Showing posts with label ச்சும்மா. Show all posts
Showing posts with label ச்சும்மா. Show all posts

Wednesday, December 03, 2014

அம்மம்மா என்றொரு தெய்வம்.

அம்மம்மா என்று மற்றவர்களுக்கு சொல்வேன். ஆனால் மனதாலும் உயிராலும் அவள் எனக்கொரு தாய். என்னைப்பெறாத தாய். அவளுடைய தாயின் நட்சத்திரமும் நாமகரணமும் எனக்கு என்பதால் என்னை அவள் தாய் என்பாள் என் அம்மா.

அம்மம்மாவிற்கு உடம்பு சரியில்லாத நிலையிலும் பேரனின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ வலிகளை தாங்கி நல்ல படியாக வீட்டிற்கு வந்து, பிறகு சென்னை வரை வந்து பேரனை வாழ்த்தியதை நினைக்கும்பொழுது  மனோபலம் புரியும்.

படிக்கவில்லை என்பதால் தன்னை எப்பொழுதும் தாழ்த்திக்கொண்டதே இல்லை. கண்மூடி நின்றால் கண்முன் தோன்றுவது அழகான நெற்றியில் வைத்த குங்கும பொட்டு, சீராக வாரிய தலை, நேர்த்தியான உடை. புடவைதான் கட்டுவார் என்றாலும் அதில் ப்ளவுஸ் சரியான மேட்சிங்காக இருக்கும். சாயம்போன புடவைகள் எல்லாம் அம்மம்மாவுக்கு அலர்ஜி. ஆர்பாட்டம் இல்லாத அழகு அம்மம்மாவிடம் நிரந்த்ரமாக குடிகொண்டிருந்தது. வீட்டில் இருந்தாலும் நேர்த்தியாக ட்ரஸ் செய்து கொள்ள வேண்டும் என்பது அம்மம்மாவின் குணம்.

கடந்த மாதம் உடல்நிலை மோசமாகிவிட்டது. அதிலும் தன் நினைவு இல்லாமல் இயற்கை உபாதைகள் செய்துவிட அதை அத்தைகள் சுத்தம் செய்திருக்கிறார்கள். எப்பொழுதோ நினைவு வந்த பொழுது அது தெரிந்து விட  நவம்பர் மாத பவுர்ணமியிலிருந்து உண்ணா நோன்பு ஆரம்பித்திருக்கிறார். ஆகாரம் கிடையாது. எப்பொழுதாவது கால் கிளாஸ் ஹார்லிக்ஸ். அதுவும் நீரில் கரைத்தது. இப்படி தன்னை ஒடுக்கிக்கொண்டே வந்தவர் கடந்த வாரங்களில் ஹார்லிக்ஸ் குடிப்பதையும் நிறுத்திவிட்டார். தண்ணீர் மட்டும் தான். நெஞ்சுக்கும் தொண்டைக்கும் சுவாச கர் கர் என்று ஆகிவிட உடன்பிறப்புக்களுக்கு சொல்லிவிட்டனர்.

எனக்கும் போன் வந்தது, லோ பீபி ஜாஸ்தியாகி என்னால் முடியாத நிலை. தனியாக நான் பயணம் செய்வது இயாலது. எதேச்சையாக என் அம்மா சென்னையிலிருந்து வரும் அதே சமயம் ஒரு விமானம் ஹைதையிலிருந்து புறப்பட்டு மும்பையை சேர்வது இருப்பதை பார்த்தான் அயித்தான் புக்கிங் செய்து கொடுக்க, மும்பை ஏர்போர்ட்டில் அம்மா, அப்பாவுடன் சேர்ந்து சின்ன மாமா வீட்டிற்கு போனோம்.

அம்மம்மாவின் நிலை பார்த்து மிக மிக வருத்தமாக இருந்தது. ஒவ்வொரு பாகங்களும் வேலை செய்வதை குறைத்துக்கொண்டே வந்தது.  மருத்துவரை அழைக்காதே, எனக்கு எந்த ட்ரீட்மெண்டும் வேண்டாம். ஊசி, சலைன் எல்லாம் கொடுத்து எனக்கு ரண வேதனை தரவேண்டாம் என்று அம்மம்மா உத்தரவு போட்டிருந்தாலும், மனது கேட்காமல் மாமா மருத்துவரை வீட்டுக்கு அழைத்தார். ப்ரி கோமா ஸ்டேஜில் இருப்பதாகவும், அதனால் நினைவு பிரண்டு போகிறது. ஹாஸ்பிட்டலில் சேர்த்து மூக்கு வழியாக உணவு கொடுக்கலாம் எனவும் அப்பொழுதும் சரியாக வாய்ப்பு கம்மி என்றும் சொன்னார். ரணவேதனை ஏன் தரவேண்டும் என தாத்தாவும் வேண்டாம் என்று சொல்லவே கங்காஜலம் மட்டும் அருந்திக்கொண்டிருந்த அம்மம்மாவுக்கு கொஞ்சம் பால் புகட்டினோம்.

ஆஷிஷ் அம்ருதாவிற்கு பரிட்சை இருக்க, அயித்தான் லீவு போட்டு பார்த்துக்கொண்டது தொடர முடியாத காரணத்தால் நான் ஊருக்கு கிளம்ப முடிவு செய்து வெள்ளிக்கிழமை மாலை ஃப்ளைட் டிக்கெட் புக் செய்து கொண்டேன்.  வியாழன் மாலை 6 மணியிலிருந்து அம்மம்மாவுக்கு பிபி குறைய துவங்கியது. சத்யா மாமாவின் மகள் சசி, ஆயுர்வேதிக் டாக்டர். அருகிலேயே இருந்து பிபி பார்த்துக்கொண்டே வர பல்ஸ், பீபி மேலே, கீழே என மாறிக்கொண்டே வந்தது. 8 மணி வாக்கில் மிக அதிக குறைந்த பீபிக்கு வந்து அம்மம்மா எங்களை விட்டு பிரிந்து கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. அருகிலேயே தாத்தா, மாமாக்கள், அத்தைக்கள், அம்மா, அப்பா,சித்தி, பேரன், பேத்திக்கள் என இரண்டு நாட்களாக உட்கார்ந்திருந்து அம்மம்மாவுக்கும் மிகவும் பிடித்த பக்தி பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்வது, மொபைலில் வைத்து போடுவது என செய்து கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் அருகிலிருக்க எங்கள் அன்பு தெய்வம் எங்களை விட்டு பிரிந்தது.

அம்மம்மாவின் ஆசை படி சின்ன மகனின் வீட்டில் உயிர் பிரிந்ததும், பெரிய மகன் வீட்டுக்கு கொண்டு சென்றோம். (என்னைப்பார்க்க நிறைய்ய கூட்டம் வரும் அதனால் சத்யா வீடுதான் சரி என சொல்லியிருந்தார். சொன்னது போல ஏகப்பட்ட கூட்டம்)  ஆஷிஷ் அம்ருதாவை பார்த்துக்கொள்ள அயித்தான் உடன் கிளம்பி வந்து சேர்ந்தார். பிறந்த வீட்டு இறுதி மரியாதையை அயித்தான் அம்மம்மாவுக்கு செய்தார். என் புகுந்த வீடு அம்மம்மாவுக்கு பிறந்த வீடு ஆயிற்றே.

நான் ஊருக்கு கிளம்பியதற்கு பின் ஏதாவது நிகழ்ந்திருந்தால் அருகில் நானில்லையே என வாழ்நாள் முழுதும் அழுதிருப்பேன் என்பதால், அம்மம்மா ”உனக்கு  முன்னே நான் கிளம்புகிறேன்” என புறப்பட்டாரோ!!! என் அன்பு தெய்வம். சுமங்கலியாக  போவதில் சந்தோஷமா!! தன் கடமைகளை செய்து முடித்துவிட்ட திருப்தியா அம்மம்மாவின் முகத்தில் சந்தோஷம், கம்பீரம் எல்லாம் களைகட்டி நிம்மதியாக சாஸ்வதமான தூக்கத்துக்கு போய்விட்டாள்.

தாத்தாதான் ரொம்ப கலங்கி போய்விட்டார். சும்மாவா? 65 வருட சிநேகிதமாச்சே. எங்கள் அன்பு தெய்வம் எங்களை காத்து ரட்சிப்பாள். அம்மம்மாவின் மற்ற காரியங்களுக்காக ஊருக்கு போக வேண்டும். எல்லாம் முடிந்து வந்து என் பதிவுகள் தொடரும்.



Saturday, November 22, 2014

நல்லா இருக்கே!!!!

விளம்பரங்கள் எனக்கு எப்பவும் பிடிச்ச விஷயம். சில விளம்பர்ங்கள் அழகான கதையா இருக்கும், மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கும். அப்படி பிடிச்ச சில விளம்பரங்களை பகிர்ந்துக்கறேன்.


