Showing posts with label ஊர் சுத்தினது-14. Show all posts
Showing posts with label ஊர் சுத்தினது-14. Show all posts

Thursday, January 22, 2015

மாலத்தீவு பயணக்குறிப்புக்கள் - 2

நாம எடுத்துக்கிட்டு இருக்கறது ஃபுல் பேக்கேஜ். அதனால டீ/காபியோட ரெண்டு குக்கீஸ் அல்லது கேக் பீஸ் கொண்ட மாலை நேர விருந்தும் உண்டு. குக்கீஸ் ஓகே. டீயும் நல்லா இருந்துச்சு. அயித்தான் காபி கலந்து கொடுக்க சொல்லி குடிச்சாக. கடல்ல நீந்தி உயிரினங்களை பாக்கணும் இதான் பிள்ளைங்க ப்ளான். ஆனா அது சாத்தியமில்லைன்னு சொன்னா திரும்ப எப்பப்பா வரப்போறோம் போவோம்னு ஒரு செல்ல அடம். :)

அங்கே இருக்கறவங்களே இப்ப வேணாம்னு சொல்ல மகனை பாத்தேன். பாவமா இருக்கு. எம்புட்டு ஆசையோட வந்தாப்லனு. ஆனா என்ன செய்ய. சரி வாங்க சும்மா சுத்திட்டு வருவோம்னு  ரிசார்டை ரவுண்ட் அடிக்க போனோம்.
அங்கே பேபி ஷார்க்குகள் சர்வ சாதாரணமா இருக்கும்னு அயித்தான் சொல்ல கேள்வி. முன்பு அயித்தான் போயிருந்த போது ஹில்டன் ரிசார்ட்ல ஜகஜமா வருமாம்.

இந்த ரிசார்டோட அமைப்பு இப்படித்தான்.



தண்ணியோட கலரை வெச்சு ஆழம் இருப்பதை கண்டு பிடிக்கலாமாம். ரிசார்ட்டை சுத்தி நடந்து வரும்போது ஒரு பக்கம் ரொம்ப ஆழம். ஆனா அடுத்த பக்கம் கடல்ல 2 கிமீ வரைக்கும் நடக்கலாம்.

தண்ணியை விட்டு வெளிய வர மனசே இல்லை. அலைகள் காலில் முட்டி மோத இதமா இருந்தது. இதமான வெயில் கூட. பசங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நிறைய்ய வெளிநாட்டுக்காரங்க அங்க இருந்தாங்க. சில பேர் நீச்சல் அடிச்சு ரொம்ப தூரம் வரைக்கும் போய்கிட்டு இருந்தாப்ல.  சுத்தமான தண்ணி, குப்பை கூளம் இல்லாத பீச். ஆனந்தமா தண்ணியில விளையாடிட்டு ரூமுக்கு வந்து ஃப்ரெஷப் ஆனோம். அதுக்குள்ள இருட்ட ஆரம்பிச்சிருச்சு.

இந்த பாதை எங்க ரூமுக்கு கிட்ட தான். இதுல வந்து உக்காந்துகிட்டு ஜம்பிங் ஜப்பாக்குகளா குதிச்சு ஆட்டம் போட்டுகிட்டு இருந்த மீன்களை பார்த்து ரசிச்சு கிட்டு இருந்தோம். கையோட கேமிரா கொண்டு போயிருந்தோம். பவள பாறைகளை போட்டோ எடுத்தோம்.




கலர் கலரா, சைஸ் வாரியா மீன்கள்.பேபி ஷார்க் தட்டு படுதான்னு பாத்தோம். ஆனா பார்க்க முடியலை. போட்ல நாம பிரயாணம் செய்யும்போதே டால்பின் பார்க்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னாங்க. அந்த மாதிரி ஏதும் பார்க்கலை. ஆனா ரிசார்ட்ல நின்னு பாக்கும்போது ஒரு கப்பல் போய்கிட்டு இருந்தது. அது பக்கத்துல 2 தடவை டால்பின்கள் எம்பி குதிச்சதை பார்த்தது சந்தோஷமா இருந்தது.

இதுதான் பேபி ஸ்டிங் ரே. நம்ம ஜியாக்ரபிகல் சேனல்ல ஸ்டீவ் இர்வின் வருவாரே. அவரை  ஸ்டிங் ரே தாக்கி தான் இறந்தார்.  இதையெல்லாம் பாத்ததுக்கப்புறம் snorkeling செய்யணும்ங்கற ஐடியாவையே விட்டுட்டோம். வந்தோம். நல்லா ரிலாக்ஸ்டா இருந்துட்டு ஆனந்தமா கிளம்பி போவோம்னு சொன்னதும் பசங்களும் ஓகே சொன்னாங்க.

இரவு சாப்பாடும் எங்களுக்குன்னு ஷ்பெஷலா வந்தது. ரொம்ப வேணாம்ங்க நாங்க நாலு பேருதான் அப்படின்னு முன்னாடியே சொல்லியிருந்தோம். ஆனாலும் பாசம் ஜாஸ்தியாகி நிறைய்ய வெரைட்டி கொண்டாந்து வெச்சாங்க. எதுக்குங்க இம்புட்டுன்னு சொல்ல,  எங்க விருந்தாளி நீங்க உங்களை நல்லா கவனிக்க வேண்டியது எங்க கடமைன்னு சிரிச்சுகிட்டே சொன்னார் அந்த ஸ்ரீலங்கன் ரெஸ்டாரண்ட் மேனேஜர்.

சாப்பிட்டு முடிச்சதும் ரூமுக்கு போக வேணாம், கொஞ்ச நேரம்  பீச்ல காத்து வாங்கலாம்னு சொன்னேன்.
இந்த மாதிரி ரெண்டு ஊஞ்சல் இருந்தது. நானும் அயித்தானும்  ஒரு ஊஞ்சல்ல உக்காந்து ஆடிக்கிட்டு இருந்தோம். :) இதமான காத்து. பசங்களும் இன்னொரு ஊஞ்சல்ல உக்காந்து எஞ்சாய் செஞ்சு கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு பீச் சேர்கள் போட்டு வெச்சிருந்த இடத்துக்கு போனோம். அங்கே உக்காந்துகிட்டு தூரத்துல தெரியற தாஜ் ரிசார்ட் விளக்குகளை பாக்குறது, ராத்திரியில மீன் பிடிக்க போன போட் வர்றது பாக்கறதுன்னு பொழுது போக்கினோம். கடலோரம் காத்து வாங்கி கிட்டே வானத்துல நட்சத்திரங்களை பார்க்கிறது ஒரு சுகம் தாங்க.



