Showing posts with label சீசன் போஸ்ட். Show all posts
Showing posts with label சீசன் போஸ்ட். Show all posts

Friday, October 16, 2009

நிஜமான பண்டிகை கொண்டாடுவோம்!!

இங்கே வந்த பிறகு இந்த 1 1/2 வருடத்தில்
பண்டிகை நாட்கள் வரும்போது மனது கொஞ்சம்
வருத்தமடையும்.

இது எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல் பலருக்கும்
இருக்கும் கருத்து என்றுதான் நினைக்கிறேன்.

என்ன மேட்டர்??? அடுத்த பதிவில் சொல்றேன்.
என்று போன பதிவில்சொல்லியிருந்தேன்.

அப்போதெல்லாம்
பண்டிகை நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனும்
தந்ததுண்டு. ஆனால் இருந்தது ஒரு சேனல் தான்
என்பதாலும் 24 மணி நேர ஒளிபரப்புக்கள் கிடையாது
என்பதாலும் உற்றார், உறவினரை சந்திக்க,
பெரியவர்கள் வீட்டுக்குச் சென்று ஆசிரிவாதம்
வாங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் உண்டு.
புத்தாடை கட்டி கர்வமாக வீதியில் நடந்திருப்பேமே
ஞாபகம் இருக்கா??

பண்டிகைகள் கொண்டாட்டங்கள் இறைவனுக்கு
பூஜை செய்வதற்காக மட்டுமல்ல உற்றார்,
உறவினருடன் கலந்து மகிழத்தான். ஆனால்
இன்று நடப்பது என்ன?

அவசர அவசரமாக எண்ணெய்க்குளியல்,
பூஜை,புத்தாடை, பட்டாசு வெடித்து
காலை முதல் நள்ளிரவு வரை தீபாவளி
சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பது தான் :((

நான் சென்ற முறை உறவினர் வரச்சொன்னாரே
என்று அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். என்னை
வரச்சொல்லிவிட்டு எல்லோரும் டீவி முன்
இருந்தனர். வா என்றழைத்ததோடு சரி. பேசவேயில்லை.
ஏன் போனோம் என்றாகிவிட்டது. :((( சேர்ந்து
கோவிலுக்கு போகலாம் வாங்கள் என்றழைத்ததற்கு
”ஆஹா, அந்த நேரத்தில் சிறப்புத்திரைப்படம் இருக்கு
நான் வரவில்லை!!!” என்று சொல்லிவிட்டார்.

இலங்கையில் இருந்த போதெல்லாம் நாம்
இந்தியாவை விட்டு தூரத்தில் இருக்கிறோம். இதனால்
நம் பிள்ளைகள் கலாச்சாரம்,பூஜை ஆகியவற்றை
மறந்து விடக்கூடாது என்பதுதான் பலரின் எண்ணம்.
(வெளிநாட்டில் வாழும் பலரின் மனதில் இந்த
எண்ணம் தான் ஓடிக்கொண்டிருக்கும்)

அதனால் ஒவ்வொரு பண்டிகை, பூஜை எல்லாம்
சிறப்பாக கொண்டாடுவோம். அங்கிருக்கும்
நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர்
போனில் வாழ்த்திக்கொள்வது பத்தாமல்
நேரில் வந்து வாழ்த்து சொல்வார்கள். நாங்களும்
செல்வோம்.

எங்கள் குரூப்பின் பெயர் “ப்ரவாஸாந்த்ரா(PRAVASANDHRA)"
அர்த்தம் ஆந்திராவைவிட்டு வெளியே இருப்பவர்கள்.

எப்போதும் இனிப்பாக நினைவில் இருப்பது
யுகாதி(தெலுங்கு வருடப்பிறப்பு), தீபாவளி.

யுகாதி மிக முக்கியமான கொண்டாட்டம்.
பிள்ளைகள் பாரம்பரியத்தை உணர்த்தும்
விதமாக நடனம், ஸ்லோகங்கள் ஆகியவை
அரங்கேற்ற 2 மாதங்களுக்கு முன்பே சொல்லிக்
கொடுப்போம். பெரியவர்கள், சிறியவர்கள்
சேர்ந்து நடத்தும் குடும்ப விளையாட்டு,
என கேளிக்கை, கொண்டாட்டம் இருக்கும்.

மிக முக்கியமான பஞ்சாங்க ஸ்ரவனம் உண்டு.
வந்திருக்கும் அனைவருக்கும் பரிசு, என
பல விதமாக உழைத்து செய்வோம். பெண்கள்
நாங்களே எல்லா ஏற்பாட்டுகள்(அனைவரையும்
ஒருங்கினைத்தல், அழைப்பிதழ் தயாரித்தல்,
பிள்ளைகள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு
சான்றிதழ்கள் தயாரித்தல்,பிள்ளைகளை
தயார் செய்வது, விழா நடத்த ஹோட்டல்
புக் செய்வது, பரிசுகள்) செய்து யுகாதி அன்று
ஆண்கள் கையில் கொடுத்து நடத்தச் சொல்வோம்.

மிக முக்கியமான கண்டீஷன் என்னவென்றால்,
ஆங்கிலம், ஹிந்தியில்பேசக்கூடாது.நிகழ்ச்சி
நடைபெறும் பொழுது தெலுங்குத்தவிர
வேறு மொழி பேசினால் உடனே “மாத்ரு பாஷா,மாத்ரு பாஷா”
என்று சவுண்ட் விடுவோம். :))
பாராம்பரிய உடையில் தான் வரவேண்டும்.

ஏன் இந்த கண்டீஷன்??
எப்போதும் மற்ற பாஷைக்ள் கலந்து பேசுவோம்.
யுகாதி அன்று மட்டுமாவது தெலுங்கு மட்டும்
பேசினால் நம் நாட்டில் இருக்கும் எஃப்கட் கிடைக்கும்.
மொழி மறந்துவிடாமல் பிள்ளைகளும்
பேசுவார்கள். இது தெலுங்கர்கள் மட்டும் பங்கேற்கும்
நிகழ்ச்சி.

