Showing posts with label ஆவக்காய பிரியாணி. Show all posts
Showing posts with label ஆவக்காய பிரியாணி. Show all posts

Saturday, December 29, 2018

ஹைதை ஆவக்காய பிரியாணி - 2018

ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் திரும்ப ஆவக்காய பிரியாணி. இதுக்கு முன்ன ஹைதையில் இருந்ததால் ஹைதை ஆவக்காய பிரியாணின்னு பேர் இருந்தது. இப்ப சென்னை வந்துட்டதால பெயர் மாத்தலாமான்னு பார்க்கறேன்.
********************************************************************************
  மார்கழி குளிர்னு சொல்வாங்க. நடுவுல ஏதோ இரண்டு நாள் ஸ்வெட்டர்லாம் போடுற அளவுக்கு சென்னையில் குளிர். இப்படியே போனா ஸ்னோஃபால் இருக்குமோன்னு கலாய்ச்சுகிட்டு கிடந்ததன் பலன் இப்ப வேர்க்குது. இந்த ஊர்ல குளிராவது ஒண்ணாவது. என்னவோ போடா மாதவா!!! ********************************************************************************* க்ரேசி மோகன் குழுவில் இருந்த நடிகர் சீனு மோகன் மாரடைப்பால் காலமானார். ரொம்ப வருத்தமான விஷயம். செய்தி கேட்டதும் ஷாக்கா இருந்துச்சு. 62 வயது மரணிக்க கூடிய வயது இல்லை. இறைவன் அவரது ஆத்மாவுக்கு அமைதியை தரட்டும்.
*********************************************************************************
நான் இப்ப ஸ்டூடண்ட். எனது உடல்நிலையிலிருந்து மீண்டு வர என்ன செய்யணும்னு தேடினப்ப உருவானதுதான் என்னுடைய கொடி அசைந்ததும் காற்று வந்ததா தொடர். அதை இப்ப மின்னூல் ஆக்கியாச்சு. இந்த வருடம் அதை அமேசான்ல புக்கா போடணும்னு நினைக்கறேன்.

இந்த மீண்டு வரும் பயணத்தின் போது நான் கத்துகிட்டது மனநிலையையும் மேம்படுத்தணும் என்பது. என்னைப்போல இருக்கும் பலருக்கு உதவலாம்னு இப்ப சைக்காலஜி படிக்கறேன். தொலைதூரக்கல்வி :)
*********************************************************************************
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Thursday, November 29, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 29/11/12

பிரியாணி போட்டு ரொம்ப நாளாச்சுல்ல... :)) தெலங்கானா பிரச்சனை இன்னும் ஓய்ந்த பாடில்லை. அவ்வப்போ உஸ்மானியா யுனிவர்ச்சிட்டியிலதான் தீவிரமா வெடிக்கும். ரொம்ப வருஷம் கழிச்சு உஸ்மானியாவுல கல்ச்சுரல்ஸ் நடந்துச்சாம். கல்லெடுத்து அடிப்பது, மரம் ஏறி தற்கொலை செஞ்சுக்கறேன்னு மிரட்டுவது, அப்புறமா போலீஸுக்கு ரோஸெல்லாம் கொடுப்பதுன்னு மட்டுமே பாத்திருக்கேன். கலர்ஃபுல்லா உஸ்மானியா, கலக்கல் டான்ஸோடட பசங்கன்னு ஃபோட்டோ பாத்து நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். ********************************************************************************** KBC என்னவோ அமீர்கான் ஷோ மாதிரி ஒரே செண்ட்டியா போய்கிட்டு இருக்கு. எனக்கென்னவோ இந்த வாட்டி கண்டிப்பா உக்காந்து பாக்கணும்னு தோணலை. :( ஆனா KBC ஆரம்பிக்கும் முன் வந்த விளம்பரங்களில் இந்த விளம்பரம் ரொம்ப பிடிச்சிருக்கு. போல்னா இங்கிலீஷ் மீடியம்... வாட்ஸ் அப் டூடு.... ரூஃப். :)) சூப்பர். ********************************************************************************* மில்க் ஹாலிடே கேள்விபட்டிருக்கீங்களா??? எங்க ஊர்ல நடக்குது. பால் அதிகமா இருக்காம். அதனால ஹெரிடேஜ், டோட்லா, போன்ற பெரிய தனியார் பால் நிறுவனங்கள் வாரத்துக்கு ஒருநாள் மில்க் ஹாலிடே விட்டுடறாங்களாம். அதாவது அன்னைக்கு பால்கொள்முதல் கிடையாதாம். இதனால கஷ்டப்படற பால்வியாபாரிகள் ஆந்திர பால் பண்ணைக்கு போறாங்களாம். அங்கயும் 10 நாளைக்கு ஒரு தடவை மில்க் ஹாலிடே விடுற திட்டம் இருக்காம்!!! என்ன செய்வதுன்னு புரியலை இந்த பால்வியாபாரிகளுக்கு. எங்க முதல்வர் கிரன் குமார் இல்லை அப்படியெல்லாம் நடக்காது நாங்க பாலைக்கொள்முதல் செஞ்சு கோவில், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி ஆகிய இடங்களுக்கு கொடுப்போம்னு சொல்லியிருக்காரு...... ஒன்னியும் புரியலை... ********************************************************************************* கசாப்பை தூக்கில போட்டது பழைய செய்தி. ஆனா அந்த செய்தி கேட்டப்போ சந்தோஷத்தை விட மனசுல ஒரு வருத்தம் வந்து போனது. அவரது உடலை வாங்கக்கூட குடும்பத்தார் வரலை. 25 வயசுல இப்படி ஒரு சாவு. எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.... பாட்டுதான் ஞாபகம் வந்தது. :(( ******************************************************************************** சமீபத்தில் ஒரு நாள் ட்ரிப்பா குடும்பத்தோட சென்னை வந்திருந்தோம். சைதாப்பேட்டை பக்கம் போய்க்கிட்டு இருந்தோம். அடப்பாவிகளான்னு ஆஷிஷ் கத்த, என்னாச்சோ... ஏதாச்சோன்னு கேட்டா, கை காட்டின இடத்தைப்பாத்து எங்களுக்கு ஒரே சிரிப்பு. உயர்ரக கார் ஒண்ணு. அதுல பின் சீட் விண்டோ ஜன்னல் உடைஞ்சிருச்சா, எடுத்திருக்காங்களான்னு தெரியலை. ஆனா அதை சமயோசிதமா ட்ரான்ஸ்பரண்ட் ப்ளாஸ்டிக் போட்டு ஒட்டியிருந்தாங்க. :))) ************************************************************************************* இத்தனை நாளா இல்லாத ஒரு புது பிரச்சனை வந்திருக்கு. தெலுங்கு கட்டாய பாடமா இருந்ததில்லை. 8ஆம் வகுப்பு வரைக்கும் 3ஆவது மொழியா கூட ஆப்ஷனல்தான். +1ல் அதிக மதிப்பெண் வாங்க பலரும் தெலுங்கு, ஹிந்தியை விட சமஸ்கிருதம் எடுத்து படிச்சிட்டு ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ எழுதிட்டு மார்க் வாங்கிடுவாங்க. இப்ப கேந்த்ரிய வித்யாலாயல கூட தெலுங்கு கண்டிப்பா போதிக்கப்படணுமாம். சின்ன வகுப்புக்களில் சமஸ்கிருதம் எடுத்து படிச்சிருந்தாத்தான் +1ல் சமஸ்கிருதம் எடுக்க முடியும்னு குழப்ப ஆரம்பிச்சிருக்காங்க. ****************************************************************************** போன ஞாயிற்றுக்கிழமை புப்பல்குடா எனும் இடத்தில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்ட்டில், தீ விபத்து. டீவி ஷூட் செஞ்சுகிட்டு இருந்தாங்க, அதுலேர்ந்து நெருப்பு பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. ஆனா 6 பேரை காவு வாங்கியிருக்கு. அதுல 10நாளான ஒரு சிசுவும்!!! பாவம். அந்த அப்பார்ட்மெண்ட் வாட்ச்மென் மத்தவங்க உயிரைக்காப்பத்த ஓடியிருக்காரு. பாவம் அவரும் பலி. அஞ்சலிகள்

Thursday, July 12, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 12/7/12

ஏற்கனவே விலைவாசி உச்சத்துல இருக்கு. இதுல இப்ப மழையும்
பொய்த்திருக்க..... காய்கறிகள் விலை எங்கேயோ போய்க்கிட்டு
இருக்கு. திங்கள்கிழமை காய்வாங்கிய நிலவரப்படி... தக்காளி கிலோ30,
கொத்துமல்லிக்கட்டு பெருசு - 15 ரூவா!!!! பீன்ஸ் கிலோ 60.
வெள்ளரிக்காய் கிலோ 30.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

2 வருஷம் முன்னாடி வெங்காயம் வித்தவிலைக்கே அல்லோலப்பட்டோம்.
இப்ப காய்கறிகளின் விலையை பார்க்க மயக்கமே வருது. கத்திர்க்காய்
கிலோ 40ன்னா எதை சமைக்க. பிள்ளைகளுக்கு உட்டச்சத்தான உணவு
எப்படி கொடுப்பது? அலுப்பா இருக்கு :((

***********************************************************************
தன்னால நல்லதை செய்யறேன்னு கபில்சிபில் இஞ்சினியரிங்
நுழைவுத்தேர்வில் குளறுபடி செய்யறதை விட்டுட்டு ஆசிரியர்கள்
பலருக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். பள்ளி நிர்வாகங்களுக்கு
ரொம்பவே முக்கியம். 5ஆம் வகுப்பு மாணவி இரவில் தனது
படுக்கையை நனைத்துவிடுகிறாள் என்பதற்காக அவளது சிறுநீரை
குடிக்க வைத்திருக்கும் வார்டனை என்னன்னு சொல்வது.

ஆந்திராவில் வகுப்பில் பேசிக்கிட்டு இருந்தான்னு சொல்லி
நடுமண்டையில் ரத்தம் வர வைத்திருக்கிறார் ஆசிரியர்.
*****************************************************************
அமிர்கான் ஷோவின் தாக்கமா என்னன்னு தெரியலை, ஆனா
ஒரு சந்தோஷமான விஷயம். எங்க ஆந்திராவில் அதி விரைவில்
ஜெனரிக் மெடிக்கல் ஷாப்புக்கள் வரப்போகுது. இதனால
சகாய விலையில் மருந்துகள் வாங்கலாம்.

அமீர்கான் ஷோவின் தாக்கமா இந்த வாட்டி ஆர்கானிக் பொருட்கள்
தான் வாங்குவதுன்னு சபதம் எடுத்து, அந்த டீவி ஷோவில் வந்த
டாக்டர்.ஆஞ்சநேயலு அவர்களின் ஃபோன் நெம்பரை கண்டுபிடிச்சி
ஆபீஸ்ல பேசியாச்சு. இங்க சகஜ ஆகாரம்ங்கற பேர்ல ஆர்கானிக்
பொருட்கள் விக்கறாங்க. இதைப்பத்தி டீடெய்லா பதிவு போடணும்.
********************************************************************

தாராசிங் இன்னைக்கு காலேல மறைந்துவிட்டார். ராமாயண் சீரியலில்
ஆஞ்சிநேயரா நடிச்சவர்.


மல்யுத்தவீரரான இவர், சினிமாவிலும் நடித்திருக்கிறார்.

83ஆம் வயதில் இறைவனை சேர்ந்திருக்கிறார். அன்னாருக்கு
என் அஞ்சலிகள்.
***********************************************************************
சென்றவாரம் சென்னைக்கு சூறாவளிப்பயணமா வார இறுதியில் வந்திருந்தோம்.
அயித்தானின் அத்தை 95 வயது மூதாட்டி அவங்களை பார்க்க வந்திருந்தோம்.
சென்னையின் சாலைகளில் அந்த டாக்சி சூப்பரா இருந்துச்சு. ஏர்போர்ட்
ட்ராப்புக்கு அவங்களையே கேட்போம்னு அயித்தான் கிட்ட சொல்லியிருந்தேன்.
ஃபாஸ்ட்ராக் ஆரம்பிச்சு 15 வருஷமாச்சு. அவங்களோட ஒவ்வொரு
வாட்டியும் மல்லுக்கட்டுறது அப்பா தனி புத்தகமே எழுதலாம்.

இந்த நிலையில் மில்லியன் டாட்ஸ் டாக்சியை வரவேற்கிறோம்.
காரும் சூப்பர். எர்டிகா!!!. டிரைவரின் சீருடையும் சூப்பரா இருக்கு.
வண்டி ஓட்டுறதும் ரொம்ப நல்லா இருக்கு. ஆரம்பிச்சு பத்துநாள் தான்
ஆகியிருப்பதா டிரைவர் சொன்னார். ஒரு மாசம் நல்லா ட்ரையிங்
கொடுத்து (பயணிகளிடம் எப்படி நடந்துக்கணும், எப்படி பேசணும்,
இப்படி... விஷயங்களுக்கு ட்ரையிங் கொடுத்திருக்காங்க)
அப்புறம்தான் ரோட்டில் வண்டி ஓட்ட அனுமதிச்சிருக்காங்க.

இணையதளத்தை பார்க்க இங்க சொடுக்குங்க.

*************************************************************************

கோவை மாநகருக்கு விசிட் அடித்திருந்த பொழுது டாக்சிடாக்சி கேப்ஸ்
சர்வீஸும் சூப்பரா இருந்தது.

அவங்களோட இணையதளம் இங்கே..

********************************************************************



Wednesday, February 08, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 8/2/12

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.... ஆரம்பிச்சிட்டாங்கன்னு திரும்ப
புலம்ப வெக்கறாங்க. தெலங்கானா கட்சித் தலைவர் கேசிஆர்
மார்ச் மாதம் முக்கியமான தேர்வுகள் முடிந்ததும் எங்கள்
போராட்டம் முழு வீச்சில் இருக்கும்னு சொல்லி போர்ட் எக்ஸாம்
எழுதப்போகும் எங்களைப்போன்ற பெற்றோரின் வயிற்றில்
ஜில்லின்னு ஐஸைக்ரீம் சேர்த்தார் (எத்தனை நாளைக்குத்தான்
பால் வார்த்தார்னு சொல்றது. பாலை விட ஐஸ்க்ரீம் ஜில் அதான்)
அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்க ஜேஇசி என்னவோ
போராட்டம்னு ஆரம்பிச்சிருக்காங்க.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல.
***************************************************************
கர்நாடக அமைச்சரவையில் அமைச்சர் செல்போனில் தவறான
வீடியோவை பார்த்துக்கிட்டு இருந்ததை படம் பிடிச்சு வீடியோ
போட்டுட்டாங்க சேனல் காரங்க.

அவங்க அமைச்சரவைக்குள் செல்போன் கொண்டு செல்ல
தடை இருக்காம். ஆனாலும் இன்னொரு அமைச்சர்கிட்ட
வீடியோ அனுப்புன்னு கேட்டதையும் வீடியோவுல காட்டினாங்க.

என்ன கொடுமை இது!!!!!!
***********************************************************
ஏடிஎம் திருட்டு சர்வ சாதாரணமாகிவிட்டது. டெக்னாலஜி
டெக்னாலஜி முன்னேற்றம்னு நாம சந்தோஷப்படும் விஷயமே
நமக்கு இப்ப வில்லனா ஆகுது.

ஏடிஎம்மில் நாம பாஸ்வேர்ட் போட்டு வந்ததும் நம்ம
கை சூடு எந்த நம்பர்களின் மீது இருக்கோ அதை வெச்சு
நம்ம பாஸ்வேர்டை கண்டு பிடிச்சு திருட்டு நடக்குதுன்னு
செய்தி பாத்தேன். (இதையும் ஒரு மிஷின் மாதிரி
வெச்சு பார்ப்பதை காட்டினாங்க.) இந்த மாதிரி விஷயங்களுக்காகவும்
கண்டு பிடிப்புக்கள் நடக்குது.

