Showing posts with label நல்லூர் பயணம். Show all posts
Showing posts with label நல்லூர் பயணம். Show all posts

Monday, March 04, 2019

நல்லூரை நோக்கி - பாகம் 3

பலமுறை போய் வந்த இடமென்றாலும் அயித்தானுக்கு நான் என்னவோ புதிதாக அங்கே செல்வது போலத்தான் ஒரு எண்ணம் :) 2001 பயணம் மாதிரி இதற்கடுத்து இது இப்படி செய்யவேண்டும்னு சொல்லலை, ஆனா தனியாக போகிறாளேன்னு கொஞ்சம் டெர்ரர். எனக்கோ நான் என்ன புது இடத்துக்கா போறேன்னு, இப்படி கலவையான இமோஷன்களுடன் பயண ஏற்பாடுகள்.

தனது சிம்மை கொடுத்து அங்கே போய் போட்டுக்கோ, ஆக்டிவேட் செய்ய சொல்லிவிட்டேன் என்றார். எனது மொபைலிலிருந்து சிம்மை பின் வைத்து எடுக்க வேண்டும். அதெல்லாம் செய்ததே இல்லை. அங்கே மொபிடெல் கவுண்டரில் கேள்னு சொல்லிட்டார். சரி பாத்துக்கலாம்னு இருந்தேன்.
யார்கிட்டேயும் லக்கேஜ் வாங்கிக்காதே!
ஓகே!
சிம் கார்ட் மாத்தினதும் டேடா வந்திரும். ஊபர் புக் செஞ்சுக்கோ!
ஓகே.
கார் ஏறினதும் மெசெஜ் வை!! சரிங்க சாமின்னு கலாயச்சிகிட்டு இருந்தேன்.

டான்ஸ் கிளாஸ் முடிஞ்சதும் என்னை பிக் அப் செய்து வீட்டுக்கு போய் சாப்பிட்டு என்னுடன் ஏர்போர்ட் வரை வருவதாக இருந்தது. ஆனால் மதியம் அப்பாயிண்ட்மெண்ட் அர்ஜண்ட்டா வந்துவிட ஏர்போர்ட் ட்ராபிங் ட்ராப் செய்ய வேண்டிய சூழல். அதுக்கென்ன நான் போய்க்கிறேன்னு கேப் புக் செஞ்சு போயாச்சு.

மட்ட மத்தியானம் கூட்டமே இல்லை! இரண்டு மணிக்குள் செக்கின், இமிகிரேஷன், செக்யூரிட்டி செக் எல்லாம் ஆயாச்சு. ஃப்ளைட்ல நாலஞ்சு பேர்தான் இருப்போமோன்னு சந்தேகம் வந்தது. அப்புறம் கூட்டம் வர துவங்கியது.

ஸ்ரீலங்கன் விமான சேவை எனக்கு ரொம்ப பிடிக்க இரண்டு காரணங்கள்.
டவுன்வேர்ட் கேமரா இருக்கும் அதில் பார்க்கலாம், இன்னொன்னு சாப்பாடு.
ஒரு கேக்,ஃப்ரூட்ஸ் கொஞ்சம்,ஜூஸ் பாக்கெட், சாதம் பருப்பு மாதிரி இதோடு அருமையான தேநீர். அதை சிப்படிக்கும் பொழுது கிடைக்கும் ஃபீலே வேற தான். ஆனா கழுதை தேஞ்சு கட்டெறும்பாகியிருக்கு. இப்போ இது மட்டும்தான். ஜூஸ் கிளாஸ்ல தர்றாங்க. டீவில படமெல்லாம் இருக்கு இந்த டவுன்வேர்ட் கேமரா முன்ன ஈசியா இயக்கலாம். இதுல தெரியலை. பக்கத்துல இருந்தவரை கேட்டேன். அவர் முழிச்சதும் சாரின்னுட்டு ஹெட்போனை மாட்டிகிட்டேன். ( இலங்கை விமானத்தில் சுற்றுலாவுக்கு வருபவர்களை விட வியாபாரிகள் தான் அதிகம் )


