Showing posts with label எது சரி?!!?. Show all posts
Showing posts with label எது சரி?!!?. Show all posts

Tuesday, August 13, 2013

எது சரி??!!! - 3

கல்யாண வீடு மட்டுமல்ல இப்ப ஆஸ்பத்திரிக்கு போனா கூட எந்த சமூகம், ஜாதியா இருந்தாலும் பேசப்படுற டாபிக் மகன் கல்யாணம். எல்லாரும் சொல்லி வெச்சாப்ல ஒரே மாதிரி மகனுக்கு பொண்ணு கிடைக்கலை???!!! இதுதான்.... இது மட்டும்தான் பலருக்கு பிரச்சனை. இப்பவும் எப்பவும் எனக்கு ஞாபகம் வருவது “மணல்கயிறு” படம் தான். அந்த படத்துல ஒரு டயலாக். முகத்துல பருவந்தும் கல்யாணம் ஆகலை என்பது இந்தக்கால பிரச்சனை. பருவவயதைக்கடந்தும் இன்னைக்கு பல இளைஞர்களும், இளைஞர்களும் கல்யாண நாள்..... காண்பது எப்போதுன்னு தான் இருக்காங்க. இது சரியா??? எதனால??

எது சரி? தவறு?

1. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்குன்னு மூலையில உட்கார வெச்சாங்க. இப்ப நல்லா படிக்கறாங்க. அதுவே தான் பிரச்சனையா??

2. எந்த வயசுல பொண்ணுக்கு கல்யாணம் செய்வதாக உத்தேசம்??
22 வயசுலயே ஜாதக்கட்டை தூக்கி அடுத்த 2 வருஷத்துக்குள்ள கல்யாணம் முடிச்சு அனுப்பிகிட்டு இருந்தாங்க. கல்யாண வயசாகியும் இன்னமும் கல்யாணம் செஞ்சு வைக்காம சிலர் இருக்காங்களே அது ஏன்?

3. கல்யாணம் கட்டாயமான வழக்கம்னு திணிக்கலை. திருமண உத்தேசம் இருக்கறவங்களைப்பத்திதான் பேச்சு.

4. படிப்பு, வேலை இதெல்லாமும் பெண்களுக்கு அவசியம் தான்.  ஆனா எந்த வயசுல திருமணம்?  மகளுக்கு வயது ஏற ஏற வரப்போகும் மருமகனும் வயசாளியாத்தான இருப்பார்? அவங்க எப்ப குழந்தை பெத்து வாழ்க்கையில செட்டில் ஆவுறது?

5. ஒரு நல்ல துணையிடம் மகளை ஒப்படைத்து அவள் அந்த வாழ்க்கையையும் அனுபவித்து மகிழ்வதை பார்க்கணும்னு ஆசை இல்லையா?

6. மகளை படிக்க வெச்சிருக்கோம்!!! நம்ம பேச்சை கேட்க மாட்டாள்னு பெத்தவங்களே தப்பா யோசிச்சு மகள் கிட்ட பேசாம இருக்காங்களா?

7. வரன் பார்ப்பதில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும், தேடி தன் மகளுக்கு வரனை பார்த்து காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதை ஒரு தலைமுறையினர் மறந்துவிட்டார்களா?? இந்த மாற்றம் ஏன்?

8. 30 வயது பெண்களை முதிர்கண்ணிகள் என்று அந்தகாலத்தில் சொல்லகேள்வி. இப்பொழுது வயது வரம்பு இல்லையா? முதிர்கன்னிகளுக்கு வரன் தேடினால மணமகன் முத்தி முதிர்ந்துல்ல இருப்பாரு??

9. திருமண பந்தமே வேண்டாம் என்று பெண்கள் முடிவு கட்டிவிட்டார்களே? ஏன் இந்த தட்டுப்பாடு.  பெண்வீட்டாரின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டதா?

திருமணங்கள் ஆகாமல் இருக்க இன்னும் வேறு என்ன காரணம்???!!!!


Monday, August 12, 2013

எது சரி???!!! - 2

இப்ப முதியோர் இல்லம் ரொம்ப ஜாஸ்தியாகிடிச்சு. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அந்த பெற்றோர் பட்ட கஷ்டத்தை கொஞ்சம் கூட நினைச்சு பாக்காம இப்படி முதியோர் இல்லத்துல சேத்துட்டாங்க. என் பிள்ளை என்னை கவனிப்பதில்லைன்னு பெத்தவங்க வேதனை சொல்லில் அடங்காது. :(
நிராதரவா விட்டுட்டாங்கன்னு ஊரே தப்பு பேசும்.

இதுல எது சரி??!! தவறு??? 

