Showing posts with label colour of the year. Show all posts
Showing posts with label colour of the year. Show all posts

Saturday, December 31, 2016

2017ஆம் வருடத்தின் நிறமென்ன.

இன்று 2016ன் கடைசி நாள். ஒவ்வொரு வருஷமும் முடியும் போது பல சமயம் அலுப்பா இருக்கும். இந்த வருடம் முடிஞ்சா போதும்னு நினைச்ச வருடங்களும் உண்டு. புரட்டி எடுத்த வருடங்கள்னு சொல்லலாம். ஆனா 2016 எனக்கு மிக நல்ல வருடம்.

துவண்டு போயிருந்த நான் என்னை மீட்டெடுக்கணும்னு ஆரம்பிச்சேன். நாம கேட்பதை பிரபஞ்ச சக்தி கொடுக்கும் என்பதை உறுதி படுத்திக்கொண்ட வருஷம் 2016. என்னை மீட்டெடுக்கணும், ஆனா எப்படின்னு தெரியலை. இந்த சமயத்துல தான் எனக்கு சில கோர்ஸ்கள் வாட்சப் மூலமா செய்யும் வாய்ப்பு கிடைச்சது. ஹீலிங் கோர்ஸ்கள்.

என்னை எனக்கு புரிய வைத்து என் காயங்களுக்கு மருந்து போட்டு என்னை மீட்டெடுத்த அந்த வகுப்புக்களை நடத்திய என் ஆசான்களுக்கு நன்றி. அதிலும் பழையதை விட்டொழிது மன்னிப்பே கேட்காதவர்களையும் மன்னிக்கும் சக்தியை உருவாக்கி அந்த frogivenss course நடத்திய ரத்தி படேல் மேடம்மிற்கும், ஹூஓனோபோனோ மூலம் forgiveness சொல்லிக்கொடுத்த kanchan sharmaவிற்கும் மிக்க நன்றி. இவர்களின் வழிநடத்தலால்  60 பர்சண்ட் தேறிட்டேன். வாட்சப்பில் சூரிய நமஸ்காரம் சொல்லிக்கொடுத்த குரு விஜிக்கும் நன்றிகள். நானும் 108 சூர்ய நமஸ்காரம் செய்தேன் என்பதே மிகப்பெரிய ஆச்சரியம். இப்போ இவர்களின் உதவியால் 75 சதவிகிதம் நல்ல முன்னேற்றம்.

பழைய படி சுறுசுறுப்பாக பதிவெழுதி, ஹீலிங் கேட்பவர்களுக்கு உதவி செய்துன்னு இனிமையான துவக்கம். கற்றுக்கொண்டவைகளி விடாம தொடர்வதுதான் முழுமையா என்னை குணமாக்கும் என்று புரிந்ததுடன் நமக்கான வாழ்க்கையை நாம் நம் எண்ணங்களால், செயல்களால் முறையா சரியா அமைச்சுக்கலாம் என்பதையும் கட்டுக்கொண்ட வருடம் இது. வரப்போகும் 2017 எப்படி இருக்குமோ என பயமில்லை. நான் நினைத்தபடி நல்லவிதமாக ஒரு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாகத்தான் இருக்கும். நான் கேட்பதைத்தானே ப்ரபஞ்ச சக்தி கொடுக்க போகிறது. என்ன கேட்கணும், அதை எப்படி கேட்கணும் என்ற புரிதலுடன் 2016ஆம் ஆண்டை வழி அனுப்பிவிட்டு 2017க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
******************************************************************************
2017ஆம் வருடத்தின் நிறம் ரொம்ப அழகானது. Greenery இதுதான் 2017 வருடத்தின் சிறப்பு. பச்சை நிறமே பச்சை நிறமேன்னு கொண்டாடி மகிழலாம். அதுவும் ரொம்பவே கண்ணுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பச்சை.

பால்கனியில் சின்னதா செடிகள் வளர்த்தும் நாம இந்த பசுமையை நம்ம வீட்டுக்கு வரவேற்கலாம். வர்தா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுக்கு இந்த பச்சை நிறம் தொலைத்த பசுமையை திரும்ப தரட்டும். Angel therapyல்  Archangel Raphel  அவர்கள் தன்னுடைய பச்சை நிற ஒளியால் குணமாக்குவார் என்று சொல்லப்பட்டிருக்கு.