தினம் ஒரு சமையல் கத்துக்கும் மனைவி, அதை அனுபவிக்கும் கணவன் :))





மாறிவரும் அப்பாக்களின் ரோல்




இதுவும் நல்லா இருக்கு. செமன்னு கூட சொல்லலாம்.






Friday, November 14, 2014

குழந்தைகள் தினம்

இன்னைக்கு குழந்தைகள் தினம். ஸ்கூல்ல சாக்லெட் கொடுப்பாங்க. இதைவிட பெருசா கொண்டாட்டம் ஏதும் இருந்ததில்லை.ஆனா இந்த கொண்டாட்டத்தை நாம பெருசாகிட்டோம்னு நினைச்சுக்கிட்டு தொலைச்சிடறோமோ!??!!!

ஸ்கூல்  முடிஞ்சதும் குழந்தைகள் தின கொண்டாட்டமெல்லாம் நமக்கில்லே, நாம பெருசாகிட்டோம்னு நினைச்சு விட ஆரம்பிப்பது அப்படியே தொடருதுன்னு நினைக்கிறேன். வேணாமே. அதை அப்படியே தொடருவோம்.

நமக்குள்ளே அந்த குழந்தைத்தனம் எப்பவும் இருக்கும்.  வயசுக்கேத்த மனமுதிர்ச்சி வேணும் தான். ஆனா அதுக்கும் அடியில் ரொம்ப ஆளமா நமது இயல்பான குழந்தைத்தனம் இருக்கும். அதை அப்படியே கொஞ்சமா வெளிக்கொணர்ந்துகிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்.

குழந்தைங்க மனசு கள்ளம் கபடமில்லாத மனசு. ஒரு சாக்லெட் கிடைச்சாலும் குஷியாகிடும்.  எதிர்காலத்தை பத்தின பயமில்லாத ஒரு இனிமையான பருவம். இப்படி நிறைய்ய சொல்லிக்கலாம்.

நாமளும் கொஞ்சம் கள்ளம் கபடமில்லாம அன்பான அழகான மனதோட வாழ்ந்தா நல்லதுல்ல.  கிடைக்கற சின்ன சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷப்பட ஆரம்பிச்சோம்னா நமக்கு நிறைய்ய கிடைச்ச சந்தோஷம் இருக்கும். பெரிய்ய சந்தோஷங்கள்லாம் எப்பவோ கிடைக்க கூடியது.

நாம எதிர்காலத்தை பத்தி ரொம்ப யோசிச்சு, யோசிச்சு மனசு குழம்பினதுதான் மிச்சம். இதனால நிகழ்கால சந்தோஷத்தை தொலைப்பது மட்டுமில்லாம அனுபவிக்காம இருந்திடறோம்.

நமக்குள்ளே இருக்கற குழந்தைக்கு இன்னைக்கு பிடிச்சது செஞ்சு கொடுங்க. பிடிச்ச உடை போட்டுக்கங்க. பிடிச்சதை செய்ங்க. இது நல்ல ஃபீலிங்கை கொடுத்தா வரும் நாட்களிலும் தொடரலாமே!! :)) எப்பவுமே முடியாட்டியும் அப்பப்பவாவது நம்மளை நாம கவனிச்சுக்கலாம். தப்பில்லை.

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டை நீங்களும் கேளுங்க.




Monday, January 23, 2012

பார்ப்போம்!!! ரசிப்போம்!!!!

இதைத்தான் காலம் மாறிப்போச்சுன்னு சொல்வாங்க!!!


வாட் என் ஐடியா சர்ஜி!!!!!

ஆப்பிள்போன் எம்புட்டு அழகா இருக்கு பாத்தீகளா!!

என்னத்த சொல்ல?? :))

நீயா... நானா??

ஹி.. ஹி..

ஆமாம்ல....

அறிவுக்கொழுந்துக... இதை வாங்கவும் ஓடுவாங்க.

நண்பேண்டா!!!!

சீடி பர்னிங்காம் :))

கீழே இருக்கற பால்கனிக்கு ஏணிவெச்சு ஏறணுமாம் இருக்கும்!!!

ஆஹா... என்ன ஒரு மூளை!!

பெரிய்ய திண்டுக்கல் பூட்டு போடிருக்கலாம். இன்னும் பாதுகாப்பா
இருந்திருக்கும்.

சொன்னபடி கேளு.. மக்கர் பண்ணாதே!!!

விசுவோட பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற பைத்தியக்கார டாக்டருக்கு
பைத்தியம் பிடிச்சா................. டயலாக் மாதிரி இருக்கு இது. :))

இங்கன போய் படிச்சா அம்புட்டுதான்.

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செம பைக்..

போறாளே பொண்ணுத்தாயி பாட்டு டெடிகேட் செய்றாராம்!!!

சாமி படத்து விவேக் ஐடியாவை காபி அடிச்சிட்டாங்க.

ஞாபகம் வருதே....

இதுவும் அதே...

பாப்பா பாவம்ல....

இப்படி கார்ட்டூன்ல தான் இருக்கும்.

குட் நைட்டுங்க. :))

டிஸ்கி: தங்கச்சியின் முகநூலிலிருந்து சுட்ட படங்கள் இவை.


Wednesday, November 09, 2011

சனிபிடிச்சா கூட பரவாயில்லைப் போல இருக்கு :((

இந்த சனீஸ்வரர் கூட ஒரு பிரச்சனை என்னன்னா குறைஞ்ச பட்சமாவது
பிடிச்சு தன்னோட ஆட்டத்தை ஆடிட்டுத்தான் விடுவாரு. அவரோட
இருக்கும் அந்த “7 வருடங்கள்” வார்த்தைகளால் விவரிக்க முடியாத
ஒரு அவஸ்தை. நல்லாத்தானே போய்கிட்டு இருக்குன்னு நினைப்போம்.
திடும்னு ஒரு செக் வெப்பாரு. ஜென்மச்சனி மகாக்கொடுமை.

இந்த பயங்கர அவஸ்தைக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாத
ஒரு அவஸ்தை சளி. நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.
திடும்னு தொண்டையை அடைக்க ஆரம்பிச்சது. நாம
யாரை இன்னிக்கு ரொம்ப திட்டினோம்! அவங்க சாபத்தால
தான் தொண்டை வலி வந்திருக்குன்னு ரொம்ப யோசனை
செஞ்சதனாலத்தான் தலைவலி வந்திருக்குன்னு பேசாம
இருந்தேன்.

அயித்தானுக்கா, ஆஷிஷுக்கா, அம்ருதாவுக்கு யாருக்கு இன்றைக்கு
அர்ச்சனை செய்தோம்னு குழப்பம். கந்த ஷஷ்டி அன்னைக்கு
முருகனுக்கு அர்ச்சனை செய்ததைத் தவிர வேற யாரோடும்
பெருசா பேசலை. நல்ல நாளிலேயே ஐஸ்க்ரீம் சாப்பிடமாட்டேன்.
சைனஸ்தான். இப்ப வெளியில கூட தண்ணி குடிக்கலை. ஆனா
த்ரோட் இன்ஃபெக்‌ஷன்!!! நாளெல்லாம் நல்லாத்தான் இருக்கும்.
ஆனா இந்த ராத்திரியில் படுத்தா மட்டும் இதுக்கு தாங்காது.
ஆஞ்சு ஓஞ்சு படுத்திருக்காளேன்னு விடுமா? ஒரு மாதிரி
அவஸ்தை, கிச் கிச் எல்லாம் மூட்டி இருமலை வரவெச்சிடுது.

இதோட ஒரு இரவு போராடித்தாங்க முடியாம இருந்தா தலைவலி
உடம்பு வலின்னு வர ஆரம்பிக்க ஆகான்னு ஜெர்க்கானேன்.
இது ஒரு மாதிரி வைரல். ஜுரம் உள்ளுக்கு மட்டும் அடிக்கும்.
ஆனா வெளியே டெம்ப்ரேச்சரே இருக்காது. ஜுரத்திற்குண்டான
எல்லா அவஸ்தைகளும் இருக்கும்.

சளிபிடிச்சா குறைஞ்ச பட்சம் 3நாள் இருக்கும் (சனி பிடிச்சா
7 நிமிஷமாவது ஆட்டுவது போல) அப்படின்னு வீட்டு மருந்து
சாப்பிட்டு பாத்தேன். தொண்டையை ரொம்ப கஷ்டப்படுத்தாமல்
ப்ரெட் பால், இட்லின்னு ஓட்டினேன். ம்ஹூம் சரி வரலை.
சனிஸ்வரர் ஆட்டுறார்னு தெரிஞ்சாலும் அவருக்குன்னு சில
எதிர்கட்சி தெய்வங்கள் இருப்பாங்க. அவங்களை கும்பிட்டா
இவர் ஆட்டம் கொஞ்சம் குறையும் என்பது போல மருந்து
எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம்.