1. வயதான காலத்துல பெத்தவங்களை பார்த்துக்க வேண்டியது பிள்ளைகளின் தலையாய கடமை. இதுல எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. (அட்லீஸ்ட் நம் இந்திய நாட்டில்னு வெச்சுப்போம்). ஆனா பிள்ளைங்க பெத்தவங்களை பாசமே இல்லாமலா முதியோர் இல்லத்துல சேத்திடறாங்க?? (அப்படியும் இருக்குன்னால்ம் மேலும் சில காரணங்கள் இருக்குமான்னு யோசிக்கணும்ல)

2. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் ரேஞ்சுக்கு பல வீட்டுல இன்னைக்கு மகன் வெளிநாட்டுலதான் இருக்காப்ல. அந்த சூழ்நிலை இவங்களுக்கு ஒத்து வரலைன்னா உடம்பு படுத்தும். அதைவிட இந்தியாவுலேயே இருந்திடறேன்னு சொல்லும் பெற்றவங்க தனியா இருக்க வேணாம்னு நினைச்சு இந்த மாதிரி சேர்த்துவிடலாம்ல. இது தப்பா??

3. இந்தியாவுலேயே வேறு மாநிலத்துல மகனோ,மகளோ கூட இருந்தாலும் பெத்தவங்க முதியோர் இல்லத்துல சேர்க்கறாங்களே!!! அது?? நம்ம நாடாகவே இருந்தாலும் கலாச்சாரம், தட்பவெட்பநிலை சூழ்நிலை எல்லாமே மாறும்.
அதை அட்ஜஸ்ட் செஞ்சுகிட்டு பிள்ளைகளோட இருப்பது சுகம்னு நினைச்சு பெரியவங்க இருந்தாங்கன்னா ஏன் முதியோர் இல்லத்துல சேர்க்க போறாங்க?

4. வயதான பெற்றோருக்கு துணையா தன் வாழ்க்கைத் துணையை அனுப்பி வெச்சிட்டு வெளிமாநிலங்களிலும், வெளிநாட்டிலும் ஃபோர்ட்ஸ்டு பேச்சிலர்களாக சில மகன்கள் இருக்காங்களே?? அதுக்கு காரணம் யாரு?
பிள்ளையின் பாசமா? மருமகள் வாங்கி வந்த வரமா? இல்லை மாமனார், மாமியார் சொளகரியம்தான் முக்கியமா??

5. தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் நலத்திற்காக தன் குடும்ப வாழ்க்கையை தியாகம் செய்து தான் பெற்ற பிள்ளையுடன் நேரம் செலவழிக்க முடியாமல் வாழ்க்கை பயணத்திற்கு நிதி சேர்க்க பாடுபடும் அந்த மகன்களை என்னவென்று சொல்வது? இதற்காகவா அந்த பெண்ணின் பெற்றோர் அவளுக்கு திருமணம் முடித்து வைத்தது?

6. இதையெல்லாம் யோசிச்சு வயதான காலத்துல அங்கேஇங்கே அலைய வேண்டாம்னு இந்த மாதிரி இல்லங்களில் விட்டு வைப்பது எப்படி தப்பாகும்?

7. சில பெரியவங்க எந்த சூழலுக்கும் தன்னை மாத்திக்காம நான் இப்படித்தான் இருப்பேன்னு இருப்பாங்க. அப்ப அந்த பிள்ளைகள் படும் பாடு??

8.  இப்பல்லாம் ரிட்டயர்மெண்ட் ஹோம்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு. தனி வீடோ, அப்பார்ட்மெண்டோ வாங்கிக்கலாம். சமையல் தேவையில்லை. வீடு மெயிண்ட்னன்ஸ், மருத்துவம் எல்லாம் அங்க பாத்துப்பாங்க. தன் வயதொத்த ஆளுங்களுடன் இனிதாக நேரத்தை செலவிடலாமே??

9. பிள்ளைங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்... நல்ல படியா படிக்க வைக்கணும்.. வசதியா வைக்கணும்னு புருஷனும் பொஞ்சாதியும் புள்ளைகளை கிரச்சில் விட்டுட்டு போகும்போது மட்டும் ஏன் யாருமே எதுவும் கேட்க மாட்டேங்கறாங்க??? அந்த பசங்க மட்டும் அங்கே சந்தோஷமாவா இருக்காங்க???!!!!!! அது தப்பில்லை ஆனா முதியோர் இல்லத்துல சேத்துட்டாங்கன்னா மட்டும் தப்பு.

மணல்கயிறு படத்துல விசு சொல்வது போல அப்படி சிலர்... இப்படி சிலர் இருக்காங்க. என்ன செய்ய????

உங்களுக்கு வேற எந்த கேள்வியும் தோணினா பின்னூட்டத்துல சொல்லுங்க.
அடுத்த பதிவுல சந்திப்போம்

Sunday, August 11, 2013

எது சரி??!!!!!!!

