Showing posts with label சுயதம்பட்டம். Show all posts
Showing posts with label சுயதம்பட்டம். Show all posts

Monday, March 26, 2012

கின்னஸ் சாதனையில் நாங்களும்

ஹைதையில் நேற்று கின்னஸ் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
பிசினஸ் ஆஃப் டாலிவுட் எனும் அமைப்பு வேறு சில பார்டனர்களுடன்
சேர்ந்து நேற்று இந்த புதிய சாதனையை நடத்தியிருக்கிறார்கள்.


அயித்தானின் நண்பர் மூலமாக எங்களுக்கும் பாஸ் கிடைத்து
நாங்களும் கலந்துகொண்டோம். ஹைதராபாத்தின்
ஹைடெக்ஸ் சிட்டியி நேற்று இரவு ஸ்கை
லேண்டர்ன்கள் விண்ணில் பறந்தது.
மேகத்துக்கு தூது விட்டது போலிருந்த இந்த நிகழ்ச்சியில்
கொஞ்ச நேரம் வானமே இந்த விளக்குகளால் நிரம்பி
காற்றில் அசைந்து சென்றது அழகோ அழகு. சரியாக
இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்தச்
சாதனை நிகழ்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


இதற்கு முன் இந்தோனேஷியாதான் 10,283 லேண்டர்ன்களை
பறக்க விட்டு கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறது. நேற்று
ஹைடெக்ஸ் சிட்டியில் 8000த்திற்கும் மேல்பட்ட மக்கள்
திரண்டு 12000 லேண்டர்ன்களை விண்ணில் அனுப்பி சாதனை
புரிந்திருக்கிறார்கள். இதில் நாங்களும்பங்கு பெற்றோம்
என்பதில் ரொம்ப சந்தோஷம்.


இது ஒன்றும் புதிய நிகழ்ச்சி இல்லையாம். முன்பு விவசாயிகள்
மாதம் மும்மாரி பெய்து நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும்
என்று இப்படி விளக்குகளை விண்ணில் செலுத்தி வருணபகவானுக்கு
வேண்டுகோள் விடுப்பார்களாம். இப்போதும் நல்ல மழை வேண்டி
இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக விழா நிர்வாகிக்கள் சொல்லியிருந்தார்கள்.

7.45க்கு துவங்கிய இந்த நிகழ்ச்சியில் மண்ணில் ஓவியம்
வரைவதை காட்டினார்கள். மிக அருமையாக இருந்தது.
முன்னாள் நடிகை டிஸ்கோ சாந்தி (தன்னை அப்படி அழைப்பதை
அவர் விரும்புவதில்லை. சாந்தி மட்டும்தான்) தனது கணவர்
நடிகர் ஸ்ரீஹரியுடன் பங்கேற்றிருந்தார். அவர்களின் அக்‌ஷரா
ஃபவுண்டேஷன் அமைப்பும் தனது பங்களிப்பை இந்த நிகழ்ச்சிக்காக
அளித்திருந்தது.

நேரம் கிடைக்கும் பொழுது வீடியோ, மற்றும் வேறு சில
புகைப்படங்களை பதிவிடுகிறேன்.






Wednesday, December 21, 2011

பதினாறு வயதினிலே!!!!

பெரியவங்க வாழ்த்தும் போது கூட என்றும் பதினாறுன்னு வாழ்த்துவாங்க.
மார்க்கண்டேயர் போல என்றும் இளமையுடன் நல்ல வாழ்வு வாழ்க என
அர்த்தம்.

பருவ வயதுகளில்”16” க்கு ஒரு ஷ்பெஷல் இடம் தான். ஸ்வீட் 16 என
கொண்டாப்படும் அந்த தளிர் இளம் பருவம் ஒரு சுகானுபவம். படிப்பு,
எக்ஸாம் என கொஞ்சம் டென்ஷன் இருந்தாலும் நாம் ஸ்வீட் 16 எனும்
நினைப்பே அதிக இளமையாக காட்டும்.

இப்ப 16க்கு என்னன்னு கேக்கறீங்களா. 20 நாளைக்கு முன்னால எங்க
திருமண வாழ்க்கை 16ஆம் வயதில் அடி எடுத்து வைத்த நந்நாள்.
(அப்ப போட நினைச்ச பதிவு இம்புட்டு லேட்டா போடுறேன்)



வாழ்த்து சொல்லும் பொழுதே அயித்தானிடம் இன்னைக்கு நம்ம
கல்யாண நாளுக்கு ”ட்ரைவிங் லைசன்ஸ் அப்ளை செய்யலாம்பா”.
தற்காலிக ஓட்டுனர் உரிமம் பெறும் வயது வந்திருச்சுன்னு ஜோக்
அடிச்சேன். சூப்பரா ஒரு சுடிதார், அயித்தானுக்கு பேண்ட் ஷர்ட்
எடுத்து முன்னாடியே ரெடி செஞ்சு வெச்சாச்சு.

இது மட்டும் போதுமா?? 16 வயசாச்சே!!! என்ன செய்யலாம்னு
மண்டை குடைச்சலுடன் நெட்டை குடைஞ்சேன். கூகுள் ஆண்டவர்
புண்ணியத்தில் ஐடியாக்கள் கிடைச்சது. Traditional anniversary
gift லிஸ்டில் 16 வருடத்திலிருந்து ஏதும் பெருசா கிடையாது.
ஆனா மாடர்ன் கிஃப்ட் லிஸ்டில் hallow silverware/silver.

வெள்ளியில் ஆண்களுக்கு என்ன பரிசு கொடுப்பது? மோதிரம்
வாங்கலாம்னு ப்ளான் செஞ்சா “நான் என்ன தவில் காரரான்னு”
கேப்பாரு. வாட்ச் ஃபாதர்ஸ் டேக்கு பசங்க வாங்கிக்கொடுத்திருக்காங்க.
சம்திங் ட்ஃபரண்டா இருக்கணும்னு யோசனை. சர்ப்ரைஸா இருக்கணும்.
ஜெர்மன் சில்வரில் அழகான பொளல் ஒன்று வாங்கி வைத்தேன்.
டெக்கரேட்டிவா நல்லா இருக்கும்.

இரண்டு நாள் முன்னாடியே அயித்தானுக்கு பிடித்த பட்டர்ஸ்காட்ச் கேக்
ஆர்டர் செய்து வைத்திருந்தேன். சில்வர் தீம் என்பதால் சில டெக்கரேட்டிவ்
ஐட்டங்கள் வாங்கி வைத்திருந்தேன். டிசம்பர் 1 மில்க் மெய்ட் சேமியா
பாயசம், பிசிபேளாபாத் செய்தேன். அயித்தானுக்கு மிகவும்பிடித்தது.
மதியம் லன்சுக்கு வீட்டுக்கு வந்த சென்ற உடன் பிள்ளைகள் வந்ததும்
கடகடவென டெக்கரேட் செய்து ரெடி செய்தோம். ஓடிப்போய் கேக்
வாங்கி வந்தேன். சில்வர் கலர் பெல், சில்வர் கலர் டெக்கரேடிவ்
ஐட்டங்கள் என வீடே ஜொலித்தது.

5மணிக்கு வீட்டுக்கு வந்தார். டெக்கரேஷன் பார்த்து அசந்து போனார்.
:)) கேக்கை கொடுத்து கட் செய்தோம்.பிள்ளைகள் எனக்கு
புடவை வாங்கி கொடுத்தார்கள். அயித்தானுக்கு டீ ஷர்ட். கேக்
கட்டிங் முடிந்ததும் ஜெர்மன் சில்வர் கிஃப்ட் கொடுத்து 16 ஆம் வருடத்தின்
தீம் படி செய்திருக்கிறேன் என்றேன். ஒரே சந்தோஷம் அயித்தானுக்கு.
குடும்பத்திற்காக அல்லும் பகலும் பாடு படும் அந்த ஜீவனுக்கு என்னால்
முடிந்த ஒரு சந்தோஷத்தை தந்த திருப்தி.

இரவு டின்னர் GREEN PARK HOTELல் இருக்கும் ONCE UPON A TIME
RESTAURANT
ல். இங்கே உணவும் சுவையாக இருக்கும். நம் பர்ஸும்
இளைக்காது. :))

திருமணநாள் பரிசு ஐடியாக்களுக்கு இந்த வலைத்தளங்கள் பார்க்கலாம்.

வலைத்தளம் 1


வலைத்தளம் 2

வலைத்தளம் 3

FOR TRADITIONAL AND MODERN GIFTS TABLE



Get Your Own Hindi Songs Player at Music Plugin

Friday, September 09, 2011

உக்கிரான அறை

எங்க புதுகையில் நரசிம்ம ஜெயந்தி கல்யாணமண்டபம் ரொம்ப
பிரசித்தி. மே மாதம் வரும் நரசிம்ம ஜெயந்தி விழா நடக்க என
கட்டி விட்டிருக்கிறார்கள். அந்த மாதம் தவிர மற்ற நாட்களில்
அங்கே திருமணங்களும் நடக்கும். ஊருக்கு நடுவே பெரிதாக
இருக்கும் கல்யாண மண்டபம் என்பதால் பல திருமணம் அங்கே
நடக்கும். அப்புறம் தான் லேனா எல்லாம் வந்தது.

நரசிம்ம ஜெயந்தி கல்யாணமண்டபத்தில் சமையலறைக்கு எதிரே
உக்கிரான அறை (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா மன்னிச்சிடுங்க)
அப்படின்னு எழுதி ஒரு ரூம் இருக்கும். அங்கே காய்கறிகள்,
பழங்கள், மளிகை சாமான்கள் எல்லா வெச்சிருப்பாங்க. அந்த
ரூம் வாசலிலேயே ஒருத்தர் சேர் போட்டு உட்கார்ந்திருப்பார்.
எல்லோரும் திருமண விழாவில் பிசியா இருக்கும் பொழுது
இவர் மட்டும் இங்கே உட்கார்ந்திருப்பார். முஹூர்த்த நேரத்தில்
மட்டும் யாராவது ஒரு நிமிடம் வந்து நிற்க இவர் போய்
அட்சதை போட்டு வருவார். ஒவ்வொரு திருமணத்திற்கும்
அங்கே உட்காரும் ஆள் மாறும்பொழுது இது சத்திரக்காரர்கள்
சேர்ந்த ஆள் இல்லை என்று புரிந்தது. அந்த அறைப்பற்றியும்
அங்கே உட்காருபவர் பற்றியும் அம்மாவிடம் கேட்டேன்.

அப்பொழுதெல்லாம் இந்த காண்ட்ராக்ட் மேரேஜ் கிடையாதே.
அதனால் ஆளுக்கு ஒரு வேலையை பகிர்ந்து செய்து
கொடுப்பார்கள். அதில் முக்கியமானது இந்த உக்கிரான அறை
ட்யூட்டி. சமையல்காரர் எந்த நேரமும் எந்த சாமான் வேண்டுமானாலும்
கேட்கலாம் என்பதால் அங்கேயே இருக்க வேண்டும். பூட்டிக்கொண்டு
போய்விட முடியாது. சாமான்களுக்கு அவர்தான் ஜவாப்தாரி
என்பதால் நம்பிக்கையான ஆளை மட்டுமே அங்கே உட்கார
வைக்க முடியும். மொய் எழுத உட்கார்வதற்கும் நெருங்கிய
சொந்தமோ, அல்லது நம்பிக்கையான ஆளோதான் ஏற்பாடு
செய்வார்கள். என்று அம்மா சொன்னார்.

இவ்வளவு மேட்டர் இருக்கா என வியந்தேன்.
இந்த உக்கிரான அறை எனும் எழுத்து
இன்னமும் என் கண்முன் நரசிம்ம ஜெயந்தி கல்யாண மண்டபத்தில்
படித்தது ஓடிக்கொண்டே இருந்தது. பொறுப்பாக செய்ய ஒருவர்
இருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும். மானிட சேவை
எவ்வளவு நல்ல சேவை என்றெல்லாம் யோசித்துக்கொண்டே
இருந்தேன். அந்த பதத்தின் மீது எனக்கு அப்படி ஒரு
ஈடுபாடு எப்படி வந்தது என்றே தெரியவில்லை!!!

ஆனால் என்னையும் அப்படி ஒரு தன்மையான,நம்பிக்கைக்கு
பாத்திரமுள்ள, இவளிடம் கொடுத்தாள் இந்த வேலை நன்கு
செய்வாள் என்று சொல்லும் பொறுப்பையும் ஏற்படுத்திக்கொள்ள
வேண்டும் எனும் எண்ணத்தை வளர்தது உக்கிரான அறைதான்!!!
நம் மீது நம்பிக்கை வரவைப்பது ரொம்ப கஷ்டம். அதே போல
செய்வதை திருந்தத்தான் செய்கிறோமா என்பதையும் அடுத்தவர்கள்
புரிந்து கொள்ள் வைப்பதும் கடினம்.

எனக்கு 18 வயது ஆன பொழுது அப்பா,அம்மா வீட்டு விஷயங்களில்
கலந்து பேசுவார்கள். அது எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக
இருந்தது. நம் எண்ணத்தையும் கேட்கிறார்கள் (செயல்படுத்துகிறார்களா
இல்லையா என்பது வேற பிரச்சனை) என்ற எண்ணமே நம்பிக்கையைத்
தந்தது. எனக்குள் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்தது. உறவினர்களுக்கு,
நட்புக்களுக்கு பிடித்தது என்ன என்பதை பேச்சுவாக்கில் கேட்டு ஞாபகத்தில் வைத்திருப்பேன்.
அவர்களுக்கு அதையே அன்பளிப்பாக கொடுப்பேன். அவர்களும் அக
மகிழ்வர். என் அம்மம்மாகூட,”யாருக்கு என்ன பிடிக்கும்னு கலாவை
கேட்டால் தெரியும்! என்றோ இவங்களுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்?
என்றோ கேட்டு அதன்படி செய்வது உண்டு. ஆக என் செயல்பாடுகள்
இவர்களுக்கு ஏதோ ஒரு நல்ல செய்தியை தந்திருக்கிறது அதனால்தான்
என்மீது நம்பிக்கை வைத்து என் எண்ணத்தை கருத்தில் எடுத்து
கொள்கிறார்கள்.சந்தோஷமாக இருந்தது. அப்போதும் அந்த உக்கிரான
அறையை நினைவில் வைத்திருந்தேன்.

திருமணமாகி ஆஷிஷ் பிறந்து அம்ருதாவை கருவில் சுமந்துகொண்டிருந்த
பொழுது அயித்தானின் அண்ணன் மகள் திருமணம். மாமாவும், அத்தையும்
வேலைக்கு போவதால் பல பொறுப்புக்களை எடுத்து செய்ய வேண்டிய
கட்டாயம். வயது ஜஸ்ட் 25!! மண்டபம் பார்க்க,பத்திரிகை வைக்க,
சாமான் வாங்க,என ஓடிக்கொண்டி இருந்தேன். போட்டோகிராபர்
ஏற்பாடு செய்து வைத்திருந்தேன். நான் இருந்த வீட்டிற்கு கீழ்
இருப்பவர். அவரது வேலை மிக அருமையாக இருந்தது. திருமணம்
முடிந்து உடனே ஆல்பம் கொடுத்துவிட்டார். சீடியும் மிக அருமையாக
வந்திருந்தது. அமெரிக்கா செல்ல விசா நடவடிக்கைகளின் பொழுது
சில சமயம் நிறைய்ய புகைப்படங்கள் பார்ப்பார்களாம். ஆனால்
அயித்தானின் அண்ணன் மகள் காட்டிய ஆல்பத்தின் முதல் பக்கம்
மட்டும் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டே திருப்பி கொடுத்துவிட்டார்கள்.
(விசாவும் தான் :))

“ரொம்ப நல்ல போட்டோகிராபி சித்தி. உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்!”
என பலமுறை சொல்லிக்கொண்டிருந்தாள்.

எனது திருமணத்திற்கு அப்பா ஏற்பாடு செய்திருந்த மேரேஜ் காண்ட்ராக்டரையே
ஏற்பாடு செய்தோம். மிக அருமையாக எல்லாம் செய்து கொடுத்ததோடு
மட்டுமில்லாமல் எங்கள் பட்ஜட்டில் 45,000 மிச்சம் பிடித்து கொடுத்தார்.
1999ல் 45,000 மிச்சம் என்றால் பணத்தின் மதிப்பு பார்த்து கொள்ளுங்கள்.
மாமா என் கையில்தான் கிட்டத்தட்ட 3 லட்சம் பணம் கொடுத்து
எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருந்தார். அந்த
பணத்தை கையில் வாங்கும் பொழுது அந்த உக்கிரான அறை என்
கண்முன் வந்து சென்றதை தவிர்க்க முடியவில்லை.

என்னை நான் டெவலப் செய்துகொள்ள நரசிம்ம ஜெயந்தி கல்யாண
மண்டப உக்கிரான அறை ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்பதில்
எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.


Thursday, September 08, 2011

ஆஷிஷின் புது ஃப்ரெண்ட்!!!! :)))

என்ன ஒரு துணிச்சல்!! நான் இருக்கும்பொழுதே இந்த ஆட்டம்
போடுறாங்க ரெண்டு பேரும்!!! சில சமயம் ரொம்பவே ஆட்டம்
ஜாஸ்தியா இருக்கு. என்னால ஒண்ணும் செய்ய முடியலை! :((
அப்பார்ட்மண்ட் மொத்தம் இவங்க சத்தம் தான். தாங்க முடியலடா
சாமி!!!

பில்டப்பை பார்த்து என்னவொ ஏதோன்னு பயப்பட்டுட்டீங்களா?
ஆஷிஷுக்கு ஒரு புது ஃப்ரெண்ட் கிடைச்சிருக்கு. அதைப் பத்தி
பகிர்ந்துக்காட்டி எப்படி? அதான் இந்தப் பதிவு.

பிப்ரவரி மாத கடைசில எங்க தளத்துல கிரஹப்ரவேசம் செஞ்சு
குடிவந்தாங்க. மார்ச் மாசம் என் பசங்களுக்கு பரிட்சை, அப்புறம்
ஊர் சுற்றல், திரும்ப ஸ்கூல் அப்படி இப்படின்னு பிசியா இருந்தோம்.
அதனால அதிகம வெளியில வரலை. மே மாதம் லீவு என்பதால
மெல்ல பசங்க வெளியில வந்தாங்க. (ஆஷிஷ்,அம்ருதா இன்னொரு
பையன் தவிர எல்லாம் சுட்கூஸ் (அதாங்க குட்டீஸ்) அதனால
பசங்க ரொம்ப வெளியில வராம இருந்தாங்க)

அப்ப ஆரம்பிச்சுச்சு கலாட்டா! ஆஷிஷை கண்டால் போதும் அந்த
வாண்டுக்கு. முழுமையா பேச்சு வரலை அப்ப. 2 வயசு 2 மாசம்தான்.
ஆஷிஷ்... ஆஷிஷ்னு கூப்பிடும். அண்ணான்னு சொல்வதை
உள்ளேயே முழுங்கிடுவா!! :)) அவனைக்கண்டால் போதும் தூக்கிக்கொள்ளச்
சொல்லி அடம். அய்யா ஒசரமா இருப்பதால எல்லா இடமும்
நல்லாத் தெரியுதுன்னு அவனை தூக்கச் சொல்வாளோன்னு பேசிப்போம்.

