Showing posts with label Homecare Tips. Show all posts
Showing posts with label Homecare Tips. Show all posts

Thursday, December 22, 2011

இல்லத்தரசிகளுக்கு இனிப்பான டிப்ஸ்

நான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை
முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில்
சமையல் செய்ய ரொம்ப ஈசியா இருக்கும். நேரமும் மிச்சமாகும்.
இதைப்பார்த்த எனக்குத் தெரிஞ்சவங்க சிலர்,”வேலைக்கு போறவங்க
தான் இந்த மாதிரி செஞ்சு பாத்திருக்கேன். வீட்டுல இருக்கறவங்க
கூடவா இப்படி செய்வதுன்னு” கேப்பாங்க. வீட்டுல இருந்தாலு
நேரத்துல எல்லா வேலையும் முடிக்கணும்னு இவங்களுக்கு புரியாது.
காலை 6.30 மணிக்குள்ள டிபன், சமையல் எல்லாம் ரெடி
ஆகணும்னா கொஞ்சம் ப்ளானிங் அவசியம்ல. அவங்களை
விடுங்க.

நான் டப்பர்வேர் டப்பாக்கள் பத்தி பதிவு போட்டிருந்தேன்ல.
அதுக்கு தேவையான போட்டோக்கள் எடுக்க இணையத்துல தேடும்பொழுது
ஒரு டப்பர்வேர் கன்சல்டண்ட் டப்பர்வேருக்காகன்னே ஒரு
வலைப்பு வெச்சிருக்காருன்னு லிங்க் கொடுத்திருந்தேன்.
அவங்களுடைய சமீபத்திய பதிவு ரொம்ப பிடிச்சிருந்தது.
அவங்ககிட்ட பர்மிஷன் வாங்கி இங்க நம்ம தோழிகள்
எல்லாருக்கும் உதவும்னு பதியறேன். இனி நேரம்
நம் கையில். :))

அவங்க தன்னுடைய அந்த பதிவுக்கு வைத்திருக்கும் பெயர்
I Save Time, Eat Fresh and Feel Organized. Thanks to… டப்பர்வேர்.

இவங்க கொடுத்திருக்கும் டிப்ஸ் நான் கடைபிடிப்பதுதான்.
ஆனா எனக்குத் தெரியாததும் இங்க கத்துகிட்டேன்.

வாரத்துக்கு ஒரு தடவை காய்கறிகள் வாங்கி வந்து டப்பர்வேர் டப்பாவில்
போட்டு வெச்சிடுவாங்களாம். ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது என்னுடைய
அனுபவமும்.
இந்த டப்பாவுக்கு பேர் ஃப்ரிட்ஜ் ஸ்மார்ட். பேருக்கேத்த மாதிரியே
ஸ்மார்ட்தான். ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கும். கேரட், பீன்ஸ்
இப்படி எல்லாத்தையும் அழகா உள்ள வெச்சிடலாம்.

தனித்தனியா வெச்சிடறதால தேடாம எடுத்து உடன் சமையலை
முடிக்கலாம். இன்னொரு ஐடியா சொல்லியிருக்காங்க பாருங்க.
தக்காளியை தோலுரிச்சு
இந்த க்ரேட்டரில் துருவினா டொமட்டோ ப்யூரி ரெடி.

கால நேரத்துல மிக்சி போட்டு சுத்தி கஷ்டப்பட்டுகிட்டு
இருக்க வேணாம் பாருங்க
சாம்பார், ரசம், காரக்குழம்பு எல்லாத்துக்கும்
உபயோகப்படுத்தலாம். டக்குன்னு சூப் கூட செய்யலாம். இதப்பாத்து
நானும் செஞ்சு வெச்சிருந்தேன். பசங்களுக்கு காலை அவசரத்துல
அசத்தலா டொமாட்டோ ஸ்பாகட்டி செஞ்சு கொடுக்க முடிஞ்சது. :))


மேலே சொல்லியிருக்கற பீலர் சூப்பர் கிச்சன் கில்லாடி.
எப்படிங்கறீங்களா? அதை வெச்சு கோஸ் நறுக்கிடலாம்.

வெங்காயத்தை வேக வெச்சு அரைச்சு டப்பாவில் போட்டு
வெச்சிட்டா, நம்ம கிட்ட டொமாட்டோ ப்யூரி இருக்கு.
வெங்காய பேஸ்ட் இருக்கு. நார்த் இண்டியன் டிஷ் டக்குன்னு
செஞ்சு அசத்தலாம்.
இப்படி தேவையானதை கட் செஞ்சு ரெடியா வெச்சுக்கிட்டா
வேலை ஈசியாகுது. இஞ்சி தட்டிப்போட்டு டீ கூட அடிக்கடி
செஞ்சுக்கலாமே.