Wednesday, January 21, 2015

மாலத்தீவு பயணக்குறிப்புக்கள்

போட்டுக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியதாச்சு. அதுக்குள்ள அயித்தானின் நண்பர் கிட்ட ஏற்கனவே மினரல் வாட்டர் பாட்டில்களும். லோக்கல் சிம்மும் வாங்கி வைக்க சொல்லியிருந்தோம். மறக்காம பாட்டில்களை ஒரு பேக்கில் போட்டு கொடுத்திருந்தார். ( தண்ணி பாட்டில் செம விலை ரிசார்ட்டில்)

அயித்தான் அடிக்கடி போய் வந்து கிட்டு இருந்தவர் என்பதால அங்கய நிலவரம் தெரியும். விலை வாசியும் தெரியும். அதைவிடவும் முக்கியமானது சாப்பாடு. நாம வெஜிட்டேரியன். அப்படி இருந்தும் சில நாடுகளுக்கு போயிட்டு வந்திட்டோம். :)) அயித்தானின் நண்பர் தான் நாங்க போக விருந்த ரிசார்ட் பத்தி சொல்லி அங்கயே புக்கிங் செஞ்சு கொடுத்திருந்தாப்ல. சாப்பாடு பத்தி கவலைப்பட வேணாமாம். காரணம் அங்கே இருப்பது நம்ம ஸ்ரீலங்கன் செஃப். அவர் மூலமாத்தான் புக்கிங் எல்லாம் செஞ்சிருக்காரு நண்பர். அவர்கிட்ட சொல்லி இவங்க வெஜிட்டேரியன் ஃபுட் தான் சாப்பிடுவாங்கன்னு சொல்ல அதெல்லாம் நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டாப்ல. தாஜ் ரிசார்ட், ஹில்டன் ரிசார்ட் எல்லாம் இருக்கும். எல்லாம் செம காஸ்ட்லி. நாங்க புக் செஞ்சிருந்தது. எம்புது வில்லேஜ் ரிசார்ட் ( EMBUDU VILLAGE)

வாட்டர் பங்களோவெல்லாம் இருக்காம். ஆனா நாங்க தேர்ந்தெடுத்திருந்தது காட்டேஜ் டைப். ஒரு ரூமுக்கு 2 பேர்தான். நாங்க 4 பேர் என்பதால ரெண்டு ரூம் புக் செஞ்சிருந்தோம். ரிசார்ட்டுக்கு சொந்தமான போட் வந்தது. இங்க போட்டை தோனின்னு சொல்றாங்க. ரிசார்டுக்கு  சொந்தமானது கொஞ்சம் பெரிய சைஸ் தோனி.

அம்ருதம்மா ஏதும் பயப்படுவாப்பிலயோன்னு நினைச்சுகிட்டு இருந்தோம். ஸ்பீட் போட்டுக்கு இது பரவாயில்லைன்னு சொல்லிட்டு பயணத்தை ரசிக்க ஆரம்பிச்சிட்டாப்ல. போட்டோக்கள் எடுத்துக்கிட்டோம். மாலத்தீவு ஏர்போர்ட்லேர்ந்து கரெக்டா 30 நிமிட பயணத்துல எம்புது வில்லேஜ் இருக்கு.  கண்ணுக்கு எட்டுற தூரத்துல தாஜ் ரிசார்ட்ஸ் இருக்கு.  Embudu ரிசார்ட்டுக்கு வந்திட்டோம்.  இதான் ரிசார்டுக்குள்ள போகும் பாதை. போட் வர்றது தெரிஞ்சவுடனேயே பெல் பாய்ஸ் ரெடியா வர்றாங்க. போட்டிலேர்ந்து நாம் இறங்க உதவி செஞ்சிட்டு நம்ம லக்கேஜுகளை வெளிய கொண்டு வந்து வைக்கறாங்க.


லக்கேஜுகளும் நம்ம கூட வருமோன்னு நினைச்சா இல்ல நீங்க ரிஷப்ஷன் போங்கன்னு சொல்ல போனோம். ஹோட்டல் ரிஷப்ஷங்கற பிம்பத்தை உடைச்சு எந்த ஆடம்பரமும் இல்லாம அந்த ரிசார்ட்ல இருக்கற அழகு வெள்ளை மணல்ல  லாபி மாதிரி அமைச்சு சேர்கள் போட்டு வெச்சிருக்காங்க. டைனிங் ஹால், ரூம்ஸ் தவிர எங்கயும் இந்த வெள்ளை மணல் தான். அதுல கால் புதைய நடக்கறது சுகானுபவம்.


நம்மளுடைய டீட்டெயில்ஸ் ஒரு ஃபார்ம்ல எழுதி கொடுக்கணும். அதுல நம்ம ஃப்ளைட் எத்தனை மணிக்கு, எந்த ஃப்ளைட்ல திரும்ப போறோம் எல்லாமும் எழுதணூம். (ஏர்போர்டுக்கு போட் சரியான நேரத்துக்கு அனுப்பனுமே) வெல்கம் ட்ரிங்கா க்ரீங் டீ வந்தது குடிச்சிதுக்கப்புறம் ரூம்  சாவி கொடுத்தாங்க. வெளிய வந்தா பொட்டிகளை வெச்சுக்கிட்டு பெல்பாய்ஸ் வெயிட்டிங். நம்ம பெட்டிகளை நாம போய் அடையாளம் கண்டு சொல்லணும். அதை தூக்கியாந்து ரூம்ல வைக்கறாங்க. அவங்களுக்கு டிப்ஸ் கொடுத்து அனுப்பிட்டு  ரிலாக்ஸா உக்காந்தோம். ஏன்னா? எங்களுக்கு ஒரு டென்ஷன் இருந்துக்கிட்டே இருந்தது. அது  early check in. மதியம் 2 மணிக்கு தான் செக்கின் டைம். எங்க ஃப்ளைட் டிலே ஆனதால நாங்க மாலத்தீவு சிட்டிய சுத்தி பார்க்க நினைச்சிருந்தது கேன்சல் ஆச்சு. அதனால சீக்கிரமே ரிசார்ட்டுக்கு வந்திட்டோம். ரெண்டு மணிக்குத்தான் ரூம் கொடுப்பேன்னு அடம் பிடிக்காம ரூம் கொடுத்தது ரிலாக்ஸானிச்சு.

ரூம்ல ஏசி மட்டும் தான். ஃபேன் கிடையாது. ரொம்ப பெரிய ரூம்னு சொல்ல முடியாது.



தனிவீடு மாதிரி அழகா இருக்கு காட்டேஜ் ரூம்ஸ். வாசலிலேயெ துணி காய போட்டுக்க கொடி, ஸ்டாண்ட், ரிலாக்ஸா உட்கார 2 சேர் எல்லாத்தையும் விட மண்ணு போக காலைக்கழுவிகிட்டு உள்ளே போக ஏதுவா பைப் அதுக்கு சின்னதா ஒரு தொட்டின்னு கலக்கலா இருந்துச்சு. எங்களுக்கு எதிர் சைட்ல இருந்த காட்டேஜ் ஆஷிஷ் அம்ருதாவுக்கு. லக்கேஜை மட்டும் அங்கே வெச்சிட்டு எங்க ரூம்ல உக்காந்தாங்க பசங்க. கொண்டு போயிருந்த சிம்மை மொபைலில் போட்டோம். ரீச்சே இல்லை. அயித்தானும் ரொம்ப நேரம் ஏதேதோ செஞ்சு பாத்தாப்ல. ரீச்சே இல்லைன்னதும். நல்லதா போச்சுன்னு எந்த வித டிஸ்டபர்ன்சும் இல்லாம நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சுக்கிட்டோம்.

