எங்க ஊர்ல ரோட்டோர கடைகள் ஏராளம். போனவாட்டி ஊருக்கு போனப்ப வீதிக்கு 4 சாப்பாடுக்கடை இருப்பதை பார்த்தேன்.
இப்ப ஊர்ல யாரும் சமைப்பது இல்லையோன்னு டவுட்டே வந்திருச்சு.
ஆனாலும் பாருங்க எங்க ஊர்ல இந்த சாப்பாட்டு ஐட்டங்கள் வித்தியாசமா இருக்கும். ”முட்டைமாஸ்னு ஒரு அயிட்டம் ரொம்ப நல்லா இருக்கும்.” அக்கா. ஊருக்கு போகையில போட்டோவாவது பிடிச்சு கொண்டாந்து போடுங்கன்னு”!!! தம்பியோட நட்பு சிங்கையிலிருந்து மெயில் அனுப்பியிருந்தாப்ல. அவருக்காகவே அந்த கடை பக்கம் போய் போட்டோ எடுத்தாந்து ஃபேஸ்புக்ல போட்டேன். ரொம்ப சந்தோஷ்ம்க்கான்னு ஏதோ பார்சல் சிங்கைக்கு அனுப்பி வெச்சாப்ல சந்தோஷப்பட்டார்.
அதுவும் இந்தக் கடையிலதான் கிடைக்கும். இதுக்காகவே ஞாயிறு கூட்டம்....
திலகர் திடல் எதிரில் இந்த கடை இருக்கு. அதே மாதிரி எங்க ஊர்ல பரோட்டா, இடியாப்பம் எல்லாமே சூப்பரா இருக்கும். கடப்பான்னு ஒரு ஐட்டம் கொடுப்பாங்க பாருங்க. செம ருசி. 4 பரோட்டா வாங்கினாலும் கடப்பா கட்டினீங்களான்னு கேட்டு வாங்கிகிட்டு போவாங்க.
பரோட்டாவுக்கு குருமாவும் நல்லா இருக்குன்னாலும் கடப்பாவோட ருசியே ருசிதான். ஊருக்கு போகும்போதெல்லாம் பசங்க கண்டிப்பா ஒரு கை பாத்துடுவாங்க. எங்க ஊர்ல ராதாகபேன்னு ஒரு ஹோட்டல் இருக்கு, பிருந்தாவனம் ஸ்டாப் பக்கத்துல இருக்கு. அங்கே ஞாயிற்றுக்கிழமை காலையில் மட்டும் இட்லியோட சட்னி, சாம்பார் ஏதும் கிடையாது. கடப்பா மட்டும்தான் தருவாங்க. இங்கயும் கூட்டம்னு சொல்லணுமா என்ன?
ஊருக்கு போனாத்தான் கடப்பாவான்னு பசங்க கேப்பாங்க. அதெப்படி. வூட்டுலயே கடப்பா போடுவோம்னு களத்துல இறங்கி கடப்பா செஞ்சு கொடுப்பது பழக்கமாகிடிச்சு. அந்த கடப்பா இன்னைக்கும் செஞ்சேன். அந்த செய்முறை எல்லாம் ரொம்ப சிம்பிள் தான். வாங்க எப்படின்னு பாப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1கப்
உருளைக்கிழங்கு - சின்னது 2
வெங்காயம் - நீள்வாக்கில் அரிந்தது 1
பச்சைமிளகாய் - 4
தேங்காய் - 1/4 மூடி
சோம்பு - கொஞ்சம்,
பூண்டு - 2 பல்
எலுமிச்சம் பழம் - 1
உப்பு, கொத்தமல்லி தேவைக்கேற்ப
தாளிக்க:
கறிவேப்பிலை, கொஞ்சம் பட்டை, கொஞ்சம் பிரிஞ்சி இலை, ஏலக்காய் 1.
முதல்ல பாசிப்பருபை குழைய வேக வெச்சு வெச்சுக்கோங்க. உருளைக்கிழங்கை பொடியா அரிஞ்சு தனியா வேக வெச்சாலும் சரி. இல்லாட்டி வேகவெச்சு தோலுரிச்சு மசிச்சு வெச்சுக்கிட்டாலும் சரி.
தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு இவைகளை மைய அரைச்சு வெச்சுக்கணும்.
1 ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிச்சுக்கணும். அரிஞ்சு வெச்சிருக்கற வெங்காயத்தை போட்டு வதக்கணும்.
மசிச்சு வெச்சிருக்கற உருளைக்கிழங்கை அதுல கொட்டி கொதிக்க விடணும். 2 நிமிஷம் கழிச்சு அரைச்சு வெச்சிருக்கற மசாலாவோடு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நல்லா கொதிக்க விடணும்.
உப்பு போட்டு கொதிச்சதும் குழைய வேக வெச்சு வெச்சிருக்கற பாசிப்பருப்பையும் போட்டு நல்லா கொதிக்க வைக்கும்போதே வாசனை வீடு ஃபுல்லும் நிறைஞ்சிடும்.
தேவைப்பட்டா கொஞ்சம் தண்ணீர் சேத்து கொதிக்க விடணும். 5 நிமிஷம் போல கொதிச்சதும் அடுப்ப ஆஃப் செஞ்சிட்டு எலுமிச்சம் ரசம், கொத்தமல்லி சேர்த்து கலக்கினா சுவையான கடப்பா ரெடி. இட்லி தோசைக்கு மட்டுமல்ல சப்பாத்திக்கும் சூப்பர் ஜோடி.
