Showing posts with label ஆஷிஷ். Show all posts
Showing posts with label ஆஷிஷ். Show all posts

Wednesday, September 18, 2013

ஆஷிஷை பார்த்து சிவா கேட்ட கேள்வி!!!!!!!!

2 மாசம் முன்னாடியே தம்பி மங்களூர் சிவா கிட்டேயிருந்து போன். அக்கா ஹைதை வர்றேன். உங்களை கண்டிப்பா சந்திக்க வருவேன்னு. ஆகா வாங்க தம்பி காத்திருக்கேன்னு சொன்னேன். இதுல கூத்து என்னென்னா அயித்தான் வேலை விஷயமா மங்களூர் போயிருந்தப்ப  சிவா போன் நம்பர் வாங்கி பேசி சந்திப்பு நடந்துச்சு.

மங்களூர் சிவா தம்பி   - ஹஸ்பண்டாலஜி பதிவுகளின் போது காரசாரமாக
விவாதம் நடக்கும். வீக் எண்ட் ஜொள்ளு படங்கள் புகழ் பதிவர். நான் பதிவு எழுந்த ஆரம்பித்திலிருந்து தொடர்பில் இருக்கும் அன்பான தம்பி.

ஆஷிஷ், அம்ருதா எல்லாரையும் பாக்கணும் எத்தனை மணிக்கு வந்தா சரியா இருக்கும்னு விவரம் கேட்டார். தம்பி வருவதை பசங்களுக்கு சொல்லலை. சர்ப்ரைஸ். அயித்தானுக்கு தெரியும். அன்றைக்கு எதேச்சையாக அயித்தானும் லேட்டாக ஆபிஸ் போக இருந்ததால் சிவாவுக்கு ஆச்சரியம். சாரை பார்க்க முடியோமோன்னு நினைச்சேன்னு சொன்னாப்ல. ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தாப்ல. பேசிக்கிட்டே சாப்பிட்டோம். அயித்தான் சாப்பிட்டு ஆபிஸ் கிளம்பிட்டார். சாயந்திரம் தான் வந்து சிவாவை ஷ்டேஷன் அழைத்து சொல்வதாக சொல்லிட்டு போனார்.

அப்புறம் நானும் சிவாவும் பல கதைகள் பேசிக்கிட்டு இருந்தோம். 2.45க்கு அம்ருதா வந்தாப்ல.  யார் வந்திருக்காங்கன்னு யோசிச்சுகிட்டே உள்ளே நுழைய ஊர் பேர் சொல்றேன் கண்டுபிடின்னு சொன்னேன். மங்களூர்னு ஆரம்பிச்சதுதான்.... சிவா அங்கிள்னு சொன்னாப்ல. போன்ல முன்னாடி பேசியிருக்காங்க. ஆனா முதல் சந்திப்பு இது. எனக்கும் தான். அம்ருதா கூட பேசிக்கிட்டு இருந்தாப்ல. அன்னைக்கு ஆஷிஷ் சீக்கிரமே 4.45க்கு வந்திட்டாப்ல. ஃபேஸ்புக்ல சிவாவை பாத்திருப்பதால ஆஷிஷ் அடையாளம் கண்டுகிட்டாப்ல.

அப்பதான் ஆஷிஷைப் பார்த்து அந்த கேள்வியை சிவா கேட்டார்.  இப்ப டீன் ஏஜ் வயசுல வீட்டு சாப்பாடு பிடிக்காது. அம்மா சமைப்பதை சாப்பிடாம வெளியில சாப்பிட பிடிக்கும்.!! எப்படி உங்களுக்குள்ள சண்டை வருதான்னு கேட்டார்.

ஆமாம் சிவா சண்டைதான் வருது!! அப்படின்னு சொல்ல அவர் வேற மாதிரி நினைக்கறதுக்குள்ள “வயிறு காஞ்சு வர்றியே இது நியாயமான்னு!?? சண்டைனு சொல்ல புரியலைக்கான்னார் சிவா தம்பி.

ஆஷிஷ், “ என் டப்பாவை நான் சாப்பிடுவதே இல்லை அங்கிள். லன்ச் ப்ரேக் விட்ட அஞ்சாவது நிமிஷம் என் டப்பா காலியாகிடும். வேற கிளாஸ்ல இருக்கற என் ஃப்ரெண்ட் கூட ஓடிவந்திடுவான். அம்மா கட்டி கொடுப்பதை நான் சாப்பிடாம அவங்க கொண்டு வர்றதை சாப்பிட்டு ஒப்பத்தறேன்”ன்னு சொன்னாப்ல.

இதுதான் பிரச்சனை எனக்கு இப்ப. ஆசை ஆசையாய் ஆஷிஷ் சாப்பிட அனுப்பினால் மத்த பசங்க சாப்பிட்டு கொண்டாட்டமா இருக்காப்ல.
சில சமயம் அவங்க கொண்டு வந்தது வயத்துக்கு பத்தாம சாயந்திரம் வரை காய்ஞ்சு வருவாப்ல. ஸ்கூல்ல ஒரு பையன்  ஆஷிஷிற்கு தெரியாம ஷார்ட் ப்ரேக்கிலேயே பாஸ்தா மொத்தத்தையும் காலி செஞ்சு வெச்சிருந்தாப்ல. லஞ்ச் ப்ரேக்ல பார்த்தா அட்சய பாத்திரத்துல இருந்த கீரை மாதிரி பாஸ்தா கண்ணுல பட்டிருக்கு!

 சில பசங்க ஆஷிஷ் நீ உங்க அம்மா கிட்ட சொல்லிடு. வர்ற ஞாயிற்றுக்கிழமை சாப்பிட வர்றோம். அப்படின்னு தானே இன்வைட் செஞ்சுக்கிடுவாங்க. இப்படி ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காங்களேன்னு சரி வர சொல்லுன்னு ஒரு நாள் லீவா இருக்கும்போது வரசொன்னேன்.