அயித்தான் போய் அந்த செஃபை பாத்திட்டு வரலாம்னு சொல்ல, ரூம்லயே இருப்பானேன்னு நாங்களும் கூட போனோம். செஃப் லீவுல இருக்கறதாகவும், ஆனா அவர் இந்த மாதிரி கெஸ்ட் வர்றாங்கன்னு சொன்னாங்கன்னு ரெஸ்டாரண்ட் மேனேஜர் சொன்னார். அவங்களும் ஸ்ரீலங்கன்ஸ் தான். அயித்தானையும் தெரியும்னு சொன்னாங்க.  சும்மாவா மார்கெட் நல்லா கஷ்டபட்டுல்ல உழைச்சு இருக்கீங்க. ஒவ்வொரு கஸ்டமருக்கும் உங்களை நல்லாத் தெரியுமேன்னு சர்டிபிகேட் வேற கொடுக்க, அந்த ரிசார்ட் ஜீம் அங்கே வர அவரும் அயித்தானை சந்திச்சிருப்பதா சொல்லி தன்னோட கேபினுக்கு அழைச்சு கிட்டு போயி அயித்தானோட பேசிக்கிட்டு இருந்தார்.

நாங்க ரிசார்ட்ல என்னென்ன ஆக்டிவிட்டிஸ் இருக்குன்னு விசாரிச்சுகிட்டு இருந்தோம்.  பசங்களுக்கு தண்ணியில டைவிங் செய்யணும்னு. ஆனா அதுக்கெல்லாம் முறையா பயிற்சி எடுத்துக்கணு, அதுக்கே ரெண்டு நாள் ஆகும், தவிரவும் கடல் கொஞ்சம் ர்ஃபா இருப்பதால அலைகள் ஜாஸ்தியா இருக்கு. இந்த சமயம் சரியில்லைன்னு ரிஷப்ஷன்ல சொன்னாங்க. அயித்தான் ஜீ எம் கிட்ட பேசிட்டு வந்தாப்ல.

நாளைக்கு மாலத்தீவு சிட்டிக்கு போட் ஏதும் போவுதான்னு பாத்து சொல்றேன். நீங்க அதுல போயிட்டு சிட்டியை பாத்திட்டு வாங்கன்னு சொன்னாராம். இலவசமா. இல்லாட்டி ஒரு ஆளுக்கு 70 டாலரோ என்னவோ சார்ஜ்.  லன்சுக்கு போனோம்.

புஃபே டைப் தான். சரி அதுல என்ன வெஜிட்டேரியன் இருக்கோ சாப்பிடலாம்னு எடுத்துக்கிட்டு வந்து உக்காந்தோம், ரெஸ்டாரண்ட் மேனேஜர் இருங்க உங்களுக்கு ஷ்பெஷல் வருதுன்னு ஸ்ரீலங்கன் அயிட்டங்கள், வெஜிடபிள் க்ரேவி, ரோட்டி எல்லாம்  ஷ்பெஷலா செஞ்சு கொடுத்திருந்தாங்க.
அருமையான சாப்பாடு வித் கெட்டித்தயிர். :))

சாப்பிட்டாச்சு.... அடுத்து  உண்ட மயக்கம் தொண்டனுக்கே உண்டே.... :)

படங்கள் உதவி: கூகுளார்



Monday, January 12, 2015

ஊர் சுத்தினது - 5 ( நனவான கனவு)

7.30 மணிக்கு ஃப்ளைட். 3 மணிநேரம் முன்னால இருக்கணும்னு சீக்கிரம் எழுந்திரிச்சு கு்ளிச்சு ரெடியாகினோம். டிரைவர் நேரத்தே வந்ததும் லக்கேஜ்களை ஏத்திட்டு மைக்கலுக்கு நன்றி சொல்லி கிளம்பிட்டோம்.
 ஏர்போர்ட்டுக்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சது ஃப்ளைட் 1 மணிநேரம் லேட்டுன்னு. சரி போகுதுன்னு லோட்டஸ் லவுஞ்ச்ல ரெஸ்ட் எடுக்கலாம்னு அயித்தான் கூட்டிப்போனாக. காலைச்சாப்பாடும் அங்கயே முடிச்சுக்கலாம்.
பசங்களுக்கு சீக்கிரமே சாப்பிட்டு பழக்கமாச்சே. அங்க என்னென்ன இருக்குன்னு பாக்க ஒரு ரவுண்ட் போனப்ப இன்ப அதிர்ச்சி.

 கிரிபாத்னு ஒரு அயிட்டம் இலங்கையில் ரொம்ப ஃபேமஸ்.  புத்தாண்டுக்கு கண்டிப்பா செய்வாங்க. தேங்காய்பாலில் சோறு செய்வது. அதோட லுனு மிரிச் வெச்சு சாப்பிட்டா நல்லா இருக்கும். ஆனா இந்த வாட்டி அதை சாப்பிடும் பாக்கியமே இல்லைன்னு நினைச்சுகிட்டு இருக்க, அந்த கிரிபாத் அங்கே லவுன்சில் இருந்தது. எனக்கும் ஆஷிஷுக்கும் செம குஷி.


சீக்கிரமே எந்திரிச்சதால தூக்கம் கண்ணை சுத்துது. சரின்னு கொஞ்ச நேரம் அங்கயே படுத்தேன். பசங்க கொஞ்ச நேரம் படுத்துட்டு பாட்டு கேட்டாங்க. போர்டிங்னு அறிவிப்பு வந்ததும் ரெடியாகி போனோம். இந்தியாவுக்கு திரும்பினோம்னு நினைச்சீங்களா இல்லையே!! இந்த வாட்டி என் கனவு நனவானிச்சு. எஸ்ஸு போனது கீழே போட்டோவுல பாருங்க.

