எப்போ என கேட்கிறேன்.
சப்பாத்தி அதுவும் மடித்து போட்டு பரோட்டா செய்கிறேன். :))
ஒரு நாள் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என நானே சப்பாத்தி
செய்து கொண்டிருந்தேன்.( இப்பொழுதெல்லாம் பழைய படி
பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் தான் சமையல் மற்றும்
எல்லா வேலையும்.:))



கிச்சனில் சத்தம் கேட்டு வந்து பார்த்தார் அயித்தான்.
இத்தனை நாளாய் காணாமல் போயிருந்த நீ திரும்ப
வந்திருக்கிறாய் என்றார். நிஜம்தான். எங்கேயோ போயிருந்த
நான் திரும்ப வந்திருக்கிறேன். புதிதாய். புத்தம் புதிதாய்.

விடாக்கொண்டனாக போன் செய்து என்னை பயிற்சிக்குள்
நுழைத்த அந்தத் தோழிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என் ரெய்கி குருநாதர் திரு.ஷ்யாமல் ராவ் அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

சந்தோஷமா பாட்டு ஒண்ணுக் கேளுங்க.

Tuesday, February 23, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி - 23/2/10

ராணி ஸ்கூல்ல படிக்கும்போது P.E.T கிளாஸ் வாரத்துக்கு
இரண்டு வரும். அதுல ஒரு கிளாஸ் பிராக்டிகல்ஸ்(பெருசா என்ன
செஞ்சிட போறோம், கையை மேலே தூக்கி கீழே போட்டு ட்ரில் தான்)
அடுத்த கிளாஸ் தியரி. தியரி எல்லாம் எதுக்குன்னு ஆரம்பத்துல
புரியல. காப்பரிட்சை டைம் டேபிளில் P.E.T வந்ததும் தான்
தெரிஞ்சது தியரிய பரிட்சையில் எழுதணும்னு. :((

இப்ப இங்க ஆந்திரா அரசு P.E.T கட்டாயப்பாடமாக்கி தியரி+ பிராக்டிகல்னு
டெஸ்ட் வெச்சு மதிப்பெண் வழங்கபோறாங்கன்னு தெரிஞ்சதும்
கொசுவத்தி சுத்திடுச்சு. உடற்பயிற்சியின் அவசியத்தை புரிஞ்சுகிட்டு
கட்டயமாக்கி இருக்காங்க. பாராட்டுக்கள்.

****************************************************

இந்திராகாந்தி ஸ்கூல்ல வேலை பாத்தப்ப எனக்கு ரொம்ப
கஷ்டமாவும் இஷ்டமில்லாமவும் இருந்த ஒரு வேலை ஆண்டுவிழா.
அந்த சின்னப்பிள்ளைங்களை வேஷம் கட்டி ஆட வைக்கிறது மகா
கொடுமை. ஆடும் திறமை இருக்கும் பிள்ளைகள் சரி. தானாடாவிட்டாலும்
தன் பிள்ளையாவது ஆடணும்னு அடம் பிடிச்சு மேடை ஏத்தச் சொல்லும்
பெற்றவர்கள்... வேணாம்டா சாமின்னு இருந்துச்சு.

கொழும்புவிலும் பல பள்ளிகளில் இந்தப் பழக்கம் இருக்கு. என் பிள்ளைகள்
படித்த பள்ளியில் ஒரு வருடம் ஆண்டுவிழா அடுத்த வருடம் எக்ஸிபிஷன்.
ஒவ்வொரு பிள்ளையும் வருடமெல்லாம் உருவாக்கயவற்றை பார்வைக்கு
வைத்துக் கொடுப்பார்கள்.

ஆஷிஷ் வரைந்த நம் தேசியக்கொடி இலங்கையில் பறந்தது.


குட்டி விரல்களால் fabric painting செய்திருக்கும் அம்ருதாவின் படம்
இடப்பக்கத்தில் இருக்கிறது.



இதே கான்சப்டை நான் வேலை பார்த்த பள்ளியிலும் வைத்து
பெற்றோர்களை மகிழ்வித்தேன்.

இதெல்லாம் ஏன் சொல்கிறேன்னா? அந்தக் குட்டி வயதுக்குழந்தைக்களுக்கு
டான்ஸ்,மாறுவேடப்போட்டின்னு ஸ்ட்ரெஸ் அதிகமாகுதாம். எல்லாக் குழந்தையும்
ஒரே மாதிரி இல்லையே. இந்தக் கூத்துக்களை personal development னுசொல்ற
பள்ளிகள் இருக்குன்னு படிச்சப்ப பத்திகிட்டு வந்துச்சு.

மழலைக்கல்வியில் அரிய சாதனை படைச்சிருக்கறவங்க
மாண்டிசோரி அம்மையார்.
கைகளால் எடையை அளந்து பார்க்கும் ஒரு
பயிற்சி இருக்கு. இது செய்யும் பொழுது
கண்ணை கட்டி(blind fold) செஞ்சா திறன்
அதிகமாகும்னு சொல்லியிருக்கறவங்களே
சொல்லியிருக்கும் முக்கியமான விடயம்,
”சில பிள்ளைகளுக்கு இது பயம் தரும்,
வேண்டாம் என்று மறுப்பார்கள், அவர்களின்
உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள்”
என்பதுதான்.

*****************************************************

3 நாள் முன்னாடி சென்னையில் ஒரு மரணம்.
தெலுங்கு திரைத்துறையில் அந்தக்கால காமெடியன் பத்மனாபம்
இறந்துவிட்டார்னு செய்தி. சோகத்துல சோகம் நம்ம தெலுங்கு
அண்ணாச்சிக்கள் யாருமே போய் பாக்கலை. தனது வாழ்க்கை
கதவைத் திறந்துவிட்ட நன்றி உணர்ச்சிக்காக எஸ்.பி.பி வந்திருந்தார்.



இங்க டீவியில இத காட்டினவங்க அடிச்ச கமெண்ட் தான் ஹைலைட்டா
இருந்துச்சு.

பத்மநாபம் 60 சினிமால நடிச்சு, 5 படங்களை
தயாரிச்சு ,2 படங்களை டைரக்ட் செஞ்சிருந்தாலும்
கைல காசு ஏதும் இல்லை. உடன் பிறந்த 8 பேர்களையும்
தனக்கு பிறந்த 7 பிள்ளைகளையும் கறை சேர்த்துட்டு சென்னையில்
ஒரு சின்ன இடத்துக்குள் வாழ்ந்து வந்தார்.
இவரே ஹைதராபாத்தின் ஜூப்ளிஹில்ஸில் ஒரு
வீடும் பஞ்சாரா ஹில்ஸில் ஒரு ஸ்டுடியோவும்
வைத்திருந்தால் எல்லோரும் பறந்து வந்திருப்பார்கள் என்றார்கள்!!



அல்லு அர்ஜூன்(சிரஞ் சீவியின் மச்சான்) பத்மநாபம்
அவர்களுக்கு விருது வழங்கி கொளரவிச்சிருக்காங்க.
கடைசிகாலத்தில் வறுமையில்
வாடினாராம் பத்மநாபம்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு காமெடியா சொல்ல முடியல.
நம்ம தங்கத் தமிழ் நாடு மட்டும் விதிவிலக்கா. ஆச்சி மனோரமா
மூட்டு ஆப்பரேஷன் நடந்ததக்கப்புறம் யாரும் போகலைன்னு பத்திரிகையில்
வந்ததக்கப்புறம் சிலர் வந்திருக்காங்க. அதுலயும் இந்தத் தலைமுறை
ஆளுங்க யாருமே இல்லைன்னு படிச்சேன்.

*************************************************************

பசங்களுக்கு மார்ச்8லேர்ந்து முழுஆண்டுத் தேர்வு. சிபிஎஸ்சி பாடத்திட்டம்.
பரிட்சை முடிஞ்சு இரண்டுவாரம் விடுமுறை கொடுத்து அடுத்த வருடம்
ஆரம்பமாகிடும். ஏப்ரல்23 தேதியிலேர்ந்து ஜூன் 9 வரை லீவுதான்.

மார்ச் 8 லேர்ந்து ஏப்ரல் 23 வரை ஹாஃப்டேதான். 1 மணிக்கு
வீட்டுக்கு வந்திடுவாங்க. செம ஜாலி. (நடுவுல இரண்டுவாரம் லீவு வேற)

சீக்கிரம் எந்திரிச்சு சமைக்க வேண்டாம். பொறுமையா எந்திரிச்சு
டிபன் செஞ்சு கொடுத்தா போதும். எப்பவும் இப்படியே இருந்துட்டா,
எம்புட்டு நல்லா இருக்கும். :))) (கொழும்புல இப்படிதான் எப்பவும்)


இப்படிக்கு
விடிகாலையில் எழுந்திரிச்சு சோறுகட்டுவோர் சங்கம்
ஹைதை கிளை

******************************************************

காலேல எந்திரிச்சா ஒரே சத்தம். பக்கத்துல தான் ஏர்போர்ட் என்பதால்
ஹெலிகாப்டர்,ஃபைளைட் போகுதுன்னு நினைச்சேன்.
(இதெல்லாம் நின்னு கவனிக்கவா நேரம் இருக்கு. 5.15க்கு எந்திரிச்சாலும்
6.45 வரை காப்பி கலந்து குடிக்க நேரமில்லாம வேலையிருக்கு அவ்வ்வ்)

இடி இடிக்குதா என்னன்னு? பிள்ளைங்களை கேட்டா ஆமாம்மான்னு சொன்னாங்க.
என்ன கொடுமை இது சரவணன். கொஞ்சம் நேரத்துல மழைச்சாரல்..

நியாயப்படி சிவராத்திரிக்கு அப்புறம் மெர்குரி லெவல் ஏற ஆரம்பிச்சு மே மாசம்
44 அல்லது 45 டிகிரியைத் தொடணும். இப்ப 35 டிகிரிகிட்ட வந்திருக்குன்னு
இருக்கறப்போ மழை என்ன வேண்டிகிடக்கு!!! மழை காலத்துல மழையக்
காணோம். :(

காலையோ, மாலையோ ஏதோ ஒருநேரம் அப்படிக்கா வந்து ஒரு பக்கெட்
தண்ணியை ஷவரா கொட்டறமாதிரி மழை பெய்வது ஒண்ணும் சரியில்லை
மிஸ்டர் வருண பகவான். 3 மாசம் கழிச்சு நீங்க வரவேண்டிய மிருகசீர்ஷ
நட்சத்திர அன்னியிலேர்ந்து கரெக்டா வந்து உங்க டூட்டியை செய்ங்க.

ஆமா சொல்லிட்டேன். இப்போதைக்கு மாம்பழம், நுங்கு,
இளநி, தர்பூஷ், பானைத்தண்ணின்னு நாங்க பாக்க வேண்டிய வேலை நிறைய்ய
இருக்கு. :)))

Monday, February 22, 2010

உடல்வளமும், மனவளமும் பதின்மவயதில் முக்கியம்.

ஆறு, குளங்கள் ஆகியவற்றுக்கு இருபுறமும் கரை இருக்கும்.
அந்தக் கரைக்குள் அடங்கி ஆறு போவது அழகாக இருக்கும்.
கரையைக் கடந்தால் ஊருக்குள் வெள்ளம் தான். அந்தத் தண்ணீரையே
அப்போது திட்டுவோம்.

பதின்மவயதில் உடல்வளமும்,மனவளமும் கரைகள் போன்றது.
பல பிள்ளைகள் இந்த வயதில் கட்டுமஸ்தான உடம்பு வளர்க்க
ஆசைப்பட்டு உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல விரும்புவார்கள்.
ஆனால் 18 வயதற்கு பிறகு தான் அத்தகைய கூடங்களுக்கு
செல்ல வேண்டுமாம். பலருக்கு அந்த பயிற்சி நிலையத்தில்
வாங்கப்படும் தொகை கட்ட முடியாது.

உடலுக்கு யோகக்கலை தரும் பலன் போல வேறொன்றும்
தர முடியாது. இதை யோகைக்கலை கற்றவர்கள் நன்கு அறிவார்கள்.
யோகா அதுவும் பதின்மவயதுப்பிள்ளைகளுக்கு மிகவும் உதவுகிறது.

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலர் அதிக
பருமனாகவோ, உடல் இளைத்தோ காணப்படுவார்கள். இதில்
ஆண்/பெண் என்ற பேதமில்லை. யோகா பயிற்சி தேவையில்லாத
சதையை குறைப்பது மட்டுமில்லாமல் உடல்பலம், ஒருங்கிணைந்த
கவனம்,தன்னம்பிக்கை, மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த
உதவுகிறது.

சூர்ய நமஸ்காரம் எனப்படும் யோகப்பயிற்சி சந்தியாவந்தனத்துக்கு
ஈடானது என்றும் சொல்லலாம். வெறும் சூரிய நமஸ்காரம்
மட்டும் செய்வதை POWER YOGA என்பர். இதை இரட்டைப்படை
எண்ணிக்கையில் செய்வதுதான் சிறந்தது. இரண்டுகால்களாலும்
வந்தனம் செய்வது போல கணக்காகும்.




சூரியன் தரும் சக்தி யாரும் வேண்டாமென்று சொல்லமாட்டார்கள்.
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இதைச் செய்யலாம்.
வேறெந்த யோகப்பயிற்சியும் செய்ய நேரமில்லாதவர்கள் கூட
இந்த சூரிய நமஸ்காரத்தை மட்டுமே செய்து சக்தி பெறலாம்.

மிக முக்கியமான விடயம் யோகப்பயிற்சி செய்துவிட்டு உடன் குளிக்கக்
கூடாது. உடலுக்கு தேவையான சக்திகள் சேரும் பொழுது குளித்தால்
சக்தி உடலில் ஒட்டாமல் போய்விடும். குறைந்த பட்சம் 30 நிமிடங்கள்
கழித்து குளிக்கலாம். வெறும் வயிற்றில் அல்லது உண்டு உண்டு முடித்து
1 அல்லது 2மணி நேரம் இடைவெளியில் செய்ய வேண்டும். அதிகாலையில்
சுபவேளையில் செய்வதில் எந்த தயக்கமும் இல்லை. பலன் அதிகம்.

சிறந்த குருவின் துணை மிக மிக அவசியம்.