அதே சாப்பாடு தான். ஆனா ரெண்டு பசங்களும் சரியா சாப்பிடலை. நிஜமாவே இந்த பசங்க தான் ஆஷிஷ் கொண்டு போற சாப்பாட்டை சாப்பிடறாங்களா இல்லை வேற ஏதுமான்னு டவுட் வந்திருச்சு. அடுத்த நாள் ஆஷிஷ் காலேஜுக்கு போய் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நீங்க சரியாவே சாப்பிடலைன்னு சொல்லி வருத்தப்பட்டாங்க அப்படின்னு சொல்ல,” சாரி ஆஷிஷ். உங்க அம்மா சாப்பாடு பக்குவமா கலந்து கொடுக்கறாங்க.  நேத்து எங்களுக்கு கலந்து சாப்பிட தெரியலை!!! அதான் சரியா சாப்பிடலைன்னு!! சொல்லியிருக்காப்ல.
எப்படி இருக்கு பாருங்க??? “ஏன்யா அவங்க வீட்டுல சாப்பாட்டை கலந்துதானே சாப்பிடணும்னு கேட்டா சிரிக்கறாப்லயாம்.

சாம்பார், வத்தக்குழம்பு, காரக்குழம்பு சோறு கலக்கும்போதே கொஞ்சம் நல்லெண்ணையும் சேர்த்து கலக்குவேன். உடம்புக்கும் நல்லது. நல்ல மணமாவும் இருக்கும்னு எங்க அம்மம்மா சொல்லிக்கொடுத்தது இந்த மெத்தட். அதோட கொஞ்சம் நெய் விட்டா இன்னும் வாசம் தான்.

இப்ப இந்த கூட்டத்துல இன்னொரு புள்ளையும் சேர்ந்திருக்கு. தினமும் ஆஷிஷ் டப்பாவை எடுத்து வெச்சுக்கிட்டு தாரளாமா தன் டப்பாவை ஆஷிஷுக்கு கொடுத்திடறாப்லயாம். ”ஆண்ட்டிக்கோ போல். ஆஜ்கா கானா பகுத் அச்சா ஹைன்னு!!” மெசெஜ் வேற வருது. பதின்ம வயசுல வீட்டு சாப்பாடு பிடிக்காம போகும் சூழல் இருக்கு. ஆனா ஆண்டவனருள்ல ஆஷிஷ்க்கு சாப்பாடு பிடிக்காம போகலை.....  சந்தோஷமா இருக்கு. கிடைக்காம போகுதேன்னு வருத்தமா இருக்கு. ஆனா நான் அனுப்பற மிளகு ரசம், காய்கள்னு கொஞ்சமாவது ஆரோக்யமான சாப்பாடு, நல்லெண்ணெய் நெய் எல்லாம் சேர்த்து மத்த பதின்ம வயது பசங்களுக்கும் உடம்புல சேருதேன்னு சந்தோஷமாவும் இருக்கு.

போற போக்கை பார்த்தா ஒரு படத்துல பிந்து கோஷ் ஒரு பெரிய கேரியர் கொண்டு வருவாங்க. அது மாதிரி கட்டி அனுப்பினாத்தான் ஆஷிஷுக்கு கொஞ்சமாவது சாப்பாடு கிடக்கும்!!!!!


     இன்னைக்கு விசர்ஜன்னு ஸ்கூல் லீவு. ரெண்டு பேருக்கும் பரிட்சை இருப்பதால கூட இருந்து ஹெல்ப்  செஞ்சுகிட்டு இருப்பதால வேற எதுவும் செய்யாம சிம்பிளா ராஜ்மா சாவல் செஞ்சேன். (ராஜ்மா கறியும், சோறும்) இதுவும் ஆஷிஷ் கிளாஸ் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும். என்னய்யா செய்யறன்னு வந்த மெசஜுக்கு சும்மா இருக்க முடியாம ஆஷிஷ்,”இட்ஸ் ரெயினிங் அவுட்ஸைட்!!! எஞ்சாயிங் ரஜ்மா சாவல்!!!னு மெசெஜ் தட்ட
“தேரே கர் கா அட்ரஸ் செண்ட் கர்” (வூட்டு அட்ரஸ் அனுப்புன்னு) மெசெஜ் வருது.

:)))

 

Wednesday, June 20, 2012

ஸ்கூலுக்கு போகணும்??!!!!

எல்கேஜி அட்மிஷனுக்கு கூட இம்புட்டு டென்ஷன் பட்டிருக்கமாட்டேன்.
ஆஷிஷ் அண்ணா பரிட்சைக்கு முன்னாடியே அவங்க ட்யூஷன் டீச்சரும்
நானுமா சேர்ந்து எங்க சேர்ப்பதுன்னு பேசிக்கிட்டே இருந்தோம்.

ஆஷிஷ் அண்ணா இஞ்சினியரிங் தான் படிக்க விருப்பம்னு சொல்லிட்டாரு.
இங்க ஆந்திராவில் அதுக்குன்னு கோச்சிங் கொடுக்கும் பள்ளிகள் இருக்கு.’
அதாவது +1.+2 போர்ஷனை பெருசா கண்டுக்க மாட்டாங்க.
அந்த மதிப்பெண்கள் எண்ட்ரன்ஸ் டெஸ்டுக்கு உதவாது அதனால!!!
நுழைவுத் தேர்வுக்கு மீனை மசாலாவில் ஊறப்போட்டு, திரும்ப
மசாலா தடவின்னு மேரினேஷன் செய்வது போலன்னு வெச்சுக்கோங்க.
காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை வகுப்பு. அதுக்கப்புறம்
வீட்டுக்கு வந்து ஹோம்வொர்க் ஏதாவது இருந்தா செஞ்சா போதும்.
அதான் அங்கயே அம்புட்டு நேரம் படிக்க வெச்சிருவாங்களே!!

