Showing posts with label வித்தியாசமானவை. Show all posts
Showing posts with label வித்தியாசமானவை. Show all posts

Thursday, September 17, 2009

ஏடாகூடா ஆசிர்வாதங்கள்!!!!

அப்பா எப்போதும் சொல்லும் வாழ்த்து
“மனம்போல் வாழ்க்கை” அல்லது “வாழ்க வளமுடன்”தான்.
இந்த முறை பிறந்தநாளுக்கு அப்பா சொன்ன வாழ்த்து,
“தொங்கத் தொங்கத் தாலி கட்டி!நல்லா இரு”!!!

”அப்பா! தாலியை சோக்கர் டைப்ல போடலைப்பா,
தொங்கத்தான் கட்டியிருக்கேன்” இது நான். :)

மறுமுனையில் ஒரே ஹா..ஹா..ஹா.தான்.

”என்னப்பா காலங்காத்தால காமெடி பண்ணிகிட்டு
இருக்கீங்க!” இதைக்கேட்டதும் அப்பா சொன்னது,
“தொங்கத் தொங்கத் தாலி கட்டின்னா அர்த்தம்
கூன் விழுந்து உன் தாலி இன்னும் தொங்கும்
அளவுக்கு நீண்ட் ஆயுளும், தீர்க்க சுமங்கலியாகவும்
இருக்கணும்னு ஆசிர்வாதம் செஞ்சேன்னு” சொன்னாரு.

அப்பாவோட பாசம் ஜாஸ்தியா போச்சு.......


கடந்த 14ஆம் தேதி அம்மம்மா தாத்தாவின் 60ஆவது
திருமண நாள். போனைப்போட்டு அம்மம்மாகிட்ட
பேசினா “என்னைப்போல நீயும் 60ஆவது திருமணநாள்,
80ஆவது திருமணநாள் எல்லாம் கொண்டாடம்னு
ஆசிர்வதிச்சாங்க”




அப்பா சொன்ன வாழ்த்து பத்தி சொன்னதும் அம்மம்மா
இன்னும் சில ஏடாகூட ஆசிர்வாதங்கள் இருக்குன்னு
சொன்னாங்க.( ஏடாகூடம்னா ஏடாகூடமான பொருள்
வரும் வாழ்த்து இல்ல. வாழ்த்துற விதம் கொஞ்சம்
ஏடாகூடமா இருக்கும்.) ”ஆஹா சொல்லுங்கம்மா!”ன்னு
அம்மம்மாகிட்ட கேட்டதை இங்கே சொல்றேன்.
(இதை எதிர்க்கறவங்க தயவு செஞ்சு படிக்கவேண்டாம். ப்ளீஸ்)


உறவினர் வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிப் பெண்ணிற்கு
அந்த வீட்டில் இருக்கும் மாமியார் தனது புதுமருமகளை
அறிமுகப்படுத்தறாங்க. ”கால்ல விழுந்து கும்பிட்டுக்கம்மா”
என்றதும் விழுந்து கும்பிட்ட மருமகளுக்கு விருந்தாளி
அம்மா செஞ்ச ஆசிர்வாதம்,”உம்பொட்டழிய!! உன் தாலியறுக்க!!!
உன் வீட்டுகோலம் கலைய!!!” வந்தது கோபம் மருமகளுக்கு
“என்ன ஜென்மமோ, ஆசிர்வாதத்தைப்பாருன்னு!!!” மாமிக்கும்
முறைப்புக்காட்டிட்டு கோபத்தோட உள்ள போயி புருஷன் கிட்ட
“உங்க உறவுக்காரங்க எல்லோருமே உங்க அம்மா மாதிரி தான்
ஏடாகூடமா இருப்பாங்களா”ன்னு சண்டை போட ஆரம்பிச்சா..

உள்ள கேக்குற சத்தத்தை பாத்து விருந்தாளி அம்மாவே
உள்ள வந்து புருஷன் பொண்டட்டியைக்கூப்பிட்டு தான்
சொன்னதுக்கு அர்த்தம் சொல்ல ஆரம்பிச்சாங்களாம்.

”நான் வாழ்த்தினதுக்கு அர்த்தம் இதான் சீக்கிரமே
ஒரு குழந்தைக்கு தாயாகனும்னு சொன்னேன்.
குழந்தையுடன் விளையாடும்பொழுது அழியாத
பொட்டே இல்லை!! அம்மாகிட்ட பால் குடிக்கும்பொழுது
குழந்தையின் கை தானாக தாலிக்கொடியை பிடிச்சுக்கும்.
அதனால சில சமயம் அறுந்து போகும்!! தாலியறுக்கன்னு
இதைத்தான் சொன்னேன்.



