//People believe, a belief that has been handed down to them from the earlier generations, that the housewife should not sweep the house immediately after her husband leaves the home for office or his workplace. He wont return home safe and sound, will he? Or, it is like giving him up for ever, isnt?//
//had referred to the act of sweeping the house by the housewife before her husband leaves for office. I thought you would say something on it, like the reasons therefor; or, is it a mere superstition?
Be assured Sir, When it comes to our loved ones (parents, sons, daughters, siblings etc.), all of us will go to any length, never mind whether it is a superstition or a reasonable act.
If I dont know the reasons for the wife sweeping the house in time, I will still defend her on the grounds of her love for her husband and going any length for him. However, after I have defended thus, I will leave it unsaid, it is just superstition! There I am, with a malicious glee!//
மேலே தந்துள்ளவை தங்களது முந்தைய பின்னூட்டங்கள்.
இது லேட்டஸ்ட்.
karikkulam said...
Very good, Sir, you have managed a reply although cleverly soft-pedelling it, I mean, not committing yourself to it.
No matter.
Even if you don't, I do, using your own words on other donts. (or taboos, which is the correct word for traditional don'ts)
You have given reasons for other taboos which you have been told by the elders in your family like your amma, paatti, etc.
Such reasons are scientific; and that was why, you are proudly sharing them with your captive audience here. Further, the taboos became attractive to you; and you still practice some of them, like using the ladle properly in handling different food items.
In the present case of sweeping the floor by the housewife, cited by me, you are non-committal. Because, the reason is plain superstition. Am I correct?
But still, my dear, I feel, there must be something substantial behind this act too.
Go on & find it out; and, as and when you do succeed, share it in this same thread.
Till then, good bye!
30 May, 2008 11:42 PM
இப்படி ஒரு பின்னூட்டம் போட்டதற்கு நன்றி.
பெருக்கும் விடயம் பெரிய மேட்டராகிப்போகிறது. :)))
நீங்கள் அதிகம் ஸ்ட்ரெஸ் செய்து சொன்னதால் யோசித்துப் பார்த்தேன்.
இப்படியும் ஒரு காரணம் இருக்கலாம்.
இறந்த வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்கவேண்டும்.
குளிக்காமல் வீட்டிற்குச் செல்லக்கூடாது என்பார்கள்.
அதற்கு நான் சொல்லும் காரணம் குளிப்பது என்பது
அழுக்கை கழுவிக் களைவது மட்டுமல்ல.
குளிப்பதால் நாம் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிறோம்.
தலைக்கு குளிக்கும்போது இன்னும் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும்.
அதனால் தான் அம்மை போட்டு முடிந்ததும் தலைக்குளியல்,
டைஃபாய்டு ஜுரம் முடிந்ததும் "ஓமம்" அரைத்து தலைக்குத்
தேய்த்து குளியல், எல்லாம் வைத்தார்கள்.
ஏன் இப்போது பிரபலமாக இருக்கும் "ஸ்பா" குளியல்
எடுத்துக்கொண்டால் ஏற்படும் நன்மைகள் சொல்லில் அடங்காது.
இறந்தவர்கள் வீட்டிற்குச் செல்லும்போது ஒரு வித இறுகிய
மன நிலையை அடைகிறோம். துக்கம், கசகசப்பு, அழுகை
இவைகளைலிருந்து நம்மை மாற்றத்தான் ஒரு சூப்பர்
குளியல் அவசியம்.
இதற்கும் பெருக்குவதற்கு என்ன சம்பந்தம்?
என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் சொன்னது படி
இறந்த வீட்டில் பூத உடலை எடுத்த உடன், பெருக்கி
வீட்டைக் கழுவுவார்கள்.
அதனால் சாதாரண நாட்களில் யாரும் வெளியே கிளம்பிய
உடன் குளிப்பது, பெருக்குவது போன்றவைகள் செய்யமாட்டார்கள்.
(நீங்களூம் அதை உங்களின் பின்னூட்டங்களில் குறிப்பிட்டிருந்தீர்கள்)
மற்ற நாட்களில் உடன் பெருக்ககூடாது, இறந்த வீட்டில் உடன்
பெருக்க வேண்டும் என்று வைத்தால்தான் அந்த எண்ணங்களிலிருந்து
கொஞ்சம் விடுபட இயலும் என்று பெரியவர்கள் நினைத்திருக்கலாம்.