வெஜிடபிள் பன். வீடு போய் சேர 7.30 மணி ஆகிடும். தாங்கணுமே. சாப்டாச்சு. ஹெட்போன் போட்டு பாட்டுகேட்டுகிட்டு இருந்தேன். லேண்டிங்கிற்கு தயார் படுத்துமாறு அறிவிப்பு வந்தது. ஆகான்னு முக மலர்ச்சியோட பாத்துகிட்டு இருந்தேன். தாஜ் ஏர்போர்ட் கார்டன் பக்கத்துல அந்த பேக்வாட்டர்ஸின் அழகோட கடல் பக்கத்துலேர்ந்து தரையை நோக்கி விமானம் நுழைய லேண்ட் ஆனதும் செம செம! நான் தனியாக இலங்கை வந்தாச்சுன்னு ஒரே குஷி.

ஃப்ளைட்டை விட்டு இறங்கி முன்பு ஒரு முறை அதிபராக இருந்தப்ப ராஜபக்சே அவர்கள் பூமியை முத்தமிட்டது மாதிரி தான் செய்யலை. (இது கொஞ்சம் ஓவரா தோணும் . ஆனா எனது பார்வையில் என் மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் இருந்தது.

தொடரும்.....

Saturday, March 02, 2019

நல்லூரை நோக்கி- பாகம் 2

2014ல் நாங்கள் கொழும்புவில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் எங்கள் வீட்டு விஷேஷத்தில் கலந்து கொண்டுவிட்டு என்னுடன் திருப்பதி செல்ல வந்திருந்தார். மிக நல்ல மனுஷி. என்னை தன் மகளாக நினைப்பார். இன்றும் என் பிறந்தநாளுக்கு மறக்காமல் வாழ்த்து செய்தி வந்துவிடும். என் உள்ளகிடக்கையை அவரிடம் சொல்லியிருந்தேன். அதெற்கென்ன நான் இலங்கையில் இருக்கும்பொழுது வா. நாமிருவரும் போய்வருவோம் என்றார்.
கணவர் இறந்துவிட்ட நிலையில் கொஞ்ச நாள் அமெரிக்காவில் மகனிடமும், கொஞ்சநாள் லண்டனில் மகளிடமும் இருப்பார். நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை கொழும்பில் வாசம்.

2014லிருந்து அவர் அழைத்து கொண்டுதான் இருக்கிறார். ஆஷிஷை காலேஜில் சேர்த்தது, சென்னைக்கு குடி பெயர்ந்தது, அம்ருதம்மா பரிட்சைகள், என் உடல் நலக்குறைவு என ஏதோ ஒரு காரணம் மார்ச் மாதத்திற்குள் பயண ஏற்பாடு செய்ய முடியவில்லை. இப்படியே தட்டிக்கொண்டு போனாலும் அங்கே இருக்கும் வலைப்பூ நண்பர்கள் மூலமாகவும் முயற்சி செய்து கொண்டுதானிருந்தேன். அதுவும் நடக்கவில்லை.

போன டிசம்பரில் நாங்கள் நால்வருமே போக திட்டங்கள் போட்டு கொழும்பு- யாழ்ப்பாணம் ரயில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய நிலையில் பயணம் ரத்தாகியது. மனதுக்கு ரொம்பவே வருத்தம். எப்பொழுதுதான் உன் எல்லையை மிதிக்க போகிறேன் என அரற்றிக்கொண்டிருந்தேன். இந்த முறை ஆண்டி கொழும்பு வந்திருந்த பொழுது கணவர் சென்று சந்திக்க கலாவை அனுப்பிவை நாங்கள் நல்லூர் பயணம் செய்து வருகிறோம் என சொல்ல வந்ததும் டிக்கட் புக் செஞ்சு, அங்கே யாழ்ப்பாணத்திற்கும் ரயில் டிக்கட் புக்கிங், ஹோட்டல் புக்கிங் எல்லாம் கடகடவென முடிந்துவிட்டது.
இந்த முறை என் முதல் தனியாக விமான பயணம், அதுவும் இலங்கையை நோக்கி. நானே தானா யாரோ தானா!!! என பலமுறை கேட்டு கொண்டேன். யார் இருக்கிறார்கள் அங்கே உனக்கு? இமிகிரேஷனில் கேட்ட அதிகாரிக்கு என் உறவுகளும் நட்புக்களும் காத்துகொண்டிருக்கிறார்கள் என்ற பொழுது மனதில் ஒரு மகிழ்ச்சி.
தொடரும்


