Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Friday, November 14, 2014

பக் பக் பால்கனி புறா

பத்து நாள் ஊருக்கு போயிருந்த சமயத்துல புறா நம்ம பால்கனிய பிரசவ அறையா மாத்தனும் திட்டம் போட்டிருந்துச்சு போல நாங்க ஊர்லேர்ந்து வந்த அன்னைக்குத்தான் முட்டை இட்டு வெச்சிருந்தது.
இலைதழை எதும் கொண்டு கூடு கட்டாம, அங்கேயிருந்த ஃப்ளவர் பாட்டில் மண் இருக்க அதில் முட்டை இட்டு வெச்சிருந்தது.

அடைகாக்க ஆரம்பிச்சது.  பெண்புறாவும் ஆண்புறாவும் மாத்தி மாத்தி பாதுகாத்தது. சாப்பாட்டுக்கு என்ன செய்யும்னு எங்களுக்கு ஒரே யோசனை. கிட்ட போனா உர்ருங்குது. இரண்டு புறாவுமே இல்லாம இருந்த ஒரு சமயத்துல ஒரு கிண்ணத்துல தண்ணியும், இன்னொரு கிண்ணத்துல கொஞ்சம் அரிசியும் போட்டு வெச்சேன்.

அதுக்கப்புறத்துலேர்ந்து பெண்புறா எங்கயும் போகாம அங்கயே இருந்துச்சு. பால்கனியில் இவுக நடமாட்டம் இருந்தாலும் நாங்க துணிகாயபோட எந்த பிரச்சனையுமில்லாம அவுக பாட்டுக்க இருந்தாக. அதுதான் பெண்புறான்னு நினைச்சுக்கிட்டோம். ஏன்னா ஒரு வாட்டி அரிசி போட கிட்டப்போனா கொத்தவந்துச்சு புறா. அப்ப இது வேற. ஆண் புறா போலன்னு நினைச்சுக்கிட்டோம். (பெண் புறா இருக்குற பக்கத்துல நின்னே துணி காயப்போட்டாலும் ஒண்ணும் செய்யாம இருந்துச்சு.) ஆனா கிண்ணத்துல அரிசி இல்ல என்ன செய்யன்னு யோசிக்கையில அம்ருதம்மா ஒரு நீளமான கரண்டில அரிசி வெச்சு அதை கிண்ணத்துல போட்டாப்ல. :)







 அம்மாவோ அப்பாவோ சாப்பாடு கொண்டு வர அதை அந்த குட்டிப்புறாக்கள் வாயிலேர்ந்து எப்படி எடுத்து சாப்பிடுதுங்க பாருங்க. பால்கனியில சத்தம் கேக்கும்போதெல்லாம் ஆஜர் ஆகி அதை பாத்துக்கிட்டு இருந்தோம்.

தினமும் காலையில் எந்திருச்சு ஒரு குட்மார்னிங் சொல்லி எப்படி இருக்காங்கன்னு பாத்துக்கறது பழக்கமா போச்சு.  குட்டிகள் மெல்ல மெல்ல பெருசாச்சு. பெருசானா கைகாள் வீசி நடக்க வேண்டாமா? ஆரம்பிச்சாங்க ரெண்டு பேரும். பாத்திரம் கவுத்து வைக்கிறது எல்லாம் வேஸ்ட் ஆக ஆரம்பிச்சுச்சு. இவங்க கழிவுகளால பால்கனியில் செம ஸ்மெல். எப்படி எடுத்து கழுவுறது. அங்கயே இருக்காப்ல. கூடு மாதிரி இருந்தா எடுத்து அந்த பக்கம் வெச்சிட்டு கழுவலாம்.

இப்படியே போக மெல்ல மெல்ல கழுவி ஏதோ ஒருவிதமா ஓட்டிக்கிட்டு இருந்தோம். ரெண்டு பேரும் பெருசாகிட்டாங்க.




பால்கனி மொத்தமும் இவுக ராஜ்ஜியமா போச்சு. வெளிய எப்படி அனுப்புறதுன்னு தெரியலை. ரொம்பவே அசொளகர்யமா போச்சு. ப்ளுகிராஸுக்கு போன் செஞ்சா. உடம்பு சரியில்லாத பிராணிகளைத்தான் ஏத்துப்போம். அதனால உங்க வீட்டுலயே பத்திரமா வெச்சுக்கங்கன்னு சொல்லிட்டாங்க.

பறவைகளை பறக்காதன்னு சொல்ல முடியாது. ஆனா எங்களுக்கு பாத்திரம் கழுவ துணி துவைக்க அதான் இடம். எல்லாம் நாசமாகிட்டு இருந்துச்சு. என்ன செய்யன்னு புரியாம வாட்ச்மேனைக்கூப்பிட்டு பிடிச்சு வெளியில பத்திரமாவிடு இல்லாட்டி உங்க ரூம் கிட்ட வெச்சுக்கன்னு சொன்னேன். (குப்பத்து பசங்க பிடிச்சு போய் பிரியாணி ஆக்கிடுவாங்களோன்னு பயம்)

வாட்ச்மென் பிடிக்க வந்தா ரெண்டு பேரும் பால்கனி கம்பிகேப்ல பறந்து போயிட்டாங்க. அடப்பாவிகளா பறக்க தெரிஞ்சுமா இங்க உக்காந்து வம்படி செஞ்சீங்கன்னு நினைச்சுக்கிட்டோம்.



Wednesday, November 12, 2014

கவிதை வாங்கி வந்தோம்......

வேற எந்த ரூமும் காலியில்லை. மசாஜ் ரூம் தர்றேன்னு மேனஜர் சொல்ல, மசாஜ் பார்லர் பக்கம் ஏதோ ரும் இருக்கு போல அதை ரெடி செஞ்சு தருவாங்கன்னு நினைச்சா மசாஜ் டேபிள் மேல படுக்க சொன்னாப்ல. இன்னாய்யா நினைச்சுக்கினீங்கன்னு காண்டாகி கத்திட்டு, “கட்டுபடியாகுதுன்னே”னு சொல்லி கட்டின பணத்தை இரவு உணவு வரைக்கும் கழிச்சுக்கிட்டு திரும்ப கொடுக்க சொன்னோம்.

அது கஷ்டம் சார்னு சொன்னவங்க. இப்ப சத்தம் குறைஞ்ச மாதிரி இருக்கு, இருங்க பேசிட்டு வர்றேன்னு சொல்ல, அயித்தானும் கூட போனாங்க. ரிஷப்ஷன் ஆள் கிட்ட “என்ன கொடுமைங்க இது. நாங்க தான் எங்க பையர் பிறந்த நாளுக்காக ரிலாக்ஸ்டா எஞ்சாய் செய்யலாம்னு வந்தோம். இப்படி ஒரு அனுபவமா போச்சேன்னு” சொல்லிக்கிட்டு இருக்கும்போது அயித்தான் திரும்பி வந்தாக. சத்தம் ஓயவே இல்லையாம்!!!

அப்புறம் தான் அந்த மேனேஜர் சார் நீங்க மேற்கொண்டு பணம் ஏதும் கட்ட வேணாம். மாசப் டாங்க்கிட்ட எங்க ஹோட்டல் இருக்கு அங்க தங்க ஏற்பாடு செய்யறோம்னு சொல்ல அயித்தான் சரின்னு சொன்னாப்ல. அங்க போய் பணம் கொடுன்னா ஒரு பைசா கொடுக்க மாட்டோம்னு கறாரா பேசிட்டுத்தான் கிளம்பினோம். அது 5 நட்ச்த்திர ஹோட்டல்.

அர்த்த ராத்திரி அந்த ஹோட்டலுக்கு வந்தோம். செக்கின் கவுண்டர்ல கேட்டா பேந்த பேந்த முழிச்சாங்க. அப்புறம் அயித்தான் பழைய ரிசார்ட்டுக்கு போன் செஞ்சு அப்படி இப்படின்னு 45 நிமிஷத்துக்கு அப்புறம் ரெண்டு ரூம் கொடுத்தாங்க. (நாங்க நாலு பேர்ல). சரிதான்னு போய் படுத்ததுதான் தெரியும்.

காலை உணவுக்கு கீழே இறங்கி போனோம். ரூம் நம்பர் சொன்னதும் ரெஸ்டாரண்ட் மேனஜர்லேர்ந்து ஒவ்வொருத்தரா வந்து ஆஷிஷ் யாருன்னு விசாரிச்சு “ஹேப்பி பர்த்டே சொன்னாங்க”. செவ்வாய் தான் பர்த்டேன்னு சொன்னாலும் பரவாயில்லைன்னு சொன்னாப்ல. உணவு நல்லா இருந்துச்சு.

ரிஷப்ஷ்ன்ல போயி லஞ்சு முடிஞ்சதும் செக் அவுட் செய்வதா சொல்ல போனாக அயித்தான். நேற்று ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிக்கும்படி கேட்டுக்கிட்டாக. ரூமுக்கு வந்தா அயித்தானுக்கு அந்த ஹோட்டல் எம்.டி போன் செஞ்சாப்ல. மன்னிப்பு கேட்டுட்டு, மதியம் உணவு காபி ஷாப்ல இல்லாம ஜ்வல் ஆஃப் நிஷாம்ங்கற அவங்களோட ஷ்பெஷல் ரெஸ்டாரண்ட்ல கொடுக்க சொல்லியிருக்காப்லயும், தவறாம அவங்க உபசரிப்பை ஏத்துக்கும்படியும் கேட்டுக்கிட்டாரு.

கொஞ்ச நேர ரெஸ்ட் எடுத்துக்கிட்டு குளிச்சு ரெடியாகி மதிய உணவுக்கு ரெஸ்டாரண்ட் போனோம். ரூம் நம்பர் சொன்னதும் ஷ்பெஷல் டேபிள் கொடுத்தாங்க. புஃபே சிஸ்டம். அருமையான உணவு.  ஆஷிஷோட பர்த்டே ப்ரி செலிபிரேஷன் தடபுடலா நடந்துச்சு. செக்கவுட் செய்ய கவுண்டருக்கு வந்தா
ஆஷிஷ் பேர் போட்டு சாக்லெட் கேட் ஒரு கிலோ கொடுத்தாங்க.

முதல் நாள் கசப்பான அனுபவமா இருந்தது, அந்த தவறுக்கு சரிகட்ட இந்த ஹோட்டல் நிர்வாகத்தினரோட நடத்தை வித்தியாசமா, இந்த யுகத்துல இப்படியும் ஆளுங்க இருக்காங்கன்னு வியப்படைய வெச்சது.

Wednesday, October 29, 2014

காற்று வாங்கப் போனேன்.......

அழகான வீக் எண்ட் அது. அந்த வீக் எண்ட் முடிஞ்சதும் ஆஷிஷ் அண்ணாவுக்கு பர்த்டே. (சார் இப்போ மேஜர்):) அதுக்கான ட்ரீட்டாவும், அட்வான்ஸ் கொண்டாட்டம் + அம்ருதம்மா முதல் டர்ம் எக்ஸாம் முடிச்ச ரிலாக்சேஷனுக்காகன்னு ப்ளான் செஞ்சு ரிசார்ட்டுக்கு போகலாம்னு ப்ளான் செஞ்சோம்.

லியோனியா ரெண்டு வாட்டி போயாச்சு. சாப்பாடு சூப்பர்னாலும் என்னவோ போர் அடிச்சா மாதிரி இருந்தது. சரி வேற ரிசார்ட் போகலாம்னு ராமோஜி ஃபிலிம் சிட்டி கேட்டோம். பயங்கர ரேட்!!! அதுக்கு பக்கத்துல மொளண்ட் ஒபரான்னு தீம் பார்க் இருக்கு அங்க ஸ்டே பண்ணலாம்னு கேட்டோம். தண்ணீர் பிரச்சனை சார் எதுக்கும் நீங்க 1 நாள் முன்னாடி போன் செய்ங்கன்னாங்க. அட போங்கய்யா நினைச்சு நம்ம உறவுக்கார பையருக்கு போன் போட்டோம். அவருக்கு தெரிஞ்ச நட்புக்கள் மூலம் வேற ரிசார்ட்ல பெஸ்ட் ப்ரைஸ் விசாரிச்சு சொல்றதா சொன்னாப்ல.

கோல்கொண்டா ரிசார்டுன்னு முடிவானிச்சு. இது கண்டிபேட் லேக் பக்கத்துல இருக்கு. நம்ம வீட்டுலேர்ந்து 1 மணிநேரத்துக்கு மேல ஆகும்.  சனிக்கிழமை மதியம் போய் ஞாயிறு மதியம் லஞ்ச் முடிச்சு வந்திடறதா புக் செஞ்சுகிட்டோம். காட்டேஜ் ரூம்கள்தான். நல்லா இருந்துச்சு. எக்ஸ்ட்ரா பெட் போட்டுத்தர்றதா சொல்லியிருந்தாங்க.

பச்சை பசேல்னு இருக்கு. லியோனியா அளவுக்கு பெருசு கிடையாது. அதுல கால்வாசிதான் இருக்கும் இந்த ரிசார்ட்.
 