எந்த வீட்டுலயும் போடப்படும் கோலத்தை குழந்தை
வந்து அழிக்கும். குழந்தைக்கு அது ஒரு விளையாட்டு
மாதிரி.” நான் சொன்னது இதைத்தான். அர்த்தம் புரியாம
தப்பா எடுத்துக்கிட்டு கோபப்படுறியே தாயின்னு!!”
சொன்னாங்களாம். எப்படி இருக்கு ஏடாகூட ஆசிர்வாதம்!!!


இதைச் சொல்லிட்டு அம்மம்மா சொன்னதுதான் ஹைலைட்டு.
“ச்ராவணகுமாரனின் அப்பா, அம்மா தசரதனுக்கு “நீ புத்ரசோகத்தால்
இறப்பாய்னு” சாபம் கொடுத்தாலும் வம்சம் தழைக்க குழந்தை
பிறக்க மறைமுகமா ஆசிர்வதிச்சிருக்காங்கன்னு” சொன்னாங்க.

நாகரிகமாக மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப்தி டே சொல்றோம்.
படிக்காத பாமரமக்களின் வாழ்த்துக்கள் ஆசிர்வாதமாக
இருக்கு.

Tuesday, September 15, 2009

FREE DELIVERY!!!!!!!

ஏதாவது சாமான் வாங்கினா கைவலி எடுக்க மூட்டை
தூக்கிகிட்டு வந்தது அந்தக்காலம்!!

சுண்டைக்காய் காப்பணம், சுமைக்கூலி முக்காப்பணம்
எனும் பழமொழி மாதிரி வண்டிக்கு பணம் கொடுப்பதை
விட தூக்கிகிட்டு வருவது நல்லதுன்னு சாமானை
நாமளே தூக்கிகிட்டு வருவோம்.

நான் சின்னதா இருந்த பொழுது மாச சாமான் வாங்க
அம்மாகூட போவேன். கீழ 2ல இருக்கற அர்பன் ஸ்டோர்லதான்
வாங்குவோம்.ரேஷன் கடை. சாமான் சுத்தமா தரமா
இருக்கும். 1 மாதம் க்ரெடிட் கிடைக்கும் என்பது
எக்ஸ்ட்ரா. சாமான் ஜாஸ்தியா
இருந்தா ரிக்‌ஷாவுல போட்டு எடுத்துகிட்டு போவோம்.
இல்லாட்டி அம்மா என்னை சாமானுக்கு காவலா வெச்சிட்டு
சாமானை கொண்டு போய் வீட்டுல போட்டுட்டு வருவாங்க.
அடுத்த ட்ரிப்ல அம்மாகூட சாமனை எடுத்துகிட்டு நானும்
போவேன்.......

இப்ப எங்க போனாலும் சாமானை தூக்குற வேலையில்லை.
சில சூப்பர் மார்க்கெட்டுகளில் சாமான்களை வாங்கி
அங்கேயே வைத்துவிட்டு ஹோம்டெலிவரி என்று
சொல்லிவிட்டால் நமது விலாசம் எல்லாம் வாங்கிகிட்டு
அவங்களே கொண்டுவந்து வீட்டுல கொடுத்திடுவாங்க.
ரொம்ப வசதி.

பர்னீச்சர்கள் இப்பல்லாம் ஃப்ரி ஹோம் டெலிவரிதான்.

சூப்பர் மார்கெட்டுகள் தவிர சில மளிகை கடைகளும்
ஃப்ரி ஹோம் டெலிவரி தர்றாங்க. போன் செஞ்சு
தேவையானவற்றை போதும் சாமான் வீட்டுக்கு வந்திடும்.



சாமான்களுக்கு அடுத்து உணவு. போன் செஞ்சா போதும்
தேவையான உணவு வீட்டுக்கு வந்திடும். பிட்சா டெலிவரி
மாதிரி நம் தெந்நிந்திய உணவுவகைகள், வட இந்திய
உணவுவகைகள் எல்லாமும் ஃப்ரீ ஹோம் டெலிவர்
லிஸ்ட்ல இருக்கு. பெரிய பெரிய நகரங்களில் இது தான்
நடை முறை.


நெட்டுல ஃப்ரி ஹோம் டெலிவரின்னு போட்டு தேடினா
எம்புட்டு சைட்கள். இண்டியன் ஃபுட்னு போட்டாலும் வருது!!!
போன்லாம் வேணாம் ஆன்லைன்லயே சொல்லி சாப்பாடை
வரவழைச்சிடலாம்.