பாகற்காய், பட்டானியை எம்புட்டு அழகா வெச்சிருக்காங்க பாருங்க.

கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, பாலக் எல்லாம்
இந்த மாதிரி சுத்தமாக்கி எடுத்து வெச்சுகிட்டா வேலை ரொம்ப
சுளுவா முடிஞ்சிடும்.

பொதுவா ஃப்ர்டிஜ்ல எல்லாம் நீட்டா மூடி வைக்கணும். அடச்சு
வைக்க கூடாதுன்னு சொல்வாங்க.

இப்படி வைப்பதால நாம காசு போட்டு வாங்கும் சாமான்களும்
பாழாகாது. நம்ம வேலையும் சீக்கிரம் முடியும்.

இதனால அடிக்கடி மார்க்கெட்டுக்கு போகும் வேலை இல்லை.
என்ன இருக்கு. என்ன இல்லைன்னு தெரிஞ்சிக்கவும் வாய்ப்பு
இருக்கு. எத்தனை வாட்டி ஃப்ரிட்ஜில் காய்கறி கூடையில்
காய்ஞ்சு போன எலுமிச்சம்பழம், ப.மிளகாய், சுண்டிப்போன
கேரட்னு குப்பை கூடையில் போட்டிருப்போம். இனி
நாம அழகா அடுக்கி வெச்சு, ஆனந்தமா சமைக்கலாம்.




Monday, December 14, 2009

பெட்ஷீட் பராமரிப்பது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அலுத்து, சலுத்து வேலை பார்த்து நாளின் இறுதியில் ஓய்வெடுக்க
நாம் தேடுவது படுக்கை. அதில் சுகந்த மணம் வீசாட்டியும்,
வேர்வை மணம், அழுக்காக இல்லாமல் இருப்பது சுகாதாரம்.


பலருக்கு பெட்ஷீட், தலையனை உறை மாத்துவதுன்னா
மட்டும் கஷ்டம். ஒரு மாசத்துக்கு ஒரு தடவையாவது
மாத்துவாங்களான்னு சந்தேகம் தான்!!

ஆனா இது தவறு இப்படிப்பட்ட படுக்கையில் படுத்து
நமக்கு கிடைப்பது சுகாதரமான ஓய்வில்லை.

வாரத்துக்கு இருமுறை மாற்றணும்னு சொல்வாங்க.
அது சாத்தியமில்லைன்னாலும் வார இறுதியில்
கண்டிப்பாய் மாற்றுவதுன்னு வெச்சுக்கிட்டா
சுத்தமா, சுகமா தூங்கலாம்.

கைவசம் 3 பெட்ஷீட் செட் வெச்சுக்கணும்.(தலையணை
உறையும் தான்)

1 செட் துவைக்க போனால், 1 செட் பெட்டின் மீது,
இன்னொன்று அவசர தேவைக்கு ரெடியாக கப்போர்டில்
இருக்கணும்.

உறவினர் வந்து சென்ற பிறகு வார இறுதிக்காக
காத்திராமல் உடன் மாற்றுவது தான் நல்லது.

இப்படி பெட்கவர் போட்டு மூடி வைத்தாலும் நல்லது.
ஹோட்டல்களில் பெட்கவர் போட்டு அழகாக வைத்திருப்பார்கள்.


செய்யக்கூடாதது:

1. தூங்கும் அறையில் சாப்பாடு, விளையாட்டு ஆகியவைக்கு
பெரிய ”நோ”. இது அறையின் சுகாதாரத்தை பாதிக்கும்.

2. பிள்ளைகளுக்கு இருக்கும் கெட்ட பழக்கம் பெட்டில்
உட்கார்ந்து சாப்பிடுவது, பெட்டின் மேல் நடப்பது ஆகியவை.
இது தவறுன்னு எடுத்து சொல்லி திருத்தனும். காலின்
அழுக்குகள் பரவி அதனால் கிருமி தொற்று ஏற்படலாம்.

3. போதிய வெளிச்சம் அறையில் இருக்கா, காற்றோற்றமா
இருக்கான்னு பாத்துக்கணும். இதுவும் நல்ல தூக்கத்துக்கு
முக்கியம்.


பராமரிப்பு:
மிஷினில் துவைக்கும் பொழுது பெட்ஷிட், தலையணை உறைகளை
மட்டும் தணியாக துவைக்க வேண்டும். மற்ற துணிகளோடு
துவைக்கக்கூடாது.