நாங்க லன்சுக்கு அப்புறம் தான் அங்க போயிருந்தோம். ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு படுத்தோம்.  பக்கத்து ரூம்காரங்க ரொம்ப கத்தி பாடிக்கிட்டு இருந்தாங்க. ரொம்ப பொறுத்து பார்த்துட்டு ரிஷப்ஷனுக்கு போன் செஞ்சு சொன்னோம்.  அப்புறம் கொஞ்சம் குறைஞ்சது. ஆனா தூக்கம் போயே போச்சு. அங்க ஸ்பா சர்வீஸ் கூட இருக்குன்னு சொன்னதால் சரி அதைப்பத்தி விசாரிப்போம்னு கிளம்பினோம்.

அந்த ரேட்டுலயும் எங்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைச்சது.  ரிலாக்ஸ்டா மசாஜ் செஞ்சுகிட்டோம். அருமையான சர்வீஸ். வலிக்காம ரொம்ப அழகா மசாஜ் செஞ்சப்ப நல்லா இருந்துச்சு. அப்படி இப்படின்னு மணி 7 ஆகிடிச்சு. சரி இனி ரூம் போய் என்ன செய்யப்போறோம்னு அண்ணாவும், அம்ருதம்மாவும் இண்டோர் கேம்ஸ் விளையாட, நாங்க காலாற நடந்துகிட்டு இருந்தோம்.



பெரிய்ய அளவுல பாட்டு சத்தம் கேட்டுச்சு. சரி ஏதோ டிஸ்கோத்தேதான் நடக்குது போலன்னு இருந்தோம். 8 மணிக்கு சாப்பிட போனோம். அருமையான சாப்பாடு.  சாப்பிட்டு முடிச்சும் சத்தம் நிக்கலை. எங்க சத்தம்னு பாப்போம்னு கீழ இருந்த பூல் ரெஸ்டாரண்ட்ல கேட்டோம் அப்பதான் தெரிஞ்சது அது டிஸ்கோத்தே சவுண்ட் இல்லை, கெஸ்டா வந்திருக்கற 6 குடும்பம் (மொத்தம் 24 பேர்) சேர்ந்து ஸ்பீக்கர்லாம் வெச்சு பாட்டு போட்டுக்கிட்டு, தண்ணியடிச்சுக்கிட்டு இருந்தாங்க. கொடுமைக்கு அவங்க எங்க பக்கத்து ரூம். (எங்களுக்கு மேலே அவங்களுக்கு கீழே).

ரிஷப்ஷன்ல போய் கம்ப்ளையண்ட் செஞ்சு அந்த மேனேஜர் போய் பேசி பாட்டு சத்தத்தை குறைச்சாங்க. 9 மணியாச்சு... 10 மணியாச்சு. ஸ்பா ட்ரீட்மெண்ட் வேற செஞ்சுகிட்டதால சுகமா தூக்கம் வருது. கண்ணசந்து தூங்க ஆரம்பிச்சோம். ஹோன்னு சத்தம். அதே கும்பல் இப்ப சேர்ந்து விளையாடறது, கத்தி பேசி சிரிக்கிறதுன்னு அதகளம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.  எவ்வளவோ ட்ரை செஞ்சும் அவங்க சத்தம் அடங்கற மாதிரி தெரியலை. எத்தனை தடவை ரிஷப்ஷனுக்கு போன் செய்யறது.

பிள்ளைகளை கூட்டிக்கிட்டு நான் ரிஷப்ஷன்ல போய் உக்காந்துட்டேன். எங்க ரூம்ல இருக்கறதை விட இங்க சத்தம் இல்லாம இருக்கு. இன்னைக்கு நைட் ஃபுல்லும் நாங்க இங்கதான் இருக்கப்போறோம்னு சொல்ல, மேனேஜர் தன்னோட உயரதிகாரிய  போன் போட்டு கூப்பிட்டாப்ல. அவங்க ரெண்டு பேரும் போய் பேசுவதா சொல்ல அப்ப அந்த கூட்டம் காண்டாகி, நாங்க எஞ்சாய் செய்ய வந்திருக்கோம். பர்த்டே பார்ட்டி அப்படி இப்படின்னு சொல்ல, மத்த கெஸ்ட்களுக்கு கஷ்டமா இருக்குன்னு சொன்னா அவங்க மேனேஜரை கண்ட படி திட்ட , அயித்தான் இது சரிப்பட்டு வராது நாங்க கிளம்பறோம்னு. எங்க வீட்டுக்கு ஒரு மணி நேரத்துல போய் சேர்ந்திடலாம் சொன்னபோது இரவு மணி 12!!!!

தொடரும்




Tuesday, June 17, 2014

ஆஹாஹா கல்யாணம்.....


அம்மம்மாவுக்கு அவ்வளவு உடல்நிலை சரியில்லாம இருந்தாலும் மனசுல ஒரே ஒரு தாரக மந்திரம் தான் “ என் பேரன் கல்யாணத்தை பார்க்கணும்” . ஐசியூவுக்கும்  ஜெனரல் வார்ட்க்கும் ஷிஃப்ட் அடிச்சுக்கிட்டு அம்மம்மா, கல்யாண வேலைகளில் நாங்க. எது எப்படி ஆகுமோன்னு ஒரே டென்ஷன். அம்மம்மாவின் வேண்டுகோளின்படி அவங்களுக்காக நானும் பசங்களும் தினமும் ரெய்கி செஞ்சுகிட்டு இருந்தோம். ரெய்கியில் பாசிட்டிவ் திங்கிங் ரொம்ப முக்கியம். அதன்படி அம்மம்மா பூரண குணமாகிடுவாங்கன்னு நம்பிக்கை இருந்தது. எல்லோரும் அம்மம்மாவை போய் பார்க்க நான் மட்டும் போக முடியாமலே இருந்தது வருத்தம் தான்.

நாள் நெருங்க நெருங்க திக் திக். ஆஞ்சியோவுலேயே 5 அடைப்புகளையும் எடுத்த டாக்டரின் திறமையை சொல்வதா,  இல்லை அத்தனை வயதிலும் மருத்துவருக்கு பூரண ஒத்துழைப்பு தந்த அம்மம்மாவின் வைராக்கியத்தை சொல்வதா!!!! இறைவனருளால் அம்மம்மா கொஞ்சம் தேறிட வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த நாளை இப்ப நினைச்சாலும் அவ்வளவு சந்தோஷமா இருக்கு. வீட்டுக்கு போனதும் அம்மம்மாவின் தொணதொணப்பு ஜாஸ்தியாச்சு. :)

ஒரு ஸ்டேஜ்ல தன்னால கல்யாணத்துக்கு வரமுடியாது அதனால பேரனை, தன் மனைவியை அழைச்சுக்கிட்டு மும்பை வரச்சொன்னவங்க, மாமா கிட்ட பேரன் கல்யாணத்துக்கு போகனும் டிக்கட் போடுன்னு தொணத்த ஆரம்பிக்க, 10 நாள் கழிச்சு டாக்டர் கிட்ட கேட்டதும், ஃப்ளைட்ல கூட்டி போங்க, அலைய விடாம பாத்துக்கோங்கன்னு சொல்ல மாமா டிக்கெட் புக் செஞ்சாப்ல.

எங்களுக்கு முன்னாலேயே அம்மம்மா சென்னை வந்து சேர்ந்துட்டாங்க. ( என்னிடம் போனில் வேற ,” பாத்தியா, கல்யாணத்துக்கு வீட்டுல பெரியவளா நான் முன்னாடி வந்துட்டேன்னு பெருமையா சொன்னாங்க) ஏப்ரல் 18 தம்பி திருமணம் சென்னையில். அம்மம்மாவின் ஆசைப்படி எல்லாம் அமர்க்களமாய் நடந்தது. அம்மம்மா அலையாமல் இருக்க வீல் சேர் ஏற்பாடு செய்திருந்தோம். வசதியாய் மணமேடைக்கு வந்து அமர்ந்து கண் குளிர நிகழ்ச்சிக்களை பார்த்தார். தம்பி தாலி கட்டுவதை பார்க்கும் போது அம்மம்மாவுக்கும் தாத்தாவுக்கு கண்களிலிருந்து கண்ணீர்..... இதற்கு தானே அந்த வயது முதிர்ந்த பெரியவர்கள் பூஜை செய்தது, அம்மம்மா தன் உசிரை கையில் பிடித்துக்கொண்டிருப்பது. எல்லாம் நிறைவாக செய்தாய் என அம்மம்மா எனக்கு முத்தம் கொடுத்த நிமிடம் நான் பட்ட கஷ்டங்கள் ஓடியே போய்விட்டது.





ஒவ்வொரு வருடம் பிறக்கும்பொழுதும் இந்த வருடமாவது என் கையால் தம்பியின் மனைவிக்கு தாலிமுடியும் பாக்கியத்தை கொடுன்னு வேண்டிக்கிட்டே இருப்பேன்.  தள்ளிக்கிட்டே போகுதேன்னு வருத்தப்பட்டதுக்கு பாசமான பொண்ணை அனுப்பி வெச்சிருக்கான் ஆண்டவன். திருமணத்துக்கு முன்னாடியே எங்களுடன் அப்படி ஒரு ஒட்டுதல்.  அயித்தானை அவங்க சொந்த அண்ணனா நினைச்சுக்கிட்டு ரொம்ப பாசமழை ( பாசமலர் சிவாஜி கணேசன், சாவித்திரி பார்ட் 2ன்னு நாங்க கிண்டலடிப்போம்)  ஆஷிஷ் அம்ருதாமேல அவ்வளவு பாசம்.  தாலி கழுத்தில் ஏறுவதற்கு முன்பிருந்தே எங்க வீட்டுப்பெண் போல அவ்வளவு பாசம் காட்டிய தங்கத்தை அனுப்பி வைத்த இறைவனுக்கு நன்றி.


டீவியில ஒரு வாட்டி முகத்தை காட்டினாலே ரொம்ப கர்வமா இருப்பாங்க சிலர். ஆனா எங்க தங்கம் விஜய் டீவி சூப்பர் சிங்கர்ல டாப் 13ல வந்த செல்லம். (பேரெல்லாம் சொல்ல மாட்டேன். செல்லத்துக்கு பிடிக்காது) அந்த மமதை எல்லாம் மனசுல இல்லாம இயல்பா இருந்தது ரொம்ப பிடிச்சிருக்கு.  எங்கம்மா நல்லா பாடுவாங்க. முறையா சங்கீதம் கத்துக்கிட்டவங்க. இப்ப மருமகளும் பாடக்கூடியவங்க என்பதுல அம்மாவுக்கும் ரொம்ப  ரொம்ப சந்தோஷம். ( தம்பி மனைவி பாடும்போது எங்கம்மாவுடைய இளவயசுக்குரல் மாதிரியே இருக்கு).




தாலி முடிந்த கையோடு சுற்றிலும் இருக்கும் கூட்டம் எல்லாவற்றையும் மறந்து தம்பியை கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்ததோடு தம்பியின் சகதர்மிணிக்கும் முத்தம் கொடுத்து என் சந்தோஷத்தை வெளிப்படுத்திக்கொண்டேன். அப்பா என்னை கட்டிக்கொண்டு அழுதே விட்டார்.  ஆனந்தம்.... ஆனந்தம்...



Wednesday, May 07, 2014

வந்துவிட்டேன்.

லீவு கொடுத்திட்டு போனேன்.... ஆளையே காணோமேன்னு நினைச்சவங்க, மெயிலில் மிரட்டினவங்க :) எல்லோருக்கும் அன்பு கலந்த நன்றி. செம செம பிசியா இருந்திட்டேன். அதான் பதிவு பக்கமே வர முடியலை. இனியாவது தொடர்ந்து வரும் சூழலை இறைவன் கொடுக்கணும் .

 அம்மா அப்பா கல்யாணம் முடிஞ்சே உடல்நிலை ரொம்ப முடியாம இருந்த சூழலோட தம்பியின் திருமணத்திற்கு 3 மாதமே இருக்கற சூழல்ல கல்யாண வேலைகளையும் கவனிச்சாக வேண்டிய கட்டாயம். அம்மா,அப்பா ஒரு ஊர்ல, தம்பி ஒரு இடத்துல, நான் ஒரு இடத்துல. ஒருங்கிணைச்சு வேலைகளை முடிப்பது ரொம்ப மலைப்பா இருந்தது. அம்மா,அப்பாவுக்கும் உடல்நிலை ஒத்துழைக்கலை. ஆனா வேற வழியே இல்லாம கல்யாண வேலைகளை தொடர்ந்தோம்.

புதுகை ஃபங்க்‌ஷன் முடிஞ்ச 10 நாளைக்கெல்லாம் சென்னை வந்து தம்பியின் வருங்காலத்தை அழைச்சுகிட்டு பர்ச்சேசிங் முடிச்சு, அம்மா அப்பாவுடன் ஹைதை வந்து மற்ற பர்ச்சேஸ்களை முடிச்சோம். (சில ரகங்கள் சென்னையில் தான் எடுக்க முடியும்..... அதே போல ஹைதையிலும். உறவினர்களுக்கு கொடுப்பது ஹைதையிலிருந்து வாங்கியதில் ரொம்ப சந்தோஷபட்டனர். சென்னைதான் எப்பவும் எடுக்கறோமே என்ற நினைப்பாக இருக்கலாம்.)

