Showing posts with label HUSBANDOLOGY. Show all posts
Showing posts with label HUSBANDOLOGY. Show all posts

Monday, March 03, 2008

M.SC HUSBANDOLOY - முதுகலை இல்லறவியல் -நிறைவுப் பகுதி.

"இந்தப் பொம்பளங்களே இப்படித்தான்! எப்பப்பாரு புரளி
(GOSSIP) பேசிகிட்டு இருப்பாங்க. அவங்க இருக்கற பக்கம்
சத்தமா இருக்கும். ரகசியத்தை காப்பாத்த மாட்டாங்க",
இது ரங்கமணிகள் தங்கமணிகள் மீது அபாண்டமாக
வீசிக்கிட்டு இருக்கிற குற்றச்சாட்டுக்கள்.

இதுக்குபோய அலட்டிக்கலாமா? :))

ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?!!!
2 பெண்கள் சேர்ந்தாலே மட்டுமல்ல
2 ஆண்கள் சேர்ந்தாலும் "கிசு கிசு"
பேசுவாங்க. அவங்களும் அலுவலக
நண்பர்கள் பத்தி, தெரிஞ்ச வங்க பத்தி
பேசுவாங்கதான்.

தங்கமணி பேசினா அது "கிசு கிசு"!!
ரங்கமணி பேசினா "பின்னூட்டம்"!!!

(ஹலோ! நான் பதிவுகளுக்குப் போடற
பின்னூட்டத்தை சொல்லல. )

அவங்க பேசுறதை "ஜஸ்ட் கமெண்ட்"
அப்படின்னு சொல்லிப்பாங்க.

"கமெண்டை" பின்னூட்டம்னு தானே
சொல்வாங்க? ":))

ஆஹ இதுக்கெல்லாம் வருத்தப் படாதீங்க.
இதுக்கெல்லாம் டிரீட்மெண்ட் கிடையாது.


சரி, இத்தோட ஹஸ்பண்டலாஜிப் பாடத்தை
முடிச்சுக்கலாம். சொல்லிப் புரிவதுக் கொஞ்சமே.
இந்தப் பாடங்களை பேஸா வெச்சு எது எதுக்கு எப்படி
டீரீட் பண்ணனும்னு நீங்களே முடிவு
செஞ்சு, செயற் பாடத்தை தொடருங்க.
புதுப்புது டெக்னிக்சை நீங்களே கண்டுபிடிக்க
முடியும்.



இதுக்காக தனிப் பரிட்சை எல்லாம் தேவையில்லை.
அதான் தினம் தினம் வாழ்க்கையில பரிட்சை
நடக்குதே!? தனியே பரிட்சை எதுக்கு?

Tuesday, February 19, 2008

M.SC HUSBANDOLOGY - முதுகலை இல்லறவியல் பாடம்: 8

கேள்விக்கு என்ன பதில்? பதிலுக்கு என் கேள்வி!!!!


கேள்விகேட்டா என்னைக்காவது சரியா பதில்
சொல்லியிருப்பாரா ரங்கமணி?

"கழுவுற மீன்ல நழுவுற மீன்" மாதிரி
பதில் சொல்லாம முழுப்புவாங்களே! கேள்விக்கு
நேரடியா பதில் சொன்னதா சரித்திரமே கிடையாது.

"ஏங்க இவ்வளவு லேட்டு? எங்க போயிருந்தீங்க?"
இப்படி ஒரு கேள்வி ரங்கமணியிடம் கேட்டால்
அவரின் பதில்," நான் எங்க போயிருப்பேன்"?
அப்படின்னு ஐயா சொல்றாருன்னா என்ன
பொய் சொல்லலாம்னு யோசிக்கிறார்.



தப்பா எதுவும் செஞ்சிருக்கணும்னு அர்த்தம் இல்லை.
தங்கமணிகளுக்கு பிடிக்காத/அனுமதிக்காத
ஒன்றை செஞ்சிருக்காருன்னு அர்த்தம்.



ஒரு சின்ன எடுத்துக் காட்டோட சொல்றேன்.
அப்ப சரியா புரியும். ஐயா ஆபிஸவிட்டு சீக்கிரமாவே
கிளம்பி, அவங்க நண்பர்களைப் பார்த்து, அவங்களோட
"ஜாலியா" கொண்டாடிட்டு வந்திருப்பார்.



நாளெல்லாம் தனியா குழந்தையோட கஷ்டபட்டு
கிட்டு இருக்கிற தங்கமணிகிட்ட இதைச் சொன்னா
அப்செட் ஆவங்களேன்னும், இப்படி ஒரு கேள்வி
வரும்னு நினைச்சுப் பார்க்க முடியாத படி
ஜாலியாக இருந்ததனால் முன்கூட்டியே
பதிலை யோசிக்க மறந்து போயிட்டாங்கன்னா,


உடனே குரை உயர்த்தி நாம கேட்ட
கேள்விக்கு பதில் கேள்வி கேட்கிறார்னு வைங்க,!
அப்ப ஐயா, என்ன பொய் சொல்லாம்னு? யோசிக்கிறார்.


அதனால தங்கமணிகள் தெரிஞ்சுக்க வேண்டியது,
"எப்பெல்லாம் வீட்டய்யா தேவையில்லாம,
குரலல உயர்த்தி பேசுறாரோ? கேள்விக்கு
பதில் எதிர் கேள்வியா வருதோ! அப்ப
இட்டு கட்டறாருன்னு அர்த்தம்.

அவ்வளவுதான் புரிஞ்சுக்கோங்க.

(இதை நான் சொல்லலை. Marie Magdala Roker (PERSONAL
DEVELOPMENT COACH) சொல்லியிருக்காங்க.)

அடுத்த வாரம் சந்திக்கலாம்.

