Showing posts with label Telugu. Show all posts
Showing posts with label Telugu. Show all posts

Monday, January 16, 2017

SHATHAMANAM BAVATHI

SHATHAMANAM BAVATHI சதமானம் பவதி இது பொங்கலுக்கு ரிலீசாகி இருக்கும் தெலுங்கு படம். ஆத்ரேயபுரம் எனும் கிராமத்தில் பிரகாஷ் ராஜ், ஜெயசுதா வசிக்கிறார்கள். அவர்களுக்கு 3 குழ்ந்தைகள். இரண்டு மகன், ஒரு மகள். அனைவரும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட இவர்கள் இருவரும் கிராமத்தில் தனியாக வசிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு பண்டிகைக்காக பிள்ளைகள் வீட்டிற்கு வருவார்கள் என காத்திருக்கும் பெற்றோர். வேலை பிசி, பிள்ளைகள் படிப்பு என காரணம் கூறிக்கொண்டு எத்தனையோ முறை வரச்சொல்லி கேட்டும் வராத பிள்ளைகள்.

இந்த சங்கராந்திக்கு (பொங்கல்) என் பிள்ளைகள் வீட்டுக்கு வரவேண்டும். இல்லையெனில் நான் அவர்களுடன் போய் தங்கிவிடுவேன் என கோவமாக ஜெயசுதா கூற என்ன சொல்லி தன் பிள்ளைகளை வரவழைக்க எனத்தெரியாமல் யோசித்து தன் பிள்ளைகளுக்கு ஒரு மெயில் அனுப்புகிறார். அதை படித்து பதறி மூவரும் தன் குடும்பத்தினருடன் ஊர் வந்து சேர்கிறார்கள்.

ஊருக்கு வந்த பிள்ளைகள் மெயில் சம்பந்தமாக பேச முயல பிரகாஷ்ராஜ் எல்லாம் பண்டிகை முடிந்ததும் பேசிக்கொள்ளலாம் என சொல்லிவிடுகிறார்கள். பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்காக வகைவகையாக சமைப்பது என்ன, அவர்களுக்கு ஊட்டிவிட்டு மகிழ்வது, என கிராமத்து வாழ்க்கையில் அதுவும் பெரியவர்களுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ்வீட்டிற்கு அருகிலேயே இருக்கும் அவரின் தம்பி மகனின் பையனாக (பேரன்) சர்வானந்த் நடிப்பு அருமை. தன் தாத்தா பாட்டியின் சந்தோஷத்திற்காக மெனக்கெடுவது அருமை.

தாய் வீட்டிற்கு வந்த பின்னும் டீவி,லேப்டாப், போன் என மூழ்கி கிடக்கும் பிள்ளைகளைப் பார்த்து “இவங்க இங்க இருந்தும் இல்லாத மாதிரி தான் இருக்கு.” என்று புலம்புவதைப் பார்த்து  கிராமம் மொத்தத்திற்கும் கேபிள் டீவியை நான்கு நாட்கள் கட் செய்துவிடுகிறார். அனுபமா பரமேஷ்வர்ன் (பிரகாஷ் ராஜின் மகளாக நடிக்கும் இந்த்ரஜாவின் மகளாக அனுபமா) மொபைல் நெட்வொர்க்கை ஜாம் செய்து வைக்க, எல்லோரும் கூடி பேசி மகிழ்கிறார்கள்.

தங்களுக்கு வந்த மெயில் சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் வீட்டில் இல்லை. தம்மை வரவைத்து ஏமாற்றிவிட்டார்கள் என இரண்டாவது மகன் கொதிக்கும் வேளையில் மற்றவர்கள் சமாதனம் செய்கிறார்கள். அதற்குப்பிறகு பிரகாஷ்ராஜ் ஜெயசுதாவிற்கு அனுப்பி வைத்திருக்கும் டைவர்ஸ் நோட்டீஸ் என தெரிகிறது.

படத்தின் ஆரம்பத்தில் பிள்ளைகள் வராவிட்டால் நான் அவர்களுடன் போய்விடுவேன் என ஜெயசுதா சொல்லும்போது என்னை தனியாக விட்டு போய்விடுவாயா என பிரகாஷ் ராஜ் கேட்கிறார். ஆமாம் உங்களுக்காக பெற்றவர்களை விட்டு வரவில்லையா, பிள்ளைகளுக்காக உங்களையும் விட்டு போவேன் எனும் வார்த்தை பிரகாஷ் ராஜின் மனதில் காயத்தை தர “உங்கள் அம்மாவை விவாகரத்து செய்கிறேன். உங்கள் தாயையை யார் அழைத்து போய் வைத்துக்கொள்வது என முடிவு செய்ய நேரில் வரவும் “ என மெயில் அனுப்பி பிள்ளைகளை வரவழைத்தது தெரிய வருகிறது.

பிள்ளைகள் தங்கள் தவறை உணரும் வகையில் எடுத்து பேசி என் மனைவியாக என்னை விட்டு வரமாட்டாள், நான் விவாகரத்து கொடுத்தால் உங்கள் தாயாகாவாவது உங்களுடன் இருந்து சந்தோஷப்படுவாள் என கூறுகிறார். பிள்ளைகள் புரிந்து கொண்டு பெற்றோரை அடிக்கடி வந்து சந்திப்பதாக படம் நிறைவு பெறுகிறது.

படத்தில் டயலாக்குகள் இனிமை. 1991 ஆம் ஆண்டு நாகேஸ்வரராவ் நடித்து வெளிவந்த சீதாராமைய்ய காரி மனவராலு திரைப்படைத்தை நினைவு படுத்தும் சில காட்சிகள் இந்த படத்திலும் இருக்கிறது. நாகேஸ்வரராவ் பேத்தியாக மீனா நடித்திருந்தார். இங்கே பிரகாஷ் ராஜின் பேரனாக சர்வானந்த். கதைக்களம் கொஞ்சம் மாற்றம். சில இடங்களில் ஓவர் ஆக்‌ஷனாக தோன்றினாலும் இந்த தலைமுறையினருக்கு உறவின் அருமையை, வாழ்வின் ஆனந்தங்களை அறிமுகப்படுத்தும் படமாக சதமானம் பவதி இருக்கிறது. சர்வானந்த் அனுபமா பரமேஷ்வரன் இடையே ஆன காதலும் அருமையாக சொல்லப்பட்டிருக்கு

பாடல்கள் காதுக்கு இனிமை. வரிகளும் அருமையாக இருக்கிறது. காட்சிபடுத்தபட்டவிதம், பாத்திரங்களை உணர்ந்து நடிக்கும் தேர்ந்த நடிகர்கள் என ஒரு அருமையான குடும்ப சித்திரம். சதமானம் பவதி என்றால் நூறாண்டுகாலம் வாழ்க.




Friday, October 24, 2014

MANAM

அந்தக்கால சூப்பர் ஹீரோ அக்கினேனி குடும்பத்தினரின் தயாரிப்பு இந்தப்படம். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறையினர் நடிக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இந்த படத்தை பற்றி இருந்தது.  அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்கள் மிக உடல்நிலை சரியில்லாம இருந்த நிலையல் நடித்த படம். ஆம் இது அவரின் கடைசி படம். சரி பார்க்கலாம் என மிக மிக ஆசைப்பட்டு சென்றோம்.  (3 மாசம் முன்பு வெளியான படம் இப்பதான் பதிவெழுத நேரம் கிடைச்சது)

ரொம்ப சூப்பர் டூப்பர் கதை அப்படின்னு சொல்ல முடியாது. ஆனால் ஆபாசம் இல்லாத, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத ஒரு அழகான குடும்ப சித்திரம். தன் பெற்றோரை அதிகம் நேசிக்காத அல்லது நேசிப்பதை வெளிக்காட்டத பிசி லைஃப்ஸ்டைல் உள்ளவர்கள் கூட இந்த படத்தை பார்த்ததும் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

நாகேஸ்வர ராவ் அவரது மகன் நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா.
ஆனால் படத்தில் அப்படியே தலைகீழ். அரேஞ்ச்ட் மேரேஜில் தனது மனதில் இருக்கும் காதலை வெளிப்படித்துக்கொள்ளாத தம்பதிகளின் ஒரே ஆசை மகன். அவனது 10ஆவது பிறந்த நாளுக்கு மறுநாள் நடக்கும் கார் ஆக்சிடண்டில் இறந்து போகிறார்கள். (இங்கே நாக சைதன்யா - சமந்தா தான் அந்த ஜோடி)இந்த படத்தில் கதாபாத்திரங்களுடன் மணிக்கூண்டு மிக முக்கியமான இடம். முக்கியமான சம்பவங்கள் அங்கே தான் நடக்கிறது. ஆக்சிடண்டும் அங்கே தான்.

சில வருடங்கள் கழித்து அவரது மகன் வளர்ந்து ஒரு பெரிய பிசினஸ் சாமாரஜ்யத்தை உருவாக்கி சிறந்த  பிசினேஸ்மென் எனும் விருது பெருகிறார். அதுதான் நாகார்ஜூனா.  ஃப்ளைட்டில் தனது பக்கத்து சீட்டில் அம்ர்பவரை பார்த்து அதிர்கிறார். அதுதான் நாக சைதன்யா.  தனது அப்பா போல இருப்பது நாகார்ஜுனாவுக்கு மட்டும் தெரியும்.  ஃப்ளைட்டில் நடக்கும் கூத்து செம ஜாலி.
அப்பா மறுபிறவி எடுத்திருக்கிறார் என்றால் அம்மாவும் இருக்க வேண்டுமே என யோசித்து தேடுகிறார் நாகார்ஜுனா. அம்மாவும் கிடைத்துவிடுகிறார்.