இதைத்தனிப்பதிவாக போட்டதற்கு காரணம் விவரம் தெரிந்தவர்கள் வேறுயாரேனும்
கூட நம் சந்தேகத்தைத் தீர்க்க உதவலாமே என்றுதான்.
சந்தேகம் தீர்ந்தததா? தீருமா?விடை கிடைத்ததா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
Showing posts with label நல்லவை. Show all posts
Showing posts with label நல்லவை. Show all posts
Saturday, May 31, 2008
Thursday, May 29, 2008
படிச்சதில் ஞாபகம் இருப்பது.......
கல்லூரியில் படிக்கும்போது சமஸ்கிருதத்தை
பாடமாக எடுத்து படிக்க வாய்ப்பு கிடைத்தது.
எங்க மேஜர் அக்காக்கள் எல்லோரும் அதைத்தான்
பாடமா எடுத்திருந்தாங்க என்பதாலும், தமிழை விட
அங்கு சிலபஸ் குறைவு என்பதாலும் நானும்
சமஸ்கிருதம் எடுத்துபடித்தேன். (பிரச்சார சபாவில்
ஹிந்தி படித்திருந்த தைரியம் தான்.)
முதல் நாள் வகுப்பு. சமஸ்கிருத ஆசிரியை
பெயர் சந்திரிகா. கேரளத்து மங்கை. அவரது
துல்லியமான ஆங்கில உச்சரிப்பு என்னை மிகவும்
கவர்ந்தது. சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்து எழுதினால் போதும் என்பது
கூடுதல் கவர்ச்சி.
சந்திரிகா மேடம் பாடம் எடுத்த அழகில்
படிக்காமலையே மனதுக்குள் பாடம் சம்மணம்
போட்டு அமர்ந்து விட்டது.
மொழியாக்கத்திற்காக மேடம் சொல்லிக்கொடுத்த
பாடங்களில் 3 மாத்திரம் ஞாபகம் இருக்கிறது.
(காலேஜ் முடிச்சு 16 வருடம் ஆச்சு. )
சித சிந்தா தயோஹ மாத்யே.
சிதா ஏவ கரியஷி,
சிதா தகித் நிர்ஜீவம்
சிந்தா ஜீவந்தம் அபி யஹோ!
அர்த்தம்:
சிதா- சிதையில் வைக்கும் நெருப்பு
சிந்தா- கோபம், மனக்கொந்தளிப்பு
இரண்டுமே நெருப்பு என்றாலும்
சிதையில் வைக்கும் நெருப்பு பரவாயில்லை.
ஏனெனில் அது உயிரற்ற உடலைத்தான்
எரிக்கிறது.
ஆனால் கோபம் எனும் நெருப்போ
உயிருள்ள் உடம்பை தகிக்கிறது.
எவ்வளவு அழகான வார்த்தைகளை உள்ளடக்கிய
செய்யுள். சினம் எனும் சேர்ந்தாரைக்கொல்லி
என்று நம் அழகு தமிழிலும் சினத்தை நெருப்பாகத்
தானே சொல்லியிருக்கிறார்கள்.
"வரம் யேகோ குனி புத்ரஹ" என்று
துவங்கும் செய்யுள் மறந்து விட்டது.
ஆனால் அதன் பொருள் மூடர்களாக 100
பிள்ளைகள் பெறுவதை விட,
புத்திசாலியாக ஒரு குழந்தை இருந்தாலும்
போதும் என்பதாகும்.
மஹாபாரதத்தில் கொளரவர்கள் 1000 பேர்
இருந்தாலும், பாண்டவர்களின் சிறப்பே
சிறப்பல்லவா.
நாம் எப்படி இருக்க வேண்டும்?
இந்தச்செய்யுள் முற்றிலும் மறந்தே விட்டது.
ஆனால் அதன் அர்த்தம் மாத்திரம் ஞாபகம்
இருக்கிறது.
சல்லடையில் சல்லிக்கும்போது மாவு
கீழே விழும், சக்கைகள் சல்லடையில்
தங்கிவிடும்.