யெஸ்ஸு இந்த வாட்டி சூப்பர் பேக்கேஜ் கிடைச்சிருந்தது. ஸ்ரீலங்கன் ஏர்லயன்ஸில் சென்னை, கொழும்பு, மாலே என அயித்தான் புக் செஞ்சிருந்தாங்க. எங்க அம்ருதம்மாவுக்கு தான் தண்ணி பயம் போயிருச்சுன்னு உறுதி சொல்லிட்டாங்களே.  அங்கன இருந்தப்பவே போகாம வந்திட்டம்னு புலம்புகிட்டு இருந்தேன். சரி வா இந்த வாட்டி போயிட்டு வருவோம்னு சொல்ல அதான் இந்த இலங்கை பயணம் வாய்ச்சது. ஆஷிஷ் அண்ணா காலேஜ் போறாங்களே, அப்புறம் அண்ணனுக்கும் தங்கைக்கும் ஒரு சேர லீவு கிடைப்பது கஷ்டமாச்சேன்னு தான் இந்த விடுமுறை. :)


அப்பாவும் மகளும் ஒரு ரோவுல, நானும் ஆஷிஷ் அண்ணாவும் ஒரு ரோவுல. விண்டோ சீட்ல உக்காந்து அண்ணா போட்டோவா எடுத்து தள்ளிட்டாரு. அதுலயும் மாலே ஏர்போர்ட்ல லேண்டிங் இருக்கே அந்த வீடியோ சூப்பர். ஆனா அதை யூ ட்யூப்ல ஏத்த முடியலை. நெட்ல தேடினப்ப கிடைச்ச வீடியோவை கொடுக்கறேன். சூப்பரா இருக்கு. கட்டாயம் பாருங்க.




காக்பீட் வ்யூல இந்த வீடியோ சூப்பரா இருக்கு.  ரன்வே இருப்பது ஒரு தீவு. அதான் ஏர்போர்ட். அது பக்கத்துலேயே இன்னொரு தீவு தெரியுது பாருங்க அது தான் மாலே சிட்டி.  மாலைகளின் தீவு தான் மாலத்தீவுன்னு மாறியிருக்கறதா சொல்றாங்க. சிங்கள மொழியில மஹிளா தீபமாம். அதாவது பெண்களின் தீவு. நிறைய்ய சுவாரஸ்யமான தகவல்கள் விக்கிபீடியாவுல இருக்கு பாருங்க.

ரொம்ப சின்ன ஏர்போர்ட் தான். hulhule தீவுல  North Male Atoll தான் இந்த ஏர்போர்ட் அமைஞ்சிருக்கு.  மொத்தம் 1.1942 குட்டி குட்டி தீவுகள் இருக்கு. அதுல 200 தீவுகளில் தான் மக்கள் வாழ்றாங்க. இப்ராஹிம் நசிர் சர்வதேச விமான நிலையம் இதான் விமான நிலையத்தோட பேர்.

விலைவாசி ரொம்ப ஜாஸ்தி மாலேயில். அயித்தான் முன்ன அங்கே மார்கட் வொர்க் செஞ்சிருக்காங்க என்பதால தெரியும். அங்கே அயித்தானோட நண்பர் ஒருத்தர் இப்பவும் இருக்கார். மாலே போவதுன்னு முடிவானதும் அவர்கிட்ட பேசி எங்க தங்கலாம் எல்லாம் ப்ளான் செஞ்சுகிட்டோம். தாஜ் ரிசார்ட் எல்லாம் இருக்கு. செம செம காஸ்ட்லி. நம்ம பட்ஜட்ல அடங்கற மாதிரி அதே சமயம் நல்லா எஞ்சாய் செய்யணும் அதுமாதிரி ஒரு ஹோட்டல் ஐலேண்ட் பாக்க சொன்னோம். சமீபத்துல அவங்க குடும்பத்தாரை கூட்டிகிட்டு போன ஹோட்டல் நல்லா இருந்ததாகவும் அதை பத்தின விவரங்களையும் அனுப்பி வெச்சிருந்தாப்ல. எங்களுக்கும் பிடிச்சிருந்தது. நாலு பேருக்கும் பேக்கேஜா எடுத்துகிட்டோம்.

ஏர்போர்ட்ல visa on arrival. அதனால பிரச்சனை இல்லை.  ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சு வெளிய வந்தா கடல் வான்னு வரவேற்குது. அயித்தானின் நண்பர் காத்திருந்தாப்ல. அவரை சந்திச்சு  பேசிட்டு, கடல் பேக்க்ரவுண்ட்ல போட்டோ எடுத்துக்கிட்டோம். அழகான நீலக்கலர்ல கடல் தண்ணி பாக்கவே அம்புட்டு அழகா இருந்துச்சு.

அங்கேயிருந்து நாங்க தங்கப்போற தீவுக்கு போகணும். அந்த ஹோட்டல்லேர்ந்து வரவேண்டிய போட் இன்னும் வரலை. சரி கொஞ்சம் நேரம் வெயிட் செய்வோம்.:)

தொடரும்.



Saturday, January 10, 2015

ஊர் சுத்தினது - 4

நாங்க போனதிலேர்ந்து லேசா தூறிக்கிட்டே இருக்கு. அதனால எங்கயும் போக வேணாம்னு இருந்தோம். ஆனா பசங்களுக்கு போட்டிங் போகணும்னு. கெஸ்ட் ஹவுஸுக்கு எதிர்லயே அழகான Gregory ஏரி.







போட்டிங்குக்கு ரேட்டு கேட்டா அரை மணி நேரத்துக்கு 3000 இலங்கை பணம்னு சொன்னாங்க. வேண்டவே வேண்டாம். அதுவும் இந்த மழை தூரல்ல போகாதீங்கன்னு தாமஸ் அண்ணேன் சொன்னாப்ல. ஆனாலும் பசங்க ஏரிகிட்ட போவோம்னு சொல்ல சரின்னு காரை எடுத்துகிட்டு கிளம்பினோம். டிரைவர் பார்க்கிங் பாத்துக்கறேன்னு சொல்ல, நாங்க உள்ளே நுழைஞ்சோம். அங்கே சைக்கிளிங் செய்யறதை பார்த்து அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் சைக்கிளிங் செய்யணும்னு ஆசை. ஏரிக்கிட்ட சைக்கிளிங்கான்னு எனக்கு பயமா இருந்தது. ஆனா போகணும்னு பசங்க. உள்ளே போய் பாத்தாதான் தெரியும் சைக்கிளிங் செய்ய இடம் நல்லா இருக்குன்னு.






ரெண்டு நாள் ஓடினதே தெரியலை. நேரா நேரத்துக்கு தாமஸ் அண்ணன் சாப்பாடு, டீ/காபின்னு கொடுக்க, ஆனந்தமா ரிலாக்ஸ் செஞ்சோம். போன் கால் ஏதும் இல்லை. செம ஜாலியா இருந்தது. அடுத்த நாள் காலையில் டிபன் சாப்பிட்டு கிளம்பினோம் கொழும்புக்கு. மழை எங்களை துரத்திக்கிட்டே வந்தது. போற வழியில கொம்பனித்தெரு முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டோம். நாங்க சிட்டி அவுட்டர்ல தங்கியிருந்ததால சிட்டில இருந்த எஃபகட் இல்லன்னு அம்ருதம்மா சொல்ல அவங்களுக்காக கால் ரோடில் ஒரு ரவுண்ட் அடிச்சோம். அப்பத்தான் கடலுக்குள்ள மண்ணயும், கல்லையும் கொட்டி 15 கீமீ உள்ள போய் புது நகரம் உருவாக்க போறாங்கன்னு டிரைவர் சொன்னார்.கெஸ்ட் ஹவுஸ் சேரும்பொழுது ராத்திரி ஆகிடிச்சு. டின்னர் பேக் செஞ்சு வாங்கிகிட்டே போனோம். ( எஸ்ஸு கொத்துதான்)  அதற்கப்புறம் சரியான மழை.

