Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Tuesday, August 28, 2012

ரொம்ப பெருமையா இருக்கு!!!!

அர்த்தராத்திரி பத்துமணிக்கு!! போன். வலிக்கு மருந்து சாப்பிட்டு
9 மணிக்கே தூங்கப்போய்விட்டேன். அயித்தான் தான் போன்
எடுத்து பேசிருக்காக. காலையில் பேசுவதாக சொல்லியிருக்கிறாள்
என் தோழி. காலையில் பேசினால் செம சந்தோஷம் அதுவும்
ரெட்டை சந்தோஷம். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்வதில்
ரொம்ப சந்தோஷம்.

என் தோழி அடைந்திருக்கும் இந்த நிலை சாதாரணமானது
இல்லை. ஒரு கதவை அடைத்தால் இறைவன் இன்னொரு
கதவை திறப்பான் என்பது பொய்யில்லை. சிறிய வயதில்
அவளுக்கு இறைவன் செய்த கொடுமையை உங்களிடம்
முன்பே பகிர்ந்து கொண்டுள்ளேன். என்ன சந்தோஷமான
செய்தின்னு சொல்லிடறேன்.

என் தோழி இனி டாக்ரேட் பட்டம் வாங்கியவர் என
பெருமையா இருக்கு. நாங்கள் இருவரும் ஆங்கில இலக்கியத்தை
ஆர்வமாக தேர்வு செய்து கல்லூரிக்குள் நுழைந்தவர்கள்.
இன்று என் சாந்தி கோல்ட் மெடலிஸ்ட், அண்ணாமலைப்
பல்கலைக்கழக பேராசிரியை என்ற பெருமைகளுடன்
தனது கனவான பிஎச்டியையும் செய்து முடித்து
விட்டாள். பூங்கொத்துக்களுடன் எனது பாராட்டுக்கள்
சாந்தி.


அடுத்த பூங்கொத்து பாராட்டுக்கள் சொல்லும் முன்னாடி
சிதம்பரம் நகர வாசிகளுக்கு எச்சரிக்கையையும் சொல்லிக்கிட
கடமைப்பட்டிருக்கேன். இது என்னாத்துக்குன்னு கேக்கறீங்களா??!!!
சொல்றேன். எங்க ஆத்தா மங்கம்மா கார் வாங்கி இருக்காக.
அதை ஓட்டவும் போறதா முடிவு செஞ்சிட்டாங்க. அதான்
சிதம்பரத்துல இருக்கறவகளுக்கு எச்சிரிக்கை சொல்லிடறேன்.

பயமா இருக்குடா தம்பின்னு மகன் கிட்ட சொன்னதுக்கு
அந்த நல்லவர் சொன்ன தைரியம்,” நீ ஏம்மா பயப்படற!
எதிர்ல வர்றவுகல்ல பயப்படணும்!!!”

ஏதாச்சும் ஆச்சுன்னா கவலைப்படாதே, மாமா வக்கில்தான்
ஒரு கை பாத்துக்கலாம். (சாந்தியின் தம்பி காரைக்குடியில்
பிரபல வக்கீல் :)

சீக்கிரமா சிதம்பரத்துக்கு ஒரு ட்ரிப் அடிக்கணும். என் சாந்தி
வண்டி ஓட்ட நான் கார் முன் கதவை திறந்து இந்த
ஓட்டு கேட்க போகும்போது நிப்பாங்களே அதுமாதிரி ஏறி
நின்னு கிட்டு ஓரம்போ ஓரம்போன்னோ “ தள்ளு தள்ளு”
ஒத்திக்கோ ஒத்திக்கோன்னு கத்திகிட்டு போகணும். :)))

நான் படிச்சு முடிக்காததை என் தோழி சாதிச்சிட்டா,
B.A, M.A, MPHIL, PHD இது என் திட்டமா இருந்தது
என்னால முடிக்க முடியாம போயிருச்சு. ஆத்தா
அதை சாதிச்சிட்டான்னு பெருமையா இருக்கு. கார்
ஓட்டுறேன் பேர்வழின்னு ஆரம்பிச்சு அதை பாதியில
விட்டுட்டேன். ஆனா என் சாந்தி தானே சம்பாதிச்சு
கார் வாங்கியிருக்கறது எம்புட்டு பெருமை. இந்த
உயரம் அவளுக்கு சுளுவா கிடைச்சிடலை. ஆனா
இத்தனைக்கு அவள் தகுதியானவள். இந்தப் பெருமையோட
நான் இருக்க, அவளுக்கோ நான் வலைப்பூவரசியானதில்
பெருமை, சீரியல்கள் பார்த்து பொழுதை கழிக்காமல்
“உருப்படியாக” சாதித்து கொண்டிருப்பதிலும், நல்ல
அம்மாவாக, இல்லத்தரசியாக திகழறதாகவும் சொல்லி
சொல்லி பெருமைப்பிடிபடலை.

