Thursday, January 10, 2013

LEONIA!!!!!

ஓரு மணிநேரம் கழிச்சு போன் வந்தது. ரூம் இருக்கு. ஆனா இரண்டு நாளைக்கு கிடைக்காது. ஞாயிறு மதியம் முதல் திங்கள் மதியம் வரைதான் கிடைக்கும்னு சொன்னாப்ல. ஒண்ணும் இல்லாததற்கு இதாவது பரவாயில்லையேன்னு ரூம் புக் செய்ய செஞ்சோம். 3 வேளை சாப்பாடு + எங்க 4 பேருக்கும் தங்க எல்லாம் சேர்த்து பேக்கேஜா சொன்னாப்ல. சரிதான்னு சொன்னோம். கொஞ்சம் நேரம் கழிச்சு அவங்க மேனேஜர் கிட்ட பேசி டிஸ்கவுண்ட் வாங்கி கொடுத்திருப்பதா சொன்னாப்ல. 3 பேருக்கு மட்டும் கணக்கு. அம்ருதாவை 12 வயதுக்கு மாத்திப்புட்டாங்க. :) அம்ருதம்மாவுக்கு ரூம் கிடைச்சதுல குஷின்னாலும் தன்னை குட்டீஸ் லிஸ்டில் போட்டாங்களேன்னு வருத்தம். இப்போதைக்கு 12+தானேன்னு சமாதானப்படுத்தினோம்.

ஞாயிறு காலை லேட்டா எழுந்தோம். வேலை எதுவும் இல்லை. காலை டிபன் ரெடியா இருந்தது. குளிச்சு சாப்பிட்டு 1 நாளைக்கு தேவையான துணிகளை எடுத்து வெச்சுக்கிட்டு 11.30 மணிக்கு கிளம்பினோம். செகந்திராபாத் ஷ்டேஷனிலிருந்து ஷமீர்பேட் செல்லும் வழியில் இருக்கு இந்த ரெசார்ட். கேள்வி பட்டிருக்கோம். ஆனா போனதில்லை. இதான் முதல் விசிட்.

இப்ப அந்தப்பக்கம் OUTER RING ROAD போட்டு சூப்பரா இருக்கு. ரிசார்ட் பக்கம் நுழைஞ்சோம். பெரிய கதவுகிட்ட செக்யூரிட்டி நின்னு பேர் எல்லாம் விசாரிச்சார். அவருகிட்ட இருந்த லிஸ்டில் நம்ம பேரு இல்ல. எங்க ரூம் புக் செஞ்சீங்கன்னு சொல்ல உறவுக்கார தம்பி பேரு சொல்லி அவரு புக் செஞ்சாரு. நேத்து ராத்திரிதான் செஞ்சோம்னு சொல்ல ஒரு நிமிஷம் விசாரிச்சு சொல்றேன்னு ரொம்பவே தன்மையா பதில் வந்தது. 5 நிமிஷத்துல வந்து celestia suit போங்கன்னு சொல்லி அனுப்பி வெச்சாரு. அயித்தான் வண்டியை பார்க் செஞ்சிட்டு வர நாங்க லாபில போய் உக்காந்தோம்.
சிங்கம் ஒண்ணு நம்மளை வரவேற்குது.
ஃபார்மாலிட்டீஸ் நடந்துக்கிட்டு இருக்கும்போதே சூப்பரா ஒரு வெல்கம் ட்ரிங். ஐஸ் டீ. நல்லா இருந்தது. எங்களுக்குன்னு ஒதுக்கப்பட்டிருந்த ரூமுக்கு போனோம். நிஜமாவே சூப்பரா இருந்தது. எப்பவும் எக்ஸ்ட்ரா பெட் தான் போடுவாங்க. ஆனா இந்த இடத்துல இரண்டு கிங் சைஸ் மெத்தைகள். சோபா, லாக்கர் வசதி கொண்ட கப்போர்ட், எல்டீ டீவியோட உயர்தரமான ஹோம் தியேட்டர் சிஸ்டமும் இருந்தது.

