Showing posts with label உலாத்தல் - 16. Show all posts
Showing posts with label உலாத்தல் - 16. Show all posts

Friday, February 12, 2016

மலையாளக் கரையோரம்.- நிறைவுப் பகுதி

குமரகோமிலிருந்து கிளம்பி கொச்சி வந்தாச்சு. அங்கே அயித்தான் ஏற்கனவே புக் செஞ்சு வெச்சிருர்ந்த ஹோட்டலில் செக்கின் ஆகி ரெஸ்ட் எடுத்தோம். சாயந்திரம் ஷாப்பிங். ட்ரடிஷனல் புடவை எனக்கும், மகளுக்கு கேரள ட்ரடிஷனல் சுடிதார் மெட்டிரியலும் வாங்கினோம். அண்ணா ஏதும் இண்டரஸ்ட்டா இல்லைன்னுட்டாரு. அயித்தானுக்கும் வேணாமாம்.

 எம் ஜி ரோடில் இருக்கும் அந்த ஜெயலக்‌ஷ்மி துணிக்கடை அருமையா இருக்கு. முகம் கோணாத கஸ்டமர் கேர். விளக்கு வாங்கணும்னு ஆசை. எங்க வாங்கலாம்னு சொன்னப்ப ஒருத்தர் கைரளிக்கு போங்கன்னு சொல்ல எனக்கு புடவை காட்டிய பொண்ணு மரைன் ட்ரைவ் பக்கத்துல ஏதோ பஜார் பேரு சொன்னாங்க அங்க போங்கன்னு சொன்னாங்க. கைரளில விலை ஜாஸ்திங்கற குறிப்பையும் சொல்லி அனுப்பினாங்க.


எதிர்லயே மால் இருந்தது. பிள்ளைகள் அங்கே போகணும்னு சொன்னதால பஜார் போறதை கைவிட்டு மால் போனோம். டின்னர் அங்கயே சாப்பிடலாம்னு முடிவாச்சு. நம்ம ஊர் மால்களுக்கும் அங்க மாலுக்கும் ரொம்ப வித்தியாசம். நம்ம ஊர்ல தண்ணி பாட்டில் காசு கொடுத்து வாங்கினாதான் உண்டு. ஆனா கொச்சியில் அங்கங்கே  மினரல் வாட்டர் கேன் வெச்சு அதுக்கு டம்பளரும் வெச்சிருக்காங்க.

அடுத்த நாள் காலையில் ப்ரெக்பாஸ்ட் முடிச்சு வர்றதுக்கும் வண்டி வர்றதுக்கும் சரியா இருந்தது.  சோட்டானிக்கரை பகவதி தரிசனத்துக்கு போனோம். டிசம்பர் மாசம் மதுரை போனப்பவே ஐயப்ப சீசன் கூட்டத்துனால அவதி பட்டது மறந்து அதே பீக் சபரிமலை சீசன்ல கேரளாவுக்கு ட்ரிப் போட்டது அப்பதான் மண்டையில உரச்சது. :(. வந்தது வந்திட்டோம். தரிசனம் செஞ்சிட்டு போயிடுவோம். வேற வழியில்லைன்னு முடிவு செஞ்சுகிட்டு கிளம்பினோம்.

நினைச்சதைவிடவும் நிறைய்ய கூட்டம் இருந்தது. ஆனா 45 நிமிஷத்துல தரிசனம் முடிச்சு வந்தாச்சு. திருப்பதி ஜரகண்டி மாதிரி அவசர தரிசனம் தான். ஆனா மனதில் நிற்கும் தரிசனம். முடிச்சு வெளிய வரும்போது கார் பார்க்கிங்குக்கு பக்கத்துல ஒரு விளக்கு கடை பாத்தது ஞாபகம் வந்தது. பெருசும் சிறுசுமா நிறைய்ய விளக்குகள் இருந்தது. எனக்கு  கேரள விளக்குதான் வேணும். நம்ம ஊர்ல கிடைக்குது. ஆனா ஒரிஜனல் அங்க தானே. :)