இப்படி படிக்க வெச்சு அவங்கதான் ஐஐடியிலும், ஏஇஇஇஇ டாப்பர்ஸா
வருவாங்க. ஆந்திராதான் இந்த விஷயத்துல டாப் ஸ்கோர்.
முதல் பத்து ரேங்குக்குள்ள மட்டுமில்ல 200 வரைக்கும் கூட
நாராயணா, சைதன்யா போன்ற பள்ளி மாணவர்கள்தான். அங்கே
தான் மேலே சொன்ன மேரினேஷன் நடக்குது. எனக்கு அப்படிப்பட்ட
இடத்தில் போடவே இஷ்டமில்லை. ஆஷிஷும் அவங்க பழைய
ஃப்ரெண்ட்ஸ்கள் அங்கே படிக்கறவங்க படற மன உளைச்சல்கள்
எல்லாம் பாத்திட்டு,” அம்மா இந்த மாதிரி இடத்துக்கு என்னை
அனுப்பிடாதீங்கன்னு” ரிக்வெஸ்ட் வெச்சிட்டாரு.

சரி. இனி +1,+2 பாரதியா வித்யாபவன்ல சேத்திட்டு கோச்சிங்
தனியா போடலாம்னு ஒரு யோசனை. FIITJEE நடத்தின
தேசிய அளவிலான பரிட்சையும் எழுதினாப்ல. அங்கேயும்
கிடைச்சது. FIITJEEல கோச்சிங் நல்லா இருக்கும்.
முன்னாடி சொன்ன பள்ளிகள் மாதிரி வகுப்பு 7 மணி வரைக்கும்
இருக்காது. ஒரு வருஷத்துக்கே கிட்டத்தட்ட 1 லட்சத்துக்கும்
மேல. கவுன்சிலிங் எல்லாம் முடிச்சு அட்மிஷனுக்கு அட்வான்ஸ்
கட்ட சொல்லியிருந்தாங்க. அங்கே ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா
அவங்க IITJEE, AEEEE ,BITSAT, EAMCET (LOCAL) சொல்லிக்கொடுப்பாங்க.
ஆனா IITJEE,தான் டார்கெட். அதுக்கே நிறைய்ய சொல்லித்தருவாங்க.
அவங்க கணக்கு என்னன்னா ஹைலெவல் கோர்ஸே செய்ய’முடியும்போது
AEEEE ,BITSAT, செய்வது கஷ்டமா இருக்காதுன்னு சொல்வாங்க.

உண்மை ஆஷிஷ் டீச்சர் சொல்லி புரிஞ்சது. அங்கேயும் +1,+2 போர்ஷன்
கண்டுக்க மாட்டாங்க. மத்த கோச்சிங் நல்லா இருக்கும்.
டிசிப்ளினும் இருக்கும். ஆனா ஆஷிஷ் IITJEE, செய்ய இஷ்டமில்லை.
BITSAT தான் டார்கெட். அதுக்குன்னு ஷ்பெஷல் கோச்சிங் தர
மாட்டாங்க!!! அப்படி இருக்க அதுக்கு போய் எதுக்கு அம்புட்டு
பணம் கட்டனும். தவிர IITJEE, டைப் டெஸ்ட்ல சரியா மார்க்
வராட்டி மனசு கஷ்டம் வேற. நாம டார்கெட் செய்ய நினைப்பது
நடக்காது. அவங்களோ IITJEE பரிட்சைக்குதான் கவனம் செலுத்து
வதால அதுல மார்க் வராட்டி ப்ரஷர் போடவும் வாய்ப்பு இருக்கு.

BITSATல் ஆன்லைன் டெஸ்ட்.மல்டி சாய்ஸ். இதுல நெகட்டிவ் மார்க்கிங் உண்டு.
ஆனா IITJEE மெத்தட் சம்ஸ் போல எழுதணும். AEEEE இதுல
ரெண்டு வகையிலயும் டெஸ்ட் இருக்கும். அதனாலதான் குழம்ப
வேண்டி இருந்தது. எங்கதான் போடுவது? பவன்ஸ்ல இண்டர்
படிக்கலாம். கோச்சிங் எங்க நல்லா இருக்கும்னு கஷ்டமா இருந்த
நிலையில் பல பள்ளிகளில் இருந்து போன்கால்கள் வந்தம
மனியமா இருந்துச்சு. விசாகப்பட்டிணத்திலேர்ந்தெல்லாம் கால்
வரவும்,”எங்க நம்பர் எப்படி கிடைச்சிச்சுன்னு கேட்டா?, 10ஆம் வகுப்பு
பரிட்சை எழுதற பசங்க நம்பர்கள் எல்லாம் எங்க கிட்ட
இருக்கும்னு!!!” சொன்னாங்க.

சில பள்ளிகளில் வீடுதேடி பேம்ப்ளெட்ஸ் கொடுத்தாங்க!!!
அப்படி வந்த ஒரு பள்ளிக்கூடம் தான் ICLASS.
இங்க ஆந்திராவில் 10த் வரைக்கும் சிபிஎஸ்சி அல்லது
ஐசிசில படிக்கறாங்க. ஆனா +1,+2 ஸ்டேட் போர்ட்
படிக்கறாங்க. ஈசியா மார்க் ஸ்கோர் பண்ணாலாம் என்பது
மட்டுமில்லாம ஆந்திரா போர்ட் மேத்ஸ் & சயின்ஸ்
எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதறவங்களுக்கு உதவியா
இருக்கும்படி அமைச்சிருக்காங்க. கொஞ்சம் கஷ்டமா
இருக்கும்னு கூட சொல்லலாம்.