அம்மையாருக்கு உடம்பு சரியில்லாம போனா ஆஷிஷுக்கு மருந்து
கொடுப்போம். அப்பதான் மேடம் குடிப்பாங்க. மேடத்தோட பேரு
சொல்ல மறந்திட்டேனே! சாய் சுடுதி. (சாயி ஸ்ருதி) இன்னும்
ர வரலை. மழலை மாறாத பேச்சு. ஆனா நல்ல எக்ஸ்பிரஷன்.
நொப்பு (நொப்பி-வலி), பெகுடு (பெருகு-தயிர்), கூட (கூர-காய்)
தோஸ்தா (தோசை- ப்ரெட்டுக்கும் அதேதான்)இப்படி எங்க வீட்டில் இப்போ ஸ்ருதி மொழிதான்.

இப்ப கதவைத் திறந்தா போதும் ஆஷிஷ் அண்ணான்னு ஓடி வந்திடுவா. அவங்க வீட்டு
கதவை திறந்துகிட்டு வரத் தெரிஞ்சிருச்சு. ஜூலைலேர்ந்து ப்ரீஸ்கூல்
போக ஆரம்பிச்சிருக்கா. ஆஷிஷ் வீக் எண்ட்ல பிசியா இருந்து
போய் பார்க்க முடியலைன்னா போதும் அவனை விட்டு இறங்கவே
மாட்டா. எதிர் வீடுதான். ஆனா அண்ணாக்கு இந்த மாசம்
முதல் டர்ம் போர்ட் எக்ஸாம் என்பதால அவரு பிசி. சரி
கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வந்திடலாம்னு போனா விட
மாட்டாங்க மேடம். அம்டுதா (புரிஞ்சிருக்குமே) எஸ்ஸு
அம்ருதா கூடவும் நல்லா விளையாடுவா ஆனா ஆஷிஷ் அண்ணாவைக்
கண்டால் அது என்னவோ அப்படி ஒரு அன்பு மழைதான். அன்பு எம்புட்டு
தூரம்னா ஆஷிஷ் அண்ணா நான் படிக்க போறேன்னு சொன்னா,
”ஸ்டாண்டிங் லைன் ஒத்து”!! என்று சொல்லிவிடுவாள்.
அவள் படிப்பது ஸ்டாண்டிங் லைன். ஆஷிஷும் அதுதான் படிக்கிறான்
என்று நினைத்து நீ அதெல்லாம் படிக்க வேண்டாம், என்னுடன்
விளையாடு என்று மேடம் பேச்சு.

இல்லாட்டி தானும் படிக்கிறேன்னு பென்சிலை வைத்துக்கொண்டு
கிறுக்கி கொண்டிருப்பாள்!! பக்கத்தில் வீட்டில் இன்னொரு உழக்கு
இருக்கு. அவனை ஆஷிஷ் எடுத்துக்கொண்டால் ஸ்ருதிக்கு
பிடிக்காது!! சில சமயம் எங்க வீட்டுக்கு வந்துவிட்டு,”அம்மா
ஒத்து” (அம்மா வேண்டாம்) என்று சொல்லிவிடுவாள். அவங்க அம்மா வந்து
அழைத்து சென்றால் அழுகைதான். சரி ஆஷிஷ் கொண்டு போய்
விடலாம் என்றால் கழுத்தைக் கட்டிக்கொண்டு விட்டால்தானே.
சில சமயம் எங்க வீட்டு கதவை யாராவது திறந்து வைத்திருப்போம்.
அவங்க வீட்டு கதவையும் திறந்து வைத்து யாராவது நிற்போம்.
ஆஷிஷ் ஸ்ருதியை தூக்கிக்கொண்டு போய் கொஞ்சம் விளையாட்டுக்
காட்டி அவளுக்குத் தெரியாமல் தப தப என ஓடி வர ஒவ்வொரு
கதவாக மூடுவோம்!!மெல்ல மூடை மாற்றுவார் அவள் அம்மா.
கூடிய சீக்கிரம் ஆஷிஷ் இருக்கும் அப்பார்ட்மெண்ட் எது என்று
கேட்டாள் வீதியில் அனைவரும் அடையாளம் சொல்லிவிடுவார்கள்
என நினைக்கிறேன். :)) அண்ணாவை அம்புட்டு பாசமா கூப்பிடறாங்க
மேடம். சில சமயம் அம்ருதாவிடம் பேச நினைத்து முதலில்
ஆஷிஷை கூப்பிட்டு அப்புறம் அம்ருதாக்கா அப்படின்னு ஆரம்பிக்கும்
அளவுக்கு ஆஷிஷ் அண்ணா மேல அன்பு.

எங்க அப்பார்ட்மெண்ட்ல இந்த வாட்டி விநாயகர் வைத்திருந்தோம்.
பூஜையில் அண்ணாவும் இன்னொரு பையனுக்கும் கங்கணம்
கட்டி விட்டிருந்தார் பூஜாரி. அதனால் இருவரும் எல்லா நாள்
பூஜைக்கும் பிள்ளையார் அருகேயே இருக்கவேண்டும். அண்ணாவுடன்
இந்த அம்மையாரும் அண்ணாவுடனேயே சுற்றிக்கொண்டிருந்தாள்.

நம்ம மாண்டிசோரி படிப்பை உபயோகிச்சுகிட்டு இருக்கேன்னு
சொன்னேன்ல அது இந்த குட்டீஸுக்குத்தான். கைகளாலேயே
ஸ்டாண்டிங் லைன், ஸ்லீப்பிங் லைன் காட்டுவா. ரைம்ஸ்
அழகா சொல்லும். முழு வார்த்தை வரலை என்றாலும் சில
ரைம்ஸ் அழகா மழலையில் கேக்கணும்!! அவங்க மாதிரி
நானும் ரைம்ஸ், ஸ்டாண்டிங் லைன் ஸ்லீப்பிங் லைன் எல்லாம்
சொல்வேன் என்பதால நானும் அவளுடைய தோஸ்த்!!

ஸ்கூலில் ஏதாவது ஃபங்ஷன் என்றால் போட்டுச் செல்லும்
ட்ரெஸ்ஸை வந்து எனக்கு காட்டிவிட்டுதான் செல்வாள்.
அப்படி காலையில் மிஸ் செய்துவிட்டேன் என்றால் மதியம்
ஸ்கூலிலிருந்து வந்ததும் நேராக என்னிடம் வந்து அன்றைய
விஷயங்கள் எல்லாம் பகிர்ந்துக்கொண்டால்தான் நிம்மதியாக
இருக்கும். என்ன சாப்பிட்டாள்? என்ன செய்தாள்? எல்லாம்
அழகாக சொல்வாள். சில நாள் கையில் ஸ்டார் வரைந்து
அனுப்பியிருப்பார்கள். அதை என்னிடம் கொண்டு வந்து
காட்டும் அழகே அழகு!! லிஃப்டை விட்டு இறங்கியதும்
அவங்க வீட்டுக்கு கூட போகாமல் என் வீட்டு கதவைத்
தட்டி,”ஆண்ட்டி! ஆண்ட்டி! ஸ்ருதி ஸ்கூல்!!” என
ஆரம்பித்துவிடுவாள். எடுத்துக்கொண்டு விவரம் கேட்டு
மெல்ல அவர்கள் வீட்டில் விடுவேன். தினமும் அவள்
என்ன செய்தாள் என்று லேட்டஸ்ட் அப்டேட்ஸ் கேட்பார்கள்
ஆஷிஷும் அம்ருதாவும்.

குழந்தைகளால் உலகம் அழகாகிறது. அது இப்போ
இன்னொரு முறை உறுதியாகி இருக்கு.

Tuesday, August 30, 2011

தட்டிக்கேட்டோம்!!! வெற்றிக்கண்டோம்

திவான் படுத்திய பாடுன்னு பதிவு போட்டிருந்தேன்ல. ஒருவழியா
அந்த திவான் அம்மாவீட்டுக்கு போய் சேர்ந்திருச்சு. ஒருவழியான்னு
சொல்றேனே தவிர அதுக்கு நிறைய்ய போராட்டம் செய்யவேண்டி இருந்தது.

நம்ம சகபதிவர் எங்கள் புதுகை ப்ளாக்கர்களின் தலைவர் சுரேகா
ஒரு பதிவு போட்டிருந்தார். அதெல்லாம் சாத்தியமில்லீங்கன்னு
என்னுடைய திவான் பதிவுக்கு லிங்க் கொடுத்தேன். படிச்சிட்டு
சேர்ந்து குரல் கொடுப்போம்னு சொன்னாரு. அப்படீங்கறீங்கன்னு!!!
நம்பிக்கை இல்லாமத்தான் விவரங்கள் கொடுத்தேன்.

திவான் படுத்தும் பாடு பதிவில் திவான் பெங்களூர் போய் ஒரு
கஸ்டமர் வீட்டில் இருக்குன்னு சொன்னாங்கன்னு சொன்னேன்ல.
அந்த கஸ்டமடி வீட்டில் தப்பா இறக்கி வெச்சது வரைக்கும் நிஜம்.
தப்பா இறக்கி வெச்சா அதை ஏன் அந்த கஸ்டமர் தரலை. அவருக்கு
அவர் கஷ்டம். அவருடைய சாமான்கள் சரியா பேக் செய்யப்படாததால்
உடைஞ்சு போயிருந்ததாம். அதனால அவரு சென்னை பேக்கர்ஸுக்கு
நீங்க எனக்கு பணம் கொடுத்தாதான் இந்த திவானை எடுக்க விடுவேன்னு
சொல்லி வீட்டைப்பூட்டிக்கிட்டு போயிட்டாரு!!! இவங்கதான் கஞ்சப்பிசினாரிங்க.
ஆச்சே!! திவானை அப்படியே விட்டுட்டானுங்க. அயித்தான்
பெங்களூர் போயிருந்த பொழுது பெங்களூரில் இருக்கும் சென்னை
பேக்கர்ஸ் ஆபிஸில் பேசி அந்த கஸ்டமர் போன் நம்பர் வாங்கி
அவரிடம் பேசினால் அவர்தான் மேலே சொல்லியிருக்கும் விவரத்தை
சொன்னது!! அப்புறம் அயித்தான் பெங்களூர் ஆபிஸ்காரங்களுக்கு
கெடு கொடுத்து” இன்னைக்கு சாயந்திரம் எனக்கு திவானை அவங்க
வீட்டிலேர்ந்து எடுத்து அனுப்புற வழிய பாருங்க!! அதுக்கு மொதல்ல
அந்த கஸ்டமருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து அவரு
எனக்கு போன் செய்யணும்” அப்படின்னு சொல்ல நல்ல புள்ளைங்க
மாதிரி அவருக்கு பணத்தை கொடுத்து திவானை கொண்டு வந்திட்டாங்க.


அப்புறமும் உடனே திவானை அனுப்பலை!!!! சேலம் அனுப்புறேன்னாங்க,
திருச்சிக்கு அனுப்புறேன்னாங்க. திரும்ப சென்னைக்கே அனுப்பிட்டோம்னாங்க.
போன் மேல போன் செஞ்சுகிட்டே இருந்தோம். இந்த சமயத்துல
நம்ம புதுகை ப்ளாக்கர் சுரேகா அவர்கள் பதிவு பாத்து என்னோட
சோகத்தை சொன்னேன். விவரம் தாங்க. கண்டிப்பா செய்வோம்னாரு.

அவரு நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலச் செயலாளர்!. எங்ககிட்ட கம்ப்ளையெண்ட் கொடுத்திருக்காங்கன்னு!! அவர் ஆரம்பிக்க அதுவரைக்கும் போலிஸ்
ஸ்டேஷன் போனா போன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்க. இந்தா
அந்தோன்னு புதுகைக்கு பக்கத்தாப்ல ஊருக்கு ஏதானும் வண்டி
போகுதான்னு பாத்து 15 நாள் முன்னாடி மதுரைக்கு அனுப்பிட்டாங்க.
புதுகை-மதுரை 3 மணிநேரம் தான் பயணம். ஆனா புதுகைக்கு
இந்த திவானை அனுப்ப அவங்களால முடியலை.

அப்புறம் சுரேகா ஐடியா கொடுத்து திவானை கேபிஎன் பார்சல்
சர்வீஸ்ல போட்டு அனுப்புங்கன்னு சொன்னா. அனுப்பிடறேன்
சார்! அவங்களை போய் எடுத்துக்க சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்க.
“இந்த பாரு! வீட்டு வரைக்கும் கொண்டு போய் கொடுக்கறேன்னுதான்
காசு வாங்கியிருக்க! இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீ நஷ்ட
ஈடு கொடுத்துக்கறேன்னு நினைக்கும்பொழுது நான் ஒண்ணும்
செய்ய முடியாதுன்னு சொல்ல” ஆஹான்னு ஆகியிருக்கு அவங்களுக்கு.

இதுக்கு நடுவுல நாங்களும் திரும்ப எங்க திவான் என்னாச்சுன்னு
கேட்டுகிட்டே இருக்க. ஹைதை ஆபிஸில் அந்த ஆளு டென்ஷன்
ஆகிட்டாம்.”என்ன அதுக்குள்ள(!!!)) ஃபேஸ்புக்ல் எல்லாம்
எழுதிட்டீங்க(பதிவு போட்டது சொல்றாப்ல) கன்ஸ்யூமர் கோர்டுக்கு
ஏன் போனிங்கன்னு கத்த, சுரேகா சொல்லிக்கொடுத்த படி பேசினதை
அயித்தான் ரெக்கார்ட் செஞ்சு வெச்சுகிட்டாரு.

10 நாளைக்கு முன்னாடி சுரேக்கா கேட்டபொழுது நாளைக்கு காலேயில்
டெலிவரி ஆகிடும் சார்னு சொல்லியிருக்காங்க. எத்தத்தினா பித்தம்
தெளியும்னு தெரியாத நிலைன்னு சொல்வாங்க. அதுபோல என்ன
செய்வதுன்னே தெரியாத ஒரு நிலையில இருந்தோம். சுரேகாவும்
அடிக்கடி போன் போட்டு அவங்களை காய்ச்சிகிட்டே இருந்திருக்காரு.
(அவரோட வேலைப்பளுகளுக்கு இடையே இதுவும் ஒரு பாரம்னு
எங்களுக்கும் ரொம்ப வருத்தம்)

போன வாரத்துல ஒரு நாள் திடும்னு சுரேகா போன் செஞ்சு
“அவங்க நீங்க கொடுத்த அட்ரஸ், சலான் எல்லாம் தொலைச்சிட்டாங்க.
அப்பா வீட்டு அட்ரஸ் கொடுங்கன்னு சொன்னாரு!!!” அடக்கொடுமையேன்னு
ஆகிப்போச்சு. அப்பா அட்ரஸ், போன் நம்பர் அனுப்பியிருந்தேன்.

சனிக்கிழமை அனுப்பிடறதா திரும்ப சொல்லியிருக்காங்க மதுரை
ஆபிஸ்ல. கடைசியில சுரேகா மதுரை ஆபிஸ்ல யாரை தொடர்பு
கொள்ளணுமோ அவரு நம்பர், கேபிஎன்ல போட்டு அனுப்பினாங்களே!
அந்த நம்பர் எல்லாம் அயித்தானுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினாரு.
அந்த நம்பர்ல தொடர்பு கொண்டு பேசினோம். சனிக்கிழமை ராத்திரி
9.30க்கு போன் செஞ்சு சார் இப்ப கொண்டு போய் டெலிவரி கொடுக்கவா!!
கேட்க “சாமிகளா! அவங்க வயசானவங்க. இந்நேரம் படுத்திருப்பாங்கன்னு”
சொல்ல நேற்று 29-8-11 திங்கள்கிழமை சுபயோகசுபதினத்தில் மதியம்
1.30 மணிக்கு திவான் அம்மா வீட்டுக்கு போய் சேர்ந்திருச்சுங்க.

அங்க தூக்கிப்போட்டு இங்க தூக்கிப்போட்டுன்னு கேபி என்ல போடும்
வரைக்கும் நல்லா இருந்த திவானின் 2 புஷ் போய் கொஞ்சமா
டான்சாடிகிட்டு ஓரளவுக்கு பத்திரமாவே வந்து சேர்ந்திருக்கு.
சுரேகாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

தட்டிகேட்டால் கிடைக்கும்னு அவர் சொன்னது நிஜமாயிடிச்சு.
விழிப்புணர்வு வரணும். உபயோகதராரா நம்மளூடைய உரிமையை
நாம தெரிஞ்சுகிட்டு உரிமை மறுக்கப்பட்டால் தட்டுவதில் தப்பே இல்லீங்க.




திவான் புதுகைக்கு பத்திரமா ஒரு வழியா போய்ச்சேர்ந்த சந்தோஷத்தோட
இன்னொரு சந்தோஷமும். எங்க வீட்டுக்கு ஹேப்பி பர்த்டே!!! :))

சென்ற வருஷம் ஆகஸ்ட் 30தான் இந்த வீட்டுக்கு கிரஹப்ரவேசம் செஞ்சோம்.
அதுக்கும் சேர்த்துதான் ட்ரீட்.

Tuesday, March 15, 2011

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி!!!!!

அப்பாடின்னு பெருமூச்சு விட்டக்கறேன். இன்னையோட
அண்ணனுக்கு பரிட்சை முடிஞ்சிருச்சு. அம்ருதம்மாவுக்கு
வெள்ளிக்கிழமையே பரிட்சை முடிஞ்சாச்சு. இனி ஒரு 3 மாசம்
எனக்கு ஜாலியோ ஜாலி. என் ஃப்ரெண்ட் ரெண்டு பேரும்
கூட இருப்பாங்க. ஏப்ரல் மாதம் ஸ்கூல் கூட அரைநாள்தான்
சாப்பிட வீட்டுக்கு வந்திடுவாங்க. செம ஜாலிதான்.



அண்ணனுக்கு இந்த வாட்டி ப்ரிபோர்டு, போர்டு( 9க்கு
போர்ட் எக்ஸாம் சிபிஎஸ்ஸில!!) அப்படி இப்படின்னு
3 மாசமா செம டென்ஷன், பிரபரேஷன்னு ஒரே மண்டை
காய்ச்சல். எங்கயாவது கிளம்பி டூர் அடிக்காட்டி
அம்புட்டுதான். அத்தோட அடுத்த வருஷம் அதிகம்
லீவு கிடைக்காது. எங்க சின்னி 10 பரிட்சை எழுதப்போறாருல்ல!!!
அதனால ஒரு வாரத்துக்கு ப்ரேக். எஸ்ஸு மீ த கோயிங்
டாடா!!! எல்லோருக்கும் லீவு சொல்லிக்கிடறேன்.
திரும்ப வந்து பதிவு போட்டுத்தாக்கிடறேன். (காம்பன்சேட்
செஞ்சிடுவேன் :))



மார்ச் 19 ஹோலி. அனைவருக்கும் ஹோலி நல்வாழ்த்துக்கள்.


