Wednesday, January 13, 2010

சந்தோஷமான செய்தி

மறைந்த மாமாவின ஆசிர்வாதம்,
ஆண்டவனின் பரிபூரண அருள் எங்கள் வீட்டில்
புது வரவு. ஆமாம். நான் பாட்டி ஆகிவிட்டேன். :))

அயித்தானின் அண்ணன் மகனுக்கு இன்று பெண்குழந்தை
பிறந்துள்ளது. எங்களுக்கு பேத்தி.

சந்தோஷமான இந்த விடயத்தை அனைவரிடமும்
பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

மாமாவின் ஸ்தானத்தில் இருந்து எங்கள் கடமைகளைச்
செய்ய மாமாவின் ஆசிகள் எப்போதும் கிடைக்க வேண்டும்.

குழந்தைக்கு ஆண்டவன் அருள் புரிந்து எல்லா வளமும் பெற
பெரியவர்கள் உங்கள் ஆசியும் வேண்டும்.

27 comments:

  1. குழந்தை நலமே நீடூழி வாழ இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் தைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. குழந்தை எல்லா நலங்களும் பெற வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி

    இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

    ReplyDelete
  4. புது வரவுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அப்போ இனி புதுகை பாட்டியா..??

    வாழ்த்துகள் பாட்டி..

    ReplyDelete
  7. பாட்டிக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள்..

    :)))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் பாட்டின்னு சொல்லணுமா இல்லை பாட்டியானதுக்கு வாழ்த்துக்கள்னு சொல்லணுமா :)

    ReplyDelete
  9. குட்டி தேவதைக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)))

    ReplyDelete
  10. வாழ்த்துகள் பாட்டி ;)

    ReplyDelete
  11. அன்பின் பாட்டி

    நல்வாழ்த்துகள்

    பேத்தி எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ நல்வாழ்த்துகள்

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  12. பொங்கல் நாளில் நல்ல செய்தி சொல்லி இருக்கிறீர்கள். எங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்துகள் பாட்டி :-)

    Great grandma!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்!!

    நான் அக்கான்னு கூப்பிட்டதுக்கே பர்த் சர்டிஃபிகேட் ஆதாரத்தோட அக்கா இல்லைன்னு நிரூபிச்சீங்க!! இப்ப பாட்டின்னு கூப்பிடறவங்களுக்கு என்ன சொல்வீங்க?

    ;-D

    ReplyDelete
  15. வாழ்த்துகள் பாட்டி ;)

    ReplyDelete
  16. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  17. நான் அக்கான்னு கூப்பிட்டதுக்கே பர்த் சர்டிஃபிகேட் ஆதாரத்தோட அக்கா இல்லைன்னு நிரூபிச்சீங்க!! இப்ப பாட்டின்னு கூப்பிடறவங்களுக்கு என்ன சொல்வீங்க?//

    :)) சின்ன வயசுலேயே பெரிய பொறுப்புக்களை ஆண்டவன் கொடுத்திட்டான். 25 வயதில் மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன்.(பெரியவரின் மகள்) இளைய மருமகள் என்றாலும் பெரிய மருமகளின் பொறுப்புக்கள் எப்போதும் எனக்கு.

    எனக்கே சில சமயம் வேடிக்கையாக இருக்கும் என்னைவிட 6 மாதம் சின்னவரான பெரியவரின் மகன் என்னை சித்தி என்றழைப்பதும், என்னைவிட 5 வயது பெரியவரான மருமகன்!! காலில் விழுந்து வணங்குவதும் கொடுமையாக இருந்தது.

    மாமா சொன்னது உன் வயது சிறியது என்று நினைக்காதே உன் ஸ்தானம் பெரியது!!

    அவரின் வார்த்தைகள் இப்போதும் ஓடிக்கொண்டிருப்பதால்தான் கலாட்டா செய்யும் நட்புக்கள் என தெரிந்தும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டேன்.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் பாட்டி!!!

    ReplyDelete
  19. அது என்ன தென்றல், எப்பவும் என் கமெண்டுக்கு மட்டும் விளக்கமான பதில்? அவ்வளவு பிடிக்குமா என்னை? தேங்ஸ்!!

    //மாமா சொன்னது உன் வயது சிறியது என்று நினைக்காதே உன் ஸ்தானம் பெரியது!!//
    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து.... தெரிந்திருக்கிறது அவர்களுக்கு!!

    ReplyDelete
  20. மாமா சொன்னது உன் வயது சிறியது என்று நினைக்காதே உன் ஸ்தானம் பெரியது!!]]

    கிரேட்டுக்கா ...

    ReplyDelete
  21. அது என்ன தென்றல், எப்பவும் என் கமெண்டுக்கு மட்டும் விளக்கமான பதில்? அவ்வளவு பிடிக்குமா என்னை?

    பேசமுடியும்னு நினைக்கறவங்க கிட்டதானே விளாவாரியா பேச முடியும்.

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து.... தெரிந்திருக்கிறது அவர்களுக்கு!!//
    எல்லா விடயங்களிலும் அவர் ஒரு தீர்க்க தரிசி
    அப்படி ஒரு நல்ல மனிதரோடு அதிக நாள் உறவாட கொடுத்துவைக்கவில்லை. மாமா போய் 10 மாதம் ஆகிறது.

    ReplyDelete
  22. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

    ReplyDelete
  23. ரொம்ப சந்தோஷம் புதுகைத் தென்றல்.
    -வித்யா

    ReplyDelete
  24. புதிதாய் பிறந்த செல்லத்துக்கு ஹாப்பி பர்த்டே..!!

    புதிதாய் பிறந்த பாட்டிக்கும் ஹாப்பி பர்த்டே..!!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று