Showing posts with label ரங்கமணிகளுக்கு எதிர்பதிவுகள். Show all posts
Showing posts with label ரங்கமணிகளுக்கு எதிர்பதிவுகள். Show all posts

Wednesday, March 24, 2010

நம்பாதே நம்பாதே, ஆண்களை நம்பாதே

தங்கமணிகளுக்கு எதிரா சர்வேசனும் பதிவு போட
ஆரம்பிச்சிட்டாரு. விடலாமா. அதான் எதிர் பதிவு.
:))

எங்க அவ்வா சொல்லும் கதை இரண்டு இருக்கு
அதை இங்கே கொடுக்கிறேன்.
கதை: 1

நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு பழகிய ரங்க்ஸுக்கு
நல்ல வெந்தயக்குழம்பு வெச்சு சாப்பிடணும்னு ஆசை.
மனுஷன் தங்க்ஸ் கிட்ட ,” உனக்கு இந்த வெந்தயக்குழம்பு
வைக்கத் தெரியுமா!” ன்னு கேட்க. ”தெரியாதுங்க.
ஆனா உங்களுக்காக செய்யக் கத்துகிட்டு செஞ்சு தர்றேன்னு
சொல்றா”

ஆசையா கேட்ட ஊட்டுக்காரருக்காக வெந்தயக்குழம்பு
செஞ்சு வைக்கிறா.

மனுஷன் சாப்பிட உக்காந்து வக்கணையா சோத்தைப்போட்டு,
குழம்பு போட்டு, கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு கலந்து
வாய்க்குள்ள போடுறார்.

செம ருசி!!! இன்னொரு கவளம் எடுத்து போடுறார்.
அப்ப ஏதோ குறையற மாதிரி இருக்கு.


கீழே விழுந்து புரண்டு கோபப்பார்வை வீசுறார்..
பயந்து போன தங்க்ஸ்,”என்னங்க ஆச்சு”ன்னு கேக்க

“வெந்தயக்குழம்பு செஞ்ச ஏன் கீரை பருப்புபோட்டு மசியல்’
செய்யலைன்னு” கேட்டு ஒரே ஆர்ப்பாட்டமாம்.

இதுதாங்க பல தங்க்ஸ்களின் நிலமை.
சொன்னது செஞ்சா அதுக்கும் மேலே, அதுக்கும் மேலேன்னு
ரொம்பத்தான் பேராசை இந்த ரங்க்ஸ்களுக்கு.

இதை தெலுங்கில ”புண்யானிகி புலுசு அன்னம் பெடிதே
தோட்டக்கூரன்னு தொல்லி தொல்லி ஏடிசினட்டா”
(போனாபோகுதுன்னு குழம்பு சோறு போட்டா
கீரை வேணும்னு விழுந்து விழுந்து அழுவது)அப்படின்னு
சொல்வாங்க.

கதை:2

இதுவும் கீரைக்கதைதான்.

ஒரு ரங்க்ஸுக்கு நல்லா கீரை மசியல் சாப்பிடணும்னு
ஆசை. தங்க்ஸ்கிட்ட அதைச்சொல்ல ,”அதுக்கென்னங்க
மத்தியானம் சாப்பாட்டுக்கே நல்லா தேங்காய், பச்சைமிளகாய்
சீரகம் அரைச்சு, பருப்பு போட்டு கீரை மசியல் செஞ்சு
வைக்கிறேன்னு” சொன்னாங்க.

வேலைக்கு போன இடத்துலயும் கீரை ஞாபகமாகவே
இருந்திருக்காரு. அதனால் 1 மணிக்கு சாப்பிட போகவேண்டிய
மனுஷன் 12.30க்கே வூட்டுல.

மத்த சமையலை முடிச்சிட்டு தங்க்ஸ் அப்பத்தான்
கீரைக்கு அரைச்சுவிட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுக்கொதிக்கும்
வாசனை ரங்க்ஸ் பசியை அதிகமாக்க தட்டைவெச்சுகிட்டு
உக்காந்திட்டாரு.

“இருங்க இன்னும் கொதிக்கலை. கொதிச்சு, கொஞ்சமா
சூடு ஆறினதும் போடுறேன்னு” சொன்னா ரங்க்ஸ்
கேட்டத்தானே!!!

இல்ல போடுன்னு சொல்ல வேற வழியில்லாம
பரிமாற ஆரம்பிக்க ஆவி பறக்கும் கீரையைப் பாத்து
குஷியாகி அது சூடு என்பதையும் மறந்து ஓரமா
எடுக்காம டக்குனு நடுவுல கைவிட சுடச்சுட இருந்த
கீரை கையை பொசுக்கிடுச்சி.

வந்துச்சே கோபம் ரங்க்ஸுக்கு. அப்படியே ஒரு உதை
கீரை மசியல் இருந்த ஏனத்தை. கீரை சுவத்துல போய் ஒட்டிக்கிச்சு.

