சமீபத்தில் ஒரு உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். டீ,காபி உபசரிப்புக்கு பின்னர் இரவு சாப்பாட்டுக்கு ரெடி செஞ்சுகிட்டு இருந்தேன். சரி வா நானும் கூட பேசிகிட்டே இருக்கேன்னு கூட வந்து கிச்சன்ல நின்னாங்க. நான் பொதுவா யாரையும் சாப்பிட கூப்பிட்டா அவங்க வருவதற்குள் சமையலை முடிச்சு, கிச்சன்லாம் துடைச்சு நீட்டா வெச்சிட்டு ரெடியாகி இருப்பேன். அன்னைக்கு மத்த ஐட்டங்கள் செஞ்சாச்சு. சூடா அடை போடுவதுதான் வேலை. அதை செஞ்சுகிட்டு இருந்தேன். பக்கத்துல நின்னு பேசிக்கிட்டு இருந்தவங்க.
எங்க உறவுல கல்யாணம் ஆகியிருக்கும் ஒரு இளம் தம்பதிகளைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. இப்ப நம்ம வீட்டுலயே ( வீட்டுப்பேரு) சூப்பர் மருமகள்னா அந்த பொண்ணு தான். அப்படின்னாங்க. அவங்க எப்பவும் இந்த மாதிரி பேசறவங்கனு தெரியும். அதனால ஓ அப்படியான்னுட்டு அடுத்த அடையை போட்டேன். “ ஏன்னு கேட்க மாட்டியான்னு?” என்னிய கேட்க, சொல்லுங்கன்னேன்.
அதாகப்பட்டது அந்த மருமக பொண்ணு கை நிறைய்ய சம்பாதிக்கறா. ஆனா அந்த நினைப்பே இல்லாம வீட்டுல வேலை எல்லாம் செய்யறா!! பூஜை புனஸ்காரம் எதுவும் விட்டுக்கறதில்லை. அதனாலத்தான் சொல்றேன் அவதான் சூப்பர் மருமகள்னு அப்படின்னாங்க. எனக்கு புஸுபுஸுன்னு கோவம் வந்தது. ஆனா எதுவும் பதில் சொல்லிக்கலை. வயசானவங்க. அவங்க கிட்ட போய் என்ன பேசிக்கிட்டு. அதுவும் அவங்க சொல்ற அந்த பொண்ணு நம்மை விட ரொம்ப சின்ன பொண்ணு மட்டுமில்ல அந்த பொண்ணுக்கே இவங்க இப்படில்லாம் பேசறாங்கன்னு தெரியுமான்னும் தெரியாது.
அந்த பொண்ணோட மாமானார் மாமியாரை ஒரு ஃபங்க்ஷனில் பார்த்தப்போ, அவங்க மருமக வேலைக்கு போவதால எங்கயும் போக முடியாம குழந்தையும் பாத்துக்கறதை சொல்லிக்கிட்டு இருந்தாங்க. மருமக வேலைக்கு போறாளேன்னு புரிஞ்சுகிட்டு ஒத்தாசையா இருக்காங்க அவங்க. எனக்கு ஒண்ணே ஒண்ணு புரியலை. அது என்னன்னா??!!!
எந்த பொண்ணும் வேலைக்கு போயிட்டா அவங்க செய்யறதை மட்டும் சாதனையா சொல்றாங்க. வேலைக்கு போகாம வீட்டுல இருக்கறவங்க செய்யறது எதுவும் சாதனைகள் கீழ வர்றதே இல்லை. வேலைக்கும் போகும் அந்த பெண்ணின் குழந்தையை பாத்துக்க மாமனார் மாமியார் இருக்காங்க. ஒரு நேரம் சமையல் அவங்க செய்யறாங்க. இன்னொரு நேரம் மருமக செய்யறாப்ல. மாசத்துல 3 நாள் ரெஸ்ட் கொடுத்து தனியா இருக்காப்ல. நோன்பு, பெரிய நாள்னா கூட மாட செய்ய மாமியார் இருக்காங்க. இவ்வளவு சப்போர்ட் இருந்து இவங்க எல்லாம் செய்வது தான் சாதனை. அவ்வளவு ஏங்க குழந்தையை கை மாத்தி விடவாச்ச்ம் வீட்டுல ஆள் இருக்காங்கள்ல!!!!
பிள்ளைத்தாச்சியா இருந்தப்பலேர்ந்து தனியா தன்னை கவனிச்சுக்கிட்டு, பிள்ளை பிறந்ததும் அதையும் கவனிச்சுக்கிட்டு, பெட்ரிடர்ன் மாமியாரை பாத்துக்கிட்டு, மாசத்துல டூருக்கு போகும் கணவனுக்கு சப்போர்ட்டா வீட்டு நிர்வாகத்தை கவனிச்சு, ரெண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி வேலைகள் செய்யும்போது வரும் ஒவ்வொரு பண்டிகைகள் பெருநாட்களை ஒன் வுமன் ஆர்மியா ஏத்து நடத்தி அந்தந்த நாளுக்கு தேவையான பூஜை பொருட்களையும் வாங்கி கொண்டாந்து வெச்சுகிட்டு விடாம பூஜைகள் செய்யணும்னு எல்லாம் செஞ்சதெல்லாம் இவங்களுக்கு நினைவில் இல்லை. வேலைக்கு போகும் தகுதி இருந்தும் சூழ்நிலை சரியில்லாததால் வேலையை ராஜினாமா செஞ்சிட்டு ஹவுஸ் வைஃப் எனும் அந்த சூழலை ஏத்துக்க ரொம்ப தைரியம் வேணும்.
இவங்கள்லாம் பாராட்டி நமக்கு ஒண்ணும் ஆகப்போறதில்லை. ஆனா 20 வருஷம் நாம மருமகளா, மனைவியா, தாயா செய்யற செய்கைகளை வேலைக்கு போகலை எனும் ஒரே காரணத்துக்காக ஜஸ்ட் லைக் தட் செஞ்சிட்டு இருக்கறதா பேசும்போது ஒரு வருத்தம் வரத்தான் செய்யுது. பூஜைகள் செஞ்சது நம்ம வீடு நல்லா இருக்கணும். வீட்டுல ஒரு பாசிட்டிவ் வைப்ஸ் உண்டாக்கணும்னு நாம செய்யறதுதான். பல பேர் பூஜை செஞ்சாத்தானான்னு செய்யாமயும் இருக்காங்க. அவங்களை பத்தி பேசலை. ஆனா ஒழுங்கா எல்லாம் செஞ்சிகிட்டு இருக்கும்போது என்னமோ அவங்க தான் ஒசத்திங்கற ரேஞ்சுல பேசறது எந்த விஷயத்துல நியாயம்.
அந்த பொண்னை பத்தி பெருமையா பேசுறாப்ல பேசி நம்ம தலைல குட்டுவது என்ன நியாயம். இந்த மாதிரியான ஆளுங்க இருக்காங்க பாருங்க. வேலைக்கு போகாத பொண்ணுங்களும் மனுஷங்க தாங்க. அதுவும் என்னிய போல இருக்கும் ஒன் உமன் ஆர்மிக்காரங்களுக்கு எனதன்பான வாழ்த்துக்கள், மட்டும் பாராட்டுக்கள். உங்களுக்கு இந்த கிரீடத்தை கொடுத்து என் பாராட்டை தெரிவிச்சுக்கறேன்.