Tuesday, February 19, 2008

மாண்டிசோரி முறைக் கல்வி.......

She was often heard saying, "I studied my children, and they taught me how to teach them". - மரியா மாண்டிசோரி.



உலகையே பேசவைத்த மாண்டிசோரி முறைக்கல்வியை

கண்டுபிடித்த மரியா மாண்டிசோரி இவர்தான்.





நம்ம பாசமலர் இந்தக் கல்வி முறையைப் பத்தி ஒரு பதிவு

போட்டிருக்காங்க.

மாண்டிசோரி முறைக் கல்வியின் அடிப்படைத் தத்துவம் இது தான்:

1. The teacher must pay attention to the child, rather than the child paying attention to the teacher.

2 - The child proceeds at his own pace in an environment prepared to provide means of learning.
3 - Imaginative teaching materials are the heart of the process.
4 - Each of them is self-correcting, thus enabling the child to proceed at his own pace and see his own mistakes.
If you were to look inside a Montessori classroom, each child would be quietly working at his private encounter with whatever learning task he or she has chosen. (Montessori in Perspective, 1966).


Montessori often reminded teachers in her course, "When you have solved the problem of controlling the attention of the child, you have solved the entire problem of education." (Kramer, 1976, p. 217).


"casa dei Bambini" அதாவது மழலையர் இல்லம். இங்குதான்

5 வயதிற்குட்பட்ட ஏழைக் குழந்தைகள் இருந்தனர்.

இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும்
சூப்பர்வைசராக மாண்டிசோரி வந்தார். இவர்களின்
பொழுதை இனிமையானதாக மாற்ற சில் உபகரண்ங்களைக்
கொண்டுவந்தார்.

குழந்தைகளிடம் மாற்றம் வந்தது. கைகளால் உணர்ந்தும்,
அனுப்வித்து குழந்தைகள் எளிதாக கற்றனர். மற்ற பள்ளிகளில்,
விளம்பிக்கொண்டும், எழுத கஷ்டபட்டுக்கொண்டும் இருந்தனர்.

இந்த மாறுதல்கள் காட்டுதீயாய் உலகெங்கும் பரவியது.
தான் ஒன்றும் அற்புதத்தை நிகழ்த்தி விடவில்லை என்றுதான்
மாண்டிசோரி கூறுவார். "பிள்ளைகளிடம் அபார சக்தி இருக்கிறது.
அதை முறையாக பயன்படுத்த அவர்களுக்கு உதவினேன்,'
என்றுதான் கூறுவார்.


மாண்டிசோரி முறையில் ஐம்புலன்களினாலும் கற்கும்படி
பாடத்திட்டங்கள் இருக்கும்.

(ARISTOTLE- THE GREAT PHILOSPHER SAYS," There is nothing
in the mind fo men, that his senses have not known".)


பார்த்தல், கேட்டல், உணர்தல், சுவைத்தல், முகர்தல் எனும்
முறையில் இருக்கும் பாடத்தை - SENSORIAL என்போம்.

அடுத்து மொழி.

அடுத்து கணிதம்.

அடுத்து ESSENCE OF PRACTICAL LIFE (EPL)
எனப்படும் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்கள்.



கீழே சில மாண்டிசோரி கல்வி முறை உபகரணங்களையும்,
அது எதற்காக உப்யோகிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.


1. NUMBER ROD:




குழந்தையின் கண்களுக்கும், கைகளுக்கும் பயிற்சி. எண்களின்
அறிமுகம் (வாய்மூலம் மட்டுமே).



2. SAND PAPER NUMBERS.(உப்புத்தாளில் எண்கள்)



ஒவ்வொரு கார்டாக எடுத்து அதில் இருக்கும் எண்ணின் மேல்
கைகளை வைத்து உணர வேண்டும். (Tracing over the numbers).
எண்ணின் வடிவத்தை மனதில் பதித்துக்கொள்ள உதவும்.

3. CARDS AND COUNTERS:





(ஒற்றைப்படை, இரட்டைப் படை எண்களின் அறிமுகம்)

This is to teach oddnumbers and even numbers.

4. Geomentrical tray: (Introduction to Geomentry)

தொட்டு வடிவங்களை உணரும் வகையில் இந்த உபகரணம்

5. SOUND BOX:




கேட்கும் திறனன தூண்ட இந்த உபகரணம்.


இந்த அறிமுகம் தொடரும்......


