Showing posts with label 100dayschallenge. Show all posts
Showing posts with label 100dayschallenge. Show all posts

Saturday, March 18, 2023

100 days of holistic Life with kala - Day 5

வணக்கம் நட்புக்களே!!!

நொடிக்கு நொடி மாறும் மனம் அதை  Kshana chitham Kshana pitham  என்பார்கள்.
அலைபாயும் மனது அதனால் நமக்கு பாதிப்பு அதிகம்.

இப்படி நம்மை உழட்டி அடிக்கும் அந்த மனசு எங்க தான் இருக்கு? 

மனம் என்பது நம் எண்ணங்களின் தொகுப்பு. நமக்கு ஏற்பட்ட அல்லது பிறருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், நுகர்ந்தவை, சிந்தனை இப்படி எல்லாம் சேர்ந்தது.

ஆங்கிலத்தில் மெடாபிசிக்கல் என்பார்கள். கிரேக்க சொல்லான மெட்டாபிசிக்கல் என்றால் “இயற்கையின் விஷயங்களுக்கு அப்பாற்பட்டது, மனோ தத்துவம் சம்பந்தபட்ட ஒரு உணர்வு.

உருவமில்லாதது. அதனால் தொட்டு உணர அதும் நம் உடம்பில் இருக்கும் ஒரு உடல் உறுப்பு என்று சொல்ல முடியாது.

எளிமையாக சொல்ல வேண்டுமானால் கணினிக்கு எனும் ஹார்ட் வேர் இயங்க, ஒரு சாஃப்ட்வேர் தேவையோ, நாம் இயங்க அப்படி மனம் எனும் இந்த சாஃப்ட்வேர் தேவை.

தொடரும்.

அன்பும் நன்றியும்.

100days of Holistic Life with Kala - Day/4

மனம் - ஒரு புரிதல்

மனம் அப்படின்னா என்ன? அது கருப்பா, சிவப்பா, உருவம் இருக்கா இல்லையா?

ஆனா நம்மளை ஆட்டிபடைக்குதே!!! எப்படின்னு கேக்கறீங்களா? 

மனம் போல வாழ்வு,

மனசிருந்தா மாரியாத்தா!! இல்லைன்னா காளியாத்தா

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

மனசுல ஒண்ணு வெச்சுக்கிட்டு வெளியில ஒண்ணு பேசக்கூடாது.

இதெல்லாம் நடைமுறையில் மனம் குறித்த சொல்லாடல்கள். 


மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா????? போகக்கூடாதா??

நொடிக்கு குரங்கு போல தாவி மாறிக்கிட்டு, இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைபாயும் மனசு இதால நாம எத்தனை சங்கடங்களை அனுபவிக்கிறோம்.

இதிலிருந்து நமக்கு தெரிவது என்ன? மனம் இது நம் வாழ்வில் ஒரு அங்கம்.

அந்த ஒரு அங்கத்தை பற்றி நமக்கு என்ன தெரியும்? ஏன் தெரியணும்?
 வரக்கூடிய நாட்களில் மனம் சம்பந்தபட்ட பதிவுகள் வரும்.

இணைந்திருங்கள்.

#கலங்காதிருமனமே!!


Friday, March 17, 2023

100days of Holistic Life with Kala S - Day 3/100

வணக்கம் நட்புக்களே.

இந்த தசைநார்வலி என்பது எப்படி இருக்கும்னு கேட்டா, புதிதாக உடற்பயிற்சி செஞ்சா நமக்கு ஒரு உடல்வலி வரும். அப்புறம் அந்த வலி குறைஞ்சு, உடல் நார்மாலா அந்த பயிற்சியை ஏத்துக்கும். ஆனா இங்கே அந்த வலி குறையவே குறையாது.

என்ன செஞ்சாலும் வலிக்கும். நின்னாவலி உட்கார்ந்தா வலி ஏன் படுத்தாலும் வலி அதனால தான் இரவில் தூக்கம் பாதிக்கப்படும்.




மருத்துவர்கள் இதற்கு முற்றிலும் குணமாக்க மருந்து இல்லைன்னு சொல்றாங்க. வலி ஏற்படும்பொழுது மூளைக்கு செல்லும் மெசெஜ் வேற இதமா இருக்கும். அதனாலதான் இந்த நிலை. என்ன செஞ்சாலும் வலிக்கப்போகுது நான் என்ன செய்யலாம்னு கேட்டப்ப ரொம்ப அலட்டிக்க கூடாது. நீங்க ஏதாவது செஞ்சு வலி அதிகமானா கஷ்டம் அப்படின்னு சொன்னதை அப்படியே நம்பி அதிக வருத்தம் உடம்புக்கு கொடுக்காம இருந்ததன் பலன் உடல் இயக்கம் இல்லாம போயிடுச்சு. காலுக்கு தெம்பில்லை. கையில் கரண்டி பிடிக்க கூட வலுவில்லை. 

