Tuesday, December 15, 2009

சமையற்குறிப்பு



திருமணம் நிச்சயம் ஆனதும் அம்மம்மாவிடம்தான் சமையல் கற்றுக்கொண்டேன். முதன் முதலில் அம்மா (நான் அப்படித்தான் அழைப்பேன்) தந்த சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக.


1.அடுக்களையில் நுழையும் முன் உன் கோபதாபங்களை மூட்டை கட்டி வைத்து விடு.


2. மனது அமைதியாக இருந்தால் தான் சமையலில் மனம் லயிக்கும்.


3. ரசித்து சமை! ருசியாக இருக்கும்.


4. தேநீர் கலந்தாலும் பால், சர்க்கரை, டீத்தூளுடன் 2 spoon அன்பையும் கலந்து பரிமாறு.


5. அன்பான, இனிமையான மனத்துடன் தயாரிக்கப்படும் எந்த உணவும் அமிர்தத்திற்கு சமானம். இல்லையேல் அது விஷமாகி விடும்.


இந்த சமையற்குறிப்பை நான் இன்று வரை கடை பிடிக்கிறேன்.



என் அடுக்களையைய் அலங்கரிக்கும் அடுக்களை பிரார்த்தனை. இதோ.

MY KITCHEN PRAYER
MY KITCHEN IS A HEAVEN THAT'S MINE AND MINE ALONE
BUT ALL WILL GET A WELCOME HERE, THE WARMEST THEY HAVE KNOWN.
SO, GOD I ASK YOU KINDLY TO BLESS THIS HALLOWED SPOT
WHERE I PERFORM GREAT MIRACLES WITH OVEN, PAN AND POT.
PLEASE ALSO BLESS MY COOKING SO THAT EACH MEAL I MAKE
BRINGS DEEPEST SATISFACTION TO ALL WHO MIGHT PARTAKE.
AND NOW GOD LET ME OFFER MY WARMEST THANKS TO YOU
FOR GRANTING US, OUR DAILY BREAD AND OTHER BLESSINGS TOO...


யாரோ சொன்னது:
A RECIPIE IS ONLY A THEME, WHICH AN
INTELLIGENT COOK CAN PLAY EACH TIME WITH VARIATION".


புத்திசாலித்தனம், சுவை, கற்பனனத்திறன்
ஆகியவை சமையற்கலையில் முழுதும்
பயன் படுத்தபடுகிறது.

27 comments:

  1. சரியாச் சொன்னீங்க. கோவத்தோட சமைக்கும்போது சுத்தமா நல்லா வராது.

    //A RECIPIE IS ONLY A THEME, WHICH AN
    INTELLIGENT COOK CAN PLAY EACH TIME WITH VARIATION//

    நான் போடற டீ கூட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் தென்றல். அப்ப நானும் இண்டெலிஜண்ட் குக்தானே?

    ReplyDelete
  2. அன்பின் தென்றல்

    உண்மை உண்மை - சமையல் கலை மட்டுமல்ல - எந்தக் கலையையும் முழு ஈடுபாட்டுடன் - சிறிது மகிழ்ச்சியுடன் ( அன்புடன் ) செய்தால் அக்கலை சிறக்கும்.

    நல்ல சிந்தனை - நல்ல குறிப்பு - கடைப்பிடிக்கும் மனநிலை அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நான் போடற டீ கூட ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் தென்றல். அப்ப நானும் இண்டெலிஜண்ட் குக்தானே?//


    ஆமான்னு நான் சொல்வேன், வேற யாராவது வந்து உங்க ரங்க்ஸை கேக்கணும்னு சொல்வாங்க.

    :))

    ReplyDelete
  4. ஆமாம் சீனா சார்,

    ரொம்பச் சரியா சொன்னீங்க.

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  5. சரியாச் சொன்னீங்க. கோவத்தோட சமைக்கும்போது சுத்தமா நல்லா வராது.//

    சில பேர் தன்னோட கோவத்தை சப்பாத்திக்கு மாவு பிசையும்போது கட்டினா மாவு நல்லா வரும்னு சொல்வாங்க.
    அது ரொம்ப தப்பாம். நம் கைகளின் மூலமா நெகட்டிவிட்டி உணவில் பரவி அது உண்பவர்களுக்கும் தாக்கத்தைத் தருமாம்.