அம்மா,அப்பாவுடன் பர்ச்சேசிங் முடித்ததும் தம்பி சிங்கையிலிருந்து வருவது போல ப்ளான் போட்டிருந்தோம். தம்பி வந்ததும் அவருக்கு தேவையான உடைகளை ஹைதையில் வாங்கிக்கொள்ளலாம் என்பதால் அப்படி திட்டம்.
நானும் உடன் இருக்க வேண்டும் என்பதில் அம்மா, அப்பா, தம்பி நினைத்ததாலும் பல வேலைகளை ஹைதையில் வைத்து முடித்தோம்.

ஹைதையில் வைத்து பார்த்ததில் நான் அம்மா,அப்பாவுடம் கடைக்கு போய் உதவிய மாதிரியும் ஆச்சு,  இங்கே இவர்களையும் பார்த்து கொண்ட மாதிரி ஆச்சு. சமையல் செய்து பிள்ளைகளை பள்ளி அனுப்பி விட்டு மதியத்துக்குள் சில பர்ச்சேஸ், வீடு வந்து சாப்பிட்டு திரும்ப அடுத்த ரவுண்ட் என ஒரே ஓட்டம் தான்.

தம்பிக்கு பெண் பார்க்க ஆரம்பித்த உடனேயே நாங்கள் எல்லா லிஸ்ட்டும் ரெடி செய்து வைத்திருந்தோம். அழைப்பவர்கள் லிஸ்ட், சீர் செய்ய வேண்டிய லிஸ்ட்,  துணி மணிகள் வாங்கி மரியாதை செய்ய வேண்டிய லிஸ்ட் என எல்லாம் கம்ப்யூட்டரில் போட்டு வைத்திருந்தேன். அதை தம்பியுடன் கூகுள் ட்ரைவில் ஷேர் செய்து கொண்டதால் சின்ன மாற்றம் இருவரில் யார் செய்தாலும் மற்றவருக்கு தெரிந்து விடும். அம்மா,அப்பாவிடம் ஒரு காப்பி பிரிண்ட் எடுத்து கொடுத்து வைத்திருந்தோம். அதனால் சரியான திட்டமிடல் சாத்தியமாக இருந்தது. என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எப்படி, எங்கே என்பதும் திட்டமாயாச்சு. செயல் படுத்த வேண்டியது தானே பாக்கி...

அதனால் என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் நேரம் வீணாகவில்லை. அம்மா அப்பா ஊருக்கு கிளம்பிய உடன் பத்திரிகை பிரிண்ட் கொடுத்துவிட்டார்கள்.  2 நாளில் ரெடியாகி வந்துவிட்டதும் கூட. உடன் குல தெய்வம் கோவிலுக்கு மற்றும் சில கோவில்களுக்கு நேரடியாக சென்று அம்மா, அப்பா பத்திரிக்கை வைத்து விட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன் என்று போன் செய்து பேசினார்கள். அடுத்த பத்தாவது நிமிடம் மும்பையிலிருந்து போன். அம்மம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம் என்று.

அம்மம்மாவிற்கு ஏற்கனவே சிறுக சிறுக வலி அவ்வப்போது வருவதும் டாக்டரிடம் காட்டுவதும் நடந்து கொண்டிருந்த ஒன்று தான் என்றாலும் ஐசியுவில் வைக்கும் அளவுக்கு இருக்கிறது என்பது கவலையை அதிகமாக்கியது. 3 நாள் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வலி கொஞ்சம் பரவாயில்லை என நினைத்துக்கொண்டிருந்த பொழுது நிலமை மிக மோசமாகி ஆஞ்சியோ செய்ய வேண்டுமென்று டாக்டர்கள் சொல்ல மாமாவும் சரி என்று சொல்லியிருக்கிறார். திரும்ப ஐசியூவில் கொண்டு போய் வைத்துக்கொண்டு மருத்துவம் பார்க்கிறேன் என்று ஏதோ செய்தவர்கள் கூடிக்கூடி பேசி சாயந்திரம் வாக்கில் ஆஞ்சியோ செய்யும் வசதி இங்கே இல்லை நீங்கள் வேறே ஏதாவது பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து போங்கள் என்று சொல்லிவிட்டார்கள். பிப்ரவரி மாதக்கடைசியில் இந்த பரபரப்பு.

வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து போங்கள் என்று சொன்ன அதே வேளையில் நிலமை கவலைக்கிடம் என்பதையும் வலியுறுத்தி சொல்ல அம்மாவும், சித்தியும் அடுத்த ஃப்ளைட்டில் மும்பை கிளம்பினார்கள்.




Monday, June 15, 2009

நிலை மாறும் உலகில்?!!?

இது என்னுடைய அனுபவம் மட்டுமல்ல.
பலரின் அனுபவமாக இருந்திருக்கும் என்பதில்
சந்தேகமேயில்லை.

ஏர்போர்டுகளில் இருப்பது போல் ரயில்வேஷ்டேஷன்களிலும்
ட்ராலி இருந்தால் இந்த போர்டர்களுடன் போராட வேண்டியிருக்காதே
என்று அத்தனை பேரும் அலுத்துக்கொண்டிருப்போம் தானே!!

ரயில்வே ஷ்டேஷனில் இத்தனை தான் கூலி என எழுதி
வைத்திருந்தாலும் அடாவடியாக பேசுவது, ரயில் நிற்குமுன்னே
பயணிகளை இறங்கவிடாமல் பெட்டிக்குள் ஏற முயல்வது,
தெனாவெட்டாக பேசுவது என எல்லா ”சிறப்பு” அம்சங்களும்
இல்லாத போர்ட்டர் ஒருவரை நாம் கண்டிருந்தால் நாம்
ஏதோ பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்கிறோம் என்று
அர்த்தம்!!!!

வேறு வழியில்லாததால் அதிகாலையில் இவர்களுடன்
சண்டையிட்டு போகும் இடத்திற்கு தாமதமாகுமே!
என எப்படியோ பேரம் பேசி, மூட்டையைத் தூக்கிச்
செல்வார்கள்.

போர்ட்டர்கள் மேல் எப்போதும் எனக்கொரு மரியாதை +
இரக்க குணம் உண்டு. நம்மால் சுமக்க முடியாத
சுமையையும் அவர் ஒருவரே தலையிலும், கைகளிலும்
தாங்கி தன் பிழைப்பை நடத்துகிறாரே என்று
நியாயமான கூலிதான் கொடுப்பேன். அடாவடியாக
பேசுவர்கள் மீது கோபம் தான் வரும்.

வடிவேலு சொல்வது போல் ” அந்த அடாவடிக்கும்
ஆண்டவன் முற்றுபுள்ளி வெச்சிட்டான்ல்!வெச்சிட்டான்ல”
என எகத்தாளம் போடத் தோணுது. இப்போது
எவரும் யாரும் கொண்டு செல்வது ட்ராலி பேக்தான்.


என்ன ஒரு சொளகர்யம் இதில்!!. சின்ன புள்ளைங்களும்
சர்.. சர்ர்..ன்னு இழுத்துகிட்டு வந்திடலாம். போர்டர்களூடன்
மல்லுகட்ட வேண்டியதில்லை என்பதே பெரிய சந்தோஷம்.




ஆனால் சந்தோஷமும் படமுடியவில்லை. போர்ட்டர்கள்
ட்ராலி பேக் கொண்டு செல்லும் அதிக பயணிகளைப்
பார்த்துக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருக்கிருக்க
வேண்டிய நிலமையில் இருக்கிறார்கள்.

”என்னது உங்க மாப்பிளை ஃப்ளைட்ல வந்தாப்லயா?
கேவலமா இருக்கு!!!!” என விகடனில் ஜோக் போடும்
அளவுக்கு விமான டிக்கெட்கள் விலை குறைந்து
கிடைக்க பலரும் விமானத்தில் தான் பறந்தார்கள்.

இப்போது நிலை மாறி அதிகமாக ரயில் பயணத்தைதான்
அனைவரும் தேர்ந்தெடுக்கிறார்கள். (பெங்களூர்,
ஹைதை போன்ற ஊர்களில் ஒதுக்கு புறமாக
விமானநிலைய வைத்திருப்பதால் விமான நிலயத்துக்கு
காரில் செல்லவே 500 ஆகிறது)

வி.ஐ.பி சூட்கேஸ் (வெறும் பொட்டியே செம கணம்)
பயணத்துக்கொண்டு செல்வதை பெருமையாக நினைத்தவர்கள்
கூட இப்போது ட்ராலி பேக்தான். இந்த நிலையில்
கஷ்டபடுவது போர்டர்கள்தான். இந்த பெட்டிகள்
அவர்களின் வயிற்றில் அடித்த மாதிரிதான் இருக்கின்றன.

முன்பு ஒரு கதை(யா)(கட்டுரையா)படித்தேன்.
கோவில்களில் கற்பூராரத்தியின் போது சிகண்டி,
தவில்,சங்கம்,மணி இன்னும் சில மங்கள் வாத்தியங்கள்
இசைப்பார்கள். அதற்கென ப்ரத்யேக வாசிப்பவர்கள்
கோவிலிலேயே இருந்து 3 கால பூஜைக்கும் வாசிப்பார்கள்.

ஆனால் சமீபகாலமாக கோவிலுக்குச் செல்லும் அனைவர்களும்
மின்சாரத்தில் இயங்கக்கூடிய பஞ்சவாத்தியம் ஒலிப்பதை
கேட்டிருப்பீர்கள். சுவிட்சு ஒண்ணைத் தட்டிவிட்டால்
டம் டம்மென வாத்திய ஒலி வருகிறது.

பல கோவில்களில் இந்த மிஷின்கள்தான் இப்போது.
அப்படியானால் இதற்கு முன்னர் வாசித்தவர்கள்
என்னவானார்கள்??!! வேலையில்லாமல் அவர்கள்
ஹோட்டல்களில் சர்வராகவோ, மாவரைப்பவராகவோ
வேலை பார்ப்பது போல் அந்தக் கதை/கட்டுரையில்
இருக்கும். அவர்களின் நிலை இப்படியும் ஆகுமோ
என்று நினைத்து மனது வலித்தது.

ட்ராலி பேக்குகள் நிறைய்ய உபயோகத்தில்
வந்தபின்னர் போர்டர்களின் நிலை என்ன?
எந்த விதத்தில் மாறப்போகிறது???????

Thursday, June 11, 2009

உங்களுக்கு சாக்லேட் பிடிக்குமா?

குழந்தைங்க மட்டுமல்ல பெரியவங்களுக்கும்
பிடிச்சது சாக்லேட்.

இனிப்பு உடம்புக்கு கெடுதல் என்றாலும்,
கொஞ்சமா சாப்பிடலாம். சாக்லெட் சாப்பிடுவதில்
சில நன்மைகளும் இருக்கு.

ஜெர்மனைச் சேர்ந்த HEINRICH HEINE UNIVERSITY
நடத்திய ஒரு ஆய்வில் சாக்லெட் சாப்பிடுபவர்களின்
தோல் மினுமினுப்பதாக கண்டுபிடிச்சிருக்காங்க.
ரத்த ஓட்டத்தை அதிகரித்து தேவையான சத்துக்களைத்
தருவதாக கண்டுபிடிச்சிருக்காங்க.



கோகோவை பானமாக அருந்துபவர்களுக்கு
ஸ்ட்ரோ்க், இருதயநோய், கேன்சர், சர்க்கரை
வியாதி ஆகியவை வரும் சாத்தியம் குறைவாம்.

சாக்லெட் நமது தூக்கத்துக்கும் மன அமைதிக்கும்
மருந்தாக இருக்குன்னு யூகே ஹாஸ்பிடல் ட்ரஸ்ட்
நடத்திய ஆய்வில் கண்டுபிடிச்சிருக்காங்க.

பரிட்சை நாட்களில் பிள்ளைகளுக்கு தினமும்
ஒரு பீஸ் சாக்லெட் உண்ணக் கொடுப்பதால்
அவர்களின் மூளைக்கு நல்லதாம். குறைந்தது
3 மணி நேரத்துக்கு மூளை சுறுசுறுப்பா இருக்குமாம்.
கோகோ அல்ஸமைர் வியாதிகாரர்களுக்கும் உதவுமாம்.


பெண்களுக்கு முக்கியமான செய்தி மார்பக புற்றுநோய்
ஏற்படாமல் இருக்க சாக்லெட் உதவுமாம்.

ஆஹா இம்புட்டு நல்லதான்னு அதிகமா
சாப்டா என்னாகும்னு பாக்கலாமா?

மனநிலை தடுமாற்றமுடையவர்களாக வாய்ப்பிருக்கு.

அதிகமாக சாக்லெட் சாப்பிட்டால் உடம்பு கால்சியத்தை
ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறைந்து விடும்.

உடல் பருமன் ஏற்பட வாயிப்பிருக்கு.


*******************************

சிலருக்கு சாப்பாடு முடித்ததும் இனிப்பாக
ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும்.
sugar craving அப்படின்னு பேரு இதுக்கு.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவா
இருக்கும்போது இப்படி இருக்கும்.
(hypoglycaemia - low blood sugar)

உடல் அதிகமாக டீஹைட்ரேட் ஆகும்
போது சர்க்கரை அளவு குறைந்து போகும்.

