Wednesday, February 01, 2012

IKEA...

நான் சிங்கை போவதாக (5 வருடம் முன்னாடி) சொன்னப்ப
அப்போதான் சிங்கை போயிட்டு வந்த தோழி நிறைய்ய
டிப்ஸ் சொன்னது எனக்கு உதவியா இருந்தது. அதில் முக்கியமாக
மறக்காம அவங்க போயிட்டு வான்னு சொன்னது IKEA.
அங்கே என்ன இருக்கும்? அப்படின்னு கேட்க அவங்க காமிச்ச
சாம்பிள்ஸை பாத்ததும் கண்டிப்பா போயாகணும்னு முடிவே
செஞ்சிட்டேன்.

ஆப்பிள் ஸ்லைசர்னு இப்ப மார்க்கெட்டில் ஒண்ணு விக்குதுல்ல
அது அநேகமா சைனீஸ் ப்ராடக்டாத்தான் இருக்கும். அது
ரொம்ப நாள் உழைக்காது. ஆனா என் ஃப்ரெண்ட் காட்டியது
ஐக்கியாவில் வாங்கியது. இப்ப வரைக்கும் என் வீட்டில்
உபயோகத்தில் இருக்கு.


அதுக்கப்புறம் இது ரொம்ப முக்கியமா வாங்கிக்கோ கலான்னு
சொன்னாங்க. ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கு இந்த கிளிப்.
ப்ரெட், ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய சில கவர்கள்,
சிப்ஸ், ஊருக்கு போகும் பொழுது பிஸ்கட் எல்லாம் இப்படி
ஜிப் லாக் கவரில் போடுவதையும் விட ஏர் டைட்டா வைக்க
உதவுதுன்னு காட்டினாங்க. நானும் போய் இரண்டு கவர்
வாங்கியாந்தேன். சின்னதும் பெருசுமா ரொம்ப ஹேண்டியா
இருக்கு. 3 வருஷம் முன்னாடி ப்ரூ இன்ஸ்டண்ட் காபி
பொடியோட ஃப்ரெஷ்ஷா வைக்க லாக்குடன்னு மஞ்சக்கலர்ல
கூட கொடுத்தாங்க. ஆனா IKEA கிளிப்ஸ் மாதிரி வராதுங்க.




வீட்டில் பசங்க இருக்கறவங்களுக்கு ஒரு பிரச்சனை பிள்ளைகளூக்கு
ஏத்தாமாதிரி சாப்பாடு கொடுக்கும் பொருள் இருக்கணும். பார்க்க
நல்லாவும் இருக்கணும், அத்தோட உடையாம பத்திரமாவும்
இருக்கணும். இதுக்கு IKEAவோட இந்த செட் ரொம்ப
உபயோகமா இருக்கும். கலர்ஃபுல்லா எம்புட்டு அழகா
இருக்கு பாருங்க.

சரி இதைத்தவிர இன்னும் என்ன நல்லா இருக்கும்னு நீயே
போய் பாத்து தெரிஞ்சிக்கன்னு சொல்லிட்டாங்க. ஆவலோட
IKEA ஸ்டோருக்கு போன என்னை ஏமாத்திடலை. அங்கே
கிடைக்கும் வெரைட்டிதான் என்ன? ஃபர்னீச்சர்ஸ், கிச்சன்
கேபினெட்ஸ் எல்லாமே கிடைக்கும் அங்கே. டிஸ்மாண்டில்
செஞ்சு வேற எடுத்துக்கு தூக்கிகிட்டு போறமாதிரி இருக்கும்.

எனக்கு அங்க ரொம்ப பிடிச்சது கத்தியை ஷார்ப்பாக்கறதுக்கு
உபயோகமா இருக்கும் இந்த ஷார்ப்பனர்.

சின்ன க்ரைண்டிங் மில். இதுல ஜீரகம், மிளகு, வெந்தயம்
எல்லாம் போட்டு கையாலேயே திருப்பி திருப்பி பொடிச்சிடலாம்.
எலுமிச்சை சாதம் செய்யும் பொழுது கொஞ்சமா வெந்தயத்தை
வறுத்து அதை இதில் போட்டு சாதத்தின் மேலே அப்படியே
பொடிச்சு போடலாம்.

இப்படி இந்தக்கடையில நிறைய்ய உபயோகமான பொருட்கள்
கிடைச்சது. ஒரு வாட்டி சிங்கையிலிருந்து வரும்பொழுது
பசங்ககிட்ட என்னடா வேணும் உங்களுக்குன்னு தம்பி கேட்க
இது வாங்கிகிட்டு வாங்க மாமான்னு போட்டோ அனுப்பினாங்க.
வலையால செய்யப்பட்ட இந்த ஹேங்கிங் செல்ஃப்ல நாம
என்ன வெச்சிருக்கோம்னு அழகா தெரியும். பசங்க டாய்ஸ்,
பெல்ட் எல்லாம் ஒரே இடத்துல் வெச்சிடவும் உதவியா இருக்கும்.

அதை வாங்கப்போனப்போ இந்த லாண்டரி பேக்கும் கண்ணுல பட்டு
தம்பி வாங்கியாந்தாப்ல. துவைக்க வேண்டிய துணிகளை அழகா
இதுல போட்டு வெச்சிடுவோம். கண்ட இடத்துல துணி கிடக்கமா
காத்தோட்டமா துவைக்கறவைக்கும் சொகுசா துணிகள் இந்த
கூடைக்குள் அடைக்கலம் ஆகிடும். நம்ம ஊர்லயும் கிடைக்குது.
ஆனா அது அவ்வளவு ஸ்டராங்கா இருப்பதில்லை.

இது சிங்கையில் மட்டுமில்ல பல நாடுகளில் இருக்கு.
அதைத் தெரிஞ்சிக்க இங்க போய் பாருங்க.

IKEAவில் என்னென்ன பொருட்கள் கிடைக்குதுன்னு பார்க்க
இங்க சொடுக்கினால் பார்க்கலாம்.


இந்த ikea சீக்கிரம் இந்தியாவில் கடை திறக்கும் வாய்ப்புக்கள்
இப்ப வந்திருக்கு. நம்ம இந்தியாவின் கொள்கையால இங்கே
வரமுடியாம இருந்திருக்கு. ஆனா இப்ப Foreign direct investment
கொண்டு வரப்போறதால ikea வந்திடும்னு சொல்றாங்க.

அதைப்பத்தி இங்கப்போனா தெரிஞ்சிக்கலாம்.

இந்தியாவுக்கு வரும் வரைக்கும் யாரும் ஃபாரீன் டூர் போனீங்கன்னா
அங்கே ஐக்கியா ஸ்டோர் இருக்கான்னு பாத்து கண்டிப்பா ஒரு
எட்டு போயிட்டு வாங்க. இல்ல சொந்தக்காரங்க யாரும் வர்றதா
இருந்தா ஐக்கியா போயிட்டு வாங்கிகிட்டு வரச் சொல்லுங்க.