Saturday, March 05, 2011

ரேக்ளா வருது...... பங்களா ஒதுக்கு!!!!

அயித்தான் எப்பவுமே இப்படித்தான்! சும்மாலும் இருக்க மாட்டாரு.
நீச்சல் கத்துக்கோன்னு சொல்லி நீச்சல் பழகியாச்சு. இப்ப
வண்டி. டூ வீலர் கூட இல்ல... நாலு சக்கர வாகனம். :( :))

எல்லோரும் கார் ஓட்டக் கத்துக்கிடணும்னு பாடிக்கிடு இருந்திருப்பாரு
போல. அக்டோபர் மாதத்தில் ஒரு சுபயோக சுபநாளில் என்னை
கார் டிரைவிங் கத்துக்க வைக்கணும்னு முடிவு செஞ்சிட்டாரு.
அயித்தான் சொன்னா அப்பீல் ஏது!! சரிங்கன்னு சொன்னேன்.
கண்ட கண்ட இடமெல்லாம் வேணாம்னு சொல்லி சின்னப்புள்ளைய
ஸ்கூல்ல சேக்கிறமாதிரி விசாரிச்சு கடைசியா என்னையும் கூட்டிகிட்டு
போய் மாருதி டிரைவிங் ஸ்கூல்ல பணத்தை கட்டினார்.

எல் எல் ஆர் வாங்கினாத்தான் வண்டியை ரோட்ல ஓட்டவே
விடுவாங்க அவங்க. அந்தக் கருமத்தை வாங்க ஆன்லைன்ல
பரிட்சையெல்லாம் எழுதச் சொல்றாங்க. இந்த ஆர்டீஒ ஆபீஸ்
காரங்க. அதுவும் ஸ்லாட் புக் செஞ்சு குறிப்பிட்ட நேரத்துக்கு
அங்கின போய் எல்லாம் செய்யணும். இரண்டு தடவை ஸ்லாட்
செஞ்சு அது கான்சலாகி கடைசியா பிப்ரவரி 1 பரிட்சை எழுதி சரி சரி
கம்ப்யூட்டரில் கிளிக்கி எல் எல் ஆர் வாங்கியாச்சு.

ஊருக்கு போயிட்டு வந்தது, அம்மா அப்பா வந்திருந்ததுன்னு
ஒரு மாசம் ஓடியே போச்சு. இப்ப டிரைவிங் கிளாஸ் போக
ஆரம்பிச்சாச்சு!! ஆனா உண்மையில் நல்லதா ஒரு டிரைவிங் ஸ்கூல்
தேர்ந்தெடுத்து சேத்ததுக்கு அயித்தானுக்கு தாங்கீஸு சொல்லிக்கிடறேன்.
வண்டி ஓட்ட கத்துக்கிட்டா எல்லோரும் மாருதி டிரைவிங் ஸ்கூல்லதான்
கத்துக்கணும். மாருதி கார்கள் தயாரிக்கும் அதே கம்பெனிதான்
இந்தியாவில் பல மாநிலங்களில் நடக்கும் விபத்துக்களைப் பார்த்து,
நம் இந்தியாவில் ஓட்டுனர்கள்(மக்கள்ஸ் தான்) நல்ல படியா வண்டி ஓட்ட
திட்டமிட்டு ஆரம்பிச்சிருக்காங்க.

முதலில் காரைப்பத்தி டெமோ. அப்புறம் சிமுலேஷன் வீடியோ கேம்ஸ்
மாதிரி. ஆனா நல்லா கத்துக்கலாம், 3 கிளாஸ் சிமுலேஷன் முடிச்சி
ரோட்ல காரை ஓட்டப்பழக்கி அதுல ஏதும் ப்ராப்ளம்னா திரும்ப சிமுலேஷன்ல
வெச்சு ப்ராக்டிஸ் செய்ய வைக்கறாங்க. இதுல தியரி கூட உண்டு.
இப்படி முறையோட கத்துகிட்டா ரோட்டில் விபத்துக்கள் குறையும்னு
நல்லா புரிஞ்சுகிட்டேன். சிலர் டிரைவிங் கத்துகிட்டு வண்டி கையில
வந்ததும் தன் இஷ்டத்துக்கு ஓட்டுவாங்க. புயல் மாதிரி வண்டி ஓட்டி
அடுத்தவங்களுக்கு டென்ஷன் கொடுக்கன்னே சிலர் இருப்பாங்க. இந்த
மாதிரி சமயத்துல நாம நல்லா வண்டி ஓட்டினாலும் சிக்கல்தானே!
ஆனா தன்னம்பிக்கையோட நாம வண்டி ஓட்டினா எந்தச் சிக்கலையும்
சமாளிக்கலாம்னு மாருதி ஸ்கூல் காரங்க சொல்லிக்கொடுக்கறாங்க.

சென்னையிலும் மாருதி டிரைவிங் பள்ளி இருக்குதுங்க. யாருக்காவது
உதவும் என்பதால அவங்க வெப் அட்ரஸ் கொடுத்த்திருக்கேன்.

மாருதி ஸ்கூலில் ஃபீஸ் அதிகமா இருக்குமோன்னெல்லாம் பயப்பட
வேண்டாம். வேகன் ஆர் வண்டியில் 4 தியரி கிளாஸ், 6 (1/2 மணி)
சிமுலேஷன் கிளாஸ், 10 நாள் பிராக்டிகல் (ரோட்ல கார் ஓட்ட பழக்குவதுன்னு)
கோர்ஸுக்கு (மொத்தம் 20 மணிநேரம்) 3600. லைசன்ஸ் நாம தான்
வாங்கிக்கணும். அந்தச் செலவு அதுல வராது.

ஆச்சுடா பட்டாபின்னு எஸ்வீசேகரின் காட்டுல மழை டயலாக்கை
அடிக்கடி சொல்வேன். அது போல நானும்
கிளாஸுக்கு போக ஆரம்பிச்சு 1 வாரம் ஓடிடிச்சு. வரும் திங்கள் கிழமை
அல்லது செவ்வாய்க்கிழமை ஹைதையில் பேகம்பெட், எஸ்பீ ரோடு
பக்கத்துல இருக்கும் மக்களுக்கு கிரகம் பிடிக்கப்போகுது. அன்னைக்குத்தான்
நான் வண்டியை ஓட்டப்போறேன். பாவம் மக்கள்ஸ். அவங்களுக்காக
நல்லா வேண்டிக்கங்க. அப்படியே எனக்கும். அவங்களுக்கு ஏதாவது
செஞ்சு எனக்கு பிரச்சனை வந்திட்டா பதிவு போடறது என்னாவுறது?? :))



அது வரைக்கும் ஹேப்பி வீக் எண்ட்
a

Friday, April 16, 2010

சென்னையில் என் முகவரி

நங்கநல்லூரில் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு
கோடம்பாக்கத்துக்கு குடி பெயர்ந்த பொழுது அம்ருதாவுக்கு
4 மாதம் முடிந்திருந்தது. அப்பொழுதுதான் ஒரு பெரிய
புயலில் சிக்கி நான் உயிர் பிழைத்திருந்த நேரம்.

புதுவீட்டுக்கு பால்காய்ச்சி வந்த உடன் க்ரவுண்ட் ஃப்ளோர்
வீடாக இருக்க கிச்சனிலிருந்து செல்லும் கதவைத்
திறந்து வெளியே வந்தால் பக்கத்துவீட்டில் ஒரு
பெண்மணி சிநேகமாக சிரித்தார். “இங்க பாருடா
குட்டிப்பாப்பா” என தன் மகன்களை அழைத்து
காட்டினார்.

அவரின் கணவர் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில்
பேராசிரியர். கொஞ்சம் இல்லை இல்லை அதிகமாகவே
கண்டிப்பானவர். தானுண்டு தன் வேலையுண்டு என
இருப்பார். அவரை மெல்லக் கரைத்தவள் அம்ருதா.
அம்ருதாவுக்கு மட்டும் அவர்கள் வீட்டில் ஷ்பெஷல்
ட்ரீட்மெண்ட் நடக்கும். அவள் என்ன செய்தாலும்
அவளை ஒன்றும் சொல்லக்கூடாது என்பது அந்த
அங்கிள் போட்டிருந்த சட்டம்.

அம்ருதா கொஞ்சம் தவழ ஆரம்பித்ததும் பின் கதவு
வழியாக தவழ்ந்தே பக்கத்து வீட்டுக்கு போய்விடுவாள்.
அதுவும் அங்கிள் கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும்
பின் பக்கம் சேர் போட்டுக்கொண்டு காற்று வாங்கிக்
கொண்டு பேப்பர் படிப்பது அல்லது மாலை டிபன்
சாப்பிடுவது பழக்கம். அப்போது அம்ருதா கங்காரு
குட்டிப்போல் அங்கிளின் லுங்கியில் அமர்ந்திருப்பாள்.
“நாங்க கூட இப்படி உங்க கிட்ட உக்காந்தது இல்ல!
அம்ருதா மட்டும் ஏன்?” என கேட்கும் பிள்ளைகளுக்கு
அங்கிளின் பதில் “அது பெண் குழந்தைடா தம்பி!”

அம்ருதா முதலில் அடி எடுத்து வைத்து நடந்தது
இவர்கள் வீட்டில் தான். அதில் நோபல் அம்மாவுக்கு
ரொம்ப சந்தோஷம். தனக்கு பெண்குழந்தை இல்லை
என்ற குறை தீர்க்க வந்தவள் அம்ருதா என அங்கிளுக்கும்
ஒரே குஷி.

நோபல் அம்மா என்றே அவரை நாங்கள்
அழைத்து பழகிவிட்டோம். அவரின்
பெயர் சொன்னால் அம்ருதாவுக்குத் தெரியாது.
நோபல் அம்மா ஆண்ட்டி என்பாள்.
அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போல்
பல நேரம் அங்கே தான். இரவு ப்ரேயர்
சொல்லும் பொழுது கூட தானும் ஜபமாலையை
உருட்டிக்கொண்டு அங்கேதான் இருப்பாள்.

பிள்ளைகளுக்கும் அம்ருதாவுடன் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.
அம்ருதா வீட்டில் இருக்கும் நேரம் அப்பாவிடம்
திட்டுகிடைக்காது என்பது கூடுதல் சந்தோஷம். :))


அயித்தான் இலங்கைக்கு போன அந்த 1 1/2 வருடங்கள்
நான் தனியாக கழித்த பொழுது எனக்கு உதவிய
அன்பு நெஞ்சங்கள் இவர்கள். அந்தக் கொடுமையான
காலகட்டத்தில் என் காலில் கொதிக்கும் பால் கொட்டி
அவதிப்பட்டேன். சமைத்துக்கொடுத்து பார்த்து கொண்டது
நோபல் அம்மாதான். அங்கிளும் ஊருக்கு போயிருந்து,
அயித்தானும் ஊருக்கு போயிருந்தால் ஒரே கொண்டாட்டம்
தான் எங்களுக்கு. இருவருக்கும் பிடிக்காத சமையல்,
அதே சமயம் பிள்ளைகள் விரும்பும் சோறு சமைப்போம்.
அதுவும் நான் கொஞ்சம் செய்வேன். நோபல் அம்மா
கொஞ்சம் செய்வார். இருவீட்டு சாப்பாட்டையும்
சேர்த்து பிள்ளைகள் சாப்பிடுவார்கள்.

என்னுடன் பேச மட்டும்தான் அங்கிள் அனுமதித்திருந்தார்.
நோபல் அம்மா வைத்திருந்த பழைய கேஸ் அடுப்பை
மாற்றி, புது மிக்ஸி வாங்கி, தினமும் மஸ்கா அடித்து
அடித்து அங்கிளை வாஷிங் மெஷின் வாங்க வைத்தது
எல்லாம் என் சாதனைன்னு இப்பவும் நோபல் அம்மா
சொல்வாங்க. நோபல் அம்மா கிறிஸ்துமஸுக்கு
பலகாரம் செய்யும் பொழுது நானும் உதவுவேன்.
கேக் செய்யும் அழகே தனி. ருசியா இருக்கும். என்
பங்காக ஜாங்கிரி செய்து கொடுப்பேன்.

நோபல் அம்மாவின் பெரிய மகன் என் வளர்ப்பு மகன்.
பதினம் வயதுக்குழந்தையாக இருந்த அவனுக்கு
அப்பாவின் கண்டிப்பும் கறாரும் கோவம் வரும்.
அவனுடன் பேசி மனதை மாற்றுவேன். கோவம்
வந்தால் என் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து விடுவான்.
சென்றவாரம் போன் செய்து,”ஆண்ட்டி!
ஆஷிஷுக்கு முகப்பருவுக்கு ஏதோ மருந்து
கொடுத்தீங்களாமே! எனக்கும் சொல்லுங்க”
என கேட்டான் என் 25 வயது வளர்ப்பு மகன்.
அவனிடம் ஏதும் பேசவேண்டும் என்றால்
நோபல் அம்மா எனக்கு போன் செய்து
“நீங்களே உங்க வளப்புக்கு சொல்லுங்க,
நீங்க சொன்னா கேப்பான்!” என்று சொல்வார்.


எந்த ஒரு பெருநாளுக்கும் வாழ்த்து சொல்ல
நாங்கள் மறந்ததில்லை. அப்படியே எங்கள்
திருமணநாள், குழந்தைகள் பிறந்தநாள் என
வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வோம். சென்னைக்கு
வந்தால் இன்றும் நாங்கள் முதலில் செல்வது
நோபல் அம்மா வீட்டுக்குத்தான். “உன் ஃப்ரெண்ட்
வர்றாங்க, ஷ்பெஷலா செய்!” என ஆர்டர்
போட்டிருப்பார் அங்கிள். “இவரு சொல்லித்தான்
நான் செய்யணுமா, எனக்குத் தெரியாதாக்கும்”
இது நோபல் அம்மா. :))

சொந்தங்களே வீட்டுக்கு விருந்தினர் வருவதை
பிடிக்காத இந்தக் காலத்தில் 2 வருடங்கள்
பக்கத்துவீட்டில் இருந்த பழகிய நட்பு எங்க
வீட்டுக்கு வரலைன்னா பாத்துக்கங்க என்று
மிரட்டும் பாசம்...


சென்ற ஜூலையில் ஒரு திருமணத்திற்காக
நான் மட்டும் சென்னை வந்த பொழுது நேரே
சென்றது நோபல் அம்மா வீட்டுக்குத்தான்.
நோபல் அம்மா பிறந்தநாளுக்காக ட்ரெஸ்
வாங்கிப்போயிருந்தேன். “நீங்களும் வாங்கியிருக்கீங்களா!
நானும் உங்க பர்த்டேக்கு புடவை வாங்கி
வெச்சிருக்கேன்” என்றார். இன்னமும் என்னை
மறக்காமல் இருப்பது ஆண்டவனின் அருள்.

என்றும் நல்ல திடகாத்திரத்துடன், நல்ல
சந்தோஷத்துடனும் அந்தக் குடும்பம் வாழ
வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை
ப்ரார்த்திக்கிறேன்.


Thursday, April 15, 2010

என் இன்னொரு பிறந்த வீடு

LOWER TANK BUND AREAவில்
அந்த வீட்டுக்கு நாங்கள் குடி போன பொழுது
இந்த வீட்டுக்காரர்கள் ரொம்ப கறார்.
இருக்கறவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல்
இருக்கணும்னு நினைச்சோம். நானும், அயித்தானும்
மட்டும்தான் அப்போது. (அந்த அங்கிளும்
சட்ட திட்டமாகத்தான் பேசினார்)

ராஜரத்தினம் அந்த வீட்டின் பெரியவர் பெயர்.
அவரது மனைவி(பெயர் ஞாபகமில்லை. ஆண்ட்டி
என்றுதான் அழைப்பேன்) மிகவும் நல்ல மாதிரி.
மூத்த மகனுக்கு மட்டும் திருமணமாகி இரண்டு
குழந்தைகள். மொத்தம் 3 மகன்கள், 1 மகள்.

அப்போது ஆஷிஷை உண்டாகியிருந்தேன்.
அவர்களது மகளுக்குத் திருமணமாகவில்லை,
பல பையன்கள் பார்த்து வேண்டாமென்றதால்
திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார் மகள்
என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார் ஆண்ட்டி.
”உங்கள் மகளுக்காக நான் பிரார்த்தனை
செய்கிறேன்!” என்று சொல்லி செய்யவும்
செய்தேன். எம்மதமாக இருந்தால் என்னம்மா!
எல்லாக் கடவுளும் ஒன்றே என்று சொன்ன
ஆண்ட்டி குடும்பத்தினர் கிறிஸ்துவ மதத்தைச்
சேர்ந்தவர்கள்.

ஆஷிஷ் பிறந்து ஹைதைக்கு சென்றதிலிருந்து
அவர்கள் வீட்டில் ஒரே குஷி. ஆண்ட்டியின் மூத்த
மகனான ஜான் அண்ணா அவரது மனைவி வாணி
இருவரும் வேலை முடிந்து வந்ததும் ஆஷிஷ்
என்ன செய்கிறான்? என்று கேட்காமல் இருக்க
மாட்டார்கள். அவர்களது பிள்ளைகள் சின்னாவும்,
டாலியும் பள்ளிவிட்டு வந்ததும் கை கால் கழுவி
முதல் வேலையாக ஆஷிஷை கொஞ்சிவிட்டுத்தான்
போவார்கள்.

ஆண்ட்டி துணி எடுக்க மேலே வரும்பொழுதெல்லாமோ,
சாப்பிட்டு முடித்துவிட்டு கொஞ்ச நேரம் வந்தோ
ஆஷிஷுடன் இருப்பார். ஆஷிஷ் தலை நின்று
கொஞ்சம் தவழ ஆரம்பித்ததும் ஜான் அண்ணா
வேலை விட்டு வந்ததும் ஆஷிஷை கொண்டு
வரச்சொல்லிவிடுவார். அவர்களுடன் தான் குழந்தை
இருப்பான். அவர்களுக்கு ஏதும் தொந்திரவாக இருக்குமோ!
என நான் தான் நினைப்பேன். எங்க கிட்ட இருக்கட்டும்
என தூக்கிப் போய்விடுவார்கள்.