அப்போது கொஞ்சம் சாக்லேட் அல்லது
இனிப்பு சாப்பிட்டால் சரியாகும்.
(பலருக்கு சர்க்கரை அளவு குறைந்தால்
மயக்கம், தலை சுற்றல் போன்றவை
ஏற்படும்) கையில் சாக்லெட் அல்லது
டாஃபி, மிட்டாய் போன்றவற்றை
வைத்துக்கொண்டு வாயில் போட்டுக்கொண்டால்
சரியாகிவிடும்.


சந்தோஷமா, அளவோட சாக்லெட் சாப்பிடலாம் வாங்க.

Friday, April 03, 2009

கலக்கிய லெட்டர்......

என் கல்லூரி வாழ்க்கை அல்பாயுசில் (ஒரே வருடத்தில்)
முடிந்தாலும் நான் அந்த ஒரு வருடத்தில் நான் அடித்திருக்கும்
கொட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல..

ஆங்கில இலக்கியத்தில் பல சுவாரசியங்கள் இருந்தாலும்
நான் மிக ரசித்தது PHONETICS.

பேச்சுவழக்காக நாம் செய்து கொண்டிருக்கும் பல
தவறுகளைத் தெரிந்து திருத்துக்கொண்டிருக்கிறேன்.

டூர் தவறு டுவர்(our அவர் என்று சொல்கிறோமே)
டைரக்டர் தவறு டிரைக்டர் சரி
பைனான்ஸ் தவறு பினான்ஸ் சரி

இப்படி நிறைய்ய சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆங்கில இலக்கியத்தில் PHONETICS உச்சரிப்புக்களுக்கு
ஒவ்வொரு symbol உண்டு. உதாரணமாக GOAT SOUND WORDS என்போம்.
may,hay,way,say போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும்
பொழுது மே, ஹே, வே, சே என ஆட்டின் குரல்
போல் உச்சரிப்பது தான் சரி. அதை நாம் உணர
ப்ரத்யேகமான symbol இருக்கும். அந்தந்த இடத்தில்
அந்தந்த symbol பார்த்து உச்சரிப்போம். வேடிக்கையாக
இருந்தது.


இந்தப் பாடம் முடிந்ததும் கல்லூரி விடுமுறை
விட்டார்கள். நான் படித்தது பள்ளத்தூர் கல்லூரியில்.
என் தோழிகள் அனைவரும் காரைக்குடியிலிருந்து
வந்து படித்தார்கள். புத்தாண்டு மற்றும் பொங்கலுக்கு
அனைவருக்கும் வாழ்த்து அனுப்ப நினைத்தேன்.
அதுவும் கொஞ்சம் வித்தியாசமாக!!!!!

போஸ்ட் கார்ட் வாங்கி வந்து அழகாக ஸ்கெட்ச்
பேனாவால் வரைந்து மல்ட்டி கலரில் பொனடிக்
சிம்பல்களுடன் வார்த்தை ஜாலம் செய்து
கார்ட் அனுப்பி வைத்துவிட்டு ஆனந்தமாக இருந்தேன்.

கல்லூரி திறந்து முதல்நாள். காலை 9 மணிக்கு
பஸ்ஸை விட்டு நான் இறங்கியதும் கல்லூரி
வாசலிலேயே காத்திருந்த என் தோழி விசாலாட்சி
“அடியேய், அடுத்த பஸ்ஸை பிடிச்சு அப்படியே
ஊருக்கு போயிடு!!!எல்லோரும் கொலை வெறியோடு
உனக்காக காத்திருக்காங்க”ன்னு சொல்ல அப்படி
என்ன செஞ்சிட்டோம்னு!!! யோசிச்சுகிட்டே
கிளாஸுக்கு போனேன்.

நான் பொனடிக்ச் சிம்பல்களுடன் அனுப்பியிருந்த
வாழ்த்தை பார்த்து பலரின் பெற்றோர்கள்
“என்னவோ ஏதோ! யாரோ அனுப்பியிருக்காங்க”
எனும் ரீதியில் திட்டி தீர்த்துவிட்டார்களாம்.
அவர்களுக்கெல்லாம் புரிய வைக்க எங்கள்
பாட நோட்டை காட்டி பொனடிக்ச் பாடங்கள்
எடுத்து புரிய வைத்தார்களாம்.

எல்லோரும் சேர்ந்து செம கும்மு கும்மிவிட்டார்கள்!!:(((

ஆனால் வித்தியாசமாக வாழ்த்தனுப்பி பொனடிக்ஸ்
புகழ் பரப்பியதற்காக கல்யாணி மேடம் மட்டும்
என்னை பாராட்டினார்கள். அதற்கப்புறம் தான்
அவர்களின் கும்மி நின்றது. :)))

****************************************

Wednesday, March 04, 2009

நாயிடம் நாங்கள் படும் பாடு!!!

உங்க வீட்டுல நாய் வளக்கறீங்களா? அப்படின்னா
இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

வீட்டுல நாய் வளக்காதவங்களுக்கு- இது உங்களோட
அனுபவமாவும் இருக்கலாம். சேம் பளட்ன்னு பின்னூட்டம்
போடுவதற்காகவும் படிக்கலாம்.

நாய் கடிச்சா ஊசி போடணும் அது இதுன்னு
கேள்விபட்டது(பலரைப்பாத்தது) ஏதோ ஒண்ணு
எனக்கும் நாயைக் கண்டா பெம்மாத்தான் இருக்கும்.


பாலகுமாரன் தன்னோட ஏதோ ஒரு நாவலில்
“பருவத்தில் பன்னிகூட அழகாத்தான் இருக்கும்னு”
சொல்லியிருப்பாரு. அது எனக்கு நிறைய இடத்துல
ஞாபகம் வரும். இந்த நாய் விஷ்யத்துல கண்டிப்பா.
குட்டியா இருக்கும்போது அழகா இருக்கும். பெரிய
நாய்களைப் பாத்தா,” கால்கிலோ சதையை கவ்விடுமோன்னு”
இருக்கும்.

ஆஷிஷும் அம்ருதாவும் ரொம்ப நாளா
“எங்களுக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கிக்கொடுங்கம்மான்னு”
கேட்டுகிட்டே இருக்காங்க. சான்சே இல்லைன்னு சொல்லிட்டேன்.
இருவருக்கும் போரோன்கைடீஸ். இதுல இந்த மாதிரி
வளர்ப்புப் பிராணிகள் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு.
ஆனாலும் நாயை வளர்க்க ஆரம்பிச்சா அதோட
போராட்டம் ஜாஸ்தி.





சரி இப்ப மேட்டர் என்னன்னு கேக்கறீங்களா?
அதுவும் சரிதான் மேட்டருக்கு வருவோம்.

நாய் நன்றி உள்ள மிருகம். எல்லாம் ஓகே.
நாயைக் கண்டா பயப்படறவங்க நாய் இருக்கறவங்க
வீட்டுக்கு போனா என்னா ஆகும்? அந்த வீட்டில
இருக்கறவங்க கொடுக்கற ரியாக்‌ஷன் எனக்கு
ரொம்பவே கோபம் வரவைக்கும்.

நாயை வளர்க்கறவங்க. அதோடு அன்றாடம்
பார்க்க பழகன்னு இருக்காங்க. அதனால்
கடிக்காது. உங்களுக்கு அது செல்லம். நாங்க
இல்லைன்னு சொல்லலை. அதுக்காக
வீட்டுக்கு விருந்தாளியா 1 மணிநேரம்
போயிருந்தாக்கூட நாயை அவிழ்த்துவிட்டு
“இட் வோண்ட் பைட்!!!” பயப்படாதீங்கன்னு
சொல்றீங்களே இது நியாயமா??

அதை விடக் கொடுமை,” இப்படி எல்லாம்
பயப்பட்டா எப்படின்னு” நாயைப் பத்தி
லெசன் வேற எடுக்கறீங்களே??? அவ்வ்வ்வ்வ்..

அயித்தானின் நண்பர் வீட்டுக்கு போயிருந்தோம்.
அவங்க வீட்டுல நாய் இருக்குன்னு தெரியாது.
(தெரிஞ்சிருந்தா கண்டிப்பா போயிருக்க மாட்டோம்)
உள்ளே போன கொஞ்ச நேரத்துலையே நாய்
வெளியே வந்து காலைச் சுத்த ஆரம்பிச்சிடுச்சு!!!!
மோப்பம் தான் பிடிக்குதுன்னு அவங்க சொன்னாலும்
பசங்க பயந்து போய் சோபாவிலே சம்மணம் போட்டு
உக்காந்திட்டாங்க!!!
ரொம்ப கஷ்டப்பட்டோம்.

”பயப்படாதீங்க. ரொம்ப ஃப்ரெண்டிலி டாக்”
அப்படின்னு நண்பர் சொல்ல,”எங்களுக்கு நாய்னா
அலர்ஜி, 30மினிட்ஸ் கட்டி வெச்சா நாங்க கிளம்பிடறோம்.
(கல்யாணம் விசாரிச்சு கிப்ட் கொடுக்க போயிருந்தோம்)
அப்படின்னு சொன்னதுக்கு நண்பரோட மனைவிக்கு
கோபம் வந்திடுச்சு.

“நாயை எங்க வீட்டுல புள்ளையாத்தான் வளர்க்கறோம்!!!
வர்றவங்க போறவங்களுக்காக கட்டி போட முடியாது.
நாய் சுதந்திரமா இருக்கணும்.... அது இதுன்னு
பேச நாங்க கிளம்பி வந்திட்டோம்.

அப்புறமா அந்தம்மா போன் செஞ்சு
“மன்னிச்சுக்கோங்க! எங்கவீட்டு நாயைக் கண்டு
பயம்னு சொன்னதும் கோபம் வந்திடுச்சு!!!!”
அப்படின்னு சொன்னாங்க. அயித்தானுக்கு
கோபம் வந்து நல்லா கிளாஸ் எடுத்திட்டு
போனை வெச்சிட்டாரு.

நாயை சுதந்திரமா வளர்க்கணும்னா வீட்டுல
வைச்சுப்பானேன், தெருவுல விட வேண்டியதுதானே?

நாயை வளர்க்கக்கூடாதுன்னு சொல்ல வர்லை.
வளர்ப்பது அவரவர் இஷ்டம். ஆனா வீட்டுக்கு
வர்றாவங்களும் அந்த நாயைக் கண்டு பயப்ப்டக்கூடாதுன்னு
சொன்னா எப்படி??? குரைக்கும் சத்தத்துக்கே
குலை நடுங்கும்போது இதெல்லாம் டூ மச்சா
இருக்கு.

அப்பத்திலேர்ந்து யாராவது எங்க வீட்டுக்கு
வாங்கன்னு கூப்பிட்டா!! “உங்க வீட்டுல
செல்ல பிராணி ஏதும் இருக்கான்னு” கேட்டு
விசாரிச்சுகிட்டுத்தான் போவதா? இல்லையான்னு?
முடிவு செய்யறதை பழக்கமாக்கிகிட்டேன்.

வீட்டுலதான் தொந்திரவுன்னு பார்த்தா ரோட்டுலையும்
அதை விடக் கொடுமையா இருக்கு.
அயித்தான் ஊருக்கு போனாலும் விடாம
வாக்கிங்(வாக்கிங்கிற்கும் அவர்தானே பார்டன்ர்,
சேந்து பேசிக்கிட்டே நடக்கும்போது அலுப்புத்
தெரியாது)போவேன். அப்படி ஒருநாள்
போயிட்டு வீட்டுக்கு திரும்பும் பொழுது
ஒரு நாய் மூச்சிரைக்க ஓடிவருது!!!

அந்த நேரத்தில் நான் மட்டும் தான்
நாய்க்கு பக்கத்தில். ரொம்ப தூரத்தில்
ஒருத்தர் வந்துகிட்டிருந்தார்.

என்ன செய்யலாம்!! இனி அயித்தான்
இல்லாட்டி வாக்கிங் வரப்டாதோன்னு!
யோசிசுகிட்டே நிக்கறேன், தூரத்துல
இருந்த அந்த மனிதர் கொஞ்சம் கிட்டத்துல
வந்துட்டு,”யு டோண்ட் ஸ்கேர் மேடம்.
இட் வோண்ட் பைட்!!! ஜஸ்ட் கிவிங்
ட்ரையிங் டு ரன்” அப்படின்னு சொல்ல
முதல்ல நாயைக் கயித்தப்பிடிச்சுகூட்டிகிட்டு
போயான்னு கத்தினேன்!!!

“ஐ அம் சாரி” அப்படின்னு சொல்ல
கைல ஏதாவது கிடைச்சிருந்தா அடிச்சிடலாம்னு
தோணிச்சு. அந்த ஆளோட நல்ல நேரம்
ஒண்ணும் கிடைக்கலை!!

ஏய்யா! நீங்க வாக்கிங் போக ரோடுல
போறவங்களுக்கு டெர்ரர் ஆக்கறீங்க!!!!
சிலர் கயித்தைக் கட்டி கூட்டிகிட்டு
வாக்கிங் வருவாங்க. அவங்களையும்
சேத்து இழுத்துகிட்டு நாய் ஓடுவதை
பாக்கும்போது” பாவ்ம் இவங்களுக்கு இது
தேவையான்னு” நினைப்பேன்.