பதின்மவயதில் யோகாவின் பலன் பற்றிய இந்தச் சுட்டி.

yoga poses for teens
இந்த தளத்தில் பதின்ம வயதுக்காரர்கள் யோகா செய்வதன்
பலன்கள் விரிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

யோகா பற்றி மேலும்

உடலுக்கு யோகா. மனத்துக்கு?????

மனத்தை கட்டுப்படுத்த தியானம் அவசியம். சிறந்த ஆசிரியரைக் கொண்டுதான் தியானப் பயிற்சி
பெற்று அன்றாடம் செய்ய வேண்டும்.



இந்த வீடியோவில் தியானத்தைப் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.


ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குருவைத் தேடி நாம் அலைய தேவையில்லை.
தற்போது எல்லா ஊரிலும் Art of living, ISHA, மனவளக்கலை பயிற்சி
மன்றங்கள் இருக்கின்றன. அங்கே ஒவ்வொரு வயதினருக்கும் தகுந்த மாதிரி
பயிற்சி வகுப்புக்கள் இருக்கின்றன. அவற்றில் பிள்ளைகளைச் சேர்த்து
(நாமும் சேர்ந்து பயன் பெறலாம்) பலன் பெற உதவலாம்.

Art of living இணைய தளத்திற்கு
ISHA இணைய தளத்திற்கு.

artoflivingல் YES என்ற பயிற்சி பதின்மவயதுக்காரர்களுக்காகவே
இருக்கிறது.

ஒரு வாரக்காலம் போதும் பயிற்சிக்கு. எதிர் வரும் விடுமுறையில் இந்தப்
பயிற்சி பெறவைத்து அதை அன்றாடம் வீட்டில் செய்யப் பழக்கினால் போதும்.

மூச்சுப் பயிற்சி செய்யப் பழகினால் எந்த பிரச்சனையுமே இல்லை.
நம் உடலையும், மனதையும் மூச்சுப்பயிற்சியினால் கட்டுப்படுத்தி
முறையாக, ஆரோக்கியமாக வாழலாம்.

பிள்ளைகளுக்கு இவைகளின் அவசியத்தை போதிப்போம்.
மகிழ்வான வாழ்வு அவர்கள் வாழ வழிவகுப்போம்.

Thursday, February 18, 2010

பதின்ம வயதும், பூணூல் சடங்கும்!!!

ஆர்டிஸ்ட் மாயா அவர்களின் ஓவியத்தில் உருவாகும் அழகான
அழைப்பிதழ்கள் பற்றி முன்பே சொல்லியிருந்தேன். அவர் வரைந்த
உபநயன பத்திரிகை ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் இருந்த
விடயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அதைத் தொடர்ந்து மேலும்
பல விடயங்களை கற்றதை இங்கே பகிர்கிறேன்.

மத சம்பந்தமான பதிவோ, மத ஆதரவு பதிவோ அல்ல இது.
அப்படி ஏதும் விவகாரமாக புரிந்து கொண்டு பின்னூட்டத்தாக்குதல்கள்
நிகழ்த்த விரும்புபவர்கள் மேலே படிக்க வேண்டாம். அப்படிப்பட்ட
பின்னூட்டங்கள்பிரசுரிக்கப்பட மாட்டாது.

சத்திரியர்கள், பிராமணர்கள்,வைஸ்யர்கள்(நம்மூரில் ஆசாரிகள்)
இவர்களில் மட்டும்தான் பூணூல் அணியும் பழக்கம் இருக்கிறது.

இந்த பூணூல் ஏன் அணிய வேண்டும்? ஏன் கட்டாயம்?
அதற்கும் பதின்ம வயதுக்கும் என்ன சம்பந்தம்? கட்டாயம்
தெரிந்து கொள்வோம்.

பூணூல் அணியும் சடங்கு கல்யாணத்திற்கு இணையாக
விமர்சையாக செய்யும் பழக்கம் இருக்கிறது. ஆனால் பலரோ
திருமணத்திற்கு முதல் நாள் தான் பூணூல் பங்ஷன் செய்வார்கள்.
உண்மையில் பூணூல் சடங்கு செய்ய ஏற்ற வயது 7-11 தான்.

பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று சொல்வார்கள்.
உபநயனம்-அதாவது மூன்றாவது கண்ணை திறக்கும் நிகழ்ச்சி.
ஞானத்திற்கு மூன்றாவது கண் அவசியம். அந்தக் காலத்தில்
குருகுல பாடத்திட்டம் இருந்தது. பூணூல் அணிந்தபிறகே இங்கே
அனுமதி கிடைக்கும். (இப்போதும் வேத பாடசாலைகளில்
இம்முறை இருக்கிறது)

7 வயதில் ஏன் உபநயனம் செய்கிறார்கள் தெரியுமா?
உபநயனத்தை inviting youth என்று சொல்லலாம்.
சிறு குழந்தையிலிருந்து பதின்ம வயதிற்குள் அடி எடுத்து
வைக்கும் நிகழ்ச்சி எனலாம். (பெண்களின் பூப்பெய்துதலை கொண்டாடுவது
போல்) பதின்ம வயதில் ஏற்படும் மாறுதல்கள் உடல், மனம்
இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

பதின்ம வயதுக்குத் தன்னை தயார் செய்து கொள்ள உபநயனம்
பயனாகிறது. அது எப்படி?

உபநயனம் ஆன சிறுவன் தினமும் 3 வேளை சந்தியாவந்தனம்
எனும் பூஜையை செய்ய வேண்டும். காலை, நண்பகல், மாலை
வேளைகளில் இது கண்டிப்பாய் செய்யப்பட வேண்டும். செய்வதால்
என்ன பயன். அங்க தான் இருக்கு மேட்டர்.

இந்த சந்தியாவந்தனம் செய்யும் பொழுது ஆச்சமனியம் செய்வார்கள்.
அதாவது 3ஸ்பூன் தண்ணீரை எடுத்துக்கொள்வது. இது ரெய்கி பாஷையில்
சொன்னால் “cleanising" and helps in the flow of bio-electricity
within the body.

பிராணாயாமம்- யோகக்கலை தெரிந்தவர்கள் சொல்வார்கள் இது
மூச்சுப் பயிற்சி என்று. மூச்சுப்பயிற்சி செய்யக்கற்றவர்களின்
உடலில் இருக்கும் சக்கரங்கள் முறையாக வேலை செய்யும்.



முறையாக பிராணாயாமம் கற்று அதை தினமும் பயிற்சி
செய்வதால் மன அழுத்தம், கோபம் போன்ற உணர்ச்சிகளை
கட்டுக்குள் கொண்டு வர முடியும். சுவாசம் சரியாக இருந்தாலே
எல்லாம் சரியாக வேலை செய்யும்.

அடுத்ததாக காயத்ரி ஜபம்:
அறிவை போதிக்கும் தந்தை தானே குருவாகி தனயனுக்கு
காயத்ரி மந்திரத்தை போதிக்கிறார்.
அன்னை காயத்ரிக்கு மிஞ்சிய சக்தியே கிடையாது. எந்த ஒரு
தெய்வத்திற்கு அதனதன் காயத்ரி மந்திரத்தை சொல்லி பூஜிப்பதால்
பலன் பன்மடங்கு அதிகமாகும்.(காயத்ரி பற்றி விரிவான பதிவும்
வரும்) சந்தியாவந்தனத்தில் மிக முக்கியமாக காயத்ரி ஜபம்
செய்வது தான். எத்தனை முறை காயத்ரியை ஜபிக்கிறார்களோ,
அவ்வளக்களவு சக்தி கிடைக்கும்.




இது ஒரு வகை தியானம். தியானம் செய்தால் மனம் அமைதி
அடையும். தியானம் செய்வதால் மனத்தை ஒருங்கிணைக்க
முடியும். concentration அதிகமாகும். இதனால் நல்ல பலன்
கிடைக்கும்.

மனத்தை ஒருங்கிணைக்க கற்றவனுக்கு பதின்ம வயதை கடப்பது
கஷ்டமாக இருக்காது. சுகமான படகுப்பயணம் போல் அமைந்துவிடும்.
கோபத்தை ஆளக்கற்க முடியும்.

பதின்மவயதில் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு
முக்கியம் மன ஆரோக்கியம்.

முஸ்லீம் சகோதர்களில் கூட 5 வேளை தொழுகை கட்டாயம்.
மதங்கள் மனிதத்தைத்தான் போதிக்கின்றன. இந்து மதத்தில்
பத்மாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது உசிதம் என்றால்
இஸ்லாமில் வஜ்ராசனம்.

வஜ்ராசனம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கருப்பை பிரச்சனைகளுக்கு
அருமருந்து. வஜ்ராசனத்தில் 10 நிமிடம் உட்கார்ந்தால் 4 கிமீ தொலைவு
நடந்ததற்கு சமம். வஜ்ராசனம் ஜீரண சக்தியைக் கொடுக்கும்.



சந்தியாவந்தனத்தில் மேற்கொள்ளப்படும் சடங்குகள் பலவற்றிற்கும்
பல அர்த்தம் இருக்கிறது. உதாரணமாக: ஷ்ரயம் ஆவாஹயாமி, பலம் ஆவாஹயாமி,
சரஸ்வதிம் ஆவாஹயாமி என சொல்லி புகழ், பலம், கல்வி ஆகிய்வற்றை
தனக்குள் இருத்துதல் என பல இருக்கிறது. அது முழுதும் எனக்குத்
தெரியாது. அந்த அழைப்பிதழ் தந்த விடயங்களில் ஆச்சரியமாகி
கேட்டு,இண்டர்நெட்டில் கண்டு என நான் தெரிந்து கொண்டவற்றில் மிக
முக்கியமானதை மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.


பிராம்மணர்கள் பூணூல் போட்டு சந்தியாவந்தனம் செய்யலாம்.
மற்றவர்கள் என்ன செய்வது? ஏங்க அலோபதி,ஹோமியோபதி,ஆயுர்வேதம்,
நேச்சுரோபதி, ரெய்கி, பிரானிக் ஹீலிங்னு வியாதிகளுக்கு விதம் விதமா
வைத்தியம் இருக்கு.

மற்றவர்கள் என்ன செய்யலாம் என்பதுதானே அடுத்த பதிவு.
கண்டிப்பாய் திங்கள்கிழமை வரும்.

Tuesday, February 16, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி - 16/2/10

CBSC பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டிலிருந்து மாறுதல்கள்
கொண்டு வரப்போறாங்க. இதுவரை continuous assessment (தொடர்
பரிட்சார்த்தம்) செஞ்சுகிட்டு இருந்தாங்க. அது வெறும் பாடங்களுக்கு
மட்டும்தான். பிற கலைகளில் அதிகமாக கவனம் செலுத்தாம
இருந்தாங்க. ஆனா வரும் கல்வியாண்டிலிருந்து பிற கலைகள்
(extra curricular activities)கட்டாயப்பாடமாக்கி
அவற்றுக்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்போறாங்க. ஏட்டுச்
சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுடன் ”கைத்தொழில் ஒன்றைக்
கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்க்கொள்” என
உணர்ந்து மாற்றம் கொண்டுவந்த கல்வியாளர்களுக்கு நன்றி.

********************************************************

இதுவும் கல்வி பத்தித்தான். ஆந்திராவில் அரசு பள்ளிகளில் கூட
CBSC பாடத்திட்டம் தான் சொல்லிக் கொடுத்துகிட்டு இருந்தாங்க.
வரும் கல்வியாண்டிலிருந்து வெறும் பாடத்திட்டம் மட்டுமில்லாமல்
பரிட்சார்த்தம் கூட continuous assessment (தொடர்
பரிட்சார்த்தம்) முறையில் அமுல் படுத்தப்படும்னு அறிவிச்சிருக்காங்க.
அனைவரின் வரவேற்பையும் பெற்றிருக்கு இந்தத் திட்டம்.
******************************************************

ஆஷிஷுக்கு எப்பவும் பள்ளியில் ஒரு பிரச்சனை இருக்கும்.
ஐயா 1ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது ஆஷிஷின்
சாப்பாட்டுக்கூடையில் மண் இருக்கும். ”ஏன் ஆஷிஷ் இப்படின்னு!!”
கேட்க ஆஷிஷ் சொன்னது,
“ஆனந்த்னு ஒரு பையன் தாம்மா டெய்லி போடுறான்”

அவங்கம்மாவைத் தெரியும் என்பதால் போன் செஞ்சு கேட்டேன்.
ஆனந்திடமே போன் கொடுத்தார் அவன் அம்மா,”நீங்க மட்டும்
ஏன் ஆண்ட்டி விதம் விதமா ஆஷிஷுக்கு செஞ்சு அனுப்பறீங்க!
எங்கம்மா வெறும் சோறுதான் தர்றாங்க, அதான் அப்படி
செஞ்சேன்” என்றான் என்ன பேசன்னு புரியலை வெச்சிட்டேன்.

இப்பவும் இதுத்தொடர்கதை. என்ன கூடையில் மண் விழுவதில்லை.
ஆஷிஷ், அம்ருதாவுக்கு சாப்பிடக் கிடைப்பதில்லை. கூடவே
வெச்சு அனுப்பினாலும் எல்லாம் பசங்க சாப்பிட்டு விடுவாங்க.

நேற்று செஞ்சு அனுப்பின பாஸ்தா ஆஷிஷ் அம்ருதாவுக்கு
4 பீஸ்தான் கிடைச்சுதாம்!! காலையிலயும் அதிகம் வெச்சு,
மதியமும் அவங்களுக்காக எடுத்து வைக்கும் அளவுக்கு
செய்ய வேண்டியதா இருக்கு!!

அன்னைக்கு ஆனந்த் கேட்ட மாதிரி,”ஏன் தான் நான் மட்டும்
வெரைட்டியா செய்யறேனோன்னு இருக்கு!!!”
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*******************************************************

பேரண்ட்ஸ் கிளப்பில் முன்பு போட்ட குழந்தைகளுக்கான
உணவு பதிவுகளின் லிங்கள் இங்கே. நீங்களு வெரைட்டியா
செஞ்சு கொடுக்க உதவும்.

பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான உணவு

இட்லி வகைகள்

DOSA VARIETIES

NOODLES

இதுவும் படிக்கலாம்


********************************************************

இந்த வாரத் தமிழ்மண நட்சத்திரம் எங்கள் புதுகை ப்ளாக்கர்களின்
தலைவர் சுரேகா. வாழ்த்துக்கள் தலைவரே!

