Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Tuesday, February 07, 2012

நலம் பெற பிராத்தனை..

எதேச்சையாக டீவி9 பார்த்த பொழுது பிரபல பாடகி எஸ்.ஜானகி
அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்தி
இருந்தது.நெட்டில் இதுபற்றி தெரிய தேடினால் ஏதும் தெரியவில்லை.
ஆனால் டிவி9ன் செய்தி இதுதான்.

இன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்காக திருப்பதி வந்திருக்கிறார்
ஜானகிம்மா. காலை அவர் தங்கியிருந்த ஹோட்டலின்
பாத்ரூமில் கால் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு
உடன் மருத்துவமனிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
சீ.டி.ஸ்கேன் எடுத்து பார்த்ததில் தலையில் இரத்தம்
உறைந்திருப்பதாக மட்டும் தெரிந்தது என செய்தி சொல்கிறது.
இது பற்றி எந்த மருத்துவ ரிப்போர்ட்டும் வெளியே வரவில்லை.

தன் இனிமையான குரலால் மகிழ்வித்த இந்தக் குயிலுக்காக
பிராத்தியுங்கள்.





எந்த பிரச்சனையும் இல்லாமல் திரும்பி வந்து எல்லாரையும்
தன் குரலால் மகிழ்விக்க வேண்டி அந்த இறைவனை
பிராத்திக்கிறேன். மேற்படி தகவல்கள் ஏதும் கிடைத்தால்
உடன் பகிர்கிறேன்.


Friday, January 15, 2010

சாதனை செய்திருக்கும் பெண்

ஜனவரி 10 ஆம் தேதி 2010 அன்று ஒரு சாதனையை செய்திருக்கிறார்
ஹைதையைச் சேர்ந்த பெண்.

எரோபிக்ஸ் கற்றுத்தரும் தினாஜ் தொடர்ந்து 26 மணிநேரம்
எரோபிக்ஸ் நடனம் செய்து புதிய உலக கின்னஸ் சாதனையில்
இடம்பெற்றிருக்கிறார்.

உடல்நலம் பற்றி மக்களிடம் ஒரு அறிவை உருவாக்க வேண்டும்
என்பதற்காகவே தான் இந்தச் சாதனையை செய்ய நினைத்ததாகச்
சொல்லியிருக்கும் தினாஜ் இதற்கு முன்பு விசாகபட்டிணத்தில்
20 மணிநேரம் தொடர்ந்து நடனமாடி இருக்கிறார்.




இந்த சாதனைகளுக்கு முன்பு வெள்ளோட்டமாக
12 மணிநேரம், 16 மணிநேரம் நடனமாடியிருக்கிறார்.
இது லிம்கா உலக சாதனையில் ஏற்கபட்டிருக்கிறது.
அதற்கு பின் விசாகப்பட்டிணத்தில் நடத்தப்பட்ட 20 மணிநேர
சாதனை ஆசியாவிலேயே சாதனை.

இப்போது உலக சாதனையாக தொடர்ந்து 26 மணிநேர
நடனம். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்திருக்கிறது.
இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது ஒரு இந்தியர் அதுவும்
ஒரு பெண் என்பதில் பெருமை கொள்வோம்.
வாழ்த்துக்கள் தினாஜ்.

உலக சாதனைக்காக ஒரு பயணம் எனும் அவரது இந்த
வலைதளத்தில் புகைப்படங்கள், காணொளிக்கள் இருக்கின்றன.

Thursday, October 22, 2009

GOOGLE DOOGLE

எல்லாம் நம்ம கூகுளாண்டவ பத்தின மேட்டர் தான்.
தீபாவளின்னா ரேடியோவுல தீபாவளி சம்பந்தமா
வந்த பாட்டு போடுவது போல சமீபகாலமா
கூகுளில் கூகுள் இமேஜ் வித்தியாசமா வந்துகிட்டு
இருக்கறது பலரும் பாத்திருப்பீங்க.

நண்பர் பதிவர் ரங்கா வோட் போடுங்கன்னு லிங்க்
கொடுத்திருந்தார். பிள்ளைகள் வடிவமைத்தற்கு
நாம் வாக்குப்பதிவு செய்வது போல.