எல்லாவற்றிற்கும் எல்லாருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும். அது சரியா? தவறான்னு? கருத்து கந்தசாமியா கருத்து சொல்றவங்க சொல்வாங்க. அந்த கருத்தைக்கேட்டு குழம்பி போறவங்களும் உண்டு. காலம், அதன் அவசியம் இதை வெச்சு எந்த ஒரு செயலும் நியாயமாகலாம்? ஆனா பொத்தாம்படையா பல விஷயங்கள் இது தப்புன்னே சொல்லிக்கிட்டு இருக்கோம். அதுவும் நியாயமா இருக்க சான்ஸ் இருக்கு. என்ன மண்டை குழம்புதா??!!! எனக்கும் சில விஷயங்களை பார்க்கும் போது, கேட்கும்போது இப்படித்தான். :)







வரப்போகும் பதிவுகளில் என்னுடைய கருத்துக்களை மட்டும் பதியபோறேன்னு சொல்லமாட்டேன். பலருடைய கருத்துக்கள், அனுபவங்கள் இதை மத்தவங்க பார்க்கும் பார்வையில வித்தியாசமா இருக்கும். சோ.... வாங்க பகிர்ந்துக்கலாம்!!! பதிவுகளை படிச்சிட்டு உங்க கருத்துக்களையும் பின்னூட்டமாக்க மறந்துடாதீங்க. அப்பதான் பலருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். இனி பதிவுகள் தொடருது:


சமீபத்துல ஒரு கதை படிச்சேன். “ஓடிப்போயிடலாம்!!!” இதுதான் தலைப்பு.
(நீங்களும் படிச்சிருக்கலாம்). அந்த கதையின் கருத்து இதுதான். வயதான தன் மனைவி இரவு பகல் பார்க்காம உழைச்சுகிட்டே இருப்பதை தாங்க முடியாத வயதான கணவர் அந்த வீட்டை விட்டு ஓடினால் தன் மனைவிக்கு ஓய்வு கிடைக்கும் என நினைக்கிறார்.

இது சரியா??!!!! தவறா??!!!!

1.ரிட்டயர்மெண்ட் இல்லாத ஒரு வேலை குடும்ப வேலை. அதிலயும் அடுப்படி வேலைக்கு ஓய்வே இருக்காது. தனியா போனாலும் அங்கயும் அந்தம்மா சமைக்கத்தானே போறாங்க??? மத்த வேலைகளும் குறையாதே????

2. பெத்த பிள்ளைங்களுக்கு ஆரம்ப முதலே சமைச்சு, நோய்வந்தா பார்த்து எல்லாம் செஞ்சது இதே பெற்றோர் தானே??? அதுவே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் ஆனதும் செய்யும்போது மட்டும் எப்படி தப்பாகும்?? எக்ஸ்ட்ரா கேரக்டரா மருமகள்..... அப்புறம் பேரக்குழந்தைகள் வந்திட்டதால செய்யக்கூடாதா??

3. அந்த காலத்துல பெரியவங்க உசுரு இருக்கறவரைக்கும் ஓடியாடி வேலை செஞ்சா நல்லதுன்னு சொல்லி சுறுசுறுன்னு இல்லாட்டியும் கைய கால மடிக்க நீட்டி வேலை பாத்தாங்க. இப்ப மட்டும் முதுமை ஏன் அதிகமா கொண்டாடப் படுது?

4. தான் வேலைல இருந்தப்ப மனைவி குடும்ப பாரத்தை சுமந்தது தெரியாம இருந்த ஆண்கள் ரிட்டயர்ட் ஆனதுக்கப்புறம் மட்டும் ஏதோ தன் மனைவியை கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கறது மாதிரி இருப்பது சரியா??

5. நீ ஒரு வேலை? நானொரு வேலைன்னு வயதான தன் மனைவிக்கு தன்னால் முடிஞ்ச உதவியை செஞ்சா அந்த மனைவிக்கும் ஓய்வு கிடைக்கும்,
வேலைகளை நேரத்தோட முடிக்கவும் முடியும். இதைப்பத்தி ஏன் யாரும் யோசிக்க மாட்டாங்க. (ஆபிஸ்ல ரிட்டயர்மெண்ட் உண்டு, வீட்டு வேலைக்கு ரிட்டர்மெண்ட் இல்லைன்னு புரிஞ்சிக்காத ஆட்கள் இன்னமும் இருக்காங்க)

இதுதாங்க இந்த தொடரின் முதல் பதிவு. இந்த டாபிக்குல உங்களுக்கு வேற ஏதும் கேள்வி இருந்தா அதையும் பின்னூட்டத்துல சொல்லுங்க. கண்டிப்பா உங்க கருத்துக்களை தெரிஞ்சுக்கும் ஆவலுடன் அடுத்த பதிவுக்கு தயாராகிகிட்டு இருக்கேன்.