Showing posts with label மீள்பதிவு. Show all posts
Showing posts with label மீள்பதிவு. Show all posts

Friday, August 31, 2012

மரியா மாண்டிசோரி அவர்களின் 142ஆவது பிறந்த நாள்.

நான் மிகவும் மதிக்கும் போற்றும் ஒரு பெண்மணி மரியா மாண்டிசோரி
அவர்கள். இன்று அந்த உன்னத ஆசிரியையின் 142ஆவது பிறந்தநாள்.

நானும் ஒரு மாண்டிசோரி முறையில் பயிற்சி பெற்ற
ஆசிரியை என்பதால் என்னுடைய இந்தப் பதிவை மீள்பதிவாக
பதிகிறேன்.


She was often heard saying, "I studied my children, and they taught me how to teach them". - மரியா மாண்டிசோரி.



உலகையே பேசவைத்த மாண்டிசோரி முறைக்கல்வியை

கண்டுபிடித்த மரியா மாண்டிசோரி இவர்தான்.



மாண்டிசோரி முறைக் கல்வியின் அடிப்படைத் தத்துவம் இது தான்:

1. The teacher must pay attention to the child, rather than the child paying attention to the teacher.

2 - The child proceeds at his own pace in an environment prepared to provide means of learning.
3 - Imaginative teaching materials are the heart of the process.
4 - Each of them is self-correcting, thus enabling the child to proceed at his own pace and see his own mistakes.
If you were to look inside a Montessori classroom, each child would be quietly working at his private encounter with whatever learning task he or she has chosen. (Montessori in Perspective, 1966).


Montessori often reminded teachers in her course, "When you have solved the problem of controlling the attention of the child, you have solved the entire problem of education." (Kramer, 1976, p. 217).

மேலே இருக்கும் ஆங்கிலவாக்கியங்களுக்கு
பாசமலர் மொழிபெயர்த்து
தந்தது. மிக்க நன்றி மலர்.
மரியா மாண்டிசோரி அடிக்கடி இப்படிச் சொல்வாராம்,
" என் மாணவர்களை நான் படித்துப் புரிந்து கொண்டேன்.
எப்படி அவர்களுக்குப் கற்றுத்தரவேண்டுமென்று
அவர்கள்தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.

"1. ஒரு குழந்தை தன் ஆசிரியரிடம் கவனம்
செலுத்துவதைக் காட்டிலும்,ஓர் ஆசிரியர் தன்
குழந்தையிடம் கவனம் செலுத்துவது
முக்கியமானது.

2. படிப்பதற்கான வழிமுறைகள் முறைப்படுத்தப்பட்ட
ஒரு சூழலில் ஒரு குழந்தை தன்னிச்சையாகத்
தன் வழியில் தானே முன்னேறும் சாத்தியக்கூறு
அதிகமாகிறது.

3. கற்பனைத்திறன் சார்ந்த போதிக்கும் கருவிகள்தான்
இம்முறையின் முக்கியமான அம்சமாகும்.

4. ஒவ்வொரு கருவியும் சுய திருத்தம் என்ற
அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எனவே, ஒரு குழந்தை தனக்கேற்ற வேகத்தில்
படித்துத் தன் தவறுகளைத் தானே சரி செய்ய முடியும்.
ஒரு மாண்டிசோரி வகுப்பறையைப் பார்வையிடும்போது,
தனித்தனியே ஒவ்வொரு குழந்தையும் தானே தேர்ந்தெடுத்த
ஒரு படிக்கும் தளத்தில் அமைதியாக இயங்கிக்
கொண்டிருப்பது புரிய வரும்.

மாண்டிசோரி அம்மையார் இந்தத் துறையில்
பயிற்சி பெறும் ஆசிரியர்க்கு அடிக்கடி நினைவுறுத்துவது:

"ஒரு குழந்தையின்கவனத்தைக் கட்டுப்படுத்தும்
ப்ரச்னையைச் சமாளித்துவிட்டால் போதும்.
முழுக் கல்வி சம்பந்தப்பட்ட ப்ரசனையும்
இதன் மூலம்தீர்ந்து விடும்.

