Showing posts with label கதம்ப மாலை. Show all posts
Showing posts with label கதம்ப மாலை. Show all posts

Tuesday, September 08, 2009

கதம்ப மாலை

நண்பர் பதிவர் ஹரி திருமண வாழ்வில் இணைந்துள்ளார். 23.8.09 அன்று கோயம்புத்தூரில் திருமணம் நடந்தது.
5.9.09 ஹைதையில் வரவேற்பு நடந்தது.
சென்றிருந்தேன். திருமணத்திற்கே வாழ்த்து பதிவு போட வேண்டும்
என்று நினைத்திருந்தேன். கைவலி அதிகமாகி முடக்கி விட்டது.

ஹரி ஆர்த்தி தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துக்கள்.
சிரித்தமுகமும், நட்பாக இருக்கும் ஆர்த்தி நல்ல சாய்ஸ்
ஹரி. ஆல் தி பெஸ்ட்.

************************************************

இந்த ஒரு வாரத்திற்குள் 2, 50ஆவது திருமண நாள்
விழாவில் கலந்து கொண்டு பெரியவர்களின் ஆசி பெற
வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஞாயிறன்று நடந்த
அயித்தானின் நண்பரின் பெற்றோரின் 50ஆவது
திருமண நாள் விழா மிக அருமையாக இருந்தது.

வித்தியாசமாக பேரன், பேத்திகள் நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கினார்கள். மூத்தமகன் பேசும்போது
நெகிழ்ந்து போனார்.”பெற்றவர்கள் செய்த தியாகத்தை
மக்கள் மறந்து போகக்கூடாது!” என்று சொன்னது
பகிர்ந்து கொள்ள வேண்டிய விடயமாக கருதுகிறேன்.

**********************************************

தஞ்சாவூர் பெயிண்டிங், டூவீலர் ஓட்டக் கற்றல்
என எல்லா ஆசைகளையும் கைவலி நிறுத்தி
வைத்துவிட்டது. சுத்தமாக விலகிவிடாமல்
அவ்வப்போது பதிவிடுவேன். வந்து
ஆதரவு தாருங்கள். சீக்கிரம் 500 அடிக்க
போகிறேன். :)))

*********************************************

எங்கள் அபார்ட்மெண்டில் பிள்ளையார் சதுர்த்தி
வெகு சிறப்பாக நடந்தது.
எங்கள் அபார்ட்மெண்டில் பூஜித்த பிள்ளையார்.
இதோ:


7 நாள் வைத்திருந்தோம். தினம் ஒரு குடும்பத்தினர்
பூஜை,நைவேத்தியம் பொறுப்பு. மிக விமர்சையாக
நடந்தது. இதில் முக்கியமான விசயம், எங்கள்
அபார்ட்மெண்ட் பிள்ளைகள் பூஜை முடிந்ததும்
பிரசாதத்தை விநியோகம் செய்தது. ஒருவர்
தட்டு எடுத்து கொடுக்க, மற்றவர் பரிமாற
என ஆளுக்கு ஒரு வேலை செய்தனர். 6 வயது
குட்டி பாப்பா ஸ்பூன் எடுத்துக்கொடுத்து தன்
பங்கிற்கு வேலை செய்தது. பெரியவர்களை
அருகில் விடாமல் தாங்களே முன்னின்று
செய்த பிள்ளைகளுக்கு மனமார்ந்த
பாராட்டுக்கள்.

7ஆம் நாள் சனிக்கிழமை அன்று விசர்ஜன்.
உட்டி அடித்தல், ஆட்டம் என விமரிசைதான்.
எல்லோர் மேலும் தண்ணீர் அடித்து மொத்த
அப்பார்ட்மெண்டும் ஆட்டம் போட்டதை
மற்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்.
தெருவே அதிர்ந்தது. :))



சென்னையில் அப்பார்ட்மெண்டில் வசித்து
நொந்து நூலான எனக்கு பலவருடங்கள்
கழித்து மும்பையி்ல் வசித்த நாட்களுக்கு
சென்றது போல் இருந்தது.

அனைவரும் கூடி பேசி, சிரித்து மகிழ்ந்து
என நன்றாக இருந்தது. விசர்ஜன் முடிந்ததும்
எல்லோரும் சொன்ன வார்த்தை,”ஞாயிற்றுக்கிழமையிலிருந்து
இரவு வீட்டில் சமைக்கணும்பா, கீழே டின்னர் என்று
இருந்து விடப்போகிறோம்” :)))))))))))))))))



Thursday, July 30, 2009

கதம்ப மாலை 30.7.09

ஏப்ரல் 95க்கு பிறகு தனியே தன்னந்தனியே
என் பயணம் சமீபத்தில் நடந்தேறியது.
சென்னைக்கு பயணம் என்பதால் கொஞ்சம்
இண்ட்ரஸ்ட் இல்லாமல்தான் வந்தேன்.
மும்பை-சென்னை ரயில்பயண நேரம்
போல் நீண்டதாக இல்லாமல் இருக்கும்
ஹைதை-சென்னை பயணம். அதனால்
பெரிதாக வித்யாசம் இல்லை.
இதற்கு முந்தைய என் தனி சென்னைப்
பயணங்கலின் போது என்னை வரவேற்க
சென்னையில் யாரும் வந்திருப்பார்கள்.
இந்த முறை நானே ஆட்டோ பிடிச்சு
என் தோழிவீட்டுக்கு
சென்று அங்கிருந்து திருமண மண்டபம்
எல்லாம் போய்வந்துட்டோம்ல.
****************************************


