Showing posts with label மாண்டிசோரி. Show all posts
Showing posts with label மாண்டிசோரி. Show all posts

Thursday, February 28, 2008

மாண்டிசோரி முறைக் கல்வி - நிறைவு பகுதி

எதார்த்த வாழ்க்கைக்கு தேவையான கல்வியைப்
போதிப்பதும் மாண்டிசோரி முறைக்கல்வியில்
ஒரு அங்கம்.

அன்றாடம் தன் வேலையைக் குழந்தை தானே
செய்துக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது.
தன்னம்பிக்கை நிறைந்த மனிதனாக உருவாக
இது அவசியம்

ஷூ லேஸ் கட்டுதல்


ஷூ பாலிஷ் செய்தல்

சேஃப்டி பின் போடப் பழக்குதல்



ஜிப் போடப் பழக்குதல்



லேஸ் கட்ட பயிற்சி





ஷூ பக்கிள்ஸ் போடப் பயிற்சி



பொள முறை முடிச்சு

பட்டன் போடுதல்






செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல்


தோட்ட வேலை



சுத்தமாக்கும் உபகரணங்களை முறையாக உபயோகிக்க பயிற்சி.



இது தவிர:
1. அழைப்பு மணிக்கு கதவை திறக்க,
2. வரிசையில் நிற்க.
3.கொடுத்து/ வாங்க (உணவு பரிமாறிக்கொள்ளுதல்)
4.தட்டு, வாளி, பேஸின் போன்றவற்றை ஓரி இடத்திலிருந்து
மற்றோர் இடத்துக்கு எடுத்துச்செல்லல்.
5. நாற்காலியை எடுத்துச் செல்லல்
6. டேபிளைத் துடைத்தல்.
7. பாயை மடித்தல்
8. நாப்கின்/ சாக்ஸை மடித்தல்
9. காய்கறிகளின் தோலுரித்து நறுக்க (peeling & cutting)
10.பல் தேய்க்க
11.பூக்களை அடுக்குதல்,
12. நன்றியுறைத்தல்.
13. மாடிப்படி ஏறி/இறங்குதல்.
14. ஜக்கில் நீர் நிறைத்தல்.
15. டம்பளரில் நீர் ஊற்றி, தட்டில் வைத்து எடுத்துச் செல்லுதல்.
16. பாட்டிலின் மூடியை திறந்து மூடுதல்.
இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே செல்லலாம்.
இவை 2 1/2 வயதுக் குழந்தையாக இருக்கும்போதே
பயிற்சி அளிக்கப்படும். 5 வயதில் தன் கையே
தனக்குதவி என குழந்தை எல்லாம் அறிந்து கொள்ளும்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதனாலேயே,
ஒரு குழந்தை தன் வாழ்க்கைக்குத் தேவையான அனனத்தையும்
கற்கும் விதத்தில் இக்கல்வி இருக்கிறது.
வளர்ச்சிக் குறை இருக்கும் குழந்தையும், இந்த உபகரணங்களினால்
சாதாரணமாக கற்க இயலும் என்றால்!
சாதாரணமான பிள்ளைகள் மா மேதைகள் ஆகிவிடுவார்கள்
என்பதில் ஐயமில்லை.

Tuesday, February 26, 2008

மாண்டிசோரி முறைக் கல்வி பாகம்:4

"தாரே ஜமீன் பர்" படம் பார்த்தவர்கள், அந்த சிறுவன்
எழுத இயலாமல் கஷ்டப்படுவதை பார்த்திருப்பீர்கள்.
எழுத்தின் வடிவம் சரியாக மனதில் பதியாததே
இதற்கு காரணம். கீழே கொடுத்திருக்கும் உபகரணங்கள்
அக்குறையில்லாமல் ஆங்கிலம் போதிக்க
உபயோகிக்கப் படுகிறது.