தீபாவளி அனைவருக்கும் பொதுவானது. அதுவும்
மிக சிறப்பாக கொண்டாடுவோம். வெடி வெடிக்க
ஏதுவாக நிறைய்ய காலியிடம் இருக்கும் நண்பரின்
வீடுதான் கொண்டாடும் இடம்.


கொண்டாட்டத்தில் கலந்து வரும் தோழிகள்
முன்னாடியே பேசிவைத்து “POT LUCK"
முறையில் ஒவ்வொருவரும் உணவுதயாரித்து
கொண்டு செல்வோம். நாங்கள் வாங்கி வைத்திருக்கும்
பட்டாசுகளை கொண்டு சென்று எல்லா பிள்ளைகளும்
சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள்.

ஒன்றாக கலந்து, பேசி மகிழ்ந்து, உண்டு
பண்டிகை கொண்டாடிய மகிழ்ச்சியில் பிள்ளைகள்
மறுநாள் பள்ளிக்கு மட்டம் அடித்து என
இனிய நினைவுகள் தான்.

இங்கே வந்த பிறகு இந்த 1 1/2 வருடத்தில்
பண்டிகை நாட்கள் வரும்போது மனது கொஞ்சம்
வருந்தும் காரணம். நம் தாய்த்திருநாள் நாட்டில்
பண்டிகைகள் கொண்டாடப்படும் விதம். அங்கு
எல்லோருடனும் கலந்து மகிழ்ச்சியாக இருந்துவிட்டு
“இங்கே எனது வீடு, எனது பிள்ளைகள், எனது
குடும்பம்” என்று தனியாக இருப்பது போல் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும். பண்டிகை காலங்களில்
டீவிக்கு சற்று ஓய்வுக்கொடுத்து, உற்றார் உறவினர்
வீட்டுக்குச் சென்று கலந்து மகிழ்ந்து உறவை
பலப்படுத்திக்கொள்வேன் எனும் சங்கல்பம் அனைவரும்
செய்து கொண்டால் நிஜமான பண்டிகை கொண்டாடி
அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.



நிஜமான பண்டிகை கொண்டாடி அனைவரும் வாழ்வில்
மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்.

வலையுலக நண்பர்கள்,உடன் பிறப்புக்கள், மற்றும் அவர்களது
குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக
மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்




VOTE போடுவீங்கன்னு எனக்குத் தெரியும்.:)))

Wednesday, October 14, 2009

தீபாவளி ஏற்பாடுகள்

நம்மூரில் தீபாவளி அன்றுதான் பெரிய பண்டிகை.
கொண்டாட்டம் விருந்து எல்லாம். ஆனால்
உண்மையில் 5 நாட்கள் தீபாவளி பண்டிகை
என்பது மும்பை போனபோதுதான் தெரியும்.


நம்மூரில் பொங்கலுக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து
வெள்ளை அடித்து, பளிச்சென்று செய்வோம்.

வடக்கே தீபாவளிக்கு அமர்க்களப்படும். அந்த ஐடியா
எனக்கும் பிடிக்க நானும் பின் பற்றுவேன்.

ஜன்னல்களும் புத்தாடைக்கட்டி தீபாவளிக்கு நான் ரெடின்னு
சொல்லும். கலர் கொஞ்சம் டார்காக இருப்பதுபோல்
பார்த்துக்கொள்வேன். கோல்டன் கலரில் செய்தாலும்
அமர்க்களமாக பண்டிகைக்கான தோற்றத்துடன் வீடே
ஜொலிக்கும்.

ஏற்றப்படாத மெழுகுவர்த்திகளை வைத்து
அலங்காரம் செய்வது வீட்டில் நுழைந்த உடன்
நல்ல மூடை கொடுக்கும்.

அகல்விளக்குகள் (எரியவிடாமல்) அலங்காரமாக
வைத்தாலும் சூப்பரா இருக்கும்.

வீட்டுக்கு வெளியே இப்படி வைப்பதும் அழகைத்தரும்.




தீபாவளியன்று செய்யப்படும் லட்சுமி பூஜை மிக
விசேசம். இது போல் லட்சுமி காலடி வீடெங்கும்
போடுவார்கள்.


அது என்ன 5 நாள் பண்டிகை??

1. DHANTHERYAS - முதலாம் நாள் பண்டிகை. தன் திரேயஸ்.
இன்று லட்சுமி பூஜைக்கான வெள்ளிக்காயின், அல்லது தங்கம்
குறைந்த பட்சம் எவர்சில்வர் பால்காய்ச்சும் பாத்திரமாவது
வாங்கிவருவார்கள்.

தன்வந்திரி- இவர் நாராயணின் அம்சம். அம்ருத கலசத்தோடு
வெளிப்பட்டநாள் என்றும் சொல்வார்கள்.
2.CHOTI DIWALI- நரகசதுர்தசி
3.BADI DIWALI,LAKSHMI POOJA- லட்சுமி பூஜை செய்யப்படும்.
இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகுவதாக நம்பிக்கை.

4.GOVARDHAN POOJA/NEW YEAR - மார்வாடிக்காரர்களுக்கு
புத்தாண்டு.(சித்திரை வருடப்பிறப்பு). இந்நந்நாளில்தான்
ஸ்ரீக்ருஷ்ணர் கோவர்தன கிரி மலையை கையில் ஏந்தி
தன் பக்தர்களை ரட்சித்ததாக கதையும் உண்டு.