ICLASS பேம்பளெட்ஸ் பாத்தோம். எங்க வீட்டுக்கு
பக்கத்துலேயே இருக்கு. ஆஷிஷோட டீச்சரை கேட்டோம்.
விசாரிச்சு சொல்றதா சொன்னாங்க. (அவங்க கணவரும்
TIME (TRIUMPHANT INSTITUTE OF MANAGEMENT EDUCATION)ல்
வேலை செய்வதால தெரிஞ்ச ஃபேக்வல்ட்டிகிட்ட விசாரிச்சு
சொன்னாங்க. 4 வருஷம் தான் ஆகிருக்குன்னாலும் இந்தப்
பள்ளிக்கு நல்ல பேரு இருக்கு. இவங்க 6 மாசம் வரைக்கும்
டைம் எடுத்து +1, +2 போர்ஷன்ஸ் முடிச்சு அப்புறம்தான்
எண்ட்ரன்ஸுக்கு கோச்சிங் செய்வாங்க. ஆஷிஷ் இங்க
படிச்சா நல்லா இருக்கும்னு கைட் செஞ்சாங்க. புளிமூட்டை
மாதிரி வகுப்புல அடைக்காம 36 பேர்தான் ஒரு வகுப்பில்.
தவிர இங்க ரெண்டு சாய்ஸ் இருக்கு.

ஒரு கோச்சிங் IITJEE, AEEEE ,BITSAT, EAMCET
இல்லாட்டி AEEEE ,BITSAT, EAMCET மட்டும்
எடுத்துக்கலாம். ஆஷிஷுக்கு BITSAT தான் டார்கெட்
என்றாலும் AEEEE இதுவும் செய்யறேம்மா என்றதால்
இங்கே அட்மிஷன் கேட்டோம். 9த் மார்க் ஷீட் கேட்டாங்க.
காட்டினோம். ஆஷிஷின் பழைய ஸ்கூலிலிருந்து பல
நண்பர்கள் அங்க படிச்சுக்கிட்டு இருப்பதா சொன்னாங்க.
அவங்களை போய் மீட் செஞ்சு பாருங்க, கிளாஸ் ரூம்
எப்படி இருக்குன்னு பாருங்கன்னு சொல்ல கிளாஸ் ரூம்
பாத்தோம். ஒவ்வொரு கிளாஸுக்கும் ப்ரொஜக்டர் இருக்கு.
ஏசி ரூம் வேற. நீட்டா இருந்தது.

அங்கே இருந்த ஆஷிஷின் பழைய பள்ளியில் படிச்ச
பொண்ணை தனியா கூப்பிட்டு விசாரிச்சேன். அவங்க
அம்மா பழைய பள்ளியில் டீச்சரா இருக்காங்க.
“நிறைய்ய இடத்துல விசாரிச்சோம் ஆண்ட்டி. அம்மா
ரொம்ப திருப்தி பட்டுதான் இங்க சேத்தாங்க. படிப்பு
நல்லா இருக்கு. தவிர என் பர்சனாலிட்டியை ஷேப்பப்பும்
செஞ்சுக்க முடியுதுன்னு” சொல்ல சரின்னு முடிவு
செஞ்சோம்.

ஆஷிஷின் பரிட்சை முடிஞ்சதும் நானும் அயித்தானும் எந்தெந்த
ஸ்கூலுக்கெல்லாம் போயி விசிட் அடிச்சு அட்மிஷன் பத்தி
பாக்கணும்னு பெரிய லிஸ்ட்டே போட்டு வெச்சிருந்தோம்.ஆனா
அலைச்சலே இல்லாம சென்றோம் வென்றோம் மாதிரி

ICLASSல் அழகா அட்மிஷன் கிடைச்சிருச்சு. ரிசல்ட்டுக்கு முன்னாடியே
10,000 கட்டி சீட் ரிசர்வ் செஞ்சாச்சு. ஃபீஸ் வருஷத்துக்கு 50,000.
(பல ப்ளே ஸ்கூல்களில் ப்ரிகேஜி, நர்சரிக்கே வருஷத்துக்கு
30,000)
காலை 8 மணி முதல் மதியம் 3.30 வரைதான் வகுப்பு.
சாயந்திரம் கண்டிப்பா ஏதாவது ஆக்டிவிட்டில சேர்த்திடுங்க.
அது அவங்க ஸ்ட்ரெஸ் லெவல் குறைய உதவும்னு பிரின்சிபல்
ஏற்கனவே சொல்லியிருந்தார். ரிசல்ட் வந்ததும் ஃபோன் செஞ்சு
மார்க் கேட்டாங்க. ஜூன்8 லேர்ந்து காலேஜ்னு சொல்லிட்டாங்க.

ஆரம்பமானிச்சு வீட்டுல ரவுசு. நான் ஸ்கூல்னு சொல்ல ஆஷிஷ்
அண்ணா காலேஜ்னு சொல்ல ஒரே கலாட்டாதான். இங்க
+1,+2வை ஜூனியர் காலேஜுன்னு சொல்றாங்க. நமக்கு அது
ஸ்கூல்தான!! :)) யூனிஃபார்ம் கிடையாது!!! யூனிஃபார்ம்
இருந்தா பிரச்சனையே இல்லை. :)) இப்ப வெரைட்டியா
ட்ரெஸ் ரெடி செய்யணும்.