"அரிஸ்ட்டாடில் என்ற தத்துவ ஞானி சொல்வது:
"புலன்களுக்குப் புலப்படாத எந்த ஒன்றும்
மனிதனின் மனதில் இருக்கவே முடியாது.

"sensorial - உணர்ந்து அறிவது
Essence of Practical Life - எதார்த்த வாழ்வின் சாராம்சம்
Number Rod - எண் கருவி
Cards and Counters - அட்டைகளில் எண் அட்டவணைகள்
Geometrical tray - வடிவங்களின் அறிமுகக் கருவிகள்

****************************************************

"casa dei Bambini" அதாவது மழலையர் இல்லம். இங்குதான்

5 வயதிற்குட்பட்ட ஏழைக் குழந்தைகள் இருந்தனர்.

இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும்
சூப்பர்வைசராக மாண்டிசோரி வந்தார். இவர்களின்
பொழுதை இனிமையானதாக மாற்ற சில் உபகரண்ங்களைக்
கொண்டுவந்தார்.

குழந்தைகளிடம் மாற்றம் வந்தது. கைகளால் உணர்ந்தும்,
அனுப்வித்து குழந்தைகள் எளிதாக கற்றனர். மற்ற பள்ளிகளில்,
விளம்பிக்கொண்டும், எழுத கஷ்டபட்டுக்கொண்டும் இருந்தனர்.

இந்த மாறுதல்கள் காட்டுதீயாய் உலகெங்கும் பரவியது.
தான் ஒன்றும் அற்புதத்தை நிகழ்த்தி விடவில்லை என்றுதான்
மாண்டிசோரி கூறுவார். "பிள்ளைகளிடம் அபார சக்தி இருக்கிறது.
அதை முறையாக பயன்படுத்த அவர்களுக்கு உதவினேன்,'
என்றுதான் கூறுவார்.


மாண்டிசோரி முறையில் ஐம்புலன்களினாலும் கற்கும்படி
பாடத்திட்டங்கள் இருக்கும்.

(ARISTOTLE- THE GREAT PHILOSPHER SAYS," There is nothing
in the mind fo men, that his senses have not known".

பார்த்தல், கேட்டல், உணர்தல், சுவைத்தல், முகர்தல் எனும்
முறையில் இருக்கும் பாடத்தை - SENSORIAL என்போம்.

அடுத்து மொழி.

அடுத்து கணிதம்.

அடுத்து ESSENCE OF PRACTICAL LIFE (EPL)
எனப்படும் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்கள்.


மாண்டிசோரி முறைக்கல்வி பற்றிய
என் பதிவுகள் 1, 2, 3, 4.




Monday, November 01, 2010

தீபாவளி நினைவுகள்

இந்தப்பதிவு என்னுடைய மீள்பதிவுதான். ஆனாலும் இந்த நினைவுகள்
தரும் இதம், சுகம் எப்போதும் அலாதி. எப்போதும் இனிக்கும் தீபாவளி நினைவுகள்.


கார்த்தி பய இரண்டு ரூபாய் பாட்டியை கேட்டதும்
பாட்டி,”எதுக்குடா? 2 ரூபாய்ல என்ன வெடி வாங்குவன்னு
கேட்டாங்க?”

பாட்டி அந்த ரெண்டு ரூபாய்ல வாசலல் நிக்கிற
ஜோஸ்யக் காரர் கிட்ட கொடுத்து பட்டாசு
எப்ப வரும்னு கேப்போம்! அப்படின்னு
சொல்ல ஜோஸ்யக்காரர் திட்டிகிட்டே போனாரு.

அப்பாக்கு இந்த விவரம் தெரிய,”தீபாவளிக்கு
முதல் நாள் வெடி வரும்”னு சொல்ல தீபாவளிக்கு
முதல் நாள் எப்பவரும்னு கவுண்டவுன் செய்ய ஆரம்பிப்போம்.