    ReplyDelete
  6. நல்லா 'ஆக்கிட்டீங்க'!

    செஞ்சுருவோம்!

    ReplyDelete
  7. அன்பு தென்றல், அருமையான வாக்கியங்கள். எங்க அம்மா சமைப்பதைப் பார்க்கும் போதும், எங்க பாட்டி ஒரு சிறிய தையல் இலையில்
    உண்ணும் அழகைக் காணும்போதும் நமக்கே ஆசையாக இருக்கும். பாட்டியையாவது கட்டிக் கொள்வேன்.
    அம்மாவைத் தொடுவதோடு சரி. ஒவ்வொரு தோசை வார்த்துப் போடும்போதும் இன்னோண்ணு சாப்பிடறியான்னு
    கேட்கிற அன்பு ஒவ்வொரு அம்மாவுக்கும்,சமைப்பவர் யாராக இருந்தாலும் வேணும். அடுக்களைச் சுத்தம்,அடுப்பு சுத்தம்
    அதன் மேல் கோலமிடும் அழகு,வெண்கலப் பானையை அடுப்பில் ஏற்றும்போதே இன்னிக்கு சமையல் நல்லதா இருக்கணும்
    என்கிற நினைப்பு என்று, எல்லாம் செய்வார்கள்.
    அவர்கள் கொடுப்பது ரசமோ, வெறும் பொரித்த கூட்டோ எதுவானாலும் பரிமளிக்கும். மிகவும் நன்றி தென்றல்.

    ReplyDelete
  8. உங்க‌ அம்மா கொடுத்த‌ டிப்ஸ் உண்மையிலேயே அருமைங்க‌. நீங்க‌ ந‌ல்லா ச‌மைப்பீங்க‌ளா?

    ReplyDelete
  9. //அன்பான, இனிமையான மனத்துடன் தயாரிக்கப்படும் எந்த உணவும் அமிர்தத்திற்கு சமானம். இல்லையேல் அது விஷமாகி விடும்//

    டாப்பு
    அதான் எங்க‌ க‌ம்பெனி கேண்டீன்ல‌ ந‌ல்லாவே இல்ல‌ போலிருக்கு ):

    ReplyDelete
  10. தட்டுல இருக்கிறது நீங்க சமைச்சதா..ஹி ஹி.

    ReplyDelete
  11. ம்ம்ம்ம்.. இந்த பதிவு ரொம்ப சுவையா இருக்குதுங்க.

    ReplyDelete
  12. நல்லா 'ஆக்கிட்டீங்க'//

    நன்றி டீச்சர் :)

    ReplyDelete
  13. வாங்க வல்லிம்மா,

    எங்க அம்மம்மா சமையலில் க்வீனு.
    அவங்க மாதிரியே சமைக்கணும்னு கத்துக்க ஆரம்பிச்சேன்.

    சங்கராபரணம் சினிமாவில் மஞ்சு பார்கவி சமைக்க ஆரம்பிக்கும்போது அடுப்பை வணங்கி, அரிசியை சுத்தி போட்டு தான் சமையலை ஆரம்பிப்பாங்க. அம்மம்மாகிட்ட கேட்டபோது சொன்னது “இன்றைய சமையல் நல்லா வரணும்னு அக்னி தேவனுக்கு பிரார்த்தனை செய்யனும்னு”

    வருகைக்கு மிக்க நன்றிம்மா

    ReplyDelete
  14. வாங்க மஹா,

    டிப்ஸ் கொடுதது அம்மம்மா(அம்மாவோட அம்மா)

    நான் நல்லாவே சமைப்பேன். இப்ப கூட பிள்ளைகளுக்கு சர்ப்ரைஸா “காண்ட்லி” குஜராத்தி டிஷ் செஞ்சு கொடுத்து ரெண்டு பசங்களும் முத்த மழைதான் :)))

    ReplyDelete
  15. வாங்க கரிசல்காரன்,

    வீட்டுல மோர் சோறு, ஊறுகாய் சாப்பிட்டாலும் வயிறு நிறைய்யறதுக்கும் கடைச்சாப்பாட்டில் வயிறு நிறையாததற்கும் காரணம் வீட்டுச் சாப்பாடு அன்பால் நிறைஞ்சது, கடைச்சாப்பாடு கடமைக்காக சமைக்கபப்டுவது.