1. METAL INSETS : மெடலில் செய்யப்பட்ட
வடிவங்கள். குமிழ் உருளையைப் பிடித்துப் பழகிய
பின்னால் முதல் முறையாக பிள்ளை பென்சில்
பிடித்து எழுதுவது இந்த உபகரணத்தில் தான்.

ஒவ்வொரு வடிவங்களாக எடுத்து அதை பென்சில்
உதவியால் ட்ரேஸ் செய்யப் பயிற்சி கொடுக்கப்படும்.
வடிவங்களீன் உதவியால் பார்டர் டிசைன் அமைத்தது
அதற்கு வர்ணம் தீட்ட பயிற்சி அளிக்கப்படும்.


2. மண்ணில் எழுத்துக்களை எழுதுவதால் கைகள்
வடிவத்தை சரியாக உணர முடியும். உப்புத்தாள்
கொண்டு செய்யப்பட்ட இந்த எழுத்துக்கள்
sand paper laters என்றழைக்கப்படுகிறது.

எழுதுவது போல் கைவிரலால் ட்ரேஸ் செய்து
உணர்வதே பயிற்சி.

இதில் முதலில் VOWELS அறிமுகப் படுத்தப்படும்.
நீல நிற போர்கள் vowels.

ஒவ்வொரு எழுத்துக்கும் உச்சரிக்கும் முறைக்காக
உதாரணம் கொடுக்கப்படவேண்டும்.

(radiant way of reading book :1 ல் இருக்கும் உதாரணம்.
இதில் முக்கியமானது a for apple என்று சொல்ல
மாட்டோம். a as in apple என்று சொல்வோம்.
இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.)


pink/ red நிற போர்டுகள் consonants.

முதலில் உணர்ந்து எழுத்துக்களை, உச்சரித்து
அந்த அட்டைகளை வைத்து வார்த்தைகள் அமைக்க
பயிற்றுவிக்கப் படும்.

at, up, on, in

cat, bat, cat, mat,

man, can, pan, van.






3.இதுதான் Movabel Alphabet. இதை வைத்தும் வார்த்தைகள் உருவாக்கப்
பழக்கப்படும். sand paperல் எழுத்துக்களை எடுத்துப் பார்க்க முடியாது.
இதில் கையில் எடுத்துப் பார்த்து வார்த்தை அமைக்க வேண்டும்.

இவ்வாறு எழுத்துக்கள் அறிமுகம் ஆன பிறகு குழந்தைக்கு
உயிர், மெய எழுத்துக்களின் வித்தியாசம் தெரியும் .
எழுத பழகாமலே RADIANT WAY OF READING BOOK :1
இருக்கும் வார்த்தைகளையும், வாக்கியங்களையும்
படித்து அறிந்து கொள்ளும்.
பிறகு எழுத்துப் பயிற்சி.இலக்கணத்திற்கு கூட பல உபகரணங்கள் இருக்கிறது.
எல்லாம் சரியாக முறையாக கற்றுக்கொள்ள ஏதுவாய்
மாண்டிசோரி அம்மையார் வடிவமைத்திருக்கிறார்.
எதார்த்த வாழ்விற்கு பிள்ளைகளை தயார் படுத்தும்
உபகரண்ங்களோடு மீண்டும் சந்திக்கிறேன்.

Sunday, February 24, 2008

மாண்டிசோரி முறைக்கல்வி பாகம்:3

இப்போது நாம் பார்க்க போகும் உபகரணங்கள்
கணிதத்தை எளிதாக கற்க ஏதுவாக இருக்கும்.

இதற்கு முன்பு கொடுத்திருந்த சில கணித
உபகரண்ங்களைக் காண இங்கே சொடுக்கவும்.


1. இதுதான் SPINDLE BOX:

பென்சில் போலிருக்கும் குச்சியை, பெட்டியில் எழுதியிருக்கும்,
எண்ணிற்கு சரியான எண்ணிக்கை குச்சியைப் போடப்
பழக்குதல். இதனால் எண்ணும், எண்ணிக்கையும் பயிற்சி
ஆகிறது.