இலங்கையில் இருந்தப்ப, திடும்னு முடிவெடுத்து நாட்டை
விட்டு கிளம்பிக்கிட்டு இருந்தாங்க என் ஃப்ரெண்ட். வீட்டுக்கு
சாப்பிட கூப்பிடவும் முடியாது. நேரமே இல்லை. பிட்சாஹட்டுக்கு
போனைப்போட்டு பிட்சா ஆர்டர் செஞ்சு டெலிவர் அட்ரஸ்
ஃப்ரெண்ட் வீட்டுது கொடுத்து பணம் வந்து என் கிட்ட வாங்கிக்கிட
சொல்லிட்டேன். அழகா பசி நேரத்துக்கு பிட்சா டெலிவரி
செஞ்சாங்க. நான் ஆர்டர் செய்யவேயில்லையேன்னு!! அவங்க
ஆச்சரியமா குழம்ப போனைப்போட்டு தாக்கலை சொல்ல அவங்களுக்கு
ரொம்ப சந்தோஷம். ஃப்ரி ஹோம் டெலிவரினால நல்லதுதான்.


சரி இப்ப இதனால் என்ன வந்துச்சு??!! ஃப்ரீ ஹோம் டெலிவரினால
அலைச்சல் இல்லை, வண்டிக்கு தண்டமா அழத்தேவையில்லை,
ஆத்திரம் அவசரத்துக்கு சாப்பாடு வந்திடுது.... அப்புறமென்ன???

இதனால நாம கொஞ்சம் சோம்பேறி ஆயிட்டோமோன்னு தோணுது.

சாப்பாடு, சாமான்கள், வீட்டுக்கு உபயோகமான பொருட்கள் எல்லாம்
ஹோம் டெலிவரி செய்யப்படுவது சரி..

எனக்கு வந்த போன்கால் தான் இந்தப் பதிவுக்கு காரணம்!!!

ஏதோ ஒரு பார்மஸிலேர்ந்து போன் செஞ்சு ,”நாங்க மருந்துகளை
உங்க வீட்டுக்கு வந்து கொடுக்கறோம், 10 பர்சண்ட் விலை
கழிவுல தர்றோம்” அப்படின்னு சொன்னாங்க. இதப்பார்றா!!
நல்லா இருக்கேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.

15 நாள் கழிச்சு அந்த மருந்துக்கடையி்லேர்ந்து போன் செஞ்சு
”என்னங்க! நீங்க மருந்து ஏதும் வாங்கலியா!!!” அப்படின்னு
கேக்க அடப்பாவிகளா! மருந்து என்ன அடிக்கடி வாங்க
வேண்டிய சாமானா!! போனப்போட்டு மருந்து வாங்கங்குன்னு
சொல்ற அளவுக்கு போயிடிச்சேன்னு நினைச்சேன்.

இன்னொரு கடையிலேர்ந்து போன் செஞ்சு,”மேடம்
நாங்க ட்ரைஃப்ரூட்ஸ் உங்க வீட்டுக்கே டெலிவரி தர்றோம்.
வேணுங்கறபோது கண்டிப்பா போன் செய்ங்க, தரமானது,
நல்ல சகாயவிலையில தர்றோம்னு”!! சொன்னாங்க....

அவ்வ்வ்வ்வ்வ் ட்ரைப்ரூட்ஸ் என்னாவிலை!!

இப்படியே போன இன்னும் யார் யாரெல்லாம் ஃப்ரி ஹோம்
டெலிவரி தர்றோம்னு போன் செய்வாங்கன்னு யொசிச்சு
பாத்தேன்......... மண்டை காயுது.

(யாரவது யோசிச்சு யார்யாரெல்லாம் ஃப்ரி ஹோம் டெலிவரி
தர்றோம்னு சொல்வாங்கன்னு பதிவு போடுங்கப்பு)

நெட்டுல இந்த கார்ட்டூன் கிடைச்சது........




ஒண்ணும் சொல்ற மாதிரி இல்ல........

Wednesday, July 29, 2009

வித்தியாசமாய், அழகாய்...அழைப்பிதழ்கள்

வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கும்
அழைப்பிதழ் அச்சிடுவோம். அந்த
அழைப்பிதழ் சிற்ப்பாக இருக்க வேண்டும்
என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும்.


சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில்
வித்யாசமான அழைப்பிதழ் பற்றி படித்தாக
ஞாபகம். இரண்டுவருடங்களுக்கு முன் வீட்டில்
நடந்த விசேடம் ஒன்றிற்கு அழைப்பிதழ் தெரிவு
செய்ய வேண்டும். மனதுக்குள் அந்த அழைப்பிதழ்
தான் ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓவியரின்
பெயரும் மறந்துவிட்டேன். ஆனால் அந்த அழைப்பிதழ்
தான் என்பதில் திடமாக இருந்தேன். நெட்டில் தேடினால்
ஈசியாக கிடைக்கும் என்றாலும் ஓவியரின் பெயர்
தெரியாதே!!!

என் நண்பர் ஒருவரிடம் இதுப்பற்றி பேசிக்கொண்டிருந்த
பொழுது ஆமா, நானும் படிச்சேன். பெயர் மறந்து
போச்சு, ஆனாலும் தேடித்தர்றேன் என்று சொன்னார்.
சொன்னால்போல அடுத்த நாள் அவரது மெயிலும்
வந்ததும். அந்த லிங்கை தொடர்ந்து பார்த்த
பொழுது மனதுக்குள் மிக்க மகிழ்ச்சி.

அப்படி என்ன விசேடம் இந்த அழைப்பிதழில்.
எந்த ஒரு நிகழ்வும் எதற்காக செய்யப்படுகிறது?
என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

திருமணச் சடங்குகள் எதற்காக? போன்ற
விடயங்கள் எளிதாக புரியும் விதத்தில்
சடங்குகளின் புகைப்படத்தோடு அழைப்பிதழ்
இருந்தால் அனைவருக்கும் புரியும் தானே!!

பல நாளிதழ்கள் இவரைப்புகழ்ந்து
பாராட்டியிருக்கிறார்கள்.

அந்த ஓவியர் மாயா. அவரின் ஓவியங்கள்
நம் கலாச்சாரத்தை பரைசாற்றும் அழைபிதழ்களாகி
இருக்கின்றன.

அழைப்பிதழ் மாடல்கள் சில பார்க்க

ஷஷ்டியப்தபூர்த்தி எனப்படும் 60ஆம் கல்யாண
வைபோக அழைப்பிதழ்கள்.


கிருஹப்ப்ரவேசம் அழைப்பிதழ்

அழைப்பிதழ்கள் வாங்குவது எப்படி?
அச்சிடுவது என எல்லா விவரங்களூம்
இந்த வெப்பேஜில் இருக்கிறது.





பாருங்களேன்..

Tuesday, March 24, 2009

கதைகேளு கதை கேளு....

ஒரு புத்தகத்தில் இந்தியாவுக்கு வாக்கபப்ட்டு வந்து
சந்தோஷமாக இருக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள்
பற்றிய ஒரு கட்டுரையில் இவரைப் பற்றி பார்த்தேன்.
அப்போது இவரைப்பற்றி வெகுவாக தெரியாது.

மார்ச் 27 தேதியிட்ட அவள்விகடனில்
இவரின் புகைப்படத்தைப் பார்த்து ஆச்சிரியப்பட்டு
கட்டுரையைப் படித்தேன். மிக மிக வியந்தேன்.

சென்னையில் இவர் உலககதை சொல்லும்
நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நம்மூர் ஆயாக்களை வெப்கேம் மூலம் கதை
சொல்ல வைத்து குழந்தைகளை மகிழ்விக்கிறார்.

கதை கேட்பது எல்லோருக்கும் பிடிக்கும்.
இதைப் பத்திய வெப்சைட் எங்கே? என்றுதேடுவோம்
என்று தேடினால் அவரின் வலைப்பூ கிடைத்தது.
அதன் லிங்க் இங்கே:

Professional Storyteller


World Storytelling Institute

Wednesday, June 11, 2008

ஆத்தாடி!!!!!!!!!!!!!!!! அதிசியமால்ல இருக்கு!!!!!!!!!!!!!!

இந்தப் போட்டோவுல இருக்கறவுக கடல்லயோ, நதியில்ல்யோ
படகுல போறாகன்னுதானே நினைக்கீக!!!

அதான் இல்ல.





சமுத்திரத்தை ஒட்டினா மாதிரி இருக்குற ஹோட்டலுன்னு
தானே நினைக்கீக. அதுவும் இல்ல.








இதுதான் உலகத்திலேயே இருக்கிற பெரிய நீச்சல் குளமாம். எம்மாம் பெருசு
பாருங்க.






புள்ள புறந்தா ஊர்ல இருக்குற அம்புட்டு சாமி பேரையும்
வெக்கிறதா வேண்டிக்கிட்டு மொள நீளத்துக்கு
பேரு வைப்பாக கேட்டிருக்கோம்.

இந்த இடத்தோடப் பேருதான் உலகத்திலையே
மிகப் பெரிய பேராம்ல.