Showing posts with label ஹைதை ஆவக்காய பிரியாணி -13. Show all posts
Showing posts with label ஹைதை ஆவக்காய பிரியாணி -13. Show all posts

Thursday, November 20, 2014

ஹைதை ஆவக்காய பிரியாணி - 20.11.14

ஆஸ்ரமம்னாலே பிரச்சனைகள் தான்ன்னு மக்கள் முடிவு கட்டிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை. சண்டிகரில் நடந்த கலவரங்கள் இன்னொரு வாட்டி அதை ஸ்ட்ராங்க சொல்லுது.ஆஸ்ரமத்துல வெப்பன்ஸ் எதுக்குப்பா. அதுல ஒரு கைக்குழ்ந்தையும் இறந்திருக்குதுன்னு படிக்கும்போது கோவம் தான் வருது.
ஆண்டவனை நாமளே நமக்குள்ளேயும் பிறர்லயும் பார்க்கலாமே. இடைத்தரகர்கள் இன்னாத்துக்கு.

இருக்கும் இடத்தை விட்டு பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது. :(
******************************************************************************
தெலங்கானா புலம்பல்னே வாராவரம் ஒரு தனிப்பதிவு போடலாம் போல இருக்கு. மார்ச் மாதம் ஸ்டேட் போர்ட் பரிட்சை வர இருக்கு. இதுல இப்ப இங்கே இருப்பது ஒரே போர்ட் தான்.  தனி மாநிலமானதுக்கு பின்னாடி இருக்கற பல பிரச்சனைகளைதான் பாத்துக்கிட்டு இருக்காங்களே தப்ப, மாணவர்கள் பரிட்சை பத்தி இப்பதான் யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

இப்ப உடனடியா சிலபஸ் மாத்தி பரிட்சை வைப்பது கஷ்டம். அதனால இருக்கும் போர்டே இரண்டு மாநிலத்துக்கும் தனித்தனியா பரிட்சைகளை நடத்துவதா தீர்மானிச்சிருக்காங்க.  இதுக்கப்புறம் மாநில நுழைவுத்தேர்வான எம்ஸட் பிரச்சனை வரும். ஏற்கனவே பிட்சாட் செண்டர் பிரச்சனைன்னு
பசங்க பரிட்சை ஸ்ட்ரெஸ்ஸோட இதையும் சேத்து கஷ்டப்படறாங்க.
**********************************************************************************
தெலங்கானா தனிமாநிலமாகி கொஞ்ச மாசத்துல ஒஸ்மானியாவுல திரும்ப ஸ்ட்ரைக். இதுவரைக்கும் தெலங்கானா வேணும்னு போராடின பசங்களே தெலங்கானா வந்ததுக்கப்புறமும் வேலை வாய்ப்பு ஏதும் சரியா அமைக்கப்படலைன்னு  யுனிவர்சிட்டி ஏரியாவை அதகளம் செஞ்சுகிட்டு இருக்காங்க.
மொத்தத்துல அழகான பல்கலைக்கழம், இப்போ அமைதி இழந்து ஆக்டிவிட்டிகள் நடக்கும் இடமா மாறிப்போச்சு. :(
****************************************************************************
முகநூலில் இதைப் படிச்சேன்.
 அப்பாவுக்கு மகள் மீது இருக்கும் பாசத்தை இது சொல்லுது சரிதான். ஆனா இதைப்படிக்கும்போது என் மனசுல ஒரு கேள்வி. மகனோட மனைவி வந்து மகனுக்கும் தந்தைக்குமான உறவை இல்லாம செய்வது  பல இடத்துல நடக்குதுன்னாலும் கூட, அந்த மாதிரி தன் மகள் செய்யாம இருக்க கத்துக்கொடுக்க வேண்டியது அப்பாவோட கடமையில்ல!!!!! ( அம்மா சொல்லிக்கொடுக்க வேண்டியது தானேன்னு கேக்க கூடாது ஆமா சொல்லிட்டேன். மகள்களை  செல்லம் கொடுத்து கெடுப்பது அப்பாக்களே)
யாராவது ஒரு அப்பா நல்லதை ஆரம்பிச்சு வெய்ங்களேன்!!!
********************************************************************************

இந்த சாக்லெட் பேபி போட்டோவும் நெட்டுல சுட்டதுதான். அது அழகா!! அதோட தொப்பை அழகா! இந்த குட்டி பாப்பா மேல பூசியிருக்கறதால சாக்லெட் அழகா!!! தலையில் இருக்கும் கிரீடம் அழகா. போங்கப்பா... மொத்தத்துல இந்த செல்லக்குட்டி அழகோ அழகு