 இந்த கேரள விளக்குகள் இப்ப வாங்கினது. ஃபேஸ்புக்ல தன்மாலா செய்யும் போட்டி ஒண்ணு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அதுல என் கிட்ட இருக்கும் விளக்குகளை வெச்சு செஞ்சப்ப எடுத்த போட்டோ இது. இந்த விளக்குகள் டிஸ்ப்ளேக்குதான். ரொம்ப பெருசா இருந்தா எடுத்து வர சிரமம்னு மீடியம் சைஸா வாங்கினோம்.

லஞ்ச் முடிச்சு குருவாயூர் கிளம்பினோம். கேரளாவுல ஹைவே கூட குருகலா தான் இருக்கு. அதனால  கொறைஞ்ச கிலோமீட்டர் கூட அதிக நேரம் பயணம். 3.30க்கு கோவில் கிட்ட போனோம். அன்னைக்கு சனிக்கிழமை என்பதால கூட்டம் ஜாஸ்தியாதான் இருக்கும்னு தெரியும். வேற வழி. கண்ணன் பாத்துக்கட்டும்னு விட்டுட்டோம். குருவாயூர் கோவிலில் அழகா ப்ளான் செஞ்சிருந்தாங்க. அது ஐயப்பமார்களுக்கு தனி வரிசை. பொது மக்களுக்கு தனி வரிசை.  தனித்தனியா பிரிச்சு மாத்தி மாத்தி விட்டாங்க. 5 மணிக்குள்ள ஆனந்தமான தரிசனம். ஸ்ரீவேலி பாக்கணும்னு ஆசை. ஆனா 4 மணிக்கு முடிஞ்சிருச்சாம். அப்ப வரிசையில இருக்கறவங்களை அனுமதிக்கலை. ராத்திரி 9 மணிக்கு இருந்து பாத்துட்டு போங்கன்னாங்க. அடுத்த நாள் ஃப்ளைட். லேட்டான கஷ்டம்னு கிளம்பிட்டோம். பால்பாயசம் வாங்கினோம். இதமான சூட்டுல அதிக இனிப்பு இல்லாம பிரசாதம் ருசித்தது.

குருவாயுர்லயும் விளக்குகள் இருந்தது. விலை கேட்டேன். சோட்டானிக்கரையில் வாங்கினது விட 50 ரூவா கூட சொன்னாங்க. அந்த கடையில இருந்த வெரைட்டிகளும் இல்லை. நல்ல வேளை அங்கயே வாங்கினோம்னு நினைச்சுகிட்டேன்.  கண்ணனின் தரிசனம் இனிதே முடிந்து கொச்சி ட்ரிப்பும் முடிந்தது. இனிமையான நினைவுகள் எப்போதும் மனதில்

Wednesday, January 27, 2016

மலையாளக் கரையோரம் - பாகம் - 3

கேரளாவில் போட் ஹவுஸில் தங்கணும்னு ரொம்ப நாளா ஆசை. போட்ல என்ன செய்யப்போறோம் வேற ஏதாவது இடமாயிருந்தா நல்லா இருக்குமேன்னு ஒரு யோசனை.அப்படி யோசிச்ச போது கிளிக் ஆன இடம் தான் இது. vivanta by taj - kumaakom. ரெண்டு மாதம் முன்னாடியே ஆன்லைன்ல பாத்து புக் செஞ்சோம். Early bird price அப்படின்னு சொல்லி ரூமுக்கு மட்டும் தான் சார்ஜ். சாப்பாட்டுக்கு கிடையாது. 4 பேர் என்பதால ரெண்டு ரூம் புக் செஞ்சிருந்தோம்.

ஹோட்டலில் நுழையும்போதே மதியம் ரெண்டு.  செக்கின் ஃபார்மாலிட்டிஸ் முடிச்சு தென்னங்குருத்து மாலை போட்டு வெல்கம் ட்ரிங்கா கூல் கூல் இளநீர் கொடுத்தாங்க. சாப்பாட்டு கடையை மூடறதுக்குள்ள சாப்பிட போகலாம்னு போனோம்.