ஒவ்வொன்ணும் சிம்பிளி சூப்பர். எதை விடன்னு
தெரியாம ஒரு வோட்டுதான் போட முடியும் என்பதால்
வருத்தமா ஒரு வோட்டு போட்டேன்.



பிள்ளைகளின் கைவண்ணங்கள் அருமை.



GOOGLE DOOGLE இங்க போய் பாருங்க. உங்க வோட்டையும்
மறக்காம போடுங்க.

நன்றி

Monday, July 20, 2009

ஹா..ஹா...ஹா... தாங்க முடியலையே...

இந்தச் செய்தியை படிச்சதிலேர்ந்து சிரிப்பு தாங்க முடியலை!!!!

குப்பை பொறுக்குவது எப்படின்னு
தெரிஞ்சுக்க சிங்கப்பூர் போனேன், அப்படி இப்படின்னு
நம்ம அமைச்சர்கள் எல்லாம் அடிக்கடி வெளிநாட்டுக்கு
போறாங்க... இதுக்கு எப்படி ஆப்பு வைக்கறது
அப்படின்னு ரூம் போட்டு இந்திய அரசாங்கம்
யோசிச்சிருக்கு போல...


அதான் இப்படி ஒரு சட்டம் போட்டிருக்காங்க.
அதாகப்பட்டது வெளிநாட்டுக்குச் செல்லும்
அமைச்சர்கள், மற்ற அரசு அதிகாரிகள் எல்லோரும்
நமது தேசிய விமானத்தைதான் உபயோகிக்கணுமாம்.
தனியார் விமானங்களில் பறக்கக்கூடாதாம்.

உள்நாட்டுக்குள் இந்திய விமானச்சேவைதான்.
வெளிநாட்டில் அவர்கள் செல்லும் இடத்தில்
ஏர் இந்தியா பறக்காவிடில் எந்த இடம் வரை
ஏர் இந்திய விமானம் செல்கிறதோ அதுவரை
சென்று,, அதன் பிறகு ஏர் இந்தியாவுடன்
கூட்டாக இருக்கும் விமானச்சேவையை
பெறவேண்டுமாம்.. ஹி ஹி ஹி.

என்ன கொடுமை சரவணன் இது??!!

நஷ்டத்தில் இயங்கிக்கு கொண்டிருக்கிறது
இந்தியன் ஏர்லைன்ஸ். அதை நாமே
தூக்கிவிடாட்டி எப்பூடி???ன்னு யோசிச்சிருக்காங்க.
அதன் விளைவுதான் இது.


ஒரே கல்லுல இரண்டு மாங்காங்கறா மாதிரி
யாரும் பயணம் செஞ்சா!!! இந்தியன் ஏர்லைன்ஸுக்கு
வரும்படி, அதுல பயணம் செய்ய பிடிக்காம
அதிகாரிகளும், அமைச்சர்களும் “ஆணியே...
வேணாம்னு””!! முடிவு செஞ்சு எந்த
வெளிநாட்டுக்கும் போகவேண்டாமனு முடிவு
செஞ்சா நம்ம அரசாங்கத்துக்கு செலவு மிச்சம்.

என்ன ஒரு மூளை!!!

இந்திய விமானச்சேவையை அனுபவிச்சவங்க
பல பேருக்கு அவர்களின் சேவைத்தரம் தெரிஞ்சிருக்கும்.
நாம காசு கொடுத்து டிக்கட் வாங்கி போறோம்.
என்ன நம்ம கூட காசு வாங்காம கரப்பான் பூச்சி,
எலியார் எல்லாம் வருவாங்க. அம்புட்டுதான்.

விமாணப்பணி(கிழவி)பெண்கள் ஆடுற ஆட்டம்.
அப்பப்பா.. தாங்க முடியாது. என்னோட அனுபவம்
இங்க


விமானச் சேவையின் தரத்தை கூட்டினா ஏன்
தனியார் விமானத்தை தேடி போகப்போறாங்க???

அத்த விட்டுப்புட்டு இந்திய விமானச்சேவையைத்தான்
உபயோகிக்கணும்... எலிகளோடத்தான் பயணிக்கணும்னு
சொல்றதெல்லாம் ... சுத்த

சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..........