தங்க்ஸும் பயந்து ஓரமா போய் உக்காந்து அழ ஆரம்பிச்சிட்டாங்க.
10 நிமிஷம் கழிச்சு கோபம் தணிஞ்சு சாப்பிட வந்த
ரங்க்ஸ் தன் ஆசை கீரை சுவத்துல இருப்பதை பாத்து
கொஞ்சமா எடுத்து சாப்பிட்டுப்பாத்தாராம்.
சூடு ஆறி சுவையா இருந்துச்சாம். உடனே ஒரே
குஷியாகி தங்க்ஸைப்பாத்து,”சுவத்துக்கறியை வழிச்சுபோடடி
சொரணகெட்ட பொண்டாட்டின்னாராம்”

யாருக்கு சொரணை இல்லன்னு படிக்கறவங்களுக்கு
புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

இந்தக் கதையெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா!!
ஆரம்பத்துலேயே சொல்லியிருக்கேன் இது சர்வேசன்
அவர்களின் பதிவுக்கு எதிர் பதிவுன்னு. அங்க போய்
ஒரு தபா படிச்சாப்புரிய போவுது.

Monday, February 08, 2010

எங்கம்மா தான் BEST!!!!

அது என்ன கொடுமையோ தெரியலை!!
தங்கமணி என்ன செஞ்சாலும் குத்தம் தான். எப்பப்பாரு தன் வீட்டு
ஆளுங்களோட ஒப்பீடு செஞ்சு செஞ்சு வதைய வாங்குவாங்க.
நானா சொல்லலை. ஆதாரம் இருக்கு.
நம்ம ஃப்ரண்ட் ஆதிபதிவு பாருங்க.


என் மனைவிக்கு நல்லா சமைக்கத் தெரியாது. அவ
ரசம் வெச்சிருக்காளா, குழம்பு வெச்சிருக்காளான்னு விளங்கல!!
எங்கம்மாவும் வெப்பாங்க பாருங்க குழம்பு!!! சும்மா தேவாமிர்தம்.

இதெல்லாம் நிறைய்ய வீட்டுல கேள்வி பட்ட டயலாக்குகள் தான்.


அம்மாவின் கைப்பக்குவம் சாப்பிட்டு சாப்பிட்டு
ருசி கண்ட நாக்குக்கு மத்த சமையல் நிஜமாவே நல்லா இருந்தாலும்
ஏத்துக்காது. ”என்ன இருந்தாலும் எங்கம்மா செய்வது மாதிரி
வராது!!” அப்படின்னு சொல்லிட்டு சாப்பிட்டாத்தான் ரங்க்ஸ்களுக்கு
தின்னது செரிமானம் ஆகும்.


ஒவ்வொரு வீட்டுலயும் சமையல் பக்குவம் மாறும். ருசியும் மாறும்.
அந்தந்த இடத்தின் தண்ணி,சமைக்கும் பதார்த்தங்களின் தரம்,
எல்லாமும் நல்ல சமையலுக்கு காரணம்னு ரங்கமணிகளுக்கு புரியுமா?
இல்ல புரிய வைக்கத்தான் முடியுமா??

இம்புட்டு வருஷம் வளர்த்த பெத்தவங்களை நமக்காக விட்டுட்டு
வந்திருக்காளேன்னு சந்தோஷ பட்டுக்காம சமைக்கது சரியில்லை,
ருசியில்லைன்னு புலம்பத்தான் தெரியும்.

சமீபத்துல கோக் விளம்பரம் ஒண்ணு எல்லோரும் பாத்திருப்பீங்க.
”எங்கம்மா செய்யும் சமையல் தான் ருசின்னு!!” பையன் சொல்ல
அம்மா, தலையைக் கோதுவாங்க. ஆனா அந்த பையனோட அப்பா
”அதெல்லாம் இல்ல! எங்க அம்மா சமையல் தான் பெஸ்டுன்னு!!” சொல்வார்.
கடைசியில பாத்தீங்கன்னா மாமியாரும் மருமகளும் கைகோத்து
கிட்டுத்தான் நிப்பாங்க.

இந்த மாதிரி எல்லா வீட்டுலயும் இருக்க மாட்டாங்க. அவங்க
விளம்பரமாச்சேன்னு நடிச்சிருக்காங்க.(மாமியார் மருமக சண்டைக்கு முக்கிய
காரணம் ரங்கமணிகளின் இந்த மாதிரி ஒப்பீடுகள்தான்)

மொத்தத்துல ஒவ்வொரு மகனுக்கும் அவங்க அம்மா சமையல் தான்
பிடிக்கும். இன்னைக்கு நீங்க சொல்வது மாதிரி நாளைக்கு உங்க மகன்/மகள்
சொல்வாங்க. நீங்க அப்படி சொல்வதால தங்கமணிகள் நல்லா
சமைப்பதில்லைன்னு அர்த்தம் ஆகிடாது. :)))

ச்சும்மா தங்கமணிகளை குத்தம் சொல்வதை நிப்பாட்டிட்டு
சந்தோஷமா இருக்கற வழியைப் பாருங்க ரங்கமணிகளா!!



டிஸ்கி: இன்னைக்கு இந்த முக்கியமான பதிவு வந்தே
ஆகவேண்டிய கட்டாயத்தால் இன்னைக்கு வரவேண்டிய
Personality Development பதிவு வியாழக்கிழமை கண்டிப்பா
வரும்.

தமிழ்மணத்துல ஓட்டு போட மறந்திடாதீங்க!!