Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு. Show all posts

Wednesday, September 18, 2013

ஆஷிஷை பார்த்து சிவா கேட்ட கேள்வி!!!!!!!!

2 மாசம் முன்னாடியே தம்பி மங்களூர் சிவா கிட்டேயிருந்து போன். அக்கா ஹைதை வர்றேன். உங்களை கண்டிப்பா சந்திக்க வருவேன்னு. ஆகா வாங்க தம்பி காத்திருக்கேன்னு சொன்னேன். இதுல கூத்து என்னென்னா அயித்தான் வேலை விஷயமா மங்களூர் போயிருந்தப்ப  சிவா போன் நம்பர் வாங்கி பேசி சந்திப்பு நடந்துச்சு.

மங்களூர் சிவா தம்பி   - ஹஸ்பண்டாலஜி பதிவுகளின் போது காரசாரமாக
விவாதம் நடக்கும். வீக் எண்ட் ஜொள்ளு படங்கள் புகழ் பதிவர். நான் பதிவு எழுந்த ஆரம்பித்திலிருந்து தொடர்பில் இருக்கும் அன்பான தம்பி.

ஆஷிஷ், அம்ருதா எல்லாரையும் பாக்கணும் எத்தனை மணிக்கு வந்தா சரியா இருக்கும்னு விவரம் கேட்டார். தம்பி வருவதை பசங்களுக்கு சொல்லலை. சர்ப்ரைஸ். அயித்தானுக்கு தெரியும். அன்றைக்கு எதேச்சையாக அயித்தானும் லேட்டாக ஆபிஸ் போக இருந்ததால் சிவாவுக்கு ஆச்சரியம். சாரை பார்க்க முடியோமோன்னு நினைச்சேன்னு சொன்னாப்ல. ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தாப்ல. பேசிக்கிட்டே சாப்பிட்டோம். அயித்தான் சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பிட்டார். சாயந்திரம் தான் வந்து சிவாவை ஷ்டேஷன் அழைத்து சொல்வதாக சொல்லிட்டு போனார்.

அப்புறம் நானும் சிவாவும் பல கதைகள் பேசிக்கிட்டு இருந்தோம். 2.45க்கு அம்ருதா வந்தாப்ல.  யார் வந்திருக்காங்கன்னு யோசிச்சுகிட்டே உள்ளே நுழைய ஊர் பேர் சொல்றேன் கண்டுபிடின்னு சொன்னேன். மங்களூர்னு ஆரம்பிச்சதுதான்.... சிவா அங்கிள்னு சொன்னாப்ல. போன்ல முன்னாடி பேசியிருக்காங்க. ஆனா முதல் சந்திப்பு இது. எனக்கும் தான். அம்ருதா கூட பேசிக்கிட்டு இருந்தாப்ல. அன்னைக்கு ஆஷிஷ் சீக்கிரமே 4.45க்கு வந்திட்டாப்ல. ஃபேஸ்புக்ல சிவாவை பாத்திருப்பதால ஆஷிஷ் அடையாளம் கண்டுகிட்டாப்ல.

அப்பதான் ஆஷிஷைப் பார்த்து அந்த கேள்வியை சிவா கேட்டார்.  இப்ப டீன் ஏஜ் வயசுல வீட்டு சாப்பாடு பிடிக்காது. அம்மா சமைப்பதை சாப்பிடாம வெளியில சாப்பிட பிடிக்கும்.!! எப்படி உங்களுக்குள்ள சண்டை வருதான்னு கேட்டார்.

ஆமாம் சிவா சண்டைதான் வருது!! அப்படின்னு சொல்ல அவர் வேற மாதிரி நினைக்கறதுக்குள்ள “வயிறு காஞ்சு வர்றியே இது நியாயமான்னு!?? சண்டைனு சொல்ல புரியலைக்கான்னார் சிவா தம்பி.

ஆஷிஷ், “ என் டப்பாவை நான் சாப்பிடுவதே இல்லை அங்கிள். லன்ச் ப்ரேக் விட்ட அஞ்சாவது நிமிஷம் என் டப்பா காலியாகிடும். வேற கிளாஸ்ல இருக்கற என் ஃப்ரெண்ட் கூட ஓடிவந்திடுவான். அம்மா கட்டி கொடுப்பதை நான் சாப்பிடாம அவங்க கொண்டு வர்றதை சாப்பிட்டு ஒப்பத்தறேன்”ன்னு சொன்னாப்ல.