Thursday, September 12, 2013

ஹைதை ஆவக்காய பிரியாணி 12/9/13

பிள்ளையார் பிடிக்க போய் குரங்கானகதைன்னு ஊர் பக்கம் சொலவடை இருக்கு. இப்ப இங்கத்த நிலமையும் அதேதான். தனித்தெலங்கானான்னு அறிவிப்பு வந்ததற்கப்புறம் ஆந்திராவில் பரபரப்பா போராட்டம் நடக்குது.
இன்னமும் நடந்துகிட்டே இருக்கு.  என்னன்னவோ கலாட்டக்கள் நடக்குது. யாருக்கும் என்ன நடக்குதுன்னோ, நடக்கப்போகுதுன்னோ புரியலை.

இப்ப ஆந்திரா பகுதியில் இருக்கும் மின் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்ட்ரைக் அறிவிச்சிருக்காங்க. அது மட்டும் நடந்தா இன்னும் ரெண்டு நாளில் தெலங்கானா பகுதி இருட்டுல தான். தெலங்கானா அண்ணனுங்களுக்கு இப்ப தான் மண்டையிடி ஆரம்பம்.
*********************************************************************************

தாய்லாந்து டூர் போயிருந்தப்ப காய்கறி பேக் ஓண்ணு வாங்கினேன்னு சொன்னேன்ல. அந்த மாதிரி நம்ம நாட்டுலயும் வந்தா நல்லா இருக்குமேன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். இப்ப் வந்திருச்சாம்ல. ஹோம் செண்டர், ஹோம்டவுன் கடைகளில் கிடைக்குதாம்ப்பா. வாங்கி வெச்சுக்கோங்க. பாரம் சுமக்காம இழுத்துகிட்டு ஜாலியா ஷாப்பிங், காய்கறின்னு இருக்கலாம்.
**************************************************************************

வெளிநாட்டுல இருக்கறவங்க இந்தியா வந்தாலோ, அல்லது அங்க போயிட்டு வந்த பழக்க தோஷத்தாலயோ தெரியலை பலரும் குழந்தைகளை ப்ராமில் போட்டு தள்ளிக்கிட்டு வருவதை பார்க்கும் போது கோவமா வருது. அந்த ஊர்கள்ல ரோடு எப்படி இருக்கும்? இங்க குண்டு குழியுமாத்தான் ரோடே இருக்கு. இதுல அந்த பிள்ளைகளை ஏத்தி இறக்கி என்ன கொடுமை சரவணன் இது?!!! நமக்கு தூக்கினா கைவலிக்கும் சரி. ஆனா அந்த புள்ளைங்களுக்கு இப்பவே இடுப்பு வலி வர்றது சர்வ நிச்சயம்,
***********************************************************************************

தெலங்கானா பிரச்சனை ரொம்ப சூடா ஆரம்பிச்சதுலேர்ந்து ஹைதை படுகேவலமா போயிடிச்சு.அரசாட்சின்னு ஒண்ணு நடக்குதான்னே சந்தேகமா இருக்கு. அமைச்சர்கள் ரெண்டு கூட்டணியா பிரிஞ்சிருக்காங்க. :(
 ஒரு ரோடு கூட நல்லாயில்ல. குண்டு குழி. ஆஷிஷ் காலேஜ்ல படிச்ச பொண்ணு ஒண்ணு இஞ்சனியரிங் கவுன்சிலிங்கிற்காக காத்திருந்த பொண்ணு அது. நண்பனோட பைக்ல உக்காந்து போய்கிட்டு இருந்தப்போ குழியில தடுமாறி பேலன்ஸ் செய்ய முடியாம கீழே விழுந்து, அந்த பொண்ணு மேல பஸ் ஏறி அநியாயமா போய் சேர்ந்திட்டா. :(((
************************************************************************************
வெங்காயம் உரிச்சா கண்ணுல தண்ணியில்ல. வெங்காயம்னு நினைச்சாலே தண்ணி வரும்போல. விலை மறுபடியும் ஏறுமுகமா இருக்கு,. நாங்க ஒரு டாலர் கொடுத்து வெங்காயம் வாங்கறோம்னு சொல்ற நிலமை. அவ்வ்வ்வ்வ்
************************************************************************************

மெட்ராஸ்ல ஆட்டோவுல மாற்றங்கள் செஞ்சிருக்காங்காம்ல. மீட்டர் போட்டு ஓட்டணுமாம். ஜீபீஆர் எஸ் இருக்காம். பில்லிங்காம். என்னென்னவோ சொல்றாங்க. யாராவது நேரடி ரிப்போர்ட் போட்டு பதிவு எழுதுங்கப்பா. (பதிவுக்குஒரு மேட்டர் தேருதுல்ல)