2. இதுதான் TEEN BOARD. அதாவது இரண்டு டிஜிட் எண்கள்,
எண்ணிக்கை இவற்றைக் கற்கவும், அறியவும் இந்த உபகரணம்.

ஒவ்வொரு எண்ணிற்கும் நேராக அந்த எண்ணிக்கை
பாசியைவைத்துப் பழக்குதல்.









3. இது கூட்டல், கழித்தல் வகை கணக்குகளைப் போட
பிள்ளைகள் பயன்படுத்தும் உபகரணம். இதன் பெயர்
BEED FRAME- பாசிகளின் சட்டம்.




4. இந்த பாசிகளையும், கார்டுகளையும் வைத்து
வங்கி விளையாட்டு எண்ணும் முறையில்(வங்கியில்
பணம் செலுத்துதல், எடுத்தல், மீதம் சரி பார்த்தல்)
கணக்கு போடுதல்.




















5. இந்த கார்டுகளின் உதவியால் பிள்ளைகள் 10,000
எண்கள் வரை எண்களை அமைக்க பழக்குவதால்,
பிறகு பிள்ளைகள் எளிதாக எழுத இயலும்.




6. வகுத்தலைச் சரியான முறையில் புரிந்துக்கொள்ள
இந்த வகுத்தல் சட்டம்.




இதுவும் வகுத்தல் போர்டுதான். இதில் பாசியை
வைத்து பழகுதல்.

அடுத்து ஆங்கிலம் போதிக்கும் உபகரணங்களின்
அறிமுகப் பதிவு காணக் காத்திருங்கள்.............
தொடரும்..........



Friday, February 22, 2008

மாண்டிசோரி முறைக் கல்வி- பாகம் 2

இங்கே கொடுக்கப்பட்டுள்ள உபகரணங்கள் அனைத்தும்

உணர்ந்து அறியும் பயிற்ச்சிகுண்டானவை. (SENSORIAL)


1. இதன் பெயர். குமிழுடன் கூடிய உருளைகள்.
(KNOB CYLINDERS)


இந்தப் பயிற்சியினால் குழந்தையின் கண்ணுக்கும்,
கைக்கும் பயிற்சி. இந்த குமிழைப் பிடித்து பழகினால்
தான் பிறகு குழந்தை முறையாக பென்சில் பிடித்து
எழுத இயலும்.







2. ஜியாமென்டிரி வடிவங்களைத் தொட்டு பார்த்து அதற்குண்டான
கார்டுகளில் சரியாகப் பொறுத்தப் பழகுவதனால், ஜியாமென்டிரிக்கு
அறிமுகமும், வடிவங்களின் அமைப்பை உணரவும் வைக்க இது.


3. BARIC TABLETS : எடை பழக.

இந்த கணமான அட்டைகளை தன் இருகைகளில் வைத்து
எது சம்மான கணத்தில் இருக்கிறது என அறிந்துக்கொள்ள.


4. TOUCH TABLETS :



5. THERMIC BOTTLES :

இவைகளில் மிதமான சூடு, குளிர்ந்த நீர், சாதாரண நீர்
ஆகிய்வற்றை நிரப்பி கைகளில் உணரச்செய்ய.


6. TASTING BOTTLES : சுவையுணர்த்தும் பாட்டில்கள்.

பலவகையானச் சுவைகளை இந்தப் பாட்டில்களில்

நிறப்பி, சுவைத்து இணம் காணப் பழக்குதல்

7. SOUND BOX: ஒலிப் பெட்டி.

செவித்திறனை அதிகரிக்க. மெல்லிய ஓசையையும்
துல்லியமாக உணர இந்தப் பயிற்சி.


8. colour spools: நிறச் சட்டங்கள்.
இந்த உபகரணத்தினால் குழந்தைக்கு நிறக்கு குருடு இருந்தால்
அறிய முடியும். ஒரே மாதிரியான இரண்டு நிறங்களை
அடையாளம் காணவே இந்த உபகரணம்.