ஏப்ரல், மே மாதங்களில் வெயில் மிக மிக அதிகம்.
(கடந்த 10 வருடங்களில் ஹைதையில் இந்த வருடம்
தான் அதிக பட்ச வெப்பமாக ஏப்ரல் மாதத்தில் 42 டிகிரி)
நாங்கள் மேல் தளத்தில் இருந்ததால் சூடு இறங்கி
ஆஷிஷுக்கு sun stroke வந்துவிட்டது. 6 மாதக்
குழந்தை. ஜுரம் என்றால் அப்படி ஒரு ஜுரம்.
ஆனாலும் சூடாக ஏதும் கொடுக்க முடியாது.
ஃபிர்டிஜில் வைத்து கொஞ்சம் சில்லென்று தான்
கொடுக்க வேண்டும். முடிந்தால் வீட்டை காலி
செய்துவிட்டு கீழ்தளத்துக்கு போகச் சொன்னார்
டாக்டர்.

”இரண்டுமாதத்துக்காக ஏம்மா,ஆஷிஷ் பகலெல்லாம்
எங்க வீட்டுல இருக்கட்டும்” என ஆண்ட்டியும்
அவரது மகள் ராணி அக்காவும் சொல்லிவிட்டார்கள்.
காலை 8 மணிக்கு எடுத்துப்போவார்கள். சாயந்திரம்
7 மணிக்கு மேல்தான் கூட்டி வருவேன். சாப்பாடு
எல்லாம் ஆண்ட்டி பார்த்து கொள்வார்கள். நான்செய்து
மட்டும் கொடுப்பேன். அப்போது உடல்நிலை சரியில்லாத
என் மாமியாரும் என்னுடன் இருந்தார். பார்கினிஸம்
எனும் ஒரு வித வியாதி அவருக்கு. அதனால் வேகமாக
நடக்க முடியாது. பாத்ரூம் போக எழுவார். அவர் பாத்ரூம்
போய்ச் சேர்வதற்குள் வழியிலேயே எல்லாம்...
ராத்திரியில் கட்டிலுக்கு அடியில் ஈரம் இல்லாத நாளே
கிடையாது.

”நீ அவங்களை கவனி. ஆஷிஷ் இங்கே இருக்கட்டும்.
இன்ஃபெக்‌ஷன் ஆகிட்டால் கஷ்டம் என,” பார்த்துக்கொண்டது
அவர்கள்தான்.

நான் செய்யும் சமையல்கள் அவர்களுக்கு ரொம்ப
இஷ்டம். அதுவும் அடை செய்தால் போதும்.
மேல்போர்ஷனில் என்னுடன் இன்னொரு குடித்தனக்காரரும்
பக்கத்து வீட்டில் இருந்தார். அவர்களால் நிறைய்ய
கஷ்டங்களை பார்த்து இருந்தனர் அங்கிள் குடும்பத்தினர்.
யூசர் ஃப்ரெண்ட்லி போல் நாங்கள் ரொம்ப அட்ஜஸ்ட்
செய்து பிரச்சனை ஏதும் தராமல் இருந்தது அவர்களுக்கு
பிடித்திருந்தது. ராணி அக்கா திருமணத்திற்காக என்
பிரார்த்தனை தொடர்ந்து கொண்டிருந்தது.

ஆஷிஷை வளர்க்கும் அந்த நேரத்தில அவர்களின்
அந்த உதவிகள் இல்லாவிட்டால் நான் ரொம்பவே
கஷ்டப்பட்டிருப்பேன். இதை அவர்களிடமே
சொன்ன போது,”ஸ்ரீராமும் ஊரில் இல்லாமல்
நீ மாமியையும் பார்த்துகொண்டு பிள்ளையை
வளர்க்கிறாய். என் மகளாக இருந்திருந்தால்
நான் செய்திருக்க மாட்டேனா” என்பதுதான் பதிலாக
வந்தது.

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் ராணி அக்காவுக்காக
நான் பிரார்த்தனை செய்து கொண்டு தான் இருந்தேன்.

சென்னைக்கு மாற்றலாகிவிட மொத்த குடும்பமும்
வருத்தத்துடன் பிரியாவிடை கொடுக்க
கிளம்பி வந்தோம். நாங்கள் சென்னை வந்த பிறகும்
போனில் தொடர்பு கொண்டிருந்தோம். ஒரு முறை
ஜான் அண்ணா தன் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
என்னுடம் தான் தங்கினார்கள். நான் கூட உங்க
சொந்த் அண்ணான்னு நினைச்சேன். அப்படின்னு
பக்கத்து வீட்டுக்காரங்க பெருமையாச் சொன்னாங்க.
அண்ணா அப்படி ஒரு பாசக்காரர்.

அம்ருதாவை உண்டாகி இருந்த பொழுது ஹைதைக்கு
போகவேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தேன்.
மறக்காமல் சென்றது ஆண்ட்டி வீட்டுக்கு. அனைவருக்கும்
அவ்வளவு மகிழ்ச்சி. எனக்கொரு சந்தோஷமான
விஷயம் காத்திருந்தது. ஆமாம் ராணி அக்காவுக்கு
திருமணம் நிச்சயமாகியிருந்தது.(நான் போவதற்கு
3 நாள் முன்னாடி) சட்டென நடந்திருக்கிறது. உன்
பிரார்த்தனை வீண் போகவில்லை என ஆண்ட்டி
உருகினார்.

அவரது திருமணத்துக்கு செல்ல முடியவில்லை.
4 வருடங்களுக்கு முன் ஹைதை விசிட் அடிக்க
வந்திருந்த பொழுது மற்ற அண்ணாஸுக்கும்
கல்யாணம் முடிந்திருந்தது. புதிதாக வந்திருக்கும்
மருமகள்கள் கூட,” நீங்கதான் கலாவா! உங்களைப்
பத்தி ஆண்ட்டி தினமும் சொல்லிகிட்டே இருப்பாங்க”
என்றார்கள். டாலி ஆஷிஷை கூட்டிக்கொண்டு மேலே
போய் நீ இங்கதான் இருந்த, இங்க இந்தலூட்டி
அடிச்ச என்று காட்டிக்கொண்டிருந்தாள். அங்கே
ஆஷிஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும்
பெரிதாக்கி வைத்திருக்கிறாள் டாலி. அந்த
அன்பு!!!!! ஆண்டவன் கொடுத்த வரம்.

சமீபத்தில் ஜாண் அண்ணா ஹார்ட் அட்டாக்கில்
இறைவனடிச்சேர்ந்து விட்டார். இன்னமும்
அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறேன்.
LOWER TANK BUND பக்கம் போகும் போது
அந்த வீட்டை ஏதோ கோவிலை தரிசிப்பது
போல் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்வது
எங்கள் பழக்கமாகிவிட்டது.

அடுத்த உறவு... பற்றி அடுத்த பதிவில்



Wednesday, March 24, 2010

ஸ்ரீராமா ஸ்ரீராமா..

இது ஸ்ரீராமநவமி சிறப்புப்பதிவுன்னு நீங்க நினைச்சா
அதுக்கு நான் பொறுப்பில்லை. நம்ம அப்பாவி தங்கமணி
தொடர் பதிவு போட்டு கொசுவத்தி சுத்த சொல்லியிருக்காங்க.
பொண்ணு பாத்ததை கொசுவத்தியா சுத்த சொல்லியிருக்காங்க.
(உக்காந்து யோசிப்பாங்களோ)

சரி கொசுவத்திக்குள்ள போவோம்.
நான் +2 படிக்கும் பொழுது சத்யாமாமா(அம்மாவின் பெரிய தம்பி)
கல்யாணம் பழநியில் நடந்தது. பழநிக்கு வந்திருந்த மாமாவின்
நண்பர்களுக்கு ஹிந்தி அல்லது ஆங்கிலம் மட்டும்தான்
தெரியும் என்பதால அயித்தானை அவர்களுடன் போய்வரச்சொல்லி
மாமா கேட்டிருந்தார்.

ஸ்ரீராம் என் அம்மம்மாவுக்கு உறவு.(என்ன உறவுன்னு கேக்காதீங்க.
சொல்ல மாட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்)

மாமா கல்யாணம் முடிஞ்சு ரிஷப்ஷனுக்காக எல்லோரும்
புதுகை வந்திருந்தாங்க. அம்மம்மாவீட்டுல தண்ணி கொஞ்சம்
தட்டுப்பாடு. எங்க வீட்டுல போர் இருந்ததால மாமாவின் நண்பர்களுடன்
அயித்தானும் குளிக்க எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. பொதுவாவே
ஆண்களுடன் அதிகம் பேசக்கூடாதுன்னு அப்பா கண்டிப்பா
வளர்த்திருந்தாரு. இதுல மாமா நண்பர்கள்னா இன்னும் காத
தூரம் தான் இருந்தேன். அவங்க இருந்த ஏரியாவுலேயே நான்
இல்லை. மோட்டர் மட்டும் போட்டு தண்ணி நிறப்பிக்கொடுத்திட்டு
நான் பாட்டுக்கு சைக்கிளை எடுத்துகிட்டு மதிய ஷிப்ட் பள்ளிக்கு
கிளம்பிட்டேன். பேசவே இல்லை. அம்புட்டுதான் இவரைப்பத்தி
தெரியும். அதைவிட இவரின் அக்கா,மாமா குடும்பத்தாரோடு
எனக்கு ரொம்ப பழக்கம். அவங்க தம்பி என்பது மட்டும் தான்.

அந்தக்கதை அப்பயோ முடிஞ்சிடிச்சு. நான் +2 காலேஜ் ஒருவருஷம்
முடிச்சு பாம்பே போய் வேலை பார்க்க ஆரம்பிச்சாச்சு. எங்க அவ்வா
(அப்பாவோட அம்மா)வுக்கு ஹார்ட் அட்டாக் வந்த பிழைச்சப்போ
என் ஒரே ஒரு பேத்தியோட கல்யாணத்தை கண்குளிர பாத்திடணும்னு
அப்பாகிட்ட கேக்க 21 வயசுலயே அப்பா ஜாதக்கட்டை எடுக்க
ஆரம்பிச்சாங்க. நான் வேற அப்ப கண்டீஷன் எல்லாம் போட்டிருந்தேனா!

அப்பா திட்டிகிட்டே மாப்பிள்ளை பாத்தாங்க. ஆனா யாரும் என்னை
பெண் பார்க்க வரலை. தாத்தாவீட்டு பங்க்‌ஷனுக்கு வந்த ஒரு குடும்பம்
துருதுருன்னு வேலைப்பார்க்கற என்னை பாத்து பிடிச்சிருக்குன்னு
ஜாதகம் கேட்டு வாங்கிட்டு போனாங்கன்னு மாமா சொன்னாங்க.

அப்ப மும்பைக்கு வேலை விஷயமா வந்திருக்கிற அயித்தான்
(நான் அங்க இருப்பது தெரியாது) சத்யாமாமாக்கு போன் செஞ்சு
பேசியிருக்காரு. சொந்தக்காரங்களுக்கு நலம் விசாரிக்கிற மாதிரி.
(அப்ப அவருக்குத் தெரியலை தனக்குத்தானே ஆப்பு வெச்சுக்கிறார்னு)

ஹிந்துஸ்தான் லீவரில் வேலை கன்பார்ம் ஆகியிருந்தது அயித்தானுக்கு.
”வேலை கன்பார்ம் ஆகிடிச்சின்னா பொண்ணு பாத்திர வேண்டியதுதான்”
அப்படின்னு மாமா சொல்ல ”அண்ணா பாக்க ஆரம்பிச்சிருக்காங்க”
சொல்லியிருக்காரு. வீட்டுக்கு வந்த மாமா அம்மம்மாகிட்ட நம்ம
”கலா ஜாதகத்தை வேணாம் கொடுப்போம்” அப்படின்னு சொல்ல
”சென்னை போகும்போதே நானே பேசறேன்னு” அம்மம்மா சொல்லி
ஜாதகத்தை மட்டும் அனுப்பிவைச்சிட்டாங்க.

அதுக்குள்ள எங்க அவ்வா என்னைப் பார்க்கணும்னு வரச்சொல்ல
அவங்களைப்பாத்துட்டு வரும்போது சென்னையில் வழக்கம்போல
அயித்தானோட அக்காவீட்டுக்கு போய் இறங்கி ரெடியாகித்தான்
மும்பைக்கு ட்ரையின் பிடிப்பேன். நான் போன அன்னைக்கு
தற்செயலா(நீங்க இதை நம்பணும்) சென்னையில் மீட்டிங்கிற்காக
வந்திருந்தவர் அக்காவீட்டுக்கு வந்து எதையோ கொடுத்துவிட்டு
போக வந்திருந்தார். அங்கேஇருந்த அந்தேரி தாத்தா என்னை
அறிமுகப்படுத்த “நீ தான் கலாவா?ன்னு கேள்வி” கேட்க
ஆமாம்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டேன்.
(அன்னைக்கு என் பேரைச் சொன்னவர்தான். அதுக்கப்புறம்
பேர் சொல்வதே இல்லை) :))

திருமணத்துக்கு முன்னாடியே டேப்ரிக்கார்டர், டீவி,
வாஷிங் மெஷின், கேஸ் அடுப்பு எல்லாம் வாங்கி
ரெடியா வெச்சிருக்கிறதா அவரைப்பற்றி ஒரே
புகழாரம் சூட்டினாங்க.


அம்மாம்மாவின் பிறந்தவீட்டு உறவுதான் அயித்தான்.
எனக்கு முன்னாடியே ஒரு ஜாதகம் ஆந்திரா பொண்ணு
செட்டாகும் நிலையில் இருந்திருக்கு. ராஜம் பேத்தின்னா
இதுக்குத்தான் முதலிடம்னு அயித்தானோட அம்மா
சொல்லிட அப்படின்னு நம்ம மேட்டர் சூடு பிடிக்க ஆரம்பிச்சிடிச்சு.

அவரும் வரதட்சணை வேணாம்னு கொள்கையோட இருக்க,
என் பட்டுப்புடவை கண்டிஷனுக்கு ஓகே சொல்லிட்டாங்க.

அயித்தானும் என்னைப்பாத்திட்டாரு, அவங்க அக்காதான்
எனக்கு முன்னமே பழக்கமாச்சே. இதுல திடும்னு ஒரு நாள்
”பொண்ணு பாக்கணுமாம்! லீவு போட்டுட்டு சென்னைக்கு
வரச்சொன்னாங்கன்னு ”அப்பா போன் செஞ்சதா மாமா
சொன்னாரு. எத்தனை தடவை பாப்பாங்கன்னு கோவம்மாத்தான்
கிளம்பிப்போனேன். ஆனா என்னைப் பாக்கணும்னு சொன்னது
அயித்தானோட அண்ணன் குடும்பத்தினர். அவங்க அண்ணி,
பசங்க இப்படி ஒரு குடும்பம் இருக்காங்க அப்படின்னு எனக்கு
தெரியாது.

எங்க சித்தப்பா ஒருத்தர் வீட்டுல வெச்சு பெண்பார்க்கும்
படலம் நடந்தது. ”பாடெல்லாம் வேணாம்மா, ஈசியா இரு”
அப்ப்டின்னு ஆரம்பிச்ச மாமாவின் அன்பு ரொம்ப நெகிழ்வா
இருந்துச்சு. வரதட்சணை அது இதுன்னு எந்த பேச்சும்
கிடையாது. பொண்ணுக்கு நகை உங்க இஷ்டம் சொளகர்யம்
போல போடுங்க. குறைவோ, நிறைவோ எதுவும் பரவாயில்லை.
பொண்ணை அனுப்புங்க போதும்னு” சொன்ன மாமாவின் நல்ல
மனம்.

நிச்சயதார்த்தம் எல்லாம் கூட நடக்கலை. பாக்கு வெத்தலை
கூட மாத்தலை. திருமணம் பழநியில் நிறைவா நடந்தது.

என் தம்பி தான் அடிக்கடி வருத்தப்படுவான்.
பாவாவுக்கு ஆந்திரா பொண்ணு அமைஞ்சு காரசாரமா
சாப்பிட்டு நல்லா இருந்திருக்க வேண்டியது. உன் கிட்ட
மாட்டிகிட்டாரு!!! அப்படின்னு சொல்வான்.

நாம என்ன செய்ய முடியும். நம்ம கையில என்ன இருக்கு.
எல்லாம் ஆண்டவனருள் :)

தொடர் பதிவுக்கு நானும் யாராயாவது கூப்பிடணுமாம்ல.

இருங்க மாட்டிவிடறேன்.

புதுகை ப்ளாக்கர்களின் தானைத்தலைவர் சுரேகா.

சர்வேசன்

ஹுசைனம்மா

அமைதிச்சாரல்

பொண்ணு பாக்க போனதை, பாக்க வந்ததை கொசுவத்தி
சுத்துங்கப்பா


Thursday, March 18, 2010

எல்லோரும் நலமா???

ஹாய் ஹாய் ஹாய்!!!

என்ன காணம போயிட்டேன்னு நினைச்சீங்களா?
அதென்னவோ தெரியலை மொதோ தபா
பதிவெழுதக்கூட நேரம் இல்லாம பிசியாகிட்டேன்.
எனக்கே இது ஆச்சசரியமா இருக்கு!!

பசங்களுக்கு பரிட்சை நடந்துகிட்டிருந்த போது
கொஞ்சம் பிசியாக ஆரம்பிச்சேன். தெலங்கானா
பிரச்சனைகளினால பள்ளிகளுக்கு அதிகமா லீவு
விட நேர்ந்ததால் போர்ஷன்ஸ் முடிக்க முடியாம
வெறும் கேள்வி-பதில்களைமட்டும் சில
பாடங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை.
அவங்க விட்டுட்டாங்களேன்னு நானும் விட
முடியுமா? கடைசி நேரம் வரை விளக்கம் சொல்லி
பரிட்சைக்கு தயார் செஞ்ச்சேன்.

மாமா மறைந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது.
இந்த வருடத்தில் எத்தனை முறை,” ஏன் மாமா
இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போனீங்கன்னு?”
கேட்காத நாள் இல்லை. இன்னமும் வருத்தம்
தான். பெங்களூரில் மாமாவின் திவசங்கள்
நடந்தன. அந்த நேரம் மிகச் சரியா பசங்களுக்கு
பரிட்சை நேரம். நானும் குழந்தைகளும் போக
முடியவில்லை. அயித்தான் மட்டும் போனார்.
மனதுக்கு அதுவும் வருத்தமாகிடிச்சு. ”என் மூத்த
மருமகள் நீதான்னு?” சொன்ன மாமாவுக்கு
செய்யும் வாய்ப்பு கிடைக்கலியேன்னு தான்
வருத்தம்.

வீட்டில் அவரது படம் வைத்து, பூ போட்டு
பழங்கள் வைத்து படையல் கொடுத்தேன்.