நட்சத்திர பதிவுகளில் மணிமகுடம் இன்றைய இந்தப் பதிவு.
படிக்காதவங்க கண்டிப்பா படிக்க இதோ லிங்க்.

**********************************************************

இது மட்டும் நடக்கவே நடக்காது!!!!

இது மட்டும் நடக்கவே நடக்காது!! நடந்தா எம்புட்டு நல்லாயிருக்கும்னு
எல்லா தங்கமணிகளும் யோசிச்சு பாத்தா..... சுகமோ சுகம்.

ம்ம்ம் கனவுல மட்டும்தான் இது சாத்தியம் அப்படின்னு பலரும்
புலம்பிக்கினு இருக்கும் ஒரு நிறைவேறாத ஆசைன்னு கூட வெச்சுக்கலாம்.
என்ன பீடிகை பலமா இருக்கேன்னு பாக்கறீங்களா?? தங்கமணிகளின்
அல்ப ஆசைதான். ஆனாலும் இந்த அல்ப ஆசை நடக்கவே நடக்காது.

ஆபீஸ்ல வேலை பாக்கறவங்களுக்கு கூட வாரத்துக்கு ஒரு நாள் லீவு
கிடைக்கும். தீபாவளி,கிறிஸ்துமஸ்,இப்படி பண்டிகை நாள், முக்கியமான
அரசு விடுமுறைகள், சனி, ஞாயிறுன்னு வேலை பார்க்கறவங்களுக்கு
ஒரு ஓய்வு உண்டு. ஆனா ஓய்வே இல்லாத வேலை தங்கமணிகளின்
அடுப்படி வேலை.



மத்தவங்களுக்கு பண்டிகைநாள்னா லீவு, ஆனா அடுப்படியில் அன்னைக்குத்தான்
அதிக வேலை. சில வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைதான் குடும்பத்தினர்
அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம்னு டபுள், ட்ரிபிள் வேலை நடக்கும்.
விதம் விதமா சமையல் நடக்கும். திங்கள்கிழமை அதிகாலை எழுந்திருக்ககூட
முடியாமல் அந்த தங்க்ஸ் அவதிப்படுவாங்க!!!


எந்த ஊருக்கு போனாலும் போயிட்டு வந்ததும் பெட்டியை அப்படியே
போட்டுட்டு தங்க்ஸ் உடனடியா ஓடுவது கிச்சனுக்குத்தான். பால் காய்ச்சி
காபி போட்டு, டிபன்னு உடனடியா ஓட ஆரம்பிக்கணும். ”என்ன இருந்தாலும்
நீ போடும் காபி போல வராதுப்பான்னு”! ஐஸ் வெச்சே வேலை வாங்கும்
டெக்னிக் ரங்குகளுக்கு மட்டுமே சாத்தியம்.


லேபர் சட்டப்படி ஞாயிற்றுக்கிழமை விடுப்பு கட்டாயம். ஞாயிற்றுக்கிழமை
வேலை பார்த்தால் வார நாட்களில் அவர் விரும்பும் நாளில் ஓய்வு
எடுத்துக்கணும். தங்கமணிக்கு லேபர் சட்டம் கூட ஒண்ணும் செய்ய
முடியாது.


வீட்டுவேலை செய்யறவங்க கூட வாரத்துக்கு ஒருநாள் லீவு எடுத்துக்கணும்னு
சட்டம் வெளிநாடுகளில் இருக்கு.(நம்ம ஊர்ல சொல்லமா அவங்க அடிக்கற
டும்மாக்கள் 10 நாளாவது ஆகிடுது என்பதால் கவலை இல்லை) தங்கமணிகளுக்கு
எந்த சட்டமும் இல்லை.

மீறி எந்த தங்க்ஸாவது ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்,
வெளியே சாப்பிடலாம்னு சொன்னா”என்ன ஞாயிற்றுக்கிழமை சமைக்காதோர்
சங்கத்துல மெம்பராகிட்டயான்னு?” கேக்கறாங்க. இவங்க மட்டும்
ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகாதோர் சங்கத்து உறுப்பினரா இருக்கலாம்!!

இன்ஷூயுரன்ஸ் கம்பெனி ஹோம் மேக்கருக்கெல்லாம் பாலிஸி தரமாட்டாங்க.
அவங்க வீட்டுக்காரர் பணம் கட்டுவதாகச் சொல்லி கையெழுத்து போட்டுக்கொடுத்தா
வரிச்சலுகைக்காக போனா போகுதுன்னு பாலிசி கிடைக்கும். சமீபத்துல
ஒரு கோர்ட் வழக்குல சொன்ன தீர்ப்பு சூப்பர் தீர்ப்பு.

ஹோம் மேக்கர்கள் செய்யும் வேலைகளை எழுதி அதுக்குண்டான
பணத்தை அவர்களுக்கு வழங்குவதாக கணக்குப்போட்டு பார்த்தால்
குறைந்தது 20,000 வரை மாதச் சம்பளம் வரும். அவருக்கு ஏதும்
பாதிப்பு ஏற்பட்டால் மொத்த குடும்பமும் பாதிக்கப்படும் என்பதால்
ஹோம்மேக்கர்களுக்கு பாலிசி கொடுக்கலாம்னு தீர்ப்பு.

இதைப் படிச்சப்போ Adivaram Adavallaku Selavu (ஞாயிற்றுக்கிழமை பெண்களுக்கு
விடுமுறை)
அப்படின்னு
ஒரு தெலுங்கு சினிமா ஞாபகம் வந்துச்சு. இயக்கம் தாசரி நாராயண ராவ். பெண்களின்
செண்டிமெண்ட் அள்ளுவதில் இவர் தெலுங்கில் விசு. தனது தங்கமணிகளை
டைவர்ஸ் செஞ்சிடுவதா 4 ரங்குகள் கோர்ட்ல கேஸ் போடுவாங்க. எந்த
வக்கீலும் அந்த பெண்களுக்கு சாதகமாக வாதாட பொழுது பிரகாஷ் ராஜ்
அவங்க தரப்புல வந்து பேசும் அந்த கிளைமாக்ஸ் சிம்பிளி சூப்பர்ப்.

”இத்தனை வருடம் உங்கள் மனைவி உங்களுக்கு செய்திருக்கும் வேலைகளுக்கு
வருடத்திற்கு 1.50 லட்சம் வீதம் திருமணமாகி எத்தனை ஆண்டுகள்
ஆகியிருக்கிறதோ கணக்கு போட்டு அத்தனை தொகையை நஷ்ட ஈடாக
கொடுத்தால் விவாகரத்து சாத்தியம்னு” பிரகாஷ் ராஜ் பேசும்போது
ஒவ்வொரு ரங்க்ஸும் தலை சுத்தி மயக்கம் போட்டிடுவாங்க.


எந்த தங்கமணியும் தன் குடும்பத்துக்காக தான் ஓடாக உழைப்பது.
ரங்கு தனக்காகவும், பிள்ளைகளுக்காகவும் கஷ்டபடுகிறாரேன்னு தான்
தன் கஷ்டத்தையும் மறைச்சுகிட்டு சேவகம் செய்யறாங்க. கணக்கு
போட்டு பாத்தா தெரியும். ஒவ்வொரு வேலைக்கு இவ்வளவு பணம்
வேலைக்காரம்மாவுக்கு கொடுத்தால் எவ்வளவு ஆகும்னு யோசிச்சு பார்த்தால்
மலைப்பா இருக்கும்.

தங்கமணிகளுக்கு வாரத்துக்கு ஒருநாளாவது ரெஸ்ட் கொடுத்தா அவங்க
உடலும்,மனசும் வாழ்த்தும். ரங்குகள் கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதை
தங்க்ஸ்கள் புரிஞ்சி நடந்துக்கற மாதிரி ரங்குகளும் தங்க்ஸ்களை
புரிஞ்சிப்பது ரொம்ப முக்கியம். அந்தக்கால மாதிரி கைல அரைச்சு,
திரிச்சா சமையல் நடக்குதுன்னு வியாக்கியானம் பேசாம இருந்தா
நல்லது.

தங்கமணிகளின் அல்ப ஆசையான ஞாயிற்றுக்கிழமை ஒருநேரமாவது
ஓய்வு என்பது நடக்குமா???? வாரத்துக்கு ஒரு நாள் வேண்டாம்
ஒரு நேரம்.... ஞாயிற்றுக்கிழமை தங்கமணி எழுந்திருக்குமுன்
காபி போட்டு கொடுத்துத்தான் பாருங்க ரங்கமணிகளே!!!

இதைப்பத்தி நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சொல்லிகிட்டே போகலாம்.
அப்புறம் ஓவர்டோஸ் ஆகிடும். அதனால் மீ த எஸ்கேப்பு.


Monday, February 15, 2010

வீக் எண்ட் ரவுண்ட் அப் ரிப்போர்ட்

ரொம்ப ஊர் சுத்தி சுத்தி அலுத்துப்போன மனுஷன் ஆபீஸுக்கு
லீவு கொடுத்துட்டு 21/2 நாள் வூட்டுல இருந்தது மகா அதிசயம்.
அந்த அதிசயத்துலயும் அதிசயம் ஞாயிற்றுக்கிழமை ரவுண்ட் அப்
போனது. :))

பொதுவா சனிக்கிழமை சாயந்திரமே வெளியே சுத்திட்டு அடுத்த
நாள் நல்லா ரெஸ்ட் எடுத்துக்க்குவோம்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7.30க்கு தம்பி போன் செஞ்சு
ஹேப்பி வேலண்டைன்ஸ்டேன்னு சொல்லியிருக்கான். போன்
எடுத்தது அயித்தான் தான். நல்லவேளை என் தூக்கம் கெடலை. :))

பசங்க வேலண்டைன்ஸ்டே கார்ட் செஞ்சு கொடுத்தாங்க.
வாழ்த்து சொன்னாங்க. அப்பாக்கு என்ன கிஃப்ட் கொடுத்தீங்க,
உங்களுக்கு என்ன கிப்ட் கிடைச்சது போன்ற பேட்டிகளுக்கப்புறம்
இருவருக்கும் கிப்ட்(சின்ன நோட்டிஸ் போர்ட், தன் பணிகளை
ஞாபகமா எழுதி வெச்சுக்க) கொடுத்தோம்.

பொறுமையா எந்திரிச்சு நோ ப்ரெக்பாஸ்ட் என்பதால் டீ, பிஸ்கட்தான்.

மட்டும் சாப்பிட்டு நல்லா தூங்கி எந்திரிச்சு ஃப்ரெஷ்ஷா குளிச்சு
ஸ்கந்தகிரி போய் முருகனுக்கு ஹலோ சொல்லிட்டு அயித்தான்
கூட்டிகிட்டு போனது பேகம்பெட்டில் இருக்கும் பேந்தலூன்ஸ்.

50% தள்ளுபடியாம். தள்ளுபடின்னா என்ன வேலைன்னு நமக்குத்
தெரியும். பசங்களுக்கு எப்படியும் யுகாதிக்கு ட்ரெஸ் எடுக்கணும்
அதுக்காக போனோம். அம்ருதாக்கு எடுத்தக்கப்புறம்
ஆஷிஷுக்கும் அயித்தானுக்கும் by 1 get 1 freeயில பேண்ட்
வாங்கிகிட்டாங்க. எனக்கும் ஒரு டாப்ஸ் வாங்கினாரு.
காற்று வாங்கப்போயி கவிதை வாங்கி வந்தா மாதிரி :))

sales சமயம் என்பதாலும் கடைசி நாள் என்பதாலும் கொஞ்சமே
கொஞ்சம் கூட்டம். பில் போட மட்டும் 45 நிமிடம் நின்றோம்.
பில் போட்டு துணிகளை மடித்து பையில் போடும் பையன்
கண்டிப்பாக துணியை மாற்றி வைத்துவிடுவார் என்று நம்பிக்கை
எல்லோருக்கும் ஏற்பட்டது.

ஆஷிஷும் அம்ருதாவும் அடித்த கமெண்ட்,”இதுவே நம்ம
HOUSE OF FASHIONஆ இருந்தா 10 நிமிஷத்துல பில்லிங்
முடிஞ்சிருக்கும்.என்ன ஒரு பாஸ்டா செய்வாங்க” இவங்களை
அங்கே ட்ரையிங்கிற்கு அனுப்பலாம்னு அயித்தானும் ஆலோசனை
சொன்னாங்க.



அங்கேயிருந்து சாப்பிட வெளியே அழைத்துப்போவதா சொல்லியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே ரொம்ப கூட்டம் இருக்கும்.
அதுவும் காதலர் தினத்தன்னைக்கு கேக்கணுமா!! பசங்க
பிக்பஜார் மேலே இருக்கும் சாட் பாயிண்ட், செண்ட்ரலில்
இருக்கும் ஓரிஸ் ஹேவ்மோர்னு சொல்ல சொல்ல எனக்கு
பயமா இருந்துச்சு.

பேந்தலூனிலிருந்து காரை வெளியே எடுக்கும்போது எதிரில்
Onions Multi Cusine Restaurant பேரு வித்யாசமா இருக்க
ட்ரை செஞ்சு பாக்கலாமேன்னு போனோம். தூரத்தை மிச்சப்
படுத்தவும் கூட்டமான இடத்தை தவிர்க்கலாமேன்னும் திட்டம். :))





எதிர் பாராத விதமா ரெஸ்டாரண்ட் அமைப்பு நல்லா இருந்துச்சு.
மெனுகார்டை பாத்து ஆச்சரியம் தான். விலைகள் நம்ம பட்ஜட்டுக்குள்
வரும். சூப் வகைகள் :50 ரூபாய்தான். நார்த் இண்டியன் கறிவகைகள்
80 லிருந்து 120க்குள் முடிஞ்சிடுது. ரொட்டி 19 ரூபாய்தான். ஆலுபராத்தா-35,
பனீர் பராத்தா-45,இப்படி இருக்கிறது.

எனக்கும் அவருக்கு ஹார்ட் அண்ட் சவர் சூப்பும் பிள்ளைகளுக்கு
டொமாட்டோ சூப்பும் ஆர்டர் செய்தோம். ருசி மிக நல்லாயிருந்தது.