5. BAIDUJ - உடன் பிறப்புக்கள் கலந்து உறவை
பலப்படுத்திக்கொள்ளும் திருநாள். திருமணத்திற்கு
பிறகு தாய்வீட்டு விசேடங்களில் பெரிதாக பங்கேற்க
முடியாமல் போகும். ஆனால் இந்நந்நாளில் தன் அக்கா,
தங்கை கையால் உண்ப்வர்களுக்கு நல்ல ஆயுசு,ஐஸ்வர்யம்
கிடைக்கும் என்பது நம்பிக்கை

மேலதிக தகவல்களுக்கு இங்கே பாருங்கள்.


அம்மா வீட்டில் தீபாவளிக்கு முதல் நாள்
கொண்டாட்டமாக இருக்கும்.

உக்காரை, வகைவகையான பஜ்ஜி, முள்ளங்கி வெங்காய
சாம்பார் என மெனு கலக்கலாக இருக்கும்.
இப்போது நானும் இந்த மெனுதான் செய்வேன்.

அடுத்த நாள் அதாவது தீபாவளியன்று மெனு
அதிகமாக செய்ய மாட்டேன். இதனால்
பண்டிகை நாளன்று வேலையும் குறைவு.
வயிற்றுக்கு இதமான மெனு இதுதான் திட்டம்.

வீட்டுக்கு வருபவர்களுடன் அளவளாவ முடியும்.

ஆனால் இங்கே வந்த பிறகு இந்த 1 1/2 வருடத்தில்
பண்டிகை நாட்கள் வரும்போது மனது கொஞ்சம்
வருத்தமடையும்.

இது எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல் பலருக்கும்
இருக்கும் கருத்து என்றுதான் நினைக்கிறேன்.

என்ன மேட்டர்??? அடுத்த பதிவில் சொல்றேன்.

Monday, June 08, 2009

பராக்! பராக்! வருண தேவன் பராக்!!!!

ஹைதையின் பேர் கேட்டாலே எல்லோரும் சொல்வது
ஐயோ! வெயில் தாங்க முடியாதே!! என்பதுதான்.

ஆனால் அந்த இரண்டு மாதங்களையும் தாண்டிவிட்டால்
வாழ்க்கை இங்கே ஒரு சொர்க்கம் தான். ஹைதையை
நான் மிகவும் விரும்ப இதுவும் ஒரு காரணம்.

ஹைதை வெயிலை விட சென்னை வெயிலுக்குத்தான்
ரொம்ப திண்டாடிவிட்டோம். உஸ் புஸ்ஸுன்று
தாங்கவே முடியவில்லை.(ஏசி கூட வேலை செய்யாது
போல இருக்கு சென்னையில் :( )

ஹைதையில் பெய்யென பெய்யும் மழையாக
ஜூன் மாதம் கட்டாயம் மழைக்காலம் துவங்கிவிடும்.
”ஆஷாட மேகம்”(ஆடிமாத மேகம்) என்று
பொதுவாகச் சொன்னாலும் ஜ்யேஷ்ட(ஆனி) மாதமே
மழை வந்துவிடும்.


இந்த வருடம் பருவமழை சற்று முன்னதாகவே
தொடங்கிவிட்டது. சென்ற மாத கடைசியிலேயே
மழை அப்பப்போ பெய்தது. கடந்த சனிமுதல்
மாலை வேளைகளில் மழை பொழிய துவங்கிவிட்டது.

2 நாள் மழைக்கு ஊரே ஏசி போட்டாற்போல்
ஆகிவிட்டது. :)))

இனி ஜாலி ஜாலி ஜிம்கானா தான்.

தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோன்னு என்று
மழைக்காலப் பாடல்களில் மூழ்க வேண்டியதுதான்.



Get Your Own Hindi Songs Player at Music Plugin

மழைக்காலத்தில் மயிலின் மனது மகிழ்வது போல்
என் மனமும் மகிழ்வுடன் இருக்கும். எவ்வளவு
மழை பெய்தாலும் சந்தோஷமே. துணி காயவில்லை,
வெளியே போகமுடியவில்லை, என அங்கலாய்க்கமாட்டேன்.
ஆனந்தமாக அனுபவிப்பேன். வெயிலின் கொடுமை
இரண்டு மாதமே! அழகான மழைக்காலம், ஆனந்தமான
குளிர்காலம் என அடுத்த மார்ச் வரை ஹைதை
ஒரு சொர்க்கமே!!!



என் மகனுக்கு மழைக்காலம் என்றால் பக்கோடா/பஜ்ஜி வித்
மசாலா டீ தான் :)) அவரும் மழை விரும்பியாச்சே!!!!


இதனால் தான் இந்தியாவில் எங்கே இருக்கலாம்?
என்ற கேள்வி மனதில் எழுந்த பொழுது கண்ணை
மூடிக்கொண்டு ஹைதைக்கு டிக்கெட் வாங்கியது. :)))

Thursday, February 26, 2009

ஸ்ஸ்ஸ்..... இப்பவே கண்ணக்கட்டுதே.....

சிவராத்திரி முடிஞ்சதும் சிவ சிவான்னு குளிர்
போயிடும்னு எங்க பாட்டி சொல்வாங்க.

சிவராத்திர்க்கு முன்னாடியே குளிர் குறைஞ்சிடுச்சு.
:(

திங்கள்கிழமை சிவராத்திரி முடிஞ்சதும் தன்னோட
வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டாரு சூரிய பகவான்.
சென்ற வருடத்தோடு ஒப்பிடும்பொழுது நேற்று
வெப்பநிலை 39 டிகிரியாம். 5 டிகிரி அதிகமாயிடுச்சாம்.
அனல் காத்து வீச ஆரம்பிச்சிடிச்சி




இப்பவே இந்த நிலைன்னா? மே மாசம் கேக்கவே
வேண்டாம். ஆனந்த தாண்டவமாடிடுவார் சூரியன்
அண்ணாச்சி. 44 டிகிரியையும் தாண்டிடுமோன்னு தோணுது.