வெள்ளை நிற பெட்ஷீட்களை உபயோகிப்பவர்கள் அதை
தணியாக துவைக்க வேண்டும்.

கறைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் மாற்றி துவைத்து
விட வேண்டும், காய்ந்த கறைகள் போவது கடினம்.

கலர் பெட்ஷீட்களை ட்ரைக்ளீன் தான் செய்ய வேண்டுமென்பதில்லை.
பெட்ஷீட், தலையணை உறை, போர்வைகளை மிஷினில் போட்டு
delicate cycle என இருக்கும் அந்த முறையில் துவைத்து,
இறுதியில் liquid fabric softener சேர்த்தால் வாசமாக இருக்கும்.

சின்னக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் படுக்கை நனைவது
சாதாரணம். அப்போது அடுத்த நாள் அந்த பெட்ஷீட்டை
தனியாக நீரில் அலசி, அப்புறம் டெட்டால் கொண்டு அலசி,
அதன் பின் மிஷினில் துவைத்தால் வாசனை இருக்காது.

துவைத்த துணிகளை உடன் வெயிலில் காயவைத்து
உடனே எடுத்து மடித்து வைத்து விடுவது அவசியம்.
இதனால் கிருமிகள் கொல்லப்படுகின்றன. வெயிலில்
நன்கு காய்வதால் ஈர வாசனை இல்லாமல் இருக்கும்.


பெட்ஷீட் தானே என கண்ட இடத்தில் வைக்காமல்,
கப்போர்டில் அழகாக, நேர்த்தியாக வைப்பதால்
அடுத்த முறை உபயோகத்துக்கு உதவியாய் இருக்கும்.

பெட்ஷீட்களை கைகளால் துவைப்பதாக இருந்தால்
அதிக கவனம் வேண்டும். சோப் முழுதும் போகும்படி
நன்றாக அலச வேண்டும். இல்லையேல் உடலுக்கு
ஒவ்வாமை உண்டாகும்.

உலர்த்தும் பொழுது தரையில், புல்வெளியில் பரப்பி
உலர்த்துவதென்றால் அந்த இடம் சுத்தமாக இருக்கிறதா
என்று பார்த்துக்கொள்ளவும். கொடியில் காய வைப்பது
சுகாதாரம்.



Tuesday, June 30, 2009

HOME IMPROVEMENT COMMITTEE.

பிள்ளைங்க வளர வளர நமக்கு வேலையும் ஜாஸ்தியாகுது.
ஓவ்வொரு ஸ்டேஜ்லையும் ஒருவிதமா இருக்கும்.

வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் பெற்றோரைப் பார்த்து
“ம்ம் உங்களுக்கு பிரச்சனை இல்லை!!!! உங்க பையன்
வளர்ந்திட்டான்” அப்படின்னு சொல்லும்போது
அந்த பெற்றோர் கண்டிப்பா சிரிச்சுப்பாங்க.

அவங்க படும் கஷ்டம் அவங்களுக்குத்தானே தெரியும். :))

பெரிய கிளாஸ் போகப்போக பெற்றோர்களுக்கும் டென்ஷன் தான்.
அந்த டென்ஷனை பசங்க மேலே காட்டினா பாவம் பசங்க.

வளரும் குழந்தையோ, வளர்ந்த குழந்தையோ அட்வைஸ்
சொன்னா கண்டிப்பா பிடிக்காது. (நமக்குமே அப்படித்தானே!!)

எப்படித்தான் சமாளிப்பது???

ஒவ்வொரு வருடமும் பள்ளி துவங்கியதும் எங்க வீட்டில்
கமிட்டி மீட்டிங் நடக்கும். வீட்டின் தலைவர் எப்போதும்
டூரில் இருப்பதால் துணைத்தலைவராகிய எனக்கு வேலை
அதிகம். தலைவர் அவ்வப்போது மீட்டிங்கிற்கு வந்து
பேசுவார். இயலாத போது கலந்தாலோசித்து பிறகு
மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துகொள்வேன்.

கமிட்டில என்னதான் செய்வோம்?

கமிட்டி மெம்பர்ஸ் ஆஷிஷும் அம்ருதாவும் தான்.