மேலே இருக்கும் ஆங்கிலவாக்கியங்களுக்கு
பாசமலர் மொழிபெயர்த்து
தந்தது. மிக்க நன்றி மலர்.
மரியா மாண்டிசோரி அடிக்கடி இப்படிச் சொல்வாராம்,
" என் மாணவர்களை நான் படித்துப் புரிந்து கொண்டேன்.
எப்படி அவர்களுக்குப் கற்றுத்தரவேண்டுமென்று
அவர்கள்தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.
"1. ஒரு குழந்தை தன் ஆசிரியரிடம் கவனம்
செலுத்துவதைக் காட்டிலும்,ஓர் ஆசிரியர் தன்
குழந்தையிடம் கவனம் செலுத்துவது
முக்கியமானது.
2. படிப்பதற்கான வழிமுறைகள் முறைப்படுத்தப்பட்ட
ஒரு சூழலில் ஒரு குழந்தை தன்னிச்சையாகத்
தன் வழியில் தானே முன்னேறும் சாத்தியக்கூறு
அதிகமாகிறது.
3. கற்பனைத்திறன் சார்ந்த போதிக்கும் கருவிகள்தான்
இம்முறையின் முக்கியமான அம்சமாகும்.
4. ஒவ்வொரு கருவியும் சுய திருத்தம் என்ற
அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எனவே, ஒரு குழந்தை தனக்கேற்ற வேகத்தில்
படித்துத் தன் தவறுகளைத் தானே சரி செய்ய முடியும்.
ஒரு மாண்டிசோரி வகுப்பறையைப் பார்வையிடும்போது,
தனித்தனியே ஒவ்வொரு குழந்தையும் தானே தேர்ந்தெடுத்த
ஒரு படிக்கும் தளத்தில் அமைதியாக இயங்கிக்
கொண்டிருப்பது புரிய வரும்.
மாண்டிசோரி அம்மையார் இந்தத் துறையில்
பயிற்சி பெறும் ஆசிரியர்க்கு அடிக்கடி நினைவுறுத்துவது:
"ஒரு குழந்தையின்கவனத்தைக் கட்டுப்படுத்தும்
ப்ரச்னையைச் சமாளித்துவிட்டால் போதும்.
முழுக் கல்வி சம்பந்தப்பட்ட ப்ரசனையும்
இதன் மூலம்தீர்ந்து விடும்.
"அரிஸ்ட்டாடில் என்ற தத்துவ ஞானி சொல்வது:
"புலன்களுக்குப் புலப்படாத எந்த ஒன்றும்
மனிதனின் மனதில் இருக்கவே முடியாது.
"sensorial - உணர்ந்து அறிவது
Essence of Practical Life - எதார்த்த வாழ்வின் சாராம்சம்
Number Rod - எண் கருவி
Cards and Counters - அட்டைகளில் எண் அட்டவணைகள்
Geometrical tray - வடிவங்களின் அறிமுகக் கருவிகள்


22 comments:

  1. உண்மையிலேயே வித்தியாசமான பதிவு.. பாராட்டுக்களுடன் நன்றிகளுடன்

    ReplyDelete
  2. சீக்கிரமா அடுத்த போஸ்ட் போடுங்க.

    (ஒரே ஒரு வேண்டுகோள், இடையில் வரும் இங்லீசையும் கொஞ்சம் மொழிபெயர்த்து போடுங்க. ப்ளீஸ்)

    ReplyDelete
  3. ஒரே வாரத்தில சைக்கிள் ஒட்டி களைச்சுபோய் அப்படியே இல்லறவியல் புகுந்து இப்ப குழந்தை கல்வி வந்துடீங்க. தினமும் உங்க வலைப்பூ பக்கம் வராம போறதில்லை.

    ReplyDelete
  4. வாங்க தமிழ் நெஞ்சம்,

    வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. வாங்க நந்து,
    அடுத்த போஸ்ட் வியாழக்கிழமை போட்டுவோம்.

    நாளைக்கு இங்கே லீவு. அதனால பிளாக்குக்கும் லீவு.

    ReplyDelete
  6. வாங்க நிஜமா நல்லவன்,

    புது போஸ்ட் போட்டவுடன் பொதுவா நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு மெயில் அடிச்சுடுவேன்.

    உங்க ஃப்ரபைலில் மெயில் ஐடி தேடினேன் கிடைக்கலை.

    pdkt2007@gamail.com க்கு ஒரு மெயில் அனுப்புங்க.