இதுதான் பிரச்சனை எனக்கு இப்ப. ஆசை ஆசையாய் ஆஷிஷ் சாப்பிட அனுப்பினால் மத்த பசங்க சாப்பிட்டு கொண்டாட்டமா இருக்காப்ல.
சில சமயம் அவங்க கொண்டு வந்தது வயத்துக்கு பத்தாம சாயந்திரம் வரை காய்ஞ்சு வருவாப்ல. ஸ்கூல்ல ஒரு பையன்  ஆஷிஷிற்கு தெரியாம ஷார்ட் ப்ரேக்கிலேயே பாஸ்தா மொத்தத்தையும் காலி செஞ்சு வெச்சிருந்தாப்ல. லஞ்ச் ப்ரேக்ல பார்த்தா அட்சய பாத்திரத்துல இருந்த கீரை மாதிரி பாஸ்தா கண்ணுல பட்டிருக்கு!

 சில பசங்க ஆஷிஷ் நீ உங்க அம்மா கிட்ட சொல்லிடு. வர்ற ஞாயிற்றுக்கிழமை சாப்பிட வர்றோம். அப்படின்னு தானே இன்வைட் செஞ்சுக்கிடுவாங்க. இப்படி ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காங்களேன்னு சரி வர சொல்லுன்னு ஒரு நாள் லீவா இருக்கும்போது வரசொன்னேன்.

அதே சாப்பாடு தான். ஆனா ரெண்டு பசங்களும் சரியா சாப்பிடலை. நிஜமாவே இந்த பசங்க தான் ஆஷிஷ் கொண்டு போற சாப்பாட்டை சாப்பிடறாங்களா இல்லை வேற ஏதுமான்னு டவுட் வந்திருச்சு. அடுத்த நாள் ஆஷிஷ் காலேஜுக்கு போய் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நீங்க சரியாவே சாப்பிடலைன்னு சொல்லி வருத்தப்பட்டாங்க அப்படின்னு சொல்ல,” சாரி ஆஷிஷ். உங்க அம்மா சாப்பாடு பக்குவமா கலந்து கொடுக்கறாங்க.  நேத்து எங்களுக்கு கலந்து சாப்பிட தெரியலை!!! அதான் சரியா சாப்பிடலைன்னு!! சொல்லியிருக்காப்ல.
எப்படி இருக்கு பாருங்க??? “ஏன்யா அவங்க வீட்டுல சாப்பாட்டை கலந்துதானே சாப்பிடணும்னு கேட்டா சிரிக்கறாப்லயாம்.

சாம்பார், வத்தக்குழம்பு, காரக்குழம்பு சோறு கலக்கும்போதே கொஞ்சம் நல்லெண்ணையும் சேர்த்து கலக்குவேன். உடம்புக்கும் நல்லது. நல்ல மணமாவும் இருக்கும்னு எங்க அம்மம்மா சொல்லிக்கொடுத்தது இந்த மெத்தட். அதோட கொஞ்சம் நெய் விட்டா இன்னும் வாசம் தான்.

இப்ப இந்த கூட்டத்துல இன்னொரு புள்ளையும் சேர்ந்திருக்கு. தினமும் ஆஷிஷ் டப்பாவை எடுத்து வெச்சுக்கிட்டு தாரளாமா தன் டப்பாவை ஆஷிஷுக்கு கொடுத்திடறாப்லயாம். ”ஆண்ட்டிக்கோ போல். ஆஜ்கா கானா பகுத் அச்சா ஹைன்னு!!” மெசெஜ் வேற வருது. பதின்ம வயசுல வீட்டு சாப்பாடு பிடிக்காம போகும் சூழல் இருக்கு. ஆனா ஆண்டவனருள்ல ஆஷிஷ்க்கு சாப்பாடு பிடிக்காம போகலை.....  சந்தோஷமா இருக்கு. கிடைக்காம போகுதேன்னு வருத்தமா இருக்கு. ஆனா நான் அனுப்பற மிளகு ரசம், காய்கள்னு கொஞ்சமாவது ஆரோக்யமான சாப்பாடு, நல்லெண்ணெய் நெய் எல்லாம் சேர்த்து மத்த பதின்ம வயது பசங்களுக்கும் உடம்புல சேருதேன்னு சந்தோஷமாவும் இருக்கு.