நேற்று இரவு தலை சாய்க்க விடாம இருமல் ஆரம்பம்.
டாக்டர் கிட்ட வேணாம்னு அடம் பிடிச்சு கிட்டு இருக்கேன்.
ஆயில் இஞ்சஷன் போட்டா அந்த வலியில் வேலை செய்யவே
முடியாது. ஏற்கனவே நமக்கு உடம்பு வீக்குன்னு டாக்டர் சொல்லிக்கிட்டு
இருக்க இதுல இப்படின்னா கண்டிப்பா ஊசிதான்!! ஊசியைப்பாத்தால்லாம்
பயமில்லை. அதன் சைட் எஃபக்டா வேலை செய்ய முடியாம
கஷ்டமா இருக்குமே என்பதால் ஒரு கஷ்டம்!!

அயித்தான் விடுவாரா!!( இந்த நேரம் பார்த்து இவருக்கு டூர் ஏதும்
இல்லாம போச்சு. இருந்திருந்தா தப்பிச்சிருப்பேன்):)) அதனால
ட்ரீட்மெண்ட் கன்ஃபார்ம். லீவுதான். தேறி வர்ற அளவுக்கு பெரும் பிரச்சனை ஏதுமில்லைன்னாலும் ரெஸ்ட் எடுத்துக்கறது பெஸ்ட் என்பதால லீவு.

ஹைதையில் குளிர் துளிர் விட ஆரம்பிச்சதுக்கே இந்த
நிலமையா இருக்கு. இந்த வாட்டி மழை அவ்வளவா இல்லை.
அதனால குளிர் போனதடவை மாதிரி இருக்காதுன்னு நினைச்சேன்.
காலையில் பனி பொழியுது, பகலில் வெயில் பிரிச்சு மேயுது.
சாயந்திரம் 5 மணிக்கே இருட்டு, குளிர்னு ஒரு மார்க்மா
ஆரம்பிச்சிருக்கு.

நான் சீக்கிரம் 1000 பதிவு அடிச்சு விழா கொண்டாடலாம்னு
நினைச்சிருந்தேன். அது நடக்க கூடாதுன்னு யாரும் ஏதும்
செஞ்சிட்டாங்களா?!!! :))

சரி இந்தப் பாட்டைக்கேட்டுகிட்டு இருங்க.


Tuesday, June 07, 2011

வந்தேன்!! வந்தேன்!! வந்தேன்!!!!!!!!

எல்லோரும் சொளக்கியமா???
ஒரு வழியா லீவு முடிஞ்சிருச்சு. பசங்களுக்கு பள்ளிக்கூடம்
ஆரம்பிச்சாச்சு. சென்ற பதிவுல வந்து நான் பரிட்சை எழுத
வாழ்த்து சொன்ன அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றியைச்
சொல்லிக்கிறேன்.

ஆனா பரிட்சை எழுதலீங்க!!!! 3 மாசமாவே லோ பீபி ரொம்ப
ஆட்டம் காட்டிக்கிட்டு இருக்கு. அதுவும் ஏப்ரல், மே மாதத்துல
கிட்டத்தட்ட 10 நாளைக்கும் மேல பேசக்கூட முடியாம போயிடிச்சு.
ஸ்ட்ரிக்டா பெட் ரெஸ்ட்!!! காரணம் எல்லாம் பழசு தான்.
என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டா என் கூடவே ஒரு 8 வருஷமா இருக்கும்
PMS தரும் சைட் எஃபக்ட் தான் இது. :(( படும் கஷ்டத்தைப்
பார்த்து ஆஷிஷ் பரிட்சை எல்லாம் வேணம்மா! செப்டம்பரில்
உடம்பு நல்லா இருந்தா பாத்துக்கலாம்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாப்ல.

இந்த உடல் கஷ்டத்தால பசங்களை அதிகமா வெளியில கூட
கூட்டிகிட்டு போக முடியாட்டியும் வீட்டுலையே முடிஞ்ச வரைக்கும்
அவங்களோட அளவளாவிகிட்டு இருந்தேன். வழக்கம்போல
என் கண்மணிகள் இரண்டு பேரும் உதவியா இருந்தாங்க.
அப்பிடி இப்படின்னு அவங்க லீவு முடிஞ்சு நாளையிலிருந்து
வகுப்புக்கள் ஆரம்பம்.

இந்த லீவுல ஆஷிஷ் அண்ணா கிடார் கத்துகிட்டாரு. எனக்கு
பிடிச்ச சுராலியாகே தும்னே ஜோ தில்கோ பாட்டு வாசிக்கிறாரு.
அப்புறமா வாசிக்கிறதை ரெக்கார்ட் செஞ்சு அப்லோட் செய்யறேன்.
அம்ருதம்மாவுக்கு இந்த மாசம் இல்லாட்டி அடுத்த மாசம் வாக்குல
டிரினிட்டி காலேஜ் ஆஃப் லண்டன் எக்ஸாம் பியானோவுக்கு இருக்கும்.

இப்ப கொஞ்சம் பரவாயில்லை. அதனால வழக்கம்போல இல்லாட்டியும்
முடிஞ்சப்பல்லாம் பதிவெழுதுவேன். வழக்கம்போல உங்கள் ஆதரவுகளை
அள்ளித் தர கேட்டுக்கறேன். ச்சே. எலக்‌ஷ், அதுக்கப்புறம் ரிசல்ட்னு
பாத்து அதே மாதிரி டயலாக்கா வருது. :))))

சரி பட்டையை கிளப்ப நான் ரெடி. நாளை முதல் பதிவுகள் வரும்.
தங்கமணிக்கு எதிரா பதிவுகள் போடறவங்களுக்கு முக்கியமா
எச்சரிக்கை கொடுத்து வைக்கிறேன். :)))

வர்ட்டா... குட் நைட்.



Thursday, May 05, 2011

லீவு சொல்லிக்கறேன்....

என் ஃப்ரெண்ட்ஸ்ங்க வீட்டில் இருக்கும் பொழுது வேற எதுலையும்
மனசே போகாது :)) அவங்களுக்கு லீவு விட்டிருக்காங்க. அதனால
பதிவுக்கும் கொஞ்ச நாளைக்கு லீவு சொல்லிக்கறேன். பசங்க கூட
ஆனந்தமா இருக்க வேண்டிய தருணத்தில் வேறு எதற்கும் இடம் இல்லை
என்பதலாத்தான் இந்த லீவு.

தவிரவும் இப்ப விடுமுறை மாதம் என்பதால் விருந்தினர்கள் வருவதும்
போவதுமா இருக்கு. இன்னொரு ரொம்ப முக்கியமான மேட்டர்
இருக்கு. பசங்க என்னை ரிவெஞ் எடுத்துகிட்டு இருக்காங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

சும்மா இருப்பானேன்னு டிஸ்டன்ஸ் எஜுகேஷன்ல பீ.காம்
படிக்க பணத்தைக் கட்டினேன். லிட்ட்ரேச்சர் பட்டயம் இருந்தாலும்
பீ.காம், எல்.எல்.பீ என் கனவு! ஆரம்ப கட்டமா பீ.காம்
சேர்ந்து இருக்கேன். இதுல இந்த மாசம் முதல் வருட பரிட்சை.
அதுக்குத்தான் பசங்க என்னை ரிவெஞ் எடுத்துகிட்டு இருக்காங்க. :)
படிச்சதை கேள்வி கேப்பாங்களாம்! நான் சொன்னதெல்லாம் எனக்கு
திரும்ப நடக்குது. :))))

பரிட்சை சமயத்துல கணிணி கூடாதுன்னு பசங்களுக்கு சொல்லிட்டு
நானே உட்கார்ந்தா தப்பாயிடும்ல. அதான் கொஞ்ச நாளைக்கு
கட்டாய லீவு.

இந்த வருடம் அன்னையர் தினத்துக்கு பசங்க எனக்கு காந்தா எம்ப்ராய்டரி
ஒர்க் புடவை பிரசண்ட் செஞ்சிருக்காங்க. டிஸ்டம்பர் கலரில் கத்திரிப்பூ
கலந்த புடவை. அப்புறமா இந்த ஒர்க் பத்தியும் அந்தப் புடவை போட்டோவும்
போடுறேன்.








அன்னையர்கள அனைவருக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.



Sunday, February 20, 2011

நலம் தானா?!! நலம் தானா?!!