அதனால சமீப காலமா ஏடிஎமிலிருந்து வெளியே வருவதற்கு
முன் ஒரு வாட்டி எல்லா நம்பரையும் திரும்ப அமுக்கி
வெச்சிட்டு வந்திடறேன்னு நண்பர் ஒருவர் சொன்னார்!!!!
************************************************************
இப்ப ஆந்திராவில் அராஜகம் தான் நடக்குது. வரிசையா
ஐஏஎஸ் அதிகாரிகள் அரெஸ்ட் ஆவுறாங்க. எல்லாம் ஊழல்தான்

அமைச்சர்கள் அனுமதி இல்லாம நாங்க இப்படி செய்ய முடியுமான்னு?
பாதிக்கபப்ட்ட அதிகாரிகள் கேக்கறாங்க. இதுல நியாயமில்லைன்னும்
சொல்ல முடியாது. போன வாரம் அரெஸ்ட் ஆன ஆச்சார்யா எனும்
ஐஏஎஸ் எனக்கு நெஞ்சுவலின்னு சொல்லி ஒரு ஆஸ்பத்திரில
அட்மிட் ஆனார், நீங்க நல்லாத்தான் இருக்கீங்கன்னு, டிஸ்சார்ஜ்
செஞ்சு அனுப்ப, இன்னொரு ஹாஸ்பிடல் போனார் அங்கேயும்
யூ ஆர் ஃபிட்டுன்னு அனுப்பி வெச்சு இப்ப கஸ்டடிக்கே போயிட்டாரு.
இதுல ஸ்ரீ லக்‌ஷ்மிங்கற பெண் அதிகாரியும் இருக்காங்க. இன்னொரு
பெண் ஐஏஎஸ் ஜகன் அண்ணா சொத்து விவகாரத்துல விசாரணைக்கு
அழைக்கப்பட்டிருக்காங்க.

ஒண்ணும் சொல்வதற்கில்லை.

*********************************************************************
ஓட்ஸுக்கும், கார்ன்ஃபேளேக்ஸுக்கும் இப்ப ரொம்பவே விளம்பரம்.
உடல் பருமனை தவிர்க்க நினைக்கறவங்க இந்த விளம்பரங்களைப்
பார்த்து உபயோகிக்கறாங்க. ஆனா இதுல கவனிக்க வேண்டிய
முக்கியமான விஷயம் இருக்கு.

விளம்பரத்துல காட்டுற மாதிரி கார்ன்ஃபேளேக்சில் எந்த பழங்களையும்
யாரும் சேர்த்துக்கொள்வது இல்லை. பாலில் சர்க்கரை சேர்த்துதான்
சாப்பிடுவோம் என்பதால் அதிகப்படியான சர்க்கரை உடம்பில் சேருது.
தவிர சிலருக்கு காலை நேரத்தில் கொஞ்சம் உடம்பில் உப்பு, காரம்
பட வேண்டியது இருக்கும். இல்லாவிட்டால் கைகால்கள் வெலவெலத்து
போன மாதிரி இருக்கும். அப்படிப்பட்டவங்க கார்ன்ஃபேளேக்ஸ் மட்டும்
சாப்பிட்டால் உடல் சோர்வாகிடும்.

உடல் இளைக்கணும்னு நினைக்கறவங்க ஒரு மாதம் கார்ன்ஃபேள்க்சை
காலை உணவா எடுத்துகிட்டாலும் 11 மணிவாக்கில் சாலட் சாப்பிடுவது
முக்கியம்.

ஓட்ஸ் சாப்பிடறேன் உடம்பு இளைச்சிடும்னு நினைக்கறவங்களுக்கு
ஒரு தகவல். ஓட்ஸ் மீல்ஸ் மாதிரியான பலன் தான் தரும்.
அத்தோடு காய்கறிகள், இப்படி சேர்த்து சாப்பிடணும்னு டயட்டீஷியன்
சொல்றாங்க.
**********************************************************************
நம்ம உடம்புக்கு என்ன சாப்பிட்டால் நல்லதுன்னு ஒரு வாட்டி
நல்ல டயட்டீஷியன் கிட்ட காட்டி அதுக்கு தக்க சாப்பிட்டுக்கறது
புத்திசாலித்தனமா படுது. சாப்பிடுவதற்கு தகுந்த மாதிரி உடல்
உழைப்பு இருக்கணும். பலருக்கு மூளைக்கு வேலை அதிகமா
இருக்கும். அதனாலேயே சோர்வா இருப்பாங்க. டயர்டா இருக்குன்னு
எக்சர்ஸைஸ் கூட செய்ய மாட்டாங்க. மூளை வேலை செய்வது
தனிக்கதை. மெயின் ஸ்டோரியா உடலையும் வேலை செய்ய
வைப்பது ரொம்ப முக்கியம்.
******************************************************************

Wednesday, January 18, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி (18-1-12)

போன வருஷம் இந்நேரம் கிலோ 70,80,100ன்னு தங்கம்போல
ஆனை விலை குதிரை விலை விற்ற வெங்காயம் 1 1/2 கிலோ 10
ரூவாவுக்கு கிடைக்குது. இந்த சீசன்ல தக்காளி கிலோ 5 ரூவா.
இரண்டு வாரமா மார்க்கெட் நிலவரம் இப்படி இருக்கு!!!
மத்த ஊருல எல்லாம் எப்படியோ?? வெங்காயம் விளைச்சல்
அதிகமாகி அதனால நஷ்டத்துக்கு ஆளான விவாசாயிகள்
நடு ரோடில் வெங்காயத்தை கொட்டி தர்ணா செஞ்சிருக்காங்க
குண்டூர் பக்கம்!!! பாவம்.
**************************************************************
ஜனவரி 31 ஹைதைக்கு வந்த பொழுது கூட அம்புட்டு குளிர்
இல்லை. பொங்கலுக்கு 4 நாள் முன்னாடி வரைக்கும் பகல் நேர
வெப்பம் 33 டிகிரிக்கு கூட போச்சு. சடனா ஒரு சாயங்காலம்
10 நிமிஷ மழை. அப்புறம் மொத்தமும் மாறிப்போச்சு. குளிர்,
குளிர் குளிர் தான். போன வருஷம் பகல் நேர வெப்பம் 7 டிகிரி
ஆனப்போ கூட இந்தக் குளிர் இல்லை. ஆனா போகி, பொங்கல்
இரண்டு நாளும் இரவு நேரம் வெப்பம் 7 அல்லது 8 :) ம்ம்
பொங்கல் முடிஞ்சிருச்சு. இனி காலை நேரப்பனி மட்டும் தான்.
அப்படியே டெம்பரேச்சர் கூடி ஏபர்ல், மே மாசம் எங்க போய்
நிக்குத்துன்னு பாக்கணும்!!!
**********************************************************
ஊருக்கு போயிருந்தப்ப மனசுல பட்ட மேட்டரை சொல்ல
மறந்திட்டேனே. திருச்சியிலிருந்து புதுகை போகும் பொழுது
சாலையோரம் சோலையா இருந்த மரங்கள் எல்லாம் வெட்டி,
வேரோட சாய்க்கப்பட்டு இருக்கு. பைபாஸ் ரோட் போடப்போறாங்களாம்.
மதுரை-மேலூர் ரோடு பாத்தப்ப ஷாக்காகிட்டேன். புதுகை- மதுரை
செல்லும் பாதையில் புளியாமரம் தான் இரண்டு ரோட்டோரமும்
இருக்கும். இந்தப்பக்கத்துலேர்ந்து மரக்கிளை அந்தப்பக்கம்
போய் கதை சொல்றது போல இருக்கும். அதெல்லாம் இனி
இருக்காது. பைபாஸ் போடறேன்னு சாலையோரம் இருந்த
மரத்தை எல்லாம் வெட்டி ரோட் அகலமாக்கினாங்களா! இப்ப
அந்த அகலமான ரோட்டுக்கு பக்கத்துலேயே விளைச்சல் நிலங்கள்
வந்திருந்து!! மாற்றம் நல்லதுன்னு எடுத்துக்கறதா? இல்ல இதை
என்னன்னு சொல்வது?
*********************************************************************
இன்னொரு மேட்டர். எனக்கு இதை எப்படி சொல்வதுன்னும் புரியலை!!
என்னமா இதுக்கு ரியாக்ட் ஆவுறதுன்னும் தெரியலை. தம்பிக்கு
பொண்ணு பாத்துகிட்டு இருக்கோம். அம்மா ஏதோ புத்தகத்துல
விளம்பரம் கொடுத்திருந்தாங்க போல. அதைப்பாத்திட்டு ஒரு
பொண்ணோட அம்மா (சென்னைதான்) போன் செஞ்சாங்க.
உங்க மகன் வெளிநாட்டுலதான் இருப்பாரா?: பொண்ணோட அம்மா
“தெரியலீங்க. அவருக்கு எங்க வேலை எப்படி இருக்குதோ?
அதைப்பொறுத்துதான் இருக்கற இடம். நாளைய பத்தி
இன்னைக்கே எப்படி முடிவு செய்ய முடியும்?” : இது எங்கம்மா.

அடுத்ததுதான் முக்கியமான கேள்வி!!!!

”அது சரி. நாளைக்கு உங்க பையன் போகும் ஊருக்கெல்லாம்
நீங்களும் கூடவே போய் இருப்பீங்களா!!???!!”””

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்ன சொல்ல? பையனுக்கு கல்யாணம் முடிச்ச கையோட
பையனைப் பெத்தவங்க வானபிரஸ்தம் அல்லது அனாத
ஆஸ்ரமம், முதியோர் இல்லம் போறது இப்படி ஏதாவது
ஒண்ணு செய்ய ஒத்துக்கிட்டாதான் பொண்ணை
கொடுப்பது பத்தி பேசுவாங்க போல இருக்கே. கன்னியாதானம்
வாங்கின கையோட கல்லு கட்டி கடல்ல தள்ளினாத்தான்
சம்சாரம் செய்ய வருவேன்னு சொல்வாங்க போல இருக்கு!!!

ஏன்?? ஏன்?? ஏன் இப்படி?????????????????????
****************************************************************

கொலவெறி பாட்டு தான் இப்ப தேசிய கீதம். எல்லா மொழியிலயும்
மொழி பெயர்த்துட்டாங்க. பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில இந்தப்
பாட்டு ஹிட்டானதற்கான காரணம், ஜோசியம் எல்லா வெச்சு
சிறப்பு நிகழ்ச்சி வருதுன்னு சொன்னாங்க. நல்லவேளை நான்
பார்க்கலை. இந்தப் பாட்டைப் பாடியதற்காக சப்பான் நாட்டுல
தனுஷுக்கு விருது கொடுக்கறாகளாம்மாம்!!! பொங்கல் அன்னைக்கு
நடந்த பட்டிமண்டபத்துல பாரதி பாஸ்கர் சொன்னது போல
“இப்ப பாட்டுங்க ஏன் வெறி பிடிச்சா மாதிரியே வருது??””
அதுதான் பிடிக்கலை. ஒல்லி உடம்பை வெச்சுகிட்டு தனுஷ்
15 பேரை பந்தாடறதையே பார்க்க சகிக்கலை. இதையும்
ஹீரோயிசம்னு சொல்றாங்க. கடவுளே!!!!!!!!!!!!!
முதல்ல 28 வயசு பையனுக்கே உரிய உடல்வாகை அமைச்சுக்கச்
சொல்லி அவங்க சொந்தக்காரங்க யாருமேவா சொல்லித்தர
மாட்டாங்க????



Tuesday, December 20, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 20/12/11

பதிவு போட ஆரம்பித்து 4 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில்
இந்த மாதம் தான் மிகக்குறைவான பதிவுகள். :) அதான் பிரியாணி
போட வந்திட்டேன்.

பிரிந்தவர் மீண்டும் சேர்வதுபோலன்னு கேள்விபட்டிருக்கோம். சேர்ந்தவர்
மீண்டும் மீண்டும் பிரிதல் என்பதுதான் இப்ப லேட்டஸ்ட். உடன்பிறாவா
தோழிக்கு கல்தா கொடுத்திருக்கும் அம்மாவைப் பத்திதான் சொல்றேன்.
இதற்கு பின்னாடி இருக்கும் மர்மமென்ன? இதற்கு காரணம் சோ ராமசாமி
அவர்கள்னு வேற பகிரங்கமா போடறாங்க. ஏதோ நடக்கிறது என்பதற்கு
இது கட்டியமா? இல்ல??? புரியலை.

************************************************************************
போனவாரத்தில் ஒரு நாள் ஆஷிஷ் பள்ளியிலிருந்து கண்களில் நீர் தளும்ப
வந்தான். பள்ளியில் ஏதும் பிரச்சனையா? டீச்சர் திட்டிவிட்டாரா? என குழப்பம்.
(எப்பவும் ஒரே மாதிரி இருப்பது கஷ்டமாச்சே). என்னப்பா என்று கேட்டால்,
உள்ளே வந்து கட்டிக்கொண்டு ஒரே அழுகை. அவனது நண்பன் இறந்துவிட்டானாம்.
பாவம் ஒரே வகுப்பு மாணவன். குமுறி குமுறி அழும் ஆஷிஷை அன்று
தேற்றுவதற்குள் கஷ்டமாகிவிட்டது. அந்தப் பையன் வசிக்கும் அப்பார்ட்மெண்ட் மொட்டை
மாடியிலிருந்து கால்தவறி விழுந்தானா? தற்கொலையா தெரியவில்லை.
இன்னும் 15 நாளில் தனது பதினாறாவது பிறந்தநாளை கொண்டாட விருந்த
பிள்ளை இறந்துவிட்டான்.

சமீபத்தில் ஒரு நாளிதழில் கூட குழந்தை வளர்ப்பு ஷ்பெஷல் இதழ் வந்தது.
பதின்ம வயதில் பெண் குழந்தையை பேணுவதைப்பற்றித்தான் எல்லாம்
பேசுகிறார்களே தவிர இந்த அண்குழந்தைகளைப் பற்றி அவர்களது பிரச்சனைகள்
பற்றி அவ்வளவாக ஏதுமில்லை. பெண்குழந்தை பற்றி எவ்வளவோ பேசியாகிவிட்டது.
ஆண்குழந்தைகளை வளர்ப்பது அவ்வளவு சுலபமான வேலை அல்ல. அதற்கு
போதிய கைடன்ஸ் பெற்றோர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த மனத்தாங்கல்
எப்போது தீருமோ. பெற்றோர்களுக்கு தேவையான போதனை எப்போது கிடைக்குமோ?
**********************************************************************************

10த் போர்ட் எக்ஸாமா இந்த வருஷம்? பாத்து நல்லா படி? ஜாக்கிரதை!!!
என மிரட்டியதெல்லாம் வரும் மார்ச் மாத பொதுத் தேர்வோடு சரி.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இப்பொழுதே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
ஆப்ஷனல். விருப்பமென்றால் எழுதலாம். அடுத்த வருடம் அதாவது
2012-2013 கல்வியாண்டிலிருந்து 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கு குட்பை
சொல்லப்போகிறது சிபிஎஸ்சி. அதிகமான மனச்சோர்வுக்கு பொதுத்தேர்வு
வழிவகுக்கிறது என்பதால் இந்த முடிவாம்.

இப்பொழுது 9 ஆம் வகுப்பு மார்க்கையும் பத்தாம் வகுப்புக்கு எடுத்துக்கொள்கிறார்கள்.
எல்லாமே டெஸ்டாக எழுதாமல் ஆக்டிவிட்டி, ப்ராஜ்க்ட் என கொடுத்து
மதிப்பீடு செய்கிறார்கள். செமஸ்டர் சிஸ்டம் போல மதிப்பீடு நடக்கிறது.
10 ஆம் வகுப்பு முழுப்பரிட்சையும் போர்ட் எக்ஸாமாக இருந்தாலும்
80 மதிப்பெண்களுக்கு பரிட்சை எழுதுகிறார்கள் என்று கொஞ்சம் கன்ஃப்யூசிங்காகத்தான்
இருக்கு.

