Friday, September 26, 2008

அந்த நாளும் வந்ததே!!!!

பரிட்சை முடிந்து பள்ளி விடுமுறை என்பதையும் விட
பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி முகத்தில் தாண்டவமாடுகிறது!

உப்பங்கலே கோதாவரி பாட்டு அடிக்கடி கேட்கப்பட்டு
அந்த மூடை வரைவழைத்துக்கொண்டிருக்கிறார்கள்
பிள்ளைகள். :)))

//நீங்கள் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பும் போது பார்க்க வாய்ப்புள்ளது என்று ஜோதிடம் சொல்கின்றது.//
என்று கானா பிரபா ஜோஸ்யம் சொன்னது
கொஞ்சம் தாமதமாக( நான் இந்தியா வந்து 6 மாதம்
கழித்து) பலிக்கப் போகிறது. :))))))))))))))))


எப்போ? எப்போ? என்று நாட்களை கவுண்டவுன் செய்து
காத்து கொண்டிருந்த அந்த நாளும் வந்தே விட்டது.

இன்னாத்துக்கு இம்புட்டு பில்டப்புன்னு கேக்கறீங்களா??

:)))

என்னுடைய ஏலேலோ! ஐலைசா! பதிவு ஞாபகம்
இருக்கா? அந்தப் பதிவை படிச்சிட்டு வாங்க.

ஆமாம். அங்கேதான் போகப் போகிறோம்.

பக்தனுக்காக பதறி ஓடி வந்த தெய்வத்தை தரிசிக்கப்
போகிறோம்.

இன்று இரவு 10.45க்கு ரயிலில் பயணம். பல
மாதங்களுக்கு அப்புறம் ரயில் பயணம், பத்ராசலத்திற்கு
பயணம் என்று எல்லோரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

நாளை காலை பத்ராசலம் ரோடை அடைந்த பின்
கோதாவரி ஆற்றில் பயணம்.

அங்கன யாரு அழுவுறது. அழப்டாது. அக்கா
வரும்போது குச்சி மிட்டாய் வாங்கிகிட்டு வருவேன்.
சரியா. அழாம நல்ல பிள்ளையா இருக்கணும்.



ஞாயிற்றுக்கிழமை தனது பக்தன் ராமதாஸை
காக்க வந்த ராமனின் தரிசனம்.




இக்சுவாகு குல திலகா ராமா.


போயிட்டு வந்து விளக்கமா பதிவு போடறேன்.

2 நாளைக்கு லீவு சொல்லிக்கிறேன்.

33 comments:

  1. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

    [குச்சி மிட்டாய் கொஞ்சம் அதிகமாகவே வாங்கி வாருங்கள்:). எல்லோருக்கும் வேணுமில்ல..?]

    ReplyDelete
  2. வெறும் குச்சி மிட்டாயா??? அப்ப குருவி ரொட்டி யார் வாங்கி குடுப்பா!?!?

    :(((

    ReplyDelete
  3. ஹாப்பி ஜர்னி
    என்ஜாய் பண்ணிட்டு வந்து பதிவு போட்டு தாக்குங்க!!

    ReplyDelete
  4. எனக்கு குருவி ரொட்டியும்,கரடி பொம்மையும் :)

    ReplyDelete
  5. வாங்க ராப்,

    நீங்க தான் பர்ச்டு.

    ReplyDelete
  6. 2ண்ட் 2ர்ட் எல்லாமே நீங்கதான் பாரதி.

    :)))))))))))))))))

    ReplyDelete
  7. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

    நன்றி ராமலக்ஷமி.

    ReplyDelete
  8. குச்சி மிட்டாய் கொஞ்சம் அதிகமாகவே வாங்கி வாருங்கள்:). எல்லோருக்கும் வேணுமில்ல..?]


    :))))))))))))))))

    ReplyDelete
  9. அப்ப குருவி ரொட்டி யார் வாங்கி குடுப்பா!?!?//

    குருவி ரொட்டியுமா. ஆஷிஷா லிஸ்ட்ல குருவி ரொட்டியும் எழுதிக்கோ. பக்கத்துல சிவா மாமாக்குன்னு எழுத மறக்காத.

    ReplyDelete
  10. ஹாப்பி ஜர்னி
    என்ஜாய் பண்ணிட்டு வந்து பதிவு போட்டு தாக்குங்க!!//

    நன்றி,

    கண்டிப்பா பதிவு மழைதான்.