போற போக்கை பார்த்தா ஒரு படத்துல பிந்து கோஷ் ஒரு பெரிய கேரியர் கொண்டு வருவாங்க. அது மாதிரி கட்டி அனுப்பினாத்தான் ஆஷிஷுக்கு கொஞ்சமாவது சாப்பாடு கிடக்கும்!!!!!


     இன்னைக்கு விசர்ஜன்னு ஸ்கூல் லீவு. ரெண்டு பேருக்கும் பரிட்சை இருப்பதால கூட இருந்து ஹெல்ப்  செஞ்சுகிட்டு இருப்பதால வேற எதுவும் செய்யாம சிம்பிளா ராஜ்மா சாவல் செஞ்சேன். (ராஜ்மா கறியும், சோறும்) இதுவும் ஆஷிஷ் கிளாஸ் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். என்னய்யா செய்யறன்னு வந்த மெசஜுக்கு சும்மா இருக்க முடியாம ஆஷிஷ்,”இட்ஸ் ரெயினிங் அவுட்ஸைட்!!! எஞ்சாயிங் ரஜ்மா சாவல்!!!னு மெசெஜ் தட்ட
“தேரே கர் கா அட்ரஸ் செண்ட் கர்” (வூட்டு அட்ரஸ் அனுப்புன்னு) மெசெஜ் வருது.

:)))

 

Thursday, June 04, 2009

அன்பாலே அழகான அம்பேத்கர் மண்டம்பம்...

என்ன எல்லோரும் சொளக்கியமா?
சென்னையில் பதிவர் சந்திப்பு இருக்கும்
என்று சொல்லியிருந்தேன். நானானி
அவர்களின் ஏற்பாட்டால் மிக
சிறப்பாக நடந்தது.

திங்களன்று மதியம் 3 மணிக்கு R.A Puram
அம்பேத்கர் மண்டபத்தில் பதிவர் சந்திப்பு
நடந்தது. முக்கியமான பங்கு நானானி அவர்களுக்குத்தான்.

நானானி, கோமா, வல்லி சிம்ஹன்,
அமுதா கலந்து கொண்டோம். பர்மிஷன்
போட்டுக்குகொண்டு எட்டியாவது பார்த்துவிட
வேண்டும் என்று வந்திருந்தார் அமுதா.

நானானிம்மா, வல்லிம்மா இருவரும்
இனிமையாக எழுதுவதைப்போலவே,
இனிமையாக அன்பாக பேசுகிறார்கள்.

அன்பைக் கொட்டும் அந்த வார்த்தைகள்
மனதுக்கு இதமாக இருக்கிறது.

குட்டி பதிவர்களாக ஆஷிஷும், அம்ருதாவும்
கூட கலந்து கொண்டார்கள்.

வெயிலையும் மீறி இதமானகாற்று வீசிக்கொண்டிருந்தது.

பரஸ்பர அறிமுகம் முடிந்து
கலந்துரையாடிக்கொண்டிருந்தோம்.

ஸ்நாக்ஸ் ஜூஸ் எல்லாம் எடுத்து வந்திருந்தார்கள்
நானானியும் கோமாவும். உங்கள் அன்பை
என்னவென்று சொல்வது!!!!

வேறு சிலரும் கலந்து கொள்வதாக இருந்தது.
வார இறுதியாக இருந்தால் அனைவரும்
கலந்து கொண்டிருப்பார்கள். அலுவலக
நாளாக இருந்ததால் பலரால் கலந்து
கொள்ள முடியவில்லை.:(


சர்ப்ரைஸ் விசிட்டாக அப்துல்லாவும்
வந்து கலந்துக்கொள்ள பிள்ளைகள்
இருவரும் ஒரே சந்தோஷம்.

“மாமா, உங்க பாட்டு பாடுங்க”! என்று
அம்ருதா அடம் பிடிக்க...

“உங்க பாட்டை கம்ப்யூட்டரில் வெச்சு
கேட்டுகிட்டுத்தான் வேலை நடக்குது!!”
அப்படின்னு சொல்லி மாமாவை பாட
வைக்க முயற்சி செஞ்சாங்க.