இது நல்லதா கெட்டதா? ஒரு அம்மாவாக “ஐ. ஜாலி! பசங்க தப்பிச்சாங்க.நமக்கு கிடைக்காத ஒரு ஆனந்தம் வருங்கால பிள்ளைகளுக்கு” ஒரு
ஆசிரியையாக “இது சரியான முடிவு தானா??!!”
உங்க கருத்தையும் சொல்லுங்க.
*****************************************************************************

எங்கேயும் எப்போதும், தெய்வத்திருமகள் இரண்டு படமும் சமீபத்தில்தான்
பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான படங்கள். எங்கேயும் எப்போதும்
சான்சே இல்லை. அஞ்சலியின் நடிப்பு அருமை. எப்போதும் கொறித்து
கொண்டே வரும் பெண்ணாக நாடோடிகளில் நடித்த அனன்யாவா இது என
இருக்கு. இந்தப் படம் இப்பொழுது ஜர்னி (Journey) என தெலுங்கு
பேச வந்திருக்கிறது.

டர்ட்டி பிக்சர் படம் சக்கை போடு போடுகிறது போல இந்தப் படத்தின் மூலம்
வித்யாவுக்கு நல்ல மார்க்கெட்டாம். 7 கோடி சம்பளமாம். ஆனால் இந்தப்
படத்துக்கு ப்ரமோஷன் என்ற பெயரில் பொது இடங்களில் அவர்கள் அடித்த
கூத்துதான் சகிக்கவில்லை.
********************************************************************************

நான் எழுதறேன்னு சொன்னது தப்புத்தான். என்னால முடியலை.
எதுக்கு இந்த டயலாக்குன்னு கேக்கறீங்களா? பர்வரிஷ் அப்படின்னு ஒரு ஹிந்தி
சீரியல் சோனியில் ஆரம்பமாகுது. அந்தத் தொடரை பற்றி பதிவெழுதறேன்னு
சொன்னேன்ல அதுதான் என்னால முடியலை. திரைப்படத்துக்கு விமர்சனம்
எழுதுவது போல இதுக்கு சான்சே இல்ல. சீரியல் ரொம்ப நல்லா இருக்கு.
கண்டிப்பான பெற்றோரா இருப்பது நல்லதா? நட்போட இருப்பது நலமான்னு
ஒரே குழப்பம்தான் நமக்கு. அதுக்கு இந்த சீரியல் தீர்வுன்னு சொல்ல முடியாட்டியும்
நாம என்ன தப்பு செய்யறோம்னு புரிய வைக்குது.

அத்தோட பெரியவங்களா நாம செய்ய வேண்டியது என்ன என்பதையும் சொல்லுது.
தொடர்ந்து பார்க்க முடியாததால சனிக்கிழமை முன்பகல் 10 மணியிலிருந்து
12.30 வரை மொத்த வார எபிசோட்டையும் பாக்கலாம்.

அந்த சீரியலில் நடிப்பவர்களுக்கும், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்


****************************************************************************

கலி முத்தி போச்சுன்னு தான் சொல்லணும். பொம்பளைப்புள்ளைங்களை
வெளிய அனுப்பி வெச்சிட்டு வயிற்றுல நெருப்பைக்கட்டிகிட்டா மாதிரி
இருக்கோம்னு சென்ற தலைமுறை பெற்றோர்கள் சொன்ன டயலாக்கை இனி
ஆண் குழந்தைகளை பெற்றவங்க சொல்லும் நிலை வரும் போல இருக்கு.
ஆந்திராவின் குண்டூருக்கு அருகில் இரண்டு ஆசிரியைகள் தங்களது 8ஆம்
வகுப்பு படிக்கும் மாணவர்களை அழைத்துச் சென்று யாருக்கும் தெரியாமல்
திருமணம் செய்துகொண்டார்களாம்!!!!!!!!!!! இதை பேப்பரில் படித்த
பொழுது என்னவோ மாதிரி ஆகிவிட்டது.

பெண்களிடம் எந்த வேலை கொடுத்தாலும் பொறுப்பாக செய்வார்கள்.
ஆசிரியர் பணியில் பெண்களை அமர்த்தினால் தாயைப்போல பாதுகாப்பார்கள்
என பெண் இனம் மேலே எத்தனையோ நல்ல பெயர்கள். அவற்றுக்கு களங்கம்
விளைவிக்கும் கருவேலம் முற்கள் இப்பொழுது முளைக்கத் துவங்கி இருக்கின்றன.

இதை முளையிலேயே கிள்ளி எறிய ஏதாவது செய்யவேண்டிய தருணம்.
பிள்ளைதான் பள்ளி செல்கிறதே என்று விட்டுவிடாமல் நேரம் கிடைக்கும்
பொழுதெல்லாம் பிள்ளைகளுடன் அளவளாவி நீதி போதனைக்கதைகளை
சொல்லவேண்டும். பள்ளியில் தற்போது இத்தகைய வகுப்புக்கள் நடப்பது
இல்லை. பிள்ளையின் வளர்ப்பில் பெரும் பங்கு பெற்றோருக்குத்தான்.
************************************************************************************









Friday, November 18, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 18/11/11

ரயில்வே நிர்வாகம் எதையும் கண்டுக்கறதே இல்லை. ஏனோ தானோ
மனப்பான்மையிலேயே வேலை செய்வாங்க போல. எப்பப்பாரு ஏதாவது
எடக்கு மடக்கா செய்வதுதான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் போல.
இப்ப திரும்ப ரயில்வே சிக்கலில் மாட்டியிருக்கு. ரயிலில் டாய்லட் இருப்பதே
பெருசு. (இருக்கும் ஆனா உபயோகிக்க பயப்படுற அளவுல இருக்கும்)
இதுல ரயில்வே துறை டாய்லட் பேப்பரை வேற வெச்சு சிக்கலில் மாட்டியிருக்கு.




டாய்லட் பேப்பரில் தேசிய சின்னத்தை எப்படி அச்சிட்டாங்க?
இப்ப ரயில்வேத்துறை இதற்கு என்ன சொல்லப்போகுதுன்னு தெரியலை.

சிரத்தையே இல்லாம எப்படித்தான் இருக்காங்களோ!!! :((


*******************************************************************************
இந்த அழகுப்போட்டிகளில் எப்படித்தான் தேர்ந்தெடுக்கறாங்களோ தெரியலை.
அறிவுப்பூர்வமான பதில் சொல்லி எப்படியோ பிரைஸ் வாங்கிடறாங்க.
ஆனா அடிப்படை விஷயம் கூட தெரிவதில்லை. கேவலமா இருக்கு.

சமீபத்தில் நடந்த குழந்தைகள் தின விழாவில் முதல்வர்
கிரண்குமார் ரெட்டி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் உலக அழகி 2011
வாசுகி சுன்காவல்லி (ஆந்திரா பொண்ணு) பங்கேற்றிற்கார்.



தேசிய கீதம் பாடி முடித்ததும் புள்ளைங்கல்லாம் அமைதியா இருக்க
இந்தம்மா கையைத் தட்டியிருக்காம்!!!! என்ன கொடுமை சரவணன்!!!
************************************************************************************

இப்பொழுது பாலியல் பலாத்காரம் என்பது ரொம்ப சர்வ சாதாரணமா ஆயிடிச்சு.
பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கே பயமா இருக்குன்னு சொல்ல
வெச்சிடுவாங்க போல இருக்கு. தினம் தினம் பேப்பரில் இது பத்திய ந்யூஸ்தான்.
ஆசிரியர், பிரின்ஸ்பால் இப்படி என்றால் பள்ளிக்கூடத்தில் பெருக்கும் ஒரு ஆள்
இரண்டாவது படிக்கும் பிள்ளையை.......... கடவுளே!!!

இன்னும் எத்தனை காலம் தான் இப்படி கஷ்டப்பட வேண்டுமோ!!
************************************************************************************
ஒரு வழியா ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்துவிட்டது.
அழகு தேவதைக்கு ஒரு குட்டி தேவதை. மீடியாக்கள் வாயை மூடிக்கிட்டு
இருந்தது தான் ஆச்சரியம் ( பத்து அம்ச கொள்கை மாதிரி
ஏன்னோ ஒண்ணு பத்திரிகை துறைக்கு போடப்பட்டிருந்ததாம். ஐஸ்வர்யா
ராய் டெலிவரி பத்தின ந்யூஸை அதிகம் போடக்கூடாது, ஹெட்லைன்ஸா
போடக்கூடாதுன்னு )ம்ம்ம்ம்
************************************************************************************மாயாவதி அக்கா upயை 4 ஆ வெட்டி கூறு போடப்போறாங்க.
தெலங்கானா பிரச்சனை என்னவோ சத்தம் இல்லாம இருக்கு.
ஆசாத் எல்லோரும் பேசி கலந்து முடிவெடுக்கணும்னு ஏதோ
சொல்லியிருக்கற நிலையில் மாயாவதி கொடுத்திருக்கும் திட்டம்
ஓகேவானா தெலங்கானா கொடுக்க வேண்டிய சூழல் வந்திடும்.
ஆண்டவா ஹைதையை காப்பாத்து!!!
***********************************************************************************

தங்கத்தமிழ் நாட்டில் பால் விலை, பஸ் டிக்கெட் விலை எல்லாம் ஏத்திப்புட்டாங்களாமே!!
கரண்ட் ரேட் கூட ஏத்தப்போறாங்களாம். இதுக்காக கவலைப்படாதீங்க. எங்களுக்கு
ஏற்கனவே எல்லாம் ஏத்தியாச்சு. பால் லிட்டர் 34 ரூவாய், பெட்ரோல்
ஜனவரில 65 ரூவா இருந்தது இப்ப 73, கரண்ட் ரேட் ஏத்தி இரண்டு மாசம்
ஆச்சு. லேட்டஸ்டா தண்ணிவரிப்பணத்தையும் அதிகரிச்சிட்டாங்க. சிலிண்டர்
410 ரூவா.

இதுக்கு முன்னாடி தமிழகத்தின் நிலை ஜுஜுபி. அதனால அழப்ப்டாது.
கண்ணைத் தொடச்சுக்கோங்க.
*******************************************************************************
மனச்சோர்வு அதிகமா இருக்கும் பொழுது உணவில் அரிசி கண்டிப்பா இருக்கணுமாம்.
தினமும் அரிசிதான் சாப்பிடறோம்னு சொல்வீங்க. நான் அதைப்பத்தி சொல்லலை.
இரவு உணவில் சிலர் டிபன், சப்பாத்தின்னு இருப்பாங்க. (மீ டூ :) )

எங்க டயட்டீஷன் சொல்லிக்கொடுத்தது என்னன்னா பசங்க பரிட்சை,
சில முக்கியமான வேலைகள்னு டென்ஷன் அதிகமா இருக்கக்கூடிய சமயங்களில்
இரவு 1 கப் சோறு சாப்பிடுவது மனச்சோர்வை கண்ட்ரோலில் வைக்கும் என்பது
தான். பசங்களுக்கு அந்த மாதிரி கொடுப்பதால அவங்களும் ஸ்ட்ரெஸில் இருந்து
எஸ்கேப் ஆக வாய்ப்பு இருக்கு. நாம் உண்ணும் உணவே மருந்துதானே!

பாத்து பதமா இருந்துக்கோங்க. ஹேப்பி வீக் எண்ட்
*********************************************************************************

Monday, October 17, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 17/10/11

தெலங்கானா போராட்டம் தீவிரமாகத்தொடங்கி 1 மாசத்துக்கு அப்புறம்
ஆளுங்கட்சிக்கு முழிப்பு வந்து போக்குவரத்து ஸ்ட்ரைக்கை வாபஸ்
வாங்க வெச்சிருக்காங்க. பள்ளிகள் நடத்தலைன்னா ரெஜிஸ்ட்ரேஷனை
இழக்க நேரிடும்னு பயமுறுத்தி இருக்காங்க. பள்ளிகள் வளமை போல்
இயங்கும்னு நம்பிக்கை வந்திருக்கு. நவம்பர் 5 ஆம்தேதி தெலங்கானா
பத்தி ஒரு முடிவுக்கு வருவாங்க போல இருக்கு. பாப்போம்!!!
*************************************************************
நாளிதழ் ஒன்றில் மூளை வேலை செய்வதைப்பற்றி போட்டிருந்தது.
அதில் சராசரியாக பெண்கள் ஒரு நாளைக்கு 7000 வார்த்தைகளும்,
ஆண்கள் 2000 வார்த்தைகளும் உபயோகிக்கிறாங்கன்னு போட்டிருந்தது.
மகள் கொண்டுவந்து காட்டினாள். ஆண்கள் பலரும் மொளனச்சாமியா
இருக்க அவங்க மூளைதான் காரணம்னு நினைச்சுகிட்டேன்.
பொம்பளைங்க அனாவசியமா பேசுறாங்க அப்படின்னு கூட ஒரு
ஆண் புலம்பியதை முன்பு எப்பொழுதோ மகள் படிச்சிருக்காங்க போல
ஏம்மா! வொக்காபுலரியே கம்மியா இருந்தா ஆண்களுக்கு எப்படி
பேசணும்? என்ன பேசணும்னு தெரியாதுல்ல? அப்படி இருக்க
அதிகமா பேசறாங்கன்னு பெண்களைச் சொல்வது தப்பு இல்ல!!
இது கூட ஏம்மா புரிய்ய மாட்டேங்குது”!!!
அப்படின்னு கேட்க,”ஆஹா நமக்கு ஒரு வாரிசு உருவாகிடிச்சு!
ஹஸ்பண்டாலஜி பாடங்கள் எதிர்காலத்திலயும் தொடர வாய்ப்பிருக்குன்னு!”
சந்தோஷப்பட்டுகிட்டேன்.:)))))) சில விஷயங்கள் சொல்லித்தரப்படாமலேயே
பெண்கள் புரிந்து கொள்கிறார்கள்.
**************************************************************
இந்த வாட்டி ரயில்ரோக்கோவை ஒரு சூப்பரா ஹேண்டில் செஞ்சிருக்காங்க.
சாதரணமா ஒண்ணும் செய்ய முடியாதுன்னு ரயில்வே ஊழியர்களை
கம்ப்ளெய்ண்ட் கொடுக்க வெச்சு, ரயில்வே சட்டத்தை உபயோகிச்சு
14 நாள் ரிமேண்ட்ல, விஜயசாந்தி, கேசிஆர்,கவிதா, கேடிஆர்,
கோதண்டராம் எல்லாரையும் உள்ள தள்ளிட்டாங்க. பெயில்ல
வெளியில வர கஷ்டப்பட்டு வந்திருக்காங்க. தாங்க முடியலை
கோதண்டராமால. பொம்பளைங்களை போலீஸ் ஸ்டேஷன்ல
வெச்சிருக்காங்க, என்ன அரசு இதுன்னு? காட்டமா பேட்டி கொடுக்கிறார்.

பெண் என்பதால எந்த சலுகையும் எங்கயும் கிடைக்காது. தப்பு
செஞ்சா யாருக்கும் தண்டனை கண்டிப்பா கிடைக்கும். விஜயசாந்தி
எம்பி, பெண் என்பதால அவங்களை அரெஸ்ட் செய்யக்கூடாது
அப்படின்னா வூட்டுல சும்மா உக்காந்திருக்கணும். தர்ணா செய்ய
வரக்கூடாது.