என்ன? எல்லோரும் சொளக்கியமா இருக்கீகளா?
ஊருக்கு போயித்திட்டு வந்திட்டேன். ஆனா பாருங்க
நம்ம கணிணிக்கு பெரிய ஜுரம் வந்திருச்சு. அதை
ஹாஸ்பிடலில் வெச்சு வைத்தியம் பாத்து கொண்டாந்தாங்க.
சரிதான்... அப்பா, அம்மா வந்திருக்கிற நேரம் அவுகளோட
இருக்கலாம்னு வலைப்பக்கம் வராம இருந்திட்டேன்.அத்தோட
மகனுக்கு ப்ரீபோர்டு பரிட்சை வேற!
கோவிச்சுக்கிடாதீக!!!

அம்மம்மா,தாத்தா வந்ததுல குட்டீஸுக இரண்டும் செம குஷில
இருக்காக! ஒரு நாள் டீவி பார்த்துகிட்டு இருந்தாரு தாத்தா!
ஸ்கூல்லேர்ந்து வந்து பேரன் சேனலை திருப்பிக்கிட்டு இருக்க
”ஹை!! சூப்பர் படம்னு!” ஒரு சேனலை வெச்சு பாக்க
ஆரம்பிக்க,தாத்தா “அந்த சேனல்ல நல்ல படம்டா தம்பி”
அப்படின்னு சொல்ல. இதுதான் தாத்தா சூப்பர்னு சொல்ல
அந்தக் காமெடியை மட்டும் பாத்திட்டு உங்களுக்கு உங்க
சேனல் வைக்கறேன்னு சொன்னாரு. (பேரன் பாத்துகிட்டு
இருந்த படம் “காதலிக்க நேரமில்லை”!!! தாத்தா பாத்தது
“ஏப்ரல் மாதத்தில்” :)) )

ரொம்ப நாளைக்கப்புறம் இந்த வாட்டி என்னோட ரயில் பயணம்
ரொம்பவே இனிமையா இருந்துச்சு. சென்ற பதிவுல துளசி
டீச்சர் சொன்னாப்ல சக பயணிகளும் சுமூகமா இருக்கறவங்களா
வந்தா பயணம் இனிக்கும் தானே!. மறக்க முடியாத ரயில் சிநேகம்.
எதிர் சீட்டுல உக்காந்திருந்தவரு அம்ருதாவை பார்த்து தன்
உறவினர் மகள் மாதிரி இருப்பதா சொல்ல பேச்சு ஆரம்பிச்சது.
பரஸ்பரம் அறிமுகத்தின் போது நானொரு முன்னாள் மாண்டிசோரி
ஆசிரியைன்னு சொன்னதுதான் தாமதம், பக்கத்து சீட்டுக்கார
தனது மகளின் பள்ளி அனுபவத்தை ஆரம்பிச்சாரு.

பணத்தை கொட்டுறேன், எல்லாம் அவங்க சொல்லிக் கொடுக்கணும்னு”
சொல்ல ஆரம்பிச்சது கச்சேரி. ஆசிரியையா அவங்க பங்கைச்
செய்யணும்னு சொல்றீங்க, பெற்றோரா, தகப்பனா உங்க பங்குக்கு
என்ன செய்யறீங்கன்னு கேக்க? மத்தவங்களும் யோசிச்சாங்க.
பக்கத்துல இருந்த் 1 வயசு குழந்தையோட அப்பாவும் கச்சேரில
சேந்துக்க சுவாரசியம் ஆரம்பமானது. எதிர் சீட்டுல இன்னொரு
நண்பர் படிப்பு சம்பந்தமா சில சீடிக்களை வியாபராம் செய்பவராம்.
அவரும் சேர்ந்துக்க செம ஜாலி.

குழந்தைகளோட நேரம் செலவழீப்பங்களான்னு கேக்க பேந்த பேந்த
முழிச்ச அந்த அப்பாக்களை பாக்க பரிதாபமா இருந்துச்சு. டீச்சரை
எல்லாம் சொல்லிக்கொடுக்கணும்னு சொல்றீங்க, ஆனா ஆசிரியர்
பயிற்சி இல்லாதவர் பயிற்சி கொடுத்தா ஒத்துக்கறீங்க! டாக்டருக்கு
படிக்காதவங்ககிட்ட மருத்துவம் பாக்க மாட்டீங்க தானே! இது
மாத்திரம் ஓகேவான்னு கேக்க ஒருத்தர் ஆமாங்க! இந்தக் கோணத்துல
யோசிக்கலியேன்னு சொன்னார்.

உங்க ஒரு குழந்தையை கட்டி மேக்க முடியலைன்னு கத்தறீங்க,
டீச்சருங்களை நினைச்சு பாருங்க! அப்படின்னு நம்ம பேரண்ட்ஸ்
கிளப்பில் எழுதின பல மேட்டருங்களை பகிர்ந்துகிட்டேன். நீங்க
சொல்வது நியாயங்க! நானும் இனி என் பிள்ளைகளோட நேரம்
ஒதுக்கறேன்!அப்படின்னு ஒரு நண்பர் சொல்ல மனதுக்கு இதமா
இருந்துச்சு. என் மகளுக்கு இப்ப ஒரு வயசு! வீட்டுல இங்கிலீஷ்
மட்டும்தான் பேசப்போறேன். என் மகளுக்கு ஆங்கிலம் தெரியணும்.
அப்படின்னு ஒருத்தர் சொல்ல,”ஆங்கிலம் எப்படியும் கத்துக்கலாம்!
ஆனா தாய்மொழியை நாமதான் வீட்டுல சொல்லிக்கொடுக்கணும்னு!!
சொல்ல அவர் யோசிக்க ஆரம்பிச்சாரு. பிரபாலமான பள்ளியில்
சேர்த்து பிள்ளைகளுக்கு ஸ்ட்ரெஸ் அதிகம் தரணுமா?? இப்படி
பல டாபிக்குளில் பேச்சு சுவாரசியமா நடந்துச்சு.

உங்க பாயிண்டுக்கள் ரொம்ப உபயோகமா இருந்துச்சு. சுவாதிங்கற
தெலுங்கு பத்திரிகையில் என் நண்பர் இருக்காரு, அவரை உங்களை
வந்து சந்திக்க சொல்றேன். இப்ப நீங்க எங்க கிட்ட பகிர்ந்துகிட்டதை
பத்திரிகையில சொல்லுங்க. பல லட்சம் பேருக்கு சென்று சேரும்னு!
சொல்ல எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை! (என்னோட
விவரங்களைத் தராமலே வந்திட்டேன்!! :) பேசி முடிச்சுட்டு தூங்கி
எந்திரிச்சு தாமதமாக சென்னையை அடைந்த ட்ரையினிலிருந்து இறங்கி
7.50க்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க ஓடும் அவசரத்துல
மறந்து போச்சு)

குருவாயூர் எக்ஸ்பிரஸ் சூப்பர். மதியம் வைகையை பிடிக்கும்
வரை காத்திருக்காமல் திருச்சியை அடைய சூப்பர் வழி இது.
திருச்சியில் அப்பா அம்மா வந்து காத்திருக்க சங்கீதா ஹோட்டலில்
சூப்பரா லன்சை சாப்பிட்டு புதுகை போய் சேர்ந்தாச்சு.

சனிக்கிழமை காலை பல்லவனில் கிளம்பி சென்னை வந்து,
சென்னையில் என் தோழியை சந்திச்சு, மாம்பலத்தில்
பர்ச்சேஸ் முடிச்சு :) செண்ட்ரலில் நுழையவும் எங்க ட்ரையின்
ஷ்டேஷனுக்கு வரவும் சரியா இருந்துச்சு. அப்பா, அம்மாவுக்கு
பக்கத்து கம்பார்ட்மெண்ட். மாத்தலை. அசதியா இருந்ததால
சாப்பிட்டு தூங்க போயிட்டோம்.

சரியான நேரத்துக்கு செகந்திராபாத் அடைய போகுதுன்னு ஆனந்தப்
பட்டுகிட்டு இருந்த நேரத்துல ஷ்டேஷனுக்கு 5 நிமிஷம் முன்னாடி
போட்டுட்டாங்க ரெட்!! ஷ்டேஷனில் ப்ளாட்பார்ம் காலியில்லை!!
40 நிமிடங்கள் கழிச்சு!! ஷ்டேஷனில் நுழைஞ்சிச்சு ட்ரையின்.
அயித்தான் வந்திருந்தாரு ஷ்டேஷனுக்கு. வந்தக் கதையை
சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா அதுக்குள்ள அப்பா, அம்மா
திரும்பி போகும் நாளும் வந்திடிச்சு. ஆமாம் இந்த வாரக் கடைசியில
கிளம்பறாங்க.

இனி தொடர்ந்து பதிவுகள் வரும். சந்திப்போம்


Monday, January 31, 2011

மீ டாடா கோயிங்...