Thursday, November 27, 2008

வடா பாவ்


மும்பையில் நான் மிகவும் விரும்பும் உணவு
இது. 2 ரூபாய்க்கு வடாபாவ், 3 ரூபாய்க்கு லஸ்ஸி
(நான் சொல்வது 15 வருடங்களுக்கு முன்பு)
வசாய் போகும் ட்ரெயி்னில் ஏறும் முன் இதை
சாப்பிட்டால் வீடு போகும் வரை தாங்கும். :)))

பிரட்டி்ன் நடுவில் உருளைக்கிழங்கை வைத்து செய்யப்பட்ட
போண்டாவை வைத்து சாப்பிடும் ஒரு உணவு இது.




வடா பாவ் விற்கும் பிசினஸ் அங்கே படு பிரபலம்.
கிட்டத்தட்ட 2000 கோடி பணம் புரளும் பிசினஸாம்.
ஒரு நாளில் 1 லட்சம் வடா பாவ்கள் மும்பை நகரில்
மட்டும் விற்கப்படுகிறதாம்!!!!

ஜம்போ கிங் ரெஸ்டாரண்ட் 10,000 வடா பாவ்களை
விற்கிறார்களாம்!!

1966 ல் தாதர் ரயில்வே ஷ்டேஷனில் ஒருவர்
விற்க ஆரம்பித்ததாம் இந்த வடாபாவ்.





நவம்பர் 24-08லிருந்து இந்த வடாபாவிற்கு சப்போர்டு
கொடுத்திருக்கிறது சிவ சேனா அமைப்பு.

மஹாரஷ்டியர்களின் ப்ரத்யேக உணவாகவும், சிவ
சேனாவின் ப்ரண்ட் உணவாகவும் வடாபாவ் ஆகியிருக்கிறது.

பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா காங்கிரஸ்.

வடா பாவில் உருளை, கடலை மாவு உடலுக்கு கேடு

என்று சொல்லி “கந்தா போஹா” வெங்காய அவல் உப்புமாவை
தனது கட்சி ப்ராண்ட் உணவாக அறிவிக்க இருக்கிறதாம்.

இதில் இன்னும் ஜோக் என்னெ வென்றால்,
“வடாபாவில் இருக்கும் உருளை, கடலை மாவு
ஆகியவை வட இந்தியாவில் இருந்து வருகிறது.
அதை தயாரிப்பவர்களும் வட இந்தியர்களே என்று
கூறியிருக்கிறார் காங்கிரஸைச் சேர்ந்த சமீர் தேசாய்.

சாப்பாட்டிலுமா அரசியல்?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

After Sena's 'Vada pav', Cong to promote 'kanda poha'

Tuesday, November 25, 2008

ஒரு நிமிசம் கருத்து சொல்லிட்டு போங்களேன்!

மாண்டிசோரி பதிவுகளுக்கு அமோகமான வரவேற்பு
இருந்தது.


அன்றாட வாழ்விற்கு தேவையான பயிற்சியை
கொடுப்பது மாண்டிசோரி முறைக் கல்வியின்
தனிச்சிறப்பு.

(சந்தனமுல்லை கூட பப்புடைம்ஸில் இதைப் பத்தி
நிறைய சொல்லியிருக்காங்க.)


மாண்டிசோரி முறைக் கல்வி எல்லா ஊரிலும்,
இடத்திலும் இல்லாதது பெருங்குறையே!!

இதனால் பிள்ளைகள் நஷ்டம் அடையக் கூடாது.
அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உதவியாய்
இருக்க அத்தகைய பயிற்சிகள் பற்றிய தொடர் பதிவு
அதிவிரைவில் துவங்க இருக்கிறேன்.

சரி இதுல நாங்க என்ன கருத்து சொல்லன்னு
கோவப்படாதீங்க.
நண்பர்கள் கிட்டத்தானே கேக்க முடியும்!!!

இப்ப நீங்க சொல்லவேண்டியது இன்னான்னா?

அந்தத் தொடர் பதிவு வரவேண்டியது
பேரண்ட்ஸ் கிளப் வலைப்பூவிலா? அல்லது
என்னுடைய சொந்த வீடான இந்த வலைப்பூவிலா?