  காயப்பட்ட நெஞ்சங்களுக்கு மருந்தாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தரக்கூடிய ஆண்டாகவும் பிறக்க இருக்கும் 2017ஆ ஆண்டு ,Greenery பசுமை எங்கும் தழைத்தோங்கி பாரதம் தழைக்க, நம் மனங்கள் குளிர என் பிரார்த்தனைகள்


Friday, December 12, 2014

2015 ஆம் வருடத்தின் நிறம்....

வருடத்தின் நிறத்தை பத்தி ஒவ்வொரு வருஷமும் பதிவு போட்டுகிட்டு வர்றேன். அந்த வரிசையில் 2015ஆம் ஆண்டுக்கான நிறத்தை பாக்கலாம் வாங்க. Pantone நிறுவனம் இந்த வருடத்திற்கான நிறமாக தேர்ந்தெடுத்திருப்பது
MARSALA.

இந்த கலரை பார்க்கும் போதே மனதுக்கு இனிமைன்னு சொல்றாங்க.






ஃபெங்சூயில் 2015 ஆம் வருடத்தை ஆட்டின் வருடமா சொல்றாங்க. (sheep year)
ஆட்டிற்கு அழகு பிடிக்குமாம். அதனால நாம இருக்கும் இடத்தை அழகு படுத்தி வெச்சுக்கிட்டா நமக்கு நல்லதுன்னு ஃபெங்சுயி சொல்லுது.  நம்ம வீட்டில் முக்கியமா நாம அக்கறை காட்ட வேண்டியது நம்ம சமையற்கட்டாம். அதை ரொம்ப நேர்த்தியா வெச்சுக்கறது முக்கியமாம். காரணம்?? 2015 wood sheep year. மேலதிக விபரத்துக்கு இங்கே பார்க்கவும்.

எல்லோருக்கும் எல்லா வளமும் தரக்கூடிய ஆண்டாக 2015 மலர பிரார்த்திக்கிறேன்.



Friday, December 20, 2013

ஹாய் ஹாய்....& ( 2014ஆம் வருடத்தின் நிறம்)

எல்லோருக்கும் அன்பு வணக்கங்கள். வழக்கம்போல 2014 வருடத்தின் நிறம் என்னன்ன பதிவு எழுத வந்திருக்கேன். அதற்கு முன்னால சந்தோஷமான விஷயத்தையும் பகிர்ந்துகொள்ள ஆசை.

எங்களது தந்தை திரு.ரமணி அவர்களுக்கு 70ஆம்வயது பூர்த்தி ஆவதை சிறப்பாக கொண்டாடப்போகிறோம். வரும் மாதம் இதே நாளில் அதாவது ஜனவரி 20ஆம் தேதி புதுகையில் அப்பாவிற்கு பீமரத சாந்திவிழா. அப்பாவுக்கு 60 ரொம்ப பெருசா செய்யலை. அப்ப நானும் இலங்கையில் இருந்தேன். தம்பியும் சிங்கைக்கு போன புதுசு. விடுப்பு கிடைக்கலை. அதனால இந்த விழாவை விமர்சையா செய்யணும்னு தம்பி சொல்ல ஆரம்பிச்சோம். ஆனா அப்பாவுக்கு இஷ்டமே இல்லை. மகனுக்கு கல்யாணம் அமையலையேன்னு வருத்தம். இதுல இந்த நிகழ்வு தேவையானு வருத்தப்பட்டார்.

ஒரு சுபம் இன்னொரு சுபத்தை இழுத்துக்கிட்டு வரும்பா!” அப்பாகிட்ட பேசி பேசி அம்மாவோட ஒத்துழைப்போட எப்படியோ ஆரம்பிச்சோம். ஆனாலும் அவர் மனசு ஒரு மாதிரியாதான் இருந்தது.