என்னவோ மனசுல பட்டுச்சு சொன்னேன்.
அம்புட்டுதாங்க.

Friday, February 06, 2009

கொடு்த்தாலும் மகிழ்ச்சி வரும்.... மனதுக்கு திருப்தி கிடைக்கும்...

எனக்கு இந்த ஆண்களை நினைச்சால் பாவமா இருக்கும்.
தன் பொண்டாட்டிக்கு செய்யணும், அம்மா, அக்கா, தங்கைகளுக்கு
செய்யணும். ஆனா அவங்களுக்கு யாரு செய்வாங்க?

கல்யாணத்துக்கு முன்னாடியிருந்தே இது என மனசுல
ஆழமா பதிஞ்சதால கல்யாணத்திற்கு அப்புறம் அயித்தானுக்கு
நான் எப்போதும் கொடுக்கணும்னு கங்கணம் கட்டிகிட்டேன்.

(அன்பாகட்டும், பரிசாகட்டும் நம்மளோட கை கொஞ்சம்
மேலே அதாவது அதிகமா கொடுக்கணும் இது தான்
பாலிசி :)இதுல செம போட்டி நடக்கும். )

அவரது பிறந்தநாள், எங்கள் திருமண நாள்,
காதலர்தினம்(கல்யாணத்துக்கப்புறம் காதலிச்சுக்கறோம் :)) )
எல்லாவற்றிற்கும் சர்ப்ரைஸாக பரிசு கொடுப்பேன்.
அவருக்குத் தெரியாமல் போய் வாங்குவது பிடிக்கும்.

சென்ற வருடம் இந்த நேரம் காதலர் தின பரிசாக கோட் பின்
வாங்குவதற்கு கொழும்பு வெள்ளவத்தை ஹமீதியாஸில்
நின்று கொண்டிருந்தது ஞாபகம் வருகிறது.

டீ ஷர்ட், கோட் பின், டை, அவர் எடுத்திருக்காவிடில்
ட்ரெஸ் என பரிசளிப்பேன். விசிட்டிங்கார்ட் ஹோல்டர்,
என பெரிய லிஸ்டே இருக்கு ஆண்களுக்கு பரிசளிக்க.

பேப்பரை மிச்சப் படுத்த இமெயிலில் இலவசமாக
வாழ்த்தனுப்பிவிடுவேன். தலையணைக்கடியில்,
கட்டிலுக்கடியில் பரிசை மறைத்துவைத்து
சரியாக 12 மணிக்கு எழுப்பி முதல் வாழ்த்தை
சொல்லி பரிசு கொடுப்பேன். ஒவ்வொரு முறையும்
இது என் வாடிக்கை.

சென்ற செப்டம்பர் 22 அவரது பிறந்த நாள்.
P.M.S பிரச்சனையில் உடல்நிலை சரியில்லாமல்
இருக்க என்னால் தனியாக கடைக்குச் சென்று
பரிசு பொருள் வாங்க முடியாமல் போனது
வருத்தமாக இருந்தது. அன்றுக்குள் எப்படியும்
அவருக்கு பரிசளித்துவிடவேண்டுமென நினைத்துக்
கொண்டிருக்கையில் என் டீ டீவியில் கேட்ஜட் குரு
நிகழ்ச்சி போய்க்கொண்டிருந்தது!

அயித்தானிடம் இருந்தது செகண்ட் ஹேண்ட்
மொபைல்தான். 500 அல்லது 1000 ரூபாய்க்குள்
என்றால் அவரிடம் சொல்லாமல் பரிசளிக்கலாம்.
மொபைல் பட்ஜட் கொஞ்சம் பெரிசாச்சே!
சாயந்திரம் பிள்ளைகள் கேக் வாங்கி ரெடியாக
வைத்திருந்தார்கள். கட் செய்ததும்
"WORLDS BEST DAD" (அயித்தானின் புகைப்படமும்
டைலில் பொறித்தது) பரிசளித்தார்கள்.

ஸ்கந்தகிரி கோவிலுக்குச் சென்ற பிறகு
ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லவிருந்தார்.
கோவில் முடிந்ததும்,” ஹோட்டலுக்கு போவதற்கு
முன்னாடி ஒரு கடைக்கு போகணும்,” என்றேன்.
“எதுக்கு! மணிஆச்சு, பிள்ளைகள் 9.30க்காவது
படுத்தால்தான் நாளை பள்ளி செல்ல முடியும்”
என்றார். ”லேட்டாகாதுப்பா! சீக்கிரம் முடிஞ்சிடும்”
என்றேன். சரி என்றதும் மொபைல் ஷாப் வாசலில்
நிறுத்தச் சொன்னேன்.

”உங்கள் மொபைலைக் கொடுத்துவிட்டு
புது மொபைல் வாங்கிக் கொள்ளுங்கள்,”
என்றேன். மொபைல் எல்லாம் வேண்டாம்.
என்றார். நானும் விடுவதாயில்லை. :)

கடைசியில் பழைய மொபைலைக் கொடுத்துவிட்டு
மேற்கொண்டு பணம் போட்டு இந்த மொபைலை
வாங்கிக்கொண்டார். இது தான் என் பரிசு என்றேன்.
“தேங்க்ஸ்டா!”என்றார். அந்த சந்தோஷம் அப்பப்பா!
சொல்லில் அடங்காது.


சில பெண்கள் தனக்கு கணவன் பரிசளிக்காவிட்டால்
கோபப்படுவார்கள். அவர்கள் கணவருக்கு பரிசேதும்
கொடுத்திருக்கிறார்களா? என்று கேட்டால் “அவர்
தான் கொடுக்கணும்! என்பார்கள். நான் வேலைக்கு
போய் சம்பாதிக்கவில்லை. ஆனாலும் மிச்சம் பிடித்து
வாங்கி கொடுப்பேன். IT IS VERY DIFFICULT TO BE
IN GIVING END ONLY
அதனால் சில
சமயத்திலாவது அவர்களை RECEIVING ENDல் வைத்தால்
சந்தோஷப் படுவார்கள்.

ரங்கமணிகள் வாங்கிக்கொடுத்தால் தங்கமணிகளுக்கு
சந்தோஷம். அது போன்றதொரு சந்தோஷம் ரங்கமணிகளுக்கும்
கிடைப்பது நியாயம் தானே! பாவங்க அவங்க!
வேலை, டென்ஷன் என்று ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு
இதெல்லாம் ஒரு பூஸ்டராக இருக்கும். அன்பு செய்தல்
தவறில்லையே!

தன் நண்பர்களுக்கு, உறவினர்களிடம் எல்லாம்
பெருமையாக சொல்வார், ”இது என் வைஃப்
வாங்கிக் கொடுத்ததுப்பா” என்று. சென்ற
வாரம் வந்திருந்த தம்பியிடம்,”உங்கக்கா
வாங்கிக் கொடுத்ததுப்பா! நல்லா இருக்கா?”
என முகத்தில் பெருமிதமும் மகிழ்ச்சியும்
பொங்கக் மொபைலைக் காட்டினார்.

அவரின் இந்த சந்தோஷத்தை பார்க்கும்போது
கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

சும்மாவா சொன்னார்கள். கொடுப்பதுவும்
சுகம் என்று. அதை அனுபவத்தால்தான்
புரியும்!!!!!

இதோ இந்த வருட காதலர் தினத்திற்கும்
பரிசு ரெடி. :))))

Friday, December 12, 2008

கற்கை நன்று!!!

எங்களை அழைத்துக்கொண்டு சென்று
FASHION BUG (colombo) துணிக்கடையின் முன்
நி்றுத்தினார் அயித்தான்.

இப்ப கிட்டத்துல பண்டிகைகூட கிடையாதே!
துணி எடுக்க எதுக்கு கூட்டிகிட்டு வந்திருக்காருன்னு?
யோசிச்சு கிட்டே போனோம்.

பசங்களுக்கு ஸ்விம் சூட் வாங்கினார்.
"லேடிஷ் செக்ஷன்ல உனக்கு ஸ்விம் ஸ்வீட்
பாத்துகிட்டு இரு, ஆஷிஷ் போட்டு பாத்ததும்
அங்கே வந்து செல்க்ட் செய்யறேன்னாரு!!!"

"என்னது ஸ்விம் சூட்டா? அட போங்கப்பா.
நீச்சல் அடிக்கணும்னு ஆசை இருந்தாலும்
அந்த ட்ரெஸ்ஸைப் பாத்து அடங்கிகிடக்க
வேண்டியதுதான். பசங்களுக்கு எடுத்தீங்கள்ல
சரி. போதும் உங்களுக்கு எடுத்துட்டு வாங்கன்னு"
சொன்னேன்.

"அட! ஸ்விம் சூட்னா கவர்ச்சியாதான் இருக்கணும்னு
சட்டமில்லை. கை வெச்சதும் இருக்கு.கால் முழுவது
மூடுற மாதிரி டைட்ஸ் போட்டு அதுக்கு மேல
ஸ்விம் சூட் கைவெச்சது போட்டுக்கோ" அப்படின்னு
சொல்லி கட்டாயமா வாங்கிக் கொடுத்த்தாரு.





எங்க வீட்டுக்கு கொஞ்சம் கிட்டத்துல இருக்கற
ராயல்காலேஜில் இருந்த ஸ்விம்மிங் பூலில்
மெம்பர்ஷிப் வாங்கிருந்தாரு. தினமும் பசங்களோட
அங்கே போய் நீச்சல் கத்துகலாம்னு திட்டம்.

அயித்தான் ஓரளவுக்கு நல்லாவே நீச்சலடிப்பாரு. பசங்களுக்கு
பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக்கொடுத்தாலும்
மேலதிக பயிற்சி + பயம் போக நாமும் கூட
இருந்தா நல்லதுன்னு இந்தத் திட்டம்.

தீர்த்தக்கரை பாவி மாதிரி உக்காந்திருக்கக்கூடாதுன்னு
என்னியையும் தண்ணில இறக்கிவிடுறாரோன்னு
நினைச்சேன்.

விடலியே! பசங்களுக்கு கோச் சொல்லிகொடுக்க
எனக்கு அயித்தானே கோச் ஆயிட்டாரு.

(இதுதான் அந்த ராயல் காலேஜ் நீச்சல் குளம்)




முதல் நாள் மூச்சை தம்பிடிச்சு உடலை மிதக்க
வைக்கக்கூட என்னால் முடியவில்லை. பயம்!
தரையில் விழுந்தால் பரவாயில்லை. தண்ணீருக்குள்
விழுந்தால்??!!


(இலங்கைக்கு போன புதுசு)28
வயசுல இதெல்லாம் தேவையா? அப்படின்னு
யோசிக்கும்போது அங்கே நீச்சல் பழக வருபவர்களை
பாக்கும்போது நாமளும் கத்துகிட்டா என்ன?ன்னு
தோணுச்சு.

ஒரு முறை பெண்களுக்கே உரித்தான்
பிரச்சனைக்காக கைனகாலஜிஸ்டை
பார்க்கவேண்டியிருந்தது. வயிற்றுவலி,
இடுப்புவலிக்கு நீச்சல் செஞ்சா நல்லதுன்னு
சொல்ல, விடக்கூடாதுன்னு கத்துகிட்டேன்.


தினமும் அயித்தான் சொல்லிக் கொடுத்தாங்க.
"பாருங்க அம்மாவும் செய்யறாங்கன்னு!"
பசங்களுக்கும் சொல்ல அவங்களும் கத்துக்க
ஆரம்பிச்சாங்க.



தண்ணீரில் இறங்க பயந்து கொண்டிருந்த நான்
Floating, Dolphin stroke எல்லாம் அடிக்க
ஆரம்பிச்சேன். :))) சின்ன அளவுல டைவ்
அடிக்கவும் கத்துகிட்டேன்.


ஆனந்தமா நீந்தும் போது யோகா செஞ்ச மாதிரி
உடம்பும் மனசும் லேசாகிடுது. ஆஷிஷும்
நானும் போட்டி போட்டுக்கொண்டு நீந்துவோம்.
ட்யூ்ப் ரிங்கில் இருந்த படி அம்ருதாவும்,
அயித்தானும் நீந்து வார்கள்.



சில நேரம் நீச்சல், சி்ல் நேரம் விளையாட்டுன்னு
அந்த ஒரு மணி நேரமும் இனிமையா இருக்கும்.

பலவந்தமா தண்ணியில இறக்கி எனக்கு நீச்சல்
கத்து கொடுத்த என் குரு இப்போ இடம் பெயர்ந்து
(குருப்பெயர்ச்சியின் தாக்கமாக இருக்குமோ!!)
வண்டி ஓட்டச் சொல்லித் தரப்போறாரு என்பதை
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


குருதட்சிணையாக பிஸிபேளாபாத்/வாங்கிபாத் செய்து கொடுக்க
வேண்டும். :)))))))))))))

(இரண்டும் அவரோட விருப்பமான உணவு)

Friday, September 26, 2008

அந்த நாளும் வந்ததே!!!!