காலேஜ் திறக்கும் நாள் கிட்ட நெருங்க நெருங்க அண்ணாவை
காலய்ச்சுகிட்டு இருந்தேன். பேக்டு ஸ்கூல் ஷூஸ் வாங்கணும்,
ஸ்ட்ரா போட்ட வாட்டர் பாட்டில், பென்10 டிபன் பாக்ஸ்...
பாப்பாய் பேக் என சொல்லச் சொல்ல ஆஷிஷ் முறைத்ததை
பார்க்கணும். :)) நான் ஸ்கூல்னே சொல்ல அம்மா காலேஜ்னு
சொல்லுங்கன்னு விடாம சொல்லிக்கிட்டே இருந்தாப்ல. :))

வகுப்புக்கள் ஆரம்பமாகிடிச்சு. 3.30 வரை தான் காலேஜ் என்றாலும்
5.30 வரை ஃபேக்வல்ட்டிகள் அங்கேயேதான் இருப்பாங்க. என்ன
டவுட் இருந்தாலும் பொறுமையா கேட்டுக்கிட்டு வரலாம். அங்கேயே
இருந்து படிக்கணும்னு விரும்பினாலும் ஓகே. அப்துல் கலாம்
அவர்களின் மாணவர்தான் ஆஷிஷிற்கு பிசிக்ஸ் ஃபேக்வல்ட்டி.
பாடங்கள் ரொம்ப அழகா சொல்றாங்களாம். புரியாட்டி புரிஞ்சுக்கும்
வகையில் திரும்ப வகுப்பிலேயே சொல்லிடறாங்கன்னு ஆஷிஷ்
குஷி.

அலைஞ்சு திரியாம வீட்டுக்கு பக்கத்துலேயே (1 கிமீ தான்)
வகுப்பு. பிள்ளையை அதிகம் மன உளைச்சலுக்கு ஆட்படுத்தாத
படிப்பு. இப்படி ஒரு சூழலை கொடுத்தது இறைவன் அருள்.

தவிர இப்ப கபில்சிபில் சொல்லியிருப்பதை பார்த்தா ஒரே ஒரு
எண்ட்ரன்ஸ் டெஸ்ட்தான் இருக்கப்போவுது. இண்டர் மார்க்கும்
முக்கியம்னு சொல்லியிருக்காரு. நல்லவேலை மற்ற இடங்களில்
சேர்க்காமல், இப்படி ஒரு பள்ளியில் சேர்க்கும் வாய்ப்பை இறைவன்
தந்தான். பணமும் தப்பித்தது.

அந்த கடவுளுக்கு மனமார்ந்த நன்றிகள்


Tuesday, May 22, 2012

ஸ்வீட் எடு கொண்டாடு

யாராவது போர்ட் எக்ஸாம் எழுதுகிறார்கள் என்றாலே ரொம்ப
பிரார்த்தனை செய்வேன். காரணம் இங்கே.
பேப்பர் திருத்துபவர்கள் நல்ல மூடில் இருக்க வேண்டும்
என்பதே என் மெயின் பிரார்த்தனையாக இருக்கும்.

இப்படி இருக்கும் பொழுது ஆஷிஷ் பத்தாம் வகுப்பு பரிட்சை
எழுதிகிறான் என்றால்............. :)) ஆனால்
மகனுக்கு அதிகம் ப்ரஷர் கொடுத்து சூழலை கெடுத்து
விடக்கூடாது என்று முடிவு செய்து அதன் படி திட்டம்
போட்டு எல்லாம் செய்தேன். தேவையான ஓய்வு,
சத்தான உணவு என எல்லாம் பேலன்ஸ்டாக
கொண்டு வந்தேன்.

அவனது ட்யூஷன் டீச்சர் ரொம்பவே உதவியாக இருந்தார்.
குருகுலம் போல தன் வீட்டிற்கு வரவழைத்து,
மாடல் பேப்பர்களை எழுத வைத்து, நடுவில் ஓய்வு
எடுக்கச் சொல்லி, தானே சமைத்து ருசியான உணவு
கொடுத்து திரும்ப படிக்க வைத்து வீட்டிற்கு அனுப்புவார்.

நடு நடுவே ஜூஸ் செய்து கொடுத்தல், டீ போட்டு
கொடுத்தல் என அவரும் ஒரு தாய் போல பார்த்துக்
கொண்டார். ப்ரீ போர்டுக்கு முன்பே சோஷியல்,
ஹிந்தி போர்ஷன்களை முடித்து வைத்துவிட்டேன்.
டீச்சர் அறிவியல், கணிதப்பாடங்களுக்கு பொறுப்பு
எடுத்துக்கொண்டார். முறையான திட்டமிடல் ஆஷிஷுக்கு
பெரிதும் உதவியது. ரொம்பவே கண்ட்ரோல் செய்யாமல்
அதே சமயம் அதிகம் டீவி, பாட்டு என உட்கார
விடாமல் ரிலாக்ஸாக்க விட்டு படித்து ஆஷிஷ்
எக்ஸாமை எதிர் கொண்டார்.

நேற்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சிபிஎஸ்சி
தேர்வு முடிவுகள் வந்தன. ஆஷிஷின் நண்பன் போன்
செய்து சொல்லித்தான் தெரியும். உடன் நெட்டில்
பார்த்தோம். ஆண்டவனருள். பட்ட கஷ்டத்திற்கு
நல்ல பலன். மகனுக்கும் மனநிறைவு. நல்ல
மதிப்பெண்கள்.

நேற்றுதான் எல்கேஜியில் சேர்த்தது போலிருக்கு.
இதோ ஆஷிஷ் 10ஆவது வகுப்பு தேர்வாகி
ஜூனியர் காலேஜ் போகிறார். :))






Thursday, January 21, 2010

ஆஷிஷ் டான்ஸ் போட்டோஸ்

இந்த வருடம் துவக்கமே என் பையனின் கெட்ட ஆட்டத்தோடுதான்:))

அப்பார்ட்மெண்டில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஐயாதான்
பிரபுதேவா.. சும்மாவா 3 பாட்டுக்கு தானே கொரியோ க்ராப் செஞ்சிருக்காரு.
ஒரு பாட்டு ஸோலோவா ஆட்டம் வேறு.