Monday, February 11, 2008

M.SC.HUSBANDOLOGY -முதுகலை இல்லறவியல் பாடம்;7

சக்கையாக பிழிந்த வீட்டு வேலையினிலோ,
அலுவலக வேலையினாலோ களைத்து போயிருக்கும்
தங்கமணி, தனது அதிகப்படியான வேலை,
அது கொடுத்த அயற்ச்சி இதைப்பற்றி
சொல்லிக்கொள்வதாக (Just to share)
நினனச்சு ரங்கமணிகிட்ட சொல்றாரு.

உடனே ஐயா,"இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்ற?,
உனக்கு இஷ்டம்னா வேலை பாரு. கஷ்டம்னா
வீட்டுல சும்மா இரு. சும்மா புலம்பாத", அப்படீங்கறார்.


தங்கமணி புலம்பல. ஆனா தன் கணவனிடமிருந்து
எதிர்பார்த்தது அன்பா 2 வார்த்தை, ஒரு அரவணைப்பு,
இந்த 2 தான் தங்கமணியோட மனச்சோர்வை குறைக்கும்.

இது புரியாத ரங்கமணி, புலம்பறதா நினைச்சுக்கிட்டு
அட்வைஸ் பண்றாரு. பிரச்சனையைத் தீர்ப்பது
எப்படீன்னு? லாஜிக் பாயிண்டெல்லாம் சொல்ல
ஆரம்பிச்சிடுவாரு.


இதைக் கேட்ட தங்கமணிகளுக்கு கண்ண கட்டிக்கிட்டு
வரும். ஏமாற்றப்பட்ட எஃபக்ட் இருக்கும். தன்னோட
அனுபவத்தைப் பகிர்ந்துக்க நினனச்சாங்க தங்கமணி. தன்
கிட்ட பிரச்சனையை சொல்லி புலம்பறான்னு நினைச்சு
தீர்வு சொல்றாரு ரங்கமணி.


ரங்கமணிகளுக்கு தீர்வுகள், அட்வைஸ்கள் கொடுப்பது
ரொம்ப பிடிக்கும். ஆனால் பிரச்சனை வரும்போது
feelings பத்தியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.


அவங்க ஏதோ தன் பீலிங்கஸ் சொல்றாங்க, சும்மா
கேட்டுப்போம்னு இருக்காம தேவையில்லாத
அட்வைஸ்களை கொடுத்து சிக்கல பெரிசாக்கிடுவாங்க.
தப்பா செய்யணும்னு இல்லை. "தன்னால ஒரு நல்ல
முடிவைத்தர முடியும், தான் குடும்பத்தலைவன்
அப்படீங்கற", எண்ணத்தாலும் இப்படி ஆயிடுது.....


தன்னை, தன் நிலமையை புரிஞ்சிக்கனும்னு நினைக்கிறது
தங்கமணி. ஐயாவோ பிர்ச்சனைக்கு முற்றுப்புள்ளி
வைக்கணும்னு நினைக்கறாரு. (பிரச்சனையே இல்லையே?
இருந்தாத்தனே?)


இதுல முக்கியமான விஷயம் இந்தமாதிரி தப்பான
நேரத்தில் தங்கமணிகளுக்கு, ரங்கமணிகல் சொல்ற
"அட்வைஸ்" நிராகரிக்கப்படறதால ரங்கமணிகள்
மன உளைச்சலுக்கு ஆளாராங்க. இதை ரங்கமணிகள்
ரொம்ப பர்சனலா எடுத்துக்காம,"தன் மனத்தாங்கலைச்
சொல்றா, ஆதரவா காது கொடுத்து கேப்போம், அன்பா
அரவணைப்பா இருப்போம்னு," இருக்கணும்.
இதெல்லாம் நடக்கும???



ஆண்கள் பொதுவா அவங்களுக்குள்ள பிரச்சனைகளை
சொல்லமாட்டாங்க. அவங்க மொழி அப்படி. மீறி
சொல்றாங்கன்னா, "அட்வைஸ்" கேக்கங்கறாங்கன்னு
நினைப்பாங்க. இது ஆணின் இயல்பு.



பெண்கள் தன்னைப் பாதிக்கிறவிஷயத்தை பகிர்ந்து
கொள்ளும் போது அமைதியா கேட்டுக்குவாங்க.
சாய்ந்து கொள்ள தோளாக, சொல்றதை காது
கொடுத்து கேட்பது மாத்திரம் முக்கியம்னு இருப்பது
பெண்கள் இயல்பு.


ஆக, ரங்கமணிகள்கிட்ட புலம்பறதை முதல்ல நிப்பாட்டுங்க.
எப்படி? நண்பனாக, இனி எல்லாம் அவர்தான் அப்படின்னு
நினைச்சுதானே வந்தோம்னு மனசு பதைபதைக்கும்.
கொஞ்சம் கஷ்டம்தான்னாலும் பிரச்சனைகள் வளராமல்
இருக்க இது உதவும்.


இதுதான் இந்த வாரப் பாடம். அடுத்தவாரம் சந்திக்கலாம்.

Sunday, February 03, 2008

M.SC-HUSBANDOLOGY- முதுகலை இல்லறவியல் பாடம் :6

ரங்கமணிகள் விடுப்பு எடுக்காம வேலைக்குச் செல்பவர்கள். அவங்களைத் தடுக்காதீங்க, வேலைக்குப் போகட்டும் என்று சொல்லியிருந்தேன்.

இந்தப் பாடத்தில் ரங்கமணிகள் தப்பித்தவறி
விடுப்பு எடுத்து வீட்டில்இருந்தால் என்ன
நடக்கும்? என்பதற்கு ஒரு சிறு காட்சி பார்க்கலாம்.


தங்கமணிக்கு உடம்பு சரியில்லை. பயங்கர காய்ச்சல்.
"என்னங்க! எனக்கு ரொம்ப முடியலை. இன்னைக்கு
கொஞ்சம் லீவு போடறீங்களா?, அப்படின்னு கேக்க!