    தினமும் என் வலைப்பு பார்ப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  7. நந்து,

    தமிழாக்கம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. சரியான தமிழ் வார்த்தைகள் கிடைக்க சிரமமா இருக்கறதனாலத்தான் சில் சமயம் ஆங்கிலத்திலும் போடுறேன்.

    ஆனாலும் முடிஞ்ச வரை தமிழில் போடுவேன்.

    (மொழி பெயர்ப்புக்கு யாராவது உதவினால் நல்லா இருக்கும்....)

    ReplyDelete
  8. மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.

    ReplyDelete
  9. நிஜமா நல்லவன்.

    மின்னஞ்ச்சல் கிடைக்கவில்லை.

    pdkt2007@gmail.com க்கு அனுப்புங்க.

    ReplyDelete
  10. புதுகை,

    நல்ல பதிவு...சீக்கிரம் பள்ளி ஆரம்பிக்க ரெடியா...மொழிபெயர்ப்பில் உதவ முடியும் என்று நினைக்கிறேன்..மின்னஞ்சல் ஒன்றில் அனுப்பவும்..

    ReplyDelete
  11. வாங்க பாசமலர்,
    இந்தியா வந்த பின்னாடிதான் ஆரம்பிக்கனும். மொழியாக்கத்திற்கு உதவுவதாக சொன்னதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. அருமையான மொழிப்பெயர்ப்பு

    பாசமலர்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  14. <==
    புதுகைத் தென்றல் said
    (மொழி பெயர்ப்புக்கு யாராவது உதவினால் நல்லா இருக்கும்....)
    ==>
    நம்ம டோண்டு ஐயாவைக் கேக்கலாம்.

    ReplyDelete
  15. எனக்கு ஒரே ஒரு சந்தேகம்.
    அப்புரம் ஏன் ஆங்கிலம் மீடியம் குழந்தகளை "பொதி",அதாங்க புத்தகப்பை, சுமக்க வைக்கிறாங்க? அப்ப, அது மாண்டிசோரி இல்லயா?

    ReplyDelete
  16. நன்றி சாமான்யன்,

    இப்போதைக்கு பாசமலர் உதவுகிறார்.

    நானும் செய்கிறேன்.

    ReplyDelete
  17. <==
    நிஜமா நல்லவன் said...

    ஒரே வாரத்தில சைக்கிள் ஒட்டி களைச்சுபோய் அப்படியே இல்லறவியல் புகுந்து இப்ப குழந்தை கல்வி வந்துடீங்க
    ==>
    குழந்தைகள்கிட்ட கொஞ்ச நேரம் விளையாட்டிட்டு மத்த விஷயத்துக்கு வருவாங்க.

    ReplyDelete
  18. சாமான்யன்,

    பொதுவா நம்ம ஊர்ல Preschool முறையைய்தான் பின்பற்றுவாங்க.
    இங்க பொதி சுமந்தே ஆகனும்.

    மாண்டிசோரி முறை வேற. அங்கே நிறைய எழுதாம நல்ல பயிற்சி கொடுப்போம். முறையான அஸ்திவாரம் மாதிரின்னு வச்சுக்கோங்க. அஸ்திவாரம் பலமா இருந்தா கோட்டையே கட்டலாமே!!!

    ReplyDelete
  19. ம். இப்பதான் கேள்விப்படறேன் பாசமலர் பதிவு, இந்த பதிவ்வு மூலமாக.

    நாங்க படிக்கிறப்பல்லாம் இப்படியெல்லாம் இருந்தமாதிரி தெரியலை.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  20. பாசமலருக்கு ரொம்ப நன்றிங்க. அப்புறம் சரியான முகவரிக்கு மெயில் அனுப்பிவிட்டேன்.

    ReplyDelete
  21. வாங்க சிவா,

    புதுகையில் ஒரு மாண்டிசோரி பள்ளி இருந்தது.

    மாணிக்கம் மாண்டிசோரின்னு பேரு.

    அவங்க வேன்லா வெச்சிருப்பாங்க.

    (அப்பெல்லாம் பணம் கட்டி படிக்க நமக்கெல்லாம் ஏது வசதி. அதான் இப்ப மாண்டிசோரி டீச்சர் ஆயிட்டேன்.)

    ReplyDelete
  22. வாங்க நிஜமா நல்லவன்,

    மடல் கிடைத்து, பதிலும் அனுப்பிட்டோம்ல.....

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று