வெயிலோட கொடுமைக்கு ப்ளம்பர், கார்பெண்டர் கூட
வேலைக்கு வரமாட்டாங்க. சாயங்கலமா வர்றோம்
அப்படின்னு ஊட்டுலையே உக்காந்துக்குவாங்க.

என் பசங்களுக்கு மார்ச்ல 2 வாரம் விடுமுறைக்கப்புறம்
பள்ளி திறந்து ஏப்ரல் கடைசியில் விடுமுறை கொடுக்கும்
வரை மதியம் 12 மணிக்கே ஸ்கூல் விட்டுவாங்க.

ஏப்ரல் மேல 4 மணிநேர கரண்ட் கட் இருக்கும்.
இந்த 3 மாசம் மட்டும் தாக்காட்டிட்டா அப்புறம்
ஹைதை சொர்க்கம். :)))






வெயில் காலம் பாட்டி அதிக சூடு இல்லாமல்
உடம்புக்கு சூடு ஆகாத சாப்பாடா கொடுப்பாங்க.

புளியை குறைச்சு, தக்காளி அதிகமா சேப்பாங்க.

வீட்டில எப்பவும் ஸ்ரீராம நவமி தான். (கரைச்ச மோர் :)) )

வெள்ளரிக்காய், நுங்கு, இளநி வாங்கி கொடுப்பாங்க.









மதியம் 4 மணி வாக்கில் நல்லா சில்லுன்னு தயிர்
சோறு பிசைஞ்சு தொட்டுக்க வெங்காயம் வெச்சு
கொடுப்பாங்க. வயித்துல போனதும் உடம்பு
சில்லுன்னு ஆயிடும். ( இப்பவும் வெயில்காலத்தில் என்
ஊறுகாய் பழக்கமெல்லாம் மூட்டை கட்டி
வெச்சிட்டு வெங்காயத்தை தான் எடுப்பேன். :( )


அப்பல்லாம் வீட்டில் ஃப்ரிட்ஜ் கிடையாது.
பாட்டி நல்ல மண் பானை வாங்கிவந்து
கழுவி சுத்தமாக்கி கீழே மணல் பரப்பி,
பானையை வெச்சு அதுல தண்ணி ஊத்தி
வைப்பாங்க. ஏலக்காய், வெட்டிவேர்னு தினத்துக்கு
ஒண்ணு போடுவாங்க. சீரகம் போட்டத் தண்ணி
சூப்பரா இருக்கும்.

மண்பானையை சுத்தி ஒரு வெள்ளைத் துணி
போட்டு வெச்சிருப்பாங்க. அந்தப் பக்கம்
போகையில் 1 டம்பளர் தண்ணி எடுத்து
மண்ணுலையும், துணி மேலையும் ஊத்தி
வெச்சா பானைக்குள்ள தண்ணி ஜும்ம்மா
ஜில்லின்னு இருக்கும்.


வெயில் காலம்னா பானைத்தண்ணிதான்.
இலங்கையில் இருந்தப்ப கூட வெள்ளவத்தைக்கு
போய் வருசா வருஷம் புது பானை வாங்கிகிட்டு
வந்து தண்ணி ஊத்தி வெப்பேன். என் தோழிகள்
கூட எங்க வீட்டு பானைத்தண்ணி குடிக்க
வந்துட்டு போவாங்க.

இதோ இன்னைகு காலேல பானை கண்ணுல
பட்டதும் வாங்கிகிட்டு வந்திட்டேன்.
இன்னைக்கு ஏலக்காய் போட்டு வெச்சிருக்கேன்.
மூண்டா மார்க்கெட் போகும் பொழுது
வெட்டிவேர் வாங்கிகிட்டு வரணும்.

தர்பூஷணி பழம் மீடியம் சைஸ் 10 ரூபாய்தான்
இங்கே. சீட்லஸ் திராட்சையும் விலை குறைய
ஆரம்பிச்சிருச்சு. கிலோ 30. :))




உடம்புக்கு சூடு ஏறாமல் சாப்பாடு.
மாசத்துக்கு ரெண்டு தடவை (கண்டீஷனிங்)
ஹென்னா போட்டா உடம்பு கூலாகிடும்.
(இல்லாட்டி கண்ணு எறிய ஆரம்பிச்சிடும்)

தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சை ஜூஸ்.
டீ காபியை குறைச்சு திக் மோர் குடிச்சாலும்
நல்லதாச்சே!

போன வருஷம் சம்மர் ஷ்பெஷல் பதிவு
போட்டிருந்தேன். அதை இப்ப மீள் பதிவாக
போட்டுக்கறேன்.


அப்புறம் நண்பர்களுக்கு வேண்டுகோள்:

வெளியே அதிகம் போறவங்க சன்ஸ்கீரீன் லோஷன்
போட்டுக்கோங்க.

கூலிங்கிளாஸ் (பார்வைக் கண்ணாடி அணியறவங்க
கூட வெயிலில் போகும்பொழுது கூலிங் கிளாஸ்
கட்டாயம் போடணுமாம். வெயில் அதிகம் பட்டால்
மைக்ரேன் தலைவலி வரும்ணு டாக்டர் சொன்னார்)

மத்தவங்க சிரிப்பாங்கன்னு வெக்கப்படாம ஹேட்,
போடுங்க.

குடையை எடுத்துகிட்டு போறது இன்னும் நல்லது.
(கையில வெச்சிருந்தா பத்தாது. குடையை
விரிச்சு வெக்கணும் :)) )


சன்ஸ்ட்ரோக் வந்துச்சுன்னா ரொம்ப கஷ்டம்.
உடம்பை நல்லா பாத்துக்கோங்க.

Friday, February 13, 2009

தொடத் தொட மலர்வதென்ன???