தீபாவளி பலகாரங்கள் வீட்டுலயே செய்வாங்க.
பாட்டி பெரிய ட்ரம் நிறைய மிக்ஸர், தேன்குழல்,
ரவா லட்டு, ஓமப்பொடி எல்லாம் செய்வாங்க.
அம்மாவும் ஒத்தாசையா இருப்பாங்க.

நான், அப்பா தம்பி 3 பேரும்கூட ரொம்ப
ஒத்தாசை செய்வோம். செய்ய்ற பலகாரத்தை
சாப்பிட ஆளு வேணும்ல :)

அப்பா செய்யற அன்னைக்கு மட்டும் தான்
சாப்பிடுவாரு. டேஸ்ட் பார்க்கறேன்னு சொல்லி
சொல்லியே பாதி காலி ஆகிடும்.

பாட்டி விவரமா கள்ளிப்பெட்டிக்குள்
1 டப்பா நிறைய ரவா லட்டு, பூந்தி லட்டு,
தேன்குழல் எடுத்து வெச்சிருப்பாங்க.
தீபாவளி முடிஞ்சதுக்கப்புறம் அதை ரிலீஸ்
செய்வாங்க.

அம்மா செய்யும் ஜாங்கரிக்கு நானும் தம்பியும்
அடிமை. அம்மம்மாவுக்கு அப்புறம் அதே
பக்குவத்தோட அம்மா செய்வாங்க.
அவங்க பேரை நிலை நாட்ட நானும்
செய்ய கத்துகிட்டேன். தலைமுறை
ஜாங்கிரி பக்குவம் எனக்கும் வந்திடுச்சே :)

தீபாவளி அன்னைக்கு காலைல எழுந்திருச்சு
மொத வெடி போட்டுட்டுத்தான் மத்த வேலையே.
எண்ணை தேச்சு குளிச்சு, தீபாவளி லேகியம்
சாப்பிட்டாத்தான் அம்மா காபியே தருவாங்க.

அந்த அதிகாலையில் நாங்க எண்ணைய் குளியல்,
செஞ்சு கஷ்டப்பட்டுகிட்டு இருப்போம் அப்பா
நல்லா தூங்கிகிட்டு இருப்பாரு.
அவர் தீபாவளி கொண்டாடவே மாட்டாரு,
புதுசு எடுத்தாலும் அன்றைக்கு உடுத்துவது
கிடையாது. பட்டாசு வெடிக்கும் போது
பாட்டியின் ஸ்டாண்டர்டு டயலாக்,”சீக்கிரம்
வெடிச்சிட்டு வாங்க”??!! :(

காலை 5.30 மணிக்கு மெல்ல வெளிச்சம்
பரவ ஆரம்பித்தாலே தீபாவளி முடிந்துவிட்டது
எங்களுக்கு. :)

அம்மா உறவினர்களுக்கு நண்பர்களுக்கு
பலகாரங்கள் எடுத்து வைத்திருப்பார்
கொண்டுபோய் கொடுத்து வாழ்த்துக்கள்
சொல்லி வருவோம்.

இப்போதெல்லாம் எல்லோரும் டீவி
முன் தான் இருப்பார்கள். முன்பு
தீபாவளி கொண்டாடிய சந்தோஷம்
இப்போது இல்லை. புத்தாடைக்கோ,
திண்பண்டங்களுக்கோ காத்திருப்பு
இல்லை. அதனால் தீபாவளிக்கு இருந்த
ஸ்பெஷல் மதிப்பு குறைந்ததாகவே
தோன்றுகிறது.

இதில் தொலைக்காட்சிகளின் சிறப்பு
நிகழ்ச்சிகளும் முக்கிய பங்குவகுக்கிறது.