இவர்கள் கதை இப்படி இருக்க  அதே மணிக்கூண்டு அருகில் இன்னொரு நாள் சிக்னலுக்கு வெயிட் செய்து கொண்டிருக்கும் நாகார்ஜுனாவின் காரில் ஓடி வந்து ஏறுகிறார் ஸ்ரயா. ஆபத்தில் இருக்கும் ஒரு பெரியவருக்கு உதவ காரில் அவரை ஆஸ்பிட்டல் அழைத்து சென்று, ரத்தம் கொடுக்க வைக்கிறார். அந்த வயதான பெரியவர் கண் விழித்து பார்க்கும் போது 8 வயதில் தனது பிடிவாதத்தால் அவசரமாக வந்து ஆக்சிடண்டில் உயிரழந்த அம்மா, அப்பா நாகார்ஜுனா- ஸ்ரயாவை பார்த்து பரவசப்படுகிறார்.

நாகார்ஜுனா-ஸ்ரயா முன் ஜென்ம கதையும் மிக அழகானது. மிக மிக ஏழையான ஸ்ரயாவை நாகார்ஜுனா திருமணம் செய்ய சம்மதிக்கிறார். ஆனால் 6 மாதம் கெடு கேட்கிறார் ஸ்ரயா. பெற்றோரை இழந்து பாட்டியுடன் தனியாக இருக்கும் ஸ்ரயாவின் குடும்பத்தினரின் வழக்கம், கல்யாணத்தின் போது மணமகன் அணியும் வேஷ்டி பெண் வீட்டினர் கொடுக்க வேண்டும் என்பதாகும். ஆனால் அதை வாங்க பணம் இல்லததால் விவசாயம் செய்து பணம் சேர்க்க நேரம் கேட்கிறார். அந்த கிராமத்துக்கு நாகார்ஜுனா வந்து அவர்கள் வீட்டில்யே தன்னை  அறிமுகம் செய்து கொள்ளாமல் தங்கியிருந்து ஸ்ரயாவுக்கு உதவி 3 மாதத்திலேயே வேலை முடிக்க உதவியாக இருந்து பின்னர் மணமேடையில் தன் கணவனை பார்த்து ஸ்ரயா அதிர்வது அழகு.

இந்த ஜன்மத்தில் தனது பெற்றோர் இணைய வேண்டும் என நாகார்ஜுனாவும், நாகேஸ்வர ராவும் முனைந்து இரண்டு ஜோடிகளும் இணைகிறார்கள். நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் தனது பையன் தான் நாகார்ஜுனா என தெரிந்தது போல நாகார்ஜுனா தம்பதிகளுக்கு தெரியாது.

கிளைமாக்ஸில் அதே போல ஆக்சிடண்ட் நடக்க இருந்து இரண்டு தம்பதிகளும் காரில் பயணிக்கும் பொழுது (நாகார்ஜுனா-அமலா தம்பதிகளின் மகன்) அகில் வந்து  காப்பாற்றுவது போல எடுத்திருக்கிறார்கள். அகிலுக்கு தாத்தாவின் படத்தில் இண்ட்ரோ கொடுக்க வேண்டும் என முடிவு செய்து செய்திருப்பதாக நாகார்ஜுனா சொல்லியிருந்தார்.

மெலடியான பாட்டுக்கள், அழகான அளவான நடிப்பு என ஒரு அருமையான குடும்ப படம். இந்தப்பாட்டு ரொம்ப அழகு




Thursday, August 30, 2012

ஷீரடிசாயி

பக்தி படங்கள் தமிழில் அதிகமா வர்றது இல்லை. வந்தாலும்
கிராஃபிக்ஸோடுதான் வருது. உண்மை கதைகளை படமா
எடுக்க ஏன் யாரும் அதிகமா முன்வருவதில்லைன்னு தெரியலை.
இங்கே தெலுங்கில் ஷீரடிசாயி படம் பிரபல இயக்குனர்
ராகவேந்திரராவ் இயக்கத்தில் நாகார்ஜுனா நடிப்பில்
வெளிவர இருக்கு. சமீபத்தில்தான் ஆடியோ ரிலீஸ்
நடந்திருக்கு.

பக்திபடத்தில் நாகார்ஜுனாவுக்கு புதிசில்ல.
அன்னமய்யா படத்தில் தத்ரூபமா இருக்கும் அவரது
நடிப்பு. ரொம்ப பிரபலம் இந்தப் படம்.

அதற்கு அடுத்த ஹிட் பக்தி படம் ராமதாசு.
பத்ராசல ராமதாசுவாக நாகி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்
படம். இதில் நாகிக்கு ஜோடி சினேகா. படம்
மிக அருமையாக இருக்கும்.

இந்த வரிசையில் நாகி நடித்து வெளிவர இருக்கும் படம் ஷீரடிசாயி.



ஷீரடி போனால் அங்கே ஆந்திரமக்கள் கூட்டம் 75 சதவீகிதம்னு சொல்வாங்க.
அவ்வளவு பக்தர்கள் இங்கே. பாடல்கள் ரொம்ப அருமையா இருக்கு.
கண்டிப்பா இந்தப்படமும் ஹிட்டாகும்.

நேற்றுதான் நாகார்ஜுனா தன்னுடைய 53ஆவது பிறந்தநாளை மிக
எளிமையா கொண்டாடினார். 6 மாதம் முன்னாடிதான் தன் தாயார்
அன்னப்பூர்ணாவை இழந்திருக்கிறார். அதனால் பெருசா கொண்டாடலை.
நாகேஸ்வரராவ் அவர்களும் அந்த இழப்பிலிருந்து மீள ரொம்ப
கஷ்டப்பட்ட சூழலில் அவரை இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு
அழைத்துச் சென்றிருக்கார் நாகார்ஜுனா.

ராமதாசு படத்தில் நாகேஸ்வரராவும் நடிச்சிருப்பாரு.





நாகிக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் இந்தப்
படமும் சூப்பர்ஹிட்டாக வாழ்த்துக்கள்

Wednesday, July 06, 2011

180

நான் பார்த்தது தெலுகு வெர்ஷன் படம். காசியில் பார்த்த சின்னப்பையனின்
பெயரை தன் பெயராக்கிக்கொள்கிறார் ஹீரோ. அந்தப் பெயரோடு ஹைதையில்
வந்து இறங்குகிறார். எங்க ஏரியாவில்தான் ஷூட்டிங் நடந்திருக்கு.
தெரியவே இல்லை. அடடே நம்ம பார்க், நம்ம ஏரியான்னு படம் பாக்கும்
பொழுதுதான் தெரியுது.

எனக்கு இந்தப் படத்துல பல விஷயங்கள் பிடிச்சிருக்கு. காமிரா அழகு,
இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை. காமெடிங்கற பேர்ல கொலை
நடக்கலை. அரைகுறை ஆடை நடனங்கள் இல்லை. பாடல்கள்
மெலடியாத்தான் இருக்கு (இன்னும் இரண்டு வாட்டி கேட்டா மனசுல
நிக்கும்னு நினைக்கிறேன்)

மொளலி-கீதா தம்பதியரின் வீட்டில் வாடகைக்கு குடி போகிறார்.
6 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுத்துவிடுகிறார். அதற்கு ஒரு நாள்
கூட அதிகம் இருக்க மாட்டேன் என்று சொல்லி மொளலியின் பைக்கையும்
வாடகைக்கு எடுத்துக்கொள்கிறார்.


பேப்பர் பையனுடன் சேர்ந்து பேப்பர் போடுவது, இஸ்திரி செய்வது
என தனது ஒவ்வொரு நாளையும் எஞ்சாய் செய்கிறார். வித்யா மேனன்
ஒரு பத்திரிகையின் போட்டோகிராபர். வித்யாசமான புகைப்படங்கள்
இவரது ஹாபி. சித்தார்த் தங்கியிருக்கும் வீட்டை கண்டுபிடிக்க
பைக் நம்பர் வைத்து அட்ரஸ் வாங்கி மொளலியை பார்த்து அதிர்ந்து
பிறகு சித்தார்த்தை சந்திப்பது சுவாரசியம். மொளலி தம்பதியினரின்
பணக்கஷ்டத்திற்கு மெஸ் ஆரம்பித்து கொடுப்பது என பல
உதவிகளை பலருக்கும் பல தருணங்களில் செய்யும் சித்தார்த்தின்
நடிப்பு நன்றாக இருக்கிறது.



பேப்பர் போடும் பையன்களை பள்ளிக்கு அனுப்ப நிதியுதவி பெற
வித்யாவை உதவச்சொல்லிக் கேட்க, தனது பத்திரிகையின் விளம்பரம்
செய்து அதன் மூலம் 10 லட்சம் பணம் பெற்று அந்தபிள்ளைகள்
படிக்க வழிசெய்கிறார். இதெல்லாம் வித்தியாசமாக நன்றாக
செய்திருக்கிறார் இயக்குனர் ஜெயேந்திரா. அந்த நிகழ்ச்சியின் இறுதியில்
வித்யா மேனன் சித்தார்த்தை காதலிப்பதாகச் சொல்ல அவரை
தவிர்க்க ஆரம்பிக்கும் சித்தார்த்தின் ஃபிளாஷ் பேக் விரிகிறது.