“திட்டினா உங்களூக்கு பிடிக்காது.
உங்களை திட்டறதுல எனக்கும் இஷ்டமில்லை.
ஆக, ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்குவோம்.
நான் கோபப்படற மாதிர் நீங்க நடந்துக்க வேணாம்.
உங்களை சந்தோஷமா வெச்சுக்க வேண்டியது
எங்க கடமை” அப்படின்னு ம்யூச்சுவலா பேசி
முடிவெடுத்துட்டு கோல்டன் ரூல்ஸ் பட்டியல் போடுவோம்.
(இது 2008ல் போட்டது. வகுப்புக்கு தக்கவாறு கொஞ்சம்
கொஞ்சமா ஒவ்வொரு வருடமும் மாற்றம் இருக்கும்.அவர்களுக்கென சில
பொறுப்புக்கள் கொடுப்பேன்.)


இந்த வருடமும் திட்டமிட்டாச்சு.

இந்த வருடம் புதிதாக அறிமுகப்படுத்திய
திட்டங்கள்:

1. தான் செய்ய வேண்டிய ப்ராஜக்டுகள், அடுத்த
வாரம் செய்து முடிக்க வேண்டிய வீட்டுப்பாடங்கள்
ஆகியவற்றை ஒரு பேப்பரில் எழுதி ஃப்ரிட்ஜில்
மேக்னெடில் ஒட்டி வைத்துவிட வேண்டும்.

2. வெள்ளிக்கிழமை இரவுக்குள் அந்த வாரப்பாடங்கள்,
ஹோம் வொர்க்குகள், ப்ராஜக்டுகள் முடித்துவிட்டால்
1 மணி நேரம் கம்ப்யூட்டர் விளையாடலாம்.

3. அந்த ஒரு மணிநேரத்தில் கேம்ஸ் போக
ஆங்கில வலைப்பூ மற்றும் தமிழ் வலைப்பூவில்
தலா ஒரு பதிவு இடவேண்டும்.
(மொழி வளர்ச்சிக்கு உதவுமே!!)

அப்பப்போ ஐடியா தோணும்போது கமிட்டி கூடி
பேசிமுடிவெடுப்போம்.

மழலையர்களுக்காக பேரண்ட்ஸ் கிளப்பில் இந்த
கோல்டன் ரூல்ஸ் பதிவும் இருக்கு.

Monday, March 02, 2009

ஐடியா!!!!

வேலைக்குபோகும்பொழுது டிபன் பாக்ஸில் சப்பாத்தி
கொடுத்தால் சந்தோஷப்படுவேன்!!!

ஹேண்ட்பாக்கில் வெயிட் அதிகமாக இருக்காதே!!! :))

குழந்தை பிறந்ததும் குழந்தையின் அத்தியாவசியமான
பொருட்கள் கொண்ட பெரிய பேக்கையும் தூக்கிக்
கொண்டு அலையவேண்டி இருந்த போது கஷ்டாமாத்தான்
இருந்துச்சு.

அவர்களும் வளர்ந்த பிறகு ஹாண்ட்பேக் இல்லாமல்
(கடைக்கு, பக்கத்தில் சின்ன தூரமான இடங்களுக்கு)
போகலாம் என்றால் முடியாது. அவர்களுக்குத் தேவையான
பிஸ்கட், இப்படி சில வைக்க வேண்டும்!!

வெளியூர் செல்லும்பொழுது கேமிரா, கூலிங்கிளாஸ்
இப்படி வைத்துக்கொள்ள கண்டிப்பாய் பெரிய ஹேண்ட்பேக்தான்.


ஹேண்ட்பாக்குகலின் காதலினாலும் என்னவோ
கடைக்கு செல்லும்பொழ்து(முக்கியமா இரண்டு
கைகளிலும் பாரம் எடுத்து வரும் நிலையில்)
தோளிலிருந்து ஹேண்ட்பேக் வழுக்கிக்கொண்டே
இருக்கும். இதனால் ஹேண்ட்பேக்குகள் இல்லாமல்
செல்வது எப்படின்னு யோசிச்சு, கழுத்தில் மாட்டும்
செல்போன் பேக் செஞ்சு அதில் காசு, சாவி, போன்
மட்டும் வெச்சுகிட்டு போவேன்.

கழுத்தும் வலிக்குது!!! :((

அதனால் வந்த ஐடியாதான் இது.





ஒவ்வொரு சுடிதாரிலும் சின்ன பை
வெச்சு தைக்கச்சொல்லிடுவேன்.

ரெடிமேட் சுடிதாராக இருந்தாலும்
எக்ஸ்ட்ரா துணி வாங்கிக்கொடுத்து.
(கால் மீட்டர் போதுமே!) ஒரு
பை தைக்கச் சொல்லிவிடுவேன்.


இதனால் கையை வீசிக்கிட்டு கடைக்குபோகலாம்,
வரும்பொழுது கையில் பாரமிருந்தாலும்
ஹேண்ட்பேக்கை பாதுகாக்கும் பயமில்லை!!!