மஞ்சூரியன், பராத்தக்களும் அருமை. தால்மக்கனி மட்டும்
வித்யாசமா இருந்தது. சுவை, தரம், எல்லாம் நல்லாவே இருக்கு.
ட்ரை செஞ்சு பாக்கலாம். அதிகம் கூட்டமில்லாமல் இருக்கு.
டைனிங் டேபிளில் இருக்கும் டேபிள் மேட் கூட வெங்காயம்
படம் போட்டிருக்கும். ஏஸி ஹால், தரமான சேவைன்னு
ONION RESTAURANT அட போட வைக்குது.

ஹோம் டெலிவரியும் உண்டு.

ONION RESTAURANT
ADJACENT TO PANTALOONS, BEGAMPET,
HYDERABAD

ஆவதும் நட்பாலே மனுஷன் அழிவதும் நட்பாலே- இறுதி பாகம்

தீய நட்புக்களால் பிள்ளைகள் கெட்டுவிடாமல் பாதுகாக்க முடியும்.
இதுல முக்கிய காரணியா உளவியாளர்கள் சொல்வது பெற்றோரைத்தான்.

பேரண்ட்ஸ் கிளப்பில் பதிவுகள் பெற்றோருக்கு அதிகமாக இருக்கும்.
அன்பாலே இணைந்து அன்புச்சின்னத்தை பெற்றவர்கள் வாழ்வு மட்டுமல்ல,
அவர்களின் குழந்தையின் வாழ்வும் மலர்ந்து இருக்கும்.

ஏனோ தானா கல்யாணம்,குழந்தை பிறப்பு என வளரும் குழந்தை
தன்னம்பிக்கையை இழக்கிறதுன்னு சுய மரியாதை பதிவுலேயே
பார்த்தோம்.

மேலை நாடுகளைப்போல இப்ப நம்ம இந்தியாவிலயும் விவாகரத்துக்கள்
பெருகிவிட்டன. விவாகம் ரத்தானால் பாதிப்பு அவர்களின்
பிள்ளைகளுக்குத்தான். பெற்றோரின் சண்டை, சச்சரவுகள் இவற்றை
குழந்தை பருவத்தில் அனுபவித்த குழந்தை பதின்மவயதைத்
தொடும்பொழுது தன் குடும்பத்தை விட்டு பிரிகிறான்.


பொதுவாகவே பதின்மவயது பிள்ளைகளுக்கு mood swings
எனப்படும் மனநிலை மாற்றம் அதிகம். சில பிள்ளைகள்
அதிகம் கோபம் கொள்வர். சிலர் தனி அறைக்குள் அடைந்து
போய்க்கிடப்பர். வீடியோ கேம்ஸ், ஐபாட், கம்ப்யூட்டர்
என குடும்பத்தினரிடமிருந்து விலகியே இருக்க விரும்புகின்றனர்.

காரணம் பிள்ளையின் மனநிலை புரியாமல் நாமும் அவர்களுடன்
சண்டையிடுவது, தனது கனவை தன் பிள்ளையாவது நினைவாக்க
வேண்டும் என பிள்ளைக்கு பிடிக்காத படிப்பை படிக்க வற்புறுத்துவது.

அதிகம் கண்ணாடி முன் நிற்க விரும்பும் வயது இது. அதற்கும்
திட்டு வாங்குவார்கள். இதனால் பதின்ம வயது பிள்ளைக்கு
பெற்றோர்கள் வில்லன்களாகத் தெரிகிறார்கள். சிடு சிடுப்பு,
கோபம், எரிச்சல் என இருவரும் பேசிக்கொள்வதால் விரிசல்
அதிகமாகிறது.

குழந்தையையாக இருந்த பொழுது பக்கத்தில் இருத்தி பேசுவோம்.
பிள்ளை வளர வளர அரவணைப்பதே இல்லை. தொட்டு பேசுவது
சுத்தமாக இல்லை. ஸ்பரிசம் தரும் சுகம், கதகதப்பு இல்லாமலேயே
போய்விட முகம் பாக்காமலேயே பதில் சொல்லிப்போகும் குழந்தைதான்
அதிகம்.

இதெல்லாம் பிள்ளையை நட்பு வட்டத்துக்குள் பின்னிபிணைக்கிறது.
அது தீய கூட்டமாக இருந்தால் அவ்வளவுதான். படிப்பு, எதிர்காலம்,
உடல்நலம் எல்லாம் பாதிக்கப்படும்.

என்ன செய்யலாம்??

அன்பு காட்டுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.
நட்பாக நாம் மாறுவதைத் தவிர வேறெந்த வழியும் இல்லை.
“தோளுக்கு மிஞ்சினால் தோழன்” என பெரியவங்க சொல்லி
வெச்சதை பெத்தவங்க நாமே மறந்திட்டா எப்படி??

வீட்டுக்குள்ளேயே நட்பு வட்டத்தை உருவாக்க வேண்டும்.
கணவன்,மனைவி சச்சரவுகளைக்குறைத்து இது என் குடும்பம்,
என் பலம் இது, இங்கே நான் நிம்மதியாக இருக்கிறேன் எனும்
எண்ணத்தை பிள்ளையிடம் வளர்க்க வேண்டும்.

“என்ன ஆனாலும் ராசாத்தி நானிருக்கிறேன்”எனும்
நம்பிக்கையை பெண்ணுக்கு தந்துவிட்டாள் அவள் ஏன்
படிக்கும் வயதில் காதலை தேடப்போகிறாள்.

”என் வீடு எனக்குத் துணையிருக்கு என்ற எண்ணம்
இருந்தாலே தவறான பாதைக்கு அழைக்கும் நண்பனை
விட்டு விலகிடுமே பிள்ளை!!”

இதற்கு பள்ளிகளும் உதவ வேண்டும். கவுன்சிலர்கள்
உளவியாலர்கள் வைத்து பதின்ம வயது பிள்ளைகளுக்கு
கவுன்சிலிங் கொடுத்து அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க
வேண்டும்.

உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், போஷாக்கான
உணவு(வீட்டை விட்டு பிள்ளை இறங்கும்போது வெறும்
வயிற்றோடு அனுப்பாமல் போஷாக்கான உணவு கொடுத்து
அனுப்புவது நட்புக்களுடன் ஹோட்டல், பாஸ்ட் ஃபுட் என
ஓட விடாமல் செய்யும்) மிக மிக அவசியம்.


தேவையான அன்பு, அதீதமில்லாத கண்டிப்பு, நட்பான
பெற்றோர் இதுதான் பதின்மவயதுப்பிள்ளையின் தேவை.

பொண்ணும், பரிசும், பொருளும் இவற்றை ஈடு செய்யாது.
குவாலிட்டி டைம் மிக மிக முக்கியம்.


some tips for the adolescents:




* Develop trustworthy relationships with others and be open and
be open honest.

* Develop hobbies

* Physical exercise is a must to relax build and sustains the body.

* Avoid junk and fast food. Nutrition is very important. A balanced
diet gives balanced body and mind.

* Avoid tobacco, smoking and use of alcohol. Remember the alcoholic
you see today took his first drink when he was an adolescent.

* Listen to good music, not the kind that pushes your blood pressure up.

* Follow good rituals and religious practices and once you cultivate the
habit, you will find in them an emotional anchor.

இந்தத் தொடரில் அடுத்த பதிவு வியாழக்கிழமை வரும்

ஆவதும் நட்பாலே மனுஷன் அழிவதும் நட்பாலே. இது முந்தைய பதிவுக்கு லிங்க்.

Saturday, February 13, 2010

KABHI KABHI MERE DIL ME!!!!

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் இவை.

அர்த்தம் பொதிந்த பாடல்கள். அனைவருக்குமே
இது ஆல் டைம் ஃபேவரிட் தான்.


PAL PAL DIL KE PAAS TUM REHTHE HO இது

BLACK MAIL படத்தின் பாடல். ராக்கி குல்சார்,
தர்மேந்திரா ஜோடியாக நடித்திருக்கும் படப்பாடல்.
கிஷோர் குமாரின் குரலில் எப்போதும் மனதில்
நிற்கும் பாடல் இது.




அமிதாப்,ராக்கி குல்சார் காம்பினேஷனில்
கபி கபி எனும் படத்தின் பாடல்...





இந்த வருடம் காதலர் தின சிறப்பு பதிவு ஏதும் போடவில்லை.
சென்ற வருட ஷ்பெஷல் பதிவான ரொமான்ஸ் ரகசியங்கள்
பதிவுக்கான சுட்டி இங்கே கொடுத்திருக்கிறேன்.


காதலாகி கசிந்துருகி வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக
இருந்தால் வாழ்க்கையில் வேறென்ன வேண்டும்.

சாய்ந்துகொள்ள தோளாக, தலை சாய்க்கும் அன்னைமடியாக,
என இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அன்பு செலுத்தினால்
ஆனந்தத்திற்கு அளவேது!!

யோசிப்போமா!!!

Friday, February 12, 2010

WHAT AN IDEA SIRJI???!!!!

IDEA போன் நிறுவனத்தின் இந்த விளம்பரம் எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது.






உண்மையில் மரங்களை அழித்தால் நமக்கு நாமே அழிவுக்கு
பாதை வகுக்கிறோம் என்றுதான் அர்த்தம்.


மரங்கள் இல்லாவிட்டால் மனிதம் இல்லாமல் போகும். எந்த
ஒரு உயிரினமும் இல்லாமலே போய்விடும். அப்போது உலகம்
எங்கே?? பயமாக இருக்கிறது தானே?

மரங்களை வெட்டி வெட்டி மழையை தடுத்துவிட்டோம்.
பூமி வெப்பமாகிக்கொண்டிருக்கிறது. வாகங்களிலிருந்து
வெளியேறும் புகை மாசுயால் சுற்றுச்சூழல் மாசாகமல் தடுக்க
உதவும் மரங்கள் இல்லாததால் அசுத்த காற்றை சுவாசித்துக்
கொண்டிருக்கிறோம்.


மரங்களை வெட்டாமல் என்ன செய்ய முடியும் என்று நாமும்
யோசித்து பார்க்க வேண்டும்.

அந்த விளம்பரத்தில் சொல்லியிருப்பது
போல பேப்பர் இல்லாமல் மொபைல் போனை உபயோகப்படுத்தும்
நிலை வந்தால் மிக நன்றாக இருக்கும். பிள்ளைகள் பொதி சுமந்து பள்ளிக்குச்
செல்ல வேண்டாம். மீட்டிங்கிற்கு கைகளில் ஃபைல்கள் இல்லாமல்
மொபைல், சீடி, பென் ட்ரைவ் ஆகியவை போதும். ரோட்டில்
கசக்கி எறியப்படும் குப்பைகள் இல்லாமல் ஊரே அழகாகிவிடும்.
இப்படி எத்தனையோ கற்பனை செய்து பாருங்கள். (உங்க ஐடியாவையும்
பின்னூட்டமாக சொல்லலாம்)


முடிந்த வரை மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களை உபயோகிக்கலாம்.
நம்மால் ஆன உதவியாக பில்கள்,ஸ்டேட்மெண்ட்கள் போன்றவற்றை
மெயிலில் பெற்றுக்கொள்ளலாம். தேவையெனில் மட்டுமே
காகிதங்கள் உபயோகிக்கலாம்

வாருங்கள் மரத்தைக் காப்போம், மனித இனம் அழியாமல் காப்போம்.

Thursday, February 11, 2010

வடக்கு 4ஆம் வீதி ராக்கெட்டு!!!

என்னம்மா, தாத்தா நல்லாயிருக்காங்களா?
ரத்னா டீச்சர் பொண்ணுல்ல நீ?
ரமணி சார் மகப்பா இது? இப்படி என்னை பாக்கறவங்க எல்லாம்
அடையாளம் தெரிஞ்சிக்க கூடிய அளவுல கொஞ்சம் ஊர்ல
எல்லோருக்கும் தெரிஞ்ச குடும்பத்து பொண்ணு நான் இது தான்
என் + இதுவே என் -ம் கூட. :)

அவங்களுக்கு என்னை யாரும்னு தெரியும்! ஆனா எனக்குத்தான்
அவங்களைத் தெரியாது என்பது போல என் நிலமை.

வடக்கு 4ல் சொந்த வீடு வாங்கிகிட்டு போனதும் அம்மாவுக்கு
வயித்தல புளிகரைச்ச மாதிரி ஆகிடுச்சு. வடக்கு 4 ஆம்வீதில
பொண்ணுங்க ஓடிப்போயிடுவாங்க. ஜாக்கிரதைன்னு அம்மாவுக்கு
யாரோ ஓதிவிட எனக்கு பிடிச்சிச்சு சனி.

,” நம்ம வீட்டைப்பத்தி எல்லோருக்கும் தெரியும்.
வீதியில இறங்கினா ரத்னா குனிஞ்ச தல நிமிராம போவான்னு
உங்க அம்மம்மாவுக்கு நல்ல பேரு வாங்கித்தந்திருக்கேன்.
என் பெயரை கெடுக்காம இருக்கணும்.”!! அப்படின்னு சொல்ல
””ரோட்ல தல குனிஞ்சு போனா எதிர்ல யாருவர்றாங்கன்னு தெரியாம
முட்டிகிட்டேன்னா கஷ்டமாச்சேன்னு””!! கேக்க அம்மா குனிய வெச்சு
தனியாவர்த்தனம் முதுகுல வாசிச்சாங்க.

”பாரு தல குனிஞ்சு போய்தான் நான் நல்லவன்னு காட்டனும்னு
அவசியமில்லை. நானும் தல நிமிர்ந்து தான் நடப்பேன். உன்னையும்
அப்பாவையும் தலகுனிய வைக்க மாட்டேன்னு!” வீர சபதம் போட்டேன்.


இந்த மாதிரி நேரத்துல ஆபத்பாந்தவனா வந்து காப்பத்துவது
என் சின்ன மாமாதான். பேரு கணேஷ் குமார். “ரோட்ல
யாராவது பிரச்சனை செஞ்சா வந்து என்கிட்ட சொல்லு நான்
பாத்துக்கறேன்னு!” சொல்லவும் அம்மாவுக்கு நிம்மதி.