அடுத்த நாள்  பிள்ளைகளின் எலக்யூசன் டீச்சரை பார்த்து பேசிட்டு, எங்க ஃபேவரிட் ஹவுஸ் ஆப் பேஷன் போனோம். ஹவுஸ் ஆஃப் பேஷன் கடை முன்ன Duplication Roadல இருந்தது. விலைகள் ரீசனபிளா இருக்கும். தரமாவும் கிடைக்கும். ஆனா இப்ப D S Senanayake Mawathaல பெரிய கடையா மாத்திட்டாங்க. போய் பாப்போமேன்னு போனோம். விலைகள் கன்னாபின்னான்னு ஏறி இருக்குன்னு நட்புக்கள்லாம் சொன்னாங்க.  உண்மைதான். நாங்க வழக்கமா போற கடைக்கு போயிட்டு வந்த திருப்தியே இல்ல. :(  ஏதோ புதுக்கடைக்கு போயிட்டு வந்த எஃப்கட். ரகங்களும் அந்த மாதிரி. விலையும் ஏக்க சக்கம். அயித்தானுக்கு ஐபேட் பேக் மட்டும் நல்லா இருந்தது. சில டீ ஷர்ட்டுகள் வாங்கிகிட்டோம்.

அயித்தானுக்கு போர்ட் மீட்டிங்குக்கு நேரமாகவே சீக்கிரம் பர்ச்சேசிங் முடிச்சு கிளம்பினோம். மதியம் லன்ச் எங்க போகலாம்னு யோசிச்சோம். அயித்தான் ஆபிஸ் கிட்டயே லஞ்ச் பாத்துப்பதா சொல்ல நாங்க அவரை இறக்கி விட்டுட்டு பசங்க ஃபேவரிட் இடமான சென்சாலுக்கு வந்தோம். அங்கயே கிம்புல பன், வெஜிடபிள் ரோட்டி, டோனட் அப்படின்னு சிம்பிளா லஞ்ச் முடிச்சு நாங்க கெஸ்ட் ஹவுஸ் போய் ரெஸ்ட் எடுத்தோம்.

சாயந்திரமா கிளம்பி மெஜஸ்டிக் சிட்டி வந்தோம். அங்கதான் அம்ருதம்மா அவங்க ஃப்ரண்ட்ஸ்களை மீட் செய்ய ப்ளான் போட்டிருந்தாங்க. 4 பேர் வந்திருந்தாங்க. ஆஷிஷ் அண்ணாவோட ஃப்ரெண்டும் வர அவர் ஜாலியா ரவுண்ட் அடிச்சுகிட்டு இருக்க, அங்கே சின்னதா ஒரு பதிவர் சந்திப்பும் நடந்தது. நம்ம தென்றல் என் கீதம் சுதர்ஷ்ணி தன் பிள்ளைகளோட வந்திருந்தாங்க. பாவம் பாப்பாவுக்கு ஜுரம். டாக்டர்கிட்ட போயிட்டு அதோட வந்திருந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. கொடுமை என்னன்னா, காலையில எலக்க்யூசன் டீச்சரை பார்க்க போயிருந்தேன்ல, அந்த ஏரியாவுல அதே தெருவுல தான் சுதர்ஷிணி வீடும் இருந்திருக்கு. தெரிஞ்சிருந்தா பாவம் அவங்களை அலையவிடாம அங்கயே சந்திச்சிருக்கலாம்.

அயித்தானும் மீட்டிங் முடிஞ்சு வர, அவருடைய நண்பர் கால் செஞ்சாப்ல. நம்ம சிசில் அய்யே தான். கெஸ்ட் ஹவுஸ்ல பாக்க வர்றதா சொல்ல அவங்க குடும்பத்தினருக்கும் சேர்த்து டின்னர் பேக் செஞ்சு எடுத்துக்கிட்டு போனோம். அவங்க பசங்களும் வளர்ந்துட்டாங்க. அவங்க கிளம்பினதும் ரீ பேக்கிங் செஞ்சுட்டு சீக்கிரம் எந்திரிக்க அலாரம் வெச்சுட்டு தூங்க போனோம்.

7.30 மணிக்கு ஃப்ளைட்டாச்சே!!!...

தொடரும்



Friday, January 09, 2015

ஊர் சுத்தினது - 3

எப்பவும் ஊர் சுத்திட்டு வந்த உடனேயே சுடச்சுட பதிவுகள் வந்திடும். இந்த வாட்டி பாருங்க.. அந்தா இந்தான்னு கிட்டத்தட்ட 8 மாசம் ஆகப்போகுது.   போயிட்டு வந்ததை பதிஞ்சு வெச்சுக்காவவது இந்த பதிவு இருக்கட்டும்னு தொடரறேன்.

முந்தைய பதிவுகளுக்கு சுத்தினது 1, சுத்தினது2.

அழகான தூறலோடு அடுத்த நாள் காலையில் பயணம் புறப்பட்டோம். இந்த வாட்டி ரிலாக்ஸ் மட்டும்தான்னு முடிவு செஞ்சிருந்ததால நுவரேலியாவுக்கு புறப்பட்டோம். போற வழியில ஸ்பைஸ் கார்டன் போயி வெனிலா, மிளகு அப்படின்னு நிறைய்ய ஸ்பைஸஸ்  பிள்ளைகளுக்கு காட்டினோம். ஏற்கனவே பாத்திருந்தாலும் மறந்திட்டாங்கன்னு நினைக்கறேன். போறவழிதானேன்னு அங்கயும் ஒரு விசிட் அடிச்சோம்.





7 மணிநேரம் பிடிச்சது பயணம். (இதுக்கு முன்ன 4 அல்லது 5 மணிநேரத்துல போயிருந்த ஞாபகம் எனக்கு) வழியில் டீ ஃபேக்டரிக்கு போவது எப்பவும் பிடிச்ச விஷயம். கிளஞ்ச் டீ பேக்டரிக்கு போகலாம்னா டிரைவர் வேற ஏதோ இடத்துக்கு கூட்டி போனார். அங்க போனா அவருக்கு சாப்பாட்டு இலவசமாம்!!!
ஜலதோஷம் பிடிச்சிருந்ததோட அந்த பொண்ணு சிங்கள ப்ரணொன்ஷியேஷன்ல ஆங்கிலத்துல அழகா டீக்களை பத்தி விவரிச்சாப்ல. க்ரீன் டீ குடிக்க கொடுத்தாங்க. அந்த சூழலுக்கு இதமா இருந்ததது. கொஞ்சம் டீ வாங்கிகிட்டு கிளம்பினோம்.