ஆனா சும்மா சொல்லக்கூடாது. குண்டாந்தடியா இருந்த
போலீஸ் அக்காக்கள் ரயில் பட்டியில உக்காந்து தர்ணா செஞ்ச
பெண்களை குண்டு கட்டாத்தூக்கி அப்புறப் படுத்தி வண்டியில
ஏத்தின காட்சியை பாக்கணும். ஹாட்ஸ் ஆஃப் டு வுமன் போலீஸ்.
***************************************************************

பசங்க ரொம்ப குஷியா இருக்காங்க. இந்த வார விடுமுறையின் போது
அவங்க மாமா ஊர்லேர்ந்து வர்றாப்ல. அதனால குஷி. தீபாவளிக்கு
புதுகைக்கு போகும் முன் தம்பி இங்க வந்திட்டு போறாப்ல. இரண்டு
வருஷம் கழிச்சு தம்பி ஹைதை வருகிறார். 10 நாள் முன்னாடி
தம்பி போன் போட்டு “அக்கா ஏதாவது வாங்கி வரணும்னா லிஸ்ட்
அனுப்பு. முஸ்தபா மட்டும்தான் போக நேரம் கிடைக்கும்னு சொல்ல!”
அம்ருதம்மா கொடுத்த லிஸ்ட்.

2 செயின், 4வளையல், 1 ஒட்டியாணம் (தங்கத்துலதான்) முஸ்தபாவுல
கோல்ட் ஷாப்பும் இருக்கு மாமா!!

தம்பி,” நான் ஊருக்கே வர்றல்ல!!”...........
*******************************************************************
தாத்தாவுக்கும் பேத்திக்கும் நடக்கும் சம்பாஷணைகள் தாங்கமுடியவில்லை.
அப்பாவுக்கு பிடித்த பவுடர் இங்கேயிருந்து தம்பியிடம் அனுப்பச்சொன்னார்
அப்பா. அதற்கான காசு அம்ருதாவிடமிருந்து வாங்கி கொள்ளச் சொன்னார்.
போன் போட்டு தாத்தா பேத்தியிடம் சொல்ல,”நான் எதுக்குத் தாத்தா
காசு கொடுக்கணும். உங்க பொண்ணாச்சு நீங்க ஆச்சு!!””

ரவா உருண்டை பொடி அனுப்பச் சொல்லுங்க அம்மம்மாவை,
அதுக்கு வேணாம் காசு தர்றேன். எப்படி இருக்கு??!!

****************************************************************
zindagi na milege dobara தியேட்டரில் பார்க்க வேண்டும் என
நினைத்திருந்த படம். மிஸ்ஸாகிவிட்டது. சனி, ஞாயிறு இரண்டு
நாளும் இந்தப் படம் ஸ்டார் ப்ளஸ்ஸில் வந்தது. நல்லாத்தான் இருக்கு.
ரொம்ப நாளைக்கப்புறம் பாசிட்டிவான படம் என்று கூட சொல்லலாம்.


ஆனாலும் சில நெருடல்கள் ஆங்கிலப்படங்கள் தோற்றுப்போகும் அளவுக்கு
லிப்லாக், சீன்கள் ஆகியவற்றை குறைத்திருக்கலாம். பாலிவுட் எப்பொழுதுமே
இந்த மாதிரி விவகாரங்களுக்கு அதீதம். தரம் ஹாலிவுட் போல் இருக்கிறதோ
இல்லையோ இந்த மாதிரி விஷயங்கள் சில சமயம் ஹாலிவுட்டே
தோற்றுப்போய்விடும் போல இருக்கும். இந்த அழுக்கை யார் கழுவிவிட்டு
போகப்போகிறதோ!!
*********************************************************************

Thursday, August 25, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி - 25/8/11

அரசியல்ல எதுவேணாம் நடக்கலாம்னு சொல்லுவாங்க. வெக்கமே
இல்லாதது இந்த அரசியல்வாதிகள் கூட்டம்தான்.
மறைந்த ஆந்திர முதல்வர் YSR மகன் ஜகன் மோகன் ரெட்டியின்
அபார சொத்து குவிப்பு பத்தி சீபிஐ விசாரிக்க ஆரம்பிச்சது
பழைய நியூஸ். லேட்டஸ்ட் நியூஸ் அவங்க அப்பா முதல்வரா
இருந்த பொழுது அவருடைய அருளால பலர் சொத்து சேத்திருக்காங்க
அப்படின்னு கண்டுபிடிச்சு அவரையும் குற்றவாளியா சேத்திருக்காங்க.

மருத்துவரா இருந்து முதல்வரான ராஜசேகர ரெட்டி சொத்து
எப்படி சேத்தாரு? அதிகார வர்க்கத்துல இருக்கறவங்களை
ஒண்ணும் செய்ய முடியாது. அவங்களே எதிர்க்கட்சி ஆனாத்தான்
உண்மைகள் தோண்டி எடுக்கப்படுமா????????
**************************************************************
ஆந்திரா காங்கிரஸும் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி
கேலிக்கூடமா ஆகிடும் என்பதுல டவுட்டே இல்ல.
ராஜசேகர ரெட்டி பேரை குற்றவாளி லிஸ்ட்டில் சேத்ததுல
கோவமான காங்கிரஸ் எம்பிக்கல் 26 பேர்கள் ராஜினாமா செஞ்சாங்க.
(எத்தனை வாட்டி செய்வாங்க? ஏற்கனவே தெலங்கானா பிரச்சனைக்காக
ராஜினாமா செய்ததா ஞாபகம்) டீவில ஒரு ஷோவுல பேசிக்கிட்டதைக்
கேட்டு எனக்கு சிரிப்பும், கோவமும் தாங்கலை.

போபர்ஸ் ஊழலை பத்தி ஆரம்பிச்சாலே மறைந்த ராஜிவ்காந்தி
அவர்கள் பேர் வருவதை தடுக்க முடியாது!!! அவர் முன்னள்
பிரதம மந்திரி. அதுக்காக நாங்க ஏதும் சொல்லலியே. ராஜசேகர
ரெட்டி முன்னாள் முதல்வர் தான் அப்படின்னு ஸ்டேட்மெண்ட்
விட்டிருக்காரு ஒரு காங்கிரஸ் கட்சி கரைவேட்டி.

மொத்தத்துல என்ன சொல்ல வர்றாங்க? காங்கிரஸ் கட்சி
ஊழல்களின் மொத்த உருவம்னா?????
************************************************************
அன்னா ஹசாராவை தேவையில்லாம அரெஸ்ட் செஞ்சு அதுகப்புறம்
அவருக்கு உண்ணாவிரதத்துக்கு அனுமதி கொடுத்து, இப்ப
பேச்சு வார்த்தைக்கு ரெடின்னு லெட்டர் எழுதி(எதுக்கு லெட்டர்
எல்லாம் எழுதணும்??) நேத்து பேச்சு வார்த்தை நடந்திருக்காங்க.
அன்னா ஹசாரா கேட்டுக்கிட்ட படி சில பல மாறுதல்களைச்
செய்வோம்னு சொல்லியிருக்காங்க. பிரதமரை லோக்பால்
பில்லில் சேர்ப்பதில் என்ன தப்பு?? கனிமொழி சொல்லியிருப்பது
போல உள்துறை அமைச்சரும், பிரதமரையும் சாட்சி ஆக்கி
ரெண்டு தட்டு தட்டி விசாரிச்சா உண்மை வெளிவரும். அப்ப
லோக்பால் பில்லில் யார் யாரு பேரெல்லாம் கண்டிப்பா சேக்கணும்னு
முடிவு செய்யலாம்.

இந்த அரசுதான் ஊழல் மிகுந்து இருக்குன்னு அடுத்தவங்களுக்கு
ஓட்டு போட்டா அவங்க ஏதும் நல்லது செய்ய போறாங்களா?
ஒரு குப்பையும் இல்ல. அவனவன் அவனவன் ஜோலியைத்தான்
பாக்கிறான்!!

இதுல சூப்பர் காமெடி என்னன்னா? அன்னா ஹசாரே போராட்டுத்துல
எங்க தெலங்கானா பிரச்ச்னையை எப்படி முன்னுக்கொண்டு போறதுன்னு
தெரியாம தலைகள் சைலண்ட் ஆகிட்டாங்க!!!!!!!
*********************************************************

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!!!!!!

விலை வாசி ஏறிப்போச்சு அது இதுன்னு புலம்பிக்கொண்டு இருக்கும்
மக்களுக்கு தேனொழுகும் செய்தி ஒன்று காத்திருக்கு!!!
இனி ஒரு குடும்பத்துக்கு வருஷத்துக்கு 4 சிலிண்டர்தான் ரேஷன்.
அதுக்கு மேல வேணும்னா ஒரு சிலிண்டர் ரூபாய் 650 கொடுக்கணும்.

இதுல என்ன நல்ல செய்தி அப்படின்னு கேட்டா. தங்கமணிகளுக்கு
கட்டாய ஓய்வு கொடுக்க அரசாங்கம் முடிவு செஞ்சிருக்குன்னு
புரிஞ்சிக்கணும். சிலிண்டர் இருக்கும் வரைக்கும்தான் சமைக்க
முடியும். இல்லாட்டி!!! எஸ்ஸு ஹோட்டல்தான் கதி.

வரும்போது மறக்காம வாங்கிட்டுவாங்கன்னு சாமான் லிஸ்ட்
கொடுக்க வேண்டியது இல்ல. என்னென்ன வேணும்னு மெனு
மட்டும் கொடுத்திடலாம். (வார மெனுத்திட்டம் கூட போட்டுக்கிடலாம்ங்க)
சமையலறை எப்பவுமே சுத்தமா இருக்கும்.!!!!!!

வீட்டுவேலைக்காரம்மா வரலைன்னு டென்ஷன் வேண்டாம்.
பெண்களின் மேன்மைக்காக பாடுபடும் ஒரு அரசாங்கம் நமக்கு
கிடைச்சிருக்குன்னு சந்தோஷப்படுங்க. ரங்குகளுக்கு இப்ப
ரொம்பவே சந்தோஷமா இருக்கும். (வூட்டு சாப்பாட்டிலேர்ந்து
தப்பிக்கலாம் பாருங்க!!)

**********************************************************************
டிஸ்கி: சிலிண்டர் ரேஷன் பத்தி எங்கம்மா கிட்ட சொன்னேன்.
அவங்க அடிச்ச கமெண்ட்,” இண்டக்‌ஷன் அடுப்பு காரங்க கிட்ட காசு
ஏதும் வாங்கிட்டாங்களோ!!!” அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சரி க்யாஸ்தான் ரேஷன். கரண்டாவது உபயோகிக்கலாம்னு
நினைச்சுகிட்டு இருந்தேன். அதுக்கு வெச்சிட்டாங்க ஆப்பு.
”ஒண்ணரையானா காய்கறி எல்லாம் ஒண்ணார்ரூவா ஆக்கிப்புட்டாண்ணேன்”
ஒரு யூனிட் கரண்ட் இனி ரூ4.15.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



Tuesday, August 09, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி - 9/8/11

ஆன்னா பந்த், ஊன்னா பந்துன்னு இருக்கு தெலங்கானா ஏரியா.
இவங்களை கேக்க ஆளே இல்லையான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
ச்சும்மா சும்மா பந்த் நடத்தறாங்கன்னு யாரோ ஒரு புண்ணியவன்
தெலங்கானா ராஷ்ட்ர கமிட்டி தலைவர் கே.சி.ஆர் மேல கேஸ்
போட்டிருக்காங்க. (நாளைக்கு பந்தாம்ல!!)
தவிர மார்ச்மாதம் மில்லியன் மார்ச்ன்னு ஒண்ணு நடத்தி அராஜகம்
செஞ்சாங்க. அதுக்கு போலீஸ் நல்லா கவனிக்கப்போகுதாம்.

கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை. ராமுலம்மாவுக்கு (விஜயசாந்தி)
நேரம் எப்படி இருக்கோ??!!!!

டிசம்பர் 09 லேர்ந்து இதுவரைக்கும் 16 பந்த் நடந்திருக்கு. நாளைய
பந்தை சேர்த்தா 17ஆம். இதுலயும் சாதனை படைப்போம்ல!!!


****************************************************************
இந்த வாட்டி பெருசா மழையில்லை. போனவருஷம் கொட்டி தீத்துச்சு.
அந்த மழையால எங்க வீட்டு வேலை முடியாம திண்டாடினோம்.
இப்ப மேகம் கருக்குது, மழை வரப்பாக்குது, வீசி அடிக்குது காத்துன்னு
தான் இருக்கு. ஆனா போன வாட்டி மாதிரி இல்ல. :((

வருண பகவான் கண்ணு தொறந்து பாரு ராசா!!!!!
***************************************************************
தங்கம், வெள்ளி விலை எங்கயே போயிடிச்சு. 3000 ரூபாய்ல 8 கிராம்
தங்கம் வாங்கினது போயி இன்னும் கொஞ்ச நாளில் ஒரு கிராம் 3000
ஆகப்போகுதாம்!! அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார
மாற்றத்தால (இதான் மொதோ தபாவாமே, இப்படி லேசா சரிஞ்சதுக்கே
இந்த மாற்றம்னா?!!) ஷேர் மார்க்கெட் அடி வாங்கிருக்கு. இதனாலயும்
இன்னும் தங்கம் விலை ஏறுமாம். போறபோக்கப்பாத்தா மாங்கல்யம்
மட்டும் தங்கத்துல போடுறோம். பொண்ணு பேர்ல ஃபிக்ஸட்டா
போட்டுடறோம்னு சொல்லும் காலம் வரும். 1981ல வெளிவந்த
மணல்கயிறு படத்துல விசு ஒரு வசனம் சொல்வாரு,” ஒரு குந்துமணி
தங்கத்துக்கூட ஆசைபடக்கூடாதுன்னு!!” இது இனி சாத்தியம் ஆகிடும்.

******************************************************************

அது ஏறுது, இது ஏறுது, வீட்டுக்கடன் வட்டி ஏறுது. கேஸ் 400 ரூபாய்
ஆகிடிச்சு. பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்னு சொன்ன உடனே
ஆட்டோ மீட்டரே இல்லாம ஃப்ளாட் ரேட்டா ஓடுது.வரிகட்டி மாளல.
சாப்பிட போனா சாப்பிட்ட பில்லுல 25 சதவிகிதம் வட்டியா
கட்டற நிலமை. எல்லாம் சூப்பர் ஜெட் ஸ்பீட்ல ஏறுது. ஆனா இதுக்கு தகுந்த மாதிரி சம்பளத்தையும் ஏத்த மாட்டேங்கறாங்களே!! என்னென்னவோ மாற்றம் வரும்னு
சொல்றாங்களே அதுமாதிரி இந்த குடியாட்சி சரியாவரலைன்னுபழைய
படி மன்னராட்சி வந்தா சரியாகுமோ?!! :((((
****************************************************************
ஆகஸ்ட் 5 தெலங்கானாப்பத்தி கண்டிப்பா பேசுவேன்னு சபதம் போட்டு
சுஷ்மா சுவராஜ் கலக்கு கலக்குன்னு கலக்கி பேசினாங்க. கடைசில
தெலுங்குல வேற படிச்சாங்க. ஆனா அதுக்கு காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த எம்பி ஒருத்தர் கேட்ட கேள்விதான் ஹைலைட்டே.
“ஆந்திராவுல மருந்துக்கு கூட ஒரு எம்பி கூட இல்லாத பிஜேபி
தெலங்கானா பத்தி பேசுதேன்னு”. இப்படி பேசினாலாவாது அடுத்த
எலெக்‌ஷன்ல ஒரு ஆளாவது அவங்க கட்சியைச் சேர்ந்தவங்க
தேர்ந்தெடுக்கபப்டுவாங்கன்னு நினைச்சிருப்பாங்க போல பாவம்!!