எங்க ஊர் ஆட்டோக்காரங்க மகா மகா மோசம். அடாவடியா மீட்டருக்கு மேல
20ரூவா கேக்கறாங்க. போன வாரம் சிக்னல் ஜம்பிங்கிற்கு ஃபைன் 1000 ஆக்கிட்டாங்கன்னு பந்த் நடத்தினாங்க. நான் ஒரு அண்ணாத்தே கிட்ட கேட்டேன்,” இதுக்கெல்லாம் பந்த் செய்யறதை விட்டுட்டு, சென்னை, பெங்களூர் மாதிரி மினிமம் மீட்டர் 25ன்னு ஏத்துங்கன்னு ஏன்யா ஸ்ட்ரைக் செய்யக்கூடாதுன்னு”. அட ஆமாம்லன்னாப்ல.!!!!!
*********************************************************************************

ரொம்ப நாளைக்கப்புறம் பிரியாணி வந்திருக்கு. இனியும் தொடரும்னு சொல்லிக்கறேன்.

Tuesday, March 12, 2013

ஹைதை ஆவக்காய பிரியாணி 12/3/13

சென்றவாரம் ஹைதையில் பெரிய பீதியை கிளப்பி விட்டுவிட்டார்கள். சுல்தான்பஜார், கோட்டி, அபிட்ஸ் ஏரியாக்களில் குண்டு வெடிக்கும் என செய்தி வந்திருப்பதாக சொல்லி செக்கிங், மாலை 4 மணியோட கடைகளை அடைக்கச்சொல்லி போலீசார் உத்திரவு.... என ஒரு வழியாக இருந்தது.

கம்ப்யூட்டர் இஞ்சினியர் ஒருவர் தான் ஒரு மெயிலை ஹேக் செய்ததாகவும் அதில் குண்டு வெடிப்பு பற்றி தகவல் இருந்ததாகவும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். ஊரெல்லாம் இப்போது மைக் கட்டி அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். ஜாக்கிரதையாக இருக்கும் படி. போலிசார் எவ்வளவு பிசியான ரோடாக இருந்தாலும் அதற்கு பேரலலாக இருக்கும் சின்ன தெருக்களிலாகட்டும் செக்கிங் பலமாக இருக்கிறது.

********************************************************************************
இதுவும் குண்டு வெடிப்பு சம்பந்தமாகத்தான்:

மும்பையிலிருந்து வந்த செய்தி. ஹைதையில் குண்டு வெடிப்பு என்றதும் மாமாவின் எதிர் வீட்டு சின்னப்பையன்  உடனடியாக ஓடிவந்து மாமாவிடம் கேட்டது இதுதான்,” ஹைதராபாத்தில் குண்டு வெடிச்சது, அதுவும் ஏதோ ஹோட்டலில்னு சொல்றாங்களே..... ஹைதராபாத் தீதியைக்கேட்டு அந்த பிரியாணி கடையில் ஏதும் குண்டு வெடிக்கலையேன்னு கேட்டு சொல்லுங்க!!!!!!!!!

:)))
************************************************************************************

 அம்ருதம்மாவுக்கு பரிட்சை நேற்றோடு முடிந்தது. ஆஷிஷ் அண்ணாவிற்கு இன்னும் 4 பரிட்சை பாக்கியிருக்கிறது. இங்கே +1ம் பப்ளிக் பரிட்சை. நான் பிசி பிசியா இருக்கேன்.  நேற்றைய பரிட்சைக்கும் நாளைய பரிட்சைக்கும் இடையே கிடைத்த இந்த லீவில் இந்த பதிவு. வழக்கம்போல மனம் ஜாலியா இருக்கு. அதேதான். பசங்களுக்கு லீவு எனக்கு காலையில் எழுந்து சமைக்கும் வேலை இல்லை எக்ஸ்ட்ரா..... எக்ஸ்ட்ரா...