கருத்தை சொல்லிட்டு போங்க நண்பர்களே/ தோழிகளே!!

Monday, November 17, 2008

அதிர்ச்சி தராத டய்ட்.

உங்கவீட்டு பசங்க, இல்ல தெரிஞ்சவங்க
பசங்க யாராவது நான் டய்டுல இருக்கேன்னு
சொல்லி சாப்பிடாம இருந்தா நல்லா நாலு்
சாத்து சாத்துங்க.

டயட்னா என்னங்க? சரிவிகித உணவு.
இதை சரியா எடுத்துக்கிட்டாலே போதும்.
டயட் பத்திய விக்கிப்பீடியா தகவலுக்கு
இங்கே கிளிக்குங்க.

இப்பத்த பிள்ளைங்க ஒல்லிப்பிச்சான்களா
இருப்பதுதான் அழகுன்னு நினைச்சு வயத்த
காயப்போடறாங்க. அதனால அனிமிக்,
அல்சர்னு பெரிய லிஸ்ட் வியாதிகளோட
இருக்காங்க.

இப்பத்தான் புக்ல படிச்சேன். அதென்னவோ
”அரெக்சினாவாம்” சாப்டா குண்டாகிடுவோம்னு
சாப்பிடாம இருக்கறது, சாப்பிட்ட பின்னாடி
வாந்தி வரவெச்சுக்கறதுன்னு இருப்பாங்களாம்.

“ஜீரோ ஃபிகர்” தெரியுமா? நடிகைகள்
கரி்னா கபூர், சில்பா ஷெட்டி இவங்கலாம்
இப்ப ஜீரோ ஃபிகராம். அது என்னன்னா?
8 வயசு குழந்தையின் சைஸ், 22 வயசு
குமரியின் உருவத்தில் வரவைக்கிறதாம்.
இதுனால அவங்க உயிருக்கே ஆபத்து
வரலாமாம். என்ன கொடுமையோ?!!

அதெல்லாம் விடுங்க. நாம நல்லா
அதே சமயம் ஆரோக்கிய்மா சாப்பிடலாம்
வாங்க.

டயட் சார்ட் கொடுக்கறதுக்கு முன்னாடி
சொல்ல வேண்டிய முக்கியமான விசயம்
உணவில் சோற்றின் அளவைக் குறைச்சு்க்கோங்க.

கிராமத்து ஆளுங்க நிறைய சோறு சாப்பிடுவாங்க.
ஆனா அதுக்கு தகுந்த உடல் உழைப்பு இருக்கும்.
நாம அம்புட்டு உடல் உழைப்பு செய்யாத போது
சோறு அதிகமா சாப்பிட்டா என்னாகும்?
எரிக்கப்படாத சக்தி கொழுப்பா மாறும்.


சுருக்கமா சொல்லணும்னா சாப்பிடும் தட்டில்
சோறு இருக்கும் இடத்தில்
காய்கறி, கீரை வகைகளும், காய்கறி வைக்கும்
இடத்தில் சோறும் வைத்து சாப்பிடணும்.
(அளவுக்காக ஒரு உதாரணம்)



ஒரு மாடல் டயட் சார்ட் பார்க்கலாம்.

1. எழுந்ததும் பல்துலக்கி 2 கிளாஸ் தண்ணீர்
குடிக்கவும்.

2. 30 நிமிடம் கழித்து காபி/டீ உங்கள்
விருப்பம் போல். 1 ஸ்பூன் சர்க்கரை
சேர்க்கலாம்.

நடைப்பயிற்சி, யோகா 1 மணி நேரம்
கட்டாயம் செய்யணும்.

காலை ஊணவு:
இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டும்.

அ, பாலுடன் கார்ன்ஃபிளேக்ஸ் - 1 கப்
ஆ, 2 இட்லி, 1 கப்சாம்பார், அல்லது வெங்காயச் சட்னி.
இ, 1 கப் உப்புமா
ஈ. அவல் உப்புமா 1 கப்
உ. 1 ப்ரட் டோஸ்ட், 1 அவித்த முட்டை/ அல்லது
ஒரு ப்ரட் ஆம்லெட்.
ஊ. எண்ணெயில்லாத பரத்தா
(முள்ளங்கி, வெந்தயக்கீரை பராத்தா) 1 + 1 கப் தயிர்.