ப்ரியா ஆனந்த் அழகு தேவதையாக வருவதுடன் நல்ல நடிப்பிலும்
அசத்தியிருக்கிறார்.அமெரிக்க மருத்துவமனையில் சித்தார்த்
ஒரு டாக்டர். பேஷண்டாக வரும் ப்ரியாவுக்கும் சித்தார்த்துக்கும் காதல் மலர்ந்து
கல்யாணம் செய்து கொள்வது மிக அருமையாக சித்தரித்திருக்கிறார்
இயக்குனர். அவர்களது திருமணத்திற்காக அமெரிக்கவரும் சித்தார்த்தின்
தாயார், மகனுக்கு நல்ல துணை அமைந்துவிட்டது எனும் சந்தோஷத்தில்
இறந்து போகிறார். பிறகு திருமணம், ஆனந்தமான வாழ்க்கை என
போகும் வாழ்க்கையில் வில்லனாக வருகிறது கேன்சர்.

அதுவரை சித்தார்த்தின் நடிப்பு இயல்பாக அருமையாக இருக்கிறது.
தனக்கு கேன்சர் எனத் தெரிந்ததும் சித்தார்த்தின் நடவடிக்கைகள்
மெச்சூரிட்டி இல்லாதது போல இருக்கிறது. சோகமான சமயங்களில்
எக்ஸ்பிரஷனை கொஞ்சம் வித்யாசமாக செய்ய சித்தார்த் கற்றுக்
கொள்ள வேண்டும்.

வித்யா மேனனின் காதலை ஏற்க்க முடியாமல் அந்த வீட்டை
விட்டு காலி செய்து போகும் சித்தார்த்தை ஸ்கூட்டரில் சென்று
பிடிக்க நினைத்த வித்யாவிற்கு விபத்து ஏற்பட அந்த விபத்து
அவரது தண்டுவட ஆபரேஷன் வரை செல்கிறது. இதற்காக
அவரை சித்தார்த் அமெரிக்க அழைத்துச் சென்று தான் வேலை
செய்த மருத்துவமனையில் சிறப்பாக மருத்துவம் கிடைக்க
ஏற்பாடு செய்யும் வேளையில், தனது மனைவியைப் பார்க்க
நினைத்து அவர் வேலை செய்யும் அலுவலகத்துக்கு செல்கிறார்.
அவரைப் பார்த்தாரா? வித்யா மேனனை ஏற்றாரா என்பது
கொஞ்சம் ஜவ்வு மிட்டாயாக இருக்கிறது.

மருத்துவர் ஒருவர் தனக்கு தீராத நோய் வந்திருப்பதை அறிந்து
நடந்துக்கொள்ளும் விதம் இப்படித்தான் இருக்குமா? மனைவி
படும் வேதனையை தாங்க முடியாமல் அவளை விட்டு பிரியும்
கணவனாக சித்தார்த்தை சித்தரித்திருக்கும் இயக்குனர், கடைசி
நேரம் வரை தன் கணவன் தன்னுடன் இருக்க வேண்டும் என
காதல் மனைவி தவிப்பாள் என்பதை உணரவில்லை போலும்.

முடிவு எனக்கு பிடிக்கவில்லை. மனதுக்கு நிறைவான
முடிவாக இல்லை. படத்தை ரசித்து பார்க்கலாம்.



Wednesday, June 08, 2011

100%love

காதலின் பொன் வீதியில்.... என்ன இருக்கும் காதல்
மட்டும்தானா??? பிரச்சனைகளும் இருக்குமே. காதலுக்கும்
எதிரிகளாக பெரியவர்களையே காட்டி காட்டி அலுக்க வைத்துவிட்ட
இயக்குனர்களின் மத்தியில் காதலர்களுக்கு இடையே இருக்கும்
ஈகோவை வில்லனாக்கி இயக்குனர் சுகுமார் எடுத்திருக்கும்
படம் தாம் 100%லவ்.

இதயத்தை திருடாதே ஹீரோ நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா,
தமன்னா ஜோடியில் வெளி வந்திருக்கும் இப்படத்தின் பாடல்கள்
ஆகட்டும், படமாகட்டும் சக்கப்போடு போடுகிறது.



தமிழில் மார்க்கெட் போன நடிகை தமன்னாவுக்கு தெலுங்கில் இந்தப் படம்
சூப்பர் இடத்தை பிடித்துக் கொடுத்திருக்கிறது. தனது கதாபாத்திரத்தை
உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார் தமன்னா. டயலாக் டெலிவிரி,
உணர்ச்சி பூர்வமான நடிப்பு என அசத்தியிருக்கிறார் தமன்னா. நாகசைதன்யாவும்
குறைவில்லை.

கதை என்ன? கிராமத்திலிருந்து வரும் அத்தைமகள் மகாலட்சுமி (தமன்னா)
மாமன் மகன் பாலு (நாகு ஜூனியர்) படிக்கும் கல்லூரியில் சேர்கிறார்.
கல்லூரியில் ஃபர்ஸ்டாக இருக்கும் பாலு படு ஸ்ட்ரிக்ட் பார்ட்டியாக
காட்டிக்கொள்கிறார். அது ஏதும் இல்லாவிட்டாலும் போகப்போக தமன்
படிப்பில் முன்னேறி பாலுவை பீட் செய்கிறார். அங்கே ஆரம்பிக்கிறது
ஈகோ. மஹாலட்சுமியின் அப்பா மகளுக்கு ஒரு வரன் பார்க்க அவரை
மணக்க மறுக்கிறார். பாலுவின் உதவியோடு அந்த சம்பந்தத்தை தட்டிக்
கழிக்கிறார் மஹாலட்சுமி. பாலுவும் மஹாலட்சுமியும் காதலிக்க துவங்கும்
பொழுது மஹாலட்சுமி பாலுவின் ஈகோவை தாக்கிட இருவரும் பிரிகிறார்கள்.
இருவரும் இணைகிறார்களா????? வெள்ளித் திரையில் பார்க்க வேண்டிய
ஒரு படம்.



இப்போதைய யூத்களின் காலர் ட்யூனாக மட்டுமல்ல அவர்களின்
மனதை சொல்லும் வரிகளாக இந்தப் பாடல். :))




தமன்னாவுக்கும், பாலுவுக்கும் வெவ்வேறு வரன்களுடன் நிச்சயதார்த்தம்
முடிந்துவிட்ட சூழலில் பாலுவின் கம்பெனிக்கு ஏற்படும் நஷ்டத்தை
தடுத்து நிறுத்த இரவும் பகலும் பாலுவுடன் சேர்ந்து தோள் கொடுக்கிறார்
தமன்னா. தமன்னாவின் வருங்காலக் கணவன் வந்து ,”இப்படி நேரம்
கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வருவது தவறு!” என சொல்லும் பொழுது
தமன்னா,” நம் திருமணம் நாளை கழித்துதான். என் கழுத்தில் தாலி
ஏறும் அந்த நொடி வரை நான் இந்த வீட்டு மகள். என் கடமையை
நான் செய்ய வேண்டும். நீயும் புரிந்துகொண்டு, உன் வீட்டினருக்கும்
புரியவைக்க வேண்டும்!” என தழுதழுக்கும் குரலில் கூறும் இடம் சூப்பர்!!

பாலுவின் பாட்டி தாத்தாவாக கே.ஆர்.விஜயா, விஜயக்குமார் ஜோடி.
இருவரின் பிரிவுக்கும் கூட காரணம் இந்த ஈகோ தான். இடைவேளைக்குப்
பிறகான சினிமாவின் பகுதியில் குடும்ப உறவுகளும், அதன் முக்கியத்துவத்தையும்
கூறும் படி அழகாக அமைத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

அதுவும் லேப்டாப்பில் தன் மனைவியின் வீடியோவை பார்க்கும் விஜயகுமார்,
கணவரின் வீடியோவை பார்க்கும் கே.ஆர்.விஜயா காட்சி மனதில் நிற்க்கிறது.


மெலடி,சோகம் என பாடல்கள் இருந்தாலும் டைட்டில் சாங் போல
வரும் இந்தப் பாட்டை பாடியது யார் என்று சொன்னால் அசந்து போவீர்கள்.
கண்கள் இரண்டால் பாட்டில் கண்களால் கவிதைச் சொன்ன சுவாதியை
பாடகியாக்கி இருக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.
Get this widget | Track details | eSnips Social DNA


இளைஞர்கள் இந்தப் படத்தின் மீது 100%காதல் கொள்ள வைக்கும்
என்பதில் சந்தேகமே இல்லை. பாடல்களும் அருமை.


Friday, January 28, 2011

ஜம்பலக்கடி பம்பா... கிதகிதலு

ஆண்களிடம் பெண்கள் படும் கொடுமையை பார்க்க சகிக்காத
பெண் ஒருவர் ஒரு யோகியிடம் சென்று கேட்க அவர்
“ஜம்பலக்கடி பம்பா” எனும் மருந்தை கொடுக்கிறார். அதை
ஆண்களுக்கு தெரியாமல் சோற்றில் கலந்து கொடுத்துவிட நிலமை
மாறுகிறது. கணவன் வீட்டு வேலை செய்வது முதல் குடிகார மனைவியிடம்
அடிவாங்குவதை எல்லாம் மாறிப்போகிறது. பெண் தான் குழந்தை
பெறுகிறாள் என்றாலும் வலி மட்டும் அந்தக் குழந்தையின் தகப்பனுக்கு
தான். சிரிசிரித்துக்கொண்டு பிள்ளை பெறும் பெண்.... வலியால் துடிக்கும்
பக்கத்து வீட்டுக்காரன்!!! அவனுடன் சண்டை போடு அந்தப் பெண்ணின்
கணவனை தடுத்து வலிபட்ட கணவனின் மனைவி வீட்டுக்குள் அழைத்துச்
சென்று பரேடு நடத்துவாள் பாருங்கள்!!! தன் கணவன் செய்த துரோகம்
தாளாமல் குடித்து குடித்து இறக்க அவளது கணவனுக்கு வெள்ளை உடை!!!
ஆண்களின் கழுத்தில் தாலி!!!!

