Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label சினிமா விமர்சனம். Show all posts

Thursday, December 16, 2010

நாகவல்லி வந்தாச்சு!!!!!

விக்டரி வெங்கட் நடித்து இன்று வெளிவந்திருக்கும் தெலுகு
ஹாரர் படம் “நாகவல்லி”.. பி.வாசு டைரக்‌ஷனில்
வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில் வெங்கடேஷுடன்
6 ஹீரோயின் நடிக்கிறார்களாம்!!!

அனுஷ்கா ஷெட்டி- சந்திரமுகி
ரிச்சா- கொளரி
கமலினி முகர்ஜி- காயத்ரி
ஷ்ரத்தா தாஸ்- கீதா
என லிஸ்ட் நீளுகிறது.



சந்திரமுகியின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளிவந்திருக்கிறது.
இன்று வெளியாகி இருக்கும் இந்தப் படம் நல்ல கலெக்‌ஷனைக்
கொடுத்திருப்பதாகவும் 5வருடங்களுக்கு முந்தைய ரஜினியின்
சந்திரமுகி டப்பிங் படத்தின் முதல் கலெக்‌ஷனையும் மிஞ்சி
விட்டதாக சொல்கிறார்கள்.

சந்திரமுகியில் பிரபலமான “லகலகலக” மாதிரி இதில்
வெங்கடேஷ் ”அவுர அவுரா” என கலக்கியிருக்கிறாம்!!!



இந்த மாதம் தனது 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய
விக்டர் வெங்கி என அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும்
வெங்கடேஷ் இந்தப் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் என்கிறார்!!
பொறுத்திருந்து பார்ப்போம். பாடல்கள் கொடுத்திருக்கிறேன்.




Wednesday, September 29, 2010

வம்சம்

மொதோ படத்துக்கு இன்னமும் விருது வாங்கிக்கிட்டு இருக்கும்
இயக்குனரின் இரண்டாவது படம். எப்படி இருக்குமோ???ன்னு
பயம்மா இருந்துச்சு. படம் பார்க்க பயமில்லை. நம்ம ஊர்க்காரர்
செயிச்சுப்பிடணும்ங்கற ஆதங்கத்தோட கூடிய பயம் அது.

ஹைதையில் இருப்பதால சீடியில தான் பாக்கக் கிடைச்சது.
மொதல்ல இந்தப் படத்தை பாத்தது அப்பாதான். கூட்டுறவு
பேங்குல வேலை பாத்ததால புதுகையைச் சுத்தி இருக்கும்
பல கிராமங்களுக்கு போன அனுபவம் அப்பாவுக்கு இருக்கு.
ஹை இதுபுலிவலம், மான்கொம்பு,பேரையூர் அது இதுன்னு அப்போவோட
சத்தத்தை கேட்டுட்டுத்தான் பொறுமையா ஒரு நாள் இந்தப்
படத்தை பாக்கணும்னு நினைச்சிருந்தேன். அப்பாவுக்கு
ரொம்ப பிடிச்சிருந்தது படம்.

ஹீரோ தமிழரசு (அவரோட உண்மையான பேரும் மறந்து
போச்சு, கலைஞரோட பேரன் என்பதற்காக எதையும் மாத்தாம
பக்காவா எங்க ஊர்க்கார பையன் மாதிரி காட்டியதற்கு
பாண்டிராஜுக்கு ஷ்பெஷல் பாராட்டுக்கள். சுனைனாவா அது.
அடி ஆத்தி!! எங்க ஊர் பக்க புள்ளைங்க மாதிரி சைடு வாகு
எடுத்து வாஞ்ச போஞ்சன்னு பேசிக்கிட்டு ஆஹா நான் +2 படிச்ச
காலத்துக்கு போய்வந்தா மாதிரி ஒரு சந்தோஷம்.



கதை அதை உருவாக்கின விதம் எல்லாம் அருமை. பசங்க
படத்துல வர்ற ஸ்கூல் மாஸ்டர் சசிகுமார் படங்களுக்கு
அக்ரிமெண்ட் போட்டுட்டாரு போல. இந்தப் படத்துலயும்
அவரு.(இதுக்கு முன்ன நாடோடிகள்ல நடிச்சிருந்தாரு)
வில்லனாம். பரவாயில்லை. ஏத்துக்கலாம்!!

கஞ்சா கருப்பு அடிக்கிற லூட்டி தாங்க முடியல. ஊரைவிட்டு
வேற ஊர்ல இருக்கறவங்க ஒரு ஹோட்டலுக்கு போய்
கஞ்சா கருப்பு “முட்டை புரோட்டான்னு” ஆர்டர் செய்யும்பொழுது
நாக்குல தண்ணி ஊத்திருக்கும். எங்க ஊர் ஷ்பெஷல் ஆச்சே!
சில்லி புரோட்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

டவர் கிடைக்காம மரத்து மேல ஏறி உக்காந்து பேசுறது,
அதே டவர் கிடைக்காம மேலேர்ந்து ஹெட்போனை கட்டிவிட்டு
பேசுறதுன்னு செம ஜாலி. மாடு விடு தூது புதுசா இருக்கு.
நான் ஊருக்கு போயிருந்த போது ஷூட் பண்ணிகிட்டு இருந்தாங்கன்னு
சொன்ன டாடா கோல்ட் ப்ள்ஸ் சீனும் வந்துச்சுல்ல. :))

கலைஞரின் பேரன் அருள்நிதிக்கு ஆரம்பமே அமர்க்களமா
எங்க ஊர் டைரக்டர் கையால நல்ல ரோலில் நடிப்பு
ஆரம்பமாகியிருக்கிறது.

கதாபாத்திரங்கள் அதை உணர்ந்து நடிச்சிருப்பது ரொம்ப சிறப்பு.
இசை எப்படி இருக்கணுமோ அப்படி இருந்தது படத்துக்கு
கூடுதல் பலம். எங்க ஊர் டைரக்டரும் நடிகராகிட்டாரு.
ஆமாங்க இரண்டு மூணு இடத்துல லுங்கியை மடக்கி கட்டிகிட்டு
வாரது, பைக்ல சுனைனாவா கூட்டிகிட்டு போறதுன்னு தலையை
காட்டி தானும் நடிகராகிட்டாரு. வாழ்த்துக்கள் பாண்டிராஜ்.
இந்த முறையும் நம்ம ஊரைக்கண்ணுல காட்டி, அந்த
மக்களோட வாழ்க்கையை திரையில காவியமா காட்டி
அசத்திட்டீங்க.

ரொம்ப எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த வம்சம் படம்
அதை பூரணம் செஞ்சிருக்கு. வம்சம் வளரட்டும்.
பாண்டிராஜ் இதேபோல நல்ல படங்களை கொடுத்து
புதுகையின் பெயரை சிறப்பிக்கவேண்டும்.