மெனுகார்ட் பார்த்து நமக்கு எது வேணுமோ அதை ஆர்டர் செஞ்சுக்கலாம். Beverages எது ஆர்டர் செஞ்சாலும் எக்ஸ்ட்ரா. சூப் ரொம்ப டேஸ்ட்டியா இருந்தது. நான், சப்ஜிக்களும் டேஸ்ட் சூப்பர். சாப்டு முடிச்சு ரூமுக்கு போனோம்.  ஸ்விம்மிங் பூலுக்கு எதிரில் ஒரு ரூம். அதுக்கு பக்கத்தில் ஒரு ரூம் கொடுத்தாங்க. இங்க லிஃப்ட் வசதி எல்லாம் கிடையாது. ஒவ்வொண்ணும் தனி வீடு மாதிரி. வில்லா டைப் ரூம்களுக்கு தனி ஸ்விம்மிங் பூல், ஜாக்குஸி எல்லாம் இருக்கும். ரேட் 60,000. நாம போனது சுப்ரீம் ரூம்ஸ் தான்.
இது வில்லா டைப்.


ரூம் செக்கின் செய்யும் போது அங்கே என்னென்ன ஆக்டிவிட்டிஸ் இருக்குன்னு ஒரு பேப்பர் கொடுத்திடறாங்க. அது படி 5.30 மணிக்கு ஜெட்டில சன் செட் வ்யூவோட சாயாக்கடைன்னு போட்டிருந்தாங்க. ரூம்லயே கெட்டில் காபி பவுடர்லாம் இருக்கு ஆனாலும் இங்கயும் போய்க்கலாம்.


கெஸ்ட்களுக்கு சைக்கிள் வேணும்னா அங்கயே இருக்கு எடுத்தக்கலாம். சாப்பிடற இடத்துலேர்ந்து லேக்கை சுத்தி நடந்து வந்தாலே தின்னது செமிச்சிடும். :)  பிள்ளைகள் சைக்கிளை எடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தாங்க. வெயில் குறைவா இருந்தது. நான் அந்த அமைதியான இடத்தில் தொட்டில் கட்டி போட்டிருந்தாங்க அதுல சாஞ்சுகிட்டு பாட்டு கேட்டுகிட்டு இருந்தேன்.



சாயந்திரம் விளக்கு வைக்கற நிகழ்ச்சின்னு போட்டிருந்தாங்க. அது வேற ஒண்ணுமில்லை நாம கார்த்திகை, தீபாவளிக்கு வைக்கறமாதிரி லேக்கை சுத்தி அழகா அகல் விளக்கு ஏத்தி வெச்சிருந்தாங்க. பாக்க அவ்வளவு அழகா இருந்தது.







ரிலாக்ஸ்டா எஞ்சாய் செஞ்சோம். சன் செட் வ்யூ செம அழகு. காலையில சீக்கிரமே எழுந்திரிச்சாச்சு. அதை தவிர ஃப்ளைட் லேட். செம டயர்டா இருந்தது சீக்கிரம் சாப்டு தூங்க போகலாம்னு சாப்பிட போனோம்.


இந்த ஓடு வேஞ்ச இடத்துல தான் டின்னர்.  அது பக்கத்துல அந்த சிமிண்ட் தரை போட்டிருக்கே அங்க புல்லாங்குழல் கச்சேரி நடந்துகிட்டு இருந்தது. ரொம்ப அர்பணிப்போட வாசிச்சுகிட்டு இருந்தார். அன்னைக்கு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சின்னு போட்டிருந்தாங்க. ஆனா ட்ரடிஷனல் புடவை கட்டிய பெண்கள் வந்து நடனம் ஆடினாங்க. அதாவது திருவாதிரை நடனமாம். பரதநாட்டியம் கேன்சல் ஆகிடிச்சு போல. அவங்க ஆடி முடிஞ்சதும் புல்லாங்குழல் கச்சேரி தொடர்ந்தது. சபரிமலையில் வண்ண சந்த்ரோதயம் பாட்டு சூப்பரா இருக்கும். அதை வாசிச்சார். (மலையாளத்துல சபரிமலையில் தங்க சூர்யோதயம்)