மும்பையில் இருந்த போது தீபாவளி
இன்னும் சிறப்பாக இருக்கும். வீட்டிற்கு
முன் சீரியல் செட்கள் போட்டு ஒவ்வொரு
வீடும் பளிச்சென்று இருக்கும்.
நான் வேலைபார்த்த கம்பெனில் நாங்கள்
3 பேர்தான் பெண்கள். தீபாவளி ஷ்பெஷலாக
முப்பெருந்தேவியரும் ஜரிப்புடவை கட்டி
அசத்துவோம்.

தன் த்ரேயச் ( வட நாட்டு பழக்கமாக) தீபாவளிக்கு முதல் நாள்
வரும் த்ரயோதசி திதி அன்று அம்மம்மா
தங்க நகை வாங்குவார்கள். தங்கம்
முடியாவிட்டால் வெள்ளிக்காசு. கண்டிப்பாக
பால் காய்ச்சும் பாத்திரம் வாங்குவார்கள்.
அதில் பாயசம் செய்துதான் குபேரலட்சுமிக்கு
பூஜை செய்து படைப்பார்கள்.

இந்த இனிமையான நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டே
தீபாவளிக்கு ரெடியாகி கொண்டிருக்கிறேன்.

இதுக்கு முந்தைய தீபாவளி கொசுவத்திகளுக்கு

டிஸ்கி: ரொம்ப நாளா பதிவும் எழுதறதில்லை, ஆளையே
காணோம் அப்ஸ்காண்டான்னு???!!! என்னியக் காணோமேன்னு
தேடிக்கிட்டு(!!!) இருக்கற நண்பர்களுக்கு மீ கொஞ்சம் பிஸி.
புதுவீட்டில் மரவேலைகள் நடந்துகிட்டு இருக்கு. மத்த
வேலைங்களும் சீக்கிரம் முடிச்சு இந்த மாசக் கடைசியில்
குடி புக வேணும். அந்த வேலைகளாலத்தான் பதிவுலுகம்
பக்கம் வரமுடியவில்லை! எல்லாம் முடிச்சிட்டு கண்டிப்பா
வந்திடுவேன்.

அனைவருக்கும் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
எப்பவும் மறக்க முடியாத இந்தப் பாடல் உங்கள்
அனைவருக்கும்:



Wednesday, July 07, 2010

நாணயத்தின் மறுபக்கம்.

நான் பார்த்த வகையில் சில (பல) திருமணமான பெண்களைப் பார்க்கும் போது என் மனதில் எழும் கேள்வி, " இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது"?!

தவறாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்!!

அடிக்கடி அம்மா வீட்டுக்கு போவதைத்தான் கேட்கிறேன். கணவன் - மனைவி சண்டை, மாமியார் சண்டை, உறவுகளைப் பார்க்க, அம்மா, அப்பாவைப் பார்க்க, அது.... இது.... என்று போய் டேரா போட எப்படி முடிகிறது? இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் ஓய்வெடுக்க பிறந்த வீட்டிற்கு போவார்கள். எப்படிங்க?


எனக்குத் தெரிந்த ஒரு பெண். தாய்வீடும் உள்ளூரிலேயே அமைந்து விட
ஒவ்வொரு வெள்ளி இரவும், கணவனோடு பிறந்த வீட்டிற்கு போய்விடுவார்.
சனி,ஞாயிறு இரண்டு நாளும் குழ்ந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு இருவரும் ஊர் சுற்றுவார்கள். என்ன கொடுமை இது? இப்படியே கழியும் ஒவ்வொரு வார விடுமுறையும். சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அந்தப் பெற்றோர்கள்
படும் கஷ்டம். பாவம் அவர்கள்.

வெளியூரில் இருக்கும் பெண்கள் கூட அம்மா வீட்டிற்கு அடிக்கடி போவார்கள். பிறந்த வீட்டு பாசம் இருக்க வேண்டியது தான். ஆனால் நம்
கடமையை விட்டு, பாரமாக (சத்தியமாக திருமணத்திற்கு பிறகு அடிக்கடி போய் தங்கும் பெண்கள் பிறந்த வீட்டிற்கு பாரம்தான். என்ன ?தன் மகளாயிற்றே என்று சொல்ல மாட்டார்கள்) ஏன் போகவேண்டும்.