எ. 1 கப் ஓட்ஸ் பாலுடன்.
ஏ. மீடியம் சைஸ் தோசை - 3
ஐ. வெஜிடபிள் சாண்ட்விச் - 1
ஒ. ஊத்தப்பம்- 1/ மசாலா தோசை - 1

அத்துடன் 1 கப் டீ/1 கப் காபி

11 மணியளவில் : மோர் 1 டம்பளர்.ஏதாவது
ஒரு பழவை(வாழைப்பழம், உலர்ந்த திராட்சை,
சப்போட்டா தவரிக்கவும்)


மதிய உணவு:
ஏதாவது ஒன்று மட்டும்.

அ. 1-1/2 ரொட்டி (புல்கா)+ ரசம் (சூப் போல் குடிக்க) +
2 கப் காய்கறிகள் + 1 கப் சாலட்/ரய்தா
+கப் பருப்பு.
ஆ. 1-1/2 கப் பொங்கல்/கிச்சடி+1 கப் கடி +
2 கப் காய்கறிகள்+2 சுட்ட அப்பளம்.
இ. 1 ஸ்டஃப் பராத்தா+ 1 கப் வெஜிடபிள் ரய்தா +1/2 கப் சன்னா

ஈ. 1-1/2 கப் மீன் கறி(தேங்காய் நோ)+ 1 கப் சாதம்,
1 கப் காய்கறி சாலட்/ரய்தா, 1 கப் கீரை.

உ. 1 கப் சிக்கன் கறி + 1 கப் சாதம் + 1-1/2 கப் காய்கறி சாலட்/
ரய்தா+ 1 கீரை வகை.

ஊ. சப்வே கடையில் கிடைக்கும் டயட் சாண்ட்விச் + 1 டயட் கோக்.

எ. 3 கோதுமை பிரட் + 1 பிளேட் பாஜி ( பட்டர் வேண்டாம்)

ஏ. 1 தந்தூரி ரொட்டி + 1 தால்+ 1 சாலட் + 1 கப் எண்ணெயில்லாத
வெஜிடபிள் கிரேவி.

ஐ. கிரில்ட் மீன்/கி்ரில்ட் சிக்கன் + 1 கப் வெந்த காய்கறிகள் & சாலட்.


மாலை உணவு:
(ஏதேனு்ம் ஒன்று)

1 கப் டீ/காபியுடன் 2 டைஜச்டிவ் மாரி அல்லது
மாரி பிஸ்கட்.


இரவு உணவு:
காலை உணவில்அல்லது மதிய உணவில்
ஏதோ ஒன்று.

அல்லது சூப் + சாலட்/ பழவகைகள்.

இப்படி 6 நாள் சாப்பிடலாம். வாரத்துக்கு
ஒருநாள் நல்லா உங்க இஷ்டம் போல
சாப்பிட்டு எஞ்சாய் செய்யலாம்.


கல்யாணம், விருந்து
எதுவும் விடாம சாப்பிடலாம்.



அடுத்த நாள் டயட்டை லைட்டா
எடுத்துக்கோங்க அம்புட்டுதான்.



நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
குறைந்தது 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மிக முக்கியமாக ஒவ்வொரு முறையும்
சாப்பிடுவதற்கு முன் 1 கிளாஸ் தண்ணீர் குடிக்க
வேண்டும்.

உங்களுக்கு உபயோகமா இருந்ததான்னு சொல்லுங்க.

Tuesday, September 09, 2008

கற்க கற்றுக்கொடுக்க ஒரு படிப்பு.


என் பிள்ளை ஸ்கூலுக்கு போறான். ஆனா மார்க் வர மாட்டேங்குது!

ட்யூஷனுக்கு போகணும்னா போதும் வயித்துவலி வந்திடும் உனக்கு!

என்ன இந்த டயலாக் எல்லாம் ரொம்ப கேள்வி பட்டது மாதிரி
இருக்கா?

சொல்லிக்கொடுக்கறதை கத்துக்கவும் ஒரு திறமை
வேணும். சில பிள்ளைகளுக்கு அது ஒரு குறைபாடா
இருக்கலாம்.