 மழை தூறி எங்களை வரவேற்தது நுவரேலியா. சாயங்காலம் 5 மணி ஆகிடிச்சு. மதியம் சரியா சாப்பிடதாதால தலைவலி வேற. சுடச்சுட வடை வாங்கிகிட்டு அயித்தானின் கம்பெனி கெஸ்ட் ஹவுஸுக்கு போனோம். அங்கே தாமஸ் அண்ணனுக்கு ஏற்கனவே நாங்க வர்ற தகவல் போயிருந்ததால அவர் வரவேற்க ரெடியா இருந்தார். சூடா டீ குடிச்சிட்டு இரவு சாப்பாடு என்ன வேணும்னு கேட்டார் தாமஸ் அண்ணன்.  கொத்து, இடியாப்பம், வாங்கியாராச்சொன்னோம்.

அதற்குள்ளார அந்த மலைப்பிரதேசத்துல பனி மூட்டம் ஆரம்பிச்சிருச்சாம்.
ஆனா தாமஸ் அண்ணன் சொன்ன தகவல் மனசுக்கு கஷ்டமா இருந்தது. நாங்க போயிருந்தது மே மாத கடைசியில. ஜனவரில எல்லாம் தண்ணி பஞ்சமா இருந்துச்சாம் நுவரேலியா. மழையே இல்லைன்னு சொன்னாங்க. அடக்கடவுளே, இந்த இயற்கை அழகிக்கு வந்த சோதனையான்னு நினைச்சுக்கிட்டோம்.

இராச்சாப்பாடு முடிச்சிட்டு சீக்கிரமே படுத்துட்டோம். காலையில் டீ குடிச்சதும் தோட்டத்துல போய் உக்காந்தோம். கெஸ்ட் ஹவுஸ் தோட்டம் தான் ஒவ்வொரு வருஷமும் தனியார் தோட்ட வளர்ப்பு பிரிவுல முதல் பரிசு வாங்கும். எல்லாம் தாமஸ் அண்ணன் உழைப்பு தான். அங்கே கேர் டேக்கரா இருக்காப்ல. பீட்ரூட், லெட்டுஸ், கேரட், தக்காளி எல்லாம் அங்கயே பயிரிடறாங்க. அதை வாரம் ஒரு முறை லாரியில் ஏத்தி கொழும்புக்கு அனுப்பி வைப்பது வரை அவரது வேலை தான்.












சின்ன பிள்ளைகளா மாறி ஊஞ்சலில் ஆடினது மனதுக்கு மகிழ்ச்சி.

காலைச்சாப்பாடும் வெளியிலிருந்து வாங்கியார சொல்லிருந்தோம். தால், போல் சம்பல் வீட்டுல செஞ்சிருந்தாரு. காலைச்சாப்பாடு முடிச்சு டீவி பாக்கலாம்னு உக்காந்தோம். டீவி வேலை செய்யலை. சந்தா பணம் முடிஞ்சிருச்சுன்னு சொல்லுது. கொழும்புக்கு போன் செஞ்சு சொல்லித்தான் ரீசார்ஜ் செய்யணும். ஆனா சனி ஞாயிறு ஆபிஸ்ல யாரும் இருக்க மாட்டாங்க பாருங்க. சரி என்ன செய்யலாம். அங்கே அருமையான ரேடியோ இருந்துச்சு. இருக்கவே இருக்கு நம்ம சக்தி எஃப் எம் & சூரியன் எஃப் எம். :)) பாட்டு கேட்டுகிட்டே பிள்ளைகளோட உக்காந்து சீட்டு விளையாடினோம். :)

டீவி பார்த்து போராவதை விட நாலும் பேரும் சேர்ந்து பொழுதை கழிச்சோம். தங்கிக்க இடம் இலவசம். சாப்பாட்டு செலவு எங்களது. என்ன வேணுமோ அதை செஞ்சு கொடுக்க தாமஸ் அண்ணா இருக்காப்ல. மதிய உணவுக்கு பணம் கொடுத்து காய், அரிசி வாங்கிக்க சொன்னோம். சுடச்சுட ரசம் கூட வெச்சு கொடுத்தது அந்த குளு குளு சீசனுக்கு இதமா இருந்தது.

சாயந்திரம் வெளியில ரவுண்ட் போகணும்னு பசங்க. ஹக்கல கார்டன், சீதா தேவி வனவாசம் இருந்த இடம் எல்லாம் பார்த்தாச்சு. அதனால் ஒன்லி ரெஸ்ட் எடுக்க தான் ப்ளான். பசங்க கொஞ்ச நேரம் வெளியில போவோம்னு சொல்ல சரின்னு ரெடியானோம்.
தொடரும்...




Tuesday, July 01, 2014

ஊர் சுத்தினது - பாகம் 2

காலை உணவுக்கு இடியாப்பம்,ஸ்ரீலங்கன் தால், ப்ரெட், வெஜிடபிள் சப்ஜிகளுடன் கார்ன்ஃபேளக்ஸ், சாக்கோஸ் இவைகளுடன் பழங்களும் வைத்து அழகாக செட் செய்திருந்தார் மைக்கேல். காம்ப்ளிமெண்டரி ப்ரெக்ஃபாஸ். ப்ரெக்ஃபாஸ்ட் முடித்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்த பொழுது வண்டி வந்துவிட்டது.  தயாராகி போனது ODEL . இது கொழும்புவில் இருக்கும் ப்ரபலமான  கடை.  அப்பவே கொஞ்சம் காஸ்ட்லி. ஆனால் souvenir  டி ஷர்டுகள் இங்கே தான் தரமானதாக கிடைக்கும். அதனால் ஒரு ரவுண்ட் அடித்தோம்.

அந்தப்பக்கமாவே எத்தனையோ வாட்டி போயிட்டு வந்திருந்தாலும் அம்ருதம்மா என்னவோ அந்த இடம் ஞாபகம் இல்லைன்னு சொல்லி திரும்ப போகணும்னு சொன்னாப்ல. சரின்னு  போனோம்.





independence square - சுதந்திர சதுக்கம்னு சொல்லப்படுற இந்த இடத்துக்கு முன்னாடி அசோக மரங்கள் ரெண்டு பக்கமும் அணிவகுத்து நிக்கும். பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும்.  கொழும்பு - 7 ல் அமைந்திருக்கும் இந்த மண்டபம், இலங்கை சுதந்திரம் அடைஞ்சதுக்கு அடையாளமா கட்டபட்டது. அங்கயே ம்யூசியமும் இருக்கு, ஆனா அதுக்கு போகலை. சில பல போட்டோ செஷன்கள், செல்ஃபிக்கள் எடுத்துக்கிட்டோம். அம்ருதாம்மா பரம திருப்தி :)

அடுத்து தியங்கரா போகலாம்னு திட்டம். அது நாங்க முன்பு குடியிருந்த திம்பரிகஸ்யாயல இருக்கு.  திம்பரிகஸ்யாய மெயின் ரோடுல முன்பு ட்ராபிகா இருக்கும். குறுகிய ரோட்தான் அப்ப இருந்தது. இப்ப அங்க போய் நின்னா அடையாளமே தெரியாம மாறிப்போச்சு.