இரண்டு வருஷமா டெடிகேஷனோட தன் பிஎச்டிக்கு
தயாரகிகிட்டு இருந்த தோழி வாங்கிய முதல்
இதழில் நான் வலைப்பூவரசியாக வந்திருப்பதில்
ரொம்பத்தான் பெருமை.

என் பெருமை எனக்கு. அவள் பெருமை அவளுக்கு.
நமது நட்புக்கு இப்பொழுது வயது 21 சாந்தி.
ஆண்டவன் உனக்கு இழைத்த கொடுமைக்கு
பிராயசித்தம் தேடிக்கொண்டுள்ளான்.

இனி எல்லாம் சுகமே. எனதன்பான வாழ்த்துக்கள்.




Friday, July 10, 2009

நட்பின் அறிமுகம்

பள்ளத்தூர் ஆச்சி காலேஜ் இது நான் படித்த கல்லூரி.

கல்லூரி வாழ்க்கையை முழுதுமாக அனுபவிக்காமல்
அல்பாயுசில் என் கல்லூரி படிப்பு தடை பட்டுவிட்டது.

ஆனால் அந்த ஒரு வருடமே எனக்கு 3 வருடத்திற்கான
ஆனந்தத்தை தந்துவிட்டது.


ஆங்கில இலக்கிய பிரிவுக்காரர்கள் நாங்கள் அடித்த லூட்ட்
கொஞ்ச நஞ்சமல்ல. எங்களுக்கு முந்தைய பேட்ஜ்ல்
(செகண்ட் இயரி)வெறும் 12 பேர்தான். அதற்கு முந்தைய
பேட்ஜ்ல் 3 பேர் இப்படி இருந்த இடத்தில் நாங்கள்
30 பேர். எங்கள் ஹெச் ஓடிக்கே சந்தேகம்,
“என்ன இம்புட்டு கூட்டம்னு” யோசிச்சிருப்பார்.


தயங்கி தயங்கி ஒவ்வொருவராக நட்பானோம்.
காலேஜில் நானும் விசாலாட்சியும் இரட்டையர்களாக
அறியப்பட்டோம். இருவரும் சேர்ந்துதான் சுத்துவோம்.

சாலா, ஸ்ரீதேவி, மீனாள், சாந்தி, விசாலாட்சி,வஹீதா
என பெரிய பட்டாளம்.

அந்த வருடத்தோடு நான் படிப்பை நிறுத்த போகிறேன்
என்று கேள்விப்பட்டதும் விசாலாட்சி அழுதது,
அப்பாவுடன் பேசிப்பார்த்தது எல்லாம் மீறி
என் படிப்பு நிறுத்தப்பட்டது. காரணம் இங்கே:


ஆட்டோ கிராப்கள், போட்டோக்கள் எல்லாம் முடிந்தது.
முகவரி பரிமாற்றங்கள் எல்லாம் முடிந்து
கண்ணீரோடு வந்தாச்சு.

சாலா, ஸ்ரீதேவி இரண்டுமுறை கடிதம் எழுதினார்கள்.
விசாலாட்சி தொடர்பே இல்லாமல் போயிவிட்டது.


ஆனால் இவளிடமிருந்து மட்டும் பதிலுக்கு பதில்
என உடனடியாக கடிதம் வரும்!!!!

மாதத்திற்கு 5 கூட இருக்கும்.

"நீ பக்கத்துல இல்லாத குறையே தெரியாம
எதிர்ல பேசுற மாதிரி இருக்கு உன் லெட்டர்”
அப்படின்னு அடிக்கடி பாராட்டுவாள்.

“வெந்து வெர்மிசிலியாகி, நொந்து நூடில்ஸாகின்னு”
அப்பயே காமெடி தெறிக்க கடிதம் எழுதுவாள்.

புதுகையில் டீச்சர் வேலையை விட்டு மும்பையில்
வேலை கிடைத்துப்போன பிறகும் விடவில்லை.
கடிதம் கண்டிப்பாய் வரும். மாதத்திற்கு 3 கடிதம்.

என் கடிதங்களை மாமாவிடம் படிக்கக் கொடுத்துவிடுவேன்.
(நோ ரகசியம்) நான் வந்து பிரிக்கும் வரை கடிதம்
சாமியிடம் இருக்கும். அவ்வளவு நம்பிக்கையாக
அவர்கள் இருக்கும்போது நான் மட்டும் கடிதத்தை
மறைப்பது நல்லதல்ல என்பது என் எண்ணம்.