ஏதோ நல்லமூடில் இருந்த ரங்கமணி, "அச்சச்சோ! உடம்பு சரியில்லையா? நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் சமையல்,
பசங்க எல்லாம் கவனிக்கிறேன்.லீவு போட முடியாது.
ஆனால் வீட்டிலிருந்து மேனேஜ் பண்ணிக்கிறேன்.
வேலைக்கு வேலையும் ஆச்சு, உன்னனயும்,
பசங்களையும் கவனிச்சமாதிரி ஆச்சு. உனக்காக இது கூட செய்யமாட்டேனா? செல்லம்!(பிரகாஷ்ராஜ் உபயம்), நீ ரெஸ்ட் எடு."




10 நிமிடத்திற்கு அப்புறம். "டிரிங்.. டிரிங்.. டிரிங்....".
ரங்கமணி போன் எடுத்து பேசுகிறார்," Hello, yeah. I
am at home today. My wife is not well. Nobody is there
to help her. Managing both family and office ......,"என்று ஆரம்பித்து............................. பேசிக்கொண்டிருக்கிறார்.
(நம்மாளுங்கத்தான் போன் எடுத்தா சட்னு
கீழவெக்கிறதே தெரியாதே).



" அம்மா பசிக்குது. சாப்பாடு கொடுங்க!!!!" இது பிள்ளைகள்.
தாளாமல் எழுந்து தோசை சுட ஆரம்பிக்கும்போது
ரங்கமணி வர்றார்.



"நீ படுத்துக்கோ! தோசைதானே நான் போட்டுத்தர்றேன்". அப்படின்னு தோசைப் போடுவார். 2 தோசை போட்டு 3 ஆவது தோசை போடும்போது மறுபடி "டிரிங்..டிரிங்..டிரிங்...."



"ஹலோ, சொல்லு. பொண்டாட்டிக்கு உடம்பு
சரியில்லை, வீட்டுல இருந்து பார்த்துக்கறேன்.......................... அப்படின்னு ஆரம்பிச்சு அய்யா, பேசிட்டு வர்றதுக்குள்ள இங்க தங்கமணீ தோசை சுட்டு, அடுப்புல குக்கரை,
ஏற்றி, காய்கறிகளை கழுவும்போது
ரங்கமணி பேச்சை முடித்து வருவார்.


"தோசை போட்டு, குக்கர் வெச்சுட்டேங்க" அப்படின்னு ஆரம்பிக்கறதுக்குள்ள,


"ஐயோ! நீ ஏம்மா இதெல்லாம் செஞ்சுகிட்டு?
டிபன் இப்பத்தானே முடிஞ்சிருக்கு. 11 மணிக்கு
மேலே சூடா சமைச்சுக்கிடலாம். நீ பிரெட்
சாப்பிட்டுடு மாத்திரை போட்டுகிட்டு ரெஸ்ட்
எடு"' அப்படின்னு சொல்லிட்டுதோசைகளச் சாப்பிடறார்.




நடுவில் ஓயாது ஒலிக்கும் போன்களும், ரங்கமணி
எல்லார் கிட்டையிம்,தன் மனைவிக்கு உடல்நிலை
சரியில்லாததால் வீட்டில் இருந்து
பார்த்துக் கொள்வதை சொல்வதை கவனிக்கத்
தவறக்கூடாது!!!!!



மாத்திரையின் மயக்கத்தில் ஓய்வெடுத்த
ரங்கமணி, 12 மணி வாக்கில் பார்த்தால் ரங்கமணி, போனில்
பேசிக்கொண்டிருப்பதையோ"சின்னதா
ஒரு அர்ஜென்ட் மெயில் அனுப்பிட்டு வர்றேன்",
என்று சொல்லிவிட்டு கணீணிக்குள் தலையை விட்டுக்
கொண்டிருப்பதோ,ஸ்போர்ட்ஸ் சேனல் பார்த்துக்
கொண்டிருப்பதோ தெரியும்.



வெறுத்துப் போன தங்கமணி காய் வெட்டி, கறி
செஞ்சு சமையல் முடிச்சு பார்க்க மணி 1.


அதுவரை ஐயா," இதோ வந்துட்டேன்"! அப்படின்னு
குரல் கொடுத்து கிட்டு இருக்கிறார்.


சமையல் ரெடி, அனைவரும் சாப்பிட்டு முடித்ததும்,
போன் பேசிய களைப்பால் ரங்கமணீயும், உடல்நிலை
சரியில்லாததால் தங்கமணீயும்
மதியம் தூங்கிப் போகிறார்கள்.


காலையில் பட்ட கஷ்டத்தை நினைத்துப் பார்த்து
தங்கமணி பேசாமல் இரவு சாப்பாட்டையும்
செய்து வைத்துவிடுகிறார்.


மேற் சொன்ன காட்சி தரும் பாடம் என்ன?
ரங்கமணீயை வீட்டில் இருக்கச்
சொல்வானேன்? தங்கமணிக்கு உடல்நிலை
சரியில்லாததால் வீட்டில் இருந்து கவனித்துக்
கொள்வதாய் தம்பட்டம் அடித்திருப்பதனால், தான்
தங்கமணியை தங்கமாக கவனித்துக் கொள்வதாக
இமேஜ் கிரியேட் ஆகி இருக்கும்.


ஆனால் நடந்த்து என்ன? உடல்நிலை சரியில்லாவிட்டாலும் வேலைகளைச் செய்தது தங்கமணீ. உதவுவதாக
கூறி வீட்டிலிருந்த ரங்கமணி உதவவே இல்லை.
ரங்கமணி ஆபிஸ் போயிருந்தாலாவது அந்த
போன் சத்தம் ஆகியவை இல்லாமல் வீடு நிசப்தமாக
இருந்திருக்கும். ஓய்வு எடுத்திருக்கலாம்.



ஆகவே தங்கமணிகளே, உடல்நிலை சரியில்லலயா?
ரங்கமணிகளை லீவ் எடுக்கச்சொல்லி அவதிப்படாமல்
ஆனந்தமாய் ஆபிஸ் அனுப்பிவிட்டு
ஓய்வு எடுப்பதுதான் புத்திசாலித்தனம்.