காதல் எனப்படுவது யாதெனில்?

விளக்கம் கொடுக்கப்பட முடியாத
ஒரு அனுபவம் காதல்.

காதல் உலகை இயங்கச் செய்கிறது.

நம்மையும் அன்பு செலுத்த ஒருவர்
இருக்கிறார் எனும் நினைப்பே
இனிமையாது.


இது ரெண்டும் அயித்தானுக்கு பிடிச்ச
பாடல்கள்:








எனக்கு பிடிச்சது ஒரே பாடல்
இரு வேறு மொழிகளில். பாடல்வரிகள்
சுகமோ சுகம்.

(தெலுங்கு)

தெலுசா மனசா
இதி ஏ நாட்டி அனுபந்தமோ,
தெலுசா மனசா!
இதி ஏ ஜன்ம சம்பந்தமோ!!





TU MILE DIL KILE
AUR JEENE KO KYA SAHIYE!!
NA HO THUM UDASU
ME RAHUNGA ZINDAIBAR

SAARE SANSARUKA PYARE MAINE PAYA
TUM MILE DIL KILE



தொடத் தொட மலர்வது காதல்.

தொடாமலும் ஒட்டிக்கொள்வது காதல்


THERE IS ONLY ONE HAPPINESS IN LIFE,
TO LOVE AND TO BE LOVED

Monday, February 09, 2009

ரொமான்ஸ் ரகசியங்கள்..................

பதிவு போடணும்னு முடிவு
எடுத்தாச்சுன்னா நானே என் பேச்சைக் கேக்க மாட்டேன்.
(தாமிரா திட்டாதீங்க.:))

சரி தலைப்பை பாத்து கன்னாபின்னான்னு எதுவும்
நினைச்சுகிட்டு ஓடி வந்தீங்கன்னா நான் அதுக்கு
பொறுப்பு இல்லை. :))))))))))))



காதலர் தினத்திற்கு இன்னும் 5 நாள் தான்
இருக்கு. எங்கெங்கு நோக்கினும் காதலர் தின
சிறப்பு தான். நாளிதழ்கள், வார இதழ்கள்
அனைத்திலும் கொண்டாட்ங்கள் எப்படி எல்லாம்
இருக்கலாம் என்று வந்த வண்ணம் இருக்கின்றன்.

நான் மிக ரசித்த ஒரு கட்டுரையை உங்களுடன்
பகிர்ந்து கொள்கிறேன். காதலர் தினம் காதலர்களுக்கு
என்பது எல்லோருக்கும் தெரியும். கல்யாணம் கட்டிகிட்டு
காதலித்துக்கொள்வர்களும் உண்டு. அவர்கள் அனைவரையும்
சிரம் தாழ்த்தி வாழ்த்திக்கிறேன்.

நான் படித்த அந்தக் கட்டுரையில் வித்தியாசமாக
திருமணத்திற்கும் பிறகும் பிரபலமாக இருக்கும்
சிலரின் பேட்டி இருந்தது. அது படித்த பொழுது
(அதுல சொல்லியிருக்கற மாதிரி அவங்க
இருக்காங்களான்னு நாம் சிபிஐ வெச்சு பாக்கப்போறதில்லை(
கற்றுக்கொள்ள நிறைய இருந்தது.

திருமணத்திற்கு பிறகு தான் வாழ்க்கை
துவங்குகிறது. ஆனால் நிஜத்தில்
நடப்பது என்ன?

“கல்யாணமாகி இரண்டு பிள்ளைங்க இருக்கு.
இன்னமும் குலுக்கிகிட்டு போறா?” என்பது
போனற பேச்சுக்கள்....

“குழந்தை பெத்தவங்க மாதிரியா இருக்காங்க
ரெண்டு பேரும்”

இதெல்லாம் என்ன பேச்சு? தாய்மை எத்தனை
உயர்வோ அத்தனை உயர்வானது தனது
கணவனுக்கு மனைவி என்பதும். (ஆண்களுக்கும்
பொருந்தும். கல்யாணத்துக்கப்புறம் தங்கஸ்
நல்லா சமைச்சு போட்டாங்க. எப்படி இருந்த நான்?
இப்படி ஆயிட்டேன்? என்று மாமிச மலையாக
இருப்பவர்களும் உண்டு)

பல பெண்கள் ஒரு குழந்தை பிறந்ததும்
தான் மனைவி என்பதை மறந்து அந்த
பிள்ளைக்கு தாயாக மட்டுமே இருக்கிறார்கள்.
(சில குடும்பங்களில் ஒரு பெண்மணியின்
மகள் வயதுக்கு வந்துவிட்டால் அந்தப் பெண்
தலை ஜடை போடக்கூடாது. கொண்டை
தான் போடவேண்டுமென இருக்கிறது)

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி/காரராக இருக்க
வேண்டாம். தன் கணவருக்காக/ மனைவிக்காக
தன்னை அலங்கரித்துக்கொள்வது தவறா?

இருமணம் இணைவது திருமணம்.
ஒரு குழந்தை பிறந்ததும் அந்த உறவு
மறந்து/ மாறிப்போவது முறையல்ல.

கணவன் மனைவி தங்களுக்கென ப்ரத்யேக
நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.

அருகருகில் அமர்ந்து தேநீர் அருந்துதல்,

வார இறுதியில் இயன்றால் இருவருக்குமட்டுமே
ஆன டின்னர்.

இப்படி எல்லாம் சொல்லியிருந்தாங்க.

டின்னரை விடுங்க. புருஷன் பொஞ்சாதி
ரெண்டு பேரும் பக்கத்துல உக்காந்து
பேசிக்கறது உண்டா??

பக்கத்துல உக்காந்தா தப்பு.