இதோ அடுத்த மாதம் அப்பாவோட ஃபங்ஷன்னா.... தம்பிக்கு சம்மந்தம் அமைஞ்சிருச்சு. நாங்க எதிர் பார்த்தபடியே பட்டுபுடவை வேணாம்னு சொல்லி சந்தோஷமா எங்க வீட்டுக்கு வர சம்மதிச்ச பொண்ணு கிடைச்சிருக்கு.  தூரத்து உறவுன்னு கிட்ட போனப்போ தெரிஞ்சது. 25 வருடங்களா எங்க வீட்டுல நடக்கற கல்யாணங்களில் நோ பட்டு, நோ டவுரி.  நகை, பணம், வெள்ளி இதெல்லாம் இம்புட்டு  அம்புட்டு வேணும்னு டிமாண்ட் செய்யாத இன்னொரு கல்யாணம் எங்க வீட்டுல.

இந்த கொள்கையை ஆரம்பிச்சு வெச்ச அந்தேரி தாத்தா இப்ப இருந்தா சந்தோஷப்பட்டிருப்பார். இந்த வேலைகளால தான் நானும் பிசி பிசியாய் இருந்தேன். அப்பா ஃபங்ஷனுக்கு முதல்நாள் புதுகையில் தம்பியின் நிச்சயதார்த்தமும் நடக்குது. அந்த வேலைகள் முடிஞ்சு  கல்யாண வேலைகள் துவங்கணும்னாலும் வருவேன்...... :))

2014 வருடத்தின் நிறம் என்ன? இதை தெரிஞ்சுக்க நானும்  ஆவலா காத்திருந்தேன். இதோ அந்த நிறம்.... அதன் குணாதிசயங்கள் உங்களுக்காக.

Radiant Orchid:  இதுதான் அந்த நிறம்.






தன்னம்பிக்கையையும், சந்தோஷத்தையும் தரக்கூடியதாக இருக்கும் இந்த நிறம் அன்பையையும் நோயற்ற வாழ்வையும் தரும்.



கண்ணுக்கு குளிர்ச்சியான இந்த நிறம், நம் கற்பனா சக்தியையும் தூண்டுவதா இருக்கும்.  பிறக்க இருக்கிற புத்தாண்டு  எல்லோருக்கும் தன்னம்பிக்கையையும், அளவிட முடியாத மகிழ்ச்சியையும் தேக ஆரோக்கியத்தையும் தருவதாக அமைய வேண்டுமென ப்ராத்திக்கிறேன்.




Thursday, December 20, 2012

2013க்கு அழகான கலருதான்!!!

Pantone நிறுவனம் கடந்த பத்துவருடங்களுக்கு வருடங்களுக்கு ஒரு கலரை கொடுத்து, அந்த வருடம் எப்படி இருக்கும்னும் சொல்லிக்கிட்டு வருது. அந்த வகையில வர இருக்கும் 2013க்கு மிக அழகான கலரை தேர்ந்தெடுத்திருக்காங்க. இயற்கையில் அபரிமீதமாக கிடைக்கும் இந்த நிறம், கண்ணிற்கு குளிரிச்சியாகவும், மனதுக்கு இதமளிக்க கூடியதாகவும் இருக்கும். ராஜவம்சத்தினர் மிகவும் விரும்பும் நிறம்னும் சொல்லலாம்.
பச்சை நிறங்களிலேயே மிகவும் அழகானது இந்த மரகதப்பச்சை. எமரால்ட் கிரீன் கலக்கலா இருக்கும்.
பச்சை நிறத்துக்கு குணமாக்கும் குணம் உண்டு. மன உளைச்சல்கள் குறைய, வலி தெரியாமல் இருக்க பச்சை நிறத்தை நினைத்து தியானம் செய்தால் நல்லது.
அருமையான இந்தப்பாடலும் மனதுக்கு இதமா இருக்கும். எல்லோரின் வாழ்க்கையும் பசுமையாக தளைத்து, வாழ்வாங்கு வாழ பிரார்த்தனை எல்லோருக்கும் அட்வான்ஸாக மரகத புத்தாண்டு வாழ்த்துக்கள். :))

Friday, December 23, 2011

color of the year 2012!!!!!!!!!!

நாலஞ்சு வருஷமாத்தான் எனக்கு ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒரு கலர்
இருக்குன்னு தெரியும். (டீவி9 புண்ணியம்) ஒவ்வொரு வருடமும்
டிசம்பர் மாதம் Pantone அறிவிக்கும் கலர் பற்றி தெரிஞ்சுக்க ஆவலா
இருப்பேன்.