தோள்பட்டை வலியும் கொஞ்சம் குறைஞ்சிருக்கு.

ஹேண்ட்பேக் அவசியமில்லாத இடங்களுக்கு
இது மிகவும் வசதியாக இருக்கு. சில சமயம்
கைப்பையில் அலைபேசியை வைத்துவிட்டு,
மணிஅடிக்கும்பொழுது எங்கே இருக்குன்னு?
தேடும் நிலை இல்லை. என ஏகப்பட்ட ப்ளஸ்கள்.


:)))

கை வீசம்மா! கை வீசு
கடைக்கு போகலாம் கைவீசுன்னு பாடி
கையை வீசிகிட்டுத்தான்( கட்ட பேக் மட்டும்
எடுத்துக்கிட்டு) கடைக்கு, இல்ல
எங்கயும் போறேன்.

ஹேண்ட்பேக் இல்லாம கைய
ஃப்ரீயா வெச்சுகிட்டு பயணிக்கிறது என்ன ஒரு சுகம்!!!

Thursday, November 20, 2008

இதுவும் பராமரிக்கப்பட வேண்டிய இடம் தான் - 2

முந்தைய பதிவிற்கு இங்கே.

முறையாக பராமரிக்க டிப்ஸ் இதோ:

1. தினமும் குளித்து முடித்தபின் பாத்ரூமை சுத்தமாக கழுவிவிட்டு
ஈரம் போக துடைத்தல் அவசியம்.
ஈரப்பதம் துர்வாசனை உண்டாக ஏதுவாக இருக்கும்.
(ஒவ்வொருவரும் தான் குளித்த பின்னர் பாத்ரூம் கீளின்
செய்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று சட்டமே
போட்டுவிடுங்கள்)

2. காலடி தடங்கள், குளித்த சோப்பின்
நுரை, தலைமுடி, காலியான ஷாம்பு சாஷேக்கள்,
இவை அழகான பாத்ரூமின் எதிரிகள். இவைகளை
அன்றாடம் சுத்தம் செய்தாலே இடம் அழகாகிவிடும்.

(ஒரு சின்ன குப்பைத் தொட்டி வாங்கி அதில்
பிளாஸ்டிக் கவர் ஒன்றை போட்டுவைத்து
உபயோகித்தவைகளையும், குப்பைகளையும்
அதில் போட பழக்கப்படுத்தலாம். வாரம்
ஒருமுறை கவரை எடுத்துபோட்டுவிட்டு
வேறு கவர் போடலாம்.)

3. ஒவ்வொரு முறை கழிவறையை உபயோகப்படுத்திய
பிறகும் பாத்ரூமை ஈரம் போக துடைப்பது அவசியம்.
உலர்ந்த அறையை பராமாரிப்பது எளிது.

4. வாரம் ஒருமுறை கண்டிப்பாக டாய்லட் பவுல்,
பாத்ரூம் டைல்ஸ் கழுவுவது அவசியம். பவுலின்
உள்ளே மட்டும் தேய்த்து கழுவினால் போதாது,
வெளியேயும் சுத்தமாக தேய்த்து கழுவுதல் அவசியம்.






வாஷ்பேசினுக்கு அருகில் சின்ன அலங்காரம் செய்தால்
இடமே ரம்மியமாகும். வாரம் ஒரு முறை வாஷ்பேசினையும்,
கண்ணாடியையும் கழுவுதல் அவசியம்.

வாஷ் பேசின் அருகே ஒரு உலர்ந்த துண்டு எப்போதும்
இருக்கட்டும்.(கை, முகம் கழுவிய பின்னர் துடைத்துக்கொள்ள
ஏதுவாக இருக்கும். இதனால் வீடு முழுதும் தண்ணீர்
சிந்தாமலும் இருக்கும்.)



பாத்ரூமில் மணம் தரும் மெழுகுவர்த்தி,
பாட்ப்யூரி ஒரு சின்ன கப்பில் போட்டுவைத்தால்
நல்ல மணத்துடன் அறை இருக்கும்.
ஸ்பா எஃபக்ட்டில் ஆனந்தமாக குளிக்கலாம்.

சின்ன பொம்மை, மணி ப்ளாண்ட்,
இல்லாவிட்டால் ஃபளவர் வாஷ் ஒன்றில்
செயற்கை மலர்கள் வைத்தும் அழகு
படுத்தலாம்.