நல்லூரை நோக்கி - 1

1999 என நினைக்கிறேன். நான் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போகிறேன் என அயித்தான் சொல்ல எங்கே போக என கேட்டேன். இலங்கை போகவேண்டியது இருக்கலாம் என சொல்ல. எனக்கு மேலும் ஷாக். நாந்தானே அங்கே போகவேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன் என்ற உடன் உனக்கு அங்கே யார் இருக்கிறார்கள்? ஏன் அங்கே போக ஆசை என்றார்.

நல்லூரானையும் கதிர்காமனையும் தரிசிக்க வேண்டும் என்றேன். இந்த இடங்களை பத்தி யார் சொன்னது அடுத்த கேள்வி. அப்பா அம்மாவின் திருமணத்திற்கு ஒரு அழகான வாழ்த்தை அப்பாவின் நண்பர் ஒருவர் கொடுத்திருந்தார். அழகு தவழும் முகத்துடன் வள்ளி தெய்வயானை சமேத முருகன் படம், கீழே நல்லூர் யாழ்ப்பாணம் கந்தன் என்றிருக்கும்.

எனக்கு மிகவும் பிடித்த முருகன் படம் அது. சகலமும் அவனிடம் தான் சொல்வது. அந்த படத்தின் கீழ் நின்று பேசிவிட்டு சென்றால் துணைக்கு அவன் வருவது போல இருக்கும். என்றாவது ஒரு நாள் உன்னை தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் என்பது அன்றாட கோரிக்கை. இந்த உள்ளகிடக்கையை அவரிடம் சொன்ன பொழுது ஒரு வேளை இது நடப்பதற்காகத்தான் எனக்கு இந்த பயண வாய்ப்பு அமைந்திருக்கிறதோ என்றார்.

45 நாள் ஏரியா ஸ்டடி என்று சென்றவர் அப்படியே ஒரு வருடத்திற்குமேல் இருக்க நேர்ந்தது. அவர் 2001 பிப்ரவரியில் பயணிக்க மகனுக்கு விடுமுறை விட்டதும் ஏப்ரலில் என் முதல் விமான பயணம், வெளிநாட்டிற்கான பயணம், இரு  சின்னக் குழந்தைகளுடன் என அத்தனை சிறப்புகளுடன் கூடிய பயணம் இலங்கைக்கு. ஒரு மாத காலம் இருந்தேன். கதிர்காமனை தரிசித்தேன். மனம் மகிழ்ந்தேன்.

நல்லூரானை பார்க்க முடியவில்லை. பெயர் எதுவானால் என்ன கதிர்காமனையாவது பார்த்தோமே என்று மனம் ஆனந்த கூத்தாடியது.
உன் சித்தம் அதுவாக இருந்தால் உன்னை மீண்டும் தரிசிக்கும் பாக்கியம் கொடு என்று கேட்டு வந்தேன். வா மகளே! என அழைத்து ஆண்டு தோறும் அவனை தரிசிக்கும் பாக்கியத்தை தந்தான். ஆறுவருடங்கள் . ஆனந்தமான ஆறுவருடங்கள்.

அங்கிருந்து இந்தியா கிளம்பும் முன் கதிர்காமனை தரிசிக்க முடியவில்லை. நல்லூர் போக ரொம்ப கஷ்டம். நீ அழைக்கும் போது வருகிறேன் என்று சொல்லி வந்துவிட்டேன். 2009ல் கதிர்காமனை தரிசித்து வந்தோம்.
2014ல் இலங்கை பயணம் போனபோது கதிர்காமம், நல்லூர் தரிசினம் முடியவில்லை. என்னை எப்போது அழைக்கிறாயோ அப்போது வருகிறேன். என சொல்லிக்கொண்டேன்.

தொடரும்.....