    ReplyDelete
  11. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. குருவி ரொட்டியும்,கரடி பொம்மையும் :)

    ஆஷிஷ், குருவி ரொட்டியோட அப்துல்லா மாமாவுக்கு கரடி பொம்மைன்னு எழுதிக்க.

    (எழுதின லிஸ்ட மறக்காம வீட்டுலையே வெச்சுட்டு வந்திடு. சரியா? :)) )

    ReplyDelete
  13. //(எழுதின லிஸ்ட மறக்காம வீட்டுலையே வெச்சுட்டு வந்திடு. சரியா? :)) )
    //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  14. மங்களூர் சிவா said...
    ஹாப்பி ஜர்னி

    //

    அடுத்தவங்களுக்கு ஹாப்பி ஜெர்னி சொல்றது இருக்கட்டும் நீங்க ரெண்டு பேரும் எங்கயும் போகலயா? உங்களுக்கு நாங்க எப்ப ஹாப்பி ஜர்னி சொல்றது?

    ReplyDelete
  15. //(எழுதின லிஸ்ட மறக்காம வீட்டுலையே வெச்சுட்டு வந்திடு. சரியா? :)) )
    //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


    :))))))))))))))))))

    ReplyDelete
  16. பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

    nandri

    ReplyDelete
  17. ஹய்ய் அக்கா டூரா?

    என்ஜாய்!!!

    ReplyDelete
  18. ஹய்ய் அக்கா டூரா?//

    yessu aayilyan

    என்ஜாய்!!!


    thank u :)))))))))

    ReplyDelete
  19. நல்லபடியா போய்ட்டுவாங்க!

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. எனக்கு குருவி ரொட்டி?

    :)

    ReplyDelete
  21. சுரேகா.. said...
    எனக்கு குருவி ரொட்டி?

    :)

    //

    ஓனக்கு தர மாத்தேன் போ...எனக்கு மத்தும்தா

    ReplyDelete
  22. எனக்கு குருவி ரொட்டி?

    :)

    ReplyDelete
  23. நல்லபடியா போய்ட்டுவாங்க!

    வாழ்த்துக்கள்//

    thank u

    ReplyDelete
  24. \\அங்கன யாரு அழுவுறது. அழப்டாது. அக்கா
    வரும்போது குச்சி மிட்டாய் வாங்கிகிட்டு வருவேன்.
    சரியா. அழாம நல்ல பிள்ளையா இருக்கணும்.
    \\

    எனக்கு ரெண்டு மிட்டாய் வேணும் ;))

    ReplyDelete
  25. எல்லா மேனேஜ்மெண்ட்லயும் சிறந்த நீங்க மறந்துட்டு போமாட்டீங்க லிஸ்டை ..கரெக்டா? :)

    ReplyDelete
  26. யாருக்காவது ராமரைக் கேட்டதாச் சொல்லுங்கன்னு சொல்லத் தோணித்தா?

    நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க.

    (சும்மாவா; எத்தனை பதிவு அவரை வச்சு ஓட்டி இருக்கேன்!)

    ReplyDelete
  27. எல்லா மேனேஜ்மெண்ட்லயும் சிறந்த நீங்க மறந்துட்டு போமாட்டீங்க லிஸ்டை ..கரெக்டா? :)//

    ஆஹா முத்துலட்சுமி,

    நான் எடுத்துவெச்சா மறக்க மாட்டேன்.
    எடுத்து வெச்சது ஆஷிஷ் ஆச்சே.

    :))))

    ReplyDelete
  28. எனக்கு ரெண்டு மிட்டாய் வேணும் ;))


    குச்சி மிட்டாய் கேட்ட கோபிநாத் பெயரையும் லிஸ்டில் சேர்த்துட்டேன்.

    :)))

    ReplyDelete
  29. யாருக்காவது ராமரைக் கேட்டதாச் சொல்லுங்கன்னு சொல்லத் தோணித்தா?//

    அதானே??!!

    நான் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க.//

    கண்டிப்பாய் சொல்றேன் ரத்னேஷ்.

    ReplyDelete
  30. (சும்மாவா; எத்தனை பதிவு அவரை வச்சு ஓட்டி இருக்கேன்!)//

    அது சரி. அதான் அம்புட்டு பாசமா சாரிச்சீங்களாக்கும். (விசாரிச்சீங்களா)

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று