இப்போ பெண்கள் பாண்ட் சர்ட் போடுகிறார்கள்.
அது திருமணத்திற்கு பிறகும் போட்டால்
அம்புட்டுதான். அதுவும் ரெண்டு பிள்ளை
பிறந்த பிறகுன்னா கை கொட்டி சிரிக்க
மட்டும்தான் மாட்டாங்க.

கல்யாணம் ஆகிடிச்சு, குழ்ந்தை பொறந்திடிச்சு
அம்புட்டுதாங்கற மனப்பான்மை மாறனும்.
திருமண பந்தம் நிலைத்து நிற்க சின்னச்
சின்ன அன்னியோனியங்கள் தேவை.

WE NEED TO KEEP OUR MARRIAGE ALIVE.
அருமையான வாக்கியம்.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் காதல்
திருமணம் புரிந்தவர். இரண்டு
பெரிய குழந்தைகளுக்குத் தாய்.
22 வருட அவரது திருமண வாழ்க்கை
பற்றி அவர் அடிக்கும் கமெண்ட்.

OURS IS LOVE MARRIAGE. NOW ONLY MARRIAGE IS THERE
NOT LOVE. :((

இந்த நிலைக்கு பெயர்தான் திருமண வாழ்க்கை
என்றால் திருமணமே செய்து கொள்ள வேண்டாம்.

ஆகவே அன்புத் தோழிகளே/ தோழர்களே உங்கள்
அனைவரிடமும் என் வேண்டுகோள்.
திருமணம் எனும் பந்தம் நிலைத்து நிற்க
ஆவன செய்வோம் என இந்தக் காதலர்
தினத்தில் உறுதி எடுத்து செயல்படுவோம்.

காதல் புனித மானது. உலகை இயங்கச்
செய்வதும் காதல் தான்.

அன்பே கடவுள்!

Wednesday, August 27, 2008

மழை வருது ....மழை வருது...

நேயர்கள் இன்று பார்க்க விருப்பது மனதைத்
தொடும் மழைப் பாடல்கள்.

மழைக்காலம் நான் மிகவும் விரும்பும் காலம்.
மழைத்துளி விழுந்த உடன் கிளர்ந்து எழும்
அந்த மண்ணின் வாசம்..

கார்கால மேகத்தைக் கண்டதும் என் மனம்
எப்போதும் மயில் போல் துள்ளும்.
மழை பெய்து முடிந்ததும் சைக்கிளில் செல்ல
மிகவும் பிடிக்கும்.

மழை, சூடாக மசாலா டீ, கொறிக்க ஏதாவது
இப்படி கொண்டாடுவேன் மழைக்காலத்தை.

வாருங்கள் இசைமழையில் நனையலாம்.
மழையைக் கொண்டாடலாம்.


மழை என்றதும் நினைவில் வருவது
இந்தப் பாடல்தான்.




கோதாவரி திரைப்படத்தின் இந்தப் பாடலும் பிடிக்கும்.




ரும் ஜும் ரும்ஜும் ரிம் ஜும் ரிம் ஜும்
சூப்பர் பாட்டு. ஆர்.டி.பர்மன் இசையமைப்பில்
வெளிவந்த கடைசி திரைப்படம். மிக மிக பிடித்த பாடல்.



மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு.



தாலாட்டுதே வானம்! தள்ளாடுதே மேகம்





காற்றில் எந்தன் கீதம்!

Friday, August 22, 2008

கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான்

கோகுலக் கண்ணினி ஜன்மாஷ்டமி நாளை. இந்தச் சிறப்பு
பதிவு அவனின் புகழ் பாடும் சில வீடியோ மற்றும்
ஆடியோக்களுடன்.











Get this widget | Track details | eSnips Social DNA



சர்வர்ம் கிருஷ்ணார்ப்பணமஸ்து

Tuesday, August 05, 2008

நாக சதுர்த்தி - கருட பஞ்சமி சிறப்புப் பதிவு




இன்று நாகசதுர்த்தி பூஜை. வம்சம் விளங்க,
நாக பயம், தோஷம் இல்லாமல் இருக்க வேண்டி
செய்யப்படும் விரதம்.

உப்பு இல்லாத ஆகாரத்துடன், நாகராஜனுக்கு
அபிஷேகம் செய்து, எறும்புக்கு உணவாக
அரிசி வெல்லம் சேர்த்தரைத்தது, மற்றும்
எள்ளும் வெல்லமும் சேர்த்தரைதது.

இன்றும் நாளையும் ஒட்டடை தட்டுதல்,
பூச்சிகளைக் கொல்லும் மருந்துகளை பாவித்தல்
கூடாது.ஈ எறும்புக்குகூட வாழ்க்கை உண்டு என்று
சொல்லும் நாள்.

(சிலர் இன்று தாளித்தல், தோசை சுடுதல்,
போன்ற சமையல்களை செய்ய மாட்டார்கள்)

கருட பஞ்சமி:

பிறந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு பண்டிகைக்கும்
சீர் வரும். மாமன் சீர்தான் முதல் சீர்.
ஏன் இந்தப் பழக்கம்? திருமணம் ஆகி சென்று
விட்டாலும் பெண்ணிற்கு பிறந்த வீட்டிலிருந்து
தொடர்பு அறுந்து விடாமல் இருக்கத்தான்.

அண்ணன் தம்பிகளிடமிருந்து பெற்றுக்கொண்டால்
மட்டும் போதுமா? அவர்களின் நலனுக்காக
ஒரு விரதம். அதுதான் கருடபஞ்சமி.

செவி வழி கதை ஒன்று:

7 அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை. அண்ணன்கள்
வயலில் வேலை செய்வார்கள். தங்கை அவர்களுக்கு
சமைத்து எடுத்துச் செல்வது வழக்கம்.