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. தட்டுல இருக்கறது நெட்டுல சுட்டது வித்யா

    :))

    ReplyDelete
  17. //சமையல் கலை மட்டுமல்ல - எந்தக் கலையையும் முழு ஈடுபாட்டுடன் - சிறிது மகிழ்ச்சியுடன் ( அன்புடன் ) செய்தால் அக்கலை சிறக்கும்.//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்!!!!!

    அடுப்பில் அதிக நேரம் விட்டால் உணவு கெட்டுவிடும்..
    கோபத்தை அதிக நேரம் மனதில் விட்டால்..
    நம் சூழ்நிலைகள் கெட்டுவிடும்..!!

    இது நம்ம அடுவைஸு!!

    ReplyDelete
  18. அப்போ எங்க வீட்டில சமையல் நல்லாயில்லேன்ன அவங்க கோவமா இருக்காங்காங்கன்னு அர்த்தமா..??

    ReplyDelete
  19. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரங்கா

    ReplyDelete
  20. மனது நல்லா இருந்தா தானே செய்யும் செயல் சிறப்பா இருக்கும் சூர்யா.

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. இதே பழைய இடுகையில நான் போட்ட பின்னூட்டத்தை மீள் பின்னூட்டமா போட்டுக்கங்க :)

    ReplyDelete
  22. உண்மை தான்

    சமையல் ஒரு மிகப்பெரும் கலை

    வாழ்வின் பெரும் பகுதியை இந்த கலை தான் கொண்டு செல்கின்றது.

    ----------------------

    உலகிலே ஆண்களே அதிகம் சமைக்கின்றார்கள் - அதிலே சுவை கூடுதலாகவே இருக்கின்றது (அநேகர்(பெண்களும்) ரெஸ்ட்டாரண்டிலே விரும்பி சாப்பிடுவது இதால் தான்)

    ஆனால் வீட்டிலே தாயோ, சகோதரியோ, மனைவியோ - ஏதோ ஒரு வடிவத்தில் பெண் சமைப்பதில் சுவை மட்டுமல்லாது வலையல் சத்தமும், அன்பும், பாசமும் அதிகமாகவே இருக்கின்றது.

    ReplyDelete
  23. இதே பழைய இடுகையில நான் போட்ட பின்னூட்டத்தை மீள் பின்னூட்டமா போட்டுக்கங்க //

    இப்ப ஸ்மைலி நான் போட்டுக்கணும். இந்தப் பதிவு என்னுடைய நாலாவது பதிவு(20.11.07). அப்பல்லாம் என் பிளாக் பக்கம் நீங்க வந்ததே இல்லை:)

    ReplyDelete
  24. வாங்க ஜமால்,

    ஆண்களும் சமையலில் வல்லுனர்களே. நள பாகம் என்றே பேர்.

    //அதிலே சுவை கூடுதலாகவே இருக்கின்றது (அநேகர்(பெண்களும்) ரெஸ்ட்டாரண்டிலே விரும்பி சாப்பிடுவது இதால் தான்)//

    அப்படி நினைச்சிட்டீங்களா நீங்க. நெஜம் என்னன்னா? தினத்துக்கும் அடுப்படில நின்னு சமைச்சு அலுத்து போய் ஒரு வாய் சோறு வேற யாரும் சமைச்சு தர மாட்டாங்களான்ன்னு கிடக்கும் பொண்ணு ஹோட்டல்ல சாப்பிடும்.

    ReplyDelete
  25. தென்றல் நீங்க சொன்ன மஞ்சு பார்கவி போல நெதம் சுத்திப் போடலைன்னாலும் தீபாவளி பலகாரம்,தைப் பொங்கல்னு செய்யும் போது பிள் ளையாரப்பா னு நெனைச்சுக்குவேன்.

    ReplyDelete
  26. அப்படியா குட் கண்மணி,

    வருகைக்கு நன்றி

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று