ஓய்வெடுக்க அம்மா வீட்டிற்கு போபவர்களே!! ஓய்வெடுக்கப் போக அது என்ன ஹோட்டலா? ஓய்வு வேண்டுமானால் குடும்பத்துடன் (முடிந்தால் பெற்றவர்களையும் அழைத்துக் கொண்டு) ஏதேனும் ஊருக்கோ, ஹோட்டலில் தங்கி ஓய்வெடுங்கள்.


வயதான் பெற்றவர்கள் நம் வேலையாட்கள் அல்ல.
நமக்காக பாடுபட்டு, நம்மை வள்ர்க்க ஓடியாடி உழைத்தவர்கள் அவர்கள்.
வயதான காலத்தில் சற்று ஓய்வெடுக்கவேண்டாமா? அவர்களின் தனிமையில், ஆன்ந்தத்தில் குறுக்கிடுவது தவறல்லவா?

அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உரிமையோடு பிறந்த வீட்டிற்கு செய்யலாமே?

( ஒரு தாய் 4 மணி நேரம் கலங்கிய கண்களுடன் புலம்பிய வார்த்தைகளின் சாராம்சம் இது)

டிஸ்கி: ஒவ்வொரு முறை மனைவி ஊருக்கு கிளம்பியதும் "அக்னிநட்சத்திரம்" ஜனக ராஜ் மாதிரி " என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்று சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் கணவன்மார்கள் என்னை மன்னீப்பீர்களாக!!!!

Tuesday, December 15, 2009

சமையற்குறிப்பு



திருமணம் நிச்சயம் ஆனதும் அம்மம்மாவிடம்தான் சமையல் கற்றுக்கொண்டேன். முதன் முதலில் அம்மா (நான் அப்படித்தான் அழைப்பேன்) தந்த சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக.


1.அடுக்களையில் நுழையும் முன் உன் கோபதாபங்களை மூட்டை கட்டி வைத்து விடு.


2. மனது அமைதியாக இருந்தால் தான் சமையலில் மனம் லயிக்கும்.


3. ரசித்து சமை! ருசியாக இருக்கும்.


4. தேநீர் கலந்தாலும் பால், சர்க்கரை, டீத்தூளுடன் 2 spoon அன்பையும் கலந்து பரிமாறு.


5. அன்பான, இனிமையான மனத்துடன் தயாரிக்கப்படும் எந்த உணவும் அமிர்தத்திற்கு சமானம். இல்லையேல் அது விஷமாகி விடும்.


இந்த சமையற்குறிப்பை நான் இன்று வரை கடை பிடிக்கிறேன்.



என் அடுக்களையைய் அலங்கரிக்கும் அடுக்களை பிரார்த்தனை. இதோ.

MY KITCHEN PRAYER
MY KITCHEN IS A HEAVEN THAT'S MINE AND MINE ALONE
BUT ALL WILL GET A WELCOME HERE, THE WARMEST THEY HAVE KNOWN.
SO, GOD I ASK YOU KINDLY TO BLESS THIS HALLOWED SPOT
WHERE I PERFORM GREAT MIRACLES WITH OVEN, PAN AND POT.
PLEASE ALSO BLESS MY COOKING SO THAT EACH MEAL I MAKE
BRINGS DEEPEST SATISFACTION TO ALL WHO MIGHT PARTAKE.
AND NOW GOD LET ME OFFER MY WARMEST THANKS TO YOU
FOR GRANTING US, OUR DAILY BREAD AND OTHER BLESSINGS TOO...


யாரோ சொன்னது:
A RECIPIE IS ONLY A THEME, WHICH AN
INTELLIGENT COOK CAN PLAY EACH TIME WITH VARIATION".


புத்திசாலித்தனம், சுவை, கற்பனனத்திறன்
ஆகியவை சமையற்கலையில் முழுதும்
பயன் படுத்தபடுகிறது.