பரிட்சை முடிந்து பள்ளி விடுமுறை என்பதையும் விட
பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி முகத்தில் தாண்டவமாடுகிறது!

உப்பங்கலே கோதாவரி பாட்டு அடிக்கடி கேட்கப்பட்டு
அந்த மூடை வரைவழைத்துக்கொண்டிருக்கிறார்கள்
பிள்ளைகள். :)))

//நீங்கள் இலங்கையில் இருந்து இந்தியா திரும்பும் போது பார்க்க வாய்ப்புள்ளது என்று ஜோதிடம் சொல்கின்றது.//
என்று கானா பிரபா ஜோஸ்யம் சொன்னது
கொஞ்சம் தாமதமாக( நான் இந்தியா வந்து 6 மாதம்
கழித்து) பலிக்கப் போகிறது. :))))))))))))))))


எப்போ? எப்போ? என்று நாட்களை கவுண்டவுன் செய்து
காத்து கொண்டிருந்த அந்த நாளும் வந்தே விட்டது.

இன்னாத்துக்கு இம்புட்டு பில்டப்புன்னு கேக்கறீங்களா??

:)))

என்னுடைய ஏலேலோ! ஐலைசா! பதிவு ஞாபகம்
இருக்கா? அந்தப் பதிவை படிச்சிட்டு வாங்க.

ஆமாம். அங்கேதான் போகப் போகிறோம்.

பக்தனுக்காக பதறி ஓடி வந்த தெய்வத்தை தரிசிக்கப்
போகிறோம்.

இன்று இரவு 10.45க்கு ரயிலில் பயணம். பல
மாதங்களுக்கு அப்புறம் ரயில் பயணம், பத்ராசலத்திற்கு
பயணம் என்று எல்லோரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

நாளை காலை பத்ராசலம் ரோடை அடைந்த பின்
கோதாவரி ஆற்றில் பயணம்.

அங்கன யாரு அழுவுறது. அழப்டாது. அக்கா
வரும்போது குச்சி மிட்டாய் வாங்கிகிட்டு வருவேன்.
சரியா. அழாம நல்ல பிள்ளையா இருக்கணும்.



ஞாயிற்றுக்கிழமை தனது பக்தன் ராமதாஸை
காக்க வந்த ராமனின் தரிசனம்.




இக்சுவாகு குல திலகா ராமா.


போயிட்டு வந்து விளக்கமா பதிவு போடறேன்.

2 நாளைக்கு லீவு சொல்லிக்கிறேன்.

எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்?

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதவர்களே
இல்லை என்று சொல்லலாம். தோழிகள், அறிந்தவர்கள்
இப்படி பலரும் என்னைக் கேட்கும் கேள்வி,”உன்னால்
மட்டும் எப்படி இது சாத்தியம்”? என்பது தான்.

எது சாத்தியம்?
அனைத்திற்கும் எனக்கு மட்டும் நேரம் எப்படி இருக்கிறது?
ஹோம் மேக்கராக இருந்துக்கொண்டு கற்றுக்கொள்ள
எப்படி நேரம் இருக்கிறது?
இப்படி பலக் கேள்விகள்.

இவை எல்லாவற்றிற்கும் என் பதில் ஒன்றுதான்.
நான் நானக இருக்கிறேன். மகள், அக்கா, மனைவி,
தாய், ஆசிரியை இப்படி பல பதவிகள் வகித்தாலும்
என்னை நான் மறந்து விடவில்லை. எப்படி மேற்சொன்ன
பதிவிகளை சரியாக நான் வகிக்க தவறக்கூடாதோ
அதேபோல் நான் நானாக இருப்பதும் மிக அவசியம்
என்பது என் கொள்கை. (நான் மாண்டிசோரி
டிரையினிங் எடுத்துக்கொண்ட பொழுது மகள்
அம்ருதாவிற்கு 4 வயது. எப்படி சமாளிக்கிறாய்?
என்ற கேள்விக்கணை அனைவரிடமிருந்தும்
வந்தது)

நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் திட்ட மிட்டுக்கொள்வேன்.
நாளை செய்யலாம் என்று தள்ளிவைப்பது என்பது
கிடையவே கிடையாது. (அதனால் தான் ஒரே நாளில்
4 பதிவு கூட போட்டு உங்களை கஷ்டப்படுத்துவேன் :) )

நேரத்தை திட்டமிட்டுக்கொண்டாலும்
அதை சரியாக நிறைவேற்றிக்கொள்ள குடும்பத்தவர்களின்
உதவி மிக மிக அவசியமாயிற்றே!


அலுவலகமோ, வீடோ நிர்வாகம் செய்வதில்
திறமை வேண்டும். அனைத்து வேலைகளையும்
நாமே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து முடிப்பது
நிர்வாகத்திறன் ஆகாது என்று எங்கோ படித்திருக்கிறேன்.

அயித்தானின் குணம் தன் வேலையை தானே செய்து
கொள்வது. அடிக்கடி அலுவலக டூர் போகும் அவர்
தனது பெட்டியைத் தானேதான் தயார் செய்து கொள்வார்.
துணிமணிகள் துவைத்து, உலர்த்தி இஸ்திரி போட்டு
வைப்பது வரை மட்டும் தான் என் வேலை. தான்
சாப்பிட்ட தட்டைக் கழுவி வைத்துவிடுவார்.

இதே குணத்தையும் பிள்ளைகளிடமும் வளர்த்தேன்.
பள்ளிக்கு தயாராவது, 6 வயது
முதல் தானே குளிப்பது,(மகளுக்கு மட்டும்
வாரத்தில் ஒரு நாள் தலைக்கு குளிப்பாட்டுவேன்),
வீட்டில் சின்னச் சின்ன வேலைகள்
செய்வது, டைம் டேபிள் படி புத்தகங்களை அடுக்குதல்,
மடித்து வைத்திருக்கும் துணிமணிகளை அலமாரியில்
வைத்தல், வாரம் ஒருமுறை தனது அலமாரியை
சரி செய்து வைத்தல் என்று ஒரு டைம் டேபிள்
போட்டு கொடுத்து விட்டேன். அதை அவர்கள்
சரிவர செய்ய டிரையினிங் கொடுப்பது மட்டும்
தான் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்து.

பிள்ளைகளுக்கான டைம்டேபிள் குறித்த என்
பதிவு பேரண்ட்ஸ்கிளப்பில்.

அவரவர் வேலையை அவரவர் செய்வது
என்பது இப்போது பழக்கமாகிவிட்டது.தவிர
இருக்கும் நேரத்தில் சின்னச் சின்ன வீட்டு
வேலைகள் செய்து கொடுப்பார்கள்.

சமையற் வேலையை ஒரு சுமையாக நினைக்காமல்
வாரத்திற்கு தேவையான சமையலை முன்பே
திட்டமிட்டு (ஒரு முறை சமைத்த உணவு அந்த
வாரத்தில் மறுமுறை வராமல் திட்டமிட்டுக்கொள்வேன்)
அதை செயலாற்றுவதால் எனக்கு கணிசமான
நேரம் மிச்சம். என்ன சமைக்க?!! என்று குழம்ப
அவசியமே இல்லை. இதனால் நான் அதிக
நேரம் சமையற்கட்டிலேயே இருக்கவும் மாட்டேன்.


எனக்கான நேரம் ஒதுக்கி என்னை ரெஃபிரஷ்
செய்து கொள்வது மிக அவசியம் எனக்கு.
காபி/தேநீர் அருந்தும் நிமிடங்கள் என் பொன்னான
தருணங்களாக நினைத்து மெல்ல ருசித்து பருகுவேன்.
பாடல் கேட்பேன், புத்தகம் வாசிப்பேன்.



டென்ஷனைக் குறைக்க காலையில் எழுந்த உடன்
சீடி போட்டு பக்தி பாடல்கள் கேட்பதால், வீட்டில்
இருப்பவர்கள் கூட டென்ஷன் இல்லாமல், வாக்குவாதம்
செய்து கொள்ளாமல் தயராகிறார்கள்.


இப்படி சின்னச் சின்ன திட்டமிடல் தான்
எனக்கு அதிக நேரம் கிடைத்தது போல் இருக்கிறது.
வலைப்பூவில் எழுத ஆரம்பித்த பின் அதுவும்
என் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இல்லாமல்,
எந்த வேலையும் இதனால் நின்று விடாமல்
திட்டமிட்டு எழுதுகிறேன்.

மிக முக்கியமாக எனக்கு ரேடியோ கேட்பது
பிடிக்கும். டீவி பார்க்க பிடிக்காது. அதாவது
நோ சீரியல்ஸ். சனிக்கிழமை இரவுகளில்
அல்லது அதிகமாக நேரம் இருக்கும் நாட்களில்
அபிமான்,ஆ நலுகுரு, பார்த்திபன் கனவு போன்ற
திரைப்படங்களை பார்ப்பேன்.

டீவி முன் அமராததால் பிள்ளைகளுடன்
நேரம் செலவிட முடிகிறது. வலைப்பூ
போரடித்தால், புத்தகம், பாட்டு, க்ரோஷா
பின்னுதல் என்று வைத்துக்கொள்வேன்.

10 நாட்கள் கணிணி சரியில்லாமல் இருந்ததால்
2 செல்போன் பேக் பின்னிவிட்டேன். :)

ஹைதராபாத் வந்த பின்னர் மெஹந்தி
போடக் கற்று கொண்டேன். அது முடிந்து
அடுத்த வாரம் முதல்
ம்யூரல் பெயின்டிங் கிளாஸ் போகப்போகிறேன்.


என்னைவிடவும் மிக அழகாக திட்டமிட்டு
செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இதை நான் பகிர்வது சிலருக்கு கூடுதலாக
ஒரு ஐடியா கொடுத்தது போலிருக்குமே!
உங்களிடம் ஏதும் ஐடியா இருந்தா பின்னூட்டிட்டு
போங்க. எனக்கும் உதவியாய் இருக்கும்

அடுத்த செல்போன் பேக் ரெடி செஞ்சுகிட்டு
இருக்கேன். இப்போதைக்கு டாடா.

Thursday, July 03, 2008

நானும் ஹிந்தியும்.

ராஷ்டிரபாஷாவில் பெயிலானதால் வேண்டாம் இந்த ஹிந்தின்னு
காய் விட்டுட்டேன்.

விடுவாங்களா எங்க சித்தி!! அம்மா சித்திக்கு சொல்லி அவங்க
அங்கேர்ந்து லெட்டரில் என்னை வாட்டி திரும்ப ஹிந்தி கிளாஸ்.
இந்த முறை பிச்சைசார் ஸ்கூல் வேணாம்னு சொல்லிட்டேன்.

அதனால வடக்கு 3ல் இருக்குற சின்ன டீ.எல்.சியில் ஒரு
டீச்சர் சொல்லிக்கொடுத்தாங்கன்னு அங்கே போனேன்.
ரொம்ப நல்ல டீச்சர். அருமையா சொல்லிக்கொடுத்தாங்க.
விஷாரத் பூர்வாரத் படிக்கும்போதுதான் மும்பை போனது.

சரி இதுக்கு நடுவுல நடந்தது தான் பெரிய கூத்து.
நாம் ப்ரவேசிகா பாஸ் செஞ்சுட்டோம்னு தெனாவெட்டா
இருந்தப்ப சித்தி ஒரு லெட்டர் போட்டாங்க.

“பயோட்டேட்டாவில் நான் விசாரத் படிச்சிருக்கேன்னு
போட்டால்லாம் பத்தாது. வெறும் எழுத படிக்கத்
தெரிஞ்ச்சா ஹிந்தி கத்துகிட்டதா அர்த்தமில்லை.
பேசக் கத்துக்கோ”!!!!!!!!! அப்படின்னு எழுதினாங்க.

வீட்டுல என்னைத் தவிர யாரும் ஹிந்தி படிக்கலை.
இதுல நான் யாருகிட்ட போய் பேச. யாராவது
பேசறதைக் கேட்டாதானே மொழி புரியும்!!!!!

அதுக்கும் ஒரு லெட்டர். சனிக்கிழமை ஹிந்தி
சினிமா பாரு. ஹிந்தி நாடகங்கள் பாருன்னு.
ஒளியும் ஒலியும், போன்றவை பார்க்கவே
அப்பா மனசு வெச்சாதன் உண்டு. வீட்டில
டீவி இருந்தாலும் அப்பா சொல்லாட்டி சுவிச்சை
ஆன் செய்யக்கூடாதே.

ஹிந்தி சினிமால்லாம் பார்க்கவேண்டாம்னு
சொல்லிட்டு போயிட்டாரு. அப்புறம் சித்திக்கு இதைச்
சொல்லி அவுங்க அப்பாவுக்கு வேண்டுகோள்
விடுத்தப்புறம் தான் ஹிந்தி சினிமா, நாடகங்கள்
பார்க்க விட்டாரு.


முதலில் ஒண்ணும் புரியாது. ஹிந்தி புத்தகத்தை
வெச்சு நமக்குத் தெரிஞ்ச வார்த்தை ஏதாவது வருதான்னெல்லாம்
தேடியிருக்கேன். :) ஜோக் அடிக்கறாங்களா ஒண்ணும் புரியாது.
அப்படி பார்த்துகிட்டு இருந்தப்பதான் பாடல் வரிகள் புரிய
ஆரம்பிச்சு அப்படியே பிக்கப் ஆச்சு.