ஆஹா நினைச்சு பாக்கயிலேயே எம்புட்டு சந்தோஷமா இருக்கு.
ஆடி ஆடி தாலாட்டும் ரயில்.... படிக்க புத்தகம்... பாட்டு
கேக்க மொபைல்.. ம்ம்ம் ஜாலி!!

நாம ரெண்டு பேரும் மட்டும் ஃபட்ஸ்டைம் தனியா ஊருக்கு
போறோம்லம்மான்னு எங்க அம்ருதம்மா கேட்டுகிட்டு இருக்காங்க.
நாங்க PDKT போயி (அதாங்க புதுகை போயி) குமார் அங்கிள்
கடையில தோசை, பரோட்டா எல்லாம் சாப்பிடப்போறோமே,
வரும்போது பல்லவன்ல வர்றோம் அண்ணான்னு
அண்ணனை வெறுப்பு ஏத்திகிட்டு இருக்காங்க அம்மா!!

அண்ணன் அம்மம்மாவுக்கு போனைப்போட்டு ரவா உருண்டை
பொடி, தீபாவளி லேகியம்!!, அம்மா செய்யும் இட்லி பொடி
எல்லாம் ஞாபகமா செஞ்சு எடுத்து வெச்சுக்கச் சொல்லிகிட்டு
இருக்காரு!!

நானும் எங்க அம்ருதம்மாவும் மட்டும் கூகூ சுகுசுகுன்னு
ஊருக்கு போறோம்! ஆஷிஷ் அண்ணாவுக்கு 9த் கிளாஸ்
என்பதால இப்ப வர முடியாது. மார்ச் மாசம் முழுப்பரிட்சை.
ஊருக்கு போயி அதாவது புதுகைக்கு போயி அம்மா
அப்பாவை அழைச்சுகிட்டு வரப்போறேன்.

போக 1 1/2 நாள் வர 1 1/2 நாள் , புதுகையில்
1 1/2நாள். இவ்வளவுதான் என் பயணம். ஸோ...
நான் இல்லைன்னு யாரும் வருத்த படாதீங்க. அடுத்த
திங்கள் முதல் வந்து கொடுமை படுத்துவேன்.. :)))

சென்னையில யாரையும் சந்திக்கலைன்னு எனக்கு நிறைய்ய
திட்டுக்கள்... போன் கால்கள் வரும்.. நட்புக்களே, உடன்பிறப்புக்களே
மன்னிச்சிடுங்க. ரொம்பவே ஷார்ட் ட்ரிப்பா போறேன்.இல்லாட்டியும்
சென்னையில 4 நாள் தங்கிட்டுதான் மறுவேலைன்னு ...
திட்டறது புரியுது. அது ஒரு மைண்ட் செட்டாவே ஆகிப்போச்சு. :))

அடுத்த வாட்டி (அது எப்பன்னு எனக்கே தெரியாது) கண்டிப்பா
மீட்டலாம்.

புதன் கிழமைதான் ட்ரையின் ஆனா அதுக்குள்ள உறவினர்
வருகை இருப்பதால இப்பவே டாடா சொலறேன்.


Saturday, November 20, 2010

மனது வலிக்கும் தருணங்கள்

கிட்டத்தட்ட 6 மாத காலமாக நான் அவ்வளவாக பதிவு
போடுவதில்லை. என் வேலைப்பளு ஒரு புறம் என்றாலும்
கணிணி முன் உட்காரும் பொழுது என் மனதுக்குள் ஓடும்
ஒரு வரி “நம்ம நட்புக்கள் யாரும் இப்போது இல்லையே??”
என்பதுதான். இது எனக்கு ஒரு பெரிய குறை.

நண்பனை இழப்பது என்பது மிகப் பிரிய சோகம்.
வலையுலகம் எத்தனையோ நட்புக்களையும், உறவுகளையும்
தந்திருக்கிறது. இது அனைவரின் அனுபவமாக இருக்கும்.
பழையன கழிதலும் புதியன் புகுதலும் வேறு எதற்கு
வேண்டுமானாலும் தகுமே தவிர நட்புக்கு இல்லை.

எழுத(!!!) வந்து 3 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில்
என் ஆரம்பகாலத்தில் இருந்த நட்புக்கள் பலர் இப்போது
வலையுலகை விட்டே ஓடிவிட்டார்கள். அவரவர்கள்
பார்வையில் அது சரி. ஆனால் என்னவோ மனதுக்கு
அது ஒருகுறையாக அமைந்துவிட்டது. எப்போதும்
அவர்களைப்பற்றியெல்லாம் நினைத்துப்பார்ப்பது உண்டு.

நட்பு வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நண்பர்களிடம்
இருக்கும் புரிதல் உறவினர்களிடம் கூட அமையாது.
எப்போதும் எங்கேயும் நட்பை விட்டுக் கொடுக்க
முடியாது, கூடாது. எங்கிருந்தாலும் தொடர்பில்
இருக்க முயற்சிக்க வேண்டும். இருகரம் சேர்ந்தால்தான்
ஓசை எழுப்ப முடியும். எதிர் தரப்பிலிருந்து பதில்
வரத்து குறைந்தால் நாளடைவில் அந்த நட்பு
கட்டெறும்பாகி காணாமல் போய்விடும்.

இப்படியெல்லாம் மனசு பாதிக்கும்னு பலர் உணர்வதே இல்லை.
அதனால “நாடோடிகள்” சினிமா பாணியில் பாடம்
புகட்டியே ஆகவேண்டும். யாருக்கு? எல்லாம் நட்புக்களுக்குத்தான்.

இனி யாராவது நான் ஓடிடறேன், விலகிடறேன், டாடாபைபை,
நிக்கட்டுமா?போகட்டுமா? அப்படிங்கற ரீதியில பதிவு போட்டு
அப்ஸ்காண்டாக பாத்தா சும்மா விடுறதில்லை. ஆட்டோ,லாரி,
ஹெலிகாப்டர் இப்படி ஏதோ ஒண்ணு தேவைக்கு ஏற்ப
பார்த்து அனுப்பி வைக்கப்படும்.கண்டிப்பா இது நடக்கும்.

உடனடியா அனுப்ப வேண்டியது அஹம் ரஸனையாஸ்மி
அப்படின்னு சொல்லிக்கும் ஃப்ரெண்ட் ஆதிமூலகிருஷ்ணன்
வீட்டுக்குத்தான். (ஆமா ஃப்ரெண்ட் இந்த ரஸனையாஸ்மி
அப்படின்னா ரஸிகா ரசிகன்னு அர்த்தமா???!!)

ச்சும்மா இருக்க முடியாம வாக்கெடுப்பெல்லாம் நடத்தி
டார்ச்சர் தாங்க முடியலை. அவரோட ப்ளாக்ல
வலது பக்கம் ஓட்டுப்பெட்டில்லாம் வெச்சிருக்காரு.

யாரங்கே!!! சீக்கிரமா ஃப்ரெண்ட் ஆதிமூலகிருஷ்ணன் வீட்டுக்கு
ஒரு ஆட்டோ, ரெண்டு லாரி, 2 ஹெலிகாப்டர் அனுப்பிவைச்சு
என்னன்னு கொஞ்சம் கவனிங்க.



Tuesday, February 09, 2010

அருமை நண்பர் ஆதிக்கு..(முன்னாள் தாமிரா, இன்னாள் ஆதி)

சில நண்பர்களுக்காக ஒரு விளக்கம் :

ஏற்கனவே பல தடவைகள் விளக்கம் சொன்ன விஷயம்தான் இது.. ரமா என்ற பெயர் மற்றும் இந்தப் பதிவுகளில் எழுதும் விஷயங்கள் பெரும்பான்மையும் உண்மை அல்ல. நானும் என் மனைவியும் சென்ற ஒரு திருமணத்தில் 'தயிர்சாதம் நல்லாயிருந்ததுல்ல' என்ற ஒற்றை வரியிலிருந்து டெவலப் செய்ததுதான் இந்தப்பதிவின் முதல்பகுதி. இப்பதிவுகள் வெறும் நகைப்புக்காக மட்டுமே.. எனது பிற பதிவுகளை வாசித்தீர்களானால் தெரியும் என் காதல் எவ்வாறானது என்று. மேலும் இந்த மாடல் எழுத்துகள் புதுமையானதும் அல்ல.. பழம்பெரும் எழுத்தாளர்கள் தேவன், எஸ்விவி, பாக்கியம் ராமசாமி என பலரும் விட்டுவிளையாடிய களம்தான் இது. அதைப்பார்த்து கடற்கரையில் மணல்வீடு கட்டி மகிழும் சிறுவர் மனநிலையே என் போன்றவர்களின் முயற்சியும்.. நன்றி.