Wednesday, January 23, 2008

M.SC HUSBANDOLOGY - முதுகலை இல்லறவியல்: பாடம் 5

போய்வா! என் கணவா! அலுவலகத்துக்கு நீ போய்வா- பகுதி 1

ரங்கமணிகளிடம்," ஏங்க! இன்னனக்கு உங்களால லீவு போட முடியுமா?" என்று கேட்டுப் பாருங்கள்!!

அவ்வளவுதான் உடனே ரங்கமணிக்கு கைகாலெல்லாம் உதறலெடுக்கும், கேட்கக்கூடாத ஒன்றை கேட்டதுபோல் டென்ஷனாகிவிடுவார்கள். விழிகளை உருட்டி, பேஜாராகி, நெற்றிக் கண் இருந்தால் உங்களைப் பஸ்மம் ஆக்கிவிடுவார்கள்.

ரங்கமணிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "விடுப்பு" (விஜயகாந்த் ஸ்டைலில் படிங்க. அப்பத்தான் எஃபக்டா இருக்கும்). அவர்களது
அகராதியில் "LEAVE" என்ற சொல்லே கிடையாது.

இதற்கெல்லாம் தங்கமணிகள் டென்ஷன் ஆகக்கூடாது. கூல் :)))

ஒவ்வொரு ரங்கமணிகளும் அவர்கள் வேலைப் பார்க்கும் அலுவலகத்தின் தூண்கள், சுமைதாங்கிகள். ரங்கமணிகள் ஒரு நாள் போகவில்லை என்றாலும் ஸ்தம்பித்துவிடும். (சும்மா. நினைச்சுக்கறது தான்!!!)

"நீங்க ஒரு நாள் இல்லாட்டியும், ஆபிஸ்ல வேலையே ஆவாது. அப்படியே இருக்கும். நீங்க இந்த ஆபீஸுக்கு ரொம்ப முக்கியம் சார்", அப்படின்னு, சகஊழியர்களோ, அதிகாரிகளோ சொல்ற புகழ்ச்சி வார்த்தைகளுக்கு மயங்கி
"மந்திரிச்சு விட்ட" மாதிரியே ஒரு கிக்கோட இருப்பார்கள்.

வேலையும் ஒரு போதை மாதிரிதாங்க. அதிகமா, எப்பப்பாரு வேலை, வேலைன்னு இருக்கறவங்கள "workholic" அப்படின்னு தானே சொல்வாங்க?!!

இந்த போதை அதிகமாகி, அதாவது இந்த போதைக்கு அடிமை ஆனவர்களால் அலுவலகம் செல்லாமல் இருக்க முடியாது.

ஓய்வு பெறும் வரை இதே மாதிரி ஓடும் இவர்கள், இவர்களின் ஓய்வுக்குப்பிறகும் அந்த அலுவலகம் அதேமாதிரியே இருக்கும் என்பதை உணராதவர்கள். தங்கமணிகள் சொன்னால் கோபம்தான் வரும். மனக்கசப்பு உண்டாகும்.

போகட்டும் தடுக்காதீர்கள். அவர்கள் ஆனந்தமாய அலுவலகம் போனால்தான் தங்கமணிகளுக்கு நல்லது. ஆனந்தம்! பரமானந்தம். எப்படி? அடுத்த வாரம் அதான்.

டிஸ்கி: இந்தப் பதிவை படித்துவிட்டு ர.மணிகள். நாங்கள் வேலைக்குப் போனால்தான் அது வாங்க முடியும், இது வாங்கமுடியும், சாப்பிடமுடியும், தூங்க முடியும்........ அப்படி, இப்படின்னு சண்டைக்கோழிகளாய் தாக்க வருவார்கள்.

ஐயா!!! நாங்கள் உங்களை வேலைக்கே போகவேண்டாம் என்று சொல்லவில்லை. முக்கியமானது, அவசரம் போன்றவற்றிற்கும் விதிவிலக்கு
இல்லாமல் வேலைப் பார்ப்பதைத் தான் சொல்கிறோம்.

Tuesday, December 25, 2007

M.SC HUSBANDOLOGY - MUTHUKALAI ILLARAVIYAL PAADAM 4

சொன்னதை செய்யாத கிளிப்பிள்ளை


தங்கமணிகள் எது சொன்னாலும் செய்யப்பிடாதுன்னு
கல்யாணத்தன்னைக்கே கங்கணம் கட்டிக் கொள்வார்கள் போல.

என்ன வேலையாக இருந்தாலும் சரி, செய்ய மாட்டார்கள்.

நாம் ஒரு உதவி கேட்டிருந்தாலோ, இல்லை மற்ற எந்த வேலையாக இருந்தாலும் சரி அது அவ்வளவுதான். (போன், எலக்டிரிக் பில், குளித்த பின் கட்டிலின் மீது போடப்படும் துண்டு, எதை விடுப்பது, எதை எடுப்பது என்று அவர்களே குழம்பி போய் வார இறுதியில் செய்வதாக சொன்ன கப்போர்டு கிளீனிங்!! இப்படி எதுவேண்டுமானுலும் இருக்கலாம்.)


ரங்கமணிகள் அகராதியில் இவ்வாறான வேலைகளுக்கு இருக்கும் கெடு மனதிற்குள் வைத்திருப்பார்கள்.ஆனால் அது எப்பன்னு அவங்களுக்கேத் தெரியாது.மெதுவா செஞ்சா போச்சு. என்ன அவசரம் என்ற மன நிலை தான் காரணம்.அலுவலக வேலைகள் மட்டும் தான் ஆன் டைமில் முடிக்கப்படும். வீட்டில் உதவுவது என்பதெல்லாம் ரொம்ப தப்பு.


இதுக்கு டீரீட்மென்ட் என்ன?