இந்த போட்டோவை எடுத்து சிங்கையில் இருக்கும் தம்பிக்கு அனுப்பி வெச்சு எந்த இடம்னு கண்டு பிடின்னு சொன்னோம். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் தம்பி மெசெஜ் அனுப்பினாப்ல வலது பக்கம் எடுத்தா நாம இருந்த வீடுக்கா, லெஃப்ட்ல நேரா போனா ரூபவாஹிணி ஷ்டேஷன்னு கரெக்டா சொன்னாப்ல. ஆனா இவ்வளவு மாற்றமான்னு ஆச்சரியம் தான்.
எங்க ஆட்டோ அண்ணா ரவிக்கு வர்றதை பத்தி முன்னமே சொல்லியிருந்தோம். ஆனா அன்னைக்கு அந்த இடத்துல ரவியை பார்த்ததும் பசங்களுக்கு சந்தோஷம். வண்டியை ஓரங்கட்ட சொல்லிட்டு ஆஷிஷ் இறங்கி ஓடிப்போய் அங்கிள்னு கட்டிக்க, பின்னாடியே அம்ருதம்மாவும் போய் ஹாய் சொல்ல, ரவிக்கு செம ஷாக். நல்லா வளர்ந்துட்டீங்க! அப்படியே மாமா மாதிரி இருக்கீங்கன்னு ஆஷிஷைப் பாத்து சொல்லி கட்டிக்கிட்டாரு.

பழைய சிகப்பு ஆட்டோவை கொடுத்திட்டு இந்த ஆட்டோ வாங்கியிருக்காங்க. அவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு போகாட்டி எப்படின்னு பக்கத்துலயே இருக்கற வீட்டுக்கு போனோம், ஹவுஸ் ஓனர் ஆண்ட்டி இப்ப மகளுடன் லண்டன்ல இருக்காங்க. நாங்க இருந்த போர்ஷன் வேறயாரோ குடியிருக்காங்க. அதனால வாசல்ல நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்கற தியங்கரா கடைக்கு போனோம். இப்ப நம்ம ஃப்ரெண்ட் பாபு அங்க இல்ல.  சேல்ஸ் ரொம்ப ஆவுறது இல்லைன்னு அங்க வேலை செய்யற பொண்ணு சொல்லிச்சு. ஆனா எனக்கு தேவையான பேண்ட் அங்கதான் கிடைச்சது. :) 850 ஸ்ரீலங்கன் ரூபாய்க்கு நல்ல ஜீன்ஸ் வாங்கணும்னா அது தியங்கரா தான். எங்க 4 பேருக்குமே தேவையான சில உடைகளை வாங்கிகிட்டு அடுத்து சாப்பிட போனோம்.





 இந்த வாட்டி இங்க கண்டிப்பா சாப்பிட போகணும்னு முன்னாடியே திட்டம் போட்டிருந்ததால போன் செஞ்சு டேபிள் புக் செஞ்சிருந்தோம். அருமையான ஸ்ரீலங்கன் உணவு சாப்பிடணும்னு இந்த இடம் தான் பெஸ்ட். சுடச்சுட ஆப்பம், சூடான ப்ளாக் டீ, அருமையான உணவு, அதைவிட அருமையான ஸ்வீட்கள்னு கிடைக்கும். புஃபே டைப் சாப்பாடுதான். ஆனா ஒரே ஒரு வருத்தம்,  பழைய இடத்துலேர்ந்து புது இடத்துக்கு மாறிட்டாங்க. ஆர்யே டில் மாவத்தைக்கு வந்திருச்சு.  முன்னாடி பீச்சுக்கு பக்கத்துல இருக்கும். இங்க செட்டிங்ஸ் அப்படியே தான், அதே சாப்பாடும் தான். ஆனா அந்த அலைகளின் ஆர்ப்பரிக்கும் அழகு மட்டும் மிஸ்ஸிங். என்ன இடம். ராஜ போஜன். 




இங்கே வெஜிட்டேரியன் சாப்பாடும் உண்டு, நான் வெஜ்ஜும் உண்டு. அருமையான சாப்பாடு சாப்பிட்டாச்சு. திரும்ப திம்பரிகஸ்யாய போயிட்டு மாலையில் வர இருந்த அம்ருதம்மாவின் தோழிகளுக்காக ஸ்னாக்ஸ் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த sensal  பேக்கரியில் வாங்கிக்கிட்டு கெஸ்ட் ஹவுஸ் போனோம்.






நாங்க வந்திருக்கோம்னு செம ஆனந்தம் போல, நல்லா இருட்டிக்கிட்டு மழைய பெய்ய ஆரம்பிச்சிருந்தது. மழைவிட்டதும் பிள்ளைகள் வருவாங்கன்னு நினைச்சோம். மழை விடலை. அதனால் தோழிகள் அப்புறமா சந்திக்கலாம்னு போன் செஞ்சு சொன்னாங்க. அம்ருதம்மா கொஞ்சம் அப்செட் தான். ஊருக்கு போறதுக்குள்ள மீட் செய்ய ப்ளான் பண்ணலாம்னு சமாதானம் ஆனாங்க.


அந்த கெஸ்ட் ஹவுஸ் ஓனரான அயித்தானின் நண்பர் வீட்டுல இரவு உணவு. முடிச்சு வந்து படுத்தோம். சரியான மழை........

தொடரும்.......




Wednesday, June 25, 2014

ஊர் சுத்தினது......

கல்யாண வேலைகளில் மண்டை காய்ஞ்சு, உடம்புக்கு அலைச்சல்னு ஆனிச்சோ இல்லையோ பின்னாலேயே வந்த பசங்க பரிட்சையில மண்டை நிஜமாவே காஞ்சு போச்சு. ”எப்பவும் போல அம்மா உங்க கிட்ட சொன்னாத்தான் சரியா இருக்கும்னு” பசங்க. அதனால அவங்க படிக்க உக்காந்தா நானும் அவங்க கூட இருப்பேன்.  நடுவுல கொஞ்சம் ப்ரேக் விட்டு படிக்க வெச்சு, ரிலாக்ஸாக்கி, நல்லா சாப்பாடா கொடுத்துன்னு வேலை தான். அதுலயும் ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்துல பரிட்சை தான்னாலும் இந்த வாட்டி மகன் +2 மகளுக்கு 9த்ம் போர்ட் பரிட்சை. 3 மாசமா வேலைப்பளுவுக்கு பிறகு ஓய்வே இல்லாம போக அயித்தான் கிட்ட பாருங்க சாமி! பரிட்சை முடிஞ்சதும் எனக்கு ஓய்வு கண்டிப்பா வேணும். எங்கயாச்சும் போறதுக்கு ஏற்பாடு செய்ங்கன்னு சொன்னேன்.

