Tuesday, January 08, 2013

தொடரும் மர்மம்......

கால் டாக்ஸி வந்து வாசல்ல நிக்குது... மூட்டைகள் ரெடி. நாங்களும் ரெடியாகிட்டோம். ஸ்டேடஸ் செக் செஞ்சா வெயிட்லிஸ்டட்னே காட்டுது. :(( கொஞ்ச நேரத்துல சார்ட் தாயாராகிடிச்சுன்னு காட்டி வெயிட் லிஸ்ட் 4,5,6,7ல வந்து நின்னுடிச்சு.  ஆர் ஏசின்னாலாவது ட்ரையினில் ஏறலாம். ஆனா
வெயிட்லிஸ்ட்னா முடியாது. அதனால அயித்தான் அவங்க நண்பருக்கு போன்
செஞ்சு கேட்டப்ப அவரும் அயித்தானுக்கு ட்ரை செஞ்சுகிட்டு இருந்திருக்காரு.

கிறிஸ்துமஸ் நேரம் என்பதாலும் வாரக்கடைசி என்பதாலும் அவரால
ஏதும் செய்ய முடியலை. :(( அயித்தான் கார்காரரை அனுப்பி வெச்சிட்டு
வந்திட்டாங்க.  எல்லோருக்கும் பயங்கர மூட் அவுட்.

லோனாவாலா ஹோட்டலுக்கு போன் செஞ்சு வரமுடியாம போனதை சொல்லி புக்கிங்கை கேன்சல் செஞ்சோம்.  சூப்பர் ஹோட்டல் அது. :(
செம வருத்தத்தோட பசங்க இருந்தாங்க. அவங்க கிட்ட பேசினதும்
தெரியும்மா..... ஆனா ரொம்ப ப்ளானோட இருந்தோம். எஞ்சாய் செய்யலாமேன்னு ஆசையா இருந்தது. நடக்கலைன்னு நினைக்கும்போது
கஷ்டமா இருக்குன்னு சொன்னாங்க. 3 நாள் கிச்சனுக்கு லீவுன்னு நானும்
நினைச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு வருத்தம் தான். அயித்தானுக்கு
இந்த ப்ரேக் ரொம்ப தேவை!!!

நாம ஒண்ணு நினைக்க தெய்வம் ஒண்ணு நினைக்கும்னு சும்மாவா
சொன்னாங்க.  இரவு உணவு செஞ்சு வெச்சிருந்ததை சாப்பிட்டோம்.
பசங்களை வெளிய அழைச்சுகிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்னு
அயித்தான் சொல்ல கிளம்பினோம். வேற எங்கயாவது இங்க கிட்டத்துல
போகலாமேன்னு ஒரு ஐடியா வந்தது.

ஆனா விடுமுறை சமயம் என்பதால எல்லா இடத்துலயும் புக் ஆகியிருக்கும்.
அதனாலத்தான் இலங்கைக்கு ஒரு விசிட் போகலாம்னு நினைச்சு ஹோட்டல் எல்லாம் ஃபுல் என்பதால லோனாவாலாக்கு திட்டம் போட்டோம். இங்கயும்
அதே நிலைதான். கேட்ட இடத்துல எல்லாம் ரூம் இல்லைன்னு சொல்லிட்டாங்க.  அயித்தான் லீவு போடறதே பெருசு. இதுல இப்ப அந்த
லீவை கேன்சல் செஞ்சிட்டு வேலைக்கு போகணும்னு கொடுமை. ஒரு மாதிரி
ஹாலிடே மூடுக்கு செட் ஆகிருந்தோம் எல்லோரும்.

ஆனா அயித்தானும் பசங்களும் ஒரு விஷயத்துல மட்டும் கறாரா இருந்தாங்க. அது கிச்சனுக்கு மூடு விழா நடத்தினது நடத்தினதுதான். எங்கயும் போகாட்டியும் சமையல் இல்லை... சாப்பாடு வரவழைப்போம்,, இல்லாட்டி நாம அங்க போய் சாப்பிடுவோம் என்பதுதான்.

அப்புறம் ஒரு ஐடியா தோணினிச்சு. எங்க உறவுக்காரப்பையர்
இங்கே 30 கிமீ தூரத்தில் இருக்கு ரெசார்ட்டின் விற்பனை பிரிவுல
வேலை செய்யறாப்ல. அவரை ஏதும் கேட்டுபாப்போம்னு ஃபோன்
செஞ்சா மொபைல் ஸ்விச் ஆஃப்..... 1 மணி நேரம் கழிச்சு தான் மேனேஜர்
ரூம்ல மீட்டிங்கில் இருந்ததா சொல்லி ஃபோன் செஞ்சாப்ல.

உங்க ரெசார்ட்ல ரூம் கிடைக்குமா? அப்படின்னு கேட்டோம்.
கிறிஸ்துமஸுக்கு முந்தைய வார இறுதியாச்சே!!! டவுட்தான்னு
சொன்னார். ஆனாலும் விசாரிச்சு சொல்வதா சொல்ல  அவருடைய
ஃபோனுக்கு ஆவலுடன் எதிர் பார்த்து காத்துக்கிட்டு இருந்தோம்.

ஃபோன் வந்துச்சா..... என்ன சொன்னாப்ல? போனோமா? இல்லையா?
எல்லாம் அடுத்த பதிவுல சொல்றேன்.

குட் நைட் :)


 

4 comments:

Unknown said...

nichayamaga poithaan irupeega:-).... appadithaaney?

pudugaithendral said...

வாங்க ஃபாயிஷா,

சொல்றேன் சொல்றேன்.... :))

வருகைக்கு மிக்க நன்றி

Pandian R said...

மூன்று கட்டுரைகளும் அருமை

pudugaithendral said...

மிக்க நன்றி ஃபண்டூ