நம்ம அழகர் ஆற்றில் இரங்கும் பொழுது கட்டி வரும் ஆடையை
வெச்சு அந்த வருஷ மழை, மகசூல் பத்தி சொல்வாங்கன்னு
அவ்வா சொல்வாங்க.

இந்த முறை திருக்கார்த்திகையின் போது எங்கம்மா இங்க
இருந்தாங்க. திருவண்ணாமலை ஜோதியின் போது க்ஷணநேரத்திற்கு
ஆடி வரும் அர்த்தநாரீஸ்வரர் கட்டிவரும் ஆடை வெச்சு
இனி வரப்போகும் காலத்தை பத்தி சொல்வாங்கன்னு அம்மா சொன்னாங்க.

Pantone நிறுவனம் வரப்போகும் 2012 ஆம் வருடத்திற்கு ரொம்பவே
அழகான ஒரு கலரை தேர்ந்தெடுத்திருக்காங்க. அழகு கொஞ்சும் அந்த
கலருக்கு பெயர் “Tangerine Tango” :))


சிவப்பு கலந்த இந்த ஆரஞ்சு வர்ணம் தான் வரும் வருடத்தை
ஆளப்போகிறது.


இந்த நிறம் ரொம்ப ஆழமானதா சொல்றாங்க இந்த நிறுவனத்தினர்.
இளஞ்சிவப்பும் ஆரஞ்சும் கலந்திருப்பதா தெரிஞ்சாலும் வேறு
சில வர்ணங்களையும் தனக்குள்ளே வெச்சிருக்கு.

அந்திநேரத்துச் சூரியனின் சிவப்போடு, மனதுக்கு இதத்தையும்
நட்பான பாவனையும் தரும் இளம் மஞ்சளையும் தனக்குள்
வெச்சிருக்கு. அதாவது சுருக்கமா சொன்னா
இந்த நிறம் HEAT AND ENERGYயின் அடையாளம்.



பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பனிமூட்டத்தை நீக்க
இந்த நிறம் உதவும்னு Pantone நம்புது. மூடு பனியை
மெல்ல விலக்கி நமக்கு சரியான பார்வையை தர
சூரியனின் வெளிச்சம், சூடு, சக்தி வேண்டுமே.
அருமையான தேர்வுதான்.

இந்த நிறத்தைப் பற்றி பார்க்கும் பொழுது நமக்கு மிகவும்
பரிச்சயமான ஒரு மலரின் வர்ணம் ஞாபகத்திற்கு வருது.
ஆமாம். கனகாம்பரம். இந்த பூவுக்கு வாசமிருக்காது.
அதனால எனக்கு பிடிக்காது. ஆனா அந்தக் கலர்
மயக்கும் அழகு.

இந்தக் கலரில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வீட்டுல வெச்சுக்கோங்க.
(புடவை, சுடிதார்லாம் வாங்கினாகூட தப்பில்லை.) தோட்டம் போட
வசதி இருக்கறவங்க கனகாம்பரச் செடி வளர்க்கலாம். தினம் இந்தக்
கலர் கண்ணில் படுவது போல இருந்தால் மனதுக்கு நல்லது.

இதோ வரப்போகிறது கிறிஸ்துமஸ் தினம். எனக்கு மிகவும்
பிடித்த ஒரு பண்டிகை. தொழுவதில் எனக்கு எந்த வேறு பாடும்
இல்லை. இறைவன் ஒருவனே என்பது என் அப்பா எனக்கு
சொல்லித் தந்தது.






என்னை மறக்கச் செய்யும் கானகந்தர்வன் குரலில் இந்தப் பாடல்
கேட்கும் பொழுது இன்னும் இளகும் மனது.



நட்புக்களுக்கும், உடன் பிறப்புக்களுக்கும் என் மனமாந்த
கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துக்கள்.

அட்வான்ஸா பதிவு போட்டதன் காரணம் ஹி ஹி... ஒரு வாரம் லீவு.


Monday, December 20, 2010

2011ஆம் வருடத்தின் நிறம்!!!!

புதுவருடம் பிறக்க இன்னும் 11 நாட்கள்தான் இருக்கின்றன.
என்னவிதமான புதுமைகளை உள்ளடக்கி வருகிறதோ??
ஆச்சரியமும்,எதிர்பார்ப்பும் நம்முள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
பிறக்கும் வருடம் எல்லோருக்கும் நல்லதைத் தர வேண்டுமென
பிரார்த்தனைதான் அனைவருக்கும் இருக்கும்.