இது நண்பர் ஆதியின் பின்னூட்டம் இந்தப் பதிவில்.
உங்க பதிவிலயும் இந்த பின்னூட்டம் உலகநாதன் எனும் நண்பருக்காக
கொடுத்திருக்கீங்க.

என் எதிர் பதிவு (நல்லாத்தானே சூடு பிடிச்சு 7/7 வாங்கியிருக்கு)
உங்களை திட்ட இல்ல ஃப்ரெண்ட்.

பொதுவாவே ரங்கமணிகள் அப்படித்தான் நடந்துக்குவாங்க.
உங்க பதிவுல உங்க தங்கமணி,அம்மா,தங்கை,மைத்துனி
பத்திய பாயிண்டை விட இரண்டாவதா போட்டிருக்கற நண்பர்
பத்திய மேட்டர் தான் என்னை எதிர் பதிவே போட வெச்சுச்சு.


அந்த மாதிரி எத்தனையோ ஆண்கள் இருக்காங்க. அவங்களுக்கும்
பாடம் சொல்லணும், பொண்டாட்டியை குத்தம் சொல்லும் மனப்பான்மையை
மாத்தணும் என்பதுதான். என் வலைப்பூக்களில் நான் பெரும்பாலும்
கணவன், மனைவி உறவு பற்றி அதிகம் எழுதியிருப்பேன். ஹஸ்பண்டாலஜி
உட்பட. இதை நான் எழுதக் காரணம் ஒரு ஆசிரியையாக பெற்றோரிடமிருந்து
எதிர்பார்ப்பது பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவரின் பங்களிப்பையும்.

(husbandology சொல்லியிருந்த எந்த ட்ரீட்மெண்டும் என்னவருக்கு
தேவையே பட்டதில்லை. ஆனாலும் எது என்னை எழுத தூண்டியது.
மத்தவங்க படற கஷ்டம். அதுமாதிரி நீங்க அடுத்தவங்க குரலை
பிரதிபலிக்கறீங்க)

கணவன் - மனைவி உறவில் விரிசல் பூசல் விழுந்தால் பாதிக்கப்படுவது
குழந்தை.

ரமா ஊருக்கு போனா எம்புட்டு ஃபிலீங்க்ஸா பதிவு போடுவீங்கன்ன்னு
தெரியும் பாஸ். நீங்க சொல்லியிருப்பது மாதிரி ,” பழம்பெரும் எழுத்தாளர்கள் தேவன், எஸ்விவி, பாக்கியம் ராமசாமி என பலரும் விட்டுவிளையாடிய களம்தான் இது. அதைப்பார்த்து கடற்கரையில் மணல்வீடு கட்டி மகிழும் சிறுவர் மனநிலையே என் போன்றவர்களின் முயற்சியும்.”.தான்
உங்கப்பதிவுகள் வருதுன்னு தெரியும்.

அப்பல்லாம் இந்த டாபிக்கில் எதிர் கதைகள் எழுத எந்த பெண்ணும்
துணிஞ்சதில்லை. ஆனா இப்ப விடமாட்டோம்ல. :)))
இனி யாரும் தங்கமணிகளை மட்டம் தட்டி பதிவு போட்டா நாங்களும்
பதிவு போடுவோம்.

இதையும் காமெடியா எடுத்துக்குங்க நண்பர்களே. சுந்தர ராமசாமி, தேவன்,
எஸ்விவி வரிசையில் நாங்களும் பெயர் எடுக்க போறோம்.

அதனால நட்புக்களுக்கு சொல்லிப்பது இன்னான்னா?
இதை தனிமனித தாக்குதலா நாங்களும் எடுத்துக்கலை,
நீங்களும் எடுத்துக்க வேண்டாம்.


AS U PEOPLE SAY JUST FOR FUN.

படிச்சிட்டு லூசுல விடுங்க பாஸ்.

Monday, February 08, 2010

உங்க வலைப்பூவின் மதிப்பு எம்புட்டு???

ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமா விட்ஜட் வெச்சிருப்பாங்க.
சிலது சுவாரசியமா இருக்கும். அப்படி சமீபத்துல ஒரு நண்பரின்
வலைப்பூவில் அவரின் வலைப்பூவின் மதிப்பு எவ்வளவுன்னு
போட்டிருந்துச்சு. ஆஹா இப்படியும் கூட பாக்கலாமான்னு
என் வலைப்பூ முகவரி கொடுத்தேன்.

ஆஆஆஆ நான் அப்படியே ஷாக்காகிட்டேன்!!!!


என் வலைப்பூவின் மதிப்பு ரூ.95,970.93யாம்!!!


Pudugaithendral.blogspot.com Valuation Rs 95,970.93
Website Value Rs 95,970.93
Daily Pageviews 150
Daily Visitors 150
India Rank 118,342
Number of Pages 450


thumbnail
புதுகைத் தென்றல்
Online Since: July 31st, 2000
Popular in Countries: India
Value Metric


இங்க போய் நீங்களும் உங்க வலைப்பூவின் மதிப்பு
எம்புட்டுன்னு தெரிஞ்சிக்குங்க.


ஒரு அல்ப சந்தோஷம் தான்.

:))))

Tuesday, January 05, 2010

ஜாலிலோ ஜிம்கானா.. :))))

என் ஃப்ரெண்ட் அண்ணபூர்ணாகிட்டயும் என் கிட்டயும் எங்க
தோழிகள் கேட்கும் முதல் கேள்வி,”வூட்டுக்காரர் ஊர்ல இருக்காரா”?
இருவரின் கணவர்களுக்கும் காலில் சக்கரம் வைத்ததுபோல
சுத்திக்கினே இருப்பாங்க.

அதனால பல சமயம் “எங்க வீட்டுக்காரர் ஊருக்கு போயிட்டாருன்னு”
ஜாலிலோ ஜிம்கானா தான்.(அக்னி நட்சத்திர ஜனகராஜ் மாதிரி எம்புட்டு நண்பர்கள் சந்தோஷப்படறாங்க!!எங்களுக்கும் காலம் வரும்ல:) )

எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போயிட்டாரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்................


ஊர்ல இருந்தா பெருசா டார்ச்சர் ஏதும் கொடுக்கும் ரகமில்லை.
ஆனாலும் இது ஒரு தனி சுகம். அன்னபூர்ணா வீட்டுல அவுக அயித்தான்
இல்லாட்டி பிள்ளைகளை கூட்டிகிட்டு ஹோட்டல் போவாங்க.
(அவர் இருந்தா வீட்டுச் சாப்பாடுதான் விரும்புவார். மாதத்துல
20 நாள் டூர் போறவராச்சே) ”நான் எப்படா ஊருக்கு கிளம்புவேன்னு
காத்துகிட்டு இருக்கீங்க போலன்னு!!” சிரிச்சுகிட்டே சொல்வார்.


நம்ம வீட்டுலயும் அயித்தான் ஹோட்டல்ல சாப்பிடுவாரேன்னு
சனிக்கிழமை இரவு தவிர எல்லா நேரமும் வீட்டுச் சாப்பாடுதான்.

இங்க நம்ம வீட்டுல அயித்தான் ஊருக்கு கிளம்பப்போறேன்னு
சொன்னா,”பக்காவா!! கன்பார்மா போறீங்களான்னு!!” விசாரிக்கறது.:)
வேற எதுக்குமில்லை. அவருக்கு பிடிக்காத காய்கறிகள், பிடிக்காத
சமையலை சமைச்சு நானும் பிள்ளைகளும் சாப்பிடுவோம். அதுக்காகத்தான்.
(சேமியா பஹாளாபாத் + தேங்காய்ச் சட்னி பிள்ளைகளின் விருப்பமான
உணவு. அவருக்கு பிடிக்காது. அதனால அவர் ஊர்ல இல்லாதப்பத்தான்
இது செய்யப்படும்)

பல சமயம் பசங்க சோறே சமைக்க வேணாம்னு சொல்லிடுவாங்க.
(அயித்தானுக்கு லன்ச் பேக் செய்யும் வேலை இல்லையே) அதனால
தோசை, இட்லி, சப்பாத்தி, பாஸ்தான்னு ஷார்ட் கட்
சமையல் செஞ்சு சாப்பிடுக்குவோம்.


அதுவும் ஒரு நாள் கண்டிப்பா பசங்களுக்கு கார்ன்ஃப்ளேக்ஸ் கொடுத்திட்டு
நான் ஓட்ஸ் கஞ்சி குடிச்சிடுவேன். காலை ப்ரேக் பாஸ்ட் அம்புட்டுதான்.
என்ன ஒரு சுகம். :)))


வெள்ளிக்கிழமை இரவுகளில் டீவிக்கு முன்னாடி ரஜாய் போட்டு
தலகாணி எல்லாம் வெச்சுகிட்டு, நானும் பசங்களும் கெட்டி ரஜாயை
போத்திக்கினே படம் பாத்துட்டு அப்படியே தூங்குவோம்.

