Tuesday, February 07, 2012

நலம் பெற பிராத்தனை..

எதேச்சையாக டீவி9 பார்த்த பொழுது பிரபல பாடகி எஸ்.ஜானகி
அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்தி
இருந்தது.நெட்டில் இதுபற்றி தெரிய தேடினால் ஏதும் தெரியவில்லை.
ஆனால் டிவி9ன் செய்தி இதுதான்.

இன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்காக திருப்பதி வந்திருக்கிறார்
ஜானகிம்மா. காலை அவர் தங்கியிருந்த ஹோட்டலின்
பாத்ரூமில் கால் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு
உடன் மருத்துவமனிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
சீ.டி.ஸ்கேன் எடுத்து பார்த்ததில் தலையில் இரத்தம்
உறைந்திருப்பதாக மட்டும் தெரிந்தது என செய்தி சொல்கிறது.
இது பற்றி எந்த மருத்துவ ரிப்போர்ட்டும் வெளியே வரவில்லை.

தன் இனிமையான குரலால் மகிழ்வித்த இந்தக் குயிலுக்காக
பிராத்தியுங்கள்.





எந்த பிரச்சனையும் இல்லாமல் திரும்பி வந்து எல்லாரையும்
தன் குரலால் மகிழ்விக்க வேண்டி அந்த இறைவனை
பிராத்திக்கிறேன். மேற்படி தகவல்கள் ஏதும் கிடைத்தால்
உடன் பகிர்கிறேன்.


9 comments:

  1. ஜானகியம்மா விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. ஜானகி அவர்கள் குணமாக கடவுளிடம் வேண்டுவோம்

    ReplyDelete
  3. ஜானகி அம்மா மீண்டு வரப் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  4. இனிய அவர்களின் சேவை....
    இசை உலகத்திற்கு தேவை...
    இனிதே நலம் பெற வேண்டுகின்றோம்....

    ReplyDelete
  5. ஜானகி அம்மா விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்....

    ReplyDelete
  6. ஓ.... இன்றா?

    ஜானகிம்மா குணமாகி இன்னும் நம்மிடையே இருந்து நல்ல பாடல்கள் தர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  7. ஜானகிம்மாவின் உடல்நிலை பரவாயில்லை. மூளையில் இருந்த அடைப்பை எடுத்து விட்டார்கள். அபாயம் ஏதுமில்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அநேகமாக இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள் என்று தகவல்.

    இறைவனுக்கு நன்றி

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று