பாஷை புரியாவிட்டாலும் வீடியோ பாருங்க!! காமெடியா இருக்கும்.

இப்படி இந்தக் கிராமம் மட்டும் வித்தியாசமாக இருக்க காரணம் என்ன?
என மண்டையைக் குடைந்து கொள்ளும் போலிசார் ஒரு காவலரை
அனுப்பி வேவு பார்த்து வரச் சொல்வர். அந்தக் காவலரின் அண்ணன்
அந்த ஊரில் இருக்க அவரது வீட்டுக்கு வரும் காவலரை சந்தேகித்து
போலீஸ் உளவாளி என கண்டுபிடித்து விடுவார் அந்தப் பெண். அவருக்கும்
மருந்தை கலந்து கொடுக்க முயலும் ஒவ்வொரு தருணமும் தட்டிப்போகும்.
தன்னையும் அந்த ஊர் ஆண்கள் போல மாற்ற முயல்கிறாள் என்பதை
கண்டுபிடித்து ஒவ்வொரு முறையும் மருந்திலிருந்து தப்பித்து....
ஆண்களின் நடவடிக்கை பெண்களுக்கும், பெண்களின் நடவடிக்கைகள்
ஆண்களுக்கும் வருவது போல கதை எழுதி அதை அழகாக
வடிவமைத்திருந்ததில் பார்த்தவர்களின் வயிறுகள் சிரிப்பால்
பஞ்சராகிப்போனது. கடைசியில் இரு பாலினருக்கும் பைத்தியம்
பிடித்து பிள்ளைகளைப்போல நடந்துகொள்வதாக வரும்.

அந்தப் பெண்ணின் மனதில் இருக்கும் ஆண்கள் மீதான வெறுப்பை
களைந்தானா? இருவருக்கும் திருமணம் நடந்ததா? ஊர் மாறியதா
அது தான் ஈ.வி.வி சத்யநாராயாணா இயக்கி 1993ஆம் ஆண்டு
வெளிவந்த தெலுங்கு படம் ஜம்பலக்கடி பம்பா!!!

நரேஷ் (நடிகர் கிருஷ்ணாவின் மூத்தமகன்) போலிஸ் அதிகாரியாகவும்,
ஆண்களை வெறுத்து மாற்றும் பெண்ணாக ஆமனி நடிக்க மற்ற
கேரக்டர்களில் பிரம்மானந்தம், கோடா ஸ்ரீநிவாச ராவ், பாபுமோகன்,
மல்லிகார்ஜுன ராவ், அன்னபூர்ணா, ஸ்ரீலட்சுமி என பெரிய பெரிய
புள்ளிகள்.

இந்தப் படத்தின் இரண்டாவது பார்ட்டாக பம்பலக்கடி ஜம்பா படம்
எடுக்க திட்டமிட்டிருந்தார் சத்யநாரயணா! அந்த மகாபாக்யம் தெலுங்கு
திரையுலகிற்கு கிடைக்கவில்லை. எத்தனையோ தெலுங்கு படங்களை
ரீமேக் செய்யும் தமிழ் திரையுலகம் இந்த ஜம்பலக்கடி பம்பாவை
விட்டு வைத்தது ஏனோ!!! லாஜில் இல்லாத சூப்பர் நகைச்சுவை
படம் அது!!

கிதகிதலு:




சத்ய்நாராயணா தன் மகன் அல்லரி நரேஷை வைத்து எடுத்த
படம். சின்ன வீடு, சதிலீலாவதி படத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சம்
சுட்டா மாதிரி இருந்தாலும் படம் காமெடி ட்ரீட்மெண்ட். அதிகமாக
கிடைக்கும் வரதட்சணைக்காக அல்லரி நரேஷ் குண்டு பெண்ணை
திருமணம் செய்து கொண்டு அவளுடன் வாழ முடியாமல் வேறொரு
பெண்ணை காதலிக்க மூத்த தாரத்தை விவாகரத்து செய்து இந்தப்
பெண்ணை மணக்கலாம் என திட்டமிட்டு மனைவியிடம் கேட்க
நீ இன்னொரு திருமணம் செய்து கொள்வது போல் எனக்கும்
இன்னொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடு! நான்
விவாகரத்து செய்கிறேன்” என்று சொல்ல நரேஷின் காதலி
அவர் இருக்கும் வீட்டை பார்த்து இந்த வீட்டை தன் பேரில் எழுதி
கொடுக்கச் சொல்ல அது தன் மனைவியுனைடயது என்று சொல்ல
உண்மை வெளிப்படுகிறது. உண்மை என்னவென்றால் நரேஷுக்கு
போலிஸ் உத்யோகத்தில் கிடைப்பது 10000 சம்பளம் மட்டுமே!
அவர் இருக்கும் வீடு, கார் அதற்கு டிரைவர், செலவுக்கு இரண்டு
லட்சம் எல்லாம் மாமனார் தருவது!!


இது தெரிந்து அந்தப் பெண் விட்டு ஓட உண்மை உணர்ந்து
குண்டோ ஒல்லியோ தன் மனைவிதான் சிறந்தவள் என புரிந்து
சுபம்!!


படத்தின் சில போட்டோக்கள் பாருங்கள்


Monday, May 24, 2010

DHORUKUNA ITUVANTI SEVA

கடப்பா வானொலி மூலமாகத்தான் எனக்கு
தெலுங்குப்பாடல்கள் அறிமுகம். பாடல்கள்
எழுதியது வேடுரி என்று கேட்டிருக்கிறேன்.
அருமையான பாடல்கள். இங்கே வந்த பிறகு
அந்த மகா கவிஞர் எழுதிய பலப்பாடல்கள்
கேட்டு என்ன ஒரு கவிஞர் என வியந்திருக்கிறேன்.


வேடுரி சுந்தரராமமூர்த்தி இது இவரின் முழுப்பெயர்.
22.05.10 இந்தக் கவிஞர் இறைவனடிச்சேந்துவிட்டார்.
74 வயதுவரை தனது படைப்பாற்றலால் படைத்துக்
கொண்டுதான் இருந்திருக்கிறார்.

தெலுங்குக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட பல
படங்களுக்கு வேடுரிதான் பாடல்வரிகள் தந்தது.
மணிரத்தனத்தின் எத்தனையோ படங்களுக்கு
இவர்தான் ஆஸ்தான கவிஞர். அலைபாயுதே கண்ணா
பாடலை தெலுங்கு பதிப்பில் விட்டுவிட நினைத்தாராம்
மணிரத்தன்ம். ஆனால் வேடுரி அதையே அழகான
பாட்டாக எழுதிக்கொடுத்துவிட்டாராம்.

மேகசந்தேசம் (1984)எனும் படத்தில் வேடுரி
அவர்கள் எழுதி ரமேஷ் நாயுடு இசையில்
கானகந்தர்வன் பாடிய இந்தப்பாடல் கானக்கந்தர்வனுக்கு
தேசிய விருதை ஈட்டித்தந்தது.

பாடலைக் கேட்க இங்கே:



எனது விருப்பமான டைரக்டர் கே. விஸ்வநாத்தின்
பல படங்களின் பாடல்கள் வேடுரி எழுதியதுதான்.
சங்கராபரணம் படத்தின்
“சங்கரா நாதஸ்வரீராபதா”  பாட்டுக்கு ஆந்திர
அரசின் நந்தி விருது கிடைத்திருக்கிறது. இந்தப்
படத்தின் கடைசி பாடலான ”துரகுனா இடுவண்டி சேவா”
பாடல் அனைவரும் மிகவும் ரசிக்கும் பாடல். 1979ல்
வெளிவந்தப் படத்தின் பாடல்கள் இன்றளவும்
ரசித்துக்கொண்டிருக்கிறோம்.

அந்தப் பாடலைப்பற்றி சுவையான செய்தி ஒன்று
கேள்விப்பட்டேன். இந்த சிச்சுவேஷனுக்கான பாடல்
எழுதும் சமயம் வேடூரிக்கு உடல்நிலை சரியில்லாமல்
போய் சென்னையில் ஒரு மருத்துவமனையில்
ஐஸியூவில் வைக்கப்பட்டிருந்தாராம். கே.விஸ்வநாத்
வேறு ஏதாவது கவிஞரை வைத்து பாடலை எழுதி
படமாக்கத் திட்டமிட வேடூரி விஸ்வநாத்
அவர்களுக்கு போன் செய்து யாரையாவது அனுப்பினால்
பாட்டை தருவதாக சொல்ல, விஸ்வநாத் அவர்களின்
அஸிஸ்டெண்ட் மருத்துவமனைக்குச் சென்று
வேடூரிச் சொல்ல சொல்ல பாடலை எழுதினாராம்.
இந்தப் பாடலின் வரிகள், அதை உணர்ந்து
அற்புதமாகப் பாடியிருக்கும் பாலு... மறக்கமுடியாத
பாடல்.



அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.
பூத உடல் மறைந்தாலும் அவரின் பாடல் வரிகளால்
நம்முடன் என்றும் வாழ்ந்திருப்பார்.