பசி வயிற்றைக்கிள்ள சாப்பிட போகலாம்னு கிளம்பினோம். புஃபே லன்ச் இருந்தது அங்கே செம கூட்டமாக இருக்க லியோ பிஸ்த்ரோன்னு ஒரு ரெஸ்டாரண்ட் அங்கேயே இருக்கு அங்க போனோம். உணவு ஆர்டர் செஞ்சுட்டு உக்காந்திருக்கோம்.... உக்காந்திருக்கோம்.. உக்காந்தே இருக்கோம். சாப்பாடு வர்ற வழியைக்காணோம். என்னய்யான்னு கேட்டா, இதோ..ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. நேரத்தோட சாப்பிட்டு குட்டித்தூக்க போட முடிவு செஞ்சிருந்தோம். ம்ம்ஹூம். சாப்பாட்டுக்கடை முடியவே மணி 3.30 ஆகிடிச்சு. ஆனா உணவு ரொம்ப ருசியா இருந்ததை கட்டாயம் சொல்லணும். ரிச் ஃபுட்னு சொல்வாங்களே அதுமாதிரி செம டேஸ்ட்.

 ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் இருந்தோம். பசங்க டீவி பாத்தாங்க. சாயந்திரம் டீ குடிக்கவும் காஃபி ஷாப்புக்குதான் வரணும். ரூம்கள் ஒரு இடத்துலயும் சாப்பிட போகும் இட வேற வேற இடத்துலயும் இருக்கு. :(( ஹைடீ தியேட்டர் பக்கமாம். அதுவும் 6 மணிக்கு முடிஞ்சிடும்னு சொல்ல மணிய பாத்தா 5.30. நமக்கு வேண்டியது சூடா டீ அல்லது காபி. ரெண்டு பிஸ்கட்னு சொன்னதும் காபி ஷாப்பிலேயே தருவதா சொன்னாங்க. சூடா குடிச்சிட்டு பசங்களோட பக்கத்துலேயே விளையாட இருக்கும் இடத்துக்கு போனோம். அயித்தானும் ஆஷிஷும் கொஞ்ச நேரம் டென்னிஸ் விளையாட நானும் அம்ருதாவும் சேர்ந்து ரவுண்ட் அடிக்கறது, போட்டோஸ் எடுக்கறதுன்னு ஓட்டினோம். 


அப்புறம் தியேட்டர் போகலாம்னு முடிவு செஞ்சோம். எலக்ட்ரிக் கார் ஒண்ணு வந்து சிலரை இறக்கிவிட தியேட்டர் போகணும்னு சொன்னதும் ஏத்திக்கிட்டு போனாங்க. தியேட்டர்னா ஏதோ சின்னதா இருக்கும்னு நினைச்சிருந்தேன். ஒரே நேரத்துல இரண்டு படம் ஓடும் அளவுக்கும், குறைஞ்சது 100 பேராவது உட்காரும் அளவுக்கு இடவசதியோடயும் இருந்தது. ஸ்கைஃபால்னு ஆங்கிலப்படமும், கேமிராமேன் கங்காத்தோ ராம்பாபுன்னு தெலுங்கு படமும் ஓடிக்கிட்டு இருந்துச்சு. ஸ்கைஃபால் பாக்கலாம்னு உக்காந்தோம். டமால் டூமில்னு ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள்.... நானும் அம்ருதாவும் தெலுங்குப்படம் பாக்கலாம்னு வெளிய வந்து, பக்கத்து தியேட்டர்ல உட்கார்ந்தோம். கொஞ்ச நேரம்தான் உட்கார்ந்திருப்பொம். போதுமடா சாமின்னு ஆகிடிச்சு.

 நம்ம பவன்கல்யாண், தமன்னா நடிச்ச படம். அவ்வளவா பிடிக்கலை. காசா பணமா எந்திரிச்சு வந்திட்டு திரும்ப ஸ்கைஃபால் கிளைமாக்ஸ் பாக்க உக்காந்திட்டோம்.


