Wednesday, December 07, 2016

கொடி அசைந்ததும் காற்று வந்ததா? பாகம் - 2

கொஞ்சம் வேலையில் பிசிஆகிட்டேன் அதான் பதிவு போட முடியலை. சுய அலசல் செஞ்சு பாத்தீங்களா? நாம யாரையும் காயப்படுத்தியிருக்கோமா? வார்த்தைகளால செயல்களால இப்படி நம்மை அறியாமல் செஞ்சிருக்கலாம். கத்தி கைல இருக்கும் போது தெரியாம யார் மேலயும் பட்டா காயமாகும். அப்ப தெரியாமதான் செஞ்சேன்னு சொல்ல முடியாது. அவங்களுக்கு காயம் பட்டிருக்கும். அதைப் பாத்து நமக்கே ரொம்ப வருத்தமா இருக்கும். ஆனா மனசுல படற காயத்தை யாரும் பெருசா நினைப்பதில்லை. சட்டை கிழிஞ்சிருந்தா தெச்சு முடிச்சிடலாம். நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம் அப்படிங்கற சினிமா பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.

தெரிஞ்சு செஞ்சாலும் தெரியாம செஞ்சாலும் தப்பு தப்புதான். அதோட பாதிப்பு இருக்கத்தான் செய்யுது. வள்ளுவர் அப்பவே சொல்லியிருக்கார்.  இனிய உளவாத “ குரள் அதை ஞாபகம் வெச்சுகிட்டு, நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை ரொம்ப யோசிச்சு பேசணும். ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சா பேச முடியும்னு சிலர் கேக்கலாம். அப்படித்தான பேசணும். நாவடக்கம் முக்கியம்னு சொல்லியிருக்காங்களே. நாவடக்கம்னா என்ன? எதை எந்த இடத்துல எப்படி பேசணும்னு தெரிஞ்சுக்கணும். வாயிலிருந்து வார்த்தைகள் வரும் வரை நாம் அதற்கு எஜமானன். வந்திட்டா நாம சொன்ன சொற்கள் நமக்கு எஜமானனாகிடும்.

நாம பேசும்போது சரி. நாவடக்கம் பத்தி ஞாபகம் வெச்சு, நம்மை எது பாதிக்குமோ அது அடுத்தவங்களையும் சொல்லாம இருக்கலாம். ஆனா நம்மை பேசறப்போ???  அந்த வார்த்தைகளின் தாக்கம். அதெல்லாம் அப்படியே நம் மனசுல பதிஞ்சுடுது. ஒரு ஆழமான காயத்தை உருவாக்குது. ஆனா அந்தக் காயம் வெளில யாருக்கும் தெரியாது. நமக்கு வலிக்குதுன்னு சொன்னாலும், இதுவும் கடந்து போகும், இதெல்லாம் பெருசு படுத்தாத, மனசுல வெச்சுக்காத, தூக்கி தூரப்போடு, இப்படி அட்வைஸ் நிறைய்ய கொடுப்பாங்க. ஆனா அது அவ்வளவு ஈசியான விஷயம் இல்லை.

நடந்ததையே நினைச்சுக்கிட்டு இருப்போம். இப்படி நம்மளை பேசிட்டாங்களே!! நாம ஏதும் தப்பு செஞ்சிடலையே??? நம்மளை ஏன் பலிக்கடா ஆக்கறாங்க. இப்படி நம்ம மனசுக்கு ஏற்பட்ட பாதிப்புல தவிக்கிறோம். சிலர் பேச்சுக்கு பேச்சுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து தன் கோவத்தை வெளிப்படுத்திடுவாங்க. அவங்களுக்கு பாதிப்பு இல்லைன்னு சொல்ல முடியாது. கோவம் ஏற்படும் போது நம் உடம்பில் ஏற்படும் பாதிப்புக்கள் நிறைய்ய. சொல்லாமலேயே உள்ளே வைக்கும் உணர்ச்சிகள் நம் உடம்பில் ஒரு தடுப்பா உருவாகுது. இதுவும் நமக்கு தெரியாது. இவை நாளாக நாளாக நாம அந்த நினைவுகளை அசை போட அசைபோட பெரிய புண்ணாகிடுது. புண் அப்படின்னா வலி, வேதனை, சீழ் பிடிக்கறது, ரத்தக்கசிவு எல்லாம் உண்டுதான! ஆனா இவை உள்ளுக்குள்ள நடப்பதால வெளியில யாருக்கும் தெரியாது. மனசுக்கு மருத்துவம் அவ்வளவு ஈசியா பாத்துக்க மாட்டோம். உடைஞ்ச மனசோட வாழ்வது உடைஞ்ச காலோட/கையோட வாழ்வதை விட கஷ்டமான விஷயம்.