எப்பவும் எல்லோருக்கும் சரியா பிறந்த நாள்
வாழ்த்து, திருமண வாழ்த்து சொல்லிடுவேன்.
இந்தத் தடவை அதிலும் ஒரு சொதப்பல்.
அயித்தானோட அண்ணன் மகனுக்கு இந்த மாதம்
பிறந்த நாள். ஊருக்கு போனவரிடம் ஞாபகமாக
ட்ரெஸ் வாங்கிக்கொடுத்துவிட்டேன். அயித்தான்
போன அன்று அண்ணன் மகனின் நட்சத்திர
பிறந்த நாள்(எனக்கு டேட் தான் ஞாபகம் இருக்கும்)
ரொம்ப சந்தோஷப்பட்டார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை அவரின் பிறந்தநாள்
நம் ஆங்கில காலண்டர் படி. காலையில்
எழுந்த போது ஞாபகம் இருந்தது. சரி அயித்தானும்
பிள்ளைகளும் எழுந்ததும் வாழ்த்து சொல்லலாம்னு
நினைச்சிருந்தேன். வர இருக்கும் பெருநாளுக்கு
சாமான் வாங்குவது அது இதுன்னு மறந்தே விட்டேன்.

சாயந்திரம் 5.30 மணி இருக்கும் போன் வந்துச்சு.
”இன்னைக்கு என்ன நாள்னு தெரியுமான்னு?’
அயித்தானை கேட்க அவரு யோசிச்சுகிட்டே தெரியலை?ன்னு
சொல்லிட்டார். அயித்தானுக்கு செக்கரட்டரி நான் தான்
எல்லா நாளும் நான் தான் ஞாபகமா வெச்சிருந்து
வாழ்த்து சொல்லச் சொல்வேன். யாருப்பா? போன்ல
கேட்டேன். கிருஷ்ணா, இன்னைக்கு என்ன நாள்னு
தெரியுமான்னு! கேட்டதாச் சொல்லவும்
“ஐயோ, இன்னைக்கு அவருக்கு பிறந்த நாள்பா!”
அப்படின்னு சொல்லவும் சித்திகிட்ட போனைக்குடுன்னு
சொல்ல என் கிட்ட கொடுத்திருக்காரு. “எப்பவும்
காலேலேயே உங்க போன் வரும். உங்க வாழ்த்து
தான் முதல் வாழ்த்தா இருக்கும்! சாயந்திரம் வரைக்கும்
போன் வரலைன்னதும் என்னாச்சு? உடம்பு சரியில்லையான்னு”
கேட்கலாம்னு தான் போன் செஞ்சேன்னு சொல்லவும்
மனசு ரொம்ப பாரமாச்சு!என்னைவிட 6 மாதம் சின்னவர்.
ஆனாலும் சித்தின்னு தான் அழைப்பார்.

மாமா,அத்தை(அவங்க அப்பா,அம்மா)வைவிடவும்
முதலில் என் வாழ்த்துதான் அவருக்கு எப்போதும்
கடந்த 15 வருஷமா இதுதான் பழக்கம். இதுல
மாற்றம் ஆனதும் வருத்தப்பட்டுட்டார்.

இனி இந்த மாதிரி இன்னொரு தடவை செய்யக்கூடாதுன்னு
முடிவு பண்ணிட்டேன்.

யுகாதி மாமா இறந்த ஒரு வருட துஷ்டிக்கு பிறகு நாங்கள்
கொண்டாடும்முதல் பண்டிகை. இது தெலுங்கு கன்னடர்களின்
வருடப் பிறப்பு.

காலையிலேயே அனைவருக்கும் போன் போட்டு
வாழ்த்து சொல்லிட்டோம். கிருஷ்ணாவுக்கு போன் போட்டதும்
என் மருமக ,”உங்க போனுக்கு எப்பவும் காத்திருப்போம்,
போன் வந்ததும் சந்தோஷம் ஆயிடிச்சின்னு” சொல்ல
பர்த்டேக்கு வாழ்த்து சொல்ல மறந்து வருத்தப்பட
வெச்சதுக்கு காம்பன்சேட் செஞ்சிட்டேன்னு சந்தோஷப்பட்டுகிட்டேன்.

என்னென்ன சமைச்சேன்னு சொல்றேன். காதுல புகை விட்டுக்கோங்க.
யுகாதி ஷ்பெஷல் யுகாதி பச்சடி,(வேப்பம்பூ, வெல்லம், புளி,
மாங்காயத்துருவல், சிட்டிகை உப்பு போட்டு செய்வது) போளி,’
வடை, பாயசம், முருங்கை சாம்பார், சூப்பரா தக்காளி ரசம்,
வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி, மாங்காய் கல்யாண ஊறுகாய்,
அப்பளம் அம்பூட்டே தான். :))) (சேர்க்க மறந்தது
எலுமிச்சை சாதம், வெண்டைக்காய் பொரியல்)

இதுல சூப்பர் மேட்டர் என்னன்னா? தெலுங்கில் சூப்பரா
சமையல் செய்பவர்களை,” வண்டலோ சை திருகின மனுஷி”
அப்படின்னு சொல்வாங்க. அதாவது சமையலில் கை தேர்ந்தவர்
என்பது போல இங்கே கை திருகி போன ஆள்.

நிஜமாவே போளிக்கு பூரணம் செஞ்சு, போளி தட்டின்னு
வலது கை வீங்கி திருப்ப முடியாம ஆகிடிச்சி. :))
ரெண்டு நாளா கைக்கு செம ரெஸ்ட். நோ குக்கிங்.
இப்ப கூட ஜூட் விடப்போறேன். (ட்ரை பேண்டேஜை
எடுத்துட்டு மெயில் செக்கிக்கறேன்பான்னு ப்ர்மிஷன்
கேட்டுட்டு பதிவு போட்டா அயித்தான் சாயந்திரம்
வந்து மொத்தினாலும் மொத்துவார்) :)))


யுகாதி ஷ்பெஷல் கிஃப்ட் ஆனந்த விகடனிலிருந்து.
கானக்கந்தர்வன் வலைப்பூ விகடன் வரவேற்பரையில்
வந்திருக்குன்னு அமைதிச்சாரல் பதிவு போட்டிருந்தாங்க.
நன்றி அமைதிச்சாரல். பதிவு இங்கே.


Tuesday, March 09, 2010

டெலிபோன் கொசுவத்தி

டெலிபோன் இது ஏதோ பணக்காரர்கள் வீட்டு சாதனமாத்தான்
இருந்துச்சு. டெலிபோன்ல பேசுவதெல்லாம் ஒரு 15 வருசத்துக்கு
முன்னாடி சாதாரண விஷயமில்லை. ரொம்ப அவசியம்னா
வீட்டுப்பெரியவங்க மட்டும் பேசுவாங்க.(இப்ப குட்டி குழந்தைக்கு
கூட செல்போன்னா என்னன்னு தெரியும்)


தொலை பேசியில பேசும் வாய்ப்பே எனக்கு இல்லாம
இருந்துச்சு. மும்பையில வேலை பாத்துகிட்டு இருந்தப்போ
சின்னதா இருந்த எங்க ஆபிஸை பக்கத்துல இருந்த
பெரிய கட்டிடத்துக்கு மாத்தினாங்க.

அங்கே வேலைகள் நடக்கும் பொழுதே PARESH எனும்
அலுவலக் நண்பன் வந்து, அங்கே ஒவ்வொருவருக்கும்
எக்‌ஷ்டன்ஷன் போன் இருக்கு!, 3 போன் கனெக்‌ஷன்ஸ்
இருக்கு! நீ தான் டெலிபோன் ஆப்பரேட் செய்யப்போறியாம்!
கேள்விபட்டேன்னு!! சொன்னதுலேர்ந்து செம டென்ஷன்.
எனக்கு எந்த ந்யூஸும் வரலை. கணபதி சுப்பிரமணியம்
சார்தான் அப்ப மேனேஜர். “பரேஷ் ஏதோ சொல்றாப்லயே!
எனக்கெல்லாம் டெலிபோன் பேச வராது! நான் மாட்டேன்னு”
சொல்ல,” அதெல்லாம் முடியாது நீ தான் செய்யறன்னு”
கட்டாயமா சொல்லிட்டார்.

நான் அங்க அப்ப டைப்பிஸ்டாத்தான் வேலை பாத்துகிட்டு
இருந்தேன். சரி டைப்பிங் எப்பவுமா இருக்கப்போவுது,
இதுவும் செஞ்சு பாக்கலாம்(பாத்துதானே ஆகணும்)னு
நினைச்சாலும் மொழி கொஞ்சம் பிரச்சனை. ஹிந்தி
நல்லா வரும். ஆங்கிலம் கூட ஸ்டார்ட் செஞ்ச வந்திடும்.
மராத்தி!! எங்க கம்பெனிக்கு பல மராத்தியர்கள் க்ளையண்ட்.

அம்மம்மாகிட்ட வந்து சொன்னேன். சாமியை மனசுல
வேண்டிக்கோ, எப்படி செய்வதுன்னு தெளிவு உனக்கு
கிடைக்கும்னு சொன்னாங்க.

புது கட்டிடத்துக்கு போனதுக்கப்புறம் டைப்பிங்கைவிட
கம்ப்யூட்டர், பெட்டிகேஷ், டெலிபோன் ஆப்பரேட்டிங்
எல்லாம் என் தலையில். :(

என்னோடு வசாயிலிருந்து வரும் தோழி ஒருவர்
மும்பை டெலிபோன்ஸில் வேலை. அவரிடம்
கேட்டு எப்படி பேசுவதுன்னு 4 நாளைக்கு ட்ரையினில் ட்ரையினிங்
எடுத்துகிட்டேன். பேசுபவரின் முகம் தெரியாது
என்பதால் கவனமா பேசு, இதமா பேசு, பதட்டப்படாதேன்னு
சொல்லிக் கொடுத்தாங்க.

ஒரு நாள் கணபதி சார் வந்து ஒரு பத்திரிகையைக்
கொடுத்து,” இதற்கு டெலிபோன் மூலமா வாழ்த்து
தந்தி அனுப்பிடு”! சொல்ல அது எப்படி செய்வதுன்னு
தெரியாது சார்னு சொல்ல “ அனுப்பிட்டு எனக்கு
கன்பர்ம் செய்யுன்னு போயிட்டார்!”

டெலிபோன் டைரக்டரியை புரட்டி எக்சேஞ்ச் நம்பரை
எடுத்து அவர்களுக்கு சொன்னா நம்ம போன் நம்பரை
வாங்கிகிட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு அவங்களே கூப்பிடுவாங்க.
என்ன மெசெஜ் அடிக்கணுமோ அந்த நம்பரைச் சொல்லி
அட்ரஸ் சொன்னா மெசெஜ் அனுப்பிடுவாங்க. அதற்கான
தொகையை அடுத்தமாத பில்லில் சேத்திடுவாங்க.

செஞ்சிட்டு சாரிடம் கன்பர்மேஷன் நம்பர் கொடுத்தேன்.
“என்னமோ பயப்பட்டியளு! இப்ப எப்படி முடிஞ்சுதாம்”
அப்படின்னு கேட்க தண்ணியில தூக்கிப்போட்டா
நீச்சலடிச்சுத்தானே சார் ஆகணும்னு கேக்கவா முடியும்.


ஒரு முறை எங்க எம்டீ வந்திருந்த நேரம். அவசரமா
international call உடனடியா செய்ய வேண்டும்.
எங்க போன்ல எதுக்கும் அந்த வசதி இல்ல. எப்படி
செய்வதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தாங்க. என் ட்ரையின்
ஃப்ரெண்ட் JAYA BANE international call புக்கிங்க்ல
தான் இருந்தாங்க. அவங்க எக்‌ஷ்டன்ஷனுக்கு போன்
செஞ்சு புக் செஞ்சு கொடுத்தேன். செம பாரட்டு.

ஒரு முறை கஸ்டமர் ஒருவர் போன் போட்டு கத்திகிட்டு
இருந்தார். அவரோட பேச வேண்டிய அலுவலக நண்பர்
கீழே சின்ன அலுவலகத்தில் இருந்தார். கஸ்டமரை
ஹோல்டில் வைத்துவிட்டு அந்த நபரை அழைத்து உங்க
கிட்ட பேசணுமாம், பேசுங்கன்னு சொல்ல,”அந்தாளு
சுத்த வேஸ்ட், நான் பேசமாட்டேன், இல்லைன்னு
சொல்லிடுங்கன்னு”சொன்னாரு.

நானும் அப்படியே சொல்லிட்டு வெச்சிட்டேன்.
திரும்ப திரும்ப அந்த கஸ்டமர் போன் செஞ்சு
கத்திகிட்டு இருக்க லைனை கீழே கனெக்ட் செஞ்சிட்டு
வச்சிட்டேன். பேசிமுடிச்சிட்டு அந்த நபர் மேலே
வந்து செம காச்சு காச்சினார். மேனேஜரும்
அவருக்கு சப்போர்டா பேச(எம் டீயோட ஆள்)
வந்த கோபத்துல எம் டீயோட ஆள் என்பதால்
அவருக்கு சப்போர்ட் செஞ்சு பேசறீங்க! அப்படி
இப்படின்னு நானும் இரண்டு பேரையும் காச்சியது
அன்னைக்குத்தான்.

வடுமாங்காய் கடிச்சா மாதிரி நறுக்குன்னு பதில்
சொல்வீங்க தெரியும்! கடுகு பொரிச்சாப்ல பொறிஞ்சு
தள்ளிட்டீங்களாமேன்னு! அஸிஸ்டண்ட் மேனேஜர்
கேட்கும் அளவுக்கு என் கோபத்தை முழுமையா
வெளியில் காட்டியிருந்தேன். என் மேல் தவறில்லைன்னா
எந்த இடத்திலும் போராடுவேன். தவறுன்னா
ஒத்துகிட்டு மன்னிப்பு கேட்பேன்.

டெலிபோன் பத்தி நினைக்கும்பொழுது இவரை நான்
நினைக்காமல் இருக்க முடியாது. மாமா கம்பெனி
டெலிபோன் ஆப்பரேட்டர் த்வனி தான் அவர்.
நான் வேலை பார்த்த கம்பெனியின் சில
விடயங்களை சத்யாமாமா வேலைப்பார்த்த
கம்பெனிகாரர்கள் பார்த்துக்கொடுத்ததால்
அடிக்கடி டெலிபோன் போட்டுக்கொடுக்க
வேண்டியது என் வேலையாக, த்வனி தோழியாகிவிட்டார்.

பலமுறை போனில் பேசியிருப்போம்.
ஒருமுறை கூட நேரில் சந்தித்ததே கிடையாது. மிக நல்ல குரல்.
உங்கள் பெயருக்கேற்ற குரல்வளம் என பாராட்டியிருக்கிறேன்.
நான் போன் செய்யும் பொழுது மாமாவிடம் பேசுவதற்கு முன்
த்வனியுடன் 2 நிமிடம் பேசிவிட்டுத்தான் மாமாவிடம்
பேசுவேன். ஃப்ரெண்ட் கிட்ட பேசிகிட்டு இருந்தியான்னு?”
மாமாவும் கட்டாயம் கேட்பார்.

சந்திக்காமலே போனது வருத்தம் தான்.
இப்பவும் ஒவ்வொருமுறை தொலை பேசி
ஒலிக்கும்பொழுதும் இந்த நினைவுகள் வராமல்
இருந்ததில்லை.

Wednesday, February 24, 2010

புதிதாய்ப் பிறந்தேன்!!!!!

ரெய்கி கற்ற பிறகு தெளிவாக இருந்தேன். தினமும் அதிகாலையில் தியானம்,
கேட்பவர்களுக்கு ரெய்கி செய்து அவர்கள் பிரச்சனை தீர்ந்ததில் சந்தோஷம்
என போய்க்கொண்டிருந்தது. ரெய்கி பிறருக்காக நாம் செய்தாலும் நம்
பிரச்சனையும் தீர்ந்து போகும். ரெய்கி சக்தியை நாம் பெற்று பிறருக்கு
அனுப்பும்பொழுது நம் பிரச்சனையும் தீர்ந்துவிடும். அதனால் புத்துணர்ச்சியுடனேயே
இருந்தேன்.

தியானம் அதுவும் சக்கரா தியானம் செய்வது அதிக சக்தியைக்
கொடுக்கும். தியானம் செய்ய செய்ய சக்தி அதிகமாகி அதுவே
அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போல் என்னைப் படுக்கப் போட்டது.
இதனால் பயந்து போய் தியானம் செய்வதையே நிறுத்திவிட்டேன்.

என் ரெய்கி குரு உடலை வலிமையாக்க யோகா
கற்றுக்கொள்ள வற்புறுத்தினார்.
அதோடு தியானம் செய்யச் சொன்னார்.
என் நல்ல நேரம் கொழும்பு art of living செண்டரில் ஸ்ரீஸ்ரீயோகா
கற்றுக்கொடுப்பதாக அறிவிப்பு வர அதில் சேர்ந்து பயிற்சி பெற்று
யோகா கற்றுக்கொண்டு தினமும் செய்ய ஆரம்பித்தேன்.
அதிமான உடல் எடை கட்டுக்குள் வந்தது. ஆனாலும் அதன் பிறகு
தியானம் செய்ய மனம் வரவில்லை. எங்கே திரும்ப படுத்துவிடுவோமோ
என்ற பயம் தான்.



அதன் பிறகு இலங்கையிலிருந்து புறப்பட்டு ஹைதைக்கு வந்தாச்சு.
இடைப்பட்ட காலங்களில் P.M.S அவஸ்தை கொன்று கொண்டிருந்தது.
உடல் எடை கூட ஆரம்பித்தது. புது இடம் செட்டிலாக நேரம் பிடித்தது.
பிள்ளைகள் படிப்பு, அயித்தானின் புது அலுவலகம் என பல வித
டென்ஷன்கள். இத்தனை நாள் படித்த சிலபஸ் வேறு, ஹிந்தி தெரியாது
என பிள்ளைகளை அதிகம் கவனிக்க வேண்டிய பொறுப்பு.


புது இடத்தில் செட்டிலாக நேரம் பிடிக்கும் தானே! எல்லா டென்ஷன்களும்
சேர நானே வரவழைத்துக்கொண்ட பிரச்சனை ஒன்று வீட்டிலேயே
இருந்து என்னைக் குடைந்தது என ஏகப்பட்ட மன அழுத்தம். அடுத்தவர்கள்
பிரச்சனைக்கு அவர்கள் கேட்டால் ரெய்கி செய்வேன். எனக்கு நானே
செய்து கொள்ளலாம் என்றாலும், ஏனோ மனதை ஒருநிலைப்படுத்த
முடியாத நிலை.அடிமேல் அடியாக நான் மிகவும் மதித்த நேசித்த
என் தகப்பனுக்கு இணையான மாமா(அயித்தானின் அண்ணன்) மரணம்
நிலைகுலைந்து போக வைத்துவிட்டது. மீள வழித்தெரியாமல்
பதிவுகளாலேயே மீண்டு வந்தேன். எப்போதும்
சிரித்துக்கொண்டே வாழவேண்டும் என
நினைக்கும் என்னால் சிரிக்க முடியாமலேயே போனது.



P.M.S க்கு சரியான மருத்துவர் கிடைத்து கொஞ்சம் முன்னேற
ஆரம்பித்தேன். அடுத்ததாக வந்தது கைவலி. கைகள் மட்டுமல்ல
உடல் முழுதுமே வலிதான். இனி வலியோடுதான் வாழ்க்கை என
நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆபத்பாந்தவனாய் மருத்துவர்
ஒருவர் கிடைத்து விட்டமின் டி குறைவு என 4 மாதமாய் மருந்து
சாப்பிடுகிறேன். கொஞ்சம் முன்னேற்றம்.