என் திருமணம் டிசம்பரில் அவளது திருமணம்
பிப்ரவரியில்.” நீ வரமுடியாதுன்னு தெரியும்,
முடிஞ்சா ட்ரை செய்” என்ற புரிதல்...

எங்கள் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்த
கடிதப்போக்குவரத்துக்கள்.....

குழந்தை பிறந்தது... என எல்லா பகிர்வுகளும்
உடனுக்குடன் கடிதம் மூலம் தெரிந்துவிடும்.

ஆரம்பத்தில் அத்துனை நெருங்கிய தோழியாக
இல்லாது போனவள் கடிதத்தினால் மிக மிக
நெருங்கிய தோழியாகிப்போனாள்.

இன்று வரை தொடர்பில் இருப்பவள் அவள்தான்.

அவளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில்
மிக்க மகிழ்ச்சி. தற்போது தமிழகத்தில் புகழ்பெற்ற
பல்கலைக்கழகமொன்றில் ஆங்கிலத்துறை
பேராசிரியை, இரண்டு பிள்ளைகளுக்குத் தாய்...

எனக்கு மட்டும் அன்பான ஸ்ப்ராட் குண்டு.

:))))))))))))))))))))))

அவள் பெயர் s.p.shanthi.

குண்டம்மா, இது என்னுடைய 450ஆவது பதிவு.
அது உன்னைப்பற்றி எழுதியது என்பதில் சந்தோஷம்.
ஆன்லைனில் எழுதியாவது நம் 18 வருட
நட்பை கொண்டானும்ஞ்ச!!!
” என்ற உன் கோரிக்கை
இதோ என் 450ஆவது பதிவாக..

தொடரும்....

Thursday, July 09, 2009

ஆச்சரியம் ஆனால் உண்மை...

இதைப்பற்றி இத்தனை நாளாய் பெரிதாகக் தோன்றவில்லை!!!

ஆனால் ஓவ்வொரு வருடமும் இதைப்பற்றி நினைவு வரும்.
பெருமையாகவும் இருக்கும்.

இவ்வளவு பெருமையாக நான் நினைப்பது என் நட்பை பற்றி.

எனக்கு ஆரம்பமுதலே உதட்டளவில் நட்புக்கொள்ளப்பிடிக்காது.
தெரியாது என்றாலும் தவறில்லை.

இதுல என்ன குறைஞ்சிடப் போறோம் என் நினைப்பேன்.

என்னுடைய பெரிய குறையும் இதுதான். என்னைப்போல்
அனைவரும் ”நெஞ்சத்தக நக நட்பு” கொள்ள மாற்றார்கள்
என்பது காலம் எனக்கு கற்றுக்கொடுத்தாலும் நான்
என்னை மாற்றிக்கொள்வதாக இல்லை.

நட்பிற்கு இலக்கணமாக நல்ல நட்பாக இருந்துவிட்டு
போவேமே என்ற எண்ணம் தான் காரணம்.

நம் அலைவரிசை நட்பு மட்டுமல்ல, நம்மைப்போல்
நட்பு பாராட்டும் ஒரு நண்பரோ/தோழியோ கிடைப்பதும்
ஆண்டவனின் ஆசிர்வாதம் தான்.


நான் அந்த விதத்திலும் கொடுத்து வைத்தவள். ஆண்டவனுக்கு
நன்றி.

ஆண்களின் நட்போடு பார்க்கும்பொழுது பெண்ணிற்கு தனது
பள்ளீ/கல்லூரி அல்லது ஊரில் இருக்கும் நட்பு தொடர
வாய்ப்பு குறைவுதான்.

பெண்ணின் திருமணத்திற்கு பிறகு தொடர்பு விட்டு போகும்.
திருமணத்திற்கு பிறகும் தன் மனைவியின் நண்பனுடன்
தொடர்பு(communication) என்பதை ஏற்றுக்கொள்ளும்
கணவர்கள் வெகு சிலரே.


இப்படி இருக்க நான் ஒவ்வொரு வருடமும் ஜூலை
மாதம் பிறந்தால் சந்தோஷமாக, ஆண்டவனுக்கு
நன்றி சொல்லும் வகையில் எனக்கும் ஒரு நட்பு
இருக்கிறது என்று சொல்லிக்கொள்வதில் பெருமையோ
பெருமைதான்!!!

என் நட்பின் வயது என்ன தெரியுமா?
அது தெரிந்தால் நீங்கள் பொறாமை கொள்ளக்கூடும்!!!

என் நட்புக்கு 18ஆவது வயது ஆரம்பித்திருக்கிறது.
இன்றும் தொடர்பில் இருக்கிறோம்..

யார்?? யார்?? யார்??

கேள்விக்கு விடை அடுத்த பதிவில்

(சஸ்பென்ஸ் வெச்சு பதிவு போட்டு
எம்புட்டு நாளாச்சு? :)))