அருமையான சாப்பாடு. ஆனந்தமான இசை. விளக்கொளியில் ஹோட்டல். மனதுக்கு ரம்யமா இருந்தது. சாப்டு முடிச்சு எந்திருக்கும்போது ஹரிவராசனம் வாசிச்சார். இருந்து கேட்டுட்டு ரூமுக்கு போனோம்.

தொடரும்...

(படங்கள் உதவி : கூகுளாண்டவர்)

Thursday, January 21, 2016

கேரள நந்நாட்டிலே......... பாகம் 2

கேரளாவுல தான் முதல்ல மழைக்காலம் துவங்குது. அதை வெச்சுத்தான் மத்த இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பை கவனிப்பாங்க.கேரளா பத்தி எழுதற எந்த பதிவும் "Gods own country"  அப்படிங்கற வார்த்தைகள் இல்லாம இருந்ததில்லை. அழகா இருக்கே அதனால சொல்றாங்களான்னு நினைச்சா அதுமட்டுமில்லை காரணம், புராண இதிகாசத்தின் படி விஷ்ணுவின் 6ஆவது அவதாரமான பரசுராமர் இந்த ஊரை உருவாக்கினதா சொல்றாங்க. விக்கிப்பீடியாவுக்கு இங்கே சொடுக்கவும்.

கடலால் ஆள்கொள்ளப்பட்டிருந்த இடத்தை தனது கோடாரியை கொங்கன் லேர்ந்து கன்யாகுமரி வரைக்கும் போட சமுத்திரம் வழிவிட்டு இந்த அழகிய ஷேத்ரம் உருவானதா சொல்றாங்க. கேரளா டூரிசம் "Gods own country"  இப்படித்தான் தங்க ஊரை சுற்றுலா பயணிகளுக்கு சொல்றாங்க. தப்பே இல்லை. எங்கெங்கு காணினும் பசுமை, Backwaters, சில இடங்களில் இன்னமும் படகில் தான் பயணம் செய்யறாங்க. ஒரு பெரிய படகில் பைக் போன்றவற்றை ஏத்திகிட்டு அடுத்த கரைக்கு போய் அங்கேருந்து வேலைகளை முடிச்சு வர்றவங்களை பாத்தோம்.

கொச்சிலேர்ந்து சபரிமலை 4 மணிநேரப் பயணம். நாங்க நெடும்பசேரி ஏர்போர்ட்லேர்ந்து கிளம்பிட்டோம். கேரளாவுல இருந்த வரைக்கும் எங்களுக்கு தோணின விஷயம்  எப்படி கட்டிட அமைப்புகள், பசுமை எல்லாம் இலங்கை மாதிரியே இருக்கு என்பதுதான்.  விண்ணைத்தாண்டி வருவாயா படத்துல ஒரு டயலாக் வரும். இங்க வீடுகளை விட சர்ச்கள் தான் அதிகமா இருக்குன்னு. எங்க பசங்க எம்புட்டு சர்ச்கள் வழியில இருக்குன்னு எண்ண ஆரம்பிச்சு களைச்சு போய் விட்டுட்டாங்க. இந்து கோவில்கள் போல துவஜஸ்தம்பம் வெச்ச சர்ச்களை பாக்கும்போது வியப்பா இருந்தது.