*********************************************************************
புது வீடு கட்டியிருக்கேன். புது வலைப்பூ ஆரம்பிச்சிருக்கேன்.
கொஞ்சம் இங்கிலிபீசுலயும் தாளிக்கலாம்னு தாளிக்க ஆரம்பிச்சிருக்கேன்.
அங்கயும் அடிக்கடி வந்து ஆதரவு கொடுங்க.
இன்றைய ஷ்பெஷலா பாலக் பனீர் ரைஸ் பதிவு வந்திருக்கு.
ஒரு எட்டு வந்து பாருங்க. மிக்க நன்றி

Tuesday, June 14, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி 14/6/11

இடி மின்னலோட மழை பெஞ்சுகிட்டு இருக்கும்பொழுது சர்தார்ஜி
ஒருத்தர் அடிக்கடி வெளியே வந்து வானத்தை பார்த்து சிரிச்சாராம்.
எதுக்குன்னு கேட்டா,”யாரோ போட்டோ பிடிக்கறாங்க!!அதான் வெளிச்சம்
வருது. அதுக்காகத்தான் சிரிச்சேன்” அப்படின்னு
சொன்னாரம்!!!

இப்ப ஹைதையிலயும் சிலர் வண்டி ஓட்டவா?சிரிக்கவான்னு
குழம்பி அதனால ஆக்சிடண்ட் ஆகக்கூடிய சாத்தியங்கள் இருக்கு. :))
டிராஃபிக் கான்ஸ்டபிள்ஸ் கையில கேமிராவை கொடுத்து
வெச்சிருக்காங்க. பி.சி.ஸ்ரீராம்னு நினைச்சு ஓடியாடி, புகுந்து
போட்டோ பிடிக்கறாங்க. டிராபிக்கை மதிக்காம போகற வாகனங்களை
போட்டோ பிடிச்சு, அந்த வண்டி நம்பருக்கு “லவ் லெட்டர்” அனுப்புறாங்க.
பேப்பர்ல யார் யாருக்கெல்லாம் லவ் லெட்டர் போனிச்சுன்னு அறிவிப்பு
வேற வருது.

ட்ராபிக் கான்ஸ்டபிள் ஓடியாடி போட்டோ பிடிப்பது சரி, ஆனா சில
இடங்களில் சிக்னிலேயே கேமிராவை வெச்சிருக்காங்க. பளிச் பளிச்சின்னு
போட்டோ பிடிக்குது அந்த கேமிரா. அதுலயும் இரவு நேரத்துல இந்த
வெளிச்சத்துனால வண்டி ஓட்டுனருக்கு கஷ்டம் இருப்பதை புரிஞ்சிக்கிறமாதிரி
தெரியலை!!!

*******************************************************************

அனுபம் கெர். ஹிந்தியில் வில்லன்,குணசித்திர நடிகர். அவரு நடிப்பு
பயிற்சிக்காக ஒரு பள்ளி தொடங்கி நடத்திகிட்டு இருக்காரு. நடிப்போட
இன்னொரு பயிற்சியும் அங்கே கிடைக்குது. அது THE POWER WITHIN.
அந்த பயிற்சி பத்தி தெரிஞ்சிக்க இங்கே போய் பார்க்கலாம்.
Deccan chronicle நாளிதழில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவர்
எழுதும் கட்டுரையை தவறாம படிக்கிறேன். ஒவ்வொண்ணும் அற்புதம்.

வாழ்த்துக்கள்.

****************************************************************

நீதா அம்பானி- முகேஷ் அம்பானி அவர்களின் மனைவி. எப்படி
ஸ்லிம்மா,ட்ரிம்மா இருக்காங்கன்னு அவங்களை பாக்கும் போதெல்லாம்
ஆச்சரியம்மா யோசிப்பேன். தன்னோட உடம்பை மெயிண்டென்
செய்வது ரொம்ப முக்கியம்னு நினைச்சு கட்டுகோப்பா வெச்சிருக்காங்கன்னு
சந்தோஷப்பட்டிருக்கேன். இந்த ஃபோட்டோவி பார்க்கும் வரை
அவங்கமேல ஒரு மதிப்பு இருந்துச்சு. மேல அவங்க போட்டோவை
பாத்தீங்கள்ல!! கீழே இருக்கும் போட்டோவை கொஞ்சம் பாருங்க.

இது முகேஷ்-நீதா தம்பதிகளின் மகன்கள். தன்னை மட்டும் கவனிச்சா
போதாது, தன் பசங்களையும் கொஞ்சம் கவனிக்கணும்னு அவங்களுக்கு
யார் புரிய வைப்பது????
*********************************************************************
ஆந்திரா அரசியல் ரொம்ப கேவலமா இருக்கு!! என்ன நடக்குதுன்னே புரியலை.
காங்கிரஸ் ஆட்சி Y.S.R செத்ததுக்கப்புறம் ரொம்ப கேவலமா இருக்கு.
(அதுக்கு முன்ன கேவலமா இருந்துச்சு) எதிர் கட்சியான தெலுகு தேசத்தில்
வாரிசு உருவாக்குவதுல பிசியா இருக்காரு சந்திரபாபு நாயுடு. தன்
மகன் லோகேஷை முன்னிறுத்தும் வேலையில் இருப்பதால் ஆந்திராவைப்
பத்தி அவரும் கவலைப்படலை. பிராஜ ராஜ்யம் ஆரம்பிச்சாரு சிரஞ்சீவி.
கேப்டன் கணக்கா ஏதும் செய்வாருன்னு பாத்தா அவரு காங்கிரஸோட
இணையப்போறாரு!!!

நாங்க மட்டும் சும்மா இருப்போமான்னு தெலங்கானா கட்சி காரங்க்
பந்த்,போராட்டம் தீவிரமா இருக்கும்னு அறிவிச்சிருக்காங்க.
ஒரு காலத்துல முன்னனி மாநிலமா இருந்த ஆந்திரா ஒரு 15 வருஷம்
பின் தங்கிடிச்சு!!!
*******************************************************************

ஐ.ஐ.டி,ஏ,இ.இ. பரிட்சை எழுதினவங்க/எழுதப்போறவங்களுக்கெல்லாம்
புது பிரச்சனை ஒண்ணு வந்திருக்கு. இதுவரைக்கும் நுழைவுத்தேர்வில்
கணக்கு,அறிவியல் மட்டும்தான் இருந்தது. ஆனா அதுல டாப் ரேங்க்
வாங்கினவங்களுக்கு கூட ஆங்கில அறிவு அம்புட்டா இல்லயாம். அதனால
கல்லூரில சேரும் முன் ஆங்கில அறிவு சோதிக்கும் பரிட்சை எழுதணுமாம்!
அதுல ஃபெயில் ஆகிட்டா, காலேஜுல சேத்துகிட்டு முதல் செமஸ்டருக்குள்
ஆங்கிலத்தை கண்டிப்பா கத்துகிட வேணுமாம். இந்தக் கொடுமைக்கு
ஆங்கில மார்க்கும் முக்கியம்னு அதுக்கும் சேர்த்தே டெஸ்ட் வெக்கலாமே,
இல்லாட்டி நுழைவுத் தேர்வையே எடுத்திட்டு +2 மதிப்பெண்ணை வெச்சே
அட்மிஷன் கொடுக்கலாம். உனக்கு அறிவியல் தெரியுது! ஆங்கிலம் தெரியலைன்னு
பசங்களை குழப்ப வேணாமே!!
****************************************************************************

நவாப்பழம் சிலருக்கு பிடிக்காது. அதோட துவர்ப்பு சுவை ஒருபக்கம்,
நாக்கு கலர் மாறுது, தொண்டை கட்டும் அப்படின்னு சிலர் சொல்வாங்க.
ஆனா நவாப்பழம் சாப்பிடுவது ரொம்ப நல்லது. சர்க்கரை வியாதிக்கு
சிறந்த மருந்தா ஆயுர்வேதம் சொல்வது நவாப்பழத்தைத்தான். சர்க்கரை
வியாதி இல்லாதவங்களும் சாப்பிடுவதால நோய் வரும் வாய்ப்பு குறைவுன்னு
மருத்துவ உலகம் சொல்லுது.

சீசன் பழங்களில் கிடைக்கும் சத்துக்கள் உடம்புக்கு முறையா கிடைக்கணும்.
அந்தந்த சீசனுக்கான பழத்தை கண்டிப்பா சாப்பிடுவதுன்னு கொள்கை
வெச்சுகிட்டாலே போதும்.

நவாப்பழத்தை கழுவி, உப்பு போட்டு பிசிறி வெச்சிருக்கேன். நான் போய்
எஞ்சாய் செய்யறேன்.

Wednesday, June 08, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி - 8/6/11

ரொம்ப நாளாச்சு பிரியாணி போட்டு. அதான் ஆரம்பமே
ஆவக்காய பிரியாணி.

CELEBRITY CRICKET LEAGUE அப்படின்னு ஒண்ணு ஆரம்பிச்சு
கோலிவுட், சாண்டல்வுட், டோலிவுட், பாலிவுட் டீம்கள்
மேட்சு நடந்துச்சு பாத்தேன். நம்ம வலைப்பூக்களில் வருவதை
இப்ப எல்லா தரப்பினரும் ஆர்வமா படிப்பதால இந்த மேட்டரை
சொல்லி வைக்கிறேன். தெலுகு வாரியர்ஸ் டீம் டோலிவுட் நடிகர்கள்
இருக்கும் டீம்னு எல்லோருக்கும் தெரியும்.



அந்த டீம் மெம்பர்ஸுல ஒரு பையனை சேர்த்திருக்காங்க பாருங்க.
அதுதான் எனக்கு சரிப்பட்டு வரலை. தாத்தா பெரிய நடிகர்,
அப்பா பெரிய நடிகர், அம்மாவும் அந்தக்கால நடிகை என்பதாலேயே
இவர் விளையாடுவதைப் பத்தி யாரும் கேக்காம இருக்கலாம்!!! ஆனா
பச்சக்குழந்தையா இருந்தப்ப சுசீந்திரின்னு பேபீஸ் டே அவுட் படத்தை
தெலுங்கில் எடுத்தப்ப நடிச்ச ஒரே காரணத்துக்காக நாகார்ஜுனா-அமலாவின்
மகனை கிரிக்கெட்டில் சேத்திருக்காங்க. இதுல இன்னொரு மேட்டர்
என்னன்னா? அகில் கிரிக்கெட்டில் பயிற்சி பெற்ற ப்ளேயர். அவரை
நேஷனல் லெவலிலோ, ஸ்டேட் லெவலிலோ சேர்க்க முடியாட்டி
இப்படி டோலிவுட் டீம்ல் சேர்ப்பது எந்த ஊரு நியாயம்?????
நடிகர்கள் விளையாட்டுன்னு சொல்லிப்புட்டு இப்புடி சின்னப்புள்ளைய
சேர்த்துகிட்டு விளையாடுவது சின்னப்புள்ளத்தனமா இருக்கே!!

போன தடவை டோலிவுட்டுக்குள்ளே நடந்த கிரிக்கெட் மேட்சில்
நாகார்ஜுனா டீம் ஜெயிக்க அகில்தான் காரணம். இதெல்லாம்
நல்லாவா இருக்கு???

நம்ம சென்னை டீம் முதல் மேட்ச்சில் அற்புதமா விளையாடியதற்கு
வாழ்த்துக்கள்.
***************************************************************
இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு முடிவுகள் வந்திருக்கு. வழக்கம்போல
ஆந்திரா தான் டாப்பு!!!! பட்டையக் கிளப்பறாங்க பசங்க.

எண்டரன்ஸ் எக்ஸாம்கள் எல்லாத்தையும் எடுத்திடலாமா? இல்லாட்டி
நேஷனல் எண்ட்ரன்ஸ் டெஸ்ட்டுன்னு ஒண்ணே ஒண்ணு வைக்கலாமான்னு
யோசிச்சுகிட்டு இருக்காங்களாம். ஆன்லைனில் ஓட்டெல்லாம்
போடச் சொல்லி கேட்டுகிட்டு இருக்குது அரசு.
ஆந்திராவும்,தமிழ்நாடும் மட்டும்தான் எதிர்க்கறாங்க.

பாப்போம்!!!
***************************************************************

வருண பகவான் ரொம்ப நாளைக்கப்புறம் சீக்கிரமா வந்திட்டாரு.
இந்த வாட்டி ஹைதையில் வெயில் 42 டிகிரியைத் தாண்டவில்லை.
அப்பப்போ சிறு தூறலும் போட்டதனால குளிரிச்சியவே இருந்துச்சு.

ஆனா போன தடவை பெய்த அதிக மழையால விளைச்சல்
குறைஞ்சு போச்சு!!! கிலோ 20 விக்கும் திராட்சைகள் இந்த தடவை
50,60 ரூபாய்க்கு வித்ததும் அதுவும் குறைவான அளவில்தான்
இருந்துச்சு. மாம்பழம் சீசன் நடக்குது. ஆனா அதுவும் மகசூல் கம்மிதான்.
விலையும் 30,60ன்னு தான் இருக்கு!!!

**********************************************************
2லேர்ந்து 3 வயசு குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வேலையில்
சில பெற்றோர்கள் பிசியாக இருப்பாங்க. நாம நம்ம காலம் பரவாயில்லைன்னு
சந்தோஷப் பட்டுக்குவது போல ஆஷிஷ் வயசு இருக்கும் பசங்கள்லாமும்
சந்தோஷப்பட்டுக்க கூடிய இல்லாட்டி பேசக்கூடிய விஷயமா எனக்கு
தோணுவது நர்சரி, எல்கேஜி அட்மிஷன்!!!!

அப்பா அம்மாவுக்கு சும்மா ஒரு கலந்துரையாடல் மாதிரி வெச்சாங்க,
அப்புறம் அது நேர்முகத் தேர்வாக மாறி பெத்தவங்க வயித்துல
புளி கரைச்சிச்சுன்னா, இப்ப அட்மிஷம் ஃபீஸ். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஷிஷ் இப்ப 10த். ஐயாவுக்கு கூட எனக்கு அம்புட்டு செலவானதில்லை!
ஆனா நர்சரி பாப்பாவுக்கு பிரபல ப்ளே ஸ்கூலில் சேர்க்கணும்னா
வருஷத்துக்கு 30000!!!! இல்ல வேணாம் சாதாரணமான இடத்துல
சேக்கலாம்னா அது ஸ்கூல் மாதிரியே தெரியலை!! வீட்டுலயே ஒரு
ரூமை ஸ்கூலுக்குன்னு ஒதுக்கி(!!) வெச்சிடறாங்க. அந்த மாதிரி
ஸ்கூலுக்கும் மாசம் 1000 ரூபாயாம்!!!

எஞ்சினியரிங், டாக்டர் அட்மிஷன் எல்லாம் அப்புறம் ஆனா ஆவன்னா
கத்துக்கொடுக்க ஸ்கூலில் சேர்க்க சொத்துன்னு ஒண்ணு இருந்தா
அதை எழுதி கொடுத்திடச் சொல்லி கேப்பாங்க போல இருக்கே!!!
இந்தக் கால பெற்றோர் ரொம்பவே பாவம்!!!!!
***************************************************************
மகதீரா தெலுங்கு படம் தமிழ்ல டப்பிங் செய்யப்பட்டு வந்திருக்கு.
டப்பிங் படம் பார்ப்பது ஒரு கொடுமைதான். ஆனாலும் இந்தப்
படத்தை கண்டிப்பா பாருங்க. அரசர் காலம், இந்தக்காலம்னு
ஒரு நல்ல கலவையா இருக்கும் படம். காஜல் அகர்வால் ரொம்பவே
அழகா தெரிவாங்க. ராம் சரண் தேஜாவுக்கு இந்தப் படத்துக்கப்புறம்
அதிகமான ஃபேன்ஸ் சேர்ந்தாங்க.
***************************************************************
திஹார் ஜெயிலைப் பத்தி ஒரு மேட்டர் பார்ப்போம். சத்தியமா
இது கனிமொழி பத்தி இல்லை.
இந்த ஜெயில் ரொம்பவே வித்தியாசமானது. இங்கே இருக்கும்
கைதிகளை ஏதேனும் ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள வைக்கும்
நோக்கில் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து உள்ளேயே வேலை வாய்ப்பையும்
செய்யறாங்க. அதில் ரொம்பவே லாபம் கொடுக்கக்கூடியதா இருப்பது
பேக்கரி பொருட்கள். பிரட்,பிஸ்கட்ஸுன்னு வகைவகையா தயாராகுதாம்.