அதனால தான் வயித்துவலி, தலைவலி எல்லாம்
அடிக்கடி வரும். இந்தக் குறையை களைய நாம
உதவி செஞ்சா அப்புறம் ஏத்தம் தான் படிப்புல.

அதுக்கு ஒரு கோர்ஸ் இருக்குங்க.

APPLIED SCHOLASTIC - இதில் கற்க இருக்கும்
தடைகளையும், அதை தகர்த்து எறியும் வித்தைகளையும்
சொல்லிக்கொடுக்கறாங்க.

இது சர்வதேச அமைப்பு. அனைத்து நாடுகளிலும்
இருக்கு. (மேலே கொடுத்திருக்கும் லிங்கில்
குளோபல் லொக்கேடரை கிளிக்கினால் எந்தெந்த
நாட்டில் இந்த அமைப்பு இருக்கிறது என்று தெரியும்)



பொதுவா கற்க 3 தடைகள் மிக முக்கியமானதா இருக்கும்.

1 தடை: உருவக படுத்திக்கொள்ள இயலாமை:

ஆப்பிள் என்றால் ஆப்பிளின் படத்தையோ,
அல்லது ஆப்பிளையோ பிள்ளைக்கு உருவகப்
படுத்திக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும்.
அப்பத்தான் ஆப்பிள் என்றதும் அந்தப் பழத்தின்
பிம்பம் ஞாபகத்திற்கு வந்து சொல்ல முடியும்.

இந்தக் குறையை களைவது எப்படின்னு
தெரிஞ்சுகிட்டா படிப்பு சுலபமாயிடும்.

2ஆவது தடை:

ஸ்டெப் பை ஸ்டெப்பா ஒவ்வொரு வழிமுறைப்படி
செய்ய வேண்டிய வேலையில் ஒரு ஸ்டெப்பை
விட்டுவிட்டால் அந்த வேலை பூர்த்தியாகாது.
அந்த ஸ்டெப்பை தவற விடாமல், எந்த ஸ்டெப்பை
விட்டோம் என்று கண்டறிந்து கற்பது இரண்டாம் வகை
தடையை எடுக்கும் வழி.

3.வார்த்தையின் அர்த்தம் புரியாமல் இருப்பது
3ஆவது தடை.

படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் ஒரு வார்த்தை
புரியாவிட்டால் கூட நம்மால் மேற்கொண்டு படிக்க
இயலாது. போரடிக்க ஆரம்பித்துவிடும்.
இந்தத் தடையை களைந்தால் படிப்பது மிக
மிக சுலபமாகிவிடும்.

சின்னப் பிள்ளைகளுக்காக என் வடிவமைக்கப்பட்டிருந்தாலும்
பெரியவங்களும் இந்த கோர்ஸை படிக்கலாம்.
ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களூக்கும் இந்த படிப்பு
உபயோகமா இருக்கும்.

இதை நாம கற்பதனால் நம்ம பிள்ளைகளுக்கு இதை
சொல்லிக்கொடுக்க முடியும்.
(ஒருவாரத்தில் ஒரு கோர்ஸ் முடிக்கலாம்)


இங்கே கிளிக்கினால் சர்டிபிகேட் கோர்ஸில் என்னென்ன
கற்கலாம் என்று தெரியும்.


இந்தப் புத்தக பதிப்பாளர் முகவரி:

PILGRIMS BOOK HOUSE
B27/98 A-8, NAWABGANJ ROAD,
DURGA KUND, VARANASI- 221010

LEARNING HOW TO LEARN இது தான் அந்த புத்தகத்தின் பெயர்.

Thursday, August 21, 2008

எலிவலை தனிவலை- ஆனந்தம் தரும் வலை.

தனக்குன்னு தலை சாய்க்க ஒரு இடம் வேண்டும்
என்று எத்தனை பேரின் கனவு.அதனாலதானே
கஷ்டப்பட்டு வீடு கட்டுகிறோம். அப்படி கஷ்டப்பட்டு
கட்டிய வீடே காலகாலத்திற்கும் சோறுபோடுமாம்.