Wednesday, April 07, 2010

VARUDU

பாக்கணும்னு நினைச்ச படம் பாத்தாச்சு.
படத்தை பாத்தவங்கள்ல பலர் படம் ஃபாளாப்ன்னு
சொன்னாலும் பாத்திடணும்னு நினைச்சுப்போனேன்.
எனக்குப் பிடிச்சிருந்தது வருடு. கதை என்னன்னு
பாப்போம்.



நவீன இளைஞனான சந்தீப்(அல்லு அர்ஜூன்) தனது
திருமணம் பெற்றவர்களால் நிச்சயக்கப்பட்டதாக இருக்க
வேண்டும் என்று சொல்ல அதிர்ச்சி ஆவது அவங்க
பெற்றோர். (சுகாசினி- ஆஷிஷ் வித்யார்த்தி.
சுகாசினிa சிந்து பைரவிக்கால இளமையுடன்
இப்பவும் அழகா இருக்காங்க)

பொண்ணு பாக்கும் படலம் நடக்குது. இண்டர்நெட்சம்பந்தம்,
ப்ரோக்கர்கள் ஏதுமில்லாம நீங்களே தேடுங்கன்னு சொல்ல
அப்பா, அம்மா தேடி கொண்டு வரும் பெண்ணை
பார்க்காமலேயே மணம் முடிக்க சம்மதிக்கிறார்.
அதாவது தெலுங்கு பத்ததியில் மணமகன்,
மணமகள் இருவரும் பார்த்துக்கொள்வது
மணமேடையில் முகூர்த்த நேரத்தில் தான்.


அந்தக்காலம் போல உறவினர்கள் அனைவரையும்
அழைத்து 5 நாள் திருமணம் செய்ய வேண்டும்
என்று கட்டளையிடுகிறார் ஹீரோ. மணப்பெண்ணும்
மணமகனின் போட்டோ பார்க்காமலேயே மணமேடைக்கு
வருகிறார். கூடையில் மணப்பெண் வந்து மணமேடையில்
அமர்ந்து, ”நாதிச்சராமி” மந்திரம் சொல்லி, ஜீரகம்-வெல்லம்
வைத்து, கண்பார்த்து, கன்யாதானம் முடிந்து தாலி
கட்டும் நேரத்தில் வருகிறார் வில்லன் ஆர்யா(நம்ம
நான் கடவுள் ஆர்யாவே தான். வில்லனாக
கலக்கியிருக்கிறார்.சைக்கோ கேரக்டர் கொஞ்சம்
கலந்த கேரக்டர் இவருடையது)
மணப்பெண்ணை தூக்கிப்போய்விடுகிறார்.

மணமகளை கண்டுபிடிக்கிறாரா? தாலிகட்டும் சடங்கு
நடக்குமா இது வெள்ளித்திரையில் பார்க்கவும்.

இயக்குனர் குணசேகர் ஹீரோயின் முகத்தைக் கூட
காட்டமல் வைத்திருந்து மணமேடையில்தான்
முகத்தைக் காட்ட வைக்கிறார்.



வேலை காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டி
இருப்பதாலும், தன் மகள் இனி கிடைக்கும்
வாய்ப்பு குறைவு என்பதாலும் வேறொரு பெண்ணை
மணம் முடிக்கும் படி ஹீரோயினின் தகப்பனாக
வரும் நரேஷ்(சூப்பர் ஸ்டார் க்ருஷ்ணாவின் மூத்த
தாரத்து மகன்) சொல்ல ஹீரோ வெடிக்கும்
காட்சி ரொம்ப பிடித்திருந்தது.

”தாலி ஒன்றுதான் கட்டவில்லை. மற்ற சடங்குகள்
எல்லாம் நடந்துவிட்டது. அதானல் உங்கள்மகள்
தான் என் மனைவி, என் மனைவியை நான்
தேடிக்கொண்டு வருகிறேன்” என அல்லு அர்ஜுன்
சொல்லும் பொழுது ஒரு வயதானவர் ஜீரகர-பெல்லம்
வைக்கப்படும் காரணத்தைச் சொல்கிறார்.(இது
இந்தப்படம் பாக்கும் வரை எனக்குத் தெரியாது.
இனி எல்லோருக்கும் எடுத்துச் சொல்வேன்)

ஜீரகம்-பெல்லம் இரண்டும் சேர்ந்து ஒருவித
மேக்னட் பவர் உருவாகிறது. அதை மணமகன்,
மணமகள் ஒருவருக்கொருவர் தலையில் வைக்கும்
பொழுது(பிறப்பதற்கு சற்று முன்னரே மூடிக்கொள்ளும்
உச்சித் தலை) அதாவது ஸஹஸ்ரா சக்கரா
எனப்படும் crown chakra வில் பட்டு அந்த
காந்த சக்தியால் ஆஜ்ஞா சக்கரம்( இருபுருவத்துக்கும்
மத்தியில் அமைந்திருக்கிறது) மூலம் இருவரும்
பார்த்துக்கொண்டு கண்ணும் கண்ணும் கலந்து
இருவர் ஒருவர் ஆகிறார்கள். இந்தச் சடங்கு
முடிந்தாலே திருமணம் முடிந்ததாக அர்த்தம்
என்று பெரியவர் சொல்கிறார்.(உண்மையும் அதுதான்)

அப்புறம் ஹீரோ ஹீரோயின் இருக்கும் இடத்தைக்
கண்டுபிடித்து, வில்லனுடன் போராடி அழைத்து
வந்து, தாலிகட்டி, தலம்பராலு கொட்டி முடித்து
வில்லனுடன் சண்டை போட்டு சுபம்.


ஐந்து நாள் திருமணம் இதுதான் இந்த படத்தின்
ஹைப். ஆனால் அதை ஒரு பாட்டிலேயே
முடித்துவிட்டார்கள்.(இதற்கு இயக்குனர் சொல்லும்
காரணம் இல்லாவிட்டால் திருமண சீடி பார்க்கும்
எஃபக்ட் வந்திடும்) வழக்கமான மசாலாத்தனம்,
சினிமாத்தனம் இல்லாமல் இருந்திருந்தால்
இந்தப் படம் இன்னும் அதிகம் பேசப்பட்டிருக்கும்.

ஆனாலும் மறைந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தை
நினைவு படுத்தி இப்பொழுது ஒவ்வொருவரும்
வருடு சினிமா போல் 5 நாள் திருமணம் வேண்டும்
என்று சொல்ல வைத்த சினிமாவுக்கு பாராட்டுக்கள்
குணசேகர்.

இந்த சம்மரில் ஆந்திராவில் திருமண சீசன்.
அனைத்து மண்டபங்களிலும் ஐது ரோஜுல பெல்லி
பாட்டு இல்லாமலே இருக்காது. இன்று நடந்த
ஆந்திரா ஹோம் மினிஸ்டர் இந்திரா சபீதா ரெட்டி
அவர்களின் மகனின் திருமணம் பற்றி டீவி9
சேனலில் தொகுப்பு காட்டிய பொழுது கூட அந்தப்
பாட்டுத்தான் போட்டார்கள்.

இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக சொல்லியிருக்கலாம்.



Friday, September 25, 2009

மகதீரா!!!!!!!

1609 ஆண்டில் துவங்குகிறது படம். காலபைரவன்(ராம் சரண் தேஜா,
மெகா ஸ்டார் சிரங்சீவியின் மகன்) உதயகார்க பேரரசின் மெய்காப்பாளான்.
இவரின் குடும்பத்தாருக்கு ஒரு புகழ் உண்டு. போரில் 100 பேரையாவது
வெட்டி சாய்த்துவிட்டு 30 வயதுக்குள் இறந்துவிடுவார்கள்.

இளவரசி மித்ரா (காஜல் அகர்வால்)வும் காலபைரவனும் காதலிக்கிறார்கள்.
இராஜாவின் உறவினனும் மித்ராவை விரும்ப இருவருக்கும் இடையே
போட்டி நடக்கிறது. வென்றது காலபைரவன். உறவினன் நாடு கடத்தப்
படுகிறான். ஆனால் அவர்களது குடும்ப பாரம்பரிய கதையால்
அரசர் தனது மகளின் நீண்ட விவாக வாழ்விற்காக

காலபைரவனைக் கோர அவனும் இளவரசியை விட்டுக்கொடுத்து
மெய்க்காப்பளானாகவே இருக்க விரும்புவதாக கூறுகிறான்.

தேசத்தின் நலன் கருதி பைரவனுக்கு பூஜை நடக்கும் பொழுது
ராஜாவின் உறவினன், எதிரி நாட்டு மன்னன் ஷேர் கானுனுடன்(ஸ்ரீ ஹரி)
கலந்து ராஜாவை கொன்று பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து
போர் செய்ய காலபைரவன் 100 பேர்களை கொன்று போரி
புரிந்து கொண்டிருக்கும் வேளையில் இராஜாவின் உறவினன்
காலபைரவனையும், மித்ராவையும் கொன்று விடுகிறான்.
மலையின் உச்சியிலிருந்து இருவரும் கீழே விழுந்து இறக்கிறார்கள்.


400 வருடங்களுக்கு பிறகு இந்த நூற்றாண்டில் காலபைரவன், மித்ரா,
வில்லன், ஷேர்கான் நால்வரும் மறுபிறவி எடுக்கிறார்கள்.




இந்த ஜென்மத்தில் பைக்ரேஸ் ப்ரியராக வரும் ஹர்ஷா( ராம் சரண் தேஜா)
அருமையாக நடித்திருக்கிறார். காதலர்கள் இணைகிறார்களா?
என்பதுதான் மீதிக்கதை.