இடப் பற்றாக்குறை காரணமாக அட்டாச்ட் பாத்ரூம்
கட்டுகிறோம். ஆக கழிப்பறை என்பதை விட
குளியலறை என்று சொல்லும் விதத்தில்
இருக்க வேண்டும்.

குளிக்கும் பகுதியில் ஒரு தடுப்பு போல்(கீழே
படத்தில் இருக்கிறது) டைல்ஸில் செய்துகொண்டு
ஷ்வர் கர்ட்டன் போட்டால் பாத்ரூம்
ஈரமாகாமல் அழகாக இருக்கும்.

வாரம் ஒரு முறை ஷவர் கர்ட்டன்களை
எடுத்து துவைத்தல் அவசியம். ஈரத்தினால்
ஏற்படும் பூஞ்சை, காளான் நம் உடம்பிலும்
தொற்ற வாய்ப்புக்கள் உண்டு.

பிள்ளைகளுக்கு என்று தனி அறையும்
பாத்ரூமும் இருந்தால் அதை பிள்ளைகளூக்கு
பிடித்த விதத்தில் மிக்கி, டொனால்ட், டாம்
படங்களுடன் அலங்கரிக்கலாம்.
ஷவர் கர்ட்டன்கள் கூட இந்த பொம்மைகளுடன்
கிடைக்கின்றன்.





சிலருக்கு பாத்ரூமில் படிக்கும் பழக்கம் இருக்கும்.
அதனால் புத்தகங்களும், பேப்பரும் அங்கங்கே
கிடக்கும். கதவில் லெட்டர் ஹோல்டர் போன்ற
ஒரு பேக் மாட்டிவிட்டால், அதில் அழகாக
புத்தகம், பேப்பரை வைத்துக்கொள்ளலாம்.

பாத்ரூம் சுவர்களில் மனதிற்கு இதம் தரும்
இயற்கை காட்சிகள், பூக்கள் போன்ற
படங்கள் அல்லது போஸ்டர்கள் ஒட்டலாம்.

பாத்ரூம்களில் ஷாம்பு, சோப்கள்,
வைக்க இடம் வைத்து கட்டியிருக்காவிட்டால்
பிளாஸ்டிக் செல்ஃபுகள் வாங்கிவந்து
அதில் அழகாக அடுக்கி வைத்தால்
எடுக்கவும் பராமரிக்கவும் வசதி, பார்க்கவும் அழகு.



சுத்தம் செய்த பிறகு அதை முறையாக்
பராமரித்தல் அவசியம்.

ஒரு லாண்டரி பேக் அல்லது் பிளாஸ்டிக் கூடை
ஒன்றை பாத்ரூம் கதவிற்கு வெளியே (அறையினுள்)
வைத்துவிட்டால் துவைக்கப்போட வேண்டிய
உடைகளை அதில் போடலாம். இதனால்
பாத்ரூம் முழுவதும் துணிகள் கிடக்காது.

விருந்தினர்கள் வருவதற்கு முன்னரே
பாத்ரூமை சுத்தமாக கழுவி, சாமான்களை
சரியாக அடுக்கி வைத்துவிட்டால்
பராமரிப்பது எளிது.

வாஷ் பேசினுக்கு அடியில் ஒரு மிதியடி
போட்டு வைத்துக்கொ்ள்வதால் சிந்தும்
நீரால் தரை ஈரமாகி, காலடி தடங்கள்
ஏற்படுவதை தவிர்க்கலாம்.

குளியலறை சுத்தமாக இருந்தாகவேண்டிய
கட்டாயம் என்ன?

கழிவறை/குளியலறைகளில் பாக்டீரியாக்கள்
பல இருக்கின்றன. அவை வீட்டின்
மற்ற அறைகளுக்கு பரவ விடாமல் தடுக்க
சுத்தம் செய்தல் அவசியமாகிறது.

சுத்தம் செய்தல் என்பது ”டீப் கீளினிங்”
என்று சொல்வார்களே அப்படி சுத்தமாக
இருத்தல் அவசியம். அறையின் மூலை,முடுக்குகள்
கூட சுத்தமாக்கப்படவேண்டும்.

ஆண்ட்டி பாக்டீரியா கீளீனர்கள் கடைகளில்
கிடைக்கின்றன். அவை கொண்டு சுத்தம்
செய்வதால் பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன.

எதற்காகவும், எந்த இடத்திலும் பினாயில் கொண்டு
சுத்தம் செய்யாதீர்கள். பினாயில் உடலுக்கு
ஊரு விளைவிக்கக் கூடியது.


கழிவறையை உபயோ்கிக்கும் முன்பு, பின்பும்
ஹேண்ட்வாஷ் கொண்டு கை கழுவுதல்
அவசியம்.