நடனம் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ஆனா பெண்ணா பிறந்த
காரணத்தால் சில ஆசைகள் நிறைவேறாமப்போகும். என் பிள்ளை
அதை செய்யணும்னு வற்புறுத்தல, ஆனா இயல்பாவே வந்திருச்சுன்னு
நினைக்கிறேன்.

ஆஷிஷ் ஆட்டம், ட்ராயிங்க் எல்லாவற்றிலும் கலக்கும் ஆள்.

ROCKET SING ஹிந்தி பாட்டுக்கு ஆஷிஷ் போட்ட ஆட்டதுக்கு
செம விசில் தான்.:)) ரன்பீர் சிங்கை விடவும் சூப்பரா
ஆடினதா எல்லோரும் சொன்னாங்க.

பாட்டு இங்கேயிருக்கு.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆஷிஷ் ஆடும் போட்டோ:


3 idiots படத்தின் ஆல் இஸ் வெல் பாட்டுக்கு டான்ஸ்:




எந்துகே ரவணம்மா எனும் தெலுங்கு குத்து பாட்டுக்கு
கூட்டமாக சேர்ந்து குத்தும் ஆஷிஷ் :))
இந்தப் பாட்டைபத்தி பதிவு இங்கேயிருக்கு.




பேப்பர் கப்பில் ஆஷிஷ் செய்த பூ:


ஆஷிஷின் படிக்கும் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்களின்
send off party யில் ஆஷிஷ் 3 பாட்டுக்கு நடனம் அமைக்க
போறார். அவங்க க்ளாஸ் டீச்சரே இவன் பெயரை கொடுத்திருக்காங்கன்னு
ஐயாவுக்கு ஒரே பெருமை. எனக்கும் தான்.

அம்ருதாவும் அவங்க ஃப்ரெண்ட் இதியும் கூட இரண்டு
பாட்டுக்கு செம டான்ஸ். பொண்ணுங்க போட்டோ வேணாமேன்னுதான்
போடலை.

இது நான் செஞ்ச சாக்லேட். எல்லோருக்காகவும் :))




டான்ஸ் போட்டோ பாத்து களைச்சிருப்பீங்க. எங்க ஊர் பன்னீர் சோடா
குடிங்க. சூப்பரா இருக்கும்.

Tuesday, October 06, 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்

எங்கள் வாழ்வில் எங்கள் சின்னி ஆஷிஷ்
அன்புப் பரிசாக வந்த நாள் இன்று. 7.10.09

என் தந்தையின் அன்பை எனக்கு
உணர்த்திய நாள் இன்று(பிரசவ வலியில்
நான் தவித்ததற்கு அப்பா ஆஸ்பத்திரி
வாசலில் உட்கார்ந்து அழுதிருக்கிறார்!!!)




ஒரு குழந்தை பிறந்த பொழுதுதான் தாயும் பிறக்கிறாள்.
அந்த வகையில் எனக்கு இன்று பிறந்த நாள்.




சின்னி ஆஷிஷ் teenager ஆகிற
இந்நந்நாளில் அவன்
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும்
இறைவனின் ஆசிர்வாதமும், அன்பு நெஞ்சங்களின்
ஆசிர்வாதமும் என்றும் இருக்க வேண்டுகிறேன்.

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஷிஷ்.

Wednesday, March 18, 2009

அம்பாசிடரும் ஆஷிஷும்

இந்தியா வரும்பொழுது அப்பா கார் எடுத்துக்கொண்டு
ஏர்போர்ட் வந்துவிடுவார். ஆஷிஷ் மட்டும்
டென்ஷனாகவே இருப்பான். தாத்தா என்ன
கார் கொண்டு வருவாரோ!!! என்பதுதான்
டென்ஷனுக்குகாரணம்.


அப்பா எப்போதும் அம்பாசிடர் கார்தான் கொண்டுவருவார்.
பலவிதத்தில் அது சொளகரியமான வண்டி.
ஆஷிஷுக்கு இந்தக் கார் சுத்தமாக பிடிக்காது.
இதையும் காண்டசாவையும் கார் வகையாகவே
சேர்க்கமாட்டான். :(( யானை மாதிர் இருக்குப்பா!
என்பான். அவனுக்கு பிடித்தது ஃபெராரி தான்.

ஒரு சுமோ கொண்டுவந்தால் என்ன தாத்தா?
என்று அப்பாவிடம் செல்ல சண்டை நடக்கும்.





அம்பாசிடரில் ஏறும்போதெல்லாம் முகத்தை சோகமாகவே
வைத்துக்கொண்டுதான் ஏறுவான்.

கொழும்புவில் சடனாக அம்பாசிடர் கார் பார்த்தபொழுது
ஆச்சரியாமாக இருந்தது. அங்கே ஒரு அமைச்சர்
அம்பாசிடரை மிக விரும்பி வாங்கி வைத்துக்கொண்டார்.
அதிவிரைவில் அம்பாசிடருக்கு ஒரு ஷோரும் வேறு
வந்துவிட்டது.

R.A.DEMEL MAVATHAI எனும் ரோட்டில்
H.S.B.Cக்கு எதிரில் அந்த ஷோரூம்.
அந்தப் பக்கம் போகும்போதெல்லாம்
கண்ணை மூடிக்கொண்டுவிடுவான். :))




1948ஆம் ஆண்டு துவங்கி ஓடிக்கொண்டிருக்கிறது
அம்பாசிடர். இதுதான் நம் இந்தியாவின் முதல்
கார் எனும் பெருமை இருக்கிறது.Amby என்று
முதலில் அழைக்கப்பட்டு அம்பாசிடர் என
பிறகு மாற்றப்பட்டது.

ower steering, multi point fuel injection, company fitted CNG, enough space for leg room, comfortable arrangement of seating, sturdy and tough structure, 5 speed gear box
, easy repair ability etc. என ப்ளஸ்கள்
அம்பாசிடருக்கு. இதெல்லாம் அயித்தான்
எடுத்துச் சொல்லி நம் இந்தியத் தயாரிப்பு
என பெருமை கொள்ளடா மகனேன்னு சொன்னதற்கப்புறம்

இப்போது முகத்தை மூடிக்கொள்வதில்லை.