ஆமாம் வீடு ஒரு மூலதனம், இதில் நமக்கு
பயன் இருக்கு எங்களுக்குத் தெரியாதான்னு
சண்டைக்கு வராதீங்க. :) நான் படித்த
தகவலை தங்களுடன் பகிர்ந்துக்கொள்ள போகிறேன்.


எத்தனையோ திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையே
பிள்ளைகளைப் படிக்க வைத்து, ஆளாக்கி,
அதற்கிடையில் 700 சதுரடியாவது
வீடு வாங்கிவைத்திருப்பார்கள் பெற்றோர்.
ரிடையர் ஆனதும் பணம், வீடு எல்லாம்
பிள்ளைகளிடம் இழந்துவிட்டு கடைசியில்
முதியோர் இல்லத்தில் அந்திம காலத்தைக்
கழிக்கின்றனர் பெற்றோர்.

சில வங்கிகளில் (ஏன் தற்போது அரசாங்க
வேலையிலும் கூட) ஓய்வுகாலத்திற்கு
பின் ஓய்வூதியம் கிடையாது. வேலை
பார்த்தகாலத்தில் வாங்கிய சம்பளம்
கைக்கும், வாயக்கும் சரியாக இருந்திருக்கும்.
வீட்டைத் தவிர எந்த சேமிப்பும் செய்ய
இயலாது போயிருக்கும். பீ.எப், கிராஜுவிட்டி
எல்லாம் மகள் திருமணத்திற்கோ, மகன்
படிப்பிற்கோ செலவு செய்துவிட்டு
கடைசிகாலத்தில் என்ன செய்ய?
என்று கையை பிசைந்து கொண்டிருக்கும்
அபலைகளுக்கு ஒரு வரப்பிராசதமாக
யூனியன் பாங்க் ஆப்ஃ இந்தியாவில்
ஒரு திட்டம் இருக்கிறதாம்.

இந்தத் திட்டத்திற்கு “ரிவர்ஸ் மார்ட்கேஸ்”
என்று பெயர். 60 வயதுக்கு மேற்பட்ட
சீனியர் சிட்டிசன்கள் யார் கையையும்
எதிர் பார்க்காமல் தன் சொந்த வீட்டில்
இருந்துகொண்டு ஆனந்தமாக வாழலாம்.

வீட்டுப்பத்திரத்தை வங்கி வாங்கிக்கொண்டு,
மொத்தமாக ஒரு தொகையை கடனாகத்
தருவார்கள். குறிப்பிட்ட கடன் காலம்
முடிந்த பின்பும் தம்பதியினர் தங்களின்
கடைசிக் காலம் வரை அந்த வீட்டிலேயே
தங்கலாம். அவர்களில் ஒருவர் இறந்து-
விட்டாலும், மற்றவர் தன் ஆயுள் வரைக்கும்
அந்த வீட்டில் இருக்கலாம்.

இருவரின் மறைவுக்குப் பிறகு, வீட்டை
கடன் வழங்கிய நிறுவன எடுத்துக்கொள்ளும்.
கடன் மற்றும் அதற்கான வட்டி போக
மீதித் தொகை இருந்தால் சட்டப்படியான
வாரிசுகளுக்கு தொகையை கொடுத்துவிடுவார்கள்.

வாரிசு விரும்பினால் கடன் மற்றும்,
வட்டியைக் கட்டி வீட்டையே மீட்டுக்கொள்ளலாம்.

ஓய்வூதியம் இல்லாமல் அவதியுறும்
பெரியவர்களுக்கு இது தேனான செய்தி.

(தகவல் உதவி ஆனந்த விகடன் 20.8.08)

Tuesday, August 19, 2008

சபாஷ் சண்டிகர்


பொதுவாக பாடநூல்களில் எழுத்துக்கள் சிறியதாகவே இருக்கும்.
பார்வை குறைபாடுள்ள பிள்ளைகள் மிகவும் கஷ்டபட்டே
படிப்பார்கள். சிறிய எழுத்துக்களை படிக்க சிரமப்படுவதனால்
அவர்கள் படிப்பிலிருந்து விலகிப்போகும் அபாயம் உண்டு.