சாதாரண பள்ளிகளில்(நான் சொல்வது play school களில்)
சில சமையம் என்னச் சொல்லிகொடுக்க?!!
என்று யோசிக்கும் நிலை இருக்கும். மாண்டிச்சோரி முறையில்
அறிமுகப் படுத்த வகைகள் அதிகம்.......................
அந்த அறிமுகங்கள் தொடரும்.......





Tuesday, February 19, 2008

மாண்டிசோரி முறைக் கல்வி.......

She was often heard saying, "I studied my children, and they taught me how to teach them". - மரியா மாண்டிசோரி.



உலகையே பேசவைத்த மாண்டிசோரி முறைக்கல்வியை

கண்டுபிடித்த மரியா மாண்டிசோரி இவர்தான்.





நம்ம பாசமலர் இந்தக் கல்வி முறையைப் பத்தி ஒரு பதிவு

போட்டிருக்காங்க.

மாண்டிசோரி முறைக் கல்வியின் அடிப்படைத் தத்துவம் இது தான்:

1. The teacher must pay attention to the child, rather than the child paying attention to the teacher.

2 - The child proceeds at his own pace in an environment prepared to provide means of learning.
3 - Imaginative teaching materials are the heart of the process.
4 - Each of them is self-correcting, thus enabling the child to proceed at his own pace and see his own mistakes.
If you were to look inside a Montessori classroom, each child would be quietly working at his private encounter with whatever learning task he or she has chosen. (Montessori in Perspective, 1966).


Montessori often reminded teachers in her course, "When you have solved the problem of controlling the attention of the child, you have solved the entire problem of education." (Kramer, 1976, p. 217).


"casa dei Bambini" அதாவது மழலையர் இல்லம். இங்குதான்

5 வயதிற்குட்பட்ட ஏழைக் குழந்தைகள் இருந்தனர்.

இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும்
சூப்பர்வைசராக மாண்டிசோரி வந்தார். இவர்களின்
பொழுதை இனிமையானதாக மாற்ற சில் உபகரண்ங்களைக்
கொண்டுவந்தார்.

குழந்தைகளிடம் மாற்றம் வந்தது. கைகளால் உணர்ந்தும்,
அனுப்வித்து குழந்தைகள் எளிதாக கற்றனர். மற்ற பள்ளிகளில்,
விளம்பிக்கொண்டும், எழுத கஷ்டபட்டுக்கொண்டும் இருந்தனர்.

இந்த மாறுதல்கள் காட்டுதீயாய் உலகெங்கும் பரவியது.
தான் ஒன்றும் அற்புதத்தை நிகழ்த்தி விடவில்லை என்றுதான்
மாண்டிசோரி கூறுவார். "பிள்ளைகளிடம் அபார சக்தி இருக்கிறது.
அதை முறையாக பயன்படுத்த அவர்களுக்கு உதவினேன்,'
என்றுதான் கூறுவார்.


மாண்டிசோரி முறையில் ஐம்புலன்களினாலும் கற்கும்படி
பாடத்திட்டங்கள் இருக்கும்.

(ARISTOTLE- THE GREAT PHILOSPHER SAYS," There is nothing
in the mind fo men, that his senses have not known".)


பார்த்தல், கேட்டல், உணர்தல், சுவைத்தல், முகர்தல் எனும்
முறையில் இருக்கும் பாடத்தை - SENSORIAL என்போம்.

அடுத்து மொழி.

அடுத்து கணிதம்.

அடுத்து ESSENCE OF PRACTICAL LIFE (EPL)
எனப்படும் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்கள்.



கீழே சில மாண்டிசோரி கல்வி முறை உபகரணங்களையும்,
அது எதற்காக உப்யோகிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.


1. NUMBER ROD:




குழந்தையின் கண்களுக்கும், கைகளுக்கும் பயிற்சி. எண்களின்
அறிமுகம் (வாய்மூலம் மட்டுமே).