எத்தனை நாள் காத்திருந்த தருணம் இது.
***************************************************************************************

வேலைக்காரம்மா 5 நாள் லீவு போட்டிருந்தார். 3ஆம் நாள் மாலைக்குள்ளேயே என் கையை அசைக்க முடியாத நிலை. ஊரிலிருந்து அப்பொழுது மாமாமகள் வந்திருந்த நேரம். ப்யூட்டி காண்டஸ்ட் ஜட்ஜா போயிருந்தாக்கூட அங்கே வரும் பெண்களைப்பார்த்து மார்க் போடுவதற்கு பதில் மருந்து எழுத கை ஓடும் சில மருத்துவர்களுக்கு. மாமா மகளும் அதே ரகம் தான். :))

பொறுமையாக பார்த்துக்கொண்டே இருந்தவள் 4ஆம் நாள்  என்னை எந்த வேலையையும் செய்ய விடாமல் தைலம் தேய்க்கிறேன் என ஆரம்பித்தாள்.
மஹாநாராயண் தைலம் &  தன்வந்திரக் குழம்பு வாங்கிவரச்சொன்னள்.

ஆத்தா அது வூட்டுல இருக்கேன்னு சொல்ல முறைத்துக்கொண்டே வாங்கி தேய்க்க ஆரம்பித்தாள்.  ஒரு நாள் விட்டு ஒருநாள் தேய்ப்பதில் கைவலி நல்லா குறைஞ்சிருக்கு, ரொம்ப முக்கியமா நல்லாஆஆஆஆ தூங்குறேன். :)




இனி வெயில் காலம் தான். யாரால் முடியுமோ அவர்கள்  ஒரு நாள் விட்டு ஒருநாளும் மத்தவங்க வாரத்துக்கு ஒரு நாளாவது இந்த மஹாநாராயண் தைலமும், தன்வந்த்ர குழம்பும் கலக்கி லேசா சூடாக்கி தேய்ச்சு குளிங்க.
இதைத்தான் ஆயுர்வேத ஸ்பா குளியலாம். ஸ்டீமர் இருந்தால் எண்ணெய் தடவி அதன் மேலே ஆவி பிடிங்க. ஸ்டீம் பாத்தும் ஆகும்.

உடம்பும் மனசும் லேசாகி நல்லா தூங்கலாம்.
********************************************************************************

உடல் பருமன் குறைய முக்கியமா தொப்பை குறைய எங்க டாக்டர் (அதான் மாமா மகள் ) சொல்ல சொன்னது, ஆயுர்வேத கடையில் த்ரிபலா சூரணம்னு பொடி கிடைக்கும். அதை வாங்கி எங்கங்க பருமன் குறையணும்னு நினைக்கறீங்களோ அங்கே பவுடரை சும்மா தேய்த்து 15 நிமிஷம் கழிச்சு குளிக்கவும். ரிசல்ட் நல்லா தெரியும்.
********************************************************************************

மகளீர் தினத்தன்னைக்கு ஒரு மெயில் பார்த்து சந்தோஷப்பட்டேன். அது மேருகேப்ஸ் கிட்டேயிருந்து வந்திருந்த மெயில். 

மேரு கேப்ஸில் புக் செஞ்சு போகும்போது அந்த வண்டி அங்கே போய்க்கிட்டு இருக்குன்னு இனி ட்ராக் செய்ய முடியுமாம். பெண்களுக்காகன்னே இந்த திட்டத்தை அறிமுகம் செஞ்சிருக்காங்களாம். நல்ல திட்டம். அவசியமான ஒண்ணு. பெண்கள் மட்டுமில்லை, வயசானவங்க, வழி தெரியாதவங்க எல்லோருக்கும் இது உதவியாய் இருக்கும்.




வாழ்த்துக்கள்.


*******************************************************************************

படிச்சு படிச்சு களைச்சுப்போயிருந்தோம். ரிலாக்ஸுக்காக டீவி பக்கம் வந்தோம். இந்தப்படம் ரொம்ப நல்லாயிருந்தது. பறக்கத்தெரியாத ப்ளூ பறக்கத் தெரிந்த ஜ்வல் ரொம்ப அழகு



படத்தை ரொம்ப ரசிச்சோம்.

படம் பேர் சொல்ல மறந்திட்டேனே!!!  RIO
*******************************************************************************

Monday, June 18, 2012

ஹைதை ஆவக்காய பிரியாணி 18/6/12

பத்து நாள் முன்னாடி வரைக்கும் 40...44ன்னு பயமுறுத்திக்கிட்டு இருந்த
சூரியன் இப்ப மேகத்துக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டாரு. படிப்படியா குறைஞ்சு
நேத்து நல்ல மழை. வருணபகவான் இனி தன் ஆட்டத்தை கவனிச்சுக்குவாரு.
இன்னைக்கு ஜஸ்ட் 28 டிகிரிதான். :)) அதான் சுடச்சுட பிரியாணி
போடலாம்னு வந்திட்டேன்.
*******************************************************************
ஒருவழியா ஜகன் அண்ணாவை சீபிஐ விசாரிச்சு கைது செஞ்சாச்சு.
ஆனா அதையே அனுதாப அலையா மாத்தி இடைத்தேர்தல்ல பல
இடங்களில் ஜெயிச்சிருக்காங்க. ம்ம்ம்ம்.
அண்ணன் இப்ப உள்ள இருப்பதாலயும், அவங்க மனைவி பாரதி
பிசினஸ்ல பிசியா இருப்பதாலயும், அம்மா விஜயம்மா கூச்ச
சுபாவமா இருக்கறதாலயும் ஜகன் அண்ணா தங்காச்சி தான்
கட்சியை தலைமை தாங்குவாங்கன்னு சொல்லிக்கறாங்க.

