இந்த ராசியை சேர்ந்தவங்க இப்படித்தான்னு ஒரு பத்திரிகையில்
ஜோஸ்யர் ஒருத்தர் சொல்லி இருக்கிறார்.
ஜோஸ்யத்தில் நம்பிக்கை இல்லாத எனக்கு இவர் கூறியிருப்பது
உண்மையாக இருந்து தொலைக்க, ( மகர ராசி என் ராசி)
எல்லோருக்கும் இது சரியா
இருக்கான்னு கருத்துக்கணிப்பு செஞ்சு பார்க்கலாமேன்னு
இதை பதிவா போட்டிருக்கேன்.
அவர் சொல்லிருக்கிறது சரியான்னு படிச்சிட்டு சொல்லுங்கப்பு.
மேஷம்: நீங்கள் ஏணியைப் போன்று மற்றவர்களை உயரத்தில்
ஏற்றிவிட்டு அழகு பார்ப்பதில் சுயநலமற்றவர்.
ரிஷபம்: நீங்கள் நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள்.
அனைவருடனும்பாகுபாடின்றி பழகுவீர்கள்.
மிதுனம்: நீங்கள் யாரிடமாவது அன்பு காட்டினால்
அதிதீவிரமாகஅன்பு செலுத்துவீர்கள்.
அதே போல் பிடிக்காவிட்டால்திரும்பிக்
கூட பார்க்க மாட்டீர்கள்.
கடகம்: நீங்கள் எதையும் தாங்கும் இதயம்
கொண்டவர். தான்என்னிய காரியம் முடிவடையும்
வரை அயராதுஉழைப்பவர். இதனாலேயே
வெற்றி உங்களிடம் தங்கும்.
சிம்மம் : நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுப்பதில்
தடுமாறுவீர்கள். நிதானத்துடன் செயல்பட்டால்
வெற்றி உங்களுக்கே.
கன்னி : நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும்
கலைநயத்துடன்,அழகாகவும், நிதானமாகவும்
செய்வீர்கள்
துலாம் : நீங்கள் தன்னை நம்பி வந்தவர்களைக்
கைவிட மாட்டீர்கள்.உதவும் குணம்
உங்களுக்கு உண்டு.
விருச்சிகம் : நீங்கள் மனஉறுதியோடு எதையும்
பொருட்படுத்தாமல் தங்கள் இலக்கை
நோக்கி செல்லும் யதார்த்தவாதிகள்.
தனுசு : நீங்கள் நல்லவர்களுக்கு நல்லவர்.
கெட்டவர்களுக்கும் நல்லவர்.
பிடிக்காவிட்டால் ஒதுங்கிவிடுவீர்கள்.
மகரம் : கோபம் இருக்கும் இடத்தில்தான்
நல்ல குணம் இருக்கும்
என்பது உங்களுக்குத்தான் பொருந்தும்.
கும்பம் : உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ
அதனைச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேச மாட்டீர்கள்.
மீனம் : நீங்கள் எந்த ஒரு விஷயத்தை கையளும் போதும்
பகுத்தறிவுடன் அனுகுவீர்கள். மிகவும் அன்புடைய நபர்.
உங்களைப் பத்தி சரியா சொல்லிருக்காங்களான்னு சொல்ல மறந்து
விடாதீர்கள்
( இது நட்சத்திற்கு ராசி)
அவ்வ்வ்வ்வ்வ்...என்னிய ரொம்ப பாராட்டியில்ல சொல்லியிருகீங்க..
ReplyDeleteஆமா எல்லா ராசிக்கும் நல்லாத்தானே பலன் இருக்கு..
நம்பிக்கை இல்லாட்டியும் நல்ல விசயமா படிக்கிறதுல ஒரு சந்தோஷந்தேன்.ஹிஹி..
ரசிகன்,
ReplyDeleteஇது ராசி பலன் இல்ல. இந்த ராசியைச் சேர்ந்தவர்களின் குணாதிசயம் இதுன்னு சொல்லியிருக்கிறார்.
அது சரியான்னு பாருங்க.
This comment has been removed by the author.
ReplyDeleteவாங்க கோமா,
ReplyDeleteபின்னூட்டத்துக்கு நன்றி.
என் ராசி இதுலே இல்லவே இல்லை(-:
ReplyDeleteஎனக்கும் எங்க பாட்டிக்கும் ஒரே ராசியாம்.
ஏப்ப ராசி;-)))))
புது ராசியா இருக்கே?!!
ReplyDelete//
ReplyDeleteதனுசு : நீங்கள் நல்லவர்களுக்கு நல்லவர்.
கெட்டவர்களுக்கும் நல்லவர்.
பிடிக்காவிட்டால் ஒதுங்கிவிடுவீர்கள்.
//
நான் எப்படின்னு நீங்கதான் சொல்லனும்!!
சரியா தான் சொல்லி இருக்காங்க.
ReplyDeleteவாங்க நிஜமா நல்லவன்,
ReplyDeleteமுதல் வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.
ரிஷபம்: நீங்கள் நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள்.
ReplyDeleteஅனைவருடனும்பாகுபாடின்றி பழகுவீர்கள்.
ஐயோ!!!!!என்னை சந்திக்காமலேயே 2007லியே
எவ்வளவு கரீட்டா சொல்லிட்டீங்க நானும் ரிஷபம்தான்.
[ரோஹினி]
nandri goma
ReplyDeletenaan paarththu pazhagina niraya peroda gunangal unga padhivoda porunthuthu.
ReplyDeletenijamaave naan paarththu pazhagina niraya peruku intha gunaadhisayangal porunthuthu
ReplyDelete