ரங்கமணிகள் வீட்டு வேலைகளை செய்யாமல் இருப்பதில் பல காரணம் இருக்கிறது.
1. அலுவலக வேலையை வீட்டிற்கு கொண்டு வ்ந்து தான் ரொம்ப பிசி என்று காட்டிக் கொண்டிருப்பார்கள்.


2. ரங்கமணிகள் செய்யாமலே காத்திருந்து, தங்கமணிகளுக்கு டென்ஷன் கொடுக்கலாமே!

3. மிக முக்கியமாக வேலை பளுவை தங்கமணிகள் மேல் சுமத்த திட்டம்.

4. யாராவது செய்யனுமே அப்படின்னு நினைச்சு தங்கமணிகள் செஞ்சு முடிச்சிட்டா அப்பாடின்னு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கிட்டு வேலை செய்யாம தப்பிக்கலாமே அது தான் முக்கியமான திட்டம்.


தங்கமணிகள் செய்யவேண்டியது ரங்கமணிகள் செய்யாவிட்டால், நமக்கென்ன என்று தங்கமணிகளும் செய்யாமல் காலம் தாழ்த்த வேண்டியது தான்.


நாமலே இழுத்து போட்டுகிட்டு வேலை செஞ்சா பாராட்டுராங்களேன்னு நினைச்சு செய்யப்பிடாது.

அது பாராட்டு இல்லை தங்கமணிகளே! உஷார். வேலை பளுவை தங்கமணிகளுக்கு அதிகமாக்கி ரங்கமணிகள் வேலை செய்யாமல் தப்பித்து கொள்ளும் திட்டம்.

Wednesday, December 12, 2007

M.SC HUSBANDOLOGY - முதுகலை இல்லறவியல் பாடம் : 3

நவீன சித்ரகுப்தனும், கர்ணணுமாகிய ரங்கமணிகள்.

அழகான விளம்பரம் இதை நீங்கள் ரசித்திருப்பீர்கள். துயில் எழுந்தது முதல் தன் அன்னையின் முகத்தில் முழிப்பதற்காக கண்களை மூடியபடி அன்னையை தேடிச்செல்லும் விளம்பரம் கவிதையான விளம்பரம். (pears soap)

அந்த விளம்பரக் குழ்ந்தையைப் போல நம் ரங்கமணிகள் காலையில் எழுந்ததும் கண்களை மூடியபடி தலகாணிக்கு கீழே இருக்கும் செல்லிடை தொலைப்பேசியை எடுத்து கொண்டு, கண்களை திறக்காமலேயே அப்படிக்கா போய் கணிணியைப் பார்த்து அதை உயிர்பிப்பார்கள். அதற்கு உயிர் வருவதற்குள் பல்லை தேய்த்து விட்டு, பேப்பரை எடுத்துக் கொண்டு, காபி, போன்கள், கணிணி சகிதம் செட்டிலாகி விடுவார்கள். மேற்சொன்னவை நடக்காவிட்டால் பொழுது விடியாத மாதிரி தான். குளித்து ரெடியாகி அலுவலம் போகும் வரை கணிணி உயிரோடு இருக்கும்,போன்
சத்தம் ஓயாது.

அலுவலகம் போய் வீடு திரும்பிய உடன், உடை மாற்றுவதற்கு முன் கணிணிபொட்டியின் சுவிச்சை தட்டிவிட்டு தான் உடை மாற்ற செல்வார்கள்.
(டிரஸ் மாத்திகிர நேரத்துக்குள்ள கணிணி உயிர்பெற்று தயாராகிவிடுமே! டைம் மேனேஜ்மென்ட்....)

கணிணித்துறையை சேர்ந்தவர்களாக இல்லாத போதும் ரங்கமணிகளூக்கு கணிணி முன் தான் பொழுது போகும். கணிணி, இன்டர்நெட், போன் ஆகியவற்றில் கோளாறு ஏற்பட்டால் "கப்பல் கவிழ்ந்தாற்போல" சோகமாகி, அதை உடனே சரிசெய்ய முயற்சிக்கள் நடக்கும். (பைப் ஒழுகுதுன்னு சொல்லி 4 நாளாகியும் பிளம்பர கூப்பிட மாட்டங்க)

இப்படி கணிணியுடனேயே இருப்பதாலேயே ரங்கமணிகள்
நவீன சித்ரகுப்தன்கள். கர்ணானுக்குத்தானே கவசகுண்டலம் காதோடு இருக்கும். செல்லிடை தொலைப்பேசியையும், கார்ட்லெஸ் போனனயும் காதோடு எப்போதும் வைத்திருப்பதால் ரங்கமணிகள் நவீன கர்ணன்கள்.

இவங்க இப்படியே இருக்காங்களே? என்ன செய்வதுன்னு பார்க்கறது தான் இந்த பாடம். அவங்க அப்படியே இருக்கட்டும். இது ஆண்டவனாக பார்த்து தங்கமணிகளுக்கு அருளிய பொன்னான நேரங்கள்.