ஆஷிஷின் முந்தைய கார் பதிவில்
அவனுக்கு ஹைபிரீட் கார் பற்றி எப்படித்
தெரியும்? என்று கேட்டு பதிவு போடச் சொல்லியிருந்த
பரிசலாருக்காக இதோ:

ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் கார் & பைக் ஷோ
பார்த்து தெரிந்து கொண்டானாம்.

இது என் 375ஆவது பதிவு

Monday, February 09, 2009

ஆஷிஷ் துணுக்ஸ்


சின்ன வயது முதலே ஆஷிஷிற்கு
கார், பைக் பைத்தியம். தூங்கும்போதும் கூட
அவனருகில் கார் பொம்மை இருக்கும்.
பைக் சத்தம் கேட்டால் ஓடிவந்து என்ன
பைக் என்று பார்ப்பான். சைக்கிளைத் தன்
பைக்காக நினைத்து அதில் வித்தைகள் காட்டி
“கத்தி எடுத்தால் ரத்தம் பார்க்காமல் விடாது”
என்பது போல் ரத்தக்காயங்களுடன் தான் சைக்கிள்
வீட்டுக்குள் கொண்டுவரப்படும். :(

ஒரு முறை மாம்பலம் ஏரியாவில் பிசியான
நேரத்தில் பைக்கில் முன்னாடி அம்ர்ந்திருந்த
ஐயா ஏதோ வேகத்தில் ஏக்ஸிலரெட்டரை
திருப்ப அயித்தான் வண்டி ஓட்டமுடியாமல்
நிலை தடுமாறினார். அப்போது Ashish வயது 3 தான்.

**********************************************
நண்பர் ஒருவர் ஹோண்டா சிவிக் கார்
வாங்கி இருக்கிறார். மகனையும், அயித்தானையும்
ஒருட்ரைவ் அழைத்துச் சென்றார். ஆஷிஷ்
சிவிக் வாங்கியதுக்கு பதில் ”ஹைபீரீட்”
வாங்கியிருக்கலாம்! இன்னும் சூப்பரா
இருக்கும்” என்று சொல்ல,” அப்படி ஒரு
வண்டி இருப்பதே தெரியாதுடா தம்பி!!”
என்று சொல்ல ஐயா ஹைபீரிடீன் அருமை
பெருமைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறான்.
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்??!!”
என ஆச்சரியப்பட்டிருக்கிறார். (ம்ம் எனக்கு
ஹைபிரீட் தக்காளிதான் தெரியும் :)) )
*********************************************

இலங்கையில் இருந்த பொழுது கம்பெனி
RENT A CAR மூலம் வண்டி கொடுத்திருந்தது.
எங்கள் ஹோண்டா சிட்டி சர்வீஸுக்கு
போக வேற ஒரு மாடல் கொடுத்திருந்தார்கள்.
அருமையாக இருந்த அந்த வண்டியில்
எங்களை ஒரு ட்ரைவ் அழைத்துச் செல்லுமுன்
பெட்ரோல் பங்க் சென்றார் அயித்தான்.
பெட்ரோல் டேங்கை திறக்க பட்டன் எங்கே
இருக்கிறது என்று அவர் தேடிக்கொண்டிருக்க
“நாநா, இந்த வண்டிக்கு நடுவில் ஹேண்ட்
ப்ரேக் பக்கத்தில் இருக்கு பட்டன்!!!!” என்ற
பொழுது அயித்தான் வியந்து தான் போனார்.
****************************************

எனக்கு மிகவும் பிடித்த நிழல்கள் படம்
ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தின்
பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தது.
நான் டீவி போட்ட பொழ்து பாதி படம்
முடிந்து விட்டிருந்தது. பள்ளிவிட்டு
வந்த ஆஷிஷ் பக்கத்தில் அமர்ந்து
என்னுடன் படம் பார்த்தான்.

சந்திரசேகர் இசையமப்பாளராக வாய்ப்பு
கிடைத்ததும் வரும்” மடை திறந்து ஆடும்
நதி அலை நான்” ஆரம்பித்ததும்.
”ஹை! இதுதான் அந்தப் பாட்டா?
(எந்தப் பாட்டு? சத்தியமா புரியலை!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
பழசும் சூப்பராத்தான் இருக்கு!!”
என்றான்.
” நீ எந்தப் பாட்டத் தம்பி சொல்ற?

இந்தப் பாட்டு யோகி பி பாடி சூப்பரா
இருக்கும்மா!” என்றான். தனது
ஐ பாடில் இருந்துபாட்டையும் என்
காதில் ஒலிக்க வைத்தான்.

கோல்டாக இருக்கும் ஓல்ட் பாடல்:

Get Your Own Hindi Songs Player at Music Plugin

மடை திறந்து யோகி பி வெர்ஷன்

ஆஹா!!!

ஒண்ணு நல்லா புரிஞ்சிருச்சு. என் குட்டி
ஆஷிஷ் வளர்கிறான். கொஞ்சம் பெரிய
பையனும் ஆகிவிட்டான்.

Monday, December 08, 2008

அப்பா பிள்ளை!!


பசங்க எப்பவும் அம்மா பிள்ளையாத்தான் இருப்பாங்கன்னு
சொல்வாங்க. இதுக்கு நேர்எதிர் ஆஷிஷ்.
அப்பா பிள்ளைதான்.(இரண்டு பேருக்குமே
அப்பா தான் ஷ்பெஷல்)

“நாநா” என்றுதான் அழைப்பான்.
குட்டியாக இருந்த பொழுது
அதைத் தவிர வேறெந்த வார்த்தையும்
வராது.