ராஜர் காலக்கதையும் சரி இந்தக்காலக்கதையும் சரி
அலுப்புத்தட்டாமல் கொண்டு போயிருக்கிறார்கள். அதற்கே
ஷ்பெஷல் பாராட்டு தரலாம்.

பாவம், காமெடித் திலகம் ப்ரம்மானந்தாவைத்தான்
வீணடித்து இரண்டு காட்சியில் அடிவாங்கிக்கொண்டு
போய்விடுவதாக காட்டியிருக்கிறார்கள்.




57 நாட்களுக்கு மேல் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது
இத்திரைப்படம். பாடல்கள் ”பஞ்சதாரா பொம்ம்” மெலடியாக
இனிக்கிறது.

15 வருடங்களுக்கு முன் சிரஞ்சிவியின் சூப்பர் ஹிட் பாடலான
”பங்காரு கோடிபிட்ட” இந்த படத்தில் ரீ மிக்ஸாக ஒளிக்கிறது.

அந்தக்காலப்பாடல் சிரஞ்சிவியின் நடனத்துக்காக அவரது
ப்ரத்யேக ரசிகர்களால் இன்றும் நினைவில் இருக்கிறது என்றால்
இப்போதைய பாடல் ராம் சரணின் ரசிகர்களுக்கு விருந்து தான்.

அப்பா ஆடிய ஆட்டம் டிஸ்கோ சாந்தியுடன்:



மகனின் ஆட்டம் முமைத் கானுடன்:
சிரஞ்சீவியும் ஒரு ஆட்டம் இதில் போட்டிருக்கிறார்.



எங்களுக்கு பிடித்திருக்கிறது.

ஆல் தி பெஸ்ட் ராம் சரண்.

Wednesday, July 08, 2009

சுவாராபிஷேகம்

ஸ்வரங்களால் செய்யப்படும் அபிஷேகம்
சுவாரபிஷேகம்.

2004 ஆம் ஆண்டு கே.விஸ்வநாத் அவர்களின்
இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஸ்வராபிஷேகம்.




இதில் விஸ்வநாத் அவர்கள் நடித்திருக்கிறார்.
ஜோடி ஊர்வசி.

ஸ்ரீரங்கம் சகோதரர்கள் ஸ்ரீநிவாஸாச்சாரி(கே.விஸ்வநாத் & ரங்கா
ஸ்ரீகாந்த்)இருவரும் சங்கீத கலைஞர்கள்.

ஸ்ரீநிவாஸாச்சாரிக்கு குழந்தைகள் இல்லை. இளையவன்
ரங்காவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை.
மனைவியை இழந்தவர். பெரியம்மா,பெரியப்பாவிடம்
பிள்ளைகள் வளர்கிறார்கள். கூட்டுக்குடும்பமாக ஒன்றாக
வாழ்கிறார்கள்.

அண்ணன் தம்பி இருவரும் இணைந்து
தெலுங்கு சினிமாவில் கிளாசிக்கல் மற்றும் சாஸ்திரிய
முறையில் மட்டுமே திரைப்படங்களுக்கு இசை அமைக்கும்
மிகப்பெரிய இசையமைப்பாளர்கள்.

பேரும் புகழும் பெறுவதற்கு முன்னர் அதற்குகாரணமாக
இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியை மறக்காமல்
தாங்கள் அமெரிக்கா சென்ற அந்த நந்நாள் அன்று அந்த
செருப்புத் தொழிலாளி வீட்டுக்கு சென்று அவர்களுக்கு
மரியாதை செய்வதாக காட்டியிருப்பது நாம் பழைய
வாழ்வை மறக்க கூடாது என்றும், நன்றி மறப்பது
நன்றன்னு என்றும் அழகாக சொல்லியிருப்பது போலிருக்கும்.

ராமாவினோதி வல்லபா பாடல் அருமை.

Get Your Own Hindi Songs Player at Music Plugin

அண்ணன் ஸ்ரீநிவாஸாச்சாரி ஹோமியோபதி மருத்துவரும்
கூட. கட்டணமாக பாடலை பாடச்சொல்லும் அளவுக்கு
இசையின்மேல் பற்று உடையவர். ம்யூசிக் தெரபியிலும்
விற்பன்னர்.


ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட ஒரு தாய்க்கு
பாடி அமைதி படுத்தி பிரசவம் பார்க்கும் இப்பாடல்
அருமையாக இருக்கும்.



Get Your Own Hindi Songs Player at Music Plugin

டீவி ஆங்கர் சுரேகா(லயா)இளையவர் ரங்காவை விரும்ப
திருமணம் நடக்கிறது. திருமணத்து்க்கு பிறகு சுரேகா
தன் கணவனுக்கு கிடைக்க வேண்டிய பெருமைகள் பெரியவர்
ரங்காச்சாரிக்கு மட்டுமே கிடைப்பதாகவும் தனக்கும் தன்
கணவனுக்கு அந்த வீட்டில் உரிய இடம் இல்லை என்பதாகவும்
நினைக்க ஆரம்பித்ததும் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன.



ஸ்ரீரங்காச்சாரிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததும் பொறாமை பொங்க
சுரேகா பேசிய வார்த்தைகளால் குடும்பம் பிரிகிறது. விருது வாங்க
டெல்லிக்குச் சென்ற பெரியவர்கள் இருவரும் வீட்டுக்குத் திரும்பாமல்
தன் இருப்பிடம் சொல்லாமலும் வாழ்கிறார்கள்.

இளையவன் ரங்காவோ தன் அண்ணன் இல்லாமல் ஒரு பாடல்
கூட இசையமைக்க முடியாமல் போகிறார். ரசிர்கர்களும்
இவர் இசையமைப்பில் ஜீவன் இல்லாததாக கூறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் குரல் போய் பாடகூட முடியாத நிலைக்கு ஆகிறார்.
சுரேகா அண்ணன் தம்பி இருவரும் இணைந்தால்தான் இவர்களால்
இசைக்க முடியுமென்றும், இசையாய் இணைந்த குடும்பத்தைப்
பிரித்து தான் செய்தது மாப்பெரும் தவறு என உணர்கிறார்.


அண்ணன் தம்பி இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பது
கிளைமாக்ஸ்.



”லட்சுமணன் தன்னை அண்ணா என அழைக்க இந்த
ராமன் என்ன தவம் செய்தேனோ” எனும் பொருள் படும்
இந்தப்பாடல் தான் கிளைமாக்ஸ்.

“பெரியவன் ராமனை அண்ணா என அழைக்க தான் என்ன
தவம் செய்தேனோ” இளையவன் ரங்கா பாடும் இடமும்
அருமை. (யேசுதாஸ், எஸ்.பி.பி காம்பினேஷன் வேறு,
கேட்க வேண்டுமா!!)



Get Your Own Hindi Songs Player at Music Plugin





அழகான கூட்டுக்குடும்பம், மனதை மயக்கும் பாடல்கள்
என பல +கள் நிறைந்த இந்தப்படம் விருது வென்ற படம்.

************************************************
டிஸ்கி: இன்று மறைந்த மாமாவின் பிறந்த நாள்.
அண்ணன் தம்பி பாசமா? தந்தை மகன் பாசமா?
என பட்டிமண்டபம் வைக்கும் அளவுக்கு இந்த
அண்ணன் தம்பி பாசமும் இருந்தது.

என்றும் அன்பு மழை பொழிந்த மாமாவின்
நினைவு இந்தப்படம் பார்க்கும் பொழுது
மிக மிக அதிகமாகும்.


மாமா என்றும் எங்களுடன் இருப்பதாகத்தான் நினைக்கிறோம்.
இதோ என் அருகில் இருந்து நான் கணிணியில் ஏற்றுவதையும்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.

இந்தப்பதிவு மாமாவுக்கு சமர்ப்பணம்.

Wednesday, March 18, 2009

ஆண்டவா அனைவரையும் காப்பாத்து!!!!

சித்தார்த் நடிச்ச படம் என்பதால் ஆஷிஷ் போக
ஆசைப்பட்டான்.” நான் வேண்டாம், எனக்குத் தெரிஞ்ச
வரைக்கும் கதை நார்மல் கதைதான்ன்னு” சொன்னேன்.
அயித்தான் ”,பிராகாஷ் ராஜ் இருக்காருப்பா போவோம்னு”
சொல்ல ”சரி, போய்தான் பாப்போம்னு” போனோம்

படத்தின் பெயர் கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்.
KONCHAM ISHTAM KONCHAM KASHTAM.

இரவு 9.30க்குத்தான் நைட்ஷோ. தியேட்டரில்
டிக்கெட் வாங்கும்பொழுது மணி 8.15. பக்கத்துல
தானே ஹோட்டல் போய் கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துட்டு வந்தோம்.



வழமையான காதல் கதை. சித்தார்த் தன் ஸ்டைலை
கொஞ்சம் மாத்திக்கணும்னு யாரோ சொல்லியிருக்காங்க
போல, அதனால் ஹேர் ஸ்டைல மட்டும் மாத்திகிட்டாரு.

கதையில் பெண்கள் பின்னாடி சுத்துவது, கொஞ்சம் பொறுப்பில்லாத
பையன் என அவரின் பழைய படங்களின் நெடி அதிகம்.

பிராகாஷ் ராஜும், சித்தார்த்தும்(தகப்பன்,மகன்)
வரும் காட்சிகள் ”பொம்மரில்லு”வை ஞாபகப்படுத்துகின்றன
என்றால் ரம்யா கிருஷ்ணனும்,சித்தார்தும் வரும்
காட்சிகள் எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமியை
ஞாபகப்படுத்த தவறவில்லை.