கஞ்சி கலையத்தில் தலையில் சுமந்துக்கொண்டு
செல்கிறாள். ஆகாயத்தில் கருடன் ஒன்று
பாம்பை தன் வாயில் கவ்விக்கொண்டு பறக்கிறது.
அழுத்தம் தாங்காமல் பாம்பு விஷத்தைக் கக்க
அது திறந்திருக்கும் கஞ்சி கலயத்தில் விழுகிறது.

இதை அறியாத அந்தப் பேதைப் பெண், வயலில்
வேலை செய்து கொண்டிருக்கும் அண்ணன்களுக்கு
கஞ்சி கொடுக்க குடித்தபின் ஒவ்வொருவராக
செத்து மடிகிறார்கள்.

பயந்து செய்வதறியாத தவித்த தங்கை,
அண்ணன்கள் போனது போல் தானும் போக
முடிவு செய்து கஞ்சியை குடிக்க போக
கணவன், மனைவியாக பார்வதி
பரமேஸ்வரர் வந்து தடுத்தாட்கொள்கிறார்கள்.

என்ன நடந்தது? என்று கேட்க அந்தப் பெண்
“கஞ்சியைக் குடித்தார்கள். மயங்கிவிட்டார்கள்.
என் அண்ணண்கள் இல்லாமல் எனக்கு வாழ்வு
இல்லை” நானும் அவர்களுடன் போகிறேன்
என்று அழுகிறாள்.

அப்போது பார்வதி தேவி, அம்மா! நீ வீட்டில்
ஓட்டைகளை அடைத்து, சுத்தம் செய்யும்போது
பூச்சிகள் இறந்துவிட்டன. அந்த மாதிரி வேலைகளை
இந்த இரண்டு நாட்களும் செய்யலாகாது. மேலும்
நீ கருடபஞ்சமி பூஜை முறையாக செய்யாதததினால்
தான் இவ்வாறு ஆயிற்று. நான் உனக்கு பூஜை
செய்விக்கிறேன் என்று கூறி,

வயலில் இருந்த பாம்பு புற்றிற்கு அழைத்துச் சென்று
நாகத்திற்கு அருகில், 7 பத்மம் கோலம் போட்டு,
விளக்கு ஏற்றி, வயலில் இருந்த களிமண்களைக்
கொண்டு கொழுக்கட்டைகள் செய்து, 7 முடி போட்ட
தோரம் வைத்து பூஜை செய்வித்து தோரத்தை
பெண்ணின் வலது கையில் கட்டிவிடுகிறாள்.

அந்தப் பெண்ணிடம் புற்றிலிருந்து எடுத்த மண்,
அட்சதை, பூ ஆகியவைகளைக் கொடுத்து
உன் அண்ணண்களின் வலது தோளிலும்,
வலது பூஜத்திலும் இதை வைத்து பூஜை செய்
எழுந்துவிடுவார்கள்” என்று சொல்கிறார்.

பெண்ணும் அவ்வாறே செய்ய, அண்ணண்கள்
தூக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்து,
அழுதுகொண்டிருக்கும் தங்கையை விவரம் கேட்க
நடந்ததைச் சொல்கிறாள்.

இவ்வாறு பெரியவர்கள் பூஜித்தி சிறியவர்களுக்கு
சொல்லியதுபோல் இன்றும் கருட பஞ்சமி
விரத பூஜை செய்வது வழக்கம்.

அண்ணன் தம்பிகளின் நலனுக்காக இந்த
விரதம். பாம்பு புற்றில் பூஜை செய்து
கொண்டு வரும் புற்றுமண் (புட்ட பங்காரு- தெலுங்கு)
வைத்து பூஜை செய்து, அண்ணண், தம்பியின்
வலது காது, வலது தோளில் நீர் ஊற்றி,
மஞ்சள், குங்குமம் வைத்து, புற்றுமண்ணும்
வைத்து பூஜை செய்து அவர்களது நலனுக்காக
விரதம் செய்யவேண்டும்.

எப்போதும் அண்ணன் களிடமிருந்து வாங்கிக்கொள்வோம்.
கருட பஞ்சமி அன்று அண்ணன் தம்பிகளுக்கு
உடையோ, தாங்கள் விரும்பும் பரிசு கொடுக்க வேண்டும்.

வெளி ஊரில் இருந்தாலும் பரிசுகள் அனுப்பி வைத்து
வீட்டில் அவர்களுக்காக பூஜை செய்வார்கள்.

பண்டிகைகள் உறவை பலப்படுத்தும் நோக்கோடு
பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்

Thursday, July 31, 2008

ஆடி அமாவாசை சிறப்புப் பதிவு





ஆடி மாதம் விசேட மாதம். நோன்புகளும்,
பூஜைகளும் நிறைந்து பக்தியாக இருக்கும் மாதம்.
நாளை ஆடி அமாவாசை. இது சிறப்பு மிக்க அமாவாசை.
நம் தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்களில்
சிலர் ஆடி அமாவாசை அன்று நோன்பு செய்வர்.
(கன்னடர்கள் செய்வார்களா என்றுத் தெரியாது)

வட இந்தியர்களின் கடுவா சொளக், தமிழர்களில்
சிலர் கொண்டாடும் காரடையான் நோன்பைப்
போன்றது இது.

தன் கணவருக்காக பெண்கள் விரதம் இருந்து
பூஜை செய்யும் நந்நாள்.





ஆடி அமாவாசை அன்று கொளரிக்கு பூஜை செய்து, செவி வழியாக
சொல்லப்பட்டு வரும் கதையை சொல்வது முக்கியம்.

தீபத்தின் தண்டு அல்லது மரக்கட்டையில் மஞ்சள் முடிந்த
கயிறு கட்டி, 5 தாமரைக் கோலம் (பத்மம்) போட்டு
அதில் பூஜை செய்ய வேண்டும்.