பக்கத்து வீட்டில் ஒரு தோழியிருக்கிறார். Art of livingல் volunteer.
அடிக்கடி போன் செய்து கோர்ஸ் ஆரம்பமாகிறது வந்து சேர்ந்துகொள்
என்பார். அயித்தான் ஊரில் இருக்க மாட்டார், பிள்ளைகள் வருவதற்குள்
நான் வீட்டிற்கு வர முடியாத தொலைவில் பயிற்சி என கடந்த 1 வருடமாக
நோ சொல்லிக்கொண்டே வந்தேன். அவர் வீட்டில் நடந்த யோகா
வகுப்புக்கு மட்டும் சென்று கற்றுக்கொண்டிருந்தேன்.

அவர் என்னை விடுவதாக இல்லை.அலுக்காமல்
சலுக்காமல் போன் செய்து அழைத்தார். ஆள் பிடிக்க நினைக்கிறார்
என்று கூட சில சமயம் நினைத்திருக்கிறேன். இந்த மாதத் துவக்கத்திலும்
அவரிடமிருந்து போன். நாளை முதல் என் வீட்டிலேயே நடக்கிறது
வருகிறாயா என கேட்டபோது எப்போதும் மறுக்கும் நான்
“கட்டாயம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டேன். BASIC COURSE
பயிற்சி வகுப்பு 5 நாள் நடந்தது. முதல் நாள் மூச்சுப்பயிற்சியின்
போதே வைப்ரேஷன் அதிகமாகி ஜுரம் வருவது போல் ஆகிவிட்டது.
” சிலருக்கு ஜுரம் வரும் வந்தாலும் கண்டிப்பாய்
வகுப்புக்கு வரவேண்டும்!” என்று பயிற்சியாளர் சொன்னார்.
உடலில் நல்ல பாஸிட்டிவ் வைப்ரேஷன்ஸ்.

5 நாளும் ஒவ்வொரு அனுபவம். அதை வார்த்தைகளில் அனுபவிக்க
முடியாத ஒரு சுகானுபவம்......
அடுத்த அடுத்த நாட்களில் என் வலிகள் இல்லாமல்
என் உடல் லேசாகி காற்றில் மிதப்பது போல் உணர்ந்தேன்.
வீட்டிலும் புத்துணர்ச்சியாக என் வேலைகளை செய்து கொண்டேன்.
தினமும் யோகாவுடன் இங்கே கற்றதையும் செய்கிறேன். எனக்குள்
என்னென்னவோ மாற்றம் 15 வருடங்களுக்கு முன்பு அடிக்கும் காற்றுக்கு
நன்றி சொல்லி அதை அனுபவித்து மகிழ்ந்த பழைய கலாவாகிப்போனேன்.




என் வயது மறந்து எப்போதும் குதூகலாமாக இருப்பேன். அந்த
நிலை இப்போது மீண்டும். :)))) இதோ இப்போது கூட
நான்பாடும் பாடல் படத்தின் பாடலை அனுபவித்துக்குகொண்டு
அதோடு ஹம் செய்து கொண்டு பதிவு போட்டுக்கொண்டிருக்கிறேன்.

இந்த பயிற்சி முடிந்த பிறகு என் கைகளில் வலி தெரியாமலேயே
இருக்கிறது. வலியா எனக்கா? எங்கே? எப்போ என கேட்கிறேன்.
சப்பாத்தி அதுவும் மடித்து போட்டு பரோட்டா செய்கிறேன். :))
ஒரு நாள் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என நானே சப்பாத்தி
செய்து கொண்டிருந்தேன்.( இப்பொழுதெல்லாம் பழைய படி
பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் தான் சமையல் மற்றும்
எல்லா வேலையும்.:))



கிச்சனில் சத்தம் கேட்டு வந்து பார்த்தார் அயித்தான்.
இத்தனை நாளாய் காணாமல் போயிருந்த நீ திரும்ப
வந்திருக்கிறாய் என்றார். நிஜம்தான். எங்கேயோ போயிருந்த
நான் திரும்ப வந்திருக்கிறேன். புதிதாய். புத்தம் புதிதாய்.

விடாக்கொண்டனாக போன் செய்து என்னை பயிற்சிக்குள்
நுழைத்த அந்தத் தோழிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
என் ரெய்கி குருநாதர் திரு.ஷ்யாமல் ராவ் அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்.

சந்தோஷமா பாட்டு ஒண்ணுக் கேளுங்க.

Thursday, February 11, 2010

வடக்கு 4ஆம் வீதி ராக்கெட்டு!!!

என்னம்மா, தாத்தா நல்லாயிருக்காங்களா?
ரத்னா டீச்சர் பொண்ணுல்ல நீ?
ரமணி சார் மகப்பா இது? இப்படி என்னை பாக்கறவங்க எல்லாம்
அடையாளம் தெரிஞ்சிக்க கூடிய அளவுல கொஞ்சம் ஊர்ல
எல்லோருக்கும் தெரிஞ்ச குடும்பத்து பொண்ணு நான் இது தான்
என் + இதுவே என் -ம் கூட. :)

அவங்களுக்கு என்னை யாரும்னு தெரியும்! ஆனா எனக்குத்தான்
அவங்களைத் தெரியாது என்பது போல என் நிலமை.

வடக்கு 4ல் சொந்த வீடு வாங்கிகிட்டு போனதும் அம்மாவுக்கு
வயித்தல புளிகரைச்ச மாதிரி ஆகிடுச்சு. வடக்கு 4 ஆம்வீதில
பொண்ணுங்க ஓடிப்போயிடுவாங்க. ஜாக்கிரதைன்னு அம்மாவுக்கு
யாரோ ஓதிவிட எனக்கு பிடிச்சிச்சு சனி.

,” நம்ம வீட்டைப்பத்தி எல்லோருக்கும் தெரியும்.
வீதியில இறங்கினா ரத்னா குனிஞ்ச தல நிமிராம போவான்னு
உங்க அம்மம்மாவுக்கு நல்ல பேரு வாங்கித்தந்திருக்கேன்.
என் பெயரை கெடுக்காம இருக்கணும்.”!! அப்படின்னு சொல்ல
””ரோட்ல தல குனிஞ்சு போனா எதிர்ல யாருவர்றாங்கன்னு தெரியாம
முட்டிகிட்டேன்னா கஷ்டமாச்சேன்னு””!! கேக்க அம்மா குனிய வெச்சு
தனியாவர்த்தனம் முதுகுல வாசிச்சாங்க.

”பாரு தல குனிஞ்சு போய்தான் நான் நல்லவன்னு காட்டனும்னு
அவசியமில்லை. நானும் தல நிமிர்ந்து தான் நடப்பேன். உன்னையும்
அப்பாவையும் தலகுனிய வைக்க மாட்டேன்னு!” வீர சபதம் போட்டேன்.


இந்த மாதிரி நேரத்துல ஆபத்பாந்தவனா வந்து காப்பத்துவது
என் சின்ன மாமாதான். பேரு கணேஷ் குமார். “ரோட்ல
யாராவது பிரச்சனை செஞ்சா வந்து என்கிட்ட சொல்லு நான்
பாத்துக்கறேன்னு!” சொல்லவும் அம்மாவுக்கு நிம்மதி.

ஆனா எனக்கு டபுள் 7 1/2 :(( ஒரு தடவை யாரோ என்னை
கிண்டல் செய்ய நான் கண்டுக்காம வீட்டுக்கு வந்துட்டேன்.அடுத்த நாளே
மாமா வீட்டில் ஆஜர்.சைக்கிளை ஸ்டாண்ட் போட்டுட்டு நிறுத்திட்டு வந்த மாமா,
“மாணிக்கம் சார் வீட்டு பக்கம் உன்னை ஒருத்தன் கிண்டல்
செஞ்சானாமே!” ஏன் எனக்குத் தகவல் சொல்லலைன்னு கேக்க
தெரியாதே மாமான்னு சொன்னேன். மாணிக்கம் சார் பையன் சொல்லித்தான்
எனக்குத் தெரியும், உன் மேல ஒரு கண் வெச்சுக்கறதா சொல்லியிருக்கான்னு”
சொன்னாங்க.

கொஞ்ச நாள் கழிச்சு வாசவில டைப் அடிச்சிட்டு வர்றப்ப ஒரு பையன்
சைக்கிளை கிட்ட வர ஓட்டிகிட்டு வந்து ஏதோ சொல்ல பயந்து
ஓடினேன், ஓடினேன். அப்பா ஆபீஸ்(அதான் மெயின் ரோடுல கம்பீரமா
நிக்குதே!) அதுக்குள்ள நுழைஞ்சு கொஞ்ச நேரம் கழிச்சு 2 சந்து தள்ளியிருக்கும்
வீட்டுக்கு ஓடித்தான் நின்னேன். வாசலிலேயே மாமா உக்காந்திருக்கணுமா?
மேட்டரை மாமாகிட்ட சொல்ல உடனே சைக்கிளில் போய் தன் கூட்டாளிகளுக்குச்
சொல்லி பையனை விசாரிக்கச் சொல்லியிருக்காரு.

அடுத்த நாள்”என்ன ஆளை வெச்சு மிரட்டறீங்களான்னு” என்ன அந்த
பையன் மிரட்ட பயந்து போய் வாசவிலேயே நுழைஞ்சிடலாமான்னு
பாத்துகிட்டு இருந்த நேரம் மாணிக்கம் சார் பையன் இல்ல அந்த அண்ணா
தன் ஆளுங்களோட வந்து பையனை அள்ளிக்கிட்டு போனாங்க. 10 நிமிஷத்துல
வந்து மன்னிப்பு கேட்டதோட இல்லாம அந்த ஏரியா பசங்களுக்கே
நம்ம கிட்ட வாலாட்டனும்ங்கற நினைப்பு இல்லாம போயிருக்கணும்.


வீட்டுக்கு வந்து மாமாக்கும் அம்மாவுக்கு விட்டேன் பாட்டு. உங்க பேச்சை
கேட்டு பிரச்சனை ஆகிடுச்சு.இனிஎன்னை பாதுகாக்க ஆள் வேண்டாம். நானே பாத்துக்குவேன். உங்க கிட்ட வந்து சொல்லமாட்டேன்னு சொல்லி வாயடைச்சேன்.

எங்க ஊர்ல வீடுங்களில் வராண்டா வெச்சுத்தான் வீடுகள் இருக்கும். திண்ணை,
அதுக்கப்புறம் வராண்டா, ஹால், சமையல்கட்டுன்னு ஒரே மாதிரி இருக்கும்.
சில வீடுகளில் முற்றம் இருக்கும். தினமும் காலேல 3 மணிக்கு பால் கொண்டுவந்து
மோகனம்மா தூக்கத்தை கெடுக்கறாங்க(கொடுக்கச் சொன்னது அவ்வா) சின்ன
பொண்ணு வீட்டுல இருக்க என் தூக்கம் தான் கெடணுமான்னு அம்மா புலம்ப
ஹால்லேர்ந்து எந்திரிச்சி போக கஷ்டமா இருக்கு, நான் வரண்டாவிலேயே
கட்டில் போட்டு படுத்துக்கறேன்னு தைரியமா தனியா படுக்க ஆரம்பிச்சேன்.

என்னன்ன்வோ பயமுறுத்தி பாத்தாங்க. அசரலை என் இடம் இதான்னு
என் டேபிளையும் கொண்டுவந்து அங்கே பக்கத்துல போட்டுகிட்டு
எனக்குன்னு இடம் செட் செஞ்சுகிட்டேன்.

நான் இங்கிலீஷ் மீடியம். வீதியில சில பசங்க என் வகுப்புத்தான் ஆனாலும்
தமிழ் மீடியம். நைட் ஸ்டடிக்கு எங்க வீட்டு வராண்டாவில எல்லோரும்
கூடி படிப்போம். 1 மணி ரெண்டு மணி வரைக்கும் கூட படிச்சு பக்கத்து
வீதி பசங்களுக்கு வடக்கு 4ல பசங்க படிக்குதுங்க, இங்க பாரு எல்லாம்
தூங்குதுங்க உருப்படற வழியா இது!! அப்படின்னுதிட்டி வாங்கி கொடுத்திருக்கோம்.
:)) எங்களால ஆன சின்ன உபயம்.


கரெக்டா யுகாதி சமயத்துல வடக்கு 3 மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
நடக்கும். ரோட்டையே அடைச்சு கோலம் போடறது. மஞ்ச தண்ணி
ஊத்திடுவாங்களோன்னு பயந்து வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தது.
எல்லாமும் சுவாரசியம் தான்.

+1 படிக்கும்போது தான் வீட்டின் முதல் வாகன் உரிமையாளர் ஆனேன்.
அதான் அதைப்பத்தி 4 கொசுவத்தி சுத்தினேனே. சைக்கிளில் சல்லுன்னு
போய் வருவது ரொம்ப பிடிக்கும். இதனால என் பேரு
வடக்கு 4ஆம் வீதி ராக்கெட்டு!!!

உம்பொண்ணு ஒரு ஆள் தாய்யான், சல்லுன்னு சூப்பரா சைக்கிள்ல போகுது!
என்ன வேகம்? அப்படின்னு அப்பா ஆபீஸ்ல பாராட்டு.

நானும் என் ஃப்ரெண்ட் சுபத்ராவும் கடைவீதிக்கு போனது, போவோமா
ஊர்கோலம்னு பாடிகிட்டே திருவப்பூர் போய் மாரியம்மனை தரிசிச்சிட்டு
சின்ன மாரியம்மனா சாமி ஆடும் என் இன்னொரு ஃப்ரெண்ட் மங்கை
வீட்டுக்கு போயிட்டு அவங்கம்மா கையால காரக்குழம்பு சாப்பிட்டதுன்னு
ஜாலிதான்.

பள்ளத்தூர் சீதாலட்சுமி காலேஜ்ல தான் படிப்பு. தினமும் காலை 8 மணிக்கு
வீட்டிலிருந்து கிளம்பி 10 நிமிஷத்துல பஸ்ஸ்டாண்ட் போய் சைக்கிளை
ஸ்டாண்டில் விட்டுட்டு 8.20 பஸ் பிடிச்சு 9.30க்கு காலேஜ்ல இருப்பேன்.
சாயந்திரம் 4 மணிக்கு காலேஜ் முடிய 4.15 பஸ் பிடிச்சு 5.15 புதுக்கோட்டை,
5.25 வீட்டில். என்னை பார்த்து கடிகாரத்தை சரி பார்த்துக்கலாம்.
இதில் எந்த மாறுதலும் இருந்ததில்லை. எங்க போனாலும் வீட்டுல சொல்லிட்டு
போவேன் அதே மாதிரி இத்தனை மணிக்கு திரும்ப வருவேன்னு
சொன்னமாதிரி இருப்பேன் கூட. இது என் மேல அம்மாவுக்கு நம்பிக்கையை
கொடுத்துச்சு. ஆரம்பத்துல பயப்பட்டவங்க அப்புறம் ரொம்ப சப்போர்ட்டா
இருந்தாங்க.


என் உயிர்த்தோழியுடன் தான் பொழுதுகள் போகும்.

நாடக விழா நாடகங்கள், விவதபாரதி, இலங்கை வானொலி, இவை இல்லாத பதின்ம வயதா? அம்மா அடித்தால் அப்பா திட்டினால் நான் கரைந்தது
கானக்கந்தர்வன் குரலில்.அவர் குரல் என்னை தாலாட்டும்.

இளையராஜாவின் பாடல்கள், அப்புறம் ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்
கேட்காத நாளே இல்லை.



அப்போதெல்லாம் எனக்கு பாம்பு மாதிரி மிக நீண்ட கூந்தல். அக்கா உன் முடி ரொம்ப
ஸ்ட்ராங்க், அதை வெச்சு பட்டம் விடலாம் என்பான் தம்பி:)

என் முடி மேல் எனக்கு கர்வம் ஜாஸ்தி( என் கை ஒடிந்த பொழுது
அதையும் வெட்ட நேர்ந்தது) அம்மாவும் வேலைக்கு போக
ஒரே தம்பியை வளர்த்தது நான் தான். அவ்வா கிட்ட சண்டை போடுவான்.
என் கையால சோறு உன்பது அவனுக்கு பிடிக்கும். மும்பை போகும் வரை அவனுக்கு வாராவாரம் எண்ணெய் தேய்த்து நான் தான் குளிப்பாட்டுவேன்.

எனக்கும் தம்பிக்கு 8 வருட வித்யாசம் என்பதால் என் பதின்மவயதில்
அவனை தாயாய் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருந்தது.(இல்லாட்டி
டின் கட்டிடுவாங்க)

ஆசைப்பட்ட படிப்பை இழந்தது இந்த பதின்மவயதில்தான்.
19 வயசுல இந்திராகாந்தி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல டீச்சர் வேலை.
என் பதிவுகளில் பல இடங்களில் கொசுவத்தில் சுத்தியிருப்பேன்.
எல்லாம் பதின்ம வயதுகளில் நிகழ்ந்தது தான். 20ஆவது வயதில்
புதுகைக்கு டாடா சொல்லிவிட்டு மும்பை போனவள் 2 வருடங்களில்
அம்மம்மா பாத்த மாப்பிள்ளையுடன் திருமணம் முடித்து கிளம்பினேன்.


கலாக்கா மாதிரி இருக்கணும்னு வடக்கு 4 வீதி பிள்ளைகளுக்கு
சொல்லும் அளவுக்கு பேரு வீதியில.

தொடர் பதிவுக்கு அழைச்சது அமைதிச்சாரல்.

நான் அழைப்பது
ஆயில்யன் பாஸ்
அநன்யா மஹாதேவன்

ராமலக்‌ஷ்மி

Tuesday, September 29, 2009

தென்றல் வந்தக் கதை..

ரெய்கி கற்ற பிறகு மெடிட்டேஷன் செய்வேன்.
சில சமயம் அபூர்வமாக ஏதாவது
மெசெஜ்கள் கிடைக்கும். அதாவது ஏதோ நிகழ போவது
போல். கண்ணை மூடினால் கம்ப்யூட்டர் மானிட்டர் போன்ற
ஸ்கிரீனில் தமிழ் எழுத்துக்கள் போகும். இப்படி பலமுறை
போக ஆரம்பித்த பிறகு யோசிக்க ஆரம்பித்தேன். நமக்கு
வரும் செய்தி தான் என்ன? என கூர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.


தமிழில் நான் எழுதுவது என்பது சாத்தியமில்லை என்பது
என் திடமான நம்பிக்கை. பதிவர் வண்ணத்துப்பூச்சியார்
அவர்கள் என்னை சென்னை இரயில் நிலையத்தில்
சந்தித்த போது அப்பாவும் உடனிருந்தார்.