என் பதிவுகள் குறைய இதுதான் காரணம். அதிலிருந்து என்னை மீட்டு எடுத்து உடற்பயிற்சி,மனதுக்கு பயிற்சின்னு ஆரம்பிச்சப்ப பலன் நல்லாயிருந்தது. ஓரளவு வலியோடு வாழப்பழகியாச்சு.


 

இந்த தாரக மந்திரம் தான். எப்பவும் உச்சரிச்சுக்கிட்டே இருப்பேன். மெல்ல மெல்ல கீழே விழாமல் நடக்க பழகினேன், அப்புறம் தினமும் நடை, ஓட்டம், சைக்கிளிங், எனக்கு ரொம்ப பிடிச்ச நடனம் கத்துக்க ஆரம்பிச்சேன். இதெல்லாம் செய்யும் போது வலி இல்லாம இல்லை. ஆனா என்ன செஞ்சாலும் வலிக்க போகுது. அதில் இதை செஞ்சா என்னால ஒன்றுமே செய்ய முடியாதுன்னு மனச்சோர்வு ஏற்படலை. தன்னம்பிக்கை பெருகியது.

என் ஹீலிங் பயணம் துவங்கியது. 

உடலால் மனதா?? மனதால் உடலா? இரண்டும் ஒரு நேர்கோட்டில் இருப்பதுதான் சரின்னு புரிஞ்சு 13 வருஷமா தசைநார்வலி என் வாழ்வில் ஒரு அங்கமா இருந்தாலும் நான் யார்னு தெரிஞ்சுக்க, என் சக்தி என்னன்னு புரிஞ்சுக்க உதவியது இந்த தசைநார்வலி.

வாழ்ந்து காட்டலாம்.

அன்பும் நன்றியும்










Thursday, March 16, 2023

Day 1part - 1 & Day to of HolisticlifewithkalaS


மருந்துகளில் பக்கவிளைவால் உடல் இயக்கம் குறைஞ்சதுலேர்ந்து மீட்டு கொண்டுவந்தாலும் Auto immune disease அப்படின்னு  சொல்லப்படுற Fibromyalgia இதுதவிர  Carpel Tunnel Syndrome பாதிப்பு இருக்கு.

ஆனாலும் விடாம சைக்கிளிங், டான்ஸ், யோகான்னு வலியிலிருந்து மனதை திசைதிருப்பும் வேலைகள் நடக்குது. :))


இரண்டாம் நாள் பகிர்ந்தது: 

காலாற மலையேற வைப்பாண்டி!!!!
காற்று அதிகமா இருக்கு ரோப் கார் சர்வீஸ் இல்லை! சரி வின்ச்ல போகலாம்.
வின்ச் ஒரு மணி நேரம் வெயிட்டிங் டைம். சரி வெயிட் பண்ணுவோம். 15 நிமிடம் நிண்ணு வரிசை நகரும் வழியா தெரியலை.
மலை ஏறணுமா??!! முருகா என்னால முடியாதுன்னு உனக்குத் தெரியாதா??? Bronchial infection இரண்டு பேருக்கும் இப்பதான் சரியாச்சு. அதுலயும் ஶ்ரீராமுக்கு இருமல் டிரிக்கர் ஆச்சுன்னா கஷ்டம்.
Fibromyalgia வோட 5 வருஷம் முன்ன ஏறி வலி அனுபவமும் இருக்கு.
வேற வழியே இல்லை. ஏறினா ராஜ அலங்கார தரிசனம், தங்க ரத இழுக்கலாம்.
குழப்பத்தோட லைன்ல வெயிட் பண்ணலாம்னு நின்னுக்கிட்டு இருந்தோம். உருவாரம் விக்கற அம்மா யாருக்கோ சொல்லிக்கிட்டு இருந்தாப்ல. 2 கோச் தான் போகுது நேரமாகும். உக்காந்து உக்காந்து போனாலும் 45 நிமிஷத்துல போயிடலாம். யானைப்பாதையில போ. படியேற வேணாம். ராஜ அலங்காரம் பாக்கலாம் தங்க ரதமும் இழுக்கலாம்.