ஆடிஅமாவாசைக் கதை:

அழகாபுரி பட்டணத்தில் அழகேசன் என்ற ராஜா ஆண்டு வந்தார்.
அவரது ஒரே மகனான இளவரசனுக்கு திருமணம் ஆகமலேயே
இறந்து விட, தனக்கு அடுத்து நாட்டை ஆள யாருமில்லையே
என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் ஒரு
யோசனை தோன்றி, ஒரு வண்டி நிறைய ஆடை,ஆபரணங்கள்,
பொற்காசுகளும், மற்றொரு வண்டியில் இறந்து கிடக்கும்
மகனின் பிணத்தையும் வைத்துக்கொண்டு ராஜா, ராணி
இருவரும் பிணத்திற்கு பெண்கொடுப்பார் யாரும் இருந்தால்
ஐஸ்வர்யங்களை அந்தக் குடும்பத்தாருக்கு கொடுத்து
அந்தப்பெண்ணை அரசி ஆக்கும் எண்ணத்தில் வீதிவீதியாக
தண்டோரா போட்டுக்கொண்டு வருகிறார்கள்.

பிணத்திற்கு யாரும் பெண் கொடுப்பார்களா? தன்
பெண்ணின் வாழ்வை நாசமாக்க யாரும் விரும்ப வில்லை.
அந்த ஊரிலேயே மிகவும் ஏழ்மையான குடும்பம் ஒன்று இருந்தது.
அவர்களுக்கு 3 மகள்கள். ஏதாவது ஒரு பெண்ணைக் கொடுங்கள்,
உங்கள் நிலமை மேம்படும் என்று அக்கம் பக்கத்தவர்கள்
சொல்ல, தகப்பனோ,” மூத்தமகளை நான் தரமாட்டேன்
என்கிறார். தாயோ கடைசிமகள் என் உயிர் என்கிறாள்.
மனம் நொந்த நடுமகள், தான் போனாலாவது இவர்கள்
வாழ்க்கை முன்னேரும் என்று தானே சென்று
அந்த பிணத்தை மணக்கிறாள். பொன்னும் பொருளும்
பிறந்த வீட்டிற்கு கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துகிறாள்.

இடுகாட்டிற்கு சென்று அந்திம கிரியைகளை செய்து முடித்து
அந்தப் பெண்ணையும் நாட்டிற்குள் அழைத்தபோது, அப்பெண்
அழுதுக்கொண்டு நான் இனி வாழ்ந்து என்ன பயன்? நான் வர
மாட்டேன் என்கிறாள். மன்னரும் மகாராணியும் கெஞ்சியும்
மசியவில்லை.

சரி காலையில் வந்து பார்க்கலாம் என்று போகிறார்கள்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் மழை கொட்டத்
தொடங்குகிறது. எரியும் சிதையும் அணைந்து போகிறது.
சிதையில் கூட சரியாக எரியாமல் போய் விட்ட தன்
வாழ்க்கையை நினைத்து அழுகிறாள் அந்த அபலை.

அப்போது ஒரு கிழவனும் கிழவியும் அந்த இடுகாட்டிற்கு
வந்து, அழுது கொண்டிருக்கும் அந்தப் பெண்ணிடம்,
விவரங்கள் கேட்க அவளும் சொல்கிறாள்.
அம்மா, முன் ஜென்மத்தில் நீ ஆடிஅமாவாசை நோன்பு
முறையாக செய்யாததினால் இப்படி ஆகிவிட்டது, என்று
சொல்ல, எனக்கு அதெல்லாம் தெரியாது என்றவளுக்கு
கிழவியாக வந்திருக்கும் அன்னை பராசக்தியே

பாடையின் காலை எடுத்து ஸ்தம்பமாக வைத்து,
மஞ்சள் கயிறு கட்டி, பத்மகோலம் போட்டு,
களிமண்ணால் கொழுக்கட்டைகள் செய்து,
நோன்பு செய்வித்து, 5 முடி போட்ட மஞ்சள்
சரடைக் கையில் கட்டி, அட்சதையைக் கையில்
கொடுத்து இதை உன் கணவனது தலையில் தூவு
என்று ஆசிர்வதிக்கிறாள்.

மந்திர அட்சதைப் பட்டதும் பிணமாக கிடந்த
இளவரசன் தூக்கம் களைந்து எழுவதுபோல்
எழுந்து, யார் நீ? நான் எப்படி இங்கு வந்தேன்? என்று
கேட்கிறான். அந்தப் பெண்ணும் நடந்ததைச் சொல்லி
கிழவனும், கிழவியும் இருக்கும் இடத்தில் கை நீட்ட
அங்கே அவர்கள் கண்டது, அம்மையையும் அப்பனையும்.

விடியும் வரை மனம் கலங்கியபடி காத்திருந்து இடுகாட்டிற்கு
ஓடி வந்த மன்னருக்கும், ராணிக்கும் அதிர்ச்சி.
மகனை உயிரோடு கண்டு மருமகளை விசாரிக்க
அவள் நடந்ததைச் சொன்னாள். மனம் மகிழ்ந்து
அவர்களை நாட்டிற்குள் அழைத்துச் சென்று
பிரம்மாண்டமாக திருமணம் செய்து, சந்தோஷமாக
வாழ்ந்தார்கள்.

இந்தக் கதையை கேட்பவர்களும், சொல்பவர்களும்
கொளரியின் அருள் பெற்று தீர்க்க சுமங்கலியாக
வாழ்வார்கள்.

தெலுங்கு, கன்னட திருமணங்களில் முதலில்
கொளரி பூஜை செய்த பிறகே மணமேடைக்கு
அழைத்து வரப்படுவார்கள்.



தேவேந்த்ராணி நமஸ்துப்யம்
தேவேந்த்ர ப்ரியபாமிணி
தீர்க்க சொளமாங்கல்யம்
ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யம்
பத்ரு/புத்ர லாபம்ச்ச தேஹிமே.