ஆனா எனக்கு டபுள் 7 1/2 :(( ஒரு தடவை யாரோ என்னை
கிண்டல் செய்ய நான் கண்டுக்காம வீட்டுக்கு வந்துட்டேன்.அடுத்த நாளே
மாமா வீட்டில் ஆஜர்.சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுட்டு நிறுத்திட்டு வந்த மாமா,
“மாணிக்கம் சார் வீட்டு பக்கம் உன்னை ஒருத்தன் கிண்டல்
செஞ்சானாமே!” ஏன் எனக்குத் தகவல் சொல்லலைன்னு கேக்க
தெரியாதே மாமான்னு சொன்னேன். மாணிக்கம் சார் பையன் சொல்லித்தான்
எனக்குத் தெரியும், உன் மேல ஒரு கண் வெச்சுக்கறதா சொல்லியிருக்கான்னு”
சொன்னாங்க.

கொஞ்ச நாள் கழிச்சு வாசவில டைப் அடிச்சிட்டு வர்றப்ப ஒரு பையன்
சைக்கிளை கிட்ட வர ஓட்டிகிட்டு வந்து ஏதோ சொல்ல பயந்து
ஓடினேன், ஓடினேன். அப்பா ஆபீஸ்(அதான் மெயின் ரோடுல கம்பீரமா
நிக்குதே!) அதுக்குள்ள நுழைஞ்சு கொஞ்ச நேரம் கழிச்சு 2 சந்து தள்ளியிருக்கும்
வீட்டுக்கு ஓடித்தான் நின்னேன். வாசலிலேயே மாமா உக்காந்திருக்கணுமா?
மேட்டரை மாமாகிட்ட சொல்ல உடனே சைக்கிளில் போய் தன் கூட்டாளிகளுக்குச்
சொல்லி பையனை விசாரிக்கச் சொல்லியிருக்காரு.

அடுத்த நாள்”என்ன ஆளை வெச்சு மிரட்டறீங்களான்னு” என்ன அந்த
பையன் மிரட்ட பயந்து போய் வாசவிலேயே நுழைஞ்சிடலாமான்னு
பாத்துகிட்டு இருந்த நேரம் மாணிக்கம் சார் பையன் இல்ல அந்த அண்ணா
தன் ஆளுங்களோட வந்து பையனை அள்ளிக்கிட்டு போனாங்க. 10 நிமிஷத்துல
வந்து மன்னிப்பு கேட்டதோட இல்லாம அந்த ஏரியா பசங்களுக்கே
நம்ம கிட்ட வாலாட்டனும்ங்கற நினைப்பு இல்லாம போயிருக்கணும்.


வீட்டுக்கு வந்து மாமாக்கும் அம்மாவுக்கு விட்டேன் பாட்டு. உங்க பேச்சை
கேட்டு பிரச்சனை ஆகிடுச்சு.இனிஎன்னை பாதுகாக்க ஆள் வேண்டாம். நானே பாத்துக்குவேன். உங்க கிட்ட வந்து சொல்லமாட்டேன்னு சொல்லி வாயடைச்சேன்.

எங்க ஊர்ல வீடுங்களில் வராண்டா வெச்சுத்தான் வீடுகள் இருக்கும். திண்ணை,
அதுக்கப்புறம் வராண்டா, ஹால், சமையல்கட்டுன்னு ஒரே மாதிரி இருக்கும்.
சில வீடுகளில் முற்றம் இருக்கும். தினமும் காலேல 3 மணிக்கு பால் கொண்டுவந்து
மோகனம்மா தூக்கத்தை கெடுக்கறாங்க(கொடுக்கச் சொன்னது அவ்வா) சின்ன
பொண்ணு வீட்டுல இருக்க என் தூக்கம் தான் கெடணுமான்னு அம்மா புலம்ப
ஹால்லேர்ந்து எந்திரிச்சி போக கஷ்டமா இருக்கு, நான் வரண்டாவிலேயே
கட்டில் போட்டு படுத்துக்கறேன்னு தைரியமா தனியா படுக்க ஆரம்பிச்சேன்.

என்னன்ன்வோ பயமுறுத்தி பாத்தாங்க. அசரலை என் இடம் இதான்னு
என் டேபிளையும் கொண்டுவந்து அங்கே பக்கத்துல போட்டுகிட்டு
எனக்குன்னு இடம் செட் செஞ்சுகிட்டேன்.

நான் இங்கிலீஷ் மீடியம். வீதியில சில பசங்க என் வகுப்புத்தான் ஆனாலும்
தமிழ் மீடியம். நைட் ஸ்டடிக்கு எங்க வீட்டு வராண்டாவில எல்லோரும்
கூடி படிப்போம். 1 மணி ரெண்டு மணி வரைக்கும் கூட படிச்சு பக்கத்து
வீதி பசங்களுக்கு வடக்கு 4ல பசங்க படிக்குதுங்க, இங்க பாரு எல்லாம்
தூங்குதுங்க உருப்படற வழியா இது!! அப்படின்னுதிட்டி வாங்கி கொடுத்திருக்கோம்.
:)) எங்களால ஆன சின்ன உபயம்.


கரெக்டா யுகாதி சமயத்துல வடக்கு 3 மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
நடக்கும். ரோட்டையே அடைச்சு கோலம் போடறது. மஞ்ச தண்ணி
ஊத்திடுவாங்களோன்னு பயந்து வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தது.
எல்லாமும் சுவாரசியம் தான்.

+1 படிக்கும்போது தான் வீட்டின் முதல் வாகன் உரிமையாளர் ஆனேன்.
அதான் அதைப்பத்தி 4 கொசுவத்தி சுத்தினேனே. சைக்கிளில் சல்லுன்னு
போய் வருவது ரொம்ப பிடிக்கும். இதனால என் பேரு
வடக்கு 4ஆம் வீதி ராக்கெட்டு!!!

உம்பொண்ணு ஒரு ஆள் தாய்யான், சல்லுன்னு சூப்பரா சைக்கிள்ல போகுது!
என்ன வேகம்? அப்படின்னு அப்பா ஆபீஸ்ல பாராட்டு.

நானும் என் ஃப்ரெண்ட் சுபத்ராவும் கடைவீதிக்கு போனது, போவோமா
ஊர்கோலம்னு பாடிகிட்டே திருவப்பூர் போய் மாரியம்மனை தரிசிச்சிட்டு
சின்ன மாரியம்மனா சாமி ஆடும் என் இன்னொரு ஃப்ரெண்ட் மங்கை
வீட்டுக்கு போயிட்டு அவங்கம்மா கையால காரக்குழம்பு சாப்பிட்டதுன்னு
ஜாலிதான்.

பள்ளத்தூர் சீதாலட்சுமி காலேஜ்ல தான் படிப்பு. தினமும் காலை 8 மணிக்கு
வீட்டிலிருந்து கிளம்பி 10 நிமிஷத்துல பஸ்ஸ்டாண்ட் போய் சைக்கிளை
ஸ்டாண்டில் விட்டுட்டு 8.20 பஸ் பிடிச்சு 9.30க்கு காலேஜ்ல இருப்பேன்.
சாயந்திரம் 4 மணிக்கு காலேஜ் முடிய 4.15 பஸ் பிடிச்சு 5.15 புதுக்கோட்டை,
5.25 வீட்டில். என்னை பார்த்து கடிகாரத்தை சரி பார்த்துக்கலாம்.
இதில் எந்த மாறுதலும் இருந்ததில்லை. எங்க போனாலும் வீட்டுல சொல்லிட்டு
போவேன் அதே மாதிரி இத்தனை மணிக்கு திரும்ப வருவேன்னு
சொன்னமாதிரி இருப்பேன் கூட. இது என் மேல அம்மாவுக்கு நம்பிக்கையை
கொடுத்துச்சு. ஆரம்பத்துல பயப்பட்டவங்க அப்புறம் ரொம்ப சப்போர்ட்டா
இருந்தாங்க.


என் உயிர்த்தோழியுடன் தான் பொழுதுகள் போகும்.

நாடக விழா நாடகங்கள், விவதபாரதி, இலங்கை வானொலி, இவை இல்லாத பதின்ம வயதா? அம்மா அடித்தால் அப்பா திட்டினால் நான் கரைந்தது
கானக்கந்தர்வன் குரலில்.அவர் குரல் என்னை தாலாட்டும்.

இளையராஜாவின் பாடல்கள், அப்புறம் ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்
கேட்காத நாளே இல்லை.



அப்போதெல்லாம் எனக்கு பாம்பு மாதிரி மிக நீண்ட கூந்தல். அக்கா உன் முடி ரொம்ப
ஸ்ட்ராங்க், அதை வெச்சு பட்டம் விடலாம் என்பான் தம்பி:)

என் முடி மேல் எனக்கு கர்வம் ஜாஸ்தி( என் கை ஒடிந்த பொழுது
அதையும் வெட்ட நேர்ந்தது) அம்மாவும் வேலைக்கு போக
ஒரே தம்பியை வளர்த்தது நான் தான். அவ்வா கிட்ட சண்டை போடுவான்.
என் கையால சோறு உன்பது அவனுக்கு பிடிக்கும். மும்பை போகும் வரை அவனுக்கு வாராவாரம் எண்ணெய் தேய்த்து நான் தான் குளிப்பாட்டுவேன்.

எனக்கும் தம்பிக்கு 8 வருட வித்யாசம் என்பதால் என் பதின்மவயதில்
அவனை தாயாய் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருந்தது.(இல்லாட்டி
டின் கட்டிடுவாங்க)

ஆசைப்பட்ட படிப்பை இழந்தது இந்த பதின்மவயதில்தான்.
19 வயசுல இந்திராகாந்தி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல டீச்சர் வேலை.
என் பதிவுகளில் பல இடங்களில் கொசுவத்தில் சுத்தியிருப்பேன்.
எல்லாம் பதின்ம வயதுகளில் நிகழ்ந்தது தான். 20ஆவது வயதில்
புதுகைக்கு டாடா சொல்லிவிட்டு மும்பை போனவள் 2 வருடங்களில்
அம்மம்மா பாத்த மாப்பிள்ளையுடன் திருமணம் முடித்து கிளம்பினேன்.


கலாக்கா மாதிரி இருக்கணும்னு வடக்கு 4 வீதி பிள்ளைகளுக்கு
சொல்லும் அளவுக்கு பேரு வீதியில.

தொடர் பதிவுக்கு அழைச்சது அமைதிச்சாரல்.

நான் அழைப்பது
ஆயில்யன் பாஸ்
அநன்யா மஹாதேவன்

ராமலக்‌ஷ்மி

ஆவதும் நட்பாலே மனுஷன் அழிவதும் நட்பாலே!!!

வழக்கமான பாட்டை மாத்தி பாடுவதாலே இது என்னவோ
ஹஸ்பண்டாலஜின்னு நினைக்காதீங்க. பதின்ம வயது பிள்ளை
வளர்ப்பு தொடரில் தான் இந்த பாட்டு.

உன் நண்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் அப்படின்னு
ஒரு பழமொழியே இருக்கு. நம் நண்பர்கள் தான் நம்மை
நல்வழிக்கு அழைத்துச் செல்வதும், தீய வழியில் சிக்க வைப்பதும்
நட்புதான். உடுக்கை இழந்தவன் கைபோலே இடுக்கணை
களையும் சில நிஜமான நட்புக்களும் உண்டு,
முக நக நட்பு கொண்டு ஏமாற்றும் கயவர்களும் உண்டு.


நட்புக்கு அர்த்தம் புரியாத, நட்பென்றால் என்னவென்று புரியாமல்
எல்லோரையும் நட்பாக கருதுவது பதின்ம வயதில் இயல்பு.
அதுவும் பெற்றோரின் வளர்ப்பு, குடும்ப பாரம்பரியம்
எல்லாவற்றையும் ஏறக்கட்டவைத்து கண்கட்டி வித்தை
நடத்தும் அளவுக்கு ஆழமாக மாயம் செய்ய வல்லது நட்பு.

எங்க அம்மம்மா படிச்சவங்க இல்லை. ஆனா எனக்கு எங்க
அம்மம்மாவை ரொம்ப பிடிக்கும். மனுஷனை எடை போடுவதில்
கில்லாடி. ஆனா அதுக்காக முகத்துல அறைஞ்சா மாதிரி சொல்ல
மாட்டாங்க. எங்க சின்ன மாமா +2 படிக்கும்போது மாமாவைப்
பாக்க அவங்க ஃப்ரெண்ட் இரண்டு பேரு வீட்டுக்கு வந்திருந்தாங்க.

மாமா உள்ளே வேலையா இருக்க, அம்மம்மாதான் வந்தவங்க
கிட்ட பேசினது. அப்புறம் மாமா வந்து ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசி
அவங்க கேட்ட நோட்டை கொடுத்து அனுப்பிட்டு உள்ளே வந்தாரு.

அம்மம்மா மாமாவைக் கூப்பிட்டு,” இவங்கதான் உன் ஃப்ரெண்ட்ஸா!”
அப்படின்னு கேக்க, ஆமாம்மான்னு சொன்னாங்க. ”ஜாக்கிரதையா இரு!”
அப்படின்னு சொல்ல “தப்பாவே பாக்காதீங்கம்மா”ன்னு மாமா
திரும்ப சொல்ல,” இந்த பசங்க சிகரெட் பிடிப்பாங்க. அவங்க கூட
நீ நின்னு பழகினா உனக்கும் அந்த பழக்கம் வரும். உன்னையும்
வற்புருத்துவாங்க.உன் நண்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் அப்படின்னு
ஒரு பழமொழியே இருக்கு. சொல்லிட்டேன்னு” அத்தோட பேசாம
விட்டுட்டாங்க.

4 நாள் கழிச்சு மாமா அம்மம்மாகிட்ட வந்து அம்மா நீ சொன்னது
சரிதான். ”அவங்க சிகரெட் பிடிக்கறாங்க. என்னையும் பிடிக்கச் சொன்னாங்க.
மாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன்” அப்படின்னு சொல்லிட்டு அவங்க கிட்ட
இனி ஜாக்கிரதையா இருப்பேன்னு சொன்னார்.

எனக்கு செம ஆச்சரியம். அம்மம்மா அந்த பசங்க கிட்ட கூட போகலை.
ஆனா சிகரெட் பிடிப்பாங்கன்னு கரெக்டா கண்டு பிடிச்சிட்டாங்க.(கூடவே
நிக்கும் மாமாவால கண்டு பிடிக்க முடியலை) எப்படிம்மா இதுன்னு? கேட்டேன்.