அவுகளும் “ஆமாம். யூ நீட் ப்ரேக்னு” சொல்ல வழக்கம்போல வெளில போக திட்டம். அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில ரங்கனை சேவிச்சோம். :)) அதேதான் நமக்கு மனசை என்னவோ அங்கயே விட்டுட்டு வந்த மாதிரி இருக்கு. மனசுக்கு ஒட்டுதலா இருக்கணும்னா அங்கதான் போகணும் ஒரு மனதோட முடிவு செஞ்ச நேரம், பக்கத்துலயே இருக்கற அங்கயும் போகலாம்பான்னு சொல்ல ஆமாம் அம்ருதாவும் இப்ப ரெடில்ல. சரின்னு ப்ளான் போட்டு டிக்கட் புக் செஞ்சாச்சு. நம்ம நாட்டுக்கு போக நமக்கு இன்னாத்துக்கு ட்ராவல் ஏஜெண்ட். எஸ்ஸூ போனது இலங்கைக்கு.

ஸ்ரீலங்கன் விமானச்சேவையில் சூப்பர் டிஸ்கவுண்டில் டிக்கட் கிடைத்தது. போக வர டிக்கட் ரெடி. தங்குவதற்கு? அதுல பார்த்தா இப்ப எல்லா ஹோட்டல்கள்லயும் கன்னாபின்னா ரேட்டு. ஹோட்டல்கள் இவ்வளவுதான் பணம் வசூலிக்கணும் அதுல இம்புட்டு அரசாங்கத்துக்கு கொடுக்கணும்னு இருக்காம். அதனால 2009ல போனதைவிட செமயா ரேட்டெல்லாம் ஏறியிருக்கு. நம்ம பட்ஜட்ல வரணும்!!! என்ன செய்யலாம்? அப்படின்னு யோசிக்கயில அயித்தானோட நண்பர் தான் ஒரு கெஸ்ட் ஹவுஸ் நடத்திகிட்டு இருப்பதாகவும், மொத்த பங்களாவையும் எங்களுக்கு கொடுத்திடறதாவும் சொல்லி அந்த பங்களாவுடைய லிங்கை அனுப்பி வெச்சாப்ல.

பங்களா இருப்பது கொஞ்சம் ஜயவர்தனபுர (பாராளுமன்றம் அங்கதான் இருக்கு) மெயின் சிட்டியிலிருந்து கொஞ்சம் தூரம்தான். போக வர வண்டி இருக்க போவுது அப்புறமென்ன கவலைன்னு லிங்கை பார்த்தோம். ரொம்ப பிடிச்சிருந்தது. நண்பரிடம் சொல்ல நல்ல டிஸ்கவுண்ட் கொடுத்தார். அயித்தானும் அவரும் நண்பர்கள். அவரது மகனும் ஆஷிஷும் பள்ளியில் ஒன்றாக 5 வருடம் படிச்சாங்க. ஆனா இப்ப வரைக்கும் அவங்க நட்பு தொடருது. ஒரு 12 வருஷமா. ( அவங்க வீட்டுக்கு சாப்பிட போயிருந்த போது பக்கத்து வீட்டுக்காரரான ஃப்ரெஞ்ச் விசா ஆபிசர் ரொம்ப ஆச்சரியப்பட்டார். இத்தனை வருட நட்பு அதுவும் இலங்கையில் இல்லாமலிருந்தும் தொடர்வது ரொம்ப ஆரோக்கியமான விஷயம்னு)

உங்களுக்கும் உதவும்னு அந்த கெஸ்ட் ஹவுஸ் லிங்க்:

சென்னையில் ஸ்ரீலங்கன் விமானச்சேவையில் ஏறி உட்கார்ந்ததும் அப்படிஒரு சந்தோஷம். இலங்கையை அடைய 1.30 நிமிடம் ஆகுமே என்பதுதான் கவலை. அதென்னவோ  சில ஃப்ளைட்டுகள் சென்னை - மாத்தல - கொழும்புன்னு இருக்கு. அன்னைக்கு ஃப்ளைட்டும் மாத்தல போய் அங்கேயிருந்து 20 நிமிடத்துல கொழும்பு.  வெளியில் வந்ததும் அயித்தானின் அலுவலகம் ஏற்பாடு செஞ்சிருந்த வண்டி ரெடியா இருந்தது. எங்க எல்லோர் முகத்துலயும் அம்புட்டு குஷி.

எந்த வழியா போகட்டும்னு கேட்க, புதுசா கட்டியிருக்கற ஹைவேயில போவோம்னு சொல்லி போனோம். சூப்பரா இருக்கு. தாஜ் ஏர்போட் கார்டன் பேக் வாட்டர்ஸ் பக்கமா ஹைவே கட்டியிருக்காங்க. இதனால ஜாஎல, அந்த பக்கம் ட்ராபிக்ல மாட்டிக்க வேண்டாம். Gale வரைக்கும் ஹைவே போட்டிருக்காங்க. குறைஞ்சது 2 மணி நேரத்துல போயிரலாம்னு கூடுதல் தகவல் சொன்னாட் ட்ரைவர்.





கெஸ்ட் ஹவுஸ் போய் சேர்வதற்கு முன்னால இரவு சாப்பாடு பேக் செஞ்சு எடுத்துக்கிட்டு போயிடலாம்னு ப்ளான். எங்க போறது பிள்ளைகள் சாய்ஸ் Arpico.  அங்க போய் கொஞ்சம் கெட்டித்தயிர், Elephant house ice cream வாங்கிகிட்டு வெளிய இருக்கற  food courtல கொத்து பார்சல் செஞ்சு எடுத்துக்கிட்டு கிளம்பினோம். 20 நிமிஷத்துல கெஸ்ட் ஹவுஸ் சேர்ந்திட்டோம்.  அயித்தானோட நண்பர் வந்து பேசிட்டு  போனாங்க.  ரொம்ப நாளைக்கப்புறம் கொத்து.... :)



கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கற  கேர் டேக்கர் நாளை காலைச்சாப்பாடு என்ன வேணும்னு சொல்ல  பசங்க “ இடியாப்பம், தால்,  வெஜிடபிள் ரோட்டின்னு “ சொல்ல இதெல்லாம் இருந்தா ஓகேவா ,” இந்தியாவிலேர்ந்து வர்றாங்கன்னு சொல்ல இட்லிக்கு ஏற்பாடு செய்வோம்னு இருந்தேன்னு சொல்ல, “அதெல்லாம் எங்க ஊர்ல கிடைக்கும். இங்கத்த சாப்பாடு தான் வேணும்னு பசங்க கோரஸா சொல்ல” கவலைய விடுங்க தம்பி சிரிச்சுகிட்டே சொன்னார் மைக்கேல்.