ரேடியோவிலும் ஏக் ஃப்ங்கார், ஆப் கி பர்மாயிஷ்
போன்ற நிகழ்ச்சிகளைக் கேட்பேன். அதிலும் ஹிந்தி
பாடல்கள்தான் ஒலிபரப்புவார்கள். ஹிந்தி பேசினா
புரியும், பதில் பேசத் தெரியாதுங்கற லெவல்ல
எனக்கு நானே ஹிந்தியில் பேசிப்பேன்.

திடும்னு ஒரு நாள் காதுல விழுந்த செய்தி,
ஹிந்தியே வேணாம்னு தோண் வெச்சிடுச்சு.

ஹிந்தியில் ஆண் பேசும்போது வார்த்தைப்ரயோகம்
வேறுமாதிரி, பெண் பேசும்போது வேறுமாதிரி வரும்.

உ: மே காதா ஹூன் (இது ஆண் சொல்வது)

மே காத்தி ஹூன் (இது பெண் சொல்வது)

(நான் பாடுகிறேன்னு அர்த்தம்.)
இதை எப்படி கத்துக்கறதுன்னு விட்டுடேன்.

மும்பை போனபோது விசாரத் வரைக்கும்
படிச்சது, ரேடியோ டீவியில கேட்டது எல்லாம் உபயோகித்து
தட்டுத் தடுமாறி பேசினேன். ஹை 2 மாசத்திலேயே
ஹிந்தி சரளமாக வந்துவிட்டது. அதிலும் சவுத் இண்டியன்
ஸ்லான்க் இல்லாமல் சுத்த ஹிந்தி..
(தேங்ஸ் - தூர்தர்ஷன், விவிதபாரதி)

வேப்பங்காயாக கசந்த ஹிந்தியை எனக்குத்
திணித்தார்கள் என் அம்மாவும், சித்தியும்.
பலன் எனக்குத்தான்.

ஹிந்தி அறிந்ததனால் எனக்கு நல்லது
நிறைய நடந்தது. திருமண்மான போது அயித்தான்
ஹிந்துஸ்தான் லீவரில்தான் வேலைப் பார்த்துவந்தார்.
அங்கே ஃபேமிலி மீட்டிங் போன்றவற்றில் ஆங்கிலத்தை
விட ஹிந்திதான் அதிகம் பேசப்பட்டது. கணவரின்
அதிகாரிகள் வடமாநிலத்தவர்கள் தான்.

பல நல்ல நட்பு கிடைத்தது. இவ்வளவு ஏன்
இலங்கையில் 1 வருடம் கல்லூரி மாணவர்களுக்கு
ஹிந்தி போதித்ததை என் சித்தி மிகவும் பெருமையாக
நினைக்கிறார். இருக்காதா!!!!!!
(இண்டியன் கல்ச்சுரல் சென்டரில் ஹிந்தி கற்பிப்பவரைதான்
முதலில் போதிக்கும் படி கேட்டிருக்கிறார்கள். சிலபஸ்
அதிகம். ஆனா ஆவான்னா கற்றுக்கொள்ளவே 6 மாசம்
ஆகும்னு சொல்லியிருக்கிறார். :) நான் சேலஞ்சாக
எடுத்துக்கொண்டு சொல்லிக்கொடுத்து 100% ரிசல்ட்)

ஜி தன்னோட பதிவுல சொல்லியிருக்கறது உண்மைதாங்க
நமக்கு வேணும்னா எந்த மொழியா இருந்தாலும்
கத்துக்கறதுதாங்க நல்லது. அவரோட பதிவைப்
படிக்க இங்கே

Wednesday, July 02, 2008

புதுகையில் ஹிந்தி!!!!!

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்ததா என்பதே எனக்குத் தெரியாது.
பிச்சை சார் தான் ஆனந்தமாக ஹிந்தி வகுப்புக்கள் நடத்திக்கொண்டிருந்தாரே.

தக்‌ஷிண பாரத ஹிந்தி பிரசார் சபா புதுகைக்கு மிகவும்
கடமை பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக
திரு.பிச்சை சாஸ்திரிகள் அவர்களுக்கு. கெச்சலான உருவம்,
குடுமி, யார் கிண்டலடித்தாலும் அசராமல் பஞ்சகச்சம்
கட்டி வருவார். ஒரு தனி ராஜாங்கமே நடத்திக்கொண்டிருந்தார்.

கீழ3ஆம் வீதியில் சுப்பராமய்யர் நடுநிலைப்பள்ளி 4 மணிக்கு
முடிந்ததும் ஆரம்பிக்கும் இவரது அரசாட்சி.
ஹிந்தி வகுப்புக்கள். மிக கண்டிப்பு. ஒரு ஸ்கூல் போலவே
வகுப்புக்கள் நடக்கும். கூட்டமும் அதிகம். பிராத்மிக்கிற்கே
3 கிளாஸ் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
மைதிலி டீச்சர் கிளாஸ், மாமி டீச்சர் கிளாஸ் என்று பேர்.


பிச்சை சாரிடம் ஹிந்தி பயின்று பண்டிட் கோர்ஸ் முடித்தவர்களை
வைத்து வகுப்புக்கள் நடக்கும். பெரிய வகுப்புக்களை
பிச்சை சாரே எடுப்பார். ஆஹா சரளமாக அவர் பேசும்
ஹிந்தி!! சிம்பிளி சூப்பர்ப்.

காலை நேரங்களில் மார்க்கெட்டுக்கு போகும் போது
ஸ்கூலை கடந்து தான் பெருமாள் கோவில் மார்கெட்டிற்கு
போவேன்.அப்போது ”கவிதா” வகுப்பு எடுத்துக்கொண்டிருபார்.

கணீரென்ற குரலில் அவர் ஹிந்தி கவிதை வாசித்து அதை
கேட்க நன்றாக இருக்கும். ஹிந்தி வகுப்பு போகாவிட்டால்
ஏதோ தவறு செய்தது போல் எல்லோரும்” உன் பொண்ணை
ஹிந்தி கிளாஸ்ல சேர்க்கலியா” என்று கேட்பார்கள்.


பிள்ளைகள் கூட நான் ஹிந்தி கிளாஸ் போறேன் என்று
செம பில்டப் கொடுப்பார்கள். 6 மாதத்தில் ஒரு வகுப்பு
பாஸ் செய்துவிடலாம் என்பது கூடுதல் அட்ராக்‌ஷன். :)

இரவு 8 மணி வரை வகுப்புக்கள் நடக்கும். பிரசார் சபா
பரிட்சைக்கு முன்னால் டெஸ்ட் எல்லாம் பக்காவாக
நடக்கும். ஒரு ஸ்கூல் தோத்தது போங்க.



வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் சைக்கிள்களின் எண்ணிக்கைச்
சொல்லும் எத்தனை பேர் ஹிந்தி கற்றுக்கொண்டார்கள்
என்று.


என் சித்தியும் அங்கே ஹிந்தி கற்றுக்கொண்டார்.
அவருக்கு குஜராத் மாநிலத்தில் இருக்கும் “வாபி”யில்
வேலைக்கிடைத்து விட, எனக்கு ஆப்பு வைத்தார்கள்.

அதாவது ஹிந்தி கிளாஸில் சேர்த்தார்கள். பிராத்மிக்,
மத்யமா பாஸ் செய்துவிட்டேன். ராஷ்டிர பாஷா
எக்ஸாம் புட்டுகிச்சு. :(

அவமான போச்சு. நான் இனி ஹிந்தி கிளாஸ்
போக மாட்டேன்னு சொல்லிட்டேன்.
வாபியில இருக்கற சித்தி விடுவாங்களா?

என்னை வளர்த்தது சித்திதான். வெள்ளிவிழா
திரைப்படம் போல் கடிதத்திலேயே என்னை
வளர்த்தவர் சித்தி. அவங்க சொல்லி தட்டிட
முடியுமா? அப்படி என்ன சொன்னாங்க?
நான் ஹிந்தி கத்துகிட்டேனா?

அடுத்த பதிவுல சொல்றேன்..............

Wednesday, June 11, 2008

ஒரு நொந்த அனுபவம் :((

வீட்டில எந்த விசேஷ்ம்னாலும் சரி கான்ட்ராக்டர் கிட்ட
கொடுத்துப்பிட்டா சரி. அவங்க பாத்துப்பாங்கன்னு
அப்படின்னு சொல்றவங்களா நீங்க!!!????

அப்ப இதைக் கண்டிப்பா படிங்க.

கான்ட்ராக்டர் கிட்ட கொடுத்தா செய்வாங்க. கான்ட்ராக்டர்
கிடைக்கணுமே!

சென்ற வருடம் வீட்டில் ஒரு விசேடம் இருந்தது.
நாங்க இலங்கையில் இருந்ததால் இங்கே வந்து
தங்கி ஏற்பாடு செய்ய இயலாமல் கான்ட்ராக்டரிடம்
கொடுத்து விடலாம்னு முடிவு செஞ்சோம்.

அங்கதான் வந்தது பிரச்சனையே!!!!!
பிரபல நாளிதழ்களில் வந்திருந்த விளம்பரங்களாப்
பாத்து அயித்தான் கிட்ட கொடுத்து இந்தியா
போயி இவங்களை எல்லாம் கூப்பிட்டு விசாரிச்சுகிட்டு
வாங்கன்னு சொன்னேன்.

அயித்தானும் செஞ்சாரு. அடா.. அடா...
வந்த் ரெஸ்பான்சை பார்க்கணுமே!!!

இவங்க விளம்பரத்துல கொடுக்கறது என்னனா?
எந்த விசேடம்னாலும் எடுத்துச் செய்வோம்னு.
சின்ன விசேடம்லாம் செய்ய மாட்டேன்னு ஒருத்தர்!

சின்ன விசேடத்திற்கே திருமண அளவுக்கு ரேட்டு
கேக்கறது ஒருத்தர்!!

உங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி நின்னு
செஞ்சு தருவோம்னு விளம்பரத்துல
சொன்னவங்க பேசுற முறையே சரியில்லையாம் :)

இந்த அழகுல மாம்பலத்துல இருக்குறவரு
குரோம்பேட்டையில் வந்து செய்யணும்னா
5000 கூட செலவாகுமாம். (போக்குவரத்து
செல்வாமே)

மாம்பலத்துக்கும் குரோம்பேட்டைக்கும் எம்புட்டு
தூரமுங்க??????????????

எந்த விசேடத்துக்கும் வர்றவங்களை நல்ல
உணவு கொடுத்து உபசரிக்கணும். அதனாலத்தானே
நல்ல கான்ட்ராக்டரிடம் கொடுக்கணும்னு தேடுறது?

அப்பபா... இவர்களிடம் நாங்கள் பட்ட கஷ்டம்...

சொல்லில் அடங்காது.....

ஒரு அம்மா வேனுக்குளேயே உட்கார்ந்து கிட்டு
விசிட்டிங்கார்டை மட்டும் கொடுத்தனுப்பி விட்டாக.
நேரில் வந்து பேசவே இல்லை.:)

இன்னொருவர் கொடுத்த பட்ஜெட்டில் ஒரு
திருமணமே செய்துவிடலாம்.



இப்படி சொல்வது ஒன்று செய்வது ஒன்றுன்னு
இருக்காங்களே இவங்களை கேக்கறது யாரு?


பெருசு பெருசா முழுப்பக்க விளம்பரங்கள்
போட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்..


சத்திரம் கூட நல்ல படியாய் கிடைத்துவிடும்போலிருக்கிறது.


ஆனால் நல்ல கான்ட்ராக்டர்கள் கிடைப்பது முன் ஜென்மத்து
புண்ணியம் போலிருக்கிறது.


காளான்கள் போல் இப்போது கான்ட்ராக்டர்கள் பெருகி
இருக்கிறார்கள். இவர்களை சரியாக ஒருங்கிணைத்து
மக்களுக்கு நல்லது யாராவது செய்வார்களா?

திருமணத்தைத் தவிர வேறு எந்த ஒரு விசேடத்தையும்
இவர்கள் விசேடமாக மதிப்பதே இல்லை.
இதுதான் என் மோசமான அனுபவம்.

:((((((((((((((((((((

Saturday, April 05, 2008

பிரிவு உபசாரமும், வரவேற்பும்!!!!!!!!!!!!!!!!!

விடாது கருப்பு!! அப்படித்தான் சொல்லனும். :))))
நான் இலங்கயையை விட்டு விட்டு வர
மனது வருத்தப்பட்ட மாதிரி
இலங்கைக்கும்ஆயிருக்கும் போல...

காலையில் 7 மணிக்கு புறப்பட வேண்டிய
விமானம்தாமதமாகி பதினொரு மணிக்கு
விமானத்தில் ஏறினோம்.
விமானம் பழுதாகி இருந்ததாகச்
சொன்னார்கள்.
(நாங்கள் விமானத்தில் உட்கார்ந்த
பிறகும் கையடக்க குறிப்பு புத்தகத்தை
வைத்துக்கொண்டு பழுது பார்த்துக்
கொண்டிருந்தது தனிக் காமெடி....)