சில சமயம் சனிக்கிழமை இரவுதான் வருவார். சனிக்கிழமை பிள்ளைகளுக்கு
பள்ளி விடுமுறை. இழுத்து போத்திக்கினு 8 மணி வரைக்கும் தூங்கும் சுகம்..
(அவுக இருந்தா ஆபீஸுக்கு கிளம்புவாக. டிபன் செய்யணும்னு 7 மணிக்கு
எந்திரிப்போம்ல :))

சென்னையில இருந்தப்ப எங்க பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட் ஹஸ்பண்டும்
ஊருக்கு போய், அயித்தானும் ஊருக்கு போயிருந்தா எங்க ரெண்டு
பேருக்கும் ஜாலி. நான் சோறு, கறி செய்வேன், அவங்க காரக்குழம்பு,
ரசம், அப்பளம் செஞ்சிடுவாங்க. சாப்பாட்டைக் கொண்டுவந்து
வெளியில வெச்சுகிட்டு( பின் கேட்) இரண்டு குடும்பமும் சேர்ந்து
சாப்பிடுவோம்.


ஊர்லேர்ந்து அயித்தான் வரும் அன்னைக்கு ரொம்பவும்
மெனக்கெட்டு வீட்டயே மாத்திப்போட்டு சும்மா பளிச்சுன்னு
ஆக்கிடுவேன். வந்ததும் ஒரே பாராட்டு மழைதான். :))))

யெஸ்ஸு. இப்பவும் அயித்தான் ஊருக்கு போயிருக்காக.
ஆமாம். ஜாலிலோ ஜிம்கானா தான்.

:))))))))))))))))))))))

வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி

டிஸ்கி: கணவர்கள் ஊருக்கு போயிட்டா இப்படித்தான் பெண்கள்
சந்தோஷப்படறாங்க அப்படி இப்படின்னு தாக்க காத்திருக்கும்
நபர்களுக்கு !!அடுத்த பதிவை படிச்சிட்டு அப்புறமா சொல்லுங்க.

(ஹஸ்பண்டாலஜி ப்ரொபசர் கிட்டயேவா)

Thursday, November 19, 2009

விளம்பரங்கள் பிடித்ததும்... பிடிக்காததும்

சீரியல், சினிமா, மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே
வரும் விளம்பரங்களின் போது ம்யூட், செய்து விடுபவர்களை
பார்க்கும் போது ”என்ன மனிதர்களோன்னு!” நினைப்பேன்.

செகண்டுகளில் கதை சொல்லியிருப்பார்கள். நீங்கா
நினைவுகளாக இனிக்கும் அந்த விளம்பரங்கள்.
விளம்பரங்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். அது
ரேடியோ விளம்பரமாகட்டும், தொலைக்காட்சி
விளம்பரமாகட்டும். மிக ரசிப்பேன்.

திருச்சி வானொலியில் சாரதாஸ் திருச்சி கடை
விளம்பரங்களுக்கு அப்போதைய சூப்பர் ஹிட்
பாடல் போல் விளம்பரம் அமைத்திருப்பார்கள்.

அளவான கற்பனையில் அந்த விளம்பரம்
மனதை கொள்ளை கொள்ளும்.

இப்போது சில விளம்பரங்கள் அதீதமாக இருக்கிறது.

எனக்கு பிடித்த... பிடிக்காத தற்போதைய விளம்பரங்கள்
பற்றி சொல்லப்போறென்.






நல்லா மாட்டிகிட்ட ரங்க்ஸ் :))



எல்லா வீட்டிலயும் நடக்கற நிகழ்ச்சியை அழகா
படம்பிடிச்சு காட்டுறது. மகள் புடவை வாங்கி
வைக்கவில்லைன்னாலும் திருமண நாள் கூட
மறந்துவிடும் ரங்க்ஸ்கள் இருக்காங்க தானே:)))))))))



சிண்ட்ரெல்லா தேவதை என் வீட்டிலும்..



தன்னம்பிக்கை மிளிரும் நதியா.



இருகி இருக்கும் உள்ளங்களில் நட்பு பூக்கச் செய்யும்
டாடாடோகோமோ...


பாதையை கடக்க பைனாகுலர் வைத்து இரண்டு பக்கமும்
பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கும்போதே பின்னாலிலிருந்து
போகும் ஸ்விஃட் சரி விளம்பரம். தேடினேன் கிடைக்கவில்லை.




பிடிக்காதது:
ஒரு கப் காபி அதற்காக இப்படியா சிடு சிடுப்பாள்.
சகிக்கலை...:((




parle milano இதன் லேட்டஸ்ட் விளம்பரம்
தடை செய்யப்படணும். இது போன்ற விளம்பரங்களால்தான்
சென்சார் போர்டு வேண்டும்னு சொல்வேன்.

பிரபுதேவா நடனமைச்சிருக்கார்னாலும் என்னவோ
இதுக்கு முந்தைய ஹிரிதிகின் ஆட்டங்கள் போலத்தான்
இருக்கு. :(


garnier colour naturalas விளம்பரமொன்றி
மகளிடம் தாய் தலையை விரித்துப்போடாதே என்றாலும்,
கார்னியர் போட்டிருப்பதால் விரித்துக்கொள்வார்.
தனது ப்ராடக்டை விளம்பர படுத்துவதாக இருந்தாலும்
தாயின் பேச்சை கேட்காமல் இருக்கும் மகள் எனுன்
பொருளில் வரும் விளம்பரம் போல் சின்னவர்களுக்கு
மெசெஜ் போக வாய்ப்பிருப்பதால் இதுவும் பிடிக்கலை.

Monday, August 10, 2009

பழைய பாக்கி இருக்குதா.... என் மனசு துடிக்குதா!!!!

ஞாபகமா வருதே!!! பொட்டி கட்டி கிளம்பியாச்சுல்ல




அல்லோரும் சொளக்கியமா??ன்னு கேட்டுகிட்டு போகப்போற இடம்.




:))))))




மீ த கோயிங். ஜாலி ஜாலி ஜிம்கானா....

Wednesday, July 15, 2009

ஆவ்வ்வ்வ்......

கதவைத் திற காற்று வரும்னு சொல்வாங்க.

இங்க கதவைத் திறந்தா ஜில் ஜில்ன்னு காற்று...


ஊருக்கே ஏசி போட்டாப்ல செம கூலா இருக்கு.

வருண தேவன் அப்பப்போ தலையைக்காட்டிக்கிட்டு இருக்காரு.
இன்னும் அவரோட ஆட்டம் ஆரம்பம் ஆகலை.

இந்த கூல் கிளைமேட் எனக்கு ரெம்ப பிடிக்கும்.

சும்மா ஜில் ஜில்னு... அப்படியே இழுத்து
போத்திக்கினு தூங்கலமான்னு இருக்கு.


வேலைகள் இருக்கு, பதிவு போடணும், பின்னூட்டம்
போடணும், கமெண்ட் மாடரேஷன் செஞ்சு பின்னூட்டத்துக்கு
பதில் போடணும், மத்த வீட்டுக்கு தலையைக்காட்டிட்டு
வந்ததால் அங்கே போடப்பட்ட பின்னூட்டங்கல் மெயிலில்
வரும் அதை படிச்சு ரசிக்கணூம்... இம்புட்டு வேலை இருக்கு...

அதனால தூங்காம இருக்கலாம்னு அடிக்கடி டீ(ப்ளாக் டீ
வித் அவுட் சுகர் அண்ட் மில்க்) குடிச்சு தூக்கத்தை
விரட்டலாம்னா குளிர்ல இன்னும் தூக்கம் வருது. :)))

தூக்கத்தை விரட்ட என்ன செய்யலாம்னு பின்னூட்டுத்துல
சொல்லிட்டு போங்க. அதுக்குள்ள நான் போயி....

Tuesday, July 07, 2009

பத்துக்குள்ளே உலகம் இருக்கு பாருங்க....

எனது மாண்டிசோரி ஆசிரியை தனது பள்ளியில்
நடந்த பல சுவாரசியமான விடயங்களை எங்களுடன்
அவ்வப்போது பகிர்ந்துகொள்வார்.

அவரை வாயடைக்க வைத்த ஒரு மாணவனைப்பற்றி:

மாண்டிசோரி முறையில் 11 முதல் சொல்லிக்கொடுக்க
teen board

உபயோகித்து சொல்லிக்கொடுப்போம்.

எல்லா மாணவர்களும் ஒழுங்காக பயிற்சி செய்ய
ஒரு மாணவன் மட்டும் “சும்மா” உட்கார்ந்திருதிருக்கிறான்.

”ஏன் நீ மட்டும் இந்தப் பயிற்சி செய்யவில்லை?”
என்று கேட்டிருக்கிறார் ஆசிரியை.