மணி 8. சரி போகலாம்னு எல்லோரும் வெளிய வந்து எலக்ட்ரிக் காரை வரச்சொல்லி ஃபோன் செய்யச் சொன்னோம். இந்தக்குளிருல நடக்கறதாவது!! வண்டி வர்ற வரைக்கும் பாத்தோம். வர்றமாதிரி தெரியலை பேசிக்கிட்டே 10 நிமிஷத்துல ரெஸ்டாரண்ட் கிட்ட வந்தோம்.அடுத்த ஷோ எட்டுமணிக்கு. அமலா ரீசண்ட்டா நடிச்ச சேகர் கம்முலவின் “லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்”னாங்க. அன்னைக்கு அதே படம் டீவியிலயும் போட்டுக்கிட்டு இருந்தாங்க. செம டயர்ட். சாப்பிட போகலாம்னு கிளம்பிட்டோம். காஃபி ஷாப்பில் புஃபே டின்னர். காஃபி ஷாப் பேரு SUN & MOON. அங்க வரைஞ்சு வெச்சிருந்த

 ஓவியங்கள் சூப்பர்.  சூரியோதயம், சூரியன் உச்சிக்கு வர்றது, சந்த்ரோதயம், சூரிய அஸ்தமனம்னு அருமையா இருந்தது புகைப்படங்கள்.அந்த காப்பி ஷாப்பின் அமைப்பே அந்த மாதிரி தான் இருக்கோன்னு தோணும்.


 இரவு உணவு ரொம்ப அருமையா இருந்தது. பசங்க சுடச்சுட பாஸ்தா சாப்பிட்டாங்க. கத்திரிக்காயில் பேக்ட் ஐட்டம் ஒண்ணு செஞ்சிருந்தாங்க செம ருசி அது. நல்ல ருசியான உணவு. அருமையான சர்வீஸ். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.  இந்த காப்பி ஷாப்பில் ஸீத்ரூ கிச்சன். :) சீனி கம் ஹிந்தி படத்துல வருமே அதுமாதிரி. 

நான் சமைக்கலை!!! எனக்கு யாரோ பரிமாறுராங்க. தண்ணி வேணும்னா கொண்டாந்து கொடுக்கறாங்க. இதைவிட ஆனந்தம் ஏதும் உண்டா??  நாம சமைக்காததை சாப்பிடும் போது அதோட ருசியே வேற. அன்னைக்கு நல்லா ரிலாக்ஸா சாப்பிட்டு நிதானமா ரூமுக்கு வந்து ஆனந்தமா தூங்கிப்போனேன்.

அடுத்த நாளைப்பத்தி அடுத்த பதிவுல 

4 comments:

அன்புடன் அருணா said...

/நான் சமைக்கலை!!! எனக்கு யாரோ பரிமாறுராங்க. தண்ணி வேணும்னா கொண்டாந்து கொடுக்கறாங்க. இதைவிட ஆனந்தம் ஏதும் உண்டா??/
My alltime favourite statement!!! :)

புதுகைத் தென்றல் said...

வாங்க அருணா,

சேம்ப்ளட் :)

வருகைக்கு மிக்க நன்றி

அமைதிச்சாரல் said...

//நாம சமைக்காததை சாப்பிடும் போது அதோட ருசியே வேற.//

இதைச்சொல்லியேதான் பொண்ணு கையால் அப்பப்ப டிபன், காபின்னு வெட்டிக்கிட்டிருக்கேன். சில சமயம் பிர்ர்ரியாணியும் :-))))))

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

கொடுத்துவெச்ச்வங்க. எனக்கு இப்ப சமயத்துல டீ, காபி கிடைக்குது. சாப்பாட்டுக்கு இன்னமும் கொஞ்ச நாளாகும். :))

வருகைக்கு மிக்க நன்றி