குரல் கட்டி போயிருந்த நிலமையிலும்
ஒரு வரி மருமகபிள்ளைகளுக்காக
பாடிவிட்டுத்தான் சென்றார்.


”இந்த சந்திப்பு உனக்காக. அனைவருக்காகவும்
வார இறுதியில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு
செய்து சந்திக்கலாம்”, என்று நானானிம்மா
சொன்ன பொழுது மனசுக்கு மகிழ்ச்சியாக
இருந்தது.

Saturday, December 13, 2008

பதிவர் சந்திப்பு

நான் வலைப்பூத் தொடங்கி எழுத ஆரம்பித்த உடன்
சந்தித்த முதல் நண்பர் எங்கள் புதுகை ப்ளாகர்களின்
தானைத் தலைவர் சுரேகா அவர்கள்தான். புதுகையில்
அம்மா வீட்டிற்கு சென்றருந்த பொழ்து 30 நிமிடம்
தான் நேரம் இருக்கிறது. வந்து பார்க்கிறேன்
என்றார். மழையால் 1 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.


அதன் பிறகு தம்பி அப்துல்லாவுடனான சந்திப்பு நிகழ்ந்தது.

ஆங்காங்கே பதிவர் சந்திப்பு நடந்ததுன்னு பதிவு போட்டு
வயிற்றெரிச்சல் கிளப்பி விட்டுக்கொண்டிருப்பார்கள்.

நாம இருக்கற ஊருல சந்திப்பு ந்டக்க மாட்டேங்குதே!ன்னு
நினைப்பேன்.

இன்று மதியம் அப்துல்லாவிடமிருந்து ஒரு போன்.

அக்கா நம்ம தாமிரா ஹைதை வந்திருக்கிறார். அவரும்
கார்க்கியும் உங்களை சந்திக்க விரும்புகிறார்கள்?
அப்படின்னு சொன்னார். உடனே போன் நம்பர் கொடுங்கன்னு
சொன்னேன். தாமிரா பேசினார் முதலில். அடுத்து
கார்க்கியிடம் பேசினேன். பாரடைஸில் ஒரு
ஹோட்டலில் தங்கி இருப்பதாகச் சொன்னார்.
அட கிட்டத்துல தான் இருக்கீங்க, வாங்கன்னு
அட்ரஸ் சொன்னேன்.

30 நிமிடத்தில் வந்தார்கள். தாமிரா தங்கமணிகளைத்
திட்டி பதிவிடுபவர்.:) காரசாரமாக இந்த சந்திப்பு இருக்கப்போகிறது
என்று நினைத்துக்கொண்டிருந்தேன். எதிரும் புதிருமான
இந்த சந்திப்பு (அதாங்க ஹஸ்பண்டாலஜி பேராசிரியர்/
ரங்கமணிகள் சங்க உறுப்பினர்) எதிர் பாராதவிதமாக
நான் எதிர் பார்த்ததற்கு எதிரும் புதிருமாக நடந்தது.
(வலைப்பூவில் கலக்கும் தாமிரா நேரில்
மிக மிக பவ்யமாக இருந்ததன் காரணம் என்ன
தாமிரா?)


கார்க்கி முதலில் சந்தித்தாலும் நன்றாக பேசினார்.
பரிசல்காரனின் சமீபத்திய பதிவான ஓண்டிக்கட்டை
உலகம் புத்தக விமர்சனம் போல் தனிமை கொடுமையைச்
சொன்னார். தனிமை ரொம்ப கொடுமைதான்
கார்க்கி. நாங்கல்ளாம் இருக்கோம்.



பயந்து பயந்துக்கொண்டே நான் கொடுத்த டீயை
சாப்பிட்டார்கள். எப்படி இருந்தது என்றும் நானும்
கேட்கவில்லை (நல்லா இருக்கும்னு எனக்குத்
தெரியும்!!! :)) ) அவங்க பயந்த பயத்துக்கு நான்
வேற கேள்வி கேட்டு அதுக்கும் இன்னும் பயப்படுவாங்களோனு
கேக்கவே இல்லை.

எப்படியோ என் ஆசை நிறைவேறியது. எல்லோரும்
கவனிச்சுக்கோங்கப்பா!! ஹைதையிலும் வலைப்பதிவர்
சந்திப்பு நடந்திடுச்சு. நாங்களும் ப்ளாக்கர்ஸ்தான்.

:)))))))))