Wednesday, November 19, 2008

இதுவும் பராமரிக்கப்படவேண்டிய இடம் தான்.

இந்த பில்டர்களுக்கு என்ன நினைப்போ தெரியாது.
1800 சதுர அடி வீடா இருந்தாலும் சரி இந்த இரண்டு
இடம் மட்டும் ரொம்ப சின்னதா வெச்சிடுவாங்க.
அது சமையற்கட்டும், பாத்ரூமும் தான்.




இப்பல்லாம் அட்டாச்ட் பாத்ரூம் தான். அதுவும்
ரொம்ப சின்னதா இருந்தா பரமாரிக்கறது ரொம்ப
கஷ்டம். அழகா வெச்சுக்க முடியாது பாருங்க.
பாத்ரூம்ல என்ன அழகுங்கறீங்களா?

ஒரு வீட்டின் ஆரோக்கியத்தி்ற்கு
சமையற்கட்டும், பாத்ரூம் அழகா
முறையா பராமரிக்கப்படணும்.



பாத்ரூம் பத்தின வி்க்கிப்பீடியாவுக்கு.





எங்க வீட்டை வாடகைக்கு விட்டிருக்கோம். அவங்களுக்கு
கொடுத்திருக்கும் கண்டீஷன் பாத்ரூமை ஒழுங்கா
மெயிண்டெயின் செய்யணும்.

வீட்டில் கதவு உடைஞ்சா மாத்திடலாம், பெயிண்ட்
போனா புது பெயிண்ட் அடிச்சுக்காலாம். பாத்ரூம்
ஒழுங்க பராமரிக்கப்படலனா மொத்த டைல்ஸ் கம்மோர்டை
எடுத்து, மொத்தமா மாத்தவேண்டி வரும்.

இதுல காம்பரமைஸ் செஞ்சுக்கவே முடியாது
என்னால.



ஒரு ரூம் சைஸுக்கு பெரிசா வேணாம். ஜக்கூசி எல்லாம்
அதுல இருக்கணும்னு இல்ல.
பெரிசா இருக்கவேணாமா பாத்ரூம்?

பாத்ரூம் பராமரிப்பது எப்படி?
இது தெரியாதா? பினாயில் போட்டு கழுவுறது,
ஹார்பிக் ஊத்தி கழுவுறது இதுதானேன்னு
கேக்கறீங்களா?

இல்லையே? அப்புறம்?
அதுதானே அடுத்த பதிவு.

எங்களுக்கு மிகவும் பிடித்த இலங்கையில் இருக்கும்
கந்தலாமா ஹோட்டலின் ஜக்கூசி படம்
(ஆஷிஷ் & அம்ருதா சாய்ஸாக)


Thursday, September 25, 2008

காலுறைகள் தேர்ந்தெடுப்பது எப்படி? பராமரிப்பது எப்படி?

காலுறைகள் பற்றிய எனது முந்தைய பதிவு இது.

காலுறைகள் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய
சில விடயங்களைக் காண்போம்.

உடைகளில் சைஸ் இருப்பது போலவே
காலுறைகளுக்கும் சைஸ் உண்டு. நமது காலின்
சைஸிற்கு தகுந்தவாரு தெரிவு செய்து
வாங்குவது அவசியம்.

ஃப்ரீ சைஸ் என்று சொல்லப்படும் சாக்ஸ்களை
தவிர்க்கவும்.

அடர்த்தி அதிகமாக நெய்யப்பட்ட வகைகளை
வாங்குவது நல்லது. அடக்கமாக நெய்யப்பட்டிருப்பதால்
பாதத்தை பாதுகாக்கவும், இதமாகவும் வைத்திருக்கும்.

நல்ல கம்பெனி சாக்ஸ்கள் குறைந்தபட்சம்
4 சைஸ் சாக்ஸ்கள் வழங்குகின்றன்.

பாதங்களில் வலி, பாதங்களில் துர்வாசனை
ஆகியவை நல்ல சாக்ஸ் அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.


குறைந்த விலையில் கிடைக்கும் சாக்ஸ்கள்
நீண்ட காலம் உழைக்காது. தரமும் சுமாரகத்தான்
இருக்கும். அத்தகைய காலுறைகளைத் தவிர்த்து
தரமானதாக வாங்கவும்.

காலுறைகள் அணியாமல் ஷூக்கள் அணியக்கூடாது.
காலில் ஏற்படும் வியர்வை, தோலினால் செய்யப்பட்ட
ஷூக்களில் பட்டு பேக்டீரியா உறுவாக வழி செய்யும்.
இதனால் பாதங்களில் புண் ஏற்பட சாத்தியம் உண்டு.

