Monday, January 19, 2009

பூ பூத்த திருநாள்......

தெனாலி கமலஹாசனே பரவாயில்லை என்று சொல்லும்
அளவுக்கு எதற்கெடுத்தாலும் பயம்!!!!

ரோடில் போகும்போது கைகளை இறுக்க பிடித்துக்
கொள்வாள்.

தூங்கும்போது கூட அப்பா கைகளை பிடித்துக்கொள்ள
வேண்டும்.
விமான பயணங்களின் போது தந்தையும் மகளும்தான்
அருகில் அமர்ந்து கொள்வார்கள்.டேக் ஆஃப், லேண்டிங்
இரண்டின் போதும் ஒரே டயலாக் தான்.
Nana please hold my hands!!!!

இப்படி எல்லாம் பயப்படக்கூடாதம்மா என்று மெல்ல
எடுத்துச் சொல்வோம்.

ஆனான் கடந்த 6 மாதங்களாக எனக்கு பயங்கர
ஆச்சரியம்.

தானே தனியாக கீழே இறங்கிச் செல்கிறாள்.

மெல்ல ரோட்டை க்ராஸ் செய்து கடைக்கு
போய் தனக்கு தேவையானதை வாங்கி
வருகிறாள்.

4 தெரு தள்ளி இருக்கும் டைலர் கடைக்கு
தான் தான் தனியே போவேன் என்று
அடம்பிடிக்கிறாள்(!!!)

10 நாள் முன்பு வீட்டுக்கு அருகில் இருக்கும்
ஷ்டேஷனரி ஷாபில் மேப் இல்லையென்று
மெயின் ரோடை க்ராஸ் செய்து போய்
வாங்கிவந்திருக்கிறாள்!!!!!

எங்கே போயிற்று அந்த பயம்??


நான் வளர்கிறேனே மம்மி என்று
சொல்லாமல் சொல்கின்றன அவளது
செயல்கள்!!

அண்ணனுடன் தனக்கும் தனி ரூம்
வேண்டுமென்று போட்டி போடுகிறாள்!!

நானே செய்து கொள்வேன்! என்று
சொல்லி செய்கிறாள்.

ஓ!! என் அம்மா வளர்ந்துவிட்டாள்.

இன்று எங்கள் அம்ருதம்மாவிற்கு
பிறந்தநாள்.

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு
வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.


35 comments:

  1. அம்ருதாவிற்க்கு இனிய வாழ்த்துக்களும்....போட்டொ போடாததற்க்கு உங்களுக்கு எனது சிறிய கண்டனங்களும்.

    ReplyDelete
  2. பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)))))

    ReplyDelete
  3. வாங்க ஜமால்,

    வளமை போல் முதலில் நீங்கள்.

    வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. போட்டோ போட யோசனையா இருக்கு.

    நெட்டில் ஏதும் ஏடாகூடாமாக்கிடுவோங்களன்னுதான் யோசிக்கறேன்.

    வாழ்த்திற்கு நன்றிகள்

    ReplyDelete
  5. ஸ்கூல் போயிருக்காங்க. வந்தவுடன்

    பாப்பாவுக்கு வாழ்த்தைச் சொல்லிடறேன் ஆயில்யன்.

    ReplyDelete
  6. அம்ருதா பாப்பாவுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. //போட்டோ போட யோசனையா இருக்கு.
    //

    போட வேண்டாம்.

    ReplyDelete
  8. உங்கள் செல்ல அம்ருதாவிற்கு எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் !!!!!

    ReplyDelete
  9. போட வேண்டாம்.//

    :) நிச்சயம் போட மாட்டேன்.

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சஞ்சய்.

    ReplyDelete
  10. வாழ்த்திற்கு மிக்க நன்றி செய்யது.

    ReplyDelete
  11. அம்ருதாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    //எங்கே போயிற்று அந்த பயம்??
    மிக நன்று.

    ReplyDelete
  12. பாப்பா'விற்கு வாழ்த்துக்கள் சொல்லிருங்க... :)

    ReplyDelete
  13. அம்ருதாவுக்கு மறுபடி சொல்லிக் கொள்கிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வாங்க அமுதா,

    தைரியம் எப்பொழுது வந்தது என்பது எனக்கே புரியவில்லை.

    பிள்ளைகளின் வளர்ச்சி சில நேரம் தெரிவதில்லை.

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    ReplyDelete
  15. பாப்பா'விற்கு வாழ்த்துக்கள் சொல்லிருங்க... //

    கண்டிப்பா சொல்லிடறேன். நன்றி இராம்

    ReplyDelete
  16. வாங்க அபிஅப்பா,

    ரெம்ப நாள் கழிச்சு க்ரெக்டா வாழ்த்துச் சொல்ல வந்திருக்கீங்க.

    மிக்க நன்றி

    ReplyDelete
  17. வலையுலக்க கவிக்குயிலுக்கு இங்கேயும் என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கறேன்.

    ReplyDelete
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. டிரான்சிட்டில் இருந்தாலும் வாழ்த்துச் சொன்னதை மறக்காமல் சொல்லிவிடுவேன் அப்துல்லா.

    ReplyDelete
  20. தனிப்பதிவே போட்டு கலக்கியிருக்கீங்க. நன்றி நிஜமா நல்லவன்.

    ReplyDelete
  21. அம்ருதாவிற்கு இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  22. அழகுப்பதிவு.. வாழ்த்துகள் பெரிய தென்றலுக்கும் குட்டித் தென்றலுக்கும்.!

    ReplyDelete
  23. அன்பு அம்ருதாவுக்கு
    வாழ்த்துக்கள்!

    உன் அக்கறையை
    என்றும் மறவேன்..!

    நல்லா இருப்படா!!!

    ReplyDelete
  24. பாப்பவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க அக்கா

    ReplyDelete
  25. வாங்க சந்தனமுல்லை,

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  26. வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி தாமிரா.

    ReplyDelete
  27. நல்லா இருப்படா!!!//

    இந்த ஆசிர்வாதம் பிள்ளைக்கு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி சுரேகா.

    ReplyDelete
  28. இயற்கையின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  29. சொல்லிடறேன் அத்திரி,

    மிக்க நன்றி.

    ReplyDelete
  30. Happy Birthday da Chellam,

    And my best wishes for u da thangam,

    The world is in your hand only da

    ReplyDelete
  31. அருமையான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள் மோனிபுவன் அம்மா.

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று