2. SAND PAPER NUMBERS.(உப்புத்தாளில் எண்கள்)



ஒவ்வொரு கார்டாக எடுத்து அதில் இருக்கும் எண்ணின் மேல்
கைகளை வைத்து உணர வேண்டும். (Tracing over the numbers).
எண்ணின் வடிவத்தை மனதில் பதித்துக்கொள்ள உதவும்.

3. CARDS AND COUNTERS:





(ஒற்றைப்படை, இரட்டைப் படை எண்களின் அறிமுகம்)

This is to teach oddnumbers and even numbers.

4. Geomentrical tray: (Introduction to Geomentry)

தொட்டு வடிவங்களை உணரும் வகையில் இந்த உபகரணம்

5. SOUND BOX:




கேட்கும் திறனன தூண்ட இந்த உபகரணம்.


இந்த அறிமுகம் தொடரும்......


மேலே இருக்கும் ஆங்கிலவாக்கியங்களுக்கு
பாசமலர் மொழிபெயர்த்து
தந்தது. மிக்க நன்றி மலர்.
மரியா மாண்டிசோரி அடிக்கடி இப்படிச் சொல்வாராம்,
" என் மாணவர்களை நான் படித்துப் புரிந்து கொண்டேன்.
எப்படி அவர்களுக்குப் கற்றுத்தரவேண்டுமென்று
அவர்கள்தான் எனக்குக் கற்றுத் தந்தார்கள்.
"1. ஒரு குழந்தை தன் ஆசிரியரிடம் கவனம்
செலுத்துவதைக் காட்டிலும்,ஓர் ஆசிரியர் தன்
குழந்தையிடம் கவனம் செலுத்துவது
முக்கியமானது.
2. படிப்பதற்கான வழிமுறைகள் முறைப்படுத்தப்பட்ட
ஒரு சூழலில் ஒரு குழந்தை தன்னிச்சையாகத்
தன் வழியில் தானே முன்னேறும் சாத்தியக்கூறு
அதிகமாகிறது.
3. கற்பனைத்திறன் சார்ந்த போதிக்கும் கருவிகள்தான்
இம்முறையின் முக்கியமான அம்சமாகும்.
4. ஒவ்வொரு கருவியும் சுய திருத்தம் என்ற
அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
எனவே, ஒரு குழந்தை தனக்கேற்ற வேகத்தில்
படித்துத் தன் தவறுகளைத் தானே சரி செய்ய முடியும்.
ஒரு மாண்டிசோரி வகுப்பறையைப் பார்வையிடும்போது,
தனித்தனியே ஒவ்வொரு குழந்தையும் தானே தேர்ந்தெடுத்த
ஒரு படிக்கும் தளத்தில் அமைதியாக இயங்கிக்
கொண்டிருப்பது புரிய வரும்.
மாண்டிசோரி அம்மையார் இந்தத் துறையில்
பயிற்சி பெறும் ஆசிரியர்க்கு அடிக்கடி நினைவுறுத்துவது:
"ஒரு குழந்தையின்கவனத்தைக் கட்டுப்படுத்தும்
ப்ரச்னையைச் சமாளித்துவிட்டால் போதும்.
முழுக் கல்வி சம்பந்தப்பட்ட ப்ரசனையும்
இதன் மூலம்தீர்ந்து விடும்.
"அரிஸ்ட்டாடில் என்ற தத்துவ ஞானி சொல்வது:
"புலன்களுக்குப் புலப்படாத எந்த ஒன்றும்
மனிதனின் மனதில் இருக்கவே முடியாது.
"sensorial - உணர்ந்து அறிவது
Essence of Practical Life - எதார்த்த வாழ்வின் சாராம்சம்
Number Rod - எண் கருவி
Cards and Counters - அட்டைகளில் எண் அட்டவணைகள்
Geometrical tray - வடிவங்களின் அறிமுகக் கருவிகள்