உனக்கும் முக்கியம் கத்துக்க. சிகரெட் பிடிக்கறவங்க உதடு கறுப்பா இருக்கும்.
குடி பழக்கம் உள்ளவங்க கண்ணு எப்போதும் கொஞ்சம் போதையோடு இருக்கும்னு
சொன்னாங்க. ஒரு தடவை நாவல் படிக்கும்போது “நிக்கோடின் கறை படிந்த
அவனது உதடுகள் சிரித்தனன்னு” படிச்சப்போ படிக்காத மேதை என் அம்மம்மா
ஞாபகம்தான் வந்துச்சு.

பார்த்திபன் கனவு படத்துல அந்த 4 பசங்களுமே சிகரெட் பிடிக்கறமாதிரியும்,
பெத்தவங்களை திட்டற மாதிரியும் காட்டியிருப்பாங்க. தான் கெடுவது
மட்டுமல்லாம கம்பெனிக்காக கூட இருக்கும் நண்பனையும் சிகரெட், மதுன்னு
பழகிக் கொ(கெ)டுப்பது நட்பு வட்டம் தான்.


உன் நண்பன் சரியில்லைன்னு சொன்னா பிள்ளைகளுக்கு கோவம் பொத்துகிட்டு
வரும். இதில் ஆண்/பெண் பிள்ளை பாகுபாடே இல்லை. ஒவ்வொருவர்
வளர்க்கப்படும் சூழல், வீட்டில் பெற்றோரின் அத்யாவசியமான கண்காணிப்பு
இல்லாது போதல், தேவையான அரவணைப்பு இல்லாமல் போதல் எல்லாம்
காரணம். இதெல்லாம் இருந்தாலும் நம்ம பிள்ளையை மாத்திடக் கூடிய
சக்தி அவங்களுக்கு உண்டு. இதை மறக்க வேண்டாம்.

இப்ப குடி, சிகரெட் பழக்கம் உள்ள யாரேனும் தானாக ஆரம்பிச்சது
கிடையாது. நல்லா விசாரிச்சு பாருங்க ஃப்ரெண்ட்ஸுங்க கூட ஆரம்பிச்சதுன்னு
வாக்குமூலமே கிடைக்கும். சில பேரு மட்டும் தான் இந்த விஷயத்துல
அப்பாவை ரோல் மாடலா(இதுக்கு மட்டும்) எடுத்துகிட்டிருப்பாங்க.

“எங்க வீட்ல இதெல்லாம் பழக்கம் இல்லை” “இது உடம்புக்கு கெடுதல்”
அப்படி இப்படி ஆரம்பத்துல மறுக்கும் பிள்ளையை கூட,” இப்படித்தான்
பெருசுங்க சொல்லும். அதெல்லாம் நாம காதுல வாங்கி போட்டுக்கூடாது.
ஸ்டைலா புகை விட்டா ஃபிகருங்க மடங்கும், அப்பாவே அப்புறம் பேச
பயப்படுவார். இன்னும் சின்ன புள்ளையா நீயி, அப்பா,அம்மாக்கு பயந்து
கிட்டு, உனக்கு வயசாகுதில்லை!” இதெல்லாம் கூடா நட்பு சொல்லிக்
கொடுத்து மாத்தும் முறை.

தனக்கென ஒரு அடையாளத்தை தேடும் வயது, நான் யார் எனும் கேள்விக்கு
பதில் தேடிக்கொண்டிருக்கும் மனது, பெற்றவர்களிடமிருந்து தனித்து தன்னைக்
காட்டி தான் தனிமனிதன் என சொல்ல நினைக்கும் வயதுதான் பதின்ம
வயது. தனது நட்புக்களுடன் அதிக நேரம் இருப்பதில் ஆச்சரியமில்லை.

உண்மையில் குழந்தையும் இல்லாத பெரிய மனிதனும் அல்லாத
இடைப்பட்ட வயது,நிலை அவர்களது என்று சொன்னால் கோபம் தான்
வரும். நாம் வில்லனாகிப்போவோம்.(25 வயசுல வீட்டுல இருக்கற ஒரே
தொல்லை அப்பன் தான்னு பின்னாளில் சினிமா வசனம் பேசுவார்கள்)

ஆண் பிள்ளைக்கு ஒரு விதம் என்றால் பெண் பிள்ளைக்கு இன்னொரு ரகம்.
“உன்னையே பாக்கற மாதிரி தான் இருக்கு” “ஸ்லைட்டா சிரிச்சா மாதிரி
தெரியுது” “ஐ திங்க் ஹீ லைக்ஸ் யூ! யூ ஆர் லக்கி” நானா இருந்தா
உடனே எஸ் சொல்லிடுவேன், இப்படி ஏத்திவிடும் தோழிகள் நம்மை
கவிழ்க்கப்பாக்கிறார்கள் என்று புரியாமல் பலிக்கடா ஆகும் பெண்கள்
எத்தனை பேர்.

” உன் அழகுக்கு நீ பெரிய்ய நடிகை ஆகலாம்!” என உசுப்பேத்தும்
தோழிகளின் வார்த்தையில் மயங்கி படிப்பைக் கோட்டைவிட்டு
வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனையோ பேர் வெளிச்சத்திற்கு
வராத சங்கதிகள்.

“உன் ட்ரெஸ்ஸிங் சென்சை கொஞ்சம் மாத்திக்க” மாடர்னா இரு!
தலையெல்லாம் பின்னாம லூசில் விட்டுக்கன்னு” சொல்லிக் கொடுக்கும்
களவாணிகள் எத்தனையோ பேர்.

குரூப் ஸ்டடி என்று வீட்டில் சொல்லிவிட்டு பார்க், பீச், சினிமா
என்று நட்புக்கள் கொட்டம் அடிப்பது(காதலர்க்ளை சொல்லவில்லை)
என எத்தனையோ.

நட்புக்கள் குடும்பத்தையே மறந்துவிடச் செய்துவிடுகிறார்கள்.
தனது நண்பன் சொல்வதே வேதம், அவர்களின் வாழும் முறையை
தானும் வாழாவிட்டால் ஏதோ தவறு செய்வது போல் அர்த்தம்
எனும் ரீதியில் அவர்கள் மனதை மாற்றுவதை நண்பர்களின்
தாக்கம் (peer pressure)என்று சொல்வார்கள்.

அவர்களின் உலகம் தனி, அதற்கான நீதிக்களும் தனி.

இதைப் பத்தி இத்தோடு பேசிவிட்டு போய்விட முடியாது.
இந்த நண்பர்களின் தாக்கம் இன்னும் என்னென்ன செய்யும்?
அதையிலிருந்து வெளிப்பட குழந்தைகளுக்கு எப்படிச் சொல்வது?
அப்படின்னு குழம்பறீங்களா? அட கவலையை விடுங்க.

எந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. ஆகவே கவலைப்பட தேவையில்லை.
தீர்வே இல்லாத பிரச்சனையா இருந்தா அதைப்பட்டு கவலைப்பட்டு
எந்த பிரயோசனமும் இல்லை.

இந்த பிரச்சனைக்கு தீர்வுகள் அறிஞர்கள், உளவியாளர்கள்
கொடுத்திருக்காங்க. அவற்றோடு திங்கள் கிழமை சந்திக்கிறேன்.

Wednesday, February 10, 2010

பருப்பிலே இருக்கு பலவித சத்துக்கள்

வாங்க வாங்க, ஆளுக்கு கொஞ்சம் எடுத்துகிட்டு அப்படி சோபாவுல
உக்காருங்க. சாப்பிட்டுகிட்டே பேசிக்குவோம்.




எடுத்துக்கோங்க.
என்னது? ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிட்டா உடம்புக்கு ஆகாதா!

ஆமாங்க நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா நிஜம் அது இல்லையே.

நானா எதுவும் சொல்லலீங்க. எனக்கு Nutrition பரிந்துரை செஞ்ச
டயட் சார்ட்ல தினமும் 2 வால்நட் சாப்பிடணும்னு இருந்துச்சு.
”அந்த பேரையே இப்பத்தான் கேள்விப் படறேன். இதெல்லாம்
காஸ்ட்லி அயிட்டம். நான் மாட்டேன்பான்னு ”!!சொல்லிட்டு கூலா
இருந்தேன். விதி விட்டுச்சா? 6 மாசத்துக்கு முன்னாடி கைவலில
அவதி பட்டதுதான் உங்களுக்குத் தெரியுமே!!

ஸ்பாண்டிலைடிசிஸ்னாங்க, ஃபைரோமயாலஜியான்னாங்க. கடைசியில
விட்டமின் டி குறைவு. அதனால்தான் வலின்னு சொல்லிட்டாங்க.

அதைப் பத்தி அதிகம் தெரிஞ்சிக்கலாம்னு கூகுள் ஆண்டவர்கிட்ட
கேட்டேன். அருவியா கொட்டுது விஷயம். அதுல Walnut
உடலில் எடையை கூட விடாம செஞ்சு, கொலஸ்ட்ராலை குறைக்கும்னு
சொன்னார் ஆண்டவர். அதுமட்டுமா புரதம், கால்சியம்,மக்னீசீயம், ஜிங்க்,
கார்போஹைட்ரேட், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு எல்லாம்
இருக்குன்னு தெரிஞ்சிச்சு. அட கொடுமையே இதை தானே மாத்திரையா
கொடுத்திருக்காங்க. இதை முன்னாடியே சாப்பிட ஆரம்பிச்சிருந்தா
பிரச்சனை கொஞ்சமா இருந்திருக்குமேன்னு தோணிச்சுங்க.




கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம்தான்னாலும் நல்லதுன்னு
உடனே தினமும் 2 வால்நட் சாப்பிட ஆரம்பிச்சேன்.




மத்த பருப்புங்கள்லயும் ஏதேனும் சத்து இருக்கணுமேன்னு மனசு
தோணிச்சின்னாலும அதை தெரிஞ்சிக்கவும் புத்தி வேலை செய்யணுமே.
பசங்களுக்கு தினமும் 2 பாதம் பருப்பு கொடு. அது மூளையை நல்லா
வேலை செய்ய வைக்கும்னு அத்தை சொல்வாங்க. பசங்களுக்கு மட்டும்
வாரத்துக்கு 4 தடவை கொடுத்துகிட்டு இருந்தேன். நாமும் 2 சாப்பிடுவோம்னு
சாப்பிட ஆரம்பிச்சேன்.

அந்த நேரம் பார்த்து prevention அப்படின்னு ஒரு புத்தகத்தை கடையில்
பாத்து வாங்கிகிட்டு வந்தேன். அதில் உடல் எடையை குறைக்கும் டயட்டில்கூட
தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் சாப்பிட்டு வரச்சொல்லி ஒருத்தருக்கு
அறிவுரை சொல்லி அவரும் சாப்பிட்டு நல்லா தெம்பா இருப்பதா சொல்லியிருந்தாங்க.
பாதாம் சாப்பிடுவது நல்லதுன்னு அப்பத்தான் தெரிஞ்சிச்சு.

protein, vitamin E, monsaturated fats, as well as magnesium, potassium, and calcium இந்த சத்துக்களெல்லாம் பாதாமில் இருக்காம். இதைத் தவிர
sodium, and vitamins like vitamin B1, B2, and B3 or niacinவும் இருக்காம்.



அப்பா தினமும் கடலமிட்டாய் வாங்கி கொடுப்பார்.
ஏதாவது சாதிச்சாலும் கடலைமிட்டாய் தான் ட்ரீட். வெல்லமும் சேர்த்து
செய்வதால் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லி சொல்லியே
சாப்பிட வெச்சிடுவார். அந்த பழக்கத்துல இப்ப தினமும் மதியச் சாப்பாட்டுக்கு
பிறகு 2 கடலை மிட்டாய் சாப்பிடறதை பழக்கமா வெச்சிருக்கேன்.

இந்த கடலை(peanuts)இது சல்லீசா கிடைக்குதுங்கறதாலேயே
நாம இதை மதிக்க மாட்டோம்.

இதுல கலோரி அதிகம் தான்னாலும்,vitamin E, B3, and B6 இருக்கு.
இதைத்தவிர பொட்டாசியம்,ஜிங்கும் இருக்கு.





சக்கரை பொங்கலிலோ, வெண்பொங்கலிலோ கண்ணுல படும் நெய்யில
வறுத்த முந்திரி பருப்பு என்ன டேஸ்ட்!! முந்திரி பருப்பை உடைச்சுக்
கொடுக்கும் சாக்கில் வாயில போட்டுகிட்டது, சக்கரை பொங்கல் முந்திரிக்கு
அடிச்சுகிட்டதுன்னு முந்திரி பருப்புக்கும் நிறைய்ய கொசுவத்தி.

அப்பா பேங்க்ல மீட்டிங்கின் போது ராதா கபே ஹோட்டலிலிருந்து
நெய்யில் வறுத்து, உப்பு போட்ட முந்திரி பருப்பு கொடுப்பாங்க.
அப்பா அதை சாப்பிடாம கொண்டு வந்து எனக்கும் தம்பிக்கும் தருவாங்க.

இந்த முந்திரி எங்க ஊருல ஃபேமஸான அயிட்டம். ஆதன்க்கோட்டை
முந்திரி அம்புட்டு ஃபேமஸ். முந்திரில என்ன சத்து இருக்குத் தெரியுமா?
செலீனியம்,மக்னீசியம்,பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து.



இந்த பாஸ்பரஸ் நம் உடம்புக்கு கிடைக்கும் கால்சிய சத்துக்கள்
முறையா எலும்புகள், பல் உற்பத்திக்கு போய் சேருதான்னு பாத்துக்குமாம்.


பெரிய பிஸ்தாவான்னு நீன்னு கேப்பாங்க. பெரிய ஆளான்னு கேக்கற
மாதிரின்னு வெச்சுக்கோங்க. நிஜமாவே இந்த பிஸ்தா பருப்பும் பெரிய
பருப்புதான்.

proteins, monosaturated fats, calcium and phosphorus இதுல இருக்கு.
விட்டமின் A&C யும் இருக்கு.