இன்னைக்கு காலேல கடப்பா செய்யும்போதே வாசனைக்கு பசங்க பசிக்குதுன்னு சாப்பிடலாமான்னு கோரஸ் போட்டாங்க. :))

ஆனாலும் பாருங்க எங்க ஊர்ல இந்த சாப்பாட்டு ஐட்டங்கள் வித்தியாசமா இருக்கும். ”முட்டைமாஸ்னு ஒரு அயிட்டம் ரொம்ப நல்லா இருக்கும்.” அக்கா. ஊருக்கு போகையில போட்டோவாவது பிடிச்சு கொண்டாந்து போடுங்கன்னு”!!! தம்பியோட நட்பு சிங்கையிலிருந்து மெயில் அனுப்பியிருந்தாப்ல. அவருக்காகவே அந்த கடை பக்கம் போய் போட்டோ எடுத்தாந்து ஃபேஸ்புக்ல போட்டேன். ரொம்ப சந்தோஷ்ம்க்கான்னு ஏதோ பார்சல் சிங்கைக்கு அனுப்பி வெச்சாப்ல சந்தோஷப்பட்டார்.
![]() |
| முட்டை மாஸ் புதுகை ஸ்பெஷல் |
அதுவும் இந்தக் கடையிலதான் கிடைக்கும். இதுக்காகவே ஞாயிறு கூட்டம்....
திலகர் திடல் எதிரில் இந்த கடை இருக்கு. அதே மாதிரி எங்க ஊர்ல பரோட்டா, இடியாப்பம் எல்லாமே சூப்பரா இருக்கும். கடப்பான்னு ஒரு ஐட்டம் கொடுப்பாங்க பாருங்க. செம ருசி. 4 பரோட்டா வாங்கினாலும் கடப்பா கட்டினீங்களான்னு கேட்டு வாங்கிகிட்டு போவாங்க.
பரோட்டாவுக்கு குருமாவும் நல்லா இருக்குன்னாலும் கடப்பாவோட ருசியே ருசிதான். ஊருக்கு போகும்போதெல்லாம் பசங்க கண்டிப்பா ஒரு கை பாத்துடுவாங்க. எங்க ஊர்ல ராதாகபேன்னு ஒரு ஹோட்டல் இருக்கு, பிருந்தாவனம் ஸ்டாப் பக்கத்துல இருக்கு. அங்கே ஞாயிற்றுக்கிழமை காலையில் மட்டும் இட்லியோட சட்னி, சாம்பார் ஏதும் கிடையாது. கடப்பா மட்டும்தான் தருவாங்க. இங்கயும் கூட்டம்னு சொல்லணுமா என்ன?
ஊருக்கு போனாத்தான் கடப்பாவான்னு பசங்க கேப்பாங்க. அதெப்படி. வூட்டுலயே கடப்பா போடுவோம்னு களத்துல இறங்கி கடப்பா செஞ்சு கொடுப்பது பழக்கமாகிடிச்சு. அந்த கடப்பா இன்னைக்கும் செஞ்சேன். அந்த செய்முறை எல்லாம் ரொம்ப சிம்பிள் தான். வாங்க எப்படின்னு பாப்போம்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1கப்
உருளைக்கிழங்கு - சின்னது 2
வெங்காயம் - நீள்வாக்கில் அரிந்தது 1
பச்சைமிளகாய் - 4
தேங்காய் - 1/4 மூடி
சோம்பு - கொஞ்சம்,
பூண்டு - 2 பல்
எலுமிச்சம் பழம் - 1
உப்பு, கொத்தமல்லி தேவைக்கேற்ப
தாளிக்க:
கறிவேப்பிலை, கொஞ்சம் பட்டை, கொஞ்சம் பிரிஞ்சி இலை, ஏலக்காய் 1.
முதல்ல பாசிப்பருபை குழைய வேக வெச்சு வெச்சுக்கோங்க. உருளைக்கிழங்கை பொடியா அரிஞ்சு தனியா வேக வெச்சாலும் சரி. இல்லாட்டி வேகவெச்சு தோலுரிச்சு மசிச்சு வெச்சுக்கிட்டாலும் சரி.
தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு இவைகளை மைய அரைச்சு வெச்சுக்கணும்.
1 ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிச்சுக்கணும். அரிஞ்சு வெச்சிருக்கற வெங்காயத்தை போட்டு வதக்கணும்.
மசிச்சு வெச்சிருக்கற உருளைக்கிழங்கை அதுல கொட்டி கொதிக்க விடணும். 2 நிமிஷம் கழிச்சு அரைச்சு வெச்சிருக்கற மசாலாவோடு ஒரு கப் தண்ணீர் சேர்த்து நல்லா கொதிக்க விடணும்.
![]() |
| தேங்காய் மசாலா |
![]() |
| குழைய வேகவெச்ச பா.பருப்பு |
தேவைப்பட்டா கொஞ்சம் தண்ணீர் சேத்து கொதிக்க விடணும். 5 நிமிஷம் போல கொதிச்சதும் அடுப்ப ஆஃப் செஞ்சிட்டு எலுமிச்சம் ரசம், கொத்தமல்லி சேர்த்து கலக்கினா சுவையான கடப்பா ரெடி. இட்லி தோசைக்கு மட்டுமல்ல சப்பாத்திக்கும் சூப்பர் ஜோடி.
இன்னைக்கு காலேல கடப்பா செய்யும்போதே வாசனைக்கு பசங்க பசிக்குதுன்னு சாப்பிடலாமான்னு கோரஸ் போட்டாங்க. :))
![]() |
| கடப்பாவில் மிதக்கும் இட்லி :) |