முறத்தில் புடைக்கும்போது சக்கை
கீழே விழுந்து விடும். அரிசி முறத்தில்
தங்கி விடும்.
நாம் சல்லடை போல் தேவையற்றவைகளை
வைத்துக்கொள்ளாமல், முறம் போல்
நல்லதை மட்டும் வைத்துக்கொண்டு
தேவை இல்லாதவகைகளை விட்டு விட
வேண்டும் என்பதாகும்.
தங்களுடன் பகிர்ந்து கொண்டதில்
சந்தோஷம்.

Tuesday, May 20, 2008
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னா மாதிரி - நிறைவுப் பகுதி.
எங்கள் ஊரில் பெரும்பாலான வீடுகளில் (இதில் வகுப்பு
வித்தியாசம் தெரியாது) "அந்த 3 நாட்களில்" பெண்களை
தனியே விலக்கி வைத்திருப்பார்கள்.
உலக மகாக்கொடுமையாக நினைப்போம். வகுப்புகளில்
விளாசித்தள்ளுவோம். (பெண்கள் பள்ளி)
தீண்டாமையே தவறு, இவங்க நம்மளை இப்படி
செய்யறாங்களேன்னு எரிச்சல்.
நல்லதுதான் செய்யறாங்கங்கன்னு தெரியுமா?!!!!
பெண்களின் அந்த 3 நாட்களில் இழக்கும் இரத்தம்
ஆண்டில் 3 முறை ரத்ததானம் செய்வதற்கு சமமாம்.
சொல்லில் அடங்காத வலிகளும் வேதனைகளும் நிறைந்த
அந்த நேரத்தில் ஓய்வு கட்டாயமாக்கப் படவேண்டும்
என்பதனால் கொஞ்சம் ஓவராகவே கட்டுப்பாடு வைத்தார்கள்.
இப்ப அப்படி "தள்ளி" இருத்தல் என்பது இப்போது
கிடையாது. அந்த 3 நாட்களும் கூட வேலை, வேலை,
வேலைதான். விளைவு PMS- (Pre Menstural Syndrome),
Irregular periods, early menopause.... இப்படி
அடிக்கிக்கொண்டே போகிறார்கள் மகளிர் மருத்துவர்கள்.
தனிக்குடித்தனம், வேலைக்கு போவது போன்ற
காரணங்களினால் ஓய்வு என்பது இல்லாமலே போனது.
முடிந்தாலும் முடியாவிட்டாலும் பல்லைக் கடித்துக்கொண்டு
பெண்கள் அந்த 3 நாட்களிலும் வேலை செய்தே ஆக
வேண்டியக் கட்டாயம்.
நம்ம நல்லதுக்குத்தான் பெரியவங்க பல விடயங்களை
செஞ்சிருக்காங்க, சொல்லியிருக்காங்க.
என்ன கொஞ்சம் "ஓவர் டோஸா"
அழுத்தி சொல்லியிருப்பதானால அவங்க சொன்னது
தப்புன்னு ஆயிடுமா என்ன?
இத்தோட இந்தத்தொடருக்கு முற்றும்
போட்டுக்கறேன்.

Monday, May 12, 2008
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி - 4
நம்மளை டிரில் வாங்கும் "எம்டனை" திட்டவும் வீட்டில் ஆளு இருக்காங்கங்கற
நினைப்பே சந்தோஷமா இருக்கும். :)
கல்யாணமாகி,பிள்ளை பெத்தாலும் அம்மாவுக்கு மகன் தானே!!!
"சனிக்கிழமை எண்ணைய் தேச்சுக்குளிடான்னா கேக்கறதே இல்லை"
அப்படின்னு பாட்டி திட்ட, "இந்த எண்ணைய் தேச்சு குளிக்கிற
வேலையெல்லாம் வேணாம். தேச்சுகுளிச்சாத்தான் எண்ணைய்
உடம்புல போகுமா? அப்பளமா, பக்கோடாவா பொறிச்சு
கொடு, அப்ப கண்டிப்பா உள்ள போகும்", அப்படின்னு
அப்பா எகிற தமாஷா இருக்கும்.
உடனே பாட்டி வைத்தியனுக்கு கொடுக்கறதை வாணிகனுக்கு கொடுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இப்ப நம்ம பேச்சை கேக்கறது
யாருன்னு", அங்கலாய்ப்பாங்க.