என் டிரையின் கிளம்பிய பிறகு அப்பாவுடன்
பேசிக்கொண்டிருந்திருப்பார் போல.
என் எழுத்தைப் பற்றி சூர்யா சொல்ல அப்பா
சொன்னது சூர்யா அவர்களுக்கு செம அதிர்ச்சி.
“அவளுக்கு தமிழே வராது. தமிழ் படிக்க ரொம்ப
கஷ்டப்படுவாள்”!!!!!!! :))) எல்லோரும் சொல்வது
போல் தமிழ் தெரியாது என்று ஸ்டைலுக்காகச் சொல்லவில்லை.

தாய்மொழி தெலுங்கு. வீட்டில் அதுதான் பழக்கத்தில்
இருக்கும் மொழி. பேச்சுத் தமிழ் தெரியும். எழுத
படிக்கத் தெரியும். ஆனால் கதை, கட்டுரை, கவிதை
எல்லாம் எழுதும் அளவுக்கு தமிழ் தெரியாது. அதுதான்
மேட்டர்.

என்னைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்பதால்
“நாம எங்க தமிழ்ல எழுத போறோம்”!!! என மெசெஜை
லட்சியம் செய்யாமலிருந்தேன். 4 மாதங்கள் கழித்து
இம்சை அரசி அவர்களின் வலைப்பூ பற்றி விகடன்
வரவேற்பரையில் வந்திருந்தது. அதைப் படித்து
விட்டு இணையத்தில் அவரது வலைப்பூ தான் நான்
முதலில் படித்தது. அங்கேயிருந்து சில வலைப்பூக்களுக்கு
போய் படித்தேன். செம இண்ட்ரஸ்டிங்காக இருந்தது.

புத்தகம் வாசிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று.
இப்போது இணையத்தில் படிக்க வாய்ப்பு. இதுதான்
என்னை வலைப்பூ பக்கம் வரத் தூண்டியது.

பா.பா.சங்கத்தில் பக்கம் போனதில் மைஃப்ரெண்ட்
இமெயில் ஐடி கிடைத்தது. இம்சை அரசிக்கு
என் வாழ்த்தை சொல்லுங்கன்னு அவருக்கு ஒரு
மெயில் அனுப்பி ஆரம்பித்தது முதல் உறவு.

அந்த நேரம் பினாத்தல் சுரேஷ் அவர்கள்
Wifeology பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
படிக்க படிக்க இம்புட்டு பெண்கள் எழுதறாங்களே!
ஒருத்தராவது இவருக்கு எதிராக எழுதக்கூடாதா?
என ஆதங்கப்படுவேன்.

”நீங்களே எழுதுங்க அக்கா!” என்று மை ஃப்ரெண்ட்
ஊக்குவிக்க வலைப்பூ துவங்கினேன். இ கலப்பை
லிங்க் அனுப்பி, தமிழ் டைப் அடிப்பது எல்லாம்
சொல்லிக்கொடுத்தது அன்பு தங்கச்சி மைஃப்ரெண்ட் தான்.
மனமார்ந்த நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.

எத்தனையோ பெயர்கள் யோசித்து கடைசியில்
நான் பிறந்து வளர்ந்த ஊரான புதுக்கோட்டைக்கு
பெருமை!!! சேர்க்குமுகமாக புதுகைத் தென்றல்
என்ற பெயரில் பதிவெழுத ஆரம்பித்தேன்.
மும்மத பிரார்த்தனை பதிவுதான் என் ஆரம்ப
பதிவு. அது வித்தயாசமான துவக்கம்னு ரசிகன்
பாராட்டியிருந்தார். அப்பெல்லாம் என் பதிவுகளுக்கு
ரசிகன் தான் அதிகமா பின்னூட்டம் போட்டு
பாராட்டி, ஊக்குவித்து எல்லாம் செய்தார்.

அப்புறம் ஆரம்பமானது ஹஸ்பண்டாலஜி. :)))
செம காரசாரமான விவாதங்கள், வெளிநடப்புக்கள்
என ஜாலியா இருக்கும் ஹஸ்பண்டாலஜி வகுப்பறை.

அக்கா, அக்கான்னு பேசறவங்க கூட அவங்க
மனைவிகிட்ட என்னை அறிமுகப்படுத்த
பயப்பட்டாங்க!!! ஒரு டெர்ரரா அறிமுகமானோம்ல.
:)))

ஹஸ்பண்டாலஜி பதிவுகள் தந்த அறிமுகம்
என் எழுத்தை படிக்கவும் மக்கள் வந்தனர்.
”அட நாமும் தமிழில் எழுதி அதை நல்லா
இருக்குன்னு!”சொல்றாங்க என்பது சந்தோஷம். உபயோகமான
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளனும் என்பதுதான்
என் ஆசை. படிப்பவர்கள் ”புதுகைத் தென்றல் வலைப்பூ பக்கம்
போனோம்பா, நல்லா இருந்துச்சு, மைண்ட்ல
வெச்சுகிட்டு பின்னாடி யூஸ் செஞ்சுக்கலாம்”
எனும் எண்ணம் வரவேண்டும். இது தான்
ஆசை. உங்கள் அனைவரின் ஆதரவோடு
484 பதிவுகள் போட்டுவிட்டேன். இன்னும்
இரண்டு வருடங்கள் கூட முடியவில்லை
என்பது தான் சிறப்பு.





பதிவு எழுதுவது என்று ஆரம்பித்து இப்போது
ஒரு உலகமே உருவாகிவிட்டது.புது புது உறவுகள்,
நட்புகள் என அன்பு நிறைந்த உலகம் என்னுடையது.

கைவலி என்று பதிவு போடுவது
குறைந்துவிட்டாலும் ஆன்லைனில் பார்த்தாலே
அதட்டும் ஜீவஸ், ரங்கா, மங்களூர் சிவா
என அன்பு நெஞ்சங்கள். கை வலி பற்றி
எஸ்.எம்.எஸ் அடித்தாவது தெரிந்து கொள்ளும்
கோமா, மெயிலோ, போனோ செய்து பேசும்
நட்பு ராமலட்சுமி என எத்தனையோ கொடுத்திருக்கான்
இறைவன்.



ஹைதையில் “தாரே ஜமீன் பர்” படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியை நான். ஆனால் அதிகமாக
டூர் போகும் வேலை அயித்தானுக்கு. நான் வேலைக்கு போனால்
பிள்ளைகளை சரிவர கவனிக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக
வேலைக்குச் செல்லவில்லை. பார்ட்டைம் வேலை எல்லாம்
இந்தியாவில் சாத்தியமில்லை.( எங்கள் அப்பார்ட்மெண்டில்
இருக்கும் தோழி ஒருவர் டெல்லி பப்ளிக் பள்ளியில் ஆசிரியை.
என்னிடம் இருக்கும் நான் தயாரித்த புத்தகங்கள், பயிற்சி
எல்லாம் பார்த்து என்னை அவர்கள் பள்ளியில் ப்ர்ப்ரைமரி
இன்சார்ஜாக சேரச்சொல்லி ஒரே அடம்.)

படம் பார்த்துமுடித்தது மனதில் ஏதோ நெருடல்.
மாண்டிசோரி ஆசிரியையாக நீ வேலை பார்க்காவிட்டால்
என்ன? பெற்றோர்களுக்கு தேவையான டிப்ஸ்கள்,
சில்ட்ரன் சைக்காலஜி பற்றி, இப்படி நிறைய்ய சொல்லலாமே.
ஒரு ஆரோக்கியமான தலைமுறை பிள்ளைகள்
உருவாக உன்னாலான தகவல்களை பகிர்ந்து
கொள்ளலாமே!! என்று தோன்றியது.

அதனால் உருவானது தான் பேரண்ட்ஸ் கிளப். தம்பி இம்சை அவர்கள் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று கிளப்பில்

என்னோடு
* விசயக்குமார்

* Vidhoosh
* பேரன்ட்ஸ் கிளப்
* வண்ணத்துபூச்சியார்
* கிருத்திகா
* Jeeves
* அபி அப்பா
* சுரேகா
* பாச மலர், எம்.எம்.அப்துல்லா ஆகியோரும் எழுதி தேவையான
விழிப்புணர்வை வழங்குகிறோம்.

கானக்கந்தர்வன் யேசுதாஸ்- இவரது பாடல்கள் என்றால்
உயிர். அவரது பாடல்களை பதிய வேண்டும் என்ற
ஆசையுடன் ஆரம்பித்தது கானக்கந்தர்வன் வலைப்பூ.
யேசுதாஸ் அவர்களின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு
பாடல்கள் இங்கே இருக்கு. தம்பி நிஜம்ஸ், நாமக்கல் சிபி,
ஜி3,ஆகியோரும் என்னோடு இங்கே எழுதறாங்க.

தென்றல் வந்த கதைன்னு சொல்லி தென்றல்
செல்லும் பாதையையும் சொல்லிட்டேன் போல இருக்கு.

:))))))))))))))))

Monday, August 03, 2009

தன்னம்பிக்கையே டானிக்காக....

எனக்கு 11 வயது இருக்கும்பொழுது ஏற்பட்ட மூளைகாய்ச்சலின்
போது 6 கிலோ ஐஸ் வைத்து ஜுரத்தை குறைத்து என்னைக்
காப்பாற்றினார்கள்.அதன் பாதிப்போ அதற்கு முந்தைய அம்மை
வார்ப்புக்களின் பாதிப்போ புரியவில்லை. ஆனால் என்
வலது கண் பாதிக்கப்பட்டது. பார்வைக்குறைபாடு.
ஆரம்பமே -3.( எப்படி ஒரு கண்ணில் மட்டும் இப்படி
என்பது அதிசயம். அதைவிட அதிசயம் 4 வருடங்களுக்கு
முன் லேசர் ஆப்பரேஷன் செய்த பொழுது -9.)

சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்து பட்ட வேதனை
தாளாமல் அம்மா லென்ஸ் வாங்கிக்கொடுத்தார்.
லென்ஸ் வைத்துக்கொள்வதை போன்ற கொடுமை
அப்பாப்...

கண்ணைக்கசக்க முடியாது, சினிமா பார்க்க முடியாது(
உத்துப்பார்பப்தால் லென்ஸ் மேலே மாட்டிக்கொள்ளும்,
லென்சோடு பயணம்,தூக்கம் கஷ்டம்)

கண்வலி, தலைவலி அதிகமாகும்பொழுது
அம்மாவிடம் அழுவேன்.
எனக்கு மட்டும் ஏனிந்த நிலை!!! என்று புலம்புவேன்.

அம்மா சொன்னது,”உன்னை விட கஷ்டப்படுபவர்கள்
இந்த உலகில் இருக்கிறார்கள்!”
அதெல்லாம் இருக்காது என்று அந்த அறியாத
வயதில் சொல்லியிருக்கிறேன். அந்த திரைப்படம்
பார்க்கும்வரை என் எண்ணம் அதுவாகத்தான் இருந்தது.

அன்று அம்மா அழைத்துச் சென்ற திரைப்படம்
என்னை மாற்றியது. விபத்தொன்றில் தன்
கால்களை இழந்த நாட்டிய மங்கை மீண்டும்
நாட்டியமாட படும் பாடு...

கட்டைக்கால்கள் கொண்டு நடனமாடியதில்
வலி ஏற்பட காலை எடுக்கும்பொழுது ரத்தம்
பீய்ச்சும்...

அந்த வலிகளைத் தாங்கி தன்னம்பிக்கையுடன்
போராடி தன் லட்சியமாகிய அரங்கேற்றம்
செய்யும் அற்புதமங்கையாக சுதா சந்திரன்
நடித்த மயூரி படமது.




நிஜ வாழ்விலும் அவர் காலை இழந்தவர்
என்பது தெரிந்த பொழுது எனக்கான செய்தி
கிடைத்து போல் உணர்ந்தேன்.

அன்று முதல் அங்கலாய்ப்புக்கள் இல்லை.
ஒரு கதவை மூடிய இறைவன் எனக்கான
மறுகதவை கட்டாயம் திறப்பான்.

பார்வைக்குறைபாட்டிற்காக சோர்ந்து
போய்விடக்கூடாது என்று நிச்சயம் செய்து
உறுதிமொழி எனக்கு நானே எடுத்துக்கொண்டேன்.

”பாடப்பாட ராகம், முனக முனக ரோகம்”
எனும் பழமொழிக்கேற்ப எனக்கு வந்த
வியாதிகள் தடைகள் எல்லாவற்றையும்
தாண்டி மேலே எழும் வரத்தை தன்னம்பிக்கையை
இறைவன் தந்தான்.




நெருப்பிலிருந்து மீண்டு எழும் ஃபினிக்ஸ் பறவையாக
நான் என்னை நினைத்து மீண்டெழுந்த எத்தனையோ
சந்தர்ப்பங்கள்...

இந்தக் கதைகள் இப்போதெதற்கு????

இப்போதும் இவைகளை நினைத்துப் பார்க்க
வைக்கும் சம்பவம்.

10 வருடங்களுக்கு முன் விழுந்து
வலது கை மணிக்கட்டில்
ஏர்லைன் க்ரேக் ஆகி இருந்தது
தெரியாமல் சரியான வைத்தியம்
பார்த்துக்கொள்ளவில்லை.
அதிக வேலை செய்தால்
என் வலது கை வலிக்கும். க்ரேப் பேண்டேஜ்
போட்டு 2 நாள் ரெஸ்ட் கொடுத்தால் சரியாகும்.
இப்படியே ஓட்டிக்கொண்டிருந்தேன்.

2 மாதம் முன்பு வேலைக்காரம்மா 10 நாள்
விடுப்பெடுக்க பயங்கர வேலை கைகளுக்கு.
அதிக வலி எடுத்து உணவை எடுத்து
உண்ணக்கூட முடியாமல் ஆகிவிட
மூட்டுவலி நிபுணரை பார்த்தோம்.

ஸ்பாண்டிலைடிஸ் என்று உறுதி படுத்தினார்.
கை விரல்களின் நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
ரெஸ்ட் + பிசியோதெரபி தான் மருந்து
என்று சொல்லிவிட்டார்.

பிசியோதெரபி எடுத்துக்கொள்ளலாம்.
ரெஸ்ட் என்பது இல்லத்தரசிகளுக்கு
சாத்தியமில்லாத ஒன்று. தினமும்
பிசியோதெரபி செய்து கொண்டேன்.
ட்ராக்‌ஷன் வைக்கப்படும். அப்புறம்
கைகளுக்கு கொஞ்சம் பயிற்சி.

ஆனால் வீட்டில் வேலை செய்ய முடியவில்லை.
தோசை ஊற்றக்கூட கைவரவில்லை.
வலது கையால் தண்ணீர் எடுத்துக்குடிக்க
முடியவில்லை. என்னை மட்டுமே சார்ந்து
பழக்கப்பட்ட எனக்கு அடுத்தவர்களை சார்ந்து
கஷ்டப்படுத்த வேண்டிய நிலை. :(((

இந்த நிலையில் அயித்தான் மிகவும் கவனமாக்
பார்த்துக்கொண்டார். 15 நாள் நான் பக்கத்தில்
இருந்து சொல்ல அவரே உணவு தயாரித்து
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினார்.
பிள்ளைகள் இருவரும் மிக்க உதவி
செஞ்சாங்க.
ஒருமுறை தவிர்க்க முடியாத காரணமாக
அலுவல் நிமித்தம் வெளியூர் செல்ல ஏர்போர்ட்
வரை சென்றவர் பயணத்தை ரத்து செய்துவிட்டு
வீட்டிற்கு வந்து என்னை பார்த்துக்கொண்டார்.

கைகளுக்கு கொஞ்சம் முன்னேற்றம் வந்தது.
உப்புமா, சப்பாத்தி, செய்வது சவலாகத்தான்
இருந்தது. இப்போதும் சப்பாத்தி கஷ்டம்.
ஆனால் டீ, உப்புமா கொஞ்சமாக செய்ய முடியும்.


இத்தனைக் கஷ்டங்களுடன் பதிவெழுதித்தான்
ஆக வேண்டுமா? போய் ஓய்வெடுங்கள் என
என்னை அன்பாக ஆன்லைனில் கண்டித்து
நட்புக்களும், உடன் பிறப்புக்களும் என்னை
திக்குமுக்காடச் செய்துவிட்டார்கள்.

கணிணியில் தட்டச்சுவதையும் பயிற்சி
போல் கொஞ்ச நேரம் செய்து பதிவெழுதினேன்.
அதனால் தான் கடந்த 2 மாதங்களாக
1 நாளைக்கு 4 பதிவெல்லாம் போடவில்லை.
ஆனாலும் நான் தொலைந்துவிடாமல்
என் தன்னம்பிக்கைக்கு உறமிட்டது பதிவுக்கள்தான்.


சென்றவாரம் மேற்கொண்ட ரயில்பயணத்தால்
தற்போது கொஞ்சம் பிரச்சனை ஆகியிருக்கிறது.
(மருத்துவரின் அனுமதியின் பேரில்தான்
பயண்ம் செய்தேன்.) முதுகு வலி அதிகரித்துவிட்டது.
அதனால்தான் ஆன்லைனில் கூட யாருடனும்
பேசமால் அன்அவலைபிளாக இருந்து பதிவிட்டேன்.

இந்த நிலையில் விருந்தினர் வந்து சென்ற
பயணாக கைவலி மிக மிக அதிகமாகி
தற்போது கைக்கு 1 வாரம் ரேடியேஷன்
கொடுக்கும் நிலை.

ஆக கொஞ்சம் ரெஸ்ட் தேவை என்பதை
நானே உணர்ந்து மீ த டேக்கிங் ரெஸ்ட்.

:)))

அதுக்காக இந்தக் கடையை பூட்டிட்டேன்னு
நினைக்காதீங்க. என்னால எந்த வேலையையும்
செய்யாம சும்மா உட்கார முடியாது. ஒரு நாளைக்கு
15 நிமிடம் கணிணியில் உட்கார அயித்தான்
பர்மிஷன் கொடுத்திருக்காரு.(ரொம்ப டைப் அடிச்ச
பாத்துக்கன்னு மிரட்டலெல்லாம் ஓவரா இருக்கு. :)) )

இந்தக் கைவலித் தடையையும் தாண்டி வருவோம்ல..

:))))))))))))))

Wednesday, July 29, 2009

சந்தோஷமா இருக்கு..

என் தோழி ஒரு கதை சொல்வாங்க.
அந்தக் கதையை நான் உங்களுக்குச் சொல்றேன்.

ஒரு ஊருல ஒரு அம்மா. அவங்களுக்கு 4 குழந்தைங்க.
2 மகள், 2 மகன். அன்னைக்கே உரிய அன்போடு
பிள்ளைகளை நல்லவிதமா வளர்த்தாங்க. பிள்ளைகளுக்காக
எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் அன்புத்தாய்.

அம்மோவோட அன்புக்குத்தான் அளவே இல்லையே.
பிள்ளைங்க மனசு கோணாம அவங்க கேட்கும்
முன்னே செய்து தரும் அம்மா அவங்க.