அவர்கள் அப்படி "பிஸியாக"இருக்கும் போது தங்கமணிகள் தாங்கள்
விரும்பிய வேலைகளை செய்யலாம். கதைப் புத்தகம் படிப்பது, பாட்டு கேட்கலாம். மிக முக்கியமாக கோவை சரளா- வடிவேலு அடிதடி காட்சிகள், பார்த்து குறிப்பெடுத்து வைச்சுக்கனும். ஒன்னுமே இல்லாட்டி சீக்கிரமா தூங்கப் போகலாம். இப்படி உங்களுகேன்னு நேரம் கிடைக்கிறது அரிது.
மிக முக்கியமாக ஒன்று ஞாபகம் வெச்சுக்கனும். ரங்கமணிகள் கணிணி முன் அமர்ந்திருக்கும் நேரத்தில் தங்கமணிகள் மற்ற வேலைகளை முடித்துவிட்டு ரங்கமணிகளுக்காக காத்திருக்க கூடாதூ. அவர்கள் பிஸியாக இருக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு, ரங்கமணிகள் போதும் என்று நினனத்து
கணிணியையோ, போனையோ விட்டுவிட்டு வரும்போது நம் வேலைகளை செய்ய வேண்டும். இது ரொம்ப முக்கியம்.
அதாவது வீட்டில் இருக்கும் :
ரங்கமணி பிஸி - தங்கமணி ஓய்வு!
தங்கமணி பிஸி - ரங்கமணி ????!!!!
இப்படீ சிலநாள் (பலருக்கு பல நாள்) டிரீட்மென்ட் கொடுத்தால் ரங்கமணிகள் கணிணி பக்கம் போக வேண்டும்
என்றால் தங்கமணிகளிடம் அனுமதி பெற்று போகும் நிலையும், நாளில் குறிப்பிட்ட
சில மணி நேரங்கள் மட்டுமே கணிணி முன் இருக்கும் நிலை ஏற்படும்.
செயற்பாடங்களை மறக்காம் பின்பற்றி செய்யுங்க. அப்பத்தான் பழகும். பயிற்சி சரியா வரும்.
அடுத்த புதன் பார்ப்போம்.

Wednesday, December 05, 2007

M.SC HUSBANDOLOGY - (முதுகலை இல்லறவியல்) பாடம் : 2

எடுத்த சபதம் முடிப்பேன்! "சொல்வதைக் காதில் பொட்டுக்
கொள்ளக் கூடாது" என்று எடுத்த சபதம் முடிப்பேன்.


பல சமயம் ரங்கமணிகள் நாம பேசறத காதில் போட்டுக்காமலே
இருப்பாங்க. அது ஏன்? எதுக்கு? எப்படி? இது தான் இன்றைய
பாடம்.

நீங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடி ஐயா
என்ன செஞ்சுகிட்டு இருக்காருன்னு பாருங்க.

இந்த மாதிரி சமயங்களில் சொல்லியிருப்போம்.

1. டீவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது. முக்கியமாக sports,
National geographic and news channels போன்றவைத்தான்
பொதுவா பாப்பாங்க. (தோத்துப் போன பழைய மேட்சாகவோ, aeroplane accident பத்தியோ தான் இருக்கும்.)

2. புத்தகம், நியூஸ்பேப்பர் படிக்கும் போது. (படிக்கிறாரா? நடிக்கிறாரா? ஒன்னுமே புரியல)

3. சாப்பிடும்போது.

இந்த அதிமுக்கியம் வாய்ந்த தருணங்களில் மிக முக்கியமான விஷயமாக இருந்தால் கூட சொல்லாதீங்க. சொன்னாக்க செவிடன் காதில் ஊதிய சங்கு கதை தான்.

நாம் சொல்றது காதிலே விழும். ஆனா கேட்காத மாதிரியோ அல்லது
interest இல்லாத மாதிரியோத்தான் இருப்பாங்க.

இந்த காட்சியைப் பாருங்க.

ரங்கமணி டீவி பார்த்துகிட்டு இருக்காங்க,

"என்னங்க, இன்னிக்க்கு...........", அப்படின்னு தங்கமணி ஆரம்பிக்கிறாங்க.

(சொல்லிக்கிட்டு இருக்கும்போது கேட்கிறாரா? இல்லையான்னு
சந்தேகம் வரும். ஏன்னா? ஐயா கண்ணு டீவி மேலல்ல இருக்கு.)

தங்கமணி," ஏங்க கேக்குறீங்களா?

"ஆமாம்! கேட்டுகிட்டு தான் இருக்கேன்"

"டீவி பார்க்கிறீங்களோன்னு நினைச்சேன்"

"காது கேட்குது சொல்லு" (பெரிய அஷ்டாவதானி. ஒரே நேரத்தில 2 வேலை செய்யறாருன்னு நினைப்பீங்களே?!)

பாதி கவனம் தங்கமணி சொல்லும் விஷயத்தில், மீதி கவனம் பார்த்துக்
கொண்டிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றியோ தான் சிந்தித்து கொண்டிருப்பார்கள்.

(அடுத்து யாரை இரக்க போறாங்க. மேட்ச் என்னவாகும்?

ஐர்வினால எப்படி முதலைகள் பக்கத்தில நிக்க முடியுது?

புஷ் ஏன் இப்படி செய்யுறாரு? இதான் சிந்தனை)

சரி ஏன் இப்படி இருக்காங்க? என்ன பிரச்சினைன்னு பார்த்தாக்க
விஷயம் இது தான்.

  1. 1. தங்கமணிகள் சொல்றதை கவனிக்கிறார் ரங்கமணி அப்படிங்கற மெசெஜ் தங்கமணிகளுக்கு(அதாவது நாம் சொல்றதுல இன்ட்ரஸ்ட காட்டிட்டா?) உணர்த்திட்டா, அடுத்தமுறை தான் கேட்க விரும்பாத (செய்தி/சூழ்நிலை) போதும் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் என்பதாலேயே இந்த "காது கேளாத" எஃபக்டு.
  2. விஷயத்தை கேட்டு "உம்" கொட்டிட்டா மொத்தமும் சொல்லிடுவாங்களோன்னு பயம்.
  3. கேளாத மாதிரி இருந்தால்," காது கேட்குதா இல்லையா? எந்த உலகத்திலே இருக்காரு"? அப்படின்னு குழம்பி தங்கமணிகளுக்கு பைத்தியம் பிடிச்சிடும்.
  4. கேட்டும் கேளாத மாதிரி இருந்து வெறுப்பேற்றினால் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமல், வெளிநடப்பு செய்து விடுவார்கள்.தப்பிச்சுக்கலாமே!!!! அது மேட்டரு.

சரி எப்படித்தான்? எப்பத்தான் சொல்லுறதுன்னு கேக்கறீங்களா?

கிட்ட வாங்க ரகசியம் சொல்றேன்!!!