பரசுராம ஷேத்திரம்னு சொல்றாங்க ஆனா நிறைய்ய கிறிஸ்துவர்கள்தான் இருக்கற மாதிரி தோணுது. மதமாற்றம் இந்த மாதிரி விஷயங்களுக்குள் நுழைய நமக்கு மேட்டர் தெரியாது. கிறிஸ்துமஸ் சமயம் திருச்செந்தூர் போயிருந்தோம் . அந்த கோவில் எவ்வளவு பிரசித்தமான கோவில்னு தெரியும். அந்த கோவிலுக்கு போகும் ரோடு, ரொம்ப பக்கத்துல இருக்கற வீடுகள் எல்லாமும் அலங்கார விளக்குகள், ஸ்டார்கள்னு இருந்தது.  நடப்பது நல்லதா கெட்டதான்னு தெரியலை. ஆனா எப்படி இப்படில்லாம் மாற்றம் நடக்குதுன்னு செம யோசனை. சரி அதை விடுங்க.

போற வழியில தான் சோட்டானிக்கர பகவதி கோவில் வரும்னு அயித்தான் சொன்னாங்க. ஆகா அது ரொம்ப தொலைவுல இருக்கும்னு நினைச்சுத்தான் ப்ளான்ல சேக்கலை போகலாம்னு சொன்னேன். அந்த சமயம் கோவில் மூடியிருக்கும் என்பதால நாளை அதே வழியிலதான் கொச்சிக்கு வரப்போறோம் அப்ப பாத்துக்கலாம்னு அயித்தான் சொன்னாப்ல. ஆனா அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. செம கூட்டம் இருக்கும். அதைத் தவிரவும் குருவாயூர் கோவிலுக்கு கட்டிட்டு போக மட்டுமே ஒரு புடவை எடுத்து போயிருந்தேன். அப்படி இருக்க அடுத்த நாள் போக முடியாதுன்னு சனிக்கிழமை குருவாயூர் போறதுக்கு முன்ன காலேல சோட்டானிக்கர பாத்துக்கலாம்னு ப்ளான் செஞ்சோம். பெண்களுக்கு புடவை, சுடிதார், ஆண்களுக்கு வேஷ்டி மட்டுமே சட்டை போடக்கூடாது. இது கேரளாவில் பொதுவான விதி.

கொச்சி சேலம் ஹைவே வழியா போனா சோட்டாணிக்கர வராது. ஆனா இது நெடும்பசேரிலேர்ந்து கொச்சி சிட்டிக்குள் நுழையாம போகும் பாதை. வயலார் ஊரெல்லாம் தாண்டி போய்க்கிட்டு இருக்கோம். கிட்டத்தட்ட மதியம் இரண்டு மணியாகிடிச்சு...... நாங்க தங்கப்போற ஹோட்டலுக்குள் வண்டி நுழைஞ்சப்ப அப்பாடான்னு இருந்துச்சு. அதிகாலையிலேயே எந்திரிச்சு, தாமதமான விமானப்பயணம்னு செம டயர்ட்.................

தொடரும்




Wednesday, January 20, 2016

கேரள நந்நாட்டிலே....................................

சுமார் 17 வருஷம் முன்ன கேரளா போனது. அதுக்கப்புறம் அந்த பக்கம் போக சான்ச் வரலை.  ஹைதையில இருந்தப்ப ஒரு வாட்டி ப்ளான் செஞ்சோம். செட் ஆகலை.  இந்த வாட்டி எப்படியாவது போய் வரணும்னு ப்ளான் 2 மாசம் முன்னாடியே செஞ்சோம். ட்ரையின்ல டிக்கட் கிடைக்கலை!!!! ஆக விமானத்துல போகலாம்னு புக் செஞ்சாச்சு.  ஹோட்டல் புக்கிங் எல்லாம் செஞ்சு ரெடியா இருந்தோம். அம்ருதம்மாவுக்கு இது முதல் கேரள தேச பயணம். ஆஷிஷ் அண்ணாவுக்கு விவரம் தெரிஞ்சு இப்பதான் பரசுராம சேட்சத்திர பயணம். ஆகக்கூடி எல்லாம் ஒரு எக்ஸைட்மெண்ட்டோட இருந்தோம்.