நம்மளால வழக்கமா இருக்க முடியாது. வழக்கமா வேலைகள் நடக்கும். ஆனா உள்ளுக்குள்ள எதையோ தொலைச்ச சோகத்தோட இருப்போம். அதை புரிஞ்சுகிட்டு வெளியே வர யாராவது உதவினா நல்லா இருக்கும், ஆதரவா நாலு வார்த்தை யாரும் சொல்ல மாட்டாங்களான்னு இருக்கும். ஆனா நிஜத்தில் அது சாத்தியம் இல்லாத விஷயம். தலைவலியும் வேதனையும் தனக்கு வந்தாதானே தெரியும்.

நாம கோவத்தை வெளிக்காட்டினாலும் கஷ்டம். வெளிக்காட்டனாலும் கஷ்டம். அப்புறம் என்னதான் செய்வது? துக்கம் அனுஷ்டிப்பதை நிறுத்தணும். ஆமா. துக்கம் வேண்டாம். துடைச்சு எறிஞ்சு நாம் நம்மை சந்தோஷமா வெச்சுக்க என்ன செய்யலாம்னு யோசிக்கணும். அல்ப சந்தோஷங்களுக்கு போகக்கூடாது. பூரண சந்தோஷம் தான் நமது குறிக்கோள்.

சந்தோஷத்தை எங்க தேட? எங்கயும் தேட முடியாது. அது நமக்குள்ளேதான் இருக்கு. இந்த நொடி நான் சந்தோஷமா இருக்கேன்னு நான் நினைச்சா நான் சந்தோஷமா இருக்கேன். இல்லைன்னா இல்லை. இதுதான் உண்மை. ஆனா சொல்வதை விட ரொம்ப கஷ்டமான விஷயமா இதை நடைமுறை படுத்தறது. நானும் அப்படித்தாங்க நினைச்சுகிட்டு இருந்தேன். என் சந்தோஷம் அடுத்தவர் சார்ந்த விஷயம், என்னை சுற்றி இருக்கறவங்களால தான் என் சந்தோஷம் அப்படின்னு என் வாழ்க்கையை அடுத்தவங்க கைல கொடுத்துட்டு  அவங்களாலதான் நான் சந்தோஷமா இருக்கேன்னு பூரிச்சுகிட்டு இருந்தேன்.

ஆனா அது தப்புன்னு புரிஞ்சுக்க ரொம்ப நாள் இல்ல ரொம்ப வருஷம் ஆச்சு. அதுக்குள்ள என் உடலும் மனசும் பாதிச்சதுதான் நடந்த விஷயம். எவ்வளவு தூரம் பாதிச்சதுன்னா என்னால சேர்ந்தாப்ல 5 நிமிஷம் நிக்க முடியாது. ரோடில் நடக்கும்போது சின்ன கல் தடுக்கி கீழே விழுவது, ஒரு தோசை போடக்கூட முடியாதுங்கற நிலமை. பரிதாபம் ஏற்படுத்த இதை இங்கே சொல்லலை. அந்த நிலையிலேர்ந்து நான் மீண்டு வந்தது எப்படி அதை சொல்லணும்னா நான் இருந்த நிலையையும் சொல்லணுமே. அதான்.

நம் எண்ணங்கள் தான் நம் வாழ்வு. நாம எதை நினைக்கறோமோ அதுவாக மாறிடறோம். இல்லைன்னா அதுகிட்ட நாம சேர்கிறோம். நாம எல்லோரும் எப்போதும் கற்பக விருட்சத்துக்கு கீழதான் இருக்கோம். நாம என்ன நினைக்கறோமோ அவையே நம்மை வந்தடையுது. நாம மனசுல நினைப்பதுதான் நம்ம வாழ்க்கை எனும் வீடியோவா வருது. இது எனக்கு
THE SECRET அப்படிங்கற புத்தகம் படிச்சப்போ தெரிஞ்சது. நம்ம முன்னோர்களுக்கெல்லாம் இது தெரிஞ்சிருக்கேன்னு புரிஞ்சப்ப வியப்பா இருந்தது. எனது ஹீலிங்கின் முதல் படி அந்த புத்தகத்தை படிச்சு எண்ணங்களின் சக்தியை தெரிஞ்சுகிட்டது.

அந்த புத்தகம் கிடைச்சா படிச்சு பாருங்க. தமிழ், ஆங்கிலம், ஹிந்தின்னு மொழிகள்ல கிடைக்குது. புத்தகம் படிக்க நேரமில்லைன்னா யூட்யூப்ல சினிமாவே இருக்கு. இதோ லிங்க்




தொடரும்.....






4 comments:

சுசி said...

நல்ல பதிவுக்கு நன்றி கலா ! எனக்கு புக் தான் வசதி. தமிழ்ல என்ன பேர்ல வெளியாகியிருக்கு? நான் வாங்கி படிக்கிறேன்.

'பரிவை' சே.குமார் said...

தொடருங்கள் அம்மா...
தொடர்ந்து வாசிக்கிறேன்.

pudugaithendral said...

புத்தகம் The secret அப்படிங்கற பெயர்ல வந்திருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி குமார்