முறையான பராமரிப்பு எல்லாவற்றிற்கும் மிக
முக்கியமானது. காலுறைகளை எப்படி
பராமரிக்க வேண்டும் என்பதை இங்கே காணலாம்.

குளிர்ந்த நீரில் துவைக்க வேண்டும்.

பிழியக்கூடாது (விரிவடைந்து விடும்)

தண்ணீரை வடியவிட்டு காய விடலாம்.
டிரைகீளீன் செய்யக்கூடாது.
அயர்ன் செய்யக்கூடாது.

துவைத்து, உலர்ந்த காலுறைகளை ஜோடியாக
மடித்து வைத்தால் தேடும் பிரச்சனை இல்லை.

மடிப்பது எப்படி என்று சில வீடீயோக்கள்
பாருங்களேன்.

காலுறைகள் மடிப்பது எப்படி? கிளிக்கி பாருங்களேன்.






வெயில் காலத்திற்கு, குளிர் காலத்திற்கு
எனத்தனித்தனி காலுறைகள் வைத்துக்கொள்ளலாம்.

கால் நகங்களை ட்ரிம் செய்து வைத்துக்கொள்வதால்
காலுறைகளை பாதுக்காக்கலாம்.

சரியாக காயவில்லை என்பதற்காக காலுறைகளுக்கு
டிரையர் போடக்கூடாது. டிரையரில் இருந்து
வெளியாகும் வெப்பக்காற்று காலுறைகளின்
உபயோகிக்கும் காலத்தை குறைத்துவிடும்.

அழகாக தேர்ந்தெடுத்த காலுறைகளை முறையாக
கவனித்துக்கொண்டால் நம் பாதத்திற்கும் பாதுகாப்பு,
நம் பர்ஸிற்கும் பாதுகாப்பு.

ஆரோக்கியம் துவங்குவது நம் பாதத்திலிருந்து தானே!

Wednesday, September 17, 2008

காலுறைகள்

ஷூவிற்கும் காலிற்கும் இடையே ஒரு இதமான இணைப்பாக இருப்பது காலுறைகள்.


காலுறைகள் அணிவதால் கால்களுக்கு கதகதப்பு கிடைக்கிறது.

ஷூ, சாக்ஸ் போட்டால் ஒரு கம்பீரமான லுக் கிடைத்துவிடும்.

பேஷனபிளாக காட்ட ஷூவும் சாக்ஸும் முக்கிய பங்கு
வகுக்கிறது.

பாதத்தை அழுக்காகமல் தடுக்கவும் காலுறைகள்
உதவுகின்றன.

வியர்வையை உறிஞ்சுக்கொள்கிறது காலுறை.




காலுறைகள் வாங்குவதிலும் அதிக கவனம் தேவை.

காலநிலைக்கு தகுந்த வாறு சாக்ஸ் அணிவது அவசியம்.




பலர் ஷூக்களை கழட்டியவுடன் ஒரு துர் வாசனை வீசும். காரணம்
முறையாக பராமரிக்கப்படாத காலுறைதான்.

சாக்ஸ்தானே என்று பலர் அலட்சியமாக ஒரே சாக்ஸையே
3 நாட்களுக்கு அணிவார்கள். இது தவறு. நம் உடைக்கு
எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு
முக்கியத்துவம் காலுறைக்கும் கொடுக்க வேண்டும்.

கருப்பு, வெள்ளை,பிரவுன், கிரே ஆகிய நிற சாக்ஸ்கள்
எந்த உடைக்கும் பொருந்தும்.

உங்களின் பெல்ட்டின் நிறத்தோடு அல்லது Pant நிறத்தோடு
சாக்ஸின் நிறம் மேட்ச்சாக வேண்டும்.

ஸ்போர்ட்ஸ் ஷூவிற்கு போடும் சாக்ஸ் மற்ற ஷூவிற்கு
பொருந்தாது.

சம்பந்தமில்லாத கலரில் அணியப்படும் காலுறையினால்
உங்களின் தோற்றம் நன்றாக இருக்காது.






காலுறைகளை பராமரிப்பது எப்படி?

காலுறைகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

இதெல்லாம் என்னன்னு கேக்கறீங்களா? அடுத்த பதிவுக்கான
தலைப்புதான்.

(தொடரும்னு போட்டா திட்டுவீங்க. அதுக்குத்தான்
கொஞ்சம் வித்தியாசமா :) )