தலைவலி, கண்ணில் நீர் வடிதல் போன்றவை
சிறிய எழுத்துக்களால் வரும் மேலதிகத் தொல்லைகள்.

சண்டிகரின் கல்வித்துறை இதற்கு ஒரு தீர்வு கண்டிருக்கிறார்கள்.
NATIONAL COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING கமிட்டியிடம்
கலந்து பேசி சிலபஸ்களை பெற்றுக்கொண்டு சண்டிகர்
கல்வித்துறையினரே பெரிய எழுத்துக்களில் பாடநூலை
பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக தயாரிக்கப்
போகிறார்கள். இதனால் கல்வித்துறைக்கு அதிக
செலவு ஏற்பட்டாலும் சர்வ சிக்ஷ அப்யான் திட்டத்தில்
பெரிய எழுத்துக்கள் கொண்ட பாடநூலை
தயாரிக்கப் போகிறார்கள்.

பொதுவாக 12/14 சைஸில் தான் எழுத்துக்கள் இருக்கும்.
48 சைஸில் புத்தகம் வெளியிடப் போகிறார்கள்.
இதனால் ஒரு பக்கத்திர்க்கு 15 ரூபாய் செலவாகும்.

இவர்கள் NCERT யிடம் பார்வை குறைபாடுள்ள
பிள்ளைகளுக்காக தனியே இத்தகைய புத்தகங்களை
வெளியிட கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

பிற மாநிலங்களும் இதை பின்பற்றலாமே!
3000த்திற்கும் மேற்பட்ட
பிள்ளைகள் பார்வை குறைபாடுகள்
உடையவர்களாக இருக்கிறார்கள்,
அல்லது மிகக் குறைந்த பார்வையுடன்
இருக்கிறார்கள் என்று ஒரு சர்வேயில்
கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Monday, June 23, 2008

கூகுளின் புதிய சேவை.

இந்தியாவிலேயே முதல் நகரம் என்கின்ற பெருமையை ஹைதராபாத்
பெற்றுள்ளது. எதற்கு என்று கேட்கிறீர்களா?

ஹைதராபாத்தில்தான் முதன் முதலாக கூகுள் தொலைபேசியில்
தகவல் பெறும் சேவையை துவக்கியுள்ளது.

யெல்லோ பேஜஸ் போல் இப்போது தொலைபேசி அல்லது
செல்லிடைபேசியிலிருந்து அழைத்து நமக்குத் தேவையான
தகவலை பெற்றுக்கொள்ளலாம்.

அருகில் இருக்கும் சிறந்த உணவகத்தின் நம்பர்,
பிளம்பர், எலக்டிரீஷியன் ஆகியோர்களின் நம்பர்
எல்லாம் என நமக்குத் தேவையான விவரங்களைச்
சொன்னால் நமது மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் ஆகவோ
அல்லது போனில் தகவலோ சொல்கிறார்கள்.

நாம் விரும்பினால் நமக்கு வேண்டிய எண்ணிற்கு
அவர்களே தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

அதாவது, பெல்சன் & தாஜ் ஹோட்டலின் நம்பர்
தேவையெனச் சொன்னால் அந்த நம்பரை நமக்குத்
தந்து விட்டு நாம் விரும்பினால் நாம் செய்திருக்கும்
அழைப்பையே அந்த ஹோட்டலுக்கு தொடர்பு செய்து
தருகிறார்கள். இப்படி தரும் சேவைக்கு கூகுளிற்கு
பணம் கிடைக்கிறது. ஆனால் நமக்கு இது
இலவச சேவை.

டோல் ஃப்ரீ நம்பர்:1800 41 999 999 டயல் செய்தால்
போதும், ஹைதராபாத்தில் தேவையான
விவரங்களை பெறலாம்.

இந்தியாவிலேயே முதன் நகரமாக ஹைதராபாத்தை
தேர்ந்தெடுத்து இந்தச் சேவையை துவங்கக் காரணம்
கூகுளிற்கு இங்கே ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி
வர்த்தக மையம் இருபதுதான் காரணம்.

ஜஸ்ட் டயல் என்றொரு சேவை நிறுவனமும்
இத்தகைய சேவையை செய்து வருகிறது.
அதன் எண்: 040-24444444.