படத்தின் கதைக்கு இந்த விக்கிபீடியாவை பாருங்கள்.

பல இடங்களில் அலுப்புத் தட்ட ஆரம்பித்துவிடுகிறது.
இண்டர்வெல் வரைக்குமே தாங்கமுடியவில்லை.

தன் தந்தையையும் தாயையும் இணைக்க சித்தார்த்
எடுக்கப்போகும் நடவடிக்கைகளாவது நன்றாக இருக்கும்
என்று பார்த்தால் செம சொதப்பல். இன்னும் சிறப்பாக
காட்சிகள் கொடுத்திருந்தால் அவர்கள் சொல்ல வந்த
மெசெஜ் நன்றாக மனதில் பதிந்திருக்கும்.

படத்தில் பிரம்மானந்தம் வரும் காட்சிகள்
அப்ளாஸ் அள்ளிச் செல்கிறது.

GACHIBOWLI DIWAKARஆக கலக்குயிருக்கிறார்
பிரம்மானந்தம். அவருக்கு என் மனமார்ந்த
பாராட்டுக்கள்.


”பேசாம ஹோட்டலில் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்”,அப்படின்னு
அம்ருதா சொல்ல நாங்கள் ஆஷிஷை ஜாலியாக முறைத்தோம்.
என் தங்கையோ கிளைமாக்ஸ் என்ன வென்று்? என்னைக் கேட்க
”நீ படம் பாக்கலியா?” என்றதற்கு,” போரடிக்கவே தூங்கிட்டேன்க்கா!!!”
என்றாள். இதைக்கேட்டு சிரித்துக்கொண்டே வெளியே வந்தோம்.

டெக்கான் க்ரோனிகல் இதழ் இணையத்தில்
இந்தப் படத்தைப் பற்றி கொடுத்திருக்கும்
விமர்சனம் இது:
The story is just another predictable Tollywood saga where you inevitably know what the next scene will be. The father-son scenes between Sidharth and Prakash Raj reminds one of their previous film Bommarillu and lacks complete originality. Music by Shanker-Ehsaan-Loy is mediocre. Only Bramhanandam and Venu Madhav manage to tickle the funny bone of viewers.
The only thing impressive is the cinematography. It is a visual treat to watch the pretty song sequences. Overall, the movie is a blend of many stereotypical Tollywood love stories, making it a forgettable, light-hearted weekend watch.


சரி இதுக்கு ஆண்டவன் ஏன் எங்களை காப்பாத்தணும்னு?
கேக்கறீங்களா?? வர்றேன். அந்த மேட்டருக்கு வர்றேன்.

இப்ப நம்ம கோலிவுட்டில் தெலுங்குபடத்தை ரிமேக்குவதான்
ட்ரெண்ட். அந்த வரிசையில் இந்தப் படமும் தமிழில் வர
விருக்குதாம்!!!

தெலுங்கில் சூப்பர்ஹிட் படமான”சந்தமாமா”
தமிழில்”அ,ஆ,இ,ஈ” எனும் பெயரில் வந்தது.
(இந்தப்படத்துக்கு ஏன்ப்பா யாரும் விமர்சனமே
எழுதலை???!!)

பாடல் காட்சிகளை பார்க்கும்பொழுதே “சந்தமாமா
பாடல்கள் எங்கே? இந்தப் பாடல்கள் எங்கேன்னு?”
வருத்தப்பட்டேன். நல்ல கதையம்சம் உள்ள
படத்துக்கே இந்தக் கதின்னா ”கொஞ்சம் இஷ்டம்”
படமெல்லாம் சொல்லவே வேணாம்.

அதனால்தான் உங்கள் அனைவரையும்
ஆண்டவன் காப்பாத்த வேண்டிக்கொண்டேன்.

மொத்தத்தில் KONCHAM ISHTAM KONCHAM KASHTAM.
படம் பார்த்த எங்களின் கமெண்ட் ”கொஞ்சம் இஷ்டம்
எக்குவ கஷ்டம்”
:)))) (எக்குவ- நிறைய)

Monday, November 10, 2008

புதியதோர் உலகம்

மெல்லிசை பாடல்கள்,
அருமையான திரைக்கதை,சிறந்த பாத்திரப்படைப்பு,
அதை உணர்ந்து நடித்திருக்கும் நடிகர்கள்,
இப்படி ஒரு அற்புதமான கலவையாய் ஒரு
திரைப்படம்.
telugu
ஹாப்பி டேஸ் ”சந்து” வருன் சந்தேஷ்,
ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு
ஜோடியாக ஸ்வேதா( குழந்தை நட்சத்திரமாக
இருந்த இவர் ஹீ்ரோயினாக நடித்திருக்கும் முதல்
திரைப்படம் இது), மகனை நண்பனாக வளர்க்கும்
தந்தையாக பிரகாஷ் ராஜ், அன்பை பொழியும்
தாயாக ஜெய்சுதா.




கதை இதுதான்:
பிரகாஷ் ராஜ், ஜெயசுதா தம்பதியரின் மகன்
வருன் ரெசிடென்சியல் பள்ளி ஒன்றில் தங்கி
ஜூனியர் காலேஜ் படிப்பு படித்துக்கொண்டிருக்கையில்
அங்கு வந்து சேரும் பணக்காரப் பெண் ஸ்வேதாவுடன்
காதல் கொள்கிறார். காதல் கசமுசா வெளியே கசிய
பள்ளி்யிலிருந்து அழைத்துச் செல்லப்படுகிறார்
ஸ்வப்னா, இருவரும் எப்படி இணைகிறார்கள்?
என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.



டீன் ஏஜ் பையனின் காதல் என்றது வெறும்
காதல் சம்பந்தப் பட்ட படம் என்று சொல்லிவிட
முடியாது. பாத்திரப் படைப்பு அப்படி.

பிஸிக்ஸ் மாஸ்டர் கதா பாத்திரம் மிக
அருமை. பாலு,ஸ்வப்னா காதலை
தெரிந்துகொண்ட அவர் வகுப்பில்
டீன் ஏஜ், 20 - 30, 30 +
என பருவங்கள் சம்பந்தமாக சொல்லும்
வார்த்தைகள் சத்தியமான நிஜம்.






டீன் ஏஜ் மகன் பெற்றோரிடமிருந்து எப்படி
மெல்ல விலகுகிறான், அதனால் பெற்றோரின்
மனநிலை என்ன? என்பதை மிக அழகாக
சித்தரித்துள்ளார் இயக்குனர்.

தந்தை மகனின் பாசப் பிணைப்பை மிக அழகாக
காட்டியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் அட்டாலா.


பள்ளியிலிருந்து 1 மாதத்திற்கு வெளியேற்றபப்ட்டதை
சொல்லாமல் பாலு மறைத்ததை பிரகாஷ் ராஜ்
தெரிந்துக்கொள்ளும் போது ஒரு வசனம் சொல்வார்.
மிக அருமை.” அவனை இது வரை அடித்தது
கிடையாது. வெறும் அன்பை மட்டுமே காட்டி
இருக்கிறேன். இப்போதும் அன்பை மட்டுமே
காட்டப்போகிறேன். அவன் அதை உணர்வான்”.

இப்படிச்சொன்னவரிடம் கடைசிவரை உண்மையைச்
சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போய்
ஸ்வப்னாவுடன் வாழ நினைக்கிறான்.

வெளியூர் செல்லும் தந்தையை ரயிலில் ஏற்றிவிடப்
போகும் காட்சி மிக அருமை. தந்தையை
ஏற்றிவிட்டு வந்து தான் ஓடிப்போகு பொழுது
மறந்துவிட்டு போன சட்டை ஒன்றை (காதல் சின்னம்)
எடுக்க வரும் பாலுவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சிதான்
கிளைமாக்ஸ்.






படத்தின் இறுதியில் ஒரு வசனம் சொல்வார்கள்.
அது மிக அழகான, ஆழமான அர்த்தம் கொண்ட
வார்த்தைகள்.

“ டீன் ஏஜ் வயதில் ஈர்ப்பு அதிகம். ஆனால்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நல்லதா?
கெட்டதா? என்று யோசிக்கவும். பெற்றவர்கள்,
பிள்ளைகள் இருவரும் வேண்டுவது ஒன்றே.
அது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை ஜாக்கிரதையாக
தன் பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யும்
பெற்றோர்களை பிள்ளைகளும், பிள்ளைகள்
விரும்பும் சந்தோசத்தில் இருக்கும் நிஜத்தை
பெற்றோர்களும் உணர்ந்தால், இந்த உலகமே
புதியதொரு தங்கமான உலகம் ஆகிவிடாதா”
என்பதே அது.

உன்னதமான வார்த்தைகள்.

Thursday, September 25, 2008

அந்த நால்வர்.

தெலுங்கு திரையுலகில் நான் மிகவும் விரும்பும் நடிகர்
ராஜேந்திர பிரசாத். இவரது பலப்படங்கள் நகைச்சுவையுடன்
நல்ல மெசெஜ்களைத் தரும் திரைப்படங்கள். மனது
நிறைய வைக்கும் சினிமாக்கள் இவரது பிளஸ்.




லேடீஸ் டெய்லர், மேடம், மிஸ்டர்.பெல்லாம் போன்ற
200 திரைப்படங்கள் நடித்தவர் ராஜேந்திரபிரசாத்.
காமெடி கிங்காக அறியப்பட்ட இவர் நடித்த ஒரு
திரைப்படம் மிக வித்தியாசமானது.