பொங்கல் லீவுல தான் பயணம். போகி அன்னிக்கு காலையில ஏர்போர்ட்டுக்கு கிளம்ப கீழ இறங்கினா ஒரே பனிமூட்டம். அது பனிமூட்டமா இல்ல போகி  புகையான்னு புரியாம இருந்துச்சு. 100மீட்டர் தூரத்துல இருக்கறது கூட தெரியலை. ரோடும் காலியா இருக்க 20 நிமிஷத்துல ஏர்போர்ட் சேர்ந்தாச்சு. ஏர்போர்ட் செம பிசி. லீவு நாட்களில் ஏர்போர்ட் ரயில்வே ஷ்டேஷன், சுற்றுலா தலங்கள் பக்கம் போக கூட்டமா இருக்குன்னாலும் எனக்கு இன்னொரு விஷயம் ரொம்ப பிடிச்சது. அது லீவு என்பதால குடும்பமா வெளியூர் போவாங்க. அதனால ஸ்கூல் போகும் அந்த குட்டி தேவதைகள் வெளியில வருவாங்க. முன்ன கல்யாண வீட்டுல கூட குழந்தைகள் அங்க இங்கயும் ஓடிக்கிட்டு இருப்பாங்க. அதுதான் அழகு. ஆனா இப்பல்லாம் லீவு எடுக்க முடியாத பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் படிப்பு படிக்கறதால கல்யாண வீட்டுக்கு அவங்க வர முடியாம ஆகிடுது. ஸோ சேட்.

செக்கின் , செக்யூரிட்டி எல்லாம் முடிச்சு லவுன்ச்ல போய் ஃப்ரெக்ஃபாஸ்ட்டுக்கு போனோம். இந்த லவுன்ச் பத்தி தெரியாதவங்களுக்காக கொஞ்சம். நாம பொதுவா ஏர்போர்ட்ல தண்ணி பாட்டில் வாங்கினாலே ரேட் ஜாஸ்தியா இருக்கும். அங்க கிடைக்கற சாப்பாட்டோட விலையை கேட்கவே வேணாம். இந்த லவுன்ச்கள் எல்லா ஏர்போர்ட்லயும் இருக்கும். எனக்கு தெரிஞ்சு உள்ளே உழைய ப்ரியார்ட்டி பாஸ் கார்ட் போன்றவை இருக்கணும். ஒரு கார்ட்ல ஒருத்தர் தான் அனுமதிப்பாங்க. மிஞ்சி போன இன்னொருத்தர் சேத்துப்பாங்க. குடும்பத்தோட போகணும்னா பில் பழுத்திடும். ஐசிஐசியை போன்ற பேங்குகளில் ஏடிஎம் கார்ட் கொடுப்பது வருடாந்திர கட்டணம் 250 ரூவா. ஆனா அதுவே 500 ரூவாக்கு ஒரு கார்ட் இருக்கு. அதுல சில சலுகைகள் கிடைக்கும். அதுல முக்கியமான சலுகை ஏர்போர்ட் லவுன்ச்களில் அனுமதி. 2 ரூவாதான் சார்ஜ் செய்வாங்க. அது இல்லாட்டி ஒருத்தருக்கு 600 லேர்ந்து 1000 வரைக்கும் சார்ஜ் ஆகும்.  இந்த மாதிரி கார்ட் இருந்தா நாம உள்ள போய் ப்ரெக்பாஸ்டோ, லஞ்சோ, டிபனோ, டின்னரோ நேரத்துக்கு தக்க சாப்பிடலாம்.