இங்க நின்னா எதுவும் நடக்காது. இது நமக்கான செய்தின்னு யானைப்பாதையில் ஏற ஆரம்பிச்சாச்சு. ரொம்ப நேரம் நிற்க நேரும்னு எப்பவும் போல வெரிக்கோஸ்வெயின் சாக்ஸ் போட்டிருந்தேன் அதனால கொஞ்சம் வலி பயமில்லை. மூச்சு வாங்குது. மெல்ல மெல்ல இயற்கையை ரசிச்சுகிட்டு
38 நிமிஷத்துல ஏறியாச்சு.
6 மணிக்கு சஷ்டி கவசமும், ஸ்கந்தகுரு கவசமும் ஒலிக்க விடறாங்க. அதை அங்கே உட்கார்ந்து சொல்லும் பொழுது அந்த அனுபவமே வேறு.
தங்கரதம் இழுத்து ராஜ அலங்காரத்தில் அவனை தரிசித்து ரூமுக்கு வந்து சாக்சை கழட்டும்போது வலிதான். ஆனா மனசு நிறைஞ்சு இருந்தது.
ஏறும் சூழலை உருவாக்கி, ஏறவைத்தது எனை நடத்தும் எந்தைக்கு எனக்கு மருந்தாகவும் தெரியாதா!!!
கந்தா என்றால் இங்கு வந்தேனேனென்று சொல்லி
வருவாண்டி தருவாண்டி
மலையாண்டி பழனி மலையாண்டி

பயனக்களைப்பு, அலைச்சல், உடல்வலி இதுலேர்ந்து வெளியே வர நான் யோகா செஞ்சேன்

யோகா அப்படின்னா அது ஒரு உடற்பயிற்சி மட்டும்தான்னு ஒரு தவறான கருத்து இருக்கு. மனதையும் உடலையும் இணைப்பதுதான் யோகா. வரும் நாட்களில் இதைப்பத்தி இன்னும் விவரமா சொல்றேன்.

அன்பும் நன்றியும்



100days of Holistic Life with Kala S- Day 1




எப்படி இருக்கீங்க நட்புக்களே!!! மீண்டும் வலைப்பூக்கு வந்தாச்சு.
இப்போ ஹீலிங்கில் பிசியாகிட்டதால இந்தப்பக்கம் வரமுடியாமலே இருந்தது. 

சக்திதாரா அப்படிங்கற பெயர்ல Holistic Health  குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி சக நட்புக்களுக்கு உதவும் வகையில் சக்திதாரா ஈடுபட்டுகிட்டு இருக்கு.

வரக்கூடிய நாட்களில் இதைப்பத்தி இன்னும் அதிகமான தகவல்கள் தர்றேன்.

100 நாள் சேலஞ்ச் ஒண்ணு எடுத்திருக்கேன். அதில் தினமும் எனது இன்ஸ்டாவில், முகநூலில், யூட்யூப்பில் மற்றும் என் பாட்காஸ்ட்டிலும் பதிவுகள்,பகிர்வுகள் உடல் மற்றும் மனநலம் பற்றியதாக இருக்கும்.


முதல் நாள் நான் பகிர்ந்தது:
நான் யார்? ஏன் இந்த சக்திதாராவை துவங்கினேன்.

புதுகைத்தென்றலா வலையுலக நட்புக்களுக்கு என்னை தெரியும். என் பெயர் கலா ஸ்ரீராம் ( அதான் தெரியும்னு சொல்றீங்களா :)) புதுசா படிக்கறவங்களுக்காக. பரபரப்பா ஒரு நாளைக்கு 4 பதிவுகள் போட்டு கலங்கடிச்சுகிட்டு இருந்த சமயத்துல கூட எனக்குள்ள மன அழுத்தம் இருந்ததையோ அது என்னை மெல்ல மெல்ல அழுத்திக்கிட்டு என் இயல்பை தொலைக்க வெச்சுகிட்டு இருக்குன்னு தெரியாம இருந்தேன்.

மனநல மருத்துவரைப்பார்த்தப்ப மருந்துகள் கொடுத்தாங்க. ஆனா அது 2.5 வருஷம் எடுத்தும் எந்த பலனும் இல்லை. உடல் இயக்கம் முடங்கிடிச்சு. கைவலி அதிகமாச்சு. (கைவலின்னு பதிவுகள் போடாம இருந்தது உங்களுக்குத் தெரியும்). அடுத்த முறையும் மன அழுத்தத்துக்கு ஆளானப்ப இந்த முறை மருந்து இல்லை இதை வேறோடு எடுக்கணும்னு முயற்சி ஆரம்பிச்சதுல நான் கத்துக்கிட்டது நம் மனதை நாமதான் திடமாக்கி, நடந்தவைகளிலிருந்து வெளிவரணும்னு நினைச்சு அதற்கான வேலைகளை செய்தால் மட்டுமே முடியும்னு நான் கடந்து வந்த பாதை தான் ”கொடிஅசைந்ததும்” பதிவுகள்.

மெல்ல மெல்ல வெளிவந்துட்டேன். ஆனா மருந்து எடுத்துக்கொண்டதன்பலன் இன்னும் உடல் முழுமையாக இயக்கத்துக்கு வரலை. 

என்ன நடந்தது? 

......... தொடரும்