அவன் கண்ணெதிரில் அயித்தான் ஆபிஸுக்கு
கிளம்பிவிடமுடியாது.

வெளியே பைக் சத்தம் கேட்டால்(இவரின்
பைக் சத்தம் கரெக்டாக தெரிந்து வைத்திருப்பான்)
முகம் பிரசன்னமாகிவிடும்!!

வீட்டில் இருக்கும் நேரமெல்லாமல்
அவரின் நிழல்போல ஒட்டிக்கொண்டே
இருப்பான்.


மாதத்தில் 20 நாள் டூர் போகும் வேலை
இவருக்கு. இவர் டூர் கிளம்பினால் என்
பாடு திண்டாட்டம்தான்.

அவரின் பேண்ட், ச்ர்ட் துவைத்து
காயப்போட்டிருந்தால் அதைக் காட்டி
அழுவான்!
போட்டோ, பைக் சத்தம் எல்லாவற்றிற்கும்
உப்பி உப்பி அழுவான்!!



அப்பா வரும்வரை உணவு ஒழுங்காக உள்ளே
செல்லாது. சில நாட்கள் வெறும் திரவ ஆகாரம்தான்.
அவர் வந்து அவரது கையால் ஊட்டினால் தான் சாப்பிட
ஆரம்பிப்பான். :(

2 வயது ஆன பொழுது ஆபிஸிற்கு கூட போகவிடமாட்டான்.
மழை பெய்தால் போதும்,”அப்பா! உங்களுக்கு குளிரும்,
வாங்க நாம போத்திகிட்டு தூங்கலாம். அம்மா சூடா
பஜ்ஜி போட்டுகிட்டு வருவாங்க” என்பான். :)


ஆபீஸுக்கு கிளம்பினால் போதும் கண்ணில்
தண்ணீர் முட்டும். அப்பாவை விட்டு நிமிட
நேரம் பிரிவது அவனால் இயலாத காரியம்.


இப்படி இருந்த ஆஷிஷ் திடுமென்று ஒருநாள்
டீவியைக் காட்டி,”ஹை நாநா!”என்று
காட்ட, இவர் எங்கே டீவியில் வந்தார்?!!
என்று நாங்கள் இருவரும் ஓடி வந்து பார்த்தால்
அங்கே ஒரு நடிகர்! :)))

ஆஹா! நல்லா ஐடியா என்று அந்த நடிகரின்
வீடியோ சீடி ஒன்றை வாங்கி வந்து
அதைப் போட்டுவிட்டால் நாநா! பாக்கறேன்”!
என்று அந்த சீடி இவர் வரும் வரை ஓடிக்கொண்டிருக்கும்!!!!!

போஸ்டரில், டீவியில் அந்த நடிகரின் முகம்
பார்க்கும்போதெல்லாம் “நாநா!பாத்தியா?!!
என்று பெருமையாக முகம் முழுதும் சந்தோஷமாக
சொல்வான்.(இந்த விஷயம் தெரிந்தால்
தனக்கு இப்படி ஒரு குட்டி ரசிகன் இருக்கிறான்
என்று அந்த நடிகர் சந்தோஷப் பட்டிருப்பார்!!
அவர் அப்போது வளர்ந்து கொண்டிருந்த
நட்சத்திரம்)





ஆஷிஷ் தனது அப்பாவின் மேல் பயங்கர பொசசிவ்
என்பதற்கு பல சம்பவங்கள் இருந்தாலும்
நானும் இவரும் அடிக்கடி நினைவு கூறும் ஒரு
சம்பவம் இதுதான்.

புதுகைக்கு நாங்கள் போயிருந்த பொழுது
என் சின்ன மாமாவும் வந்திருந்தார்.

அவர் ஒரு முறை வெளியே செல்ல
அயித்தானின் செருப்பை போட்டுக்கொண்டு
போய்விட்டார்!!!!

என் மாமா திரும்பி வரும்வரை அழுதுகொண்டே
இருந்தவன், சரியாக பேச வராத அந்த வயதிலும்
“நாநா! செப்பல்! நாநா செப்பல்!!” என்று
மட்டும் சொல்லி ஏன் போட்டுக்கொண்டு போனாய்?
என்பது போல் சண்டை போட்டு விட்டு

மாமா காலில் விழுந்து வணங்கி
“நாநா செப்பல் வேண்டாம். ப்ளீஸ்”
என்று கெஞ்சி மாமாவை செருப்பை
கழட்ட வைத்து ஒரே களேபரம்தான்.

இன்றும் இவர் டூருக்கு போனால்
இருவரும் சார்ஜ் போன செல்
மாதிரிதான் இருப்பார்கள்.

அம்ருதா பிறந்த பிறகு அவளும் அப்பாகோண்டுவாக
அழுதுகொண்டிருந்தவள்தான், அவளும் இந்த சீடி
உபயத்தில் அப்பாவை பார்த்துக்கொண்டிருந்தாள்!!
(அப்போது இவர் வெளிநாட்டில் இருந்தார்)

ஆஷிஷ் அண்ணா,”அம்ருதா! அது நாநா இல்லை.
...... அங்கிள்,” என்று சொல்லும்போது எனக்குச்
சிரிப்பாய் வரும்.

1 வயது அம்ருதாவிற்கு அண்ணன் புரிய வைக்க
முயற்சி செய்வார். “நானும் அது நாநான்னுதான்
நினைச்சே! அது நாநா இல்ல அம்ருதா” என்று
சொல்லிவிட்டு, என்னிடம்,” பாருங்கம்மா பாப்பாவுக்கு
தெரியவே இல்லை, அந்த அங்கிளைப் போய்
நாநான்னு சொல்றா” என்று சிரித்ததுதான் ஹைலைட்.

:))))))))))))))))))))