அது என்னது இது புதுபழமொழின்னு கேக்க பாட்டி சொன்னது.
சிந்திக்க கூடியதா இருந்தது.
உடம்பை குளிர்ச்சி ஆக்க எண்ணைய் குளியல் மிக அவசியமாம்.
இப்ப மருத்துவர்கள் எண்ணைய் குளியல் அறவே கூடாதுன்னு
சொல்றாங்க. இப்ப அந்தப் பழக்கமே இல்லாம போயிடுச்சு.
என் உறவினர் ஒருவர், சனிக்கிழமைகளில் நல்ல எண்ணைய்
தேச்சு ஊறிக்குளிச்சு, நல்ல பூண்டு, மிளகு சீரகம் நிறைய
போட்ட சூப் மாத்திரம் சோத்துல கலந்து சாப்பிட்டு, வெளிக்கதவை
வெளிப்புறமா பூட்டிகிட்டு தூங்கி ரெஸ்ட் எடுப்பார்.
வெளிப்பக்கமா ஏன் பூட்டிக்கணும்னு கேக்கறீங்களா?
அப்பத்தானா வீட்டுக்கு வர்றவங்க கதவு பூட்டிருக்குன்னு
கதவை தட்டாம போயிடுவாங்க. இவரும் நல்லா
ரெஸ்ட் எடுக்கலாம்.
தலைவலின்னா பால்மிளகு அரைச்சுபோடுறது,
வாரத்துக்கு ஒருமுறை வேப்பிலை அரைச்சுக்கொடுக்கிறது,
(வேப்பிலையை ஓமம் வெச்சு அரைச்சு, கல் உப்பை
தொட்டுகிட்டு சாப்பிடணும். வயத்துல பூச்சி அண்டாது
அப்படின்னு சொல்ல தம்பி "நானும் தான் அண்ட
மாட்டேன்னு" தப்பிக்க பாப்பான். வேப்பிலை
கசப்பு அப்படி இல்ல.)
மஞ்சள் காமாலைக்கு "கீழாநெல்லி" சாறு
வாய்ப்புண்ணுக்கு "மணத்தக்காளி" சாறு,
தடுமல், இருமலுக்கு "அதிமதுரம்" கசாயம்,
உடம்பு வலியோட கூடின ஜுரத்துக்கு
"மிளகு கசாயம்". இப்படி நம்ம வீட்டுல
இல்லாத மருந்தா!!
இப்பல்லாம் "அஞ்சரப்பெட்டி"ன்னா என்னன்னு?
கேப்பாக!!
இந்த மாதிரி சாமான்களை விக்கிறவங்களை வாணிகன்னு
சொல்வாங்க. அவருக்கு காசுகொடுத்து வாங்கி
நம்மை உடம்பை பாதுகாக்கறத விட்டுட்டு
வைத்தியன் அதாவது டாக்டருக்கு கொடுப்பானேன்.
அவங்க கொடுக்கற மருந்துல வர்ற "சைட்எஃபக்ட்"
ஜாஸ்தியாச்சே, அப்படிங்கறது பாட்டியோட வாதம்.
அதென்னவோ சரிதான்னு படுது.
(நம்ம நாட்டுமருந்தைப் பத்தி ஒரு தொடர்பதிவு
யாராவது போட்டா நல்லது)
சரி இப்பதைக்கு தொடரும் போட்டுக்கறேன்......

Friday, May 09, 2008
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்னது மாதிரி - 3
பொதுவா வீட்டில் பெரியவங்க இருந்தாலே எதோ
"நொய் நொய்னு" சொல்லிகிட்டே இருப்பாங்க.
ஆனா அந்த "நொய் நொய்" நம்ம நல்லதுக்குதான்
சொல்றாங்கன்னு தெரியும்போது நாம் அவங்களை
விட்டு தூரம் போயிருப்போம்.