(ஏதோ நேரம் நல்லா இருந்து
ஆட்டோ அண்ணன்கள் தகராறு செய்யாம
வந்ததாலதான் பயணம் இனியதாய்
இருந்துச்சுன்னு நினைக்கறேன்)

சென்னை செண்ட்ரலில் தகராறு
செய்யாமல் ஆட்டோ கிடைத்தது
என் முன் ஜென்மத்து நல்வினையோ!!!!
:))))))))))))

இவங்க அடாவடியால் மக்கள் கஷ்டப்படக்கூடாது
என்பதால் PRE PAID AUTO கவுண்டரை
செண்ட்ரல் ஷ்டேஷனில் ஆரம்பிச்சிருக்காங்க.
(அவங்க நடுவுல தகராறு செஞ்சா மொபைலை
எடுத்து போலிசுக்கு போன் போடறேனு பயம்
காட்டணுமாம் :)) )

****************************************

சமீபத்திய சென்னை- ஹைதை ரயில் பயணத்தில்
நடந்தது இது.

என்னுடம் பயணித்த சக பயணி
தென்னக ரயில்வே ஆடிட்டர் போலிருக்கிறது.(அவரது
தொலைபேசி பேச்சுக்களிருந்து தெரிந்துகொண்டேன்)
தன்னிடமிருந்த மற்றொரு போனில் பெரிதாக
பாடல்களைக் கேட்டுக்கொண்டு வந்தார்.
மனிதருக்கு இங்கிதம் இருக்கும். நிறுத்தி
விடுவார் என பார்த்தேன். ம்ஹூம்.. :(

பொறுத்து பொறுத்து பார்த்து
“எக்ஸ்க்யூஸ்மி, பாட்டு கேப்பதா இருந்தா
சவுண்டை குறைச்சு கேளுங்க, இல்லாட்டி
ஹெட்போன் வெச்சுக்கோங்க. எனக்கு
டிஸ்டபர்ன்ஸா இருக்கு” என்று சொன்னேன்.
ஐம் சாரி” என்று பாட்டை நிறுத்தினார்.
*****************************************

அதிசயமாக 7.30 வணிவாக்கிலேயே ஆர்டர்
கொடுத்திருந்த உணவு வந்துவிட்டது.
திருமண வீட்டு அசதி + பயங்கர கழுத்து
முதுகுவலியால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன்.
சாப்பிட்டுவிட்டு 8.30 மணி வாக்கிலேயே
என் அப்பர் பர்த்தில் ஏறி படுத்து விட்டேன்.
(ரயில் அதிகாலை 5.15க்கெல்லாம் ஹைதையை
அடைந்துவிடும்)

எனக்கு எதிர் பர்த் பையன் அவருக்கு மிடில்
பர்த். அவரும் சாப்பிட்டுவிட்டு அந்த
ஆடிட்டரிடம்(அவருடையது லோயர் பர்த்)
தான் படுக்க விரும்புவதாக கூறியதுதான்
தப்பு. ஐயா ஆரம்பித்தார் அவரது
பேருரையை.

“நோ!நோ! 9 மணிக்கு குறைந்து
பர்த் போடச்சொல்லி நிர்பந்திக்கக்கூடாது.
அது இது என்று அந்த பையனுக்கு 30 நிமிடம்
லெக்சர் கொடுத்து 9 மணிக்கு பர்த்
போட பர்மிஷன் கொடுத்தார்.

இதற்கெல்லாம் சட்டம் பேசத் தெரிந்த இவருக்கு
வண்டியில் பாடலை அலற விட்டுக் கேட்க
கூடாது என்பது தெரியவில்லை...

*********************************
அம்ருதா ஆஷிஷ் இருவருக்கும் சென்ற வருட
முழுப்பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால்
அவர்கள் விரும்பும் விளையாட்டுச் சாமான்
வாங்கித் தருவதாக சொல்லியிருந்தோம்.
ஆஷிஷ் ஹாட்வீல்ஸ் டர்போ ட்விஸ்டர்
கார் செட் கேட்க, அம்ருதா தனக்கு பார்பி
செட் வேண்டுமென்றாள். சரி என்று
சொல்லியிருந்தோம்.

ஆஷிஷ்க்கு டர்போ ட்விஸ்டர் வாங்கி
விட்டு அம்ருதாவுக்கு என்ன விதமான
செட் தேவையோ அவளையே அழைத்துச் சென்று
வாங்குவதாக ப்ளான். அவளைக் கடைக்கு
அழைத்துச் செல்ல நேரமில்லாமல் போக
சென்றவாரம் அழைத்துச் சென்று என்ன
வேண்டும்? என்று கேட்டோம்.

பார்பி பக்கம் சென்றவள், சுத்தி சுத்தி
வந்தாள். பார்பியை விட்டு அவள்
கையில் எடுத்தது ரோலர் ஸ்கேட்டரை.

”பார்பிதானே கேட்டாய்? இப்ப இதை
எடுத்திருக்க?” என்று கேட்டதற்கு
அம்ருதாவின் பதில்,”பார்பி இன்னும்
கொஞ்ச நாள்தான் விளையாடலாம்மா,
ரோலர் ஸ்கேட்டர்னா நான் எப்ப வேணாம்
விளையாடலாமே!!!”

யோசிக்கும் தன்மை, மனமுதிர்ச்சி
இதை இயற்கையே பிள்ளைகளுக்கு
அந்தந்த சமயத்தில் வழங்கிவிடுகிறது.
**********************************

என்னுடைய வலைப்பூவைத் தொடரும்
அந்த 75ஆவது நபருக்கு என் மனமார்ந்த
நன்றிகள்.
***********************************