வாம்மா மின்னல்.....
*********************************************************************
இருக்கற குடைச்சல் பத்தாதுன்னு ஜனாதிபதி தேர்தல் வேற இப்ப.

பிராண்ப்தா ஜனாதிபதியா வர்றதுல எனக்கு பெருசா எந்த சந்தோஷமும்
இல்ல. ஆனா இனி அவர் நிதி அமைச்சர் இல்ல அது வரைக்கும்
சந்தோஷம். ஆனா இந்த கார்ட்டூன் பாருங்க, அந்த சீட்டுல
உக்காந்திருந்த வரைக்கும் ஐயாவுக்கு முள்ளு குத்தினிச்சாம்!!!

அப்ப பொது மக்களுக்கு!!!!????!!!! பிராண்ப் தா 24ஆம் தேதி
பதவி விலகறார்னு பேச்சு அடிபட்ட உடனேயே ரிசர்வ் வங்கி
கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க போவுதுன்னு பேசிக்கிறாகளே!!
என்ன மேட்டர் பா??!!!
*******************************************************************

இதுவரைக்கும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள்தான் வேன்
கவிழ்ந்து இறைவனடி சேர்ந்ததா பாத்திருக்கும். ஆனா இப்ப வித்தியாசமா
ஷீரடி போன வோல்வோ பஸ் கவிழ்ந்து நடந்திருக்கும் சோகம் கொடுமை.
புதுசா வேலை கிடைச்சு ட்ரையினிங் முடிச்சு தரிசனத்துக்கு போன
11 பேர், எனக்கும் இஷ்டம் இல்லை, ஆனா உன்னோட இருக்கணும்னு
தன்னுடன் பிறந்த இரட்டை சகோதரியை விட்டு பிரிய மனமில்லாம
அவளுடன் போய் அந்த பஸ்ஸில் இருவரும் உயிரை விட்டதுன்னு
நிறைய்ய..... குடிச்சிட்டு அந்த பஸ் டிரைவர் பஸ் ஓட்டினதுக்கு
தண்டனை பயணிகளுக்கா????
*********************************************************************
ஐஐடி குழப்பம் இன்னும் தீர்ந்த பாடில்லை. இனி ஒரே ஒரு நுழைவுத்
தேர்வுதான்னு கபில் சிபில் சொன்னாரு. ஆனா 7 ஐஐடியில் 5 தான்
ஒத்துக்கிட்டதாகவும், மத்த ரெண்டு பேரும் தாங்களே பரிட்சை
வெச்சுக்கறதாவும் பேச்சு அடிபடுது. என்ன கொடுமை இது?
பேசாம அப்படியே இருந்திட்டா உங்களுக்கு என்ன பிரச்சனை
மிஸ்டர்.கபில் சிபில். இப்ப பாருங்க நீங்க சொல்ற பொதுத் தேர்வுக்கு
தயாராகனுமா? பிட்ஸ் வேணும்னா அதுக்கு தயாராகணும், எதுக்கு
இருக்கட்டும்னு மத்த ரெண்டு ஐஐடி பரிட்சைக்கு தயாராகணும்.
பத்தாதற்கு எஸ்.ஆர்.எம், இங்க லோக்கல் எம்செட்னு பரிட்சை
எழுதி எழுதியே மக்கள்ஸ் நொந்து நூடில்ஸ் ஆகிடுவாங்க.


அப்புறம் வேணாம் மக்கா வேணாம் இந்த இஞ்சினியரிங் படிப்புன்னு
முடிவு செஞ்சிட போறாங்க. நீங்களும் குழம்பி, இருக்கறவங்களையும்
ஏனுங்க சாமி குழப்பறீங்க!!!!!!
*********************************************************************
இந்தப்பாட்டு மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. பாலமுரளியோட குரல்.
அருமையான பாடல்வரிகள்னு... எந்தப்பாட்டு?
மொளனத்தில் விளையாடும் மனசாட்சியே....