என் அம்மமாவும் எனக்கு தலை ஜடை பின்னூம்போது
(அப்ப நீ.....ளக் கூந்தல் இருந்தது. அதைச் சிக்கெடுத்து
பின்னுரதக்கு ரொம்ப நேரம் ஆகும். ) ஏதாவது
சொல்லிக்கிட்டே இருப்பாங்க. தலையைக் கோதி
என்ணெய் வைக்கும்போதே தூக்கம் வர்றமாதிரி
இருக்கும். இதுல பேசினாங்கன்னா காதிலை விழுமா!!!
ஆனாலும் அம்மம்மா சொல்லுவாங்க, "நான் இப்ப
சொல்றதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம், தனியா
இருக்கும்போது உன் காதில டேப்ரிக்கார்டரை
ரீவைன்ட் செஞ்ச மாதிரி இருக்கும்னு". அதென்னவோ
சத்தியமான வார்த்தை. இன்றும் என்னை வழிநடத்துவது
பெரியவங்க சொன்ன வார்த்தைகள் தான்.
சரி இன்றைய அலசல் என்னன்னு பார்ப்போம்.
"சாப்பிடும் நேரம் ரொம்ப கொடுமையா இருக்கும்.
சமைச்ச உணவுகளை தனியா வைக்கணும்,
சமைக்காத அதாவது நெய், ஊறுகாய், தயிர்,
எண்ணைய், பொடிவகைகளைத் தனியா வைக்கனும்.
சமைத்ததில் போட்ட கரண்டி சமைக்காத அயிட்டத்தில்
போடக்கூடாது, ரசக் கரண்டியை காயில் போடக்கூடாது..
சாப்பாடே வேண்டாம்ன்டா சாமின்னு இருக்கும்னு,"
என் தோழி புலம்புவா.
ஏன் இப்படி சொல்றாங்கன்னு அம்மம்மாவைக் கேட்ட
போது கிடைத்த விடை என்னை யோசிக்க வைத்து
பெரியவங்க சொன்ன இந்த விடயத்தில் நியாயம்
இருப்பதாக பட்டது. நானும் அந்த முறையப் பின் பற்ற
ஆரம்பித்தேன்.
ஊறுகாய், நெய், பொடி போன்றவற்றின் மேல் சமைத்த
உணவு (ஒரு சோற்றுப் பருக்கை போதுமாம்) விழுந்தால்
அவை கெட்டுப்போகும். (பாக்டீரியா) ரசத்தில் இருக்கும்
"பருப்புதண்ணி" காய் கெட்டுப்போக போதுமாம்.
இதனால்தான் சமைத்த உணவைத்தொட்ட கையால்
சமைக்காத பதார்த்தங்களை தொடவேக் கூடாது
என்றார்கள்.

Wednesday, May 07, 2008
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி - 2
போன பதிவுக்கு கடுமையான விமர்சனங்கள்.
பிராமணீயம் அது இதுன்னு சொல்லி. :(
கைகளில் இருக்கும்
கிருமி மிக மோசமானது.
முகத்தை அழகா வெச்சுக்கனும்னு நினைக்கறவங்க அடிக்கடி
முகத்தை கழுவி, மேக்கப் போட்டுகிட்டு இருந்தா மாத்திரம்
போதாது. முகத்து கிட்ட கையை கொண்டே போகாதீங்க.
முகம் அழுக்கா ஆகிடும். (சுவற்றில கை தடயங்கள் இருக்குமே
பார்த்திருபீங்க.) கைகளில் இருக்கும் கிருமிகள் பத்தி
ஒரு தனி பதிவே (FOOD HYGINE) அப்படீங்கற பதிவை ஒரு
தனிப் பதிவா போடறேன்.
1.குளிக்காமல் சமைக்கக்கூடாது:
நல்லதைத்தான் சொல்லியிருக்காங்க. தூங்கி எழுதல்
என்பது சாவிற்கு சமம். அதனால குளிச்சிட்டுதான்
சமைக்கணும் அப்படின்னு நம்ம பெரியவங்க
சொல்லியிருக்காங்க.
நான் அதை புரிந்து கொண்டது இப்படித்தான்.
குளிப்பதனால் நாம் புத்தணர்ச்சி அடைகிறோம்.
நம் உடலில் இருந்து செல்கள் இறக்கின்றன.( அவை
பெருக்கும்போது தரையில் சேரும் குப்பையில்
சேரும்.) மீதி உடம்பில் இருப்பவைகளை
கழுவி களைய குளியல் அவசியத்தேவை.