எதை? எப்போது? எங்கே? எப்படி சொல்ல வேண்டும்னு திட்டமிட்டு சொல்லுங்க.

சொல்ல வேண்டியதின் சாராம்சம் மாத்திரம் சொல்லுங்க. இன்ட்ரெஸ்ட் இருந்தா பொட்டியை ஆஃப் செஞ்சுட்டு வருவாங்க.

பேசறதுக்கு முன்னாடி டீவிஐ ஆஃப் செஞ்சுட்டு, ரிமோட், பக்கத்தில இருக்கற பேப்பர், புத்தகம் எல்லாம் எடுத்து ரங்கமணி கையில சிக்காத இடத்தில் வைச்சுட்டு, டீவி ஸ்கிரீன் முன்னாடி போய் நின்னு கிட்டு (ரங்கமனி பக்கம் திரும்பித்தான்) பேசுங்க.

சாப்பிடும்போது கண்டிப்பா சொல்லாதீங்க.

மேற்படி சொன்னது எதுவும் ஒத்துவரலைன்னா விட்டுடுங்க. சொல்லாவே சொல்லாதீங்க.

"உங்ககிட்ட சொல்ல வந்தேன். நீங்க பிஸியாக இருந்தீங்க. அவசரம். அதனாலே நானே முடிச்சிட்டு உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன்," அப்படின்னு டயலாக் விடுங்க.

சொல்லிட்டு செய்ய வேண்டிய விஷயத்தைக் கூட சொல்லாமலே இருந்துட்டா? செஞ்சுட்டா? விட்டது பிரச்சனை.

அப்புறமென்ன. ஐயா, ஆடோமேடிக்கா," சொல்லாமல் அடிச்ச சுந்தரி- இனி எங்கிட்ட சொல்லுடி சுந்தரி"ன்னு வழிக்கு வந்திடுவாரு.

புரிஞ்சுதா? இது தான் இன்றைய பாடம். சொல்லியிருக்கிற செயற்பயிற்சிகளை செஞ்சு பார்க்கறது தானே

வீட்டுப்பாடம்.

அடுத்த புதன் நான் வந்திடுவேன். நீங்க வற மறந்திடாதீங்க

வர்ட்டா?

பினாத்தலாரின் பதிவுக்கு பின்னூட்டம் பதிவாக

தங்களின் முந்தைய பாடங்களில் நல்லா ஜொள்ளூங்கப்பா என்றும், வேலை செய்யாதீங்க என்று ஆணீய புயல் வீச எழுதி இருந்தாலும் அதற்கு பின்னூட்டம் இடத்தேவையென நினைக்கவில்லை. புதுப்பாடத்திற்கு பதில் போட்டே ஆகவேண்டிய கட்டாயம்.


பொண்ட்டாட்டியத்தான் மாத்த முடியாது, (இப்படி டயலாக் சொல்லி)
அதனால 6 மாதத்துக்கு ஒரு முறை ஆண்கள் மாத்தும் cellphone, tv, handycam,
car இவற்றை குறித்து சொல்ல ஆரம்பிச்சா அவ்வளவுதான்.

போர்டபிள் டீவி வேண்டாம், சாதரணமான டீவீ போதுமே. LCD ல் பாத்தாத்தான் சரியா தெரியுமா?

ஹோம் தியேட்டர் சிஸ்டம், இந்த மாசம் N- 73 music version னா அடுத்த 6ஆவது மாசம் N-90, அப்புறம் சின்ன கணிணியாக இருக்கும் மொபைல்னு
நீங்க இருக்கறத கொடுத்துட்டு மாத்திகிட்டே இருக்கீங்களே இதை எங்க போய் சொல்றது. உங்களுக்கு மாத்திரம் எல்லாம் latest model லா இருக்கணும்.
பெண்கள் நகை, பட்டுப்புடவை வாங்கினா தப்பு.

ஆமாம் எந்த யுகத்தில் இருக்கீங்க? பட்டுப்புடவைக்கும், நகைக்கும் பெண்கள் ஆசைப்படறாங்கன்னே சொல்லிகிட்டு இருக்கீங்களே.

இப்போ மாப்பிள்ளைங்க NRI ஸா இருகறதனால கல்யாணத்துக்கு வாங்கின பட்டும், நகையும் அம்மாவீட்டிலோ/மாமியார்கிட்டையோத்தான் இருக்கு. அதனால granda ஒரு பட்டுபுடவை கல்யாண்த்திற்கு, மத்ததெல்லாம் லைட் வெயிட் சில்க் காட்டன்னு வாங்கிக்கிட்டு, தேவையான நகைத்தவிர மிச்ச பண்த்தை பேங்கல தான் போட்டு வைக்கிறாங்க. இது உங்களுகு தெரியாம போச்சே!

இந்தியாவில் இருக்கும் பெண்கள் செலவு பண்றாங்கன்னா சொல்லிக்கொடுங்க. நானும் செலவு பண்னல, நீயும் பண்னாத. வருமானவரி கட்டறதுலேர்ந்து தப்பிக்க இன்வெஸ்ட் பண்ணலாம்னு பேசி பட்ஜெட் போட்டு காட்டி சேமியுங்களேன். முடிஞ்ச போது ஒருமுறை மனைவியின் விருப்பத்திற்கு என்றால், அடுத்தமுறை கணவன் ஆசைப்படும் லேட்டஸ்ட் எலக்ட்ரானிக் சாமான் வாங்குங்களேன்.

கிராமத்தில இருக்குற முனியம்மா கூட சிறுவாடு காசு சேர்த்து வைக்கும்போது, நகரத்தில் வசிக்கும் கண்ணம்மாக்களுக்கு தெரியாதா? அப்படித் தெரியவில்லை என்றால் அது ஆணின் தவறு.

இதெல்லாம் விட்டுப்புட்டு காமெடி பண்ணாதீங்க. சும்மா பொண்டாட்டிங்களைப் பத்தி தப்பா சொல்லி கல்யாணம் ஆக வேண்டிய வயசு பசங்களை பயமுறுத்தாதீங்க.