பிள்ளைங்களும் வளர்ந்து பெரியவங்க ஆனாங்க.
அம்மா எப்போதும் போல அவங்களுக்குச் சேவைகள்
செஞ்சு, கல்யாணம் கட்டி கொடுத்து,
பேரன், பேத்திகளை எல்லாம் பார்த்த பிறகு
சந்தோஷமா மன திருப்தியுடன் இறைவனடி சேர்ந்தாங்க.

எமலோகத்தில் இறந்தவர்களின் பாவ புண்ணிய
கணக்குகளை பார்க்கும் பொழுது இந்த அம்மாவை
கொஞ்ச நாட்களுக்கு நரகத்தில் இருந்து விட்டு
பிறகு சொர்க்கம் செல்லும் படி யம தர்மன் சொல்ல
அம்மாவுக்கு ஆச்சரியம்!!

“நான் என் வாழ் நாளில் எனக்கென எதுவும்
செய்து கொண்டதில்லை. எப்போதும் என்
பிள்ளைகளை பேணி வளர்ப்பதில் தானே
கண்ணும் கருத்துமாக இருந்தேன். குடும்பத்தினரின்
சந்தோஷத்திற்காக என்னை தியாகம் செய்து
வாழ்ந்த நான் ஏன் நரக லோகத்தில்
தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று
கேட்க யமதர்மராஜ சொல்கிறார்
“அம்மா! உங்களுடைய தன்னலமற்ற
சேவைக்காகத்தான் உங்க தண்டனை
குறைக்கப்பட்டிருக்கிறது” அப்படின்னு
சொல்ல,”நான் செய்த குற்றம் தான் என்ன?”
அப்படின்னு அந்த அம்மா கேட்கிறார்.

யம தர்மராஜன் உன் பிள்ளைகளின்
நிலையைச் சற்று பார் என்று
சொல்லி மாயக்கண்ணாடியில் காட்டுகிறார்.
அங்கே அந்த அன்னையின் பிள்ளைகளும்,
மருமக்களும், பேரன், பேத்திகளும்
அவர் இல்லாமல் வாழ முடியாமல் தவிக்கிறார்கள்.

பார்த்து பார்த்து செய்து கொடுக்க ஆளிருந்ததால்
தன் வேலையைத் தானே செய்து கொள்ளத்
தெரியாமல் சோம்பேறிகளாக வளர்ந்துவிட்டார்கள்.
அதனால் இப்போது குடும்பத்தில் குழப்பம், சண்டை
சச்சரவுகள் என நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்.

“எங்கம்மாவைச் சொல்லணும்! எனக்கு ஒண்ணும்
தெரியாமல் வளர்த்துட்டாங்க. அவங்களாலத்தான்
நான் இவ்வளவு கஷ்டம் படறேன்” என்று சொல்வதை
அந்தத் தாயும் கேட்டு கண்ணீர் விடுகிறாள்.

வாதமாக எடுத்துக்கொள்ளமால் இந்தக் கதை கூறும்
நீதி பிள்ளையை வளர்ப்பது என்பது அவர்கள் வேலையையும்
நாமே செய்து அவர்களின் வளர்ச்சியைக் கெடுப்பது இல்லை
என்பது. சுயமாக அவர்கள் வாழும் வகையில் வளர்க்க
வேண்டும். சரிதானே!

சரி இப்ப எனக்கு எதுக்காக சந்தோஷம். சொல்றேன்.:)
திருமணம்,குழந்தைகள் என்று ஆன பிறகு நான்
தனியாக எங்கும் சென்றதே இல்லை. ஆனால்
முதன் முறையாக திருமணம் ஒன்றுக்காக நான்
மட்டும் பயணம் ஒன்று செய்தே ஆகவேண்டிய
நிர்ப்பந்தம். போய்வந்தேன்.

ஞாயிறு, திங்கள் இரண்டு நாளும்
நான் ஊரில் இல்லை. திங்கள்
பிள்ளைகளுக்கு பள்ளி இருந்தது. ஆனால்
எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ரெடியாகி
விட்டார்களாம். அயித்தான் உணவு தயார்
செய்து கொடுக்க எப்போதும் போல் பள்ளிக்குச்
சென்று வந்து பாடம் படித்து,
துணிகளை மடித்துக்கொடுத்து, பாத்திரம் எடுத்து
வைக்க அப்பாவுக்கு உதவி செய்து....

என இருந்திருக்கார்கள். நான் எப்படி விட்டுச்
சென்றேனோ அப்படியே சுத்தமாக வீடு இருந்தது.

கேட்க சந்தோஷமாக இருந்தது. அந்தக் கதையி்ல்
வரும் தாய் போல இல்லாமல் இருப்பதால்
சந்தோஷம். :))

அயித்தானுக்கும், குட்டீஸ்களுக்கும் நன்றி.

Tuesday, May 26, 2009

கொஞ்சம் ஹெல்புங்களேன்....

துணை என்பதன் பொருள் என்ன?
நானிருக்கிறேன் என்று, எங்கும், எப்போதும்
துணையாக இருப்பது.

இப்படி ஒரு துணை வாழ்க்கைத் துணையாக
கிடைக்க வேண்டுமென்பதுதானே அனைவரின்
கனவு/ஆசை.

நூல்வேலி திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலில்
மனைவிக்கு கணவன் ஊக்கமளிப்பதாக வரிகள்
இருக்கும்.

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
பாலு அவர்களுடன் தேனிசை தேவதை
வாணிஜெயராம் அவர்கள் இணைந்து
பாடியிருப்பார்கள்.




Get Your Own Hindi Songs Player at Music Plugin

திருமணத்திற்கு பிறகும் பெண்கள் சாதிக்க
கண்டிப்பாக கணவரின் அன்பும், ஒத்துழைப்பும்
அவசியம். அடக்கி வைக்காமல் சுடர் விடும்
விளக்குக்கு தூண்டுகோளாக எத்தனை பேர்
இருப்பார்கள்???

அயித்தானின் அன்பும் அனுசரனையும் தான்
என்னை அதிகம் கற்க வைத்தது. நீச்சல்,
மாண்டிசோரி கல்வி என லிஸ்ட் அதிகம்.

இப்போது வெகு நாட்களாக நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்த
தஞ்சாவூர் பெயிண்டிங், INTERIOR DECORATION
இரண்டு கோர்ஸும் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அயித்தானும் ஓகே சொல்லிவிட்டார்.(சொல்லாட்டிதான்
ஆச்சரியம் :)) )

என்ன படிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

மீ த யோசிச்சிங்....

உங்க ஐடியாஸ் என்ன ஃப்ரெண்ட்ஸ்.

Thursday, April 23, 2009

ஜாலி ஜாலி ஜிம்கானா!!!!

எப்பவும் பசங்களுக்கு லீவு விட்டா அம்மாக்கள்
லீவுல பசங்களை எப்படி மேய்ப்பது?!!! லீவ்
ஏந்தான் விடறாங்களோன்னு அங்கலாய்ப்பாங்க.

ஆரம்பத்துல எனக்கும் அப்படி நினைப்பு இருந்துச்சுதான்.
அப்புறம் மாறிப்போச்சு. பசங்களுக்கு லீவு விட்டா
நமக்கு கிடைக்கற ப்ளஸ்களை நினைச்சு பாத்து
மாத்திகிட்டேன்.

1. அலாரம் வெச்சு அடிச்சு பிடிச்சு எந்திரிக்க வேண்டியதில்லை.
2. காலை 6.15 மணிக்குள் சமையல், காலை உணவு,
கையில் எடுத்துச் செல்ல(ஷார்ட் ப்ரேகில் சாப்பிட)
ஒரு டிபன் என்று செய்ய தேவையில்லை.

3. அழகா பொறுமையா தூங்கி எந்திருச்சு சமைக்கலாம்.

4. படி படின்னு சொல்லிகிட்டே இருக்காம கொஞ்சம்
ஓய்வா இருக்கலாம்.(ஓய்வு நமக்குத்தான்:))

5. நேரம் கிடைக்கும்பொழுது டூர் அடிக்கலாம்.
(கொளுத்தும் வெயில் என்பதால் இந்த விடுமுறையில்
மட்டும் டூர் போக மாட்டோம்.)

இப்படி நிறைய்ய்ய்ய்......ய + தான்.

இன்றையிலிருந்து பிள்ளைகளுக்கு விடுமுறை.
ஜூன் 10 தான் பள்ளி திறப்பு. அதுவரைக்கும்
ஜாலி ஜாலி ஜிம்க்கானானு ஆட்டம் தான்.

சம்மர் கேம்ப் எல்லாம் சேர்க்கலை. வீட்டிலேயே
நாங்க கொண்டாடறதா முடிவெடுத்திருக்கோம்.

முன்னாடியே சொன்ன மாதிரி ஆஷிஷ் அம்ருதாவுக்கு
வீட்டிலேயே குக்கரி கிளாஸ்,

அவங்களுக்கு விருப்பமான டான்ஸ் கிளாஸில்
சேர்த்தாச்சு.


மே மாதம் என் மாமாக்கள் இருவரும் தங்கள்
குடும்பத்தினருடன் வரப்போறாங்க.

அவங்க கூட அம்மம்மா தாத்தாவும் வர்றாங்க.
அம்மம்மாவை பாத்து 1 வருஷம் ஆச்சு.

சோ, ஜாலி ஜாலிதான்.

பசங்களுக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.
யாரும் அவங்கிட்ட சொல்லிடாதீங்க ப்ளீஸ். :)))
(அடுத்த வாரம் சர்ப்ரைஸ் பத்தின பதிவு வரும்)



*****************************



“அக்கா நீங்க இந்த வருஷம் எப்படியும் 1000 போஸ்ட்
போட்டுடுவீங்க” அப்படின்னு அடிக்கடி நிஜமா நல்லவன்
போன்ல சொல்வது நடந்திடும்
போல இருக்கு :)) இது என்னோட 400ஆவது போஸ்டாச்சே!!!

Thursday, March 26, 2009

பட்டென்று போன பட்டு...

+2 பரிட்சைக்கு 2 மாதம் இருக்கையிலேயே என் வகுப்புத் தோழி
நிர்மலாவுக்கு திருமணமாகிவிட்டது. நான், நிர்மலா, மங்கை
மூவரும் நெருங்கிய தோழிகள். நிர்மலாவின் திருமணத்திற்கு
போகமுடியாவிட்டாலும் அவளை வீட்டில் சென்று பார்த்தோம்.


ஹாலில் அவளது கணவருடன்சேர்ந்து எடுத்துக்கொண்ட
போட்டோ இருந்தது. மிளகாய்ச் சிவப்பு கலர் பட்டுப்புடவையில்
டார்க் நீல பார்டர் போட்ட புடவை கட்டியிருந்தாள். அவரது
கணவர் நீல நிற கோட் அணிந்திருந்தார். நாங்கள் மூவரும்
நிக் நேம் S ல் ஆரம்பித்தது போல் வைத்தல் என பல விடயங்கள்
ஒரு சேர இருக்கும். பிற்காலத்தில் நிம்மியின் போட்டோ போல்
எங்கள் திருமணத்திற்கு பிறகும் சேம் கலர் புடவையுடன் போட்டோ
எடுத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம்.

வெந்தயக் கலரில் அரக்கு கலர் பார்டர் காம்பினேஷனும்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

சத்யாமாமா ஒரு முறை புதுகை வந்த போது
அம்மமாவுடன் நான் இந்தக் காம்பினேஷன் குறித்து
பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டார்.

”இந்தப் பட்டுப்புடவைகளை எப்படித் தயாரிக்கிறார்கள்
தெரியுமா? அதைத் தெரிந்து கொண்டதனால்தான்
என் திருமணத்தில் உன் வருங்கால அத்தை பட்டு
கட்டக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறேன்!!”
என்றார் மாமா.

“உங்களுக்கு பிடிக்கவில்லை! ஆனால் எனக்கு
பிடித்திருக்கிறது” என்றேன்.

மாமா சிரித்துக்கொண்டே போய்விட்டார். நானும்
அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை.






ஒரு நாள் டீவியில் பட்டுப்பூச்சி வளர்ப்பு, அதிலிருந்து
பட்டுநூல் எப்படி தயாரிப்பது? எல்லாம் காட்டினார்கள்.
கொதிக்கும் வெந்நீரில் புழுக்களை போட்டு....
நூல் தயாரிப்பதை பார்த்த நொடியில் மாமா சொன்னது
ஞாபகம் வந்தது. பார்க்கவே முடியவில்லை.


மாமாவுக்கு நான் கண்ட நிகழ்ச்சியைப் பற்றி
கடிதம் எழுதினேன்.

“இப்படி நெய்யப்படும் புடவையை அணிவது நல்லதா”?
என யோசி!!” என்று மாமா பதில் எழுதியிருந்தார்.


அதன் பிறகு நிறைய யோசித்தேன்.

இப்படி உயிரைக் கொன்று உருவாக்கப்படும்
பட்டுபுடவையை உடுத்தி மங்களமான திருமணமா?

கோவிலுக்கு உயிர்வதை செய்யப்பட்ட புடவையா?

எங்கள் தெலுங்கு சம்பிரதாயத்தில் ஒரு பழக்கம்.
மணப்பெண்ணிற்கு தாலிகட்டும் நேரத்தில் அணியும்
புடவையை “வெல்லம்ப்பூ சீர” என்போம்.

அது வெள்ளை பருத்தித் துணியால் ஆன புடவை.
அதை மஞ்சளில் முக்கி(கிருமி நாசினி) காயவைத்து
அதைத்தான் உடுத்த வேண்டும்.

இப்போது அப்படியாரும் செய்யவில்லை என்றாலும்,
மஞ்சள் கலர் காட்டன் புடவை அல்லது
கேரளா காட்டன் புடவைதான் அணிவது வழக்கமாக
இருக்கிறது.

வாழ்வில் மிக முக்கியமாண தருணமாகிய
திருமணத்தின் தாலிமுடியும் நேரத்தில் கூட
மதிக்கப்படாத அந்த பட்டுப்புடவையை நான்
கட்டித்தான் ஆக வேண்டுமா என யோசித்தேன்.

மாமாவுக்கு என் எண்ணங்களை கடிதமாக எழுதி
நானும் மாமாவின் வழியில் ”பட்டுப்புடவைக்கு
நோ” சொல்ல விரும்புவதாக சொன்னேன்.

மாமா சந்தோஷம் என்று பதில் அனுப்பினார்.
ஆனால் வீட்டில் பயங்கர எதிர்ப்பு.
“உன் மாமா ஆண்பிள்ளை. அவர் கண்டீஷன்
போடலாம். நீ கண்டீஷன் போட்டால் உன்னை
யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள்”
அப்படி, இப்படி என்று அப்பா, அம்மா
என அனைவரும் எதிர்ப்பு.

எந்த சூழ்நிலையிலும் என் கொள்கையை விட்டுக்
கொடுக்க நான் தயாராக இல்லை. அப்பா காட்டிய
எதிர்ப்பு மேலும் என்னுள் தாகக்த்தை ஏற்படுத்தி
மாமா சொல்லியிருப்பது போல்,” என் திருமணத்தில்
நோ பட்டுப்புடவை. அதற்கு பிறகும் வாழ்நாளில்
பட்டு கட்ட வற்புறுத்துக்கூடாது. வரதட்சணை
கேட்க கூடாது” இவைகளை யார் ஏற்கிறாராரோ
அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்று
சொன்னதும் அப்பா உனக்கு திருமணமே ஆகாமல்
போய்விடப்போகிறது என பயந்தார்.


ஆனால் சத்யாமாமா பயங்கர சப்போர்ட். என்னை
மட்டுமே விரும்பும் ஒருவர் கண்டிப்பாய் வருவார்
என அப்பாவுக்கு தைரியம் சொன்னேன். :))

நம் நல்ல எண்ணங்களுக்கு ஆண்டவன் எப்போதும்
துணையிருப்பான். அப்பாவுக்கு அதிகம் டென்ஷன்
கொடுக்காமல் ஸ்ரீராம் வந்தார். எனது கொள்கையைப்
போலவே அவருக்கும் வரதட்சணை வாங்கக் கூடாது
என்ற கொள்கை(இன்றுவரை அதுவேண்டும்,இது
வேண்டும் என கேட்டதுகிடையாது.)எனது கொள்கைகளுக்கு
ஒத்துக்கொண்டு எங்கள் திருமணம் இனிதாக
நடந்து இப்போதும் நான் பட்டு கட்டுவதில்லை.


எந்த திருமணம், நிகழ்வு எதற்கும் காட்டன்
புடவையில் தான் செல்வேன். பாலியஷ்டர்
சில்க் போன்றவை கட்டுவேன். பட்டுப்புடவை
கட்டினால்தான் என் ஸ்டேட்டஸ் தெரியும்,
எனக்கு மரியாதை கிடைக்கும் என்றால்
அப்படி ஒரு மரியாதை எனக்குத் தேவையே
இல்லை.

என் மகளுக்கு பட்டுப் பாவடை வாங்கித்
தருகிறேன். என் மாமா என்னை வற்புறுத்தவில்லை.
நானாகவேதான் பட்டு வேண்டாமென்று
சொன்னேன். அயித்தானும் என் உணர்ச்சிகளுக்கு
மதிப்பு கொடுத்திருக்கிறார். நாளை என் மகள்
வளர்ந்து தன் மனது போல் முடிவெடுக்கட்டும்.
”உனக்கு விருப்பமில்லை அம்மா! என் ஆசையை
ஏன் கெடுத்தான்/கெடுக்கிறாய்” என்று கேட்டு
விடக்கூடாது.

டிஸ்கி: எனது கொள்கை தந்த மனமாற்றமாக தம்பியும்
பட்டை விட்டுவிட்டான். பட்டு வேட்டி கட்டுவதில்லை
என்பதுடன் தனக்கு வரும் மனைவியும் இந்த உன்னதமான
கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை
கோரிக்கையாக வைத்து பெண் தோட சொல்லிவிட்டான்.

என் மாமாவின் என் திருமணத்தில் எனக்கு மனமாற்றம்
போல என் தம்பிக்காக பெண் தேடும்பொழுது பட்டு புடவை
வேண்டாம் என நாங்கள் சொல்லும் காரணத்தைப்பார்த்து
அம்ருதாவும் பட்டைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டாள்.
இதுவரை இருப்பது போதும். இனிமேல் எனக்கு பட்டு
எடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள்

மனதைரியம் இருப்பவர்கள் மட்டும் இந்தப் பதிவை
படிக்கவும்-இது என் அன்பு வேண்டுகோள்.



ஹேண்ட்பேக் பற்றிய
இந்தப் பதிவை நேற்று தமிழ்மணத்தில் கண்டேன்.
பின்னூட்டம் கூட மனது வராமல் வந்துவிட்டேன்.


நல்லவேளை நான் தோல் கைப்பைக்களை உபயோகிப்பதில்லை.