ஆரம்பத்தில் உள்ளே இருப்பவர்களின் தேவைகளுக்குன்னு தயார் செய்ய
ஆரம்பிச்சது இப்ப வெளி மார்க்கெட்டுக்கும் விற்பனைக்கு வருது.
அதில் கிடைக்கும் லாபத்தை வேலை பார்ப்பவர்களுக்கு கொடுக்கறாங்களாம்!
தரமும் சூப்பரா இருக்கு, விலையும் மலிவா இருப்பு என்பதுதான்
இதன் சிறப்பு.

TJ ஃபுட்ஸ் அப்படிங்கற பெயர்ல தில்லியிலும் அதன் சுற்று இருக்கும்
சில இடங்களிலும் இந்த பொருட்கள் கிடைக்கின்றன்.
வாழ்த்துக்கள்



Monday, February 28, 2011

ஹைதை ஆவக்காய பிரியாணி- 28/2/11

ஆந்திராவில் குளிர் காலத்தில் எதிர் பார்த்த வெப்பம்
வெய்யில் காலம் நெருங்கும் பொழுது சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.
ஒரு பக்கம் ஜகன் அண்ணா உண்ணாவிரதமா இருக்காரு.(டாக்டர்
உடம்பை குறைக்கச் சொல்லியிருப்பாரோ!!) தெலங்கானா பிரச்சனையில்
போன வாரம் நடந்த பந்த் பத்தாதுன்னு மார்ச் 5லேர்ந்து ஆர்ப்பாட்டம்
அதிகமா இருக்கும்னு சொல்லியிருக்காங்க. ஈஸ்வரா..... காப்பாத்துப்பா!!
மார்ச் 1 முதல் 9த்க்கு போர்டு எக்ஸாம்( சிபிஎஸ்ஸி ல இந்த வருஷத்
த்லேர்ந்து ஆரம்பிசிச்ருக்காங்க) அப்புறம் 10க்கு எக்ஸாம் எல்லாம்
வருது. இவங்க பிரச்சனையில வருங்காலத்தூணளின் வாழ்க்கை
கேள்விக்குறியாகிடாம இருக்கணும்!!!

அதான் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை கொடுத்திருக்காங்கள்ல.அதுல
அவங்களே சொல்லியிருக்கும் 6 திட்டங்களில் ஒண்ணை செலக்ட்
செஞ்சு தீர்த்து விட வேண்டியதுதானே!! ஹைதை யூனியன் டெரிட்டரி
ஆனா எம்புட்டு நல்லா இருக்கும்!!

******************************************************************

ஆந்திர அசெம்பிளி அமளி துமளி பட்டுச்சு. கவர்னர் நரசிம்மன்
அறிக்கை படிக்கும் பொழுது மைக்கை பிடிச்சு ஒடைச்சது, அவரது
சேரைத் தள்ளிவிட்டது, அவர் படிச்சுகிட்டு இருக்கும் பொழுது பேப்பரை
உருவப்பாத்ததுன்னு செம ஹாட்..

ஜெய்பிரகாஷ் நாராயண் அவர்களை ஒரு எம்பியோட டிரைவர்
தலையில் அடிச்சிருக்காரு. அடிடா அவனைன்னு ஏவிவிட்டது
மாண்புமிகு.கேசிஆரோட புத்திரன் கேடிஆர்.
அசெம்பிளிக்கு போகும் ஆளுங்களுக்கே இந்த கதின்னா சும்மா இருக்கும்
மிஸ்டர் பொதுஜனத்துக்கு பாது காப்பு ஏது???
************************************************************
இரயில்வே பட்ஜட் பாத்தேன். ஆஹா!! ஆஹா!! படக் படக்னு
கோவிச்சிக்கினு தீதீ பட்ஜெட் படிச்சது காணக் கண் கொள்ளாக்
காட்சி. கோவத்துல ஸ்கூல் பொண்ணு மாதிரி அவிக படக்னு
உக்காந்து கிட்டது கூட நல்லாத்தான் இருந்துச்சு. எலக்‌ஷன்
வரப்போறதால கட்டணத்தை உயர்த்தாம இருந்தாக. ஆந்திராவுக்கு
நிறைய்ய ட்ரையின் விட்டிருக்காக. எங்க புதுக்கோட்டைக்கும்
மன்னார்குடிக்கும் இடையே ரயில் பாதையை சீரமைச்சு ரயில்
விடப் போறாங்களாம்!! இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தவிர
வேற ஏதாவது ஒரு ட்ரையின் புதுகையிலேர்ந்து சென்னைக்கு
விட்டா புண்ணியமாப்போகும்!!

இன்னைக்கு மத்திய பட்ஜட். பாப்போம் என்ன பண்ணப்போறாங்கன்னு!
ஒழுங்கா வரிகட்டுற மாசச்சம்பளக்காறங்க வயித்துல பால் சொட்டாவது
வார்த்தா சரி. (ரொம்ப நாளா மண்டைய குடையற விஷ்யம் ஒண்ணு
இருக்கு. மாசச் சம்பளக்காரங்க கிட்ட மட்டும் சம்பளத்துலேர்ந்து
வரிக்குன்னு பிடிச்சுகிட்டுத்தான் சம்பளமே தர்றாங்க. ஆனா மத்தவங்க
வரியே கட்டாம ஏய்ச்சு பிட்டு போறாங்களே!! அவிங்கள ஒண்ணுமே
செய்ய முடியாதா!! ஏன்??!!!)
*********************************************************************
என்னக் கொடுமையோ தெரியலை!! புதுமையா இருக்கு.
திடும்னு மேகம் இருட்டுது மழை வர பாக்குதுன்னு நினைக்கும் பொழுதே
அடிச்சு ஊத்துது வானம். மப்பும் மந்தாரமாத்தான் இருக்கு. நடக்கட்டும்.
****************************************************************
ஆரம்பிச்சிருச்சு கிரிக்கெட் திருவிழா. அதுவும் பசங்களுக்கு பரிட்சை
இருக்கும் பொழுதுதான் இந்தத் திருவிழா வரும். இந்த வாட்டியும்
இப்படித்தான். பசங்களை படிக்க விடாம செய்ய என்னன்ன நடக்கணுமோ
அத்தனையும் நாட்டுல நடக்குது. நாமதான் பத்திரமா பாத்துக்கணும்.
*******************************************************************

ஊருக்கு போயிருந்தேன்ல. அங்க நடந்த ஒரு மேட்டரை கட்டாயம்
சொல்லியே ஆகணும். தெரிஞ்சவங்க கூட பேசிக்கிட்டு இருந்தப்ப
இந்த கரண்ட் கட்டால ரொம்ப பிரச்சனை! நமக்கு கரண்ட் இருந்தா
கேபிள் காரனுக்கு கரண்ட் இல்ல! போரடிக்குதுன்னு சொன்னாங்க.

எதுக்கு கஷ்டப்படணும்? பேசாம டிஷ் டீவி வாங்கிப்போடுங்களேன்னு!
சொன்னேன். அதுக்கு அவுங்க என்ன சொல்லியிருப்பாங்கன்னு
நினைக்கறீக!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அட போம்மா! கேபிள்ல புது படம்லாம் போடறான்ல!! அது நீ
சொல்ற டிஷ்ஷுல வராதே!!..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



Wednesday, December 22, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 22/12/10

ஆரம்பிச்சிட்டங்கய்யா!! ஆரம்பிசிட்டாங்கன்னு சொல்வது போல
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்க. அண்ணாத்தே சந்திரபாபு நாயுடு
திடும்னு வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு உண்ணாவிரதம் இருக்கப்
போறேன்னு ஆரம்பிச்சாரு. சரி ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு
விரதம் + உண்ணாவிரதம்னு நினைச்சுகிட்டேன். :))

எனக்கு எப்பவுமே சந்திரபாபு நாயுடு மேல மரியாதை உண்டு.
ஹைதையை ஒரு மெட்ரோ ரேஞ்சுக்கு கொண்டு வந்ததுலயும்,
ஐடி கம்பெனிகள் இன்னைக்கு கொடிகட்டி பறப்பதிலயும்
இவரோட பங்கு நிறைய்யவே. அப்பவே அரசு அலுவலகங்களில்
வெப்கேமரா வெச்சு சாட் செஞ்சு, எங்கும் கணிணி, எதிலும்
கணிணின்னு கொண்டு வந்து தங்கு தடை இல்லாம வேலை
நடக்க வெச்சவர். ஆந்திராவைப்பத்தி அதிகம் தெரிஞ்சிருக்க
வாய்ப்பில்லாத வெளிநாடுகளில் கூட சந்திரபாபு நாயுடு ஊருன்னா
புரிஞ்சக்கூடிய ஒரு செல்வாக்கு அவருக்கு உண்டு.

எலக்‌ஷனில் தோற்க காரணம் விவசாயிகளை அவர் கண்டு
கொள்ளவே இல்லை என்பதுதான். அதனால் இப்ப அந்த
விவசாயிகளின் ஓட்டுக்களுக்காக மழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு அரசு அறிவிச்சது
பத்தாதுன்னு, மேலும் வேணும்னு கோரிக்கை வெச்சு
இந்த உண்ணாவிரதம். குண்டுகட்டா தூக்கிகிட்டு போய்
ஹாஸ்பிடலில் சேர்த்ததற்கப்புறமும் உண்ணாவிரதம்
தொடர்ந்துகிட்டு இருக்கும்பொழுது மத்திய அரசு 400 கோடி
ரூபாய் பட்ஜட் ஒதுக்கியிருப்பதா சொல்லியும் உண்ணாவிரதத்தை
கைவிடலை. இதுக்கு மேலயும் என்னத்த எதிர் பார்க்கிறார்.
இழப்பை ஓரளவுதான் சரிக்கட்ட முடியும். விவாசியகளின்
நிலை பாவமா இருந்தாலும் அரசால எவ்வளவு செய்ய முடியும்?
புரியலை!!

கோயிந்து கொஸ்டின்:

எல்லாம் சரி! ஐயாவை அரெஸ்ட் செஞ்சு ஹாஸ்பிடலில்
சேர்த்தற்கு தெலுகு தம்பிக்கள் கொதிதெழுந்து பஸ்களை
கொழுத்தி, கடை அடைப்பு செய்து வன்முறையில்
ஈடுபட்டார்களே!! இதற்கு நஷ்ட ஈடு யாரு தரப்போறாங்க??
*************************************************************
ஜகன் அண்ணாவும் விஜயவாடாவில் ஒரு லட்சம் பேரை
கூட்டு சேத்துகிட்டு 48 மணிநேர உண்ணாவிரதம் அதுவும் தன்
பிறந்த நாள் அன்னைக்கு ஆரம்பிச்சிருக்காரு. அதுக்கு
வந்து போன ஆளுங்கட்சி எம் எல் ஏக்களுக்கு பரேட்
இருக்குன்னு நினைக்கிறேன். திரும்ப எலக்‌ஷன்
வந்தாலும் வரலாம். சிச்சுவேசனுக்கு தகுந்த பாட்டு
மைண்ட்ல ஓடுது. அது இன்னான்னா,”இராம ஆண்டாலும்
இராவணன் ஆண்டாலும் எனக்கொண்ணும் கவலையில்லை!!”
:(((
**********************************************************

வெங்காயம் விலையேற்றம்!! இதுதான் இப்ப செய்தி.
அதிக பட்சமாக 80ரூபாய் விற்குது.(எங்க ஊர்ல 60)
இன்னும் 3 வாரத்துக்கு இப்படித்தான் இருக்கும்னு மத்திய அரசு சொல்லிட்டாங்க.
இரண்டுகிலோ வெங்காயம் வாங்குவதும் 2 கிராம் வெள்ளி
வாங்குவதும் ஒண்ணாபோச்சே!!

வெங்காயத்தை பத்தி மட்டுமே கவலைப்பட்டுகிட்டு இருப்பவங்களுக்கு
மேலும் ஒரு ஷாக்கிங் ந்யூஸ். பூண்டு கிலோ 340ரூபாய்.
எந்த காய்கறியும் கால்கிலோ 10ரூபாய்தான். சாமானியனின்
நிலை??????
பெட்ரோல் விலை ஏறியாச்சு. ஆட்டோ மினிமம் 12 லேர்ந்து 14.
அப்புறம் ஒவ்வொரு கிலோமிட்டருக்கும் 8ரூபாய். அதனால்
மத்த விலைகளும் ஏறியாச்சு. மாசசம்பளக்காரங்களுக்கு
அதே சம்பளம்தான்!!! பட்ஜட்ல துண்டு இல்ல பெரிய
கோலாபூர் பெட்ஷீட் தான். :(((
***********************************************************
எங்க ஊர்ல இன்னொரு விஷயம். குளிர். குறைந்த பட்சமா
8.9 ஹைதையில். அரக்குவெளியில் 4ஆம். ஹை ஜாலியா
இருக்கு. குளிருக்கு இதமா இழுத்து போத்திக்கினு தூங்கலாம்.
:))) பகலில் கூட தண்ணீர் ஜில் ஜில் ரமாமணியா இருக்கு.
இன்னம் கூட குறையுமாம். ஐ லவ் திஸ் கிளைமேட்.
*********************************************************

20 வயதுலேர்ந்து 30 வயதுக்குள் இருக்குற, ஐடித்துறையில்
வேலை பார்க்கும் கணவன்,மனைவிகள்தான் அதிகமாக
விவாகரத்து கேட்பதா வக்கீல்கள் சொல்லியிருக்காங்க.
தனது துணைக்காக கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியாத
நிலை இருப்பதால சின்ன பிரச்சனையும் பெரிசாகி விவாகரத்து
கேக்கறாங்களாம்!
மத்த கேஸ்களுக்கு நேரங்காலம் பாக்காம வேலை வேலைன்னு
ஓடுவது, கணிணியை கட்டிகிட்டு அழுவது, கர்ணணுக்கு
கவச குண்டலம் போல போனை வெச்சுகிட்டு சுத்துவது
போன்றவை மற்ற காரணங்களாம்.

என் ஹஸ்பண்டாலஜி பாடங்கள் 100% உண்மை!!!
**************************************************

Tuesday, November 02, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 2/11/10

தீபாவளி அவசரத்துல பிரியாணி போட மறந்துட்டேன். :)
இது ஆந்திரா ஷ்பெஷல் பிரியாணி.

நேற்று ஆந்திரபிரதேசத்துக்கு பர்த்டே. (ஆந்திரபிரதேசம்
உருவான நாள்) தெலங்கானா அரசியல் கட்சி காரங்களும்,
எப்பவும் அவங்களுக்கு அல்லக்கையா இருக்கற உஸ்மானியா
மாணவர்களும் கறுப்புக்கொடி குத்தி பந்த், வன்முறை
எல்லாம் செஞ்சாங்க. டீவில ஒரு பக்கம் என்.டி.ஆர்
ஸ்டேடியத்துல முதல்வர் கலந்துகிட்ட நிகழ்ச்சி, இன்னொரு
பக்கம் அடிதடின்னு காட்டிகிட்டு இருந்தாங்க.
கே.சி.ஆரோட பொண்ணு கருப்பு கலர் புறாவை பறக்கவிட்டு
தன்னோட எதிர்ப்பை காட்டினாங்க!!!! இந்தக் கலாட்டாவுக்கு
பயந்து டெல்லி பப்ளிக் பள்ளி ஞாயிற்றுக்கிழமை பள்ளிவெச்சு
நேத்து லீவு விட்டிருந்தாங்க!!! எங்க பிள்ளைங்களுக்கு
நேத்து ஸ்கூல் இருந்துச்சு. காய்கறி வாங்கலாம்னு மார்கெட்
போனேன். ஆஹா.... காத்து வாங்கிகிட்டு இருந்துச்சு
மார்க்கெட். அழகா தேவையான சாமான்களை வாங்கிகிட்டு
வந்திட்டேன்!!!

*******************************************************

”தாங்கமுடியலடா சாமி விருது” அமெரிக்காவாழ் தெலங்கானா
காரங்களுக்கு கொடுக்கலாம்!! நேற்று டீவியில இவங்களையும்
பேசவிட்டாங்க(ச்சும்மா 5 நிமிஷம் தான்) அம்புட்டு பேரும்
கறுப்பு சட்டை போட்டுகிட்டு இருந்தாங்க. அவங்க சொன்ன
மேட்டர்தான் விருதுக்கு பரிந்துரை செய்ய வெச்சுச்சு.

அதாவது தெலங்கானால இருக்குற ஆந்திரா காரங்க எல்லாம்
ஓடிப்போயிடனுமாம்! எங்க வீட்டுக்கே வந்து, எங்க சாப்பாட்டை
சாப்பிட்டுகிட்டு இருக்கீங்க. இதுதான் பிரச்சனை!!! நீங்க
போனாத்தான் எங்களுக்கு விடிவுகாலம் ரேஞ்சுல பேசினாங்க.

மக்களே! நீங்க அமெரிக்காவுல உக்காந்துகிட்டு இப்படி பேசுவதுல
இன்னா நியாயம்பா??? ஒபாமா சீக்கிரம் பத்தி விட்டாருன்னா
அப்பத் தெரியும்?? இந்தப் பாட்டுதான் இப்ப நிலமை!
***********************************************************
தீபாவளிக்கு சட்டம் எல்லாம் போட்டிருக்காங்க. பட்டாசு
வெடிக்கும் நேரம் பத்திதான் சொல்றேன். சுப்ரீம் கோர்ட்
தீர்ப்பு படி இரவு 10 மணிலேர்ந்து அதிகாலை 6 மணிவரை
பட்டாசுக்கு நோவாம். ஆந்திராவுல அதை ரொம்ப அதிகாரப்பூர்வமா
அறிவிச்சு அமுல் படுத்த சொல்லியிருக்காரு எங்க ஊரு
போலீஸ்கார் ஏ.கே.கான். ஆனா இந்த வடநாட்டுக்காரங்க
சிலருக்கு தீவளி அன்னைக்குத்தான் புத்தாண்டு. அவுக
விடிய விடிய... விடிய விடியன்னு பட்டாசு கொளுத்துவாங்க.
அவுகளை எல்லாம் சட்டம் ஒண்ணும் செய்யாது போல!!!
உங்க ஊருல எப்புடி???!!!
********************************************************
இந்த வாட்டி குளிர் சீக்கிரமே ஆரம்பமாகிடிச்சு. தெலங்கானா
பகுதிகளில் இரவு நேர வெப்பம் 19 டிகிரி. :))) மேடக்கில்
ஆரம்பமே 15 டிகிரி. இந்த நிலமைல வடமேற்கு மழைவேற!!!
ச்சும்மா குளிருதுல்ல்லன்னு சொல்லும் நிலமை. குவார்ட்டர்
அடிச்சா மாதிரி இருக்கு வானம். சாயந்திரம் 5 மணிக்கே
கும்மிருட்டா இருக்கு. ஆரம்பமே இப்படின்னு இன்னும் 3 மாசத்தை
எப்படித்தான் ஓட்டப்போறோமோ!!!
*****************************************************
அம்புட்டும் ஆந்திரா மேட்டரா இருக்கேன்னு புலம்பாதிங்கப்பா.
சுவாரசியமான சமாசரம் ஒண்ணு இருக்கு. சென்னைஅம்மாக்கள் அப்படின்னு ஒரு இணையதளம்.
அங்க போய் பாருங்க. நீங்களும் சேர்ந்துக்கலாம். நிறைய்ய
விஷயங்களை பகிர்ந்துக்கலாம். எங்க ஊருக்கும் ஒரு தளம்
இருக்கு. நான் சேர்ந்திட்டேன். உங்க ஊர் பேரைப்போட்டு
கூகுள் ஆண்டவர் கிட்ட கேட்டுப்பாருங்க(eg.mumbaimoms)
கிடைச்சா சேர்ந்து மகிழுங்க. ரொம்ப உபயோகமா இருக்கு
இந்தத்தளம்னு பேப்பர்ல படிச்சேன்.
******************************************************]
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்



Thursday, October 14, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 14/10/10

சானியா மிர்சா, லியாண்டர் ஆகியோர் அதிர்ச்சி தோல்விகளைத்
தந்தாலும் எப்படியோ 3ஆவது இடத்தில் இந்தியா. தங்க, வெள்ளி,
வெண்கல பதக்கங்களை வென்று தலை நிமிரச் செய்த தங்கங்களுக்கு
ஒரு ராயல் சல்யூட்.

************************************************************

எந்திரன் பாத்தாச்சு. ரஜினியின் கெட்டப் பிடிச்சிருந்தது. வில்லன்
ரோபோ மூன்றுமுகம் ரஜினி கெட்டப்பில் சில மாற்றங்களுடன்
பாக்கும் பொழுது நன்றாக இருக்கிறது. ரொம்ப நாளைக்கப்புறம்
ஹீரோ & ஆன்டி ஹீரோவாக ரஜினி. கலக்கித்தான் இருக்கிறார்.
எனக்கென்னவோ ஐஸ்வர்யா ராய்க்கு வயதானது நன்றாகவே
தெரிவது போல் இருக்கிறது!!!! படத்தை பத்தி எல்லோரும்
விமர்சனம் எழுதி முடித்துவிட்டார்கள். ரஜினியின் நடிப்பு
இந்தப் படத்தில் மிகச்சரியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
டெக்னிக்கலாக மிகவும் உழைத்திருக்கிறார்கள்.

***********************************************************
கோன் பனேகா க்ரோர்பதி அமிதாப் அவர்களின் பிறந்தநாள்
அன்று ஆரம்பமானது (11 அக்டோபர்) 68 வயது முடிந்தும்
அந்த ஸ்டைல், அந்த லாவகம் படையப்பா படத்தில் நீலாம்பரி
ரஜினிக்கு சொல்லும் டயலாக் இவருக்கும் பொருந்தும்.
”வயசானாலும் ஸ்டைலும், அழகும் இன்னமும் குறையலை!!”

இந்த முறை கோன் பனேகா கொஞ்சம் வித்தியாசமாகவே
இருக்கு. லைஃப் லைன்களில் மாற்றம், ஜாக்பாட்டாக 5 கோடி
எல்லாவற்றுடன் ரொம்ப ”செண்டியாக” ஷோ இருக்கிறது.
ரியாலிட்டி ஷோக்களில் எனக்கு பிடிக்காதது இதுதான். கேபிஸி
இதற்கு விதிவிலக்காக இருந்தது. இப்ப இங்கயுமா!!! என
நினைக்கத் தோணினாலும் குஜராத்தில் சிறிய கிராமத்திலிருந்து
வந்த பள்ளி ஆசிரியர் 25 லட்சம் ஜெயித்தது சூப்பர்.
***************************************************

கொலை, கொள்ளைகள் அதிகமாகி இருப்பதை தினமும்
செய்தித்தாள்களில் படிக்கிறோம். சமீபகாலமாக கற்பழிப்பு
சம்பவம், சின்ன வயதுப்பிள்ளைகள் பலியாவது என்றும்
படிக்க நேரும்பொழுது மனது வலிக்கிறது. இவற்றுக்கிடையில்
குல கவுரவுத்துக்காக காதலர்களை கொல்லும் பெற்றோர்கள்
எனும் எண்ணிக்கையும் கூடுகிறது!!! ஏன் இந்த நிலை
இறைவா? நண்பர் நர்சிம் கூறியிருப்பது நல்ல தீர்வு!


******************************************************

நவராத்திரி முடியப்போகிறது. அசுரனை அழித்து அன்னை
அனைவரையும் காத்த நந்நாள் விஜயதசமி. நாமும்
நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து நல்ல
எண்ணங்களை வளர்த்து அழகான வாழ்வு வாழவேண்டும்.
அனைவருக்கும் விஜயசதமி/தசரா நந்நாள் வாழ்த்துக்கள்


*****************************************************

Tuesday, October 05, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 05.10.10

எதுலதான் அரசியல் செய்யுறதுன்னு இல்ல. பண்டிகை விடுமுறையில்
கூட அரசியல் செய்வது எப்படின்னு ஆந்திராவுல கத்துக்கலாம்.
தெலங்கானா பகுதிகளில் தீபாவளியைவிடவும் சிறப்பா கொண்டாடப்படுவது
தசராதான். பள்ளிகளுக்கு இப்பதான் 15 நாள் லீவு கிடைக்கும். அரைப்பரிட்சை
லீவுன்னு வெச்சுக்கலாம். இப்ப தெலங்கானா கட்சித்தலைவர்
கே.சீ.ஆரோட பொண்ணு கல்லூரிகளுக்கும் 15 நாள் லீவு கொடுக்கணும்!
எங்க பண்டிகையை கொண்டாட விடாம செய்யறது தப்புன்னு
போர்க்கொடி தூக்கியிருக்காங்க. கல்லூரிகளுக்கு 5 நாள் விடுமுறை
கொடுப்பது போதாதாம். லீவு லீவா விட்டு, போராட்டம் பந்துன்னு
போயிகிட்டு இருக்கற நேரத்துல பெத்தவங்க பிள்ளைங்க படிப்ப
முடிக்குமா முடியாதான்னு பயப்படுவது இவங்களுக்கு எங்க புரியப்போகுது??

*****************************************************************
எம்புட்டு ஊழல் நடந்துச்சோ??!! அமைப்புகளில் என்ன குளருபடியோ?
காமன்வெல்த் விளையாட்டுக்கள் துவங்கியாச்சு. துவக்க விழா
கொஞ்ச நேரம் பார்த்தேன். 120 வகை தாள வாத்தியங்கள் சூப்பர்.
அதுவும் அந்தக் குட்டிப்பையனோட தபலா வாசிப்பு சூப்பர்.
பாராட்டுக்கள் அந்த இளம் கலைஞனுக்கு. எப்படியோ நம் நாட்டின்
பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சி இருந்தது
சந்தோஷம். வெள்ளி, வெங்கல பதக்கங்களோட ஆரம்பித்திருக்கும்
நம் இன்னிங்க்ஸ் தங்கம் வரைக்கும் போக பிரார்த்தனைகள்.
***************************************************************

காமன் வெல்த் விளையாட்டுக்களுக்காக தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை
விட்டாங்க சரி. ஆனா எதற்கு வணிக வளாகங்களை மூடச்சொன்னாங்க.
இந்த 10 நாளும் அவங்க வருமானம்??!!! அதற்கு ஈடா
அரசு ஏதாவது தரப்போகுதா???
**********************************************************
எத்தனைக்காலம் மாறினாலும் பெண் குழந்தைகளுக்கு எதிரா
நடக்கும் அட்டூழியங்கள் மட்டும் மாறாது போல. ஆந்திராவில்
இருக்கும் அனந்தவரம் கிராமத்தில் ஒரு அறிவில்லாத அறிவியல்
ஆசிரியர் தன் வகுப்பு மாணவியை பலமுறை கற்பழிச்சிருக்காரு.
14 வயதான அந்தப் பொண்ணை மிரட்டி வெச்சிருந்ததில்
தன் பெற்றோரிடமும் கூட சொல்லமுடியாத நிலை. இப்ப அந்தப்
பொண்ணு 5 மாச கர்பம்!!! ஆள் அப்ஸ்காண்ட். இதையெல்லாம்
படிக்கும்போது பிள்ளைங்களை பள்ளிக்கு அனுப்பவே பயமாயிடும்!!
கலியுகம் என்பது இதுதானா??? மாதா பிதாவுக்கு அடுத்து
வைத்து போற்றப்படும் ஆசிரியர் நடந்து கொள்ளும் விதம் இதுதானா??

பள்ளிப்பருவத்திலேயே ஆண்குழந்தைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து
பெண்ணைப் போதைப்பொருளாக பார்க்கும் மனோபாவத்தை
மாற்ற அரசு கட்டாய சட்டம் போட்டால் என்ன? தொடர்ச்சியான கவுன்சிலிங்
நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.
**********************************************************
போதும் போதுமென நினைக்கும் அளவுக்கு இந்த வருடம்
மழை அதிகமாகவே இருந்தது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு
இந்த அளவுக்கு மழை பெய்திருக்கிறதாம். அது முடிஞ்சு இப்ப
வெயில் பிரிச்சு மேயுது!!!! 33 டிகிரி.... சரி இந்த ஆட்டம்
இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே!!! அப்புறம் ஊருக்கே
ஏசி போட்டாப்ல குளிர் காலம் வரப்போகுதே!! ஆஹா அதிகாலை
பனி!!! 10 மணி வெயில் கூட சூடே இல்லாமல் உனக்கையாக
இருக்கும்!!! மீ த வெயிட்டிங்!!!
***********************************************************
எந்திரன் படம் வந்தாச்சு. இன்னும் பாக்கலை. இங்க ஹவுஸ்புல்லாத்தான்
ஓடிகிட்டு இருக்கு. இங்க ஹிந்தி வர்ஷன், தெலுங்கு டப்பிங்,
தமிழ்ல எல்லாமே ஹவுஸ்புல்தான். ஆனா ஆரம்பவிழா
அன்னைக்கு 4000 லிட்டர் பாலபிஷேகம் எல்லாம் ரொம்பவே
ஓவரா இருந்துச்சு. முன்னாடியே தடுத்து நிறுத்திருந்திருக்கலாம்.
அதுக்கு பதிலா ஏழைகளுக்கு அன்னதானம் செஞ்சிருந்தாலும்
புண்ணியமா போயிருந்திருக்கும்!! என் ஆதங்கத்தைச் சொன்னேன்
அம்புட்டுதான்.
*****************************************************

Monday, September 06, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி 6/9/10

ஹைதைக்கு இன்னொரு புகழ் கிடைத்திருக்கிறது. ஹைதை
ஷ்பெஷல் ஹலீம்க்கு இப்பொழுது உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
ரம்ஜான் நேரத்தில் “ஹலீம்” எனப்படும் ஷ்பெஷல் உணவு தயார்
செய்யப்படும். ஹைதையில் கிடைக்கும் எத்தனையோ ஷ்பெஷல்
உணவுகளில் ஹலீமுக்குத்தான் முதல் முறையாக GI (geographical indication)
அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. திருப்பதி லட்டு, டார்ஜிலிங் டீ, கோவா ஃபினி,
பனாராஸ் பட்டு வரிசையில் இனி ஹைதை ஹலீமூம். ஹலீம் தயாரிப்பாளர்கள்
சங்கத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

***********************************************************

சென்ற வருடம் மழையே பெய்யாமல் வரண்ட மாநிலமாக
அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் பேய் மழை பெய்து புயல்,
வெள்ளம். ஆனால் இந்த வருடம் உல்டா. ஆரம்பம் முதலே
சரி மழை. புயல், வெள்ளத்தால் பாதிப்பு. பல இடங்களில்
விளைச்சல் பாதிப்பாம். பெஞ்சாலும் கஷ்டம், காஞ்சாலும்
கஷ்டம்!!! வாழ்க்கை ரொம்ப குஷ்டமப்பா!!!!!
******************************************************

தாத்தாவுக்குப் போனை போட்டு வாங்க வாங்கன்னு சொல்லிக்கிட்டு
இருந்தாங்க பசங்க. அவங்க தாத்தா, அம்மம்மா மட்டுமில்லாம
எங்க அம்மம்மா, தாத்தா, மாமா வந்ததுல இரண்டு பேருக்கும்
செம குஷி. ஒரே கொஞ்சல்ஸ்தான். அவங்கள்லாம் ஊருக்கு
போனதும் இப்ப எங்க அப்பா அம்மாவை விடலை. ஸ்கூலுக்கு
போயிட்டு வர்ற நேரம் தப்ப மிச்ச நேரமெல்லாம் தாத்தா, அம்மம்மா
கழுத்தை கட்டிகிட்டு கிடக்கறாங்க. மெத்தயை கொண்டு வந்து
கீழே ஹாலில் போட்டுகிட்டு அம்மம்மா, தாத்தகூடத்தான்
படுப்பதும். அடுத்த வாரம் ஊருக்கு போறாங்க. டிக்கெட்டை
கேன்சல் செஞ்சிடுங்க!!!ன்னு புலம்ப ஆரம்பிச்சாச்சு.
அவங்க ஊருக்கு போனதுக்கப்புறம் கந்தன் தான் என்னை
காப்பாத்தணும்!!!!

************************************************************
பட்டாலும் சிலருக்கு புத்தி வராது. அந்த லிஸ்ட்ல உஸ்மானியா
பல்கலைக்கழக மாணவர்களும் இருக்காங்க. தாமதமான ரிஸல்ட்ஸ்,
அதனால தாமதமாகும் பட்டமளிப்பு, ஸ்ட்ரைக்கால வேலை
கிடைக்க கஷ்டம்னு அவங்க நிலை இருந்தாலும், திரும்பவும்
தெலுங்கானா பிரச்சனையை கிளப்பிக்கிட்டு இருக்காங்க.
இந்தப் பசங்களை வெச்சு அரசியல் நடத்தியாவாது தன்
செல்வாக்கை அந்தக் கட்சி காட்டிக்கணுமா??? இவர்களின்
வாழ்க்கையை காவு வாங்கி வாழத் துடிப்பது நியாயமா???
சொல்லுங்க நல்லவங்களே!!! வருங்காலத் தூண்களின்
எதிர்காலத்தை சிதச்சிட்டு அதன்மேலேயா ஒரு மாநிலத்தை
உருவாக்கப்போறீங்க!???!!!!
***************************************************
ஆரம்பமாகப்போகிறது விநாயகச்சதுர்த்தி. பெரிய பெரிய
உருவத்தில் பிள்ளையார் பார்க்கலாம். வைசாக்கில் ஒரு
ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் ஹைதை கைரதாபாத்தில்
செய்யப்படும் பெரிய பிள்ளையாருக்காக மிகப்பெரிய
சைஸில் லட்டு ஒன்றை செஞ்சு ஷ்பெஷல் வண்டியில்
அனுப்பி வைக்கப்போறாராம். அதற்காக 50 கிலோ சர்க்கரை,
25 கிலோ நெய் அப்படின்னு படிச்சேன். ஆனந்த
விநாயகர் ஆனந்தமா எல்லாரையும் வெச்சுக்கட்டும்.
***************************************************

Sunday, June 13, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி- 13.6.10

”ரெடி” அப்படின்னு ஒரு தெலுங்குப்படம். ஃபேமலி மூவி.
நம்ம நாசர்கூட அதுல நடிச்சிருக்காங்க.கதையும் கொஞ்சம்
வித்தியாசமா நல்லா இருக்கும். நகைச்சுவை ப்ரம்மா
ப்ரம்மானந்தம் அவர்களின் காமெடி கலக்கலா இருக்கும்.

இந்தப் படம் தமிழ்ல வரப்போகுதாம். விஜய்க்கு அடுத்து
தெலுங்குப்படங்களின் ரீமேக்குகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும்
தனுஷ் தான் ஹீரோ. ஹீரோயின் ஜெனீலியா(தெலுங்கிலும்
இவர்தான்). ப்ரம்மானந்தம் கேரக்டரை விவேக்
செய்யறார். படம் எப்படி வரப்போகுதோ!!!??!!

நல்ல கதையம்சம், நல்ல நடிகர்களாக போட்டு
நல்ல குடும்ப படத்தை கொடுங்கப்பா!

*********************************************
தி நகர் கடைகளுக்கு போகணும்னாலே கடுப்பா
இருக்கும். அயித்தான்  வரவே மாட்டாங்க.
அதுவும் ரெங்கநாதன் தெரு கடைகளுக்கு
நோ நோ தான்.  பாண்டிபஜார், உஸ்மான்
ரோடு கடைகள்னா ஓகே சொல்வார்.

ரெங்கநாதன் தெருவில் இருக்கும் ஜவுளி
மாளிகைகளுக்குப் போயிருக்கிறேன்.
விற்பனை பிரிவில் இருக்கும் பெண்களும்
சரி ஆண்களும் சரி ஒரு வித கடுப்பாவே
இருப்பாங்க. நாம இலவசமா வாங்க வரலை,
காசு கொடுத்துதானே வாங்கப்போறோம்,
இப்படி நடந்துகிட்டா எப்படின்னு?
அதனாலே அங்கே போவதை விட்டுவிட்டேன்.

ஆனா அந்த கடு கடுப்பான முகத்துக்கு பின்னாடி
இருக்கும் நிஜம் “அங்காடித் தெரு” பாத்து
புரிஞ்சிக்கிட்டேன். அந்த மாதிரி சோறு,
தங்கும் இடம் கொடுத்து மாட்டை கொட்டகையில்
அடைக்கிறா மாதிரிதான் அந்த பசங்களின்
வாழ்வு இருக்குதுன்னா அந்த பசங்க
கஸ்டமர்கள் கிட்ட கஷ்டமத்தான் நடந்துக்குவாங்க!!
*****************************************************

சனிக்கிழமை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்
மயிரிழையில் தப்பிச்சிச்சு. விக்ரவாண்டிகிட்ட
குண்டு வெச்சு தண்டவாளத்தை பேத்துட்டாங்க.
காரணம் ராஜபக்சே இந்தியா வந்ததாம்!
அவர் வந்த வண்டி இல்ல அவரு இருக்கற
இடத்துல வெச்சிருந்தா கூட ஏதோ நியாயம்னு
சொல்லலாம். அநியாயமா 2000 உயிர் போயிருக்கும்ல!!
ஏன் இந்த மர்டர் வெறி!!!
*****************************************************
பஸ்ல போனா அடிச்சு நொறுக்கறாங்க, எரிக்கறாங்க!
ரயில்ல போனா குண்டு பயம், திருடர் பயம்,
ஹி ஹி !! ஃப்ளைட்ல போனா!!! சொல்லவே
வேணாம். சென்ற வாரம் சென்னை போயிருந்தார்
அயித்தான். ஹைதையில் புறப்பட்டதிலிருந்து
சென்னை வரை ஏரோப்ளேன் ஏதோ தண்ணி
போட்டாமாதிரி டான்ஸாம். லாண்டிங் வேற
சரியில்லையாம்!( பைலட்டுகள் “ தாகசாந்தி”
செஞ்சுகிட்டுத்தான் வண்டி ஓட்டறாங்களாமே!
நிசமாவா!அவ்வ்வ்வ்வ்வ்) ரோட்ல நடந்து போறது
கூட பிரச்சனையாகிடிச்சு. நாம வாட்டுக்கு
ஓரமா போனாக்கூட அடிச்சு தள்ளிட்டு போயிடுது
வண்டி.

எங்கயும் போகாம வீட்டோட இருக்கலாம்னு
நினைக்கறீங்களா! ஹை ஹை அதெப்படி
அங்கயும் வெக்கறாங்கள்ல ஆப்பு. நேத்து
டீவி 9 சேனல்ல பாத்ததும் கலவரமாகிடிச்சு.

இந்த செல்போன்களுக்காக ஒவ்வொரு வீட்டுகள்லயும்
டவர் வெச்சுக்க அனுமதி தர்றாங்கள்ள அதுலேர்ந்து
வர்ற ரேடியேஷன் வீட்டுக்குள் இருந்தாலும் தாக்கி
விநோதமான நோய்களை வரவைக்குதாம்.

ஹைதையில் எங்கேயும் சேஃப்டி இல்லையாம்!
எல்லாம் ரேடியேஷன் மயம். தொலி சவுக்கி
அப்படிங்கற இடத்துல 4000த்துக்கு அதிகமா
பாயிண்ட் காட்டுது.

உங்க ஊர்ல யாரானும் இப்படி கண்டுபிடிச்சிருக்காங்களா?
**********************************************************

எப்பவும் டீவீ சீரியல்களில் மாமியார் மருமக குடுமிபிடி
சண்ட, ஓடிப்போன புருஷன் அப்படி இப்படின்னு நாராசமாவே
காட்டுவாங்க. டயாலக்கும் அப்படித்தான். ஆனா செம
ஆச்சரியம். வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு சேனல்
மாத்திகிட்டு இருந்தேன். சன் டீவில ஒரு சீரியல்.
கார் பெட்ரோல் பங்குல வந்து நிக்குது. உடனே கார்ல
இருக்கற அம்மா மொபைலை ஆஃப் செய்யறாங்க.
“நீங்க பேசுங்கம்மா!” அப்படின்னு டிரைவர் சொல்ல
”ரூல்ஸ்னா ரூல்ஸ்தான், பெட்ரோல் பங்குல மொபைலில்
பேசினா ஆபத்துன்னா நாம பேசக்கூடாதுன்னு”அந்தம்மா
சொல்றாமாதிரி காட்டியிருந்தாங்க.
நம்ம ஊரு சேனல்தானா இது!!????

****************************************************






Thursday, April 29, 2010

ஹைதை ஆவக்காய பிரியாணி - 29/4/10

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்
பொன் மாதிரி சானியா கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி
பின்னாடியும் சரி பரபரப்பு நியூஸ்தான். கல்யாணம் ஆகி
ஊருக்கு போய் இறங்கியிருக்காங்க இரண்டு பேரும்.
ரசிகர்கள் கூட்டம் மொய்ச்சு எடுத்து சானியாவை தொட
முயன்றார்களாலாம். போலீஸால கூட கட்டுப்படுத்த
முடியாம திண்டாடி போனாங்களாம்.

இப்படி “டச்சிங்” வரவேற்பு கொடுத்திட்டாங்களேன்னு
அம்மையார் ஒரே புலம்பல்ஸாம்.
*****************************************
நம்ம ஊர்ல கண்ட எடத்துலயும் கரெண்ட் எடுத்து
ஜகஜ்ஜோதியா விளக்கு வெச்சு அநியாயம் செய்வாங்க.
ஆனா அதை யாரும் தடுக்க மாட்டாங்க. ஆடம்பர
விளக்குகள் இல்லாம எளிமையா எந்த விழாவும்
நடக்காது. மைக் செட் அது இதுன்னு கரெண்ட்
கன்னாபின்னான்னு உபயோகப்படுத்துவாங்க.
அதுவும் அநாவசியாமா தனது டாம்பீகத்தைக்
காட்டிக்கத்தான்.

நம்ம பக்கத்து நாடான பாகிஸ்தானில் சோயப்மாலிக்
சானியா திருமண வரவேற்பில் போடப்பட்டிருந்த
அலங்கார விளக்குகளை எடுக்கச் சொல்லிட்டாங்களாம்.
”எனர்ஜீ சேவிங்”அப்படின்னு அரசு அறிவிச்சு
இருக்கும் இந்த வேளையில் இப்படி செஞ்சா அது
தப்புன்னு சொல்லி அலங்கார விளக்குகளை
எடுக்க வெச்சாங்க. சோயப்போட மச்சான்
எவ்வளவோ கெஞ்சி பாத்தும் முடியாதுன்னு
சொல்லிட்டங்களாம். கோவத்தோட அவங்க
அலங்கார விளக்குகளை எடுத்ததா படிச்சேன்.

நம்ம நாட்டுல இது சாத்தியமா!!???

***********************************************

ஆந்திராவில் முதல்வர் ரோசய்யா ஒரு சட்டம்
கொண்டுவந்திருக்காரு. அது வணிக வளாகங்களுக்கு
மின் கட்டணம் அதிகரிப்பு. 10 மணியிலேர்ந்து
இரண்டு மணிவரை அதிகமா தேவையில்லாம
மின் உபயோகம் செய்வது இவங்க. அதனால்
மின் கட்டணம் உயர்த்தப்படுதுன்னு சொல்லியிருக்காங்க.
அலங்கார விளக்குகள், அதுஇதுன்னு இங்கயும்
கரெண்ட் அதிகமாத்தான உபயோகிக்கறாங்க.

அங்க ஏத்தினாங்க சரி, அதை சரிக்கட்ட நமக்கு
கடைக்காரங்க நமக்கு பில் ஏத்திடுவாங்களே....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*************************************************

ஏதோ எடுத்துக்குடுக்கச் சொன்னதுக்கு அயித்தான்
”வயசான காலத்துல என்னைய ஏன் வேலை வாங்கற”!
அப்படின்னு சொன்னாரு. “நீங்க யங்காத்தான் இருக்கீங்க,
எனக்குத்தான் வயசாயிடிச்சுன்னு”நான் சொல்ல உடனே
அம்ருதம்மா “இது எந்த ஊரு நியாயம். எந்த பஞ்சாயத்துலயும்
செல்லாது. அப்பா யங்குன்னா நீங்களும் யங்கு” அப்படின்னு
கமெண்ட் அடிச்சாங்க.

உடனே அப்பாவுக்கு செம சந்தோஷம். முகமெல்லாம் பூரிப்பு.
ஆஷிஷ் அண்ணா,”எனக்கு இந்த அளவுக்கு பேசும் தெளிவு
இருந்தா நல்லது!” அப்படின்னு சொன்னாங்க.

பொம்பிளை பசங்களுக்கு மெச்சூரிட்டி சீக்கிரம் வந்திடுத்துன்னு
சும்மாவா சொன்னாங்க.
**************************************************

ஆண்டவனோட படைப்புல ஆணும் பெண்ணும் சரிசமம்,
அது இது பெண்ணீயம் எல்லாம் பேசுவோம். ஆனா
உண்மையில் பாத்தா இருவருக்கும் பயங்கர வித்தியாசம்.
பெண்ணைவிட ஆணுக்கு கலோரிகள் அதிகமாக இருக்கணும்.
உடல் எடையிலேர்ந்து எல்லாமே வேற வேற.

சில ரங்கமணிகள் ”என் தங்க்ஸ் எப்பவும் தூங்கிகிட்டே
இருப்பாங்க. எவ்வளவு தூங்கினாலும் பத்தலைன்னு
சொல்வாங்க” அப்படின்னு ஒரே புலம்பல்ஸ்.

இனி அப்படி புலம்பாதீங்க ரங்கமணிகளே. ஏன் சொல்றேன்
தெரியுமா பெண்களுக்கு தூக்கம் அதிகமாத்தான் தேவை.
மல்ட்டி டாஸ்கிங் என்பது பெண்களுக்கு கைவந்த கலை.
அந்த மாதிரி கலைக்கு அவங்க மூளை அதிகமாக வேலை
செய்வதனால அவங்களுக்கு ஓய்வும் அதிகமா தேவை.
அதனால அடுத்த வாட்டி உங்க தங்க்ஸ் தூங்கினா தூங்கட்டும்னு
விடுங்க. அந்த ஓய்வு அவங்களை அதிக வேலை செய்ய
உதவும்.

********************************************

போன மாசம் லீவுக்கும் பசங்களை எங்கயும்
கூட்டிகிட்டு போகலை. இப்பவும் 2 மாசம் லீவு.
அதனால் இன்னைக்கு சாயந்திரம் கூ சுகு சுகுன்னு
மீ த டாடா கோயிங். 1 வாரத்துக்கு கடைகு
லீவு. யாரும் அழக்கூடாது.அழாம நல்ல பிள்ளையா இருங்க.
வெயில்ல சுத்தாமா நுங்கு, இளநின்னு சத்தா
குடிங்க. கூல் ட்ரிங்க்ஸ் வேண்டாம்.
பை பை