மொத்தத்துல இந்த NUTகளை சாப்பிட்டா நம்ம உடம்புகளின் NUT கழண்டு
போகாம இருக்கும்னு சொல்றாங்க. இந்த வகை பருப்புக்கள் விலை ஜாஸ்தின்னாலும்
உடம்புக்கு நல்லதுன்னா எவ்வளவு காஸ்ட்லி மருந்தானாலும் வாங்கி சாப்பிடற
மாதிரி சாப்பிடறது நல்லது.

அதிகமாகிவிடமா கொஞ்சமா, அதிகம் உப்பு சேர்க்காம மாலை நேரத்துக்கு
கொறிக்கறா மாதிரி குடும்பம் மொத்தமும் சாப்பிட்டா எம்புட்டு நல்லது.

அதுலயும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரொம்ப முக்கியம். பெண்களுக்குன்னு
சொன்னதால இது ஏதோ தங்கமணி ஆதரவுன்னு நினைக்காதீங்க.

பெண்களுக்கு குழந்தை பிறப்பு, மெனோபாஸ், மாதாந்திர தொந்திரவுகள்னு
சத்துக்கள் நிறைய்ய இழந்திடறாங்க. அதனாலதான் சொன்னேன்.

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணிகனுக்கு கொடுன்னு பெரியவங்க
அப்பவே சொல்லியிருக்காங்க. நாமும் பெரியவங்க சொல்படி கேட்போம்.

அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க! ஒரு முக்கியமான விஷயம். நம்ம நானானிம்மா


பாதாம், முந்திரி சேத்து அடை செய்வது எப்படின்னு சொல்லியிருக்காங்க.

உங்க எல்லோருக்கும் என்னோட அன்பளிப்பா 1 கிலோ ட்ரை ஃப்ரூட்ஸ்.

ALL ENJOY!! BE HAPPY AND HEALTHY

Tuesday, February 09, 2010

எப்படிச் சொல்வேனடி???

இலங்கைக்கு மாற்றலாகிப்போன புதிது. ஒரு 4 மாதத்திற்கு பிறகு
என நினைக்கிறேன். மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரும்
அயித்தான் சாப்பிட்டு உடன் கிளம்பிவிடுவார். அன்று கிளம்பவில்லை.
கொஞ்சம் லேட்டாக போவார் போல என நினைத்து பேசாமல்
இருந்துவிட்டேன். பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு நான்
துணிமடிக்க ஆரம்பித்த நேரத்தில் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

”உன் ஃப்ரெண்டுகிட்டேயிருந்து லெட்டர் ஏதும் வந்துச்சும்மா!”

”இல்லப்பா, நான் இங்க வந்ததைப்பத்தியும் நம்ம அட்ரஸை கொடுத்தும்
லெட்டர் போட்டேன். அதுக்கப்புறம் அவகிட்டேயிருந்து பதிலே இல்லை.
எப்பவும் லெட்டர் வரும். ஆனா வரலியேன்னு யோசிச்சுகிட்டேயிருக்கேன்.”


போன் ஏதும் செஞ்சியா?

இல்லையே! ஏன் என்னாச்சு?!!

”இல்ல கேட்டேன்” என்றவர் ஏதோ சொல்லத் தயங்குகிறார் என்பது
புரிய ஆரம்பித்தது. என்னாச்சுன்னு சொல்லுங்க.

தாங்குவியான்னுத் தெரியலை. கார்த்தி( என் தம்பி) காலேல
போன் செஞ்சு விஷயம் சொன்னான். “அக்காக்கு எப்படி சொல்வதுன்னு
புரியலை, நீங்களே மெல்ல விஷயத்தை சொல்லிடுங்க பாவா”ன்னு
சொன்னான்.

என்னன்னு சொல்லுங்க,

என் கைகளை மெல்ல பிடிச்சுகிட்டு “உன் ஃப்ரெண்டோட கணவர்
இறந்துவிட்டார்” என்ற விஷய்ம் கேட்ட நொடியில் பரிதவித்து போனேன்.
என்னைவிட 2 வயது சின்னவள். இருவரும் கல்லூரி தோழிக்கள்.
சிறிய வயதில் இரண்டு குழந்தைகளுடன் என்ன செய்யப்போகிறாள்!!
என நினைத்த நொடியிலிருந்து கண்ணில் நீர். கட்டுக்கடங்காமல்
போய்க்கொண்டிருக்கிறது.

என் நெருங்கிய ஒரே தோழி அவள்தான் என்பது என் வீட்டினர்
அனைவருக்கும் தெரியும். இந்த விஷயம் கேள்விப்பட்டால்
நான் நொறுங்கிப்போய்விடுவேன் என்று ஆறுதல் சொல்ல
மதியம் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து பொறுமையாக
என்னிடம் சொல்லியிருக்கிறார்.

பிறந்ததிலிருந்து அழாத அழுகை அன்று நான் அழுதது.
என் தோழியின் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று
புலம்பி தீர்த்தேன். இறைவனுடன் சண்டை போட்டேன்.

மஞ்சள் காமாலை நோயிலிருந்து தன் கணவனை மீட்க
சென்னை வரை வந்து வைத்தியம் பார்த்தாளே, கைவிட்டு
விட்டாயே இறைவா என்று கதறினேன்.

அவங்க அம்மா வீட்டுலதான் இருக்காங்க. பேசு என்றார்
கணவர். என் அப்பாவுக்கு போன் போட்டு அவங்க நம்பர்
வாங்கிக்கொண்டு தோழியின் அம்மாவீட்டுக்கு போன் செய்தேன்.
லைனுக்கு வந்தவளிடம்,”என்னம்மா ஆச்சு!” என்றேன்
கண்ணீருடன்.

”நீ இருந்திருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும். எப்போதும்
தொடர்பில் இருப்பாய். எப்போது என்னைத் தாங்க உன்
தோள் தேவையோ அப்போது என்னைவிட்டு எங்கே போனாய்??”
என்றவளிடம் நான் என்ன சொல்வேன்??

நான் எனது விலாசம் எழுதிய கடிதம் அவளுக்கு சேர்ந்த பொழுது
அவளோ கணவனைக் காக்க மருத்துவமனையில் இருந்திருக்கிறாள்.
அதற்கப்புறம் எல்லாம் முடிந்து விட்டது.


அந்த சோகத்திலிருந்து என்னை நான் மீட்க பல நாள் ஆனது.
இப்போதும அவளுடன் தொடர்பில் இருக்கிறேன். வாழ்க்கை எனும்
கடலில் நீந்தி மேலே தாமரையாக வந்திருக்கிறாள் இப்போது.
“எங்களுக்கு மட்டும் ஏன் அப்பா இல்லை?” என்று கேட்கும்
அவளது மகன்களுக்கு புரிய வைத்து பதில் சொல்லக் கற்றுக்
கொண்டுவிட்டாள் தோழி.

ஆனால் உன் திருமணநாளை மறக்க எனக்குத் தெரியவில்லையடி
பெண்ணே! ஊருக்கெல்லாம் மறக்காமல் வாழ்த்து சொல்லும் எனக்கு
என் ஆருயிர் தோழிக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லையே!! என்ற
வருத்தம் எப்போதும் உண்டு.

இதோ இன்று உன் திருமணநாள். வாழ்த்த முடியாமல் என் வாய்
மூடிக் கதறிக்கொண்டிருக்கிறேனே!

இந்த நிலையை ஏன் கொடுத்தான் ஆண்டவன்?

அருமை நண்பர் ஆதிக்கு..(முன்னாள் தாமிரா, இன்னாள் ஆதி)

சில நண்பர்களுக்காக ஒரு விளக்கம் :

ஏற்கனவே பல தடவைகள் விளக்கம் சொன்ன விஷயம்தான் இது.. ரமா என்ற பெயர் மற்றும் இந்தப் பதிவுகளில் எழுதும் விஷயங்கள் பெரும்பான்மையும் உண்மை அல்ல. நானும் என் மனைவியும் சென்ற ஒரு திருமணத்தில் 'தயிர்சாதம் நல்லாயிருந்ததுல்ல' என்ற ஒற்றை வரியிலிருந்து டெவலப் செய்ததுதான் இந்தப்பதிவின் முதல்பகுதி. இப்பதிவுகள் வெறும் நகைப்புக்காக மட்டுமே.. எனது பிற பதிவுகளை வாசித்தீர்களானால் தெரியும் என் காதல் எவ்வாறானது என்று. மேலும் இந்த மாடல் எழுத்துகள் புதுமையானதும் அல்ல.. பழம்பெரும் எழுத்தாளர்கள் தேவன், எஸ்விவி, பாக்கியம் ராமசாமி என பலரும் விட்டுவிளையாடிய களம்தான் இது. அதைப்பார்த்து கடற்கரையில் மணல்வீடு கட்டி மகிழும் சிறுவர் மனநிலையே என் போன்றவர்களின் முயற்சியும்.. நன்றி.


இது நண்பர் ஆதியின் பின்னூட்டம் இந்தப் பதிவில்.
உங்க பதிவிலயும் இந்த பின்னூட்டம் உலகநாதன் எனும் நண்பருக்காக
கொடுத்திருக்கீங்க.

என் எதிர் பதிவு (நல்லாத்தானே சூடு பிடிச்சு 7/7 வாங்கியிருக்கு)
உங்களை திட்ட இல்ல ஃப்ரெண்ட்.

பொதுவாவே ரங்கமணிகள் அப்படித்தான் நடந்துக்குவாங்க.
உங்க பதிவுல உங்க தங்கமணி,அம்மா,தங்கை,மைத்துனி
பத்திய பாயிண்டை விட இரண்டாவதா போட்டிருக்கற நண்பர்
பத்திய மேட்டர் தான் என்னை எதிர் பதிவே போட வெச்சுச்சு.


அந்த மாதிரி எத்தனையோ ஆண்கள் இருக்காங்க. அவங்களுக்கும்
பாடம் சொல்லணும், பொண்டாட்டியை குத்தம் சொல்லும் மனப்பான்மையை
மாத்தணும் என்பதுதான். என் வலைப்பூக்களில் நான் பெரும்பாலும்
கணவன், மனைவி உறவு பற்றி அதிகம் எழுதியிருப்பேன். ஹஸ்பண்டாலஜி
உட்பட. இதை நான் எழுதக் காரணம் ஒரு ஆசிரியையாக பெற்றோரிடமிருந்து
எதிர்பார்ப்பது பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவரின் பங்களிப்பையும்.

(husbandology சொல்லியிருந்த எந்த ட்ரீட்மெண்டும் என்னவருக்கு
தேவையே பட்டதில்லை. ஆனாலும் எது என்னை எழுத தூண்டியது.
மத்தவங்க படற கஷ்டம். அதுமாதிரி நீங்க அடுத்தவங்க குரலை
பிரதிபலிக்கறீங்க)

கணவன் - மனைவி உறவில் விரிசல் பூசல் விழுந்தால் பாதிக்கப்படுவது
குழந்தை.

ரமா ஊருக்கு போனா எம்புட்டு ஃபிலீங்க்ஸா பதிவு போடுவீங்கன்ன்னு
தெரியும் பாஸ். நீங்க சொல்லியிருப்பது மாதிரி ,” பழம்பெரும் எழுத்தாளர்கள் தேவன், எஸ்விவி, பாக்கியம் ராமசாமி என பலரும் விட்டுவிளையாடிய களம்தான் இது. அதைப்பார்த்து கடற்கரையில் மணல்வீடு கட்டி மகிழும் சிறுவர் மனநிலையே என் போன்றவர்களின் முயற்சியும்.”.தான்
உங்கப்பதிவுகள் வருதுன்னு தெரியும்.

அப்பல்லாம் இந்த டாபிக்கில் எதிர் கதைகள் எழுத எந்த பெண்ணும்
துணிஞ்சதில்லை. ஆனா இப்ப விடமாட்டோம்ல. :)))
இனி யாரும் தங்கமணிகளை மட்டம் தட்டி பதிவு போட்டா நாங்களும்
பதிவு போடுவோம்.

இதையும் காமெடியா எடுத்துக்குங்க நண்பர்களே. சுந்தர ராமசாமி, தேவன்,
எஸ்விவி வரிசையில் நாங்களும் பெயர் எடுக்க போறோம்.

அதனால நட்புக்களுக்கு சொல்லிப்பது இன்னான்னா?
இதை தனிமனித தாக்குதலா நாங்களும் எடுத்துக்கலை,
நீங்களும் எடுத்துக்க வேண்டாம்.


AS U PEOPLE SAY JUST FOR FUN.

படிச்சிட்டு லூசுல விடுங்க பாஸ்.

Monday, February 08, 2010

உங்க வலைப்பூவின் மதிப்பு எம்புட்டு???

ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமா விட்ஜட் வெச்சிருப்பாங்க.
சிலது சுவாரசியமா இருக்கும். அப்படி சமீபத்துல ஒரு நண்பரின்
வலைப்பூவில் அவரின் வலைப்பூவின் மதிப்பு எவ்வளவுன்னு
போட்டிருந்துச்சு. ஆஹா இப்படியும் கூட பாக்கலாமான்னு
என் வலைப்பூ முகவரி கொடுத்தேன்.

ஆஆஆஆ நான் அப்படியே ஷாக்காகிட்டேன்!!!!


என் வலைப்பூவின் மதிப்பு ரூ.95,970.93யாம்!!!


Pudugaithendral.blogspot.com Valuation Rs 95,970.93
Website Value Rs 95,970.93
Daily Pageviews 150
Daily Visitors 150
India Rank 118,342
Number of Pages 450


thumbnail
புதுகைத் தென்றல்
Online Since: July 31st, 2000
Popular in Countries: India
Value Metric


இங்க போய் நீங்களும் உங்க வலைப்பூவின் மதிப்பு
எம்புட்டுன்னு தெரிஞ்சிக்குங்க.


ஒரு அல்ப சந்தோஷம் தான்.

:))))

எங்கம்மா தான் BEST!!!!

அது என்ன கொடுமையோ தெரியலை!!
தங்கமணி என்ன செஞ்சாலும் குத்தம் தான். எப்பப்பாரு தன் வீட்டு
ஆளுங்களோட ஒப்பீடு செஞ்சு செஞ்சு வதைய வாங்குவாங்க.
நானா சொல்லலை. ஆதாரம் இருக்கு.
நம்ம ஃப்ரண்ட் ஆதிபதிவு பாருங்க.