நாங்க போனது ப்ரெக்பாஸ்ட் சமயம். காண்டினெட்டல் ப்ரெக்பாஸ்ட். புஃபே டைப் தான்.  அன் லிமிட்டட். மினரல் வாட்டர், டீ, காபி, ஜூஸ் எல்லாம் எடுத்துக்கலாம். அந்த 2 ரூவாவைத்தவிர வேறு எதுவும் சார்ஜ் செய்ய மாட்டாங்க. பட்ஜட் ஏர்வேஸ்ல போனோம்னா தண்ணி பாட்டில் கூட காசு கொடுத்து வாங்கணும். லவுன்ஞ்லேர்ந்து நாம தண்ணி பாட்டில் எடுத்துக்கிட்டு போகலாம். தோது பட்டவங்க இந்த மாதிரி ப்ரியாரிட்டி பாஸோ, எக்ஸ்ட்ரா ப்ரீமியம் டெபிட் கார்டோ வாங்கி வெச்சுகிட்டா உள்நாடு/வெளிநாடு லவுன்ச்களில் உதவும். ஃபிளைட் போர்டிங் அறிவிப்பு வரும் வரை சொகுசா டீவி பாத்துக்கிட்டு, வைஃபை வேணும்னா அதையும் யூஸ் செஞ்சுகிட்டு ஆனந்தமா உக்காந்திருக்கலாம். மிட் நைட் ஃப்ளைட்ல வந்து கனெக்டிங் ஃப்ளைட் ஏறும் வரை குட்டி தூக்கம் போடறவங்களும் இருப்பாங்க.

நாங்க ஃப்ரெக்பாஸ்ட் முடிச்சு கீழ வந்தோம். 8.55க்கு எங்க ஃப்ளைட்.  8.30 ஆகியும் ஒரு அறிவிப்பும் இல்லை. ஸ்பைஸ் ஜெட் ஃப்ளைட் ஒண்ணு 10 மணிக்கு கிளம்ப வேண்டியது சென்னையில் இருக்கும் மோசமான காலநிலையால 12 மணிக்கு கிளம்புதுன்னு அறிவிப்பு செஞ்சாங்க. சரிதான்னு நினைச்சுகிட்டோம். மும்பையிலிருந்து வர வேண்டிய எங்க விமானம் தாமதமாகி 9.15க்கு தான் வந்தது. அதற்கான வருத்தமோ எதுவும் இல்லாம் போர்டிங் அறிவிச்சது நம்ம நேஷனர் கேரியர்.

சின்மயி அன்னைக்கு எங்க கூடத்தான் பயணம் செஞ்சாங்க. யாரும் அவங்களை டிஸ்டர்ப் செய்யலை. பிசினஸ் கிளாஸ் இல்லாம எகானமில அவங்க பயணம் செஞ்சது எனக்கு ஒரு ஆச்சரியம் தான். அடுத்த ஆச்சரியமா அதே எகானமில இருமுடி ஏந்திக்கிட்டு நம்ம தனியொருவன் புகழ் ரவி (அதாங்க ஜெயம் ரவி) வந்தாப்ல. அவங்க அப்பாவும் வேற 4 பேரும் மலைக்கு போறதுக்காங்க அதே கொச்சி ஃப்ளைட்ல தான் வந்தாங்க. அப்படி இப்படின்னு 10.15க்கு டேக் ஆஃப் ஆனிச்சு. 11.30க்கு அங்க போய் சேர்ந்தோம். நெடும்பசேரில இருக்கு கொச்சி விமான நிலையம். ரொம்ப பெருசா இல்லை. நம்ம மதுரை ஏர்போர்ட் சைஸ்னு நினைக்கிறேன்.  சாமான்களை எடுத்துகிட்டு வெளிய வந்தோம். பிக் அப் பாயிண்ட் கொஞ்சம் அன்ப்ளாண்டா இருக்கு. அதனால டிராபிக் ஜாமாகி கடையில நிக்கும் வண்டி கடைசில மட்டுமே வரும் நிலமை. பார்க்கி சார்ஜ் 65 ரூவாதான்.

நம்ம வாகனஓட்டி வந்தார்.( அதுக்கு கொஞ்சம் முன்ன தான் ஜெயம் ரவி மற்றும் அவங்க கூட வந்தவங்க கார்ல ஏறி போனாங்க. வெறும் காலோடதான் ஜெயம் ரவி வந்திருந்தார். ) நாங்களும் புறப்பட்டோம்......

தொடரும்