2004ஆம் ஆண்டு வெளியான ஆ நலுகுரு (அந்த நால்வர்)
ஆந்திர அரசின் நந்தி விருது வென்ற திரைப்படம்.
சிறந்த நடிகருக்காக நந்தி விருதை ராஜேந்திர
பிராசாத்திற்கு பெற்றுத் தந்த திரைப்படம்.




தனது குடும்பத்தை நேசிக்கும் அதே அளவு தனது
தேசத்தையும், அதன் மக்களையும் நேசிக்கும் மனிதனாக
ராஜேந்திர பிரசாத். தனது சம்பாதியத்தின் சரி பாதியை
சமூகத்திற்காக செலவு செய்பவர்.

இறைவன் தந்திருக்கும் இன்னொரு நாளை கொண்டாடும்
ராஜேந்திரபிராசாத் காண இதோ வீடியோ.




தந்தையின் கருத்திற்கும் கொள்கைகளுக்கும் எதிர்
கருத்து கொண்ட பிள்ளைகளுக்காக கணவனை
பகைத்துக்கொள்ளும்
மனைவியாக ஆமனி.

உற்ற தோழனாகவும் மகனுக்காக சக்திக்கு மீறி செலவு
செய்யும் தகப்பானக சுபலேகா சுதாகர்.

அடகு இல்லாமல் சல்லிக்காசு கூடத் தராத,
பக்கத்து வீட்டில் எரிகிறது என்றால் தன் வீட்டில்
தண்ணீரை ஊற்றி பாதுகாத்துக்கொள்ளும்
பிசினாரியாக கோடா ஸ்ரீநிவாஸ்(கிளைமாக்ஸில்
கலக்கிவிட்டார் கோட்டா)

கோடாவின் கஞ்சத்தனத்திற்கு உதாரணமாக
ஒரு காமெடி சீன்.



தான் கடன் கொடுத்தது தன் வீட்டாருக்கு கூடத்
தெரியக்கூடாது என்று விரும்பு மஸ்தான்பாய்
கதாபாத்திரம், சந்திர சித்தார்த் அவர்களின் இயக்கத்தில்
ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அருமை.



கதை இதுதான்.தன்னால் இயன்றவரை மக்களுக்கு
உதவுகிறார் ரகுராமய்யா (ராஜேந்திர பிரசாத்).
லஞ்சம் கொடுப்பதும் தவறு வாங்குவதும்
தவறு என நினைப்பவரின் பிள்ளைகள் (2 மகன்+1 மகள்)
உத்தியோகத்திற்காகவும், வெளிநாட்டிற்கு செல்வதற்காகவும்
தலா 5 லட்சம் பணம் கொடுக்கச் சொல்கிறார்கள்.

தரமறுக்கும் தந்தையை மரியாதை குறைவாக
நடத்துகிறார்கள். பிள்ளைகளுக்காக மனைவியும்
பரிந்து பேசி வேதனைப் படுத்துகிறாள்.

தனது கொள்கைகளை தள்ளி வைத்துவிட்டு
கோடய்யாவிடமும் (கோடா ஸ்ரீநீவாஸ்),
மஸ்தான் பாயிடமும், தவிர அலுவலகத்தில்
இருந்து கடன் பெற்று பிள்ளைகளுக்குத் தருகிறார்.

தனது கொள்கைகளை துறந்த துயர் தாங்காமல்,
தானும் கடன் காரனாகிவிட்டோமே என்று
வேதனையாலும் தற்கொலை செய்து கொள்கிறார்.

மனைவியும், பிள்ளைகளும் ரகுராமய்யாவை
பற்றி இறுதியில் எங்கனம் தெரிந்து கொள்கிறார்கள்
என்பதுதான் திரைப்படம்.

இறந்த பிறகு சுமக்க 4 பேர் வேண்டும். அவர்களையாவது
சம்பாதித்து வைத்துக்கொள் என்பார்கள் முன்னோர்கள்.
ரகுராமய்யாவுக்கு நால்வர் அல்ல 4000 பேர் வந்தது
மனதைத் தொட்டது.

இறந்து கிடக்கும் ரகுராமய்யாவை அழைத்துச் செல்ல
எமகிங்கரர்கள் வர அவர்களிடம் கெஞ்சி தனது
அந்திமக்கிரியைக் காணவேண்டும் என்று
கேட்டு அதை பார்த்துவிட்டு பிறகே மேலுலகம்
செல்வதாக கதையை அமைத்திருக்கும் பாங்கு
மிக அருமை.

இறந்த பிறகு அவரின் குரல் யாருக்கும் கேட்காது
எனினும், தனது மனதை அடுத்தவர்களுக்கு
தெரியப்படுத்த துடிக்கும் துடிப்பில் ராஜேந்திர
பிராசாத்தின் அருமையான நடிப்பு வெளிப்படுகிறது.



கிளைமாக்ஸ் பாடல் காட்சி.



கோடா ஸ்ரீநீவாஸின் அற்புதாமான நடிப்பில்
திரைப்படத்தின் கிளைமாக்ஸ். சிம்பிளி சூப்பர்ப்.

Monday, July 21, 2008

யுவ சாம்ராட் நாகி ( நாகார்ஜுனா)

இதயத்தை திருடாதே, சிவா ஆகிய படங்களை
மறந்திருக்க மாட்டீர்கள்.



அமலாவிடம் காதலைச்சொல்லும் அழகு
இந்தப் பாடலில் தெரியும்.




சந்தோஷம் திரைப்படத்தில் அழகான பாடல் ஒன்று.




அடித்து தூள் கிளப்பிய புயல், அமைதியாக
அன்னமாச்சாரியராக நடித்தது நம்ப முடியவில்லை.
அருமையான படம், அற்புதமான நடிப்பில் நாகி.



அன்னமய்யாவைப் போலவே ராமதாஸராக நடித்த
இந்தப்படமும் அருமை. யூ டூயூபில் இந்தப் படத்தின்
பாடல்களை பார்க்கத் தவறாதீர்கள்.





இக்சுவாகு குல திலக - ஆஹா..

நனு ப்ரோவமனி சொப்பவே சீதம்ம தல்லி ( எனை காப்பாற்றச்
சொல்லடி சீதா தாயே ).

E teruganou : Sri Ramadasu

சிரு, சிறுத்தை, நடனம்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடனம்
சிம்பிளி சூப்பர்ப்.

கிளாசிக்கல் டான்ஸில் இந்தப் படம்
ஆபத்பாந்தவுடு ( கே.விஸ்வநாத் இயக்கியது)
இவருக்கு விருது வாங்கித் தந்த படம்.



சிரஞ்சீவியின் மழை நடனம்.



ஆட காவாலா? பாட காவாலா? :)





ஹரிஹரனின் குரலில் இந்தப் பாடலைக் கேட்டு
மகிழலாம். (கல்கத்தாவின் அழகைச் சொல்கிறது
இப்பாடல்). முகபாவம் சிருவால்தான் இம்புட்டு
அழகாக முடியும்.


Wednesday, February 13, 2008

Santhosham-Nuvvante Nakishtamani

காதல் சுகமானது.

நான் மிகவும் விரும்பும் இப்பாடல்
தெலுங்குப் படமான "சந்தோஷம்"
என்ற திரைப்படத்திலிருந்து "நுவ்வண்டே நாகிஷ்டமனி) (நீ என்றால் எனக்கு விருப்பம்).

காதல் எப்போதும் அழகானதுதான் என்றாலும், காதலித்து திருமணம் செய்து கொண்ட சிலர் ITS A LOVE MARRIAGE, BUT AFTER MARRIAGE THERE IS ONLY MARRIAGE NO LOVE என்று
சொல்லும் விதத்தில் இருப்பார்கள்.

திருமணத்திற்கு பிறகும் காதல் மிச்சம் இருக்க வேண்டும். காதல் இல்லையேல் வாழ்வில் இனிமை இல்லை.

நான் மிகவும் விரும்பும் இப்பாடலின்
தமிழாக்கம் இதோ.....

என் முதல் சுவாசம் சொன்னது நீ எனக்கு இஷ்டமானவள் என்று.
நீதான் என்னுலகம் என்று உணர்த்தியது என் ஆசை.
உன் சிரிப்பில் சுருதி சேர்த்து பாடவா!
உன் நிழலில் நானும் ஆடவா?
சந்தோஷம் என்று ஸ்வரம் சொன்னது மனது.


நீ என்னுடன் இருந்தால்,
எனக்கு வழிகாட்டி நடந்தால்,
எதிர் வரும் ஒவ்வொரு கனவும்,
நிஜமாகிப் போகாதா?
உன்னை நான் பார்த்துக்கொண்டிருந்தால்
ஏற்படும் உணர்ச்சியில் நிஜம்கூட
கனவாகிறது.
இருக்கின்ற வரங்கள் எல்லாம்
என்னிடம் சேர்ந்ததுவே.
இனி என்ன கோரிக்கை வேண்டும்?


இந்தக்காலம் என்றும் நம் சொந்தமாகிப் போகவேண்டும்,
சின்னதாக, சன்னமாக கைநழுவ
விடாதே!
நான் செய்யும் ஜாலத்தால்
நாளையும் நமதாகி, நம் குழந்தையாய் புதிதாய் வருகிறது
நம் காலம்.
நீ எனக்குத் துணையாய், நான்
உனக்கு நிழலாய், ஒவ்வொரு
நிமிடமும் இனியதாய்,
இப்படியே இருந்தால் போதுமே!