Wednesday, November 28, 2007

M.SC. HUSBANDOLOGY (முதுகலை இல்லறவியல்) பாடம் - 1

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு பிரபல வாரப் பத்திரிககயில் சொல்லியிருந்த கதையோடு பாடத்தை துவங்கலாமா?

கடற்கரையில் ஒரு பெண், கூழாங்கல் ஒன்றைக் கண்டெடுத்தாள்.
சுத்தம் செய்ய அதைத்தேய்த்தாள். எதிரில் ஒரு பூதம் தோன்றியது.



"என்னை விடுவித்தற்க்காக் உன் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுகிறேன்.
என்ன வேண்டும்?" என்று கேட்டது.

"என் நாய்க்குட்டி பேசவேண்டும், பாட வேண்டும், பரத நாட்டியம் ஆட
வேண்டும்", என்றாள் அந்தப்பெண்.

பூதம் உதட்டை பிதுக்கியது. "அத்தனை சக்தி எனக்கு இல்லை. வேறு ஏதாவது
கேள்!" என்றது.

"அப்படியானால் அன்பானவனாக, நகைச்சுவை உணர்ச்சி மிகுந்தவனாக, வீட்டு வேலைகளில் உதவி செய்பவனாக, என்னையும் என் குடும்பத்தையும் மதிப்பவனாக, என்னிடம் பொய்யே சொல்லாதவனாக ஓர் ஆண்மகனை
எனக்குக் கணவனாகக் கண்டுபிடித்துக் கொடு!" எனக் கேட்டாள்.

பூதம் பெருமூச்சுவிட்டது... "முதல் ஆசையே பரவாயில்லை. உன் நாய்க் குட்டி எங்கே என்று கேட்டதாம்.

அங்கே என்ன ஒரு வெடிச்சத்தம்? இதயம் வெடிச்சதா? கற்பனை நீர்க்குமிழி
உடஞ்சிடிச்சா? இது தாங்க நிசம்.


சினிமால காட்ற மாதிரி உருகி உருகி காதலிக்கிறது, அன்பாக, அனுசரணையாக பார்த்துக் கொள்வது, "நீயில்லையேல், நானில்லையே",
இதெல்லாம் நிசத்தில சாத்தியம் இல்லீங்கோ!


யாரோ கோடில (கோடி வீட்டுல இல்ல) ஒருத்தர் வேணாம் இருக்கலாம்.


பெண்ணுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கான்னு கேட்கற பெத்தவங்க ரொம்ப குறைவு. " மாப்பிள்ளைக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்காம். அதிர்ஷ்டக்காரி!!!!!!!!!!", "பெரியவங்களுக்கு தெரியாதா? பொண்ண என்ன கேட்டுகிட்டு" ங்கிற டயலாக்குகள் சர்வ சாதாரணம்.

பல திருமணங்கள் "லொளகீக" சமாசாரங்கள் ஒத்துப்போகிற காரணங்களால் மட்டுமே நடக்கிறது. அதுதான் உண்மை.

அதனால் தங்கமணிகள் எதிர்பார்ப்புகளை தவிர்த்துவிட்டு, மனதை
தேற்றிக்கொண்டு, " இது இப்படித்தான்"
என்பதை புரிந்துகொள்வது மிகமுக்கியமுங்க.



நான் வாழ்க்கையை மட்டும்தான் சொன்னேன். நீங்க ஏதும் தப்பா புரிஞ்சிகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல. :))


ஆனது ஆகிப்போச்சு, வருத்தப்படாம விவரமா இருங்க.அடுத்தவாரங்கள்ள
எப்படி சமாளிக்கிறதுங்க்ற பாடங்களோட வர்ரேன்.

Wednesday, November 21, 2007

M.Sc.HUSBANDOLOGY (முதுகலை இல்லறவியல்) வகுப்புக்கள் ஆரம்பம்



மகளே! மணமகளே! மருமகளே! வா! வா!



தாரை, தப்பட்டை மற்றும் டிரம்ஸ் மணி அவர்களின்

"அதிரடி" தாள சப்தங்களுடன், சகல மானவர்களுக்கும்

அரிய தருவது என்ன வென்றால் " M.Sc.Husbandology (முதுகலை இல்லறவியல்" வகுப்புகள் அதி விரைவில்

துவங்க இருக்கின்றன.

வகுப்புகள் தங்கமணி/ரங்கமணி இருவருக்கும் தான்.

மிக முக்யமாக "கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல்"

இருக்கும் புது மனைவியர்,

பொறுத்தது போதும் என் பொங்கி எழ காத்திருக்கும்
கழக கண்மனி மன்னிக்கவும் தங்கமணிகள், மற்றும்

கன்னி இளம் பெண்களுக்கும் (பின்னாடி உதவுமுங்கோ)


ரங்கமணிகளை புரிந்து கொள்வதற்காக அல்ல,
தற்காப்பு கலை போல் ரங்கமணிகளை எதிர்கொள்வது
எப்படி என்பதை தங்கமணிகள் புரிந்து கொள்ளவதே
இப்பாட திட்டத்தின் குறிக்கோள்.

பின்னூட்டம் இட்டாலே வகுப்புகளுக்கு

பதிவு செய்து விடுவோம்.
விசிட்டிங் பொரஃப்ஸர்களாக அனுவம்

மிக்க தங்கமணிகள் வர விரும்பினால்

இரு கரம் நீட்டி வரவேற்கிறோம்
மிக முக்யமான விஷயம்:
இந்த வகுப்பில் வீட்டு பாடம் கிடையாது.
தரப்பட்டுள்ள தியரிகளை புரிந்து கொண்டு,

அவற்றை செயற்படுத்தி பார்ப்பதே வீட்டுப்பாடம்

ஒவ்வொரு புதனும் பாடங்கள் வெளியாகும்.

ரெடி! ஸடார்ட்! தி பேண்ட்,