ஒவ்வொரு வருடம் என் பதிவில் கண்டிப்பாக அந்தந்த
வருடத்தின் நிறத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கலர்களின் ராஜா எனப்படும் [PANTONE] நிறுவனம்
ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு நிறத்தை தேர்ந்தெடுத்து
வெளியிடுகிறது. அது போல பிறக்க இருக்கும் 2011ஆம்
ஆண்டிற்கான நிறம் Honeysuckle. பேரிலேயே தேன் இருக்கிறது.
சர்க்கரை பொங்கலில் தேன் மழைப்பொழிந்தது போல
புத்தாண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொண்டுவரும்
என பிரார்த்திப்போம். இனி இந்தக் கலரின் குணாதியசங்களைப்
பார்ப்போம்.





வர்ணங்கள் காட்டும் ஜாலங்கள் எத்தனையோ. ஒவ்வொரு
கலருக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. நாம் அணியும்
நிறத்தைப்பொறுத்து நம் மனநிலையைக்கூட சொல்லிவிடலாம்.

பிரச்சனைகளிலிருந்து தப்பி ஓடாமல் அதை எதிர்த்து
தைரியம், தன்னம்பிக்கையுடன் சமாளிக்கும்
தன்மை இந்த இளஞ்சிவப்போடு கலந்த
பிங்க் நிறத்திற்கு உண்டாம்.  பிங்க் என்பதால் பெண்களுக்கு
மட்டுமேயான நிறமில்லை. இந்த  Honeysuckle இருவருக்கும்
பொருத்தமான நிறம்.


கண்ணிற்கு இதமான இந்த நிறத்தை 2011 ஆம் ஆண்டிற்கு
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.. மனதிற்கும் இதத்தை
தரும் ஆண்டாக மலர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.


டிஸ்கி: இது என் 700ஆவது பதிவு.



Friday, December 19, 2008

2009ஆம் வருடத்தின் நிறம் தெரியுமா?





PANTONE எனும் நிறுவனம் கடந்த 45 வருடங்களாக
ஒவ்வொரு வருடத்திர்கும் ஒரு நிறத்தை
செலக்ட் செய்து வழங்குகிறது.

2009 ஆம் வருடத்திற்கான நிறம் Mimosa

மஞ்சள் புனிதமான நிறம்.

மஞ்சள் நிறம் சூரியனின் வெதுவெதுப்பை
போன்றது.

மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது.
கிருமி நாசினி.

பிறக்கப்போகும் 2009 அனைவருக்கும்
மங்களகரமாக அமைய பிரார்த்திப்போம்.


Monday, December 31, 2007

இந்த வருடத்தின் நிறமென்ன? (2008)


சித்திரை வருடப்பிறப்பின் போது பஞ்சாங்கத்தில் மகர சங்கராந்தி தேவதை கட்டும் புடவை, பார்க்கும் திசை ஆகியவற்றை வைத்து அந்த வருடத்தின் பலன் சொல்வார்கள்.



மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது கட்டியிருக்கும் வேஷ்டியின் நிறத்தை வைத்தும் வருடத்தின் பலன் சொல்வார்கள்.



PANTONE எனும் நிறுவனம் கடந்த 45 வருடங்களாக ஒவ்வொரு வருடத்திர்கும் ஒரு நிறத்தை செலக்ட் செய்து வழங்குகிறது.
அந்த நிறுவனம் இந்த புத்தாண்டு 2008 ஆம் ஆண்டிற்கு வழங்கியிருக்கும் நிறம் blue iris.


நீலம் அன்ட் அயிரிஷ் கலரில் நீலம் என்பது கருப்பு, வெள்ளை நிறத்திற்க்கு இடைப்பட்ட நிறமாகும். ஆக பலன் 50:50 ஆக இருக்குமாம். (2007 ஆம் வருட நிறத்தின் பெயர் சில்லி(மிளகாய்) )



என்னவோ பிறக்கும், பிறந்திருக்கும் இவ்வாண்டு எல்லோருக்கும் நல்லதையே தந்து மகிழ்வையே சொரிந்து இருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக.