Showing posts with label பயண அனுபவம்-13. Show all posts
Showing posts with label பயண அனுபவம்-13. Show all posts

Friday, June 21, 2013

பாங்காக்கிற்கும் பாற்கடலுக்கு என்ன சம்பந்தம்??!!!!

4 மணிக்கே செக் அவுட் செஞ்சு கிளம்பியாச்சு. மறக்காம முன்னாகிட்ட போய் ஆலு பராத்தாவை எங்க டப்பாவில் போட்டு கொடுக்க சொல்லி எடுத்துக்கிட்டோம்.  எங்க ஹோட்டலுக்கு எதிரில் இருந்த ஹோட்டலில் இருந்து இரண்டு இந்தியர்களை பிக் அப் செஞ்சாங்க. அவங்க ரெண்டு பெரிய்ய டீவி (ஒவ்வொருத்தரும் அங்கேயிருந்து டீவிதான் கொண்டாந்தங்க. எதுவும் வேணாம்னு நாங்க முதல்லயே முடிவு செஞ்சிருந்தோம்)

அந்த டீவியை ஏர்போர்ட் எடுத்துகிட்டு போகணும்னா இம்புட்டு காசு கூட கொடுக்கணும்னு டிரைவர் பேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. ஏதோ ஒரு தொகைக்கு பேரம் படிஞ்சு வண்டியில ஏத்திக்கிட்டு கிளம்பினார்.

பாங்காக்கிலிருந்து சுவர்ணபூமி ஏர்போர்ட் 1 மணிநேரப் பயணம் தான்.
அதுலயும் நம்ம ட்ரைவர் சுங்க வரி செலுத்தி இன்னும் சீக்கிரமா கொண்டாந்து தள்ளிட்டாரு. (ஏறினது தான் தெரியும் நல்ல உறக்கம் எங்களுக்கு!!)





பத்துமணி ப்ளைட்டுக்கு 5 மணியே வந்தா செக்கின் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சரின்னு கொஞ்ச நேரம் அங்கயே உட்கார்ந்து சுத்திக்கிட்டு இருந்தோம். 6.30 வாக்குல முடியலடா வாங்கிக்கங்கன்னு சொன்னதுக்கப்புறம் லக்கேஜை வாங்கி கிட்டு செக்கின் செஞ்சாங்க.




இமிகிரேஷன் முடிச்சு வந்தா பாற்கடல் கடைவதி பெருசா செஞ்சு நடு நயமா வெச்சிருக்காங்க.







தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைஞ்சது அதை தாங்கி விஷ்ணு கூர்மாவதாரம் எடுத்தது நம்ம ஊர் இதிகாச கதைகள் இருக்கு. அதற்கு நம்ம ஊர்ல எந்த சிலையையும் காணோம். ஆனா பாருங்க பாங்காக் ஏர்போர்ட்ல அசத்தலா வெச்சிருக்காங்க. நம்ம இந்து மத தெய்வங்களை அங்கேயும் வழி படறாங்க. பிக்னேஷ் (விக்னேஷ் தான்), உமா (பார்வதி) லட்சுமி, இந்திரன்,
 சிவா, விஷ்ணு போன்ற தெய்வங்களின் உருவச்சிலைகளை பார்த்திருக்கிறேன். மாரியம்மன் கோவில் ஒண்ணு இங்க ரொம்ப பிரசித்தமாம்.

மந்தாரமலையை கடைந்தது ரொம்ப அற்புதமா சிலையா வடிச்சு இருந்தற்கு
 பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துக்கிட்டோம்.  நாங்க ரொம்ப சீக்கிரமே செக்கின் ஆனதால எந்த கேட்டில் ஏறணும்னு தெரியவே இல்லை.  நம்ம ட்யூட்டி ஃப்ரீ பொருட்களை வாங்கணுமேன்னு அதற்கான இடத்தை தேடி கண்டு பிடிக்க முடியாமல் அங்கே இருந்தவங்களை கேட்க கைக்காட்டின இடத்துக்கு போனா, சார் உங்க விமானம் இந்த கேட்டுகளில் இல்லாததால, அந்த சைட் இருக்கும் எங்களுடைய கடையில் வாங்கிக்கங்னு சொன்னாப்ல.

அதாவாது பாலாழி கடைஞ்சுகிட்டது நடு செண்டர்னு வெச்சுக்கிட்டா இந்தப்பக்கம், அந்தப்பக்கம் கேட்டுகள். நமக்கு பாலாழிக்கு அந்தப்பக்கம். அம்புட்டு தூரம் நடக்கணும்னு நினைச்சாலே கால் வலிக்குது.  வேற வழியில்லைன்னு நடந்தோம். ஒரு இடத்துல உட்கார்ந்திட்டோம். அயித்தான் போய் கவுண்டரில் சாமான்களை வாங்கியாந்தாரு.

ஏர்போர்ட்ல இண்டர்னெட் ஃப்ரீயா உபயோகிக்க பாஸ்வோர்டு கொடுத்திருந்தாங்க. 1 மணிநேரம் தான் ஃப்ரீ. அத வெச்சு வாட்ஸ் அப்ல மெசெஜ் அனுப்பிக்கிட்டு இருந்தோம். மெயில் செக்கினோம்.

8 மணி வாக்குல கொண்டு போயிருந்த பராத்தாவை சாப்பிட்டு பசியாறினோம்.
நம்ம கேட்கிட்ட போகலாம்னு முடிவு செஞ்சோம். கீழே இறங்கணும் எங்க கேட்டிற்கு. அங்கே போனா அந்த இடமே ஏதோ லவுஞ் மாதிரி அழகா இருந்தது. ஸ்மோக்கிங் ரூம் தனியா இருந்தது, அங்கே சர்வ சாதாரணமா மகளீரும் இடம் பிடிச்சு தம் அடிச்சுக்கிட்டு இருந்தாங்க.

போடிங்கிற்கு ஆயத்தமானோம். ப்ளைட்டில் ஏறி உட்கார்ந்தாச்சு. வரும்போது ஃபுல்லா இருந்த ஃப்ளைட்டை பார்த்திட்டு இப்ப காலியா இருக்கும் ஃப்ளைட்ட பாத்திட்டு ஆஷிஷ் அடிச்ச கமெண்ட், “ திரும்பி வர யாருக்கும் மனசு இல்லியோ!!!” ஃப்ளைட்டில் போனால் அப்பாவும் மகளையும் சேர்த்துவிட்டுட்டு, நானும் ஆஷிஷும் உட்கார்ந்துப்போம். மகளை ஹேண்டில் செய்ய அப்பாதான் சரி. (இந்த வாட்டி டேக் ஆஃப் லேண்டிங் ப்ராப்ளம் இல்லாம அம்மா வந்தாங்க என்பது கூடுதல் மகிழ்ச்சி விஷயம் )

அர்த்த ராத்திரிக்கு சாப்பாடு கொடுத்தாங்க. சுடச்சுட தாய் ரைஸ், காய்கறிகள்னு. ஆனா ஏனோ கேக் நல்லாவே இல்லை. டீ, காபி ஏதுவும் வேணாம்னு சொல்லிட்டு ப்ளைண்ட் ஃபோல்ட் மட்டும் கேட்டு வாங்கிகிட்டேன். சால்வை ஏற்கனவே சீட்டில் இருந்தது. ஆஷிஷ் பக்கத்தில் காலியா இருந்த 4 சீட்டில் போய் நல்லா படுத்து தூங்கினாப்ல.

நானும் 1 மணிநேரம் தூங்கியிருப்பேன். ஏரியல் வ்யூ பாக்கணும்னு முழிச்சு பாத்தேன். ஹைதையும் நல்லாத்தான் இருக்கு. :))  தாய்லாந்தில் ஸ்மூத்தா லாண்டிங் செஞ்சாங்க இந்தியாவில் கொஞ்சம் தடால்னு தான் போட்டாங்க அதே தாய் ஏர்வேஸ் காரங்க தான். கொஞ்சம் சீக்கிரமாவே வந்திட்டாங்க.


வெளியே வந்து டாக்சி பிடிச்சு வீடு வந்து சேரும்பொழுது மணி 2.30.
ஹோம் ஸ்வீட் ஹோம் :))

Thursday, June 20, 2013

கிங் பவர்!!!!!

ஆச்சு, இன்னைக்கு நைட் இந்தியா திரும்பணும். அதனால எங்கயும் போகாம நல்லா ரெஸ்ட் எடுக்க திட்டம் போட்டிருந்தோம். பேக்கிங் செய்யும் போது அயித்தான் ஏர்போர்ட்ல எடுத்த பெம்ப்ளர் ஒண்ணு கையில சிக்கிச்சு. அங்க போய் பாக்கலாம்னு அயித்தான் சொன்னாரு!!!

ரொம்ப அலைய வேணாம்னு இருக்குன்னு சொல்ல, பசங்களும் இதுக்கு மட்டும் போய் பாக்கலாம்னு சொன்னாங்க. ட்யூட்டி ஃப்ரி ஷாப் தான்.
ஏர்போர்ட்ல போயி பார்த்துக்கலாமேன்னு சொன்னேன். இம்மாம் பெரிய இடம் என்னென்ன இருக்குன்னு பார்க்கலாம்னு சொல்ல சரின்னு ரெடியானேன்.


kings power down town duty free shop அவங்களுக்கு போன் செஞ்சு நம்ம ஹோட்டல் அட்ரஸ் பேரு சொல்லணும். அவங்க நம்ம ஹோட்டலில் செக் செஞ்சுக்கறாங்க. வெளிநாட்டினருக்கு மட்டும்தான் இந்த சேவை. அவங்களே வந்து பிக் அப் செஞ்சுக்கறாங்க.  போன் செஞ்ச பத்தாவது நிமிஷம் நாங்க லாபியில். லாபிக்கு வந்துகிட்டு இருக்கும்பொழுதே கிங் பவர் வேன் வந்து எங்க ஹோட்டல் முன்னாடி நின்னுச்சு. அந்த ட்ரைவர் ஹோட்டல்காரங்க கிட செக் செஞ்சுகிட்டு எங்களை அழைச்சு போனார்.

நம்ம பாஸ்போர்ட், ஃப்ளைட் டிக்கெட் ரெண்டும் கட்டாயம் கைல இருக்கணும்.
10% டிஸ்கவுண்ட் வேற தர்றாங்க.





12000 சதுர அடியில் பெரிய்ய கட்டிடம். ரெண்டடுக்கு மாடியில் மொத்தம் பல்வேறு ட்யூட்டி ஃப்ரீட் ஐட்டங்கள்.




ட்ரைவர் உள்ளே அழைச்சுக்கிட்டு போய் கவுண்டரில் சொன்னதும் அவங்க நம்ம பாஸ்போர்ட், ஃப்ளைட் டிக்கட் பாத்து ரெஜிஸ்டர் செஞ்சுக்கிட்டு ஒரு கூப்பன் தர்றாங்க. (பசங்களுக்கு கிடையாது)

ஃபர்ப்யூம், சாக்லெட்கள், உடை, பெட்டிகள்னு நிறைய்ய அயிட்டங்கள்.  தாய் ஜாஸ்மின் ரைஸ் 1/2 கிலோ 100 தாய்பட். நம்ம ஊர் காசுக்கு 180 ரூவா!!!! சும்மா டேஸ்ட் செய்வோம்னு 1/2 கிலோ பாக்கெட் எடுத்துகிட்டேன். :)


தாய் மசாஜ் நாமே செஞ்சுக்கலாம்னு இந்த மூட்டையை வாங்கினேன். இது ஹெர்பல் மூட்டை. இதன் மேலே தண்ணி தெளிச்சு அவன்ல வெச்சு 20 செகண்ட்ல எடுத்தா நல்லா சூடாயிருக்கும். அதை ஒத்தடம் கொடுக்கறா மாதிரி செஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்னு டெமோ செஞ்சவங்க சொன்னாங்க. நல்லாத்தானே இருக்குன்னு வாங்கினேன். ரொம்ப யூஸ்ஃபுல்.

பசங்க விருப்பபட்ட சாக்லெட்டுகள் வாங்கினாங்க.  இங்கயே vat refund counterம் இருக்கு.  மொத்த பில்லிங் ஒரே பேர்ல சேர்த்து இவ்ளவு ஆகியிருக்கணும்னு என்னன்னவோ சொன்னாங்க. அட போங்கயான்னு வந்திட்டோம். 180 ரூவா போகும் போனா போகுதுன்னு. (ரெண்டு பாஸ்போர்டல்யும் பில் செஞ்சிருந்ததால ரெண்டு பில்)


அரோமா ஆயில்கள்,  நெயில் பாலிஷ்கள்னு நிறைய்ய இருந்தது. நெயில் பாலிஷ் கவுண்டர் பார்த்ததும் தான் அம்ருதம்மாவுக்கு ஞாபகம் வந்தது. இருக்கான்னு தேடினோம்.  வேற ஒண்ணுமில்லை. அது base coat & top coat.
base coat போட்டு கொஞ்சம் காய்ஞ்சதும் போட வேண்டிய நெயில் பாலிஷை போட்டு அது காய்ஞ்சதும் top coat. போட்டா பாலிஷ் சீக்கிரமே உரியாது.  நம்ம நாட்டுல பெரிய்ய பெரிய்ய கடைகளில் கூட இது கிடைக்கலை. அயித்தான் இலங்கை போனபோது பேஸ்கோட் கிடைச்சதுன்னு கொண்டாந்தங்க. டாப் கோட் அப்போ அங்கே ஸ்டாக் இல்லை. அது இங்க இருக்கான்னு பாத்தோம். இருந்தது ஒரு பாட்டில் எடுத்துக்கிட்டோம்.


வேற எதுவும் பெருசா வாங்கலை. தாய் சாக்லெட்கள் வாங்கினோம். மணி 1 ஆகிடிச்சு. ட்யர்டாவும் இருக்க பில்லிங் கவுண்டர் போனோம். சில பொருட்களை, (சாக்லெட், நெயில் கோட்) ஆகியவற்றை நீங்க ஏர்போர்ட்ல பிக் அப் செஞ்சுக்கங்கன்னு சொல்லி எழுதி கொடுத்திருந்தாங்க. அதுவும் சரிதான்னு வெளிய வந்தோம். வெயில் சுட்டெரிச்சுக்கிட்டு இருந்தது. ஹோட்டல்லேர்ந்து பிக் அப் செய்யறாங்க, ட்ராப்பும் செஞ்சா நல்லா இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

எதிர்ல ஒரு டுக்டுக் காரர் வந்தாரு. எங்க போகணும்னு கேட்க ஹோட்டலுக்குன்னு சொன்னோம். ஹோட்டலில் ட்ராப் பண்றது இல்லை. பக்கத்துல இருக்கற ரயில்வே ஷ்டேஷன்ல இறக்கட்டுமான்னு கேட்க, எங்களை மெயின்ரோட்ல இறக்கினா போதும் டாக்ஸி பிடிச்சு போயிடுவோம்னு சொல்ல இறக்கிவிட்டாரு. இறங்கி எவ்ளவு கொடுக்கணும்னு கேட்க இது ஃப்ரி சர்வீஸ்னு சொன்னாரு.

பேங்காக்கில் டாக்சி ட்ரைவர்களை வெஞ்சுகிட்டே இருந்தேன்ல, அதனால சாமி கருணை புரிஞ்சு ஒரு நல்ல ட்ரைவர் அன்னைக்கு அனுப்பியிருந்தாரு. :)
போக வேண்டிய இடத்தை சொன்னதும் ஏறுங்கன்னு மீட்டர் போட்டாரு. எங்களுக்கு செம ஷாக். ரொம்ப நல்ல மனுஷரா இருந்தாரு. அவர் கார் முழுக்க க்ரோஷாவால டிசைன் செஞ்சு இருந்ததை காட்டி வாங்கினதான்னு  கேட்க, இல்லை என் மனைவி செஞ்சு கொடுத்தாங்கன்னு மகிழ்ச்சியா சொன்னாரு.

போட்டோ எடுக்கட்டுமான்னு கேட்க சந்தோஷமா தலையாட்டினாரு. எவ்ளோ அழகா இருக்கு பாருங்க.

மதிய உணவுக்கு ஏசியன் ரெஸ்டாரண்டில் இறங்கிகிட்டோம். ஆஷிஷ் நாக்கை தொங்க போட்டுக்கிட்டே வந்தாப்ல. என்ன  அண்ணா ஆச்சுன்னு கேட்க.நாக்கு  செத்து போச்சும்மா. 3 நாளா தினமும் காலையில் ப்ரட், மதியம், ராத்திரியும் ஒரே மெனுன்னு சொல்லிட்டு, “ஊருக்கு போய் நல்லா காரமா மொளகாப்பொடி குழைச்சு 4 இட்லி சாப்பிடணும்”னு சொல்ல சிரிச்சுக்கிட்டே “சாப்பிட்டோம்”!!!

இரவு 10 மணிக்கு ஃப்ளைட். அதனால முன்னா (ஏசியன் ரெஸ்டாற்ண்ட்ஓனர்)கிட்ட ரவைக்கு ஆலு பராத்தா செஞ்சு கொடுக்க முடியுமான்னு கேட்டேன். சரின்னு சொல்ல 4 பேருக்கும் பராட்டா பார்சல் செஞ்சு கொடுக்க சொல்லிட்டு வந்து  படுக்கலாம்னு இருந்தோம். நம்ம கைட் போன் செஞ்சாரு. உங்களுக்கு ஏர்போர்ட் பிக் அப் 4 மணிக்குன்னாரு. சாமி எங்க ஃப்ளைட் 10 மணிக்குத்தான். 6 மணிக்கு கிளம்பினா கூட போதும்னு சொன்னோம். (ஹோட்டலில் செக் அவுட் டைம் எக்ஸ்டண்ட் செஞ்சுகிட்டு ஒரு ரூமில் தங்கலாம்னு ப்ளான்)

இல்லை, 4 மணிக்கு வண்டி வரும். கிளம்ப ரெடியா இருங்கன்னுட்டு போனை கட் செஞ்சிட்டாப்ல. :((( கோவமா வந்தது. ஆனா என்ன செய்ய முடியும். பேக்கேஜ் டூர் ஆச்சே. சரி படுக்கலாம்னு நினைச்சா முடியலை. கொண்டு போன சாமான்களை பேங்கிங் செஞ்சு எல்லாம் ரெடியானோம்.



மாலில் வாங்கின ஒரு சாமான் பாருங்க.(அப்ப போட்டோ போட மறந்திட்டேன்) இது என்னன்னு தெரியுதா??




குடைதான். டிஃபரண்டா இருக்குல்ல.... :))

தொடரும்....


Friday, June 14, 2013

எதிர் பார்த்தை விடவும் அருமையா இருந்த ஒரு பயணம்!!!!!

எந்தப்பயணமா இருந்தாலும் எங்கங்கே போகலாம்னு பாத்து வெச்சு, அப்புறம் அதைப்பத்தி டிஸ்கஸ் செஞ்சுதான் கடைசி முடிவு எடுப்போம். அப்படி இந்த இடத்தை தேர்வு செஞ்சு வெச்சிருந்தோம். நெட்டில் படங்கள் பார்த்தாலும் அந்த அனுபவத்துக்காக ரொம்பவே எதிர் பார்த்து காத்திருந்தோம். முதல் நாள் மிதக்கும் மார்க்கெட் பார்க்க சீக்கிரமே போனது மட்டுமில்லாமல் அதற்கு முந்தைய நாட்கள் கூட தொடர்ந்தாப்ல பயணம் செஞ்சுக்கிட்டே இருந்ததால
மிதக்கும் மார்க்கெட் முடிஞ்சு சாயந்திரம் வரை எங்கேயும் போகாமல் நல்லா ரெஸ்ட் எடுத்தோம்.

மதியம் லஞ்சுக்கு அதே ஹோட்டல் அதே சாப்பாடுன்னு அலுப்பா இருந்தாலும் வேற இடத்துக்கு போனா திரும்ப நிறைய்ய பணம் செலவாகும் என்பதால பேசாம அங்கேயே சாப்பிட போனோம்.  தடுக்கி விழுந்தா நிறைய்ய இந்தியன் ரெஸ்டாரண்ட்கள் தாய்லாந்தில் நிறைய்ய இருக்கு. இந்தியன்னு சொல்லிக்கிட்டாலும் அது வட இந்திய உணவகமாத்தான் இருக்கும்.

திரும்ப ரூமுக்கு போய் ரிலாக்ஸ் செஞ்சு சாயந்திரம் 7 மணிக்கு வந்து பிக் அப் செஞ்சுப்பதா கைட் சொல்லியிருக்க ரெடியாகி கீழே லாபியில் உட்கார்ந்திருந்தோம். ஒரு டிரைவர் எங்க மொபைலுக்கு கால் செஞ்சுக்கிட்டே லாபிக்கு வர அவரைப்பார்த்து ஹாய் சொல்ல, வேனில் அழைச்சுக்கிட்டு போனார். வேனில் எங்களுக்கு முன்னமே 8 பேர் இருந்தாங்க. நாங்கதான் கடைசி பிக் அப் போலன்னு நினைச்சுகிட்டோம்.

என்ன சர்ப்ரைஸா போனது எங்கன்னே இன்னமும் சொல்லாம இருக்கேனேன்னு திட்டறீங்களா!!! அந்த இனிமையான பயணத்தை பத்தி நினைச்சதும் அந்த நினைவுகளிலேயே கொஞ்சம் மூழ்கிட்டேன். :))

chao phraya இது தாய்லாந்தில் முக்கியமான நதி. பேங்காக்கில் ஆரம்பித்து  கல்ஃப் ஆஃப் தாய்லாந்து வரை பாய்கிறது. இந்த அருமையான  நதியில் இரவு நேரத்தில் பயணம், இரவு சாப்பாட்டுடன் சேர்த்து. :))






எங்களை அழைச்சுக்கிட்டு போன டிரைவர் உள்ளே இருப்பவர்களிடம் எங்களின் வருகையை சொல்ல அவர்கள் முன்பதிவு இருக்கான்னு பார்த்து இருந்ததும் எங்க குரூப் ஆளுங்களுக்கு ஒரு ஸ்டிக்கர் கொடுத்தாங்க.

யூ ட்யூபில் எடுத்த வீடியோ


 நாங்க போனது chaopharaya princess அப்படிங்கற போட்ல, ஸ்டார், ரோஸ்னு போட்களுக்கு பேர் இருக்கு. எங்க ஏஜண்ட் புக் செஞ்சிருந்தது மேலே சொன்ன போட்டில்.





கீழே ஏசி, மேலே காத்தோட்டமா இருக்கும்!! :)) எங்களுக்கு மேலே தான் டேபிள் புக் செஞ்சிருந்தாங்க. போட்டோட சைஸையும் அழகையும் பார்த்து பசங்களுக்கு ரொம்ப சந்தோஷம். 8.30 மணிக்குதான் நாங்க போர்டிங் ஆனோம்.
1 மணிநேரம் பயணம் அது. அதுலேயே டின்னர். டின்னர் க்ரூஸ்னே பேரு இதுக்கு.

வெல்கம் ட்ரிங், சிப்ஸ் இதெல்லாம் டேபிளில் ஏற்கனவே செட் செஞ்சு அழகா வெச்சிருந்தாங்க.




வேறென்னவெல்லாம் சாப்பாடு இருக்குன்னு ஒரு ரவுண்ட் போய் பார்த்தேன். டெசர்ட்டில் வெரைட்டி கேக்குகள் இருந்தது, சூடா காபி, டீ அருமையான தாய் ரைஸ் இருந்தது. சப்ஜீ ஏதாவது இருக்குமான்னு பார்த்தா ஒரு வெஜ் கூட இல்லை. எல்லாம் நான் வெஜ் தான் இருந்தது.




அங்கேயிருந்த செஃப்கிட்ட யோகர்ட் கிடைக்குமான்னு கேட்க கீழே இந்தியன் ஃபுட் இருக்கு மேடம்னு சொல்ல அடப்பாவிகளா!! சொல்லாமலே விட்டுட்டீங்களேன்னு கொஞ்சம் காட்டா சொல்லிட்டு கீழே போனா செம கூட்டம் அங்கே. பக்கோடா, பனீர் சப்ஜி, பூரி, ஆலு, வெஜ் பிரியாணின்னு செம ஃபுட் இருந்தது.

தட்டுல போட்டு எடுத்துக்கிட்டு வந்து மேலே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கும் போது  “மேட் இன் இந்தியா!! ப்யாரா சோனியா” பாட்டு காதில் கேட்டது. இந்த பாட்டை கேட்டு எவ்ளோ நாளாச்சு!!! அப்படின்னு யோசிச்சுகிட்டு இருக்கும்போதே ஒரு ஆர்ஜே ரொம்ப அழகா அந்த பாட்டை பாடிக்கிட்டே ஒவ்வொரு டேபிளுக்கா வந்தாங்க.

அருமையான உணவை ருசிச்சாச்சு. இரவின் வெளிச்சத்தில் பேங்காக்கின் அழகையும் கண்டு களிச்சகிட்டு இருந்தோம். எங்க போட் தான் மோஸ்ட் ஹேப்பனிங் போட்டா இருந்தது. அந்த ஆர்ஜேவுக்கு நிறைய்ய இந்தி பாடல்கள் தெரிஞ்சிருந்தது. எங்க போட்டில் நிறைய்ய இந்தியர்கள்.  ஆட்டமும் பாட்டமும் கொண்டட்டமுமா போச்சு. கீழே இருக்கறவங்களும் மேலே வந்து சேந்துக்க இந்தி, கொரியா பாடல்கள் பாடினாங்க. “கங்கணம் ஸ்டைல்” பாட்டுக்கு போட்டும் சேர்ந்து ஆடிச்சோன்னு தோணியது. :))





அந்த நதியை  படகு சுத்தி வந்தது. கரையோரம் இருந்த கோவில்கள் எல்லாம்
வெளிக்கொளியில் மின்னியது அருமையான அனுபவம். தக தகன்னு ஜொலிப்பதை பார்க்க அம்புட்டு அழகு.

யூ ட்யூபில் கிடைத்த வீடியோ பாருங்க.



மணி 10.30 தாண்டிடிச்சி.  இந்த பயணம் முடிஞ்சதும் அம்ருதம்மா அப்பாகிட்ட சொன்னது “அப்பா க்ரூஸ்ல போக நான் ரெடி” :)) தண்ணியில பயணம் செஞ்சதே தெரியாம ஒரு இனிமையான பயணம் முடிஞ்சது. டிரைவர் ஹோட்டலில் இறக்கி விடும்போது மணி 12.

நாங்க எதிர்பார்த்ததையும் விட இந்த பயணம் பிள்ளைகளுக்கு ரொம்ப வித்தியாசமா இருந்தது. எங்களுக்கும் தான். ஆச்சு இனி தாய்லாந்திலிருந்து கிளம்பனும்.

அதைப்பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்.


Thursday, June 13, 2013

நடுங்கித்தான் போனோம்!!!!

மிதக்கும் மார்க்கெட் படங்கள் இது.










 பாம்புன்னா படையும் நடங்கும்னு சொன்னது சரிதான். பாம்பை இவ்வளவு கிட்டத்துல எப்பவும் பாத்தது இல்லை!!!  ஷோ ஆரம்பிச்சது.  ஒரு வெள்ளைப்பையிலிருந்து பாம்பை எடுத்து போட்டாரு இந்த ஆரஞ்ச் சட்டைக்காரர். என்ன செய்யப்போறாருனு பார்த்தா அந்த பாம்பை உசுப்பேத்தி விட்டுக்கிட்டு இருந்தாரு.













 அப்படி இப்படி திருப்பி அது கொத்த கொத்த வருது. அப்புறம் அதை கையில பிடிச்சு  முகத்துக்கு நேரா கொண்டாந்தாரு பாருங்க. அப்படியே ஒண்ணு போட்டுடுமோன்னு இருந்துச்சு. ஆனா அதை பிடிச்சு அப்படியே அதோடு வாயிலேர்ந்து விஷத்தை எடுத்தாரு!! இந்த மாதிரி காட்சிகளை டிஸ்கவரி சேனல்ல தான் பார்த்திருக்கேன். நேரடியா பார்த்தது ஒரு அனுபவம்.





 விஷத்தை எடுத்ததும் அப்படியே பிடிச்சு கொண்டாந்து பார்வையாளர்கள் கிட்ட காட்டி தொட்டு பாக்க சொன்னாங்க. சாமி வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா பாருங்க ஆஷிஷ் தொட்டு பார்க்கறதை!!!



 அடுத்ததா மலைப்பாம்பு.  அது ஒரு இடத்துல நிக்காம அங்கயும் இங்கயும் பாஞ்சுகிட்டு இருந்தது. அதாவது ஒரு தடுப்பு மாதிரி கட்டி அதுக்கு நடுவுல இந்த ஷோ நடக்குது. சுத்தி கொஞ்சம் தண்ணி இருக்கு. அந்த தண்ணியில விழுந்ததும் அப்படியே மேலே ஏறப்பாக்குது பாம்பு. வேகமா ஏறுவது பாய்வது மாதிரி தெரியுது.  அந்த மலைப்பாம்பையும் பிடிச்சு பக்கத்துல கொண்டாந்து அதோட பல்லைக் காட்டினாங்க.




 அடுத்ததா கீரி சண்டை. ஏற்கனவே ஒரு கண்ணாடி கூண்டுக்குள்ள கீரி சுத்திக்கிட்டு இருந்துச்சு. அதை திறந்து விடுவாங்களோன்னு நினைச்சா பாம்பை பிடிச்சு அந்த கூண்டுக்குள்ள போட்டுட்டாங்க. கீரி பாம்பை என்னா பாடு படுத்தும்னு தெரியும். கண்ணால பார்தது இல்லை. கொழும்புவில் அதிகமா மழை பெய்யும் பொழுது எங்க வீட்டு தோட்டத்துல கீரி, பாம்பு ரெண்டு சண்டை போடும்.  ஆனா இங்க நேர்ல பார்த்தோம்.

 பாம்பை பிடிக்க கீரி முன்னேற அதுக்கிட்டேயிருந்து தன்னை பாதுகாக்க அந்த பாம்பு பட்ட பாடு, என்னால பார்க்க முடியலை.  கொஞ்சம் போராடிய பிறகு பாம்பின் தலை கீரியின் வாய்க்குள்ள!!!! அப்ப என் மனசுல தோணியது இதுதான். இந்த ஷோ தினமும் நடக்குதுன்னா, ஒவ்வொரு ஷொவுக்கும் ஒரு பாம்பு வீதம் பலியான இவங்க கிட்ட பாம்பு எப்படி இருக்கும்!!! ஷோவுக்காக பாம்பை பலி கொடுக்கறாங்களே அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போதே ஒரு கம்பால பாம்பை பிடிச்சு மேலே இழுத்து திரும்ப அந்த பையில போட்டு கட்டினதும்தான் உயிர் வந்துச்சு.





பயப்படாதீங்க.  பாம்பை பத்தின ஒரு பாடமா இந்த ஷோ இருக்கணும் என்பதுதான் எங்க எண்ணம்னு ஷோ நடத்துறவரு உடைஞ்ச ஆங்கிலத்தில சொன்னாப்ல. அடுத்து 3 பாம்புகளை ஒருத்தர் எப்படி பிடிப்பாரு??   ரெண்டு கையிலயும் ஒண்ணொண்ணு பிடிச்சிட்டு மூணாவது பாம்பை வாயில் கவ்வி பிடிச்சாரு பாருங்க!!!!


 நாங்க வெளியில வரும்பொழுது பிரமிப்பா இருந்தது. அதுக்குள்ள எங்க கைட் மத்தவங்களையும் பிக் அப் செஞ்சுகிட்டு வந்திருந்தாரு.  பெங்களூர் கார நண்பர்கள் வண்டியில இருந்த மத்தவங்க கிட்ட நீங்கல்லாம் நல்லதொரு ஷோவை மிஸ் செஞ்சிட்டீங்கன்னு சொல்ல அவங்க நாங்க எடுத்திருந்த போட்டோ வீடியோக்களெல்லாம் பார்த்து அசந்து போயிட்டாங்க. ஆமாம்னு வருத்தமா சொல்லிக்கிட்டாங்க.

அங்கேயிருந்து கைட் எங்களை அழைச்சுக்கிட்டு போனது மரவேலைப்பாடுகள் நடக்கும் இடத்துக்கு. அங்கேயிருந்து குருப் குருப்பா பிரிச்சு அவங்க அவங்க போக வேண்டிய இடத்துக்கு பிரிச்சு அனுப்புவாங்க.

10 நிமிஷம் தான் டைம்.அதுக்குள்ள நீங்க எதுவும் வாங்கணும்னா வாங்கிக்கங்கன்னு சொல்ல, சும்மா சுத்தி மட்டும் பாத்தோம். நுணுக்கமான வேலைப்பாடுகள். அருமையா செஞ்சிருந்தாங்க.






 சிரத்தையா செஞ்சுகிட்டு இருக்காரு பாருங்க. அவர்கிட்ட வேலை ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்ல அவர் முகமெல்லாம் சந்தோஷம்.


நாங்க திரும்ப பேங்காக் போகணும். அதனால பேங்காக் போக கூடிய வேனில் எங்களை ஏத்தி விட்டாரு கைட். வேற ஒரு கைட் திரும்ப பேங்காக் போக வேண்டியவர் எங்க கூட வந்தாரு.   பேங்காக்கில் இருக்கும் அரண்மனையை சுத்தி பார்க்க 4 பேர் போய்க்கிட்டு இருந்தாங்க.அவங்களை இறக்கி விட்டுட்டு அப்புறம் எங்களை எங்க ஹோட்டலில் இருக்குவாங்கன்னு சொன்னாரு கைட்.

வெளிநாட்டுக்கு போகும்போது அந்த இடத்தில் எப்படி என்ன ஏதுன்னு பலருக்கு தெரியரதில்லை. அரண்மனைக்கு போக இருந்த தம்பதியர் ரெண்டு பேருமே ஷார்ட்ஸ் போட்டு வந்திருந்தாங்க. கோவில், அரண்மனை இந்த மாதிரி இடங்களுக்கு இந்த மாதிரி உடைகள் அனுமதி இல்லை. இதைப்பத்தி அவங்களுக்கு தெரியவும் இல்லை, அவங்க கைட்டும் ஏதும் சொல்லலை போலிருக்கு.

ஏற்கனவே லேட்டாகியிருக்கு, இப்ப நீங்க வேற இந்த உடையில இருக்கீங்க.
மேலே கட்ட சாரம் எதுவும் தேடி எடுப்பதற்குள் இன்னும் நேரமாக இருக்கணும்னு கொஞ்சம் காட்டாவா அந்த கைட் சொல்லிக்கிட்டு இருந்தாரு.
செம ட்ராபிக்!!!! வழக்கம்போலன்னு சொல்லலாம்.

சுமார் 2.30 மணிவாக்கில் எங்க ஹோட்டலில் இறக்கிவிட்டாங்க. பக்கத்துல தான் நாங்க சாப்பிட போகும் ரெஸ்டாரண்ட். அதே மெனு... ஆனா இருந்த டயர்டுக்கு சாப்பிட்டு படுக்க போகலாம்னு ஆகிடிச்சு.

அன்னைக்கு ஹோலின்னு நினைக்கிறேன். அந்த ஹோட்டலோட ஓனர் முன்னா மப்பும் மந்தாரமுமா இருந்தாரு. ஆஷிஷுக்கு அயித்தானுக்கு நல்லா
கலரா திலகம் வெச்சு ஹேப்பி ஹோலி சொன்னாரு. தட்டு தடுமாறி எனக்கும்
அம்ருதாவுக்கும் கலர் கொடுக்க கொஞ்சமா எடுத்து வெச்சுக்கற மாதிரி செஞ்சேன்.

அப்புறமும் அயித்தானையும் ஆஷிஷையும் விடாம துரத்த நாங்க தப்பிச்சா போதும்னு ஓடியாந்து ஹோட்டலில் வந்து படுத்ததுதான் தெரியும்.


Wednesday, May 22, 2013

மிதக்கும் மார்க்கெட்!!!!!

எல்லாரையும் பிக் அப் செஞ்சுகிட்டு எங்க வேன் ஒரு வழியா 7.30க்கு தான் செல்ல வேண்டிய பாதையில் போக ஆரம்பிச்சது. நாங்க கிளம்பினது FLOATING MARKET பார்க்க... மார்க்கெட்டே மிதக்குதாமே எப்படின்னு போட்டோல பாத்தா தெரியுது. ஆனா அதை அங்கே போய் அனுபவிக்கணுமே!! அதான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்தோம். இதுக்கு எதுக்கு 6.30க்கே பிக் அப்??? மேட்டர் இருக்கு அப்புறம் சொல்றேன்.


 இந்த ட்ரிப்புக்காக வந்திருந்த கைட் ரொம்பவே ப்ளான் செஞ்சு எல்லாம் விவரமா சொல்லி அழைச்சுக்கிட்டு போனார்.  Damnoen Saduak Floating Market, Ratchanburi ஏரியாவில் இருக்கு.  இங்க தான் நாங்க போனது. இந்த இடம் பேங்காக்கின் மேற்கு பகுதியில் 80 கிமீ தூரத்தில் இருக்கு. நிறைய்ய மிதக்கும் மார்க்கெட்டுகள் இருந்தாலும், இதுதான் பழமையானது, முதலாவதுமானதாம். எல்லாம் கைட் சொன்னாப்ல. அவரு முக்கியமான விஷயமா சொன்ன ஒரு விஷயம் இங்கே சுத்தி பாருங்க. எஞ்சாய் செய்யுங்க. ஆனா எதையும் வாங்காதீங்க. பேங்காக்கில் தான் விலை குறைவு. இது தெரியாம நிறைய்ய பேர் பெரிய்ய பெரிய்ய பைகளில் பர்ச்சேஸ் செஞ்சுகிட்டு வருவாங்க என்பதுதான்.

பேங்காக்கில் பார்க்க வேண்டிய இன்னொரு இடம் டைகர் டெம்பிள். அதாவது புலி கோவில். இங்கே புலிகளுடன் நீங்க பழகலாம், நடக்கலாம். ஆனா இதைப்பத்தி நாங்க டூர் ப்ளான் போட்டதுக்கப்புறம்தான் தெரிஞ்சது. ஆனா எப்படி போகணும்னு சரியா தெரியாததால விட்டுட்டோம். தவிரவும் பட்டாயாவுல புலியோட போட்டோ, புலிக்குட்டிக்கு பால்னு எஞ்சாய் செஞ்சதுக்கப்புறம் வேணாம் போதும்னு முடிவு செஞ்சிட்டோம்.

ஆனா இந்த மிதக்கும் மார்க்கெட்டுக்கு போய் அங்கேயிருந்து தான் புலிக்கோவில் போகணும்னு கைட் சொன்னதக்கப்புறம்தான் தெரிஞ்சது. எங்க கூட வேன்ல வந்த சிலர் எங்களைப்போல மதிய உணவுக்கு முன்னாடி வரைக்கும் டூர், சிலர் முழுநாள் டூர். சிலர் அந்த முழுநாள் டூரிலும் பேங்காக் வந்து அங்கே லோக்கல் சுத்தி பார்ப்பது அப்படின்னு இருந்தாங்க. கைட் பேர் வாரியா கூப்பிட்டு எல்லா விவரமும் சொல்லி முடிக்க மணி 8.  8.30க்கு நாங்க அந்த FLOATING MARKET  கிட்ட போயாச்சு. அவசர படுத்தறாரு கைட். சீக்கிரம் இறங்குங்க, பின்னால பெரிய்ய பெரிய்ய பஸ் வருது. அப்புறம் கூட்டம் ஜாஸ்தி ஆகிடும்னு துரிதப்படுத்தி ஒரு போட்ல 6 பேர் வீதம் ஒரு ரவுண்ட் அழைச்சுப்போனாப்ல.


அந்த நேரத்துக்கு கடைகள் திறந்திருக்கலைன்னாலும், ஒரு சிலர் படகுல கொண்டு வந்துகிட்டிருந்ததை பார்த்தோம். அந்த படகே வித்தியாசமா நல்லா இருந்தது. அதற்கு பிறகு பார்த்தா செம கூட்டம் அங்கே. இந்த படகு சவாரி, பேங்காக்கிலிருந்து பிக் அப் ட்ராப் எல்லாம் சேர்த்துதான் பணம் கட்டியிருந்தோம். இதைத்தவிர  நாமளாவே  படகு பிரயாணம் செஞ்சுக்கலாம். அதற்கு தனிக்காசு. நாமதான் கொடுக்கணும். அந்த இடத்திலிருந்து திரும்ப பிக் அப் 10.30 மணிக்குத்தான் அப்படின்னு கைட் சொல்லி எந்த இடத்தில் வந்து மீட் செய்யணும்னு சொல்லியிருந்தார். கையில் கொண்டு பொயிருந்த பேஸ்ட்ரியை வெச்சு ப்ரெக் ஃபாஸ்ட் முடிச்சோம்.

எங்க கூட பெங்களூரைச் சேர்ந்த ரெண்டு பிசினஸ்மென்கள் வந்திருந்தாங்க. அவங்க ஹோட்டல்ல ப்ரெக்ஃபாஸ்ட் கட்டி கொடுத்திருந்தாங்க. பிலிப்பைன்ஸ், மணிலான்னு வெவ்வேற நாட்டைச் சேர்ந்தவங்க எங்க கூட அன்னைக்கு வண்டியில வந்திருந்தாங்க. நாங்க தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து கூட ரெண்டு பேர் இருந்தாங்க.  அங்கே உட்கார்ந்துக்க வசதியா டேபிள் சேர் போட்டு வெச்சிருக்காங்க. அங்க போய் உட்கார்ந்திட்டோம்.

மக்கள்ஸ் அதிகமானதால படகு சவாரியில் ட்ராபிக் ஜாம், டீசல் வாசனைன்னு ஒரு மார்க்கமா இருந்தது அந்த இடம். அதையெல்லாம் ரசிச்சு பாத்துக்கிட்டு இருந்தோம். நாங்க தனியா படகு எடுத்துக்கலை. ஆனா ரொம்ப அழகா இருக்கு அந்த இடம். சில படகுகளில் சாமான்கள், சாப்பாடுன்னு கொண்டு வர்றாங்க. சில நதி ஓரம் இருக்கும் கடைகளில் படகை நிப்பாட்டி பேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க.

ஆனா என்னை ரொம்ப கவர்ந்தது ஒரு பாட்டிம்மாதான். குறைஞ்சது 60 வயசு இருக்கும் அவங்களுக்கு. ஆனா வலுவா துடுப்பு போட்டு லாவகமா படகை நிப்பாட்டி, கயிறு போட்டி கட்டி கொஞ்ச நேரம் விசிறிக்கிட்டு பிறகு திரும்ப போனாங்க. அந்த வெயிலில் அவங்க கஷ்டப்பட்டாவது வேலை பார்க்கறாங்களே தவிர பிச்சை எடுக்கலை!!!


எத்தனை நேரம் தான் உக்காந்தே இருக்கறதுன்னு மார்க்கெட்களில் ஒரு ரவுண்ட் அடிக்க போனோம். முன்னாடியே பேங்காக்கில் அவற்றின் விலை தெரியும் என்பதால கடைகளில் போய் விசாரிச்ச நொடிகளில் அவங்க கையில எடுப்பது கால்குலேட்டர். நம்பரை போட்டு காட்டுறாங்க, பேரம் பேசி விலையை குறைச்சு அதை கால்குலேட்டரில் காட்டி எல்லாம் செஞ்சாலும் பேங்காக்கைவிட குறைஞ்சது 50 பட்டாவது ஜாஸ்தியா இருக்கு.

திரும்ப வந்து உட்கார்ந்துகிட்டோம். இப்ப அந்த இடத்தில் வெயில் அதிகமானதால படகு போக்குவரத்து குறைஞ்சிருந்தது. இந்த வெயிலுக்கு முன்னாடியும், கூட்டத்துக்கு முன்னாடியும் அந்த இடத்துக்கு போய் அதன் அழகை ரசிக்கணும்னு தான் பேங்காக்கிலிருந்து சீக்கிரம் கிளம்பியது!!!!

அங்கேயிருந்து அடுத்து 3 இடத்துக்கு போகலாம். ஆனா அதுக்கு எக்ஸ்ட்ரா எண்ட்ரி டிக்கட் மட்டும் வாங்கணும். போக்குவரத்து ஃப்ரின்னாரு கைட்.
யானை சவாரி,  குரங்கு ஷோ, பாம்பு ஷோ இதுல எங்க போகணும்னு சொல்லுங்கன்னு சொல்ல யானை, குரங்கு எல்லாம் ரொம்ப பாத்தாச்சு. பாம்பு ஷோ போகலாம்னு முடிவு செஞ்சோம். எங்க கூட அந்த பெங்களூர் காரங்களும் வர்றதா சொல்ல, மத்தவங்களை யானை சவாரிக்கும்,  குரங்கு ஷோவுக்கும் இறக்கி விட்டுட்டு திரும்ப வந்து பிக் அப் செஞ்சுப்பதா சொல்லிட்டு கைட் எங்களை இறக்கிவிட வந்தாரு.

FLOATING MARKETல மலைப்பாம்பை கழுத்துல போட்டுக்கிட்டு எடுத்துக்க வேணாம். 250 பட் ஆகும். அதுவே பாம்பு ஷோ பார்க்கப்போற இடத்துல 50 பட்தான்னு சொல்லியிருந்தாரு. ஆனா அப்படி யாரையும் அங்க பார்க்கலை. பாம்பு ஷோவுக்கு எண்ட்ரி 100 பட் ஒரு ஆளுக்கு.

அந்த இடம் இன்னும் கொஞ்சம் சுத்தமா இருக்கலாம்னு தோணிச்சு. ஆனா அதையெல்லாம் அந்த ஷோ முறியடிச்சதுன்னு சொல்லலாம். வாசலிலேயே மலைப்பாம்பை கழுத்துல போட்டு போட்டோ எடுக்கலாம்னு சொல்லி அழைப்பு விட்டாங்க. வரும்போது போட்டோ எடுத்துக்கலாம்னு சொல்லி வந்து உட்கார்ந்தோம்.

கொஞ்சம் மேல ஏறி உட்காருங்க பாம்புங்க பறந்து வரும்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டு இருந்தாரு. நாங்க சேஃபா இருக்கட்டும்னு நியாயமான தூரத்துல தான் இருந்தோம். ஆனா சிங்கப்பூர் ஜூவுல செஞ்சா மாதிரி மலைப்பாம்பை பையில போட்டு கட்டி நம்ம கால் கீழ எங்கயும் வெச்சிருக்கப்போறாங்கன்னு ஒரு பயம் இருந்தது.

அந்த ஷோவுல என்ன பார்த்தோம்!!!!  FLOATING MARKET புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன் அடுத்த பதிவுல சந்திக்கிறேன்.


Tuesday, May 21, 2013

விடாத “மால்”!!!!





டோனட் போட்டோக்கள்.  உறவினர்களுக்கு என்னென்ன வாங்கினோம்னு லிஸ்ட் போட்டு பார்த்ததில் சிலருக்கு விட்டு போயிருந்தது. திரும்ப எம்பிகே மால் போவோம்னு அயித்தான் டாக்சி காரரை கேட்டால் எங்க நல்ல நேரம் 100 பட்னு சொல்ல டக்குன்னு ஏறி உட்கார்ந்திட்டோம். :))


இந்த காரில் போகும் போதுதான் இந்த மாலில் பிக் அப் ட்ராப் வசதி இருக்குன்னு தெரிஞ்சது. அதைப்பத்தி அப்புறம் விரிவா சொல்றேன். கீழே தளத்திலேயே ஒரு கடையில் நிறைய்ய அயிட்டங்கள் இருந்தது. பசங்க அவங்க நட்புக்களுக்கு கீ செயின் வாங்கினாங்க. நானும் அயித்தானும் சில ஞாபகார்த்த சாமான்கள் வாங்கிட்டு பசங்க திரும்ப டோனட் கடைக்கு போகணும்னு சொல்ல போனோம்.

நாலு வீல் இருக்கற பெட்டி இருந்ததைப்பார்த்து அயித்தான் ஒண்ணு வாங்கினாப்ல. அப்புறம் இன்னொரு கடையில எந்த சைஸ் பேக் எடுத்தாலும் 199 பட்னு ஆஃபர் இருந்தது.  அங்கயும் சிலது வாங்கிகிட்டோம்.

அடுத்த நாள் 6.30க்கே ரெடியா இருக்கணும்னு கைட் அண்ணாத்தே சொல்லியிருந்தார். அம்புட்டு சீக்கிரம் எப்படிய்யா??? ஹோட்டல்ல ப்ரெக்ஃபாஸ்ட் ஆரம்பிக்கவே 6.30 மணி ஆகும். தவிர அம்புட்டு சீக்கிரமா எப்படி ப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிடறதுன்னு கேட்க, ஹோட்டல்ல சொன்னீங்கன்னா அவங்க கட்டி கொடுத்திடுவாங்கன்னு சொல்லியிருந்தார்.  நாங்க தங்கியிருந்த ஹோட்டல் ரிஷப்ஷனிஷ்ட் கிட்ட சொல்ல கஷ்டம்தான்னு சொன்னார். நாங்க எங்க நிலமையை எடுத்து சொல்ல பார்க்கறேன்னு சொன்னாப்ல. அதைவிட நீங்களே காலையில் வந்து உங்க ப்ரெக்ஃபாஸ்ட்  கூப்பனை காட்டி சொன்னா பேக் செஞ்சு தருவாங்கன்னு சொன்னாப்ல.

ஆனா எனக்கு என்னவோ இது சரிப்பட்டு வரும்னு தோணலை. வயிறு காயப்போவது உறுதி. அதைவிடவும் மிஞ்சிப்போனா  வெஜ் சாண்ட்விச்தான் தரணும். நல்ல பேஸ்ட்ரி கூட தராத 3 நட்சத்திர ஹோட்டல் அது.!!!! அதனால மாலிலேயே  ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தது. அங்கே போய் மைலோ பாக்கெட்கள், எனக்கும் அயித்தானுக்கும் சில் காஃபி வாங்கிகிட்டோம்.



அங்கே ஒரு பேஸ்ட்ரி ஷாப் இருந்ததைப்பார்த்து ஏதாவது பேக் செஞ்சு எடுத்துக்கலாம். ஹோட்டல்ல ப்ரெக்ஃபாஸ்ட் கட்டி கொடுக்காட்டி இதுவாவது கைகொடுக்கும்னு போனோம். நிறைய்ய நான் வெஜ் பேஸ்ட்ரிஸ் இருந்தது.
கவுண்டரில் இருந்த பொண்ணையே கேட்டு வெஜிட்டேரியன் பேஸ்ட்ரிஸ் எடுத்து கொடுக்க சொன்னோம். கடைசியில் பாப்பாய் ச்பினாச் பேஸ்ட்ரி கிடைச்சது. அதை வாங்கி பேக் செஞ்சு எடுத்துக்கிட்டோம். காலையிலிருந்து வெயிலில் சுத்தியது, இப்பவும் சுத்திக்கிட்டே இருப்பது எல்லாம் சேர்ந்து செம டயர்ட். இதுல அடுத்த நாள் காலியில் 6.30க்கு பிக் அப் வேற.

போதும் கிளம்பலாம்னு முடிவு செஞ்சோம். அப்பதான் அயித்தான் மெயின்ரோட்ல போய் அவஸ்தை படுவதை விட்டு மாலில் பிக் அப் ட்ராப் சர்வீஸ் இருக்கே அங்கே போவோம்னு சொல்ல அங்கே போய் வரிசையில் நின்னோம்.

மாலில் ட்ராப் செய்ய வர்ற டுக்டுக், டாக்ஸி இவைகள் வரிசையா அங்கே வரும். ஒரு போலீஸ்கார் இருப்பாரு. நாம போக வேண்டிய இடத்தை அவருக்கு சொன்னா அவர் அந்த டிரைவரிடம் அதை சொல்ல அவருக்கு அங்கே ஓகேன்னா நம்ம அழைச்சுக்கிட்டு போவார். இல்லைன்னா அடுத்தவங்க போகும் இடம் சொல்லலாம்.

எங்களுக்கு முன்னாடி ஒருத்தங்க தலை சுத்துது, வாந்தி வருதுன்னு சீன் காட்டி நாங்க பிடிக்க வேண்டிய டாக்சியை பிடிச்சுக்கிட்டு கிளம்பிட்டாங்க. எங்களுக்கு 10 நிமிட காத்திருப்புக்கு அப்புறம் டாக்சி வந்தது. சரின்னு சொல்ல ஏறி உட்கார்ந்தோம். மீட்டரைப்போடுவார்னு நினைச்சா மாலைத்தாண்டி மெயின் ரோட் போனதும் 300 தாய்பட் கொடுன்னு பேரம் ஆரம்பிச்சாரு.

 கதையே வேணாம் நீ எங்களை திரும்ப கொண்டு போய் மாலிலேயே விட்டுடுன்னு அயித்தான் சொல்ல, அவரு மாட்டேன் வழியில இருங்கங்கன்னு சொல்ல, அயித்தான் சரி போலீஸுக்கு போன் செய்ய வேண்டியதுதான்னு நம்பரை எடுத்து சுழட்ட ஆரம்பிக்க என்ன நினைச்சாரோ தெரியலை ட்ரைவர் சரி, 250 கொடுன்னு பேரம் பேசிக்கிட்டே வண்டியை ஓட்டிக்கிட்டு இருந்தாரு. மாலுக்குத்தான் திரும்ப போறாருன்னு நினைச்சா
எங்க ஹோட்டலுக்கு போகும் வழியில போய்க்கிட்டு இருக்காரு. கத்தி சண்டை போட்டு மாலுக்கே திரும்ப போன்னு சொல்ல கொஞ்சம் பயந்திட்டாரு ட்ரைவர். 200 பட் கொடுங்க ஹோட்டல்லையே இறக்கிடறேன்னு வந்தாரு. மொதோ நாள் 150 பட் அந்த டுக்டுக்குக்கு அழுதது ஞாபகம் வந்தது. தொலையுது ராத்திரி நேரத்துல அவஸ்தை என்னாத்துக்குன்னு 200 பட் தரோம்னு சொல்ல, அப்புறம் அமைதியாகி ஹோட்டலில் இறக்கிவிட்டார்.


தாய்லாந்தில் இந்த டாக்சிக்காரர்கள், டுக்டுக்காரர்கள் ரொம்ப அடாவடின்னு முன்னமே தெரியும். நன்றி axn tv.  amazing race அப்படின்னு ஒரு நிகழ்ச்சி இதுல வரும். ஒவ்வொரு இடத்துக்கும் அவங்க போய் சேர்வது எப்படின்னு பாக்கலாம். த்ர்ல்லிங்காவும் சர்ப்ரைஸாவும் இருக்கும். amazing race 19 (முன்னால நடந்தது) ஒளிபரப்பு நாங்க பேங்காக் டிக்கட் புக் செஞ்சதும் போய்க்கிட்டு இருந்தது. அதுல ஒரு எபிசோட் பேங்காக் தான். அந்த வெளிநாட்டுக்காரங்க டாக்சிகாரங்க கிட்ட பட்ட அவஸ்தையை பாத்திருக்கோம். தகராறு செஞ்சு  வந்ததுல பஸ்ஸையே மிஸ் செஞ்சிருப்பாங்க ரெண்டு பேர். ஆனாலும் அவங்க ஊர்க்கார லேடி ஒருத்தங்க போலீஸை கூப்பிடறேன்னு மிரட்டி இவங்க கிட்டேயிருந்து பணம் வாங்கி டிரைவருக்கு கொடுத்த வீடியோ பாத்திருக்கிறோம். இங்க போலீஸ் கேட்டுத்தானே ஏத்திவிடறாங்கன்னு பார்த்தா ம்ஹூம் ஒண்ணும் சரியில்லை.


நம்ம நாட்டுல தான் இந்த ஆட்டோக்காரங்க கிட்ட பேரம் பேசி அலுத்துப்போய் கிடக்கோம்னா இதையே போய் வெளிநாட்டுலயும் செய்யறோம்னு அனுபவப் படும்போது அலுப்பா வருது.  இன்பச்சுற்றுலாவை சோகச்சுற்றுலா ஆக்குது. நல்ல வேளை நாம ஃபுல் பேக்கேஜ் டூர் வந்தோம். ஒவ்வொரு இடத்துக்கும் நாமளே வண்டி ஏற்பாடு செஞ்சு போய்க்கிலாம்னு நினைச்சு வந்திருந்தா பட்ஜட் கன்னாபின்னான்னு எகிறியிருக்கும்னு  நானும் அயித்தானும் நினைச்சோம்!!!!

வாயில் வைக்க பிடிக்கலை ஆனாலும் வேற வழியில்லாம இரவு சாப்பாடு சாப்பிட்டு ரூமில் போய் படுத்ததுதான் தெரியும். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து ரெடியாகி அம்ருதம்மாவை கூட்டிக்கிட்டு ப்ரெக்பாஸ்ட்டுக்கு போனேன். (அம்ருதம்மாவுக்கு வெறும் வயிற்றில் ட்ராவல் செய்ய கூடாது. ஏதாவது திட உணவு சாப்பிட்டு கிளம்பினாத்தான் வயிறு பிரட்டாம இருக்கும். தவிர காலை 6.30க்கே காலை  உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பதால ப்ரெட் சாப்பிட்டாப்ல)

அதற்குள் அயித்தானும் ஆஷிஷும் ரெடியாகி கீழ வர ப்ரெக்ஃபாஸ் பேக் எல்லாம் செஞ்சு தரமுடியாது, வேணும்னா சாப்பிட்டு போங்கன்னு சொல்ல சூடான டிகாஷனில், சில்லுன்னு பால் ஊத்தி காஃபின்னு பேருக்கு ஒண்ணு குடிச்சிட்டிருக்கும் பொழுதே கைட் போன் செஞ்சாரு. இவரு புதுசு.

வண்டியில் ஏறினதும், இன்னும் சிலரை பிக் அப் செஞ்சுகிட்டு போகணும்னு சொன்னாரு.  அடுத்தது எங்கேன்னு கேட்பது தெரியுது. அடுத்த பதிவில்.......



Friday, May 10, 2013

படங்களுடன், வீடியோவும் பார்க்க வாருங்கள்!!!!

வெயில் தாங்க முடியலையாம் கரடியாருக்கு!!!

தனிக்காட்டு ராஜா!! தனியா இருக்கத்தான் பிடிக்கும்



அட போங்கப்பா வெயில் தாங்கலை!!!

  உராங்குடான் நிகழ்ச்சி செம சூப்பரா இருந்தது. வீடியோ பாருங்க




 

இந்த சாப்பாடு இவ்வளவு அருமையாய் இருக்கும்னு நினைச்சு கூட பார்க்கலை.

ஆரம்பம் தான்!!!
எங்களைப்போல பலருக்கும் இது ஒரு ஆச்சரியம் தான்!!!

இன்னும் வருது!!!


தாய்லாந்தில் இந்திய பூரி!!!



இந்த சப்ஜி போதுமா!!! அரிசியும் இருக்கு பாருங்க!!


புளிக்காத தயிர் அருமையாய்
கேசரி!!அல்வா!!!
நான் கப்புல கேசரி போட்டு எடுத்துக்கிட்டு ஸ்பூன் எடுக்க போனப்ப ஒரு இந்தியர் “ இது எங்கங்க இருக்கு?? இது அல்வா தானே!! நல்லா இருக்கான்னு கேள்வி கணையால துளைச்சு எடுத்தாரு. நான் வெஜ்ஜுக்கு பின்னாடி இருக்குன்னு சொல்ல உடனே போறேன்னு ரெண்டு கப் எடுத்துக்கிட்டு போனாரு. பூரியோட இந்த கேசரி சூப்பர் காம்பினேஷன்.
கைதட்ட சொல்லிக்கேட்டது அழகு



கடற் சிங்கம்
படங்கள் நல்லா இருக்குல்ல. சாப்பிட்டு முடிஞ்சதும் டால்பின் ஷோ. 2 மணிக்குன்னு போர்ட் போட்டிருக்காங்க. ஆனா ஷோ நடக்கும் இடம் 30 நிமிடம் முன்னாடிதான் திறக்கப்போறாங்க. முன்னாடியே போய் சீட் பிடிச்சாதான் உண்டு. அம்புட்டு கூட்டம். அதனால வேற எங்கயும் போகாம
டால்பின் ஷோ இருக்கும் இடத்து கிட்ட போய் காத்திருந்தோம். வெயில் வெயில் வெயில்!!!!
1.30க்கு கதவு திறந்தாங்க ஓடிப்போய் நல்ல இடமா பார்த்து உட்கார்ந்தோம். எல்லாரும் எங்களைப்போல காஞ்சு போய் இடத்தை தேடி பிடிக்க வந்திட்டாங்க போல. கொஞ்ச நேரத்துலேயே இடம் நிரம்பிடிச்சு.
சஃபாரி வோர்ல்ட் மரைன் பார்க்கில் தான் இந்தியர்கள் அதிகம்னு சொன்னேன்ல. அதை உறுதி செய்வது போல நேயர் விருப்ப பாடலாக சில ஹிந்தி பாட்டுக்களை ஒலிபரப்பினாங்க.  இந்தியர்கள் எல்லாம் எந்திரிச்சு ஆடுங்கன்னு சொல்ல ஒருத்தர் எழுந்து செம ஆட்டம். இதோ வீடியோ பாருங்க :)
 டால்பின்கள் துள்ளி குதிச்சு நீந்துவது ரொம்ப அழகு.  அதிலும் இந்த வீடியோவில் கடைசி ஷாட் பார்க்க தவறாதீங்க. ரொம்பவே அதிசயமா அழகா இருந்தது நிகழ்ச்சி.
 
நிகழ்ச்சி முடிஞ்சதும் எங்கயும் சுத்தி பார்க்க மனசில்லை. பட்டாயா ஜூவில் பார்த்தது போதுமேன்னு ஆயிடிச்சு.  ட்ரைவருக்கு போனைப்போட்டா “பிக் அப் 3.30 மணிக்குத்தான்”னு கறாரா சொல்லிட்டாப்ல. அங்கனயே தான் இருக்காரு. ஆனா நல்ல உறக்கம் போல. நாம போய் உட்கார்ந்தா தூக்கம் கெடுமே!!!
அதுவரைக்கும் அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்தோம். முடியலை. 3 மணிக்கே வெளியே வந்து அங்க சேர் போட்டிருந்தங்க காத்திருந்தோம். ட்ரைவர் வந்தார். எங்க குரூப் ஆளுங்க சிலர் வர லேட்டாச்சு. ஒரு வழியா 4 மணிக்கு கிளம்பினோம். 
5.45 மணிக்கு ஹோட்டலில் இறக்கிவிட்டாப்ல. சூடா டீ குடிச்சா தேவலைன்னு இருந்திச்சு. நம்ம சாப்பாட்டு ஹோட்டலில் டீ கிடைக்குமேன்னு போனோம்.
அப்பதான் ஒரு குருப் வந்து அங்க சாப்பாடு நடந்துகிட்டு இருந்தது.

டீ வேணும்னு கேட்க, இப்ப சாப்பாடு நடக்குதுன்னாரு ஓனர் முன்னா. மணி 6ஆகப்போகுதேன்னு வந்தோம்னு சொல்ல, வெளியில வெயிட் பண்ணுங்கன்னு சொல்ல காத்தாட வந்து உட்கார்ந்தோம். இஞ்சி போட்ட டீ சுடச்சுட கொண்டு வந்து கொடுத்தாப்ல. 

டீ உள்ள போனதும் தான் உயிர் வந்தா மாதிரி இருந்தது. அடுத்த ரவுண்ட் அப்புக்கு கிளம்பினோம். 

அடுத்த பதிவுல சொல்றேன்.