Tuesday, April 28, 2009

தென்றல் அப்டேட்ஸ்

இன்னைக்கு Friday, நாளைக்கு saturday
sunday அன்னைக்கு சர்ப்ரைஸ்னு பிள்ளைகள
மண்டை காய வெச்சு புலம்ப விட்டாச்சு.

”ஞாயிற்றுக்கிழமை காலையில ரயில்வே ஷ்டேஷன்
போறோம்”!
எதுக்கு?

”அப்பாவோட ப்ரெண்ட் வர்றாங்க!!” இப்படி நிறைய்ய
குழப்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் சார்மினாரில்
வந்திறங்கிய அம்மம்மா, தாத்தா பார்த்து ஒரேகுஷி.

“நான் அப்பவேநினைச்சேன்!! தாத்தா தான் வர்றாங்கன்னு”

அம்மா தாத்தா மாதிரி டயலாக் சொல்லும்பொழுதே
லேசா டவுட் வந்துச்சு!!!

என டயலாக் பேசி ஒரே சந்தோஷமான வரவேற்பு
தாத்தா, அம்மம்மாவுக்கு.

********************************************

அம்மம்மா, தாத்தா வந்ததிலிருந்து இரண்டு
நாளாக நம்மளை யாரும் கண்டுக்கவேயில்லை!!!
:((

இருங்கடீ!! எங்க அம்மம்மாவும் அடுத்த வாரம்
வருவாங்கள்ல!! அப்ப பாத்துக்கலாம்னு
சொன்னாலும்

பாம்பே அவ்வா எங்களுக்கும் அவ்வா,
நாங்க அப்பவும் எஞ்சாய் செய்வோம்!!”னு
என் கூட போட்டியாக அதிரடியாய் பதில் வருது.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

*****************************************

இந்த அப்பா அம்மாக்களே சுத்த மோசம்!!!

நாங்க சின்ன புள்ளைங்களா இருந்தப்ப நின்னா
குத்தம், உக்காந்தா குத்தம், சினிமா பாட்டு
பாடினா குத்தம்னு சட்டம் போட்டவங்க

இப்ப பேரன், பேத்தி செய்யறதெல்லாம் பாத்து
முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுது.

கேட்டாக்க” பாலைவிட பாலாடைதான் ருசின்னு!!”
டயலாக் வருது.

******************************************

அம்மா, அப்பா வந்திருப்பதாலும், விருந்தினர்கள்
வரப்போவதாலும் லீவு சொல்லிக்கறேன்.

1 வாரம்தான் லீவு அப்புறம் வந்திடுவேன். :)))

17 comments:

  1. //கேட்டாக்க” பாலைவிட பாலாடைதான் ருசின்னு!!”
    டயலாக் வருது.

    //

    ஆஹா!ஆஹா!

    :)))

    ReplyDelete
  2. சந்தோஷமா அனுபவிங்க!!!!

    ReplyDelete
  3. //இப்ப பேரன், பேத்தி செய்யறதெல்லாம் பாத்து முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுது.//

    :)

    ReplyDelete
  4. //அம்மம்மா, தாத்தா பார்த்து ஒரேகுஷி.//

    சூப்ப்பரேய்ய்ய்ய்ய்ய்! :)))

    ReplyDelete
  5. //அம்மா தாத்தா மாதிரி டயலாக் சொல்லும்பொழுதே
    லேசா டவுட் வந்துச்சு!!!
    //

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. //நாங்க சின்ன புள்ளைங்களா இருந்தப்ப நின்னா
    குத்தம், உக்காந்தா குத்தம், சினிமா பாட்டு
    பாடினா குத்தம்னு சட்டம் போட்டவங்க///


    ஒ.கே பாஸ் மன்னிச்சு விடுங்க! அதுக்கு பதிலா பழிவாங்குற மாதிரி கிச்சன்ல எதாச்சும் புதுசா செஞ்சு அவுங்களை பயமுறுத்திடாதீங்க என்ன...? :))))

    ReplyDelete
  8. //1 வாரம்தான் லீவு அப்புறம் வந்திடுவேன். :)))//


    விட்டாச்சு லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

    (அட பாஸு மனசுல ஓடினதுதான் இங்க சொன்னேன்!)

    என் ஜாய் பண்ணுங்க பாஸ்!

    ReplyDelete
  9. என்சாய் பண்ணுங்க சிஸ்டர்:)

    ReplyDelete
  10. அருமை :)

    என்ஜாய் :)

    ReplyDelete
  11. வாங்க ராமலக்‌ஷ்மி, அப்துல்லா,அபிஅப்பா,மணிநேரன்,ஆயில்யன்,
    ஆகாயநதி,வித்யா, எஸ்.கே,அமிர்தவர்ஷினி அம்மா

    எல்லோருக்கும் நன்றி

    ReplyDelete
  12. "பேரன், பேத்தி செய்யறதெல்லாம் பாத்து முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு"

    தாத்தா பாட்டிகளே இப்படித்தான். மகிழுங்கள்.

    ReplyDelete
  13. /
    நாங்க சின்ன புள்ளைங்களா இருந்தப்ப நின்னா
    குத்தம், உக்காந்தா குத்தம், சினிமா பாட்டு
    பாடினா குத்தம்னு சட்டம் போட்டவங்க

    இப்ப பேரன், பேத்தி செய்யறதெல்லாம் பாத்து
    முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியுது.
    /

    எங்க வீட்டுலதான் அப்படின்னு நான் நினைச்சேன். எல்லார் வீட்டுலயும் அப்படித்தானா?

    :))))))))))

    என்ஜாய்!

    ReplyDelete

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று