என் மனைவிக்கு நல்லா சமைக்கத் தெரியாது. அவ
ரசம் வெச்சிருக்காளா, குழம்பு வெச்சிருக்காளான்னு விளங்கல!!
எங்கம்மாவும் வெப்பாங்க பாருங்க குழம்பு!!! சும்மா தேவாமிர்தம்.

இதெல்லாம் நிறைய்ய வீட்டுல கேள்வி பட்ட டயலாக்குகள் தான்.


அம்மாவின் கைப்பக்குவம் சாப்பிட்டு சாப்பிட்டு
ருசி கண்ட நாக்குக்கு மத்த சமையல் நிஜமாவே நல்லா இருந்தாலும்
ஏத்துக்காது. ”என்ன இருந்தாலும் எங்கம்மா செய்வது மாதிரி
வராது!!” அப்படின்னு சொல்லிட்டு சாப்பிட்டாத்தான் ரங்க்ஸ்களுக்கு
தின்னது செரிமானம் ஆகும்.


ஒவ்வொரு வீட்டுலயும் சமையல் பக்குவம் மாறும். ருசியும் மாறும்.
அந்தந்த இடத்தின் தண்ணி,சமைக்கும் பதார்த்தங்களின் தரம்,
எல்லாமும் நல்ல சமையலுக்கு காரணம்னு ரங்கமணிகளுக்கு புரியுமா?
இல்ல புரிய வைக்கத்தான் முடியுமா??

இம்புட்டு வருஷம் வளர்த்த பெத்தவங்களை நமக்காக விட்டுட்டு
வந்திருக்காளேன்னு சந்தோஷ பட்டுக்காம சமைக்கது சரியில்லை,
ருசியில்லைன்னு புலம்பத்தான் தெரியும்.

சமீபத்துல கோக் விளம்பரம் ஒண்ணு எல்லோரும் பாத்திருப்பீங்க.
”எங்கம்மா செய்யும் சமையல் தான் ருசின்னு!!” பையன் சொல்ல
அம்மா, தலையைக் கோதுவாங்க. ஆனா அந்த பையனோட அப்பா
”அதெல்லாம் இல்ல! எங்க அம்மா சமையல் தான் பெஸ்டுன்னு!!” சொல்வார்.
கடைசியில பாத்தீங்கன்னா மாமியாரும் மருமகளும் கைகோத்து
கிட்டுத்தான் நிப்பாங்க.

இந்த மாதிரி எல்லா வீட்டுலயும் இருக்க மாட்டாங்க. அவங்க
விளம்பரமாச்சேன்னு நடிச்சிருக்காங்க.(மாமியார் மருமக சண்டைக்கு முக்கிய
காரணம் ரங்கமணிகளின் இந்த மாதிரி ஒப்பீடுகள்தான்)

மொத்தத்துல ஒவ்வொரு மகனுக்கும் அவங்க அம்மா சமையல் தான்
பிடிக்கும். இன்னைக்கு நீங்க சொல்வது மாதிரி நாளைக்கு உங்க மகன்/மகள்
சொல்வாங்க. நீங்க அப்படி சொல்வதால தங்கமணிகள் நல்லா
சமைப்பதில்லைன்னு அர்த்தம் ஆகிடாது. :)))

ச்சும்மா தங்கமணிகளை குத்தம் சொல்வதை நிப்பாட்டிட்டு
சந்தோஷமா இருக்கற வழியைப் பாருங்க ரங்கமணிகளா!!



டிஸ்கி: இன்னைக்கு இந்த முக்கியமான பதிவு வந்தே
ஆகவேண்டிய கட்டாயத்தால் இன்னைக்கு வரவேண்டிய
Personality Development பதிவு வியாழக்கிழமை கண்டிப்பா
வரும்.

தமிழ்மணத்துல ஓட்டு போட மறந்திடாதீங்க!!

Sunday, February 07, 2010

SAVE OUR TIGERS

சமீபகாலமாக எங்கெங்கும் இந்தக் குரல் ஒலிக்கிறது.
கேட்கும்பொழுது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
வேட்டையாடுவதில் சிறந்த புலி இனத்துக்கே இப்படி ஒரு
நிலையா??




சென்ற நூற்றாண்டின் இறுதியில் 40,000 புலிகள் இருந்த நம்
தாய்த்திருநாட்டில் இப்போது இந்த எண்ணிக்கை எவ்வளவுத்
தெரியுமா?? வெறும் 1411 தான் :((

புலி கம்பீரத்திற்கும் சக்திக்கும் சிறந்த அடையாளம்.

நம் தேசிய விலங்கிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவல நிலையை
போக்க நாம் ஏதானும் செய்ய வேண்டும்.






என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. டீவியில் ஏர்செல்லின்
இந்த விளம்பரத்தை பார்த்த நொடியிலிருந்து அம்ருதாவின் நச்சரிப்பு
தாங்கமுடியவில்லை. அம்மா ப்ளாக்கில் இதைப் பற்றி எழுது என்று
சொல்லிக்கொண்டே இருந்தாள்.

என்னுடைய குரலாக புலிகளைக் காக்க என் வலைப்பூவில் இதைப்
பற்றி எழுதியிருக்கிறேன். நீங்களும் எழுதி ஒரு எழுர்ச்சியை உண்டாக்குங்கள்.


NDTV CHANNEL இந்த தளத்தை பாருங்கள். உங்கள் வாக்கையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நம்மால் ஆனதைச் செய்வோம். நம் தேசிய விலங்கைக் காப்பாற்றுவோம்.

Friday, February 05, 2010

டீச்சருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

நம்ம வகுப்பு மாணவர்கள் எல்லோரும் ஆஜரா??

நம்ம டீச்சர் அதாங்க துளசி டீச்சருக்கு இன்னைக்கு
பிறந்த நாள்.

பலூன் கட்டியாச்சு:



கேக் இல்லாம என் பர்த்டே கொண்டாட்டம். கேக் நல்லா இருக்குல்ல!



பார்டின்னா பாட்டு இல்லாமலா? எஸ்.பீ.பீ, கமலஹாசன்
காம்பினேஷன்ல பாட்டுக்கள்.











மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் துளசி டீச்சர்.

Thursday, February 04, 2010

SELF ESTEEM- சுயமரியாதை

SELF ESTEEM - சுய மரியாதை இது நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் பிம்பத்தின்
பெயர். நமது எண்ணங்களை வைத்து நாம் அளவீடு செய்து வைத்திருக்கும்
ஒரு பிம்பம். இது நம் பிம்பம்.

உதாரணமாக: நான் அழகானவள், என் தவற்றில் இருந்து நான் கற்கிறேன்,
போன்ற எண்ணங்கள் நம்மை பாசிட்டிவ் மனிதராக காட்டும். அதிக
அளவில் சுய மரியாதை உடையவர் என புரிந்து கொள்ளலாம்.

என்னத்த செஞ்சு, என்னத்த படிச்சு, நான்லாம் எங்க தேறப்போறேன்,

ரீதியில் பேசுபவர்கள். சுய மரியாதை அற்றவர்கள். எவ்வளவு
நெகட்டிவ் எண்ணங்கள் இருக்கிறதோ அவ்வளவு சுயமரியாதை
அற்றவராக இருப்பார்கள்.




நம்மைப்பற்றி நாம் வைத்திருக்கும் சில அபிப்ராயத்தை
சொல்லிக்கொள்ள முடியாமல் இருக்கும். மற்றவரைப்போல்
இல்லாமல் கொஞ்சம் வித்யாசமானவராக இருக்கலாம்.தனித்துவம்
என்றும் சொல்லலாம். (Unique individual)இந்த ஒரு காரணம்
போதும் நாம் கர்வத்தோடு தலை நிமிர்ந்து நிற்க.

சுயமரியாதை நம் வாழ்க்கையை பலவிதமாக பாதிக்கிறது.
நாம் நினைக்கும் விதம், நடந்து கொள்ளும் விதம், அடுத்தவரைப்
பற்றிய நம் எண்ணங்கள் எல்லாம் இதில் அடங்கும். நாம் இலக்கை
அடையும் விதத்தில் இது பாதிக்கிறது.

அதிக சுய மரியாதை எண்ணம் நம்மை அதிக செய்ல்பாட்டுத்திறன்
உடையவராகவும், தகுதிவாய்ந்தவராகவும், அன்பானவராகவும்,
காரிய சித்தி உடையவராகவும் எண்ண வைக்கிறது.

குறைந்த சுய மரியாதை எதற்கும் உபயோகமற்றவராக,
எந்தச் செயலும் செய்யத்தெரியாதவராக,அன்பற்றவராக
எண்ண வைக்கும்.

உங்கள் சுய மரியாதையில் தாக்கத்தை
ஏற்படுத்தும் சில காரணிகள் சில வற்றைப்பார்ப்போம்:

1. வீடு: வீட்டில் இருப்பவர்களுடனான உங்களின் உறவு
எப்படி இருக்கிறதோ அதைப் பொருத்து சுய மரியாதை அளவு
நிர்ணயிக்கப்படுகிறது.

2.பள்ளி: ஆசிரியர்கள், உடன் படிக்கும் மாணவர்கள்,
அலுவலக பணியாளர்கள் இவர்களுடன் உங்களின்
உறவு பள்ளியில் வெறும் பாடம் மட்டும் பயிலாமல்
விளையாட்டு,ஒழுங்கு, லீடர்ஷிப் கிளப், ஃப்ரெண்ட்ஷிப் கிளப்,
NSS ஆகியவற்றில் ஈடுபாடு.

3: பணியிடத்தில்: அலுவலகத்தில் உயரதிகாரி, சம பணியாளர்கள்,
வேலைப்பளு, வாங்கும் திட்டுக்கள், பாராட்டுக்கள், பதவிஉயர்வு
வேலையை பொறுப்பாக முடித்து வீட்டையும் அலுவலகத்தையும்
சமமாக பார்க்கும் பொறுப்புணர்ச்சி.

4. சின்ன வயதில் நாம் நடத்தப்பட்ட விதம்,பெரிய வயது
நண்பர்கள்( அண்ணாவோட ஃப்ரெண்ட் நமக்கும் ஃப்ரெண்டாகி
அவருடைய அனுபவங்களும் நமக்கு பாடமாகுமே)அக்கம் பக்கத்துக்காரர்கள்.

5. சமூகம்: ஒரே ஊரில் ஒரே தெருவில் பல வருடங்கள் எங்கும்
செல்லாமல் வாழ்பவர் கற்றதை விட பல இடங்களுக்கு செல்பவர்
கற்பது ஏராளம். பிற மதக் கலாச்சாரங்கள், மத வழிபாட்டு முறைகள்,
அடுத்தவர்கள் காட்டியிருக்கும் பிம்பங்களுடன் உங்களின் அனுபவம்.

6. பொதுவாக: நல்ல அனுபவங்கள், நிறைந்த உறவு இவை சுய மரியாதையை
நிறைவாக்கும். கெட்ட அனுபவங்கள், துயரமான உறவுநிலை குறைவான
சுய மரியாதைத் தான் தரும்.

எந்த ஒரு சின்ன விடயமோ அல்லது நபரோ நமது சுய மரியாதை
இவ்வளவுதான் என்று வரையறுக்காது. அனுபவங்கள் தரும் பாடமாக
அவை மாறிக்கொண்டே இருக்கும்.

நம் சுயமரியாதையை அதிகபடுத்துவது எப்படி?

சேலஞ்சிங்கான வேலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
(ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரின்னு
டயலாக் அடிச்சு ரொம்ப ரிஸ்க் எடுத்துட்டா அது ஓவர்
கான்பிடன்ஸாகி கவுத்துப்புடும்)

வாழ்க்கையை அர்த்தமுள்ளாதாக்கிக்கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாறும் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும்
மனம் இருந்தால் மார்கமுண்டு.

எப்போதும் நம்மை பற்றி நல்லதாக நினைக்க என்னென்ன
செய்யலாம்??



நமக்கு நாமே தான் நல்ல நண்பன்/தோழி.

நமது பலம் பலவீனத்தை அலசிப்பார்த்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சாத்தியமான குறிக்கோள்களை வைத்துக்கொண்டு, அதை அடைய
ஏதாவது கற்கவேண்டியிருந்தால் கற்று திறமையை வளர்த்துக்
கொள்ள வேண்டும்.(கார் வாங்க வேண்டும் என்ற ஆசையிருந்தால்
கார் ஓட்ட பழகிக்கொள்ள வேண்டும் என்பது போல்)

நாம் நம்மை உணர்ந்து நமக்கே நமக்கென நேரம் ஒதுக்கி
நம்மை நாம் மகிழ்வித்துக்கொள்ள வேண்டும்.
நம்மை நாம் உணர்ந்தால் எனும் இந்தப் பதிவு படிச்சிருக்கீங்களா??

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்மை நம் எண்ணங்களை நாம்
நம்பி அதன் படி வாழவேண்டும். அடுத்தவரின் எண்ணங்களால்
உதைபட்டு பந்து போல் வாழ்வதால் புண்ணியம் ஏதுமில்லை.

சுய மரியாதை. ஆம் நமக்கு நாமே மரியாதை செலுத்திக்கொள்ள
வேண்டும். என்ன சாதித்திருக்கோமே அதற்கு பெருமை
பட்டுக்கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் நல்ல குணம்,
திறமை இவற்றை அடையாளம் காணுதல் வேண்டும்.
தேவையானல் மேம்படுத்திக்கொள்ளவும் இது உதவும்.

நம்மிடம் நாம் அன்பு செலுத்தி நம்மை நாம் நல்லமுறையில்
கவனித்துக்கொள்ள வேண்டும். நம் தவறுகளை ஏற்றுக்கொண்டு
அதை திருத்திக்கொள்ள வேண்டும். சாதனைகளையு, சோதனைகளையும்
மிகைப்படுத்தாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

என்னால் முடியும் எனும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சின்ன சின்ன personal goalகள் அவற்றை அடைந்ததும்
ஊக்கப்படுத்த நமக்கு நாமே பாராட்டிக்கொள்வது/ பரிசளிப்பதும்
நல்லது.

மொத்தத்தில் POSITIVE ATTITUDE நற் சிந்தனைகள், செயல்கள்
நம் சுயத்தை அதிகமாக்கி மகிழ்ச்சியையும், தனித்துவத்தையும்
தரும்.