கிருமிகளிலிருந்து விடுதலை, வியர்வை நாற்றம்
இல்லாமல் ஆரோக்கிய சமையல்.
சரிதான். ஆக அன்றாடம் அதிகாலை குளித்து
பிறகு சமைக்கவேண்டும் என்று பெரியவர்கள்
சொன்னது உண்மைதான்.
மேலும் இந்த இறந்த செல்கள் பெருக்குவதனால்
மட்டும் போகாது. நீர் கொண்டு தரையை (படுத்த
இடத்தை) துடைக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
மறக்காமல் மெத்தையையாவது தட்டி,
மெத்தை விரிப்பை உதறி போடுவது நல்லது.
தொடரும்.......

Tuesday, May 06, 2008
பெரியவங்க சொன்னா, பெருமாள் சொன்னா மாதிரி.
பள்ளியில் படிக்கும்போது தமிழ் வகுப்பு எப்போதும் சுவாரசியமா இருக்கும்.
"தமிழ் அம்மாக்கள் " வகுப்பை கலகலப்பா வச்சிருபாங்க. இலக்கணத்திற்கு இடையே "பொன்னியின் செல்வன் " கதை சொல்வாங்க. பல பயனுள்ள குறிப்புகளை சொல்லுவாங்க, ஒரு தோழியா, அம்மாவா அவங்களுடைய பங்களிப்பு மறக்க முடியாத ஒன்று.
அப்படித்தான் அன்றும் என் தமிழ் ஆசிரியர் வகுப்பில் இடையில் ஒரு கேள்வி
கேட்டார். "பிராமண வீடுகளில் தண்ணீர் கேட்டால் குடித்த பிறகு அந்த கிளாசை கழுவ போடுவார்கள், அல்லது நீர் தெளித்து எடுப்பார்கள். இது சரியா?"
ஆசிரியை இப்படி கேட்டதும் தான் தாமதம் எல்லோரும் பொங்கி தீர்த்தோம்.
தீண்டாமையின் உச்சகட்டம் அது இது என்று குரல் கொடுத்தோம்.
மவுனப் புன்னகையுடன் கேட்டுகொண்டிருந்த ஆசிரியர்,"நான் பிராமண வகுப்பை சாரதவள், ஆனால், என் வீட்டில் யார் தண்ணீர் அருந்தினாலும் அந்த கிளாஸ் கழுவப்போகும். கையால் தொட மாட்டேன் !". ஆச்சரியமாக பார்த்த எங்களை,
"உண்மையில் அப்படித்தான் செய்ய வேண்டும்' என்று சொன்னா போது
வியப்போடு அவர் சொல்ல போகும் காரணத்திற்காக காத்திருந்தோம்.
தமிழஅம்மாவும் " நண்பர் சுரேகா "
மாதிரி தொடரும் போட்டு விட்டு போய்விட்டார். :)))))
அடுத்த நாள் வரை காத்திருந்தோம். முதல் பீரியடே தமிழ்.
பாடம் எடுக்க விடவில்லை அவரை. நேற்றைய வாதம் தொடர்ந்தது.
சிரித்த முகத்துடன் அப்படிச் செய்வது தான் சாலச் சிறந்தது.
அவ்வாறு செய்வது சுகாதாரம் என்ர போது புரியவில்லை.
நம் கைகளில் கண்ணுக்கு தெரியாத் பலவகை கிருமிகள்
இருக்கின்றன. அவை தோற்றும் என்பதனால் அவ்வாறு செய்வது
சரியென்று எனக்கு பட்டது. என் வீட்டிலும் நடைமுறையில் இருக்கிறது
என்றார்.
இப்படி நம் நன்மைகாக சொல்லப்பட்ட பல நல்ல விடயங்கள்,
சொல்லப்பட்ட விதத்தில் நாம் தவறாக புரிந்து கொண்டு
சில சமயங்களில் அவதிக்கு ஆளாகிறோம்.
அப்படி சில பெரியவர்கள் சொன்னா கருத்துக்களும்,
அவைகளின் உண்மையான அர்த்தங்களையும் இனி
பார்க்கபோகிறோம்.
தொடரும்......

Subscribe to:
Posts (Atom)