இதெல்லாம் கத்துக்க வேண்டியதே இல்லை. டைம் வேஸ்ட்!!!
என்று சொன்னவனை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே
11,12---100 கற்றுக்கொள்வது வேஸ்டா? எப்படி?!!”
என்று கேட்க.

”உங்க வீட்டுல கால்குலேட்டர், போன் எல்லாம் இல்லையா?
அதுல எத்தனை நம்பர் இருக்கு? 0 - 9 தானே எனக்கு 10 கூட
தெரியும் அதனால் அதுக்கு மேல கத்துகிட்டு டையத்தை
வேஸ்ட் செய்ய விரும்பலை. எவ்வளவு கத்துகிட்டாலும்
0-9 தெரிஞ்சா போதும்” அப்படின்னு அசால்டா சொல்லிட்டு
போய்விட்டானாம்.!!!









10குள்ளே உலகம் இருக்குன்னு அந்த குட்டிபையன்
சொல்லிட்டான்.

அந்த பையன் சொன்னதிலும் ஒரு லாஜிக் இருக்கு. அவன்
சொன்னது தவறுன்னு சொல்ல முடியாது. 3 வயது
குட்டி பயலுக்கு என்ன ஒரு யோசனை பாருங்கள்!!!

Wednesday, April 08, 2009

மிஷின் படும் பாடு!!!! :)))

பசங்களுக்கு புக் வாங்க கடைக்கு போயி்ருந்தேன்.
செல்போன் சிணுங்கிச்சு. அயித்தான் தான்.

“எங்கப்பா இருக்க?” :)) (அடிக்கடி அது வாங்க,
இதுவாங்கன்னு கிளம்பிடுவோம்ல)

”ஹிமாலயா புக் ஷாப்லதான் இருக்கேன்.
பசங்களுக்கு புக்ஸ் வாங்க வந்தேன்பா”

”ஹிமாலயாவா சரி. போனதடவை அங்க
ஒரு வெயிட் மிஷின் பாத்தேன். வரும்போது
அதையும் வாங்கிகிட்டு வந்திடு!!!”

ரொம்ப நாளா வெயிங் ஸ்கேல் வாங்கணும்னு
ப்ளான். சரி வாங்கிகிட்டு போனேன்.





அப்ப பிடிச்சு அந்த மிஷினுக்கு பிடிச்சது
ஏழரை, தலைவலி எல்லாம். :)))

ஞாயிற்றுக்கிழமை ”வெயிட் செக்கிங் டே”வாக
அறிவிக்கப்பட்டது. அம்ருதா ஒரு நோட் புக்,
பேனா எடுத்துக்கொண்டு “எல்லோரும் வெயிட்
செக் பண்ண வாங்கன்னு” அறிவிப்பு கொடுத்ததும்
எல்லோரும் வெயிங் மிஷின் இருக்கற ரூம்ல ஆஜர்.

ஸ்டிரிக் டீச்சர் போல அம்ருதா, ”குனியாதீங்க, நேரா
பாருங்க, உங்க வெயிட்டை நான் பாத்து நோட்
செஞ்சுக்கறேன்னு” சொல்லிகிட்டே இருப்பா.

இந்த ரெக்கார்ட் மெயிண்டன் செய்வதால் நாம்
எடை அதிகரித்திருக்கிறோமா இல்லை குறைஞ்சிருக்கோமா!!!
அப்படின்னு தெரிஞ்சுக்கத்தான்னாலும் அடுத்தவங்க
முன்னாடி நம்ம வெயிட் தெரிஞ்சிடுமே(!!!)ன்னு
”என்னோட ட்ரெஸ் இப்ப வேற போட்டிருக்கேன்!!”
அதனாலதான் வெயிட் கூட காட்டுது” போன்ற
டயலாக்குகள் கேட்கும்.


ஞாயிற்றுக்கிழமை எடை பார்க்கும்பொழுது அதே
எடை இருக்கவேண்டும் என்பதால் அடிக்கடி
மிஷின் மேல் ஏறி வெயிட் செக்க ஆரம்பமானது.

சாப்பிட்டபின், சாப்பிடும் முன், வாக்கிங்கிற்குமுன்
வாக்கிங்கிற்கு பின் என ஒரே செக்கிங்தான்.

இப்படி அடிக்கடி ஏற ஆரம்பித்ததில் வெயிட்மிஷின்
பாவம் இளைத்திருக்கும். :))) வாயிருந்தால்
“என்னை விடுங்க!!” ப்ளீஸ்”னு வாய் விட்டு
கதறியிருக்கும்.


எடை பத்தி நினைக்கும்பொழுது இந்தப் பாடல்
எப்போதும் எனக்கு நினைவில் வரும்.
டூயட் படத்தில் பிரபுவை ””வர்ணித்து””
பாடல்.



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Tuesday, February 10, 2009

கும்ம விரும்புவர்கள் கும்மலாம்.....

நம்ம குசும்பன் தம்பி திருவிளையாடல் தருமி மாதிரி
கேள்வி கேட்டிருக்காரு. அவருக்கு பதில் சொல்ல
எல்லோரையும் அழைக்கிறேன். இனி அவரின்
கேள்விகள்.


எக்ஸ்கூயுஸ் மீ யக்கோவ்!

வாட் ஈஸ் த மீனிங் ஆப் காதலர் தினம்? //

இப்படி பின்னூட்டமா கேட்டதும் மட்டுமில்லாம

சாட்டிங்கில்லும் கேள்விக்கணைகள் தொடர்ந்தது.


me: ungalai kumma cholli post poda poren
12:02 PM kusumban: ஏன்
12:03 PM கும்மும் போது நல்லா கும்ம சொல்லுங்க
அப்பதான் அழுக்கு எல்லாம் போகும்
me: kathalar dhinamna ennannu kettengalla
nalla kumma koopidaren
:)
12:04 PM kusumban: ஆமாம் அன்னைக்கு என்னா தீபாவளி மாதிரி லீவ் எல்லாம் விடுவாங்களா?
அன்னைக்கு என்ன விசேசம்
me: innum ennanna kekkanumo kelunga
thiruvilayadal tharumi mathiri kelvi kanai thodukanum
12:05 PM ellathukum mothama bathil solluthen
kusumban: இல்லை கொடியேச்சி முட்டாய் தருவாங்களா?
சொல்லுங்கக்கா சொல்லுங்க
me: appuram
neenga kelunga thambi kelunga
12:06 PM kusumban: காதலர் தினம் என்றால் என்ன சொல்லுங்கக்கா சொல்லுங்க
உழைப்பாளி தினம் தெரியும், உழவர் தினம் தெரியும்
அது இன்னா காதலர் தினம்
12:07 PM me: intha pathivu varuthu
makkals bathil sollunga
12:09 PM kusumban: உங்களுக்கு பதில் சொல்ல தெரியாமதான் மக்களை பதில் சொல்ல சொல்றீங்களா?
பதில் சொல்லுங்கக்கா சொல்லுங்க!
me: nan sonna puriyathu
avunga solra vithathula solvaanga
:)


kusumban: பதில் சொல்லும் பொழுது அதை ஸ்ரேயா கோசல் வாயால சொல்ல சொல்லுங்கக்கா
உங்களுக்கு புண்ணியமா போகும்

போதுமா மக்களே? இனி நான் ஒதுங்கி நின்னு
வேடிக்கை பாக்கறேன் (கமெண்ட் மாடரேஷனைக்
கூட எடுத்திடறேன்) கும்முங்கய்யா! கும்முங்க,

:))))))))))))))))))

Sunday, December 21, 2008

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு :)



ஹை ஜாலி, பசங்களுக்கு பரிட்சை முடிஞ்சாச்சு.
18 நாள் லீவு.

அலாரம் வெச்சு அதிகாலையில் எழ வேண்டியதில்லை.:)

மார்கழி குளிரில் போர்வையை போத்திகிட்டு தூங்கலாம்.



விடுமுறையின் போது என் தோழி வர்றாங்கன்னு
பதிவு போட்டிருந்தேன்.

அவங்களோட ஆனந்தமா ஒரு வாரம் விடுமுறையை
கொண்டாடணும்.

அதுக்கப்புறம் பிள்ளைகளுடன் ஒரு டூர்.
(புதுகையிலும், பெங்களூரிலும்
பதிவர் சந்திப்பு நடந்தாலும் நடக்கலாம்)




இதனால எல்லோருக்கும் சொல்லிக்கறது
என்னன்னா? இன்னும் 15 நாளைக்கு நான்
லீவு சொல்லிக்கறேன்.

(நடு நடுவில் வந்து தொந்திரவு கொடுக்காம
இருக்க ஆண்டவனைப் பிரார்த்திச்சுக்கோங்க. :)))


அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.