அயித்தானுக்கு தெரிந்தவர்கள் முலமாக
பேசி Rest room ஒன்று எடுத்துக்கொண்டு
கொஞ்சம் இளைப்பாறி,
ஒருவழியாகமதியம் முன்று
மணிவாக்கில் ஹைதராபாத்தில்
தரை இறங்கியது எங்கள் விமானம்.
புத்தம்புது ஷ்ம்ஷாபத் விமான நிலையம்.
வெளியே வந்து பார்த்தப்போதுமயக்கம் வராத குறைதான்.


எங்களை வரவேற்க ஹைதராபாத்தே
திரண்டு வந்தது மாதிரி மக்கள் வெள்ளம்.
ஒண்ணுமில்லே புது விமான நிலையத்தைப்
பார்க்க வந்த ஜனத்திரள் தான் அது.
அக்கம் பக்கத்து உஉர்காரர்கள் எல்லாம்
சோறு கட்டி எடுத்துக்கொண்டு,
வண்டிகளில் வந்து விமான நிலையத்தை பார்த்து
கொண்டிருந்தனர்.

சாவி அவர்கள் தனது "வாஷிங்கடனில் திருமணம்"
என்ற நாவலில் அப்பளம் தயாரிப்பதை
அமெரிக்க மக்கள் வாரதிமேல்
வாரதியாக கவிழ்ந்து கொண்டு
பார்ப்பதாக சொல்லியிருப்பார் .
விமான நிலையத்தில் மக்களை

பார்த்தபோது
அது நினைவுக்கு வந்தது.

தினம் 1 / 1.50 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனராம்.
அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்போலிஸ்
தவிக்கிறார்கள். ( நல்லவேளை இப்போது
மக்களின் வருகை தடை செய்யப்பட்டு
விட்டதாம்.) மெயின் ரோட்டிலிருந்து
நான்கு கிலோ மீட்டர் நடந்துவந்து
மக்கள் விமான நிலையத்தை
பார்த்ததை அதிசயமாக பார்த்தேன் நான்.

என்னக் கொடுமை இது சரவணன்?

Wednesday, March 19, 2008

பாஷை புரியாமல் பட்ட அவஸ்தைகள்!!!!! 2

ஒவ்வொரு ஊரா போகும்போது அந்த ஊரின்
மொழியை கத்துக்கணும்னு நினைப்போமே
அது மாதிரி தான் நானும் நினைச்சேன்.
இங்க தமிழ், சிங்களம் இரண்டும் பேசராங்க.
தமிழ் தெரியும் அதனால சிங்களம்
கத்துக்கலாம்னு ஆசைப்பட்டேன்.


ஆங்கிலத்துல மொழியாக்கம்
செஞ்சு சொல்லிக்கொடுக்க சரியான
டீச்சர் கிடைக்கல. சரி பசங்க
பள்ளிக்கூடத்துல தமிழ், சிங்களம்
இரண்ட் மொழியும் படிக்கிறங்களே
நானும் அப்படியீ கத்துக்கலாம்னு
பார்த்தேன்.ம் ம்ம் ... அதுவும் முடியல.


சே.. என்ன இதுன்னு நொந்து
போயி ஆங்கிலத்தில மட்டுமே
பேசவேண்டியதாச்சு.


டீச்சர் டிரெயினிங் போனப்போ
மாணவர்கள் கிட்ட படிச்சது கொஞ்சம்.
நிர்ஷான் சொன்னது போல நம்ம
மராட்டி, சமஸ்கிருதம், தமிழ், பாலி
எல்லாம் கலந்ததுதான்சிங்களம்.



அயித்தான் ஆபிஸ் போயிட்டு
திரும்பறவரை கொஞ்சம் பக்
பக்குன்னு தான் இருக்கும்.
(இங்கத்த நிலமைதான் உங்களுக்குத் தெரியுமீ!!!)
கொஞ்சம் லேட்டானாலும் போன்
அடிச்சுப்பிடுவேன். ஆனா லைன்
கிடைக்காது. அப்ப பூனில் வரும்
ரெக்கார்டட் மெசெஜ் தான்நான்
கத்துக்கிட்ட மொத சிங்கள வாக்கியம் :)


"நிம அங்கய சம்பந்த கருனோ எக,
கருணாகர பசும அவதான"
நீங்கள் டயல் செய்த.............................. அதே தான். :)



அப்புறம் சில வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டேன்.
பேசினா கொஞ்சம் புரிஞ்சுக்கலாம். பதில் சொல்லத்தெரியாது.


மணலகயிறு படத்தில் ஹிந்தி
தெரியனும்னு கண்டீஷன் போட்டிருப்பாரு.
விசு ஹீரோயினைப் பாத்து ஹிந்தி
தெரியுமான்னு கேக்க, பக்கத்து வீட்டு
டீவில ஹிந்தி சினிமா பாத்து
4 / 5 ஹிந்தி வார்தை தெரியும்னு
சொல்ல, விஸு அது போதும்னு
சொல்வாரு. அது மாதிரி ஆயிடுச்சு என் நிலமை. :)



டிஸ்கி :சரிங்க... நாளைக்கு "போயா டே". லீவு.
இந்தியா வந்தப்புறம் போயா டேக்கு
லீவு கிடையாது, அதனால் இந்த
போயாவை எஞ்சாய் செய்யனும்னு
பிள்ளைங்க ஆசைப்படறதனால
ஒரு 3 நாளைக்கு லீவு சொல்லிக்கறேன்...


போற இடம் எங்கேப்பா? போயிட்டு
வந்தப்புறம் சொல்றேன்ப்பா.......
பை... பை....

Tuesday, March 18, 2008

பாஷை புரியாமல் பட்ட அவஸ்தைகள்!!!!!

இங்கு வந்த புதிதில் நடந்த கதையிது
. கங்கார்மய்யா (புத்தர் கோயில்) பெரெரா
(திருவிழா) சமயம். அந்த ரோடே அடைத்து
விழா நடக்கும். அது தெரியாம
அந்தப்பக்கமா போயிட்டோம்.
(கொம்பனி முருகன் கோயிலுக்கு
போறதுக்காக). போலிஸ்காரர் இப்படி
போக முடியாது அப்படின்னு ஏதோ
சிங்களத்துல சொல்றாரு. என்ன
சொல்றாருன்னு புரியல.



நீங்க சொல்றது புரியலன்னு ஆங்கிலத்துல
சொன்னோம். அவருக்கு அது புரியல.
"என்ட, என்ட" அப்படிங்கறாரு. என்ன
சொல்றாருன்னு சுத்தமா புரியல.
ஆஷிஷ் வேற," என்ன அம்மா! சாயந்திரம்
எப்படி வெயில் வரும்னு? (தெலுங்கில்
"என்ட" என்றால் "வெயில்") கேட்டதும்
நங்கள் சிரித்துவிட்டோம். அபுறம்
என்ன நினைத்தாரூ போலிஸ்காரர் விட்டுடார்.





இங்கே வந்த புதிதில் மொழி புரியாமல்
பட்ட துயரங்கள் தான் இந்த போஸ்ட்.
நண்பர்கள் கிட்ட காலேல என்ன சாப்பிட்டிங்க?
அப்படின்னு கேட்டா "பான்" அப்படின்னு
சொல்லுவாங்க. பானா அது நாங்க
சாப்பிட்டதற்கு பின்னாடி இல்ல
சாப்பிடறதாச்சே! அப்படின்னு சொன்னா,
முறைச்சுகிட்டு "பான் " அப்படின்னு சொன்னாரு.




உருளைக்கிழங்கு, தேங்காய்ப்பால்
போட்ட சொதி நல்லா இருக்கும்.
இடியாப்பம், பரோட்டாவிற்கு நல்ல
காம்பினேஷன். உருளைக்கிழங்கு
"ஆலு" (ஹிந்தியில்) அப்படின்னு
சொல்றது பழக்கம். அயித்தான்
கடைக்கு போய் "ஆலு கறி"ன்னு
கேட்டு வாங்கிட்டு வந்தார்.பாகெட்டை
திறந்து பாத்திரத்தில ஊத்தினா "மணக்குது".
கரண்டியில் எடுத்து பார்த்தா "மீன் சொதி".
அயித்தான் ஆலுகறின்னு கேக்க
கடைக்காரர் "மாலுக்கறி" கொடுத்துப்பிட்டார்.
"மாலு" - மீன் :))))
அதுக்கப்புறம் சொதி வாங்க
கடைக்குப் போனார்னா அம்ருதா,
"அப்பா! கடைல என்ன சொல்லனும்?
அப்படின்னு ஒவ்வொரு முறையும் ஞாபகப்படுத்தும்.


சரி பாஷை கத்துக்கலாம்னு
ஆசைப்பட்டேன். என்ன ஆச்சு!!!!!!
தொடரும்.............

Monday, February 18, 2008

நானும் சைக்கிளும் - இறுதி பாகம்.

சைக்கிள் வாங்குவதுன்னு முடிவானவுடன் நான் கேட்டது
BSA SLR, மெலிசா அழகா இருக்கும். ஆனா, அம்மா கொண்டு
வந்து இறக்கியது HERCULES.

முதல் ஆப்பு இதான். அந்த சைக்கிளைத் தூக்கி
வரண்டாவில நிப்பாட்டறதுக்குள்ள சாப்பிட்ட
சாப்பாடு ஜீரணமாகிடும்.


வீட்டில வாகனம் ஓட்டும் முதல் நபர்ங்கற பட்டம்
எனக்குத்தான். அம்மாவுக்கு லீவு லெட்டர் கொடுக்க,
கடைக்கு போக எல்லாம் நாம தான்.



காலேஜுக்கு பள்ளத்தூர் போறப்போ சைக்கிளைக்
கொண்டு போயி பஸ்ஸ்டாண்டில் போட்டுட்டு,
பஸ்ஸைப் பிடிச்சு போயிட்டு, திரும்ப வரும்போது
சைக்கிளை எடுத்துக் கிட்டு வருவேன்.


வீட்டுக்கு வந்தா "அம்மா வரச்சொன்னாரு"
"அப்பா இங்க போகச் சொன்னாருன்னு" மெசெஜ்
சொல்ற பாட்டி மேல கோபமா வரும். அதெல்லாம்
முடிச்சுட்டு ஹிந்தி கிளாஸ் போகனும்.


ஏதோ ஒரு நாள் கடைக்கு போய் சாமான் வாங்கி
கிட்டு வர்றது பிரச்சனையில்லல. எக்ஸ்ட்ரா பால் வேணுமா?
என் அதிகாலைத் தூக்கம் கெடுக்கப்படும்.
பின்ன டவுன் பேங்க வாசல்ல பால் வாங்க
நான் தேன் போகணும். (ஆனாலும், எனக்கு மிகவும்
பிடித்த ஒரு டிரைவ் அதான். ஆள் நடமாடடம்
அதிகமில்லா அந்த அதிகாலை, டீக்கடையில்
ரேடியோ சத்தம், தூய காற்று, மெயின் ரோடே பளிச்சுன்னு
அழகாத் தெரியும் ரசிச்சு கிட்டே பயணம்)


தக்ஷினாமூர்த்தி மார்க்கெட்ல 25 கிலோ அரிசிமூட்டை
வச்சிருக்கேன், போய எடுத்துகிட்டு வா! அப்படின்னு
அப்பா சொன்னதுக்கப்புறம் மறுக்கவா முடியும்.



25 கிலோ அரிசியை லொங்குன்னு லொங்க்குன்னு
மிதிச்சு கொண்டுவருவேன்.




ஒரு முறை வீட்டுல மோட்டர் ரிப்பேர். பாழாய்போன
குழாய் தண்ணியும் வரல. 4 நாள் அப்பா ஆபீஸ்லேர்ந்து
தண்ணி கொண்டு வந்தேன். சைக்கிள்ள இரண்டு
பக்கமும் குடத்தைக் கட்டி, நிறப்பி கொண்டு வந்தா
அதை உள்ள வாங்கி கூட கொட்டாம அவங்கவங்க
வேலைக்கு ரெடியாகிட்டிருப்பாங்க.



நானே கொண்டுவந்து, தொட்டி, டிரம்மை நிரப்பி
கஷ்டபட்டுகிட்டு இருக்குறப்ப எங்க பாட்டி
ஸ்பூனெல்லாம் வச்சு தண்ணி நிறைச்சு வெப்பாங்க.


சைக்கிளை எடுத்துக்கிட்டு கொஞ்சம் போயிட்டுவாயேன்னு,
சொல்லி சொல்லியே புதுக்கோட்டையை சுத்த
வெச்சுருவாங்க. ஏண்டா சைக்கிள் கத்துக்கிட்டோம்,
சைக்கிள் வாங்கினோம்னு அழுவாச்சியா வரும்.


ஆனால் இவ்வளவு ஆப்புகளுக்கு இடையேயும்,
நான் என் சைக்கிளையும், சைக்கிள் பயணத்தையும்
மிகவும் ரசித்தேன். திருமணம் நிச்சயம் ஆனதும்,
சைக்கிளை விற்று விட்டு வந்துபோது மனது மிகவும்
வலித்தது.